Archive for November, 2014

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன –10-2-

November 15, 2014

கீழ்த் திருவாய் மொழியிலே திரு மோகூரை அனுபவித்தார் –
இதில் திரு வநந்த புரத்தை அனுபவிக்கிறார் –
மேலே -திருவாட்டாறு
திரு மாலிரும் சோலை
திருப்பேர் நகர் -திருப்பதிகளை பேசப் போகிறார்
கீழே ஒன்பதாம் பத்திலும் பல திருப்பதிகளைப் பேசினார்
திரு மங்கை ஆழ்வார் -ஒரு நல் சுற்றம் -10-1- ஒவ் ஒரு பாட்டிலும் இரண்டு திருப்பதிகளைப் பேசி பதிகம் அருளிச் செய்கிறார்
பிறந்தகத்தில் நின்றும் புக்ககம் செல்லப் புறப்படுகின்ற பெண்பிள்ளை மிகவும் பழகிய பரம ப்ரேமாச்பதர்கள் இடம் விடை பெற்று போவது போலே
பரமபதம் புக பூர்வாங்கமாக -பரமபத ப்ராப்தி அணித்து என்று துணிந்து பல திவ்ய தேசங்களில் புகுகிறார்
இப்பொழுது திரு வநந்த புரத்தை பிராப்யமாக துணிந்து அவ்விடத்திலே ஈடுபட்டு பேசுவதாக செல்கிறது இத் திருவாய்மொழி –

—————————————————————————————————————————————————————————————————————–

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரம் புகுதும் இன்றே –10-2-1-

திருவனந்த புரம் சென்று அனுபவிக்க இடையூறுகள் பல உண்டே
அவை எல்லாம் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணின அளவிலே தொலையும் –
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன-மூன்று எழுத்தை சொன்னதுமே இடர் என்று பேர் பெற்றவை அனைத்தும் கெடும்-
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண கேசவம் வைத்யமா சாத்ய துர்வ்யாதி ரிவ நச்யதி –
கேசவா -பல அர்த்தங்கள் உண்டு இங்கு கேசி வதம் -விரோதி நிரசன
அவன் ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி என்று பேர் பெற்றவைகள் எல்லாம் நசிக்கும் -ஈடு
பிராரப்த கர்மங்கள் சஞ்சித கர்மங்கள் என்று பேர் பெற்றவை எல்லாம் போகும்
நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் -நமன் தமராலும் ஆராயப் படார்
தனிப்பட்டு சொல்ல வேணுமோ
மிகக் கொடிய நரக வேதனைகளை அனுபவித்தே போக்க வேணும் என்றது இல்லையே
நரகே பச்யமா நஸ்து யமேன பரிபாஷிதே கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -பிரமாணம் உண்டே
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான்-ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு-பொங்கும் பரிவால் –

———————————————————————————————————————————————————————————————————————

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்தபுர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓராயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே –10-2-2-

திருவனந்த புர எம்பெருமான் திரு நாமம் ஒன்றுமே சஹஸ்ரமுகமான ரஷையைப் பண்ணும்
கீழே -அனந்தபுரம் புகுதும் இன்றே -என்றார் -இதில் மீண்டும் -இன்று போய்ப் புகுதிராகில்-விரைவு உறுத்துகின்றார்-
விருப்பம் உண்டான  இன்றே போய் புகுவீர்கள் ஆகில் ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது
எம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டில் உள்ள பாப்பம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே –
இவ்விடம் ஆஸ்ரயம் அல்ல என்று தீயவை எல்லாம் தன்னடையே விட்டகலும்
திருவனந்தம் சென்று புகத்தான் வேணுமோ
அத்தலத்து பெருமான் உடைய திரு நாமம் ஒன்றைச் சொன்னால் போதுமே –
ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையான்
அனந்தபுர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓராயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே-இதற்கு
இத்திரு நாமம் சொன்னால் திரு நாடு கிடைக்கும் என்றும்
இத்தலமே திரு நாடு என்றுமாம் –
போய்ப் புகுதீர் -காயிக வியாபாரம்
மாயன் நாமம் -வாசிக வியாபாரம்
உள்ளுவாருக்கு -வாசிக வியாபாரம் –

—————————————————————————————————————————————————————————————————-

ஊரும் புட்கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அம் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –10-2-3-

பிரதி பந்தகங்களை போக்க இன்ன திரு நாமம் எனபது இல்லை
ஆயிரக் கணக்கான திரு நாமங்களில் ஒன்றைச் சொல்ல அமையும் என்கிறார்
பெரிய திருவடியை வாகனமாயும் த்வஜமாயும் கொண்டவன்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு -பெரிய திருவடியைச் சொன்னது மற்றவர்களுக்கும் உப லஷணம்
இன்று கிட்டின சம்சாரிக்கும் இது போல நித்யசூரிகளின் சாம்யா பத்தியை கொடுத்து அருளுபவன்
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் -ஆபத் சகத்வம் திருக் கல்யாண குணங்களை அனுசந்தித்து புக்க அளவிலே துக்க ஹேதுக்கள் தொலையும்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே -வாய்க்கு வந்ததொரு நாமத்தை சொன்னாலே போதுமே-

——————————————————————————————————————————————————————————————————————–

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே –10-2-4-

இங்கு புக்கு அடிமை செய்யப் பெற்றவர்கள் என்ன பாக்யசாலிகளோ –
கொண்டாடி ருசி விளைக்கிறார்
அனந்தபுரம் நேசம் செய்து உறைகின்றானை பேசுமின் கூசமின்றி-என்றும்
உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்களைப் பேசுமின் கூசமின்றி-என்றும்
பெரிய நீர் வேலை சூழ்ந்து -வாசமே கமழும் சோலை-கடலில் பரிமளம் மேலிடாதபடி சோலையிலே பரிமளம் விஞ்சி இருக்கப் பெற்ற தேசம்
பரமபதத்தில் காட்டிலும் சிறப்பாக ப்ரீதி பண்ணி -ஆர்த்த ரஷணத்துக்கு பாங்கான தேசம் என்று -அவனை –
நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே-
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே ஆங்கு -என்றபடி
திரு நாட்டில் செய்யும் பூசனை ஒரு பூசனையோ
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே இங்கு உள்ளார் செய்யும் பூசனை அன்றோ புகழைத் தக்கது –

—————————————————————————————————————————————————————————————————————————–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார் –10-2-5-

திருவடிகளை நண்ணுவார் நித்யர்கள் உடன் ஒப்பார் இது திண்ணம்
புண்ணியம் செய்து -சாமான்ய சப்தம் -இங்கே விசேஷத்தில் பர்யவசித்து பக்தியைச் சொல்கிறது
கார்யே காரணோபசாரம் -பக்தி புண்ய பலம் ஆகையாலே என்றுமாம்
நல்ல புனல் -கந்த த்ரவ்யங்கள் கலசாத வெறும் சுத்த நீர் என்றபடி
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -ஆராதனைக்கு எளியவன்
எண்ணுமின் எந்தை நாமம்-இடறினவன் அம்மே என்னுமா போலே திரு நாமம் சொல்லும் போது
ஒரு அதிகாரி சம்பத்து தேட வேண்டாம் -ஜீயர் பட்டரை திரு நாமம் சொல்லும் போது பிரயதனாய் கொண்டு சொல்ல வேணுமா -என்று கேட்க
கங்கையிலே முழுக்கப் போமவனுக்கு வேறு ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ
மேலுண்டான நன்மையைத் தருகிற இது அதிகாரி சம்பத்தையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாராம்
திரு நாமம் சொல்லுகைக்கு ருசி யாயிற்று வேண்டுவது
அவர்களே அதிகாரிகள் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
எந்தை நாமம் எண்ணினால் விளையும்பாலன் சொல்லுகிறது -இப்பிறப்பு அறுக்கும்-
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமிகு உடல் –
அப்பால் அமராவார் –

—————————————————————————————————————————————————————————————————————

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

அயர்வறும் அமரர்கள் அதிபதியும் வந்து அடிமை செய்யும் தேசம் -திரு நாட்டிலும் காட்டில் பிராப்யம் –
நாமும் இங்கே சென்று அடிமை செய்யத் தகும்
சசைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச னத்துக்கு -முக நாபி பாதங்களை -த்வார த்ரயத்தாலே
காட்டும் சாம்யம் அனந்த புரத்திலே வ்யக்தம் -நாயனார் -ஆச்சார்யஹிருதயம் சூர்ணிகை -188-
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி-ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பணிகின்றமை –
திரு நாபியில் த்வாரம்
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் –நித்ய சூரிகள் தலைவர் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் சபரிகரங்களாய் வந்து அர்ச்சிகின்றமை –
முக்தர்களுக்கு முகத் த்வாரம்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் -நம் போல்வாருக்கும் பணி செய்யத் தகும்
திருவடி அல்லது புகலற்ற நமக்காக ஸ்ரீ பாத த்வாரம்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-ருத்ராதிகளுக்கு துக்க நிவர்த்தகனாய் இருக்கும்
பசுக்களுக்கும் இடையருக்கும் கையாளாய் இருக்கும்
துர்மாநிகளுக்கும் துக்க நிவர்த்தியைப் பண்ணிக் கொடுக்குமவன்
அபிமான சூன்யரான நம்மை கிட்டுகையில் அருமைப் படுத்துவானோ –

————————————————————————————————————————————————————————————————————–

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி யனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே –10-2-7-

அடிமை செய்யப் பெற்றால் எல்லா துயரங்களும் தீரும்
துடைத்த கோவிந்தனார் -சம்ஹாரத்தை முந்துற சொல்லி
சம்ஹாரம் அநாதி – உபநிஷத் யதா பூர்வம் என்றதே -சூர்யா சந்திர மசௌ தாதா யதா பூர்வ மகல்பயத் –
உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி -இவை அதிப்ரவர்த்தமான வன்று சம்ஹரித்து பின்னை
புருஷார்த்த உபயோகியான காரணங்களைக் கொண்டுத்து ரஷித்த -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
வெம் பரம மூர்த்தி -எம் போல்வாருக்கு விதேயனாய் இருப்பதை தனக்கு பெருமையாக கொண்ட ஸ்வாமி
பாம்பணைப் பள்ளி கொண்டான் -வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான் – உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த -அவற்றுக்கு ரஷண சிந்தை பண்ணி
கண் வளர்ந்து அருளுமவனுடைய திரு அனந்த புரம்
அங்கே சென்று -கடைத்தலை சீய்க்கப் பெற்றால்-திரு அழகு திருப்பணி செய்தால் -அதாவது
பெருக்கி மெழுகி கோலமிடுகை
கீழே 9-2-1- பண்டை நாளாலே பாட்டிலும் -உன் கோயில் சீய்த்து -என்றாரே
இப்படிப் பட்ட அடிமை செய்யப் பெற்றால் -கடு வினை களையலாமே -அடிமை செய்யப் பெறாமையால் உண்டான கிலேசங்கள் எல்லாம் தொலையும் –

————————————————————————————————————————————————————————————————————————————-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டதென்பர் எழில் அணி யநந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -10-2-8-

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நியமித்து அருளுகிறார்
முந்துற முன்னம் -கடுவினை களையலாகும்-என்று பலனைச் சொல்லி -ப்ரரோசநார்த்தமாக –
எழில் அணி யநந்த புரம் படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நடந்தால் –
அந்த உத்யோகத்தளவிலே -கடுவினை களையலாகும் – நம்மால் போக்க அரிய பாபங்கள் எல்லாம் போக்கலாம் –
காமனைப் பயந்த காளை-வடிவழகில் ஏற்றம் சொல்கிறது
காளை நித்ய யுவா
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்-குறுகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் யோக சாஸ்திரம்
அரையர் ஆளவந்தாரைப் பார்த்து ஊன்றி உறுத்திப் பாட
நம்பெருமாள் இடம் அப்பொழுதே விடை பெற்று பயணமாகி
சிறு முறியை எடுத்துப் பார்க்க -ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே -என்று சோகித்து எழுந்து அருளி இருந்தார்
இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் -திரு அத்யயனம் பாடா நிற்க இத்தைக் கேட்டு அருளி ஆளவந்தார்

-நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேணும் -என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு எழுந்து அருளினார் –

—————————————————————————————————————————————————————————————————————————

நாமும் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே –10-2-9-

நாளேல் அறியேன் -என்று முன்பு இருந்த ஆழ்வாருக்கு
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
நாளும் சமீபித்து விட்டதே -நாளேறப் பெறுகின்றேன் -என்று இருக்கும் நான் சரம சந்தேசமாக சொல்கிறேன்
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று சொல்பவன் நான் ஒருவனே
தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரந்தரே ஜ்ஞாநாநி அல்பீ பவிஷ்யந்தி ததஸ் த்வாம் சோதயாம்யஹம் –
பீஷ்மர் முமுஷூவாய் உள்ள காலத்தில் கண்ணபிரான் யுதிர்ஷ்டர் இடம் அருளிச் செய்தது போலே
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபரம்-பரம போக்யமான தேசம் -நல்ல ஷேமத்தை விளைக்கும் –
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு -நல்விரை முன்னும் பின்னும் அன்வயிக்கும்
நல்ல பரிமளம் உடைய தூபமும் -அப்படிப் பட்ட மலர்களையும் -கொண்டு ஏத்த வினைகள் தானே மாய்ந்து அறும்-

—————————————————————————————————————————————————————————————————————————

மாய்ந்தறும் வினைகள் தாமே மாதவா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுர நகர் எந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே –10-2-10-

மாதா பிதாக்களின் பேரைச் சொல்ல –
அவர்கள் சேர்த்தியில் ஈடுபட்டுப் பேச –
அநாதி காலம் ஆர்ஜித்த துக்கங்கள் தன்னைடையே மாய்ந்து போம்
அமா அப்பா என்ன உச்சி குளிரும் -என்கிறார்
தகுதியான பொன் மதிளை உடைய சேவை சாதிக்கும் ஸ்வாமிக்கு
மநோ ரதித்த திரு வாராதனைக்கு உரிய உபகரணங்களைக் கொண்டு பணிந்து எத்துமவர்கள்
நித்ய சூரிகளில் காட்டில் மேம்பட்டவர்கள் என்கிற புகழைப் பெறுவார் -அந்தமில் புகழினாரே –
அது இருள் தரும் மா ஞாலம் இல்லையே
இடையூறுகள் பூரித்த இடம் இல்லையே
உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலம் -இங்கே திவ்ய தேச அனுபவம் பண்ணப் பெறுவார் சிலர் உண்டாகில் -விண்ணுளாரிலும் சீரியர் ஆவாரே –

————————————————————————————————————————————————————————————————————————————

அந்தமில் புகழ் அனந்தபுர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போயமருலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோளிணையே –10-2-11

பரம பதத்திலே திவ்ய அப்சரஸ் ஸூ க்களாலே ப்ரஹ்ம அலங்கார ப்ராப்தி பண்ணப் பெறுவார்
கீழ்ப் பாட்டில் இவனை ஏத்துமவர்களை அந்தமில் புகழினார் என்றார்
இதில் இவனையே அந்தமில் புகழினாக அருளிச் செய்கிறார்
இந்நிலத்தன்பர்கள் விண்ணுளாரிலும் சீரியர் போலே
இவனும் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட புகழ் உடையவன் என்கிறார்
அற்றுத் தீர்ந்தவர்களை மட்டும் அன்றி விமுகர்களையும் ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதால் –
அந்தமில் புகழ் -திருவனந்த புரத்துக்கும் -ஆதிக்கும் -அந்வயிக்கும்
வல்லார் அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோளிணையே –
ஸ்வர்க்க லோகத்தில் சென்று ரம்பா பரிரம்பம் போன்ற இன்பங்களை சொல்லுவார் இல்லையே
ஒரு நாயகமாய் -ஸ்வர்க்க போகத்தை உட்பட இகழ்ந்து அருளினாரே
மேலே சூழ் விசும்பு அணி முகில் பதிகத்தில்
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்று
அருளும் சத்காரத்தையே இங்கு பலனாக அருளிச் செய்கிறார்
அவர்கள் ஆதாரத்துக்கு இலக்காக பெறுவார்கள் –
ப்ரிய தமர்களுக்கு ப்ரிய தமைகள் போக்யமா மாப் போலே திரு நாட்டில் உள்ளார்க்கு இத் திருவாய்மொழி வல்லார் போக்யர் ஆவார் என்கிறார் -ஆறாயிரப்படி –

———————————————————————————————————————————————————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி –

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினாப் போலே
தடமுடை யநந்த புரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மாற்காட் செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பே –92

——————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–தாள தாமரைத் தட மணி வயல் –10-1-

November 15, 2014

கீழ் திருவாய்மொழியில் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று அருளிச் செய்தது
எம்பெருமான் உடைய திரு உள்ளக் கருத்தை அனுவாதம் செய்த படி அன்றோ –
ஆழ்வீர் உமக்கு தேக அவசானத்திலே பேறு என்று நாளிட்டுக் கொடுத்து அருளினான் ஆயிற்று
தேகத்தின் முடிவு என்றைக்கு –
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -என்றும்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ -என்றும் அருளிச் செய்தவர் ஆகையாலே
கட்டுக் குலைந்த திரு மேனி முடிவு அணித்தாகிறது என்று அறுதி இட்டுக் கொண்டார்
திரு நாட்டுப் பயணம் குறித்து சந்நாஹம் செய்ய முந்துற முன்னம் வழித் துணையாக
திரு மோகூர் காள மேகப் பெருமாளை பற்றுவதாகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி –
பரம பதம் செல்ல வழித்துணை வேண்டுமோ
அர்ச்சிர் தின பூர்வ பஷ ஷடு தங்மா சாப்த வாதாம் சுமத் க்லௌ வித்யுத் வருணேந்திர தாத்ரு மஹித் -நடாதூர் அம்மாள்
அர்ச்சிராதிகள் வழி நடத்த அன்றோ போகிறது
வேறு வழி துணை எதற்கு சங்கை பிறக்குமே
ததஸ் தம் ம்ரியமாணாம் து –அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று
எம்பெருமான் தானே வழி நடத்தி செல்கிறான்
அப்படி வழித் துணையாகும் பெருமாள் சந்நிஹிதனாய் திரு மோகூரில் எழுந்து அருளி இருக்க
அவனையே வழி துணையாகப் பற்றுகிறார்
வழித் துணையாம் இடத்தில் ஞானத்திலும் சக்தியிலும் குறைவற்று
விரோதி நிரசன சமர்த்தனாய் இருக்கும் படிகளை அனுசந்தித்து அவ்வெம்பெருமானையே வழித் துணையாகப் பற்றுகிறார் –

———————————————————————————————————————————————————————————————

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே –10-1-1-

கொடிய தாபத்தில் அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காள மேகம் வர்ஷிப்பதையோ எதிர்பார்ப்பது சஹஜம்
இவனே தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம்
இந்த திவ்ய தேச தடாகம் இன்றும் தாள தாமரை தடம்
வான மா மலை சோலை -தேனமாம் பொழில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சித்து தலை வணங்கும் தண் அரங்கமே –
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று -பரம பதத்தைக் காட்டிலும் இனிதாய் இருக்குமே
அங்கு பகல் விளக்கு போலே
அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் -அர்ச்சாவதாரத்தில் அனுபவத்திலும் விபவ அவதாரத்தில் அசுரர்களை தகர்த்த சாமர்த்தியம் ஆழ்வாருக்கு பிரகாசிக்க –
இப்போது அறிந்தபடி எங்கனே என்னில் -விடு காது ஆனாலும் தோடு இட்டு வளர்ந்த காது என்று தெரியும் காணும் –
சுரி குழல் கமலக் கனி வாய் காளமேகத்தை -நெடுநாள் பட்ட சம்சார தாபம் எல்லாம் ஆறும்படி
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-என்றும்
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று -என்றும் -திருக் குழல் ஒழுங்கையும்
செவ்வித் தாமரை மலர்ந்தால் போல் உள்ள கடாஷ வீஷணத்தையும்
உள்ளுள்ள அபி நிவேசத்தை எல்லாம் கோள் சொலித் தரும் முறுவலையும் -அனுபவத்து அருளிச் செய்கிறார் –
இப்படிப் பட்ட காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-என்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————————————————-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே –10-1-2-

திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்-
அவன் திருவடி கள் அல்லது வேறு புகலிடம் இல்லை
நலம் கழல் அவன்-திரு மோகூர் எம்பெருமானுக்கு திரு நாமம் சாத்துகிறார் –
நன்மை மிக்க திருவடிகளை உடையவன் -திருவடிகளுக்கு நன்மை யாவது -அனலோசித விசேஷா சேஷ லோக சரண்ய-என்று
கத்ய த்ரயத்தில் அருளிச் செய்தால் போலே இத்திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை என்னும்படி –
ஆஸ்ரிதர் உடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -ஈடு –
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் -நலம் கொள் விசேஷணம்-
நான் மறைக்கும் -அபௌருஷேயத்வம்-நித்ய -நிர்தோஷத்வம் -ஆகிய நலங்கள் –
-நான் மறை வாணர்க்கும் -வேத தாத்பர்யங்களை நன்கு அறிந்தும் -அனுஷ்டித்தும் -போருகை யாகிய நலங்கள்-

——————————————————————————————————————————————————————————————————————————————-

அன்றியாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம்மூவுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே –10-1-3-

எல்லா துயரங்களும் கெடுமாறு திரு மோகூர் சென்று கிட்டுவோம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் -அன்றியாம் ஒரு புகலிடம் இலம் என்று-என்றே அலற்றி –
பிரயோஜனாந்தர பரர்களும் அநந்ய பிரயோஜனர் போலே
வஞ்சமாக பேசினாலும் அவர்கள் உடைய அநிஷ்ட நிவாரணத்தையும் இஷ்ட ப்ரபாணத்தையும் செய்து நிற்பான் -வென்றி இம்மூவுலகளித்து உழல்வான்-
வென்று -என்றது -அவர்கள் விரோதிகளை வென்று -என்றபடி-

—————————————————————————————————————————————————————————————————————————

இடர் கெட வெம்மைப் போந்ளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே –10-1-4-

தேவரும் முனிவரும் -இடர் கெட வெம்மைப் போந்ளியாய் என்று-பல காலும் ஏத்தி தொடருகின்றார்கள்
அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என் என்னில் -படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான்-ஸூ க ஸூ ப்த பரந்தப -என்றபடி
கிடந்த கிடையிலே அவர்கள் இடர் கெடும்படி இருப்பன் –
சங்கல்ப மாத்ரத்திலே எதையும் நிர்வஹிக்க வல்லவன்
ஈஸ்வர அபிமானிகளான தேவர்களும்
சாப அனுக்ரஹ சமர்த்தர்களான முனிவரும்
பாம்பனை பள்ளி கொண்டு இருக்கும் திருக் கோலத்திலே தொடர -என்றுமாம்
சுடர் கொள் சோதியை-இது ஸ்வா பாவிகமான தேஜஸ் சொன்னது அன்று
பிரயோஜனத்தை விரும்பி ஆகிலும் நம்மைத் தேடி வருகிறார்களே -வடிவு புகர் பெற்ற படி
அன்றிக்கே
ஸ்வயம் பிரயோஜனமாக இல்லாமல் அல்ப பலன்களுக்கு வருகிறார்களே பரிதாபம் தோற்ற என்றுமாம்
ஆழ்வார் உடைய இடர் வேறு
அவர்கள் உடைய இடர் வேறு
ஏஹி பஸ்ய சரீராணி -ராஷசர் தின்ற உடம்பைக் காட்டி உடம்புக்கு பூண் கட்டப் பார்ப்பார்கள்
அழுக்கு உடம்பு இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று உடம்பை கழற்றத் தேடுவார் ஆழ்வார்
ஆக இடரில் நெடு வாசி உண்டே-

————————————————————————————————————————————————————————————————————–

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூவுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே –10-1-5-

தொண்டீர் வம்மின்-யாரும் இலக்கக் கூடாது என்று மீண்டும் தொண்டீர் வம்மின்-என்கிறார்
இன் கனி தனி யருந்தான்
ஏக ஸ்வாது ந பஞ்ஜீத
திரு மோகூரை வலம் செய்து கூத்தாடலாம் வாருங்கோள் என்கிறார்
அங்குள்ளவன் -சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-
சுடர் ஒளியையும்
வடிவு அழகையும்
தனது முதன்மையையும்
காட்டி நம்மை ஈடுபடுத்திக் கொண்டவன்
தனி முதல்வன் -படைப்பவன் என்றார்
படைத்து விடுகை அன்றிக்கே -வலியார் அபஹரித்தால் எல்லை நடந்து கொண்டு ரஷிப்பவன் -அண்ட மூவுலகளந்தவன்
கொண்ட கோயிலை-தன் உள்ளத்தால் உகந்து பரிஹரித்துக் கொண்ட திவ்ய தேசம்
வலம் செய்தும் -கூத்தாடியும் -பக்தர்களை அழைக்கிறார்

———————————————————————————————————————————————————————————————————————

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை அடி யன்றி மற்றிலம் அரணே –10-1-6-

கூத்தன் -அழகிய நடையை உடையவனாய் -நெஞ்சை கவருபனாய் இருக்கை
நடக்கப் புக்கால் வல்லார் ஆடினால் போல் இருக்கை -ஈடு
அக்ரத ப்ரயயௌ ராம -யௌ என்னாமல் ப்ரயயௌ என்று நடை அழகை காட்டினால் போலே
இந்த நடை அழகு ராம பிரான் மட்டும் இன்றி கண்ணபிரான் இடத்திலும் இருப்பதால் கோவலன்
கானகம் படி யுலாவி யுலாவி கரும் சிறுக்கன் குழலூதின போது
மேனைகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே
குதற்று வல்லசுரர்கள் -ஜாதியோ அசுர ஜாதி -வன்மையே வடிவெடுத்தவர்கள்
அதற்கு மேலே -குதற்று -சாதுக்களுக்கு பீடை செய்வதையே தொழிலாக கொண்டவர்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு கூற்றம் -மிருத்யு
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்-இன்று ஆஸ்ரயிக்கும் நமக்கும் நித்ய ஆஸ்ரிதர்களான வர்களுக்கும் இன்பன்
வாசி அற்று இருந்தாலும் இன்பனாம் இடத்தில் முந்துற நமக்கு
அப்படிப்பட்டவன் திரு மோகூர் ஆத்தன் -ஆப்தன் -பரம பந்து
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் -ஈடு
இப்படிப்பட்ட ஆப்தன் உடைய தாமரை அடியை அன்றி வேறு அரண் இலோம் –
வேறு சிலரை ரஷகராக உடையோம் அல்லோம் –

—————————————————————————————————————————————————————————————————————————-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்று நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே –10-1-7-

வான் பெரும் பாழ் -மூல பிரகிருதி -மோக போஷங்களை விளைத்துக் கொள்ள வல்ல பெரிய நிலம்
தனி முதலா -பெரும் பாழுக்கு விசேஷணம்
சுற்றும் நீர் படைத்து-ஆவரண ஜலம் படைத்து
அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான்-நான்முகன் தேவர்கள் ஜாதி உலகு எல்லாம் படைத்து
திரு மோகூர் சுற்று நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே

-பிரதஷிணாதிகள் செய்து துயர் விரைவில் தொலையும் -வழித் துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் -என்கை

————————————————————————————————————————————————————————————————————————————————

துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –10-1-8-

வெளியே தாள தாமரைத் தடாகம்
உள்ளே தயரதன் பெற்ற மரகத மணித் தடம்
கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -8-5-1-
கர சரண சரோஜே காந்திமன் நேத்ர மீனே ச்ரம மூஷி புஜவீசி வ்யாகுல அகாத மார்க்கே ஹரி சரசி -முகுந்த மாலை
உத்புல்ல பங்கஜ தடாகமிவ -என்றும்
பிப நயன புரஸ் தே -என்றும்
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் பட்டரும் அருளிச் செய்தார்
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-இத்தால் அரக்கர்களை
பெருமாள் தானாக முடித்திலர்
விட்டில்கள் விளக்கில் தாமாக விழுந்து முடிந்து போவது போலே
தாங்களாகவே எதிரிட்டு முடிந்து போனார்கள் –
பெயர்கள் ஆயிரம் உடைய-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்வயிக்கும்
அரக்கர்கள் இடமே அன்வயிக்கும்
ஈஸ்வரன் ரஷித்துப் படைத்த பெயர்களோபாதி போருமாய்த்து இவர்கள் பர ஹிம்சை பண்ணி படைத்த பெயர்
யஜ்ஞசத்ரு -ப்ரஹ்ம சத்ரு என்றால் போலே இ றே இவர்கள் பெயர்-ஈடு ஸ்ரீ ஸூ க்தி

——————————————————————————————————————————————————————————————————————

மணித்தடத் தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால்தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே –10-1-9-

தம்முடைய லாபத்தை பேசி மகிழ்கிறார்
தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அப்போது அலர்ந்த செந்தாமரை ஓலே இருக்கிற திருக் கண்களையும்
பவளம் போலே சிறந்த திரு அதரத்தையும் உடையனாய்
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல நான்கு திருத் தோள்களையும் உடையனாய்
அத் திரு தோள்களுக்கு இரை போரும்படியான எதிரிட்டு வரும் அசுரர்களை துணிக்குமவனான எம்பெருமான்
நித்ய வாசம் செய்து அருளும் இடமாய் சோலைகள் சொந்த திரு மோகூர் திருப்பதி யானது கிட்டிற்று-

—————————————————————————————————————————————————————————–

நாம் அடைந்த நல்லரண் நமக்கு என்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திரு மோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் –10-1-10-

அடியார்களின் விஷயங்களில் அபீஷ்ட விக்ரஹம் பண்ணி ரஷித்து அருளும் எம்பெருமான்
வர்த்திக்கும் திவ்ய தேசம் திரு நாமம் சொல்லி ஏத்துங்கோள் என்று தம்முடன் அன்வயம் உடையார் இடம் அருளிச் செய்கிறார்
நல்லமரர் –தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்று -நாம் அடைந்த நல்லரண்-என்று அடைந்தால்-
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான்
ஆபத் ரஷணம் அநு ரூபமாக வேண்டின படி பரிக்ரகுஇக்கும் திரு மேனி தானே காம ரூபம்
இச்சையினால் பரிக்ரஹிக்கப் பட்ட ரூபம்
இந்த திவ்ய தேச திரு நாமத்தை வாயாலே சொல்லி அனுசந்தித்து
அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள்-

———————————————————————————————————————————————————————————————

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –10-1-11-

சரீர அவசானத்தில் வழித் துணை இல்லை என்ற துயர் தீரும்
கண்ணன் குடமாடும் பொழுது -நம் சேஷ்டிதத்தை உகப்பார் எல்லாரும் வந்து கண்டு வாய் படைத்த
பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள் -என்று தானே சொல்லிக் கொண்டு ஆடினான்
இத்தால் பிறருக்கும் போலே தனக்கும் மநோ ஹரமான சேஷ்டிதங்களை உடையவன் என்றது ஆயிற்று
ஆழ்வார் வாசிகமான அடிமையிலே அதிகரித்தார்
அவை தகுதியான ஆயிரமாக அவதரிக்கத் தொடங்கிற்று
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் –
முகில் வண்ணன் அடி சொன்ன சொல் மாலை ஆயிரம்
திருவாய் மொழி ஆயிரமும் ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப் பட்டது
திரு வேங்கடத்துக்கு இவை பத்தும்
திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை
இவை பத்தும் திருக் குறுங்குடி அதன் மேல் -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்கிறார் -என்றார்களாம்-

———————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காள மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –91-

——————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மாலை நண்ணித் தொழுது எழுமினோ–9-10-

November 14, 2014

கீழே -அறுக்கும் வினையாயின -திருவாய் மொழியில் -அவனைப் பெற வேணும் என்னும் மநோ இதமாய்ச் சென்றது –
அந்த மநோ ரதம் நிறைவேறாமையாலே கிலேசித்த படி சொல்லிற்று கீழ்த் திருவாய்மொழியில்
இத்தை அறிந்த எம்பெருமான் -ஆழ்வீர் எம்மைப் பெறாமையால் நீர் நோவு படுவது கிடக்கட்டும் –
உம்மைப் பெறாமல் இழவு பட்டுக் கிடப்பவன் நான் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
திரு நாட்டை விட்டு திருக் கண்ணபுரத்திலேநாம் சந்நிதி பண்ணி இருப்பது உமக்காக அன்றோ
இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய அபேஷிதம் நிறைவேற்றக் கடவோம் -என்று சொல்லி சமாதானம் பண்ண
ஆழ்வாரும் சமாஹிதராய் அதனைச் சொல்லி மகிழ்கிறார் இத் திரு வாய் மொழியில்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -உயிரான பாசுரம்
சர்வேஸ்வரன் சர்வ ஜன சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருக் கண்ணபுரத்திலே கோயில் கொண்டு இரா நின்றான்
எல்லாரும் அவனை சென்று ஆஸ்ரயிங்கோள்
ஆஸ்ரயிக்கும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியை பண்ணுங்கோள்
பக்திக்கு உபகரணம் இல்லாதோர் பிரபத்தியைப் பண்ணுங்கோள்
அதற்கு உரிய அத்யவசாயம் இல்லாதார் உக்தி மாத்ரைத்தை ஆகிலும் சொல்லுங்கோள்
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆனபின்பு எல்லாரும் ஒக்க அவனை ஆஸ்ரயிங்கோள் -என்று
பரோபதேசமாக செல்கின்றது இப்பதிகம் –
மோஹித்துக் கிடந்தார் ஆகில் கிடக்கும் அத்தனை போக்கி உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு ஹிதம் சொல்லி அல்லது நிற்க மாட்டார்-என்பர் நம்பிள்ளை –

——————————————————————————————————————————————————————————————————————-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலரிட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடியிணைகளே –9-10-1-

வடதள சயனனான மகா உபகாரகன் பக்கலில்
பிரேமத்துடன் பணிந்து
அநவரதம் கைங்கர்யம் பண்ணுமின் -இப்பதிக சங்க்ரஹம்
மாலை நண்ணி -மால் என்று திருமாலை -மால் -அன்பு பிரேமா உக்தராய் என்றுமாம்
வினை கெட -பகவத் பிராப்தி விரோதி வர்க்கம் எல்லாம் கெடும்படி
கீழ் மல்லிகை கமழ் -நான் பட்ட கிலேசம் எல்லாம் கிட்டாத படி என்றுமாம்
காலை மாலை கமல மலரிட்டு-காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் தொழுது எழு என்கிறது அன்று
பகலும் இரவும் என்றபடி
ஆஸ்ரயணத்துக்கு கால நியதி இல்லை
கமல மலரிட்டு-புஷ்ப நியதி இல்லை -அவனுக்கு ஆகாத புஷ்பம் இல்லையே
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிழையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாய்க் கொள்ளோமே-திருமங்கை ஆழ்வார்
எண்டிசையும் உள்ள பூக்கொண்டு -என்றார் இவரே
கமலமலர் என்றது உப லஷணம்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து-
சமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள்ள மதிளாலே சூழப் பட்டு இருந்துள்ள திருக் கண்ணபுரத்திலே -ஈடு
கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -திருமங்கை ஆழ்வார்
நாளடைவில் சமுத்ரம் ஒதுங்கிப் போய் இருக்கக் கூடும் என்பர்-

————————————————————————————————————————————————————————————————————————

கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே –9-10-2-

கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்கையாலே இன்ன மலர் என்ற நிர்பந்தம் இல்லை
வாடி வதங்கிப் போன மலர் இல்லாமல் அப்போது அலர்ந்த மலர்
அஹிம்சா பிரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ
சர்வ பூத தயா புஷ்பம்
ஷமா புஷ்பம் விசேஷத
த்யானம் புஷ்பம்
தப புஷ்பம்
ஜ்ஞானம் புஷ்பம்
தவைவச சத்யம்
அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் -சொன்னபடியாகவுமாம்
வெள்ளி ஏய்ந்த மதிள்-வெள்ளி -சுக்ரன் -நஷத்திர மண்டலத்தளவும் ஓங்கிய மதிள்
வெள்ளியாலே ஏய்ந்த மதிள்-ரஜதத்தாலே ஏய்ந்த மதிள்
வெள்ளி போலே சுப்ரமாய் இருக்கின்ற மதிள்
இத்தகைய பிரகார சம்ருத்தி உண்டாக ஆசம்சித்து அருளிச் செய்கிறார் என்னவுமாம்-

—————————————————————————————————————————————————————————————————————

தொண்டர் நுந்தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்டவாணன் அமரர் பெருமானையே –9-10-3-

உபய விபூதி நாதன் இங்கே எழுந்து அருளி உள்ளான்
அநந்ய பிரயோஜனராய் அவனை ஆஸ்ரயித்து உங்கள் துக்கம் போக்கிக் கொள்ளுங்கோள்
தொண்டர் -அண்மை விளி-தொண்டர்களே -இளைய பெருமாளை போலே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று பாரித்து இருப்பவர்களே
நுந்தம் துயர் போக-துயர் எல்லாம் ஒரே வகையாக இராதே
சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள்
முமுஷூக்களுக்கு விரோதி தேக சம்பந்தம்
முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்ய ஹானி -முமுஷூப்படி
தம்தாமுடைய விரோதிகள் தொலையும்படி
நீர் ஏகமாய் -ஏகீப வித்தர்களாய்-பல வகை பலன்களை கணிசியாதே பகவத் கைங்கர்யம் ஒன்றையே கணிசித்து
செவ்விப் பூவைக் கொண்டு ஆஸ்ரயிங்கோள்
நீர் நீர் -முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் சொன்னது உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணும்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து -வண்டுகள் போலே சாராக்ராஹிகள் வர்த்திக்கும் திவ்ய தேசம்
அண்டவாணன் அமரர் பெருமானையே-உபய விபூதி நாதன்
அண்டவாணன் -லீலா விபூதி நிர்வாஹகத்வம்
அமரர்பெருமான் -நித்ய விபூதி நிர்வாஹகத்வம்-

————————————————————————————————————————————————————————————————————

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே –9-10-4-

நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரியுங்கோள் -அவள் புருஷகார பலத்தாலே பேறு தப்பாது
மானை நோக்கி-மான் நை நோக்கி -மானானது நையும்படியான -தோற்கும்படியான நோக்கை உடையவள்
தேனை வாடா மலரிட்டு -தேன் போன்ற பரம போக்யமானவனை
ஆச்சார்யஹிருதயம் -4-9-அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் சாங்க பக்தி -என்பதால்
தேனை வாடா மலர் இட்டு -ஒரே சொல்லாக கொள்ளுகிற யோஜனையும் உண்டு
தேனை உடைத்தாய் வாடாத மலர் இட்டு -என்கை
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ணபுரம் -ஆகாசத்தை தள்ளுமா போலே -அத்துடன் ஸ்பர்த்தை பண்ணி
ஆசூர பிரக்ருதிகள் கிட்ட ஒண்ணாத
தான் நயந்த பெருமான் சரணாகுமே-அடியார்களை ரஷிக்க-சம்ச்லேஷிக்க பாங்கான தேசம் என்று உகந்து நித்யவாசம் செய்து அருளும் திவ்ய தேசம்-

————————————————————————————————————————————————————————————————————————-

சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே –9-10-5-

கீழ் சொன்ன பக்தி யோகத்தால் ஆஸ்ரயிக்க இயலாதார்க்கு –
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினவர்களுக்கு
சர்வ ரஷகனாய் -தேக அவசானத்திலே இந்த பிரகிருதி சம்பந்தம் விடுவித்து திரு நாட்டிலே கொண்டு போய் வைத்து அருளுவான்
ஆழ்வாருக்கு அவன் அருளிச் செய்ததை வெளியிட்டு அருளுகிறார்
இவ்வுடல் முடியும் தனையும் பொறுத்து இரும்
முடிந்த உடன் பிராரப்த கர்மாக்கள் முடிந்தனவாகக் கொண்டு
சஞ்சித கர்மாக்களை ஷமைக்கு விஷயம் ஆக்கி
இவ்வளவோடு ஜன்ம பரம்பரையை முடித்திட்டு
பொய் நின்ற ஞானமும் –இனி யாம் உறாமை -அடியிலே பிரார்த்தித்த படியே தலைக் கட்டி அருளுவேன் -என்றத்தை அனுபாஷித்து அருளுகிறார்
மரணமாக்கி வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இல்லை
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத் தரணி யாளன்-ஆழ்வார் தமது அச்சம் தவிருகிறார்
தரணி -பூமிக்கு பெயராய் சம்சாரிகளை ஆட்கொள்ளுபவன் –
தனது அன்பர்க்கு அன்பாகுமே-தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்றபடி
அன்பருக்கு அன்பனாகும் என்னாதே அன்பாகும் என்றதால்
எம்பெருமான் அன்பை இட்டே நிரூபிக்க வேண்டும்படி –

——————————————————————————————————————————————————————————————————————————

அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே –9-10-6-

அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -அனலோசித விசேஷா சேஷ லோக சரண்யா -எம்பெருமானார்
இன்னார் இனையார் வாசி இன்றி -வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாருக்கும் ஒக்க ச்நேஹிக்குமவன்
ய கச்சிதேவ யதி கிஞ்சன ஹந்த ஜந்து பவ்யோ பஜேத் பகவந்தம் அந்யசேதா
தம் சோயம் ஈத்ருச இயா நிதி வாப்ய ஜானன் ஹை வைனதேய சமமபி உரரீக ரோஷீ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -ஆசூர யோனியில் இருந்தும் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் உடைய விரோதியைக் கீண்டு ரஷித்து அருளினவன்
பாரமார்த்திக பிரயோஜன புத்தி உடையாருக்கு அப்படியே இருப்பவன்

———————————————————————————————————————————————————————————————————————————

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7-

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –
பிரயோஜனாந்தரங்களான சூத்திர பலன்களை கணிசியாமல்
தன்னையே பரம பிரயோஜனமாக பற்றினார்க்கு
ஆரேனும் ஆகிலும் -தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
உள்ளது உள்ளபடியே காட்டிக் கொடுப்பவன் –
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் -புறம்பே சூத்திர பலன்களை கணிசித்து அதற்காக ஆஸ்ரயித்தால்
அந்த அல்ப பலன்களைக் கொடுத்து தன்னை மறைய நிற்பவன்
ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-ஹிருதயத்தில் வைப்பாருக்கு கையாளாய் இருப்பான்
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ சமுபச்திதௌ
ஆஜ்ஞாப்ய யதேஷ்டம் வை சாசனம் கரவாவகிம் -என்று
விசவா மித்ரனை நோக்கி சொன்னதை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி அருளுவான் –

————————————————————————————————————————————————————————————————-

அணியனாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –9-10-8-

தனது திருவடிகளே பிராப்யமஎன்று பற்றினார் எல்லார் உடையவும் -ஆறாயிரப்படி
அநந்ய பிரயோஜனராய் பற்றினார்க்கு
துக்க ஹேதுவான சம்சாரத்தையும் போக்கி
அடிமையும் கொண்டு அருளுவான்
திரு நாட்டில் இருக்கும் படியில் ஒன்றும்குறை இல்லாத
ஸ்ரீ சௌரி ராஜன் பெருமாள் திருவடிகளையே பற்றுங்கோள்-

———————————————————————————————————————————————————————————————

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –9-10-9-

தம் உள்ளம் அவனை ஆஸ்ரயித்து குறை தீர்ந்தபடியை பேசிக் களிக்கிறார்
அனுபவத்தால் சொல்கிறேன்
நீங்களும் குறை தீரப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்
வேத வித்துகள் விரும்பி வர்த்திக்கும் திருக் கண்ணபுரத்தில்
எழுந்து அருளி இருக்கும் காரண பூதனை
ஆஸ்ரயித்த பின்பு அல்லல் இருக்குமோ
தாய் மடியில் சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லை என்று சொல்லவும் வேணுமோ –

——————————————————————————————————————————————————————————————–

இல்லை யல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பக்தியையோ
பிரபத்தியையோ
அனுஷ்டிக்க சக்தர் அல்லாதார்
திருக்கண்ணபுரம் என்று சொன்ன அளவிலே சமஸ்த துக்கங்களும் போகும்
இல்லை யல்லல் எனக்கேல் இனி என் குறை -மீண்டும் உகப்பால் அருளிச் செய்கிறார்
இடையூறுகள் எல்லாம் தொலைந்த பின்பு
இனி ஒரு தேச விசேஷம் போக வேண்டாமல்
இங்கேயே கைங்கர்யம் செய்யப் பெறுவார்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணுகிற திரு மார்பன் ஆதலால் ஆஸ்ரயிக்க ருசியே வேண்டுவது
காலம் பார்க்க வேண்டா
அப்படிப் பட்ட பெருமான் வாசம் செய்து அருளும் திருக்கண்ணபுரம் வாயாலே சொல்ல சகல திரிதங்களும் போம்-

—————————————————————————————————————————————————————————————————-

பாடுசாரா வினை பற்றற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடியாடி பணிமின் அவன் தாள்களே –9-10-11-

பலன் அருளிச் செய்யும் பாசுரத்தில்
இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே-என்று
உபதேச ரூபமாகவே அருளிச் செய்தார் ஆயினும்
இதுவும் பலன் உரைப்பதாகவே தலைக் கட்டும்
அவன் தாள்களையே பணியும் பலன் கிட்டும் -பேறு சித்திக்கும்-

———————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

மாலுமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள் –90

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ—9-9-

November 14, 2014

இத் திரு வாய் மொழி மாலைப் பூசல் –
மேலே -10-3- வேய் மரு தோளிணை -காலைப் பூசல்
படை வீட்டில் இருந்தால் மாமனார் மாமியாருக்கு கூசி பெருமாள் உடன் நினைத்த படி பரிமாற போகாது என்று

காட்டிலே ஏகாந்தமாக அனுபவிக்க மநோ ரதித்துப் போந்த பிராட்டியை –
காந்தார மத்யே விஜனே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா-என்கிறபடியே கூப்பிடப் பண்ணினால் போலே
திருநாவாயாலே புக்கு அனுபவிப்பதாக மநோ ரதித்த இவர்க்கு
பாதக வர்க்கத்துக்கு அஞ்சிக் கூப்பிடும்படியாய் விளைந்தது -நம்பிள்ளை ஈடு  –

——————————————————————————————————————————————————————————————————-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி யிசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ
ஆழி யந்தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரிஏறே எம்மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியமாலோ –9-9-1-

தவரும் -துளைக்கின்றது
தனித் தனியே நலியும் படி –
ஏகாகியாய் நின்று நலியக் கடவதான தென்றல் மல்லிகை பரிமளத்தையும் துணை கொண்டு
கிஷ்கிந்தா காண்டத்தில் பெருமாள்
யானி ஸ்ம ரமணீ யாநி தயா சஹ பவந்தி மே தான்யே வாரமாணீ யாநி ஜீவிதோ மே தயா விநா-என்றும்
சதா ஸூ கமஹம் மன்யே யம் புரா சஹ சீதயா மாருதஸ் ச விநா சீதாம் சோக சஞ்சனநகோ மம-என்றும் அருளிய ஸ்லோகங்கள் போலே
வண் குறிஞ்சி யிசை தவருமாலோ -குறிஞ்சி மருள் காமரம் காந்தாரம் -பண்களுக்கு பெயர்
தென்றல் மேல் எழ நலியா நின்றது
இசை செவி வழியே உள்ளே புகுந்து நலியா நின்றது
அதுக்குமேலே மாலைப் பொழுதும் வந்து மயக்க -கண்ட வஸ்துகளை பார்த்தும் கண்டாரோடும் பேசியும் பொழுது போக்க முடியாது
சியாமள நிற மேகங்கள் அவனது அவயவ சோபைக்கும் வடிவுக்கும் ச்மாரகங்களாய் கொண்டு கொலை புரியா நின்றன
இவ்வளவிலே அவனுடன் சம்ச்லேஷித்த அவயவங்களைக் கொண்டு எங்கனே ஆறி இருக்கும் படி –

—————————————————————————————————————————————————————————————————–

புகலிடம் அறிகிலம் தமியமாலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ
பகலடு மாலை வண் சாந்தமாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்கும் ஆறு என் –9-9-2-

ஆம்பல் -இலைக் குழல் -ஊது குழல்
பல படிகளாலும் ரஷிக்கும் எம்பெருமான் வருகின்றிலன்
பாதக வர்க்கங்கள் திரளாகவும் தனித் தனியாகவும் வந்து நலியா நிற்கின்றன
தமியம் -தனிப்பட்ட நான் -புகலிடம் அறிகிலோம் -கீழ் சொன்ன கஷ்டங்களுக்கும் இங்கே சொன்னவற்றுக்கும் –
ஆல் ஒ -ஐயோ
புலம்புறு மணி-நாகுகளை தொடரும் சேக்களின் கழுத்தில் கட்டின மணியோசை விரஹிகளுக்கு உத்தீபகம் –
பகலடுமாலை -ஆச்வாசகரமான பகல் போதை முடித்துக் கொண்டு வந்து தோற்றின மாலைப் போது
பஞ்சமம் -பிக கூஜதி பஞ்சமம் -என்னும்படியான பண்
முல்லை என்று யாழையும் முல்லைப் பூவையும் சொல்லும்
இவை இன்ன செய்யும் சொல்லாமலே புலி புலி – பேரைச் சொன்ன போதே கொடுமையை சொன்னபடி
இனி பிராண தாரணம் பண்ணும் வகை அறியேன் –

————————————————————————————————————————————————————————————————

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
நுனி யிருங்கலவி செய்தாகம் தோய்ந்து துறந்து எம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனியிரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ –9-9-3-

நுனி யிருங்கலவி-துக்க கரமான சம்ச்லேஷம்
அவனுடைய திவ்ய அவயவங்களும் உள்ளே தோன்றி நலியா நின்றன
இனி உயிரைக் காக்க விரகு உண்டோ
இப்பொழுது வாராமல் உபேஷித்து இருப்பவன் அப்பொழுது வந்து சம்ச்லேஷிக்க வேணுமா
சம்ச்லேஷித்த படிகள் சொல்கிறது மேல்
முலைகள் இரண்டும் குழையும் படியாகவும்
நுண்ணிடை தளரவும்
பஹூ முகமான சங்கத்தைப் பண்ணி
என் வடிவிலே அவஹாகித்து அனுபவித்து
சம்ச்லேஷம் விச்லேஷமாய் அல்லது இராமையாலே உடனே பிரிந்து கள்வன் மீண்டு வருகிறிலன்
மறந்து பிழைக்கவும் முடியாமல் தாமரைத் தடம் கண்களும்
செங்கனி வாயும் மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழும் அழகும் தோள் அழகும்
என் நெஞ்சை விட்டு அகலாமல் நலிகின்றன-

—————————————————————————————————————————————————————————————————-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம்மதியமாலொ மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாலோ
தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு துதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ –9-9-4-

கீழ்ச் சொன்ன வடிவு அழகே பாவியேன் நெஞ்சை ஈருமாலோ
மேலுள்ள வாடை முதலியவையும் ஈருமாலோ -பன்னீராயிரப்படி
மகள் வாடை என்று வெறுத்து சொன்னால் தாய்மார் வெறுப்பான் என் -இது தண் வாடை அன்றோ என்றார்கள்
ஐயோ வெவ்வாடையைத் தண் வாடை என்பதே – என்கிறாள் மகள் –
சந்திரனும் நெருப்பை சொரியா நின்றான்
இருவராய்ப் படுக்கவேண்டிய படுக்கை ஒருவருக்கு நெருப்பாக சொல்ல வேணுமோ
இப்படி பேசலாமோ என்றால் பெண்மையும் குடி வாங்கிப் போனதே என்கிறாள்
வண்டு பூவின் உள்ளே புகுந்து சாரத்தை கொள்ளுமா போலே
கருட வாஹனான எம்பெருமான் ஆகிய வண்டு சாரத்தை கவர்ந்து போயிற்றே
பறவை ஏறும் பரம் புருடன் வந்து கைக் கொண்டு என் பெண்மை அழித்து போனான்
சம்ச்லேஷ விஸ்லேஷ பிரகாரங்கள் -பாதக பதார்த்தங்களின் பாரிப்பு ஆகிய இவை எல்லாம் -வகைகள்
இவை ஆத்மா பொறுக்கக் கூடிய அளவு இல்லையே
உசாத் துணையான நெஞ்சையும் இழக்கப் பெற்றேனே-

—————————————————————————————————————————————————————————————————-

யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ அவனுடைத் தீம் குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாறும் எம்மின் முன்னவனுக்கு மாய்வராலோ
யாமுடை யாருயிர் காக்குமாறு என் அவனுடையருள் பெறும் போதரிதே –9-9-5-

அடியார்க்கு எளியவன் என்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம் உயிரைக் காக்கும் விரகு உண்டோ
பசுக்கள் புகும் மாலைப் பொழுதும் வந்ததே
கண்ணன் வருவானே ஆறி இருக்கக் கூடாதோ என்னில்
கல்நெஞ்சக் காரன் அன்றோ
சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ் காவில் கலந்தாசை தந்து ஏகினார் நெஞ்சு கள் நெஞ்சமோ -திரு வரங்க கலம்பகம்
கள் நெஞ்சன் என்றால் கை வாங்கி இருக்கலாமே என்ன
இனிய குழலோசை கை விட ஒட்டாமல் பண்ணுகிறதே
நான் பகல் எல்லாம் பிரிந்தேன் -வரவு தாழ்ந்தேன் -பிரிவு ஆற்றேன்
பர தந்த்ரனாய் கெட்டேன் என்கிற புடைகளிலே சில
பாசுரங்களை குழலில் வைத்து இ றே ஊதுவது
அது கல் என்று கை வாங்காதே கிடாய் என்னா நின்றது
இப்பாசுரங்களால் அவன் குழல் ஓசை இரா நின்றது

நெஞ்சும் துணை அன்றி -அவனும் உதவாத போது -தோழி மீர் நீராவது உதவ வேண்டாமா
அந்தோ என் வியசனத்தைக் கண்டு எனக்கு முன்பே நோவு படா நின்றார்களே –
இனி ஆத்மா தரிக்க விரகு இல்லையே-

———————————————————————————————————————————————————————————————————————

அவனுடைய யருள் பெறும் போது அரிதால் அவ்வருள் அல்லன வருளுமல்ல
அவனருள் பெறும் அளவு ஆவி நில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் –9-9-6-

ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து நிற்கும் சீல குணம் என் உயிரை ஈரா நின்றதே
என் அருளைக் கொள்வார் உண்டோ என்று தேடி இருந்து கொள்வார் இல்லையே என்று வருந்திய அவன் அருள் அரிதாய் உள்ளதே இப்பொழுது
முதலாய நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது -பொய்கையாழ்வார்
க்ரம பிராப்தியை சஹிப்பதொரு பிராணனைப் பெற்றால் அன்றோ ஆறி இருப்பது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன் -மாலைப் பொழுதும் தொற்றிற்று நெஞ்சைக் காணோம் என்றும்
மாலையும் நெஞ்சையும் காணோம் -இரவை விட மாலை ஒருவாறு நன்று என்பதால் என்றுமாம்
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு வாகம் -பஸ்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான் -மோஷ தர்மம்
தபஸா தோஷிதஸ் தேன விஷ்ணுநா ப்ரப விஷ்ணுநா ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போர் நிவாஸ பரிகல்பித -என்றும்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
அக்கும் புலியின தளும் உடையாரோருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் -என்றும்
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமான் திரு மேனியில் இருப்பார்களோ என்னில் -ஆபத்துக்களிலே திரு மேனியில் இடம் கொடுத்து அருளும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போவார்கள்
சாமந்தருக்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும் மாளிக்கைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியை தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இ றே
அப்படியே இவர்கள் திரு மேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இ றே
ஒரோ கலஹங்க ளிலே அடையவளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து கலஹம் தெளிந்த வாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே –
காபாலி கந்தற்கு எளியதானது கிடீர் எனக்கு அறிதாய்த்து -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி-

——————————————————————————————————————————————————————————————————————————————

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த வத்தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ –9-9-7-

கீழ் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்
ஆருக்கு என் சொல்லுகேன்-என்னைப் போலே நீங்களும் நெஞ்சு இழந்தவர்கள் அல்லர்
வாடை முதலிய பதார்த்தங்களை தேடித் பிடித்து உகப்பவர்களாய் உள்ளீர்
குளிர்ந்த வாடை என்னை சித்ரவதம் செய்யா நிற்கின்றது
உயிரை கொள்ளை கொள்ளாது விட்டிட்டு ஹிம்சிக்க நினைத்து இரா நின்றது போலும்
ஆருக்கு என் சொல்லுகேன்-வடுகருக்கு தமிழர் வார்த்தை சொல்லுமா போலே -ஈடு
நெஞ்சோ கண்ணபிரான் உடைய கள்வப் பணி மொழிகளிலே ஈடு படா நின்றது –எல்லா பாதகப் பொருள்களும் திரள வந்து நலியா நின்றன –

—————————————————————————————————————————————————————————————————————-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மதுமண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் –9-9-8-

இங்கனே பொங்கிள வாடையானது புது மணத்தை முகந்து கொடு எறியா நிற்கச் செய்தே
அதன் மேல் புன் செக்கர் வந்து நலியா நின்றது
அதன் மேலே அவனிலும் கொடியதாய் நின்ற அக்கலவி இன்ப நினைவு என்னை ஈரா நின்றது
இன்னும் அதுக்கு மேலே மது மண மல்லிகை மாலையும் வண் பசும் சாந்தும் வந்து பாதிக்கின்றன
அதன் மேலே நமக்கே கேட்கும்படி குரவைக் கூத்தாட பஞ்சமராகத்தை வைத்தூதும் தீங்குழல் ஓசை ஒன்றே நின்று என்னை முடிக்கின்றது
அது அது என்று கலவியைச் சொல்லி வாசா மகோசரம்

——————————————————————————————————————————————————————————————————————

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை
யாதும் ஒன்றி அறிகிலம் அம்மவம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் -9-9-9-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் -நலிவதில் மற்றவை ஒரு தட்டு தீம்குழல் ஓசை -வேணு கானம் -ஒரு தட்டு
அதுவும் சாதாரண குழலூதுகை இல்லையே
பிரிந்தேன் -ஆற்றேன் -என்னுமா போலே நீச பாஷணங்களை இடை இடையே சொல்லி யாயிற்றுப் பாடுவது
கண்களாலேதூது விட்டும் -அவற்றாலும் பேசுவதும்
தூ மொழி இசைகளைக் கொண்டு நோக்குவதும் -விலஷணம்
பேச்சின் அபிப்பிராயம் கண் பார்வையிலும்
கண்ணாலே நோக்கி ஈடுபடுத்துமது இசைப் பாட்டுக்களினாலும் ஆகின்றது -என்றவாறு
பேதுறு முகம் செய்து -முகத்தைக் கண்டவாறே பைத்தியம் பிடிக்கும்படி செய்து
நொந்து நொந்து-நம்மிடம் ஈடுபட்ட அபலைகள் என்ன பாடு படுகிறார்களோ என்று தானும் நொந்து
சைதன்யம் உள்ள இடத்தே இந்த நோவுபாடு தவிர்க்க ஒண்ணாதே
பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை -பேதை நஞ்சம் அறவு அற -ஊடல் தீரும்படி யாயிற்று கண்ணன் பாடுவது
அது நலிவும் நலிவு சொல்லும் தரம் அன்று
மாயன் -தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும்படி தானே இழவாளனாய் வந்து கால் பிடிக்கும் ஆச்சர்ய பூதன் -நம்பிள்ளை

——————————————————————————————————————————————————————————————————–

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன்னாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கருமுகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ என் சொல்லி யுய்வன் இங்கு அவனை விட்டே –9-9-10-

வாலொளி-வெளுத்த ஒளி
மாலைவாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொன்னவிலும் எக்கில் கொடிதாய் நெடிதாகும் என்னிதனைக் காக்குமா சொல்லீர் -பெரிய திருமடல்
மாட்டின் கழுத்து மணி ஓசையும் – ஏறுகளும் நாகுகளும் கலந்து பரிமாறி கோலாஹலங்கள் செய்வது விரஹிகளுக்கு உத்தீபகமாம்
கீழே தீம் குழல் ஒருமையாக சொல்லி
இங்கே கொடிய குழல்களும் பன்மையாக சொல்வது
வண் துவரைப் பெருமாள் உடைய திருத் தோழன்மார் குழல்களை ஊதிக் கொண்டு புகுரா நின்றனர் -ஆறாயிரப்படி பிள்ளான் –
இதுக்கு மேலே வண்டுகள் பலவகைப் பூக்களிலும் படிந்து முரலுவதும் உத்தீபகம்
கடலோசையும் கர்ணகடோரம்
இங்கனே பாதக வர்க்கங்கள் நலிய அவன் பிரிவை எங்கனே ஆற்றுவேன்-

———————————————————————————————————————————————————————————————————–

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி யிழை யாய்ச்சியர் மாலைப்பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –9-9-11-

வண் துவரைப் பெருமாளைப் பிரிந்து தரிக்க மாட்டாமல்
அந்தியம் போதில்
அணி யிழை யாய்ச்சிகள் திரள நின்று கூப்பிட்டால் போலே
ஆழ்வாரும் அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாமல்
கூப்பிட்டு அலற்றின இத்திருவாய் மொழி
தொண்டர்களுக்கு உஜ்ஜீவன சாதனம்
இப்பாசுரம் கற்பார் ஆழ்வாரைப் போலே கூப்பிட வேண்டாம்
ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண்ணழிவு இல்லை-

—————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால் –89

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–அறுக்கும் வினையாயின–9-8-

November 14, 2014

கீழ்த் திருவாய் மொழியில் தூது விட்டார்
திரும்பி வரும் அளவும் ஆறி இருக்க மாட்டாரே
திரு நாவாயில் சென்று கிட்டுவோம் என்று பார்த்தார் –
காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்ற நிலையில் இவர் தாம் எங்கனே செல்வர்
இருந்த இடத்திலேயே இருந்து மநோ ரதிக்கக் குறை இல்லையே
அந்த மநோ ரதமே இத் திருவாய் மொழியாக பரிணமிக்கிறது

———————————————————————————————————————————————————-

அறுக்கும் வினையாயின ஆகத்தவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை யுண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

வினை யாயின அறுக்கும் -வினை என்று பேர் பெற்றவை அடங்கலும் பேர்க்கும்
ஸ்வரூப விரோதி
உபாய விரோதி
உபேய விரோதி
பிராரப்த சேஷமாய் அப்பாலும் செல்லக் கூடிய விரோதிகள் உண்டே
இவை யாருக்கு என்றால் – ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
அவனை மனத்திலே நிறுத்த அத்யவசாயம் ஒருமைப் பட்ட மநோ ரதத்தை உடையாருக்கு
அதற்க்கு என்று நித்ய வாஸம் செய்து அருளும்
குறுக்கும் -எம்பெருமானார் -எவ்வளவு தூரம் என்று வினவ -குறுக்கும் -சமீபத்தில்
இப்பாஷையாலே அருளிச் செய்வதே -என்று ஈடுபட்டாராம் –

————————————————————————————————————————————————————-

கொடியேரிடைக் கோகனகத்தவள் கேள்வன்
வடிவேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியானுறை சோலைகள் சூழ் திரு நாவாய்
அடியேன் அணுகப் பெறு நாள் எவை கொலோ –9-8-2-

பெரிய பிராட்டியார் உடனும்
நப்பின்னை பிராட்டியார் உடனும்
எழுந்தி அருளி இருக்கும் திரு நாவாயில் போய்ப் புகுவது என்றோ
கொடி போன்ற அழகிய இடையை உடையவளாய்
தாமரைப் பூவில் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவள்
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்
கூரிய வேல் போன்ற அழகிய கண்ணை உடையவள் -நப்பின்னை பிராட்டிக்கு மணவாளன்
புருஷகாரம் செய்து சேர்ப்பிக்க வல்ல வர்கள் அருகே இருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ –

————————————————————————————————————————————————————————–

எவை கொல் அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே –9-8-3-

கவையில் மனம் இன்றி -இரட்டைப் பட்ட நெஞ்சு இன்றிக்கே ஏகாக்ர சித்தனாய்
கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல் -திரு மங்கை ஆழ்வார்
நவையில் -ஹேய ப்ரத்ய நீகனான
துர்லபத்வம் தோஷங்கள் இன்றிக்கே திரு நாவாயிலே சந்நிஹிதனாய் சுலபனான ஸ்ரீ மண் நாராயணன் திரு ஒலக்கமாக இருக்க
அடியார்கள் குழாங்களை கூடுவது என்று கொலோ -அந்த திரளிலே புகப் பெறாமல் தகுமோ
கலுழ்வன்-வெள்ளமிட நிற்பன் –

————————————————————————————————————————————————————————————————

நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும்
மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

ஆத்மா உள்ள அளவும் கைங்கர்யம் செய்யும்படி விஷயீ கரிக்கப் பட்ட அடியேன்
திரு நாவாயிலே நப்பின்னை பிராட்டியார் உடன் கூடும் இருக்கும் இருப்பில் அடிமை செய்யப் பெறும் நாள் என்றோ –
நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் -இன்னும் எத்தனை நாள் துக்கச் சூழலில் என்று அறிகின்றிலேன்
என்று உன்னை அனுபவிக்கப் பெறும் நாள் என்று அறிகின்றிலேன்
நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -நித்ய சூரிகள் பண்ணும் யாவதாத்மா பாவியான கைங்கர்யத்தில் அன்றோ நானும் அன்வயித்து இருப்பது
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் -புஷ்பாதி உபகரணங்களால் குறை அற்ற திவ்ய தேசம்
பிராட்டி சம்பந்தம் மீண்டும் மீண்டும் அனுசந்தித்து அருளுகிறார் இத் திருவாய் மொழியில்-
தேசாந்தரம் போன பிரஜை ஊர் அணித்த வாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமா போலே
ப்ராப்ய தேசம் அணித்தானவாறே
திரளவும்
தனித்தனியாகவும்
பிராட்டிமாரை அனுசந்திக்கிறார் -நம்பிள்ளை

——————————————————————————————————————————————————————————————————————————-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கெல்லாம்
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே –9-8-5-

என் கண்களின் விடாய் தீர திரு நாவாயைக் கண்டு களிப்பது என்றைக்கோ
பெரிய பிராட்டியாருக்கும் பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபன்
ஒருத்தி புருஷகாரத்தில் ஊன்றி இருப்பாள்
ஒருத்தி பொறுமை தானே வடிவு எடுத்தவளாய் இருப்பாள்
இப்படிப்பட்ட இருவரும் அருகே இருக்க நான் இழக்கவோ
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கெல்லாம்-அனைவர்க்கும் நிர்வாஹகன்
உபய விபூதி நாதனுக்கு நாம் புறம்போ
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய் -அமரரர்கள் அதிபதி -பிராட்டிமாரும் தானும் திவ்ய பர்யங்கத்திலே நித்ய சூரிகளை நிர்வஹிக்கிரவன் கிடீர்
பெறாப் பேறாக ஆதரித்து நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்
காண்கையிலே விடாய் கொண்ட கண்கள் குளிர வயிறார கண்டு களிப்பது என்றோ –

—————————————————————————————————————————————————————————————————————————————

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே யுனக்காய் ஒழிந்தேன் துரிசின்றி
வண்டார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
கொண்டே யுறைகின்ற எங்கோவலர் கோவே –9-8-6-

துரிசின்றி -க்ருத்ரிமம் இல்லாமல் -உனக்கே தொண்டனாய் ஒழிந்தேன் –
எனக்காக திரு நாவாயை கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர் கோவே
உன் பக்கலிலே அநந்ய பிரயோஜனான அன்பை உடையேனான என்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரம் அன்று
என் பசி தீரா விடிலும் என் கண்களின் விடாய் தீர்ந்தால் போதுமே
யாசிக்கிரவர்கள் குழைந்தையைக் காட்டி அதன் பசியை தீர்க்க இரப்பது போல் இரக்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————————————–

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே திரு மாலே
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –9-8-7-

அடியேனுடைய அநந்ய கதித்வத்தைக் கண்டு அருள் செய்ய வேணும்
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்-இந்த்ரன் இடம் அபகரித்து நான் தான் அரசன் என்று இருந்தான்
ஔதார்யம் -குணம் கண்டு சாதுர்யமாக முடித்தான்
தேவாசுரம் செற்றவனே திரு மாலே -அனுகூலரான தேவர்களுக்காக அசுரர்களை செற்றவனே
திரு மாலே -விரோதிகளை அழித்து அடியார்களை காத்து அருள என்றே பிராட்டிமார் உடன் சேர்த்தி என்றபடி
திரு நாவாயில் பிரத்யஷிக்கலாம் படி இருக்கின்றமை -காட்டி அருளி -நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ-

——————————————————————————————————————————————————————————————————————————

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை எந்நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றார் கீழ்
இதில் அருளினாலும் அருள் -அருளாது ஒழிந்தாலும் ஒழி -என்கிறார்
தெருளே தரு -தெளிந்த அறிவைத் தந்து அருள்
இத்தை திரு நாவாய் தேவனுக்கு விசேஷணம் ஆக்கி உரைப்பர் ஆறாயிரப்படியில் பிள்ளான்
அஜ்ஞ்ஞான கந்தம் இல்லாததொரு படி -ஸ்வரூப ரூப குண விபூதி விஷய திவ்ய ஜ்ஞானத்தை
உனது கிருபையால் எனக்கு தந்து அருளின நீ இன்னமும் உன் கிருபையால்
நம் அடியான் இவன் -என்று விஷயீ கரித்து அருளி அடியேனை உன் பொன்னடிக் கீழ் புக வைத்து அருளுவாய்
வைத்து அருளாது ஒழிவாய்
திரு உள்ளம் ஆனபடி செய்து அருள் என்று கொண்டு எம்பெருமானை இன்னாதாகிறார் -ஆறாயிரப்படி
தரு -தந்து அருள வேணும் -வினை முற்றாக கொண்டு உரைப்பர் மற்றவர்
அருளவுமாம் தவிரமுமாம் -அஜ்ஞ்ஞான கந்தம் இல்லாதபடி உன்னை
என் நெஞ்சிலே இருத்தும்படி தெளிவைத் தர வேணும் என்கிறார் -மற்றவர்கள் பணிக்கும் படி –
தெருளைப் பெற்றவரான ஆழ்வார் அதைத் தந்து அருள வேணும் என்று பிரார்த்திப்பது –
பெற்ற அதனுக்கு விச்சேதம் இல்லாதபடி அபிவிருத்தியைச் செய்து அருள வேணும் என்று பிராத்திக்கின்ற படி –

———————————————————————————————————————————————————————————————–

தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கரியன்
மூவர் முதல்வன் ஒரு மூவுலகாளி
தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ –9-8-9-

இனி -நான் முடிந்தேனான பின்பு
இப்படி சொல்லச் செய்தேயும் விசேஷ கடாஷம் பெறப் பெறாமையாலே
நான் இவ்வாசையுடன் முடியா நின்றேன்
என்னுடைய அபிமதத்தைப் பெற்று களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ
பெருமை வாய்ந்த தேவன் -ஆஸ்ரித ரஷணத்துக்காக
விரும்பி உறைகின்ற திவ்ய தேசத்தை
நணுகப் பெறாதே நான் முடியா நின்றேன்
இனி பெறப் போகிற பாக்யவான்கள் யாரோ
அவ்விடத்து பெருமானுக்கு அசாதாராணமான திரு நாடு தான் இங்கே உத்தேச்யம் –

—————————————————————————————————————————————————————————————————–

அந்தோ வணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே யுறைகின்ற எம்மா மணி வண்ணா –9-8-10-

உன்னைக் காணப் பெறாமையால் நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்
தொடங்கும் பொழுதே -அந்தோ -என்கிறார் -சொல்லத் தொடங்கினது தலைக்கட்ட பெறாத பல ஹானியாலே
அணுகப்பெறு நாள் எவை கொலோ -முழுவதும் சொல்ல மாட்டாமை
எப்போதும் -ஒரு கால் சொல்லத் தொடங்கி இளைத்தால் பின்னைத் தவிரலாமே
ஆசை வாளா விருக்க ஒட்டுகிறது இல்லை
இதுவே யாத்ரையானபடி
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்-
அத்தலைக்கு திரு உள்ளம் இல்லையாகில் நாம் அழைப்பதனால் என்ன பலன் -என்ற
தெளிவு இன்றிக்கே இருக்க சிந்தை கலங்கி இருப்பப் பெற்றவன் ஆகையாலே
மேன்மேலும் அழைக்கின்றேன்
ஆர்த்தி முகுந்த பிரஜை மாதா பிதாக்களை கூப்பிடுமா போலே திரு மாலே என்றேன்
திரு நாட்டிலே வந்து காணக் கடவதான வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு
திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணி அருளுபவனே –

—————————————————————————————————————————————————————————————————–

வண்ணம் மணி மாட நல் நாவாயுள்ளானை
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
மண்ணாண்டு மணம் கமழ்வர் மல்லிகையே –9-8-11-

ஐஹிக ஆமுஷ்கிக சகல போகங்களையும் புஜிக்க பெறுவார்
மண்ணாண்டு -ஐ ஹிக பலன்
மணம் கமழ்வர் மல்லிகையே -சர்வ கந்த -எம்பெருமான் உடன் சாம்யாபத்தி அடைவர் -ஆமுஷ்கிக பலன்
மல்லிகை -உபலஷணமாய்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர்
மல்லிகை போல் பரி சுத்தமான யசஸ் சௌரப்ய விகாசத்தை உடையவர் ஆவார் -பன்னீராயிரப்படி-

————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வதறியாமல் –88-

—————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-எங்கானல் அகம் கழிவாய்–9-7-

November 14, 2014

கீழே குண ஸ்மரணத்தாலே ஒருவாறு தரிக்கும் படி செய்து வைத்தான்
குணங்களை ஸ்மரிக்க ஸ்மரிக்க எம்பெருமானை நேரில் காண ஆசை மிக்கது
விடாய் மிகுந்து தூது விடுகிறாள் இதில்
அஞ்சிறைய மட நாராயில் -அபராத சஹாத்வம் -ஷமா குணம் பற்றாசாக -வ்யூஹத்திலே தூது
வைகல் பூம் கழி வாயில் -ஆஸ்ரித ஜன ரஷண தீஷிதம் -பற்றாசாக -விபவத்திலே தூது –
பொன்னுலகு ஆளீரோ -ஐக ரஸ்யம் பற்றாசாக -பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
இதில் -அவன் வடிவு அழகு பற்றாசாக அர்ச்சையிலே தூது விடுகிறாள்
திரு மூழிக் காலத்து -தமரோடு -அங்கு உறைவார்க்கு-என்கையாலே
பின்னானார் வணங்கும் சோதியான திரு மூழிக் களத்தில் தம்முடைய பரிஜன பரிவாரங்கள் உடன் கூடிக் குலவா நின்றார் அவர்
அதனாலே நம்மை மறந்தார் போலும்
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத் திலை போலும் திரு மேனி அழகை நினைப்பூட்டி
இப்படிப் பட்ட அழகிலே ஈடுபட்ட பராங்குச நாயகி
உம்மைப் பிரிந்து தரிக்க வல்லளோ என்று சொல்லுங்கோள்
என்று சில பறவைகளைக் குறித்து தூது விடுகிறாள் இதில் –

——————————————————————————————————————————————————————————————————————–

எங்கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நுங்கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே –9-7-1-

நுங்கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர்களை பறவைகளால கருதப் படுகிறார்கள் -அழகாக காட்டி அருளுகிறார் ஆழ்வார் இத்தால் –
திரு விருத்தம் வண்டுகளை -எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -என்றார்
ஆச்சார்யர்களை சபரிவாராக தலை மேல் வைக்கப் பெறுவதே பேறு –
எங்கானல் -பகவத் விஷயத்தில் உபகாரரோடு ஐக ரஸ்யம் பிராப்தமாய் இருக்க
எம் -என்றது -ஒன்றைத் தம்மதாக்கிக் கொடுத்தால் அல்லது தரிக்க மாட்டாத உபகார ச்ம்ருதியாலே சொல்லுகிறது –
பிறருக்கு உபகரிக்கைக்காக வரும் மமகாரம் உத்தேச்யமாய் இருக்கும் இ றே
தன்னை பகவத் விஷயத்துக்கு ஆக்கினவன்றே தன்னது அடங்கலும் அங்குத்தை சேஷமாய் இருக்க
உபகார ஸ்ம்ருதி இ றே இப்படி சொல்லுவித்தது
ஆத்மா சமர்ப்பணத்துக்கும் அடி இதுவே இ றே -நம்பிள்ளை
அந்தரங்கமாய் வந்து வர்த்திக்கிறபடி -அகம் கழிவாய் இரை தேர்ந்து-
தூது அனுப்ப உங்களைத் தேடித் பிடிக்க வேண்டாத படி அருகே வந்து வர்த்திக்கப் பெற்ற பாக்யம் என்னே என்று உள் குலைந்து சொல்லுகிறபடி
எம்பெருமானார் திரு மாளிகையிலே வந்து பிரவசனம் பண்ணி அருளின பெரிய நம்பி போல்வார்
செங்கால மட நாராய் -கால்களை விசேஷித்து சொல்லுகையாலே ஆச்சார்யன் திருவடிகளே தஞ்சம் என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————————————————————————————–

நுமரோடும் பிரியாதே நீரும் சேவலுமாய்
அமர்காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்துறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே –9-7-2-

தாமும் தம் அடியார்களுமாய் இருக்கும் இருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதா
அந்த கோஷ்டியில் அன்வயிக்கைக்கு நான் அயோக்யனோ
நுமரோடும் பிரியாதே-மேலே எம்பெருமானை சொல்லும் இடத்து -தமரோடு அங்கு உறைவார்க்கு-என்று சொல்லுகையாலே
அவன் அடியார்களோடு வாழப் பெறுகையால்
நீங்கள் நுமரோடு வாழப் பெறுகிறீர்கள்
அவனுடைய சாம்யாபத்தி உங்களுக்கு கிட்டினால் போல் என் திறத்திலும் பலிக்க வேண்டாமோ
நீங்கள் உங்கள் அபிமதர்களோடு வாழுவது போலே நானும் என் அபிமதரோடு வாழ வேண்டாமா
குறைவாளர் கார்யம் குறை வற்றார்க்கு தீர்க்க வேண்டாவோ -உண்டாருக்கு பட்டினி கிடந்தார் பசி பரிஹரிக்க பிராப்தம் இ றே –ஈடு
அணி மூழிக் களத்துறையும் – தம்மால் இழிப்புண்டு-எமராலும் பழிப்புண்டு இங்கு என்என்று அந்வயம்
அவர் யாத்ருச்சிகமாக ஒரு நால் கலந்து விட்டார்
அதுவே ஹேதுவாக பந்துக்களும் கை விட்டார்கள் என்னை
இப்படி அத்தலைக்கும் ஆகாதே
உற்றாருக்கும் ஆகாதே
கைவல்யம் போலே இருக்கும் இருப்பில் என்ன பிரயோஜனம்
தமரோடு அங்கு உறைவார்க்கு-அவர் என்னை உபெஷிக்க ஹேது இல்லை
அடியார்கள் குழாங்கள் உடன் கூடி இருக்கும் இனிமையால் என்னை மறந்து இருக்கிறார்
அந்த தமரோடு நானும் ஒருவனாக திரு உள்ளம் பற்ற பிராப்தி இல்லையோ என்று கேள்மின் –

———————————————————————————————————————————————————————————————————————————-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாயிரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்துறையும்
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே –9-7-3-

உயிரான பாசுரம் –
இந்த வடிவு அழகை பிரிந்தார் தரிப்பாரோ என்று அவ் வழகை அறிவித்து விட்டால் வாராது இருக்க மாட்டார் என்று
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே-என்றும்
பூம் துழாய் முடியார்க்கு பொன்னாழிக் கையாருக்கு –தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே -என்றும்
வடிவு அழகு பற்றாசாக தூது விடுகிற பதிகம் -என்று அறிய இப்பாட்டு நிதானம்
தம் பிழையும் சிறந்த செல்வமும் -ஆச்சார்யஹிருதய சூர்ணிகை -156-தமரோட்டை வாஸம் மறப்பித்த சௌந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலும் தூதுக்கு விஷயம் -நாயனார்
தக்கிலமே கேளீர்கள்-நாம் ஒன்றிலே துணியும்படி அறுதியாக கேட்டுப் போருங்கோள் –
அவர் இன்னம் இது வேண்டும் என்று இருந்தார் ஆகில் பிராணன்களை வருத்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும்
வேண்டாம் என்று இருந்தார் ஆகில் நாமும் ஒன்றிலே துணியும்படி அறுதியாக கேட்டு விடுங்கோள் -நம்பிள்ளை ஈடு –
குறுக்கு -கொக்கிலே ஜாதி பேதம் -கொய்யடி நாரை என்பர்
அக்கமலத் திலை போலும் திருமேனி-கீழ் 8-5–1- சாயல் சாமத் திருமேனி தண் பாசத்தடையா -என்றதையும் இங்கு நினைப்பது
தம் பத்ம தள பத்ராஷம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்
பத்ரம் தளம் இரண்டுமே பர்யாய சப்தங்கள்
-அஷம் இந்த்ரிய காயையோ -அஷ சப்தம் கண்ணையும் மேனியையும் குறிக்கும்
பத்ம தளம் போன்ற அஷத்தை உடையவர் -தாமரை இதழ் போன்ற நீண்ட அழகிய திருக் கண்கள் உடையவர் என்றும்
பத்ம பத்ரம் போன்ற அஷத்தை உடையவர் -பசுமையான திருமேனியை உடையவர் –
எம்பெருமான் திரு மேனிக்கு தாமரை இலையை ஒப்பாக சொல்ல இந்த பாசுரமே பிரமாணம் –

——————————————————————————————————————————————————————————————————————————————————————–

திருமேனி யடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திருமேனி யவட்கருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி யொளியகற்றித் தெளி விசும்பு கடியுமே –9-7-4-

எம்பெருமானுக்கு -திருமேனியடிகள் -என்று திருநாமம் சாற்றுகிறார் ஆழ்வார் –
வடிவு அழகையே நிரூபகமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி -என்றபடி
ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களால் ஜகத்தை யடைய தோற்ப்பிக்குமது ஒருபுறம் இருக்க
வடிவு அழகாலே தோற்ப் பித்து அடிமை கொள்வது தலையாய் இருக்கையாலே திரு மேனி யடிகளுக்கே -என்கிறார்
அவசா ப்ரதிபேதிரே-என்றபடி பிரதிகூலர்க்கும் ஆகர்ஷகமாய் இ றே வடிவு இருப்பது -ஈடு
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடை துச்சோதனன் –
தீவினையேன் விடு தூதாய் -சர்வ சாதாரணமான அவன் திரு மேனி எனக்கு அசாதாரணமாய் இருந்தது
அப்படிப்பட்ட திருமேனியை அளந்து உங்கள் காலில் விழும்படியான தீவினை
விபரீத லஷணையால் நல்வினையேன்-பாகவதர்கள் திருவடிகளில் விழுவது பாக்யம் அன்றோ
திருப் புளி யடியில் உம திரு மேனி நினைந்து நைகிறாள்-அத்தை கொடுத்து அருளீர்

– இப்படி வாக்கு உதவி செய்தீர்கள் ஆகில் -உம்மைத் தன் திருமேனி யொளியகற்றித் தெளி விசும்பு கடியுமே
உங்கள் வடிவில் புகரைப் போக்கி நிர்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை ஒட்டி விடுவாரோ
உங்களுக்கு பண்டு இல்லாத புகரையும் உண்டாக்கி அருளுவார் அன்றோ –

——————————————————————————————————————————————————————

தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்துறையும்
துளிவார் கட்குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே –9-7-5-

இதுவும் மேகவிடு தூது
பரமபதத்தில் பண்ணும் ஆதரத்தை என் மேலும் பண்ணி அருளுபவர் -தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்துறையும்-என்கிறார்
உங்கள் வார்த்தை கேட்டவாறே பதறி ஓடி வருவர்
அவளுக்கு அருளீர் -என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில்
யாவள் ஒருத்தி யுடைய நெஞ்சு உமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர் அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள்-என்கிறாள் -ஆறாயிரப்படி
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும் ஒளி முகில்காள்-ஆகாசத்தில்
சஞ்சரிக்கையும் கொள்ளி வட்டம் போல் மின்னல் இலங்கப் பெறுகை யும் மேகத்தின் இயல்பு
ஆச்சார்யர்களுக்கும் உபய விபூதியும் ஒரு நீராய் இருந்து சஞ்சரிப்பார்கள்
மகார்த்தங்களை வர்ஷிக்க சஜ்ஜர்களாய் இருப்பார் மின்னல் வெட்டிய மேகம் போலே
ஒளி முகில்காள் –ஆச்சார்யர்கள் -ஒண் சுடர் எம்பெருமான்
வேறு பட்டவர்கள் அல்லர் -சஜாதீயர் -பரம சாம்யம் பெற்றவர்கள்
தீ வினையேன் -நெஞ்சில் விளங்கா நிற்கவும் காண முடியாத பாபத்தை பண்ணினேன்
துளிவார் கட்குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-திரு முடியிலே மாலை சாத்தி இருப்பார்க்கு -ரஷண தீஷிதர்
ஆர்த்த ரஷணத்துக்காக தனிமாலையிட்டு இருப்பவர்-

———————————————————————————————————————————————————————————————————————

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழிவாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே –9-7-6-

தூது உரைத்து மறுமாற்றம் கொண்டு வர சொல்லாமல் செப்புமின்கள் -பிராட்டி சந்நிதி உண்டே –
கார்யகரம் ஆகுமே -அறிவித்தாலே போதுமே -ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே-என்று இருப்பார்க்கு இவ்வளவே போதுமே
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து-உங்களுக்கும் மதுபானம் பண்ணலாம் படி -உங்கள் காரியமும் சித்திக்கும்
ஆச்சார்யர்களுக்கு சிஷ்ய உஜ்ஜீவன க்ருத்யம் ஸ்வா ர்த்தமே ஒழிய பரார்த்தம் இல்லை
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு-நீங்கள் சொல்லும் அளவே வேண்டுவது
உங்கள் வார்த்தையை கேட்டுக் கொண்டு இருக்கவும்
கேட்டுக் கொண்டாடுகைக்கும்
புருஷகார சம்பத்தில் குறை இல்லையே
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே-என்னுடைய கை வளையையும் மேகலையையும் பற்று சொல்லுங்கோள்
இவை சிதிலமான படியை சொல்லவும்
நீங்கள் அறிவித்த மாதரத்தில் இவை நான் பேறு பெற்றேன் ஆவேன் என்றுமாம்

————————————————————————————————————————————————————————————————————————-

சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாளோர் தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே -9-7-7-

அடியார்களை இப்பாடு படுத்துவதையே பேறும் புகழாக நினைத்து இருப்பவர்
தன் பால் ஈடுபட்டவர்களை மற்று ஒன்றுக்கு ஆகாத படி ஆக்கிக் கொள்ளுகை தானே படர் புகழ்
பங்கயக் கண் அழகை அனுபவித்தவள் பிரிந்து ஆறி இருப்பாளோ –

————————————————————————————————————————————————————————————————–

எனக்கு ஓன்று பணியீர்கள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கின்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூம் துழாய் முடியார்க்கே -9-7-8-

அஞ்ச வேண்டாத படி ஸூ ரஷிதமாக திவ்ய தேச வாஸம்
நம் ஆர்த்தி தீர்ப்பதே இன்னும் செய்ய வேண்டுவது
வண்டினங்காள் தும்பிகாள் உன் அழகைக் காணப் பெறாதே அவள் இழந்து போம் இத்தனையோ என்று சொல்லி கோள் என்கிறாள் -ஆறாயிரப்படி
நீங்கள் வார்த்தை சொல்லாவிடில் முடியும்படியான நிலை அன்றோ
நீங்கள் மாத்ரம் இன்புற்று இருந்தால் போதுமா
பிறரை வாழ்வித்தால் தானே உங்கள் வாழ்ச்சி
புனக் கோள் காயா மேனியில் என் விருப்பத்தை சொல்லி கோள்

————————————————————————————————————————————————————————————————————————

பூம் துழாய் முடியார்க்குப் பொன்னாழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க்கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே –9-7-9-

தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே-என்னை பிரிந்து போகும் பொழுது
தன்னுடைய திரு மேனியை வைத்து அன்றோ போய் இருக்க வேண்டும்
அத்தையும் கொண்டு அகன்று போனாரே
அவன் இறைப் பொழுதும் பிரிந்து போகத் தகாது என்பதே தாத்பர்யம்
அவர் திரு முடியிலே திருத் துழாய் சாத்தி இருக்கும் அழகு ஓன்று போதுமே
அதுக்கும் மேலே திருக்கையும் திரு ஆழியுமான அழகு
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று ஆலத்தி வழிக்க வேண்டும்படி அன்றோ உள்ளது
இந்த அழகை நினைந்து வை வர்ண்யம் அடைந்து கண்ணநீரும் சோர்ந்து -இந்த நிலையைச் சென்று சொல்லி கோள் என்கிறாள்-

———————————————————————————————————————————————————————————————————

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாயிரை தேர்ந்து
மிகவின்பம் படமேவும் மென்னடைய வன்னங்காள்
மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என்
அகமேனி யொழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

தகவன்று என்று உரையீர்கள்-மருமத்தில் பொற்றும்படியான வார்த்தை
கருணையே நிரூபகமாகக் கொண்டு பேரருளாளன் என்று விருது சுமந்து திரிகிற அவருக்கு
தகவு இல்லை -என்னாதே தகவு அன்று
கடலில் நீர் வற்றிற்று என்ன ஒண்ணாதா போலே
அருள் கடலில் அருள் வற்றுமா
தடம் புனல் வாயிரை தேர்ந்து மிகவின்பம் படமேவும் மென்னடைய வன்னங்காள் -இதனால் மகாச்சார்யார்களே விவஷிதம்
தங்களுக்கு பரம போக்யமான அர்த்தங்களை தேடுவதில் நோக்கு உடையவர்கள்
அதுவே பேரின்பமாக கொண்டவர்கள்
நல்ல நடத்தையை உடையவர்கள் -என்றபடி
நானோ உடம்பு மெலிந்து அரையில் துணி தங்காமல் இருக்கிறேன்
மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என்
அகமேனி யொழியாமே இருக்கிறேன்
தகவன்று என்று உரையீர்கள்–முடியும் இந்நிலையிலும் அருளாமல் இருப்பது தகவோ

————————————————————————————————————————————————————————————————-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா வணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவில்லா வாயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே –9-7-11-

————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

எம்காதலக்கு அடி மீள் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா வாங்கு அவன்பால் எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போகவிடும் மாறன் தாள்
உள்ளினார்க்குத் தீங்கை யறுக்கும்–87-

————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–உருகுமால் நெஞ்சம் உயரின் பரமன்றி-9-6-

November 13, 2014

கீழ் திருவாய் மொழியில் -எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினும் -என்றார்
ஆழ்வார் இன்னம் திருப் புளி ஆழ்வார் அடியில் இருந்து பாசுரங்கள் பாடி தலைக் கட்ட வேண்டுமே
எம்பெருமான் வந்து முகம் காட்டாமலேயே ஒரு விரகு செய்தான் ஆயிற்று
இருத்தும் வியத்து என்னை -நடந்த விலஷண சம்ச்லேஷம் நடந்து இருந்ததை -அத்தை நினைப்பூட்டி தரிக்கச் செய்தான் –
அதனால் தரித்து இருந்து இப்பதிகம் அருளிச் செய்த படி –
குருகூர் சடகோபன் சொல் ஆயிரம் -முதலிலே சொன்னாரே -தலைக் கட்ட வேண்டுமே
ஈரச் சொற்களை கேட்டுக் கொண்டு இருந்து வியக்க இன்னம் ஆசை கொண்டு இருந்தான் எம்பெருமான்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொல்ல ஆழ்வாரும் பாரித்து தொண்டர்களும் பாரித்து இருந்தனர்களே –
அசோக வனத்தில் திருவடி சென்று கிட்டின பொழுது -நெடு நாளும் பட்ட கிலேசம் எல்லாம் கிடக்கச் செய்தேயும்
பெருமாளும் வந்து முகம் காட்டாது இருக்கச் செய்தேயும்
வனவாசம் முன்பு திரு அயோத்யையில் பன்னிரண்டு ஆண்டுகள்
பெருமாள் உடன் ஏகபோகமாய் இருந்து பேரின்பம் நுகர்ந்த நுகர்ச்சி நினைவுக்கு வர
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே புஞ்ஜானா அமானுஷான் போகன் சர்வ காம சம்ருத்தி நீ -என்று
அத்தைச் சொல்லி போது போக்கினால் போலே
இருத்தும் வியந்து பதிகத்தில்
மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு –சிறியேனுடைச் சிந்தையுள் –நின்று ஒழிந்தான் -என்னும்படி
முறை கெடப் பரிமாறின பரிமாற்றம் நினைவுக்கு விஷயமாக்கி
அது கேவலம் ஸ்ம்ருதி மாத்ரம் மாத்ரமே அல்லாமல் இப்போதே அனுபவம் என்று கொள்ளலாம்படி
அந்த சீலகுணத்தை பேசி சிதிலர் ஆகிறார் இதில் -இப்படி பழைய கலவியை நினைப்பூட்டி
ஒருவாறு தரித்து நிற்கச் செய்து பேசுவிக்கிறவன் திருக் காட்கரை எம்பெருமான் போலும் –
ஆகவே திருக் காட்கரை எம்பெருமான் விஷயமாக அவதரிக்கின்றது இப்பதிகம் –

———————————————————————————————————————————————————————————————–

உருகுமால் நெஞ்சம் உயரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெரு வெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினை தொறே –9-6-1-

நெஞ்சு நீர்ப்பண்டம் ஆகிறதே -அனுபவத்துக்கு முதன்மையான கருவி நெஞ்சு அன்றோ –
அது சிதிலம் ஆகிறதே -பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதல் அடியிலே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என் செய்வது –
ஆத்மாவால் தாங்க ஒண்ணாதபடி அபி நிவேசம் பெருகுகின்றதே -ஆற்றுப் பேருக்கு போலே பெருகி வருகின்றதே
ஆல் ஆல் – அடி தோறும் -விஷாத ஸூ சனம்
நெஞ்சு உருகாதபடிக்கும் வேட்கை பெருகாத படிக்கும் செய்ய உபாயம் அறியேனே
அவன் திரு கல்யாண குணங்கள் தவிர்த்தால் அன்றோ இவை செய்யலாவது
தெருவெல்லாம் செங்கழுநீர் பரிமளம் வீசா இருக்க
உள்ளே சர்வகந்த வஸ்து உடைய பரிமளம் வாசாமகோசரம்
அவனோ மாயன் -சௌந்தர்ய சௌசீல்ய குணங்களால் பிறரை பிச்சேற்ற வல்லவன்
அப்படிப்பட்டவன் உடைய மாயம் -கிட்டின பொழுது தாழ நின்று பரிமாறின சீலகுணம் –
அதை நினைதொறும் உருகுமால் நெஞ்சம் -என்று அந்வயம் –

—————————————————————————————————————————————————————————————————

நினைதொறும் சொல்லும்தொரும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனைகொள் பூம் சோலைத் தென் காட்கரை என்னப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே –9-6-2-

உன்னுடன் கலந்து பரிமாரினவற்றை நினைக்க சக்தன் அல்லேன்
நினைக்கத் தொடங்கினால் நினைவு மாறாதே செல்ல முடியாதபடி பல ஹானி ஏற்படும்
ஆனாலும் மறக்க முடியாதே -மீண்டும் நினைப்பார் -முடியவும் தலைக் கட்ட முடியாதே
எத்தனை காலம் நினைக்கப் புக்கது -எத்தனை காலம் மீண்டது
நெஞ்சால் நினைக்க ஒண்ணாத ஒன்றை வாயால் சொல்ல ஒண்ணுமா
மனஸ் சஹகாரியாய் இல்லாமல் இருந்தாலும் அஹ்ருதயமாகவே சொல்லிக் கொண்டு இருப்பரே –
இவர் பேசுகிறார் இல்லை -இவர் வாக்கு பேசிக் கொண்டே இருக்கும் என்கை
அது செவி வழியே புகுந்து -ஊற்று இருந்து -குணாதிக விஷயம் ஆகையால் நெஞ்சை அழிக்கும் –
நெஞ்சு இடிந்து உகும் -பெருக்காற்றின் கரை இடிந்து பின் நீராய் கரைந்து போமாபோலே
ஓர் அவயவியாய் காண ஒண்ணாத படி உக்குப் போகா நின்றது -ஈடு
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர் -வினைகொள் -வினை =தீ வினை பாபஹரமான திருக் கல்யாண குணங்கள்
வினை =சேஷ்டிதம்
சீர் -குண சாமான்யமான சீலகுணம்
சேஷ்டிதத்தை கொண்ட ஷீலா குணம் -தாழ நின்று பரிமாறினது
ஆருயிர் வேம் -அதாஹ்யம் -கீதை
எல்லாவற்றையும் குளிரப் பண்ணும் பனி தாமரையை கருக்கப் பண்ணுமா போலே
சகலர்க்கும் ஆர்த்தி கரமான திருக் கல்யாண குணங்கள் எனக்கு ஆர்த்தியை விளைவிகின்றன
ஆகவே -சுனைகொள் பூம் சோலைத் தென் காட்கரை என்னப்பா –
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே-நீ தாழ நின்று ஆட்செய்து காட்டின சீலகுணத்தை நினைக்க மாட்டிற்று இலேன்
நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மை -எம்பெருமான் உக்தியின் அநுகாரம்
எம்பெருமானே -நீ தாழ நின்று -நான் உமக்கு ஆட் செய்கிறேன் காணும் -என்கிறாயே
இந்த சொல்லும் மர்மத்தை பிளக்கின்றதே –

———————————————————————————————————————————————————————————————————

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய என்னுயிர் யுண்டான்
சீர்மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன்
கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் –9-6-3-

கீழ்ப் பாட்டின் ஈற்றடிக்கு வ்யாக்யனமாய் இப்பாட்டுக்கள் எல்லாம் இருக்கும்
அடிமை கொள்வதாக ஒரு வியாஜ்யம் இட்டு உள்ளே புகுந்து
தன் படிகளைக் காட்டி
சர்வஸ்வபஹாரம் பண்ணின வாற்றை அந்தோ -நினைக்க மாற்றிற்று இலேன் –
வஞ்சித்து என் நெஞ்சம் புகுந்து நீர்கையால் ஈர்மை செய்து -என்று அந்வயம்
தான் சேஷியும்-நான் சேஷனுமான முறை தவறாது பரிமாறுவதாக சொல்லி
நெஞ்சை இசையப் பண்ணி
புகுந்து -தான் சேஷனாயும் இவர் சேஷியாகவும் இவர் இசைய மாட்டார் என்று அறிந்து பொய் சொல்லி புகுந்தான் ஆயிற்று
புகுந்த பின் நீர்மையைக் காட்டத் தொடங்கினான்
தாழ நின்று பரிமாறினான்
அதனால் நெஞ்சை ஈரும் தன்மைகளைச் செய்து -இரு பிளவாக்கி ஈடுபடுத்திக் கொண்டான்
நீராம்படி பண்ணினான்
என்னுயிராய என்னுயிர் யுண்டான் -எனக்குத் தாரகரைப் போலே புகுந்து என்னை அழித்தான்
எனக்கு தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
என்னை புஜித்தான்
என்னோடு கலந்து நீர்மையையும் கொள்ளை கொண்டதனால்
கடலைக் கழுத்து அளவாக உண்ட கார் மேகம் போலே புகர்படைத்து விளங்குகிறான்
கள்வம் அறிகிலேன்-சர்வ ஸ்மாத் பரன் இங்கனே தாழ நின்று பரிமாறுகை அசம்பாவிதம் -நான் மருண்டு பேசுகிறேனோ-

—————————————————————————————————————————————————————————————————————–

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன்
சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளே –9-6-4-

தான் சேஷியாகவும்
உலகம் எல்லாம் சேஷபூதமாயும்
முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிரவன்
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத அதி ஷூத்ரனான என் பக்கலில் காட்டும் வியாமோஹம்-இன்னது என்று
சொல்ல முடியவில்லையே -தடுமாறுகிறார்
சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளை அறிகிலேனே -என்று அந்வயம்
அன்றிக்கே
உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கைக்கு செய்தானோ -அறிகிறிலேன் -என்பர் நம்பிள்ளை
இவ்வர்த்தத்திலே திருவருளே -ஈடு பாடாக வினைமுற்று இன்றி முடியும்
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -உலகங்கள் எல்லாம்
தன்னுடைய சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்க
தான் அவற்றின் உள்ளே சேஷத்வ முறை தப்பாமல் நிற்குமவன்
இப்படிப் பட்டவன் சிறியேனான என்னுடைய நற்சீவனை கபளீ கரித்த வ்யாமோஹம் தான் என்னே-

————————————————————————————————————————————————————————————————————————-

திருவருள் செய்பவன் போலே என்னுள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன்
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே –9-6-5-

என்னுள் புகுந்து -என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புசியா நின்றான் இது என்ன வ்யாமோஹம்
அடிமை கொள்ளுகையே -திருவருள் செய்கை ஆழ்வார் திரு உள்ளம்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார்
அவன் இங்கனே பாரித்து -பேறும் தலைக் கட்டப் பெற்றானே –
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் –பொய் நின்ற ஞானமும் –அழுக்கு உடம்பும் -தாம் வெறுத்தத்தை அவன் விரும்பப் புகுந்தான்
அவன் அங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பிப் போந்தார் –
அவன் இவரை அங்கீஹரித்த பின்பு இவர் தம் தேஹத்தை வெறுக்க
அவன் இவருடைய தேஹத்தை விரும்பப் புக்கான்
இவருக்கு அவனோட்டை சஹவாசம் ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு உடலாயிற்று
அவனுக்கு இவரோட்டை சஹவாசம் தேகாத்ம அபிமானத்துக்கு உடலாயிற்று -நம்பிள்ளை
ஹேய உபாதேயதா புத்தி இன்றிக்கே இரண்டிலும் துல்யமான பிரதி பத்தியை கொண்டான்
ஆழ்வாரை புஜித்து செழிப்பு கொண்டமை அவன் அளவில் நில்லாமல் திவ்ய தேச சோலைகளிலும் ஏறிப்
பாய்ந்ததே -திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன் -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————————–

என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மை எய்திப் புலம்பி இராப் பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை யேத்துமே –9-6-6-

வஞ்சகன் என்று அறிந்தால் சஹவாசம் விடலாமே என்ன
அவனைக் கண்டவாறே வஞ்சனைகள் மெய் என்று தோற்றுகின்றனவே
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -எனக்கு அற்றுத் தீர்ந்தனவாக காணப்படுகிற
அவனுடைய வஞ்சனைகள் ருஜுவாகவே தோற்றுகின்றன
எனக்குச் செம்மாய் நிற்கும் என்றத்தை எனக்கு சேமமாய் நிற்கும் என்று ஒரு தமிழன் நிர்வஹித்தான் -ஈடு
கீழ் நம் கண்ணன் கள்வன்களே -அந்தம்
இங்கு என் கண்ணன் கள்வம் -ஆதி
பொருள் இசை அந்தாதியாய் இருக்கும் -இரண்டு இடங்களிலும் ஒரே பாடமாகவும் இருக்கும் -நம்பிள்ளை –
என்னாருயிர் அம் கண்ணன் உண்ட கோது -அவனால் பூஜிக்கப் பெற்று நிஸ் சாரமாய்-ஆயிற்று
அம் கண்ணன் -அதி சபலன் – அதி பிரவணரை அங்கண்ணன் என்னக் கடவது இ றே -என்பர் -நம்பிள்ளை
இப்படி ஆருயிர் கொத்தாய் போனாலும்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும் -ஆண்டாள்
பின்னும் உயிர்க்கு சாரம் கொடுத்து பரிமாறத் தொடங்கவே
புன்கண்மை எய்தி-தைன்யத்தை அடைந்தது ஆயிற்று இவ்வாத்மா
அதனாலே –
என் கண்ணன் என்று -இராப் பகல்-புலம்பி -அவன் காட்கரை யேத்துமே-முன்பு
எனக்கு விதேயனாய் இருந்தவன் என்று சொல்லி
இராப்பகலும் கூப்பிட்டு
இவன் நித்ய வாசம் செய்து அருளும் திருக் காட்கரை திருப்பதியை கொண்டாடா நின்றது
பசித்தவன் பழம் கணக்கு பார்க்கிற ரீதி போலும்-

————————————————————————————————————————————————————————————————————————

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால்
கோள் குறை பட்டது என்னாருயிர் கோளுண்டே –9-6-7-

என்னை மாளப் புசித்து புசியாதான் போலே கிடந்து படா நின்றான்
காட்கரை ஏத்தும்-அவனைக் காட்டிலும் திவ்ய தேசத்தின் மேல் ஆசை மிகுந்து ஏத்தா நின்றது என்னாருயிர்
திவ்ய தேசத்துக்கு அவனால் ஏற்றம் -அவனால் திவ்ய தேசத்துக்கு ஏற்றம் என்பதால் அதனுள் கண்ணா என்னும் –
அந்த திவ்ய தேசம் சம்பந்தம் இட்டு அவனையும் ஏத்தா நின்றது
பரமபத்திலும் இங்கு வாசம் செய்வதால் ஏற்றம் என்று நித்ய வாசம் செய்து அருளுகிரானே
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் –திவ்ய தேசத்தையும் அங்கு வாசம் செய்யும் எம்பருமானையும் நினைத்த மாத்ரத்திலே காதல் நோய் அதிகரிக்கும்
த்ரவீபாவமும் சைதில்யமும் விளையும்
இதற்கு எல்லாம் அடி -கீழ் திருவருள் என்று மறைத்து சொன்னதை வெளியிடுகிறார் -என்பர் நம்பிள்ளை –
அடிமை கொள்வான் போலே வந்து என்னை சூன்யம் ஆக்கி அருளிய ஆச்சர்ய பூதனாலே –
ஆட்கொள்வான் ஒத்து உண்ட மாயனால்
என்னாருயிர் கோளுண்டே கோள் குறை பட்டது-என் ஆத்மா நிஸ் சேஷமாக புஜிக்கப் படா நிற்கச் செய்தேயும் இத்தலையில் சிறிது சேஷித்தது
இன்னமும் இருந்து கிலேசப் பட காண்கையாலே இன்னமும் சிறிது சேஷம் இருந்து இருக்க வேண்டுமே -அது கொண்டு சொல்லுகிறது-

——————————————————————————————————————————————————————————————————————————————-

கோளுண்டான் அன்றி வந்து என்னாருயிர் தான் உண்டான்
நாளு நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர்த் தென் காட்கரை என்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே –9-6-8-

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -எம்பெருமான் உடைய அனுபவம் ஆழ்வாருக்கு போலே
எம்பெருமானுக்கும் ஆழ்வார் உடைய அனுபவம் நித்யம் அபூர்வமாய் இருக்குமே
நாள் தோறும் புஜியா நிற்றாலும் பெறாப் பேரு பெற்றால் போலே
கோளுண்டான் அன்றி வந்து என்னாருயிர் தான் உண்டான்
என்னிடம் உபகாரம் கொள்ளாமலே நிர்ஹேதுகமாக
ஆத்மவஸ்துவை அனுபவித்தான்
அன்றிக்கே
இதற்கு முன்பு இப்படி ஒரு சரக்கு கண்டு அறியாதவன் போலே அபி நிவேசம் மிக்கு கொண்டான்
அன்றிக்கே
என்னாலே தான் கொள்ளப்படாது இருக்க தான் என்னைக் கைக் கொண்டான்
நாளு நாள் வந்து-ஒரு நாள் புஜித்து -இது நாம் புஜித்தது அன்றோ என்று பழமை தோன்றி அருசியோடு இருப்பான் அல்லன்
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் இருக்கிறபடி -என்பர் நம்பிள்ளை
என்னை முற்றவும் தானுண்டான் -என்னை -அஹமர்த்தமான ஆத்மவஸ்துவை
அணு பரிணாமாய் அன்றோ -முற்றவும் என்பான் என் என்னில்
அணு பரிணாமமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக் கொலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -ஈடு
அணு வஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு –
விதுரம் அன்னம் உபாஹரத் -அன்னம் இட்டார் என்பதை ஏக வசனத்தில் சொல்லி -விதுரான் அன்னானி புபுஜே சுசீனி குணவந்திச -என்று
கண்ணன் அமுது செய்து அருளியதை பஹூ வசனத்தாலே சொன்னது போலே
விசேஷ அர்த்தம் ஈண்டு அனுபவிக்கத் தக்கது
இப்படி அனுபவிப்பனான
காள நீர்த் தென் காட்கரை என்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே-அடிமை புக்கதாக நினைத்து இருப்பது அத்தனையே –
ஆத்மா படும்பாடு வாசாமகோசரம்
எம்பெருமான் உடன் எதிர் அம்பு கோப்பவர்கள் உடம்பை இழப்பதோ
புண்பட்ட துக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ உண்டே
இது ஆழ்வாருக்கே
அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக் குணங்கள் படுத்தும் பாட்டுக்கும் நெடு வாசி உண்டே

——————————————————————————————————————————————————————————————————————————————————————-

ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது
பேரிதழ்த் தாமரைக் கண் கனி வாயதோர்
காரெழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே –9-6-9-

கீழே -ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டது என்றார்
அத்தை மேலும் விபரிக்கிறார் -எனதுயிர் பட்டது -ஆருயிர் பட்டது -என்று
குணானுபமே யாத்ரையாக கொண்ட நிதர சூரிகளில் கூட யாரும் இப்பாடு பட்டது இல்லையே
இங்கு எனதாருயிர் பட்டது -அங்கு ஆருயிர் பட்டது -என்று அருளிச் செய்வாராம் எம்பெருமானார்
ஆழ்வார் உயிர் அழிந்ததற்கு ஹேதுக்களை மேல் சொல்கிறார்
பேரிதழ்த் தாமரைக் கண் கனி வாயதோர் காரெழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள் சீர் எழில் நால் தடம் தோள்
திருக் கண்களும்
திரு அதரமும்
திரு வடிவும்
திவ்ய தேசமும்
கற்பகக் கா வென நற்பல தோள்களும் படுத்தின பாடு
தெய்வ வாரி-எம்பெருமானுக்கு ஆழ்வார் இட்ட திரு நாமங்களில் இதுவும் ஓன்று
வாரி -ஜலம் -கடல் -தெய்வங்கள் படும் கடல் -தெய்வங்களுக்கு உத்பாதகன்
தெய்வ வாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது -என்று அந்வயம் –

———————————————————————————————————————————————————————————————–

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரை யப்பான் கடியனே –9-6-10-

உயிரான பாசுரம்
சேதன லாபம் தான் ஈஸ்வரனுக்கு புருஷார்த்தம்
எம்பெருமான் ஸ்ருஷ்டி யவதாராதி கிருஷி பண்ணுவது எல்லாம் ஒரு சேதனன் நமக்கு கிடைப்பானா என்கிற நப்பாசையினாலே
வாசுதேவஸ் சர்வம் ச மகாத்மா ச துர்லப –
எம்பெருமானார் அநாவ்ருத்தி சூத்திர ஸ்ரீ பாஷ்யத்தில்
நச பரமபுருஷஸ் சத்ய சங்கல்ப அத்யந்தப்ரியம் ஜ்ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி -என்று
ஜ்ஞாநிநாம் லப்த்வா -ஸ்ரீ ஸூ க்தியால் இப்பாசுர அர்த்தம் வெளியிட்டு அருளுகிறார்
ஆழ்வார் ஸ்வ அனுபவ முகத்தாலே இப்பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
உன்னை காணில் -வாரிக் கொண்டு-விழுங்குவன்-என்று-ஆழ்வார் பாரித்து இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் -என்று தமக்கு முன்பே நெடுநாளாக
பாரித்து இருந்து தனது மநோ ரதம் தலைக் கட்டப் பெற்றான்
ஸ்வ கத ச்வீகாரத்தைக் காட்டில் பரக்கத ச்வீகாரமே வலித்து என்றும்
முற்பட்டதாய் இருந்து கார்யகரம் ஆகும் என்றும் சொல்லிற்று ஆயிற்று
கீழ்ப் பாட்டுக்களில்
என்னுயிர் உண்ட மாயன் -என்றும்
என்னுயிர் தான் உண்டான் -என்றும்
என்னை முற்றவும் தான் உண்டான் -என்றும்
உண்டபடியை சொன்னார்
உண்டவனுக்கு தண்ணீர் அபேஷிதமாய் இருக்குமே
தான் என்னை முற்றப் பருகினான் -என்கிறார் இதில்
இவருடைய உண்ணும் சோறு பருகு நீர் அவன்
அவனுடைய உண்ணும் சோறு பருகு நீர் -ஆழ்வார்-

————————————————————————————————————————————————————————————————————-

கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவமை யாயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவெய்தி நாசம் கண்டீர்கள் எங்கானலே –9-6-11-

பிறவி முடிந்து அதுக்கடியான சம்சாரமும் நசிக்கும் –
கீழ் காட்கரை யப்பான் கடியனே -என்றார்
இதில் கடியனாய்-என்கிறார்
சொல் ஒன்றாலும் பொருள் வேறுபாடும்
அங்கே தன்னை அனுபவிப்பதில் விரைவு கொண்டவன் பொருளில் கடியனே என்றார்
இங்கே கோபத்தை ஏறிட்டுக் கொண்டவன் -கடியனாய்
கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் –
கம்ச விஜயத்துக்கு கொடி காட்டிற்று திருநகரிலே யாய்த்து
ஸ்வாமி விஜயத்துக்கு உரிய வடியார் இருந்த இடத்தே இ றே கொடி கட்டுவது -நம்பிள்ளை
வடிவமை யாயிரத்து -எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்ற ஆயிரம்
இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி -கீதையிலே -ஜன்ம கர்மச மே திவ்யம் எவம் வோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூனா-என்று
தன்னுடைய அவதார சேஷ்டிதங்களை அனுசந்திப்பார்க்கு சொன்ன பலனைப் பெற்று
நாசம் கண்டீர்கள் எங்கானலே -கானல் – ம்ருகத்ருஷ்ணிகை -ஒன்றுமே இல்லாமல் வீணாக ஆசையைப் பிறப்பிக்குமது
சம்சாரம் கானல் என்றது மிகப் பொருத்தமே-

————————————————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாது இருப்பது இங்கு –86

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-இன்னுயிர்ச் சேவலும் நீரும்–9-5-

November 13, 2014

கீழே-9-2- -பண்டை நாளலே -பதிகத்தில் ஆழ்வாருக்கொரு கிலேசம் பிறந்தது
அத்தை -ஆள்வீர் நான் நாராயணன் அல்லவோ -உமக்கு எல்லா உறவின் காரியமும் குறையறச் செய்வேன் – என்று ஒருவாறு சமாதானம் படுத்த
அவனுடைய சீலாதி குணங்களில் கால் தாழ்ந்து மூன்றாம் பதிகம் அருளிச் செய்தார் இந்த ஒன்பதாம் பத்தில்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொல்லும் படி உம்மை ஆக்கினேன்
இது உமக்கு சாமான்யமாக கிடைக்கும் பேறு இல்லையே என்று நினைப்பூட்டகளிப்படைந்து தரித்து நின்றார் கீழ் பதிகத்தில்
அதில் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை கண்டு கொண்டேனே -என்று அருளிச் செய்தவர்க்கு
பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபேஷை பிறந்தது –
இவருக்கு இன்னும் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று இருக்கையாலே தாமதிக்கிறான்
ஆழ்வாருக்கு தளர்ச்சி மிக்கு இருந்தது
லௌகிக பதார்த்தங்களில் கண் வைத்து அவனோடு போலியான பொருள்களை கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைக்க
அவனாய் இருக்கு படியை நினைந்தும்
அவனோடு சம்பந்தம் இருக்கும் படியையும் நினைந்து
அவனுக்கு போலியாய் இருக்கும் படியையும் நினைந்து
மேலும் தளருமவர் அன்றோ இவர்
கீழே மண்ணை இருந்து துலாவி பதிகத்தில் இவர் பட்ட பாடு அறிவோமே
ஆகையால் அவைகள் நலிய நோவு பட்டு அன்யோபதேசத்தால் அருளுகிறார் இத் திருவாய் மொழியை –
எம்பெருமான் உடன் கலந்து பிரிந்த பிராட்டி ஒருத்தி
போலியான பதார்த்தங்கள் கண்டு பரிபஎன்று பூம் சோலைக்கு புறப்பட
அங்குள்ள குயில் மயில் முதலானவை அவனுடைய பேச்சையும் வடிவையும் நினைவு ஊட்ட
இவை தாமாக நம்மை நலிய வில்லை
அவன் நம்மை நலியப்பண்ண இவற்றை ஏவி உள்ளான் என்று கொண்டு
உங்களுக்கு என்னை நலிய இவ்வளவுபாரிப்பு வேணுமோ
என் உயிரை கொடுக்க நானே சித்தமாக உள்ளேன் -என்று சொல்லியும்
அவன் உடைய திருக் கல்யாண குணங்களை ஒருவாறு நினைத்தும் தரித்து போருகிறது இத் திருவாய்மொழி-

———————————————————————————————————————————————————————————————————————–

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரான் நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ –9-5-1-

இத்தனை பாரிப்பு வேணுமோ -அபலையாய் -அற்றுக் கிடக்கும் -என்னை முடிக்க
கோழி வெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய் குறும் தடி
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு -நற்சீவனான நீங்கள் இருவரும் சேர்த்தியாலும் பேச்சாலும் நலிய வேண்டுமோ
விரஹிகளுக்கு கூடி இருப்பாரைக் காண்பதும் அசஹ்யம்
பரஸ்பரம் பேச்சுக்களை கேட்பதும் அசஹ்யம்
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள் –
ஏற்கனவே அற்றுக் கிடக்கும் என் உயிரை இன்னும் படு கொலை படுத்தி
அவன் உயிர் தளிர்க்கும் அங்கு போய் கூவுமின்
என் அருகே கூவினால் சிதிலம் ஆகும்
என்னுயிர்க் கண்ணபிரான் நீர் வரக் கூவகிலீர்-உங்களுக்கு கூவுதல் ஜாதி பணி என்றால் இத்தை செய்மின்
என் உயிரை மாய்க்க இங்கு கூவுகிறீர்கள்
இத்தனை சம்ப்ரமம் வேண்டி இருந்ததோ
என் உயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க -இத்தனை முயற்சி வேணுமோ
என் உயிரை கொடுக்க நானே சித்தமாய் இருக்க -இத்தனை முயற்சி வேணுமோ

———————————————————————————————————————————————————————————————————————-

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனையாம் இனி என்னுயிர் அவன் கையதுவே –9-5-2-

அன்றில் க்ரௌஞ்சம்-குரரீ -பனை மரத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்
வாய் அலகு நெகிழ்ந்த அளவிலே உடல் மெலியும்
பெரிய திரு மடலில் -பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் –
பெரிய திருமொழி -காவாற் மடப் பெண்ணை யன்றில் அரி குரலும் ஏவாயினூடி எங்கும் எக்கில் கொடிதாலோ –
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்

-குயில்கள் தொனியிலியே உயிரை இழந்து கொண்டு இருக்கும் என் மேல் உங்கள் தொனியையும் கேட்பித்து முடிக்க பிரயாசை பட வேண்டுமோ
பூசல் செய்து கொள்ளை கொள்ளும் கள்ளர் காலில் விழுந்து ஐயோ என்பாரைப் போலே ஆழ்வார் அந்தோ என்கிறார்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் என்று இருந்தோம்
இப்பொழுது பத்துடை அடியவர்க்கு அரியனான வித்தகன் என்று முடிவு செய்தோம்
வித்தகன் -விஸ்மய நீகன்-இப்போது அனுகூலர்க்கு அரிய வித்தகன் –
கோவிந்தன் சர்வ ரஷகன் -இத்தால் ரஷகரைப் போல் இருந்து பாதகனாமவன் -ரஷகன் என்று பற்றப் போகாது -ஈடு
மெய்யர்க்கே மெய்யனாகும்–பொய்யர்க்கே போய்யனாகும் -என்றார் ஓர் ஆழ்வார் திரு மாலையில்
இவர் ஒருவர்க்கும் மெய்யன் அல்லன் என்கிறார்
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இ றே ஆஸ்ரிதற்கு தஞ்சம் -என்பர் நம் முன்னோர்
அத்தனையாம் இனி என்னுயிர் அவன் கையதுவே-என்றது
இனி என்னுயிர் அவன் கையதுவே-யாம் அத்தனை -என்றவாறு
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் என்று சொல்லச் செய்தேயும் கூவுகை தவிராமல் இருப்பதால் முடிந்தேன் என்கிறாள்

——————————————————————————————————————————————————————————————————–

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள்
எவம் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவம் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே –9-5-3-

அவன் உயிர் என் கைப் பட்ட நிலை மாறி எனது உயிர் அவன் கைப்பட்டதே
உன்னது என்னதாவியும் என்னதுன்னதாவியும் -என்றார் கீழே நாலாம் பத்தில்
அன்றில் பேடைகாள் -பிரிந்தார் படும் துயரம் அறிய வேண்டாமோ
எவம் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர்-நீங்கள் எத்தனை உக்தி விசேஷங்களை சொல்லி சம்ச்லேஷம் பண்ணி பரிமாறா நிற்கின்றீர்கள்
பேச்சும் காதால் கேட்கப் போகிறது இல்லை
செயலும் கண்ணால் காண முடிகிறது இல்லை
தனது வாயால் அனுவாதம் சொல்ல கூசி -எவம்சொல்லி -என்கிறாள்
உங்கள் குசால் உங்கள் பேச்சில் அன்றோ தெரிகிறது
புடை சூழ -சுற்றி சுற்றி சஞ்சரியா நிற்கிறீர்கள் -செவியைப் புதைப்பு பிழைப்பேனா -கண்ணைப் புதைத்து பிழைப்பேனோ
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ-தவம் ஆவது பாக்யம்
உயிரை இங்கே வைத்து உபகரிக்க பாக்யம் பண்ணிற்று இலேன் -இருந்தால் நீங்கள் நலிந்து கொண்டு இருக்கலாம்
அன்றிக்கே
அவனைப் போலே பிரிவுக்கு சிளையாத படி பாக்கியம் பண்ணப் பெற்றிலேன் -பிள்ளான் பணிக்கும்
உயிர் இங்கு உண்டோ-கள்வர்கள் இடம் விளக்கு ஏற்றி இங்கே ஏதாவது சரக்கு உண்டோ பார்த்துக் கொள்ளுங்கோள் காட்டுகிறாள் –
உயிர் போகும் தருவாயில் என்று கருத்து
எவம் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே-கேட்டாரை முடிக்க வல்ல உங்கள் தொனியைக் கேட்டும் தரிக்க முடியுமோ –

—————————————————————————————————————————————————————————————————————————-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற்கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –9-5-4-

சில மயில்களை குறித்து -நீங்கள் உயரக் கூவி என் உயிரை முடிக்கப் பார்க்கிறீர்கள்
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்-உங்கள் கூக்குரல் அங்கும் கேட்குமே
அது கேட்டு நான் படுகிற பாட்டை அவனும் பட நேரிடுமே
அப்படி இருந்தும் பதறி ஓடி வாராமல் இருக்கிறான்
தனது ஆற்றாமையை காட்டியபடி
இங்கனம் சொல்லியும் அவை உயர்த்த குரலில் பாட
மேற்கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்-கோழி என்றது மயிலை இங்கு
கிளை -தொனி
மேலான கிளை -உச்ச த்வனி -ஜாதிக்கு தக்கதாய் பிரணயித்வ பிரயுக்தமாய் -உச்ச த்வனி
இங்கனம் சொல்லியும் மேலும் செய்ய தன்னுடைய முக்கரணங்களும் இங்கே இல்லை என்கிறாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே -அங்கே சென்றன -அங்கே சென்று கத்தலாமே
நீர் இங்கு பேசுவது எங்கனே என்ன –
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே-உடலும் உயிரும் ஏதோ நடுவே நின்று
அனர்த்தப் படுகின்றன இத்தனை -தரித்து நிற்பதாக நினைக்க வேண்டா –

————————————————————————————————————————————————————————————————————————–

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்தேதும் இடையில்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் வேழுலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம்மாவி யுண்ண நன்கு எண்ணினான் -9-5-5-

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நிஷ் பலமாக நின்று ஸ்ரமப்படும் பூவைகாள்
இங்கு பசை இருந்தால் நலியலாம் -வீணாக ஆயாசப் படுவது எதற்கு
யான் வளர்த்த பூவைகளாக இருந்து என்னை நலியலாமோ
அவனும் என்னுடையவன் ஆகையால் நலிகிறான்
நலிக்கைக்கு என்னுடைமையே ஹேது போலும்
நும் திறத்தேதும் இடையில்லை குழறேன்மினோ -உங்கள் இடத்தே ஓர் அவகாசமும் இல்லை
என்னைக் கொலை பண்ண அவன் கங்கணம் கட்டி ஜாகரூகனாய் இருக்க உங்களுக்கு எதுக்கு வீண் பரிச்ரமம்
இனி பின்னடிகள் தன்னில் தானே சொல்லிக் கொள்வது
பண்டு இந்த லோகத்தை தனக்கு ஆக்கிக் கொள்ளுகைக்கு சில பொய் செய்தால் போலே
என்னோடு கலந்து பரிமாறுபவனாக தோற்றும்படி சில பொய்களைச் செய்து அகன்று போய் என்னை முடிக்கைக்கு ஒரு நல்ல விரகு பார்த்தான்
என்ன சதிரனோ -என்று தன்னில் தானே நொந்து கொள்கிறாள் -ஆறாயிரப்படி
வடிவு அழகு
சீலம்
சேஷ்டிதங்கள் எல்லாம் காட்டி
வாய் மாளப் பண்ணி
நான் எனது என்று இருந்த ஆத்மாவை தனதாக்கிக் கொண்டு
என்னை முடிக்கைக்கு நல்ல உபாயம் பார்த்தான்
சர்வ சக்தன் உத்யோகித்த கார்யத்தில் ஒரு குறை கிடக்குமோ
பின்னடிகளும் பூவையை நோக்கி சொல்லுவது என்றாலும் குறை இல்லை –

—————————————————————————————————————————————————————————————————————————————–

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என்னார் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் –9-5-6-

இந்நிலையில் நாம் திரு நாமத்தை சொல்லல் ஆகாது என்று அறியாதே திரு நாமத்தை சொல்லி நலியும் கிளிப் பிள்ளையைக் குறித்து என்னை நோவு படுத்தாதே -என்கிறாள் –
நன்கு எண்ணி நான் வளர்த்த-வளர்த்தல் -திரு நாமம் கற்பித்தல்-
எந்த சமயத்தில் அது சொன்னால் சாத்மிக்கும்
எந்த சமயத்தில் அது சொன்னால் பாதகமாகும்
என்று அறிந்து சொல்லுவாய் என்று கற்பித்த –
இன் குரல் -கூரிய வேல் -என்னுமா போலே என்பர் நம்பிள்ளை
நிரம்பா மென் சொல்லால் என்னை முடியாதே கொள்–மாத்ரு வதத்திலேயும் ப்ரவர்த்திப்பார் உண்டோ –ஈடு
அவன் வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி
அதற்கு மேலே
திரு நாமங்களையும் சொல்லி
என்னை நோவு படுத்தாதே -என்கிறாள் –

—————————————————————————————————————————————————————————————————————————————————-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கு அது காலனே –9-5-7-

போலியான மேகக் கூட்டங்களை கண்டு பேசுகிறாள்
பிரிந்த பின்பு சௌந்தர்ய லாவண்யாதிகள் அதிகரிக்கப் பெற்றான் போலும்
ஏக தத்வம் என்னும்படி கலந்து பிரிந்த பின்பு
அவனுடைய அவயவ சோபை இருந்தபடி -என்னுதல்
இவளோட்டை கல்வியால் வந்த சோபை என்னுதல் -நம்பிள்ளை
அவனைப் பிரிந்த நான் -சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய் தளர்ந்தேன் -என்றும்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும் இருக்க
அவனோ கண்ணும் வாயும் விகாசம் பெற்று உள்ளான்
மின்னு மேகக் குழாங்கள் காள் -கீழே எட்டாம் பத்தில் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றார்
மேகம் வில்லொடு கூடி விளங்கும் போது -வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேந்தி இருக்கும் கண்ணன் நினைவு வாராமல் இராதே
மேகம் மின்னும் போது ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற திரு ஆபரணங்களால் மின்னா நின்றுள்ள கண்ணபிரான் நினைவு வாராமல் இராதே
அத்தை இட்டு – என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள் காள்-என்கிறாள்
காட்டேன்மின் நும்முரு –
மிருத்யு என்னலாம் படியான உங்கள் உருவைக் காட்டி என்னைக் கொலை செய்ய வேண்டா
என்னுயிர்க்கு அது காலனே-பண்டே விரஹம் தின்ற என்னுயிர்க்கு அது எமன் அன்றோ
மேகக் குழாங்கள் காள் -முன்னிலையாக விளித்து
நும்முரு -என்றும் சொல்லி வைத்து
இது -என்ன வேண்டி இருக்க
அது -என்று பரோஷம் போலே சொல்லி இருக்கையாலே
கண் கொண்டு காட்ட மாட்டாமை முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் எனபது போதரும்
குழாங்கள் காள்-வடமொழி வைதிக பிரயோகம் போலே
எட்டாம் பத்தில் -இடையில்லை நான் வளர்த்த கிளிகாள் பூவைகள் காள்
மேலே பத்தாம்பாட்டில் -நாரைக் குழாங்கள் காள் -இதுபோலே பிரயோகம் உண்டு-

————————————————————————————————————————————————————————————————————————————————-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே–9-5-8-

இந்த நிலையில் பகவன் நாமமும் அசஹ்யமாய் இருப்பதை அன்யோபதேசத்தால் அருளிச் செய்கிறார்
ராம நாமம் ம்ருத சஞ்சீவனம் -உயிர் தொலையும் படியான நிலையில் சொல்ல வேண்டும்
கிருஷ்ண நாம பிரஸ்தாபமும் கூடாது என்று சொல்லி வைத்து இருக்க
அவை கிருஷ்ண நாமத்தை சொல்ல ஒ படுகொலை படுகொலை என்கிறாள்
வெற்றே வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே -நாச் திரு -1-7-
நெஞ்சை புண்படுத்தவைக்கும் கிர்ஷ்ண நாமத்தை அவ்யக்த மதுரமாக சொல்லி கொலை செய்கிறீர்களே
ம்ருத சஞ்சீவியான ராம நாமத்தை சேர்த்து சொன்னால் ஆகாதோ
உபகாரம் செய்தார்க்கு அபகாரம் செய்வது நியதியோ
என்ன உபகாரம் செய்தது என்கிறாள் மேல்
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம்-பஞ்சாமிர்தம் அளித்து அன்றோ உங்களை வளர்த்தது
தயிர் என்ன பழம் என்ன சோறு என்ன -பால் என்ன -அடிசில் என்ன
அடிசில் விசேஷ மிச்ர சோறு
அர்த்த பஞ்சகம் உபதேசித்து சிஷ்யர்களை போஷித்தமை ஸ்வா பதேசம் –
பழம் சோறு -தனித் தனியாக இல்லாமல் பழைய சோறு –
தயிரும் பழம் சோறும் பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களில் கொடுத்து -முன்னோர் வியாக்யானம்-

—————————————————————————————————————————————————————————————————————————-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் –9-5-9-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்-நான் வளர்த்த குயில் போலே நீங்கள் நன்றி கெட்டவர்கள் அன்றே
தார்மிகர்கள் அன்றோ
இரக்கம் பிறக்கும்படி கொண்டாடி பேசுகிறாள் -பண்புடை -பண்பு -நீதி
பண்புரை -பாட பேதம் நம்பிள்ளை காட்டி அருளுவார் -அழகிய முரலுகையை உடைய –
புண்புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் -முன்பு குயில் மயில் தொனியாலே புண் பட்ட உயிரிலே
வேலைக் கொண்டு குத்தினால் போலே உங்கள் குரல்
நானும் அவனும் சேர்ந்து இருக்கும் பொழுது பாடும் பாட்டுகளை பிரிந்து இருந்து கேட்க முடியுமோ
தன வடிவு அழகை காட்டி என்னை முடித்து போன இந்த சமயத்திலா நீங்கள் இன்குரல் மிழற்றுவது-

—————————————————————————————————————————————————————————————————————————-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம்
பழன நன்னாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது
தழை நல்ல வின்பம் தலைபெய்த்து எங்கும் தழைக்கவே–9-5-10-

பழன நன்னாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி-பழனம் -நீர் நிலை -ஓன்று கூடி ஆலோசிப்பதால் என்ன பயன்
இனி ஜீவித்து இருக்க ஆசை இல்லையே எனக்கு
எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -நாமும் போக்கிலே ஒருப்பட்டு அயர்வறும் அமரர்கள் அதிபதி உடன் ஓன்று சேர்ந்தோம் ஆனோம்
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -உடல் ஒன்றே இங்கே உள்ளது -அதுவும் இதோ போய்க் கொண்டே இருக்கிறதே
இழை -ஆபரணம் -ஆபரணங்களால் அழகியதான சரீரம்
அன்றிக்கே
அவனுக்கு ஆபரணம் போலே ஸ்ப்ருஹணீயமான சரீரம்
பையவே -இன்று நாளையே -புயக்கற்றது -பசையற்றது -தொலையப் போகிறது என்றபடி
தழை நல்ல வின்பம் தலைபெய்த்து எங்கும் தழைக்கவே-இதற்க்கு மூன்று நிர்வாஹங்கள்
ஆளவந்தார் -பெரியவர்கள் பரமபதம் எழுந்து அருளும் போது -லோகாஸ் சமஸ்தாஸ் சூகினோ பவந்து
சொல்லிப் போவது போலே
நாடு வாழ்க -மங்களா சாசனம் பண்ணிப் போகிறார் ஆழ்வார்
எம்பெருமானார் நிர்வாஹம் -நான் பிறந்து பகவத் விஷயத்தில் ஈடு பட்டு படாதன பட்டேன்
இதோ முடிகிறேன்
நான் பட்ட பாடு பிறர் ஒருவரும் பட வேண்டா
பட்டர் நிர்வஹிப்பாராம் -இது வரையில் ஆழ்வார் படும் பாடுகளைக் கண்டு
ஐயோ இவ்வளவு ஆர்த்தி பட்டு வருந்துகிறாரே -இவரை எம்பெருமான் சீக்கிரம் திருவடியில் சேர்த்து கொள்ளக் கூடாதோ
என்று பலர் நினைத்து இருந்தார்களாம்
அப்படிப் பட்டவர்களை நோக்கி இதோ நான்ஆரத்திகள் எல்லாம் தீர்ந்து முடிந்து போகப் போகிறேன்
என் ஆர்த்தி கண்டு நோவு பட வேண்டா
நீங்கள் ஆனந்தமாக இருங்கள் -என்கிறார் -என்பதால ஒரு விலஷண அர்த்தம் பட்டர் பணித்தாராம் –

——————————————————————————————————————————————————————————————————————————————-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு
தன் புகழ் ஏத்தத் தனக்கருள் செய்த மாயனை
தென் குருகூர்ச் சடகோபன் சொல் லாயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே –9-5-11-

இப்பதிகத்தில் பாசுரம் நெஞ்சில் பட்டால் உருகி நிற்பார்கள்
ஆறாம் பத்திலும் பொன்னுலகு ஆளீரோ -ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீரையே -என்றார்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு –
லோகம் எல்லாம் வெள்ளம் இட்ட அழகு கடந்த ப்ரீதியை உடையராய் கொண்டு
அன்றிக்கே
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த தன் புகழை பல்லூழிக்கு ஏத்த அருள் செய்த மாயனை
அனுபவிதாக்களுக்கு நிரவதிக ஸூ கவாஹமாய் லோகம் எல்லாம் நிறைந்த
தன் புகழை சர்வ காலமும் யேத்தும்படி தனக்கு அருள் செய்த மாயனை -ஆறாயிரப்படி
பத்தாம் பாட்டு பரம விலஷணம் என்பதால் ஒன்பதோடு ஒன்றும்
ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாய் இருப்பார்களையும் உருகச் செய்வது ஒரு பலன் அன்றோ
அதனால் இப்படி பலன் அருளி தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————————————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி –

இன்னுயிர் மால் தோன்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்னவனைக் காண வெண்ணி யான் பெண்ணாய் பின்னையவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னுமவர்க்கும் உள்ளம் உருகும் –85

————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மையார் கரும் கண்ணி —9-4-

November 13, 2014

எம்பெருமான் -சீலாதி குணகண பூஷிதன் -ஸ்வ தந்த்ரன் இரண்டும் உண்டே
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களைச் சொல்கிறது நாராயண பதம் –
கீழ்த் திருவாய் மொழியில் அனுசந்திக்கப் பட்ட சீல குணத்துக்கு ஊற்று வாயான பிராட்டியின் சம்பந்தத்தையும் அனுசந்தித்தார் ஆழ்வார்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் இராப் பகல் இன்றியே -ஆசையும் விஞ்சிப் பெருகிற்று
அவன் இப்படி சீலாதிகனுமாய்
திரு மகள் கொழுனனுமாய் இருக்க
தம்முடைய ஆசையும் விஞ்சி இருக்க
இப்படி துடிக்க விட்டு உபேஷையாய் இருக்கிறானே -என்று வருந்தி
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அரஈ குலைய தலை குலசிய ஓடி வந்து ரசித்தவன்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்காக தூணிலே இருந்து தோற்றி அருளினவன்
நமக்கு உதவ வர வில்லையே ஆற்றாமை பொங்கிற்று
அவன் கல்யாணகுணங்கள் கடலோசை போலே நிரார்த்தகமா
அவன் தனது திருக் குணங்களை பழுது ஆக்கிக் கொள்ள மாட்டானே
ஆழ்வார் உடைய விடாயைத் தீர்க்க வந்து முகம் காட்டி அருளினான்
அதற்கு மிக மகிழ்ந்து
கிருத்க்ருத்யன் ஆனேன்
அடிமை செய்யப் பெற்றேன்
வாழ்ந்தேன்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் சொல் அமுதம் தரப் பெற்று உபகாரம் செய்யப் பெற்றவன் ஆனேன்
இப்பேறு வேறு ஒருவருக்கு கிட்டுமோ
தம்முடைய மகிச்சியை வெளிட்டு அருளிச் செய்கிறார் இத் திருவாய் மொழியில்-

——————————————————————————————————————————————————————————————————

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-

பெரிய பிராட்டியார் திவ்ய ஆயுதங்கள் சேர்த்தி உடன் சேவை காண ஆசை
வைகுண்டே து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆச்தே விஷ்ணுரசிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ –
மையார் கரும் கண்ணி
உபதேசத்தால் மீளாத போது–ஈஸ்வரனை அழகாலே திருத்தும்
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
ஓம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணை புரட்டுதல் கச்சை நெகிழ்தல் செய்து தன அழகாலே அவனை பிச்சேற்றி
தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாதபடி பன்னி அங்கீகார உந்முகன் ஆக்குகை –
அதனால் கண் அழகாய் முந்துற பேசுகிறார்
அஸி தேஷிணா -இயற்கையாகவே கரும் கண்ணி மை இட்டு சம்பாதிக்க வேண்டா மங்களார்த்த மாகவே மை இட்டு இருக்கும்
கமல மலர் மேல் செய்யாள் –
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -தாமரைப் பூவில் இருந்தவள்
பாதாருந்து தமேவ பங்கஜரத -பூவில் துகள் திருவடிக்கு உறுத்தினவாறே திரு மார்வில் சேரப் பெற்றால் -அது சொல்கிறது -திரு மார்வினில் சேர்
திருமாலே –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்று பிராட்டியால் தான் பிச்சேறி அவளை பிச்சேறப் செய்பவன்
இவ் வழகை எல்லாம் காண ஆழ்வார் ஆசைப் படுகிறார்
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா –
இவள் கையில் லீல அரவிந்தம் அவனுக்கு போக்யமாய் இருக்குமா போலே யாயிற்று
அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனியவையாய் இருக்கும்படி-ஈடு
பிராட்டிபூ வேந்தி இருக்குமாபோலே அவன் திவ்யாயுதங்கள் ஏந்தி
ஏந்தும்கையா-வெறும் கையையோ வெறும் திவ்ய ஆயுதங்களையோ ஆழ்வார் காண ஆசைப் படவில்லை சேர்த்தி அழகே இவருக்கு காண தேட்டம்
என் கண் காண கருதும்
என் பசி கிடக்கட்டும் -பிரஜையின் பசியைப் போக்குவாய் தாயே -என்று இரக்கிறார்-

————————————————————————————————————————————————————————————————————————

கண்ணே யுன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே –9-4-2-

நெஞ்சுக்கு உண்டான சாபல்யத்தை பேசுகிறார் இதில்
சஷூர் தேவா நாமுத மர்த்த்ய நாம் -கண்ணே -என்று அவனை விளிக்கிறார்
அவனைக் காண அவனே சாதனம் என்பதால்
கண் இல்லாதார் எதையும் காண மாட்டாமை போலே எம்பெருமானை இழந்தாரும் எதையும் காண மாட்டார்களே
யுன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்-மனஸ் சஹகாரம் உடைய கண்ணால் உன்னைக் காண கருதி என்றபடி
சம்சாரிகள் நெஞ்சும் கண்ணும் விஷயாந்தரங்களில் பரகு பரகு என்று பறந்து இருக்கும்
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிசா பச்யதோ முனே -கீதை -போலே வகுத்த விஷயத்திலேயே ஏகாக்ரமாய் இருக்கும் ஆழ்வாருக்கு
சஷூச்ச த்ருஷ்டவ்யஞ்ச நாராயண ச்ரோத்ரஞ்ச ச்ரோதவ்யஞ்ச நாராயண –
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் -என் கொண்ட பல எண்ணிக்கைகளைக் கொண்ட
பல பல மநோ ரதங்களைப் பண்ணா நின்றுள்ள
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -கதா அஹம் தொடங்கி ஆசாம் வர்த்தயித்வா -வரை அருளிச் செய்த மநோ ரத பிரகாரங்களை நினைப்பது
நின்று இயம்பும் நிரந்தரமாக கருதும்
இனி தம்முடைய செயலை சொல்கிறார்
உன்னை கிட்டாது ஒழியேன்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அடியேன் எனக்கு நீ துர்லபன் இல்லையே
கிட்டயே தீருவேன் அத்யாவசாயம் கொண்டேன்-

————————————————————————————————————————————————————————————————————————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாளால்
குழைக்கின்றது போல் என்னுள்ளம் குழையும்
மழைக்கன்று குன்றம் எடுத்து ஆ நிரை காத்தாய்
பிழைக்கின்ற தருள் என்று பேதுறுவனே –9-4-3-

கூப்பிடச் செய்தேயும் வந்து அருளக் காணாமையாலே
ஆர்த்தியே செப்பேடாக வந்து ரஷிக்குமவனான உன் திரு வருளுக்கு புறம்பானவனோ
என்னுடைய தண்மையை நான் அறிந்துள்ளேன் -அடி நாயேன்
ஊருண் கேணியில் கள்ளியை வெட்டி எறிந்தால் உண்டாகும் அவத்யம் போலே என்று அறிந்தும்
ருசி உந்த கூப்பிடுகிறேன்
நாய் ஆவலை வாலை ஆட்டித் தெரிவிக்கும் குட்டையானால் ஆட்ட முடியாமல் உள்ளம் நோவு பட்டு உருகுமே
அது போலே கிலேசம் வாய் விட்டு சொல்ல முடியாமல் இருப்பது போலேவும்
சாதனம் இல்லாமல் கிலேசப்படுகிறார் என்றுமாம்
கைம்முதல் இல்லா ஆ நிரைகளையும் காத்து அருளினாய் நீ அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
நான் அதற்குப் புறம்போ –

————————————————————————————————————————————————————————————————————————————————–

உறுவது இது வென்று உனக்காட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய வம்மானே -9-4-4-

தமக்கு நேர்ந்த கலகத்தை விண்ணப்பம் செய்கிறார்
அவனுக்கு ஆட்படுவதே ஸ்வரூப அனுரூபம் -என்று துணிந்து ஆட்பட்ட பின் கலக்கத்துக்கு வழியே இல்லையே
அவன் நல்லதே செய்வான் என்ற துணிவோ
அவன் எது செய்தாலும் நமக்கு பிராப்தமே என்ற துணிவோ இருக்குமே
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வான செய்து கொள்ள -என்று துணிந்து கவலை அற்று இருக்க பிராப்தமாய் இருக்க
நித்ய கைங்கர்யம் கிட்டுமோ
சம்சாரத்தில் இருப்பு நீடித்து இருக்குமோ -கலக்கம் இருப்பதை விண்ணப்பம் செய்கிறார்
உறுவது இது வென்று உனக்காட்பட்டு-இது -உனக்கு ஆட்பட்டு -என்று
உண்டியே உடையையே உகந்து ஓடுவது நமக்கு உற்றது அன்று
எம்பிரானுக்கு ஆட்படுவதே உற்றது
உனக்கு ஆட்பட்டு -அனுஷ்டான பர்யந்தமாக்கி
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு மனம் பற்றாது -என்றும்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத் தலை நிற்க நின் சாயை அழிவு கண்டாய் -என்றும்
எற்றைக்கும் யெழ் யெழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும் இருந்து என்றபடி –
இவ்வுருதியைப் பெற்று வைத்தும் நான் கலக்கம் உற்றேனே
தகாதது நேர்ந்து இருக்கிறதே என்று கிலேசப்படுகிறார்
நின் கண் பெறுவது எது கொல் என்று -செய்கிறோம் செய்கிறோம் என்று தலை துலுக்கிக் கொண்டு
இன்னம் மாறி மாறி பல பிறப்புகளிலும் வைப்பாயோ
அல்லது என் ஆற்றாமையை தீர்த்து முகம் காட்டி அருளுவாயோ
வானவர் தானவர் அனுகூலர்பிரதி கூலர் இருவருக்கும் அரியாய்
என்னையும் அவர்கள் கோஷ்டியில் வைப்பாயோ
அரியாய அம்மானே
நரசிம்ஹனாய் ஒரு சிருக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாயிற்றே
அவனுடைய கோடியிலே சேர்கிறாயோ என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————————————————

அரியாய வம்மானை அமரர் பிரானை
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -9-4-5-

பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று அடியிலே சொன்னீரே
உமக்கு என்ன வருத்தம்
உமக்கு வேண்டுவது என்ன -என்ன -காண்கை தான் வேணும் என்கிறார் இதில்
அரியாய -ஹரியாயா
ஹரிர் ஹரதி பாபானி துஷ்ட சித்ரைபி ஸ்ம்ருதா
நினைத்த மாத்ரத்திலே பாபங்களை போக்கக வல்லவன்
நரசிம்ஹனாய் வந்து ரஷித்தவன்
அமரர் பிரான் -நித்ய சூரிகளுக்கு தன்னைக் கொடுத்து அனுபவிப்பவன்
பெரியோன் -அவர்களாலும் எல்லை காண ஒண்ணாத பெருமை படைத்தவன்
பிரமனை முன் படைத்தானை -நித்ய விபூதி நாயகனாய் இருந்தும் லீலா விபூதிக்கும் விதை விதைத்தவன்
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் -படைத்ததும் தத் ரஷணத்துக்கும் தீஷிதனாய்
அரவணை மேல் உறங்குவான் போல் யோகு செய்து அருளும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்
வடமதுரையில் கண்ணன் என்னும் கரும் தெய்வமாய் பிறந்தவன்
அன்றிக்கே
வெளுத்த நிறத்தைய திரு அநந்த ஆழ்வான் மேல்
காளமேகம் சாய்ந்தால் போலே பரபாக சோபை விளங்க
கண் வளர்ந்து அருளுபவன்
கழல் காண கருதும் கருத்தே
படுக்கை க்கு பரபாகமான வடிவையும்
காண விருப்பம் கொண்டேன்

———————————————————————————————————————————————————————————————-

கருத்தே யுன்னைக் காணக் கருதி எந்நெஞ்சத்து
இருத்தாக விருத்தினேன் தேவர்கட்கெல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என்னுள்ளம் உகந்தே –9-4-6-

ஆரத்தியைத் தீர்க்க உள்ளத்தே புகுந்தான்
நெஞ்சு உகக்கும் படியைப் பேசுகிறார்
கருத்தே -என்று விளிக்கிறார் -நான் தளராதபடி வலிமையூட்டி நடத்திக் கொண்டு போருமவனே
எனக்கு மிடுககானவனே -வியாக்யானம்
காண ஆசைப் பட்ட அளவிலே -யுன்னைக் காணக் கருதி –
அப்போதே என் நெஞ்சில் சேர்ந்த படியால் –
எந்நெஞ்சத்து இருத்தாக விருத்தினேன் -இனி ஒருகாலும் விட்டுப் பிரிந்து போகாதபடி
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக என் நெஞ்சில் இருத்தினேன்
நீ சாமான்யன் இல்லை பராத்பரன்
தேவர்கட்கெல்லாம் விருத்தா -உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவனே
விளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா -பரமபதம் -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி
அத்திரு நாட்டை நிர்தேசித்த படி
உயர்ந்த நிலத்திலே அத்விதீயன்
உன்னை உள்ளும் என்னுள்ளம் உகந்தே -நித்யர் முக்தர்களை அனுபவிப்பது போலே என்னையும் அனுபவிக்கையாலே உள்ளம் உகந்தென்
மகிழ்ச்சியின் எல்லையில் நின்றேன் –

—————————————————————————————————————————————————————————————————–

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே –9-4-7-

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு வந்து தோன்றினது போலே தோன்றி அருளுகிறாய் என்று எத்துகிறார்
பிரிந்து கிலேசத்தோடே தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே ஏக ரூபமாய் உன்னை அனுபவிக்கும் படி -ஈடு
நெஞ்சிலே அவகாசம் உள்ள இடம் எங்கும் நிறைந்த தேஜஸ் உடன் உள்ளான்
அடியார் பிரதிஞ்ஞையை அந்த சனம் தன்னிலே நிறைவேற்றினால் போலே என் உள்ளம் நிறைந்து அருளினாய்
உகந்தே உன்னை உள்ளும் -உள்ளுகின்ற என்றுமாம்
பாட்டு முழுவதும் விழியாக அமையும் –
வினை முற்று கீழ் பாட்டில் இருந்து சேரும்
நகந்தாய் நகத்தாய்-வல்லொற்றை மெல்லொற்றாக்கிக் கிடக்கிறது வியாக்யானம்
நகம் தாய் நகத்தை தாவும்படி பண்ணின -பன்னீராயிரப்படி

———————————————————————————————————————————————————————————————————-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கெல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9-4-8-

கீழ் இரண்டு பாட்டிலும் உண்டான களிப்பே தொடர்ந்து செல்லுகிறது
வேத பாஹ்யமான ஷட் சமயங்களில் நான் புகாத படி பரிக்ரகித்து -ஆறாயிரப்படி
அந்த பாஹ்ய மதங்களினால் தன்னை இல்லை செய்ய ஒண்ணாதபடி நிற்பவன் -நம்பிள்ளை
சார்வாக பௌத்த ஷபணக வைசேஷிக சாங்க்ய பாசுபத –
அறு சமய செடி யதனை யடி யறுத்தான் வாழியே
உருவாகிய -ஒரு மதம் என்று சொல்லக் கூடிய நிலை இல்லாத போதும் மேல் எழுந்த பார்வையில் மதம் போலே
ஆபாத ப்ரதீதீயில் ஓன்று போல் இருக்க -சிலவற்றை விதிப்பது -சிலவற்றை நிஷேதிப்பது –
நிஷித்த பரிஹாரத்தை சொல்லுவதாய்க் கொண்டு
உபதேசிப்பாரும் கேட்பாருமாய் போருகிற பாஹ்ய சமயங்கள் எல்லா வற்றாலும் -ஈடு
பொருவாகி நின்றான் -பொரு என்று தடைக்குப் பெயர்
அவற்றுக்கு பிரதிபடன்
அவற்றால் தனக்கு ஒரு ஹானியும் நேரப் பெறாதவன்
அருவாகிய -ஆத்மாவுக்கும் அந்தராத்மாவாகி
ஆதி -உள்ளே இறுதி நியாமகனான முதன்மையை சொன்னபடி
கருவாகிய -கரு கர்ப்பம் -காரண பூதன்
கண்ணனை -சர்வ காரணபூதனாய் இருக்கச் செய்தேயும்
கார்ய வஸ்துக்களில் ஒன்றுக்கு தான் காரண பூதனை இருக்கும் ஆச்சர்யம்
சங்கல்ப விசேஷ பிரயுக்தம்
கண்ணனைக் கண்டு கொண்டேனே -பிற்பாடராய் இருக்கச் செய்தேயும்
ப்ரேமார்த்த சித்தர்க்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலாதிகளுக்கு -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————

கண்டு கொண்டு என் கண்ணினை யாரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே –9-4-9-

தாம் கண்டு கொண்டு கண்ணினை யாரக் களித்ததும்
பண்டை வினைகளை பற்றோடு அறுத்ததும்
பெரிய ஆனந்தம் அன்று
திருவாய் மொழி பாடின முகத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் உபகாரகராகப் பெற்ற இது அன்றோ
பிறருக்கு பெறுவதற்கு அரியதான ஆனந்தம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்-என்று பெரும் உவகை உடன் கவி பாடினார் யாரும் இல்லையே
கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் வேதம் உள்ளளவும் வேத கீதன் உள்ளளவும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுதமாய் பரம போக்யமாய்
விளங்கப் போவதை ஆழ்வார் கண்டு அறிந்து அருளிச் செய்கிறார்
பக்தாம்ருதம் -நாத முனிகள்
முன்பே பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் என்றவர்
அவ்வளவு மட்டும் இல்லை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்-என்கிறார்
ஏழாம் பத்திலே -தூ முதல் பத்தர்க்கு தான் தன்னைச் சொன்னது -என்று அருளிச் செய்தார்
மேலே பத்தாம் பத்திலும் -பண்ணார் பாடலின் கவிகள் யானேத் தன்னைத் தான் பாடி -என்பர்
இவற்றின் இடையே சொன்மாலைகள் சொன்னேன் -என்று
உண்மையை வெளியிட்டு உரைத்த இது
நம்போல்வார் உடைய பரம பாக்யம் அன்றோ-

——————————————————————————————————————————————————————————————————————–

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9-4-10-

தாம் உஜ்ஜீவிக்கப் பெற்ற படியை பேரானந்தம் பொலிய அருளிச் செய்கிறார்
அவனுடைய பரம கிருபை நிர்ஹேதுகம்-என்பதை -அடியவன் என்று -அடியாராக நீசனான என்னை ஆட்கொண்டு -ஆரோபித்துக் கொண்டு -அருளினான்
ஆழ்வார் பக்கலில் ஏன் அத்தனை அருள் செய்தாய் -என்று ஆரேனும் கேட்டால்
அடியான் என்று ஏறிட்டுக் கொண்டு -அடியானை இருந்த படியாலே என்னலாமே
ஆளவந்தார் -வாயசச்ய ப்ரணத இத தயாலு-என்று இத சப்தத்தால் அருளிச் செய்கிறார்
எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை –கொள்ளுகிற என்னளவு அன்றிக்கே தன்னளவிலே உபகரித்த சர்வேஸ்வரனை -நம்பிள்ளை
இப்படி தன பெருமைக்கு ஏற்ற அருள் செய்யும் இடங்கள் இரண்டு காட்டுகிறார்
நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை-தாசஸ் சகா வாஹனம் த்வஜோ யஸ் தே விதானம் வ்யஜனம்த்ரீயமயம் –
இப்படி அருள் செய்யப் பட்ட நிறைந்த புகழ் உடையவன்
குன்றாமல் உலகம் அளந்த அடியானை –
உறங்குகிற பிரஜையை தான் அறிந்த சம்பந்தமே காரணமாக தாய் அனைத்துக் கொண்டு கிடந்தது முலை கொடுத்துக் காக்குமா போலே செய்து அருளினான்
எம்பெருமான் திருவடி நம் தலைக்கு அணியாக வேணும் என்கிற பிரார்த்தனையும்
அது நமக்கு பிராப்தம் ஆகிறது என்ற எண்ணமும் இல்லாதார்க்கு அன்றோ இப்பேர் அருள் செய்தது
ஆக
இப்படி எதிர்தலையைப் பாராமல்
தன்னையே பார்த்து அருள் புரியும் சர்வேஸ்வரனை நான் அடி பணிந்து உஜ்ஜீவித்த வகை மற்று எவர்க்கும் நிலமோ-

———————————————————————————————————————————————————————————————————————————–

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
சேறார் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே –9-4-11-

இப்பத்தும் வானவர் தம் இன்னுயிர்க்கு ஏறே தரும்-பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
ஏறு -புருஷர்ஷப -புருஷ புங்கவ -சர்வேஸ்வரனை ஏறு என்கிறார்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -உபநிஷத் ஓதின பலனைக் கொடுக்கும் –
அன்றியே –
ஏறு -புண்பாடு -நித்யூரிகளின் ஹிருதயத்தை தங்கள் ஒப்பற்ற போக்யதையால் -வித்தார் ஆக்கும்
அன்றியே –
அவர்கள் உள்ளத்தின் உள்ளே ஏறி நிற்கும் நம்முடைய நம்முடைய பிரதிபந்தகங்களை முடித்து அருளுவான்
சேறார் வயல் தென் குருகூர்ச் சடகோபன் -எப்பொழுதும் உழுதும் நடுவதுமான வயல்
நித்யமாக அன்னம் அளிப்பது போலே ஆழ்வாரும் முமுஷூகளுக்கு அன்னம் அளிக்கிற படி
நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம் என்றதும் சாபிப்ராயம் -நாயனார்
ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கருத்து
ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு கருத்து
ஒவ்வொரு நூற்றுக்கும் ஒரு கருத்து
முதல் நூற்றுக்கு-பரத்வத்தில் நோக்கு
இரண்டாவது நூற்றுக்கு -காரணத்வத்தில் நோக்கு –
மூன்றாவது நூற்றுக்கு -வ்யாபகத்திலே நோக்கு
நான்காவது நூற்றுக்கு -நியந்த்ருத்வத்திலே நோக்கு
ஐந்தாவது நூற்றுக்கு -காருணிகத்வத்திலே நோக்கு
ஆறாவது நூற்றுக்கு -சரண்யத்வத்திலே நோக்கு
ஏழாவது நூற்றுக்கு -சக்தத்வத்திலே நோக்கு
எட்டாவது நூற்றுக்கு -சத்யகாமத்வத்தில் நோக்கு
ஒன்பதாவது நூற்றுக்கு -ஆபத் சகத்வத்திலே நோக்கு
பத்தாவது நூற்றுக்கு -ஆர்த்தி ஹர்த்வத்திலே நோக்கு
என்று இப்படி நிதானம் அறிந்து வகுப்பார்கள் நம் முன்னோர் –

———————————————————————————————————————————————————————————————————————–

மையார் கண் மா மார்பில் மன்னும் திரு மாலை
கை யாழி சங்குடனே காண வெண்ணி மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத யுய்யுமே யின்னுயிர்–84

———————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஓராயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்–9-3-

November 12, 2014

கீழ்த் திருவாய் மொழியில்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்று
இடம் கொள் மூ வுலகும் தொழ எழுந்து அருளாய் -என்றும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
பலவாறு பிரார்த்தித்தார்
நாம் நாராயணன் என்று அறிவீரே
என்னுடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேண்டுமா
உமக்கும் நமக்கும் உண்டான குடல் துவக்கி அறிந்து வைத்தும் இப்படி பிரார்த்திப்பதும் கிலேசிப்பதும் தகுதி அன்று -என்று சொல்லி அருள
அது கேட்டு ஆழ்வார் ஒருவாறு சமாஹிதராய் -இது என்ன சீலகுணம் என்று ஈடுபட்டு அருளிச் செய்யும் திருவாய் மொழி இது –
வார்த்தை கேட்டு சமாஹிதர் ஆவாரோ என்ற சங்கை வேண்டாம்
பெய்யும் மா முகில் போல் வண்ணா உந்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –
பெருமாள் ஸ்ரீ கௌசல்யையார் தேவி இடம் வார்த்தை சொல்லக் கேட்டு காட்டுக்கு உடன்கூடப் போவது தவிர்ந்து மங்களா சாசனம் பண்ணி அருளினாரே
இத் திருவாய் மொழிக்கு நடுவில் திரு வீதிப்பிள்ளை வேறுஒரு அவதாரிகை சாத்தி நிர்வஹிப்பார்
கண்கள் சிவந்து -பதிகம் தொடங்கி திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்யப் பட்டு வந்து
கீழ் -பண்டை நாளாலே -கைங்கர்ய பிரார்த்தனை பண்ணும் முகத்தாலே வ்யக்த சதுர்த்தியின் அர்த்தம் அளவாக
அர்த்தம் அனுசந்திக்கப் பட்டு தலைக் கட்டிற்று
இப்படி அர்த்த அனுசந்தானம் பண்ணினவர் அந்த அர்த்தம் திரு அஷ்டாஷர மகா மந்த்ரமே என்று வெளியிட வேண்டி இப்பதிகம் அருளிச் செய்கிறார்
நாராயணன் நாங்கள் பிரான் அவனே -என்றதில் முழு நோக்கு இந்த நிர்வாஹத்தில்
ஷட் அஷரி-அஷ்டாஷரி -த்வாதச அஷரி -குன்றும் வ்யாபக மந்த்ரங்கள்
ஆகவே அர்த்தம் மட்டும் வெளியிட்டால் பயன் இல்லையே
சப்தமும் வெளியிட்டு பெரிய திரு மந்த்ரமே -அஷ்டாஷரியே மிகச் சிறந்தது என்று காட்டி அருள வேண்டுமே –
இதுவே இரண்டாவது நிர்வாஹத்தின் சாராம்சம் –

———————————————————————————————————————————————————————————————————————————-

ஓராயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேராயிரம் கொண்டதோர் பீடுடையான்
காராயின காள நன் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே –9-3-1-

நம் அபேஷிதம் நாராயணன் ஆகையால் தலைக் கட்டி அருளுவான் இது திண்ணம் –
ஒரு திருநாமமே ஆயிரம் திரு நாமங்களின் கார்யம் செய்ய வல்லது
தேவோ நாம சஹஸ்ரவான் -எண்ணிறந்த திரள்
ஐதிகம் -கோயில்யாத்தான் புத்திர வ்யோகத்திலே பட்டர் ஸ்ரீ பாதத்திலே தம் சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க
அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
பட்டரையே தெய்வமாக கொண்டு பிள்ளைக்கும் அதே பெயரை வைத்து இருந்தார்
நீ நம்முடைய திருநாமம் இடப்பெற்ற பிள்ளை போனான் அன்று என்றோ துக்கப் படுகிறது
அந்த திருநாமம் உடைய நாம் இருக்க துக்கப் படுவான் என் -என்று பட்டர் அருளிச் செய்தாராம்
திரு நாமம் உடைய எம்பெருமான் நிலை நின்று அருளி நம்மை காத்து அருளுவான் என்பதைக் காட்ட இந்த சம்வாதம்
கரை கட்டா காவேரி போலே பறந்து உள்ள திரு நாமங்களை ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பாங்காக
திரு மங்கள விக்ரஹம் அமைந்ததே என்கிற ஹர்ஷம் தோற்ற காராயின காள நன்மேனியன் -என்கிறார்
நாராயணனே நங்கள் பிரான் அவனே -என்று திரு நாமத்தை முக்த கண்டமாக சொல்லி முடிக்கிறார்
அவதாரிகையில் முதல் நிர்வாஹத்துக்கு நாராயணன் -அர்த்தத்தில் நோக்கு
இரண்டாம் நிர்வாஹத்துக்கு சப்தத்தில் நோக்கு-

——————————————————————————————————————————————————————————————————————-

அவனே யகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே –9-3-2-

பொருளை பன்னி உரைக்கிறார்
அவனே யகல் ஞாலம் படைத்து இடந்தான் -இத்தால் காரணத்வம் ரஷகத்வம் காட்டி அருளுகிறார்
ஏவகாரத்தால் சஹகாரி ஒன்றும் அபேஷியாதே பெருமை தெரிவிக்கப் பட்டது
நாராயண அனுவாகத்தில் -ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரம ஸ்வராட் -ச ச ச என்ற உபநிஷத் சாயலில் அவனே அவனும் அவனும் அவனும் -என்கிறார்
சகல சேதன அசேதனங்களும் அவன் இட்ட வழக்கே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையால் உணர்ந்தார்

————————————————————————————————————————————————————————————————————————————

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருளாதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே –9-3-3-

வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறிய முடியாத எம்பெருமானை நான் அறிந்தேன்
அரும் பொருள் அறிந்த வேத நூல்கள் -அனுமானத்தாலும் பிரத்யஷத்தாலும் அறிய முடியாத அந்த அரும் பொருளை –
அன்றியே
அறிந்தவையே இருக்கிற வேதங்களிலே அறிந்து கொள்ள முடியாத அர்த்தங்களை
நிஷ்கர்ஷித்து தரவல்ல ப்ரஹ்ம சூத்ரம் -இதிஹாச புராணம் நூல்கள்
ஆக இப்படிப் பட்ட சாஸ்திரங்கள் எல்லாம் –அறிந்தன கொள்க அரும் பொருளாதல்-
-அரும் பொருளாதல்-அறிந்தன கொள்க -என்று அந்வயம் -எம்பெருமான் அறிவதற்கு அரிய பொருள் என்பதை அறிந்தன
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் –அறிந்தோம் சொன்னாலும் -அரிய முடியாதவன் என்றே அறிந்தன –
வேதங்கள் கிடக்கட்டும்
வேத வித்துக்கள் வால்மீகி வ்யாசாதிகள் நிலை என்ன
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-அரி என்கிற திரு நாமத்தைப் பற்றிக் கொண்டு
ஹரணாதேவ துக்கா நாம் ஹரிரித்ய பிதீயதே-என்றபடி
துரிதன்களை போக்குமவன் என்பதை மட்டும் அறிந்தார்கள்
அவனுடைய போக்யதையையும்
அவனே நிரபேஷ உபாய பூதன் என்பதையும்
தெரிந்து கொண்டார்கள் அல்லர் –
நோய்கள் அறுக்கும் மருந்து -என்ற இவ்வளவே தெரிந்து கொண்டார்கள் –
கீழ்ப் பாட்டில் முடிவில் அறிந்தனமே -என்பதை இங்கேயும் ஆகர்ஷித்துக் கொண்டு சகல வியாக்யானங்களும் அருளிச் செய்யும் –

—————————————————————————————————————————————————————————————————————————————————–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே –9-3-4-
நித்ய சூரிகளுக்கு பரம போக்யனாய் இருந்து வைத்து
அங்கு நின்றும் போந்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து
நம்மையும் நித்ய சூரிகள் நடுவே கொண்டு வைக்கும் எம்பெருமானை ஒருவாறு கிட்டப் பெற்றோம்
நெஞ்சே அவனை விடாதே கொள் –
உன் அழகாலே எங்கள் போகத்துக்கு வர்த்தகன் ஆனவனே என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -ஆறாயிரப்படி
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகன் ஆனவனே -ஈடு
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களையாவது தனக்கு எண்ணப் பண்ணுகி -முமுஷூப்படி
இப்பிரார்த்தனை நம்மது மட்டும் இல்லை
திரு நாட்டிலும் உண்டு -மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றது இ றே-
அவ்விடத்துக்கு மணவாள மா முனிகள் -கந்தல் கழிந்த அந்நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்யோதயம் உண்டாமோ என்ன அருளிச் செய்கிறார் —

-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றது இ றே-என்று
அதாவது -உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை விளைவித்து
ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும்
ச்வரோப்ப அணு ரூபமாக அவன் ஆனந்திக்க அது கண்டு ஆனந்திப்பார் நித்ய முக்தர்களும்
இந்த அர்த்தம் குஹ்ய தமம் என்பதால் ஆறாயிரப்படி முதலியவற்றில் தெரிவிக்காமல்
ரகஸ்ய கிரந்தங்களில் வெளியிட்டு அருளுகிறார்கள் முன்னோர்
பிணிக்கு மருந்து -பசிக்கு -மருந்து இரண்டு வகை உண்டே
ஓன்று பிணியைப் போக்கும் ஓன்று பசியை உண்டாக்கும்
அது போலே போக மகிழ்ச்சிக்கு மருந்து -மகிச்சியை அடக்குபவன் என்றும் விருத்தி செய்விப்பவன் என்றும் கொண்டு இரண்டு அர்த்தங்கள்
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா-அஷ்டச்லோகி -பட்டர் இதே அர்த்தம் காட்டி அருளுகிறார்
கரும் தேவன் அம்மான் -நித்ய சூரிகளுக்கு போகமான வடிவை காட்டி என்னை ஈடுபடுத்திக் கொண்டவன்
கண்ணன் -அவதார முகத்தாலும் உபகாரம் செய்து அருளியவன்
விண்ணுலகம் தரும் தேவன் -சோரேல் கண்டாய் மனமே –
நம்மை பெற எவ்வளவு கிருஷி பண்ணினான்
அந்த கிருஷி ஒருவாறு பலித்து இருக்கும் பொழுது விபலமாக்கி விடாதே கொள்

———————————————————————————————————————————————————————————————————————————————————————-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே –9-3-5-

கீழ் சொன்னதையே வற்புறுத்தி சொல்கிறார்
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன்-பால் குடிக்க கால் பிடிக்கவோ
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -உனக்கு பிராவண்யம் இயற்கையாக மிக்கு இருக்கச் செய்தேயும்
நான் செல்லாமையாலே சொல்லுகிறேன் இத்தனை உனக்கு சொல்ல வேண்டியது இல்லை
கனகம் -கனம் -திடம் -பொன் போன்ற பரமார்த்தம்
பரம போக்யனான அவனை
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் யுடைய அம்மான் –
புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே
தன்னிலத்திலே வளர்ந்து
அழகியதான திருத் துழாய் மாலையை அணிந்து
போக்யதை மிக்க சர்வேஸ்வரனை விட்டுப் பிரியாமை -இவ்வர்த்தம் திடமாக அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————————————————-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவர்க்கே யொருங்காகவே–9-3-6

திரு உள்ளத்தை வேண்டினார்
வேண்டுதல் பலித்து நினைந்து நைந்து உள் கரைந்து உருகுகிற படியை பேசுகிறார் இதில்
எம்பெருமான் பெரிய பிராட்டியார் உடன் சம்ச்லேஷ்க்கிற படியை நினைத்து நெஞ்சு உடைகிறதாம்
அதுக்கும் மேலே
அவன் ஆஸ்ரித விரோதிகளை போர்க்களத்தில் முடித்து
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹரிஷினாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹி பர்த்தாரம் பரிஷச்வஜே -என்கிற சந்நிவேசத்தை சிந்தித்து உடைகிறதாம்
அதுக்கும் மேலே
பிரயோஜனாந்த பரர்களுக்காக திருமேனி நோவ கடல் கடைந்தத்தை நினைத்து உடைகிறதாம்
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவர்க்கே யொருங்காகவே
அவன் பனிக்கடலைக் கடைய இவர் மனக்கடல் உடையப் புக்கது
விரகராய் இருப்பார் கோழை களாய் இருப்பார் பக்கல் த்ரவ்யம் வாங்க நினைத்தால்
முந்துற மிடுக்கராய் இருப்பாரை நெருக்கி வாங்கவே இவர்கள் தாங்களே கொடு வந்து கொடுப்பார்களே
அப்படியே அவனும் மஹத் தத்வமான கடலை உலக்கை விடுநகமிட்டு நெருக்கி அதன் நல்லுயிரை வாங்க
இவருடைய திரு உள்ளம் உடையத் தொடங்கிற்று -ஈடு
ஆழ்வார் திரு உள்ளம் உருவதற்காகவே எம்பெருமான் கடல் கடைந்தான் –

——————————————————————————————————————————————————————————————————————————————————

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் என்னும் இராப் பகல் இன்றியே –9-3-7-

அவன் இவ்விடத்தே செய்து அருளின சேஷ்டிதங்களை நினைத்து உருகின நெஞ்சு அவன் உறையும் அவ்விடம் செல்ல ஆசைப்படா நிற்கிறது
ஆகம் சேர் நரசிங்கமதாகி -ஒரே ஆகத்திலே நரமும் சிம்ஹமும் சேர்ந்து -விலஷண சங்கல்பத்தாலே
விருத்தே வையக்ரீ ஸூகடித சமாநாதிகரனே ந்ருசிம்ஹத்வ பிப்ரத் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
ஆகம் -தம் திரு உள்ளத்தை சொல்லி -நெஞ்சிலே மறக்க ஒண்ணாத ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி என்றுமாம்
ஒரு சிறுக்கனுக்காக -செருக்கனை முடிக்க ஒரு கால் தோன்றி மறைந்தாலும்
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்குமே
ஒராகம் வள்ளுகிரால் பிளந்தானுறை -ஹிரண்யன் முரட்டு உடலை வாயால் சொல்லக் கூசி
மாக வைகுந்தம் மஹாகம் -பரமே வ்யோமன் -பெருமை தங்கிய வைகுந்தம்
இரவும் பகலும் வாசி இன்றி மனம் என்னுமே
சம்சாரிகளுக்கு இரவு ஒரு கார்யம் பகல் ஒரு கார்யம்
ஆழ்வாருக்கு எப்போதும் -ஒரே கார்யம் ஏகம்

——————————————————————————————————————————————————————————————————————————-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே –9-3-8-

இந்த சரீரத்துடனே அனுபவிக்கும் திருமலை இங்கேயே இருக்க மாக வைகுந்தம் காண ஆசைப் படுவதில் என்ன விசேஷம்
இது வாஸ்தவமே
ஆனால் காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -எனக்கு இங்கும் அங்கும்
நித்யர்கள் -தேவர்கள் – அன்றோ திருவேங்கடம் வந்து தொழுவார்கள்
இன்றிப் போக இருவினையும் கெடுத்து -இரு வினை கருமங்களும் வாசனையோடு இல்லாமல் போக –
பாவம் போலே புண்ணியமும் ஹேயம் முமுஷூக்களுக்கு
ததா வித்வான் புண்யபாப விதூய –
அனுபவித்தே அற வேண்டிய இரண்டும் எம்பெருமான் கிருபா விசேஷத்தாலே அறுத்து ஒழிப்பது சில அதிகாரி விசேஷங்களில்
யாக்கை புகாமை-பின்னையும் வாசனைகள் ருசி இருந்தால் -யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு தடுமாற வேண்டி இருக்குமே
உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -அவசரம் பார்த்து நிற்கும் இடம் -உய்யக் கொள்ளுகைக்காகவே நிற்கிறான் –
சிறந்த இந்நிலத்தே உள்ளது
அறிவோம் ஆனால் காலாலும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
அங்கு சென்று தொழுமவர்கள் மனுஷ்யர்களாக இருக்க முடியாது
தேவர்களோ நித்ய முக்தர்களோ தான்

———————————————————————————————————————————————————————————————————————————–

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னுமிது மிகையாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9-

தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்யப் பாரித்தேன் முன்பே
ஆலோசித்திப் பார்த்தால் தூப தீப புஷ்பாதிகளைக் கொண்டு அடிமை செய்வோம் என்றால்
அது மிகை என்னும்படி அன்றோ உன் ஸ்வ பாவம் இருப்பது
என் செய்வோம் தடுமாறுகிறார்
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேதம் -சுருதி வாக்யத்துக்கு
அதிகமான நம உக்தியை உனக்குச் செய்வோம் -என்பர் சிலர்
பூயிஷ்டாம் நம உக்திம்-தே விதேதம்-என்று அந்வயம் கொண்டு
நம் பூர்வர்கள் -தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேதம் -உம்முடைய திரு உள்ளத்தாலே மிகையான நம உக்தியைப் பண்ணக் கடவோம் –
தே -உன்னுடைய கருத்தாலே -நம சொல்வதையே மிகையாக கொள்பவன் நீ
உன் கருத்தாலே பூயிஷ்டமான
நாம் செய்யும் ஸ்வல்ப கிஞ்சித் காரத்தையும் மிகையாக -பஹூ வாக நினைக்கும் சீலத்தை நினைத்தவாறே –
ஆதலில் -தழுவுமாறு அறியேன் உன தாள்களே
பழுதில் தொல் புகழ் -ஆராதனைக்கு எளியன் என்கிற புகழ்
பாம்பணைப் பள்ளியாய் -சென்றால் குடையாம் -திரு வநந்த ஆழ்வான் போல்வார் அன்றோ உனக்கு அடிமை செய்து வாழ்வார்
வீழ்ந்து கிடக்கும் எனக்கும் அந்த வாழ்வு கிட்டுமோ -என்ற குறையைக் காட்டுகிறபடி –

—————————————————————————————————————————————————————————————————————————————

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன் சீலமே –9-3-10-

பிரயோஜனாந்தர பரர்களாய்
அடிமைச் சுவடு அறியாதவர்களாய்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் முகம் காட்டி அருளும்
உனது சீல குணம் என் வாக்குக்கு நிலம் அன்றே
தாமரையில் பிறந்தான் என்ற துர்மானம் உடையவன் -அவனுக்கும் உடம்பு கொடுத்து –
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி சேஷத்வ லஷணம்
இன்றிக்கே கொலைக் கருவியான மழுவை உடைய ஒருவனுக்கும் திரு மேனியில்இடம் கொடுத்த சீலம் என்னே
அமரர்கள் -நித்யர்களுக்கு உரித்தாய் இருக்கும் இப்பெயரையும் தேவர்களுக்கு கொடுத்து
உனக்கு ஆட்பட்டவர்களாக சொல்லிக் கொண்டு திரியும்படி அவர்களுக்கும் முகம் கொடுத்து நிற்பதுவும் என்னே
காலதத்வம் உள்ள அளவும் கூடினாலும் உன் சீல குணத்தை எத்தைச் சொல்லி புகழ்வேன்-

—————————————————————————————————————————————————————————————————————————

சீலம் எல்லையிலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை யாயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே –9-3-11-

இப்பதிகம் கற்றார் திரு நாடு செல்லுகை ஆச்சர்யம் அன்று பிராப்தம்
எம்பெருமான் உடைய சீலாதிக்யமே பேசப்பட்ட திருவாய்மொழி
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்தரேண சம்ச்லேஷ -சீலம்
நெஞ்சை உருக்கும்படி இருக்கும் எல்லா குணங்களும் சீலம்
இப்பதிகத்துடன் ஏதேனும் ஒருபடி சம்பந்தம் கொண்டார்
கண்டபாடமாக சொல்லுவதோ
அர்த்தானுசந்தானம் பண்ணுவதோ
பிறர் அனுசந்திக்கக் கேட்பதோ
திருவாய் மொழி சேவிக்கும் இடத்தில் இருந்து உறங்குவதோ
செய்யும் அவர்கள் எல்லாரும் இப்பத்தினின் பாலர்
வைகுந்தம் ஏறுதல் பான்மையே-பித்ரு தனம் புத்ரனுக்கு தாயப் பிராப்தமாய் இருக்கும் இ றே -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

ஒர நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்துமை –83-

——————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.