Archive for November, 2014

ஸ்ரீ சைல அஷ்டகம் —ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை -ஸ்ரீ சைல வைபவம்–

November 26, 2014

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

————-

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரண அம்புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்–ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

—-

சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

பிற்றை நாள் –
மாறன் மறைப் பொருளை கேக்க மணவாள மா முனியை ஏறும் அணை தனில் இருத்தி -ஸ்ரீ சைல அஷ்டகம் -1-

அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் ச ததா பர
பல பத்ரஸ் து கலவ் கஸ்ஸித் பவிஷ்யதி -என்று -பவிஷ்ய புராணம் -சேஷ அம்சமாகவும் சொல்லுவார்

ப்ரதம அநந்த ரூபஸ் ச த்விதீயோ லஷ்மணஸ் ததா
த்ருதீயோ பலராமஸ் ச கலவ் ராமானுஜோ முனி -பூர்வர் வாக்கியம்

———–

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் -அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

————

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

————

கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

————–

ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

——————–

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

————–

வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

ஆதி ஸத்-ஆஜ்ஜை-

——————

யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பத்யம் லஷ்மி நாத பத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

—————-

பல ஸ்ருதி –

ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

—————–

வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறு உரைக்க நேசமுற அரங்கர் நியமித்தார் -ஸ்ரீ சைல வைபவம் -7-

ஸ்ரீ பன்நகாதீச முனே பத்யம் ரெங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர சதஸ்தா நேஷ்வ நுசந்தான மாசரேத்
இத்யாஞ்ஞா பத்ரிகா விஷ்வக்சேநேன பிரதிபாதிதா
ததாரப்ய மகாத் பிச்ச பட்யதே சந்நிதே புரா

———

ஸ்ரீ அப்புள்ளார் அருளிச் செய்த ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரம பதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே –1–

நற் குரோதன வருட மகர மாத நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற் சரக்கில் வீட்டிருந்து வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்ககத்தில் பெண் பிள்ளை போலே சென்று புவனி யுள்ள தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத் துரிய நிலை பெற்று உலகை உரைக்க கொண்டாரே -2–

செய நாமமான திருவாண்டு தன்னில் சீரங்க ராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திரு வீதி வாரா நிற்கத் தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமான் அனார் தன் முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லிச்
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர் வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும் கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர் சைல மந்திரத்தின் சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவீர் பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து திருவரங்கன் தினசரியை கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில் தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சன்னதி இன்று அரங்கர் தாமே அந்தத் தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே—5-

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியில் முப்பத்து ஒன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித் தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில் செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நம் கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6-

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில் அழகான ஆனி தன்னில் மூல நாளில்
பானு வாரம் கொண்ட பகலில் செய்ய பவ்ரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7-

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத் தமிழ் மறையை வர முனிவன் உரைக்கக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில் அத்தியயனத் திரு நாள் அரங்க நாதர்
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8-

அருளினதே முதலாக அரங்கருக்கும் அன்று முதல் அரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப் புன் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேதம் அது கேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே –9-

நாமார் பெரும் சீர் கொள் மண்டபத்து நம்பெருமாள் தாமாகவே வந்து தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும் வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ் விப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

—————————————-

வாசி அறிந்த வதரியில் நாரணனார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தான் இவ்வையகம் சீருறவே-கோயில் கந்தாடை அண்ணன் -மணவாள மா முனி கண்ணி நுண் சிறுத் தாம்பு -13-
திருமந்தரம் வெளி இட்டு அருளின ஸ்ரீ பத்ரி நாராயணனே இத்தையும் வெளி இட்டு அருளினார்

ஹடான் தஸ்மின் ஷணே கச்சித் வர்ணே சம்ப்ராப்ய பத்ரிகாம்
வாதூல வரதாச்சார்யா தர்ம பத்ன்யா கரே ததௌ–பஹூ முகமாக இத் தநியனை பிரகாசிப்பித்தது அருளுவதே
———————————————————————————
அழகர் கோயில் அனுபவம்

ஸ்ரீ சைல ஸூந்தரே சச்ய கைங்கர்ய நிரதோயதி
அமன்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய சம்பவ மார்யத

ஜிஹ்வாக் ரேதவ வஷ்யாமி ஸ்த்தித்வா வத ஸூ பாவ நம்
பத்யம் த்வதார்யா விஷயம் முனே ரஸ்ய மமா ஆஜ்ஞ்ஞாய

தன்யோச்மீதி ச சேனே சதே சிகோஸ்வதத ஸ்வயம்
வஹன் சிரசி தேவஸ்ய பாதௌ பரம பாவனௌ
———————————————————–
திருவேங்கடமுடையான் அனுபவம்

உபதிஷ்டம் மயா ஸ்வப்னே திவ்யம் பத்யமிதம் ஸூ பம்
வரயோகி நமாஸ்ரித்ய பவத ஸ்யாத் பரம் பதம்
இத்யுக்த்வா தம் வ்ருஷாத்ரீச ஸ்ரீ பாதாத் ரேணு மேவச
தத்த்வாஸூ பரேஷா யாமாச கச்ச யோகிவரம் ஸூ சிம்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ
த்ரிஷூ பக்திஸ்சதா கார்யா சா ஹி பிரதம சாதனம் -மா முனிகள்


ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ சைல வைபவம்

கூறுகேன் உலகீரே குங்குமத்தோள் அரங்கேசர்
மாறன் மறைப்பொருளைக் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மணை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரை யடி பூசனை யாற்றி –1-

ஏறும் மணை–உயர்ந்த ஆசனம்
இரு நிலத்தில் -பூமியில் தாம் இருந்து
பூசனை யாற்றி –ஆராதனை செய்து

——-

ஆறு இரண்டு புரம் சூழ அரங்கம் முதல் நூற்று எட்டும்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன் பெருக்கு என்ன யுன்னி யதை யுகந்து யுரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே –2-

ஆறு இரண்டு -உபய காவேரி
புரம் சூழ அரங்கம் –ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே
முதல் நூற்று எட்டும் -ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி -ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –
ஓர் இரண்டாம் சீர் நடுநாடு -ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறு இரண்டு கூறு திருநாடு ஒன்றாக்கொள்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க -ஸ்ரீ சைல என்று தொடங்கும் மந்த்ரம்
யுன்னி -சிந்தித்து
சேறு வளர் கமலை -பங்கயச் செல்வி
ஒருப்பட்டே –சம்மதித்து

———-

பட்டர் பிரான் முதலாய பதின்மர் கலை பழிச் சலிலும்
சிட்டர்களாய்த் தினம் தோறும் திருமண் இடு வேளையினும்
இட்ட முற யுணும் பொழுதத்து ஒண் கர நீர் ஏற்கையினும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-

சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில் துயக்கற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
வாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில் மால் கருட வாகனனாயத் தோன்ற வாழ்த்தும்
ஆழ்வாராதலால் முதலில் எடுத்து அருளுகிறார் –
பழிச்சல் -துதித்தல்
சிட்டர் -நல்லோர் -கல்வி நிரம்பிய சான்றோர்
திருமண் இடு வேளை -புண்ட்ரம் தரிக்கும் போது பன்னிரு திருநாமப் பாடல்கள் அனுசந்தேயம்

———

ஆரியர்கள் கொண்டாடி யாசரித்த தனியனைத் தான்
பேரியலும் தொண்டர் குழாம் பெரும் பேறாக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் செக தலத்தீர் கற்று உணர்மின்
தாரியலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4-

————-

மணவாள மா முனியை வழுத்து உறவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறவிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரே யுய்தல் இலர்
மணமுடைய மந்திர மா மதிக் கொள்ளீர் தனியனையே –5-

———

தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப் பவளத்தாலே -முனி வரனார்
மாறன் மறை முப்பத்து ஆறாயிரத்தின் மாண் பொருளைக்
கூற உபதேசித்தார் கொண்டு –6-

முனி வரனார் -சடகோப மா முனிவர்
மாண் பொருள் -சிறந்த கருத்து
முப்பத்து ஆறாயிரம் -ஈடு

———

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோர் உரைக்க
நேச முற வரங்கர் நேமித்தார் -ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டு மெய்த்து –7-

வேதனார் -பிரமன்
எய்த்து -வருந்தி

———

எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் காண்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் -வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை யறுத்து வீடு அருளும் வேந்து–8-

இராவணி -இராவணன் மகன் இந்திரஜித்
கொன்றவன் -இலக்குவன்
செய்ய நெறி -சரணாகதி மார்க்கம்
சேடன் -அநந்தன்
வையம் -பூமி
வரயோகி -ஸ்ரீ மணவாள மா முனிகள்
வேந்து -முனி யரசன்
வீடு -பரம புருஷார்த்த மோக்ஷம்

————

வேந்தராய் மண்ணாண்டு விண்ணேறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கிற்று எல்லுலகீர் -ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இழிந்தமர்மே வான் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்கு –9-

ஏதி-ஆயுதம்

————

வணங்கினார் சீர் பெற்றார் வரன் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப்பிறவிப் பேதையர்கள் தமைக்கண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் தென்றவரே –10-

வீடணர் -விபீஷணர்
உணங்கினார் -காய்கின்றவர்
தாமதர் -மந்தர்
சினந்தார் -கோபமுடையார் –

————

தென் கலையாம் தமிழ் வேதச் சீர் சைல தனியன் எனும்
நன் கலையை யுள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்
மின் கலையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நாவர் ஆகுவாரே –11-

தென் கலை -அழகிய கலை
மின் -ஒளி வீசும்
மேனோக்கு புண்ட்ரம் -ஊர்த்வ புண்ட்ரம்

———–

ஆகுகல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய என்
சோகம் அற யுளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம் மலர்த்தாளும் சீர் சைலத் தனியனும் இன்று
ஓகை யுறப் பெற்றனனால் ஒலி கடல் தரணியீரே — 12-

ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய் –திருவாய் மொழி -5-8-10-
சேகறு -குற்றம் அற்ற
ஓகை -உவகை

————-

தாராணியோர் வாழ எண்ணித் தானே திரு வனந்தன்
பேரணியும் குருகை நகர் பிறங்க நனிப் பேர் அருளால்
சீரணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறைத் தேசிகன் எனவே — 13-

பிறங்க -விளங்க
செனித்தனன் -அவதரித்து அருளினன்
தேசிகன் -ஆச்சார்யன் –

————–

தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்றும் இல்லை
திமிரம் அற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சமுசாரத் தாழ் கடலைக் கடத்தி ஒரு
நிமிடத்தில் நித்யராய் நிறுத்தும் பேர் இன்பத்தே —14-

————-

பத்துத் திசைகளினும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கும் மூவணையாய்ச் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனியாகும்
அத்தன் எழில் வர யோகி யாயிவராய் அரவரசே –15-

முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
முத்தி தரும் எதிராசர் பொன்னடியே நம் பெரிய ஜீயர்
அத்தன் -உயர்ந்தோன்
அரவரசு -ஆதி சேஷன் –

————-

அரவேறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சீர் சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனன் –16-

—————————-

பண வாள் அரவப் பளியில் பங்கயக் கண் துயில் அவனி
யுணவாளற்கு ஈடு அளித்தான் உத்தம நம்பிக்கு அருள் மெய்க்
குணவாளன் விளைக்கு மறை கூறாமல் தமிழ் விளக்கும்
மணவாள மா முனிவன் மலரடி சந்ததம் பணிவாம் –பொதுப்பாயிரம் -4–கூரேச விஜயத் துதி

——-

மணமுடைய மந்த்ரமா மதிக் கொள்ளீர் தனியனையே -பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்

த்வயம் -நம் ஆழ்வார் த்வயம் -எம்பெருமானார் த்வயம் -பெரிய ஜீயர் த்வயம்

சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சட ஜின்முனி முக்யகவி
யதிகுல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூ தாக விராட்
வரவர யோகி நோ வரத ராஜ கவிஸ் ச ததா -எறும்பி அப்பா

கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்
தேவில் சிறந்த திருமாற்கு தக்க தெய்வ கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே

கண்ணனை பாட நம் ஆழ்வாரே
நம் ஆழ்வாரைப் பாட மதுர கவி ஆழ்வாரே
ராமானுஜரை பாட அமுதனார்
மா முனிகளை பாட எறும்பி அப்பாவே

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்று உபகாரகரான திருவாய் மொழிப்பிள்ளை ஸம்பந்தம்
யதீந்த்ர ப்ரவணம் -உத்தாரகரான எம்பெருமானார் சம்பந்தம்
அபிமான துங்கர் செல்வர் அன்றோ மா முனிகள் தீ பக்த்யாதி குணார்ணவம் -ஆச்சார்ய லக்ஷண பூர்த்தி கூறப்பட்டது
வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் -மா முனிகள் ஸம்பந்தம் பெரும் பேறாக மதித்து வணக்கம் செலுத்துகிறான் –

ஸ்ரீ சைல பூர்ணர்-பெரிய திருமலை நம்பி -தயைக்குப் பாத்திரமான எம்பெருமானார் யதீந்த்ரர் இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் பெற்றார்
ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப்பிள்ளை தயைக்குப் பாத்ரமான மணவாள மா முனிகள் -யதீந்த்ர பிரவணர்-தீர்த்தங்கள் ஆயிரமும் பெற்றவர்
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ண அரண்கள் அன்றோ –

யதீந்த்ரர் தாம் அவதரித்த பூதபுரியைத் துறந்து திருவரங்கத்துக்கு எழுந்து அருளி ஸம்ப்ரதாய பரிரக்ஷணம் பண்ணி அருளினார்
யதீந்த்ர பிரவணரும் தாம் அவதரித்த உறை கோயிலான திருக்குருகூரை விட்டு
காவேரி நடுவுப்பாட்டுக் கருமணியைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்
ஸ்ருதி சாகரத்தையும் திராவிட வேத சாகரத்தையும் பெருகப் பண்ணிக் கொண்டு போந்தார்

யதீந்த்ரர் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தர்
யதீந்த்ர பிரவணர்-அனைத்து உலகும் வாழப் பிறந்தவர எதிராசா மா முனிகள் என்னும் பொருள் சுரந்தார் –
அவர் நாராயண வைபவ ப்ரகாசகர் -இவர் ராமானுஜ வைபவ ப்ரகாசகர் –

நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்
அந்த அவதாரங்கள் போலே யதீந்த்ரரும் யதீந்த்ர பிரவணரும்

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் –

ஆழ்வாருக்கு மதுரகவிகளிலும் சிரமமான திருவடிகள் இராமானுசன் ஆனால் போலே
ராமானுஜருக்கு ஆழ்வான் ஆண்டான் முதலானாரிலும் யதீந்த்ர பிரவணர் இறே சரமமான திருவடிகள் –
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியன் ஸகல வேத சாரம் போல் நித்ய அனுசந்தேயம்

இப்படி வைபவசாலியாய் எழுந்து அருளி உள்ள மா முனிகள் திருவடிகளே தாரக போஷக போக்யங்களாகக் கொண்ட
நம் வானமா மலை ஜீயர் -கோயில் அண்ணன் -கோயில் அப்பன் -பிரதிவாதி பயங்கர அண்ணன் சம்பந்திகளாகி நாம் உஜ்ஜீவிப்போம் –

இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –

———–

பொன்னி தனில் குளிர் நகரம் தனில் புகுதப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள மா முனி என் ஐயன்
வாழ்ந்து இருக்கும் மடம் தன்னில் வந்து இருக்கப் பெற்றோம்
சென்னி தனில் அவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை ஆழ்வாரில் ஒன்றும் சிறந்து இருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கர் பேர் அருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே 

பூதூரில் வந்து உதித்த புன்னியனோ பூம் கமழும்
தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –திரு நாராயண புரத்து ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

————–

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ திருவாலி என்னுமூர் -ஈதோ தான்
வெட்டும் கலியன் வேல் வெற்றி திருமால் எழுத்து
எட்டும் பறித்த இடம்

நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக என்னைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளும் இங்கே
வந்து யுரை என்று ஏவுவதே வாய்ந்து –

————–

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி இன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –அருகில் இருந்த முதலிகள் விஞ்ஞாபித்து அருளியது –

————

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் மா முனி மேல் அன்புப்பெருக்கு

நெடியான் அருள் சூடும் படியான சடகோபன்
அடி சேர் அடியார்க்கு அடையா இடர் தானே

அருமறை முடியினரும் பொருள் தந்த
வர வர முனியின் திருவடி வாழியே

வர வர முனி அடி வணங்கும் வேதியர்
திருவடி யிணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

————

மா முனிகள் திருநாடு அலங்கரித்தது
ருதிரோத்காரி வருஷம் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி

மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்ட்டி –யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீவேதாந்த தேசிகர் ஸர்வஞ்ஞராகையாலே -பின்னால் திருவவதரிக்கப் போகும் மா முனிகளின் அவதாரம் அறிந்து விண்ணப்பம் செய்து பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் செய்து அருளினார்

ருஷீ ணாம் புனராத்யாநாம் வாஸம் அர்த்த அநு தாவதி
பெரியார் வாய் வழி சொல்லையே அர்த்தம் பின் தொடர்ந்து செல்லுமே
இவர் அருளிச் செய்ததாலேயே பெரிய பெருமாள் மா முனிகளுக்குத் தாமே சிஷ்யராக அமைந்து
குரு பரம்பரை ஹாரம் நிறைவு படச் செய்து அருளினார்

மா முனிகளின் தீர்த்த திவசத்தை இன்றும் தாமே நடத்தி வைத்து அருளுகிறார் –

மா முனிகள் கலி 4472 சாதாரண வருஷம் -ஐப்பசி சுக்ல பஷ சதுர்த்தி -வியாழக்கிழமை
மூலம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
கி பி -1370-1443-
சிக்கில் கிடாரம் திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய அண்ணர் திருக்குமாரர்

இவரது திருநாமங்கள்
பெரிய ஜீயர்
சவும்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
காந்தோ பயந்தா
வர வர முனி
வர யோகி
இராமானுசன் பொன்னடி
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
யதீந்த்ர பிரவணர்
அழகிய மணவாள ஜீயர்
ஸ்வேத வர்ணர் ஆகையால் வெள்ளை ஜீயர்

வடமதுரை ஜீர்ண உதாரணம் செய்து அருளினார்
வானமா மலை ஜீயர் பிரியாது ஆட் செய்து இருப்பார்
கோயில் கந்தாடை அண்ணன் உடையவருக்கு முதலியாண்டான் போல் பாதுகா ஸ்தாநீயர்
எரும்பி அப்பா வடுக நம்பி போல் தேவு மற்று அறியாதே அத்யந்த அபிமதர்
பட்டர் பிரான் ஜீயர் எம்பாரைப் போல் பதச்சாயா பன்னராய் இருப்பர்
அப்பிள்ளார் மட நிர்வாஹகர்
பிரதிவாதி பயங்கர அண்ணா கூரத்தாழ்வானைப் போல் உஸாத் துணை

——–

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் —
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் —
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம் ஆழ்வார் திரு அத்யயன உத்சவ திரு மஞ்சன கட்டியங்கள் ..

November 25, 2014

ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
ஸ்ரீ :
ஸ்ரீ மதே சடகோபாய நம:

சத்த்வாஸ்ரயம் ஷட்பத பாவ யுக்தம் ஸூ ஹம்ச சேவ்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் விபும் த்வாம் வதந்தி சந்த சடகோப மேரும்-

நாயந்தே ! நாயந்தே !
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -என்னும்படி
உத்பத்தி காலத்திலே தன்னுடைய விசேஷ கடாஷத்தாலே சம்சாரி சேதனரை நிரஸ்த ரஜஸ் தமஸ்கரராயும்
ப்ரவ்ருத்த சத்வ குணராம்படியாகவும் பண்ண வல்ல சர்வேஸ்வரனுடைய நிரந்தர கடாஷ பாத்ர பூதராய்
உபாய உபேயங்கள் இரண்டும் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளும் –
அந்தத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்ய முகமாகவே நிஷ்கர்ஷித்து இருக்குமவராய்
ஜிதேந்த்ரியராலே சேவிக்கப் படுமவராய் –
சம்சார சேதனரை உஜ்ஜீவிப்பிக்கையில் நோக்கமான திரு உள்ளத்தை உடையவராய்
உக்தி விருத்திகளாலே சர்வேஸ்வரனை உகப்பிக்கும் ஸ்வபாவராய்
அபரிச்சேத்ய மகிமரான தேவரை சத்துக்களானவர்கள் ஸ்வ பாவ சாம்யத்தாலே மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
அது இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்த்வாஸ்ரயம் –
அந்த மகா மேருவானது -பஞ்சாசத்கோடி விச்தீர்ணமாய் பூமிக்கு ஒரு ஆணி அடித்தால் போலே
நிற்கைக்கு ஈடான பலத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
தேவர் ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலசாதபடி சத்வ குணம் ஒன்றுக்குமே ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருப்பீர்-

ஷட் பத பாவ யுக்தம்
அந்த மகா மேருவானது நாநாவித புஷ்ப ரஸா ஸ்வாத மத்த ப்ருங்கா வளியாலே சேஷ்டாயுக்தமாய் இருக்கும்
தேவரீர் ஆறு விதமான சரணாகதி விஷயமான திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ஹம்ச சேவ்யம் –
மகா மேருவானது மானசாதி சரோவர்த்திகளான அழகிய அன்னங்களாலே சேவிக்கப் படுமதாய் இருக்கும்
தேவர் நாத யாமுன யதிவராதிகளான பரம ஹம்சர்களால் சேவ்யமானராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ மனஸ் சமேதம்
அந்த மகா மேருவானது உத்யான தடாக ஜலங்களிலே இருக்கிற நாநாவித புஷ்பங்கள் உடன் கூடி இருக்கும்
தேவர் சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரிகளையும் திருத்துகையிலே தத்பரர் ஆகையாலே
அழகிய திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் –
அந்த மேரு தேவர்களுக்கு நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்வ வை லஷண்யத்தாலே ஆஹ்லாத கரமாய் இருக்கும்
தேவர் -பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் -என்றபடி
நிரந்தர கடாஷம் பண்ணி கொண்டு இருக்கும் படி அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கும் ஆஹ்லாத காரராய் எழுந்து அருளி இருப்பீர்-

விபும்
அந்த மேருவானது பூமிக்கு மேலே 84000 யோஜனை உயர்த்தியை உடையதாய் பர்வதாந்தரங்களை காட்டிலும் பெரியதாய் இருக்கும்
தேவர் அடியார் நிலை நின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்னும்படி
உபய விபூதியிலும் அடங்காத பெருமையை உடையராய் எழுந்து அருளி இருப்பீர் –

ஆக இப்படிகளால் தேவரீரை- வதந்தி சந்த சடகோப மேரும்-
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

—————————————

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –
திருமஞ்சனம் சேவிப்பாரை எல்லாம் சிந்தயந்தி ஆக்கி அருளுகிறீர் –

காதும் பூர்ணஸ்தி தேந்தும் மதுரகவிமுகை ப்ருத்ய வரக்கை ஸ் ச ஸார்த்தம்
ஸ்நாதும் வேத்யாம் நிஷண்ணஸ் தத் அனுகுண மால்யாத் யம்ப ரஸ்த்வம் சடாரே
தாதும் முக்திம் ஸ்வ காந்த யேச்ச ஸி கிமிஹ ந்ருணாம் சாஸ்திர மார்க்காதிகா நாம்
ஸ்வ தந்தர்யாதேவ கிருஷ்ண பிரதம மிஹ யதா சிந்தயந்த்யா ஸ்வரூபம்-

நாயந்தே ! நாயந்தே !
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத்ச்யாத் தத் சாரசாதித ஸ்வ தந்தயதி வ்ருத்தவார்த்தம் -என்கிறபடியே
திமிர சார நிர்மிதம் என்னும் படி இருண்ட சுருண்ட திருக் குழல் கற்றையும்
அஷ்டமி சந்திர நிபமான திரு நெற்றியும்
அந்த சந்திர மத்யத்திலே ஒரு அம்ருத தாரை என்னலாம்படி திரு நெற்றியிலே அழகு பெறச் சாத்தின திரு நாமமும்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலையையும் தன் அழகாலே வெல்லும் திருப் புருவமும்
அநவதிக தய அனுராக வாத்சல்ய ஸூசகங்களாய் அப் பொழுதைத் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
கல்ப லதா கல்பமான திரு மூக்கும்
பிம்ப வித்ரும தம்ப ஹாரியான திரு வதரமும்
ஸூத்த நிஸ்த லாலி போலே இருக்கிற திரு முத்து நிறையும்
கர்ணிகா விலசிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபஹாரிகளான சுபுக கபோலங்களும்
க்ரமுக தருண க்ரீவாகம்பு பிரதிமமான திருக் கழுத்தும்
கனக கிரியைக் கடைந்து எடுத்தால் போலேயாய் ப்ரணத ரஷண தீஷிதமான திருத் தோள்களும்
ஜ்ஞான ப்ரதன் என்னும் இடத்தை கோள் சொல்லுகிற ஜ்ஞானமுத்ரா சஹிதமான கர காந்தியும்
அகில ஜன மநோ ஹரமாய் -அநேக பூஷண பூஷிதமாய் வகுள தாம விராஜிதமான வஷஸ் ஸ்தலமும்
அஷய பாப ஹாரியான குஷி பிரதேசமும்
சௌந்தர்ய அம்ருத நீர பூர பரிவாஹவர்த்த கர்த்தாயிதமான திரு நாபியும்
திருவரை பூத்தால் போலே இருக்கிற திவ்ய அம்பர சோபையும்
ரம்பா ஸ்தம்ப சஹோதரமான திருத் தொடைகளும்
க்குத் மத்ககுத் நிபமான திரு முழம் தாள்களும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய -என்கிறபடியே-

அசரண்ய சரணமுமாய்
தத் ஷண உன்மீலித சரசிஜா ஜைத்ரமான சரண யுகளுமுமாய்
ஆக
இப்படி சர்வ அவயவ ஸூந்தரமான திவ்ய விக்ரஹத்தை தேவர் இப்போது
திரு அத்யயன உத்சவ தீஷிதராய் ஸ்வ சிஷ்ய தாரரான மதுரகவி ப்ரப்ருதி சஜ்ஜனங்களோடு
பொலிந்து நின்ற பிரானை பாடி அருளுவதாக சங்கல்ப்பித்து
அலங்க்ருதகாத்ரராய்ச் சென்று சேவிக்க வேண்டுகையாலே
தத் அங்கமாக திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞானமுத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்-

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாசதயா முக்திம் கதான்யா கோப கன்னிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13
அஜ்ஞ்ஞாத பகவத் விஷயையான சிந்தயந்திக்கு ஸ்வ விக்ரஹ ஸ்மரண ஹேதுவாக
தன்னுடைய நிரந்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே முக்தியைக் கொடுத்த கிருஷ்ணனைப் போலே
இஹ லோகத்தில் விஷய பிரவணராய் ரூப ஆபாசம் கண்டு விஷயங்களிலே மேல் விழுந்து திரிகிற
சம்சாரி சேதனருக்கு தேவர் வடிவு அழகாலே விஷயாந்தர வைமுக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய ருசியை விளைவித்து
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
என்று வாய் புலம்பும்படி பண்ணி
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் -என்று
அவிதான்ய தைவிதமாய்க் கொண்டு தேவர் திருவடிகளைப் பற்றி நின்று
அடிமை செய்கையாகிற கைங்கர்ய ஆனந்தத்தையும் கொடுத்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது

————————————————————–

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –

பிரதஷிண நமஸ் க்ரியா ப்ரப்ருதிபிர்வ நாதரே புரா
பஜ த்வமிதி சோதிதம் பகவதோ குண உபாசனம்
யதத்யய ந்லஷ்யதே பிரகடயன் ஸ்வ வ்ருத்யாதி நா
சமஸ்த ஜன கோசரம் சடாரி போதய சம்ஸ் நாசிபோ —

நாயந்தே ! நாயந்தே !
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ-என்கிறபடியே
இருவர் அவர் முதலான அரவணை மேல் திரு மாலாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றுடையவராய்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்றும்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து என்றும் சொல்லுகிறபடியே
பேதைப் பருவத்திலே மூதுவராம் விண்ணாட்டவருடைய நித்ய வ்ருத்தியிலே அபி நிவிஷ்டராய்
ந ச சீதா த்வயா ஹீநா நசா ஹம்பி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-என்றும்
நின்னலால் இலேன் காண்-என்றும் சொல்லுகிறபடி
மா மலராள் கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே ஆக்கை முடியும்படியான தசையை யுடையவராய்
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபிலோகா நாம் காமயே ந த்வயா விநா-என்கிறபடியே-

கைம்மா துன்பம் கடிந்த அம்மானுடைய செம்மா பாதபற்பு தலை சேருகையிலே த்வரையாலே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்றும்
தருணீ க்ருதா நுத்தம புத்தி முக்தகராய் பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் என்று
திரு வுலகு அளந்த திருவடிகளிலே த்ரிவித கரணங்களாலும் உண்டான
விவித கைங்கர்யங்களே சர்வ வித புருஷார்த்தம் என்று அறுதி இட்டு அருளி

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று
அந்த புருஷார்த்தத்தை நிஷ் பிரயோஜனம் ஆக்குமதான ஸ்வ பிரயோஜனத்தைக் கழித்து
சபிரயோஜனம் ஆக்கி அருளின தேவரீர்
இப்போது திரு அத்யயனம் என்கிற வ்யாஜத்தாலே கிண்ணகத்துக்கு படல் இட்டால் போலே
க்ரீடாதி நூபுர அந்தமான மெய்யமர் பல் கலன்களையும் நன்கு அணிந்து
த்வஜ சத்ர சாமர பேரீ கீதா காஹள சங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலத்துடனே புறப்பட்டு அருளி
தணியா வெந்நோய் உலகில் தவிர்த்து ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கு ஆள்பார்த்து உழி தந்து
மீண்டு எழுந்து அருளி திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் என்று இருப்பார்க்கு
காட்சி கொடுக்கைக்காக

சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே
ஆபரண ஸ்யாபரணமான திருமேனியில் அழகு வெள்ளத்தை முழு மதகாகத் திறந்து
செழு மா மணிகள் சேரும் திரு மா மணி மண்டபமான இத் திரு வோலகத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதமாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
அது எங்கனே என்னில்-

தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் -என்று சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே
பலமுந்து சீரில் படிமின் -என்று விதித்த பகவத் குண உபாசனத்தை சாங்க மாக்க வேண்டுகையாலே
மாலிரும் சோலை தளர்விளர் ஆகில் சார்வது சதிரே –
மாலிரும் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே
மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே -இத்யாதிகளால்
ஷேத்திர வாச
சங்கீர்த்தன
அஞ்சலி
பிரதஷிண
கதி -சிந்தநாத் அங்கங்களை மலை இலக்கா முன்பு விதித்த படியை அக்காலத்தில் அனுஷ்டிக்கப் பெறாத
கர்ப்ப நிர்பாக்யரான அடியோங்களும் இழவாத படி
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பனான தேவருடைய இவ்வுலகினில் மிக்க அருளாலே
மாட மாளிகை சூழ்ந்து அழகாகிய திருக் குருகூர் அதனைப் பாடி யாடி பரவிச் சென்மின்கள் -என்கிறபடியே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் நீள் குடக் கூத்தனாய் மேவி உறை கோயில் விஷயமான தேவர் உடைய
வந்தன
கீர்த்தன
அர்ச்சனாதி பிரகாரங்களாலே வெளியிட்டு அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவம்-மூன்றாம் நாள் திருமஞ்சனக் கட்டியம் –

அவிச் சின்னம் காலம் சகலமவிபோக ந ஸூத்ருடம்
சமஸ்தம் கைங்கர்யம் சட மதன குர்யா மஹமிதி
யதாப்யாத்யா ப்ரோக்தம் ஸூப தரருசே சர்வ ஸூஹ்ருதே
புநஸ் ஸ்பஷ்டீ குர்வன்நிஹ சதசி சம்ஸ் நாஸி ததயோ-

நாயந்தே ! நாயந்தே !
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விஸ்வ மேவ தகும் புருஷ –என்று சொல்லுகிறபடியே
சர்வ சப்த வாச்யத்தை -முழுதுமாய் முழுதி யன்றாய்-என்று அருளிச் செய்தும்
அது தான் க்ராமேசயம் புருஷ -என்னுமா போலே அமுக்யம் ஆகாதபடி
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித –
அணோர் அணீ யான் மஹதோ மஹீ யான் -இத்யாதிகளால் அவனுக்கு சொல்லுகிற பரி சமாப்தி வ்யாப்தியை
எங்கணும் நிறைந்த வெந்தாய்-என்றும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவர நிறைந்து நின்ற -என்று அருளிச் செய்தும் -அது தான் ஆகாச வ்யாப்தி போலே யாகாத படி
அந்த பிரவிஷ்டா சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -என்று அவனுக்குச் சொல்லப்படுகிற நியந்த்ருத்வேன வ்யாப்தியை
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி -என்று அருளிச் செய்தும்
அது தான் ஜீவாத்மாவுக்கு போலே ஹேய ஸ்பர்ச சஹம் ஆகாத படி
அனஸ் நன்நன்யோ அபி சாக சீதி-என்று அவனுக்குச் சொல்லப்படுகிற தத் கத தோஷ ஸ்பர்ச ராஹித்யத்தை
அவரவர் சமயம் தோறும் தோய்விலன் -என்று அருளிச் செய்தும்
ஆக
இப்படி சர்வ அந்தர்யாமிதயா
சர்வ சப்த வாச்யனான
சர்வேஸ்வரனுடைய
சர்வ ஹேய ப்ரத்ய நீகமான -ரூபத்தை அருளிச் செய்து

ஹிரன்யமஸ் மஸ்ரு ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
ஆணிப் பொன்னுருவமான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு மாணிக்கச் செப்பு போலே பிரகாசகமாய்
அனுக்ரஹ ஏக பாத்ரமான அவர்களுடைய விரோதியை நிக்ரஹிக்கைக்காக பரிக்ரஹித்த விக்ரஹத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று தொடங்கி
சுட்டுரைத்த நன்பொன் நின் திருமென் ஒளி ஒவ்வாது -என்றும்
அப்பொழுதைத் தாமரைப் பூ கண் -என்றும் அருளிச் செய்தும்-

ச ஏக்தா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி அபரிமிததா பவதி
இமான் லோகான் காமான் காம ரூப்யநுசஞ்சரன் ஸ தத்ர பர்யேதி -என்று சொல்லப்படுகிற
விக்ரஹ அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தில் அபி நிவேச அதிசயத்தை
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்து அருளி-

இப்படி பிரார்த்தித்தது சார்த்தமாம் படி
எங்கும் தானாய் நின்ற தன் சர்வாத்ம பாவத்தை சர்வேஸ்வரன் சாஷாத் கரிப்பிக்கையாலே பெரும் காற்றில் விழு பழம் எடுப்பாரைப் போலே
புகழு நல ஒருவன் என்கோ-என்று தொடங்கி
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்றும்
கூவுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே -என்று துரும்பை கூடாகக் கண்டு யாசிதையான வாசிக வ்ருத்தியை செய்து அருளி

அது தான் அவ்வளவிலே தவறிப் போகாத படி
நங்கள் வானவர் ஈசன் நிற்க–இழியக் கருதியோர் மானிடம் பாடல் என்னாவது –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் -தன்னைக் கவி சொல்ல வம்மின் என்று
நிஷ்க்ருஷ்டையான ஸ்வ வ்ருத்தியிலே மூட்டி யருளி
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று மீளவும் தேவரீர் உடைய அனுஷ்டானத்திலே பிரகாசிப்பித்தது
அருளுவதாக திரு உள்ளம் பற்றி ததார்த்தமாக திருமஞ்சனம் செய்து அருள எழுந்து அருளி இருக்கிற இருப்பு என்று
விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————-

திரு அத்யயன உத்சவம் -நாலாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

பிரஜாபதி சிவாதி ஷூ பரவண சேத சாமா கமை
பராவர விபாகதம் பரம சாஸ்திர முக்த்வா புரா
விபாதி சடகோப தத் பிரபல சாஸ்திர சங்கா ஹ்ருதாம்
பவான் ஸ்நபந பூர்வகம் சத்த மத்ய கர்த்தும் யதா —

நாயந்தே ! நாயந்தே !
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –
ப்ரஹ்மவா இத மேகமே வாக்ர ஆஸீத் –
ஆத்மா வா இத மேகமே வாக்ர ஆஸீத்
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந-
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே –
புத் புதா ரஷய ஸூ ல பாணி புருஷோ ஜாயதே –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீ நேஷூ நஷ்டே லோகே சராசரே ஏகதிஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர –
தஸ்மின் ஜஞ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா ப்ரஹ்மணஸ் சாபி சம்பூதஸ் சிவா – என்னும் இப்படி

ஜகத் காரண முகேன நாராயணன் உடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதி புரஸ் சரமாக சகல சாஸ்திரங்களும் ஏக கண்டமாக நின்று கோஷிக்கச் செய்தேயும்
ஸ்ரஷ்ட்ருத்வ சம்ஹாரகத்வ முகேன ருத்ர பிரஜாபதி முக தேவதாந்தர பரத்வத்தையும்
அநாகலித மூல பிரகிருதி சம்பந்த பங்க வாசனா ரூஷித மாநாசர் ஆகையாலே
வைதிக பத விமுகராய் -பாஹ்ய பத அபிமுகராய் லோகாயதர் என்று பேரிட்டு அநாதி மாயையாலே
ஸூ ப்தரான தங்களை புத்தராக பிரதிபத்தி பண்ணியும்

பகவத் விமுகராய் கொண்டு துர்க்கதராய் இருக்க ஸூகதர் என்று பேரிட்டுக் கொண்டு
பகவத் குண கதனத்தாலே சௌ பாஷிகராய் இருக்க மாட்டாதே வை பாஷிகராயும்
ப்ரஹ்ம ஸூத்திர வேதனத்தாலே அசௌத்ராந்திகர் என்ன வேண்டி இருக்க
சௌ த்ராந்திகர் என்று பட்டம் கட்டி யோகாசாரன் என்று பேரிட்டு
வைதிக சரணியில் அயோகாசாரராயும் மாத்யமிகர் என்னச் செய்தே ஸூந்ய பஷவாதிகளாயும்
நியாய வாதிகள் என்று பேர் பெற்று பிரத்யஷத்துக்கு அனுமானம் சொல்லி அநியாய வாதிகளாயும்
பிரமாண பிரமேய விசேஷம் அறியாமையாலே அவைசேஷிகராய் இருக்க வைசேஷிகர் என்று விருது பிடித்தும்

ஸூ பர்ண ஆஸ்ரிதமான வாசூதேவ தருச் சாயையை விட்டு அபர்ண ஆஸ்ரிதமான ஸ்தாணுவின் கீழே ஒதுங்கி
பாசூபத தீஷிதராய் சம்சார வடத்திலே -கர்த்தத்திலே -ஆஸூ பதிதராயும்
இப்படி இவர்கள் தாங்கள் சர்வஞ்ஞர் என்னும்படி மானம் ப்ரதீபவமிவ என்கிறபடியே
சகல சாஸ்திர ப்ரகாசகமான பிரமாணத்தை அவலம்பித்து வைத்து
விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றிலே விழுவாரைப் போலே
அதபதிதர் ஆகையாலே ஸூ த்ருஷ்டிகலான வேதாந்திகளால் குத்ருஷ்டிகள் என்று பேர் பெறுவாரும்
இவை இத்தனைக்கும் தப்பி –

ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்று
நித்ய சேஷத்வ பிரதிபத்திக்கு ய்க்தமான மனசை யுடையனாய் வைத்து
அந்த சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வ
ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே –
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் –
ததா யதா பூர்வம கல்பயத் –
பிரஜாபதி பிரஜா அச்ருஜத்-
ந சந் நாசச்சிவ ஏவ கேவல –
சம்பு ராகாஸ மத்யே த்யேய-
ஏக ஏவ ருத்ர -என்றும் சொல்லுகிறபடியே-

ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு -பிரஜாபதி -சப்தங்களாலும்
சிவ சம்பு ருத்ர சப்தங்களாலேயும் பிரதிபாதிதமான சாம்யத்தாலே
சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அளவிலே சேஷித்வ புத்தியைப் பண்ணியும் அனர்த்தப் படுகிற சேதனருக்கு
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டுகொண்மின் –
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது
நும் தெய்வமும் ஆகி நின்றான் –பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –
ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவது
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
உம்மை உய்யக்கொண்டு போகுறில் திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்முன்
குறிய மாண் யுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது
என்று இப்படி பத்தும் பத்தாக பர அவர விபாக போதன பரம சாஸ்த்ரமான திருவாய்மொழியை
முன்பே அருளிச் செய்து அருளின தேவரீர்

இப்போது திரு அத்யயன உத்சவ வ்யாஜ்யத்தாலே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி
திருமஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதி காம்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில் உகத நிர்தோஷ சாஸ்திர சித்தமான அர்த்த தாத்பர்ய சம்சய மநாக்களை
லப்த விஸ்வாச யுக்தராம்படி சசேல ஸ்நான பூர்வகமாக சப்த கர்மத்தினாலே தீஷித்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

———————————————————————————–

திரு அத்யயன உத்சவ ஐந்தாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

ஸ்ரீ மன் ஸ்ரீ சடகோப சம்ப்ரதி பவான் பூர்ண ப்ரவாவோத்தராம்
கீதிம் காதும் உபக்ரமன் ஸூ விஹிதஸ் நா நக்ரியோ ராஜதே
சத்யம் மாம் ந ஜகாதி ஸ ஷணமபி ச்நேஹாத் குருங்காதிப
சித்தே மே வ சதீதி வாச முதிதான் உத்தர்த்தம் இச்சந்நிவா –

நாயந்தே ! நாயந்தே !
த்ரைவித்ய வ்ருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வவித பந்து பூதமாய்
அசரண்ய சரண்யமாய் இருக்கையாலே
மேவினேன் அவன் பொன்னடி -என்கிறபடியே சரணவரண அர்ஹமான சரண யுகளமும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
ஜ்ஞானத்வந்த கதிதி வர்த்தகமான ஜா நுத்வந்த்வமும்
சாருக்களான ஊருக்களும்
பத்தலேசமான மத்ய சௌந்தர்யமும்
அஷிப்ரியா வஹமான குஷி பிரதேசமும்
ஆவர்த்த ரூபமான திரு நாபியும்
அதி விசால பீநமாய்-அநேக பூஷித பூஷிதமாய் -வகுள தாம விராஜிதமான வஷஸ்தலமும்
பஜதாம பயதமான புஜ காந்தியும்
க்ரமுக தருண க்ரீவை போலே பந்துரையான கந்தரையும்
ஸூ வர்ண குண்டல மண்டிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபகாரிகளான சிபுக கபோலங்களும்
அருணராக விமோசகமான அதரராகமும்
கந்தர்ப்ப மத ஹரமான மந்த ஸ்மிதமும்
பாசா மநோ ஹரமான நாஸா வலியும்
கிருஷ்ண ராக சஹிதமாய் ஸ்ருத்ய வலம்பி களான திருக் கண்களும்
லோலாயதமான ப்ரூ லதா யுகமும்
அர்த்த சந்திர தளாயுதமான அளீகதேசமும்
அதில் அம்ருதச்யுதி என்னாலான திரு நாமமும்
திமிர கோசமான கேசபாசமும்
ஆக இப்படி பாதாதி கேசாந்தமான அவயவ சோபையாலும்
பரமார்த்த போதகையான ஜ்ஞான முத்ரையாலும்
ஸ்ரீ மான் என்றும் ஸ்ரீ சடகோபன் என்றும் சொல்லப் படுகிற தேவர்

இப்போது நம்பியினுடைய திருவாய் மொழியைப் பாடி அருளுவதாகக் கோலி
சக்ரமமாகத் திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில்

அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பியே -என்று
குருங்க ஷேத்திர வாசியான பூர்ணாபி நாதன் என்னுடைய ஹிருதயத்திலே சச்நேஹமாக நித்ய வாஸம் பண்ணி
என்னை ஒருக்காலும் விட்டு அகலகில்லேன் என்று
தேவரீர் அருளிச் செய்து அருளின வசனத்திலே
அவிஸ்ரம்ப புத்திகளுக்கு
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் -என்று
சொல்லி சபதம் பண்ணிக் கொடுக்க எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

————————————————–

திரு அத்யயன உத்சவம் -ஆறாம் திருநாள் திரு மஞ்சன கட்டியம் –

புரா லோகம் புக்த்வா புநரபி நிவிஷ்டம் பஹூ குணம்
பரா பாவ்யாப் தாங்கம் விபுல மகிலாத்மா நமமலம்
க்ருதாவாசம் தேவம் தரணி திலகே வேங்கட கிரௌ
சடரோத்ய ஸ்நாநம் சரண முபகந்தும் வித நுஷே –

நாயந்தே ! நாயந்தே !
அச்யேசானா ஜகதோ விஷ்ணு பத்னீ –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ரீர நபாயி நீ-என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்வாமிநியாய -உனக்கு ஏற்கும் -யென்னும்படியாய் -தனக்கு ஹிருதய காமினியாய்
மலர்மகள் -என்றும் -மலர்ப்பாவை -என்றும் -தாமரை மங்கை என்றும்
பூவின் மிசை மங்கை -என்றும் சொல்லுகிறபடி -பங்கயத்தில் பரிமளத்தை பருக்கை யற வடித்து
பாவையாக வகுத்து மங்கைப் பருவத்தில் மங்கையாய் -வாஸம் செய் பூம் குழலாள்-என்கிறபடியே
சர்வகந்த -என்கிற வாசத் தடத்துக்கும் வாஸம் செய்யுமதான கேசத்தை உடையளாய்
விதி தஸ் ஸ ஹி தர்மஜ்ஞ் சரணாகத வத்சலா மித்ரமௌபிகம் கர்த்தும் ராமஸ் ஸ்தானம் பரீப்சதா-இத்யாதிப்படியே
அவிஹிதசாரி யாகையாலே அஹிதனானவன் விஷயத்திலும் அத்யந்த ஹித பாஷிணியாய்
ப்ரியம் ஜன மபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம் ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதமிவ -என்கிறபடியே

ஏகாஷீ எககர்ணீ முதலான துர் ஜனங்கள் உடைய தர்ஜனங்களாலே
பத்துக்கோடி செந்நாய்களால் சுற்றப் பட்ட மான்பெடை போலே தான் பட்டது ஒன்றையும் பாராதே
பவேயம் சரணம் ஹிவ -என்றும்
தா ஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயாமீஹ துர்பலா -என்றும்
விதேயா நாஞ்ச தாசி நாம் க குப்யேத் வானரோத்தம -என்றும்
கார்யம் கருண மார்யேண் ந கச்சின் ந அபராத்யதி -என்றும் சொல்லுகிறபடியே
புருஷகாரிகள் ஆனவர்கள் விஷயத்திலும் புருஷகார பரையாய்

ஸ்ரீர்தேவி பயசஸ் தஸ்மாத் துத்திதா -என்றும்
செழும் கடல் அமுதினில் பிறந்தவள் என்றும்-சொல்லுகிறபடியே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதான பெரிய பிராட்டியார் அனபாயினியாய் இருக்கச் செய்தேயும்
அபாயாதி சங்கையாலே-இறையும் அகல கில்லேன் -என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும்படியான வடிவை உடையவனாய்
உலகமுண்ட பெரு வாயா இத்யாதிப்படியே பிரளய அபி பூதையான பூமியை ரஷித்து இருக்கச் செய்தேயும்
ரஷணத்தில் அபிவ்ருத்தமான அபி நிவேசத்தையும் ரஷண அநு குணமான குண கணத்தையும்
ரஷகத்வ ப்ரகாசகமான விக்ரஹத்தையும் உடையனாய்
சௌகுமார்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சம்ஸ்ரித சத்தா தாரகனாய்
உலகுக்குத் திலதமான திரு வேங்கட மா மலையிலே -வட மா மலை யுச்சி என்னும்படி
அதன் உச்சியிலே பச்சை மா மலை போல் நிற்கிற நச்சு மா மருந்தான அச்சுதனை அனுபவித்து
நிரபயமான உபாயத்தை பிரார்த்தித்து அருளின தேவரீர் இப்போது திரு அத்யயன உத்சவ அங்கமாக
திவ்ய ஸ்ரகம்பர பரிஷ்கரண அங்க ராகாதிகளால் அழகிய திரு மேனியை அலங்கரித்துக் கொண்டு

நல்லார் நவில் குருகூரிலே எல்லாருடைய பொல்லாங்குகளையும் போக்கி –
பயன் நன்றாகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வதாகப் புறப்பட்டு அருளி
அதி விலாசத்துடனே உலாவி யருளி -மீண்டு எழுந்து அருளி
சாம்சாரிக சகல தாபங்களையும் மாய்க்குமதான வாய்க்கும் தண் பொருநலிலே தெளிந்து எழுந்த நீரிலே
திரு மஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில் –

த்வயேன மந்த்ர ரத்நேன -என்கிறபடியே தந்திர சித்தமான மந்திர ரத்னத்திலே பூர்வ வாக்ய பிரக்ரியையாலே
அகலகில்லேன் -என்று தொடங்கி
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சாபராத சேதனர் உடைய சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து
சமாஸ்ரயிப்பிக்கும் புருஷகார நித்ய யோகத்தையும்
சமாஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான சௌலப்யாதி சத்குண சாஹித்யத்தையும் அருளிச் செய்து
ஆஸ்ரயணத்துக்கு ஆகாங்ஷிதங்களான-ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும் ஆவிஷ்கரித்து
ஆஸ்ரயணத்துக்கு அடைந்த விஷயமான அவன் துயர் அறு சுடர் அடிக் கீழே அமர்ந்து புகுந்து
இப்படி பக்தி யுபாயத்திலே சக்தி ஹீனர்க்கும் முக்தி யுபாயமாய் விதிக்கப்பட்ட ஸ்வ சித்த உபாய நிஷ்டையை
உக்த்ய அனுஷ்டானங்களாலே வ்யக்தமாக்கி அருளிச் செய்தேயும்

அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே
இவ்வர்த்தத்தில் மகா விஸ்வாச பஞ்சகமான சங்க அவகாச லேசங்களை யுடைய சமஸ்த சேதனர் யுடையவும்
சம்ரஷண விஷயமான
தேவருடைய சௌஹார்த்தாதிசயத்தாலே
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருதோசயம் தார யேந்தரம் -என்கிறபடியே
சக்ருத் கரணீயமாய் இருக்கச் செய்தேயும் போக்யாதிசயத்தாலே அசக்ருதா வ்ருத்திக்கு யோக்யதை யுண்டாய் இருக்கையாலே
திரு வேங்கட மா மலையிலே சென்று சேர்ந்து திருக் குருகூர் அதனுள் பரன் அடிக் கீழ் மீளவும் அமர்ந்து
சரணம் புகுவதாக கோலி ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————————————

திரு அத்யயன உத்சவத்தில் ஏழாம் நாள் திரு மஞ்சன கட்டியம் –

ஷீராப்தே ரங்க நாம் நா சஹ விதி சதநம் ஸ்ரீ விமாநேன கத்வா
ரூபேண ஸ்வேன ஸார்தம் ஸூ சிரமத பு வீஷ்வாகு புர்யா முஷித்வா
மத்யே காவேரி ஸூ ப்தம் பணி நிதத இஹ த்வத்க்ருதே ரங்கராஜம்
மத்வா காதும் சடாரோ அபி ஷவ விதி முகைஸ் த்வாமி வா லங்கரோஷி –

நாயந்தே ! நாயந்தே !
பக்தி பிரபாவ பவதத்புத பாவ பந்த சந்து ஷித ப்ரணய சார ரசௌக பூர்ண – என்றும்
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்தவ கல்பராய் -த்ரைவித்ய வ்ருத்த ஜனத்துக்கும்
சாத்விக ஜனத்துக்கும் அசரண்ய ஜனத்துக்கும் சிரோ பூஷண சம்பத் சரண்யமாய்
மாதா பித்ரு பரப்ருதி சர்வவித பந்துவுமான சரண நளின யுகளத்தை யுடையரான தேவர் இப்போது
திரு நஷத்ர உத்சவ தீஷிதராய்
கரசரசி ஜத்ருத கௌதுகராய்
நிரவதிக சௌந்தர்யாதி கல்யாண குண கண நிதியான திவ்ய மங்கள விக்ரஹத்தை
சகல மநுஜ நயன விஷயமாக்கிக் கொண்டு புறப்பட்டு உலாவி யருளி மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது எங்கனே என்னில் –

வைகுண்டே து பரே லோகே -என்கிறபடியே பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸூ த்த சத்வ மயமாய் ஸ்வயம் பிரகாசமாய் -நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இது
பக்த சேதன ஜாதத்துக்கு தேச விப்ரக்ருஷ்டம் ஆகையாலே புக்த போகத்தில் நெஞ்சு செல்லாமல் என் செய்வோம் என்று ஊகித்துக் கொண்டு வ்யூஹித்து

அடையும் வைகுந்தமும் பாற்கடலும் -என்கிறபடியே படுக்கைப் பற்றான திருப் பாற் கடலிலே எடுத்து விட்டு
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று
நிதாநஞ்ஞர் யீடுபடும்படி பவாப்தி மக்நரான சம்சாரிகளை உத்தரிப்பிக்கைக்காக மகாபதி மத்யே பள்ளி கொண்டு அருளின இதுவும்
அதி சயித பாகதேயரான விதி சிவ சனகாதிகளுக்கு லபிக்குமதாய்-
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடர்க்கு கண்ணுக்கு விஷயாகப் பெறாமையாலே அந்த ஜல சயனத்தை விட்டு
ஸ்தல சயனத்தை விரும்பி -பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் -என்கிறபடி
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயிலுவதாக கோலி எழுந்து அருளி இருக்கிற அளவில்

சதுர்முக தப்பல நிர்வஹணார்த்தமாக ஸ்ரீ ரெங்க விமானத்தோடு ஸ்வ அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு
ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளின பின்பு இஷ்வாகுவினுடைய தபோ வ்யாஜ்யத்தாலே
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோதியை என்னும் அணி நகரத்திலே எழுந்து அருளி இருந்து
இஷ்வாகு பிரப்ருதி தசரத பர்யந்தமான ராஜாக்களாலும்
தயரதர்கு மகனான தம்மாலும் அர்ச்சிதராய்
ராமாவதார சரமத்தில் -ஸ்ரீ மத் ரங்கம் மஹத்தாம சத்த்வஜம் சபரிச்சதம் பிரதத்தம் ராஷசேந்தராய ப்ரியாய ப்ரிய காரிணே –
என்கிறபடியே செல்வ விபீடணற்கு வேறாக நல்லன் ஆகையாலே
மின்னிலங்கு பூண் விபீடன நம்பிக்கு கோயில் ஆழ்வாரோடு தம்மை உபகரித்து அருள
அவரும் தம்முடைய படைவீடான இலங்கையை நோக்கி எழுந்து அருளுவித்துக் கொண்டு போகா நிற்க-

கங்கையில் புனிதமாய காவேரி நடுவில்
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தீர பிரதேசமான புளினத்திலே எழுந்து அருளிவித்த அனந்தரம்
அவராலும் எழுந்து அருளுவிக்க ஒண்ணாதபடி அவ்விடத்திலே திரு உள்ளம் வேர் பற்றி
மன்னுடைய விபீடணனை அனுக்ரஹித்து -மதிள் இலங்கை ஏறப் போக விட்டு
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
பரத்வம் போலே ஆஸ்ரியிப்பார்க்கு அந்தரம் பட்டு இருத்தல்
வ்யூஹம் போலே கடல் கொண்டு கிடத்தல்
விபவம் போலே தாத்காலிகமாய் இருத்தல்
அந்தர்யாமி போல் அப்ரத்யஷம் ஆதல் செய்கை இன்றிக்கே
வடிவுடை வானவர் தலைவனே -என்றும்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா காகுத்தா கட்கிலீ -என்னும்படி பரத்வாதிகளில் உள்ள
பரதவ சௌலப்யாதிகளை பிரகாசிப்பித்துக் கொண்டு

அன்போடு தென் திசை நோக்கி பக்கம் நோக்கி அறியாதே தேவரை கடாஷித்துக் கொண்டு
பள்ளி கொண்டு அருளுகிற முகில் வண்ணரான பெரிய பெருமாளை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்து சொல் மாலை ஆயிரமும் அருளிச் செய்து அருளின தேவரீர் இப்போது
கங்குலும் பகலும் பாடி அருளுவதாக திரு உள்ளம் பற்றி
பர்த்ரு போகார்த்தமாக குளித்து ஒப்பித்துச்செல்லும் பார்யை போலே
என் திருமகள் சேர் -என்கிறபடியே விஸ்வ பதியான அழகிய மணவாளர்க்குத் திரு என்னும்படி லஷ்மி சத்ருசர் ஆகையாலே
அலங்க்ருத சர்வ காத்ரராய்ச் செல்ல வேணும் என்று ததார்த்தமாக
திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

——————————————————

திரு அத்யயன எட்டாம் நாள் உத்சவ திரு மஞ்சன கட்டியம் –

பராவரே சாங்க்ரி சரோஜசேவா பராதிராகாதி தரான் விஹாய
புரேப்சிதா மத்யே ததங்க்ரி வ்ருத்தம் சரன் சடாரே தநுஷே அபிஷேகம்

நாயந்தே ! நாயந்தே !
தேவிமார் ஆவார் திருமகள் பூமி -என்கிறபடியே
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மணமகள் ஆயர் மடமகள் -என்கிற தேவிமார் மூவரையும் உடையனாய் –
மற்று அமரர் ஆட்செய்வார் -என்கிறபடியே ஏழ் உலகும் தனிக் கோல்செல்ல வீற்று இருந்து அருளுகிற சேர்த்திக்கும்
போற்றி என்று ஆட்செய்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
மேவிய உலகம் மூன்றவை யாட்சி என்கிறபடியே அந்த நித்ய சூரிகளோபாதி ப்ரகாரதயா சேவ்யமான ஆகாரத்தாலே
தனக்குத் தகுதியாய் இருக்கிற லோகத் த்ரயத்துக்கும் ஏக நாயகனாய்
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் -என்கிறபடியே
ஆஸ்ரித அதீனமான ஸ்நான ஆசன சயநாதிகளை உடைய சர்வேஸ்வரனுடைய சௌஹார்த்த விசேஷத்தாலே
சஹஜ சார்வஜ்ஞ்யாதி சத் குண சமேதராய் –

என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -என்கிறபடியே
திறத்துக்கே துப்புரவாம் திருமாலான அவன்
தேவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்த சீரை
இறைப் பொழுதில் காலம் பருகி இருக்கச் செய்தேயும் அதில் ஆராமையாலே
இன் கவி பரம கவிகளால் தன் கவி தான்தன்னைப் பாடுவியாது -என்கிறபடியே
வியாச பராசர வால்மீகி ஸூ க சௌநகாதிகளும்
முதல் ஆழ்வார்களும் ஆகிற பாலேய் தமிழரும் பத்தருமான பரம கவிகளாலே பாடுவியாதே
தேவரை ஆம் முதல்வன் இவன் என்று நா முதல் வந்து புகுந்து தூ முதல் பத்தரான
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகளை வாய் முதல் அப்பனாய்தப்புதல் அறச் சொன்ன உதவிக் கைம்மாறு
என்னுயிர் என்ன உற்று எண்ணில்-

இயம் சீதா மம ஸூ தா சஹாதர்ம சாரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா-என்கிறபடியே
வேந்தர் தலைவனான சனகராசன் எனது பெருமை இராமனுக்கு
காந்தள் முகிழ் விரல் சீதையை கடும் சிலை சென்று இறுக்க உதவிக் கைம்மாறாக கைப் பிடித்தாப் போலே
தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் என்கிறபடியே
உபகார ஸ்ம்ருதி கொண்டும் மார்பும் தோளும் பணைக்கையாலே
ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த போக்யதையும்
அனன்யார்ஹ சேஷத்வத்தையும்
அதனுடைய பரா காஷ்டையான ததீய பாரதந்திர பரம புருஷார்த்தையும்
அவனே பிரகாசிக்கப் பெற்று உடையீர் ஆகையாலே
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
அவன் அடியாரான சிறு மா மனிசர் அடியே கூடும் இது வல்லால் பாவியேனுக்கு உறுமோ
என்று அதிகரித்ததான அந்த புருஷார்த்தத்தில் ஆதார அதிசயத்தையும்
வ்யதிரிக்தமான விஷயங்களில் வைத்ருஷ்ண்யத்தையும் விசதமாக்கி அருளின தேவர்
இப்போது-திரு அத்யயன வ்யாஜத்தாலே

வரையார் மாட மன்னு குருகூரில் திரு வீதிகள் தோறும் சிறப்புடனே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோலத்த பவளச் செவ்வாய் செந்தாமரைக் கண் என்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாய் வாய்ப்புலன் கொள் வடிவு என்மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோட அருளில் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -என்று
ஆபத்சகனானவன் திருவடிகளில் அகில கரணங்களாலும் உண்டான நிகில கைங்கர்யங்களுமே
அந்த பாகவதர்களுக்கு உகப்பு ஆகையால் பரந்த தெய்வமும் பல்லுலகும் அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்த
திருக் குருகூர் அதனுள் பரன் திறத்தில் அந்தக் கைங்கர்யத்தைச்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருள இருக்கிற இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவத்தில் ஒன்பதாம் திருநாள் திருமஞ்சன கட்டியம் –

ந்யசன பஜன பாதாவாப்தி வாங் மாத்ர காந
பிராணி பத கராணாம் முக்தி ருக்தாசபி தஸ்யாம்
அபி ருசிர ஹிதா நாம் கிருஷ்ண வச்ச க்தி யோக்யம்
சட மதன ஜநா நாம் ஸ்நாசி சரவாக சாந்த்யை-

நாயந்தே ! நாயந்தே !
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை -இத்யாதிகளாலே
நல்ல புதல்வர் ,மனையாள் ,நவையில் கிளை இல்லம் மாடு இவை யனைத்தும் அல்ல வென்று
ஔபாதிக பந்துக்கள் உடைய அபந்துத் வாதிகளையும்
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் கண்டீர் துணை-இத்யாதிகளால்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாய்த் தாய் தந்தையரும் அவரே -என்று
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக பந்துத்வாதிகளையும் உபதேசித்து அருளி-

இப்படி அசேவ்ய சேவாதிகளான அப்ராப்த விஷய பிராவண்யம் கழிகையாலே
அநந்த சாகமாக நிரந்தர அபிவ்ருத்தமான அபி நிவேச அதிசயத்தை யுடையராய்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்கிறபடியே விருத்தமான நரத்வ ஹரித்வங்களை பொருந்தின திருத்தத்தாலே
அரி பொங்கிக் காட்டும் அழகு என்ற சீரிய சிங்கமதாகிய வடிவைக் கண்ட போதே
பயாக்னி கொழுந்திலே தும்பிப் பதம் செய்த வாள் அவுணன் உடைய உடலை வாடின கோரை கீறினால் போலே வளர்ந்த
வாள் உகிராலே அளைந்த கோளரியான அவுணன் உள்ளம் பொருந்தி உறைகிற விளங்கும் சுடர்ச் சோதி உயரத்தொருத்தா என்றே யதுவது என்று
ஒருபடிப் படத் திரு உள்ளம் பற்றி நாளேல் அறியேன் எனக்கு உள்ளன வென்று நித்ய கைங்கர்யத்தை கழித்து-

வைத்தநாள் வரை எத்தனை என்கிற பிரச்னத்துக்கு உத்தரம் தத்தமாவதற்கு முன்னே சைதில்யம் பிறந்து
மல்லிகை கமழ் தென்றலும் மாலைப் பூசலுமாய் மயங்குகையாலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கிறபடியே
சரண -சரணவரண பலசித்தியை திருக் கண்ணபுரத்து தரணியாளன் கருணையாலே
மரணாவதியாக்கி தந்தருளப் பெற்றுடையீர் தேவர்
இப்போது திரு அத்யயன வ்யாஜத்தாலே புறப்பட்டு உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

காலை மாலை கமல மலரிட்டு மாலை நண்ணித் தொழுது எழுமின் -என்று அர்ச்சநாதி அங்க யுக்தமான பக்தியையும்
அதில் அசக்தருக்கு -தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் சரணமாகும் -என்று -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபையான பிரபத்தியையும் –
அதில் அசக்தருக்கு -திருக் கண்ணபுரம் செல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று அர்ச்சா ஸ்தலத்தின் உடைய உச்சாரண மாத்ரத்தையும்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் -என்று
பூர்வ உகத சர்வ உபாயங்களிலும் அந்வய ஸூன்யர் ஆனவர்களுக்கு ந்ருத்த பிரமாண உக்தமான
இப்பத்துப் பாட்டின் உடைய கீரத்த நத்தையும்
துர்ஜன பீடிதரான அர்ஜுனாதிகளுக்கு தூதனாய் கீதாச்சார்யனைப் போலே
அதிகார அனுகுணமாக நெறி எல்லாம் எடுத்து உரைத்து இருக்கச் செய்தேயும்
அதில் ஆசை இன்றிக்கே ஈசி போமின் என்பர் அளவிலே நாசமான பாசத்தில் நலிவு படுகிற நீசரான
அடியோங்கள் உடைய பிரபல பாப நிபந்தனமான
சகல தாபங்களையும் போக்கி விமலர் ஆக்குகைக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————–

திரு அத்யயன உத்சவ பத்தாம் திரு நாள் திரு மஞ்சன கட்டியம் –

பர்யாயேண சமேதிதா பகவதா பக்தி பராயா பரம்
ஜ்ஞானம் தே பரமா ச பக்திரிதி யா தத் ப்ராப்திரூபா தசா
தச்சங்காம் சடகோப சம்சமயிதும் சப்ரத்யயம் பிராணி நாம்
சம்ஸ் நாத கரிய யாதசாம் விசத யந்தாம் தாமி வாபாசிபோ.

நாயந்தே
த்ரைவித்ய வருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சனாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வ வித பந்து ரூபபூதமுமாய்
அசரண்ய சரணமுமாய் இருக்கையால்

மன்னுயிர்கட்கு எல்லாம் அரனமான சரண பங்கஜங்களும்
நளின நாள லலிதங்கள் ஆகையாலே அவற்றைப் போலான இணைக் காலான கணைக் கால்களும்
யௌவன ப்ரகர்ஷ ப்ரருதோத்போதம் பொழு உத் பானுக்களான ஜானுக்கள்ளும்
கரிப்பிரவர கரங்கள் போலே உருக்களான ஊருக்களும்
கனகாசல தடி போலே இருக்கிற கடி காந்தி லோகாந்தையான படி காந்தையும்

வடபத்ர புடம் போலே ஸூ ந்தரமான துந்தி ஸ்தலமும்
சௌந்தர்ய சரிதாவர்த்த கர்தாபமாய் அதி கம்பீரமான நாபீ சரஸ் ஸூம்
நிரந்தர சஞ்சல புத்தி ஜனகமான மத்திய தேசமும்
அவிரளதரள விராஜிதமாய் அமுகுள வகுள அலங்க்ருதமாய் அதிதரா ஹார பூஷிதம் ஆகையாலே
அநவரத தாஹிச்தமான வஷஸ் ஸ்தலமும்

அவஞ்சகரான அகிஞ்சனருக்கு ஸ்வ ஸ்திதாயியான ஹஸ்த பத்மமும்
அரக்க சாமான தர்க்க ஜாலத்தின் உடைய மாநஹாரியான ஜ்ஞான முத்ரையும்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதுவான க்ரீவா பிரதேசமும்
அகவாயில் அனுராகத்துக்கு வாய்த்தலை போலேயாய்முகிழ் விரிகிற பங்கயமனைய செங்கனி வாயும் திரு முத்து நிரையும்
மகரம் தழைக்கும் தளிரோ என்கிற வர்ண நிர்ணாயகமான கர்ண பாசமும்

சித்தம் சிறை கொள்ளுமதான முத்தின் குழையும்
கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்கிற உபமானசம்சயத்துக்கு உதாசிகையான நாசிகையும்
கர்ணாந்தர பிரத்யபேஷையாலே சரவண குதூஹலங்களாய் பரவண ரஷண தீஷிதங்களான ஈஷணங்களும்
நயன பங்கஜங்களை வளைந்து படிகிற மதுகர நிகரங்கள் போலே கருத்தை வருத்துமதான திருப் புருவங்களும்
நாள் மன்னு வெண் திங்கள் போல் கோள் மன்னி ஆவி யடுகிற திரு நுகிலும்

ருக்ணே தோகே சர்வ ஜனனீ தத் கஷாயம் பிபந்தீ -என்கிறபடியே கருநாடு காடு எழச் சாத்தின திரு நாமமும்
சம்சார துக்கார்க்க தாப நாசகரமான வாசத் தடம் என்று பேசத் தகுதியான திரு முக மண்டலமும்
வக்தரமாகிற சித்ர பானுவுக்கு பரபாகமாய் அதி காளிகையான அளகாளிகையும்
சேஷித்வத்துக்கு தலையான தண் துழாய் பொன் முடி போலே சேஷத்வத்துக்கு அடியான மணி முடியும்

ஆக இப்படி ஆராகிலும் நீராய் அலைந்து கரையும்படி
ப்ராவண்ய ஜனகமான லாவண்ய ராசி ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற தேவரீர் இப்போது
திரு அத்யயன உத்சவ வ்யாஜத்தாலே

குன்றம் போலே மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் உலாவி அருளின நெடு வீதிகள் தோறும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
பொருநல் சங்கணித் துறையில் துகில் வண்ணத் தூ நீராலே திரு மஞ்சனம் ஆடி அருளி ஸ்நானா சனத்திலே
நாநாவித கந்த புஷ்பாதிகளால் அலங்க்ருதராய் எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

ஜ்ஞானாதி கல்யாண குண கண பூஷிதனான சர்வேஸ்வரன் நிதா நஜ்ஞர் ஈடுபடும்படி ஆமத்தை அறுத்து
பசியை மிகுத்து சோறிடுவாரைப் போலே
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிறபடியே-அஜ்ஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி அருளி
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளி
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்து -என்றும்
காதல் கடலில் மிகவும் பெரிதால் -என்றும்
காதல் உரைக்கில் தோழி மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே
தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொள்ளும்படி

பரபக்தி பரஞான பரம பக்தி ரூபேண அந்த பக்தியையும் அபி வருத்தை யாக்கி
என்னை அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படி
கடல் போன்ற ஆதாரத்தோடு சோந்து தாபங்களை ஹரித்து
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -என்னும்படி

ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமான பர்வ க்ரமேண விளைத்த சர்வ அவஸ்தைகளையும்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்த அளவில் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்று
தேவர் தெருள் கொள்ள அருளி இருக்கச் செய்தேயும்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே இவ்வர்த்த விசேஷமாக சந்தேஹித்து இருக்கிற
மந்த மதிகளுடைய சங்கா வாகாச லேசங்களை சப்ரத்யயமாக
அவ்வோதசைகளிலே அனுஷ்டானத்தாலே விசதமாக்கா நின்று கொண்டு சமிப்பித்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்து எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

———————————————————-

வீடுவிடைத் திருமஞ்சனக் கவி

மேசம் கேசாதி தேவாவிதித நிஜபதம் வ்யூடம் ஆத்யாமரேந்தரம்
ச்வேசம் ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய க்ருத்வா
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச லப்த்வா
கேஹம் தஸ்மாத் க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை

நாயந்தே நாயந்தே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேத்னாய்
நித்ய ஸூரி பரிஷம் நிரந்தர சேவ்யமான சரண நளிதனாய்க் கொண்டு
நித்ய ஆனந்த நிர்பரனாய் செல்லா நிற்கச் செய்தே

ச ஏகாகீ ந ரமேத -என்று உண்டது உருக்காட்டாதே அசித் விசிஷ்டமான சேதன சமஷ்டி பக்கல்
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -என்கிற படியே பரம காருணிகனாய்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண அனுகூலமான கரண களேபரங்களை கொடுக்கக் கோலி-

ப்ரஹ்மாதி ஷூ ப்ரவீ நேஷூ நஷ்டே லோகே சராசரே
ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர -என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமிலா யன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றபடி
சதுர்முக பிரமுக பஹூ முக சிருஷ்டியைப் பண்ணி
ஸ்ருஷ்டரான சேத்னர்களுக்கு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு சாஸ்தரங்களான நேத்ரங்களை கொடுத்து இருக்கச் செய்தேயும்

அஜ்ஞ்ஞான ஆர்ணவ மகனாரான இவர்களை உத்தீர்ணா ஆக்குகைக்கு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயாப்பிறவி பிறந்து -என்கிறபடியே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து அருளியும்

இப்படி பண்ணின அவதாரங்கள் தானும் தத் காலி நர்களுக்கே உஜ்ஜீவன மாத்ர சேஷம் ஆகையாலே
தத் அனந்தரகாலீ நரரான அச்மதாதி சகல பாமர ஜன உஜ்ஜீவன அர்த்தமாக
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூரிலே வீடில் சீர்ப் புகழ் ஆதிபிரானாய் மேவியும்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரானே நின்றும்

நிலை அழகிலே கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
நிலையார நின்றான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்மாத் பரன் என்னும்படியை அறுதி இட்டு
ஈடுபட்டு அறிவுடையார் அடங்கலும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி

நல்லார் நவில் குருகூரிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கிற குறிய மாண் உருவாகிய
நீள் குடக் கூத்தனை பாடி அருளுவதாக சங்கல்பித்து
ஸ்தோத்ரம் வேத மயம்கர்த்தும் தத்ர திராவிட பாஷயா தத்ர வேதாஸ் சமஸ்தாஸ் ச திராவிட த்வாம் உபாகத -என்கிறபடியே

ருக் யஜூஸ் சாம அதர்வணங்களை -திருவிருத்தம் முதலான திவ்ய பிரபந்த சதுஷ்ட்யமாக்கி
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறையை அதிகரித்தார்க்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே -என்றும்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிக பல பிரதான சஹிதமாக விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி அருளின தேவர்

இப்போது சாத்விக ஜன சார்த்தங்களை க்ருதார்த்தராம்படி திவ்ய உத்சவ வ்யாஜத்தாலே
கோயில் நின்றும் புறப்பட்டு அருளி விவித விதான புஜ்ஞ ரஞ்சிதமாய் செழு மா மணிகள் சேரும்
திரு மா மணி மண்டபமான இத் திரு ஓலக்கத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஜ்ஞன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு ஏறி அருளி
பொங்கிள யாடை அரையில் சாத்தி – திருச் செய்ய முடியும் ஆரமும் படையுமான திவ்ய அலங்காரத்துடனே
அபிஷேக ஜலார்த்த காத்ரராய்
சாத்விக ஜன நேத்ரோத்வச காரராய் -ஆர்த்த வசன பூஷண பூஷிதராய் எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

மேசம் மா -என்ற திரு நாமம் உடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகனாய்
கேசாதி தேவாவிதித நிஜபதம் –
க என்றும் ஈசன் என்றும் சொல்லப் படுகிற ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சர்வ தேவதைகளாலும்
அறிய அரியதான ஸ்ரீ வைகுண்டத்தை இருப்பிடமாக உடையவனாய் –
வ்யூடம்
வி -பஷி வாசகம் -த்ரயீமயனான திருவடியை வாஹனமாகக் கொண்டு
ஆத்யாமரேந்தரம் –
முன்னை அமரர் -என்கிறபடியே ஆத்யரான அமரர்கள் அதிபதி யாய்
ச்வேசம் –
ஆத்மேச்வரம் -என்கிறபடி தனக்குத் தானே நியாமகனாய்

ஆக இப்படி
ஸ்ரீ யபதித்வ -பரமபத நிலயத்வ -கருட வாகனத்வ -ஸூரி போக்யத்வ –
நிரந்குச ஸ்வா தந்த்ரங்கள் உடன் கூடிய சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை
ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய
க்ருத்வா –
அவாவில் அந்தாதி -என்கிறபடியே
தேவரீர் உடைய பக்தி பிரகர்ஷத்தாலே வழிந்து புறப்பட்ட சொற்களாலே வாயாரப் புகழ்ந்து
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச –

அவ்வளவும் அன்றிக்கே
பெரியாழ்வார் உடைய குடல் துவக்காலே தேவரீருக்கு திரு மகளாரான ஆண்டாள் உடைய சங்கத் தமிழ் மாலையான
திருப் பாவையை பாடி அருளி
தேவரீர் உடைய திவ்ய பிரபந்த ஸ்ரவணத்தாலே ப்ரீதனான அவனை மிகவும் பிரியப் படுத்தி
லப்த்வா கேஹம் தஸ்மாத் –

திரு அத்யயன உத்சவ அர்த்தமாக
பத்னீ பரிஜனாதிகள் உடன் தேவரீர் உடைய திருப் புளிக் கீழ் வீட்டிலே
பத்து நாளும் எழுந்து அருளி இருந்து
மேவி உறை கோயிலிலே ஏறி அருளுவதாக உத்யோகித்து அருளிய பொலிந்து நின்ற பிரானை
ராஜ நீதியை அனுசரித்து நின்று
ஒரு ரசத்தை விளைப்போம் என்று பார்த்து
வீடு தர வேண்டும் என்று அபேஷித்து
சசானமாகப் பெற்று
க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ –

ஆக இப்படி அத்தலைக்கும் சர்வ பிரகார சாவஹர் ஆகையாலே க்ருதார்த்தரான தேவரீர் இப்போது
ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை –
ஸ்நான வ்யாஜத்தாலே படி களைந்து மதகு திறந்தால் போலே ஒரு மடை கொள்ள ப்ரவஹிக்கிற தேவரீருடைய
திருமேனி அழகு வெள்ளத்திலே
முழுக்காட்டி அடியோங்கள் உடைய சாம்சாரிக சகல தாபங்களும் ஆறுவதாக
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதுரகவி பிரப்ருதிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா உபமான அஷ்டகம் —

November 24, 2014

ஸ்ரீ கோதா பிராட்டியார் விஷயமான ஸ்லோஹம்
நீராட்டம் உத்சவம் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள்
ஸ்ரீ பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்-

—————————————————————————————-

1 ஸ்ரீ கோதா பிராட்டியாரும் அன்னமும்

சன் மான சாப்ஜ ப்ரவணாம் சார அசார விவேகி நீம்
சத் கதிம் ஸூ த்த ரூபாம் தவாம் கோதே ஹம்சீம் பிரசஷதே–1-

தாமரை மலரில் வீற்று இருக்கும் —
சாதுக்கள் மனசில் தேவரீர் குடி கொண்டு அருளுகிறீர் -உம்மையே மனசாலே போற்றி புகழ்ந்து இருப்பார்
சாரமான பாலை பருகி அசாரமான நீரை நீக்கும்
அசாரம்-அல்ப சாரம் -சாரம் -சார தமம் -நீக்கி சார தமம் விஷயங்களையே காட்டி அருளி பிறந்தன்கள் அருளினீர்
நடை அழகு உண்டு -அந்த அந்தந்களுக்கும் நடை பயிற்றுவிப்பீர்-நல்ல நடத்தை கற்ப்பிப்பீர் –
தூய வெண்மையாய் இருக்கும் -சுத்த சத்வமயமாய் உள்ளீர்

—————————————————————————————-

2-ஸ்ரீ கோதா பிராட்டியாரும் சிந்தாமணியும்

தேஜோ மய ஸ்வரூபத்வாத் ஸ்ரீ மத் சேவித வைபாவாத்
சிந்தாமணி சமா கோதே தேசிகை தவமி ஹோச்யசே –2-

ஒளி மயமான ஸ்வரூபம்
தேவரீர் -துர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா -தேசிகன்
எம்பெருமானுக்கே ஒளி கூட்ட வல்ல தேஜஸ் உடையவராய் தேஜோ மயமாய் விளங்குகிறீர்
மார்பிலே இடையறாமல் அணியப் பெற்று இருக்கும் -வலப்பக்கம் ஸ்ரீ தேவி போல இடப்பக்கம் விடாமல் சேவை சாதிக்கிறீர்
வேண்டுவார்க்கு வேண்டுமவற்றைத் தரக் கூடியது
நீங்காத செல்வம் நிறைந்து என்றும்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வர் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும்
வேண்டுவார்க்கு வேண்டியவற்றை அருளுகிறீர்

——————————————————————————————

3- ஸ்ரீ கோதா பிராட்டியாரும் கற்பக வருஷமும் –

அநேக சாக உஜ்ஜ்வலீத ஸ்வரூபவாத் அநந்த போகி ப்ரிய வர்த்தகத்வாத்
ஸூ ரேச பூஸா ஸூ மன ப்ரதா நாத் ஸூ ரத் ருமேணாசி சமாத்ய கோதே –3

பற்பல கிளைகளை யுடைத்தாய்
ஒளி மிக்கதாய்
விரும்பியவற்றைக் கொடுத்து இன்புறச் செய்யும்
தேவேந்த்ரனும் சசியும் விரும்பும் புஷ்பங்களை தரும்
சாகைகள் உடைய வேத சாரம் திருப்பாவை -நாச்சியார் திருமொழி
புகழ் ஒளி வீசிக் கொண்டு
சேஷசாயி பெருமாளுக்கு இனியவளாய்
அமரர்கள் அதிபதியும் விரும்பி சூடிக் கொள்ளும் பூ மாலை சூடிக் கொடுக்கும் சுடர் கொடி

——————————————————————————————–

4- சூடிக் கொடுத்த நாச்சியாரும் சூரியனும்

சத் கோ விலாசேன தமோ ஹரத்வாத்
சமஸ்த சத்வந்தித மண்டலத்வாத்
பதமான நௌஜ்ஜ்வல்யகர ப்ரபாவாத்
பாஸீஹே கோதே ரவிதுல்ய சீலா

கதியாயிரம் இரவி
புறவிருளை நீக்கி -வேதம் அனைத்தைக்கும் வித்து -அஜ்ஞ்ஞனம் அகவிருள் போக்கி ஜ்ஞான ஒளி வீசி அருளுகிறீர்
சான்றோர் காலை மாலை சந்த்யா வந்தனம் -தேஜோ மண்டலம் உடையவராய் மண்ணுலகோர் எப்பொழுதும் வணங்கும்படி
தாமரை மலர்களை மலரச் செய்யும் -தாமரை போன்ற திருமுகம் உடைய அரங்கனை மலரச் செய்கிறீர்
அப்ரமேயம் ஹி தத்தேஜ

———————————————————————————————

5- ஆண்டாளும் சந்திரனும்

கலா நிதித்வாத் கமலாத் மகத்வாத் பவார்த்தி தாப ஷபண ஸ்வ சைத்யாத்
சதா மகா விஷ்ணு பதா நுஷங்காத் ஹிமாம் ஸூ துல்யா த்விமி ஹாசி கோதே

பதினாறு கலைகள் -ஆய கலைகள் 64 அறிந்தவள்
சலிலம் கமலம் ஜலம் -அமர கோசம் -கமலம் -தண்ணீர் -கடலைக் கடைந்த பொழுது தோன்றியவன்
அதனால் தண்ணீர் போன்று குளிர்ந்தவன்
தேவி தவம் அநு நீளயா சஹ மஹீ தேவயா சஹச்ரம் ததா
யாபி ஸ்தவம் ஸ்தன பாஹூ த்ருஷ்டி ப்ரிவ -ஸ்ரீ குணரத்ன கோசம் -26
கமலையான ஸ்ரீ மகா லஷ்மி தேவிக்கு அவயவ பூதை
தாபம் மனத்துயர் போக்கி -கடாஷத்தால் சம்சார அடிக் கொதிப்பு அறுத்து
ஆகாசத்தையே இருப்பிடமாக கொண்டு -பாதார விந்தங்களையே பற்றி கேசவ நம்பியை கால் பிடித்து நிற்கிறீர் –

——————————————————————————————-

6- ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்

சயாமாம் த்விஜாதி ப ஸூ தாம் ஸ்ரவணாபி ராமம்
மஞ்ஜூ ஸ்வ நாம் மத நமீச்வரஜம் பஜந்தீம்
கோதே குரோஸ் த்ரிஜகதாம் குணசாலி நீம் த்வாம்
லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி –

பசுமை நிறம் கொண்டதாய் இருக்கும்
முட்டை -குஞ்சு இரு பிறவி -அரசன் கருடன் பெண் -கிளி -விஷ்ணு சித்தன் திருக்குமாரி
அணி மழலைக் கிளி மொழி
மன்மதன் வாஹனம் -உம்பியையும் உம்மையும் தொழுதேன்
சாஷாத் மன்மதன் கண்ணனையே பாடி உகப்பித்த நீர் சூகாச்சார்யாருக்கு ஒப்பு

—————————————————————————————–

7-ஸ்ரீ கோதா தேவியும் காம தேவனும்

வ்ருஷப்ரியாம் விஸ்வ ஜனாகிலார்த்த
விஸ்ராண நோத்காம் விதி வாச வேட்யாம்
ஸ்ருதி பிரசன்னாம் ஸூ ரபிம் விசங்கே
ஸூ வஸ்தாம் மகார்ஹாம் பவதீம் து கோதே

வருஷ -மழை-பொழியச் செய்யும் இந்த்ரன் இடம் பிரியம் உள்ள சுரபி காம தேனு கொடை வள்ளல் -விஸ்ராணநம்
உத்கா -ஆர்வம் கொடுப்பதில் ஆர்வம்
கொடுத்து ஸ்ருதியில் விசுவாசம் உண்டாக்கி -ஸ்வர்க்கத்தில் இருக்கும் காமதேனு
யாகம் செய்பவர்களால் விரும்பப் படும் -நெய் பால் கொடுப்பதால்
கரியான் காளை திருமால் இடம் ஈடுபாடு
புருஷார்த்தங்கள் எல்லாம் வழங்கும் கோதா தேவி
ப்ரஹ்மாதி தேவர்களால் ஸ்துதிக்கப் படுபவள்
பர்த்தாவின் சந்நிதியில் உள்ளவள்
பத்னீ யஞ்ஞ சம்யோக -விஷ்ணு பத்னீ

——————————————————————————————-

8-நீராட்டத்தின் பயன்

கோதே ஸ்நாதாசி மாதஸ் த்வமிஹ நிகம சாஸ்த்ரோக்த மந்திர க்ரியாப்தம்
ஏதே நைவாதி பாபா வயமபி சகலா முக்த பாபா பவாம
லோகே த்ருஷ்டஞ்ச கர்மேத் ருசமிஹ சகலை ஸ்வ ப்ரஜோரோக சாந்த்யை
மாதா பீத்வா கஷாயம் தனய மத நிஜ ஸ்தன்ய தா நேன பாதி –

பிரபந்தங்கள் -தாய் பாலைக் கொடுத்து பிறவிப் பிணியைப் போக்கி அருளுகிறீர்
நீராடுவது நீர்
பாபங்கள் தொலைவது எங்களுக்கு
முலை வழியே ஔஷதம் அருளும் தாய் போலே நீர்
விந்தையிலும் விந்தை
ஆண்டாளும் அரங்கனும் நம்மை காக்கும் மிதுனம்

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத பிரான் பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் அனுபவம் ..ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

November 24, 2014

1-பாரோர் புகழ் மாலை –
க்யாதி லாப பூஜா அபேஷை அற மலர் நாடி ஆட்செய்ய -நாயனார்
மேலே 27 -பாட்டில் நாடு புகழும் பரிசினால்
வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -ஒழிவில் காலம் -பதிகம் பலன்
புகழ -மகிழ
பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ –
நாராயணனே நமக்கே பாரோர் புகழப் படிந்து பறை தருவான்
படிந்து -விதேயனாக
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
நம்முடைய பாக்ய அனுகுணம் என்று பூர்வர்கள்
எம்பெருமானார் – நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

————————————————————————–

2-உய்யு மாலை –
உய்யுமாறு எண்ணி
ஆறு வார்த்தை -திருக் கச்சி நம்பிகள் /கண்ணபிரான்
1-வதுவை வார்த்தை –வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் -5-10-2-
2–நெய்யுண் வார்த்தை -நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -5-10-3-
3-வெண்ணெய் வார்த்தை -ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்ட அழு கூத்தப்பன் -6-2-11-
4-நடந்த வார்த்தை -தேசம் அறிய ஒரு சாரதியாய் சென்று சேனையை நாம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை -செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -நாச் -11-10-
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை -கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

————————————————————————–

3-செல்வ மாலை -ஞானம்பக்தி செல்வம்
வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் -நான்கு முலைக்கண்கள்-சீர்த்த முலை பற்றி வாங்க
பகவத் ஆஞ்ஞா பரிபாலனம் -பிறந்ததே சிஷ்யர் உஜ்ஜீவனதுக்கு என்னும் நினைவு
சிஷ்யர்க வருந்தி கேட்க வர்ஷிதல்
கேட்காவிடினும் துர்கதி கண்டு சஹியாமை
வாய் விட்டு சொல்லாமல் தரிக்க மாட்டாமை
கீதாசார்யன் -அர்ஜுனன்
நாரதர் -வால்மீகி
பராசர பகவான் -மைத்ரேயர்
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்பட நீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப்பட நின்று மழை பொழியும்
குடம் -பாத்ரம் -ஆச்சார்யதயாபாத்ரம்

————————————————————————–

4-மகிழ் மாலை
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து
நீராட்டம் -ஐந்து பாசுரங்களில்
நீராடப் போதுவீர்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
கிருஷ்ண சம்ச்லேஷம் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்
காலை நல் ஞானத்துறை படிந்தாடி -திருவிருத்தம்
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய கதி இல்லை
என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்ய கேட்டிருக்கையாய் இருக்கும்
ஸ்வ ச்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று
பகவத் ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று
ஆச்சார்யனைத் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதி
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -மகிழ்ச்சி மாலை மகிழ்வு மாலை -என்னாமல் மகிழ் மாலை
என்பதால் ஆழிமழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –
ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி -74 சிம்ஹாசானாதிபதிகள் -மகிழ் மாலை மார்பினன் –

————————————————————————–

5-பிழை மாயும் மாலை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தத்ததிகம உத்தர பூர்வாகயோர் அச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் -ப்ரஹ்ம ஸூதரம்
உபநிஷத் -பூர்வ பாவம் உத்தர பாவம் நிர்த்தேசம் சொல்லாமல்
தத்யதா இஷிக தூலம் அக்னௌ ப்ரோதும் ப்ரோதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வ பாப்மான ப்ரதூயந்தே -என்று விநாசம் சொல்லி
யதா புஷ்கரபலேசா ஆபோ நா ஸ்லிஷ்யந்தே ஏவம் விதி பாபம் ந கர்ம ச்லிஷ்யதே -என்றும்
தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேன-என்றும்
பாபங்கள் ஒட்டாது என்பதை
சேர்த்து ப்ரஹ்ம சூத்ரத்தில் ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமிகள் அருளிச் செய்கிறார்
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்பகோடி சதைரபி -அனுபவித்தே கர்மங்களை தீர்க்க வேண்டும் என்றும்
ப்ரஹ்ம வித்யையினால் கூடும் என்றும் சாஸ்திரம் சொல்லுமே
நெருப்பு சுடும் தண்ணீர் அணைக்கும் போலே
இந்த வேதாந்த விழுப் பொருளை தாம் ஆண்டாள் அருளிச் செய்கிறார்-

————————————————————————–

6-குளிர்மாலை
உள்ளம் புகுந்து குளிர்ந்து –முனிவர்கள் யோகிகள் சொல்லும் ஹரி என்ற பேரவம் -உள்ளே புகுந்து
அந்தியம் போதில் அரியை அழித்தவனை-அரி -ஹரி –ஹரிர் ஹரதி பாபானி சிம்ஹம் –ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகள் மூன்றும் -அழித்து அருளுபவன்

————————————————————————–

7-தேசமாலை –
தேசமுடையாய் -பரமபத தேஜஸ் –
மண்ணாட்டிலராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உள்நாட்டு தேசு இ றே
ஞான பல வீர ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்
உண்ணாட்டு தேஜஸ் -பெரியதிருவந்தாதி
பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ -என்றும்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாவுதீர் -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்றும்
-உபய விபூதி நாதத்வம் -தேசம் மாலை -என்றுமாம்
தம்மையே ஒக்க அருள் செய்வான் -உடையவர் போல்வார் உடைய தேஜஸ் –

————————————————————————–

8-அருள் மாலை -ஆவா வென்றாய்ந்து அருள்
ஆ ஆ ஹா ஹா
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை செய்தனவே நீல மேனி ஐயோ என்னை நிறைகொண்டதுவே
ச மகாத்மா ஸூ துர்லப -இளைய பெண்கள் கிடைத்தார்களே ஹா ஹா
குளிரில் வர வேண்டுமா ஐயோ
மகரிஷிகள் -பெருமாள்
பரகத ச்வீகாரம் -சவகத ச்வீகாரம் திரு உள்ளம் புண்படுமே

————————————————————————–

9-திருநாமம் மாலை
நாமம் பலவும் நவின்று –மா மாயன் -மாதவன் -வைகுந்தன் என்று யன்றே
மாயன்-சங்கல்பம் -மமமாயா துரத்யயா-அன்திது உது என்னலாவன அல்ல உன் செய்கை என்னை நைவிக்குமே –
எம்பெருமான் பரமாகவும் ஆச்சார்யர்கள் பரமாகவும்
இராமானுசன் செய்யும் அற்புதமே -மகா தபஸ் ஸி-மாதவன் -ஆச்சார்யன் அனுமதி இன்றி திருநாடு தாரான் -வைகுந்தன்

————————————————————————–

10-தேற்ற மாலை –
தேற்றமாய் வந்து திற –
தேற்றம் -தெளிவு -இருவராய் வந்தார் –தேவர் என்று அஞ்சினோம்-இருவராம்படி வந்தார் -போலே தேற்றமாம் படி மாலை
க்ருதக்ருத்யர் -செய்த வெளிவியர் -தெளிந்த நிலை -இரு கரையர் இன்றிக்கே
சாஸ்த்ரிககள் தெப்பக் கரையரைப் போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஞ்ஞர் விய்யத்தில் இருப்பாரைப் போலே இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள் –
ஸ்வ பிரவ்ருத்தி -நிவ்ருத்தி தானே பகவத் பிரவ்ருதிக்கு வேண்டுவது –
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலையில் இருந்து வாழும் சோம்பர் –அரும்கலம் -சத்பாவர்-

————————————————————————–
11-பொருள்மாலை –
எற்றுக்கு உறங்கும் பொருள்
தமோ குணத்தால் சம்சாரிகள் உறக்கம்
யோக நித்தரை பாற் கடல் நாதன்
நடந்த கால்கள் நொந்தவோ
மடியாது –துயில் மேவி மகிழ்ந்தது அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
அன்று இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ
தொல்லை மாலைக் கண்னாரா கண்டு காதல் உற்றார் கண்கள் துஞ்சாரே-சதா பஸ்யந்தி சூரய
எற்றுக் குறங்கும் பொருள்

————————————————————————–

12-அறிவு மாலை
அனைத்தில்லத்தாரும் அறிந்து –
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -முதல் திருவந்தாதி -தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –
சிற்றில் இளைத்தவன் கண்ணனாய் இருக்க சீதை வாய் அமுதுண்டாய் என்று சிற்றில் நீ சிதையேல் என்னலாமோ
வளையல்கள் துகில்கள் கைக்கொண்டு வேண்டவும் தாராதான் -கண்ணனாய் இருக்க இரக்கமே ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -என்னலாமோ-

————————————————————————–

13-கள்ளம் தவிர் மாலை-
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ –
கள்வா என்று கூறாதே உன்னைக் கச்சிக் கள்வா என்று ஓதுவது என் கொண்டு
கள்ளம் தவிர்ந்து நந்தன் மதலையையும் காகுத்தனையும்
வருக வருக காகுத்த நம்பி வருக இங்கே
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
என்றும் என் மனதுக்கு இனியானை மணி வண்ணனை -ஆண்டாள் யசோதை பாவத்தில் பெரியாழ்வார்
இருவரும் ஒருவரே -கள்ளம் தவிர் என்றுமாம் –

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் தனி வ்யக்தியாய் இருக்கட்டும்
நாம் எல்லா அர்ச்சா பெருமாளையும் அனுபவிக்கலாம் என்றுமாம்

————————————————————————–

14-பாடல் மாலை –
பங்கயக் கண்ணானைப் பாட -கரிவவாகி படை –நீண்ட அப்பெரியவாய கண்கள் என்றாரே
சங்கோடு சந்க்கரம் ஏந்தும் தடக்கையையனையும் பங்கயக் கண்ணானனையும்
தமஸ பரமோதாதா சங்க சகர கதாதரா – மண்டோதரி -யுத்த -114-15
ஆயதாஸ்ஸ ஸூ வ்ருத்தாஸ்ஸ பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -திருவடி -கிஷ்கிந்தா -3-15-
ஜாதோசி தேவதேவேச சங்கு சக்ர கதாதர —
உப சம்ஹர விச்வாத்மன் ரூபமேதச் சதுர்புஜம்
ஜாநாதும் அவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1/10 வசுதேவர் தேவகி –
மெச்சூது பதிகம் அப்பூச்சி காட்டுகின்றான் –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நானுயிர் வாழ்ந்து இருந்தேன் –
தேனைவ ரூபேண சதுர்புஜேந -அர்ஜுனன்
ஸூஜாத ரேகாமய சங்கசக்ரம் தாம்ரோதரம் தஸ்ய கராரவிந்தம் -நாகப் பழக்காரி
பங்கயத் தாமரைக் கண்ணனே கண்ணா
நீள் நயனத்து அஞ்சன மேனியனே
க புண்டரீக நயன புருஷோத்தம க

————————————————————————–

15-வேறோர் பாடல் மாலை
முந்தியது கண்ணானைப் பாடல் மாலை இது மாயனைப் பாடல் மாலை
வெண்ணெய் திரண்டதனை வேறோர் கலத்திட்டு -திருமங்கை ஆழ்வார் -அதனால் வேறொரு பாடல் மாலை இதற்குப் பெயர் பொருந்துமே
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை பாடும் மாலை
எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களையும் செய் எல்லையிலா மாயன் கண்ணன்
கண்ணன் முடித்தது ஒரு யானை ஆச்சார்யர்கள் முடித்ததோ பல யானைகள்
வாரி சுருக்கி மதக் களிற்று ஐந்தினையும் சேரி திரியாமல் –பொய்கையார் -47-ஜிதேந்த்ரியர்கள்
கலியும் கெடும்
தீயவன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடியும் நேமிப்பிரான் தமர் போந்தார்
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவான போல் தடம்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் –
பொலிக பொலிக –
அண்ணல் ராமானுசன் தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினரே
இரும்பைப் பொன்னாகுவது போலே நித்ய சம்சாரிகளையும் வெள்ளுயிர் ஆக்கி நித்ய சூரி பரிஷத்தில் வைக்கும் ஆச்சார்யர்கள் மாயம் –
கலியன் அருளிச் செய்யும் வேறொரு பாடல் மாலை அசாதாராணம் –
நல்லீர் அறிவீர் தீயோர் அறிவீர் என்னை அறியீரே
வாழ்ந்தே போம் இந்தளூரிரே

————————————————————————–

15-நேய மாலை –
நேச நிலைக்கதவம் நீக்கேலோ
நடு நாயகம் -எம்பெருமானார் -யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இ றே
கோயில் காப்பான் -தென்னரங்கள் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன ஸ்ரீ ரெங்க ஸ்ரிய மனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பவர்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
பரமபத வாசலையையும் தமது ஆளுக்கைக்க் கீழ் வைத்து இருக்கும் ஸ்வாமி
மணிக்கதவம் தாள் திறவாய்
மணி ரத்னம் -நவ கிரந்தங்கள் -அறிவிலி ஆயர் சிறிமியோர் எமக்கு மணிக் கதகம் தாள் திறவாய்
நென்னலே வாய் நேரந்தான் -கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத -என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தர்சின –
நேய மாலை
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு
கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நேசக்கதவம்

————————————————————————–

16-உறங்கா மாலை –
உம்பியும் நீயும் உறங்கேல்
நந்த கோபன் -ஆச்சார்யன் -அம்பரம் -பரம ஆகாசம் -தண்ணீர் -விரஜா நதி -அன்னம் ப்ரஹ்மேதி வியாஜா நாத் -ப்ரஹ்ம அனுபவம்
எடுத்த பே ராளான் -நிதி எடுத்தால் போலே
யசோதை -திரு மந்த்ரம் -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை – பெரிய திருமந்தரம் பிரதானம்
கண்ணபிரான் -திரு மந்தார்த்தம் -சர்வ வ்யாபகத்வம் -மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -அநந்தரம்
ஒண் மிதியில் புனலருவி -என்று அருளிச் செய்தார் இ றே
பலராமன் -திருமந்த்ரார்த்த சாரம் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை
பகவத் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாது என்பதை உணர்த்தவே உம்பியும் நீயும் உறங்கேல்
யஸ் சப்த பர்வ வ்யவதான துங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன்முராரே-பாதுகா சஹச்ரம்

————————————————————————–

17-மகிழ்ச்சி மாலை –
உந்து –வந்து திறவாய் மகிழ்ந்து
பந்தார் விரலி -லீலா உபகரணம் -கைப்படுத்தி பொழுது போக்கும் ஆச்சார்யர்
பந்து கழல் பாவை – பொங்கைம் புலனில் போக்யாதி சமூஹம் -நாயனார் -149-லீலா விபூதி முழுவதும்
உபய விபூதியும் தம் கையில் உடையவர் இ றே
செந்தாமரைக்கையால் -உபதேச முத்தரை
சீரார் வளை ஒலிப்ப -த்வனிப் பொருள்கள் மல்கும் படி உபதேசித்து அருளி
மகிழ்ந்து -தம் பேறாக
தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர் -பல்லாயிரம் தேவிமாரோடு -நப்பின்னை பிராட்டி பிரதானம் போலே
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதிசபதம் பாதி நான்யத்ர –
ஏழு காளைகள் -அறு சமயச் செடி யதனை அறுத்தான் வாழியே -செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
கந்தம் கமழும் குழலீ-கமநீய சியகா நிவேசம் –
சிகயா சே கரிணம் பதிம் யதி நாம் -என்றும்
காரிசுதன் குழல் சூடிய முடியும் கன நல சிகை முடியும் –
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள்
பூர்ண அதிகாரிகளாகக் கொண்டு மகிழ்ச்சியில் குறைவின்றி
பரம திருப்தியோடு நெஞ்சு திறந்து வாய் திறந்து உபதேசித்து அருள வேணும் –

————————————————————————–

18-தகவு மாலை –
தத்துவம் அன்று தகவன்று -தத்வமஸி வாக்யார்த்தம் பிறர் சொல்வது தகவு அன்று
தத் -பிரமம் தவம் ஜீவாத்மா ஒன்றே என்னும் தத்வம் தகவன்று
தத்வமஸ் யேவமாத்யா வ்யாக்யாதா ரங்கதாம ப்ரவண விஜயபிர் வைதிகை சார்வ பௌமை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -24-
மைத்தடம் கண்ணினாய் -சித்தாஞ்சனம்-ஞான விகாசம்பெற்ற
எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாத -ஆச்சார்யனை பிரிந்து இருக்க மாட்டாத சிஷ்யன்

————————————————————————–

20-நீராட்டு மாலை
இப்போதே எம்மை நீராட்டு -தாபத் த்ரயம் தீர
எம்பெருமானுக்குதாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன் எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான்
ஆனதற்குபின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-
ஷூத்ருட் பீடித நிறதநரைப் போலே கண்டு கொண்டு பருகி -ஆச்சார்யஹிருதயம்-

————————————————————————--21-புகழ் மாலை-
போற்றி யாம் வந்து புகழ்ந்து
வலி மாண்டு அநந்ய கதித்வம் தோன்ற உன் திரு வாசலிலே படுகாடு கிடந்தது போற்றிப் புகழுமா போலே
உன் பாலே போன்ற சீரிலே பழுத்து ஒளிந்து புகழ் உரைகளை –
ஆச்சார்யபரம் -குரும் பிரகாசயேத் தீமான் –
வாதம் செய்து வலிமாண்டு அடி பணிந்தவர் எம்பெருமானார் இடத்தில் -யாதவபிரகாசர் யஞ்ஞமூர்த்தி போல்வார்
பட்டர் இடம் தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி -நஞ்சீயர் ஆகி அடி பணிந்தார்
துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் போல்வார் நம்பிள்ளை இடம்
எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே

————————————————————————–

22-சாப நிவாரண மாலை -சாப நிவ்ருத்தி மாலை
தன்னடையே போவதற்கு நிவாரணம் வேண்டாமே
திருக்கண் நோக்கம்பட்டதுமே பிரிந்து உழலும் சாபங்கள் தன்னடையே போம்
ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீகாஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து என்னப் பண்ணும் இ றே -நாயனார் -95
திருவடித்தூள் அஹல்யையின் சாபம் தீர்த்தது
திரு முழம் தாள் குபேர புத்ரர் நளகூபர மணிக்ரீவர் -சாபம் தீர்த்தது -யமளார்ஜூன பங்கம் –
திருத் துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன
திரு மார்பு ஸவேதம் ருத்ரன் சாபம் தீர்த்தது
துர்வாசர் சாபம் மார்பில் இருப்பவளால் தீர்ந்தது
திருக்கண் -கருவிலே திரு ஜாயமானம் –
புள்ளு பிள்ளைக்கு இரைதேடும் -செங்கண் சிறுச் சிறிதே
ஏகயைவகுரோர் த்ருஷ்ட்யா த்வாப்யாம் வாபி லபதே யத்
ந்தத் திஸ்ரு பிரஷ்டாபிஸ் சஹஸ்ரேணாபி கச்யசித்
மூன்றோ எட்டோ ஆயிரம் கண்களோ சமம் இல்லை
ஸூ பேன மனஸா த்யாதம் -ஆ முதல்வன் இவன் –
சஷூஸா தவ சௌம்யேன பூதாச்மி ரகு நந்தன -சௌரி
போயிற்று வல்லுயிர் சாபம் அவித்யாதிகள் –

————————————————————————–

23-ஆராய்ச்சி மாலை
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
எட்டாம் பாட்டில் ஆராய்ந்து அருள் -தேவாதி தேவனை நான் சென்று சேவித்தால்
அவன் ஆராய்ந்து ஆவா வென்று அருளுவன் என்றது அங்கு
இங்கும் அருள வேணும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே -என்றும் –
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே எண் நான் செய்கேன் -என்றும்
அரவணையே ஆயர் ஏறே துயில் எழாயே -என்றும்
திருப்பள்ளி உணர்த்த -புறப்பட்டு அருளும் அழகு -வீற்று இருக்கும் அழகு -பிரார்த்தித்துப் பெற்றார்கள் இதில்
பல்லாண்டு பாட வேண்டும் என்ற பிரார்த்தனை அடுத்த பாசுரத்தில் பெறுவார்
பர்வதாதிவ நிஷ்க்ர்ம்ய சிம்ஹோ கிரி குஹா சய-வால்மீகி –
உன் கோயிலில் நின்றும் இங்கனே போந்தருளி -ஆண்டாள் -நடை அழகை பார்க்க
தன்யா பஸ்யந்தி மே நாதம் சிம்ஹ விக்ராந்த காமிநம்-ஆசைப் பட்டு புலம்பின சீதை
அகரத பரயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா -முன் சென்று தன நடை அழகை பெருமாள் பார்க்கும்படி
யயௌ என்னாமல் ப்ரயௌ -என்றார் வால்மிமி
கானகம்பாடி உலாவி –ஆடல் பாடல் மறக்கும் படி அன்றோ கண்ணபிரான் நடை அழகு
எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானைக் கண்டார் உளர் -பெரிய ஆழ்வார் –
வலிமிக்க சீயம் –
கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து திருக் காஞ்சி திருமலை திரு அரங்கம் திரு நாராயண புரம் திவ்ய தேசங்கள் தோறும்
சிங்கா சனம்
சீரிய சிங்கா சனம்
கோப்புடைய சீரிய சிங்கா சனம் -பேத அபேத கடக ஸ்ருதிகள் மூன்றும்

————————————————————————–

24-இரக்க மாலை
இன்று யாம் வந்தோம் இரங்கு
நாப்படைத்த பிரயோஜனம் பிரார்த்தனை
நிர்ஹேதுக கிருபை
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கி
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவன் ஆர்த்திக்க வேண்டுமோ -சர்வஞ்ஞன்இவன் நினைவு அறியானோ என்னில் இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் -முமுஷூப்படி -163-
அதுவும் அவனது இன்னருளே
ஆச்சார்யா பரமாக உபதேசித்து அருள வேணும் -என்றதாயிற்று
பரம போக்யமான பள்ளி கோளைப் பங்கப் படுத்தினோம் -இக்குற்றத்தை ஷமித்து அருள வேணும்
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு நடக்கப் பண்ணினோமே -ஷமிக்க வேண்டும்
ரஷய்த்வ ஸ்வரூபத்துக்கு மாறாக பல்லாண்டு பாடினோமே ஷமிக்க வேண்டும்
இன்று யாம் வந்தோம்
இன்றி யாம் வந்தோம் கைம்முதல் இல்லாமல் வந்தோம் -என்றுமாம்
இரக்கத்துக்கு தண்ணீர் துரும்பாக ஒன்றும் இல்லை –

————————————————————————–

25-வருத்தம் தீர் மாலை —
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
திருத்தக்க செல்வமும் -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -எம்பெருமானார் -பிராட்டி ஒத்த செல்வம் -எம்பெருமான் அடி சேர்ப்பிக்கை
சேவகம் -பரதவ சௌலப்யம் இரண்டையும் பாடி
பாங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
இராமுனுசா இம்மண் அகத்தே இருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
மால் வ்யாமோஹம் அதற்கும் திரு சேர்த்து அருளினார் ஆழ்வார்
திரு -தக்க செல்வம் -நம் சம்ப்ரதாயம் -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சுவையன் திருவின் மணாளன்
பரம ரசிகன் இந்த ரசிகத்துக்கு ஊற்று வாய் சொல்கிறது மேல் திருவின் மணாளன் என்று
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்னப் பிறந்தவன்

————————————————————————–

26-ஆலினிலையான் மாலை –
ஆலினையாய் அருள் –
அம்புலியை அழைக்கும் இடத்து -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்
செங்கீரை யாட -உய்ய உலகு படைத்ததுண்ட –ஆலினை அதன் மேல் பையவு யோகு துயில் கொண்ட பரம்பரனே –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்னும் போதும் ஆலத்திலையான் அரவின் அணை மேலான் –
பூச்சூட அழைக்கும் பொழுதும் உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டே
நளி மதிச் சடையனும் –ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெருமான் மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமொயாமே -திருவாசிரியம் –
ஆலினிலையானுடைய இதிகாசம் இதர தெய்வங்களின் அவரத்வத்தையும்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரதத்வத்தையும் கையில்ங்கு நெல்லிக் கனியாக தெரிவிக்க அவதரித்தது ஆயிற்று
பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு
ஆலினிலை மேல் அன்று நீ வளர்ந்த மெய்யன்பர்
ஆலன்று நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –
அகடிதகட நா சாமர்த்தியம்
க்ருத்சன பிரசக்திர் நிரவயவத்ய சப்த கோபோ வா -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-26-பூர்வபஷ ஸூ த்ரம்
ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் -2-1-27-சித்தாந்த ஸூ த்ரம் -து சப்தம் பூர்வபஷத்தை வ்யாவர்த்திக்கும்
ப்ரஹ்மம் நிரவவயம் –நிவிகாரம் -என்றால் ஜகத் காரணமாக ஒண்ணாது பூர்வ பஷம்
பிரமத்தின் உடைய அநீர்வசநீயமான சக்தி சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
பச்யத்ய சஷூ ஸ்ருணோத்யகரண அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா
சப்தைக பிரமாண கத்வேன சகல இதர வஸ்து விசஜாதீயத்வாத்
அச்யார்த்தச்ய விசித்திர சக்தி யோகோ ந விருத்யதே -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
அப்பு அசக்தி அத்புத சக்திமான் -தேசிகன்
ஆலின் நிலையாய் -என்று பிரித்து
எம்பெருமான் திருவடியில் ஒதுங்குதல் பனை நிழலில் ஒதுங்கினால் போலே
எம்பெருமானார் திருவடிகளிலே ஒதுங்குதல் ஆலமரத்தின் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே -அம்மங்கி அம்மாள் வார்த்தை –

————————————————————————–

27-கூடியிருந்து குளிர்மாலை –
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லையான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லையான் –
கூடத்தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
கூடத் தகுந்தவர்களை -மறம் திகழு –தோல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால்கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேனஎன்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வரவரமுனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக்கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து

————————————————————————–

28-பறை தரு மாலை –
இறைவா நீ தாராய் பறை
நாராயணனே நமக்கே பறை தருவான்
கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு
நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்
அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்
இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு
வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –
இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்
இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்
இரங்கு -அருள் -அபேஷித்தோம்
பேற்றுக்கு கைம்முதல் -நல கருமம் ஒன்றும் இல்லை
மேலும் செய்ய யோக்யதையும் இல்லை
தங்கள் உடைய அபகர்ஷத்தை அனுசந்தித்து –
மூல ஸூ க்ருதமான ஈஸ்வரன் உடைய குண பூர்த்தியையும் அனுசந்தித்து
சம்பந்தத்தை உணர்ந்து
பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணி
உபாய பூதனான ஈஸ்வரன் பக்கல் உபேயத்தை அபேஷிக்கை
இந்த ஆறும் அதிகார அங்கங்கள் -இவை கூறப் படுகின்றன
எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்
அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –
பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்
சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூ த்தரம்-

————————————————————————–

29- காமங்கள் மாற்று மாலை –
மற்றை நம் காமங்கள் மாற்று
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா
ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை
உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது
போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே -பிராப்ய பூமியிலும் –
மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் பிதற்றும் பாசுரம்-பசிக்கு மருந்து -பசியைஉண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –வருத்தமும் தீர்ந்து -வருத்தம் -சம்ச்லேஷம் -உம்மைத் தொகை -கைங்கர்யம் –மகிழ்ந்து -சாயுஜ்யம் –
அனுஷ்டானம் -அநுகார -அனுசந்தானம் –

————————————————————————–

30-திருவருள் மாலை –
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரேயோ நஹ்ய ரவிந்த லோசன மன காந்தா பிரசாதத்ருதே சமஸ்ருத்யஷர வைஷ்ணவாத் வஸூ நருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஸ்தோத்ர ரத்னம்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு-
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் -அமுதனார்
ஓங்கி -நோன்பு அனுஷ்டிப்பதால் பலன் சொல்லும்
இது -திருப்பாவை கற்றாருக்கு பலம் சொல்லும்
நாமாக பலனை விரும்பினால் சூத்திர பலன் விரும்புவோம்
நித்ய தம்பதி உடைய கிருபா லாபம் பிராட்டியே அருளிச் செய்த பிரபந்தம் –அந்தமில் பேர் இன்பம் நிஸ் சந்தேஹம் -தேறி இருக்கலாம்
திருவின் அருள்
திரு -சிறந்த அருள் என்றுமாம்
செல்வத் திருமாலால் -பிராட்டி சம்பந்தம் அங்கேயே அனுசந்தேயம்
ரகஸ்ய ரத்னாவளி –30 வார்த்தைகள் கொண்டவை
14 வார்த்தை – தேசிகன்
சர்வ ச்வாமிநியாய்-சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதி அதிசயத்தாலும்
அத்தலையில் வாலப்தி அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு இஜ் ஜீவர்களுக்கு தஞ்சம் ஆகிறாள் –
புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஏக ஆஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டி அருளுகிறோம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செயலில் அமிருத சாகரத்தில் ஆழ்ந்தமை-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்-

November 22, 2014

திருவாய்மொழி -சாவித்திர வித்யை-இந்த்ரன் பரத்வாஜருக்கு உபதேசித்து சகல வித்யா சர்வமும் இது –யத் கோசஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர சங்க சக்ர-யந்மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ-வகுல பூஷண பாஸ்கராயா  –நாத முனிகள் நம் ஆழ்வாரை சவிதாவாகவே அருளினார்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகசியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுல பூஷண பாஸ்கர உதயத்திலே -நாயனார்
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோம் -தேசிகன்
சவிதா வெளியிட்டு அருளியது சாவித்ரம் -நாலாயிரமும்
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே-

சாந்தோக்யம் -சஹச்ர பரமா தேவீ சதமூலா சதாங்குர சர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ் ஸ்வப்ன நாசிநீ
தூர்வா தேவீ -பசும் தமிழ்
வடமொழி வேதம் சுஷ்கம்
சதமூல -நூறு பாசுரங்கள் கொண்ட திரு விருத்தம் ஆயிரமாக விரிந்த திருவாய்மொழி சஹஸ்ரபரமா
துஸ் ஸ்வப்ன நாசிநீ -ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன –
சம்சாரம் ஆர்ணவம் ஒழியும்
இப்பத்தினால் சன்மம் முடிவு எய்து நாசம் கண்டீர் எம் கானலே
மே சர்வம் பாபம் ஹரது -என்கிறது ஸ்ருதியும் இதையே

—————————————————————————————————————————————–

மன்மநாபவ மத் பக்த
மன்மநாபவ-
மயி
1–சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்யநீக -கல்யாணை கதான
2–சர்வஞ்ஞே –
3–சத்யசங்கல்பே-
4–நிகில ஜகத் ஏக காரணே-
5–பரஸ்மின்-
6–ப்ரஹ்மணி –
7–புருஷோத்தமே-
8–புண்டரீக தலாமலாய தேஷணே-
9–ஸ்வச்சநீல ஜீமூத -சங்காசே யுகபதுதிததி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி –
10–லாவண்யாம்ருத –
11–மஹோ ததௌ-
12–உதாரபீவர-
13–சதுர் பாஹூ-
14–அத்யுஜ்வல- பீதாம்பரே-
15–அமலக்ரீட – மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே-
16–அபார காருண்ய சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ-
17–அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே-
18–சர்வ ஸ்வாமிநி-
தைலதாராவத் அவிச்சேதன நிவிஷ்ட மநா பவ –அதி கம்பீரமான ஸ்ரீ ஸூ க்திகள்-

இதில் –18 -விசேஷணங்கள்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-

———————————————————————————

அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத் –
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ

——————————————————————————-

புரா ஸூத்ரைர் வியாச ஸ்ருதிசத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ஸ புன
உபாவேதௌ க்ரந்வௌ கடயிதுமலம் யுக்தி பிரசௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர-இத்தை
ஸ்ரீ எம்பார் அல்லது ஸ்ரீ முதலி ஆண்டான் அருளிச் செய்வதாக சொல்வர்

வேத வியாசர் -சாரீரிக மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அருளி –
அவரே நம் ஆழ்வார் மூலம் திருவாய்மொழி அருளி அத்தை விவரித்து அருளி
அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் சமன்வயப்படுத்தி அருளினார்-

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-

———————————————————-

சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அலபமாநா –
4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
5-ப்ரசிதல சர்வகாத்ர

சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே

2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேனோ
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் எனும் ஈனச் சொல்லே

3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அல்பமாநா –
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர்
காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து

4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -என்றும்
ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் -என்றும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் -என்றும்

5-ப்ரசிதல சர்வகாத்ர –
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –

—————————————–

அனந்த குணசாகரம்
அபரிமித உதார குணசாகாரம்
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகளில் பார்க்கிறோம்-
இரண்டாம் அத்யாயம் தொடக்கத்தில்
அபரிமித குணசாகரம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்திம்
குணங்களுக்கு கடல் போன்று இருப்பவன் இல்லை
குணங்களைக் கடலாக சொல்லி அக்கடலை எம்பெருமான் உடையவன்
சாகர சப்தம் நித்ய பும்லிங்கம் -குணா சகரோ ப்ரஹ்மம்
குணா நாம் சாகரம்
மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் -பெரிய திருவந்தாதி -69-
இதில் குணங்களை கடலாக அருளிச் செய்து இருக்கிறார்
பூண்ட நாள் சீர்க்கடலை உட்கொண்டு -நாயனார்-
அகதா பகவத் பக்தி சிந்தவே -பக்திம் வா சிந்துத்வேன ரூபயித்வா பஹூவ்ரீஹி
இப்படி பஹூவ்ரீஹி யாக கொண்டதே -காதல் கடல் புரைய விளைவித்த – பக்தியைக் கடலாக அருளியது போலே

——————————————————-

கப்யாசம்
கம்பீர -அம்பஸ் சமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள–ரவிகர விகசித -புண்டரீக தலா மலாய தேஷண
ஆழ்ந்த தண்ணீரில் வாழ்வதும்
நாளம் என்ற தண்டோடு கூடியிருப்பதும்
இரவியின் கதிர்களால் மலரப் பெற்றதுமான புண்டரீகத்தின் இதழ் போலே நீண்ட திருக்கண்களை உடையவன்
அம்பஸ் சமுத்பூத -நீரை விட்டு பிரியாமல்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமா போலே
நீரார் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் -சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திருவிருத்தம்
தண் பெரும் நீர்த் தடம் தாமரை அலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய் மொழி

ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் -மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன -திருவிருத்தம்
மென்கால் -மெல்லிய நாளத்திலே இருக்கின்ற –

ரவிகர விகசித புண்டரீக –
(அஞ்சுடர வெய்யோன் } செஞ்சுடை தாமரைக் கண் செல்வன் -திருவாய்மொழி -5-4-9-
செந்தண் கமலக் கண்ணன் ——சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி—–

கப்யாசம் புண்டரீகமேவம் அஷிணி-மூலம்
இதில் தள-அமல -ஆயத
தாமரைக் கண்ணன்
தாமரைத் தடம் கண்ணன்
கமலத் தடம் கண்ணன்
கமலத் தடம் பெரும் கண்ணன்
தடம் -விசாலம் -தளம் -இரண்டுமே உண்டே
நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்கள் கோலங்களே -திரு விருத்தம் -தடம் -தடாகம் அர்த்தத்தில்
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே –
கமலக் கண்ணன் –அமலங்களாக   விளிக்கும் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் –
ராம கமல பத்ராஷ
அருளிச் செயல் அனுபவத்துக்கு பின்பு வெறும் புண்டரீகம் ஏவம் அஷிணி சொல்லி நிற்பரோ எம்பெருமானார்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவாப்ராமா விலாசாய பராங்குச பாத பக்தர் அன்றோ

—————————————————————————

ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம்
நாம் அவன் இவன் உவன் -1-1-4-
அவரவர் தமதமது -1-1-5-
நின்றனர் இருந்தனர் -1-1-6-
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் –
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
உள்ள பிரமாணங்களைக் கொண்டே அருளிச் செய்கிறார் கத்யத்தில்-

—————————————————————————————————————————————–

கிரீட மகுட சூடாதவம்ச
திரு அபிஷேகம் கொண்டை தொப்பாரம்
பார் அளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த தோரரசே
சௌலப்யம் -பரத்வம் -பிரணயித்வம்-மூன்றையும் காட்டி அருள
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷை
ஸ்தேம-சாமான்ய புபுஷூக்கள் ரஷணம் சொல்லி
தனியாக முமுஷூக்கள் ரஷணம் சொல்லி ஸ்ருளியது போலே
உண்டியே உடையே உகந்தொடும் சம்சாரிகள் பக்கலிலும் சௌலப்யம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கொண்ட ஆழ்வார் பக்கல் விசேஷ சௌலப்யம் -பிரணயித்வம்
ஆக மூன்று திருக் கல்யாண குணசாம்ராஜ்யத்துக்கு மூன்று காட்டி அருளுகிறார்

ஒளிவரும் முழுநலம் முதலில கேடில—வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷப்ரதத்வம் தனியாக அருளி
இதனால் தான் தனியாக விந்த விவித பூத வ்ராத ரஷைகதீஷை –

லோகவத்து லீலா கைவல்யம் -சிருஷ்டி போல்வன ஒழிய திரு வவதாரங்களை சொல்ல வில்லை
தொழும் காதல் களிறு அளிப்பான் -சங்கல்பத்தால் செய்ய முடியாதே
விநத விவித பூத வ்ரத ரஷைக தீஷ
விநத-வணங்கிய
விவித -பலவகைப்பட்ட
பூத வ்ரத -பிராணி சமூகங்கள்
ரஷா ஏக தீஷை -ரஷிப்பதையே முக்கியமான விரதமாகக் கொண்டவன்
விநத பிராணிகளின் சம்பந்தம் பெற்றார்களையும் ரஷிப்பவன்
என்பதால் வ்ரத சப்த பிரயோகம்
பஸூர் மனுஷ்ய பஷீவா
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -6-10-11-
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னகரத்து என்றும் சேர்த்தல் மாறினரே -2-6-7-
ஸ்ரீநிவாசே -திருவில்லா தேவர்
பக்தி ரூபா ஷேமுஷி பவது –-மம பக்திர் பவது என்றோ மம பக்திரஸ்து-என்றோ சொல்லாமல் -மதிநலம் அருளினான் என்பதால்
புத்திர் மனீஷா தீஷணா தீ ப்ராஜ்ஞா சேமுஷீ மதி -அமரகோசம்
மதியும் சேமுஷீயும் பர்யாயம்
பக்தியும் நலமும் பர்யாயம்

—————————————————————————————————————————————–

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஆழ்வார் பர்யந்தம் –
எம்பெருமான் உடைய லீலா ரசம் அனுபவிப்பவர் ஆழ்வார் என்கிறார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பி
விளையாடப் போதின் என்னப் போந்தோமை
அன்றிக்கே
அகிலம் ஜன்மம் ஸ்தேம பங்காதி லீலே-யஸ்ய –எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்
விநத விவத பூத வ்ராத ரஷைக தீஷை -ரஷகத்வம் எம்பெருமானுக்கு சொல்லப் பட்டாலும்
அனதிக்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் என்கிற நியாயத்தாலும்
மந்திர ரத்னா பிரக்ரீயையாலும்
திருவடிகளுக்கு ரஷகத்வம் -சடகோபர் இடம் அன்வயிக்குமே
பாதுகா சஹச்ரம் -42- ஜகதாம் அபிரஷணே த்ரயாணாமதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ -அனுசந்தேயம்
சுருதி சிரசி விதீப்தே -உபநிஷத்தில் விசேஷண தீப்தர் ஆழ்வார்
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ர்வாம்சஸ் சமிந்ததே -என்றும்
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதச் ஸ்ம்ருதா -என்றும்
தேவில் சிறந்த திருமாலுக்குத் தக்க தெய்வக் கவிஞ்சன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
ஜாக்ர்வாம்ச -கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
அன்றிக்கே
சுருதி -திருவாய்மொழி
அதில் தீப்தர் ஆழ்வார்
பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் சொல் என்பதால் விளங்குமவர்
பரஸ்மின் ப்ரஹ்மணீ-மிகப் பெரியவர் -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே –-யான் பெரியன் நீ பெரியை யார் அறிவார் –
ப்ரஹ்மணீ எம்பெருமான்-
பரஸ்மின் ப்ரஹ்மணீ ஆழ்வார்
ஸ்ரீ நிவாசே -கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த ஆழ்வார் இடமே அன்வயிக்கும்

அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யே
வாசூதேவஸ் சர்வமிதி ச மகாத்மா ஸூ துர்லப –7-19-
ஆழ்வாரை நோக்கியே கீதாச்சார்யன் அருளிச் செய்தது
ஜ்ஞானவான் -மத் சேஷைதைக ரச ஆத்ம யாதாம்ய ஜ்ஞானவான்
ஜகத் சர்வம் வாசூதேவ என்பதாக சங்கரர் கொண்டார்
மமசர்வம் வாசூதேவ -என்பதாக ஸ்வாமி கொண்டார் -திருவாய்மொழிக்கு சேர்ந்து -ஜ்ஞானி -பகவத் சேஷைதைக ரச ஆத்மஸ்வரூப வித் ஜ்ஞானி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -அர்த்தம்-

—————————————————————————————————————————————–

சரணாகதி கத்யத்தில் -அபார காருண்ய சௌசீல்ய வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய சௌந்தர்ய மகோததே-அருளிச் செய்த பின்பும்
ஆஸ்ரித வாத்சல்ய ஜலதே -தனியாக சம்போதனம் அருளிச் செய்வதில் சூஷ்ம அர்த்தம் –
நிகரில் புகழாய் என்று நிகரற்ற வாத்சல்யத்தை ஆழ்வார் கொண்டாடினது போலே
—————————————————————————————–
துஷ்யந்திச ராமந்திச -போதாத பரஸ்பரம்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் -தரித்து இருந்தேனாகவே
ஒரே அதிகாரிக்கும் இரண்டும் வேண்டுமே தரிக்க
தெரிகை –பிரவசனம் பண்ணுகையும் கேட்டும் வேண்டுமே
மத்கதபிராணா=மயா விநா ஆத்மதாரண மலபமாநா -என்று தரித்து இருந்தேனாகவே அருளிச் செயலில் ஆழ்ந்து ஸ்வாமி அருளிச் செய்கிறார்
—————————————————————————————–
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் –கீதை -10-10-
சங்கரர் ப்ரீதிபூர்வகம் பஜதாம் என்று அன்வயிக்க
ப்ரீதிபூர்வகம் ததாமி என்று அன்வயித்து
என்னை யாளும் பிரானார் வெறிதே அருள் செய்வர் உகந்து-8-7-8-
————————————————————————————
நித்ய கிரந்தத்திலும்-சுருதி ஸூ கை ஸ்தோத்ரை ரபிஷ்டூய
கேட்டார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –
சுருதி ஸூ கை ஸூ க்தை ரபிஷ்டீய-என்றும் பாட பேதம்
செவிக்கினிய என்பதையே ஸூ கை சப்தத்தால் ஸ்வாமி வெளியிடுகிறார்
—————————————————————————————————————————————–

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –
ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
நம் ஆழ்வார் -ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி -மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
பராங்குச தாசர் -பெரிய நம்பி
——————————————————————————————–

உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -சரீர ஆத்மா பாவம் இத்தைக் கொண்டே பிரதானமாக விசிஷ்டாத்வைதம்
நிதி போன்ற பாசுரம்
1-1-7- ஆறாயிரப்படி இதற்கு விரிவான வியாக்யானம்
——————————————————————————-
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—
—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

November 22, 2014

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முநிம்–

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்-

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-என்றும்

பரம ப்ராப்ய பராங்குச சரண பங்கஜ விஷய விவித கைங்கர்ய
கரண சாதுர்ய துர்ய ஸ்ரீ சைல வர தேசிகாதீச -என்றும்

அநந்தன் திருமலை ஆழ்வார் என அவதரித்து -என்றும்
அவதார விசேஷமாய் சொல்லப்படுமவராய்

சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளிலே கைங்கர்யத்தை அவர் அருளாலே லபித்து வாழுமவராய்

அதிலும் அவர் திருவடிகளான எதிராசர் செம் பொற் பாதம் இரவு பகல் மறவாமல் இறைஞ்சி ஏத்தும் எழிலை உடைய
திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளுக்கு ஏற்ற கலமாய் உள்ளவரைபவ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபா ஜூஷே-என்னக் கடவது இறே

ஸ்ரீ சைல பூர்ணர் கிருபையாலும்
ஸ்ரீ சைல தேசிகர் தயை யாலும்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளமும்
தீர்த்தங்கள் ஆயிரமுமான திருவாய்மொழியும்
யதீந்திர தத் ப்ரவணர் இடங்களிலே குடி கொண்டு தேங்கிற்று-

இவரும் தன் பக்தி என்னும் வீட்டின் கண் வைத்த பின்பு இறே பெருகி வெள்ளம் யிட்டு விளைந்தது –
ஸ்ரீ இராமாயண துக்த சிந்து –
பாலோடு அமுது அன்ன வாயிரம் –
இராமானுசன் இறே இவரும்-

——-

தீ பக்தியாதி குணார்ணவம் –
மதி -நலங்கள் இவருக்கு பிள்ளை அருளால் உண்டாயிற்று –

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைக தாமநி –(ஸ்தோத்திர ரத்நம்.)என்றும்
லஷ்மணஸ்ய சதீ மத -(ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்
ந தேவ லோகா க்ரமணம் -என்று தொடங்கி-த்வயா விநா ந காமயே-என்றும் இறே ஏதத் பூர்வ அவதாரங்களிலும் ஜ்ஞாந பக்திகள் பூரணமாய் இருப்பது –
ஆராவன்பு இளையவன் இறே –
அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதிகள் உண்டு இறே இங்கே

——–

தயா ஸஹ ஆஸிநம் அநந்த போகிநி ப்ரக் ருஷ்ட விஜ்ஞாந பல ஏக தாமநி
பணாமணி வ்ராத மயூக மண்டல ப்ரகாசமா நோதர திவ்ய தாமநி.-(ஸ்தோத்திர ரத்நம்.)

அறமுயல் ஆழிப்படை-ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள —லஷ்மணஸ்ய ச தீ மத -(ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்

ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே போலே –

ந கதஞ்சந ஸா கார்யா கரிஹீத தநுஷா த்வயா.
புத்திர் வைரஂ விநா ஹந்துஂ ராக்ஷஸாந் தண்டகாஷ்ரிதாந்৷৷
அபராதஂ விநா ஹந்துஂ லோகாந்வீர ந காமயே.– ஆரண்ய -3.9.26৷৷

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5

——–

அவ்வவதாரத்தில் குறைகளும் தீர்க்க அவதரித்த இடத்திலும்
பெரிய பெருமாள் விஷயத்துக்கு அனுரூபமாக
பெரிய ஜீயருடைய அந்த ப்ரேமாதிகள் இரட்டித்து இறே இருப்பது

நிர்மல குண மணி கண வருணாலய-என்றும்
யதா ரத்நாதி ஜலதே -என்றும்
குணா நாமா கரா -என்றும் சொல்லக் கடவது இறே

சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ-என்றும்
யதிவர புநர் அவதார -என்றும் சொல்லக் கடவது இறே-

இனி நம் பெருமாள் இடத்தில் பிராவண்யம் எல்லையான எம்பெருமானார் அளவும் வர்த்தித்த படி சொல்லுகிறது –
சாத்ய விருத்தியாய்க் கொண்டு சரம பர்வம் வரக் கடவதாய் இருக்கும்
யதீந்திர பிரணவம்-
அந்த பிராவண்யம் தான் –யதீந்திர ப்ரவணாய அஸ்மத் குரவே குண சாலினே –என்று
விசேஷ்ஞ்ஞரான வேதாந்தாச்சார்யாரும் விக்ருதராய்ப் பேசி அனுபவிக்கும் படியாய் இருக்கும் –

இவர் தாம் நிஜ தேசிக சந்தர்சித சம்ய மிதுரந்தர நிஹித சகல நிஜ பரவர வரமுனிவர் இறே –
அவர் பராங்குச பாத பக்தர் –
இவர் யதீந்திர ப்ரவணர் –
அந்த ப்ராவண்யம் இறே இவரை அனைவரையும் கால் கட்டுகிறது

———-

வந்தே ரம்யாஜா மாதரம் முநிம்–
வந்தே முகுந்த பிரியாம் -என்கிறது எல்லாம் இவருக்கு இவ்விஷயத்திலே யாயிற்று
ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முனயே விததே நம -என்னுமா போலே திரு நாமத்தை அனுசந்தித்து திருவடிகளில் விழுகிறார் –
இவருடைய அனுசந்தான விஷயமான மந்த்ரமும் ஸ்துதி பிரணாமமும் இருக்கும் படி இதுவாயிற்று –

வந்தே நியதோ முநிம் -என்கிறபடி -சேஷ சேஷிகள் உடைய சத்தா சம்ருதிகள்
இவர் சங்கல்ப அதீனைகளாய் இருக்கும்படியை யைப் பற்ற முனி என்கிறது-

இப்படிகளால் ஏற்றம் உடைய இவர் ஸ்துதி ரூபமான இவர் தனியன் தான்
யத் வேதாதௌ ஸ்வர ப்ரக்தௌ வேதாந்தேச ப்ரதிஷ்டித -என்று
வேதத்துக்கு ஓம் என்னுமா போலே -திராவிட வேத -தத் அங்க -உபாயங்கள் என்ன
ஏதத் வியாக்யான விசேஷங்கள் என்ன
ஏதத் சார பூதமான ரஹச்யங்கள் என்ன
இவற்றின் உடைய ஆதி அந்தங்களிலே
அகில திவ்ய தேச விலஷணராலும் அனுசந்திக்கப் படுமதாய் இருக்கும் –

இவருடைய சகல திவ்ய பிரபந்த பரவர்த்தகத்வம் பண்டு பல இடங்களிலே கண்டு கொள்வது
அதுக்கு மேலே உபய பிரதான பிரணவமான உறை கோயிலிலே இறே இவர் உதித்து அருளிற்று –
இவருக்கு இவ்வைபவம் ஜன்ம சித்தம் –

இது பிரணவ அர்த்தம் ஆகிறது
பிதா புத்ர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி சம்பந்த த்ரயமும் இவர் இடத்திலே தர்சிக்கை யாய் இருக்கையாலே
அகாரஸ் சித் ச்வரூபச்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரஸ் சித் ஸ்வரூபாய ஸ்ரியோ வாசீ ததா விது
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம்-என்கையாலே
அகாரம் பகவத் வாசகமாயும் -மகாரம் சேதன வாசகமாயும் உகாரம் உபய சம்பந்த பிரகாசிகையும் சொல்லும் –

அவ்வானவர்க்கு மவ்வானவர் எல்லாம் உவ்வாவனவர் அடிமை என்று உரைத்தார் –என்னக் கடவது இறே –
விளக்குப் பொன் போலே நடு நிலைத் தீபம் இறே –
மங்கள தீப ரேகாம்
ஸ்ரியோ கடக பாவத –
ஸ்ரிய கடிகயா-என்று ஏதத் சாபேஷமாய் இறே இருப்பது –

ஜகதோ ஹித சிந்தையை ஜாக்ரதஸ் சேஷ சாயின
அவதாரேஷ் வன்ய தமம் வித்தி சௌம்ய வரம் முநிம் -என்றும்

ஆத்மா சேஷி பவசி பகவன் நாந்தரஸ் ஸாசிதா த்வம்-என்றும்

தேவீ லஷ்மீ பவசிதயயா வத்சலத்வேன ஸ த்வம் -என்றும்

சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ -என்னக் கடவது இறே

இப்படி முப்புரி யூட்டி இறே இவர் அவதார வைபவம் இருப்பது

இன்னம் இஸ் ஸ்லோகத்தில் பதங்கள் தோறும் இவ்வர்த்தம் காணலாய் இறே இருப்பது -எங்கனே என்னில்
ஸ்ரீ சைலேச -என்கையாலே அகார வாச்யனான சர்வேஸ்வரனைச் சொல்லி
தயா பாத்ரம் என்கையாலே -பகவத் அனன்யார்ஹ சேஷ பூதனான சேதனன் அவன் கிருபைக்கு பாத்ரம் என்னுமத்தை சொல்லுகிறது
அடியில் பதத்தில் ஆசார்யனை அவன் தானாக சொல்கிறது விசேஷ அதிஷ்டானத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேசம் போலே –
அஜ்ஞ்ஞானத் வாந்தரோதாத் -இத்யாதி
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாத்

தீ பக்த்யாதி குணார்ணவம் -என்கிற இப்பதத் தாலும்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் -என்றும்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞான பக்தி வைராக்யங்களை பிரதிபாதிக்கையாலே
அகாரோதித பகவத் சேஷத்வத்தை பக்தியாலே சொல்லுகிறது –

ஸ்வரூபமும் உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது இறே –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அனுபபத்தே –
ஜ்ஞானம் ஆவது -தத் ஜ்ஞானம் இறே -பகவத் ஏக அவலம்பியாய் இறே ஜ்ஞானம் இருப்பது
வைராக்கியம் ஆவது -தேவதாந்திர த்யாக பிரதானமாய் இறே இருப்பது-

யதீந்திர பிரவணம்
யதீந்த்ரர் ஆகையாவது ஸ்வ ஸ்வரூபத்தை அனுசந்தித்து துரும்பு நறுக்காது இருக்குமவர்களை
திருத்தி -திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அடிமை செய்விக்கை –
தம் அளவிலும் யதி சப்தம் அவிஷ்டம் ஆகையாலே தத் இந்த்ரராகையைப் பற்ற பிரவணர் ஆகிறார்
பகவத் அனன்யார்ஹ சேஷத்வம் ததீய பர்யந்தம் இறே

அன்றிக்கே
யதீந்திர பிரவணம்
அசாதாரணமான ராமானுஜ சப்த பர்யாய வாசகமாய் இறே இத்திரு நாமம் இருப்பது -அதுவும் பிரணவார்த்தம்-
ராம சப்தத்தாலே அகாரார்த்தமும்
அனுஜ சப்தத்தாலே தச் சந்த அனுவர்த்தியாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபம் இறே சொல்லுகிறது
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்தன -என்று இறே ப்ராவண்யம் இருப்பது

வந்தே ரம்யஜா மாதரம் முநிம் –
இத்தாலும் உக்தார்த்தமே சொல்கிறது
ரம்யஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனைச் சொல்லி
முனி சப்தத்தாலே தத் அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடைய பரம சேதனனைச் சொல்கிறது
ரம்ய ஜாமாதுர் மனனம் கரோ தீதி -ரம்ய ஜாமாத்ரு முனி
ஆக இவை எல்லாவற்றாலும் பிரணவ அனுசந்திக்கத் தட்டில்லை-

அயோத்யா மதுரா மாயா -என்றும் -வடதிசை மதுரை –அயோத்தி -என்றும் -அவதார ஸ்தலத்தை சொல்லுகிறபடியே
கோயிலுக்கு வடக்காய் இருக்கிற வடதிருவேங்கட நாட்டில் ஏரார் பெரும் பூதூரிலே
எம்பெருமானார் வட மொழியையும் தென் மொழியையும் வெளியிட அவதரித்து அருளினார் –

நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -என்னக் கடவது இறே

அரங்க நகரும் மேவு திருநகரியும் வாழ வந்த மணவாள மா முனி -என்கிறபடியே

தென்னாட்டுத் திலதமான தென் குருகூரிலே பெரிய ஜீயர் தென் மொழியை வெளியிடவே அவதரித்து அருளினார் –
விரவு தமிழ் மறை மொழியும் வட மொழியும் வெளியாய்ச் செல்லும் விசித்ர வியாக்யான சேஷன்-என்னக் கடவது இறே –
ஆர்யாச் ஸ்ரீ சைல நாதாத் –
இவருக்கும் இரண்டின் உடைய ப்ரவர்த்தகம் உண்டே யாகிலும் ஊற்றத்தைப் பற்ற ஒன்றிலே ஓதுகிறது

உடையவருடைய அவதார விசேஷம் ஆகையாலும்
மற்றும் சர்வதா சாம்யத்தாலும் யதிவர புநர் அவதாரம் ஆகையாலும்
தீர்க்க சரணாகதியை ஈன்ற முதல் தாயினுடைய மாதா பிதா போலே யோ நித்யமும் ஸ்ரீ சைலேசமும் நடந்து செல்கிறது-

இவரும் ஜன்ம பூமியை விட்டு வந்து –காவிரி நடுவு பாட்டிலே கருமணியைக் கண்டு -தன் மத்யஸ்தராய்-
வைஷ்ணவ ஸ்ரீ யோடு வாழ்ந்து கொண்டு இருந்து
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும்
ஸ்ருதி சாகரத்தையும்
திராவிட வேத சாகரத்தையும்
பெருகப் பண்ணி பெருமாளை நோக்கிப் போந்தார் –

அவர் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்

இவர் பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பான் அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மா முனிவன் என்னும் அர்த்தத்தை அருள் சுரந்தார் –

ஜீயர் அவதரித்து வெளியிடா போது கண்ணோந்தாரகமாய் இறே உடையவர் வைபவம் இருப்பது
இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபம் இறே இவர்

நர நாராயண அவதாரம் போலே இறே இவர்களுடைய அவதாரமும்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் -என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம் தநும் -என்றும்
யோ அத்யாபி சாஸ்தே-என்றும்
தஸ்யாம் ஹி ஜாகர்தி -என்றும்
இரண்டுக்கும் உண்டான தர்ம ஐக்யமும் அப்படியே -சம்பந்தமும் அப்படியே

அவர் நாராயண வைபவ பிரகாசகர்
இவர் ராமானுஜ வைபவ பிரகாசகர்

அவ்வதாரத்திலும் இவ்வவதாரத்துக்கு ஏற்றம் உண்டு
பிறப்பாய் ஒளி வரு
நாராயண
ராமானுஜ
என்று இறே சதுரஷரிகளின் வாசி இருப்பது

இவர் சதுரரிலே தலை யாகையாலே சரம சதுர அஷரியிலே நிலை நின்றார்

ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் –

தஸ்மான் மத் பக்த பக்தாஸ்ஸ பூஜா நியா விசேஷத -என்றும்
அடியேன் சதிர்த்தேன் இன்று -என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்றும் –
ஆழ்வாருக்கு மதுர கவிகளிலும் சரமமான திரு அடிகள் ராமானுஜன் ஆனால் போலே
அந்த ராமானுஜனான இவர்க்கும் ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யரிலும் சரமமான சரணங்கள் யதீந்திர பிரவணர் இறே
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத் தனியனும் சகல வேத சாரமான பிரபத்தி போலே நிரந்தர அனுசந்தேயமாகக் கடவது

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——-

தெய்வ வாக்கில் வந்த மஹிமை உண்டே –
இந்த ஸ்லோகம் அருளிச் செய்த ஸ்ரீ பெரிய பெருமாளே பண்டு
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாகவும் ஸ்ரீ கண்ணபிரானாகவும் திரு அவதாரம் செய்து அருளினவன் –

மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா -என்றும்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி அரங்கன் -என்றும்
மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -என்றும்
திரு அவதரித்த காலத்திலும் சில வியக்திகள் இடம் ஆஸ்ரயித்து திரு உள்ளத்தில் வெறுப்புடன் இருக்க

அது தீரும் படி ஸதாச்சார்ய லக்ஷண பூர்த்தியுடன் இவரை ஆஸ்ரயிக்கப் பெற்றோமே
என்று ஹ்ருஷ்டராய் இருந்தமை
இந்த ஸ்லோகத்தில் ஒவ் ஒரு விசேஷணத்தாலும் ஸ்புடமாகக் காட்டப்படுவதைக் காணலாம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் ஒரு ஸ்ரீ சைல தயாபாத்ரமான ஒரு வியக்தியை –சைலம் ரிஸ்யமுக பர்வதம் –
அதுக்கு ஈசர் மதங்க முனிவர் -அவருக்கு தயா பாத்திரம் சுக்ரீவன் –
ஸூ க்ரீவம் சரணம் கத-ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்று இருந்த பெருமாள் மனஸ்தாபம் பட
நேர்ந்த குறை தீர திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளுக்கு
இலக்கான நம் ஸ்வாமியை அடைந்து குறை தீரப் பெற்றான்

அங்கு சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி-என்ற விபீஷணன் வாக்கின் படி சரண் அடைந்தும்
சாபமாநயா ஸுமித்ரே சராம்ச்ச ஆஸீ விஷாபமான் சாகரம் சோக்ஷயிஷ்யாமி -என்று முடிந்த குறை தீர
இந்த ஞான பக்தி வைராக்யக்யம் மிக்குள்ள ஆர்ணவம் பற்றி குறை தீரப் பெற்றான்

அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர் -இதில்
மந்திபாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்று அருளிய
அரங்கத்து அரவின் அணையானுக்கு மனஸ்தாபம் இல்லை என்றாலும் –
தன்னை யுற்று ஆட் செய்வதில் காட்டிலும் தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோரை யுற்று
ஆட் செய்வாரையே சிறந்தவர் என்று பாடக் கேட்டவர் ஆகையால்
யதீந்த்ரை விட யதீந்த்ர ப்ரவணரை இறைஞ்சி மகிழ்ந்தான்

விச்வாமித்ர சாந்தீப முனிகளை அடைந்து பட்ட குறைகள் தீர ஸமஸ்த கல்யாணக் குணக் கடலான
வைராக்ய நீதியான ரம்யஜா மாத்ரு முனியை ஆஸ்ரயித்து ஹ்ருஷ்டர் ஆனான்

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளே தஞ்சம் எனத் தாம் கொண்ட மின்னு புகழ்
வேதியர்கள் தாள் அன்றி வேறு அறியாதார்
மேதினியில் விண்ணவருக்கும் மேல் அன்றோ –

———————————–

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-–6-

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

பிரமாதீச வருஷம் -ஆனி -பவுர்ணமி -மூலம் -12-6-1433-அன்று தனியன் அவதாரம்

ஸ்ரீ குரு பரம்பரை அனுசந்தானம் லஷ்மீ நாத -தனியன்
ஸ்ரீ ராமானுஜர் -யோ நித்யம் அச்யுதா -தனியன்
ஸ்ரீ நம்மாழ்வார் -மாதா பிதா -தனியன்
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்துதி -பூதம் சரஸ் ஸ-தனியன்

மா முனிகளுக்கு முன்பு உள்ள தனியன் அனுசந்தான க்ரமம் இப்படியே இருக்க –
அவற்றுக்கும் முன்பு இந்தத் தனியனை அனுசந்திக்க ஆணை பிறந்தது
இதுவே குரு பரம்பரைக்கும் பொருந்தும் –

ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் உள்ள ஆச்சார்யர்கள் அனைவருக்கும் பொருந்தும் படியை மேல் பார்ப்போம்

ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ சைலம் -திருமலை –
திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் வெற்பு -என்றும்
திருமலை மேல் எந்தைக்கு -என்றும் ஸ்ரீ பேயாழ்வார்
அந்த ஸ்ரீ சைலத்துக்கு ஈசன் திருவேங்கடவன் -அங்கு இன்றும் ஸ்ரீ ரெங்க மண்டபம் உண்டே –
நம் பெருமாள் பல ஆண்டுகள் அங்கே எழுந்து அருளினது நாம் அறிந்ததே

ஸ்ரீ சைலத்தைத் தனக்குப் பாத்திரம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும் கொள்ளலாம் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடமான -உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலையைத்
தன்னுடைய தயைக்குப் பாத்திரம் ஆக்கி
தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் -நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -விட்டு
பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்தான் அன்றோ –
திருவரங்கன் தீ பக்த்யாதி குண ஆர்ணவன்
யஸ் ஸர்வஞ்ஞ-ஸர்வ வித் -என்றபடி ஞானக்கடல்
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -ப்ரீதி -அடியவர்கள் இடம் அளவற்ற ப்ரீதி கொண்டவன் -அன்றோ

யதீந்த்ரர் இடம் இவன் கொண்ட ப்ராவண்யம் லோக ப்ரஸித்தம் –
அவரும் மயலே பெருகும் படி ப்ராவண்யம் அரங்கன் மேலே கொண்டவர்

ரம்யஜா மாதா -அழகிய மணவாளன் தானே –

முனி -மனந சீலன் -உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான் அன்றோ

—————-

2-ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
ஸ்ரீ திருமலையைத் தனக்குப் பாத்திரமாகி பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்த நம்பெருமாள்
ஸ்ரீ சைலன் என்று கொண்டு அவன் தயைக்குப் பாத்திரம் அன்றோ இவளும்
இவளே ஸ்ரீ பத்மாவதிப் பிராட்டியாக ஸ்ரீ சைலனான திரு வேங்கடம் உடையானுக்குப் பாத்ரம் ஆனாள் –
திருவேங்கடத்தைத் தனது தயைக்குப் பாத்திரம் ஆக்கி ஐஸ்வர்யம் பொலிய ஆக்கி அருளினாள் என்றுமாம் –

அவன் ஸ்வரூபத்தாலே விபு -இவள் ஞானத்தால் விபு –
அகலகில்லேன் இறையும் -என்று தண்ணீர் தண்ணீர் என்னுமவள் ஆகையால் பக்தி ஆர்ணவம் அன்றோ –

விந்த்ய மலை அடிவாரத்தில் இருந்து யதீந்த்ரரை மீட்டு -வேடுவச்சியாக தண்ணீர் கேட்டு –
ப்ராவண்யம் காட்டி அருளினாள் அன்றோ –
அவரது ப்ராவண்யம்-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே –ஸ்ரீ பாஷ்யத்திலும் ஸ்ரீ கத்யத்திலும் காணலாமே –

ரம்யஜா மாதரம் -அழகே வடிவு எடுத்தவள் -உலகுக்கு எல்லாம் தாய் அன்றோ
முனி -சேதனர் உஜ்ஜீவனத்துக்காகவே அவனை அழகாலும் இவர்களை அருளாலும் திருத்துபவள் அன்றோ –

———–

3-ஸ்ரீ சேனை முதலியார்
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றும்
வானவர் வானவர் கோன் உடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்றும்
அவன் தயைக்குப் பாத்திரமானவர் அன்றோ –

த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா த்வயா நிஸ் ருஷ்டாத்மப ரேண-ஸ்ரீ ஆளவந்தார் வாக்கின் படி
உலகையே நிர்வகிக்கும் ஞானத்தையும்
அவன் அமுது செய்து அருளிய ப்ரஸாதத்தையே அமுது செய்கின்ற பக்தியும் உடையவர் அன்றோ

விஸ்வக்சேனோ யதிபதிரபூத் –சப்தாதி –32-என்றபடி யதீந்த்ர அவதார பிரவணர் அன்றோ இவர்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம் த்யானம் செய்பவர் அன்றோ –

——————————-

4- ஸ்ரீ நம்மாழ்வார்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-
உலகம் உண்ட பெரு வாயா –6-10-
ஸ்ரீ த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இரண்டுமே திருவேங்கடப் பதிகங்களே –
அவனுடைய பரிபூர்ண தயைக்குப் பாத்ரம் ஆனவர்

மதி நலம் அருளப் பெற்றவர் -தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பராங்குச பாத பக்தம்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம்-
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் என்று வாய் வெருவும்படி இருப்பவர் அன்றோ –

—————-

5-ஸ்ரீ நாத யாமுனர் தொடக்கமாக ஸ்ரீ எம்பெருமானார் ஆச்சார்ய குரு பரம்பரை –
அனைவருமே ஸ்ரீ சைல நாத பாத்ர பூதர்களே
ஞான வைராக்ய ராஸயே
அகாத பக்தி சிந்தவே

அனைவரும் எம்பெருமானார் ப்ராவண்யத்துக்கு இலக்கு ஆனவர்களே

ஸ்ரீ எம்பெருமானார் பரமாகும் பொழுது ஸ்ரீ ஆளவந்தாரே யதீந்த்ரர் என்று கொள்ளலாமே

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி என்றபடி அழகிய மணவாளனையே –
ஸர்வ காலம்- சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள் தானே அனைவரும் –

————————-

ஸ்ரீ வைஷ்ணவ வேர் பற்று ஸ்ரீ ரெங்கமே
ஸ்ரீ மா முனிகள் ஒருவரே சகல பூர்வாச்சார்யர்கள் வடிவமாக -embodiment -திகழும் ஸ்வாமி
மா முனிகளின் அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில்
சர்வ பூர்வோத்தர ஆச்சார்ய ஸூதா சாகர ஸந்த்ரமா -என்பது உண்டே

இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-6-வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்–

November 20, 2014

பெரிய பிராட்டியார் முன்னிலையாக நைமிசாரண்யம் எம்பெருமான் திருவடிகளில் சரணம் புகுகிறார்
அவன் மேன்மையையும் தன்னுடைய தாழ்வையும் சொல்லி சரணம் புக வேண்டுமே
க்ருத்ய அகரணம் அக்ருத்ய கரணம் -பிரகிருதி வாசனையால் ஸ்வல்ப தோஷங்களையும்
நைச்ய அனுசந்தான ரீதியில் பெருக்க சொல்லி
பகவத் சந்தியில் தம்முடைய தோஷங்களை சொல்வது ஆவஸ்யகம் சாஸ்திர மரியாதை கட்டி அருள –
நைமிசாரண்யத்தில் அரண்ய ரூப சேவை
புஷ்கரத்தில் தீர்த்த ரூபம் சேவை
நைமிசம் நேமி விழுந்த ஸ்தலம் -தவம் செய்ய சிறந்த இடம் என்று காட்டி அருள –
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே –திருவடி அடைந்தேன் -என்று பிராட்டி முன்னாக சரண் அடைகிறார்

————————————————————————–

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-

வாள் நிலா முறுவல் -ஒளி நிலாவுகின்ற முறுவல் -ஒளி வீசும் நிலா போன்ற முறுவல்
சிறு நுதல் -நகிலம் தோள் கண் என மூவழிப் பெருகி –நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி -கலித்தொகை
முலை தோள் கண் மூன்று அவயவங்கள் பெரிதாகவும்
நெற்றி பாதம் இடை மூன்று அவயவங்களும் சிறுத்து இருக்கை அழகு
நெற்றி சிறுத்து இருக்கை இல்லையாகில் பும்ஸ்த்வ கந்தியாய் இருக்கும் இறே-பெரியவாச்சான் பிள்ளை
ஆழ்வார் நா வீறு விலஷணம் உடையவர் ஆகையால் அல்ப விஷயங்களையும் கனக்க பேசுவர்
மேலே ஆறாம்பத்தில் -சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்தில் ஆழ்ந்தேன் -என்பர்
இங்கும் வனமுலையே பயன் பேணினேன் -என்கிறார்
நெடு நாள் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை என்பதே இல்லாமல்
விஷய அனுபவத்துக்கு மேல்பட்ட புருஷார்த்தமே உலகில் கிடையாது என்று அதில் ஆழ்ந்து இருந்தேன்
பின்பு சாஸ்திர விஸ்வாசம் உண்டாகி -விஷய போகம் பிசகு -என்கிற புத்தி மாத்ரம் பிறந்தது
ஆனால் அதை விட்டு ஒழிந்து நல் வழி போகப் பெற்றிலேன்
அந்த இரண்டு அவஸ்தைகளும் நீங்கி
இன்றி விஷய போகங்களை காறி உமிழ்ந்து
பிறவி நோய் அறுக்கும் வழியிலே வந்து நின்றேன்-

—————————————————————–

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-2-

ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே
தன்னுடைய உஜ்ஜீவனதுக்கு உபாயமானத்தையே யாயிற்று
வருந்தி மறப்பது -அறத்தையே மறந்து -ஸ்திரீ போகத்தில் ஈடுபட்டு
பாவத்தை மறக்காமல் புண்ணியத்தையே மறந்தேன்
அலம் புரி தடக்கை
அலம் -போதும் -சர்வ ஸ்வதானம் பண்ணி அருளும் திருக்கை
ஹலம் கலப்பை -பலராமனுக்கு கலப்பையும் உலக்கையும் திவ்ய ஆயுதங்கள் –
ஹலாயுதன் -ஹலீ -முசலீ -திரு நாமங்கள் இதனால் உண்டு
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி -இறைஞ்சுன் திருவடி-பாட பேதங்கள் -இறைஞ்சு உன் திருவடி என்று பிரிக்க –

———————————————————–

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

சூது -களவு
விவேகியாய் இருப்பவனை -நாஸ்திகனாய் மாற்றுவது சூது
எம்பெருமானுக்கு சேஷமான ஆத்மவஸ்துவை தனது என்கை -களவு
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -திருமாலை
கண்டவா திரிந்த தொண்டனேன் -ஸ்த்ரீகளுக்கே தொண்டு பட்டு
உனக்கு தொண்டனான நான் இப்படி கண்டவா திரிந்து என்றுமாம்

———————————————————————–

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மனைவி -சிறப்பித்து சொல்லி
பிறர் பொருள் தாரம் -என்றது
விஷயாந்தரங்களிலே ஸ்ப்ருஹை பண்ணுமே –
அவற்றில் வந்தால் வம்புலாம் கூந்தலாகவும் வேண்டா வாய்த்து
பிறராம் இத்தனை யாய்த்து ஆதரிக்க வேண்டுவது -பெரியவாச்சான் பிள்ளை –
நமன் இத்யாதி –
சர்வேஸ்வரன் தன்னோடு ஒக்க
சமமாக ஆராய்ந்து கேட்பான் ஒருவனாக விட்டவன் ஆயிற்று -யமன் ஆகிறான் –
அவன் தான் தன்னோடு ஒப்பார் சிலரை யாயிற்று வர விட்டது –
அவர்கள் தாங்கள் ஒரு கைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவர்கள் ஆயிற்று –
பின்னை இவன் உடம்பு தன்னோடு எற்றுவர்கள்
அநந்தரம்
தங்கள் கை சலித்த வாறே பொகட்டு இட்டு வைப்பர்கள் –
இவர் இத்தனை பொழுது ஸ்திரீகளை ஒழிய இருக்க வல்லீரோ
அவளை அணைப்பியும் -என்பர்கள் –
இவனும் நம்மை நலிவது எல்லாம் நலிந்தார்கள் ஆகில் இனி அவளை
அழைக்கிறார்கள் இத்தனை யிறே -என்று குறு விழி கொண்டு கிடக்கும் –

எரி -இத்யாதி –
எரி எழா நிற்பதாய்
செம்பாலே செய்யப்பட
பாவையைப் பாவீ தழுவு என்பர்கள் ஆயிற்று –
கெடுவாய் அவர்கள் ஒழியச் சினம் இருந்தவர்கள் ஆகிலும்
அனுதாபம் பிறந்து
உகந்து அருளிற்று ஒரு திரு வாசலிலே ஒதுங்கினாய் ஆகில்
இன்று எங்களுக்கு கை சலியாது ஒழியல் ஆயிற்று –
என்பர்கள் ஆயிற்று –

மொழிவதற்கு அஞ்சி–இத்யாதி –
அவர்கள் பண்ணும் நலிவை பொறுக்கலாம் ஆகாதே
க்ரூரமான பேச்சாயிற்று பொறுக்கப் போகாதது

————————————————————–

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-5-

துற்று -ஒரு கவளம்
நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை -பாவங்களுக்கு பலன் உண்டு எண்ணாமல் செய்து விட்டேன் –
இப்பொழுது தவிக்கின்றேன்
கடும் சொலார் -அவர்கள் செய்யும் ஹிம்சைகளை விட சொற்கள் கடினமானவை
கொடுமிறை -கொடிய வருத்தங்கள்

—————————————————————————

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்–
உயிர்களே கொன்றேனாய் உணர்விலேனான நான் வந்து உன் திருவடி அடைந்தேன் ஆதலால்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் -என்று அந்வயித்து
இனி யமன் ஆணை யமபுரத்தில் செல்லாமல் செய்து விட்டேன்
அன்றிக்கே
உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் -என்று உள்ளபடியே அந்வயித்து
இப்போது இருக்கும் எமனால் கலியனைத் தண்டிக்க முடியாது
இந்த எம புரம் உபயோகம் அற்றது
இனி வேறு யமனும் யமபுரமும் வேணும் -என்றபடி

—————————————————————————

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

மனம் மொழி மெய் மூன்றினாலும் பாவங்களையே செய்து-
தொல் நெறி -அநாதியான -அர்ச்சிராதி கதியும் தூமாதி மார்க்கமும் தொல் மார்க்கம்
சுக்ல கிருஷ்ணா கதி ஹயதே ஜகதஸ்சாச்வதே மாதே
ஏகயா யாத்ய நாவ்ருத்தி மன்ய- யாவ்ருத்ததே புன -கீதை
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் -அடியேன் என்று சொன்னதை மெய் என்று கொண்டு
நெஞ்சினில் புகுந்து அருளினாய்
தானவர்க்கு என்றும் நஞ்சனே –

————————————————————————

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஏவினார் கலியார் -இத்யாதி –
கலி புருஷன் என்னைத்  துன்பப் படுத்த நினைத்து தனக்கு கையாட்களான இந்த்ரியங்களை அழைத்து –
நீங்கள் திரு மங்கை ஆழ்வாரை நன்றாக ஹிம்சித்து விடுங்கள் என்று ஏவினான் –
நான் இத்தனை நாளும் இருந்தபடி இருந்தேன் ஆகில் அவற்றால் மிகவும் துன்பப் பட்டு இருப்பேன் –
தைவா தீனமாக நான் பழைய நிலையில் நின்றும் நீங்கி
உன் திருவடிகளிலே புஷ்பங்களை சமர்ப்பித்தும் -நமஸ்காரம் செய்தும் –
ஸ்தோத்ரங்களை பணியும் வருகிறேன் ஆகையாலே
இந்த்ரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்ல ஒண்ணாத படி தடுத்து விட்டேன்
கலி புருஷனுடைய கட்டளை பாறிப் பறந்து போயிற்று
அந்தக் கலி புருஷன் இனி இவ் வுலகில் வாழ்வதற்கே வழி இல்லை என்று
திரு உள்ளம் யுகந்து அருளிச் செய்கிறார் ஆயிற்று –
கலியார் -பெருமைப் படுத்திச் சொல்லுகிற வார்த்தை அன்று
கோவமும் -பகையும் -இழிவும் -தோற்றச்-சொல்லுகிறபடி –
வினையார் -என்று பாபங்களைச் சொல்லுவது போலே –
நலிக -வியங்கோள் வினை முற்று –
எங்கனே வாழுமாறு -என்கிறதுக்கு -இனி எப்படி வாழ்வேன் என்று ஆழ்வார் இந்த்ரியங்களுக்கோ கலி புருஷனுக்கோ
அஞ்சி நடுங்கிச் சொல்கிறதாகப் பொருள் கூறுவார் -சிலர் அது பிரகரணத்துக்குச்   சேராது –
கோவினார் செய்யும் கொடுமையை மடிந்தேன் -என்று உடனே அருளிச் செய்கிறார் ஆகையாலே
தாம் அஞ்சினதாக பொருள் கொள்ள ஒண்ணாது
அந்த கலி புருஷன் வாழ்வதற்கு இனி வழி யுண்டோ -என்பதாகவே கொள்க –

—————————————————————-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

தம்முடைய அத்யவசாயத்தை வெளியிடுகிறார் இதில் –
சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப் படுத்துகின்றார் –
குடிசையில் இடை இடையே சுவர்கள் வைக்கப் பட்டு இருக்கும் –
இவ் வுடம்பில் மாம்ச பிண்டங்கள் சுவர் போலே இருக்கின்றன –
குடியில் தூண்கள் நாட்டப் பட்டு இருக்கும் -இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன –
குடிசையில் பல வாசல்கள் யுண்டு -யுடலிலும் நவத்வாரங்கள் பிரத்யஷமே
குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப் பட்டு இரா நிற்கும் –
இதுவும் யுரோமங்களால் மூடப் பட்டு இரா நின்றது –
ஆக இவ்வகைகளால் ஒரு குடிசை  என்னலாம் படி இரா நின்றது இவ் வுடல்
குடிசையில் நாம் வாழ்வது போலே இவ் வுடலில் ஆத்மா வாழ்கின்றான் –
இவ் விடலை விட்டு ஆத்மா வெளிக் கிளம்பும் காலமே மரணம் எனப்படும் –
அம் மரணம் நேர்ந்த பிறகு இவ் வாத்மா போய்ச் சேர வேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே
என்கிற அத்யாவசாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தார் ஆயிற்று –
எம படர்கள் வந்து என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு போய்
பலவகையான ஹிம்சைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்து இருந்தாலும்
இன்று தேனுடைக் கமலத் திருவாகிய பெரிய பிராட்டியாரை முன்னிட்டு உன்னை சரணம் அடையும்படியான பாக்யம்
எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யம புரம் சென்று வருந்த வேண்டிய ப்ரசக்தி இல்லை –
உன் திருவடிகளையே கிட்டி ஆனந்திக்க வழி ஏற்பட்டு விட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டார் என்று உணர்க –
நானுடைத் தவத்தால் -என்றது என்னுடைத் தவத்தால் என்றபடி –
இவருடைய தவமானது என்ன என்றால் -எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக் கொள்வார்கள் ஆழ்வார்கள் –
உன் அருளாலே உன் திருவடி வந்து பணிந்தேன் -என்றபடி –

——————————————————————

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

இமையோர் நாதனாகிய இந்த்ரன் தனது பரிவாரங்களை எல்லாம் அழைத்து நாம் எல்லோரும்
நைமி சாரண்யம் சென்று எம்பெருமானை சேவிப்போம் வாருங்கள் -சேவித்தோம் ஆகில்
நம்முடைய ஏதங்கள் எல்லாம் ஓடிப் போம் -என்று சொல்லி எல்லாரைக் கூட்டிகோ கொண்டு
வந்து சேவித்து இருக்கும் இடம் நைமி சாரண்யம் –
அவ்விடத்தில் அரண்ய ரூபியாக  சேவை சாதிக்கிற எம்பெருமான் விஷயமாக
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த இச் சொல்மாலையை ஓத வல்லவர்கள் –
இவ் வுலகத்து அனுபவங்களில் விருப்பம் யுண்டாகில் அவற்றை யுண்டு களித்த பின்
நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்ய ஆனந்தம் அனுபவிக்கப் பெறுவார்கள்
என்று இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டினார் ஆயிற்று –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-5–கலையும் கரியும் பரிமாவும்–

November 20, 2014

திருமந்தரம் லபித்த படி முதல் திருமொழியில் பேசி
அடுத்து திரு பிதிரி திவ்ய தேசம் அனுபவித்து
அடுத்த திரு மந்த்ரம் அருளிச் செய்த ஸ்ரீ பத்ரி நாராயணன் எழுந்து அருளி இருக்கும்
ஸ்ரீ வதரியையும் ஸ்ரீ பத்ரிகாஸ்ரமும் அனுபவித்து
எம்பெருமான் ஸ்ரீ சாளகிராமம் திவ்ய தேசம் ஆழ்வார் ஞானக் கண்ணுக்கு தோற்றுவிக்க
நெஞ்சே சாளக்கிராமத்தை சென்று சேருவோம் வா -என்கிறார் இதில்
எம்பெருமான் ஆஸ்ரிதர்களான அஸ்மாதாதிகளை அனுபவிக்க
பல திவ்ய மங்கள விக்ரஹங்களைப் பரிக்ரஹித்து திவ்ய தேசங்கள் தோறும் சந்நிதி பண்ணி அருளுகிறான்

சௌபரி போகத்துக்கு உறுப்பாக அநேகம் வடிவு கொண்டாற் போலே
ஆஸ்ரிதரை அனுபவிகைக்கு உறுப்பாக
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புகுந்து
சந்நிதி பண்ணினான் ஆயிற்று அவன் –
இனி இவர்
தாமும் தன உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி-
எங்கும் புக்கு அனுபவிக்கையிலே யாயிற்று
அபேஷை பண்ணி இருப்பது –
ஒரு விஷயத்தை அனுபவிக்கப் புக்கால்
அவ்விஷயத்தில் அவயவங்கள் தோறும் ஸ்ப்ருஹை பண்ணுவாரைப் போலே
யாயிற்று இவர் எங்கும் புக்கு அனுபவிக்கப் பாரிக்கிறதும்

——————————————————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் -கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி
வென்றிச் செரு-சென்ற இடங்கள் எல்லாம் வெற்றியே கர தூஷணாதிகள் முதலிய இடைப் போர்கள் உண்டே
அதனால் சென்றான் வென்றிச் செருக் களத்து-என்கிறார்
சிலையும் கணையும் துணையாக கானம் கடந்து போய்
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி வென்றிச் செருக் களத்து சென்றான் என்று அந்வயம் –

வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் -ஒரு தேவதையை ஆஸ்ரயித்து
அதின் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று
அது தனக்கு அரணாக நினைத்து இருப்பவனாய் –
துர் வர்க்கத்துக்கு எல்லாம் நியாமகனாய் –
இருக்கிற ராவணனுடைய
தலைகள் பத்தையும் அறுத்து –
தேவர்களும் தம் தாமுடைய குடி இருப்பு பெற்றார்கள்
ருஷிகளும் தம் தாமுடைய ஆஸ்ரமங்களில் இருந்து தபஸ் பண்ணப் பெற்றார்கள்
என்று உகந்தவன்-

———————————————————

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-2-

விசாலமான ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்கள் இங்கு வந்து சேவிக்கும் படி அழகான சந்நிவேசங்களை உடைய தேசம்
புஷ்ப வாசனைகள் வீசுகின்ற தடாகங்களால் சூழப்பட்டு
எல்லா பக்கங்களிலும் அழகாய் உடைத்தான சாளக்ராமம்-

—————————————————————

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே——1-5-3-

பண்டை நான் மறையும் வேள்வியும் கேள்விப் பயன்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யானாலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நிற்ற எம்பெருமான் -என்றபடி
ஜகத் ஸ்வரூபியாய் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -ஸ்ருதி சாயலில்
வென்றி விறலாழி வலவன் -அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
சலம் -தீராக் கோபம் -வஞ்சம் -பொய் –
சலவன் சலத்தை உடையவன்
நல்லார்க்கு மெய்யனாய் தீயார்க்கு பொய்யனாய்

—————————————————————–

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

ஊரான் குடந்தை திரு ஊரகம் திருக்குடந்தை
தேரா அரக்கர் -ஆராயாத அரக்கர் -சாஷாத் புருஷன் எம்பெருமான் உடனா நாம் எதிர் இடுவது என்று ஆராயாமல்
வற்றா வரு புனல் சூழ் பெறான் திருப்பேரான்
பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் -பிறங்கு= பிரகாசித்தல் -நிறைந்து இருத்தல்
சிறைக்கும் தாருக்கும் விசேஷணம்
தாரா வயல் சூழ்ந்த -தாரா பஷி விசேஷம் -சாரச பஷி என்பர்

———————————————————————–

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

ராமஸ்ய தஷிணோ பாஹூ
கல் ஓன்று ஏந்தி -அநாயாசமாக கோவர்த்தன மலை எடுத்தான்

அயில் கூர்மை

——————————————————————-

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

விழுதும் -வெண்ணெயும்
ஏயான்-யாசிக்கத் தகாதவன் -அலம் புரிந்த தடம் கையனாய் இருந்து வைத்து
தயிர் வெண்ணெய் போலே பூதனை உயிரும் போக்யமாய் இருந்தமை
தஸ்யாஸ் ஸ்தனம் பபௌ கிருஷ்ண ப்ராணைஸ் சஹ நனாத ச -ஸ்தண்யம் தத் விஷ சம்மிச்ரம்
ரச்யமாசீத் ஜகத் குரோ -ஹரி வம்சம்
பெருமா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பாலமுதா வமுது செய்திட்ட மாயன்
இறப்ப -அவனும் மூவடி மண் தாரை வார்த்து கொடுப்ப
மாவலியையே யான் இரப்ப-மா வலியை நோக்கி -யான் இரப்ப மூவடி மண் இன்றே தா –
மாவலியை ஏ யான் இரப்ப -ஏ -அடா மாவலி என்றபடி

——————————————————————

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-7-

உலகேழும் தாயோன் -சர்வ வ்யாபகத்வம் நினைவுக்கு வர எங்கும் உளன் கண்ணன்
ஏனோர் இரணியனும் அவனுக்கு பக்க பலமாய் இருந்த அசூர வர்க்கங்கள்
உலகம் அனைத்தும் தானாய் -அந்தராத்மா சாதாரண ஆகாரம்
தானும் ஆனான் -அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்-

—————————————————————

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-

கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே
ஈஸ்வர அபிமாநியாய்
தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவன் சென்று –
-என் ஸ்வாமீ என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –

—————————————————————–

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேணும் -கைங்கர்யம் செய்யப்
பாரிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியும்
இங்கே சௌசீல்ய சௌலப்யம் அனுபவிக்க வந்த நித்ய சூரிகள் கோஷ்டியும்
நாம் உயர்ந்த ஜாதி பிராமணர் -சாமான்யர் உடன் சேரக் கூடாது என்று எண்ணி இருக்கும் கோஷ்டியும்
வயலின் அயலே கயல் பாய அயல் வயலின் கயல் பாய -அயல் -அருகும் இடமும்-

———————————————————

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே–1-5-10-

சஹஸ்ர நாம சங்கீர்த்தனம் பண்ணும் பலமும்
இப்பதிகம் கற்கும் பலனும் துல்யம்
அன்று இவை ஓதுமினோ என்னாமல் பிதற்றுமினே
சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும் தன ஸ்வரூபம் கெட நில்லாது –
முமுஷூப்படி இது போன்ற அருளிச் செயல்களின் அடி

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-4-ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து —

November 20, 2014

கீழ்த் திருமொழியில் -வதரி வணங்குதுமே -என்று ஸ்ரீ பதரிகாஸ்ரமத்து
ஆஸ்ரயமான திருமலையை வணங்கப் பாரித்தார்
ஸ்ரீ பத்ரி நாதன் எழுந்து அருளி இருக்கும் சந்நிதி மாத்ரம் இவர்க்கு உத்தேஸ்யம் அன்று
அந்த சந்நிதிக்கு ஆதாரமான திரு மலை முழுதுவதுமே உத்தேஸ்யம் என்பதால் அது தன்னைப் பேசினார் கீழ்
வழி அடைவே மலை உச்சியில் சென்று ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் என்னும் சன்னிதியையும்
அதில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ நாராயணப் பெருமாளையும் அனுபவித்துப் பேசுகிறதாய் இருக்கிறது இத் திருமொழி
நர நாராயணனாய் சிங்காமை விரித்து அருளின ஸ்தலம்-

—————————————————————–

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-1-

இமையார் வணங்க ஏனமாகி
இமையவர் வணங்க தடம் சிலை குனித்த
என்று நடு நிலைத் தீபகமாக அனுபவிப்பது –
தேவர்கள் வணங்கும் படியாகவும் வணங்கினதாலும் திருவவதரித்து சேஷ்டிதங்கள் செய்து அருளினான் –
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்பர் மேலும்-
தடம் சிலை குனித்த என்பதால் தானவன் இராவணன் என்பர் பெரிய வாச்சான் பிள்ளை
வணங்கும் -கங்கையிலும் வதரியாஸ்ரமத்திலும் அந்வயிக்கும்
வதரியாஸ்ரமம் -வதரியாஸ்ராமம் -இரண்டும் பாட பேதங்கள்-

———————————————————————–

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே——1-4-2-

கானிடை உரு -தண்ட காரண்யத்தில் வந்த மாய மான் -உரு -மான்
கொடும் தொழில் உரவோன் -வாலியை நினைக்கிறது
அயன் -அஜன்-அகார வாச்யனான எம்பெருமான் இடம் தோன்றியவன்
முது நீர் -இமம் மே கங்கே யமுனே சரஸ்வதி -உபநிஷத்
வேதம் போலே நித்தியமான நதி-

—————————————————————————–

இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—1-4-3-

கடலும் கெட -சாகரம் சோஷயிஷ்யாமி-சீறிச் சிவந்த கண்ணினனாய் பெருமாள் அம்பு தொடுத்ததனால்
கடல் கெடக் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் என்னக் குறை இல்லையே
அணை கட்டின அரும் தொழிலைக் கூறினதாகவுமாம்
இரு நிதி -சங்க நிதி பத்ம நிதி குபேரன் இடம் கவர்ந்து கொண்டவை
கொழும் சுடர் சுழன்ற விலங்கல் -சூரியன் சுழன்ற மேருமலை
மேரு ப்ருஷ்டே பதித்வோச்சை நிஷ்க்ராந்தா சசி மண்டலாத்
ஜகத பாவ நார்த்தாயா யா ப்ரயாதி சதுர்திசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-112-
மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து -கங்கை நீர் விசும்பின் மீது ப்ரவஹிப்பதைப் பார்த்தால்
த்வஜங்களில் கட்டப் பட்ட வெளுத்த துணிகள் காற்றில் அசைந்து பரம்புவதை போலே -உத்ப்ரேஷிக்கிற படி-

————————————————————————–

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-4-

கண்ணன் செய்யும் கார்யம் எல்லாம் செய்யும் அக் கங்கை தானும்
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி –
அரம்பையர் -தெய்வப் பெண்கள் –

—————————————————————–

பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-

அண்டம் -மேலுலகம்
அண்டத்தைத் தரிக்கும் செம்பொன்மலை மேரு
அதில் விளங்கும் விசாலமான சிகரத்தின் நின்றும் இழியும் கங்கை என்றவாறு-

———————————————————————

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-6-

ஏறு எழும் அடர்த்த பனி முகில் வண்ணன் -திரு மேனிக்கு ஒரு வாட்டமும் இல்லாமல் செய்த செயல் என்று காட்டி அருளுகிறார்
கருவரை-கருமை பெருமை பெரிய மலை -கங்கை வரும் வழியில் உள்ள பெரிய மலைகளை பேதித்துக் கொண்டு
அங்குள்ள யானைகளையும் உருட்டிக் கொண்டு வந்ததாம்-

———————————————————————

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—-1-4-7-

ஒருமுகமாக இழிந்தால் பெரிய மிசையோடு வருகிற மிடுக்கை கடல் பொறாது என்று
தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து
கங்கை பல முகமாக பெருக அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்க
அவன் கங்கையை நியமித்த அளவில் ஆயிரம் முகமாக பெருகிற்றாம்
அன்றிக்கே
கங்கை தன்னை ஆஸ்ரயிக்க அது தான் அருளுகை யாகவுமாம் –
இன்னார் அடி இணை அந்தரத்தமரர் வணங்க -என்று இல்லாமையால் இரண்டும் கொள்ளத் தகும்
ஆயிரம் முகம் -அநேக பிரகாரம் என்றுமாம்
மேருவில் இழிந்து மந்தரத்திலே இழிந்து ஹிமவானிலே இழிந்து ஹிமவானிலே இழிந்து
இங்கனே பல வகைகளிலே வரும்படியை சொல்லிற்றாகவுமாம்
மந்தரம் -மந்தர மலை –

——————————————————————–

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே——1-4-8-

தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கை –
விஸ்வாமித்ரர் -பிறப்பால் ஷத்ரியன் தவம் புருந்து ப்ரஹ்ம ரிஷியாக உயர்த்தி பெற்றவர்
ஸ்ரீ ராம லஷ்மணர்களை தன் கரை மேல் கொணர்த –
ஸ்ரீ பராங்குச தாசர் -மா முனி புகன்ற கங்கையின் கரை மேல் -திருத்திக் கொள்ளலாம் என்ன
நம்பிள்ளை -உள்ள பாடத்துக்கு நாம் பொருள் உரைக்கக் கடைமைப் பட்டு இருக்கிறோம் அன்றி
இல்லாததோர் பாடத்தை கற்பிக்க வல்லோம் -என்றாராம்
தவம் புரிந்து உயர்ந்த மா முனி -பகீரதி சொன்னதாகவுமாம்

—————————————————————————–

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-9-

ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் -உபய விபூதி நாதத்வன்
உம்பர் ஆனான் -நித்ய விபூதி நாதன்
ஊழியும் ஆனான்–ந கால்ஸ் தத்ர வை பிரபு -விண்ணுலகத்துக்கு பிரதிகோடியாய்-
காலம் நடமாடக் கடவதான – லீலா விபூதி நாதன்
அண்டமூடறுத்து அந்தரத்து இழிந்து –
அண்டம் -ப்ரஹ்ம லோகம்
அதை ஊடறுத்து- நடுவே வழி பண்ணிக் கொண்டு
அந்தரத்து இழிந்து -அதுக்கு கீழ்ப்பட்ட அந்தரிஷலோகத்திலே இழிந்து
அங்கு அவனியாள் அலமரப் பெருகும் -அங்கு நின்றும் பூமிப் பிராட்டி பொறுக்க முடியாமல்
தடுமாறும்படி பூமியிலே பெருகும்-

—————————————————————–

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே–1-4-10-

ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே –வைகுந்தம் எறுவாறே-என்னாமல்
இருகடலும் ஆள்வதான சூத்திர புருஷார்த்த பலன் சொல்வான் என் என்று நஞ்சீயர் பட்டர் இடம் கேட்க
திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்தமாகி விட்டது காணும் –
பணம் உள்ள இடங்களிலே சென்று கொள்ளை அடித்து பகவத் பாகவத கைங்கர்யங்கள் பண்ணுவார் ஆகையால்
ஹேயமான ஐஸ்வர்யமும் இவ்வாழ்வார் திரு உள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதே -என்றாராம்
இத்தால் சொல்லிற்று ஆய்த்து-இவன் அபிசந்தி பண்ணின வற்றை எல்லாம் தரும் என்றபடி -பெரியவாச்சான் பிள்ளை
முந்நீர் -ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -மழை நீர் என்பர்
அடியார்க்கு நல்லார் -ஆற்று நீர் மழை நீர் இரண்டும் ஒன்றே என்பதால்
முச் செய்கையை உடைய நீர் -மண்ணை படைத்து அழித்து காத்தல் –
நீரில் நின்று நிலம் பிறந்ததே சிருஷ்டி படைத்தல்
நீர் இன்றி உலகம் பிழையாதே காத்தல்
நீரினால் மூடப் பட்டு உலகம் அழிதல்
அன்றிக்கே முந்நீர் -முன்னீர் பழைய நீர் -ஆதியில் நீரையே படைத்தார் என்பர்
வரம் செய்த ஸ்ரேஷ்டம் பகவத் பிரசாதத்தால் அருளிய
பனுவல் சாஸ்திரம் ஸ்ரீ ஸூக்தி

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-3-முற்ற மூத்துக் கோல் துணையா-

November 20, 2014

திருப் பிரிதியை அனுபவித்த பின்பு திருவதரியை அனுபவிக்க இழிகிறார்
பதரீ வடசொல் வதரி -எனத் திரிந்து கிடக்கிறது
இலந்தை மரங்களுக்கு பதரீ -அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் ஸ்தானம் –
வதரி வணங்குதுமே -என்று ஸ்ரீ பதரிகாச்ரம ஷேத்ரத்தையும்
வதரியாசிரமத் துள்ளானே -என்று அடுத்த திருமொழியில் அந்த ஷேத்ரத்தில் உள்ள எம்பெருமானையும்
துதித்து மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
அடுத்த திருமொழி -ஏனமுனாகி-அவதாரத் தொடக்கத்தில்
ஸ்ரீ பதரி என்றும் பதரிகாச்ரமம் என்றும் இரண்டு திருப்பதியாய்-என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ பதரீ நாதன் எழுந்து அருளி உள்ள திருமலை முழுவதையும் திரு உள்ளம் பற்றி -வதரி வணங்குதுமே என்றும்
அந்த திருமலையில் ஏக தேசமாய் ஸ்ரீ நாராயண மூர்த்தி தவம் புரிந்த இடமாயும்
தானே சிஷ்யனும் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளின இடமாயும் இருக்கிற
ஸ்ரீ பதரிகாச்ரம ஸ்தான விசேஷத்தை
திரு உள்ளம் பற்றி வதரியாசிரமத் துள்ளானே -என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார் என்பதைக் காட்டி அருளவே-

பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் –
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டு எழுத்தும்
கேட்க வெளியிட்டு அருளும் கேசவனை -வேட்கையோடு
போவது அரிதானாலும் போய்த் தொழுவோம் நெஞ்சே
மா வதரி யாச்சிரமத்து –

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை போன்ற திருப்பதிகள் போல் அல்லாமல்
சிரமப்பட்டு அடையக் கூடிய திவ்ய தேசம் ஆதலால் சரீரம் கட்டுக் குலைவதற்கு முன்னமே சென்று
அனுபவிக்க வேணும் என்கிறார் ஆழ்வார் இதில்-

——————————————————————–

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

கோல் துணையா -நஞ்சீயர் சந்நியாச்ரம ஸ்வீகாரம் செய்து கொள்ளும் போது த்ரிதண்டம் தரித்துக் கொள்வதற்கான மந்த்ரம்
சகா மா கோபாய-த்ரிதண்டமே-நீ எனக்குத் துணையாக இருந்து ரஷிக்க வேணும் -என்னக் கேட்டு
சர்வஞ்ஞனாயும்-சர்வ சக்தனாயும்-பரம சேதனனுமாய் இருக்கிற எம்பெருமானையே துணையாக பற்ற வேண்டி இருக்க
அசேதனமான தண்டத்தை நோக்கி இங்கனம் சொல்லும்படியான ஆஸ்ரமம் நேருவதே-என்று சாதித்தாராம் –
பட்டர் ப்ரஹ்ம ரதத்தில் எழுந்து அருளி திரு வீதி அலங்கரிக்கப் புறப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீ பாதம் தாங்கப் புக
உத்தம ஆச்ரமியாய் த்ரிதண்டதாரியான உமக்கு இக்காரியம் தகாது -என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூர
நஞ்சீயர் -எனக்கு நீ துணையாகி ரஷிக்க வேணும் -என்கிற மந்த்ரத்தை சொல்லி ஸ்வீகரிக்கப் பட்ட
இந்த முக்கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகிறதே
இக்கோல் எனக்குத் துணை அல்லவோ
ஸ்வரூப ரஷணத்துக்கு இக்கோல் இடையூறாயின் இஃது எனக்கு வேண்டா என்று சொல்லி
த்ரிதண்டத்தை விட்டு எறியப் போனாராம்
அப்போது அவருடைய பக்தி விசேஷத்தை கண்கொண்டு வியந்தனர் –
சாஸ்திர விதிப்படி கோலைத் துணையாக கொள்வது அங்கு
இங்கு அசக்தியால் கோலைத் துணையாக கொள்வது பற்றி –

——————————————————–

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-

கிழத்தனம் வருவதற்கு முன்பே கரண களேபரங்கள் பூர்ண சக்தியோடு இருக்கும்
கிளர் ஒளி இளமையில் தானே வதரியை வணங்குதல் நன்று
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை
பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

———————————————————-

உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-

————————————————————-

பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-1-3-4-

காளை-காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம் -நிகண்டு
காளையாய் கன்று மேய்த்து இனிது உகந்தான்

————————————————————–

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-

அப்படிப் பட்ட நிலை வருதற்கு முன்பே
தோளிணை மலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த
தண் அம் துழாய் உடையன் எழுந்து அருளி இருக்கும் வதரியை வணங்குவோம் –
பாவையர் வாய் அமுதம் -வாழ்ந்தவாரும் -சம்சாரிகள் சொல்வதை அனுவதித்த படி

————————————————————

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

அத்தன் எந்தை -அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின்

——————————————————————–

பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே—1-3-7-

உந்தமர் காண்மின் என்று –
இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று
எல்லாரும் ஒக்க என் தமர் என் தமர் என்பர்கள் –
கையில் வீசமும் போய் இவனோட்டை   சம்பந்தம் நமக்கு
அவத்யாவாஹம் என்று தோற்றும் படி யௌவனமும் போனவாறே
உன்னுடையவன் -என்றும் –
மற்றை அவளும் உன்னோடே -அன்றோ அவனுக்கு உறவு என்றும் –
தங்கள் உடன் ஒற்று அற சொல்லி பின் வாங்கா நிற்பர்கள்-

செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் –
இவனைக் கொண்டு போது போக்கைகாக
முலைக் கச்சை நெகிழ்த்தி
முலையினுடைய சந்நிவேசத்தை காட்டுவார்கள்
இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும்
அத்தைக் கண்டு பிள்ளாய் -இவன் இவற்றோடு என்ன உறவு உண்டாய் பார்க்கிறான்
என்று சிரிப்பார்கள் ஆயிற்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் அப்பர் என்று சிரியாத முன்னம் என்னுதல் –
பண்டு தன் சர்வ ஸ்வத்தை நேர்ந்து இ றே ஸ்மிதம் பெறுவது
இப்போது இவன் இருப்பு கண்டு விட்டு சிரிப்பர்கள் ஆயிற்று-

நாங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் -அவனே உபாயம் உபேயம்
வைப்பு உபாயத்வம்
வாழ்வு உபேயத்வம்

———————————————————-

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8-

ஆசாபாசம் ஸ்வரூப நாசத்துக்கு உறுப்பு -நாசமான -நாச ஹேதுவான –
அத்தை விட்டு நல் வழி சேர வதரி வணங்குமின் -நல் நெறி -அர்ச்சிராதி மார்க்கம்
குவளையம் கண்ணியர் -கிழப் பிணங்களின் கருத்தால்-

——————————————————————

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க  வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே —1-3-9-

வலம் கொள் தொண்டர் -பலம் என்பது- வலம் ஆக திரிந்து -பிரபலர்கள்
பகவானை அனுபவிப்பதில் கை தேர்ந்தவர்கள் -என்றபடி

———————————————————————

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10

வதரி வணங்குதுமே என்று பாட்டுத் தோறும் சொல்லி
இதிலோ வதரி நெடுமாலை -என்று
வதரி நாராயணனை உத்தேசித்தே வதரி வணங்கினார்
இயையாமுன் -ஏசாமுன் -நடுங்காமுன் -தள்ளி நடவாமுன் -பேசி அயரா முன் -சிரியாத முன்னம் என்றவர்
வணங்குதும் -என்கிறார்- வணங்குமினே -சொல்ல வில்லை
இத்தை தாமே பாரிக்கிறார்
பரோபதேசமும் ஸ்வ அனுபவமும் கலந்து அருளிய அருளிச் செயல்
வணங்குதும் -பிறரை நோக்கிச் சொல்லும் இடத்தும்- தன்மையாக சொல்வதும் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்