Archive for November, 2012

ஸ்ரீ திருவிருத்தம்-96-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 10, 2012

இணங்கு நின்னோரை இல்லாய் – நிகரானவர் இல்லாதவனே -திரு நாமம் சாத்தி ஸம்போதிக்கிறார்
நின் கண் வேட்கை எழுவிப்பனே –
உன்னை விட நான் உயர்ந்தவன் என்று உள்ளுறைப் பொருள்
உன்னுடன் விலக்கி வைத்து -தேவதாந்த்ரங்களை உருவாக்கி -வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்-புத்தி பேதத்தால் -சம்பிரதாயங்கள் பல பல வாக்கினாய் -துறைகள் உபதேசிக்கும் ஆச்சார்யர்கள்
பிணங்கும் சமயம் -சம்ப்ரதாயம்- பல பல வாக்கி அவையவை தோறு அணங்கும் பல பல வாக்கி-தேவதாந்தரங்களும் பல
நின் மூர்த்தி-உன்னுடைய திருமேனியை விரித்து -பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மயில் தோகை -கடல் அலைகள் போல் தன்னுள்ளே திரைத்தெழுந்த இத்யாதி – பரப்பி வைத்தாய்
யாரை வணங்கினாலும் -சரவ்ச தேவ நமஸ்காரம் கேசவ கச்சதி-என்றும் சொல்லி வைத்தாய்
அநாதி கால கர்மம் -ஆகவே யாரையாவது வணங்கலாம் என்னும் புத்தி
இத்தை மாற்றி உன்னையே வணங்கச் செய்வதே நின் கண் வேட்கை எழுவிப்பேன்
முதல் மூன்று வரிகள் அவன் செய்த செயல்கள்
இறுதியில் என்னை அனுப்பிய கார்யம்
உனது பக்தி வளர்க்கவே என்னை பிறப்பித்தாய்
ஆழ்வார் பெருமையை உலகோருக்கு அறிவிக்கவே இந்தச் செயல்கள்
ஆழ்வார் ஜெயித்தால் தான் பெருமாள் ஜெயிப்பதாக ஆவான்

ஒன்றும் தேவும் -4-10-இதன் விவரணம்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

தலைவனை முன் நினைந்து -பாவனையால் பேசுகிறாள் உனக்கு சமமானவர் இல்லை என்பதால் –
தனது கற்பு நிலையை வெளியிடுகிறாள் -தலைவி வெறி விலக்குவிக்க நினைதல் -சஹி வெறி விலக்கு இல்லை )

அவதாரிகை –
பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே –
பேசாது இருக்கவும் மாட்டாதபடியாகவும் –
இதர விஷயங்களில் அருசியையும் -பிறப்பித்து –
தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு சத்ருசமாக பண்ணுவது
ஒரு பிரத்யு உபகாரம் இல்லை இறே –

உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி
என்று அத்தைச் செய்தார் –

வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ-
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை
என்று அருளிச் செய்கிறார் –

நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக -கரண களேபரங்களைக் கொடுத்து-
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து –
ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-
கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –

(நன்மையால் மிக்க நான்மறையார்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே)

சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே –
இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு –
புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து –
ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட —

அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்-
அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே –
இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -(ப்ரவர்த்திப்பித்தாய் என்றுமாம் )

கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயைத்
தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –

தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க  நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின் மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்

வியாக்யானம் –

நாம் இவை சம்சரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன –
வணங்கும் துறை இத்யாதி –
ரஜஸ் தமஸ்க்கள் உடையராய் இறே புருஷர்கள் இருப்பது –
அவ்வவ குண அநு குணமாக ருசி பிறந்தால்
அவ்வளவிலே -ராஜசராயும் -தாமசராயும் உள்ள அவ்வவோ தேவதைகளே
ஆஸ்ரயணீய வஸ்துக்கள் என்று உபதேசிக்கைக்கு ஈடாக
உபதேஷ்டாக்களான தீர்த்தர்கள் பலவாயும் உண்டாக்கி வைத்தாய்

துறை என்று
தீர்த்தமாய் -அத்தால்
தீர்த்தரை நினைக்கிறது –

மதி இத்யாதி –
மதி பேதத்தால் -ஒருவன் சித்தாந்தித்து –
அது தன்னையே பூர்வ பஷமாக கொள்ளும்-இறே வேறு ஒருவன் –
இப்படி பிணங்கு கைக்கு  பாசுரமான அவ்வவோ சாஸ்திரங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –

அவையவை இத்யாதி –
அவ்வவோ சாஸ்த்ரங்களில் பிரதிபாதிக்கப் படுகிற தேவதைகள்
பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் —
யோயோயாம்யாம் தநும்பந்த்யா (ஸ்ரீ கீதை 7 அத்யாயம் )-என்கிறபடியே
உனக்குத்த அநு பூதர் ஆனவர்களை பலரையும் உண்டாக்கி வைத்தாய் –

பைசல் கைசு நோய் முக்தைசு -என்று
பண்டே இவற்றினுடைய அறிவு கேட்டுக்கு மேலே
ஷுத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர்  என்று உபதேசிப்பாரையும் –
அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான சாஸ்திரங்களையும் –
அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய் –

இணங்கு நின்னோரை யில்லாய் –
நீ இப்படி பரப்பி வைத்தால் இத்தை வேறு சிலரால் தவிர்க்கலாம்படி இருப்பான் ஒருவன் அல்லை –
உன்னோடு ஒக்க நிற்கும்படி –
உனக்கு போலி யானாரை-உடையை அல்லை –
இனி நீ செய்யப் பார்த்தது என் என்ன –

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து –
அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி –
எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –

இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே
பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –

நீ கை விட்டாலும் நான் கை விடவோ –
அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

தாத்பர்யம்

இதில் தம்மைப்போலே எல்லாரையும் எம்பெருமான் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பார்க்க
அவர்கள் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இருப்பதைக் கண்டு
மோக்ஷ ஹேதுவான சரீரம் கொடுக்காமல்
ஸம்ஸாரத்தில் உழலவே அத்தைக் கொடுத்து
பொதுவாக பந்த மோக்ஷ ஹேதுக்கள் ஆகின்றது அன்றோ
மோக்ஷ உபயோகி மட்டும் அல்லவே
ஈஸ்வரன் கெடுத்தான் என்று அவனை வெறுத்து -கொடுத்தவனையே கெடுத்தவன் என்று வெறுக்கும் படி அன்றோ உனது செயல்கள்
இவர்களுக்கு எப்படியாகிலும் உன்னையே ஆஸ்ரயிக்கும் படி ப்ரீதியை வளர்த்து
ஊரும் நாடும் உலகும் என்னைப் போலவே ஆக்குவேன் என்று மார் தட்டுகிறார்
ரஜோ தமோ குணம் -சத் சாஸ்திரம் கற்று சத்வ மூர்த்தியான உன்னை விரும்பாமல்
பரஸ்பர விருத்தமாய்
மதங்ககள்
குருக்கள்
ருத்ராதி தேவதைகளையும் உருவாக்கி
சேதனர்களுக்கு அறிய வல்ல -செய்ய வல்ல சக்தியையும் கொடுத்து வைத்தாய்
அவற்றைக் கொண்டு அந்த தேவர்களையே தொழுது சம்சாரிகளாகவே திரியா நின்றார்கள்
நீ அவர்களை உபேக்ஷித்தாலும் அவர்களைத் திருத்தி
உன்னிடம் ஆஸ்ரயிக்கும் படி
உனது பக்கலிலே ப்ரீதியை எழுவிப்பன் என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவிருத்தம்-95-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 9, 2012

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –தோழிக்கு தலைவி சொல்வது)

அவதாரிகை –
பக்தி பாரவச்யத்தாலே யாதல் –
அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –
இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –

இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –

பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –

ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –

வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர்
அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு —
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் –
அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப் பாசுர மாத்ரத்தை   நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே
கொண்டாடி அருளிச் செய்தார் –

தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை   -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம்
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில் –
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால் –
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய் –
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம் –

யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –
ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –
அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –
மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து –
அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –
அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –

ஆக்கை -என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )

புக்கு –
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –
கர்ம நிபந்தனம் என்கை –

அங்கு ஆப்புண்டும் –
கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –

இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –
சாஸ்திர வாசனையாலும் –
பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –
இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –

ஆப்புண்டும் –
சிநேகத்தைப் பண்ணியும் –

ஆப்பு அவிழ்ந்தும் –
கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –
அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –

கர்ம ஷயம்   வந்தவாறே
அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –

மூதாவியில் –
இத்தால் பழைமையை நினைக்கிறது-

ஆவி -என்று பிராணனாய் –
அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே
இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –

இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –
பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –

இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —
சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –

தடுமாறும் –
பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –
வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –
அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –
சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து –
இப்படி தடுமாற்றமாய் இருப்பது –

இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –
அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –

உயிர் –
ஜ்ஞான ஆனந்த லஷணமாய்-
நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –

இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –

முன்னமே –
அநாதியாய் போருகிறது ஆயிற்று –

அதனால் –
அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –

யாதானும் பற்றி –
பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –

நீங்கும்-
பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –
நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –
பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –
அது நன்றே ஆகிலும் –
நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –

சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று
ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –

த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –

நல் வீடு செய்யும் –
இப்போது அந்நிலை தவிர்ந்து —
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கால் கட்டி
இத்தை விடுவித்து தர வேணும் -என்னப் பண்ணின —
மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே  -என்கிறபடியே –
நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின –
தன் பக்கல் ருசி-முன்னாக இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின

மாதாவினைப்  பிதுவை –
சரீரத்துக்கு உத் பாதகராய் –
சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –

இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான் என் என்னில் –
திருமாலை –
ஸ்ரீ ய பதி யாகையாலே –
பிதா மாதா ச மாதவ -என்னுமா போலே –

வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு  உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

அதுவும் அவனது இன்னருள்
இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

(அவனதான வஸ்துவை -அவனது தான் என்று இசைவதே ஆத்ம சமர்ப்பணம்)

தாத்பர்யம்

அயோக்யா அனுசந்தானத்தால் அகலப்பார்த்த இடத்திலும்
கைவிடாமல் உலக விஷய வைராக்யம் விளைவித்து
தனது பக்கம் பிராவண்யம் விளைவித்த பகவானுக்கு -ஸ்ரீயப்பதிக்கு
என்னால் செய்வது ஒன்றுமே இல்லை
ஆகையால் அவன் திருவடிகளில் வணங்குகிறேன்
ஜீவர்கள் தேவ மனுஷ்ய ஸூ கர-போன்ற ஏதாவது ஒரு ஜென்மம் எடுத்து
அந்த ஜாதியில் அத்யந்த ப்ரீதி செய்து அழுந்திக் கிடந்தது
பிராரப்த கர்மம் அழிந்த பின்பு
ஸூஷ்ம சரீரம் எடுத்து மீண்டும் கர்மாதீனமாக ஒரு பிறவி எடுத்து
தடுமாறி பிறவிச் சூழலில் உழன்று
பகவத் விஷயம் நன்றியாக இருப்பது அறிந்தும் நான் பற்றின விஷயம் ச தோஷமாகிலும் அத்தை விடாமல் இருக்கும்
விரதத்தை மாற்றி
உனது திருவடிகளில் பிராவண்யம் உண்டாக்கி
ஜென்ம பிரவ்ருத்த -திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளம் உண்டாய் இருப்பது போல்
சஹஜ பக்தி உண்டாக்கி
அருளின ஆப்த பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயியா நின்றேன் என்று அருளிச் செய்கிறார் இதில்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவிருத்தம்-94-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

November 9, 2012

வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள்
உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்
இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

தலைவியைக் கண்ட பாங்கன் -மீண்டு -தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —
தோழன் இடம் தலைவியின் ஏற்றம் சொல்லி தேக ஆத்ம குணங்களைக் காணச் சொல்ல
அவன் சென்று மீண்டு வியந்து -வைதிகரான உன்னைப் போல்வார் தானே இவள் அழகைக் காணலாம்
இருவர் பெருமையையும் சொல்லும் பாசுரம் இது -அன்றோ –

வைதிகரே-உயர் சிறப்பு எவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்

வைதிகரே-உயர் சிறப்பு எவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்

சீதா வைபவம் அறியாத திருவடி –
மோதிரம் கொடுத்து அனுப்பி காண வைக்க
அவளைக் கண்ட பின் துஷ்கரம் க்ருதவான் ராமன்-இவளைப்பிரிந்து இன்னும் உயிர் உடன் உள்ளானே என்று அருளிச் செய்தது போல் –
கண்டனன் -மூன்று பண்புகள் சேர்ந்து-கற்பு நற்பிறப்பு இத்யாதிகள் புகழ்ந்து அருளிச் செய்தானே )

அவதாரிகை –
துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார் (கீழ் இரண்டு பாசுரங்களால் )
உமக்கு குறை இல்லையே -என்ன –
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே ( 1-5 )அயோக்யா அனுசந்தானத்தாலே ஓன்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –

தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த
(கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம் –

மைப்படி மேனியும் –
அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –
கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –

பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –
அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –

நஞ்சீயர் -இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –

(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)

இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –

நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –
இவ்வளவும் வந்து –
இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –

மைப்படி –
காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –

செந்தாமரை கண்ணும் –
அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –

வைதிகர் இத்யாதி –
இப்போது -வைதிகர் என்கிறது –
வேதத்தில் பூர்வ பாக நிஷ்டர் –
கேவலம் கிரியா கலாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் –
ப்ரஹ்மத்தின்  உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே –
கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –

அங்கனன்றிக்கே –
நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை
உடையவர்களைச் சொல்லிற்றாகவுமாம் –

அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவு கெடும் அது அன்றிக்கே இருக்குமவர்கள் —
இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –

ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன –
எப்படி இத்யாதி –
ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே –
குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே –
அப்படி யானும் சொன்னேன் –
அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ –
நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –

அடியேன் மற்று யாது என்பனே –
இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட
ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –

அன்றிக்கே
அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு
சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –

நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்
அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்

ஊருக்கு வரும் பசு கன்றை நினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே
நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான்
உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச் சொல்ல வல்லேன் -என்கிறார்

தாத்பர்யம்

இதில் தேவர்கள் அபிமானத்தாலும்
மற்றவர்கள் அஞ்ஞானத்தால் பேச மாட்டாமல் உள்ளது போல்
இவரும் பக்தி பாரவசயத்தால் பேச இருப்பதை அருளிச் செய்கிறார்
வேத யுக்தமான உன்னுடைய ஸ்வரூபாதிகளை அறிந்து சாஸ்திரம் விதித்தபடியே த்யானம் செய்த பக்தர்கள்
உள்ளம் புகுந்து அஞ்சன மலையுடன் செந்தாமரைக் கண்ணுடன் பரவசம் ஆக்குவான்
ஸ்யாமம் அதி சுந்தரம்
உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே
தியானித்து ப்ராப்யமான உனது திருவடிகளை சிரஸா வகிப்பார்
என்னால் முடியாதே யாகிலும்
காலையில் மேய்க்கப் போன பசு கன்றை நினைத்து கனைத்து வருமா போல்
அறியாத குருட்டுப்பசு கனைக்குமா போல்
நானும் சொன்னேன்
இப்படி அல்லது
நீ அளித்த பக்தியால் மதி மயங்கி கிடைக்கும் நான் ஸ்வ தந்திரமாக ஒன்றும் சொல்ல வல்லேன் அல்லேன் என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவிருத்தம்-93-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 9, 2012

இருட்டு படுத்தும் பாடு முதலில் சொல்லி -மாறி மாறி அஸ்திரமாக இருப்பதைக் கண்டும் –
ஜலத்துறை -ஆச்சார்ய படித்துறை -பகவத் பக்தியில் ஆழ்ந்து -ப்ரஹ்ம அனுபவமே நீராடல் –
போது செய்து -ஈடுபடுத்தி –
பொழுது மலர் என்றும் வேறே இடங்களில்
மாலை – நாவில் கொள்ளாமல் நினையாமல் -இழந்து போகிறார்களே ஸம்ஸாரிகள்
கீழ் தேவர்கள் இழவுக்கு
ஒரு நாயகமாய் -4–1-இதன் விவரணம்

ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -விரோதி ஸ்வரூபம்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து

ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்

ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-)

அவதாரிகை

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே (பகவத் விஷயத்தை )தவிருகிறார்கள் –
அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –
அவர் இவர் என்று விசேஷிககிறது என் –
எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –

இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம் –

காலை இத்யாதி –
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –
ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –

நந்தத் யுதித ஆதித்யே-
விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு
த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –

நந்தந்த் யஸ்தமிதே ரவவ் -அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே
அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் –

காலை இத்யாதி –
பிரபாத சமயத்திலே -வெய்யோன் உண்டு -ஆதித்யன் –
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று-

கங்குல்கள் ஆகிற குறும்பர் –
அவன் கிரணங்கள் பட- கை விட்டு ஓடா நிற்பர்கள் இறே –
மாலையில் பெரிய பிரதாபத்தை உடைய ஆதித்யனை அழித்து-
அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக் கொள்வர்கள் –
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம்படி-பண்ணிக் கொண்டு வரும் இறே –

அன்ன கண்டும் –
அப் படியைக் கண்டு வைத்தும் –

பகவத் விஷயம் பிரத்யஷத்துக்கு அவிஷயம் ஆகையாலே -தான் அறியாது  ஒழிகிறார்கள்-
இதனுடைய அஸ்தர்யத்தை பிரத்யஷியா நிற்கச் செய்தேயும்-நெஞ்சில் படாது ஒழிவதே –

காலை –
சத்வோத்தரமான காலையிலே –

நல் ஞானம் –
ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –
தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –
வித்யான் யாசில் பகை புணம் –
புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –

துறை படிந்தாடி –
ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –

கண் போது செய்து –
போது செய்து என்று மொட்டிக்கைக்கும் பேர் –
அலருகைக்கும் பேர் –
புறம்புத்தை விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல் –
பகவத் விஷயத்தில் விழித்து என்னுதல் –

மாலை –
இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –
மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை –

நல் நாவில் கொள்ளார்-
நல் நா- என்கிறது
புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் –
அதுக்கு பாங்கான நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார் –

சா ஜிஹ்வா -ஹரி -(பேச்சும் நினைவு கைகூப்பும் செய்ய வேண்டுமே )

நினையார் அவன் மைப்படியே –
வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –

தருணவ்–
த்வேஷத்துக்கு விஷயமாய் மூக்கு அறுப்புண்டவள் இறே – இவ்வார்த்தை சொன்னாள் –

தான் பரிபூதையாம்படியை போய் சொல்லுகிற-இடத்திலே இது எதுக்கு உறுப்பாக சொன்னாள் தான் –

தாத்பர்யம்

இதில் ப்ரஹ்மாதி தேவர்கள் ஈஸ்வரன் என்னும் துர்மானத்தால் நினையாமல் போகிறார்கள்
சம்சாரிகள் இழந்து போவதை நினைத்து இழவுக்கு வருந்தி அருளிச் செய்கிறார்
தினம் தோறும் -இருள் வந்ததால் தூங்கி -ஞானம் அபகரித்து இருள் தீம்பு செய்யுமே
காலையில் உதிக்கும் பொழுது ஓடிப்போய் ஒழியுமே
மாறி மாறி பகலும் இரவும் வர
ஆயுசை கழிக்க -இருந்தும் அறியாமல்
சத்வ உத்தரமான காலையில் -எழுந்து இருந்து
சகல இந்திரியங்களை புறம்பே விஷயாந்தரங்களில் மண்டி
அவன் திரு நாமம் சொல்லாமல்
அஞ்சன திரு மேனியை நினையாமல்
கெட்டுப்போகிறார்கள் என்று சோகிக்கிறார்
பர உபதேசம்-ஒரு நாயகமாய் இதனால் தானே

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-92-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 9, 2012

(பேறு தப்பாது துணிந்து இருந்தும்
பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் –
பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் –
இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே
இவர்கள் தண்மையை சொல்லி –
ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் –
தினம் தோறும் -காலையிலும் மாலையிலும் -கார்யம் சித்தி பெறவே –
தோள் கண்டார் தோளே கண்டார் போல்வர் அல்லரே –

ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு
இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே-
ஆழி எழ -7–4-இதன் விவரணம்

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே

வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல்
சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும்
ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆணைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ -)

அவதாரிகை –

பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம்  பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே  ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் –

நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை
அழிவுக்கு இட்டு
வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –

வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்தி செய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்—தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம் –

பேணலம் இத்யாதி —
முந்நீர பெரும் பதியை பேணலம் இல்லா அரக்கர் –
கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –

நீள் நகர் இத்யாதி –
உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –

பர ஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்கு சென்று இராது என்று – இரங்குகைக்காக
சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று –

அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -(த்யஜேத் ஏகம் குலம் காக்கஒருவரை நீக்கலாம் )

தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் –
நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்

பேண லமில்லா   –
பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது –
பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்கக் கடவோம் என்று இரார்கள் –

பேணலம் இத்யாதி –
அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –

முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –
அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –
கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-

கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –
நீள் நகர் –
தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –

(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் )

நீள் எரி வைத்து அருளாய் –
தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான
சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே

இலங்கை  நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –

ஒரூரைச்  சுட்டுத் தர வேணும் என்பர்கள் –

நின்னை –
ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –
ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை  இறே -என்று
கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது –

விண்ணோர் –
எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற  அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –
நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –
பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –

கால் நிலம் தோய்ந்து –
நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து –
பூமியிலே வந்து கிட்டி –

தொழுவர்-
ந நமேயம் -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –

நின் இத்யாதி –
தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ  –

தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே –
உன்னுடைய விக்ரஹத்தில் உண்டான அழகிலே –
அநேகம் கூற்றிலே -ஏக தேசமான – ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவோ -அன்று இறே –

சக்ருத் வதாகார  விலோக நாசயா த்ருணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி -(ஆளவந்தார் )

வைகல் மாலையும் காலையுமே –
அவ் வடிவைக் காண் கைக்கு  அர்த்திப்பார்  நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –

நாள் தோறும் –
அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –

(அப்பு அரும்பதம்
இத்தால் அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்
பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே -_

வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் –
நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –

அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –

(விபீஷணன் -ராக்ஷஸன் என்பதால் கீழ் கால் பாவாது
பூமியில் பற்றுக்கொம்பு ஆகாது)

இத்தால் –
அநந்ய பிரயோஜனருக்கு நேர்த்தி அல்பமாய் -பலம் அதிகமாய்
பிரயோஜனாந்தர பரர்க்கு-நேர்த்தி அதிகமாய் பலம் அல்பமாய் -இருக்கும் என்றபடி

தாத்பர்யம்

கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –

இந்த ராவணாதிகள் முந்நீர் அரணாக யுடைய ஒரு தீவில்
ஒருவராலும் அணுக ஒண்ணாத இலங்கை என்னும் நகரை நிர்மித்து
அதுக்கு ஒருவராலும் அழிய ஓண்ணாமல் வரம் பெற்று –
வாசம் செய்து அநேக ஸஜ்ஜனங்களை துன்புறுத்தி
அதுக்காக நீ அவதரித்து பானம் கொண்டு அழிக்க உன்னை அனவரதம் பிரார்த்திக்க
நீ அவதரித்த இடத்தில் சவுந்தர்யம் அனுபவிக்காமல் இருந்த

அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-91-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 9, 2012

 

(கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே
நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே

கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ

கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –

வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

இம் மூன்று இடங்களிலும் காணலாம்
சரீரம் தள்ளி ஆத்மாவை
பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை

யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற

நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-)

அவதாரிகை –

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –
குறுகா நின்றது என்னா –
ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –
அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –

ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –

இந் நெஞ்சு தன்னையும் வைக்கல்  ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று  இலனாகில் –

தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல்  –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

வியாக்யானம் –

சுருந்குறி வெண்ணெய்-
சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –

வெண்ணெய் தொடு உண்ட –
வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் –

கள்வனை –
களவு தன்னை யாயிற்று களவு கண்டது –
ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –
தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –

வையம் இத்யாதி –
இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –

இத்தால்
ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் –
ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –

மாவலி இத்யாதி –
தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-
தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –

நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று
அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –

மாவலி மாட்டு –
ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று –
தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –

இரும் குறளாகி –
பெரிய குறளாகி –
அதாவது
லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –

இசைய –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –
அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –

ஆரேனும் வேண்டா என்னிலும்
அவனும் இசைந்து கொடுக்கும் படியும்

ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-
ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –

வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் –
தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் –
நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –

தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –
அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –
இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –

பெரும் கிறியான் –
பெரு விரகன் –

அடியேன் –
மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –
இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –

நெஞ்சம் பேணலதே –
பரத்வதையும் கொள்ளாது –
பாவோ நான் யத்ர கச்சதி –

ஒருங்கற –
பிறிகதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –
யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

தாத்பர்யம்
இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள்
நீர் இவ்விஷயத்தை விட்டு எங்களைப் போலே
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல
நான் அப்படி செய்யினும்
என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –

ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ

கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக
அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்

பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி
ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்

மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து
பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த
நடை அழகிலும்
புத்தி சாமர்த்தியத்திலும்
ஈடுபட்ட நெஞ்சு
வேறே ஒன்றைப் பேணாதே

பாவோ நான்யத்ர கச்சதி போல்
இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-90-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 8, 2012

(பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே
ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு
ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார்
தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே –
இம் மாயம் -ஆச்சர்யம் –
திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே –
சரீரம் இதனால் உபாதேயம் ஆகுமே -ஆக்கைக்கு நோற்றது
சரீரம் நிலையாதே -32-திரு நக்ஷத்ரம் தானே இங்கே இருந்தார் –
பக்தி பெற நோன்பு என்று கொண்டு -தகைமைக்கு நோற்றது -சம்சாரத்தில் பக்தியும் நிலை நில்லாமல் -ரஜோ தமஸ் மூடுமே –
முக்குண மய ப்ரக்ருதி அன்றோ –
நிலைப் பெய்யாத -இது ஆக்கைக்கும்-பக்திக்கும் – தன்மைக்கும் -பிரபாக ப்ராப்ய பாரமாக இரண்டு நிர்வாஹங்கள்

தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்-பெய்தி பாட பேதம்

குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்
குறைவில்லாமல் அருளிச் செய்து
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல

அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி

இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு )

அவதாரிகை –
என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது –
என்றாகில் என் –
பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –
அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன்  ஆகில்
எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –

இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-
உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –
அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –

அன்றிக்கே
உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –

(ஸ்வ பாவம் -பக்தி -இது பெற சரீரம் வேண்டும் இங்கு அது இரண்டாம் பக்ஷம் )
இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே –
இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –

(மண் பற்று போல் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்
மங்க ஒட்டு உன் மா மாயை என்று உபதேசிக்க வேண்டிற்று
இத்தைத் தள்ளியே அழைத்துப் போவார்
விமல சரம திருமேனி -ஸ்ரீ வைகுந்ததில் உள்ளாருக்குக் காட்ட அபிநிவேசம் அவனுக்கு –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ
ஆகவே சரீரத்துக்கு முக்கியம்
ப்ரக்ருதி கார்யமான பிராகிருதம் -அஞ்சு சேர் ஆக்கை
இது தான் -ஸ்வ பாவம் இங்கு -ஏக ரூபமாக இருக்காதே)

தலைவனைப் பிரிந்த தலைவி கால நீட்டிப்புக்கு ஆற்றாது உரைத்தல் —

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது  உரைத்தல் –
குரவை   ஆய்ச்சியர் -6–4–

பதவுரை

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக் குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும்
காண் தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

வியாக்யானம் –

தலைப் பெய்து –
உன்னை வந்து கிட்டி –

நான் –
அறக் கை கழிந்த நான்

உன் திருவடி இத்யாதி –
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற  இஸ் ஸ்வ பாவத்தாலே
தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி –
ஜன்மாந்த்ரத்திலே ஸூஹ்ருதத்தை பண்ணின ஆச்சார்யம் –

மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் —
மாயம் உண்டு –இப் பிரகிருதி –
இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வா பாவத்தையும் காண்டோறும் –

அன்றிக்கே –
தலைப் பெய்து -இத்யாதி –
நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான
இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு –
நான் இதிலே நிலை நின்ற ஆச்சர்யத்தையும்-
ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் –

ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே
இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –

ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இருக்கச் செய்தே -இறே
இஸ் ஸ்வ பாவம்  தான் உண்டாவது –
ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரஹமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே –

இந்த யோஜனையிலும்-
க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் –
ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் –
திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற
இஸ் ஸ்வபாவ பரமான விசேஷணாம்சத்திலே   வாக்யத்துக்கு தாத்பர்யமாய் –
அதுவே பிரதானமாகக் கடவது –

மாயம் செவ்வே யித்யாதி –
அச்  சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே
ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை எடுத்த போது –
இஸ் ஸ்வ பாவம் (இப்பக்தி- தகைமை )இன்றிக்கே -சத்வம் தலையான போது-உண்டாமது ஆகையாலே –
என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இந்த ஆச்சர்யத்தையும் –

காண்டோறு –
அனுசந்திக்கும் தோறு எல்லாம் –
இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –

அசுரர் இத்யாதி –
அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய
என் ஸ்வாமி யானவனே –

இத்தால் –
நீ -அசக்தனாய் ஆதல் —
அப்ராப்தனாய் ஆதல் —
நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –

தொல்லை இத்யாதி –
பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –

அன்றிக்கே
இந்த ஆச்சர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் –
தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது –
காலம் போருகிறது இல்லை –
இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது
பொறுக்கப் போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –

தாத்பர்யம்
இதில் சர்வேஸ்வரன் தன்னுடைய கைங்கர்யத்துக்கு உபயோகியான சரீரத்தையும்
தன்னிடம் உள்ள பக்தியும்
அருளிய பின்பு
பேறு தப்பாது என்று விஸ்வசித்து இல்லாமல்
இவற்றின் அஸ்திரம் பார்த்து அலமந்து கூப்பிடுகிறார்
இங்கு தகைமைக்கும் ஆக்கைக்கும் முக்யத்வம் கொண்டு இரண்டு நிர்வாஹங்கள்
பக்திக்கு ஆக்கை எதுக்கு
ஆக்கை சரீரம் பக்தி எதுக்கு
ஒன்றுக்கு முக்கியம் கொடுக்க அடுத்தது அமுக்கியம்
இரண்டுமே வேண்டுமே -சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் போல்
நான் உன்னைக் கிட்டி உனது திருவடிகளை தலையில் வைத்து கொண்டால் அல்லது தரிப்பது அரிது ஆற்றாமையுடைய இந்த சரீரத்தை
அநேக பிறவிகளில் அநேக தவம் செய்து பெற்றும்
இனி வரையில் உன்னைக் காணப் பெற்றிலேன்
இனி காணும் அளவும் இவை ஸ்திரமாக இருக்காவே
சரீரம் மின்னின நிலையில -மன்னுயிர் ஆக்கை
இனி மறு பிறவியில் உன்னை ஆஸ்ரயிப்போம் என்னில்
அங்கு பக்தி நிலைக்க வேண்டுமே -அதுவும் சங்கை உண்டே
அதி துர்லபமான மானுஷ்ய தேஹம் -க்ஷண பங்கி
அது பெற்றாலும் முக்குண மயமான இங்கு சத்வகுண கார்யமான பக்தி இருக்க வேண்டுமே அவ்வளவு துர்லபம்
இப்பிறவியில் இப்போதே பெற வேண்டும்
இவ்விதமாக பாதங்களை நினைத்துப் பார்க்க
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே
நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும்
ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்
இப்படி இருக்க வீணாகா காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று
சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-89-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

November 8, 2012

அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு
எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –
உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்
ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்
வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு
அன்று தப்பினேன்
அகாரம் ஆகாரம் தீ வினைக்கு ஆறு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –

ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்
ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு

அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-)

அவதாரிகை –

சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் –
இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –

(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்
நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்
ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப்பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)

தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்–

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே – – 89-

பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-

பதவுரை

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

வியாக்யானம் –

தீ வினைக்கரு நஞ்சே –
பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை

நல் வினைக்கு –
பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )

இன்னமுதினை –
நிரதிசய போக்யனாய் –
பரம ப்ராப்யனாய் உள்ளவனை –

இப்படி பாபங்களை போக்குகைக்கும் –
தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –

பூவினை மேவிய இத்யாதி –
பிராட்டியோடு சேர்த்தியாலே–
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு

புன்மை இத்யாதி –
அம் மேன்மை  உடையனாய் இருக்கச் செய்தே –
அவளோட்டை சேர்த்தியாலே-
ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –
ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –
இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –

வல்லாயினை –
மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும்
அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –

அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –

ஏற்றை –
லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால்
மேணானித்து இருக்கிறவனை –
இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி

எம்மானை –
அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று-
இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –

எஞ்ஞான்று தலைப் பெய்வனே –
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே –
அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே )

அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –
அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

தாத்பர்யம்

இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க
சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு
அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க
ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி
பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே
கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று
இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-88-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 8, 2012

(திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – களிப்புடனும் -வருத்தத்துடனும் பேசலாம்
ஸ்ரீ மத் பாகவத -உபதேசம் -காரணந்து த்யேய -கேட்டு -நினைத்து -இடைவிடாமல் எப்போதும் -கண்டு
ஸ்ரோதவ்ய –மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -த்ரஷ்டவ்ய
விராட் ஸ்வரூபம் -பாதாள லோகம் பாதம் -ஸத்ய லோகம் சிரஸ் – ஜெகதாகாரம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் த்யானம் -கை வராதே –
கோல நீள கொடி மூக்கும் –திவ்ய மங்கள விக்ரஹம்
அந்தாமத்து அன்பு செய்து –
கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே
நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –
அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்
திருமால் உரு -அவன் ரூபம் –
திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக்கொண்ட –
ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –
இவ்வளவு பக்தி மேலிட்டு இருந்தும் -பிரிந்து உள்ளதால் -தீ வினை இதுவே – பிரிவு ஆற்றாமை- மிக்கு புலம்புவதாகவும் கொள்ளலாம் –
சிஹ்னமே பிதற்றி -மறக்காமல் இருக்கிறாள் அன்றோ –
இரண்டுக்கும் முரண்பட்டு இல்லையே
பக்தர்கள் பக்கம் பாபம் அண்டாது
பாபம் தொலைந்தால் தானே பக்தி பிறக்கும் –
பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பக்தி செய்ய -க்ஷணம் விஸ்லேஷமும் பொறுக்காத துன்பம் வருமே –
இரண்டு துன்பமும் வேறு வகைகள்
இங்கே உள்ளவரை இவை இருக்குமே –

புகழும் நல் ஒருவன் -3-4-இதன் விவரணம் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே )

அவதாரிகை

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள்

இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் –
திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு உபமானத்தைக் கண்டால் –
உபமான ரஹிதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும்
இங்கனே ஒரு உபமானமாக உண்டாகப் பெற்றோம் -என்று –
இது ஆஸுவாச-ஹேது  வாகை யன்றிக்கே –
அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு
இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –

அன்றிக்கே

(ஜெகதாகாரம் கீழ்
சரீர ஆத்ம பாவம் -மலையே திரு உடம்பு -ஜகத் சரீரம் சர்வம் தே -இனி)
அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்தால் –
அவ்வளவிலே பர்யசியாதே –
அவனுடைய-அசாதாரண விக்ரஹத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு-
ஒரு குறை உண்டோ -என்னுதல் –

போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

பதவுரை

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியை யுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

வியாக்யானம் –

திருமால் உரு ஒக்கும் மேரு –
ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது –
வடிவாலும் –
புகாராலும் -(மேரு சிகரி யாணாமாம் அஹம் -கீதை )

அம் மேரு இத்யாதி-
அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –

திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –
அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –

அன்ன கண்டும் –
இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –

திருமால் -இத்யாதி –
ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே –
அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –

அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி-
சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –
அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –
இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –

அன்ன கண்டும்-
ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹ ஆதார ஆதேய பாவ -நியந்தரு நியாம்ய பாவ-
சேஷ சேஷி பாவாதிகளாலே –
இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிறபடியை கண்டு வைத்தும் –

(நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சரீர லக்ஷணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம்
-விஸிஷ்ட ப்ரஹ்மமாகவே தானே இருக்கும்

த்வைதி தனித்ந்தனியாகவே இருக்கும்
அத்வைதி ஒன்றாகவே இருக்கும்
விசிஷ்டாத்வைதி -பிரிந்து இருக்க யோக்யதை இல்லாமல் தனித் தனியாகவே இருக்கும்

(அன்ன கண்டும் -வேதாந்த அர்த்த-மதிநலம் அருள பெற்றதாலும் – -பிரணயிதவம் மிகுதியாலும் திருப்பதி அடைய மாட்டாரே )

திருமால் இத்யாதி –
இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –
அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் –
அசாதாராணமான சிஹ்னங்களையும் –
காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி –

திருமால் –
அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு –
நிதித்யா ஸி தவ்ய-என்று விதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –

(விதேயம்- விதிக்கப்பட்ட சாதனம் -ஸ்ருதி
இவருக்கு ஸஹஜ பக்தி -இவை ஸ்வ பாவம் இவருக்கு)

தலைக் கொண்ட –
தலைக் கொள்கை யாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-

முறுகு  -கொளுந்துகை –

நங்கட்கு இத்யாதி –
இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை-
அவஸ்யம் அநு போக்யத்வம்  -என்கிற வசனத்தைக் கொண்டு
நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ -என்கிறார் –

முறுகு  – கொளுந்துகை -வயிரம் பற்றினது என்றபடி –
முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் –
ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி –
த்ருடமாகை -என்றது ஆயிற்று –

அவனைக் காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-
பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார்-

தாத்பர்யம்

இதில் சர்வேஸ்வரன் உடன் போலியான
வஸ்துக்களைக் கண்டும் திருப்தி
நேராக
குறை வராது
சர்வ சாம்யமான வாஸ்து இல்லையே
ஆயினும் ஆராய்ந்தால்
தனக்கு மேல் உத்க்ருஷ்டம் இல்லாத மகத்தான மேரு படர்வதமே
‘மிக்க உன்னதமாய்
தங்கமயம் அது -கரு=மாய் இவன்
உன்னதமாய் உயரம்
ஒளி புகர்
அவன் திருவாளிக்கு ஆயிரம் சூரியனை சொல்லில் சொல்லலாம்
அப்படி நீர் உபமானமான அத்திருமேனிக்கு சத்ருசமான பதார்த்தம் ஆராயும் இடத்தில்
இப்படி சொல்லப் பெற்றோமே என்று திருப்தி அடையாமல்
ஆசைக்குத் தக்க இவை சத்ருசம் இல்லையே
வஸ்து அந்தரமும் இல்லையே
அவரையே கண்டு திருப்தி அடைவதே வழி
காண வேணும் என்று வைர ஊருக்கு போல் அபிநிவேசம் பெற்ற பின்பு
பல ப்ராப்திக்கு குறை இல்லை என்று நிச்சயித்து ஹ்ருஷ்டராகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம்-87-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைஸ்வாமிகள் -வியாக்யானம் –

November 7, 2012

(அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம்
ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம்
கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து
வையமே சிலம்பும்படி
இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு
திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே

புள் -காய்ச்சின பறவை

தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் கொள்ளலாம் )

அவதாரிகை –

உன்னைப் பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று
திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது-

அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி
இத் திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம் –

புலம்பும் கனை குரல் –
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இரு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –

பூம் கழி இத்யாதி –
அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் –
அலை எறியா நிற்பதாய் –
ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –

ஆங்கவை –
பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன –
சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –
அன்றிக்கே –
கீழ் சொன்னவை தன்னையே சொல்லிற்று ஆதல் –
இவை பாதகமாகா நின்றன –

என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –

நின் வலம் புள் இத்யாதி –
உனக்கு அசாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் –
கருடோ வாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய
நலமுண்டு –நன்மை-
அத்தைப் பாடினது குற்றமாக –

த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா  (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே-
அவனுக்கு அடிமை செய்து –
அவன் தழும்பு சுமந்தாப் போலே
சம்ஸ்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –
அவனைப் பாடின இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே –
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே குடியாக- கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –

திருமால் –
நீர் தான் பிரணயிகள் அல்லீராய்  தான் இப்படி செய்கிறீரோ –

இத் திரு வினையே –
உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ
அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –
ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல –
ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப்-போலே இருக்க வல்லளோ –

இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-
அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே –
உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

ஸ்வா பதேசம் –

இத்தால் –
அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி –
இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீர்  ஆவது  உமக்கு குறை அன்றோ -என்று
இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜாநீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை –
இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

தாத்பர்யம்

இதில் லௌகிக பதார்த்தங்கள் பாதகமாம் படி ஸூஹ்ருத்துக்கள் பாசுரம்
உத்போதாக பதார்த்தங்கள் ஞாபகப்படுத்தும்
வருந்தும் நாயகி பாசுரத்தால்
உன்னுடன் ஸம்ஸ்லேஷித்து
சிஹ்னங்கள் தனக்குப்பட ஆசை கொண்ட
உனக்கு வாகனமாய் பெரிய திருவடி கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணி
அத்தைப் போலவே தானும் பெற ஆசை கொண்ட இவள்
அது பெறாமையாலே மிகவும் ஆரத்தை ஆனாள்
அதுக்கு மேல்
விரஹிணிக்கு பாதகமாய் அநஷரமான அன்றில் கடலோசை இவை போன்ற பாதகங்கள் இவளை நலியும் படி வாசா மகோசரம் என்று
வையம் எல்லாம் உன்னை இகழ்ந்து புலம்பும் படி ஆனதே என்று
நாயகனை நினைத்து சர்வேஸ்வரனுக்கு சொல்கிறாள்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .