அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு
எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –
உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்
ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்
வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு
அன்று தப்பினேன்
அகாரம் ஆகாரம் தீ வினைக்கு ஆறு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –
ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்
ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு
அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-)
அவதாரிகை –
சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப் பெற்றோம் –
இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –
(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்
நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்
ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப்பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)
தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்–
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-
பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-
பதவுரை
தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?
வியாக்யானம் –
தீ வினைக்கரு நஞ்சே –
பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை
நல் வினைக்கு –
பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )
இன்னமுதினை –
நிரதிசய போக்யனாய் –
பரம ப்ராப்யனாய் உள்ளவனை –
இப்படி பாபங்களை போக்குகைக்கும் –
தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –
பூவினை மேவிய இத்யாதி –
பிராட்டியோடு சேர்த்தியாலே–
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு
புன்மை இத்யாதி –
அம் மேன்மை உடையனாய் இருக்கச் செய்தே –
அவளோட்டை சேர்த்தியாலே-
ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –
ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –
இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –
வல்லாயினை –
மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர் ஏறிட்டு கொள்ளிலும்
அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –
அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –
ஏற்றை –
லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற படியால்
மேணானித்து இருக்கிறவனை –
இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி
எம்மானை –
அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று-
இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –
எஞ்ஞான்று தலைப் பெய்வனே –
அவன் படிகள் இவை யான பின்பு-நான் இழவல்லது பொருள் இழவு இல்லை இறே –
அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே )
அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –
அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –
தாத்பர்யம்
இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க
சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு
அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க
ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி
பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே
கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று
இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply