(மித்ர பாவேந –சரணாகத ரக்ஷணம் -விரதம் கொண்டு -கைவிட மாட்டேன் இருப்பதாக பெருமாள் சித்தாந்தம்
நயாமி பரமாம் கதிம்-அஹம் ஸ்மராமி -வராகப்பெருமாள் சித்தாந்தம்
பக்தி பிரபத்தியால் முக்தி இரண்டையும் தாண்டி -பூர்வ பக்ஷம் ஆக்கி -அவன் திருவடிகளே கதி –
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
சரணாகதியாகப் பற்றியதும் உபாயம் ஆகாது -என்கிறார்
இதுவே ஆழ்வார் சித்தாந்தம் –
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -நிர்ஹேதுக கிருபை
அவன் இரக்கம் உபாயம்-அவன் இனிமை புருஷார்த்தம்
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடை -திருவாய் மொழியிலும் சரம அருளிச் செயல் இங்கே போல்
தேவப்பெருமாள் இமையோர் தலைவா அமரர்கள் அதிபதி உபக்ரமம்
அவன் சொன்னதை இவன் நடத்திக் காட்டியதால் இரண்டும் இவ்வாறு –
யத்ர -மதிர் மம -சஞ்சயன் மதம்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -மதுரகவி ஸித்தாந்தம்
செஞ்சொல் கவிகாள் -10-7-இதன் விவரணம்-இங்கு ஈனச்சொல் -நைச்சியம் பாவித்து அருளிச் செய்கிறார்
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே )
(துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –அறத்தொடு நிற்றல் -கற்பின் வழி ஒழுகுதல் –
தோழி இடம் தலைவி அறிவிக்கிறாள் –
ஞானப்பிரானை அல்லால் -மற்று ஒன்றைக் காணாவே
பழிச்சொல் என்று பாராமல் காதலை வெளிப்படுத்தியவாறு –
ஸர்வ சக்தன்-ஸர்வஞ்ஞன் தானே -அசக்த அஞ்ஞானரான நமக்கு எல்லாம் நல்ல ரக்ஷகன்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே அறிவு ஒன்றும் இல்லாத நமக்கு ரக்ஷகன்
ஞானப்பிரான் -சத்தையை இருப்பத்தைச் சொல்ல வில்லை
இவர் ஒருவரையே பற்ற வேண்டும் என்றும் சொல்ல வில்லை
உபாயாந்தரம் போல் நாம் பற்றும் பற்றுதலும் உபாயம் இல்லை என்பதை தான் இங்கு அருளிச் செய்கிறார் –
ஞானப்பிரான் தான் உண்டு என்னாமல் -அல்லால் இல்லை -நான் கண்ட நல்லது -உறுதிபட அருளிச் செய்கிறார்
யார் புகல் இடம்
யாருக்குப் புகல் இடம்
ஸூ குமாரனான பரதன் எப்பாடு படுவானோ இந்த குளிரில் -இளைய பெருமாள் சொல்ல
பெருமாள் அயோத்யைக்குத் திரும்ப யத்தனிக்க
கைகேயி பற்றி பேசி மாற்றியது போல்
மதுரகவி பிரக்ருதிகள் ஆழ்வாரை மாற்றி இப்படிப் பேச வைத்து தமது சித்தாந்தத்தை அருளிச் செய்விக்கிறார்கள் -)
அவதாரிகை-
பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-
உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை – அத்ய ராஜ குலச்ய -இத்யாதி
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யா காண்டம் -8 7-9 – —
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப் படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது –
சக்கரவர்த்தி துஞ்சினான் –
பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-
உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது –
நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் –
அபி வ்ருஷா -என்கிறபடிக்கே
படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட நோவோன்றாய் இருக்கச் செய்தே –
பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே –
இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை —
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை (பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் )பிரசங்கித்து சிதிலராவார் –
அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று –
சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –
ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-
மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க —
அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக –
மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –
ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் -(இவரே நஞ்சீயர் பட்டர் இடம் சேர்த்து வைத்தார் -தீர்த்த வாசி ப்ராஹ்மணர் இவ்வாறு திருமழிசை தாசர் ஆனார்)
நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் –
அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –
அவரும் தாமுமாக (திருமழிசை தாசரும் நஞ்சீயருமாக )திருவாய் மொழி ஓதா நிற்க –
(கந்தாடை )ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க
புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம் (நியதி இல்லா அனுபவம் )-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ (பட்டர்)பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -(எம்பெருமானார் பற்றிய வ்ருத்தாந்தம் )
இரவு (பால்)அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் –
முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-
எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் (உத்தரீயம் )கொண்டு பரிமாற-
வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி -(வடுக நம்பி இப்படி ஆவாராம் )
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாராய் –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே
புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன –
ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள –
பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் –
நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி –
அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது –
இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் –
இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிற போதே –
உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தைக் கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம்
ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப் பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-
பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-
பதவுரை
ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளை யுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானை யன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.
வியாக்யானம் –
ஈனச் சொல் ஆயினுமாக –
சிலர் ருசி உண்டாய் கேளா நிற்க -நான் சொல்லாது இருக்க மாட்டேன் –
சர்வேஸ்வரன் முந்துற அர்ஜுனனுடைய சோகத்தை காண்கையாலே
ரஹஸ்யத்தை சொல்லிக் கொடு நின்று –
பின்பு மூலையில் கிடந்ததை முற்றத்தில் இட்டோம் -என்று பதண் பதண் என்றான் இறே –
இவர் அதை முற்படவே அருளிச் செய்து கொள்கிறார் –
ஈனச் சொல் ஆகிறது –
அஹிதமான சொல்லு –
அஹிதமாகை யாவது -பிரயோஜன சூன்யமாகை –
அதாவது
ஸ்வரூபத்துக்கு அநநு ரூபத்தை சொல்லுதல் –
அசக்ய கிரியையைச் சொல்லுதல் செய்கை –
தன் பரத்தை ஒரு சர்வ சக்தி தலையிலே ஏறிடுகையிலே எழுகிறது (உத்யோகிக்கிறது )ஆகையாலே –
அசக்ய கிரியை அல்ல –
தன் பாரதந்த்ரதோடே சேர்ந்தது ஆகையாலே இது தான் ஸ்வரூபத்தோடு சேருமதாய் இருக்கும் –
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளால் வரும் –
ஜ்ஞான வைகல்யமும்(தாழ்ச்சி -குறைவு )
சக்தி வைகல்யமும் -வராதிறே ஒரு சர்வ சக்தியை பற்றுகையாலே –
(எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
என்று சக்தியைச் சொல்கிறது –
ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது -)
ஆயினுமாக –
ஆகியுமாக என்னாதே –
ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே ஆயினும் –
ஆக என்கையாலே –
அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி
இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக –
அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் –
நான் சொல்லித் தவிரேன் –
இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –
ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே –
நீர் தாம் இப்படி -பூவுக்கிட்டோம் போலவும் என்று
சொல்லுகிறது தான் ஏது என்ன –
எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று –
என்றான் -அவனையே பற்ற வேண்டுகிறது என் என்ன –
இவை யாபன்னமான வன்று -பரார்தமாகத் தன்னைப் பேணாதே
ரஷிப்பான் ஒருவனைப் பற்ற வேண்டாமோ –
இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –
(ஆபத்து வந்த பிரளயத்தில் ரஷித்தவன் ஹேது
ப்ரதிஜ்ஜை -இவனை அல்லால் வேறே நல்லது அல்ல)
ஹேதுவாகிறது தான் என் என்ன –
எறி திரை வையம் –
கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே –
ரஷ்யத்துக்காக தன்னைப் பாராதே-அழிய மாறுவான் -என்கை –
இடந்த -இத்தால்
சர்வ சக்தி -என்னுமிடத்தைச் சொல்லுகிறது —
பிரான் –
சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும்
அவன் கையதே என்கிறது –
ஸ்வாமி என்கிறது –
இவற்றின் உடைய ரஷண உபாய ஜ்ஞானமும் –
அதுக்கு ஈடான சக்தியும்
பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை –
இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும் அவனையே பற்ற வேணும் –
இனி உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –
ஆக –
குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன-
இரும் கற்பகம் இத்யாதி –
இங்கே ஒரு ஸூஹ்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும் அவன் வேணும் –
ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்
அவன் என் என்னில் –
இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –
இவன் கர்மத்தையும் அளந்து –
இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –
கிரியை நசித்தால்-நின்று பலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் –
அபூர்வம் என்றாதல் –
ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே –
இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –
மற்ற எல்லா யவர்க்கும் –
ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –
அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –
எல்லா யவர்க்கும் –
தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே –
ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம்
பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்
ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே
இத் தலையில் உண்டான அறிவு அசத் சமம் என்கை –
என் தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம் –
பேற்றுக்கு இத் தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம்
இல்லையாகவுமாம் –
அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது —
(ஞானான் மோக்ஷம் -உபநிஷத் சொல்லுமே என்னில்
நமது ஞானத்துக்கு -அவனே மோக்ஷ உபாயம் -என்று அறிய வேண்டுமே —
அப்ரதிஷேதத்துக்கு-விலக்காமை -அத்வேஷமே வேண்டும்
அவன் ஞானத்துக்கு மட்டுமே மோக்ஷ உபாதத்வம்-
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலை த்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )
பேற்றுக்கு அடியான ஜ்ஞானம் அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –
ஞானப் பிரானை –
தன்னை சூழ்த்திக் கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –
)தனக்குத் தான் தேடும் நன்மை கழுத்துக்கட்டியாகுமே)
பர ரஷண உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று –
அல்லால் இல்லை –
(ப்ரஹ்லாதன் போல் )அவன் உளன் என்கை யல்ல –
ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-
அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹ ஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே –
வழி கெட நடந்தோமா -என்று நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவன்றே இவர்கள் சொல்லுகிறது –
(எங்கும் உளன் கண்ணன் என்று அன்றோ இங்கு உள்ளானா என்பதுக்கு பதில்
ஈஸ்வர தத்வம் ஓன்று உண்டோ என்று கேட்டால் ததகவ த்ரயங்களும் உண்டே என்று அன்றோ பதில் சொல்லுவார்கள்
ஆஸ்திகரும் அங்கீ கரிக்கும் படி அன்றோ பதில்
ப்ரஹ்மம் சத்யம் ஆத்மா மித்யா -ஜீவனே ப்ரஹ்மம் அத்வைதி –
ஈஸ்வரன் என்றாலே ஈஸ்வரனும் ஈஸிதவ்யனும் வேணுமே
அப்பா என்றால் பிள்ளையும் இருக்க வேண்டுமே
பெருமாளை மட்டும் சொல்லும் சொல் இல்லையே
திருவேங்கடமுடையான் என்றாலே திருவேங்கடமும் வேணுமே
கேசவன் என்றாலே கேசம் உள்ளவன் -க ஈசன் -இருவருக்கும் நியந்தா அன்றோ
ஸோஸ்நுதே –ஸஹ ப்ரஹ்மணா -கூட இருந்து அனுபவிக்கிறான்
ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற வாதம் பொய்யாக்கி அல்லல் தவிர்த்த ராமானுஜன் அன்றோ
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் –களையாது ஒழிவாய் -களை கண் மற்றிலேன் )
அவனை ஒழிந்த தானும்
தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச் செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் –
திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –
அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-
இவ் விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-
உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து
நம்பி இவ் வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று
சஹகாரி நைர பேஷயத்தை அருளிச் செய்தார் இறே -(அல்லால் இல்லை என்பது இதுவே )
ஈஸ்வரனை ஒழிந்த தன் ஸ்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு
இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –
இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும்
தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே சஹ காரியாக உள்ளது –
அவற்றைத் தவிர்க்கிறது –
(விடுவித்து பற்றுவித்து அருளும் அவனே உபாயம்
பக்தி தன்னையும் பகவானையும் உபாயமாக ஏற்கும் –
பகவான் தான் உபாயம் ஏற்பான் –
சரணாகதி தான் உபாயம் என்பதையும் ஏற்காதே)
நான் கண்ட –
கைப் பறியாக பறித்ததாய்-
புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –
புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து –
அல்லாது போது கலங்கி இருக்கிற ஜ்ஞானத்தைக் கொண்டு –
பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே
பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது
தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார்-
(கைப்பறியாய் பறித்ததாய் –
ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –
அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும்
கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –
பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் –
அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் –
தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் )
இங்கும் அங்கும் ஞானப்பிரானை அல்லார் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே -நமக்காக அஹம் ஸ்மராமி- நயாமி பரமாம் கதிம் –
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -காஞ்சி தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -இதன் அடிப்படையிலே –
பட்டர் -கௌசிக புராணத்தில் மற்ற அவதாரங்களை விட வராஹ அவதார ஏற்றம்
ரஹஸ்ய சிந்தாமணி -தேசிகன் வராஹ சரம ஸ்லோக வியாக்யானம்
தாத்பர்யம்
இதில் மதுரகவி ப்ரக்ருதிகள் -அந்தரங்கர்
இவர் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு மோஹித்து இருப்பதை அறிந்து
பிரசுத்துதமான கிருஷ்ண அவதிகாரத்திலும் மோஹிப்பார் என்று அறிந்து
இனி இவர் ஸ்திதியை விஸ்வசிக்க முடியாது
நம்மைப் பார்க்க வைப்போம்
பிரிவாற்றாமை குறைக்க இதுவே வழி
சரம ஸ்லோகம் கீதாச்சார்யன் உபதேசித்தான் போல் -அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு அருளிச் செய்தது போல்
ஆழ்வாரும் -நமக்காக தான் கண்ட நல்லதை -அந்தரங்கரை வியாஜமாகக் கொண்டு –
லோக உஜ்ஜீவன அர்த்தமாக தம்முடைய பரம சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
இதுக்கு மேல் வேறே ஒன்றும் இல்லையே -ஆகவே இதுவே பரமமான -ஸித்தாந்தம்
ஞானப்பிரான் சன்னதி
நீராஞ்சனம் தேங்காய் மூடியில் -ஞான தீபம் தூண்ட -காயத்ரி ஜபம் பிரார்த்திப்பதும் இதுவே
மற்றவை தன்னடையே கிட்டும்
நாம் உபதேசிக்கும் இது சம்சாரிகளுக்கு ருசிக்காமல் இருந்தாலும் –
சொல்லி அல்லது தரிக்க மாட்டாமல் -அனுபவம் உந்த அன்றோ அருளிச் செய்கிறார்
ஆழ்வார் வார்த்தை ஈனச் சொல் ஆகாதே
சில மஹான்கள் சிலர் உண்டாக இருப்பதால் சொல்கிறேன்
சம்சாரிகளுக்கும் காலாந்தரத்தில் ஆவது ருசி பிறக்கலாம் அன்றோ -உஜ்ஜீவன ஹேது -ஹிதத்துக்காக அருளிச் செய்கிறார்
பரம காருணிகர் அன்றோ ஆழ்வார்
காது கொடுத்தாலே போதும்
ஸ்ரவணம் கீர்த்தனம் –ஆத்ம சமர்ப்பணம்
செல்வத்துள் எல்லாம் தலை -செவிச் செல்வம் தானே
நான் சொல்வது ஸூ லப அனுஷ்டானமாகவும் -இனிமையாகவும் இருக்கும்
மருந்தாகவும் விருந்தாகவும் ஸ்வரூப அனுரூபமாகவும் இருக்கும் –
அது ஏது எண்ணில்
ஸ்ரீ யபதியாய் பராத்பரன்
தனது மேன்மையும் பாராதே
இவர்கள் பிரார்த்தனையும் எதிர்பாராமல்
தானே வந்து மஹா அவதாரமாய் -உத்தரித்து அருளிய மஹா உபகாரகன்
நம் அனைவரையும் ரக்ஷித்து அருளியவன்
புண்யங்கள் செய்து கற்பக வருஷம் இடம் அபீஷ்டம் பெற்று வாழும் தேவர்களுக்கும்
அதன் மூலம் -அந்தராத்மாவாக இவன் தானே
தண்ணீர் ரசமாகவே நான் இருக்கிறேன்
ஸூர்யனில் ஒளியாயும் இருந்து
தேவர்களைக் காப்பவன் அவன்
அல்லாதவர் -கர்ம சம்பந்த ஸூந்யராய் -வைபவம் மிக்க நித்ய ஸூரிகளுக்கும் தனது திரு மேனியை அனுபவிப்பித்து தரிக்க வைப்பவனும் இவனே
மற்ற எல்லாருக்கும் -சம்சாரிகள் -மனுஷ்ய பசு பஷாதிகள்;-ஸர்வவித அபீஷ்டங்களையும் கொடுத்து ரக்ஷிப்பவன் அவனே
சர்வஞ்ஞனாய் -ஞானப்பிரான்
சர்வ சக்தனாய் -இடந்து
அவாப்த ஸமஸ்த காமனாய்
நிரங்குச ஸ்வதந்த்ரனாய்
நிருபாதிக சர்வ ஸ்வாமியாய்
அவனை ஒழிய
அல்ப சக்தர் அல்ப ஞானம் உள்ளவர் -சம்சாரிகளுக்கும் -கர்மாதீனர் -இவர்களுக்கும் ப்ரஹ்மாதிகள் ரக்ஷகர் ஆகார்
உபாயாந்தரங்களின் தாழ்ச்சி -ஜடப்பொருள் மோக்ஷம் தராதே
நஸ்வரமாய் -சேதனர் ப்ரத்யயனனம் பண்ணி சாதிக்க வேண்டுமே
கர்ம ஞான பக்தி -பரிபக்குவம் இல்லா தவர்களுக்கு -வேதம் முக்குண சம்சாரிகளுக்கும் உபதேசிக்கும்
நமது நிலைக்குத் தக்க அனுஷ்டானம் வேண்டுமே –
நதியில் இருந்து கைக்குத் தக்க நீரைப் பருக வேண்டுமே –
இவ்வர்த்தத்தை
உலகை வஞ்சிக்கவோ
ஆச்சார்ய பீடம் வகுக்கவோ
புகழுக்காகவோ
கியாதி லாப பூஜா -லாபத்துக்காக
சொல்ல வில்லை –
நான் -பெருமையை வியாக்யாதா விவரிக்கிறார்
ஸம்ஸார -பங்க நிமக்நாராய் -சகல சேதன உத்தாரண ஏக பரனாய் -வராஹ மூர்த்தியை ஈடுபட்டு
பகவத் கடாக்ஷத்தால் -அந்தக்கரண மலம் இல்லாமல்
தத் பிரசாத லப்த தத்வ யாதாத்ம்ய அவபோதம் பெற்று
அனுபவ ஜெனி பிரேமம் உள் அடங்காமல்
வெளி வந்த சொல்லால் இந்த உபதேசம்
இது உங்கள் நன்மைக்காக இந்த மஹா அர்த்தத்தை உபதேசிக்கிறேன் என்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்