ஸ்ரீ திருவிருத்தம்-94-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள்
உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான்
இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

தலைவியைக் கண்ட பாங்கன் -மீண்டு -தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —
தோழன் இடம் தலைவியின் ஏற்றம் சொல்லி தேக ஆத்ம குணங்களைக் காணச் சொல்ல
அவன் சென்று மீண்டு வியந்து -வைதிகரான உன்னைப் போல்வார் தானே இவள் அழகைக் காணலாம்
இருவர் பெருமையையும் சொல்லும் பாசுரம் இது -அன்றோ –

வைதிகரே-உயர் சிறப்பு எவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்

வைதிகரே-உயர் சிறப்பு எவகாரம் -வைதிகர் மட்டுமே அறிய முடியும்

சீதா வைபவம் அறியாத திருவடி –
மோதிரம் கொடுத்து அனுப்பி காண வைக்க
அவளைக் கண்ட பின் துஷ்கரம் க்ருதவான் ராமன்-இவளைப்பிரிந்து இன்னும் உயிர் உடன் உள்ளானே என்று அருளிச் செய்தது போல் –
கண்டனன் -மூன்று பண்புகள் சேர்ந்து-கற்பு நற்பிறப்பு இத்யாதிகள் புகழ்ந்து அருளிச் செய்தானே )

அவதாரிகை –
துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார் (கீழ் இரண்டு பாசுரங்களால் )
உமக்கு குறை இல்லையே -என்ன –
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே ( 1-5 )அயோக்யா அனுசந்தானத்தாலே ஓன்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –

தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த
(கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம் –

மைப்படி மேனியும் –
அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –
கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –

பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –
அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –

நஞ்சீயர் -இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –

(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)

இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –

நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –
இவ்வளவும் வந்து –
இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –

மைப்படி –
காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –

செந்தாமரை கண்ணும் –
அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –

வைதிகர் இத்யாதி –
இப்போது -வைதிகர் என்கிறது –
வேதத்தில் பூர்வ பாக நிஷ்டர் –
கேவலம் கிரியா கலாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் –
ப்ரஹ்மத்தின்  உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே –
கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –

அங்கனன்றிக்கே –
நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை
உடையவர்களைச் சொல்லிற்றாகவுமாம் –

அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவு கெடும் அது அன்றிக்கே இருக்குமவர்கள் —
இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –

ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன –
எப்படி இத்யாதி –
ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம் ப்ரமிக்கும் அந்த சம் ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே –
குருட்டுப்-பசுவும் சம் ப்ரமியா நிற்கும் இறே –
அப்படி யானும் சொன்னேன் –
அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ –
நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –

அடியேன் மற்று யாது என்பனே –
இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்தி பரவசுமான நான்-அடைவு பட
ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –

அன்றிக்கே
அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு
சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –

நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்
அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்

ஊருக்கு வரும் பசு கன்றை நினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே
நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான்
உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச் சொல்ல வல்லேன் -என்கிறார்

தாத்பர்யம்

இதில் தேவர்கள் அபிமானத்தாலும்
மற்றவர்கள் அஞ்ஞானத்தால் பேச மாட்டாமல் உள்ளது போல்
இவரும் பக்தி பாரவசயத்தால் பேச இருப்பதை அருளிச் செய்கிறார்
வேத யுக்தமான உன்னுடைய ஸ்வரூபாதிகளை அறிந்து சாஸ்திரம் விதித்தபடியே த்யானம் செய்த பக்தர்கள்
உள்ளம் புகுந்து அஞ்சன மலையுடன் செந்தாமரைக் கண்ணுடன் பரவசம் ஆக்குவான்
ஸ்யாமம் அதி சுந்தரம்
உள்ளுள்ள வாத்சல்யம் கண்ணில் வெளியில் கசிந்து பரிவாஹம் ஆகுமே
தியானித்து ப்ராப்யமான உனது திருவடிகளை சிரஸா வகிப்பார்
என்னால் முடியாதே யாகிலும்
காலையில் மேய்க்கப் போன பசு கன்றை நினைத்து கனைத்து வருமா போல்
அறியாத குருட்டுப்பசு கனைக்குமா போல்
நானும் சொன்னேன்
இப்படி அல்லது
நீ அளித்த பக்தியால் மதி மயங்கி கிடைக்கும் நான் ஸ்வ தந்திரமாக ஒன்றும் சொல்ல வல்லேன் அல்லேன் என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply