(பேறு தப்பாது துணிந்து இருந்தும்
பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் –
பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் –
இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே
இவர்கள் தண்மையை சொல்லி –
ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் –
தினம் தோறும் -காலையிலும் மாலையிலும் -கார்யம் சித்தி பெறவே –
தோள் கண்டார் தோளே கண்டார் போல்வர் அல்லரே –
ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு
இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே-
ஆழி எழ -7–4-இதன் விவரணம்
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-
இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே
வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல்
சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும்
ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆணைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ -)
அவதாரிகை –
பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம் பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் –
நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை
அழிவுக்கு இட்டு
வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –
வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-
பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-
பதவுரை
பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்தி செய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்—தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
வியாக்யானம் –
பேணலம் இத்யாதி —
முந்நீர பெரும் பதியை பேணலம் இல்லா அரக்கர் –
கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –
நீள் நகர் இத்யாதி –
உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –
பர ஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்கு சென்று இராது என்று – இரங்குகைக்காக
சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று –
அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -(த்யஜேத் ஏகம் குலம் காக்கஒருவரை நீக்கலாம் )
தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் –
நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்
பேண லமில்லா –
பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது –
பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்கக் கடவோம் என்று இரார்கள் –
பேணலம் இத்யாதி –
அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –
முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –
அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –
கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-
கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –
நீள் நகர் –
தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –
(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் )
நீள் எரி வைத்து அருளாய் –
தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான
சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே
இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –
ஒரூரைச் சுட்டுத் தர வேணும் என்பர்கள் –
நின்னை –
ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –
ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை இறே -என்று
கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது –
விண்ணோர் –
எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –
நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே –
பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –
கால் நிலம் தோய்ந்து –
நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து –
பூமியிலே வந்து கிட்டி –
தொழுவர்-
ந நமேயம் -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –
நின் இத்யாதி –
தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ –
தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே –
உன்னுடைய விக்ரஹத்தில் உண்டான அழகிலே –
அநேகம் கூற்றிலே -ஏக தேசமான – ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவோ -அன்று இறே –
சக்ருத் வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி -(ஆளவந்தார் )
வைகல் மாலையும் காலையுமே –
அவ் வடிவைக் காண் கைக்கு அர்த்திப்பார் நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –
நாள் தோறும் –
அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –
(அப்பு அரும்பதம்
இத்தால் அநந்ய ப்ரயோஜனர்க்கு நேர்த்தி அற்பமாய் பலம் அநேகமாய் இருக்கும்
பிரயோஜனாந்தர பரருக்கு மாறி நேர்த்தி அநேகமாய் பலம் அற்பமாய் இருக்குமே -_
வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் –
நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –
அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –
(விபீஷணன் -ராக்ஷஸன் என்பதால் கீழ் கால் பாவாது
பூமியில் பற்றுக்கொம்பு ஆகாது)
இத்தால் –
அநந்ய பிரயோஜனருக்கு நேர்த்தி அல்பமாய் -பலம் அதிகமாய்
பிரயோஜனாந்தர பரர்க்கு-நேர்த்தி அதிகமாய் பலம் அல்பமாய் -இருக்கும் என்றபடி
தாத்பர்யம்
கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –
இந்த ராவணாதிகள் முந்நீர் அரணாக யுடைய ஒரு தீவில்
ஒருவராலும் அணுக ஒண்ணாத இலங்கை என்னும் நகரை நிர்மித்து
அதுக்கு ஒருவராலும் அழிய ஓண்ணாமல் வரம் பெற்று –
வாசம் செய்து அநேக ஸஜ்ஜனங்களை துன்புறுத்தி
அதுக்காக நீ அவதரித்து பானம் கொண்டு அழிக்க உன்னை அனவரதம் பிரார்த்திக்க
நீ அவதரித்த இடத்தில் சவுந்தர்யம் அனுபவிக்காமல் இருந்த
அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply