ஸ்ரீ திருவிருத்தம்-96-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

இணங்கு நின்னோரை இல்லாய் – நிகரானவர் இல்லாதவனே -திரு நாமம் சாத்தி ஸம்போதிக்கிறார்
நின் கண் வேட்கை எழுவிப்பனே –
உன்னை விட நான் உயர்ந்தவன் என்று உள்ளுறைப் பொருள்
உன்னுடன் விலக்கி வைத்து -தேவதாந்த்ரங்களை உருவாக்கி -வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்-புத்தி பேதத்தால் -சம்பிரதாயங்கள் பல பல வாக்கினாய் -துறைகள் உபதேசிக்கும் ஆச்சார்யர்கள்
பிணங்கும் சமயம் -சம்ப்ரதாயம்- பல பல வாக்கி அவையவை தோறு அணங்கும் பல பல வாக்கி-தேவதாந்தரங்களும் பல
நின் மூர்த்தி-உன்னுடைய திருமேனியை விரித்து -பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மயில் தோகை -கடல் அலைகள் போல் தன்னுள்ளே திரைத்தெழுந்த இத்யாதி – பரப்பி வைத்தாய்
யாரை வணங்கினாலும் -சரவ்ச தேவ நமஸ்காரம் கேசவ கச்சதி-என்றும் சொல்லி வைத்தாய்
அநாதி கால கர்மம் -ஆகவே யாரையாவது வணங்கலாம் என்னும் புத்தி
இத்தை மாற்றி உன்னையே வணங்கச் செய்வதே நின் கண் வேட்கை எழுவிப்பேன்
முதல் மூன்று வரிகள் அவன் செய்த செயல்கள்
இறுதியில் என்னை அனுப்பிய கார்யம்
உனது பக்தி வளர்க்கவே என்னை பிறப்பித்தாய்
ஆழ்வார் பெருமையை உலகோருக்கு அறிவிக்கவே இந்தச் செயல்கள்
ஆழ்வார் ஜெயித்தால் தான் பெருமாள் ஜெயிப்பதாக ஆவான்

ஒன்றும் தேவும் -4-10-இதன் விவரணம்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

தலைவனை முன் நினைந்து -பாவனையால் பேசுகிறாள் உனக்கு சமமானவர் இல்லை என்பதால் –
தனது கற்பு நிலையை வெளியிடுகிறாள் -தலைவி வெறி விலக்குவிக்க நினைதல் -சஹி வெறி விலக்கு இல்லை )

அவதாரிகை –
பேச ஒண்ணாது என்று கை வாங்கவும் மாட்டாதே –
பேசாது இருக்கவும் மாட்டாதபடியாகவும் –
இதர விஷயங்களில் அருசியையும் -பிறப்பித்து –
தன் பக்கலிலே ருசியையும் பிறப்பித்த-இந்த மகா உபகாரத்துக்கு சத்ருசமாக பண்ணுவது
ஒரு பிரத்யு உபகாரம் இல்லை இறே –

உன்னதான வஸ்துவையும் உன் பக்கலிலே சமர்ப்பிக்கும் அத்தனை இறே இனி
என்று அத்தைச் செய்தார் –

வணங்கும் துறை -லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ-
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை
என்று அருளிச் செய்கிறார் –

நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக -கரண களேபரங்களைக் கொடுத்து-
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து –
ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-
கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –

(நன்மையால் மிக்க நான்மறையார்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே)

சித் சக்திகளையும் பிரவ்ருத்தி சக்திகளையும் -அடியிலே இவை அசித் கல்பமாய் இருந்த-சமயத்திலே –
இவற்றினுடைய தயநீய தசையைக் கண்டு –
புருஷார்த்தம் இன்னது என்று அறிந்து –
ருசித்து பற்றுகைக்கு ஈடாக கொடுத்து விட —

அவை தான் இதர விஷயங்களின் ருசிக்கைக்கும்-
அதுக்கு ஈடாக ப்ரவர்த்திக்கைக்கும் பொதுவாய் இருக்கையாலே –
இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -(ப்ரவர்த்திப்பித்தாய் என்றுமாம் )

கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே -யாறி இருந்த தாயைத்
தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –

தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க  நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின் மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்

வியாக்யானம் –

நாம் இவை சம்சரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன –
வணங்கும் துறை இத்யாதி –
ரஜஸ் தமஸ்க்கள் உடையராய் இறே புருஷர்கள் இருப்பது –
அவ்வவ குண அநு குணமாக ருசி பிறந்தால்
அவ்வளவிலே -ராஜசராயும் -தாமசராயும் உள்ள அவ்வவோ தேவதைகளே
ஆஸ்ரயணீய வஸ்துக்கள் என்று உபதேசிக்கைக்கு ஈடாக
உபதேஷ்டாக்களான தீர்த்தர்கள் பலவாயும் உண்டாக்கி வைத்தாய்

துறை என்று
தீர்த்தமாய் -அத்தால்
தீர்த்தரை நினைக்கிறது –

மதி இத்யாதி –
மதி பேதத்தால் -ஒருவன் சித்தாந்தித்து –
அது தன்னையே பூர்வ பஷமாக கொள்ளும்-இறே வேறு ஒருவன் –
இப்படி பிணங்கு கைக்கு  பாசுரமான அவ்வவோ சாஸ்திரங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –

அவையவை இத்யாதி –
அவ்வவோ சாஸ்த்ரங்களில் பிரதிபாதிக்கப் படுகிற தேவதைகள்
பலவற்றையும் உண்டாக்கி வைத்தாய் –

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் —
யோயோயாம்யாம் தநும்பந்த்யா (ஸ்ரீ கீதை 7 அத்யாயம் )-என்கிறபடியே
உனக்குத்த அநு பூதர் ஆனவர்களை பலரையும் உண்டாக்கி வைத்தாய் –

பைசல் கைசு நோய் முக்தைசு -என்று
பண்டே இவற்றினுடைய அறிவு கேட்டுக்கு மேலே
ஷுத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர்  என்று உபதேசிப்பாரையும் –
அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான சாஸ்திரங்களையும் –
அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய் –

இணங்கு நின்னோரை யில்லாய் –
நீ இப்படி பரப்பி வைத்தால் இத்தை வேறு சிலரால் தவிர்க்கலாம்படி இருப்பான் ஒருவன் அல்லை –
உன்னோடு ஒக்க நிற்கும்படி –
உனக்கு போலி யானாரை-உடையை அல்லை –
இனி நீ செய்யப் பார்த்தது என் என்ன –

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து –
அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி –
எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –

இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே
பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –

நீ கை விட்டாலும் நான் கை விடவோ –
அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

தாத்பர்யம்

இதில் தம்மைப்போலே எல்லாரையும் எம்பெருமான் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பார்க்க
அவர்கள் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இருப்பதைக் கண்டு
மோக்ஷ ஹேதுவான சரீரம் கொடுக்காமல்
ஸம்ஸாரத்தில் உழலவே அத்தைக் கொடுத்து
பொதுவாக பந்த மோக்ஷ ஹேதுக்கள் ஆகின்றது அன்றோ
மோக்ஷ உபயோகி மட்டும் அல்லவே
ஈஸ்வரன் கெடுத்தான் என்று அவனை வெறுத்து -கொடுத்தவனையே கெடுத்தவன் என்று வெறுக்கும் படி அன்றோ உனது செயல்கள்
இவர்களுக்கு எப்படியாகிலும் உன்னையே ஆஸ்ரயிக்கும் படி ப்ரீதியை வளர்த்து
ஊரும் நாடும் உலகும் என்னைப் போலவே ஆக்குவேன் என்று மார் தட்டுகிறார்
ரஜோ தமோ குணம் -சத் சாஸ்திரம் கற்று சத்வ மூர்த்தியான உன்னை விரும்பாமல்
பரஸ்பர விருத்தமாய்
மதங்ககள்
குருக்கள்
ருத்ராதி தேவதைகளையும் உருவாக்கி
சேதனர்களுக்கு அறிய வல்ல -செய்ய வல்ல சக்தியையும் கொடுத்து வைத்தாய்
அவற்றைக் கொண்டு அந்த தேவர்களையே தொழுது சம்சாரிகளாகவே திரியா நின்றார்கள்
நீ அவர்களை உபேக்ஷித்தாலும் அவர்களைத் திருத்தி
உன்னிடம் ஆஸ்ரயிக்கும் படி
உனது பக்கலிலே ப்ரீதியை எழுவிப்பன் என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading