ஸ்ரீ திருவிருத்தம்-91-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

 

(கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே
நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே

கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ

கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –

வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

இம் மூன்று இடங்களிலும் காணலாம்
சரீரம் தள்ளி ஆத்மாவை
பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை

யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற

நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-)

அவதாரிகை –

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –
குறுகா நின்றது என்னா –
ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –
அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –

ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –

இந் நெஞ்சு தன்னையும் வைக்கல்  ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று  இலனாகில் –

தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல்  –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

வியாக்யானம் –

சுருந்குறி வெண்ணெய்-
சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –

வெண்ணெய் தொடு உண்ட –
வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் –

கள்வனை –
களவு தன்னை யாயிற்று களவு கண்டது –
ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –
தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –

வையம் இத்யாதி –
இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –

இத்தால்
ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் –
ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –

மாவலி இத்யாதி –
தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-
தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –

நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று
அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –

மாவலி மாட்டு –
ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று –
தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –

இரும் குறளாகி –
பெரிய குறளாகி –
அதாவது
லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –

இசைய –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –
அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –

ஆரேனும் வேண்டா என்னிலும்
அவனும் இசைந்து கொடுக்கும் படியும்

ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-
ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –

வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் –
தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் –
நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –

தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –
அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –
இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –

பெரும் கிறியான் –
பெரு விரகன் –

அடியேன் –
மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –
இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –

நெஞ்சம் பேணலதே –
பரத்வதையும் கொள்ளாது –
பாவோ நான் யத்ர கச்சதி –

ஒருங்கற –
பிறிகதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –
யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

தாத்பர்யம்
இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள்
நீர் இவ்விஷயத்தை விட்டு எங்களைப் போலே
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல
நான் அப்படி செய்யினும்
என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –

ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ

கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக
அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்

பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி
ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்

மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து
பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த
நடை அழகிலும்
புத்தி சாமர்த்தியத்திலும்
ஈடுபட்ட நெஞ்சு
வேறே ஒன்றைப் பேணாதே

பாவோ நான்யத்ர கச்சதி போல்
இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply