காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த
யாமுற்றது உற்றாயோ? வாழி! கனைகடலே! 2
பொ – ரை : ஒலிக்கிற கடலே! நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கப்பெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாய் இல்லை; அதனோடு நில்லாது, மனமும் உருகி ஏங்குகிறாய்; ஆகையால், தென்னிலங்கை முழுதினையும் நெருப்பிற்கு உணவாகக் கொடுத்த ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை விரும்பிய யான் பட்ட துன்பத்தினை நீயும் பட்டாயோ? அந்தோ! துன்பு நீங்கி வாழ்ந்திடுக.
வி – கு : ‘காமுற்ற கையறவோடு ஏங்குதி’ எனக் கூட்டுக. காமுற்ற -வினையாலணையும் பெயர். கையறவு – துன்பம்; ‘யான்பட்ட கையறவு காணாயோ?’ (கம்பரா. சூர்ப்பண. 107) என்ற இடத்துக் கையறவு இப்பொருள்படுதல் காண்க. இனி, ‘காமுற்ற கையறவோடு’ என்பதற்கு, ‘விரும்பிய பொருள் ஒழிதலோடு’ என்று பொருள் கூறலும் ஒன்று. இப்பொருளில் காமுற்ற என்பது பெயரெச்சம். கை – பொருள். ‘அவர் அன்பும் கையற்ற கண்ணே அறும்’ (நாலடி. 37) என்ற இடத்துக் ‘கை’ என்பது இப்பொருட்டாதல் காண்க.
ஈடு : மூன்றாம் பாட்டு. அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு 3மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, ‘பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.
காமுற்ற கை அறவோடு – ஆசைப்பட்ட பொருள் இழவோடே; ‘ஆசைப்பட்ட பொருள் கையில் கிடையாமையாலே வந்த இழவோட’ என்றபடி. கைத்து-பொருள். காமுறுகையும் இழவும் கடலுக்கு இல்லாதிருக்கவும் எடுத்துக்காட்டாய் விளங்குகிற தனக்கு உண்டு ஆகையாலே ‘இதற்கும் உண்டு’ என்று 1அநுமித்துச் சொல்லுகிறாள். எல்லே – இரவோடு பகலோடு வேற்றுமை அறக் கதறுகிறபடியைக் கண்டு, 2ஓதமும் நானும், உறங்காது இருந்தேனே’ என்கிறபடியே, தன் படிக்குப் போலியாய்’ இருக்கையாலே 3சிதையறவு போன்று 4தோழியை விளிக்குமாறு போன்று விளிக்கிறாள். இனி, ‘எல்லே’ என்பதனை வியப்பு இடைச் சொல்லாகக் கோடலும் அமையும். 5‘என்னே!’ என்பது பொருள். ‘இராப்பகல் முற்ற நீ கண்துயிலாய் – உறங்கக் கண்ட இரவுக்கும், உறங்காமைக்கும் கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வேற்றுமை கண்டோம் இல்லை. உன் காம்பீர்யமெல்லாம் எங்கே போயிற்று?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். நெஞ்சு உருகி ஏங்குதியால் – நெஞ்சு அழிந்து கூப்பிடுகின்றாய். ‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ? அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.
தென்னிலங்கை முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ – பரம காதலனான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்?6 ‘பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனையன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’ என்பாள், ‘தென்னிலங்கை முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த’என்கிறாள். ‘விபீடணனுடைய மாளிகை தீயால் எரிக்கப்படவில்லையே? ‘இலங்கை முற்றத் தீ ஊட்டினான்’ என்றல் எங்ஙனம் பொருந்தும்?’ எனின், அவன் 1அவர்களுக்குக் கூட்டு இல்லாதவாறு போலே, அவன் அகமும் அவர்கள் அகத்துக்குக் கூட்டு இல்லை காணாய்; அவன் அகம் தாஸோகம் அன்றோ? ஆதலின், விபீஷண கிருஹம் இலங்கைக்குள் அன்று போலே இருந்தது. இனி, கொண்டு கூட்டாது, ‘தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்’ என்று ஆன்றொழுக்காகக் கொண்டு, 6இராவண பயத்தாலே முன்பு அரை வயிறாகப் பிழைத்த நெருப்பு, 2‘ஒள்ளெரி மண்டி உண்ண’ என்கிறபடியே, வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப்பெற்றது, 3பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே,’ என்று பொருள் கூறலுமாம். 4‘செந்தீ உண்டு தேக்கிட்டதே’ என வருதல் காண்க. ஆக, பின் இரண்டு அடிகளால், 5தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி அறுவதே கிலேசப்படுகைக்கு என்று கூறி வருந்துகிறாள் என்றபடி. ‘ஆயின், ஆடவனானகடலுக்குப் பிரிவுத்துன்பம் கூடுமோ?’ எனின், 1பிரிவுத் துன்பம் பிராட்டியோடு ஸ்ரீபரதாழ்வானோடு வாசியற்று இருந்தது; ஆதலால், கூடும். வாழி – இத்துன்பம் நீங்கி நீ வாழ்ந்திடுக. கனைகடலே – வாய் விட்டுக் கூப்பிடமாட்டாமல் விம்மல் பொருமலாய்ப்படுகிற கடலே! இனி, ‘ஒலிக்கின்ற கடலே!’ என்று பொருள் கோடலுமாம்.
2. ‘வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால்வளை சிந்தினைதண்
பாயலை உந்திணை மாலை அடைந்தனை பாரில்உ றங்கிலையால்!
கோயி லரங்கனை மாகன கந்திகழ் கோகன கம்பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை யாகும்நெ டுங்கடலே.’
என்னும் திருவரங்கக்கலம்பகச்செய்யும் இத்திருப்பாசுரத்தின் பொருளை விரித்துக் கூறுவது
போன்று அமைந்துள்ளது.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply