நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?
பொ – ரை : ‘கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை
போன்ற அகன்ற திருக்கண்களையும், சிவந்த கனி போன்ற திருவாயினையுமுடைய எம்பெருமானுடைய அழகிய திருத்துழாய் மாலையில் வைத்த ஆசையால் வேகின்றாயோ?’ என்கிறார்.
வி – கு : நொந்து – செயவெனச்சத் திரிபு; ‘நோவ’ என்பது பொருள். ஆரா, நந்தா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள். அளியத்தாய், ஒரு சொல். ‘அந்தமிலா அன்புஎன்மேல் வைத்தாய் அளியத்தாய்’ (கம்பரா. இரணியன் வதை. 136) என்றார் கம்பநாடர்.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்; அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்; அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.
நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – ‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்துவற்றாக உலர்த்த, தொட்டார் மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல். நந்தா விளக்கமே – கெடாத விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற சுவாலையை ‘நந்தா விளக்கே’ என்றது என்னை?’ எனின், தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய சுவாலையினுடைய வேறுபாட்டினை இருந்து பார்க்கின்றாள் அல்லள்; சுவாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போலத் தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள். அளியத்தாய் நீயும் – நாட்டுக்குக் 2கண் காட்டியான அருமந்த நீயும். அளியத்தாய் வேவாயே – பிறர்க்கு உதவி செய்கிற உடம்பிலே உனக்கு நோவு வருவதே?
செந்தாமரைத் தடம் கண் – முகத்தைப் பார்த்துக் குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது. செம் கனி வாய் – இன்சொல் சொல்லுகிற போதைத் திரு அதரத்தில் பழுப்பைச் சொல்லுகிறது. எம்பெருமான் – நோக்காலும் புன்சிரிப்பாலும் என்னைத்
தனக்கே உரிமையாக்கினவன். அம் தாமம் தண் துழாய் ஆசையால் -‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே. 3 ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி, கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து கௌரவிக்கப் பட்டாள்,’ என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. வேவாயே- 2‘உக்கக்காலுக்கு உளையக்கூடிய 3உன்உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள்.
விளக்கு பார்த்து கதறுகிறார்
சுற்றி வந்தது போதும் என்று -மாளிகை திரும்பி வந்ததும்
கழிவுக்கு கரை காண மாட்டாதே -துக்கத்துக்கு
உடம்பில் கை ஒக்க ஒண்ணாத படி பற்றி எரிய
விரகத்தால் சுடுகிறது என்று நினைத்து –
நொந்து ஆரா காதல் நோய் -முடியாத -திருப்தி அடையாத –
மெல்லாவி உள் உலர்த்த -மிருதுவான ஆவி
நந்துதல் அணைதல் நந்தா விளக்கு –
எம்பெருமான்விஷயத்தில் அம் தண் தாமம் துழாய் ஆசை பட்டு –
நொந்து-நோவா -பிரேமா வியாதி -நொந்து அனுபவிக்க முடியாத வியாதி –
மெல்லாவி -மெல்லிய -தொட்டார் மேலே தோஷம் ஆகும் படி -மிருதுவான –
சூஷ்மம் -குருத்து வற்றாக உலர்த்த -வேரோடு சேர்த்து –
பகவத் குண அனுபவத்தால் நைந்து இருக்க -காற்று பட பொறாது இருக்கை –
விரக விசனம் வாடை காற்று துக்கம் –
நந்தா விளக்கமே -தொடர்ந்து எரிந்து கொண்டே –
அழியாத -ஜூவால பேதம் அனுமானம் –சுடர் தொடர்ச்சியாக பார்கிறோமே -ஒரே சுடர் இல்லை
வர்த்தி அவயவ விநாசத்வாத் -அனுமானத்தால் பார்த்தல் பல சுடர் –திரி குறையுமே எண்ணையும் குறையுமே –
ஷணம் தோறும் சுடர் உண்டாகி அழிந்து -ஷணிகம் புத்தன் இதையே திருஷ்டாந்தமாக சொல்லுவான் –
பிரதி ஷணம் உத்பத்தி வினாசயவதி –
பிரதம சரம ஜுவாலை -மத்திமத்தில் –
இவளோ நந்தா விளக்கமே -ஜுவாலா பேதம் அனுமானம் பார்க்க வில்லை -ஞானம் கலங்கி –
சந்தானம் விச்சேதம் இன்றி -நோவு படுகிறது –
நாட்டுக்கு கண் காட்டியான நீயும் -கூடவா நோவு பட வேண்டும் –
அளியத்தாய் –
பரார்தமான உடம்பில் நோவு வருவதே –
அரு மருந்த நீ அரிய வஸ்து
செம்ய்தாமரை கண் செம் கனி வாய் எம்பெருமான்
அம் தாமத்து தண் துழாய் ஆசைப் பட்டாயா
ஸ்ரீ ராமாயணம் நினைவு வர -பத்தி சம்மானிதா -வார்த்தை -ஆத்வாரம் -வாசல் வரை வந்தாள் பிராட்டி
படி தாண்ட கூடாது மறந்து -தன கழுத்து மாலை போட்டு இங்கே நில் சொன்னார் பெருமாள்
நீ போர நடந்தாய் திருவடி தொட்டார் பட்டர் நிர்வாகம்
அஸி தேஷிணா -பர்த்தாரம் -கண்ணாலே மாலை இட்டாள் இவள் -தோள் மாலை போட்டார் அவர்
யாம் பெரும் சம்மானம் .-நீயும் இதற்க்கு ஆசைப்பட்டாயா -என்னை போலே
செம் தாமரை தடம் கண்-முகத்தில் பார்க்கும் பொழுது செவ்வி நினைவு கொண்டு
இன் சொல்லு சொல்லும் பொழுது திரு அதரத்தில் பழுப்பு செம் கனி வாய் நினைவு
நோக்காலும் ஸ்மிததாலும் அனந்யார்கையாக ஆக்கினவன் எம்பெருமான்
நெருப்பாக வேகிராயே
உக்கம் -விசிறி – காத்துக்கு உளைய கடவ உடம்பு
அதற்கே உடம்பு கன்னி விடும் போலே
உக்க காலுக்கு உளைய கடவ உடம்பு -மார்த்தவம் நெருப்பாக வேகிறதே –
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Related
This entry was posted on October 4, 2012 at 1:01 pm and is filed under -திரு வாய் மொழி நூற்று அந்தாதி, Acharyarkall, திரு வாய் மொழி, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar, Prabandha Amudhu. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply