திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?

    பொ – ரை :  உலகமெல்லாம் நிரம்பவேண்டும் நீரைக்கொண்டு காலம் உள்ளதனையும் தண்ணீர் மயமாய் இற்று விழுகின்ற மேகமே! தோழிகளையும் எம்மையும் போன்று, நீயும், மது என்னும் அரக்கனைக்கொன்ற இறைவனுடைய தோள் வலிமையில் அகப்பட்டு அவன் பக்கல் வைத்த விருப்பத்தால் வருந்துகிறாயோ? அந்தோ! இத்துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

    வி – கு : உலகுக்கு-வேற்றுமை மயக்கம். ‘நெகிழ்கின்ற வானமே’ எனக் கூட்டுக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்.

    ‘ஊழிதோறு ஊழி நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்க. உலகுக்கு நீர் கொண்டு – உலகம் அடங்க வெள்ளம் இடவேண்டும். படி நீரை முகந்துகொண்டு. உனக்கு நல்ல 2நிதரிசனம் உண்டு. தோழியரும் யாமும் போல்-என் இழவுக்கு 3எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும் என்னையும் போன்று. நீராய் நெகிழ்கின்ற கரைந்து நீராய் விழுகிற. வானமே -மேகமே! வானம் – மேகம்; 4‘வான் கலந்து வண்ணன்’ என்றார் பூதத்தார்; 5‘வானம் வழங்காது

எனின் என்றார் திருவள்ளுவர். வாழிய – உலகத்தாற்கு உபகாரமாய் இருக்கிற நீ, உன்னுடைய கண்ணநீர் நீங்கி வாழ்ந்திடுக. இனி, ‘நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்பதற்கு, ‘மிக்க சூக்ஷ்மமான ஆகாயமானது நீரை முகந்துகொண்டு சிதறி உருகி நீராய் விழுகிற வானமே!’ என்று கூறலுமாம். வானம் – ஆகாயம்.

    நீயும் – உலகத்திற்கு உபகாரகமாக வடிவு படைத்த நீயும். மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே – பகைவர்களை அழிக்கும் பண்பினனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு, அவன் பக்கல் உண்டான விருப்பத்தாலே பிழைக்கவும் மாட்டாமல், நோவுபடுகிறாய் ஆகாதே? பாழிமை – வலிமை, இடமுடைமை என்றுமாம். உலகத்தில் பொருள்களுக்குத் தகுதியாகவே நசையும் இருக்கும்; எவ்வளவு நசை உண்டு, மறுதலையில் அவ்வளவும் நைவும் உண்டாம்; ஆதலின், ‘மதுசூதன்கண் பாசத்தால் நைவாயே’ என்கிறாள். ‘நைவாயே’ என்ற ஏகாரத்தால் ‘நைவே பலம்’ என்றபடி.

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து
இற்று கீழே விழ நீயும் அவனுடைய விரோதி நிரசன சீல குணத்தில் அகப்பட்டாயோ
மேகம் கரைந்து நீராய் விழ புக்க -விரோதி நிரசன சீலம் அகப்பட்டாயா –

மதி சூதனன் –
நீராய் நெகிழ்கின்ற
உலகுக்கு நீர் கொண்டு -வானம் -மேகம் ஆகாசம் இரண்டுக்கும் நிர்வாகம்
ஆகு பெயர் –
தோழியரும் யாமும் போல் -சமான துக்கி யார் –
பாழிமை மிடுக்கில் அகபட்டாயா –
அவன் கண் பாசத்தால் நைவாயோ –
கல்ப்பம் தோறும் -லோகம் அடங்க வெள்ளம் அடங்கும் படி -நீரை முகந்து கொண்டு
நல்ல நிதர்சனம் உண்டு -உதாரணம் –
தோழியர் என் இழவுக்கு எனக்கு முன் துக்கித்து -என் இழவு-எம்மில் முன் அவனுக்கு மாய்வராம்
நாங்களும் உருக -விழுகின்ற -வாழிய -கண்ணன் நீர் நீங்கி வாழு -நடுவில் சொலி
அதி சூஷ்மமான ஆகாசம் நீராகி உருகி விழ -வானம் -ஆகாசம் –
மேகத்துக்கும் பேரே
வான் கலந்த வண்ணன்-இரண்டாம் திரு அந்தாதி
வானம் வழங்கா விடில் -குறள் தமிழன் –
தானம் தவம் இருந்தும் தங்கா வானம் வழங்கா விடில் –
ஏக தேச உருவாக அணி
பிறவி பெரும் கடல் -நீந்துவார் இறைவன் அடி சேர்ந்தவர் சேராதவர் நீந்தார்
தோனியை திரு வடி பற்றாதார் சொல்லவில்லை -சொல்ல வில்லை என்றாலும் கொள்ள வேண்டும் –
தானம் தவம் -தங்காது -கிடைக்கும் ஹவிர் பாவம் -தேவர் திருப்தி அடைந்து மலை பொலிந்து தானியம்
நாம் அவர்களை பட்டினி போட்டால் -அவர்களும் மலை அந்யோந்ய ஆஸ்ரமம் -இங்கு
நீயும் -உம்மையால்-லோக உபகாரமாக வடிவு கொண்ட நீயும்
வீர குணத்தில் அகப்பட்டு -அவன் இடம் நசையாலே  ஜீவிக்கும் முடியவும் மாட்டாதே நைவாயே
கிடந்தது படுகிறாயே –
பாழிமை பலம் இடம் உடைமை
விஷயம் அளவு ஆசையும் -அவ்வ்வளவு நைவும் உண்டே
நைவே பலம்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading