திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

தோற்றோம் மடநெஞ்சம்
எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி
அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற்
கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ?
வாழி! கனைஇருளே!

    பொ – ரை : எம்பெருமானாகிய நாராயணனுக்கு எங்கள் மடநெஞ்சத்தைத் தோற்றோம்; தோற்று, எங்களுடைய ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கின்ற எங்களை, செறிந்த இருளே! நீ நடுவே வந்து, பகைவர்கள் தன்மையைக் காட்டிலும் கொடுமையையுடையாய் வருத்துக்கின்றாய்; காலமுள்ள வரையிலும் இக்கொடுந்தன்மையிலேயே நிற்பாயோ? கொடுந்தன்மை நீங்கி வாழ்ந்திடுக.

    வி – கு : மேற்கூறிய நாரை முதலாயவற்றையும் உளப்படுத்தி நிற்றலின் ‘தோற்றோம் என்பது, உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்று. அழுவோம் – வினையாலணையும் பெயர். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்னும் பொருளையுடைய மரூஉமொழி. மாற்றாண்மை – பகைமை. கனை – செறிவு.

ஈடு : ஏழாம் பாட்டு. 1‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள்.

    இப்பாசுரத்திற்கு, 2முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, 3சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றிஎம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க, அத்தைப்பார்த்து, 4‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம்.

    மடம் நெஞ்சம் தோற்றோம் – பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி ஆசையுள்ள நெஞ்சை இழந்தோம்; இனி, இதற்கு, ‘உரிமைப்பட்ட நெஞ்சை இழந்தோம்’ என்று பொருள் கூறலுமாம். ‘எம்மே போல்’ என்கிற பொருள்களையெல்லாம் கூட்டிக்கொண்டு ‘சொல்லுகிறாளாதலின், ‘தோற்றோம்’ என்கிறாள். எம்பெருமாற்கு –5கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது? நாரணற்கு -‘தன்னுடைமை’ என்றால்6வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது? இனி, இதற்கு, ‘சுலபனாயிருக்கமவனுக்கு’ என்று பொருள் கூறலுமாம். எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை – ஆற்றாமையுடையார், தத்தமது ஆற்றாமை சொல்லிக் கூப்பிடுவர்கள் அன்றோ? ‘நாங்கள் பெறப்போகும் பயன்

ஒன்று உண்டாய் ‘அத்தை விலக்கி நாம் பெறல் வேண்டும்’ என்றுதான் செய்கிறாய் அன்றே!’ என்பாள், ‘ஆற்றாமை அழுவோம்’ என்கிறாள். ‘அவனைப் பெறவோ போன நெஞ்சைப்பெறவோ? எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.

    நீ நடுவே – ‘அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். அதாவது, ‘அவனை ஒழிந்த நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிடுகை ஒழிய, நமக்குள் ஒருவரை ஒருவர் வருத்தும் தன்மை உளதோ?’ என்றபடி. ‘நலிகைக்கு ஒரு காரணம் இல்லாதிருந்தும் நலிகின்றாயே?’ என்பாள், ‘நடுவே’என்கிறாள். வேற்றோர் வகையின் கொடிதாய் – பகைவர்கள் நலிகின்ற வகையைக்காட்டிலும் கொடிதாக நலிகின்றாய். பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ- காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் பகையிலே நிற்கக்கடவையோ? ‘இராவணன் முதலியோர்கள் பிரித்தார்கள் அத்துணையே, கூப்பிடப் பொறுத்தார்கள்; நீர்மை யுடையார் கண்ணநீரை விழவிட்டார்கள்; நீர்மையுடையார் படியும் கண்டிலோம்; பகைவர்கள் படியும் கண்டிலோம்; உன்னுடைய தன்மை வேறுபட்டதாய் இருக்கின்றதே!’ என்றபடி.

    வாழி – 1காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறுபோன்று ‘வாழி’ என்கிறாள். கனை இருளே – செறிந்த இருளே! இனி, ‘கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளே!’ என்று பொருள் கூறலுமாம்.

    இனி, இப்பாசுரத்துக்குப் பொருந்திய பொருளாவது ‘இருள் என்று ஒரு பொருள், அதுதான் ஒளி மழுங்கி, 2அடங்கி இருக்கை அதன் தன்மை என்று அறியாமல், 3காதலரைப் பிரிந்த பிரிவாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறதாகக் கொண்டு, ‘உன் இழவு கனத்திருந்ததே! 4வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க

1நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் நலிவு நீங்கி வாழ்ந்திடுக,’ என்கிறாள் என்பதாம்.

 மதி கெட்டவாறே -அந்தகாரம் வருமே 

அடுத்த இருள் சங்கதி -அர்த்த சங்கதி இல்லை சப்த சங்கதி –

 

மதி -புத்தி -சந்தரன் இரண்டுக்கும் சந்தரன் புத்திகாரகன் ஜோஷ்ய சாஸ்திரம் ஞான காரகன்

 

பைத்தியம் பௌர்ணமி அம்மாவாசை ஏறும் –

 

இரண்டு நிர்வாகம்  இந்த பாட்டுக்கு

 

மட நெஞ்சம் தோற்றோம் -ஆற்றாமை சொல்லி அழுவோம்

 

நீ நடுவே -இருட்டை பார்த்து நீயும் -ஹிம்சை செய்ய வேண்டுமா –

 

மாற்றான்மை நிறுத்தி -எதிராக நிற்கிறாய் வாழி –

 

தன்னை போல் மற்றவை பார்த்து அழும் பிரகாரனை

 

இதுவும் எம்பெருமானை பிரிந்து

 

சப்த கொண்டு –எம்பெருமானார் நிர்வாகம் –

 

க்ஜீளும் மேலும் போகிரதுஒழிய சப்த சுவாரஸ்யம் பற்ற –

 

அம்பங்கி அம்மாள் இதையே -சொல்லிக் கொண்டு போக

 

அது ஆகிறது

 

பிரிவாற்றார் அநேகர் கட்டி கொண்டு

 

இருள் முகத்தை மறைக்க

 

நீ வேறே நலிய

 

முகம் பார்த்து தரித்து இருந்த எங்களை நலிய கடவாடோ

 

எம்மே போல் என்கிற பதார்த்தங்கள் கூட்டிக் கொண்டு

 

நாரை அன்றில் போன்றவற்றை கட்டி கொண்டு

 

பகவத் விஷயம் ஈடு பாட்டால் சபலமான நெஞ்சு பணிவான நெஞ்சு

 

எம்பெருமான் நாரணர்க்கு வகுத்த விஷயத்தில்

 

நாரணற்கு தனுடைமை என்றால் வத்சல்யய்யாய் இருப்பவன்

 

அவனுக்கு இழந்தோம் சுலபனுக்கு இழந்தோம் எங்கள் நெஞ்சை

 

ஆற்றாமை உடையார் தாம் தாம் சொல்லி கூப்பிட  தாம் தாம் சொல்லி கதறாமல் -நடுவில் ஏன் வந்தாய்

அத்தை விலக்கி
அவனை பெறவோ
போன நெஞ்சை பெறவா
ஆற்றாமை போக்கவா
நடுவே –
அன்றில்  போன்றவை வராதே இருட்டு உள்ளே வருமே
பாத்யதை பாதகத்தை –சம்பந்தம் -ஹிம்சை படுத்த ஹிம்சை பட
பாத்யதை உரிமை -தீர்த்தகாரர்-தப்பாக அர்த்தம் –
தர்க்க சாஸ்திரம் வாசித்தவர் -கிருஷ்ணமாசார்யர் வேடிக்கையாக சொல்லி –
நலிகைக்கு ஹேது ஒன்றே இருக்க நலிகிறாயா
வேற்றோர் வகையில் பகைவர் போலே
நீ நலிகிராய் கொடிதாய்
வேற்றோர் =சத்ருக்கள் -வகை யாவது நலியும் பிரகாரம்
அப்பனில் அதை விட கொடியதாக
அதிலும் காட்டில் கொடியதாக
சத்ருக்கள் ஐயோ நோவு பட்டால் சொல்லுவார்கள் இருள் விடாமல்
எனை ஊழி கால தத்வம் உள்ள அளவும்
ராவணாதிகள் -பிரித்தார்கள் -அழ விட்டார்கள்- கூப்பிட பொறுத்தார்கள் ஐயோ ராமா  ஐயோ சீதா அழ தடுக்க வில்லை
நீர்மை உள்ளார் படியும் கண்டிலோம் -சுக்ரீவன் அழ கூட- பெருமாள் அழ -தன்ஜாத பாஷ்பக -அந்த தன்மையும் இல்லை
வ்யாவிருதமாய் உள்ளது
வேற்றோர் வகையில் -அர்த்தம் பண்ணுகிறார் இங்கு
வாழீர்-அண்ணே அடிக்காதே சொல்வது போல் -காதுகரை உடன் பிறந்தீர் என்னுமா போலே
தயை பிறக்குமோ என்னும் நசையாலே சொல்லுவது போல்
கணை கனைத்து கொண்டு செருக்குடன் வரும் இருள் கனை இருள் .
அடுத்த நிர்வாகம் நீயும் நோவு பட்டாயா
பிரகரணதுடன் சேர்ந்த
தமாசு பதார்தமாய்
அபிமத விச்லேஷத்தால் ஒளி மழுங்கி வாய் விட்டு கூப்பிட மாட்டாமல்
உனக்கும் நடுவே துக்கம் வந்ததா -என்கிறார் .

உன் அவசாதம் நீங்கி ஜீவித்து இரு

 

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading