Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம் —

November 24, 2020

ஸ்ரீ குரு பரம்பரை-

1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,
4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள், 6. உய்யக்கொண்டார்,
7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார், 9.பெரியநம்பி,
10. இராமாநுசர், 11.எம்பார், 12.பட்டர், 13.நாஞ்சீயர்,
14.நம்பிள்ளை, 15.வடக்கு திருவீதிப்பிள்ளை, 16.பிள்ளை லோகாச்சாரியார்,
17.திருவாய்மொழிப்பிள்ளை and 18.மணவாள மாமுனிகள்.

ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை
இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.
ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல ஸ்ரீ நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத்
தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

அந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,
பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,
குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை திரு வயிறாகவும்,
மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் தகப்பனார் காரியார்.
காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்த, வேளாளர் குலச் செல்வரும் ஆகிய
திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடையநங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.

கற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய உடையநங்கையார்,
தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும்
நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார்.
அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.

ஸ்ரீ நம்மாழ்வார் அவதாரம்
ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ஆழ்வார் திருநகரி (திருக்குருகூரில்) கலி பிறந்த 43 வது நாளில்,
காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, வேளாளர் குலத்தில்
பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை,
விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.

குரு ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி
இறைவன்: ஸ்ரீ ஆதிநாதன், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
இறைவி: ஸ்ரீ ஆதிநாதவல்லி, ஸ்ரீ குருகூர்வல்லி
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: ஸ்ரீ கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: ஸ்ரீ உறங்காப்புளி

மதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள
ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்?’ என்ற
பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும்
இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே
‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி,
“அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர்.
உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது.
உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும்.
அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று,
அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய
எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.
பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன்
தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும்,
மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குண நலன்களையும் சார்ந்தது.

முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது !
ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம்!
இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,
ஸ்ரீ நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, ஸ்ரீ மதுரகவி அங்கேயே தங்கி,
ஸ்ரீ நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று,
“அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.

ஸ்ரீ நம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப் பாசுரங்களை
பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள,
ஸ்ரீ மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க,
ஸ்ரீ நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.
ஆனால், அதற்கு பிறகும் கூட, ஸ்ரீ நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.
எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன?
நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத் துவங்கின போது,
திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக் கண்ணில் தோன்றின.

திருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)
திருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)
பெரிய திருவந்தாதி–87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)
திருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)

‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று
ஸ்ரீ நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”-என்று ஸ்ரீ வள்ளுவர், ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலைத் திறந்து
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

ஸ்ரீ நம்மாழ்வாரின் பிறபெயர்கள்
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்
மணிவல்லி
பெரியன்

ஸ்ரீ நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்
1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம்,
6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை,
11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம்,
16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை,
21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ்,
26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம்,
31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்.

கற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது.
உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது.
இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம்,
சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால்,
இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஆழ்வாருக்குக் காட்டி அருளும் குணநலன்கள் —

November 16, 2020

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை –218—-

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி –
பரத்வாதி குண விசிஷ்டனான ஸ்ரீ சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை
பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல் ..

பரத்வ
காரணத்வ
வ்யாபகத்வ
நியந்த்ருத்வ
காருணிகத்வ
சரண்யத்வ
சக்தத்வ
சத்ய காமத்வ
ஆபத் சகத்வ
ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்

மயர்வை அறுக்க
தத்வ வேதன
மறப்பற்று

ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர
நிஷ்கரிஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
ப்ரேமே பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி
க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி
க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல ப்ராப்தி
மரணா வதியாகப் பெற்று

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின
தம் பேற்றை பிறர் அறிய
பத்து தோறும் வெளி இடுகிறார் ..

( ராகவாயா மஹாத்மனே ஸுலப்யம் பரத்வம் -சர்வ லோக சரண்யன் –
இங்கு பரத்வம் முதல் நான்கு பத்துக்கள்- ஸுலப்யம் ஐந்தாம் பத்து – சர்வலோக சரண்யன் ஆறாம் பத்து-
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேச மகன் வாக்கு–
அந்தராத்மா –ஆத்மாவுக்குள் இருக்கும் பரமாத்மா –ஆகாசம் கைக்குள்ளே
அந்தர அசேதனம் -ஆகாசம் வியாபகம்
அந்தர்யாமி- அடக்கி ஆளும் சக்தி -சரீரத்துக்குள் உள்ள ஆத்மா அந்தர்யாமி எப்பொழுதும் இல்லையே –
ஆத்மாவுக்குள் உள்ள பரமாத்மா தானே அந்தர்யாமி சர்வ நியாந்தா –
உள்ளே இருக்கும் சேதனன் வியாபகன் பரமாத்மாவே தான் -)

அதாவது
1-சர்வ ஸ்மாத் பரனாய்-
2-அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் —
3-லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –
கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் –
4-அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே -சர்வ நியந்தாவாய் –
5-அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் –
6-இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்–
7-சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் –
8-அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் –
9-அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி –
லீலா விபூதியை ரஷிக்கையாலே -ஆபத் சகனாய் –
10-இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் –
இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

மயர்வை அறுக்க

1-தத்வ வேதன மறப்பற்று-
அதாவது-
மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே
பக்தி ரூபாபன்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத்வ ( பகவத் விஷய ) வேதனத்தில் –
மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –

2-ஜ்ஞப்தி ( தத்வ வேதன – பர்யாய சொல் ) பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து-
அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று -ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

3-மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து-
அதாவது-
அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை-
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

4-புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-
அதாவது–
அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக –
ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில்
ருசியைத் தவிர்ந்து –

5-விரக்தி பல ராகம் கழிய மிக்கு-
அதாவது–
அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –
கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து –

6-ப்ரேமே பல உபாயத்தே புகுந்து-
அதாவது–
அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே –
அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று
உபாய வரணம் பண்ணி –

7-சாதன பல உபகார கைம்மாறு இன்றி-
அதாவது-
அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –
உதவி கைம்மாறு என் ஆர் உயிர் -7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் –7-9-10-
என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

8-க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருத மானத்தை உணர்ந்து-
அதாவது-
அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக –
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி
சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்
அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –
( இந்த ப்ரகாரதயா சேஷம் என்கிற அறிவே உணர்வே பிரதியுபகாரம் இந்த உணர்வே ஆத்ம தர்சனம் )

9-ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-
அதாவது-
ஆத்ம தர்சன பலமான -பகவத் பிராப்தியை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் 9-10-5–என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று
அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –
( பக்தி உபாசனனனுக்கு கர்ம அவதி -ப்ரபன்னனனுக்கு மரண அவதி தானே
மரணாமானால் கால ஆஸக்தி பர்யாயம் )

10-காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை
அதாவது-
இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ் வர்சிராதிகதிக்கு –
காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி 10-1-1–என்றும் ,
ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே 10-1-6–என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே
துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..
அதாவது-
பிறர் அறிந்து வாழும் படி –அறிந்து -( உணர்ந்து வாழ வேண்டுமே -எனவே இந்த வியாக்யானம் )
முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி ..

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று
பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு
வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து –

ஞப்தி
முக்தி
விருத்தி
விரக்தி
பக்தி
பிரபத்தி
சக்தி
பிராப்தி
பூர்த்தி
ஆர்த்தி ஹரத்வம்
ஆகிய பத்துக்களும் பத்தின் அர்த்தம் –

—————–

ஸ்ரீ திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஆழ்வாருக்குக் காட்டி அருளும் குணநலன்கள் —

1-அவன் மிக உயர்ந்தவன்,
2-அவனே எல்லாவற்றுக்கும் காரணம்,
3-நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான்,
4-அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான்,
5-மிகவும் கருணை உடையவன்,
6-நம் எல்லோருக்கும் சரணாகதி அளிக்க வல்லவன்,
7-சக்தி உடையவன்,
8-நாம் விரும்பியவைகளை அடையச் செய்பவன்,
9-நம் இடர்களில் இருந்து காப்பாற்றுபவன்,
10-நம் கவலைகளை தீர்க்க வல்லவன்.

முதல் பத்து – பரத்துவம், அவன் பெரியவன், மிகவும் மேன்மையானவன்,
அவனைவிட மேன்மையானவனோ, மேன்மையான பொருளோ எதுவும் கிடையாது.
உயர்வற உயர்நலம் உடையவன் (1.1.1).

இரண்டாம் பத்து – காரணத்துவம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற
எல்லா ஜீவராசிகளுக்கும் அவனே காரணம்.
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி (2.1.11)

மூன்றாம் பத்து – வியாபகத்துவம் – எங்கும் உளன் கண்ணன் –
பரமாத்மா எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து உள்ளான்.
“வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுது இயன்றாய்” (3.1.5) என்றும்
“இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே” (3.4.1) என்றும் சொல்வது .

நான்காம் பத்து – நியந்த்ருத்துவம் – அவனன்றி ஓர் அணுவும் அசையாது –
பரமாத்மாவே இந்த அண்டகடாகத்தில், அனைத்து நிகழ்வுகளையும் நிகழ்த்திவைப்பவன்.
“வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல் மிக்கு ஆளும்” (4.5.1)

ஐந்தாம் பத்து – காருணிகத்துவம் அல்லது சௌலப்பியம் – மிகவும் எளிமையானாவான் –
அவனை அணுகுவது மிகவும் எளிது. அவனுடைய அளவற்ற கருணையினாலேயே
“பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்” (5.1.1) என்கிறார், ஆழ்வார்.

ஆறாம் பத்து – சரண்யத்துவம் – பெருமையும், எளிமையும் ஒரே இடத்தில இருக்கிறபடியால், நாம் எல்லோரும்
சரண் அடைய மிகவும் தகுதியானவன். ஐந்தாம் பத்திலேயே, ஆழ்வார் நான்கு சரணாகதிகளை கேட்டுள்ளார். அவையாவன,
சிரீவரமங்கலநகர் அல்லது வானமாமலை (நோற்ற நோன்பு 5.7),
திருக்குடந்தை அல்லது கும்பகோணம் (ஆராவமுதே 5.8),
திருவல்லவாழ் (மானை நோக்கு 5.9),
விபவாவதாரத்து கண்ணனிடம் (பிறந்தவாறும், 5.10).

ஆனால், ஆறாம் பத்தில், திருவேங்கடமுடையானிடம், பிராட்டியை முன்னிட்டு கேட்டுக்கொண்ட சரணாகதியே பலித்தது.
“உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” (6.10.10).

ஏழாம் பத்து – சக்தத்துவம் (சக்தி உள்ளவன்) – நம் எல்லோருக்கும் சரணாகதி கொடுத்து காப்பாற்றும் சக்தி படைத்தவன்.
இதனை பெருமாள், ஆழ்வாருக்கு “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில்,
தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை காட்டுகிறார்.

எட்டாம் பத்து – சத்யகாமத்துவம் – விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் படைத்தவன் அவன்.
அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை, எல்லாவற்றையும் அடைந்தவன்.
தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும்,
தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும்,
அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன்;
“நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்“, (8.6.1)

ஒன்பதாம் பத்து – ஆபத்சகத்துவம் – எல்லா இடர்களில் இருந்தும் நம் எல்லோரையும் காப்பாற்றும் வல்லமை பெற்றவன் ;
“காய்சின வேந்தே கதிர்முடியானே, கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே” (9.2.6) என்று புளிங்குடி பெருமானிடம் ஆழ்வார்
சொன்னது போல், எல்லா இடங்களில் இருந்தும் காப்பாற்றுபவன் அவனே.
அதேபோல், “அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே” (9.3.3) சொன்னதிலும்
ஹரியை நோய்கள் அறுக்கும் மருந்து என்று ஞானிகள் கண்டுகொண்டனர்.

பத்தாம் பத்து – ஆர்த்திஹரத்துவம் – நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன்.
வழித்துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் என்பது
“மற்று இலன் அரண் ” (10.1.7) என்ற திருமோகூர் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“தீரும் நோய் வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச் சொன்னோம்” (10.2.3) என்ற திருவனந்தபுரம் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே” (10.10.10) என்று தன்னை ஆட்க்கொண்டதை சொன்னதில் இருந்தும்,
இந்த இறுதி பத்து நம் கவலைகளை தீர்க்க வல்லது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பத்திலும் பத்து வகையான குணநலன்கள்.
ஒவ்வொரு பதிகத்திலும் பல வகையான குண நலன்கள்.
1102 பாசுரங்களில் ஆயிரம் ஆயிரம் குணநலன்கள் என திருவாய்மொழி முழுவதும் அவனின் குணநலன்களே.
அந்த குண நலன்களை ஆழ்வாருக்குக் காட்டியவனும் அவனே.

இன்னொரு வகையில் பத்து பத்துகள் ஆழ்வாரிடத்தில் ஏற்பட்ட நிலையின் மாற்றங்களைக்கொண்டு,
கீழ்கண்ட வகையில் பத்து பத்துக்களையும் பார்க்கலாம் என்று நம் ஆச்சாரியார்கள் சொல்வார்கள்.

1-முதலில் தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்தான் என்கிறார்.
2-அதனால் தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்கிறார்.
3-அதற்காக பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைகிறார்.
4-பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைக்கிறார்.
5-பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்க்கிறார்.
6-பக்தியால் அவனை அடைவது கடினம் என்று அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு அதனையும் பெற்றார்.
7-அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகிறார்.
8-ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்கிறார்.
9-ஆழ்வார் தான் எப்போது முக்தி அடைவது என்று கவலை அடைந்ததற்கு, பெருமாள் அருளியதையும்,
10-தன்னுடைய கவலைகள் நீங்கி கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை சொல்லி முடிக்கிறார்.

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இருந்தும்,
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் சங்கதி மற்றும்
வேதாந்த தேசிகர் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, என்ற இரண்டு நூல்களில் இருந்தும்
இவைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

1-ஞப்தி – ஞப்தி என்றால் பகவத் ஞானம். முதல் பத்து,
முதல் பதிகத்திலேயே பகவத் ஞானம் அடைந்ததை (மயர்வற மதி நலன் அருளினன் 1.1.1) என்பதாலும்,
மற்ற பதிகங்களால் அதனை மறவாமல் இருந்தார் என்பதையும் அறியலாம்.

2-முக்தி – ஞானம் அடைந்ததால், அடையவேண்டியது எது என்பதை ஆழ்வார் உணர்ந்தார்.
அடைய வேண்டியது மோக்ஷம் அல்லது முக்தி என்பதை “நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த்து” (2.9.1) என்பதன்
மூலம் அவர் உணர்ந்ததை, நமக்கு கூறுகிறார்.

3-விருத்தி – முக்திக்கு பலன், மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைதல்.
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்” என்று (3.3.1) பாசுரத்தில்
கூறுவதில் தொடங்கி, விருத்தி பற்றி அந்த பதிகம் முழுவதும் ஆழ்வார் நமக்கு உரைக்கிறார்.

4-விரக்தி – மேலும் மேலும் பகவானுக்கு கைங்கர்யம் செய்ய விரும்புவதால், மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறைதல்.
இதை அந்நிய ருசி ஒழிதல் என்று கொள்ளலாம். இது நாலாம் பத்து முழுவதிலும் சொல்லப்படுகிறது.
“ஒருநாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர்” (4.1.1) என்று தொடங்கும் நாலாம் பத்தில்,
மற்ற அனைத்து ஆசைகளும் ஒழிந்து விட வேண்டும் என்ற கருத்து மேலூங்குகிறது.

5-பக்தி (காதல் வளர்தல்) – மூன்றாம் பத்தில் பரமாத்மாவுக்கு செய்ய விழையும் கைங்கர்யம் விருத்தி அடைவதின் மூலமும்
நான்காம் பத்தில் மற்ற விஷயங்களில் விரக்தி அடைவதின் மூலமும்,
ஐந்தாம் பத்தில் பெருமாள் மேல் உள்ள பக்தி மேலும் மேலும் வளர்கிறது.
இது மாசறு சோதி, ஊரெல்லாம் துஞ்சி, எங்ஙனேயோ அன்னை மீர்காள், (5.3, 5.4, 5.5) என்கின்ற பதிகங்களின் வழியே
காலம் போகப் போக காதல் மிகுவது தெரிகிறது.

6-பிரபத்தி – இரண்டாம் பத்தால் முக்தி அடைவது என்று உணர்ந்த பின், பெருமாளின் மேல் உள்ள பக்தியை
அடுத்தடுத்த பத்துக்களில் வளர்த்து, அவனை அடைய வழி கண்டு கொள்வதே ஆறாம் பத்தில் ஆழ்வார் உணர்வது.
பக்தி மார்க்கத்தை விட, அவனைக் கொண்டே அவனை அடைவது என்பதே சாத்தியம் என்பதைப்
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவேங்கடமுடையானிடம் சரணாகதி
(புகலொன்றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே, 6.10.10) கேட்டு ப்ரார்த்திபதின் மூலம்,
ஆழ்வார் நமக்கு முக்திக்கு வழி அவன் திருவடிகளை அடைவதே என்று காட்டுகிறார்.

7-சக்தி – பெருமாள் தன்னுடைய சக்தியை, “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில் ஆழ்வாருக்குக் காட்டினார்.
தன்னையே உபாயமாக கொடுத்து சரணாகதி அருளிய பெருமாளுக்கு தான் ஏதாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆழ்வார் நினைத்த போது,
‘உதவிக்கு கைம்மாறு தனது உயிர் என்று கருதிய உடனே அதுவும் அவனதே, ஆகவே கைம்மாறு ஒன்றுமேயில்லை’
என்று உணர்ந்ததே ஏழாம் பத்தின் சாராம்சம்.
இன்கவி பாடிய அப்பனுக்கு, எதுவுமொன்றுமில்லை செய்வது இங்கும் அங்குமே , 7.9.10).

8-பிராப்தி – இந்த பத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு ஜீவாத்மாவைப் பற்றி விளக்குகிறார்.
ஜீவாத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறார். பரமாத்மாவிடம் அடிமைத்தனம் செய்வதே ஜீவாதாமாவிற்கு உகந்தது என்று
“கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து“, (8.8),
கருமாணிக்க (8.9)
நெடுமாற்கு அடிமை, (8.10) என்ற பதிகங்களின் மூலம் ஆத்மா எப்படிப்பட்டது என்று பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டுகிறார்.

9-பூர்த்தி – ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை முழுமையாக உணர்ந்தபின், சுவாமி நம்மாழ்வார், தான் எப்போது அவனிடம் சென்று
அவனுக்கு கைங்கர்யம் செய்வது என்று மிகவும் துடித்து ஒன்பதாம் பத்தில் பாசுரங்கள் பாடினார்.
பதினான்கு வருஷம் என்று பரதனுக்கு சொன்னது,
சீதைக்கு பத்து மாதம் என்பது போல் ,
ஒரு நாள் என்று ஆயர் பெண்களுக்கு வாக்கு கொடுத்தது,
பத்து வருஷம் என்று யசோதைக்கு சொன்னது போல்,
தனக்கும் ஒரு நேரம் அல்லது காலம் கொடுக்க வேண்டும் என்று பெருமானை ஆழ்வார் கேட்டதற்கு,
“சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ” (9.10.5) என்று
பெருமான் தனது சரண்ய முகுந்தத்தை ஆழ்வாருக்குக் காட்டினான்.

10-ஆர்த்திஹரத்துவம் – ஸ்ரீ ஆழ்வார் தன் வாழ்நாள் முடியம் போது தனக்கு வழித்துணையாக வருவதற்கு
ஸ்ரீ திருமோகூர் ஆப்தனை பற்றுகிறார் (10.1).
பின்னர் ஸ்ரீ திருமாலிரின்சோலை அழகன், “கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே” (10.7.2), என்று
தன்னை முழுவதும் உண்டான் என்கிறார்.
இறுதியாக, ஸ்ரீ திருப்பேர் நகர் பெருமானை அப்பகூடத்தான் , “இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (10.8.6) என்று
கூறி தனது கோரிக்கையை ஸ்ரீ பெருமான் நிறைவேற்றியதை கூறுகிறார்.

இப்படியாக ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு ஏற்பட்ட மாற்றங்களை அவரது பாசுரங்களை துணையாகக்கொண்டே நமக்கு காட்டியுள்ளார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள பாசுரங்கள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப் பட்டவையே தவிர,
அந்தந்த பதிகங்களில், பத்துக்களில், தொடர்புள்ள கருத்துக்கள் நிறையவே காணலாம்.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள்–

November 9, 2020

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள்.

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடிய 2 ஸ்லோகங்கள்,
ஸ்ரீ பராசர பட்டர் பாடிய 2 ஸ்லோகங்கள்-
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் பாடிய முக்தகம் – 4 ஸ்லோகங்கள்,
ஸ்ரீ ஜீயர் நாயனார் பாடிய கடைசி ஸ்லோகம், இவற்றின் தொகுப்பே ஸ்ரீ பராங்குஷாஷ்டகம்.

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் தனியன்கள்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||– – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் தனியன் –

ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||–ஸ்ரீ பராசர பட்டர் தனியன் 2

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)

த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த விபூஷணம் யத்
ஸம்பச்ச ஸாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் |
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத்ஸம் ஸ்ரேயம வகுளா பரணாங்க்ரி யுக்மம் ||

யாதொரு ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ –
அப்படிப் பட்ட பரம பாவனமான ஸ்ரீ நம்மாழ்வாரது திருவடி இணையை ஆச்ரயிக்கக் கடவோம்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)

பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||

“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத
பெருமையை யுடைதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”

அடுத்து வரும் இரு ஸ்லோகங்கள் ஸ்ரீ பராசர பட்டர் அருளியவை.
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண
த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத்
த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான
திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ,
ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4

யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5 – அடுத்து வரும் ஸ்லோகங்கள் எளிமையானவை.

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும் பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது எனது சென்னிக்கு அலங்காரம் ஆயிடுக.

—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆச்சார்யர்கள் புகழும் ஸ்ரீ நம்மாழ்வார் –

November 5, 2020

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம்
“மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

————————-

த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்தவிபூஷணம் யத் ஸம்பச்ச ஸாத்விக ஜநஸ்ய யதேவ நித்யம் I
யத்வா சரண்யம் அசரண்ய-ஜனஸ்ய புண்யம் தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரணாங்ரியுக்மம்II

ஸ்ரீ ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே “த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்த விபூஷணம்”.
வேதம் வல்லார் சிரசுக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடித் தாமரைகளே ஆபரணம் என்கிறார்.
அவையே, “ஸாத்விக ஜனஸ்ய நித்யம் ஸம்பத்” = ஸுத்த ஸாத்விகர்களின் நிரந்தரச் செல்வம்.
ஸ்ரீ ஆளவந்தார் தாமும் தமது “மாதாபிதா” எனும் ச்லோகத்தில் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தமக்கு எல்லாமும் என்றார்.

ஆழ்வார் திருவடித் தாமரைகளே வேறு புகலற்றவர்க்குப் புகலிடம் = ”அசரண்ய ஜனஸ்ய சரண்யம்

——————————

பக்தி-ப்ரபாவ பவத்-அத்புத-பாவ-பந்த-ஸம் துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக -பூர்ண: I
வேதார்த்தரத்னநிதிர்-அச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர்-அஸீமபூமா ||

இந்த ச்லோகத்தில் ஆழ்வார் ஒரு ஸமுத்ரமாக உருவகிக்கப் படுகிறார்.
ஏனெனில் இதற்கு நான்கு காரணங்கள் உள.

ஸமுத்ரம் பல்வேறு நீர் வரத்தால் நிறைகிறது.
பராங்குச ஸமுத்ரமும் பக்தி-ப்ரபாவ-பவத்-அத்புத-பாவ-பந்த-ஸந்துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக பூர்ண:
பக்தி எனும் வியத்தகு நவ ரஸ புனித உணர்வாகிய வெள்ளத்தினால் நிறைந்த கடல்.
ஸமுத்ரம் முத்தும் பவழமும் மற்றும் செல்வத்துக்கிருப்பிடம்.
பராங்குச ஸமுத்ரமும் அப்படியே – அதில் வேதார்த்த ரத்ன நிதி மண்டியுள்ளது
ஸமுத்ரம் எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடம். அச்யுத திவ்ய தாமா. அவன் திருப்பாற்கடலில் துயில்பவன்.
இராமனாய் அவன் கடலில் அணை கட்டினான்.
எனினும் அவன் வைகுந்தம் வேங்கடம் பாற்கடல் என்பன விட்டு என் இதயத்தினுள்ளே வந்திருந்தான் அவற்றைவிட இது மேல் என்று.
”கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏ பாவமே,
வெள்ள நெடியான் நிறங்கரியான் உள் புகுந்து நின்றான் அடியேனது உள்ளத்தகம்”
அவை தாழ்ந்தன ஏனெனில் என் மனத்தில் இடம் கொண்டான் என்றார் ஆழ்வார்.
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன் அடியேனுள்ளானே”
இவ்விஷயம் “இவையுமவையும்” திருவாய்மொழியில் நன்கு விளக்கப் பட்டுள்ளது.
ஸமுத்ரம் கரை காண ஒண்ணாதபடி பெரிது எனவே அஸீம பூமா எனப்படுகிறது.
கண்ணிநுண் சிறுத்தாம்பில் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை “அருள் கொண்டாடும் அடியவர்” என்கிறார்.
இவ்வாறு, பராங்குச பயோதியின் பெருமைகளை ஆழ்வான் கொண்டாடுகிறார்.

———-

ஸ்ரீமத்-பராங்குச-முநீந்த்ர-மநோவிலாஸாத் தஜ்ஜாநுராகரஸமஜ்ஜநம் அஞ்ஜஸாப்ய I
அத்யாப்யநாரதததுத்தித-ராகயோகம் ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம: I I

இந்த ச்லோகத்தின் உயிர்நாடியான பகுதி
“ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம:” என்பது ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் குறிக்கிறது.
ஸாதாரண லௌகிகக் கவிகள் திருவடித் தாமரைகள் சிவந்ததன் காரணம்
அவற்றின் மென்மை என்பர், அல்லது மென்மை காரணமாக நடை முதலிய வினைப்பாடுகள் என்பர்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களின் சிரோமணியான ஸ்ரீ ஆழ்வார் அப்படிச் சொல்லவல்லாரல்லரே.
திருவடிகள் சிவந்ததற்கு அவர் ஓர் அழகிய காரணம் காட்டுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் இதயத்தை அடைந்த ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் அங்கே பக்தியில் நனைந்து
அன்பின் நிறமான சிவப்பை எய்தி அவ்வண்ணமே இருக்கின்றன என்பதாம்.

ஸ்ரீ எம்பெருமான் மீது ஆழ்வார் கொண்ட காதலைவிடப் பத்து மடங்கு போலும் ஆழ்வார் மீது ஆழ்வான் கொண்ட காதல்.
அதிமானுஷஸ்தவத்தின் இரண்டாம் பாதி ஸ்ரீ க்ருஷ்ணாவதார அநுபவமாய் இருப்பது முழுமையாக
ஸ்ரீ ஆழ்வாரின் திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலேயே அமைந்தது.

ஸ்ரீ ஸுந்தர பாஹு ஸ்தவத்தில் பன்னிரண்டாவது ச்லோகம்:

வகுளதரசரஸ்வதிவிசக்த-ஸ்வரஸபாவ-யுதாஸு கின்னரீஷு I
த்ரவதி த்ருஷதபி ப்ரசக்தகானாஸ்விஹ வனசைலததீஷு ஸுந்தரஸ்ய ||

இங்கு ஸ்ரீ ஆழ்வான் கின்னரப் பெண்கள் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸுந்தரத் தோளுடையானைத் தொழ வந்து
தம் இனிய குரலில் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களை அப்பாசுரங்களின் தகுதிக்கேற்ப மிகச் சிறப்பாகப் பாடவும்,
அப்பாட்டின் இனிமையில் கற்களும் உருகிப் பெருகி ஓட அதுவே நூபுர கங்கை ஆயிற்று என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் “மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணா என்று கூவுமால்” என்பதை நினைவு கூறுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் தெய்வீகக் காதலில் பிறந்த பாட்டுகள் கல்லையும் கரையச் செய்யும்.
எனில் சாதாரண மானிடர்களைப் பற்றி என் சொல்ல? அவை எல்லா மானிடர்களையும் கரையேற்ற வல்லவை.

ஸ்ரீ ஆழ்வான் ஆழ்வார் பாட்டுகளை இம்மண்ணுலகர் மட்டுமன்றி எவ்வுலகத்தாரும்
ஸ்ரீ எம்பெருமானைத் தொழும் போது பாடுவதாகக் கூறுகிறார்.
இவ்வாறு ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களைத் தம் ஒப்பற்ற பாணியில் புகழ்கிறார்.

ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் (59) ஆழ்வான் எம்பெருமான் திருவடிகள் எங்கெல்லாம் சென்று ஆனந்தமாய்
இளைப்பாறுகின்றன என்று பட்டியலிடுகிறார். இப்பட்டியலில் “யஸ்ச மூர்தா சடாரே” என்று சேர்க்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானுக்கு இன்பமாய் இளைப்பாறும் இடமாக ஸ்ரீ ஆழ்வார் திருமுடி காட்டப் படுகிறது.

———-

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் தொடக்க ச்லோகங்களில் ஸ்ரீ ஆழ்வாரை இங்ஙனம் போற்றுகிறார்:

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் I
ஸ ஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் I I

ஸ்ரீ பட்டர் இதில் ஆழ்வாரை ஒரு ருஷி என்கிறார். ஸ்ரீ ஆழ்வார் க்ருஷ்ண பக்தியின் காதலின் வடிவம் என்றும் கூறுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரும் க்ருஷ்ண பக்தியும் வேறல்ல எனும் ஸ்ரீ பட்டர், வேதங்களின் எண்ணற்ற சாகைகளை
ஸ்ரீ ஆழ்வார் தமிழில் காட்டினார் என்றும் அருளிச் செய்துள்ளார்.

பதின்மூன்றாம் ச்லோகத்தில்.
அமதம் மதம் மதமதாமதம் ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் இதி ரங்கராஜாமுதஜுகுஷத் த்ரயீ

என்பதில் முதல் பகுதி “யஸ்யாமதம் தஸ்ய மதம்” எனும் உபநிஷத் வாக்யத்தை அப்படியே ஒட்டியுள்ளது.

இதன் அடுத்த பகுதியில் இம்மந்த்ரம்,
“ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்” என்கிறது.

ஸ்ரீ ப்ரஹ்மத்தைப் புகழ்வதும் ஒர் இகழ்ச்சியாகவும், இகழ்ச்சியே புகழ்வதாகவும் ஆகிறது.
இப்பகுதி உபநிஷத்தில் எவ்விடத்திலும் இல்லை ஆனால் ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கில், ஸ்ரீ பெரிய திருவந்தாதியில்,
“புகழ்வோம் பழிப்போம், புகழோம் பழியோம், இகழ்வோம் மதிப்போம், மதியோம் இகழோம்” என வருகிறது.

இதில் ஸ்வாரஸ்யம் என்னெனில் ஸ்ரீ பட்டர் இவ்விரண்டுமே த்ரயீயின் பாகங்கள் என்கிறார்.
அவர் உபநிஷதங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் இரண்டையுமே வேத பாகங்களாகக் கருதுகிறார்.
இது, பதினாறாவது ஸ்லோகத்தில் “ஸ்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக்தை:” என்பதில் தெளிவாகத் தெரிகிறது.

இருபத்தொன்றாம் ச்லோகத்தில், “துக்தாப்திர் ஜனந்யஹமியம்” என்பதில் அவர்,
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், “தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம்” என்பதில்
காவேரி ஆறு கலங்கி ஓடுவதாக அநுபவிப்பதை அடியொற்றுகிறார்.

ஜித பாஹ்ய ஜினாதி மணிப்ரதிமா அபிவைதிகயன்னிவ ரங்கபுரே |
மணிமண்டப வபகணான் விததே பரகாலகவி:ப்ரணமே மஹிதான் ||

என்பதில் ஸ்ரீ பட்டர், ஸ்ரீ ஆழ்வார் நியமித்தருளிய கோபுரங்களும் தூண்களும் மண்டபங்களும்
பரம விலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ராதிகளோடும் ஸ்ரீ எம்பெருமானின் சங்க சக்ர சின்னங்களோடும் திகழ்வதை அருளிச் செய்கிறார்.

நாற்பத்தோராவது ச்லோகத்தில் சந்திர புஷ்கரிணிக்குக் கிழக்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆழ்வார்கள் துதிக்கப் படுகிறார்கள்:

பூர்வேண தாம் தத் வதுதார நிம்ன ப்ரசன்ன சீதா சய மக்ன நாதா: |
பராங்குசாத்யா: ப்ரதமே புமாம்சோ நிஷேதிவாம்சோ தசாமாம் தயேரன் ||

சந்திர புஷ்கரிணிக் கரையிலுள்ள புன்னை மரத்தைப் பற்றிச் சொல்லும்போது பட்டர் சாதிப்பது:

புன்னாக தல்லஜம் அஜஸ்ர சஹஸ்ர-கீதி சேகோத்த திவ்ய-நிஜ-சௌரபமாமநாம: (49)

இம்மரத்தடியிலேயே ஸ்ரீ பூர்வாசார்யர்கள் பலரும் எப்போதும் ஸ்ரீ திருவாய்மொழி அர்த்த விசேஷங்களையே
பேசிக்குலாவியபடியால் இம்மரமும் ஸ்ரீ திருவாய்மொழி நறுமணம் பெற்றதாயிற்று.

இப்படி மர நிழலை அழகாகச் சொன்ன மாத்திரத்திலேயே ஸ்ரீ பூர்வர்கள் ஸ்ரீ திருவாய்மொழியின்
ஸ்ரீ செம்பொருள்களையே பேசிக் காலம் கழித்தனர் என்றும் காட்டினாராயிற்று.

ஸ்ரீ குலசேகராழ்வார்,
“கடியரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்று
என் வாயாரவென்றுகொலோ வாழ்த்துநாளே” என்கிறார்.
ஸ்ரீ அரங்கனின் திருக்கண்களில்ருந்து பெருகும் அருள் அமுதத் திவலைகளில் நிற்க மாட்டாமல்
ஒரு பிடிப்புக்காக அங்குள்ள திருமணத்தூணைப் பற்றிக்கொள்வேன் என்றார் ஸ்ரீ ஆழ்வார்.

சேஷசாய லோசனாம்ர்த நதிரயாகுலித லோல மானாநாம் |
ஆலம்பமிவாமோத ஸ்தம்பத்வயம் அந்தரங்கமபியாம: || 59

மணத்தூண் என்பதை ஆமோத ஸ்தம்பம் என்றே ஸ்ரீ பட்டர் சாதித்திருப்பதைக் காண்க.

78வது ச்லோகத்தில்

“வட தள தேவகி ஜடர வேத சிர: கமலாஸ்தன சடகோப வாக் வபுஷி ரங்கக்ருஹே சயிதம்“ என்று
ஸ்ரீரங்கநாதன் தனக்குறைவிடமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கைக் கொண்டுள்ளான் என்றார்.

கிரீடசூட ரத்னராஜிராதி ராஜ்ய ஜல்பிகா |
முகேந்து காந்திருன்முகம் தரங்கிதேவ ரங்கினா: ||

என்று 91 வது ஸ்லோகத்தில் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஆழ்வாரின் “முடிச்சோதியாய்” பாசுரத்தை மிக அழகாக வடமொழியாக்கியுள்ளார்.

116வது ஸ்லோகத்தில் “த்ரயோ தேவாஸ்-துல்யா:” என
“முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்” எனும் ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கை அடியொற்றினார்.

ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குக்கும் பட்டர் திருவாக்குக்கும் உள்ள ஸாம்யம் காண்பதில்
நாம் நம்மையே ஹேளனப்பொருளே ஆக்கிக் கொள்வோமித்தனை போக்கி வேறில்லை.
ஸ்ரீ பட்டர் திருவாக்கு ஒவ்வொன்றிலும் ஸ்ரீ ஆழ்வார் திருவுள்ளமே உண்டென நம் பூர்வர்கள் வ்யாக்யானங்களால்
கண்டு ரஸித்து உணர்வோர் பாக்யசாலிகள் என்றிவ்வளவே கூறலாகும்.

——————-

ஸ்ரீ யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீ தேசிகன்,
“யஸ்ய ஸாரஸ்வதம் ச்ரோதோ வகுளாமோதவாசிதம் ச்ருதீநாம் விஸ்ரயாமாசம் சடாரிம் தம் உபாஸ்மஹே”

என்று ஸாதிக்கிறார். வேதங்கள் வலுவிழந்து தெம்பிழந்து தவித்த வேளையில்
ஸ்ரீ ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளே அவற்றின் தளர்வை நீக்கிப் புத்துயிரளித்தன என்பதாம்.

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்ரீ தேசிகன் ஆழ்வாரையும் அருளிச்செயலையும் பற்றிப் பலபடச் சொல்லுகிறார்.
22ம் ஸ்லோகத்தில் ஸ்ரீ தேசிகன், உய்ய வழி ஸ்ரீ ஆழ்வாரின் அருளிச்செயலைக் கற்பதும்,
ஸ்ரீ எம்பெருமான் திருவடி நிலைகளின் பெயர் தாங்கிய அந்நிலையைத் தலையில் தரிப்பதுமன்றி வேறில்லை என்கிறார்.

அம்ருதவாதினி ப்ரபந்தத்தில் ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ நம்மாழ்வாரே உயர்ந்த ஆசார்யன் பக்தர்களைக் கரையேற்றவல்லவர் என 28ம் பாட்டில் கூறுகிறார்.

செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

இக்கருத்தை அவர், ஸ்ரீ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில்,
“யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:
சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது.
ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும்.
மாறாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன.
இதையே ஸத்வ ஸீம்னா என்றார்.
ஆகவே ஸ்ரீ சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

—————————

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –ஒன்பதாம் பத்து –

October 11, 2020

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன–9-1-11-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள்- அடையப் படும் பொருளும்
அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று அத்யவசித்து -துணிந்து –

இவர்க்கு இப்படி இந்த வ்யவசயத்தை -துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –
அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய ஸுந்தர்யம் -பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

—————

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்-9-2-11-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –

குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த அபேக்ஷை விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த ஸ்வபாவ தன்மையின் அனுசந்தானத்தாலே நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
விஸ்மய நீயமான பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

————–

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்-9-3-11-

சீலம் எல்லை இலான் அடிமேல் –
அமர்யாத எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீலாதிக்யமாயிற்று –சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை நிகமிக்கிறார் -முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்-

—————-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரம்-9-4-11-

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே-என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக-ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே-நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் – தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

—————-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை –9-5-11-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –
எங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-
உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட நிரதிசய -எல்லை இல்லாத ப்ரீதியை உடையராய்க் கொண்டு –

பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் –
காலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –

தனக்கு அருள் செய்த-
உலக மக்களில் அந்ய தமர் -வேறு பட்டவரான தமக்கு
மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –

மாயனைத் –
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும் விசேஷ கடாஷம் செய்த
ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்
எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –என்றுமாம் –

இவர் குண ஞானத்தால் -குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
நித்ய ஸூரிகள் அனுபவத்தையும்
தமக்கு அவர்களோடு ஒத்த ப்ராப்தியையும் அனுசந்தித்து -சம்பந்தத்தையும்
நினைத்து நோவு பட்டார் என்றும்
ஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே
இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –

தென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –
சடகோபன் சொல் என்று பரோக்ஷ நிர்த்தேசத்தாலே -படர்க்கையில் கூறுகையாலே
தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ
பகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –

———–

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை அவன் தன்னோடு போம்படி செய்தான்
தன் பக்கல் இல்லாதது–வந்தேறி ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ பாதகம் -தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற விஜயத்துக்கு -வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று
ஸ்வாமியின் விஜயத்துக்கு -வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே அன்றோ கொடி கட்டுவது –

சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரத்து –
சமுதாய சோபையை -முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி
விஜயம் -வெற்றி உண்டாகையாலே -பிரசஸ்தி -வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

————-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த-9-7-11-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும்-
ஒரு நாளும் விட நினையாமல்-அவ் ஊரில் நித்ய வாசம் செய்யுமவனை –

ஒண் சுடரை –
பின்னானார் வணங்கும் சோதி -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
அவ் ஊரில் நிலையால் வந்த புகர் இருக்கிறபடி –
அன்றிக்கே
அவ் ஊரில் போக்யதையால் -இனிமையால் வந்த புகர் என்னுதல் –
பிற் பாடர்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் -என்றபடி –

ஒழிவில்லா –
அவன் அவ் ஊரை நீங்கில் தரிக்க மாட்டாதவாறு போன்று
அவனை ஒழியில் தரிக்க மாட்டாதவள் -என்கை
நச சீதா த்வயா ஹீநா நசாஹம் அபி ராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மச்த்யாவிவோத்த்ருதௌ-அயோத்யா -33-31-
எனப் படுமவள் அன்றோ இவளும் –

அணி மழலைக் கிளி மொழியாள் –
அழகிய முக்தமான -இளமையான கிளியின் பேச்சுப் போல் இருக்கிற பேச்சினை உடையவள் –

அலற்றிய சொல் –
தன் ஆற்றாமையாலே-அக்ரமமாக -முறை பிறழச் சொல்லிய சொல் –

வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-
பிராட்டி படியில் ஒன்றும் குறைவு அற்று இருக்கிற ஆழ்வார் –

வாய்ந்து உரைத்த –
கிட்டி உரைத்த -என்றது-பாவ பந்தத்தால் சொன்ன -என்றபடி –

—————–

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்-9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
நாநா வர்ணங்களான -பல வகைப் பட்ட நிறங்களை உடைய
ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களை உடைத்தாய்
நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமையை உடைய
திரு நாவாயிலே நின்று அருளினவனை

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் –
திண்ணியதான மதிளை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
திரு நாவாய்க்கு ரக்ஷை -காவல் திரு நகரியின் மதிள் போலே காணும்
ஆழ்வார் பரியவே அப் பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்
அன்றிக்கே –
சர்வேஸ்வரனுக்கு தனம் -செல்வம் ஆழ்வார் ஆகையாலே
செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –

—————-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்–9-9-11-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் -மாலைப் பூசல்
அவனைப் பிரிந்து-விஸிலேஷித்து – தங்களுடைய பிராணங்களை -உயிர்களைக் கொண்டு
தரிக்க மாட்டாதே ஷமைகள் இன்றிக்கே –
அவனுடைய வரவுக்கு உறுப்பாக ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை உடைய ஆயர் பெண்கள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
திரு ஆய்ப்பாடியிலே ஐந்து லஷம் குடியில் பெண்கள் அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து இருக்க
வரும் காலத்தில் அவன் வரவு காணாமையாலே கிருஷ்ணனைப் பிரிந்த விரஹத்தாலே
ஒரு ஸந்த்யையில் -மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று –

அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் –
அவனுடைய பிரிவால் நோவுபட்டு அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை -துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை

————-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்-9-10-11-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பார்ஸ்வத்திலே -பக்கத்தில் வந்து கிட்டாதபடி-ச வாசனமாக –
வாசனையோடு போக வேண்டி இருந்தீர்கோள் ஆகில்

மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
நித்யமான- அழியாத மாடங்களை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே
திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து —

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் —

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்-3-1-11-

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும்
சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய் ஞ்ஞான வேதியனை –
யதா பூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத் கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந் நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பை யுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

—————

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்-3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களை யுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப் புக்கது;
அங்கு ஸ விபூதிகனானவனை ஆயிற்று இழக்கப் புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக் குறைவு உண்டு அன்றோ?
அப்படி யின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,
அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களை யுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படி யாயிற்று என்றபடி.

————–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்-3-3-11-

கடின ஸ்தலத்தில் பூவைப் பரப்பினால் போலே ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
காடும் மலையுமான பூமியை அநாயாசேந அளந்துகொண்ட சர்வேஸ்வரனை யாயிற்று கவி பாடிற்று
ஆயின், திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத் திருவாய்மொழியில்?
மண் தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும்,
‘உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்து’ என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்வர்கள்;
அன்றியும், எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும்
திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாகச் சொல்லக் கடவது இறே

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி
வளர்ந்த பொழிலை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

————–

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன-3-4-11-

கிண்ணகத்திலே இழிவாரைப் போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற
ஸ்ரமஹரமான -சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், ஸ்ரமஹரமான சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையு முடைய சர்வேஸ்வரனை.
இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும்,
தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியா யிருக்கிற படியைக் கண்டு
அருளிச் செய்தமை தோற்ற ‘வண்டு கூடி அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன –
பர்யந்தங்களிலே -பக்கங்களிலே அலர்ந்த சோலையை யுடைய திருநகரிக்கு-நிர்வாஹகராய் – உரியவராய் –
பரம உதாரரான – ஆழ்வார்

————–

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்-3-5-11-

‘பிராப்யப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;
அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகை யாவது,
அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
அஹம் சர்வம் கரிஷ்யாமி -‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’
என்று இருந்தாலும்,-க்ரியதாம் இதி மாம் வத- ‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே,
அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது.

ஆர்ந்த புகழ் அச்சுதனை –
குறை வற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
‘தன்னை -ஆஸ்ரயித்தாரை-அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.

அமரர் பிரானை எம்மானை –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்ய ஸூரிகளைக் கொள்ளும்
அடிமையைத் தன் பக்கல் -ஆசா லேசமும் -ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை.
இதனால், அடியார்களை நழுவ விடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே,
தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.

வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும்-அனுசந்திக்கையும் –
அவ் வனுசந்தானம் -அச் சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவே யன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் -அவிக்ருதராய் -விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும்,-
விக்ருதராய் – உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி
அவ் விஷயத்திலே-அவகாஹித்துச் மூழ்கிச் சொன்ன. வாய்கை – கிட்டுகை.

வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன்
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார்
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராவார்-

—————

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வள நாடன் குருகைக் கோன் சடகோபன்–3-6-11-

காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார்.
கண்களாற் காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி
நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்
இவர்க்குப் பிரிவாவது,-விஸ்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே – புறக் கண்களால் காண வேண்டும்
என்னும் நசையாலே- மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம்.
சம்ச்லேஷம் -கலவியாவது -ப்ரத்யக்ஷ சமானாகாரமான -புறக் கண்களால் நேரே காண்டலைப் போன்று-
ஞான சாஷாத்காரம் – உட் கண்ணால் காண்டல்.

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்ய ஸூரிகளுக்கு-அனுபாவ்யனானால்- அனுபவிக்கத் தக்கவன் ஆனால் போலே, சம்சாரிகள் என்று
வாசி வையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸூலபன் ஆனவனை.

பண் கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை;
முக் கோட்டை போலே காணும் சோலை இருப்பது.

வழுதி நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் –
திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார்

——————

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் -3-7-11-

பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும்,
வனவாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே
நிறைந்து -பல்கி –ராஜ்யத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.

அன்று –
அவர்களாலே-நிரஸ்தரான – தள்ளப்பட்ட அன்று.

ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்கும் காணும் ஐவர்க்கு அருள் செய்கை.
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார்.

நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும்,
நாதிஸ் வஸ்த்தமநா ‘நிறைவு பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே,
அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென் குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார்-பாகவத சேஷத்வ பர்யந்தமான – பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேஸ்வரனுக்கு.

—————–

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்-3-8-11-

புலம்பு சீர்ப்
இவர் புகழுமா போலே லோகம் அடைய புகழும்படி யாயிற்று அவன் குணங்கள் –

பூமி யளந்த பெருமானை
பூமியை அளந்து –அந்ய சேஷத்வ /ஸூவ ஸ்வாதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்த்த –
சர்வ ஸ்வாமியை யாயிற்று இவர் கவி பாடிற்று –

நலங்கொள் சீர்-நன் குருகூர்ச் சடகோபன் சொல்
கரணங் களும் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தியை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு-
இவை எல்லாவற்றின் விருத்தியையும் தாம் ஆசைப்பட்டு-
இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் ஆகிற நன்மையையுடைய ஞானாதி குண விசிஷ்டராய்-
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்

————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-3-9-11-

தகுதியான மிக்க புகழை யுடையவனாய், நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய்,
அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷயத்வே- மனிதத் தன்மையிலே பரத்வத்தையுடையவன் தனக்கு.
மனுஷ்யத்வே ‘மனிதத் தன்மையில் பரத்வம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனுஷ்யத்வே- மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசா
நின்றதே அன்றோ?

ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும்படி யிருக்கிற ஆழ்வார்

————–

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் -3-10-11-

கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களை யுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

குரு கூர்ச் சடகோபன் சொன்ன –
ரகுவீர சரிதம் முனி ப்ரணீதம் ‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ் வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்-2-1-11-

இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய்,
இவரோடே வந்து கலந்து அத்தாலே-உஜ்ஜவலனுமாய் – ஒளி உருவனுமாய் இருந்தான்.
இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின,
இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது;
இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார்,
‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார்.
பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.
இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
(பிரணயித்வ நிபநந்தனமாகவும் வாஸ்தவமான ஆகாரத்தாலும் இரண்டு விதமாக அருளிச் செய்து
இவருடன் கலந்ததனால் உஜ்ஜவலனாயும் தனது பேறாகவும் கொண்டமையும் தோற்ற அருளிச் செய்கிறார் )
ஆராத காதல் –இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம்
பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.
காதல் குருகூர்ச் சடகோபன் – காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.
‘இது, தற் புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –
இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

—————–

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனைக் குருகூர்ச் சடகோபன்-2-2-11-

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூ ராணாம் ‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும்,
அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் ஸ்துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ,
அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு
எனக்கு எப் பொழுதும் அருள் புரிய வேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம் மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட.

கோலக் கூத்தனை –
திருவுலகு அளத்தருளின போது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும்,
அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார்,‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச் செய்கிறார்.
இதனால், இந்திரன்-ராஜ்ய ஸ்ரத்தை – இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியது போன்று,
இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதுவும் ,
அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதுவும் போதரும்.

குருகூர்ச் சடகோபன் சொல் –
ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய் மொழிக்குள்ள
உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

——————-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த–2-3-11-

கரிஷ்யே மைதிலீ ஹேதோ ரபிசாச ம ராக்ஷஸம் ’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால்
இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு –
வர புஜ பலத்தால் – வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின
ராக்ஷஸருடைய ஜாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் –
அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்.
ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,
‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக்
காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின்,
‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ?
சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார்
திரளச் சொல்லவேண்டா அன்றோ?

———————-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி, வண் சடகோபன் சொல்-2-4-11-

இவ்வளவில் வந்து முகம் காட்டிற்று இலனாகில் புகழுக்கு வாட்டம் வரும் இறே
‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;
இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.
இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.

இசை கூட்டி –
பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள்.

வண் சடகோபன் சொல்
உதாரதீர் முநி –‘உதார குணத்தை யுடையவரும் மனன சீலருமான ஸ்ரீ வால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை
உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் ஸ்லோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே,
மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,
‘வண் சடகோபர்’ என்கிறார்.

——————–

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்-2-5-11-

தன் படிகளைப் பேசப் புக்கால்,ஆனந்தவல்லியில் சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை.
அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று;
குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸூ தேவாத் மஜஸ்ய –‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும்,
ஜெய சீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ண பிரானுடைய நற்குணங்கள் உலகங்கள்
அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்.

அம்மானை –
குடக்கூத்தாலே என்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டவனை.-அநந்யார்ஹம் ஆக்கினவனை

கூறுதலே மேவி –
‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின்,
‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கை வாங்காதே,
அழகிதாகப் பேசக் கடவோம் என்று உறுதி கொண்டார்.
‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில்,
‘குருகூர்ச் சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ?
மயர்வற மதி நலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி.

——————

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-2-6-11-

இப் போதாயிற்று-வளையம் – மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும்,
திருக்கண்கள்-விக்ஷிதம் – மலர்ச்சி பெற்றதும்.
புகழ் நண்ணி –
இவன், தம் பக்கல் செய்த -வ்யோமோஹ -காதலாகிய குணத்திலே -அவகாஹித்து -மூழ்கி.
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஒன்று திருப் பெயர்;
ஒன்று-சத்ரு வர்க்கத்துக்கு – பகைவர் கூட்டத்துக்கு-ம்ருத்யுவாய் – யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது.

———————-

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய-2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை யுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீல ரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்./ மா-கருமை. /இவ் வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:

அமரர் தலை மகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.

கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தை யுடையவனை.

தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய –
வேதம் போன்று பிறப்பிலி அன்று; அபவ்ருஷேயம் ‘புருஷனால் செய்யப் படாதது’ என்னுமதிலும்
வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று -வக்த்ரு விசேஷத்தாலே – இயற்றினார் சிறப்பாலே.

——————

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் –அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய
சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார்-வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

—————–

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன்-2-9-11-

விடல் இல் சக்கரத்து அண்ணலை’
நாம் விடுகிறோம்’ என்று அதி சங்கை பண்ணுவது என்?
நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்;
‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார்.
அதாவது, ‘ஒரு நாளும் விடாத திருவாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார்.

மேவல் விடல் இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல் –
அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார்
வண்மையாவது,-இவ் வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம்.

—————

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11-

ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –முதல் பத்து –

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி முதல் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் –1-1-11-
வால் மீகிர்ப் பகவான் ருஷி:என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச் செய்கிறார்.

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் –1-2-11-
ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று;
ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன்-1-3-11-
சேர்ந்த பொழில்.–வளப்பத்தை யுடைத்தான திருநகரி
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு
செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே!

வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்-1-4-11-
அகால பலிநோ வ்ருஷ ( ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ )என்கிறபடியே,
ஸ்ரீ திரு நகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று.

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-
மாலே-ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.
மாயப் பெருமானே –குணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.
மா மாயவனே –சேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.
என்று என்று மாலே ஏறி – ஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து,
‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,
அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன் பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த, ஏதம் இல் ஆயிரம்’
என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கை விடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-
தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார்

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்-1-8-11-
நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.
ஆர்ஜவ குணமாவது, சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை.
ஆக, இத் திருவாய்மொழியில் அருளிச் செய்தது சர்வேஸ்வரனுடைய ஆர்ஜவ குணம் என்பது போதரும்.
இவ் வார்ஜவ குணத்திற்கு இலக்கான ஆழ்வார்-இவ் வர்த்தத்தைக் கடக்க நின்ற ஒருவர் அல்லர்,

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்-1-9-11-

பூமி இல்லை -என்று-என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான்-இனி அவ்வருகு போக்கில்லை
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்-உபகார சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குத் தம் பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவு அன்றிக்கே சம்சாரிகளும் அறியும் படி பண்ணின உதாரரான ஸ்ரீ ஆழ்வார்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம்–1-10-11-

மணியை-முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.
‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.
வானவர் கண்ணனை –இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.
தன்னதோர் அணியை-இதனால் ‘அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார்.
இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம் –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று,சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று ‘மிடைந்தசொல்’ என்கிறபடியே,சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள்.
இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு,
‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுதல் –

——————-——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி க்ஷேத்ர மஹாத்ம்யமும் ஸ்ரீ நம்மாழ்வார் மகிமையும் —

September 10, 2020

வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி-உடையநங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.
உடைய நங்கையின் ஊர் திருவண்பரிசாரம்.(இன்றைய திருப்பதிசாரம்).
திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார்.
மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில்
பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.
அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார்.
விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர்.

சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார்.
ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.

இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம்
“எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும்படி, சேனைமுதலியாரை நம்மாழ்வாராக……..
நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி
வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.

ஆழ்வார் புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் வரையிலும் கண் திறக்காமல் எதுவும் பேசாமல் பெருமானைச் சிந்தித்தபடி இருந்தார்.

இது இப்படி இருக்க, ஆழ்வாருக்கு பல வருடங்கள் முன்பே பிறந்து தல யாத்திரையாக வடநாடு சென்றிருந்த மதுரகவி என்பவர்,
அயோத்தியில் இருந்த போது தெற்கே ஒரு பெருந்தெய்வப் பேரொளியைக் கண்டார். அதைப் பின்பற்றி வந்த அவர்
இறுதியில் குருகூரில் திருப்புளியடியில் வீற்றிருந்த ஆழ்வார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.

கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார்.
ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.
ஆழ்வாரும் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று அருளினார்.
மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார்.

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால்
எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.)

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில்
36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில்
சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை.
எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது.
இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.

நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது.

பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர்.
வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது.
திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள்.
பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது.
நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது
வைணவ குருபரம்பரை.

3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே
எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு.
இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம்.
இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல்
“சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.

4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும்.
அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து.
இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு.
1,12,18,40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும்,
27, 38, 78,79 ஆகியவை உயிர்நிலையையும்,
2,23 31,81 ஆகியன விரோதி சொரூபத்தையும்,
47,48,49,40 ஆகியன உபாய சொரூபத்தையும்,
19,23,80,93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.

ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக (உறுப்புகளாக) அமைத்து
ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – (நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை,பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்–என்பதாக அமைவர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால்
மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில்
‘திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’அற்றது பற்றெனில்’ என்றும்,
ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை
‘களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும்,
‘நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா
ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில்
அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்.
அவள், “ ‘கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என
ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள்.
இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?–என்று போற்றி மகிழ்ந்தனர்.

————-

ஆழ்வார் திருநகரி:

பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளில் ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும்
திருப்பதி இது இன்றுதான். இதிலிருந்தே இதன் ஏற்றம் நமக்குப் புரியும்.
இதன் பழைய பெயர் திருக்குருகூர். குருகு என்றால் பறவை, சங்கு எனப் பல பொருள் உண்டு.
இங்கு சங்கன் எனும் சங்குகளின் தலைவன் இத்தலத்துப் பெருமானை வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது.

ஒருநாள் பிரமன் வைகுந்தம் சென்று திருமாலை வணங்க அவர் “உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே
நாம் தண் பொருநை நதிக்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே எழுந்தருளியிருக்கின்றோம். அங்கே எம்மை வழிபடு” என்றார்.
‘பிரமனே! இங்கே எம்மை வழிபடுவாயாக’ எனும் பொருள்பட குரு+க+அத்ர+மதர்ச்சனம் என்றதனால்
இத்தலம் குருகூர் என்றாயிற்று என தலபுராணம் கூறுகிறது.

பிரளயகாலம் முடிந்த பின் முதலில் தோன்றியதால் இது “ஆதி க்ஷேத்ரம்” எனப்படுகிறது.

சாளக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இழித்துரைத்து பழித்தான்.
அவன் இழி பிறப்பை அடையட்டும் என அவன் ஆசிரியர் அவனைச் சபித்தார்.
அவனும் மறுபிறவியில் தாந்தன் என்ற இழிபிறப்பினனாய் பிறந்தான்.
ஆயினும் பூர்வ புண்ணியத்தால் குருகூரில் ஆதிநாதர் கோயிலில் புல் செதுக்கி பணி புரிந்தான்.
அங்குள்ள அந்தணர்கள் அவனை வெறுத்து விரட்டினர்.
அவன் தாமிரபரணியின் வடகரையில் இருந்து ஆதிநாதரை வழிபட்டு வந்தான்.
இங்கே அவனை விரட்டியதால் அந்தணர்கள் பார்வை இழந்து குருடாயினர்.
ஆதிநாதர் அவனுக்கு காட்சியளித்து வீடுபேறு அருளினார். அவன் வழிபட்டதால் இத்தலம் ‘தாந்த க்ஷேத்ரம்’ எனப்படுகிறது.
கோயிலின் அர்த்தமண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவன் பொருநை வடகரையில் ஆதிநாதரை வழிபட்ட இடம் ‘அப்பன் கோயில்’ ஆகும்.
இது ‘செம்பொன் மாடத் திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வராகப் பிரான் இத்தலத்தில் முனிவர்களுக்குக் காட்சியளித்து ‘ஞானப்பிரான்’ என்னும்
திருப்பெயரோடு இருப்பதால் இது ‘வராகக்ஷேத்ரம்’ எனப்படும்.

ராமனின் இறுதிக்காலத்தில் எமன் அவனைச் சந்திக்க வந்தான்.
ராமன், யாரையும் உள்ளே விட வேண்டாம் என லட்சுமணனிடம் கூறிவிட்டான்
அச்சமயம் துர்வாசர் வரவே அவரை உள்ளே போக்கவிட்டான் லட்சுமணன்.
இதையறிந்த ராமன் அவனை புளியமரமாகப் போகும்படி சபித்தான்.
லட்சுமணன் வேண்டவே தானே நம்மாழ்வாராக அவதரித்து புளியமரத்தடியில் இருப்பதாக வாக்களித்தான் ராமன்.
ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன் திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் “சேஷ க்ஷேத்ரம்” எனப்படுகிறது.

சங்கன் வழிபட்ட சங்கணித்துறையை உடையதால் இது “ தீர்த்த க்ஷேத்ரம்” என வழங்கப்படுகிறது.

இப்படி 5 விதங்களாய் போற்றப் பெறுவதால் இத்தலம் “பஞ்ச க்ஷேத்ரம்” எனப் புகழப் பெறுகின்றது.

————

இத்திருப்பதியின் மூலவர் ஆதிநாதர்.
உற்சவர் பொலிந்து நின்ற பிரான்.
தாயார் ஆதிநாதவல்லி.
கோவிந்த விமானம்.
பிரம்ம தீர்த்தம்.
ஆதிப்பிரான் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இவற்றை ‘நவதிருப்பதி’ என்பர்.
இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவகிரகங்களுக்குரிய தலங்களாகக் கருதப்படுகின்றன.
அதில் இத்தலம் புதனுக்குரிய தலமாகும்.
நவதிருப்பதிகளிலும் உள்ள மூர்த்திகளுக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் வரும் பெயர்களே வழங்கப்படுகின்றன.
நவதிருப்பதிகள் ஒவ்வொன்றிலும் எம்பெருமானுடைய குணம் சிறப்பாக விளங்குவதாக ஆசார்ய ஹ்ருதயம் கூறுகின்றது.
அவ்வகையில் ஆழ்வார் திருநகரியில் பெருமானுடைய பரத்வம் விளங்குகிறது.

தினந்தோறும் ஆழ்வார் திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும் சேவாகாலம் நடைபெற்ற பின்னர்
தைலக் காப்பு விநியோகிக்கப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷங்களாகும்.

மார்கழித் திருவத்யயன மகோற்சவத்தில் பத்தாம் நாளிரவு நம்மாழ்வாருக்கு சயனத் திருக்கோலமும்
மாறனடி பணிந்து உய்ந்தவரான ராமாநுஜருக்கு நாயகி திருக்கோலமும் சார்த்தி,
ராமாநுஜர் ஆழ்வாரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதான காட்சியை இங்கு மட்டுமே காண முடியும்.

தொடர்ந்து இராப்பத்தில் மார்கழித் திருவாதிரையன்று ஆழ்வாருக்கும் ராமாநுஜருக்கும் ஒரே ஆசனத்தில்
திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும் ,
வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

கருட சேவை

நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார்.
ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறுகின்றது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஆன்மீகப் பெரும் திருவிழாக்களில் ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத் தகுந்தது.

வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து ஆழ்வார் கோயிலில் கொடியேற்றப் படும்
இத்திருவிழாவில் 5 ஆம் நாள் உற்சவமே இங்கு குறிப்பிடத் தகுந்தது.

அன்றைய விழாவில் ஆழ்வார்திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளிலிருந்தும் எம்பெருமான்கள் பல்லக்கில்
ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிடுகிறார்கள். ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி எம்பெருமான்களும்
திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளி அன்று இரவு 11 மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

யாருடைய பாலேய் தமிழிசை கேட்பதற்காக நவதிருப்பதி எம்பெருமான்களும் வந்திருக்கின்றனரோ
அந்த மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அன்னவாகனத்தில் முன்னால் எழுந்தருள்கின்றார்.

வேதத்தின்முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன்முதலோர்
கோதற்ற ஞானக்கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக்கடல் எம் குருகூர்ப் புனிதன் கவியின்முன் ஒரு
பாதத்தின் முன்செல்லுமோ தொல்லைமூலப் பரஞ்சுடரே–என சடகோபர் அந்தாதி கூறிய படி
ஆழ்வாரின் அமுதத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு இன்புறுவதற்காக பச்சைப் பசுங்கொண்டலாகிய நவதிருப்பதி
எம்பெருமான்களும் ஆழ்வாரின் மங்களாசாசனத்தை செவிமாந்தியபடியே கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.
இந்த அழகிய காட்சியை நாம் காணும் போது ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று தான் ஏங்கத் தோன்றும்.

பின்னால் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருள்வார்.
பெருமான்களுக்கு முன்னே தமிழ் வேத பாராயண கோஷ்டியும், பின்னே ஆரிய வேத பாராயண கோஷ்டியும் வரும்.
ஆழ்வார் திருநகரி முழுவதும் அன்றைக்கு உற்சாகம் கரைபுரண்டோடும்.
பாகவதர்களும் அடியார்களும் ஆசாரியர்களுமாய் எங்கும் திருவீதி நிறைந்து காணப்படும்.
ராமாநுஜர் வியந்தபடி “இதுவோ பரமபதத்து எல்லை” எனவே வியக்கத் தோன்றும்.
திருநகரியில் உள்ள அனைத்து மாளிகைகளிலும் திருமடங்களிலும் அனைவருக்கும் ததியாராதனம் எனும்
அன்னதானம் கோலாகலமாக நடைபெறும்.

விசாகத் திருவிழாவில் 8 ஆம் திருநாள் அன்று நம்மாழ்வார் தாமிரபரணி வடகரையில் உள்ள,
தான் பிறந்த அப்பன் கோயிலுக்குச் செல்கிறார். அப்போது அவர் தவழும் கிருஷ்ணன் கோலத்தில் காட்சியளிப்பார்.
மறுநாள் திருத் தேர் கண்டருளுகின்றார்.

அகோபில மடமும் ஆதிநாதரும்
அகோபில மடத்தை நிறுவியவரான ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகர் ஆழ்வாரை வழிபடுவதற்காக ஆழ்வார்திருநகரி வந்தார்.
அச்சமயம் ஆழ்வார் விக்ரகம் சிலரால் மலையில் உள்ள சுனையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.
ஆழ்வாரைக் காணாத தேசிகர் மனம் வாடி ‘கண்ணிநுண் சிறுத்தாம்பி’னை 1000 முறை ஓதி,
குலசேகர பாண்டியனின் உதவியோடு ஆழ்வாரை மீட்டு கோயிலில் நிலைநிறுத்தினார்.
பொலிந்து நின்ற பிரான் மகிழ்ந்து தேசிகருக்கு ‘வண் சடகோப’ எனும் பெயரை
‘ஆதிநாதர்’ பெயரில் உள்ள ‘ஆதி’ என்பதையும் இணைத்து ‘ஸ்ரீமத் ஆதிவண் சடகோப’ என்னும் பட்டத்தை வழங்கி அருளினார்.
அதற்கான சில மரியாதைகளும் உற்சவ சமயத்தில் அகோபில மடத்து ஜீயர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆழ்வார் தாம் அணிந்திருந்த ஹம்ஸ முத்திரையை ஜீயருக்கே வழங்கினார்.
இன்றளவும் அகோபில மடத்தின் முத்திரையாக ஹம்ஸ முத்திரை இடம் பெற்றுள்ளது.
ஸ்ரீமத் ஆதிவண் சடகோபரின் வாழித் திருநாமத்தில் “ஆழ்வார் தம் க்ருபையான அம்ச முத்திரை வாழியே” என்று குறிப்பிடப்படுகிறது.

——————

ஆழ்வாரின் வைபவங்களை அவர்தம் திருவடியாக இருக்கும் ஸ்ரீமதுரகவிகள் தொடக்கமாக பலர் பேசியுள்ளனர்.
அப்படி பலர் பேசிய ஸ்ரீசுக்திகளையெல்லாம் கொண்டு, ஒன்று திரட்டி ஸ்ரீ பிள்ளை லோகாசாரியரின்
திருத்தம்பியரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார் விஷயமாக செய்த
பெரும் காவியம் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தம். இதுபோல் ஒரு க்ரந்தம் இதற்கு முன் வந்ததில்லை,
இனியும் வர வாய்ப்பில்லை என்னும் அளவிற்கு விஷய பூர்த்தி, சொல்லழகு எல்லாம் ஒரு சேரப் பெற்ற க்ரந்தம்.
இந்த க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு ஆழ்வார் வைபவத்தை ஈண்டுச்சிறிது அனுபவிப்போம்.

ஆழ்வாரின் அவதாரம்:

ஆழ்வாரின் அவதார விஷேஷத்தை பற்றி நம்மிடையே நிலவும் பல கருத்துக்களை ஆராய்கிறார் நாயனார்.
யுகங்கள் தோறும் அரங்கன் ஒவ்வொரு வர்ணத்தில் ஒருவருக்கு பிள்ளையாக அவதரித்தான்.

யுகம்–கிருதயுகம்–அந்தணர் –அத்ரி மஹரிஷ –தத்தாத்ரேயர்–ஜமதக்நி–பரசுராமர்
த்ரேதாயுகம்–தசரத சக்ரவர்த்தி–க்ஷத்ரியர்-ஸ்ரீராமன்
த்வாபரயுகம்–வசுதேவ நந்தகோபர்கள்–வைஸ்யர்–ஸ்ரீக்ருஷ்ணன்

இதன் தொடர்ச்சியாக கலியுகத்தில் வேளாளர் குலத்தில் காரி-உடையநங்கையாருக்கு மகனாக
ஸ்ரீசடகோபராக எம்பெருமானே அவதரித்தானோ? என்று ஒரு சாரார் கருதுவர்.

வேதங்களை தொகுத்தல் போன்ற சில அரிய செயல்களைச் செய்ய வ்யாச பகவான் பேரில் ஆவேசித்தான் அரங்கன்.
அதுபோலே, இவரைக் கொண்டு தமிழ் மறையை வெளிப்படுத்துவதற்காக இவர் பேரில் ஆவேசித்தானோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.

இதெல்லாம் இல்லை; பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளில் ஒருவர் அல்லது முக்தர்களில் ஒருவர்,
அல்லது அந்த ஸ்தானத்திற்கு ஒப்பான “ஸ்வேத த்வீப” வாசிகளில் ஒருவர்,
நம்மைத் திருத்த ஆழ்வாராக அவதரித்தார்களோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.

( “ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ரகசியம்.
அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)

இந்த காரணங்கள் ஏதும் இல்லை,
நம்மைப் போன்று சம்சாரிகளில் ஒருவர் முற்பிறவி பலனாக இப்படி திருந்தினாரோ? என்று கருதுபவர்களும் உண்டு.

இதையெல்லாம் விட சிறந்த காரணமும் ஒன்று உண்டு. யாதொரு காரணத்தையும் பற்றாத எம்பெருமானின்
“நிர்ஹேதுகமான க்ருபை” (causeless mercy) என்னும் அருளின் சிறப்பினால்,
அரங்கன் ஒருவனையே பலனாக, எண்ணியிருந்து பலிக்கப் பெற்றவர் என்று ஆழ்வாரை கருதுவோரும் உண்டு.

ஆக இப்படியெல்லாம் பல கருத்துக்கள் நிலவுவது ஆழ்வாரின் சிறப்பையே காட்டும்.
இன்னதென்று வரையறுத்து சொல்ல முடியாத சிறப்பு அது ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு.
இவரைத் தொடர்ந்து வந்த ஆச்சார்யர்களும் அப்படியே. அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே உருவானவர்கள்.
பெரிய பெருமாளின் பாதுகையாகவே இருந்து, நமக்கு ஸம்ஸாரமாகிற கடற்கரையில் நின்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.

நம்முடைய பூர்வாச்சார்யர்களை ஒருமனதோடு தியானிப்பதும், அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும்
நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும். ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.
இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும். அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள்.
நாதமுனி காலமெங்கே..? நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?
நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..?
நம்மாழ்வார் காலம் முடிந்தாலும், நாதமுனிகளுக்கு அணுக்ரகாம் செய்ய, ஒரு “பராங்குச தாசரை” அனுப்பி வைத்தாற்போல்.

பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.
பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபத ப்ராப்தி……!

ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.
“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”
ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார்.
நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார்.
அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.

யார் இவர்கள் ?
வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள்,
தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள்,
தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து,
அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.
இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது.

திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள்
“அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார்.
அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.

பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார்.
அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக் கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று.
அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.
இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால்,
அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.

ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி
நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.
ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார்.
மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?

ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.
அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்).

ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார்.
அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர்.
பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது.
இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.

இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும்,
அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில்
இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும்.
ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம்,
அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல்,
அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.

ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து,
ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது.
இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட,
அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.

இனி ஆழ்வாரைப்போலே, எம்பெருமானுக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு
ஆழ்வாரை ஒப்பிட்டு நோக்கும் நாயனாரின் கருத்துக்களை அநுபவிப்போம்.

இளைய பெருமாள் :
இளைமைக் காலம் தொடங்கி இளையபெருமாள், எம்பெருமானுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் இடைவிடாது
எல்லாக் காலங்களிலும் செய்ய வேண்டும் என்று பாரித்து,
சீதாபிராட்டியின் புருஷகாரமடியாக அக்கைங்கர்யத்தையும் பெற்று ஸ்ரீராமனே தனக்கு செல்வம் என்றிருந்தார்.

ஆழ்வாரும் இவரைப்போலே “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்று சிறு பிராயம் துவங்கி,
“அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியை” மன்னி, “ஒழிவிலாக் காலமெல்லாம்” எம்பெருமானுக்கு
எல்லாவித கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்று பாரித்தார்.

மேலும், தனக்கு எல்லா உறவும் ஸ்ரீராமனே என்றிருந்த இளைய பெருமாளைப்போலே
இவரும் “சேலாய் கண்ணியரும், அருஞ்செல்வமும், நன் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் அவரே” என்று
எம்பெருமானே தனக்கு எல்லாம் என்றிருந்தார்.

ஸ்ரீ பரதாழ்வான் :
பரதாழ்வான், தன் தாயான கைகேயி, பெருமாளை வனத்திற்கு அனுப்பினாள் என்ற காரணத்தால்,
அவளை வெறுத்து, வந்த அரசையும் செல்வத்தையும் துச்சமாக நினைத்து பெருமாளைத் தேடிச் சென்று,
அவர்தம் “பாதுகையை” பெற்றுவந்து, அவர் வருமளவும் கண்ணீர் வடித்து காத்திருந்தார்.

அதே நிலையில் ஆழ்வாரும் அரங்கனைப் பிரிந்து வாடும் அவர் பதற்றத்திற்கு இசையாது இருந்த தன் தாயாரை வெறுத்து,
“பெருஞ் செல்வம் நெருப்பு” என்று ஒதுங்கி, எம்பெருமானை வேண்டிச் சென்று,
“திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகள் கூட்டினை” என்று அவன் திருவடிகளை தலை மேல் தாங்கினார்.
அதோடு எம்பெருமான் தன்னருகே இவரைச் சேர்த்துக் கொள்ளும் அளவும் கண்ணீர் பொங்க அழுது கிடந்தார்.

ஸ்ரீ சத்ருக்நாழ்வான்
சத்ருக்நாழ்வான் மற்ற இருவரைப்போல், இராமனின் வடிவழகிலும் ஈடுபடாது, பரதனுக்கு தொண்டு செய்து,
பரதனுக்கு உகப்பு என்பதற்காக, இராமனின் வடிவழகையும் மனதில் கொண்டார்.

அதே நிலையில் ஆழ்வாரும், ததீயர்களுக்கு அடிமை பட்டிருப்பதை விரும்பி, அவர்களின் உகப்புக்காக,
எம்பெருமானின் த்வ்ய மங்கள விக்ரஹத்தை தன் மனதிலே கொண்டார்.
தாமே இதை “புலன் கொள் வடிவு என் மனத்தாய்” என்றும் பாடியுள்ளார்.

தசரத சக்ரவர்த்தி :
ஸ்ரீராமனின் வடிவழகிலே ஈடுபட்ட தசரதன், எப்போதும் தன் கண் நிறைய அந்த வடிவழகை நெஞ்சில் நிறுத்தி
அநுபவித்து வந்தது போல,
ஆழ்வாரும் “எப்போழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி” என்று அநாதி காலம் வரை அநுபவித்தாலும்,
“அப்போதைக்கப்பொழுது என் ஆராவமுது” என்கிற படி மேன் மேலும் அநுபவிக்க ஆசை கொண்டிருந்தார்.

பிரஹலாதன் :
தன்னை துன்புறுத்திய நெருப்பு, போன்றவைகளைக் கூட எம்பெருமானுக்கு அனுகூலமான வஸ்துவாக நினைத்து,
எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தை எல்லோருக்கும் உபதேசித்து வந்தார்.
அதே போல் ஆழ்வாரும், “அறிஉம் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்றும் மெய் வேவாள்” என்பது முதலாக,
நெருப்பு முதலான வஸ்துக்கள் எம்பெருமானை உயிராகக் கொண்டிருப்பதனால், அனுகூலமாகக் கொண்டதோடு,
“கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் ”
என்று எம்பெருமான் எங்கும் பரந்திருப்பதை பாடியதாலும் ப்ரஹலாதனோடு ஒப்பாகிறார்.

விபீஷ்ணாழ்வான் :
லங்கா ராஜ்யதோடு கூட, மனைவி, மக்கள் என்று எல்லாவற்றையும் விட்டு,
இராமனின் திருவடிகளே தஞ்சம் என்று பற்றினான் ஸ்ரீவிபீஷ்ணாழ்வான்.
அதே நிலையில், ஆழ்வாரும் ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா உறவுகளையும் அறுத்து விட்டு,
“தயரதற்கு மகன் தன்னைபற்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று இராமபிரானையே எல்லாமாகப் பற்றினார்.

திருவடி :
திருவடி இராமனின் வைபவத்தை தவிற மற்றெதிலும் நெஞ்சு செல்லாதவராய்,
ஸ்ரீராமனைத் தன்னுள்ளே உடையவராய் இருந்தார்.
அதுபோல, ஆழ்வாரும் “ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக உண்” என்று
இராம வைபவத்தை போக்கியமாகவும்,
“திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்” என்று ஸ்ரீராமன் தன்னுள்ளே உறைவதையும் பாடியுள்ளார்.

அருச்சுனன்:
பாரத போரின் இடையில், எம்பெருமானின் விஸ்வரூப சேவைப் பெற்ற அர்ச்சுனன், மகிழ்ச்சியோடு பயமும் கொண்டு,
எப்போதும் போல் நான்கு தோள்களோடே சேவை சாதிப்பாய் என்று ப்ரார்தித்த்தாப் போலே;
ஆழ்வாரும், “ நல்குரவும் செல்வமும் ” என்று பலவகை பொருள்களாலான உலகை உடையவனாய் கொண்ட பெருமாளை,
“கூராராழி வெண் சங்கேந்தி வாராய்” என்று அரங்கனின் சங்கு சக்கரம் தாங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காண ஆசைப்பட்டார்.

பிராட்டிமார்கள்:
மேற் சொன்னவர்கள் எல்லோரையும் விட, ஆழ்வாரின் மேன்மையை பிராட்டியாரோடு ஒப்பிடுகையில் அறியலாம்.
“பின்னை கொல், நிலமாமகள் கொல், திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற பாசுரத்தில்
ஆழ்வாரை நீளாதேவி, பூமிபிராட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் என்று தேவிமாரோடும் ஒப்பிட்டு;
மேலும் சில பாசுரங்களால் ஆழ்வாரின் பாவம், கோபியஸ்திரிகளோடும், மதுரா நகரஸ்திரீகளோடும்,
த்வாரகையில் இருந்த பதினாராமாயிரவரோடும் ஒக்கும் என்று சாதிக்கிறார்.

இவர்கள் அனைவரும் தனித் தனியே எம்பெருமானோடு சம்பந்தம் பெற்று, ஒவ்வோர் காரணங்களால் வைபவம் படைத்தவர்கள்.
ஆனால் இவர்கள் வைபவமெல்லாம் ஒரு சேரப் பெற்றவராகையாலே,
இவர்களனைவரையும் விட வைபவம் ஆழ்வாருக்கு உண்டு என்பது அறிய முடிகிறது.
பிராட்டி மார்களைவிடவும் அதிக வைபவம் ஆழ்வாருக்கு என்றால்,
ஆழ்வாருக்கும் அரங்கனுக்குமான நெருக்கம் நமக்கு நன்கு புலப்பட வேண்டும்.
இத்துடன் வைபவம் பெற்ற ஸ்ரீநம்மாழ்வாரின் சம்பந்தத்தை,
அரங்கனின் ஸ்ரீ பாதுகைகள் மூலம் பெற்று, ஆழ்வார் க்ருபைக்கு பாத்திரமாவோம்.

————————–

மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று. இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இது எழுதப்பட்ட
மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், திருப்பதிக்கோவை, மாறன் அலங்காரம் என்னும் நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில் மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.

கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.

மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில்
சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.
இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.

மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை;
சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.
இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்பதற்குச்
சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.

திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை
வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.
அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நவ திருப்பதி –மங்களா சாஸன -பரமான ஸ்ரீ அருளிச் செயல்கள்–

August 9, 2020

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி –

ஸ்ரீ திருக் குருகூர் –
மூலவர் -ஸ்ரீ ஆதி நாதன் –
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்-அபய ஹஸ்தம்
சித்ரை உத்தரம்
உத்சவர் -ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
தீர்த்தவாரி பெருமாள் -ஸ்ரீ மிக்க ஆதிப்பிரான்
தாயார்கள் –ஸ்ரீ ஆதி நாச்சியார் -ஸ்ரீ குருகூர் நாச்சியார்
விமானம் – ஸ்ரீகோவிந்த விமானம்
தீர்த்தம் -ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்தம் –ஸ்ரீ தாமிரபரணி
வ்ருக்ஷம் -ஸ்ரீ திருப்புளிய மரம்
ஆகமம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம்
மங்களா சாசனம் -திருவாய் மொழி -4-10–

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே–4-10-6-

ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–4-10-7-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

உறுவது ஆவது எத் தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத் தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

————–

இரட்டைத் திருப்பதி -ஸ்ரீ தொலை வில்லி மங்கலம்

மூலவர் -ஸ்ரீநிவாசன் –
கிழக்கு நின்ற திருக்கோலம் கார்திகை -ஹஸ்தம்
உத்சவர் -ஸ்ரீ தேவப்பிரான்
தாயார் -ஸ்ரீ அலர் மேல் மங்கை -ஸ்ரீ பத்மாவதி

மூலவர் -ஸ்ரீ அரவிந்த லோசனன்
கிழக்கு -இருந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன்
தாயார் -ஸ்ரீ பூமா தேவி -ஸ்ரீ கரும் கடல் கண்ணி

ஸ்ரீ குமுத விமானம்
ஸ்ரீ வருண தீர்த்தம் -ஸ்ரீ தாமிரபரணி

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

குமுறு மோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-

கரை கொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே–6-5-4-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந் தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந் நெல் ஓங்கு செந் தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-6-5-6-

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-

———–

ஸ்ரீ தென் திருப்பேரை

மூலவர் -ஸ்ரீ மகர நெடும் குழைக் காதர் –
கிழக்கு -இருந்த திருக்கோலம் –
பங்குனி உத்தரம்
உத்சவர் -ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்
தாயார் -ஸ்ரீ குழைக் காதர் வல்லித் தாயார் -ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ பத்ர விமானம்
ஸ்ரீ சுக்ர புஷ்கரணி -ஸ்ரீ சங்க தீர்த்தம்
ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப் பகல் போய்த்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே–7-3-2-

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-

சேர்வன் சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே–7-3-9-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

———–

ஸ்ரீ வைகுண்டம்
மூலவர் ஸ்ரீ வைகுண்ட நாதன், ஸ்ரீ கள்ளப் பிரான்
சித்திரை அஸ்வினி –
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கள்ளப் பிரான்
தாயார் ஸ்ரீ வைகுந்த வல்லி, ஸ்ரீ பூதேவி
தீர்த்தம் ஸ்ரீ ப்ருகு தீர்த்தம், ஸ்ரீ தாமிர பரணி ஆறு
விமானம் ஸ்ரீ சந்திர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ வைகுந்த வல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப் பிரான் ஸ்வாமிநே நமஹ

ஸ்ரீ நம்மாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-4-

எங்கள் கண் முகப்பே யுலகர்களெல்லாம் இணையடி தொழு தெழுந் திறைஞ்சி
தங்க ளன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்த பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்! திரு வைகுந்தத் துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்தி தனுளுமொரு நாள் இருந்திடாய் வீற்றிடங் கொண்டே.–9-2-8-

———–

ஸ்ரீ திருப் புளிங்குடி

மூலவர் –ஸ்ரீ பூமி பாலகர் -கிழக்கு முக -கிடந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ காசினி வேந்தன்
தாயார் -ஸ்ரீ நில மங்கை -ஸ்ரீ மலர் மகள்
ஸ்ரீ வேத சார விமானம்
ஸ்ரீ வருண தீர்த்தம் ஸ்ரீ நீருற்றி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருவாய் மொழி –9-2-/8-3-5-

கொடியார் மாடக்கோளூர் அகத்தும், புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.—திருவாய்மொழி (8-3-5)

கொடிகள் விளங்கும் மாடங்களுடைய திருக்கோளூரிலும், திருப்புளிங்குடியிலும் பள்ளி கொண்டவனே!
உடம்பை அங்கும் இங்கும் அசைக்காமல் இன்று காணும் விதத்திலே மகிழ்ச்சியுடன் யோக நித்திரை கொள்பவனே!
அவதாரங்கள் எடுத்து அடியார்கள் துன்பங்களைப் போக்கிய நோயாலோ நீ பள்ளி கொண்டது?
அல்லது பூமியை அளந்த சிரமத்தாலோ? ஏன் என்று கூறி அருள வேண்டும்.

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திரு வைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

—————

ஸ்ரீ நத்தம்-ஸ்ரீ வர குண மங்கை

மூலவர் -ஸ்ரீ விஜயாசனர் -கிழக்கு முக இருந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ எம் இடர் கடிவான்
தாயார் -ஸ்ரீ வர குண வல்லி -ஸ்ரீ வர குண மங்கை
ஸ்ரீ விஜய கோடி விமானம்
ஸ்ரீ தேவ புஷ்கரணி -ஸ்ரீ அக்னி தீர்த்தம்

மங்களா சாசனம் –ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-1-

————

ஸ்ரீ பெரும் குளம் -ஸ்ரீ திருக் குளந்தை

மூலவர் -ஸ்ரீ வேங்கட வாணன் –
கிழக்கு முக நின்ற திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ குளந்தை வல்லித்தாயார் -ஸ்ரீ கமல வல்லித்தாயார்
ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம் -ஸ்ரீபெரும் குளம்

ஸ்ரீ நம்மாழ்வார்-1-பாசுரம் மங்களாசாசனம் –

கூடச் சென்றேன் இனி யென் கொடுக்கேன்? கோல் வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவினை யாதரித்தே. –8-2-4-

—————

ஸ்ரீ திருக் கோளூர்

மூலவர் -ஸ்ரீ வைத்த மா நிதி —
கிழக்கு முக கிடந்த திருக்கோலம் –
ஆவணி புனர்பூசம்
உத்சவர் -ஸ்ரீ நிஸ்ஷோபவிதன்
ஸ்ரீ குமுதவல்லித் தாயார் ஸ்ரீ கோளூர் வல்லித்தாயார்
ஸ்ரீ சந்த்ர விமானம்
ஸ்ரீ ப்ருகு தீர்த்தம் –ஸ்ரீ தாமிர பரணி
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்