Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஆறு தனியன்கள் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

May 22, 2021

1-ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த தனியன் —

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –

பக்தாம்ருதம்
பத்தராகக் கூடும் –3-6-11-
தொண்டர்க்கு அமுது –9-4-9-என்றபடி

விஸ்வ ஜன அநு மோதனம்
பார் பரவின் கவி –7-9-4-
அடியார்க்கு இன்ப மாரி –4-5-10—என்கிறதைச் சொன்ன படி

ஸர்வார்த்ததம்
எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-என்னும்படி
ஸகல அர்த்த ப்ரதமமாய் இருக்கை –

மிக்க இறை நிலை –என்று தொடங்கி
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறபடி
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாவற்றையும் அறிவிப்பிக்கும் என்கிறபடி –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
குருகூர் சடகோபன் சொல் –1-1-11-என்றபடி

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
ஸஹஸ்ர சாகை -சாம விதமாய்
தத் சாரம் -சாந்தோக்ய உபநிஷத்தாய் –
அதின் சாரம் உத்கீதம் -என்றதாய்
அத்தை யாயிற்று இப்படிப் பாடி அருளிற்று என்றபடி –

வேத அரும் பெருமான் நூல்களை –9-3-3-
வண் தமிழ் நூலாக்கின –4-5-10-படி

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் இறே –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அளவியன்ற அந்தாதி ஆயிரத்தை –1-4-11-
பத்தர் பரவும் –1-5-11-படி சொல்லிற்று –

——

கடலையும் சடகோபன் சொல்லையும் சமமாகச் சொல்லுகிறது –

பக்தாம்ருதம்

விண்ணவர் அமுது உண –பெரிய -6-1-2-என்னும்படி
விண்ணின் மீது அமரர் கட்காய -பெரியாழ்வார் –3-4-10-
தேவ போக்யமான அம்ருதத்தை உடைத்தாய் இருக்கும் அது

இது பாலோடு அமுது அன்ன ஆயிரம் –8-6-11-என்னும்படி
அவனித் தேவரான -8-4-10-
பூ ஸூரர்க்குப் போக்யமான அம்ருதமாய்
ஆரா வமுதத்தை -2-5-5- உடைத்தாய் இருக்கும் –

விஸ்வ ஜன அநு மோதனம்
ஸர்வ ஜன அபிமத ப்ரதமம் ஆகையாலும்
தர்ச நீயமாகையாலும்
ஸமுத்ரம் சர்வ ஜன சந்தோஷ வேஷத்தை யுடைத்தாய் இருக்கும் –

இதுவும் முதல் பத்தர் வானவர் என் அம்மான் பார் பரவ –ஆச்சார்ய ஹ்ருதயம் –187-என்னும்படி
சேஸ்வர விபூதி போக்யமாய் இருக்கும் –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
அதில் அம்பஸ்ஸூ அகஸ்த்ய வாங் மயமாய் இருக்கும்
இதில் சந்தஸ்ஸூ ஸ்ரீ சடகோப வாங் மயமாய் இருக்கும்
திரு வாய் மொழி இறே

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
அது ஸர்வ ஸாகா ஸாரமான சந்தந ஸாகா சமாகத்தை சமீபத்தில் உடைத்தாய் இருக்கும் –
இது ஸர்வ வேதா ஸாரமான உபநிஷத்துக்கள் திரட்சியாய் இருக்கும் –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அந்த சாஹரம்
அஞ்சலிக்கு பிராங் முக க்ருத்வா -என்னும் படி
அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும்
வண் தமிழ் நூல்களான இது -4-5-10-சடகோபன் பாட்டு என்றவாறே
நாடு அடைய கை எடுக்கும்படியாய் இருக்கும் –
நமாம் யஹம் -என்று நாடு எல்லாம் அனுசந்திக்கக் கடவர்கள் இறே

——–

வந்தே ராமாயண ஆர்ணவம் -என்னுமா போலே

ஸ்லோக ஜால ஜலாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம்
காண்ட க்ராஹா மஹா மீநம் வந்தே ராமாயண ஆர்ணவம்

அங்கே சதுர் விம்ச ஸஹஸ்ரம்
இங்கே சீர்த் தொடை ஆயிரம் -6-7-11-
தீர்த்தங்களாய் இருக்கும் -7-2-11-

அங்கு ஐநூறு சர்க்கம்
இங்கு பத்து நூறு -6-7-11-என்னும்படி இருக்கும்

அங்கு ஷட் காண்டமாய் இருக்கும்
இங்கே ஷட் பதார்த்த ப்ரதிபாதகமாய் பத்துப் பத்தாய் இருக்கும்

அது ராமாயண ஆர்ணவம்
இது திராவிட வேத சாகரம்

அது ரகு வம்ச சரிதமாய் இருக்கும்
இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமாய் இருக்கும் –7-2-11-

அது வால்மீகிர் பகவான் ருஷி என்னும்படி வால்மீகி ப்ரோக்தம்
இது குருகூர்ச் சடகோபன் சொல்லாய் –9-6-11-இருக்கும் –

அது மஹா பாதக நாஸினமாய் இருக்கும்
இதுவும் அருவினை நீறு செய்யுமதாய் இருக்கும் —3-5-11-

அது ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம் -என்று பலமாய் இருக்கும்
இதுவும் -வானின் மீதி ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே –8-4-11- என்று
திருவடியே அடைவிக்கும் -4-9-11-

————-

2-ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

ஆழ்வார் திருவடிகளை
அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து
ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –

வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20-
உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –

திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —

இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி —
பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே

திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன் -5-6-11- என்று
நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –

தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –

மருவினிய வண் பொருநல் என்றும்
மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே
இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை
நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –

ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து

அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு -என்கை

குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –

அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்

விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே

அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்

திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்

ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்

அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று

இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —

குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது –

இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –

ஆக மூர்த்தியில் பண்ணின தமிழனா படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –

திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம் –

திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –

இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —

——-

3-ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திருவடிகளே
ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும்
போருகை —
பேணுகை -விரும்புகை –

யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்

வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே

இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-

இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –

இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –

எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி
எனக்கு ஜனகரான ஆழ்வார் –

பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –

யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று –

———-

4-ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை
விவரியா நின்று கொண்டு
திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி
ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று
எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

அதாவது
இவர் தான் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –
இவரை அர்த்திக்கிறது –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய
தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல்
இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

————

5- ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில்
திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும்
வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்

வான் திகழும் சோலை -ஆவது
ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ் -திருமாலை –14-
மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்
வானை யுந்து மதிளாய் இருக்காய் –திருமாலை -9-10-4-

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் –7-2-11-என்னக் கடவது இறே

அது தான்
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா –என்னக் கடவது இறே —
அத்தாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் –
சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

ஆகிற அதில் பத்து அர்த்தமும்
பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற
கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே –

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

—————

6- இதுவும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம் –என்று
சகல வேத ஸங்க்ரஹமான திரு பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகத்தை
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் –8-8-11-என்னும்படி
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருமாலவன் கவியான –திரு விருத்தம் –48-
திருவாய் மொழி பிரபந்தம் ப்ரதிபாதித்த பிரகாரத்தை இத் தனியனிலே சொல்லித் தலைக் கட்டுகிறது –

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல் —

மிக்க இறை நிலை–யாவது
இறை நிலை உணர்வு அரிது -1-2-6-என்னும் படியான சர்வ ஸ்மாத் பரத்வம்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம்
நாராயண பரஞ்சோதி
தத்வம் நாராயண பர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –8-1-5-
தேவ தேவனே -3-6-2-
பரஞ்சோதி நீ பரமாய் –2-1-3-
மிகுஞ்சோதி -2-2-5-
முழுதுண்ட பரபரன் –1-1-8-
வானோர் இறை –1-5-1-
கழி பெரும் தெய்வம் –திரு விருத்தம் –20-
பெரும் தெய்வம் -4-6-2-
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-
திருவுடை அடிகள் -1-3-8-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் –1-6-9-
திரு மா மகள் கேள்வா தேவா –6-10-4-
என்றும் சொல்லப்படுகிற சர்வ ஸ்மாத் பரனை ஆயிற்று -மிக்க இறை என்கிறது –

திரு மங்கை நின்று அருளும் தெய்வம் -ராமா -57-
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்–முதல் -64 –
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -நான்முகன் -53-
என்னக் கடவது இறே
இது வாயிற்று பர ஸ்வரூபம் –

இறை நிலையாவது
ஸுலப்யத்துக்கு அவ்வருகு இல்லாதபடி முடிந்த நிலமான ஆஸ்ரய பரதந்த்ரத்தோடே நிற்கிற
அர்ச்சாவதாரம் என்கை –
அத்தை ஆயிற்று
எளிவரும் இயல்வினன் –1-3-2- இத்யாதியில் சொன்னது –
இது இறே ஈஸ்வர ஸ்வரூப யாதாத்ம்யம் –

மெய்யாம் உயிர் நிலை–யாவது
உருவியந்த இந்நிலைமை –1-2-6-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் –1-2-10-
உணர்வைப் பெற ஊர்ந்து–8-8-3-
நின்ற ஒன்றை –8-8-4-
உயிர் வீடு உடையான் –1-2-1- என்றும்
ப்ரக்ருதே பரனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஞான குணகனாய்
நித்யனாய்
ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனான படியைச் சொல்லுகிறது

மெய்யாம் உயிர் என்கையாலே
ஸத்யஞ்ச–என்றும்
உள்ளதும் -1-2-4- -என்றும் –
மெய்ம்மையை —திருமாலை –38-என்றும் –
சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா வத்திலும் காட்டில் ஆத்ய ஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று –

அன்றிக்கே
மெய்யாம் உயிர் நிலை -என்கையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடி
உள்ளவதன் உரு –சரீர சரீரி பாவம் சொல்லிற்று ஆகவுமாம்

உயிர் நிலை யாவது
மெய்ம்மையை மிக உணர்ந்து —திருமாலை –38-
என்கிறபடியே
தம் அடியார் அடியோங்கள் –3-7-10-என்றும்
தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மானிசராய் என்னை ஆண்டார் -8-10-3- என்றும் –
ததீய பர்யந்தமான நிலை —
இது இறே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யம் –

தக்க நெறி–யாவது
அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயம்
அல்லாதது
தகாத நெறியாய் இறே இருப்பது –
நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திரு –6-என்னக் கடவது இறே –
நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திரு –5-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் –9-1-10-

சரீர ரக்ஷணம் சரீரிக்கே பரம் இறே
மாஸூச
என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்று இறே அவன் வார்த்தை

எம்மை ஆளும் பரமா –3-7-1- என்று
ததீய சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-என்றவர்களே உபாயமாகவும் வேணும் இறே –
தக்க நெறி
ததீய உபாயமாகவுமாம் –
உபாய யாதாத்ம்யம் இதுவே இறே –

தடையாகித் தொக்கி இயலும் ஊழ் வினை–யாவது
விரோதியாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராரப்த கர்மம் -என்கை –
முன் செய்த முழு வினை –1-4-2-
பாரமாய பழ வினை –அமல –4-என்னக் கடவது இறே

ஊழ்மை –பழமை
வினை -கர்மம்

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் –திரு விருத்தம் –1-
அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம்
பகவத் ஸ்வரூப திரோதாநகரி இறே தேகம்

விரோதி ஸ்வரூப யாதாத்ம்யம்
அஹங்கார –மமகாரங்கள்
யானே என்னை அறிய கிலாத யானே என் தனதே என்று இருந்தேன் –2-9-9-
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து –1-2-3-
பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
முன்னமே –திரு விருத்தம் –95-
என்னும்படி அநாதியாய்ப் போருவது –

இது தான் அனுகூலர் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்குமதாய் இருக்கும் –
அது தான் தேஹ ஆத்ம பிரம மூலமாகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில்
ஜென்ம நிரூபணத்தில் மூட்டி -அநர்த்தத்திலே பர்யவசிக்கும் –
அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –ஸ்ரீ வசன பூஷணம் –195-என்றார் இறே –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்பு செய்வார் சென்ம நிரூபணமும் ஆவிக்கு நேரே அழுக்கு -ஸப்த காதை –5-
என்று ஆயிற்று அதன் குரூரம் இருப்பது –
அமரவோரங்கம் இத்யாதி –திருமாலை

வாழ் வினை-யாவது
வாழ்வை -என்றபடி –
வாழ் வினை -என்று முழுச் சொல்
வாழ்வாவது
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று –3-2-4-
வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர் –3-3-11-என்றபடி –

தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –2-9-4-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -10-3-8-
என்று அவன் உகந்த படியே செய்து ஆனந்திக்கை –

அன்றிக்கே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்கிறபடியே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை —10-9-11-
என்றும் சொல்லுகிற பரம ப்ராப்யம் ஆகவுமாம் –
இதுவே இறே ப்ராப்யத்தின் எல்லை நிலம் –

ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் —
இந்த அர்த்த பஞ்சகத்தையும் ஓதுகையாவது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –இத்யாதியில்
முந யஸ்ய மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந வதந்தி –என்கிறபடியே —
சடகோப முனியான இவர் ஸ்ரீ ஸூக்தியும்

இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம்
தொழுது எழு என்று பஞ்சகத்தையும் இறே அடியிலே யாயிற்று சொல்லிற்று –ஆச்சார்ய ஹ்ருதயம் –212–

உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒரு கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும் என்று இறே
ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்திகள் –

குருகையர் கோன் யாழின் இசை வேதம் ஆவது –
ஸம்ஸ்க்ருத வேதம் போலே தான் தோன்றி இன்றிக்கே
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் -என்னும்படி
ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட அதிசயத்தை உடையதாய் —
யாழின் இசையே –5-3-6- என்று
கான ஸ்வரூபியான ஸர்வேஸ்வரனை ப்ரதிபாதிக்கையாலே
பண்ணார் பாடல் –10-7-5-
பண்புரை இசை கொள் வேதம் –ஆச்சார்ய ஹ்ருதயம் –50-
என்னலாம் படி
பண் கொள் ஆயிரம் –3-6-11-
என்று சாம வேதம் போலே சரசமாய் இருக்கை –

இதனுடைய வேத சாம்யம் எல்லாம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் விசதமாக அருளிச் செய்துள்ளார் —
அதிலே கண்டு கொள்வது –

விண் மீது இருப்பாய் –6-9-5–என்கிற பாட்டிலே பர ஸ்வரூபம் காணலாம் –

ஆத்ம ஸ்வரூபம் -அடியார்ந்த வையத்திலே –3-7-10-காணலாம்

உபாய ஸ்வரூபம்–உழலையிலே -5-8-11- காணலாம் —

விரோதி ஸ்வரூபம் –அகற்ற நீ வைத்த –5-6-8- என்கிறதிலே காணலாம்

பலம் -உற்றேனிலே —-10-8-10-உணரலாம்

அர்த்த பஞ்சக ஞானத்தாலே இறே
அந்தமில் பேர் இன்பத்து இன்புறுகையும் -என்று அறுதி இட்டு அருளிற்று –

எண் பெருக்கு அந்நலத்திலும் –1-2-10-
எனக்கே ஆட் செய் –2-9-4-
ஒழிவில் காலம் –3-3-1-
வேங்கடங்கள் –3-3-6-
சீலமில்லா –4-7-1-
களைவாய் –5-9-8-
ஞாலத்தூடே –6-9-3-
என்கிற பாட்டுக்களிலும் —

திரு மந்த்ரத்திலும் காணலாய் இருக்கும் —
அகாரத்தாலும்
மகாரத்தாலும்
ரக்ஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லி

சதுர்த்தியாலும்
உகாரத்தாலும்
ரக்ஷண ஹேதுவான பிராப்தியும் பலத்தையும் சொல்லுகிறது –

ச விபக்தி கதமான நாராயண பதத்திலே
சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
திருமந்திரம் –அர்த்த பஞ்சக ப்ரதிபாதகம் என்னும் இடம் ஸ்பஷ்டம் இறே

ஆகையாலே திருவாய் மொழியிலே பிரதிபாதிக்கிற அர்த்தம் எல்லாம் அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான
திருமந்த்ரார்த்தம் என்னத் தட்டு இல்லை

ஸ்ரீ பதி ஸ சேதனஸ் யாஸ்ய –பன்னீராயிரப்படி பிரவேசம்
என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்த அர்த்த பஞ்சகமும்
இதில் இரண்டு பத்தாலே ஒரோர் அர்த்தம் ப்ரதிபாதிக்கப் படுகிறது -என்று
திருவாய் மொழியின் பிரவேசத்தில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் -/ ஸ்ரீ திருக்குருகூர் வரி -ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்–

March 26, 2021

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. ( ஸ்ரீ திருவரங்கக் கலம்பகம், ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் )

மறைப் பாற்கடலை…..
ஆஹா ! அழகு. மறை என்னும் வேதாந்தமாகிய பாற்கடலை. ஏன் பாற்கடல்?
ஆமாம் வேதாந்தத்தில் உறைபவன் யார்? திருமால் அல்லவோ? திருமால் உறையும் இடம் திருப்பாற்கடல்தானே?

திருநாவின் மந்தரத்தால் கடைந்து…..
அற்புதம்! திருநா..ஆம்..மறையாகிய பாற்கடலைக் கடையும் நாவு திருநாவுதானே?
திருநாவு என்பது மந்தர மலை…..மறையாகிய பாற்கடலைக் கடைய….

துறைப்பாற்படுத்தி….
என்ன கருணை! வெறுமனே கடைந்து அள்ளிவிட்டுப் போகாமல், என்றென்றைக்கும், எந்நாட்டவர்க்கும், பின் வருவோர்க்கும்
பயன்படும் வண்ணம் அதன் பொருள், உள்கருத்து, உள்மறை என்று அனைத்தும்
நன்கு பயன் கொள்ளும் வண்ணம் தமிழ் யாப்பின் துறைகளில் யாத்து….

ஆனால் எங்கே இந்த திவ்ய அமுதம் சேமிக்கப்பட்டு இருக்கிறது?
இந்திர லோகத்து அமுதம் கொணர்வதற்கே கருடனே அவ்வளவு போர் செய்ய வேண்டியிருந்தது.
இந்த அமுதமோ அதைப் போன்று வெறும் அமுதம் அன்று. திவ்ய அமுதம் !
என்ன கஷ்டமோ பெறுவதற்கு? எங்கு உள்ளது இந்த அமுதம்?

தமிழ் ஆயிரத்து…..

என்ன? தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். தமிழ் ஆயிரத்து என்றால் முடிவற்ற இனிமையின் உள்ளே….
இனிய தமிழ்ப் பாடல் ஆயிரத்தின் உள்ளே….அதாவது….ஆமாம்….
திருவாய்மொழி என்னும் ஆயிரம் இன் தமிழ்ப்பாவின் உள்ளே சேமித்துவைக்கப் பட்டிருப்பது

இன்சுவை அமிர்தம் —
நிச்சயம் கிடைக்காது. வேறு வேலை பார்ப்போம். இவ்வளவு சிறந்த அமிர்தத்தைத் தமிழாயிரத்தில் தேக்கி
வைத்துப் போய் எடுத்துக்கொள் என்றால்…..யார் போய் எடுப்பது?
போய்ப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்ததுபோல் தேமா புளிமா என்று சுற்றிச் சுற்றி வந்துவிட்டு, அங்கு ஒன்றுமே இல்லையே…..
போய்ப் பார்த்தேனே….வெறுமனே அசை, சீர், தளை, பாவினம் இவ்வளவுதான் உள்ளன.
அங்கு போய் அமுதத்தை எங்கு ஒளித்து வைக்க முடியும்? என்று வந்துவிடுவோம்.

“இல்லை. அங்குதான் இருக்கிறது. அந்த அமுதத்தை அருந்த ரசிகர்களாகிய புவி பாவுகர்கள்,
திருநாரணன் தன் தொல்லடியார் கூடுவார்கள். யாரால் என்ன வருகிறதோ என்று காரணமே இல்லாமல்
தன் பிரேமையின் காரணமாக வெறுமனே சீறிக்கொண்டிருக்கும் பணாமுடி ஆயிரமும்,
தன் திருவுடலெங்கும் அழகிய புள்ளிகள் திருஷ்டிப் பொட்டுகளாய் விளங்க
அந்தத் திருவநந்தன் திருவணையில் பள்ளிகொள்ளும் பிரான் களிக்க,
அந்த அடியார் ஈட்டம் களித்து அருந்தும் படியாக ஒருவர் யாருடைய கோப்பையும் குறைவுபடாமல் இருக்கும்படியாக
அந்தத் திவ்ய இன்சுவை அமிர்தத்தை ஊற்றி நிறைத்தவண்ணம் நிற்பார்.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை பொருள் சுரக்கும் அமுத்தீஞ்சொல் பாசுரங்களாய்
அவர் ஊற்றும் அந்த திவய இன்சுவை அமிர்தமே நீ தவித்த விடாயாற்றி.”

நிழல்? நிழல்? குரலே….நிழல்?

“ஹ ஹ…இன்னுமா தெரியவில்லை? அப்படி நிறைப்பவர் யார் என்று பார்.
அந்த நம்மாழ்வாரின் கழல் அன்றி வேறு நிழலே இல்லை.”

———-

கூடற்புராணத்தில் நாதமுனிகளைப் போற்றிப் பாடப்பட்ட,
அண்டகோளத்தாரென்னும் ஆரியத்தமிழாலன்று
தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர் தாமேசிற்பங்
கண்டதோர் வடிவாற் பேசத் திரைப்புறத்திருந்திக்காலத்
துண்டெனப் பதின்மர் பாடல் உத்தரித்தவர் தாள் போற்றி.

என்ற பாடலும், நம்மாழ்வார் காலத்தில் தமிழ்ச்சங்கமொன்றிருந்ததையும்,
சங்கப் புலவர்களை அவர் வாதிட்டு வென்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்தக் குழுமத்தில் முன்பு பேசப்பட்ட, ‘அண்டகோளத்தாரணுவாகி’ என்று தொடங்குகிற பாடல்,
சங்கத்தாரை எதிர்த்து நம்மாழ்வார் பாடியதாக கருதப்படுகிறது.

——–

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

———-

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37

திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்

—————–

கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.

சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்

————

நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே!
அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி,
மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார்.
நூல் – திருக்குருகூர்வரி . பாடியவர் – கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்

தொடக்கமே பாருங்கள் –

கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை !
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி
அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

_____________________

நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற
தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

————

நிலைவரி –

கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்
அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !
அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே
இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !

———

முரிவரி –

பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே
திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே
பருமணி வடவரையே பணையிணை யிருகரமே
இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே

———

திணை நிலைவரி –

தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்
என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!
மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்
என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!

___________________

காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்
கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !

————-

மயங்கு திணை நிலைவரி –

மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து
பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!
மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்
டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?

—————-

வேறு

மாழ்கும் மாய மயக்கில் வந்தென்
தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்
தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்
ஆழும் அன்பை அறியார் அல்லர்

———-

முகமில்வரி —

சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!
சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !
ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,
சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!

வரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால்
அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -7–

February 25, 2021

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம்
பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே.

பதவுரை

நளிர்மதி சடையனும்–குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும்-பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா-தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும்-எல்லாப் பிராணிகளும்
யாவகை உலகமும்-எல்லா வுலகமும்
அகப்பட-உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்
மலர் சுடர் பிறவும்-சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்
சிறிது-சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில்
மயங்க-கலசும்படியாக
ஒரு பொருள் புறப்பாடு இன்றி-ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி
முழுவதும்-எல்லாப் பொருள்களையும்
அகப்பட சுரந்து-உள்ளேயிட்டு மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த-அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட
எம்-எமக்கு ஸ்வாமியாய்
பெரு மா மாயனை அல்லது-மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து
மற்று ஒரு மா தெய்வம்–வேறொரு க்ஷுத்ர தேவதையை
யாம் உடையமோ–நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்)

ஸகல சேதநர்களும் ஸ்வரூப ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து
அவனுக்கே வழுவிலா வடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே
தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண் கட்டிக் கொள்ளுகிறார்களே!
அந்தோ! இஃது என்ன அனர்த்தம்!
என்று கீழ்ப்பாட்டில் கவலைப்பட்டார்.

ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற் போகவே,
‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக் கேடாவது கெடட்டும்
நாமும் அவர்களைப் போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப் பட்டிருக்கப் பெற்றோமே!
என்று தம்முடைய மன வுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.

ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப் போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி
எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப் பிழைப்பவர்களே யொழிய
பிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி
‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக் கிடந்தனை காண்மின்‘ என்கிறார்.

எல்லாத் தெய்வங்களையும் உய்யக் கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி
மற்று யார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்.

நளிர்மதிச் சடையனும் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயல் –
“ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் துர்மானத்தாலே ஸுக ப்ரதாநன்
என்று தோற்றுபடி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்திரனை ஜடையிலே தரித்த ருத்ரனும்“ என்று.

இதில்“ தாழை மடலைக் கீறி“ இத்யாதி த்ருஷ்டாந்த வாக்யத்திற்குப் பொருள் யாதெனில்
உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூலி ஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது
பிறர்க்குத் தெரியாமைக்காகவும் தாழம்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூட்டிக்கொண்டு திரிவர்களாம்,
அப்படியே சிவ பிரானும் தான ஸம்ஹாரக் கடவுளென்பதையும்
ஸாதனாதுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காவும்
‘இவன் உல்லாஸமாக இருக்கக் கூடிய ரஸிகன்‘ என்று பலரும் நினைத்துக் கொள்வதற்காகவும்
அழகிய சந்திர கலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு விநோதமாக அருளிச் செய்தபடி.

இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்திரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி
அலங்காரங்கள் செய்து கொண்டு அதனால் மேனி நிறம் விறு பெற்றிருப்பனாதலால்
தளிரொளி என்று விசேஷிக்கப்பட்டான்.

ஆக முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி
முதலா யாவகையலகமும் யாவருமகபட என்றார்.

எம்பெருமானது திருவயிற்றிலுள்ளே அடங்கிக் கிடந்து ஸத்தை பெற்ற பதார்த்தங்களை
தாம் வாய் கொண்டு சொல்லுவதும்
நமக்குப் பெரும் பாக்கியமென்றோ என்றெண்ணி
நில நீர் தீ கால் சுடரிருவிசும்பும் மலர்சுடர் என்று மீண்டு விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.

சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.

உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,
சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொருவகை.
மற்றுங் கண்டு கொள்க.

ஆக எல்லாப் பதார்த்தங்களையும் ஒன்று தப்பாமல் திரு வயிற்றினுள்ளே அடங்கிக்கொண்டு
“பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின், மேலன்று நீவளர்த்த மெய்யென்பர்“ என்றபடி
சிறு குழந்தை வடிவமாகி முகிழ் விரியாத சிற்றாலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்தி வாய்ந்த
ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் தெய்வமாகக் கொள்வோம்.

“நெற்றி மேற்கண்ணானும் நிறைமொழிலாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமர்ரோடும்,
வெற்றிப்போர்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,
கொற்றப்போராழியான் குணம் பரவாச்சிறுடிதாண்டர் கொடியவாறே“ என்றும்,
“அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டு மிழந்த எச்சில் தேவர், அல்லாதார் தாமுளரே“ என்றும்
(பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வார்ருளிச்செய்த பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கவை.

“மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர்?—
அங்கண்ஞாலமுண்ட போது வெள்ளிவெற்பு அகன்றதோ?
ஆதலாலரங்கனன்றி வேறு தெய்வமில்லையே“ என்ற பிள்ளைப் பெருமாளையங்கார்
விடுதிப் பாசுரமும் குறிக்கொள்ளத்தக்கது.

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர்,
இப் பிரபந்தத்தில் அப்படி அருளிச் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு சிலர் சொல்லுவதாவது –
இத் திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்களை யுடைய பிரபந்தமாயிருந்த்தென்றும்,
காலக் கிரமத்தில் சில பாசுரங்கள் லோபித்து விட்டன வென்றும் சொல்லுகிறார்கள்.

நம்மாழ்வாருளிச்செய்த நான்கு பிரபந்தங்களும் இதற்கு அடுதத்தான பெரிய திருவந்தாதியிலும்
ஆழ்வாருடைய திருநாமம் அருளிச் செய்யப்பட்டிருக்க வில்லை யாகையால் இது சேராது

அந்தாதித் தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்
முடிவு பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றாக அமையும்படி அருளிச் செய்யப்பட்டிருப்பது போல்
இப்பிரபந்தத்தில் அமையாமையால் இதைக் கொண்டு இதில் சில பாசுரங்க் லோபித்து விட்டவென்று சொல்லுவர் சிலர்,
அதுவும் சேராது

ஈற்றுத் தமிழர் சொல்லி வைத்திருக்கையால்
இப் பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று
சொல்லாமத்தனை யொழிய பாசுரங்கள் லோபித்தன என்றால் பொருந்த மாட்டாது.

ஆகவே இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.

———————————————–————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -6–

February 25, 2021

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

பதவுரை

உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்தும்
இடந்து-ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு-(மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து-பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து-(பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை-ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி-தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல-வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம்-தேவதைகளை
பேணுதல்-ஆராதிப்பது
தனது-தன்னுடைய
புல் அறிவாண்மை–நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு–
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா-ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும்–தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து–இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும்–(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப–ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை–இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி-(அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு-ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல்-அநாதியாய்
மா-மஹத்தாய்
மாயம்-ஆச்சரியமான
பிறவியுள்-ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா-ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து-பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு-இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)

“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க் கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப் பாட்டிலருளிச் செய்த ஆழ்வார்
தம்முடைய கொள்கைப் படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு
உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார்.
க்ஷுத்ர பலன்களை விரும்பி க்ஷுத்ர தேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப் பட்டன.
பரிதாபம் பொறுக்க மாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று
வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார்.

இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில்,
இவர் தாம் கீழ்ப் பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் சென்றதோ,
அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்.

இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!
இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யா நின்றது.
பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும்
குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க,

அவளைத் திரஸ்கரித்து விட்டு
உபயோகமற்றவொரு மணைக் கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே
இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு
ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே!
இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ?

எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்ல வேண்டுமோ?
இறகு ஒடிந்த பக்ஷிகளைப் போலே கூட்டினதும், இந்திரியங்களை யிழந்து கிடந்த இவ் வாத்துமாக்களைக்
கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன இந் நிலவுலகத்தை
மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப் போக
நேர்ந்த காலத்துத் திரு வயிற்றிலே வைத்து ஸம் ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும்,
மாவலி யிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின் கீழ் ஆட்படுத்திக் கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லி முடியுமோ?

இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம் பற்றி யிருப்பவனன்றோ திருமால்.
அவனைத் தவிர வேறொரு முழுமுதற் கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ?
நன்றி யறிவுள்ளவர்கள் அப்பெருமாலுக் கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம்,
அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்ய மாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற
இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்?
அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்ன வென்றால்
ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொண்டு நைவேத்யஞ் செய்வதும்
இவை போல்வன ஜீவ ஹிம்ஸைச் செயல்களேயாகும்.

இதற்குப் பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால்,
இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப் பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம்.
உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம்.

இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி
இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித் திரிகின்றதே!
அநியாமாய் அநர்த்தப் பட்டுப் போகின்றதே!
இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.

ஈன்றோளிருக்க மணை நீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர்
பெற்றதாயிருக்க மணையடியொற்றியதே. மணை நீராட்டி –
மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.

‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல்
மலை காட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம்.
ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால்
அத் தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது
இடைக் காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடந்து வருகின்றதாம்.
அதனைத் திருவுள்ளம் பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று சிலர் சொல்லுவர்.

புடைப்பலதானறி தெய்வம் பேணுதல் –
புடை என்றது ஏதோவொரு பக்கம் என்றபடி,
வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்ய கர்ப்பன் என்றும்
சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது
அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது.
ஆனது பற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி
அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.

தனது என்பது ‘தானது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக் கிடக்கிறது.
‘புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது
புல்லறிவாண்மையாவது அவிவேகம் கொல்வன முதலா அல்லன –
இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில்
“நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும்,
“நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும்,
“அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும்,
“ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும்
அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.

இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து,
தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம்,
ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம்.
பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி,
வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -5–

February 24, 2021

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப,வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?

பதவுரை

மா முதல் அடி போது ஒன்று-(உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி–நில மட்டமாகப் பரப்பி
மண் முழுவதும்–பூமியை யெல்லாம்
அகப் படுத்து–திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று–அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு-பிரம தேவனுடைய உலகமானது
வியந்து உவப்ப–ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும்
வானவர்–மற்றுமுள்ள தேவர்கள்
முறை முறை–சாஸ்திர விதிப்படி
வழி பட–ஆராதிக்கும்படி யாகவும்
விண்செலீஇ நிறீஇ–ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி
தாமரைக் காடு மலர் கண்ணொடு–தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும்
கனி வாய் உடையதும் ஆய்-கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன–பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற
முடி–திரு வபிஷேகத்தை யுடையனாயும்
பல பல கற்பகம் காவு அன்ன–பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே
தோற் ஆயிரம் தழைத்த–ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள
நெடி யோய்க்கு அல்லதும்–பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்)
உலகு அடியதோ–இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ?

(மாமுதல்)
எம்பெருமான் உலகமளந்த சரிதையை அநுஸந்தித்து,
‘இப்படியும் ஒரு ஸெளலப்யமும் ளௌசீல்யமும் உண்டாவதே!‘ என்றீடுபட்டு
ஆச்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறிக் காரியஞசெய்கிற மஹோபகாரகனாகிய பரமபுருஷனுக் கன்றி
வேறு யாருக்கு இவ் வுலகம் அடிமைப்பட முடியும்?

எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி
“அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்று“ என்று மங்களாசாஸநம் பண்ணுகை ஏற்குமே யன்றி
அவன் திருவடிகளின் கீழ் துகையுண்ட சிலரை நோக்கி
‘ஜய விஜயீபவ‘ என்னக் கூடுமோ வென்கிறார்.

மா முதல் –
என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்பதன்றி அண்மை விளியாகக் கொண்டு
உலகங்கட்கெல்லாம் ஆதி காரணனான எம்பெருமானே! என்று
ஸம்போதநமாக உரைத்தலும் ஒக்கும்.

போது –புஷ்பம், அதாவது
தாமரைப்பூ
அடிப்போது
பாதாரவிந்தம்.
இதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்டானாயிற்று.

செலீஇ- செலுத்தி சொல்லிசையளபெடை.
“வானவர் முறை வழிபடநெறீஇ“ என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர்.
நிறீஇ என்ற பாடமும், நிறுத்தி என்று அதற்குப்பொருளும் அஸ்மதாசார்யர் அருளிச் செய்த்து.
நெறீஇ என்ற பாடமும் பொருந்தும், வியாக்கியானத்திற்கும் இணங்கும்.
வானவர் – தேவர்கள்,
நெறீஇ – நல்வழிப்பட்டு,
முறை முறை – சாஸ்த்ர விதிப்படி,
வழிபட – ஆராதிக்கும்படியாக என்று பொருளாகக் கடவது.
நெறீஇ – இறந்தகால வினையெச்சம். நெறி – பகுதி,
இ-இறந்த கால வினையெச்ச விகுதி,
இகரம் ஈகாரமானதும் அளபெடுதத்தும் விகாரம்.
நான்முகப் புத்தேள் –புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர் நான் முகன் – புத்தேள், நான்முகப்புத்தேள் பிரமதேவன் என்றபடி.
அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது – அவனுடைய நாட்டிலே உள்வர்கள்
‘தாமரை போல் பரம போக்யமான ஒரு திருவடி இங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே!‘ என்று
ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி.

தாமரைக்காடு என்று தொடங்கி உலகளந்த பெருமானுடைய சில அவயவங்களையும்
திருவபிஷேகத்தையும் வருணிக்கிறது.
இப்படி விலக்ஷணனான பரமபுருஷனுக்குத் தவிர மற்று யார்க்கேனும் அடிமைப்பட உரியதோ இவ்வுலகம்?

நெடியோன் என்பதன் முன்னிலை நெடியோய் என்பது.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -4–

February 24, 2021

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.

பதவுரை

யாவகை உலகமும்–எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும்–எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா–இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து-கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம்–எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி-பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று-நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி-முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
கடவுள்–ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே–(உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஊழி ஊழி தோறு ஸர்வ காலமும்
ஓவாது–இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்-‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.

(ஊழிதோறூழி)
கீழ்ப் பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று
பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோ ரதித்தார்,
பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார்,
அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு… உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று
எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்,

அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம்,
இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக் கொண்டிரா நின்றார்கள்.
இது மிக அழகாயிரா நின்றது
இப்படிப்பட்ட போது போக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு,
அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும்
எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார்.

“பன்மைப் படர் பொருளாதுமில் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி
நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம்
இங்கு ‘அநுஸந்திக்கத்தகும்.

சேதந வர்க்கங்களிலும் அசேதந வர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹா ப்ரளயங் கோத்த காலத்தில்,
தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக் கிடப்பவையான
ஜீவ வஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

தனி வித்து ஒரு தானாகி –
தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.
வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்க வேணுமானால் மேற் சொன்ன முக்காரணங்களும் அமைய வேண்டும்,
பானைக்கு மண் உபாதான காரணமென்றும்,
சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரி காரணமென்றும்,
குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்த காரணமென்றும் சொல்லப் படும்.

கார்ய வஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில்
பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதான காரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்?
என்று கேள்வி பிறக்குமே,
எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை.
இஃது இங்கு விரிப்பிற் பெருகும்.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி –
“மேலென்றது பண்டென்றபடி,
வருமெறது போனவென்றபடி.

அரும் பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும்.
இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால்
தானாகவே வந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெற முடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இரு வகைப் படும்.
எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரக ஸ்ருஷ்டியாம்,
ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம்.
அண்ட ஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதலால் அது அத்வாரக ஸ்ருஷ்டி இவ் வருகுள்ள வற்றை
நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரக ஸ்ருஷ்டி.

இதைச் சொல்லுகிறார் மேல்
தெய்வ நான்முகக் கொழு முளையீன்று என்று.
கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான்
கொழு முளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி.
இப்பாலுள்ள கார்யவர்க்கங்களை யெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்றபடி
பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தானனாதலால்
தேவ பல நுகலி என்றும் அருளிச் செய்தார்.

ஆக, ஸத்வாரக ஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகல வஸ்துக்களுக்கும் மூல கந்தம் திருநாபி யாகையாலே
மூவுலகம் விளைத்த வுந்தி என்றார்.
இப்படிப்பட்ட திருவுந்தியை யுடைய மாயக் கடவுளுண்டு –
ஆச்சரியமான ஞான சக்திகளுடையனான ஸர்வேஸ்வரன்
அவனுடைய திருவடிகளை, ஊழி தோன்றி யோவாது வாழிய வென்று யாக தொழ விசையுங்கொல்.

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்.

வாழிய – வியங்கோள்வினை முற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -3–

February 24, 2021

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர் விளங் ககலத்து
வரை புரை திரை பொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தட வரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோறூழி யோவாதே?

பதவுரை

மூன்று உலகம்–மூவுலகங்களும்
நெறிபட–நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு–திருவுள்ளம் பற்றி,
உடன் வணங்கு தோன்று புகழ்–அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய்
ஆணை மெய் பெற நடாய்–தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி–மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்
சுடர் விளக்கு அகலத்து–திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய்,
வரை புரை–மலை போன்ற
திரை-அலைகள்
பொரு–எறியப் பெற்றதும்,
பெரு வரை வெருவர–குல பர்வதங்களும் அஞ்சும்படியாக
உரம் முரல் ஒலி மலி–இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும்
நளிர்-குளிர்ச்சியை யுடையதுமான
கடல்-கடலில்
படம் அரவு அரசு உடல் தட வரை–படங்களை யுடைய ஸர்ப்ப ராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே
சுழற்றிய-கட்டிச் சூழற்றினவனாய்,
தனி–அத்விதீயனான
மர தெய்வம்–தேவாதி தேவனுடைய
அடியவர்க்கு–பக்தர்களுக்கு
நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல்-நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா.

(குறிப்பில் கொண்டு)
பகவத் பக்தியைப் பற்றிப் பேசினார் கீழ்ப் பாட்டில்
பகவானோடு நின்று விடாமல் பாகவதாளவுஞசென்று பக்தி பண்ணுகை ஸ்வரூபமாதலால்
அப்படிப்பட்ட பாகவத பக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாமல் சாச்வதமாக உண்டாகக் கூடுமோவென்று
அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில்.

குறிப்பில் கொண்டு என்று தொடங்கித் தனிமாத் தெய்வம் என்னுமளவும்
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைச் சொல்லுகிறார்.

உலகம் மூன்ற நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ் –
தன்னாலே படைக்கப்பட்ட மூவுலகங்களும் தீ வழியில் செல்லாமல் நல் வழியில் படிந்து
உஜ்ஜிவிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி
அப்படியே அவை நல்வழி படிந்து தன்னை வணங்க
அதனால் எங்கும் பரந்த புகழை யுடையவன் என்கிறது.

ஆணை மெய் பெற நடாய –
ஆணையாவது ஆஜ்னஞ, எம்பெருமானுடைய ஆஜ்ஞையாவது சாஸ்த்ரம்,
ச்ருதி ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்கய் வர்த்தசே –
ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ * என்று எம்பெருமான் தானே அருளிச் செய்திருக்கிறபடி
ச்ருதி ஸ்ம்ருதிகள் முதலிய சாஸ்த்ரங்களாகிற திவ்யாஜ்ஞையைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை.

“கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும், மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து“ என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள்
பழுது படாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் என்றாவறு.

தெய்வம் மூவரில் முதல்வனாகி –
அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூன்று தெய்வங்களுள் முதல் தெய்வம் தானாயிருக்கை.
“ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில்“ என்று சேர்த்து
நடாய என்பதை தெய்வம் மூவர்க்கும் விசேஷணமாக அந்வயிப்பதும் பொருந்தும்.
அப்போது,
எம்பெருமானாகிய தன்னுடைய“ ஆஜ்ஞையை உள்ள படி பரிபாவிக்கின்ற
பிரமன் சிவன் இந்திரன் என்னும் மூவர்க்கும் நியாமகன் என்று பொருளாம்.
இப்போது, மூவரில் என்றது மூவர்க்கும் என்றபடி.

சுடர் விளக்கு அகலத்து –
சுடராவது தேஜஸ்ஸு,
திருவாபரணங்களாலுண்டாகும் தேஜஸ்ஸைச் சொல்லுகிறது.
திருவாபரணச் சோதியாலே பளபள வென்று விளங்குகின்ற திருமர்பை யுடையவனாய் என்றபடி.

வரை புரை நிரை பொரு என்று தொடங்கித் —
தட வரை சுழற்றிய என்னுமளவும் ஒரு வாக்கியம்.

துர்வாஸ முனியின் சாபத்தால் தேவர்களின் செல்வம் யாவும் கடலில் ஒளிந்து ஒழிந்து விடவே
அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்,
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப் பிரான் அபயமளித்துக் கட்டளை யிட்டபடி
அசுரர்களையும் துணைக் கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸுகி யென்னும் மஹா நாகத்தைக்
கடை கயிறாகப் பூட்டிப் பாற் கடலைக் கடையலாயினர்.

அப்போது மத்தாகிய மந்தரகிரி கடலிலுள்ளே அழுந்தி விட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர்
ஆமை வடிவமெடுத்து அம் மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
அப்போது வாஸுகி நாகத்தின் வாலைப் பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசுரர்களும்
ஆகிய இரு திறந்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடைய வல்ல வலிமை யில்லாதவராய் நிற்க
அது நோக்கி அத் திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து
தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது.

கடைகிற அக் காலத்தில் கடலானது மிகவும் பயங்கரமாக இருந்த்தென்பதைக் கூறுகின்றார்
வரை புரை திரை பொரு என்று தொடங்கி.
அப்போது கடலில் ஸாதரணமான அலைகள் கிளம்பவில்லை,
ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மலை பெயர்ந்தாற்போலே பெயர்ந்து ஏறிந்ததாம்.

புரை – உவமவுருபு, மலை போன்ற (பெருப் பெருத்த) அலைகள்,
பொரு – மோதப் பெற்ற, இது கடலுக்கு விசேஷணம்.
உருமுரலொலிமலி என்பதும் கடலுக்கு விசேஷணம்
கடைகிற காலத்தில் கடலில் உண்டான த்வனி யானது இடி யிடித்தாற் போலிருந்ததாம்.
அந்த த்வனி குல பர்வதங்களையும் நடுக்கி அசைக்கவற்றா யிருந்தமை தோற்றப் பெரு வரை வெரு வர எனப்பட்டது.

உரும் என்றும் உருமு என்றும் இடிக்குப் பெயர்,
உரும்முரல் என்று பிரிக்க.
இடி போலே முரல்கின்ற (கோஷிக்கின்ற) யாதொரு ஒலியுண்டு
அது மலி – நிறைந்திருக்கிற என்றபடி.
“வரை புரை திரை பொரப் பெரு வரை வெருவுற“ என்ற பாடமும் ஒக்கும்.

நளிர் கடல் –
குளிர்ந்த கடலிலே, கடலுக்கு இயற்கையாகவுள்ள குளிர்த்தியைச் சொல்லுகிறதன்று இங்கு,
கீழ்ச் சொன்னபடி பயங்கரமாயிருக்கச் செய்தேயும்
எம்பெருமானுடைய கடாக்ஷம் பட்ட மாத்திரத்தில் குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது.

இப்படிப்பட்ட கடலிலே மத்தாக நாட்டின மந்தர மலையிலே வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகக் கட்டிச் சுழற்றிய
யாதொரு தனிமாத தெய்வமுண்டு – ஒப்புயர்வற்ற பர தேவதை,

அதற்கு நாம் ஆளாவதிலுங்காட்டில்,
அதற்கு ஆட்பட்டிருக்கும் அடியவர்களுண்டே,
அவர்கட்கு (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு) இனிமேலுள்ள காலமெல்லாம் நாம் ஆட்பட்டிருக்க வாய்க்குமா?
இப்படிப்பட்ட மஹா பாக்யமும் நமக்குக் கிடைக்குமோ? என்றாராயிற்று.

ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து
“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.

பிரயோஜனாந்தர பாரான தேவைதைகளுக்காகத் தன் உடம்பு நோவக் கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்தானென்கிற மஹோபகாரத்தில் ஈடுபட்டிருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே ஆட் பட்டிருக்க விரும்பினாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -2–

February 24, 2021

உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,
அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,
அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பதவுரை

உலகு–உலகங்களை
படைத்து–ஸ்ருஷ்டித்து
உண்ட–(பிரளய காலத்தில்)விழுங்கிய
எந்தை–ஸர்வேச்வரனுடைய
அறை கழல் சுடர் பூ தாமரை–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை
சூடுதற்கு–சிரோ பூஷணமாக அணிவதற்கு
அவாவு–ஆசைப் படுகின்ற
ஆர் உயிர்–அருமையான ஆத்மாவானது
உருகி உக்க–நைந்து சிதிலமாக
நேரிய–(அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய
அன்பில்–ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து
இன்பு ஈன் –இன்பத்தைக் கொடுக்கிற
தேறல்-தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய)
அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு–அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு
ஒரு பொருட்டு அசைவோர்–க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள்
அசைக–அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?)
திருவோடு மருவிய இயற்கை–செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன.
மாயா பெரு விறல்–அழியாத பெரு மிடுக்கென்ன
உலகம் மூன்றினொடு–மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன
நல்வீடு–உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)
பெறினும்–பெறுவதாயிருந்தாலும்
தெள்ளியதோர்–விவேகிகளுடைய
குறிப்பு-அந்தரங்கமானது
கொள்வது எண்ணுமோ–பெற்றுக்கொள்ள நினைக்குமோ?

[உலகு படைத்து.]
கீழ்ப் பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனி யழகை அநுஸந்தித்த ஆழ்வார்,
இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;

இவ் வுலகிலுள்ள பாவிகள் இதனை யறியாதே
‘பிள்ளை வேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி
இவை கொடுப்பாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை!
என்று முதலிலே திருவுள்ளம் நொந்து அப்படிப்பட்ட க்ஷுத்ரர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேணும்!
அவர்கள் இஷ்டப்படி அலைந்துழலட்டும்,
*உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரைப் பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா,

பகவத் பக்தி தலை யெடுத்த மஹான்களும் இப் பூமியின் கண் இருக்கிறார்களன்றோ
அவர்களுடைய அத்யவஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம் – என்று பரம பக்தர்களுடைய
அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

திருச் சந்த விருத்தத்தில் –
“கேடில் சீர் வரத்தனாங் கெடும் வரத்தயனரன், நாடினோடு நாட்ட மாயிரத்தனோடு நண்ணினும்,
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்று
திருமழிசைப் பிரான் அருளிச் செய்த பாசுரத்தைப் பெரும்பாலூந் திருவுள்ளத்திற் கொண்டு
இப் பாசுரமருளிச் செய்கிறாரென்பது உய்த்துணரத் தக்கது.

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில்
அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,
அதைத்தானருளிச் செய்தார் திருமழிசைப் பிரான்.

ப்ரஹ்ம லோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும் ருத்ர லோக ஆதி பத்யம் கிடைத்தாலும்
இந்திர லோகமாளும் பாக்கியம் வாய்ந்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றான பரமபதாநுபவமே கிடைப்பதானாலும்
இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்க மாட்டேன்.

பின்னே எனக்கு எதிலே ஊற்றமென்றால்
‘எம்பெருமானோடு கூட வேணும் எம்பெருமானோடு சேர வேணும் என்று மனோ ரதங்கொண்டிருப்பதுண்டே
அதுதான் எனக்குப் பரம போக்யம் என்றார்.

இஷ்டமான விஷயத்தை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிப்போம் என்னும் மனோ ரதமே சிறந்ததாமென்பதை
அனுபவ ரஸிகர்கள் எளிதில் உணர்வர். தேனூறி எப்பொழுதுந் தித்திக்கும்படியானது மனோரதமேயாம்.
திருவரங்கஞ்சென்று நம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று ஒருவனுக்கு ஆவல் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்,
ஒருநாள் போய் ஸேவித்து வந்து விட்டால் அவ்வளவிலே ஆசை தீர்ந்து விட்டதாகும்.
அங்ஙனல்லாமல் மனோரதமேயாய்ச் செல்லுமாகில் அது நெடு நாளைக்கு ரஸவத்தரமாயிருக்கும்.
சந்தனம் பூசிக் கொள்ளுதல், புஷ்பஞ் சூட்டிக்கொள்ளுதல், பஞ்சகச்ச வேஷ்டி உடுத்துக் கொள்ளுதல் முதலிய
அலங்கார கார்யங்களில் பிரமசாரிகளுக்கு உள்ள ஆவல் க்ருஹஸ்தர்களுக்கு இல்லாமையும் இங்கு ஒரு உதாஹரணமாகக் காட்டத் தகும்.
ஆகவே அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

ஆதியில் உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றைத் திருவயிற்றிலே வைத்தருளி ரக்ஷித்தும் வருகிற
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளை நாம் சிரமேல் அணிந்து கொள்ள வேணுமென்று ஆவல் கொண்டு,
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப் பண்டமாக உருகி, மேன் மேலும் பரபக்தி பரம பக்திகள் தலையெடுத்து,
அப்படிப்பட்ட பரம பக்தி நிலைமையிலே அமர்ந்திருக்கை தானே பரம போக்யமானது,
எம்பெருமானது திருவடிகள் தலைமேல் வந்து சேர வேண்டா, திருநாடும் எய்த வேண்டா,
வழுவிலாவடிவமை செய்யப் பெறவேண்டா, இவை நமக்கு வாய்க்க வேணும்” என்கிற ஆவல் ஒன்று மாத்திரம்
அநவரதம் நெஞ்சில் நடையாடுமேல் போதுமானது, இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனைக் ளென்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகுநாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்க ப்ராப்தமாயிருக்க,
இந்தப் போது போக்கை விட்டிட்டுக் கூறை சோறு முதலிய அற்ப்ப் பலன்களை அபேக்ஷித்து
அங்குமிங்கும் அலைந்துழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்,
அவர்கள் எக் கேடு கெட்டால் நமக்கென்ன! என்கிறார் ஒருபொருட்கசைவோர் அசைக என்னுமளவால்.

தெளிந்த ஞானமுடைய மஹான்கள் இப்படிப்பட்ட க்ஷுத்ர பலன்கள் கையிலே ஸித்தமாக வந்து சேர்ந்தாலும்
உதறித் தள்ளி விடுவர்கள், கீழ்ச்சொன்ன அமுத வெள்ளத்திலேயே அவர்கள் ஊன்றியிருப்பார்கள் என்கிறார் மேல்.

திருவொடு மருவிய இயற்கை பெறிலும், மாயாப் பெரு விரல் பெறினும், உலகம் மூன்று பெறினும்,
நல்வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு (இவற்றைக்) கொள்வதெண்ணாது.
“கூடுமாசை யல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்ற படி எம்பெருமானோடு கூட வேணுமென்கிற
ஆசை யொன்றையே தெள்ளியோர் குறிக் கொண்டிருப்பர் என்றவாறு.
இங்குத் தெள்ளியோர் என்றது திருமழிசைப் பிரானையும் அவர் போல்வாரையும்.

“அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.
அவாவாருயிர் என்றவிடத்து “அவா ஆர்“ என்றும் பிரிக்கலாம், ஆசை நிரம்பிய என்று பொருளாம்.

ஒரு பொருட்கு அசைவோர் அசைக –
ஸம்ஸாரிகள் விரும்பும் பொருள்களை ஆழ்வார் தமது திரு வாக்காலே சொல்லவும் கூசி ஒரு பொருட்டு என்கிறார்.

திருவொடு மருவிய இயற்கை –
நாலு நாளில் அழிந்து போகக் கூடிய ஐச்வரியமல்லாமல் எப்போதும் ஸ்திரமாயிருக்கக் கூடிய
ஐச்வரியத்தைப் பெற்றாலும் என்றபடி.
மருவுதல் – எப்போதும் கூடியிருத்தல்.
இயற்கை – கன்மை,
ஐச்வரியத்தோடு எப்போதுங் கூடியிருக்குந் தன்மையாவது நித்ய ஸ்ரீமனாக இருக்கை.
அப்படிப்பட்ட நிலைமையையும் தெள்ளியோர் குறிப்பு வேண்ட மாட்டாதாம்.

மாயா பெரு விறல் –
ஐச்வரியம் அளவற்றிருந்தாலும் அவற்றை அநுபவிப்பதற்கு உறுப்பான சக்தி
பூர்ணமாக இல்லாவிடில் பயனில்லையே
அந்த சக்தியும் கூடவே கிடைக்கப் பெற்றாலும் அப்போதும் வேண்டார்கள் என்றபடி.

மாயா –மாய்தலாவது அழிதல், அழியாத என்கை.
உலகம் முன்றினொடு கீழே சொன்ன நித்யமான ஐச்வரியம் என்ற மாத்திரமே யல்ல,
மூவுலகத்தையும் ஆளும்படியான பெருஞ்செல்வம் கை புகுந்தாலும் வேண்டார்களென்கை.

பலசொல்லி என்! ஸகல ஐச்வர்யங்களுக்கும் மேற்பட்டதான மோக்ஷ ஸரமராஸ்யந்தானும்
பெறுவதாயிருந்தாலும் “எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
“இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம்–தனியன்-அவதாரிகை- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -1–

February 24, 2021

முன்னுரை

இது – மயர்வற மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்தந ஜந கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு வேதங்களின் ஸாரமாம்.

நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.

ஆழ்வார் தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி. ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பத்த்தை அறுத்துத் தந்தருளவேணும்‘ என்று ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் – முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில்.

ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த போதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்ய ப்ரபந்தங்களை வெளியிடுவித்து சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே

“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று இவர் அபேக்ஷித்த இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு

* நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச்சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே : அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்,

இங்கே தானே இவர் குணானுபவனம் பண்ணிக் களித்தாராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப்பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்“ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க

ஆழ்வார் அவற்றைக் கண்டு பரமானந்ந்தம் பொலிய அநுபவிக்கிறார் இத்திருவாசிரியத்தில்.

ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபத்த்திலே போனபின்பு அநுபவிக்க்க்கூடிய எம்பெருமானது

மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்துகொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று.

ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.

அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.

இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது,

எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.

எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.

இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்.

4,5,7-ஆம் பாசுரங்கள் நிலைமண்டில வாசிரியப்பாக்கள்.

அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

————–

அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
————————————————————————–
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-

காசினியோர் தாம் பூலோகத்திலுள்ளவர்கள்
வாழ உஜ்ஜீவிப்பதற்காக
கலியுகத்தே இக் கலியுகத்தில்
வந்து உதித்து இந் நிலத்தில் வந்து அவதரித்து
அருமறை நூல் விரித்தானை தெரிய வரிதான வேத சாஸ்த்ரங்களை விவரித்தவரும்
தேசிகனை ஆசார்யரும்
திகழ் வகுளம் தாரானை விளங்குகின்ற மகிழ் மாலையை அணிந்துள்ளவருமான
பராங்குசனை நம்மாழ்வாரை
மாசு அடையா மனத்து வைத்து அஹங்கார மமகாரங்களாகிற குற்றங்களற்ற மனத்திலே வைத்து
மறவாமல் ஒருகாலும் மறவாமல்
வாழ்த்துதும் மங்களாசாஸநஞ்செய்வோம்.

————————————————————————–
பர-எதிரிகளை அங்குசம் -புற சமய வாதிகளை–தேசிகன்-ஆசார்யன்-
வெண்பா போல் ஆசிரிய பா -ஒரு வகை–அரு மறை-அரிய வேதம்-
காசினி-பூமி-தானே பிரகாசிக்கும் காசினி-

பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் தனியனுக்கு –
மணி பிரவாளம்-முத்து பவளம்-ஹாரம் போல்-கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத காசினியோர்
ஆத்ம ஷேமம் பார்க்காமல்–கலி கோலாகலம் குறைக்க -யுவ வர்ண -கிரமம் படி உதித்தார்–ஆவிர்பூதம் ஆனார்-
உதயம்-சூர்யன்-வகுள பூஷண பாஸ்கரன் –அஞ்ஞானம் இருட்டு விலக்க –
கிருத யுகம் பிராமண-தத்தாத்ரியன் — திரேதா -ஷத்ரியன்- ராமன் –துவாபர -வைஸ்யன் -கண்ணன் -கலி -பராங்குசன்
லோகாந்தரத்தில் இருந்து வந்து உதித்தார் –

அவதரித்து செய்த கார்யம்–ஆசிரிய பா இனத்தில் -விஸ்தாரம்-புரியும் படி அரிய வேதத்தை விரித்து
அதுவே நிரூபகம் ஆகும் படி-விரித்தான்-என்கிறார்–
தொண்டு வைத்தே அருள பாடு போல்..–

வண் தமிழ் நூல் ஆக்கினார்—எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
மூன்று ஏற்றம்-ஆயிரம்-தமிழ்-இனிமை-
வேதார்த்த தரிசியான பராங்குச தேசிகன்-தன் துளவ தாரானை போல் வகுள தாரானை –
கண்ணன் கழலினை ..திண்ணம் நாரணமே -சங்க பலகை ஏற்றி–
சங்க புலவர் –சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ
நாமம் பராங்குசனா நாரணனா-..தாமம் துளவமோ வகுளமோ
தோள்கள் இரண்டோ நான்கும் உளவோ பெருமாள் உனக்கு -என்ன கடவரே

பாவின் இன் இசை பாடி திரிவனே–
மாசற்றார் மனது உளானை -வணங்கி நாம் இருப்பது அல்லால்–திரு மாலை-பாசுரம்
மனன் அகம் மலம் அற -தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே –நிர்மல மனஸ்–ஆசை கொண்டு மனத்தில் வைக்க வேண்டும்

இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான்-
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி-

பரி விராஜர் பரம ஹம்சர் –நல்லது தீயது விலக்கி- சரண் நடந்து காட்டி-
பக்தர் ஹிருதய தாமரை அமர்ந்து—நாள் கமழ வகுள் மார்பினன்-
சுப ஆஸ்ர்யம் -மங்களமான புகல் இடம்-பவித்ராணாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-
மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..
நம்மை திருத்த பாடி அருளினார் –வாழ்த்த வேண்டும்- ஆழ்வார் –திவ்ய மங்கள விக்ரகமே ஸூபாஸ்ரயம் —

இவ்விருள் தருமாஞாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத் திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவவதரித்துத் திருவாசிரிய மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும்,

” ஆத்யஸ்ய ந: குலபதே : ” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி ஸ்ரீவைஷ்ணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும்,

மகிழ்மாலையை நிரூபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும்,

புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனாலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமான நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்றதாயிற்று.

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ; பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,- மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *

“வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார்.

சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி “நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,

ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற களிற்றை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

————————————————————————–
அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டை திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —
சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
மோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-
இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-

உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —
அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–
இது தாழ்ந்தது என்று அறிந்த ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-

அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க

அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –

————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-

————————————————————————–

பதவுரை

பவளம் செம் வாய்–பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்
திகழ் பசும் சோதி–விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான
மரகதம் குன்றம்–ஒரு பச்சை மா மலையானது,
செக்கர் மா முகில் உடுத்து–சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி–மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்
அம்சுடர் மதியம் பூண்டு–குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்
பல சுடர் புனைந்து–(நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலோன் கைமிசை–கடலரசனுடைய கை மேலே
கண்வளர்வதுபோல்–படுத்துக் கொண்டிருப்பது போல
பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து–பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான
சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு
சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப–அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று
பச்சை-பசுமையான
மேனி-திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது
மீதிட்டு மிக பகைப்ப–மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு
போர் செய்து கொண்டு விளங்கப் பெற்று
எறி கடல் நடுவுள்–அலை யெறிகின்ற கடலினிடையே
நஞ்சு வினை–விஷத் தொழிலையும்
கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய
அரவு-திருவனந்தாழ்வானாகிற
இன் அமளி ஏறி-போக்யமான சயனத்தின் மீது ஏறி
அறி துயில் அமர்ந்து -யோக நித்திரையில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள்-சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்
கை தொழ கிடந்த-ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற,
தாமரை உந்தி தனி பெரு நாயக-தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!
மூ உலகு அளந்த-மூன்று லோகங்களையும் அளந்த
சே அடியோய்-அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)

[செக்கர் மா முகில்.]
ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.
அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே
ஒன்றை உபமானமாக எடுத்துக் கூறுவதானது
ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்றபடி
அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத் தீர வேண்டியிருப்பதாலும்,
வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களை யிட்டே நிரூபித்திருப்பதாலும்
இவ்வாழ்வார் தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப் பேசி அநுபவிக்கிறார்.

‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்;
முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்;
இனி அபூதோபமையாவது-
தமிழில் இல் பொருளுவமை எனப்படும்.
ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்தி சமத்காரத்தாலே ஏற்படுத்திக் கொண்டு
அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம்.
இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து-
உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ச்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.

மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

செக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ் வானத்துக்கும் பெயர்;
இங்கே, சிவந்த மேகமென்றும், செவ் வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள் கொள்ளலாம்.
மேகங்கள் மலைச் சாரலிற் படியுமாதலாலும்,
செக்கர் மா முகில் படிந்திருந்தால் பீதக வாடை யுடுத்தாற் போலிருக்கு மாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது.
எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பீதாம்பரம் உபமேயம், செக்கர் மா முகில் உபமானம்.

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்று திருவபிஷேகத்திற்கு ஸூர்யனை
ஒப்புச் சொல்லுவதுண்டாதலால் “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” எனப்பட்டது.
எம்பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸூர்யன் உபமானமாகப் போராமையால்
மிக்க செஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது.

பரிதி என்கிற வட சொல் ஸக்ஷாத்தாக ஸூர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால்
ஸூர்யனுக்குப் பேராயிருக்கும்.
இங்கு உபமானமாகிய மலை ஸூர்ய மண்டலம் வரை ஓங்கியிருப்பதாகக் கொண்டால்
ஸூர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.

மார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ர ஹாரம்’ என்பது ஒன்று;
அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப் பெயர் கொண்டதாகிறது.
சந்திரனுக்கு மலையினோடு ஸம்பந்தம் கீழ்ச் சொன்னபடியிலேயாம்:
ஸூர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஓங்கின மலை என்று கொள்க. மதி-சந்திரன்; அம்-சாரியை.

பல சுடர் என்றது
ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி.
திருவாபரணங்களில் நக்ஷத்ர ஹார மென்பதுமொன்று.

புனைந்த என்று பாடமான போது
பெயரெச்சமாகி மரகதக் குன்றத்திற்கு விசேஷணமாகக் கடவது!

பவளச் செவ்வாய்- ‘ப்ரவாளம்’ என்ற வடசொல் பவளமெனத் திரியும்.
வாய் என்று இடங்களைச் சொன்னபடி.
மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள்
“கை வண்ணந் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே” என்றும்
“பவள வாய் கமலச் செங்கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக் கூறப்பட்டன.

திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம்-
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.

ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.

செக்கர் மா முகிலுக்கு உபமேயம் பீதக வாடை;
மிக்க செஞ்சுடர்ப் பரிதிக்கு உபமேயம் முடி(அதாவது-கிரீடம்);
அஞ்சுடர் மதிக்கும் பல சுடர்கட்கும் உபமேயம் பூண் முதலா மே தகு பல்கலன்.
பூண் என்பது ஆபரண ஸாமாந்யத்துக்குப் பேராயினும்
இங்கே சந்த்ரஹார மென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க.

மேதகு-மேவத்தகு என்றபடியாய், (திருமேனிக்குப்) பொருந்தத் தக்கன என்றதாம்.
மெய்தகு என்றும் பாடமுண்டாம்;
மெய்-திருமேனி.
கலன் –ஆபரணம்.

மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.

மேனி என்று உடலுக்கும் நிறத்துக்கும் பேர்; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது;

(மீதிட்டு மிகப் பகைப்ப-மிகப் பகைத்து மீதிட என்று விகுதி மாற்றிக் கூட்டி யுரைக்கலாம்.)
என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்ட தாயிற்றாம்.
மீதிடுதல்-வெற்றி பெறுதல் என்னலாம்.

ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்ய சோபைகளை வருணித்தாராயிற்று.
இனி பள்ளி கொள்ளுமழகைப் பேசுகிறார்.

க்ஷீர ஸாகர மத்தியில் திருவனந்தாழ்வான் மேல் துயில் கொண்டருளி,
சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழப்படுமவனே!
தாமரை பூத்த திரு நாபியை யுடைய ஸர்வேச்வரனே!
பண்டொரு கால் மாவலி பக்கல் நிரேற்று மூவுலகுமளந்தவனே! ஜய விஜயீ பவ-என்றாராயிற்று.

திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலையிட்டுக் கிடக்கிறார்.

நஞ்சு+வினை-நச்சு வினை;
சத்துருக்கள் மேல் விஷத்தை உமிழும் தொழிலை யுடையவனிறே திருவனந்தாழ்வான்.

கவர் தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற தலைகளை யுடைய என்று சப்தார்த்தம்;
பலபல தலைகளை யுடைய என்பது தார்ப்பரியம்.

அமளி-படுக்கை.
அறி துயில்-யோக நித்திரை.
சேவடியோய்-சேவடியோன் என்பதன் விளி.

————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தத்தில் ஐதிக்யங்களும்- –நிர்வாஹங்களும்-

January 14, 2021

ஸ்ரீ ஆழ்வாரின் ப்ரதம ப்ரபந்தம் , முதல் நூல் திருவிருத்தம்.
அவரது திவ்ய ப்ரபந்தங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன.
அவை அந்தாதித் தொடையிலேயே அமைந்துள்ளன.

ஸ்ரீ திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும்,
அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்:

“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விட வேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும்,

“இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று ப்ராப்யத்தையும்,

“இமையோர் தலைவா!” என்று தமது ஸ்ரீ ஸ்வாமியின் அப்ராக்ருத ஸ்வபாவத்தையும்,

“மெய் நின்று கேட்டருளாய்!” என்று அவனது ஸௌலப்யத்தையும்,

“அடியேன் செய்யும் விண்ணப்பம்!” என்று தமது பிரார்த்தனையையும்,

“இனி யாம் உறாமை” என்று தமது உலகியல் வாழ்வில் வைராக்யத்தையும் புலப்படுத்தினார்.

அடுத்த பாசுரம் முதலே அவர் தமிழில் ஒப்பற்ற அகத்துறை இலக்கிய ரீதியில்
நாயக நாயகி பாவனையில் அத்யாஸ்ச்சர்யமான உபதேஶ க்ரந்தம் ஸாதித்தருளினார்.

ஸ்ரீ காஞ்சி மஹா வித்வான் அண்ணங்கராசார்ய ஸ்வாமி தம் ஸ்ரீ திருவிருத்த வ்யாக்யானத்தின் முன்னுரையில்
இத் தகு நூல்களுள் திருக்கோவையார் ப்ரபந்தத்துடன் இதைக் குறித்துள்ளார் என்பது நோக்கத்தக்கது.

ஆகவே இதில் ஆசார்யர்கள் ஈடுபாடும், அதனால் அவர்களின் இன்சுவையே வடிவெடுத்த
நிர்வாஹங்களும் அமைந்ததில் வியப்பில்லை.

பாசுரம் 1:
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.

ஸ்ரீ ஆழ்வார், தண்டகாரண்யத்தில் ரிஷிகள் “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று ஸ்ரீ பெருமாளிடம் தம்மை அரக்கர்கள்
அடித்தும் பொடித்தும் துன்புறுத்தியத்தைத் தங்கள் ஶரீரங்களில் இருந்த காயங்களையும் தழும்புகளையும் காட்டிக்
குறை இரந்தாப்போல் இப்பாசுரத்தில் ஞான ஸ்வரூபனும், ஞான கு3ணகனுமான ஆத்மாவை
ப்ரக்ருதி (அநாதி ஜன்ம, கர்ம, அவித்யா, பாபம் முதலியன) தின்றிருப்பதை எம்பெருமானிடம் காட்டுகிறார்
என்று ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகம்.

ஸ்ரீ அம்மங்கி அம்மாள் எனும் ஆசார்யர், “உதிரக் கூறை காட்டுகிறார்” என்றார்.
அதாவது, ஸ்ரீ பெருமாளுக்கு ரிஷிகள் உடம்பைக் காட்டினாப் போல்
தம் குருதிக் கறை படிந்த நிலை (அஞ்ஞானாதிகள்) காட்டுகிறார்.

“பிறந்தாய்!”: என்பதற்கு ஸ்ரீ பட்டர்
ஒரு சுவையான விளக்கம் தந்ததாக ஸ்ரீவத் ஸாங்க தாஸர் கூறியதாக ஸ்ரீ நஞ்சீயர் ஸாதிப்பார்:
அதாவது: எம்பெருமான் பல பிறவிகளில் அவதரித்திருந்தாலும், அவனால் உலகினரைத் திருத்திப் பரம பதம்
கொண்டு செல்ல முடியவில்லை, உடுத்த துணியோடு பரமபதம் திரும்பிச் சென்றான்;
அதையும் பிடுங்கிக் கொள்ளாமல் அவனை அதோடு விட்டது விஶேஷம்.
ஆனால் ஸ்ரீ ஆழ்வார் அவதரித்த பின் அவனது திருவுள்ளம் நிறைவேறப் போகிறது என்பதால்,
இனி அவன் பிறக்க வேண்டிய தேவை இல்லை என்று ஸ்ரீ பட்டர் ரஸமாகக் கூறுவார் என்பது ஸ்ரீ நஞ்சீயர் குறிப்பு.

————

பாசுரம் 3–பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து பேசும் நிலையில் உள்ளது.

குழற் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ? தண்ணந்துழாய்
அழற்போல் அடுஞ்சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

முதல் பாட்டில் இமையோர் தலைவா என்று வியந்த தலைவியின் இயல்பில் மாறுபாடு கண்டாள் தோழி.
இப்பாசுரத்தில், தலைவி, சக்கரக்கையன், ஸ்ரீ பூ நீளாதேவிமார் நாதன் ஆகிய எம்பெருமானை ஒருக்கணமும்
பிரியாதிருக்கும் கருடனின் பாக்கியம்தான் என்னே எனத் தன்னைக் கண்டுவிட்டுச் சென்ற பெருமாளை நினைத்து,
அவன் அவர்களோடுள்ள சேர்த்தி கண்ட என் நெஞ்சு மீளுமோ மீளாதோ எனப் பராங்குஶ நாயகி நினைப்பது.

ஸ்ரீ திருமலை நம்பி இதை, உண்மையிலேயே தமக்கு ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க இயலுமா என
ஸ்ரீ ஆழ்வார் நினைப்பதாகக் கூறுவார் என ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் விளக்குவார்.

ஸ்ரீ நஞ்சீயரோ, ஸ்ரீ பட்டர் “உலகியலில் தமக்குள்ள ஸம்பந்தத்தை அறுக்க வேண்டுமென ஸ்ரீ எம்பெருமானை
முதல் பாட்டில் வேண்டிய ஸ்ரீ ஆழ்வார், அவனை முதலில் கண் டபோது தம்மால் அந்த ஆனந்தத்தைத்
தாங்க முடியுமா என ஐயுற்றார்” என்று விளக்குவார் என்கிறார்.

தமது நெஞ்சைத் தூது விடுவது ஸ்ரீ ஆழ்வாரின் பல பாசுரங்களில் உள்ள விஶேஷம் என்பதை
முனைவர் ஸ்ரீ உ வே வி வி ராமாநுஜம் ஸ்வாமி “என் நெஞ்சினார் ” எனும் கட்டுரையில் அத்புதமாக விளக்கியுள்ளார்.

————–

காண்கின்றனைகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்துள் உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –பாசுரம் 8:

இது தலைவன் பொருள்வயின் (பொருள் தேடி) பிரிவது பற்றிக் குறிப்புத் தர, தலைவி வருந்தும் நிலை.

இதை விளக்க நம் பூர்வர்கள் ஸ்ரீ எம்பெருமானார், அவர் ஆசார்யர் ஸ்ரீ திருமலை நம்பி, ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்
பற்றியொரு விருத்தாந்தம் தெரிவிக்கிறார்கள்.

ஸ்ரீ திருமலையில் இருந்த ஸ்ரீ எம்பெருமானார், யாராவது ஸ்ரீ காஞ்சி சென்று ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் எவ்வாறு உள்ளார்
என்று கண்டு வரமுடியுமா என்று கேட்க ஒருவரும் இசையவில்லை.
ஸ்ரீ திருமலை நம்பி தாமே சென்று ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளை சந்தித்து, உடனே கிளம்பவும்,
ஸ்ரீ நம்பிகள் அவரை “எதற்கு தேவரீர் வந்தது? இவ்வளவு அவசரம் ஏன் ?
ஸ்ரீ தேவப்பெருமாள் திருநாள் கண்டு போகலாமே ” என்றார்.
ஸ்ரீ திருமலை நம்பி, ஸ்ரீ உடையவர் விருப்பம் தெரிவித்து, அவர் திருவுளம் பற்றி வந்ததாகச் சொல்லிக் கிளம்பினார்.
இதில் இரு சுவையான விஷயங்கள்:
1. தம் ஆசார்யர் காஞ்சியில் எப்படி உள்ளாரோ என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு ஓர் அஸ்தானே (காரணமற்ற ) பயம்,
அவர் மீது இருந்த அன்பினால். இந்தத் தலைவி போன்ற நிலை.
2. ஆசார்யர்கள் எவ்வளவு நைச்சியம் , பணிவு காட்டினார்கள் என்பது.

தலைவன் தலைவி விஷயம் சொல்லும் பாசுரத்துக்கு
ஸ்ரீ எம்பெருமானார்/ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அன்புப் பிணைப்பைப் பேசியது நினைக்கத் தக்கது.

—————–

பாசுரம் 9:இதில் தலைவன் தலைவியைத் தன்னால் நீங்கி இருக்க இயலாமையைத் தெரிவிப்பதாக
ஸ்ரீ ஆழ்வார் தமக்கும் ஸ்ரீ எம்பெருமானுக்கு உள்ள அப்ருதக் ஸ்திதியைப் பாடுகிறார்:

திண் பூஞ்சுடர் நுதி, நேமி அஞ்செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணி வல்லீயை ஆரே பிரிபவர் தாம்?……

ஸ்ரீ எம்பெருமானார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை, ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாஸரிடம் சென்று
தமக்கு வேண்டிய நெல் வாங்கிக் கொள்ள அனுப்பினார். அவர், ஸ்ரீ தாஸரிடம் சென்று உடனே நெல் பெறாமல் திரும்பி விட,
ஸ்ரீ உடையவர் துணுக்குற்று என்ன ஆயிற்று நெல் என் பெறவில்லை? என்ன,
அவர், “அடியேன் சென்ற போது தாஸர் கண்ணும் கண்ணீருமாக அழுது கொண்டிருந்தார்” என்றார் .
ஸ்ரீ உடையவர் யாதோ ஒரு வருத்தம் பற்றி, திருவரங்கத்திலிருந்து திருமலை செல்ல நினைத்திருந்ததால்
ஸ்ரீ தாஸர் இந்நிலையில் இருந்தார் என்று எம்பெருமானார் புரிந்து கொண்டார்.

மணிவல்லி என்பது சம்பிரதாயத்தில் நெறி வழுவாது அநந்யார்ஹ ஶேஷத்வம் பேணும் ஆத்மாவைக் குறிக்கும்.

இங்கு ஸ்ரீஎம்பெருமானாரின் ஆருயிர்ச் சீடரான ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு இது இயல்வாகப் பொருந்துகிறது.

————

பாசுரம் 10:-இப்பாசுரத்தில் ஆழ்வாரின் அவயவ அழகிலும் இனிய சொல் திறனிலும் ஈடுபட்ட அடியார்கள்
அவரைப் பற்றிப் பிரிவு தாங்காது சொல்வது போல, நாயகன் நாயகியைப் புகழும் வகையில் பொருள் வருகிறது.

“உமது வாயோ? அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ! இதறிவரிதே”–எனும் பின் அடிகளில்,
இந்த இதழ்கள் என்ன வாயா, அல்லது கிளியும் நாணும் அவயவமா, அல்லது (சிவப்புப் பொருந்திய)
கொவ்வைப் பழமா என்று அழகை வியந்து சொல்வது.

நம் ஆசார்யர்கள் தமது பூர்வர்களின் திருமேனியிலும் மிக ஈடுபாடும் பக்தி பாரவச்யமும் கொண்டிருந்தமைக்கு
இதைக் காட்டி, ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி தொடர்பான ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுகிறது.
அதாவது, எப்போதும் ஸ்ரீ நம்பிகள் திருவரங்கம் வந்து திரும்பத் திருக்கோட்டியூர் புறப்படுகையில்
ஸ்ரீ எம்பெருமானார் மரியாதை நிமித்தமாக அவரை சிறிது தூரம் வரை பின் தொடர்வார். அப்போது ஒருமுறை,
“அடியேனுக்கு உய்வு பெற எப்போதும் தியானிக்க ஒன்று அருளிச் செய்ய வேண்டும்” என்கிறார்.
ஏற்கெனவே அவரிடம் ரஹஸ்ய உபதேஶம் பெற்றவர் இப்படி வேண்ட, ஸ்ரீ நம்பிகளும்,
“அடியேன் ஆற்றில் இறங்கி நீராடும்போது ஆமை முதுகு (கூர்மாசனம்) போல் தெரியும் அடியேன் ஆசார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதுகுத் தோற்றத்தையே அவர் திருநாடு எய்தியபின் நினைத்திருப்பேன். நீரும் அப்படியே இரும்” என்றார்.
இதனால் ஆசார்யர்களின் திருமேனியில் ஶிஷ்யர்களின் ஈடுபாடு அவர்களின் உபதேஶத்திற்போன்றே அவசியம் என்றதாயிற்று.

ஆசார்யர்கள் தம் ஶிஷ்யர்களின் ஆத்ம க்ஷேமத்தைப் பாதுகாப்பார்கள்;
ஶிஷ்யர்கள் அவர்தம் திருமேனி நலத்தைப் பேணுவார்கள்.

ஆசார்யர் ஶிஷ்யர் உறவு பற்றி, ஸ்ரீ மணவாள மாமுனிகள், தம் ஸ்ரீ உபதேஶ ரத்தின மாலையில்:

“ஆசார்யன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன்” என்று அருளினார்.

திருவிருத்தம் ஜீவ/பர நாயக/நாயகி பாவத்தில் அமைந்திருந்தாலும்,
பகவத் ஶேஷத்வத்தை விட பாகவத ஶேஷத்வமே இறுதி நிலை என்பதை ஆழ்வாரின் இப்பாசுரங்களில்
நம் பூர்வாசார்யர்கள் கண்டு அநுபவித்து நமக்குக் காட்டியுள்ளனர்.

—————-

பாசுரம் 11–அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே.

தலைவியுடன் இருக்கும் தலைமகன் தான் பொருள் ஈட்டுவதற்காக அவளைப் பிரிந்து செல்ல வேண்டும்
என்பதை நேர்படச் சொல்லாமல் எல்லாரும் பொருள் சம்பாதிப்பதற்கு அவ்வப்போது தத்தம் குடும்பத்தை விட்டுப்
பிரிந்து செல்வதுண்டு என்றான்.
இவன் தான் பிரிந்து செல்லப் போவதையே இப்படிக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று அவள் நினைத்தாள்.

கூடி இருக்கும் வேளையில் பிரிவை நினைப்பதோ அல்லது நினைப்பூட்டுவதோ மிகவும் துன்பம் விளைவிப்பது.

இதை ஸ்ரீ பட்டர் சுவைபடக் கூறி விளங்க வைத்தது ஓர் ஐதிஹ்யம்.
அவர் திரு அத்யயனத் திருநாளில் எல்லாரும் திருவாய்மொழி அநுபவத்திலும் ஸ்ரீ நம்பெருமாள் அழகிலும் ஆழ்ந்துள்ளனர்;
இவ்வேளையில் இந்த ஏகாதஶி எனும் (பட்டினி கிடப்பதாகிய) உடல் வலிமை குறைந்து
பகவதநுபவத்துக்கு இடையூறாக ஏற்படுத்தியது யார் என்று வெறுத்துச் சொன்னதாகக் கூறுவர்.

————–

பாசுரம் 16:-பலபல ஊழிகளாயிடும் அன்றி ஒர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே.

தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் இருளை வியந்து சொல்வதாக இப்பாட்டு உள்ளது.
அவனோடு இருந்து, பின் பிரிந்துள்ள போது நேரம் ஊழி போல் நீளுவதாக அவள் வருத்தம்.
அந்த இருளும் ஸ்ரீ கண்ணன் போல் நிறம் கொண்டுள்ளது. ஸ்ரீ ஆழ்வார் தம் பாசுரங்களில் ஸ்ரீ எம்பெருமானை
நினைவுறுத்தும் அசேதனங்களால் ஸ்ரீ பராங்குஶ நாயகி படும் துயரைக் குறித்துள்ளார்.

இதை விளக்கும் ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீராமாயணத்தில் ஸ்ரீ பெருமாளைக் காட்டில் விட்ட பின் ஸ்ரீ குகனோடு மூன்று நாட்கள்
இருந்து பின் ஸ்ரீ அயோத்தி செல்லும் ஸ்ரீ ஸுமந்திரனை நினைவு கூர்ந்தார்.

“குஹேன ஸார்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸான் பஹூன்” எனும் ஶ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.
ஶிஷ்யர் ஸ்ரீ நம்பிள்ளை, “ஸுமந்திரன் குகனோடு மூன்று நாள்களே இருந்தான். ஆனால் பல நாள்கள் எனப் பொருள்பட
‘திவஶான் பஹூன்’ என்பானேன்” என்று வினவ,
ஸ்ரீ ஆசார்யர், அதற்கு, “ஒன்றைப் பிரிந்திருக்கும் போது, அதை நினைவூட்டுபவர் முன் இருந்தால்
பிரிவு நெடிதாகத் தோன்றுமே. ஸ்ரீ குகனோடு இருந்ததால் ஸ்ரீ பெருமாளை நெடு நாள் பிரிந்த மாதிரி
ஸ்ரீ ஸுமந்திரனுக்குத் தோற்றியது” என்றார்.

காதலர்க்குப் பிரிவின் போது காலம் நீளுவது போல் ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த ஸ்ரீ ஆழ்வார்க்கும்,
அவரைப் பிரிந்த அடியார்க்கும் தோற்றும். பாகவத விஶ்லேஷமும் (பிரிவும்) பகவத் விஶ்லேஷம் போன்றே உள்ளது.
ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களில் பாகவத ஸமாகமம் (சேர்த்தி) பகவத் ஸமாகமம் போன்றே வலியுறுத்தப்படுகிறது.

நெடுமாற்கடிமை, பயிலும் சுடரொளி என இரு திருவாய்மொழிகள் பாகவத ஶேஷத்வத்தை வியந்து பேசும்.
பொலிக பொலிக திருவாய்மொழி அடியார்களால் கலியும் கெடும் என்பதை அவர்கள் வரவை முன் கூட்டி இயம்பும்.

————-

பாசுரம் 30:-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் சொல்லீரோ? இதுவோ தகவு என்று இசைமின்களே!

ஸ்ரீ எம்பெருமான் மற்ற தேவர்களைப் போல் அன்றி சரணடையவும், உபாஸிக்கவும் எளியன் என்பதை
ஸ்ரீ ஆழ்வார் பல வகைகளிலும் காட்டுவார். அத்துடன், அவன் தன்னிடம் வந்தவரிடம் அல்லது தானே
சென்றடைந்தவரிடமும் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்பதையும் பலப்படச் சொல்வார்.
ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவருமே ஒரு மிடறாகக் காட்டும் அரும்பொருள் இது.

இப்பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஓர் அத்புதமான விளக்கம் அருளினார்:
அதாவது, தன் நாயகனைக் காணச் சென்ற தன்னால் அனுப்பப்பட்ட தன் நெஞ்சு தான் தூது செல்வதை
மறந்து பெருமானோடே நின்று தங்கிவிட
அந்த நெஞ்சுக்குப் பறவைகளைப் பராங்குஶ நாயகி தூது அனுப்புகிற சூழல் இப்பாசுரத்தில் வருகிறது.
இதில் ” தொழுது இரந்தேன்” என்கிறார் ஆழ்வார். தொழுதால் போதாதோ இரங்கவும் வேண்டுமோ?
ஸ்ரீ எம்பெருமான் சரணாகதனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்பதை விளக்க,
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் இவ்விடத்துக்குச் சேர

“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதவநே ஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரஶ்நாத் ந ச இச்சதி ஜநார்தந:
என்கிற அழகான ஶ்லோகத்தை எடுத்தார்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு பூர்ண கும்பம், திருவடி விளக்குவது, நலமா என்று அன்புடன் விசாரிப்பது இது தவிர
வேறு எதுவும் எதிர்பார்க்க மாட்டான் என இந்த ஸ்ரீ மஹாபாரத ஶ்லோகம் ஸ்ரீ கிருஷ்ணனின் எளிமையை விளக்குகிறது.

இது கூட ஒருக்கால் ( ஒரே ஒரு முறை) செய்தால் போதுமா என்று ஶிஷ்யர்கள் கேட்டபோது,
ஸ்ரீ ஆச்சான் “ஒருக்கால் என்ன அரைக்கால் போதும்” என்றார்!
அதாவது உபசாரம் செய்யவே வேண்டா
மனத்தால் செய்ய நினைத்தாலே போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து விடுகிறான்.
இவ்வாறு ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் இறைவனின் எளிமையை விளக்கினார் என்பர்.

————-

பாசுரம் 38–கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் பலநாள்
நடமாயின புக்கு நீர்நிலை நின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம்.
காதலர் பிரிந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து
அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே.
ஸ்ரீ ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கிறார்.
ஆனது பற்றியே ஸ்ரீ ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும் போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம்,
அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும்.
இதை ஸ்ரீ ஈடு வ்யாக்யானத்தில் ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஆழ்வார் இவ்விபூதியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர்.
உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.

இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த ஸ்ரீ எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள்
நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் ஸ்ரீ எம்பெருமானை நினைவூட்டுகிறது.
இந்த விபூதியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யரும், ஸ்ரீ நாதமுனிகளின் சீடரும் ஆன ஸ்ரீ குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர்,
“ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார்.
அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்பந்தமோ அதே தான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார்.
சீடர் மேலும், “எனக்கு ஸ்ரீ எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்;
ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.

நீல மலர்களைக் கண்டதும் ஸ்ரீ பராங்குஶ நாயகிக்கு ஸ்ரீ எம்பெருமான் நினைவு வந்தது.
ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று ஸ்ரீ கீதையில் சொன்னபடி அவனே
நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது ஸ்ரீ எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது.
அவ்வாறிருக்க ஸ்ரீ எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து.

—————–

பாசுரம் 43–கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே.

தலைவி ஸ்ரீ பராங்குஶ நாயகி தலைவன் கண்ணனின் உருவ எழிலை உரைக்கும் பாசுரம் இது.
இதில் ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ எம்பெருமானின் திருக்கண் அழகை முதலில் வியக்கிறார்;
பின்பு தம்மை அணைக்கும் கையும் தாமரை போன்றது என்கிறார்;
இவ்வாறு வியந்து அனுபவித்துப் போற்றியவர் திருவடிகளையும் தாமரை என்று நினைத்துப் போற்றுகிறார்.
திருமேனியோ கருமுகில் போலாகி அவன் வள்ளன்மையும் குளிர்த்தியும் தெரிவது என்கிறார்.

இதை விவரித்தபோது ஒரு சீடர், கண்கள், கைகள், திருமேனி இவற்றை எல்லாம் விவரித்து
எதற்காகத் திருவடியைப் பேசுகிறார் என்று ஐயம் எழுப்பினார்.
இதற்கு ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் மிகவும் சுவைபட, “குழந்தைக்குத் தாயின் முலை போல
அடியார்க்கு எம்பெருமானின் திருவடிகள் ; அது தாயின் பால் உண்டு பின் தாயின் முகம் நோக்கும்.
அதே போல் இவர்களும் எம்பெருமானின் ஸர்வ அவயவ ஸௌந்தர்யங்களையும் கண்டு பருகினாலும்
அவனது திருவடிகளிலேயே நோக்காய் இருப்பர்” என்று விளக்கினார்.

—————

பாசுரம் 44–நிறமுயர் கோலமும் பேரும் உருவும் இவை இவை என்று
அறமுயர் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையே.

இப்பாசுரம் தலைவி தலைவன் பெருமையை உணர்த்துவதாக அமைந்தது.
ஸ்ரீ எம்பெருமான்பால் மிக்கிருக்கும் கணக்கற்ற மிகு நலன்களை எண்ணுவதோ முழுமையாக விரித்துரைப்பதோ இயலாது.
அவனது ஈடற்ற தோற்றப் பொலிவு இது என்றவாறு சிலர் சில சொல்லலாகும்.
அல்லது அவன் திருநாமங்கள் சிறப்பு என்று சில சொல்லக்கூடும்.
அவனது திவ்ய அவயவ ஸௌந்தர்ய லாவண்யாதிகளை ஒரு சிலர் சொல்ல முயற்சி செய்யலாம்.
ஆயினும் ஒவ்வோரிடத்திலும் அவன் திவ்ய ஞான ஒளி விளக்காய் அவர்களுக்குத் தோற்றியதன்றி இன்னது,
இவ்வளவு இவன் படி என்று சொல்ல முடிவதில்லை.
“சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ” என்பதற்கேற்ப எப்போதும் சொல்லையும்
அதனால் பெறப்படும் பொருளையும் கடந்து நிற்கிறான்.
அப்ராப்ய மனஸா ஸ:.

இப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானின் திருநாம மஹிமை அதன் இனிமை இவற்றை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்
வாய் வெருவிய படியே இருப்பர். இந்தப் பாசுர விளக்கத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
ஓர் அழகிய ஐதிஹ்யத்தைக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீ எம்பெருமானாரின் மாதுலரும் ஆசார்யருமான ஸ்ரீ திருமலை நம்பி தமது அந்திம தஶையில் இருந்த போது
ஸ்ரீ கணியனூர் சிறியாத்தான் அவரைக் காணச் சென்றார்.
ஸ்ரீ நம்பிகள், அவரை, பட்டரைக் குறித்து, தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் திருநாமம் எது எனச் சொல்ல வேண்டும்
என்று வேண்டினார். கேட்பவர் ஸ்ரீ எம்பெருமானார்க்கே ஆசார்யர். ஆகவே, என்ன சொல்வது என்று வெட்கமும் திகைப்பும்
அடைந்த ஸ்ரீ சிறியாத்தான் மௌனமாய் இருந்தார்.
ஸ்ரீ நம்பிகள் விடாமல், “தாஶரதீ இது மௌனம் ஸாதிக்கும் விஷயமன்று – சொல்ல வேணும்” என்றார்.
ஸ்ரீ சிறியாத்தான் , “நாராயணன் போன்ற திருநாமங்களும் சொல்வார்;
ஆனால் விரும்பியிருப்பது அழகிய மணவாளப் பெருமாள் என்பதையே” என்றார் .

“இது கணவன் பேரைச் சொல்வதுபோல் உள்ளது; ஆயினும் ஸ்ரீ பட்டர் நினைத்து சொல்வதைத் தவிர
வேறு சிறப்பான தஞ்சம் (உபாயம்) இல்லை” என்று அருளிச் செய்த ஸ்ரீ திருமலை நம்பிகள்
“அழகிய மணவாளப் பெருமாளே ஶரணம்” என்று கூறியவாறே திருநாடு அடைந்துவிட்டார்.

தமக்குப் பின் ஸ்ரீ பட்டரையே ஆசார்யராகக் கருதும்படி ஸ்ரீ எம்பெருமானார் கட்டளை இருந்ததால்
அவர் தம் சீடர்கள் அனைவரும் அப்படியே ஒழுகினர்.
ஆதலால், மூத்தவராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ நம்பிகளும் ஸ்ரீ பட்டர் திருவாக்கை ஶிரஸா வகித்து அனுஷ்டித்தார்
என்பதில் அவர் பெருமையும், ஆசார்யர்க்கு உண்டான தனித்துவமும், திருநாமத்துக்குள்ள ஏற்றமும் தெளிவாகிறது.

இப்பாசுரத்தில் ஸ்ரீ எம்பெருமான் திருக்கோலம், திருநாமம், திருவுருவம் ஆகிய மூன்றும் குறிக்கப் பெறுகின்றன.
ஸ்ரீ ஆழ்வார் எப்போதும் எம்பெருமானை ஸ்வரூப, ரூப , குண வைபவங்களைச் சிந்தித்தும் சொல்லியுமே போது போக்குபவர்.
இந்த அநுபவத்தை அடியொற்றியே ஆசார்யர்களும் குண அநுபவமும் நாம ஸங்கீர்த்தனமும் தம் வாழ்வில்
முக்கிய அம்ஶங்களாகவும் இவற்றையே பகவத் கைங்கர்ய வெளிப்பாடுகளாகவும் அமைத்துக் கொண்டனர்.

இப்பாசுர வ்யாக்யானத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ திருமலை நம்பிக்கு ஸ்ரீ எம்பெருமான் திருநாமத்தில்
இருந்த ஆத3ரத்தை விளக்கினார். அவரே இந்த “பேரும் ” என்பதை விளக்க இன்னோர் ஐதிஹ்யமும் காட்டுகிறார்.
ஸ்ரீ ஆச்சி மகன் எனும் ஆசார்யர் தமது இறுதி நிலையில் உணர்வற்று இருந்தார்.
ஆசார்ய ஶ்ரேஷ்டரான ஸ்ரீ பராஶர பட்டர் அவரைக் காண எழுந்தருளினார்.
அவர் அருகே சென்று அவர் செவியில் மிக மென்மையாக “அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம்” என்று கூறினார்.
இதை பட்டர் தம் திருவாக்கால் ஸாதித்த மாத்திரத்தில் ஸ்ரீ ஆச்சி மகன் தம் பூர்வ வாசனையால் ப்ரக்ஜ்ஞை வர பெற்று
அவர் தாமும் அத் திருநாமத்தை உச்சரித்தவாறே உடனே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்தருளினாரென்று வரலாறு.
ஸ்ரீ எம்பெருமான் திருநாமம் உய்திக்கு வழி என்பதை ஆசார்யர்கள் இவ்வாறு காட்டுகிறார்கள்.

————–

பாசுரம் 44:“பேரும் …”
ஸ்ரீ எம்பெருமான் திருநாம மஹிமையை ஸ்ரீ திருவிருத்தப் பாசுர வ்யாக்யானத்தில் காட்டியருளிய
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இதற்கு மற்றுமொரு நிகழ்வாக
ஸ்ரீ ஆளவந்தார் திருமகனார் ஆகிய ஸ்ரீ சொட்டை நம்பி வைபவமும் கூறுகிறார்.
ஸ்ரீ நம்பிகள் தாம் இறுதி நிலை அடையும் தருவாயில் ஆசார்யர்கள் அனைவரும் அவர் திருமாளிகை சென்று, வணங்கி,
“தேவரீர் இப்போது திருவுள்ளத்தில் விரும்புவது என்ன?” என்று வினவினர்.
அவர், “அடியேன் ஸ்ரீ வைகுண்டம் சென்றால் அங்கே ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமுகம் நம்பெருமாள்
திருமுகம் போலே குளிர்ந்து இராமல் போனால், வானைக் கிழித்துக்கொண்டு மீளவும் இங்கேயே
வந்து விடுவேன் என்று எண்ணி இருக்கின்றேன்” என்றாராம்!

ஆசார்யர்கள் ஸ்ரீ நம்பெருமாள் எனும் திருநாமத்தின் மீதும், அவரது திருமேனி அழகிலும்
எவ்வளவு ஈடுபாடும் ஆழ்ந்த அழகுணர்வும் கொண்டிருந்தனர் என்பது வியக்கத் தக்கது.

———-

பாசுரம் 51:-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டுகொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.

கடற்கரையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கடல் அலை ஓசைக்கு ஆற்றாமல் வருந்திச் சொல்லுகிற
இப்பாசுரத்தில் ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானின் கருணையைக் காட்டுவதாக நம் முதலிகள் நிர்வஹிப்பர்.

ஸ்ரீ எம்பெருமான் மந்தர மலையை மத்தாக்கி, வாஸுகிப் பாம்பை நாணாக்கி ஸமுத்ர மந்தனம் செய்து அமுதம் எடுத்தான்.
அந்த மாயன் இராம பிரானாக வந்த போது கடல் கடந்து சென்று பிராட்டியை மீட்க, கடலைக் கடக்கவேண்டி வந்தது.
ஸ்ரீ விபீஷணன் சொன்னபடி ஸ்ரீ பெருமாள் ஸமுத்திர ஶரணாகதி செய்து கேட்டும்
கடல் அரசன் வராது தாழ்த்தியதால் சினம் கொண்ட ஸ்ரீ பெருமாள் ஒரே அம்பினால் இக்கடலை வற்றச் செய்வேன்
என்று சூளுரைக்க, அப்போது கடல் அரசன் வணங்கி வந்து நின்றான்.

இந்த சந்தர்ப்பத்தை விளக்கிய ஸ்ரீ பட்டர் அதற்குத் தக்க ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
யுத்த காண்ட ஶ்லோகம் ஒன்றைச் சொன்னார்:

ரக்த மால்யாம்பரதர: பத்மபத்ர நிபேக்ஷண: ஸர்வபுஷ்ப மயீம் தி3வ்யாம் ஶிரஸா தாரயன் ஸ்ரஜம்।
ஜாத ரூப மயைஶ்சைவ தபநீய விபூஷிதை: ஆத்மஜாநாம் ரத்னானாம் பூஷிதௌ பூஷணோத்தமை:।। -6-22-20
என்கிற அழகிய ஶ்லோகத்தைச் சொல்லி விளக்கினார்.
இந்த ஶ்லோகத்தில் ஸ்ரீ வால்மீகி, கடல் அரசன் பெருமாளைக் காண வந்து வணங்கியபோது
சிவந்த மாலைகளைச் சூடி, அழகிய மணிகள் ஒளிரும் ஆப4ரணங்களை அணிந்து வந்தான்
என்றுள்ளதைச் சுட்டி ஶிஷ்யர் ஒருவர்,
“ஸ்ரீ பெருமாள் மிக்க சினத்தோடு வில்லையும் அம்பையும் ஏந்தி கடலை வற்றடிப்பேன் என்று நிற்கையில்
அவன் இவ்வளவு அலங்கரித்து வந்தது என்ன துணிவில்?” என்று வினவினார்.
அதற்கு ஸ்ரீ பட்டர், “கிணற்று நீர் சூடாகி , கிணற்றைச் சுடுமோ? அதன் தன்மை குளிர்ந்து இருப்பதன்றோ?
ஸ்ரீ எம்பெருமான் தன்னிடம் கார்யம் கொள்ள ஓர் அச்சுறுத்தலாக வில்லை வளைத்தானே அல்லாமல்
தன்னை ஒருபோதும் தண்டிக்க மாட்டான் என்ற உணர்வு இருந்ததால் கடல் அரசன் இவ்வாறு வந்தான்”
என்று சாதுர்யமாக ஸமாதானம் கூறியருளினார்.

எம்பெருமான் எப்போதும் எவரையும் ஒறுப்பவனல்லன். அவன் ஶாஸ்த்ர விதி மீறுபவரையும் இறுதி வரை
ஏதாவது ஒரு சாக்கில் மன்னிப்பதையே விரும்புபவன்.
இராவணன், ஶிஶுபாலன் போன்றோரிடத்தும் மித்ர பாவநை இருந்தாலே போதும் என்றவன்.
உபாய நைரபேக்ஷ்யம் (ஓர் உபாயத்தை எதிர்பாராமை) போன்றே அபராத ஸஹத்வமும்
அவனது விஶேஷ இயல்பு என்பதை ஸ்ரீ ஆழ்வார் பல இடங்களிலும் பலவாறாகக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீ எம்பெருமானுக்கு எவர் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது
பாரபக்ஷமும் இல்லை என்பது ஶாஸ்த்ர ஸித்தம். அதையே ஸ்ரீ பட்டர் விளக்கினார்.

————

பாசுரம் 53:–வாராயின முலையாள் இவள் வானோர் தலை மகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே.

இது கட்டுவிச்சி பேச்சாக வரும் பாசுரம். சிறிய திருமடலிலும் திருமங்கை ஆழ்வாரின் கட்டுவிச்சி
தலைமகளின் நோய் ஸ்ரீ திருமால் மீதான காதல் நோய் என்பதைப் பரக்கச் சொல்லி அதற்கு மருந்து
ஸ்ரீ எம்பெருமான் தொடர்பானவற்றையே ஸ்மரிப்பதும், ஸ்மரிப்பிப்பதும் என்று அவனது
பல விப4வ அவதார சேஷ்டிதங்களை விவரிப்பாள்.

இக்கட்டுவிச்சி, தாயரிடம் உங்கள் மகளைப் பிடித்திருப்பது தெய்வ நன்னோய் ;
இதைத் தணிக்க எம்பெருமானின் திருத்துழாய் மாலையோ, தழையோ, அல்லது துளசிக் கொம்பு கிளையோ,
அல்லது அடி வேரோ கொண்டு வீசினால் அவள் துன்பம் தணியும் என்கிறாள்.

இப்பாசுரத்தை மிக அழகாக ஸ்ரீ பட்டர் விரித்துரைத்தார். அது கேட்டு மிகவும் மூத்த ஆசார்யர்களும்
ஸ்ரீ பட்டரின் பேரறிவாண்மையையும் பாசுரங்களை விளங்கும் பான்மையையும் பாராட்டினார்கள்.
இதைப்போல் பல நிகழ்வுகளும் ஸ்ரீ குருபரம்பரா ப்ரபாவம் முதலிய நூல்களில் காணக் கிடைக்கும்.
அடியார்களைக் கொண்டாடுவது ஸ்ரீ எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவும் உவப்பானது என்பதை இது காட்டும்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தம் ஸ்ரீ திருவிருத்த வியாக்கியானத்தில் இப்பாசுரத்தை விளக்குகையில்
ஸ்ரீ எம்பெருமானார் தொடர்பான ஒரு ஐதிஹ்யத்தைக் கூறுகிறார்:

ஸ்ரீ நம்பெருமாள் ஒரு திருவிழாவின் போது திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்தார்.
அப்போது சற்று தொலைவில் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ஸ்ரீ பெருமாளை வணங்க வந்த
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீ எம்பெருமானரையும் சேவித்தார்கள். இதுகண்ட உடையார் ஸுப்ரமணிய பட்டர் எனும் அரசு அதிகாரி,
ஸ்ரீ சுவாமியிடம், “ஸ்வாமி ஓர் ஐயம் அடியேனுக்கு: பெருமாள் ஸந்நிதியிலேயே சிலர் உம்மை வணங்குகிறார்கள்;
தேவரீரும் அவர்களைத் தடுப்பதில்லை; இது ஏன் ?” என்றார்.
அதற்கு ஸ்ரீ சுவாமி, “நீர் அரசு வேலை செய்பவர். ஒரு வேலையாக அரசரிடம் வருபவர் அரசரின்
காலணிகளைத் தம் தலையில் வைத்துக் கொண்டால் நீர் தடுப்பீரோ?
அல்லது அக்காலணிகள் தம்மைக் கொண்டாட வேண்டாம் என்று கூறுமோ?
அவர் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறார்?
அவற்றைத் தலையில் அவர் சுமந்தால் மகிழ்ச்சி அரசனுக்கே அன்றி, அக்காலணிகளுக்கு அன்றே!
அடியாரைத் துதிப்பதால் சிறப்பு அடியாருக்கன்று, மகிழ்ச்சியும் பெருமாளுக்கே” என்று கூறினர்.

இதில் ஸ்ரீ எம்பெருமானாரின் பணிவும், எல்லாப் பெருமைகளும் ஸ்ரீ எம்பெருமானுக்கே எனும் கைங்கர்ய
மனோபாவமும், பாகவதருக்குத் தரும் சிறப்பு பகவானுக்கே சேரும் என்பதும் தெளிவாகிறது.

——————

பாசுரம் 56:
வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! ஓர் தண் தென்றல் வந்து
அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன்களே .

தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தோழி தலைவிக்கு உரைத்தல் எனும் வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

அகன்ற இடத்தை உடையவளான ஸ்ரீ பூமி பிராட்டி ஸ்ரீ எம்பெருமானிடம் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிலள்;
ஆகிலும் அருள் உணர்வுள்ள ஸ்ரீ எம்பெருமான் அவளை ப்ரளய நீரிலிருந்து மீட்டெடுத்தான்.
அதே போல் அவன் பராங்குஶ நாயகிக்கும் உதவுவான்.

இதை விளக்கும் போது ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி “நாம் உய்தி பெறத் தஞ்சமாக நினைக்கத் தக்கது எது” என்று
கேட்ட சீடர்களுக்கு, ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் க்ஷத்ர பந்து சொல்வதாக அமைந்துள்ள ஶ்லோகத்தைக் கூறி,
எவ்வகையிலும் தகுதி அற்ற, அல்ப அறிவினன் ஆகிய என்னைக் காக்க வேணும் எனும் ப்ரார்த்தனை தகும் என்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானார், அது அங்கனமன்று; காளியன் செய்த ப்ரார்த்தனை தகும் என்கிறார்..

ஸ்ரீ எம்பெருமானார்,”க்ஷத்ரபந்து ப்ரார்த்தனையில் நான் உன்னை வணங்குகிறேன் ஆகவே அருள் புரி என்றுள்ளது.
அவன் அருளை பெற க்ஷத்ரபந்து தான் வணங்கியதைக் காரணமாக் கூறுகிறான்.
ஆனால், மடுவில் ஸ்ரீ கிருஷ்ணனை முற்றாக வளைத்துத் துன்புறுத்திய காளியனோ,
தனது தகுதி எதையும் காட்டாமல், அதற்காக ஸ்ரீ எம்பெருமான் தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்னாத,
உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் நான் ஆற்றல் இல்லாதவன், க்ருபா மாத்ரை மனோ வ்ருத்தி:
ப்ரஸீத மே – உன்னுடைய க்ருபை ஒன்றையே நீ காட்டி என்னை ரக்ஷித்தருள்வாய் என்றான்.
தான் வணங்கியதையோ, ப்ரார்த்தித்ததையோ ஒரு சாதனமாகக் காட்டாமல் ஸ்ரீ எம்பெருமான் க்ருபை
ஒன்றையே நினைத்த காளியனின் நினைவே நமக்குத் தஞ்சம்” என்று விளக்கினார்.

ஒரு பயனை எதிர்பாராமல், ஸ்ரீ எம்பெருமானை வணங்குவது நம் ஸ்வரூபம் என்பதால் மட்டுமே
அநன்ய ப்ரயோஜனராய் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை
ஸ்ரீ ஸ்வாமி இதில் நல்ல உதாரணத்தோடு நம் மனதில் பதியும்படி அருளிச் செய்தார்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .