ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் — நாலாம் பிரகரணம் –9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –சூர்ணிகை-407-463- –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

—————-

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-இப் ப்ரசங்கம் தான் உள்ளது –

இனி -ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-என்று தொடங்கி கீழில் பிரபந்தத்திலே இதர உபாய த்யாக பூர்வகமாக ஸூ கரமான ஸித்த உபாயஸ்வீ கார பிரகாரத்தை விசதமாக வெளியிட்டு அருளினவர் அவ்வுபாயத்துக்கும் அநதிகாரிகளாக ஆன துர்கதியைக் கண்டு
தம்முடைய பரம கிருபையாலே அத்யந்த ஸூ கரமுமாய் அத்யந்த ஸூ லபமுமான சரம உபாயம்-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிற ஸதாச்சார்ய அபிமானம் என்னும் இடத்தை
ஸ பிரகாரமாக வெளியிடுகிறார் மேல் -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி –

பரதந்த்ர ஸ்வரூபனாய் கேவல க்ருபாவானான ஆச்சார்யனைப் போல் அன்றிக்கே -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை இப்படி நிர்ஹேதுக க்ருபவான் அன்றோ என்று பற்றின போது தான் இறே கீழ் யுக்தமான பயாபய ப்ரசங்கம் தான் இவனுக்கு உள்ளது என்று வஹ்ய மாணமான சரம உபாயத்தை ஹ்ருதீ கரித்து அத்தைப் பிரதமத்திலே ப்ரஸ்தாவிக்கிறார்

இவ் விடத்தில் தான் என்கிற ஸப்தம் பற்றும் போது தான் இறே என்று சொல் பாடாய்க் கிடக்கிறது அத்தனை –

—————

சூரணை -408-

உண்ட போது ஒரு வார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ் வர்த்தம் அறுதி இடுவது —

சூரணை -409-

அவர்களைச்
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

ஆனால் வசநாத் ப்ரவ்ருத்தி -வசநாத் நிவ்ருத்தியான பின்பு இதில் பிரமாணம் ஏதோ என்கிற ஆ காங்ஷையில் -உண்ட போது -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
தர்மஞ்ஞ ஸமய ப்ரமாணம் வேதாஸ்ஸ -என்கிற ந்யாயத்தாலே இவ்வர்த்தத்துக்குப் பிரமாணம் ஏது என்று பரம தர்மஞ்ஞரான ஆழ்வார்களுடைய அனுசந்தான க்ரமத்தை ஆராய்ந்தவாறே
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே பகவத் ஸம்ஸ்லேஷ போகம் ஸித்தித்த போது
மாறுளதோ இம்மண் மிசையே -என்றும்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
உபய விபூதியிலும் தங்களுக்கு ஓர் ஒப்பு இல்லையாக அனுசந்திப்பது
உண்ணா நாள் பசி யாவது ஒன்றில்லை நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -என்கிறபடியே
பகவத் ஸம்ஸ்லேஷ போகம் இல்லாத போது
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும்இத்யாதி பிரகாரத்திலே
கூப்பிடுவதாக நிற்பர்கள் இறே ஸ்வ தந்த்ரனைத் தஞ்சமாகப் பற்றின ஆழ்வார்கள் பதின்மரும் இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது ஆகையாலே அவர்கள் பாசுரம் ப்ரமாணமாக வன்று

அல்லாத ஆழ்வார்கள் அனைவரும் தமக்கு அங்க பூதராம் படியான ஆதிக்யத்தை யுடைய நம்மாழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி
தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே ஸ்வ தந்த்ரனை உபாயமாகப் பற்றி இவர்கள் இப்படிப் படுவதே என்று ஆழ்வார் பதின்மரையும் அபஹஸித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்று சதுரராய் இருப்பார் ஒரு சர்வாதிகர் யுண்டு
இவருடைய பாசுரமான -கண்ணி நுண் சிறுத்தாம்பைப் ப்ரமாணமாகக் கொண்டு இந்த பரமார்த்த நிச்சயம் பண்ணக் கடவோம் என்கிறார்

அங்கன் அன்றிக்கே
உண்ட போது ஒரு வார்த்தையும் சொல்லுகையாவது -பகவத் அனுபவம் பண்ணின போது தச் சரம அவதியான
அடியார் யடியார் எம் கோக்கள் -என்பது
அந்த பகவத் விக்நம் பிறந்தால் சரமமான பாகவத சேஷத்வத்தையும் அழித்து
உங்களோடு எங்களிடை இல்லை – என்பராகையாலே
அவர்கள் பாசுரம் இப்பரமார்த்தத்துக்கு பிரமாணம் அன்று என்கிறார் ஆகவுமாம் –

—————–

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்-சேர்ந்து இருக்க வேணும் இறே பிராபகம் –

இப்பரமார்த்தத்தை இவர் ஒருவர் பாசுரம் கொண்டே நிர்ணயிக்க்கைக்கு அடி என் என்ன
ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர வேணும் இறே ப்ராபகம் -என்று இந்த ப்ரஸ்துதமான சரம உபாயத்துக்கு இடம் கொள்ளுகிறார் –
இவ்விடத்தில் வஹ்யமான அர்த்த சங்கதி பலத்தாலே சரம அதிகாரியான இவனுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்து இருக்க வேணும் இறே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்று இங்கனே ஸப்தத்தை வலித்து அருளிச் செய்து அருள்வர்-அது தான் எங்கனே என்னில் –
பிரதமத்தில் தன் ஸ்வரூபத்தை யுணர்ந்தால் ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கையாலும் –
அந்த ததீய ப்ரதானனான ஆச்சார்ய விஷயத்திலே பண்ணின பிரதம நமஸ்ஸிலே பிரதமத்தில் ஆச்சார்ய சேஷத்வமே ஆத்ம யாதாத்ம்ய ஸ்வரூபமாகையாலே
இந்த ஸ்வரூபத்துக்கு அநுரூபமாக வேணும் இறே ப்ராப்யமும் ப்ராபகமும் என்கிறது –
அங்கன் அன்றிக்கே சரம உபாய ஸ்தாப நத்திலே ப்ரதான்யேந பிள்ளை திரு உள்ளத்துக்கு தாத்பர்யமாகையாலே
யதா பாடம் அர்த்தம் ஆகவுமாம் –

—————–

சூரணை -411-

வடுக நம்பி-ஆழ்வானையும்-ஆண்டானையும்-இரு கரையர் என்பர்-

இனி வடுக நம்பி -இத்யாதியாலே -இவ்வர்த்தத்தில் ஆழ்வார்களே அல்லர் -ஆச்சார்யர்களிலும் அனுஷ்டாதாக்கள் யுண்டு என்கிறார் -எங்கனே என்னில்
ஆச்சார்ய ஏக பரதந்த்ரரான வடுக நம்பி பாஷ்யகாரர் திருவடிகளை ஒழியத் தேவு மற்று அறியேன் என்று இருக்கையாலே
அவர்க்கு அத்யந்தம் அந்தரங்கரான கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் பெருமாள் திருவடிகளிலும் ப்ரேம யுக்தராய் இருக்கிற
ஆகாரத்தைக் கொண்டு இரு கரையர் என்பர் என்று இவ்வர்த்த ப்ராபல்ய ஹேதுவாக அருளிச் செய்கிறார் –

——————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

இனி ப்ராப்யத்துக்கு ப்ரதம பர்வம் இத்யாதியாலே -ப்ராப்யத்துக்குச் சேர வேணும் இறே என்று
ப்ரஸ்துதமான ப்ராப்யத்தை விவரண ரூபேண நிர்ணயிக்கிறார் -எங்கனே என்னில் –
முன்பு ப்ரஸ்துதமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ராப்யத்தினுடைய பிரதம பர்வமாகச் சொல்லுகிற ஆச்சார்ய கைங்கர்யமாவது
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -என்கையாலே
அவ்வாச்சார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமான பகவத் விஷயத்திலே கைங்கர்யத்தை –
மத்யம பர்வதமான பகவத் கைங்கர்யமாவது -மத் பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் ச பூஜ நீயா விசேஷத -என்று
திருமுகப் பாசுரம் யுண்டாகையாலே பகவத் பிரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை –
சரம பர்வமான பாகவத கைங்கர்யமாவது -ஆச்சார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவனை உகந்து ஆதரிப்பது -இன்ன ஆச்சார்யனுடைய அபிமான அந்தர் கதனாய் வர்த்திக்கிறவன் அன்றோ
என்றதாகையாலே அவர்கள் உகப்புக்கு மூலமான ஆச்சார்ய விஷயத்தில் கைங்கர்யத்தை –

—————

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

—————-

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இனி இது தான் துர் லபம் -என்றது இந்த ஸ்வரூபம் ஸர்வ சாதாரணமான பின்பு புருஷார்த்த காஷ்டையான இவ்வாச்சார்ய கைங்கர்யம்
ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு எல்லாம் லபிக்குமோ என்னில் -தத்ராபி துர் லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்கையாலே
இது மிகவும் துர் லபம் என்கிறார் –

—————–

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

விஷய ப்ரவணனுக்கு இத்யாதி -இத்தால் -யுக்தமான தவ்ர் லப்யத்தை விசதமாக உபபாதிக்கிறார் -அதாவது
ஹேய தயா ஸம் பிரதிபன்னங்களான ஸப்தாதி விஷயங்களிலே மண்டினவனுக்கு அத்தை த்யஜித்து ஸமஸ்த கல்யாண குணாத் மகமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தைப் பற்றும் இடத்தில்
த்யாஜ்ய உபா தேய விபாக ஞான மாத்ரத்தாலே அவனுக்கு அது காதாசித்கமாக சம்பவிக்கவும் கூடும் –
ஆகையால் அவ்வருமை போலும் அன்று முதலடியான பகவத் கைங்கர்யத்தில் நில்லாமல் சரமமான
ஆச்சார்ய கைங்கர்யத்தில் அபி ருசி உண்டாகைக்கு உள்ள அருமை என்கிறார் –

——————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் -என்றது அநாதி வாஸநா வாஸிதமான ஸப்தாதிகளில் ருசி பிறந்த பின்பு அத்யந்தம் அபரிசிதமான பகவத் விஷய அபி முக்யம்
கூடும்படி தான் எங்கனே என்ன அவை
ஐங்கருவி கண்ட இன்பம் -என்றும்
சம்பாசலம் பஹுல துக்கம் -என்றும் -இத்யாதியில் படியே
அல்பமாய் -அஸ்திரமாய் -அதி ஜூகுப்ஸா விஷயமுமாய் –
லோக கர்ஹா ஹேதுவுமாய் உதர்க்கத்திலே நரகவாஹங்களுமாய் இருக்கக் காண்கையாலே
அவற்றை விடுகைக்கும் அவற்றுக்கு எதிர் தட்டான பகவத் விஷயத்தைப் பற்றுகைக்கும் சம்பாவனை யுண்டு –
இங்கு அது செய்ய ஒண்ணாது
இனி முதலடியான பகவத் விஷயம் நிரஸ்த ஸமஸ்த தோஷ கந்தமாகையாலே தோஷ தர்சனம் பண்ணி விடவும் வேறு ஒன்றைப் பற்றவும் அஸக்யம் -என்கிறார் –

———–

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும்-

அது எங்கனே என்ன -தோஷம் யுண்டானாலும் -என்று தொடங்கி இவ்வர்த்தத்தை விஸதீ கரிக்கிறார் -அதாவது
ஆழ்வார் -கடியன் கொடியன் -என்று தொடங்கி
விஸ்லேஷ தசையிலே அவன் குண ஹானிகளை விசதமாக அருளிச் செய்து –
கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்று அக் குண ஹானிகள் அவனுடையனவான பின்பு உல் லோகமான என்னுடைய நெஞ்சு
அவற்றை இப்போதே அபரோஷித்து அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படா நின்றது -என்று அருளிச் செய்கையாலே
அவையும் அல்லாத குணங்களைப் போலே அநுபாவ்யமாய் இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோக விபரீதம் இத்யாதி -தோஷதஸ் த்யாஜ்யமாயும் குணதஸ் உபா தேயமாயும் போருகிற லௌகிக வஸ்துவில் பற்றின நெஞ்சு
போல் அன்றிக்கே ஹேய ப்ரத்ய நீகமான பகவத் விஷயத்தைப் பற்றின நெஞ்சு உல்லோகமாய் இறே இருப்பது என்கிறார் –

—————-

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –இத்யாதி -அவ்வஸ்து லோக விஸஜாதீயம் என்னா
தத் குணம் உபா தேயமானவோ பாதி தோஷமும் உபா தேயமாகக் கூடுமோ என்னில்
குணம் உபா தேயமாகைக்கு ஹேதுவான நிருபாதிக ஸம்பந்தம் அத் தோஷத்துக்கும் உண்டான பின்பு விட ஒண்ணாது இறே என்கிறார் –
எங்கனே என்னில் –
ஸோ பாதிக ஸம்பந்தமான பர்த்ரு விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் பதிவ்ரதையான பார்யைக்கு
புருஷாந்தரங்களைப் பற்ற உபா தேயமாகக் காணா நின்றால் நிருபாதிக விஷயத்தில் சொல்ல வேண்டா விறே -என்று கருத்து
இவ்விடமும் நாயகி வார்த்தா ப்ரகரணம் இறே –

———–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

இவ்வர்த்தம் எங்கே கண்டது என்னில் -நிர் க்ருணன்-இத்யாதி
என் தவள வண்ணர் தகவுகளே -என்று தாயானவள் இவ்வளவில் உதவாதவன் க்ருபா ஹீனன் காண் என்று
சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே தலைமகளானவள்
தகவுடையவனே -என்று கிருபை ஒன்றுமே நிரூபகமாகச் சொன்னாள் இறே –

————-

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
ஸ்நேஹமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இப்படிச் சொல்லும்படி -இத்யாதி -அநாதி காலம் ஸப்தாதிகளுடைய அலாபத்தாலே சோகித்துத் போந்த என்னை
தன்னையே நினைத்துக் கூப்பிடும்படி பண்ணிற்றுத் தன்னுடைய கேவல கிருபையாலே என்று
மிக விரும்பும் பிரான் -என்று மேன்மேலே அவ்விஷயத்திலே
அதிசயிதமான ஸ்நேஹ உபகார ஸ்ம்ருதிகள் உண்டாய்த்து இறே என்கிறார் –

—————-

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச் சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

ஆனால் ஓர் இடத்திலும் அவன் கிருபா ஹீனன் என்று தோற்றின விடம் இல்லையோ என்னில் -நிர் க்ருணனாக -இத்யாதி
விஸ்லேஷ அஸஹத்வத்தாலே பிராட்டியும் -பிராட்டி தசையைப் ப்ராப்தரான ஆழ்வார் தாமும்
அவன் கிருபா விஷயமான அதிசயங்கள் நடந்தாலும்
க்யாதஸ் ப்ராஞ்ஞஸ் க்ருதஞ்ஞஸ் ச ஸா நுக்ரோஸஸ் ச ராகவ ஸூ வ்ருத்தோ நிரநுக்ரோச
சங்கே மத் பாக்ய சங்ஷயாத் மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய ஸமர்த்தாவபி தவ் யன் மாம் நாவே ஷேதே பரந்தபவ் -என்றும்
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் – என்றும்
சங்கைக்கு அவிஷயமான ஸ்தலத்திலே சங்கிகைக்கு ஹேதுவை
ஸ்வ கதம் என்றே அனுசந்தித்தார்கள் என்கிறார் –

————-

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

குண தோஷங்கள் இத்யாதி -ஆக இப்படி இவ்விஷயத்தில் குண தோஷங்கள் இரண்டும் ஸ்வ வ்யதிரிக்த ஸ்மரணமும் பொறாதபடி
ஸ்வ அதீனமாக்கி விடும் என்று சரம புருஷார்த்த நிஷ்டா தவ்ர் பல்யத்தை நிகமிக்கிறார்
அதில் அவனுடைய குணமானது புருஷார்த்த காஷ்டையான ததீயர் அனுபவ ரஸத்தைக் குலைத்து
அவ்வருகு போக ஒட்டாத படி தன்னளவிலே துவக்கும் -எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே பாகவத அனுபவம் பண்ணி இழிந்த ஆழ்வாரை அவர்களுக்கு நிரூபகத்வேந வந்த அவனுடைய
கல்யாண குண விக்ரஹ சேஷ்டிதங்கள் தானே ஆழங்கால் படுத்தித் தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்
தனித்தனியே விடாய்க்கும் படி அபி நிவேசத்தை விளைத்தது இறே -அநந்தரம் -முடியானே யிலே –
அவனுடைய தோஷ அனுசந்தானம் ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கை யாவது -விஸ்லேஷ தசையில்
பந்தோடு கழல் மருவாள்
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக்கு அணியிலும் தழலாம் -இத்யாதியில் படியே
ஸப் தாதிகளான ஷூத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் –

————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இவ்விடத்திலே புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும் என்கையிலே தாத்பர்யமாகையாலே
நித்ய ஸத்ருவாய் இறே இருப்பது -என்று
கச்சதா மாதுல குலம் -என்கிற ஸ்லோகத்தில்
நித்ய சத்ருக்ந -என்கிற இடத்தை உதாஹரிக்கிறார் –
நித்ய ஸத்ரு என்றது -பரத அநு வ்ருத்திக்கு விரோதியான ராம ஸுந்தர்யத்தை இறே –

—————-

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

இப்படி ப்ராப்யத்தை அறுதியிட்டால் இத்யாதி -கீழே ஸ்வரூபத்துக்கும் -என்ற இடத்தில்
ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு அநந்தரம் இவ்வளவாக ப்ராப்ய ஸ்வரூப யாதாத்ம்யத்தை அறுதியிட்டு
இனிமேல் இப்படி அறுதியிட்ட ப்ராப்யத்துக்கு அனுரூபமாக வேணும் இறே ப்ராபகமும் -என்று
ஸதாசார்யனே உத்தாரகன் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –

—————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

அது என் என்ன -அல்லாத போது ப்ராப்ய பிராபகங்களுக்கு ஐக்யம் இல்லை என்று அநிஷ்ட ப்ரஸங்கம் பண்ணுகிறார் -அதாவது –
யதாக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேதஸ் ப்ரேத்ய பவதி -என்கிற
தத் க்ரது ந்யாயத்தாலே யதா ஸங்கல்பமாயே பலம் இருப்பது என்கிற நியமத்தை அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –

————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

இனி -ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி -ஏவம் விதமான ஆச்சார்யனுடைய வைபவத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்படி உத்தாரகனான ஆச்சார்யன் ஆஸ்ரயிக்கிற சேதனனுக்கும் ஆஸ்ரயணீயனான பரம சேதனனுக்கும் உபகாரகன் என்னும் இடத்தையும் பிரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

எங்கனே என்னில் -ஈஸ்வரனுக்கு இத்யாதி –
பஹூதா விஜாயதே -என்று ஓதப்படுகிற அநேக அவதாரங்களாலும் அலப்யமாம் படி -அஹம் மமதா தூஷிதமான சேதன வஸ்துவை
ஸார்வ பவ்மனான ராஜாவுக்கு சதுரரான சமந்தர் ஷூத்ரரான அந்நியரை விரகாலே ஜெயித்துக் கொடுக்குமா போலே
அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித
யானே நீ என் உடைமையும் நீயே -என்னும் படி பண்ணி உபகரித்தான்
சேதனனுக்கு இத்யாதி –
அபவரகே ஹிரண்யம் நிதாய உபரி ஸஞ்சரந்தோ ந த்ரஷ்யந்தி என்கிறபடியே
அநாதி காலம் அவிநா பூதமான பகவத் ஸம்பந்த ஞான ஹீனனான சேதனனுக்கு
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே
அந்த ப்ரஹ்ம ஞானத்தாலே ஸச் ஸப்த வாஸ்யனாம் படி சம்பந்த ஞான பிரதனாயக் கொண்டு சேஷியை உபகரித்தான்
அவஸ்தித மவஸ்தித தன்நபுந ரத்ர சித்திரம் மஹா நிதிம் பிரதமிகாரச ஸ்ததபி தேஸிகா பாங்க பூ ப்ரியா ந கிஷயம் ப்ரியோ ந கிமயம் கிமே தாவதா ந சேதய முதாரதீரு சித கரேகோ ஜந -என்னா நின்றது இறே

—————

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

ஈஸ்வரனும் தானும் இத்யாதி -அவாப்த ஸமஸ்த காமனான ஈஸ்வரன் தானும்
கடக க்ருத்யமான இந்த உபகாரகத்வ ரஸ்யதையாலே அந்த உபகாரகமான ஆச்சார்யத்வத்தை ஆதரித்து இருக்கும் –

————

சூரணை -431-

ஆகை இறே –
குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் –
அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னில் -அவ்வாதரம் யுண்டாகை இறே -ஆச்சார்யாணாம் அஸாவசா வித்யா பகவத்த-என்கிற பகவான் குரு பரம்பரைக்குள்ளே த்வய ரூபேண அந்வயித்ததும்
அவதார தசையிலே அர்ஜுன வ்யாஜேன தேர்த்தட்டிலே நின்று ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே சரம ஸ்லோக பர்யந்தமான உபாய உபதேசம் பண்ணிற்றும்
விபீஷண வ்யாஜேந -ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம –
என்று அபய பிரதானம் அருளிச் செய்ததும் -என்கிறார் –
இப்படிப்பட்ட உபகாரம் பிறந்து படைக்க வேணும் என்று அவதரித்தான் என்ற இடம்
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து -என்கிற பாட்டில் அருளிச் செய்தார் இறே
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்தரஸ்ய-என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி என்னும்படியான இரண்டு தலையையும் சத்தை யுண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு அவதரித்து
தூத்ய முகேன கடகனாய் இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போன தானே இறே
அர்ஜுனனைக் குறித்து -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றதும் கார்யகரமாய்த்தது இல்லை –
அது பின்புள்ளார்க்கு ஸதாசார்ய பலமாய்த்தது இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை -என்கிறது

——————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் –
ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இப்படி உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் பிரதியுபகாரம் பண்ண விரகுண்டோ -என்று -ஆச்சார்யனுக்கு -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார் -அதாவது
ஏதேனுமாகச் செய்த அம்சம் தன்னுடைய ஸ்வரூப ஸித்யர்த்தமான கிஞ்சித்காரமாமது ஒழிய ஸத்ருசமாகப் பண்ணினான் ஆகலாவது
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃது என்று தானும் அதினுள்ளே அடங்கும்படி
அவ்வாச்சார்யன் தனக்கு உபகரித்த உபய விபூதியையும்
தன்நிர்வாஹகனான ஈஸ்வரனையும் ஒழிய
இன்னமும் இப்படி விபூதி த்வயமும் தன் நிர்வாஹகமும் ஸம்பாவிதமாகில் யாய்த்து என்கிறார்
அவை அஸம்பாவிதம் என்று பொன்னுலகாளி யில் படியே அவன் உபகரித்தவை தன்னையே உபகரிக்கப் பார்க்கில் அது பிரதியுபகாரமாகக் கூடாது இறே
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சன -என்னா நின்றது இறே –

————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

ஆனால் ஆச்சார்யனும் இப்படி பிரதியுபகார யோக்யன் அல்லனாகில் பழைய ஈஸ்வரன் தன்னையே பற்றினாள் வருவது என் என்ன
ஈஸ்வர ஸம்பந்தம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது –
ஈஸ்வரன் கிருபா விஷ்ட ஸ்வ தந்திரனாகையாலே அந்த ஸ்வா தந்தர்யத்தினுடையவும் கிருபையினுடையவும் கார்யமான
ஷிபாமி -என்றும்
ததாமி -என்றும்
சொல்லப்படுகிற பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கும் தத் சமாஸ்ரயணம்
ஆச்சார்யன் அத்யந்த பாரதந்தர்ய விஸிஷ்ட க்ருபாவானாகையாலே அவனை ஆஸ்ரயிக்கை கேவல மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்கிறார் –
சித்திர் பவதி வா நேதி ஸம்ஸ யோச்யுத சேவிநாம் அஸம்சயஸ் து தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் -என்னா நின்றது இறே

————–

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

பகவல் லாபம் இத்யாதி -இத்தால் அந்த ஈஸ்வரன் உபயத்துக்கும் ஹேதுவானாலும் அவன் நிருபாதிக சேஷியான பின்பு
அவனையே பற்றுகை அன்றோ பிராப்தம் என்ன
அந்த பகவ ஞான பூர்த்தி தான் ஆச்சார்ய உபதேசத்தால் அல்லது கூடாமையாலே
அதுவும் இந்த ஆச்சார்யனாலே ஸித்திக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

இனி ஆச்சார்ய லாபம் -பகவானாலே என்றது -இப்படி மோக்ஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை லபிக்கும் போது
ஈஸ்வரஸ்ய ச சவ்ஹார்த்தம் -இத்யாதியில் படியே
இவ்வாச்சார்ய பிராப்தி பர்யந்தமாக அவனே நடத்திக் கொண்டு போர வேண்டுகையாலே பகவானாலே -என்கிறார் –

—————-

சூரணை -436-

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே-இத்யாதி –
அக்னிஸ் ஸ்வர்ணஸ்ய குருர் பவாம்ஸ் ஸூர்ய பரோ குரு மமாப்ய கில லோகாநாம் குருர் நாராயணோ ஹரி -என்கிறதினுடைய
ஸாமான்யமான குருத்வத்தை உபகரித்து விடுகை அன்றிக்கே இவனுடைய அஞ்ஞான அசக்திகளை உள்ளபடி அறிந்து
அதுக்கீடான வழி கண்டு ரக்ஷிக்கும் படி விசேஷித்து அவனுக்கே வகுத்த விஷயமாக ஓர் ஆச்சார்யனை உபகரித்த குரு உபகாரத்தாலே
ஆச்சார்யன் இருவருக்கும் உபகாரகன் -என்று தொடங்கி இவ்வளவாக உபகாரகனாக உபபாதித்த ஆச்சார்யானைக் காட்டிலும்
அதிசயித உபகாரகன் ஸர்வ ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் என்னும் இடம் உபபாதித்த தாய்த்து-

————

சூரணை -437-

ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

இப்படி உத்தாரக-உபகாரகத்வங்களாகிற உபய ஆகார விஸிஷ்டனான சதாச்சார்ய அபிமானத்தாலே ஒருவனுக்கு உஜ்ஜீவனம் உண்டாக வேணும் என்னும்
அர்த்தத்தை அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் -ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
இப்படி மஹா உபகாரகனான ஆச்சார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானிக்கும் படி தத் ஸம்பந்த ஞானம் குலையாதபடி வர்த்தித்தால்
ஸ்வரூப உஜ்ஜீவன ஹேதுக்களான ஞான வைராக்ய பக்திகளைத் தனக்கு உண்டாக்குகை அவ்வாச்சார்ய க்ருத்யமேயான பின்பு அவை ஸர்வதா ஸம்பாவிதங்கள் –
ஏவம் வித ஸம்பந்த ஞானத்தில் ப்ரச்யுதனானவனுக்கு ஒரு ஸூ ஹ்ருத விசேஷங்களாலே இவை ஸம்பவித்தாலும் சதாச்சார்ய ப்ரஸாத முகேந தத்வ ஞான உபதேச பூர்வகமாக வந்தது அல்லாமையாலே
அவை அர்த்த க்ரியா கார்யகரமாக மாட்டாது –

————

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

அது என் போலே என்ன -தாலி கிடந்தால் -என்று தொடங்கி -லோக த்ருஷ்டி ப்ரக்ரியையாலே அத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பாரதந்த்ர ஏக நிரூபிணியையான ஸ்த்ரீக்கு ஸ பர்த்ரு காத்வ ப்ரகாசகமான மங்கள ஸூத்ர ஸத் பாவ மாத்ரத்தாலே
பின்பும் ஸர்வ பூஷண பூஷார்ஹையாய் இருக்குமா போலேயும் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை-439-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

தாமரையை அலர்த்தக் கடவ இத்யாதி -இத்தால்
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ ப்ரச்யுதஸ்ய துர் புத்தே ஜலாத பேதம் கமலம் சோஷயதி ரவிர் ந தோஷயதி -என்கிற
பிரமாண ஸித்த த்ருஷ்டாந்தத்தாலும் அவ்வர்த்தத்தை விசதமாக்குகிறார் -எங்கனே என்னில்
நியமேன ஜலஜத்துக்கு அஜ்ஜல சம்பந்தம் யுள்ள போது விகாஸ கரணனான திவாகரன் அஜ்ஜல ஸம்பந்த ரஹிதமான தசையிலே
கமல பந்துவான தானே அதுக்கு நாஸ கரனாமாப் போலே ஸூ சீலனுமாய் ஸூ லபனுமாய் சதாச்சார்ய அபிமான அந்தர் பூதனான போது
ஸ்வா தந்தர்யத்தால் வந்த பிரதாபோத்தர்ஷத்தை உடைய ஈஸ்வரன் தானே ஸ்வ ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் என்னும் இடமும் அவ்வாச்சார்யா ஸம்பந்தம் குலைந்தால் -ஸர்வ சேஷியாய் ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான அவன் தானே ஸ்வரூப நாஸகரனாம் என்னும் இடமும் தோற்றுகிறது –
ந தோஷயதி -என்கையாலே பின்னை ஒரு காலும் இவனுக்கு உஜ்ஜீவனம் இல்லை என்னும் இடம் தோற்றுகிறது –

——————-

சூரணை -440-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இனி இத்தை ஒழிய பகவத் ஸம்பந்தம் துர் லபம் -என்றது நீரைப் பிரிந்த தாமரைக்கு ஆதித்ய கிரணம் விகாஸ கரம் அல்லாதவோ பாதி
ஸதாசார்ய சம்பந்த பிரச் யுதனானவனுக்கு ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனோடு உண்டான ஸம்பந்தமும்
ஸ பலமாகாது என்று கருத்து –

—————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –பெரும்குடி என் என்னில் –

இரண்டும் அமையாதா இத்யாதி -ஆனால் இப்படி விலக்ஷணமான ஆச்சார்ய ஸம்பந்தமும் தத் ஸம்பந்தம் அடியாக வருகிற பகவத் ஸம்பந்தமுமே
ஒருவனுடைய உஜ்ஜீவனத்துக்குப் போந்திருக்க -இரண்டுக்கும் நடுவே -ஸாத்விகைஸ் ஸம் பாஷணம் -என்கிற ஸாத்விக அங்கீ காரத்தையும்
ஸாதனம் என்று கொண்டு பிரஸ்தாவிப்பான் என் என்ன -என்னுதல்
அன்றிக்கே
நடுவில் பெரும் குடி -என்று மத்யம பர்வத்தில் சொன்ன பாகவத கைங்கர்ய பிரதிசம்பந்திகளான ததீயர் என்னுதல்
அங்கனும் அன்றிக்கே
ததீய சேஷத்வ ப்ரதிபாதகமான மத்யம பத நிஷ்டரான ததீயர் என்னுதல்
இப்படி ததீய சமாஸ்ரயணத்தையும் தனித்துச் சொல்லுகிறது என் என்ன –

———–

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

கொடியை இத்யாதி -பல பர்யந்தமாம் படி உத்தரிப்பிக்கிற கொள் கொம்பிலே -அது இல்லாவிடில் தரைப்படும்படியான கொடியை ஏற்றும் போது தத் ஸஹாயமான சுள்ளிக் கால்களில் பற்றுவித்தே ஏற வேண்டினவோ பாதி
வல்லிக் கொடிகாள் -என்னும் படி பரதந்த்ர ஸ்வரூபனான ஆத்மா அதிபதியாத படி உத்தாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயிக்கும் போது தத் ஸத்ருசரான ததீய சமாஸ்ரயணமும் ஸர்வதா அவர்ஜய நீயம் என்கிறார் –

—————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

இனி மேலே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற பாசுரத்தில் -ஈஸ்வரனை உபாயமாகப் பற்றும் போது இறே -என்று உபக்ரமித்து
உப பாதித்திக் கொண்டு போந்த பரமார்த்த விசேஷத்தைத் தலைக் கட்டுகிறவர்
தத் அந்ய உபாயங்களினுடைய அனுஷ்டான அனுபபத்தி பூர்வகமாக தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து நிகமிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ஸ்வா தந்தர்ய பயத்தாலே -இத்யாதி
ஸ்வ யத்ந ரூபமான பக்த் யுபாய அனுஷ்டான தசையிலே பல ஸித்தி ரஹிதமான கேவல பகவத் சமாராதந ரூபேண அனுஷ்டிக்கிலும்
நம்முடைய இவ்வநுஷ்டான பரிபாக தசையில் அல்லது பல ப்ரதனான பகவானுடைய பரம ப்ரீதி சம்பவியாது என்று
ஸ்வ ஸ்வா தந்தர்ய கர்ப்பமாய் அல்லது இராமையாலே ஸ்வரூபஞ்ஞனுக்கு அந்த ஸ்வா தந்தர்யம் ஸ்வரூப ஹானி என்ற பயத்தாலே ஸ்வயமேவ நெகிழப் பண்ணிற்று
பர கத ஸ்வீ கார ஹேதுவான பகவத் ஸ்வா தந்தர்யம் -வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்கைக்கும் பொதுவாகையாலே அவ்விஷயத்தில் ப்ரபத்தியும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று பதண் பதண் என்கையாலே தான் நெகிழப் பண்ணிற்று என்கிறார் –

————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

ஏவம் வித பய ரஹிதமாய் அதி ஸூ லபமான ஆச்சார்ய விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவனுக்கு வருவதொரு அபாயமும் இல்லையோ என்ன
ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய ஸ்வீ காரத்துக்கு விஷய பூதனாகை ஒழிய
அவ்வாச்சார்யனையும் தன் பேறாகத் தான் பற்றுமது காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி இவ்வதிகாரிக்கு அநர்த்தாவஹம் என்கிறார் -எங்கனே என்னில்
பவித்ரம் வை ஹிரண்யம் -என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அர்த்த லுப்தனானவன் மேல் வரும் அநர்த்தத்தைப் பாராதே
காஞ்சன நிமித்தமான கால தனத்தைக் கைக்கொண்டு அத்தை அழித்து இருந்த நாள் சரீர போஷணாதிகளிலே உப யுக்தமாகவும் பெறாத படி
பாமர பரிக்ரஹ ஹேதுக்களான அங்குலீயகாதி ஆபரணங்கள் ஆக்கி தரித்துப் பின்னும் அநர்த்தமே சேஷிப்பித்துக் கொண்டு விடுமா போலே
இவனுக்கு ஆச்சார்யவான் என்கையாலே வரும் லோக பரிக்ரஹ மாத்ரமே பலமாம் அளவாய்
அத்ர பரத்ர ஷாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்கிற படியே
அவன் உகப்பால் வரும் அந வரத போகம் இல்லகாத அளவே அன்றிக்கே அநர்த்தமான ஸ்வரூப காணியும் சம்பவித்தது விடும் என்கிறார் –
இத்தால் இந்த உபாயமும் கீழில் பிரபந்தத்தில் ஸ்வ கத பர கத விபாகேந நிரூபித்த உபாயத்தினுடைய துறை விசேஷ மாத்ரமே யாகிலும்ந
இத்தை சரம உபாயமாகத் தனித்து எடுக்கையாலே இதில் ஸ்வ கத ஸ்வீ கார தோஷத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————–

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

இப்படியான பின்பு -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று
இவ்வுபாயத்தினுடைய  பரகத ஸ்வீ காரமே பரமார்த்தம் என்று அவதரித்து அத்தை நிகமிக்கிறார்–

————–

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கை விட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்கக்
கடவன் அல்லன் –

கைப்பட்ட பொருளை -இத்யாதி யாலே தாம் நிச்சயித்த பரமார்த்தத்திலே நிஷ்ணா தரான அதிகாரிகளைக் குறித்து
அவர்களுக்கு நேரே ப்ரத்யயம் பிறக்கும் படியாக–வேதம் அநூச்யா சார்யோந்தே வாஸிந மநு ஸாஸ்தி -என்கிற கணக்கிலே
அந்த பரமார்த்த விஷயமான அநேக பிரமாண ப்ரதிபாதித அனுஷ்டான விசேஷங்களை அநு ஸாஸிக்கிறார் -எங்கனே என்னில்
ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் ய உபா ஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷதி ஷிதவ் -என்கையாலே
தன்னோடு ஸஜாதீயனாய் ஸந்நிஹிதனாய் நின்று பி அஞ்ஞான அந்தகார நிவ்ருத்தி பூர்வகமாக அபிமானித்த ஆச்சார்யனை அநாதரித்து
அறிந்தன வேதம் -இத்யாதியில் படியே மறை பொருளாய் துர்லபமான வஸ்துவை இச்சிக்கக் கடவன் அல்லன் -என்கிறார் –

——————-

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

விடாய் பிறந்த போது -இத்யாதி –
சாஷுர் கம்யம் த்யக்த்வா ஸாஸ்த்ர கம்யம் து யோ பஜேத் ஹஸ்தஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்தமபி வாஞ்சதி -என்கையாலே
தாஹித்தவன் தன் கைப்பட்ட தண்ணீரை அதி ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்து அத்தைத் தரையிலே உகுத்து
அத்தாஹ நிவ்ருத்தி யர்த்தமாக தேச காலாதி விப்ரக்ருஷ்டங்களான ஜீமூ தாதிகளில் ஜலங்களை ஜீவிக்க ஆதரிக்கும் ஜீவனைப் போலே
தனக்கு முகஸ்தனாய் நிற்கையாலே ஸூலபனுமாய் ஸூ சீலனுமான ஆச்சார்யனை அநாதரித்து
தமஸ பரமோ தாதா -இத்யாதிஸாஸ்த்ர ஏக ஸமதி கம்யனாய் –
முகில் வண்ண வானத்திலே -அவாக்ய அநாதர என்று இருக்கும் முகில் வண்ணனையும்
தத் சமனனான கடலிடம் கொண்ட கடல் வண்ணனையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதிப்படியே அவதரித்த மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தனான மதுரவாற்றையும்
அவ்வாற்றில் தேங்கின தயரதன் பெற்ற மரகத மணித்தடம் போன்ற அர்ச்சாவதார ஸ்தலங்களையும்
கநித்ர பிடகாதி ஸாத்யமான கூப ஜலம் போலே யம நியமாதி ஸாத்யமாய்க் கொண்டு அந்தர்யாமியான நிலையும்
முமுஷை யுடையனாய்
விசேஷஞ்ஞனாய் இருக்குமவன்
ஆசைப்படக் கடவன் அல்லன் -என்கிறார் –
இனி ஜீமுதாதி ஸ்தலங்களில் ஜல ஸாம்யம் உண்டானாப் போலே பரத்வாதிகள் எல்லாவற்றிலும் வஸ்து ஸாம்யம் யுண்டானாலும்
அத்யந்த ஸூ லபமான அர்ச்சாவதாரம் போலே அவை அதி ஸூலபம் அன்று என்று கருத்து –

—————–

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —

ஆனால் அவை இவ்வதிகாரிக்கு அநுபாதேயங்கள் ஆகின்றனவோ என்ன -பாட்டுக் கேட்க்கும் இடமும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
நின்ற வண் கீர்த்தியும் -என்கிற பாட்டின் படியே –
ஹாவு ஹாவு -என்கிற பாட்டுக் கேட்க்கும் பரமபதமும்
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கண -என்கிற ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கூப்பீட்டுக்குச் செவி கொடுத்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யூஹ ஸ்தலமும்
அக்கூப்பீடு கேட்ட அநந்தரம் பயிர்த்தலையிலே பரண் இட்டுக் காத்துக் கிடந்தவன் பயிரில் பட்டி புகுந்த அளவிலே
அப்பரணில் நின்றும் கையும் தடியுமாய்க் கொண்டு குதித்து அத்தை அடித்து விடுமா போலே
தனக்கு ரஷ்யமான விபூதியை ஹிரண்ய ராவணாதிகள் புகுந்து அழிக்கும் அளவிலே அவர்களை அழியச் செய்க்கைக்காக
ஸ ஹி தேவைரு தீர்ணஸ்ய
ஜாதோசி தேவ தேவேஸே சங்க சக்ர கதாதர -என்றும் இத்யாதிகளில் படியே
ஸா யுதனாய்க் கொண்டு குதித்த அவதார ஸ்தலமும்
மலையாளர் வளைப்புப் போலே தன் நினைவு தலைக்கட்டும் அளவும் இட்ட வடி பேர விடாமல் வளைத்துக் கொண்டு இருக்கிற அர்ச்சா ஸ்தலமும்
உறங்குகிற பிரஜை தான் அறியாதே கிடக்க அதன் பக்கல் குடல் தொடக்காலே பாலும் தயிருமாக ஊட்டித் தரிப்பிக்கும் தாயைப் போலே
ஸர்வ தசையிலும் சத்தையை நோக்குகிற அந்தர் யாமியானவனும்
இப்படிப்பட்ட பரத்வாதிகள் எல்லாம் தனக்கு என்ன வகுத்த துறையான ஸதாசார்யனே என்று அத்யவசித்து இருக்கக் கடவன் என்கிறார் –
யேநைவ குருணா யஸ்ய ஸம்யக் வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ -என்னா நின்றது இறே –

—————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

இவனுக்கு பிரதிகூலர் இத்யாதி -கீழே ஈஸ்வர உபாய நிஷ்டனான ப்ரபந்ந அதிகாரிக்கு அனுகூல பிரதிகூல பிரதிபத்தி விஷய பூதராவார்
அஹம் கர்த்தா அஹம் போக்தா என்று இருக்கும் ஸ்வ தந்த்ரரும்
அவர்கள் அளவு அன்றிக்கே -சேஷத்வத்துக்கு இசைந்து தங்களை ப்ரஹ்ம ருத்ராதி தேவதாந்த்ர சேஷம் என்று இருப்பாரும்
இப்படி ஸ்வரூபத்தில் அந்யதா ஞான நிஷ்டராய் இருக்கை யன்றிக்கே ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே நிஷ்டரான
ஆச்சார்ய பரதந்த்ரரை அனுகூலர் என்கிறார்
இனி ஈஸ்வர பர தந்த்ரரை உபேஷணீயர் என்றது ஸதாச்சார்ய அபிமான பூர்வகமான பகவத் பாரதந்தர்யம் இன்றிக்கே
கேவலம் ஈஸ்வர பரதந்த்ரரானவர்கள் இவ்வதிகாரிக்கு ஆதரணீயர் அல்லாமையாலே –

—————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

ஞான அனுஷ்டானங்கள் இத்யாதி -உபய பரிகர்மித ஸ்வாந்தனுக்கு அல்லது உபாய நிஷ்பத்தி கூடாமையாலே
ப்ரபந்ந அதிகாரிகள் அல்லாத உபாஸகர்க்கு அவை உபாய அங்கமாய் இருக்கும்
ப்ரபந்நரில் சரம அதிகாரியான இவனுக்கு தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ஞான அனுஷ்டானங்கள் எல்லாம்
ப்ரத்யகஷேண ஸ்வாச்சார்யனுக்கு உகப்பாய் இருக்கையாலே கேவலம் உபேயமாயே இருக்கும் –

—————

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் -இத்யாதி -இத்தால் இப்படி ஸ்வரூப அனுரூபமான விஹித அனுஷ்டானங்களில் ப்ரவ்ருத்தி
ஸ்வாச்சார்யனுக்கு உகப்பானவோபாதி நிஷித்தங்களில் நிவ்ருத்தியும் அவனுக்கும் உகப்பாகையாலே அத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது
இச் சரம அதிகாரிக்கும் ஸாஸ்த்ரங்களாலே நிஷேதிக்கப் படுகிற அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களில் ப்ரவ்ருத்திக்கை
சரம அவதியில் நிற்கிறவன் தன்னையும் தன் அதிகாரத்துக்கு அநர்ஹமான ஸம்ஸாரிகளையும் ஸ்வ புத்ர சிஷ்யாதிகளையும்
ஸ்வரூப நாஸத்தைப் பண்ணுவிக்கையாலே பரித்யாஜ்யம் -என்கிறது –

—————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

சரம அதிகாரியான தனக்கும் இவ்வதிகாரத்தில் அநந்விதரான பிறருக்கும் ஓக்க
இந்த நிஷித்த அனுஷ்டான மாத்ரத்தாலே நாஸம் வரும்படி என் என்ன -தான் நசிக்கிறது -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விலக்ஷண அதிகாரியான தன்னுடைய நாசத்துக்கு ஹேது பிரதம பர்வமான பகவத் விஷயத்துக்கும் மத்யம பர்வமான பாகவத விஷயத்துக்கும்
சரம பர்வமான ஆச்சார்ய விஷயத்துக்கும் அபிமதமாகையாலே அதி குரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கை என்கிறார் –
பிறர் இத்யாதி -பகவத் ஸம்பந்த ஞான ரஹிதராய் -அத ஏவ பாகவத அபசார அநபிஞ்ஞரான ஸம்ஸாரிகளுக்கும்
அவர்களில் வ்யாவருத்தரான ஸ்வ புத்ர சிஷ்யாதிகளுமான பிறர் நசிக்கிறது
சரம அதிகாரியான தன்னை அநாதரிக்கையாலே வந்த பாகவத அபசாரத்தாலும்
தன்னளவு அவஸ்தா பரிபாகம் இன்றிக்கே இருக்கச் செய்தே தன்னுடைய அநவதா நத்தால் வந்த அனுஷ்டானங்களை
நம்முடைய ஜனகனானவன் ஆசரித்தது அன்றோ -நம்முடைய ஆச்சார்யன் ஆசரித்தது அன்றோ –
என்று அவற்றை ஆசரிக்கையாலும் -என்கிறார் –

—————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

ஆனால் அக்ருத்ய கரண அந்தர் பூதமான பர தார பர த்ரவ்ய அபி ருசி இவனுக்கு ஆகாது ஒழிகிறது -ஸாஸ்த்ரங்களிலே கர்தவ்ய தயா விதிக்கப்பட்ட
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களிலே போகம் அவிருத்தம் அன்றோ என்னில் -விஹித போகம் -இத்யாதி –
ஸாஸ்த்ர விஹிதமான அந்த ஸ்வ தாராதி போகம் நிஷித்தமான பர தார பர த்ரவ்யாதிகளில் போகம் போலே ப்ரத்யக்ஷமான லோக கர்ஹா ஹேதுவும் இன்றிக்கே
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு -என்னும்படி
பரோஷமான க்ரூர நரக அனுபவ ஹேதுவும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
இவன் ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமுமாய் பகவத் ஏக போகமுமாய் இருக்கையாலே
ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரசத்வ ரூபமான விஷய போகம் யுக்தமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா -என்று விதிக்கிற வேதாந்தார்த்த விருத்தமாய்
அவை வைதிக அக்ரேஸரராய் ஆச்சார்ய அதீன ஸ்வரூபரான விஸிஷ்ட அதிகாரிகளாலே
கர்ஹிக்கப் படுமதாய் -ஆச்சார்ய கைங்கர்ய போகமாகிற பரம ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமு மாகையாலே
அதுவும் இவ்வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்கிறார் –

————–

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்-ஸ்வரூபம் குலையும் –

இன்னமும் போக்யதா புத்தி -இத்யாதியாலே உபாஸ விடும் என்கிறார் -கரான மஹ ரிஷிகளைப் போலே ஸ்வ தாரத்தை ஸ்நாந திவஸத்திலே அங்கீ கரியா விடில்
ப்ரூண ஹத்யா தோஷம் யுண்டு என்கிற தர்ம புத்த்யா இவன் விஷயத்தை அங்கீ கரிக்கிலும்
தத் ஏக உபாயனான இவனுக்கு ஸர்வதா ஸ்வரூப ஹானியாயே விடும் என்கிறார் –

————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

அநந்தரம் -ஷேத்ராணி மித்ராணி -இத்யாதியாலே இந்த பிரகரண யுக்தமான ஆச்சார்ய விஷயத்தோ பாதி
ப்ரத்யக்ஷ விஷயமான பெரிய பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விண்ணப்பம் செய்த ஸ்லோகத்தில் அவஸ்தை யுண்டாக வேணும் என்று
இவ்வதிகாரியுடைய ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு என்கிறார் -அதாவது
ஆதி ப்ரஹ்மா அஸ்வமேத முகத்தாலே ஹஸ்தகிரியிலே பேர் அருளாளப் பெருமாளை ஆராதித்துப் பின்பும் அநேக காலம்
தத் அனுபவ ஏக பரனாய்க் கொண்டு அவன் வர்த்தியா நிற்க -அந்தப் பேர் அருளாள பெருமாள் உன்னுடைய ப்ரஹ்ம லோகம்
அநாதமாய்க் கிடவாத படி நீ அங்கே ஏறப்போ என்று விடை கொடுத்து அருள -அந்த ப்ரஹ்மாவும் அவ்வனுபவ அலாபத்தாலே ஆத்ம தாரண அயோக்யதையாலும் பரமாச்சாரியார் -எப்பாலைக்கும் சேமத்தே -என்று அருளிச் செய்யும் படி ப்ராப்ய பூமியான அத்தேச விஷயத்தில் ப்ராவண்ய அதிசயத்தாலும்
இத்தைப் பற்ற ப்ராப்ய பூமியான ப்ரஹ்ம லோகத்தில் உபேஷ்யா புத்தியாலும் -ப்ரேம பரவசனாயக் கொண்டு –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்ம வ்ருத்தே பவந்தி பும்ஸஸ் சர்வே பிரதிகூல ரூப -என்று
இத்யாதியாலே தன்னுடைய அவஸ்த்தா விசேஷங்களை ஆவிஷ்கரித்தான் இறே

—————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -இத்யாதி -இவ்வவஸ்தா விசேஷங்களும் உபாஸகனான ப்ரஹ்மாவின் அளவு அன்றிக்கே
த்வத் பாத பத்ம ப்ரவணாத் ஆத்மவ்ருத்தே சர்வே பிரதிகூல ரூப பவந்தி -என்கையாலே
பகவத் பாகவத சமாஸ்ரயண பரருக்கு எல்லாம் அவிசிஷ்டங்களாகையாலே
இவை உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் என்கிறார் –
இவ்விடத்தில் உபாய சதுஷ்டயம் என்றது -பக்தி ப்ரபத்திகளையும் -ததீய சமாஸ்ரயணத்தையும் -ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் -என்னுதல் –
ஈஸ்வரனுடைய உபாயத்வத்தில் ஸ்வ கத பர கதத்வங்களையும்
ஆச்சார்யனுடைய உபாயத்வத்தில் ஸ்வகத பரகதத்வங்களையும் என்னுதல் –

—————–

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பழுதாகாது ஓன்று அறியேன் – இத்யாதியாலே
ப்ரஸக்த அநுரூபமாக -ததீய உபாயத்வத்துக்கும் ஆச்சார்ய உபாயத்வத்துக்கும் உண்டான பிரமாண விசேஷங்களை எடுக்கிறார் –
அதில் பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டில் -வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் -என்று
ஸ்வீ காரத்தில் ஸ்வ கதத்வம் தோற்றுகையாலே அமோகமான ஆச்சார்ய உபாயத்வத்தில் ஸ்வ கத ஸ்வீ கார பிரமாணம் என்னவுமாம் –

———

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –

—————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு-அங்கமாய்
ஸ்வ தந்த்ரமுமாய் –இருக்கும் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

சூரணை -463-

இது
பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் பல பர்யந்தம் ஆக்கும் —

மேல் இப்படிப்பட்ட ஆச்சார்ய அபிமானம் தான் ஸகல வித்ய அங்கமாய் இருக்க -தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்று
ஸ்வ தந்த்ர உபாயமாகச் சொல்லுகிறபடி எங்கனே என்ன -ஆச்சார்ய அபிமானம் தான் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அவ்யஹித உபாயத்வேந ப்ரஸித்தமான ப்ரபத்தி தானும் -மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகளுக்கு அங்கத்வேந விதிக்கப்பட நிற்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸ்வ தந்த்ர உபாயமும் ஆகிறவோ பாதி
இச்சரம உபாயமும் ஸ்வ வ்யதிரிக்த ஸகல உபாயங்களுக்கும் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அங்கமாகா நின்றதே யாகிலும்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கையும் ஸூசிதம் என்கிறார் –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -ஸாஸ்த்ரா திஷு ஸூ த்ருஷ்டாபி சாங்கா ஸஹ பலோ தயா ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேஸதே -என்று
யாதொரு வித்யை ஸகல வேத ஸாஸ்த்ரங்களிலும் அங்க ஸஹிதையாகவும் ஸஹஸா பல ப்ரதையாகவும்
ப்ரதிஞ்ஞா பலத்தாலே ஸூ சிஷதையாகை யானாலும்
அது ஸதாச்சார்ய உபதேசத்தால் அல்லது அர்த்த க்ரியா காரியாகவே மாட்டாது என்று இதனுடைய அங்கத்வத்தையும்
ஸதா சார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராபனுவந்தி பராங்கதிம் -என்றும்
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அதனுடைய ஸ்வ தந்த்ர பாவத்தையும் சொல்லா நின்றது இறே –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading