ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –
—————-
சூரணை -321-
சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –
இனி சிஷ்யன் -என்று தொடங்கி -கீழே ஆச்சார்ய சோதனத்தையும் -மந்த்ர சாதனத்தையும் பண்ணி –
மேல் ப்ரஸ்துதமான சிஷ்ய லக்ஷணத்தையும் சோதிக்கிறார் -சிஷ்யன் என்பது இத்யாதி –
ஸிஷ்யன் என்பது சாத்யாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களில் அத்யந்த நிவ்ருத்தியும்
உத்தம புருஷார்த்த ரூபமான பலத்திலும் தத் சாதனத்திலும் யுண்டான ஸ்ரோதும் இச்சையும்
அன்றியே
ஸா வித்யா என்கிற வித்யார்த்தியான இவனுக்கு பலம் ஞானமாகையாலே
தத் சாதன பூதனான ஆச்சார்யன் பக்கலிலே அனுவர்த்தனமும் என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
குரு ஸூஸ்ரூஷயா வித்யா புஷ்கலேந தநேந வா -அதவா வித்யயா வித்யா சதுர்த்தா நோப லப்யதே -என்கிற
ஸ்லோகத்தில் வித்யை யாகிற பலத்துக்கு ஸாதனமாகச் சொன்ன சாதன த்ரயத்திலும்
ப்ரதமோபாத்தமான சாதனமான ஸூஸ்ரூஷை என்னவுமாம்
இந்த குரு ஸூஷ்ரூஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச் சென்ற
ப்ராஹ்மண புத்ரனைத் தன்னுடைய பஸூ பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய
ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து
அப்பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக் கன்று உண்ணுகிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகையாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து
அப்பச்சிலைகளும் தீய்ந்த வாறே எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க அவ்விடத்திலும் கன்று உண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –
ஆக -இப்பல சாதன ஸூஸ்ரூஷையும் த்யாஜ்யமான ஸம்ஸார வெக்காயத்தினால் யுண்டான ஆர்த்தியும்
உபாதேய தமமான பகவத் குண அனுபவத்தில் ஆதரமும்
ஆச்சார்யன் பகவத் பாகவத வைபவங்களைப் பரக்க உபபாதியா நின்றால்
ப்ராவஷ்யாமி அநஸூயவே-என்னும்படியான அநஸூய அதிகாரமும் உடையவனை -என்கிறார் –
———–
சூரணை -322-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –
இப்படி யுக்த லக்ஷணோ பேதனான இந்த சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் அனுசந்தான க்ரமத்தை விதிக்கிறார் -மந்த்ரமும் தேவதையும் -இத்யாதியாலே -அதாவது
குருரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி குரு ரேவ பராயணம் குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிகம் ஸர்வம் ஸ ஸாஷ்டா ஷரதோ குரு இத்யேவம் யே ந மன்யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி -என்றும் சொல்லுகையாலே –
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர-என்கிறபடியே ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரமும்
அம்மந்திரத்துக்கு உள்ளீடான பரதேவதையும்
அந்தப் பர தேவதையுடைய நிர்ஹேதுக கிருபா லப்யமான நிரதிசய புருஷார்த்தமான கைங்கர்ய ரூப பலமும் –
அப்பல அநு பந்திகளாய் வரும் அவித்யா நிவ்ருத்தி முதலாக -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் -அர்ச்சிராதி கதி -ஸாலோக்யாதிகள் -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவாதிகள் -என்கிற இவையும் –
இப்புருஷார்த்த ப்ரதமான சாதனமும் -இன்னமும் –
அன்னவான் அந்நாதோ பவதி மஹான் பவதி ப்ரஜயா பஸூபி ப்ரஹ்ம வர்ச்ச ஸேந மஹான் கீர்த்தயா -என்றும்
தன் நம இது யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா -என்றும்
நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் ப்ரஸாத லப்தமாய் வரும் ஐஹிக போகம் முதலான அனுக்தமான அகிலமும் தன்னுடைய ஆச்சார்யனே என்று அனுசந்தித்து இருக்கக் கடவன் என்கிறார் –
இவை எல்லாம் ஆச்சார்யனே என்று விதிக்கிறது -இவனுக்கு த்யாஜ்ய உபாதேய விபாக ஞானம் முதலாக நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண மோக்ஷ பர்யந்தமாக
அவ்வாச்சார்ய ப்ரஸாத ஏக லப்தமாய்க் கொண்டு வருகையாலே -என்கை –
—————
சூரணை -323-
மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –
இதுவே பரமார்த்த உபதேஸம் என்னும் இடத்தை த்ருடீ கரிக்கைக்காக பரமாச்சார்யரான ஆளவந்தாரும்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி ஸர்வம் -என்று அருளிச் செய்தார் என்று ஆப்த வசனத்தையும் எடுக்கிறார் –
—————–
சூரணை -324-
இதுக்கடி
உபகார ஸம்ருதி-
மேல் -இதுக்கு அடி உபகார ஸ்ம்ருதி என்றது -இப்படி ஆச்சார்யனே இவை எல்லாமாக இவன் அனுசந்திக்க
வேண்டுகைக்கு அடி அவன் பண்ணின உபகார பரம்பரைகளையே பலகாலும் ஸ்மரிக்கையாலே என்கிறது –
————
சூரணை -325-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –
இந்த உபகாரத்தை ஸ்மரிக்கைக்குத் தான் பிரதம ஹேது என் என்னில் ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞதை-அதாவது –
ஆச்சார்யன் தன் பக்கல் பண்ணின உபகாரங்களைத் தன் வாக்காலே பலகாலும் சொல்லுகையாலே என்றபடி –
க்ருதஜ்ஜை என்னா நிற்க வாக்காலே சொல்லுகிறபடியை காட்டுகிற படி எங்கனே என்ன
மனஸ் பூர்வகமாக வாக்குச் சொல்ல வேண்டும் ப்ராதான்யத்தை இட்டு என்று அருளிச் செய்வர் –
இனி முடிந்த நிலம் ஈஸ்வரன் பாக்கள் க்ருதஜ்ஞதை என்கிறார் –
—————–
சூரணை-326-
சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –
ஆக -ஆச்சார்ய சோதனமும் -மந்த்ர சோதனமும் -ஸிஷ்ய சோதனமும் -பண்ணி
அந்த ஸிஷ்ய ஆச்சர்யர்களுக்கு அந்யோன்யம் உண்டாக்க கடவ பரிமாற்றத்தை மேல்
ஸிஷ்யனும் ஆச்சார்யனும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
————-
சூரணை -327-
சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –
அந்த ஸிஷ்யனும் ஆச்சார்யனும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டும் நடத்தும் இடத்தில் -ஸிஷ்யன் தான் -இத்யாதி –
ஸச் ஸிஷ்யனான தான் -ஆச்சார்யாய ப்ரியந்தம் ஆஹ்ருத்ய -என்கையாலே அவ்வாச்சார்ய முகோல் லாஸமே பரம புருஷார்த்தம் என்று
தத் அநுரூபமாக கிஞ்சித் காராதிகளாலே ஸர்வ பிரகாரத்தாலும் அவனுடைய
பிரியத்தையே ஆதரித்துக் கொண்டு போரக் கடவன்-
ஈஸ்வரனைக் கொண்டு -இத்யாதி –
இனி அவ் வாச்சார்யனுடைய ப்ரக்ருதி வாஸனையாலே வரும் அனுஷ்டானங்கள் உண்டானால்
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்-என்கையாலே தான் ரஹஸ்யமாகப் போதித்தல் –
ஆச்சார்ய சமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை இடுவித்து போதிப்பித்தல் செய்தாலும் அவன் மீளா விடில்
இவ் வடிகளுக்கு இந் நினைவை பூர்வ அனுஷ்டானத்தை அனுவர்த்திக்கும் படி -ஈஸ்வரனைப் பிரார்த்தித்து -ஹிதத்தை நடத்துதல் –
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே கீழையூரிலே தேவதாஸி பக்கலிலே ஸக்தராய்
சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க விஷண்ணராய்
பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும் இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்ப்பந்திக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு -வந்து ஸ்ரீ பீடத்தின் கீழே தெண்டனாய் விழுந்து இப்படி இவ்வடிகளுக்கு அமுது படி த்ரோஹ பர்யந்தமாக
ஆத்ம நாஸம் பிறக்கும் அளவில் தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக
உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே அப்போதே அவர்கள் நினைவு மாறி -என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய்
இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர -அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து
வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாய்த்து இறே
ஆச்சார்யன் இத்யாதி -இனி ஆச்சார்யன் இந்த ப்ரிய ஹிதங்களை ஸிஷ்யனுக்கு மாறாடி நடத்துகையாவது
தானே ஸாஸ்த்ர யுக்தமாய் வரும் விதி நிஷேத ரூபமான ஹிதத்திலே இவனைப் ப்ரவர்த்திப்பித்து
இந்த ஸிஷ்யனுக்கு ஐஹிக போக ரூபமான ப்ரியத்தை எம்பெருமானைக் கொண்டு நடத்தக் கடவன் என்கிறார் –
அதாவது
திவ்ய தேச வாஸ ஸேவா விரோதங்கள் பிறக்கும்படியான த்ருஷ்ட சங்கோசத்தில் அத்தை எம்பெருமான் பக்கலிலே
தான் ப்ரவர்த்தித் தாகிலும் இவன் உக்கத்தை உண்டாக்குகை –
இது தன்னை ஆழ்வான் விஷயமாக உடையவர் பெரிய பெருமாள் பக்கலிலே பிரார்த்தித்து உண்டாக்கினார் இறே –
—————–
சூரணை -328-
சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –
ஆனால் இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் இருவரும் அந்யோன்யம் ப்ரிய ஹிதங்கள் இரண்டையும்
இப்படி நியமேன நடத்திக் கொண்டு போரக் கடவர்களோ என்னில் –
ஒருவர் ஒருவருக்கு இவற்றில் ஒன்றிலே ஊன்றி நிற்கை ஸ்வரூபமாகையாலே
ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய உகப்பிலே நிலை நின்று போரும் என்றும்
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய ஸ்வரூப உஜ்ஜீவனத்திலே நிலை நின்று போரும் என்றும்
அருளிச் செய்கிறார் –
———————-
சூரணை -329-
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –
ஆகையால் இத்யாதி -இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய ப்ரிய ஏக பரனாய் வர்த்திக்கையாலே இவன்
அந்த ஆச்சார்யனுடைய உகப்புக்கே விஷயமாகை ஒழிய சீற்றத்துக்கு விஷயமாகைக்கு அவசரம் இல்லை என்று
அவன் நிக்ரஹம் இவனுக்கு உபாதேயம் என்கைக்காக
அத்தை ப்ரசம்சிக்கிறார் –
——————
சூரணை -330-
நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –
நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது -இத்யாதி -அவ்வாச்சார்யனுடைய யாத்ருச்சிகமாய் வரும் நிக்ரஹத்துக்கு இந்த ஸிஷ்யன் விஷயமாம் போது
ஸ்வ ப்ரயோஜன அர்த்தம் இன்றிக்கே ஸ்வரூப உஜ்ஜீவன அர்த்தமாக ஸிஷ்யனை நியமித்து நல் வழி போக்குகையும்
அந்த நியமனத்தில் சிஷ்யன் வர்த்திக்கையும் இருவருக்கும் ஹிதமாய் இருக்கையாலே இந்த நிக்ரஹம் அங்கீ கார்யம் என்கிறார் –
அல்லது க்ரோதம் த்யாஜ்யம் என்று நினைத்து ஈஸ்வரன் கை யடைப்பாக்கின விஷயத்தை நியமியாதே நெகிழ்க்கை அநபிமதம் இறே
————-
சூரணை -331-
சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-
ஆனால் இந்த நிக்ரஹம் இருவருக்கும் உபாதேயமாகில் இந்த ஸிஷ்யன் ஆச்சார்யனுக்கு ஸதா நிக்ரஹ பாத்ரமாம் படி வர்த்திக்கக் கடவனோ என்னில்
ஸிஷ்யனுக்கு இத்யாதி -அது ப்ராப்தம் அல்ல -இந்த ஸிஷ்யனுக்கு நிக்ரஹ ஹேதுக்களில் நிரதனாய்ப் போருமது த்யாஜ்யம் –
——————
சூரணை -332-
நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –
இங்கனம் நிரதன் அன்றிக்கே இருக்கச் செய்தே அவ்வாச்சார்யன் யாதிருச்சிகமாக நியமித்தானாகில் -நிக்ரஹம் -இத்யாதி –
இந்த ஆச்சார்யனுடைய நிக்ரஹம் தான் –
ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி
ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும் –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரானே -என்றும் சொல்லுகிற படியே
சேதனனுக்கு மஹா உபகாரகமான நியமனம் போலே
ப்ராப்யமான பலத்திலே அன்வயித்து விடும் என்கிறார் –
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோஸ்துதே தேவ வராப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் பூத சரண்ய சங்கே -என்று
பீஷ்மரும்
பகவானுடைய நிக்ரஹ ரூபத்தை தமக்குப் ப்ராப்யமாகவே அனுசந்தித்தார் இறே –
அன்றிக்கே –
இன்று -யதா ஞானம் பிறந்தவனுக்கும் பூர்வ அவஸ்தையில் ஸம்ஸாரத்தால் வந்த பகவன் நிக்ரஹம் வித்யா பாரங்கதனான ஸிஷ்யனுக்கு
உபாத்யாயனுடைய நியமனம் உபகார ஸ்ம்ருதி பண்ணும்படி உத்தேச்யம் ஆனால் போலே
ப்ராப்ய அந்தர் கதம் ஆகிறவோ பாதி ஆச்சார்ய நிக்ரஹமும் என்றுமாம் –
இவ் வர்த்தத்தைக் கூரத்தாழ்வானும் அருளிச் செய்தார்-எங்கனே என்னில் -திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத்
பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்ய -பெருமாளும் திரு முகம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் -என்ன
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்தேற எழுந்து அருளி
ஆழ்வானை அருளப்பாடிட்டு -பல வேளையிலே நீ இப்படிச் செய்தாயே என்ன –
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று
தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால் ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் ப்ரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே –
————
சூரணை -333-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —
ஆச்சார்யன் ஸிஷ்யனுடைய -இத்யாதி -ஆக ஸிஷ்யனுடைய ஹிதத்திலே ஊன்றிப் போருகிற ஆச்சார்யன்
அந்த ஸிஷ்யனுடைய ஹித தமமாம் படி ஸ்வரூபத்தையே நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்றும்
ஆச்சார்ய ப்ரிய ஏக பரனான ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய திரு மேனியைப் பேணும் இடத்தில்
மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ -என்றும்
ஸ்வயம் தேஹ அநு கூலாநி தர்மார்த்தோ பதிகாநி ச குர்யாத ப்ரதி ஷித்தாநி குரோ கர்மாண்ய சேஷத -என்றும் சொல்லுகிற படியே
நிரந்தரமாக நோக்கிக் கொண்டு போரக் கடவன் என்று உக்த அர்த்தத்தை விஸதீ கரிக்கிறார்
————-
சூரணை -334-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –
இனி இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸ்வரூப ரக்ஷணத்துக்கும் -ஆச்சார்ய விக்ரஹ ரக்ஷணத்துக்கும் பலம் எது என்ன -இரண்டும் இருவருக்கும் இத்யாதி-
ஸிஷ்யன் ஸ்வரூபத்தைப் பேணியே ஆச்சார்யனுடைய ஸ்வரூப ஸித்தியாய்
ஆச்சார்யன் விக்ரஹத்தைப் பேணியே சிஷ்யனுடைய ஸ்வரூப ஸித்தியுமாய் இருக்கையாலே
அவை இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி ஸரீராணி மநீஷிணாம்-யதோ நாராயண ஸாஷாத் ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித -என்கையாலே
ஸிஷ்யனுக்கு ஜங்கம ஸ்ரீ விமான ரக்ஷணமும்
ஆச்சார்யனுக்கு ஈஸ்வரன் கையடைப்பாக்கினவனை நல் வழி போக்குகையும் அவனுக்கு உகப்பாகையாலே
பகவத் கைங்கர்யமாய் இருக்கும் என்கிறார் –
————
சூரணை -335-
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் இத்யாதி -இந்த ஆச்சார்யனும் ஸிஷ்யனும் ஆத்ம ரக்ஷணத்திலும் தேஹ ரக்ஷணத்திலும் கீழ் யுக்தமான
க்ரமத்தில் அன்றிக்கே இவற்றை அந்யோன்யம் மாறாடி அனுஷ்ட்டித்தால் வருவது என் என்ன –
இருவருக்கும் ஸ்வரூப ஹானியே வரும் என்று தொடங்கி யுக்தமான ஸிஷ்ய ஆச்சார்ய லக்ஷணத்தை ஸ பிரகாரமாக உப பாதிக்கிறார்
மனஸ் ஸூக்குத் தீமையாவது -என்னும் அளவாக –
இதில் ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -தான் ஸிஷ்யன் பக்கலிலே அர்த்தித்தே யாகிலும் ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணிக் கொள்ளுகை ஸ்வரூப ஹானி என்றபடி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி -இத்யாதியில் படியே
ஸ்வ ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்ய அதீனம் என்று இராதே ஸ்வ அதீனம் என்று இருக்கை -ஸ்வரூப ஹானி -என்றபடி –
அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது தான் -ஸிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி
அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும் –
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் தான் பலகாலும் பிரவர்த்தித்துக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம் –
——————-
சூரணை -336-
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –
இந்த ஸிஷ்ய ஆச்சார்யர்கள் யதா க்ரமம் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும் இடத்தில் அவற்றுக்கு வரும் அந்தராயங்களை அருளிச் செய்கிறார் –
ஆச்சார்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் -இத்யாதியாலே –
ஆச்சார்யன் தன் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணம் பண்ணும் இடத்தில் மண்ணுக்கும் சோற்றுக்கும் வாசி அறியாதாரைப் போலே
ஒரு த்யாஜ்ய உபா தேயம் அறியாத இவனை பகவான் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆக்கினான் என்று இராதே -இவ்வவஸ்தா பன்னன் ஆக்கினேன் நானே என்கிற அஹங்காரம் விரோதி
ஸரீரம் அர்த்தம் இத்யாதியில் படியை யுடைய ஸிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹ ரக்ஷணம் பண்ணும் இடத்தில் நான் என்னுடைய த்ரவ்யங்களைக் கொண்டு என் கரணங்களாலே இறே
இது நெடும் காலம் செய்தேன் என்கிற மமகாராம் விரோதி –
——————
சூரணை -337-
ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
இவ்வஹம் மமதைகள் இன்றிக்கே இவர்கள் பரிமாறும் படி தான் எங்கனே என்ன -அத்தைச் சொல்லுகிறது
ஆச்சார்யன் தன்னுடைய தேஹ ரக்ஷணம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் -தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது -ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிற
பிராமாணிகனான ஸச்சிஷ்யன் வஸ்துவைக் கொண்டு
பண்ணக் கடவன் என்றபடி –
ஸிஷ்யன் ஸ்வ தேஹ ரக்ஷணம் ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் என்கிறது
த்ரய ஏவாதநா ராஜன் -என்று தொடங்கி
யஸ்யைத தஸ்ய தத்தநம் -என்கிற நியாயத்தாலே
ஆச்சார்யன் வஸ்துவைக் கொண்டு ஸ்வ தேஹ ரக்ஷணம் பண்ணக் கடவன் என்கிறது –
—————
சூரணை -338-
ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –
ஆச்சார்யன் சிஷ்யன் வஸ்துவை இத்யாதி -கீழே தன்னுடைய தேஹ ரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு என்ற இடத்தில்
ஸிஷ்யன் வஸ்துவே ஆச்சார்யன் வஸ்துவாக நீர்ணீதமாய்-ஆச்சார்யன் ஸிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவன் அல்லன் என்கிறது –
ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்து உண்டாகில் அத்தை அங்கீ கரிக்கக் கடவன் அல்லன் என்கிறது அத்தனை –
ஸிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவன் அல்லன் – என்கிறதும் தனக்கு மமதா விஷயமாக ப்ரதிபன்னமான வஸ்து உண்டாகில்
அவை அங்குற்றைக்கு அநர்ஹம் என்கைக்காகச் சொல்லுகிறது –
இவ்வர்த்தம் தன்னை நஞ்சீயர் விஷயமாக பட்டர் சோதித்து அருளினார் இறே -அதாவது
பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்து என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தனம் ஒழிய இல்லை என்ன –
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர் களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போகவிட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்தில் தனம் இருக்கிறது – அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திருமாளிகையில் சிலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையிலே வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர-அத்தைக் கண்டருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்துக் கழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள்-என்று அருளிச் செய்தார் இறே –
—————-
சூரணை-339-
கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –
கொள்ளில் மிடியனாம் இத்யாதி -இப்படி ஸிஷ்யனுடைய மமதா தூஷிதமான தனத்தை ஆசா லேசத்தாலே
ஆச்சார்யன் அங்கீ கரிக்கப் பார்த்தானாகில் அடங்கெழில் ஸம்பத்து -இத்யாதியில் படியே
அவாப்த ஸமஸ்த காமனை அண்டை கொண்டு இருக்கிற அவ்வாச்சார்யனுக்கு மிடி வந்து மேலிட்டதாம்
அடியிலே ஆச்சார்ய விஷயத்திலே அகில ஸமர்ப்பணத்தைப் பண்ணின ஸிஷ்யன் அத்தை மறந்து ஸ்வ அபிமான அந்தர் கதமான தொரு
த்ரவ்யம் யுண்டாக நினைத்து அத்தை அவனுக்குக் கொடுக்கில்
ஆதி மத்ய அவசாநம் க்ருத்ரிம வ்யாபாரனாய் விடுகையாலே பெரு நிலைக் கள்ளனாம் –
———————–
சூரணை -340-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –
இப்படிக் கொடுத்தோம் கொண்டோம் என்கிற நினைவால் வருகிற கொள் கொடை யுண்டாகில்
ஸிஷ்ய ஆச்சார்ய ரூப சேஷ சேஷி பாவ சம்பந்தம் குலைந்தே போம் என்கிறார் –
ஆசாஸநோ ந வை ப்ருத்ய ஸ்வாமிந் நாத்மந ஆசிக்ஷ ந ஸ்வாமி ப்ருத்ய ஸ்வாம்யம் இச்சன் யோராதி வாஸிஷ -என்றான் இறே ஸ்ரீ ஸூக மகரிஷியும் –
————-
சூரணை -341-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –
சூரணை -342-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவன் மிடியன் ஆகையாலே -இத்யாதி -இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் அகிஞ்சன ஸ்வரூபனான ஸிஷ்யன் அந்த ஸ்வரூப ஞானத்தாலே கொடான் என்றும் –
ஞானாம் ருதேந த்ருபதஸ்ய க்ருதக்ருத் யஸ்ய யோகிந நை வாஸ்தி கிஞ்சித் கர்தவ்ய மஸ்தி சேந்ந ஸ தத்வ வித் -என்கையாலே
பரிபூர்ண ஞான அம்ருத திருப்தனாய்க் கொண்டு ஆச்சார்யன் பூர்ணனாய் இருக்கையாலே கொள்ளான் என்றும் –
இப்படிக் கொள் கொடைகளுக்கு ஸ்வரூபத இருவருக்கும் யோக்யதை இல்லாமையாலே இருவருடையவும் ஸ்வரூபமும்
உஜ்ஜீவித்தது என்னும் இடத்தை -அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும்
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது -என்றும் அருளிச் செய்கிறார் –
———–
சூரணை -343-
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –
சூரணை -344-
ஆசார்யன் நினைவாலே உண்டு –
ஆனால் ஸிஷ்யன் இத்யாதி -இப்படி இருவருக்கும் ஸ்வரூபத கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லாமையாலே -சேஷ பூதனான ஸிஷ்யனுக்கு
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கையாலே கிஞ்சித் கரித்தே ஸ்வரூப ஸித்தி யாகில்
இவன் சேஷியான ஆச்சார்யனுக்குப் பண்ணும் கிஞ்சித்காரம் ஒன்றும் இல்லையோ என்னில்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாயும் -அந்த ஆச்சார்யன் நினைவாலே இவன் பண்ணும் கிஞ்சித் காரங்கள் உண்டு என்கிறார் –
—————
சூரணை -345-
அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –
மேல் -அதாவது -இத்யாதி -இந்த ஸிஷ்யன் பண்ணும் ப்ரவ்ருத்தி ரூபமான கிஞ்சித் காரங்களை பிரதமத்திலே சொல்லுகிறது –
அந்த கிஞ்சித் காரமாவது -மெய்ம்மையை மிக யுணர்ந்து -என்கிறபடியே ஸ்வரூப யாதாம்ய ஞானத்தில் நிரந்தரமான உணர்த்தியிலும்
அந்த ஸ்வரூப அனுரூபமான உபாயத்தில் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்கிறபடியே நாள் தோறும் உண்டான அத்யவசாயத்தாலும்
அவ்வுபாய லப்யமான உபேயத்தில் ஒழிவில் காலத்தில் படியே யுண்டாம் அபி நிவேசத்திலும்
அந வரதோத் யுக்தனாகையும்
இவற்றுக்கு அனுரூபமான ஸதாசாரத்திலே ப்ரவ்ருத்தனாகையும்
இவை ப்ரவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்கள் –
———————-
சூரணை -346-
ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –
இனி ஆச்சார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது -என்று தொடங்கி
இவனுடைய நிவ்ருத்தி ரூபமான கைங்கர்யங்களை சொல்லுகிறது மேல் –
————
சூரணை -347-
பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை விலக்குகை –
பகவத் த்ரவ்ய அபஹாரமாவது -என்று தொடங்கி யுக்தமான நிவ்ருத்தி ரூப நிவ்ருத்தி விசேஷங்களை விவரிக்கிறார் -அதாவது
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும்
சோரேண ஆத்ம அபஹாரிணா -என்றும் சொல்லுகிற
ஸ்வரூப ஹானியான ஸ்வ ஸ்வா தந்தர்யமும்
ப்ரஹ்மாதி மாதா பிதா பர்யந்தமான அந்நிய சேஷத்வமும்
இனித்தான் ராம தனத்தை ஸ்வாதீனமாக்க நினைத்த ராவணனைப் போலே இறே ஸ்வா தந்தர்யம்
இனி பகவத் போஜன ரூபமான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை விலக்குகை யாவது
ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்குப் புறம்பே ஆளிடனாலும்
ந ஹி பாலந ஸாமர்த்யம் -என்று தொடங்கி
சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -என்கையாலே
அவனுக்கே அசாதாரண விருத்தியாய்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதியில் படியே ரக்ஷிக்குமவனுடைய
சர்வ பிரகார ரக்ஷகத்வ க்ரமத்தைத் தன் மேலும் பிறர் மேலும் ஏறிட்டுக் கொள்ளுகை -அதாவது –
அவ ரக்ஷணே -என்கிற தாது ஷயம் பிறக்கும் படி
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்ன
ந நமேயந்து கஸ்சந -என்று கலக்குகை இறே
உண்பது கொண்டார் உயிர் கொண்டார் -என்று லோக வார்த்தையும் யுண்டு இறே –
————
சூரணை -348-
அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –
அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –என்றது இந்த ரக்ஷகத்வம் தான் இதர ஷமம் அல்ல என்னும் இடத்தை
ப்ரபந்ந பவித்ராணம் என்கிற பிரபந்த முகத்தாலே பரக்க ப்ரதிபாதித்தோம் என்கிறார்-
குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தை படி அனுஷ்டியாது ஒழிகையும்
அநதி காரிகளுக்கு உபதேஸிக்கையும்
மந்த்ர பரிபவமாவது
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும்
தத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும்-
குரு பரிபவமாவது -இத்யாதி -ஒரு ஆச்சார்யன் பக்கலிலே அர்த்த விசேஷங்களைக் கேட்டு வைத்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் தன் பக்கல் இல்லா விடில்
அவ்வனுஷ்டானம் தன்னையே அவ்வாச்சார்யனுக்கும் அபிமதமாக லௌகிகர் அத்யவசித்து பரிபவிக்கையாலும்
நா சாத்ரா ஸாஸ்த்ரம் உத்ஸ்ருஜேத்-என்னா நிற்க -ஆஸ்திகர் அல்லாத அதிகாரிகளுக்கு உபதேசித்தால்
அதுவும் அவனுக்கே பரிபவமாய்த் தலைக் கட்டுகையாலும் –
கேட்ட அர்த்தத்தின் படியே அனுஷ்டியாது ஒழிகையும்
அநதிகாரிகளுக்கு உபதேஸிக்கையும்
குரு பரிபவம் ஆவது என்கிறார் –
மந்த்ர பரிபவம் இத்யாதி -உபதிஷ்டமான மந்த்ரத்தைத் தனக்கு வியாக்யானம் பண்ணின ஆச்சார்யன் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்குச் சேரும்படி அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை விஸ்மரித்து-தத் விபரீதங்களாய்த் தனக்கு ப்ரதி பன்னங்களான அர்த்தாந்தரங்களை அனுசந்தித்தால்
அது அம்மந்திரத்துக்கு யதார்த்தம் அல்லாமையாலே இதுவும் மந்த்ரத்துக்குப் பரிபவம் இறே என்று
அர்த்தத்தில் விஸ்ம்ருதியும்
விபரீத அர்த்த பிரதிபத்தியும் –
மந்த்ர பரிபவம் -என்கிறார் –
தேவதா பரிபவமாவது -இத்யாதி -மந்த்ர ப்ரதிபாத்ய தேவதா விஷயத்தில் பரிபவமாவது –
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ -என்றும் சொல்லா நிற்க –
உள்ளம் உரை செயல் -என்கிற கரண த்ரயத்தையும் தன் ஸ்வரூபத்துக்குச் சேராத ஸப்தாதி விஷயங்களிலும்
தேவதாந்த்ர விஷயங்களிலும்
மேட்டு நீர் பள்ளத்திலே விழுமா போலே விநியோகித்துப் போருகையும்
ஸம் ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியாணாம் ஸேவாந்யதேவ வ்யபிசார ஏவ அந்யோபி ஸேவ்யோ யதி தேவ சாம்யாத் கோ வா ஹ்ருஷீ கேஸ வதாபிதாந
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணித் வந்த்வ சமர்ச்சய-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப அநு ரூபமான பகவத் விஷயத்தில் ப்ரவணம் ஆக்காது ஒழிகையும் என்கிறார் –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்னக் கடவது இறே –
————
சூரணை-349-
இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –
ஆக –
ஸ்வரூபமான ஞானத்திலும் –
உபாயமான வ்யவசாயத்தாலும் –
புருஷார்த்தமான ப்ரேம ஸமாசாரங்களிலும் உண்டான ப்ரவ்ருத்தி ரூப கிஞ்சித் காரமும் –
ஸ்வரூபத்தில் பகவத் த்ரவ்ய அபஹார நிவ்ருத்தியும் –
உபாயத்தில் பகவத் போஜன நிரோத நிவ்ருத்தியும்
உபேயமாய்ப் பலித்த குரு மந்த்ர தேவதா பரிபவ நிவ்ருத்தியும்
இப்படி -ப்ரவ்ருத்தி ரூபமாயும் -நிவ்ருத்தி ரூபமாயும் உள்ள
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
இவனுடைய இந்த அனுஷ்டான விசேஷங்களிலே ஆதாராதிசயத்தாலே ஆச்சார்யன் உகந்து அங்கீ கரிக்கும் கிஞ்சித் காரங்களை அருளிச் செய்து
இனி
இங்கு இருந்த நாள் ஸிஷ்யன் நினைவாலே அவ்வாச்சார்ய விசேஷத்தில் உண்டாம் உபகார ஸ்ம்ருதியை அருளிச் செய்கிறார் –
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் -என்று தொடங்கி –
அந்த உபகார ஸ்ம்ருதி யாவது
என்னுடைய அத்யந்தம் ஹேயமான மனஸ்ஸூ தன்னையே திருத்தி விடுகை அன்றிக்கே
அத்தை ஸ வாஸனமாகப் போக்கி அங்கு உற்றைக்கே அந்தரங்கமான மனஸ்ஸை அடியேனுக்கு என்று
கருவூலத்திலே எடுத்து உபகரித்தாய் என்று ஆச்சார்ய விஷயத்திலே அந வரதம் அனுசந்தித்து இருக்க வேணும் -என்கிறார் –
————
சூரணை -350-
மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –
ஆக இவ்வளவும் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய அந்யோன்யம் யுண்டான பரிமாற்றத்தை அருளிச் செய்து –
தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்திலே ப்ரஸ்துதமான தீமையைப் பரக்க அருளிச் செய்கிறார் -மனஸ்ஸுக்குத் தீமையாவது என்று தொடங்கி -அதாவது -ஸ்வ குணத்தையும் இத்யாதி –
ஆத்ம ப்ரஸம்ஸா மரணம் பர நிந்தா ச தத் சமம் -என்றும்
நாஸ் ஸீலம் கீர்த்தயேத் -என்றும் சொல்லா நிற்க
ஸ்வ விஷயத்தில் ஆத்ம குணங்களுக்கு அவதி இல்லையாக நினைத்தும்
பாகவத விஷயத்தில் இதர ஸஜாதீயராகக் கொண்டு தன்னோடு ஓக்க அஸநவஸநாதி தத் பரராய்த் திரியா நின்றார்களே என்று
இத்யாதிகளை அவர்களுக்குத் தோஷமாக நினைக்கையும் -என்கிறார் –
இவ்விடத்தில் ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி மேலே சொல்லப் புகுகிற
நிர்ஹேதுக பிரகரணம்
பய ஹேதுக்களாய் யுள்ள தண்ட தரத்வாதி ரூப பகவத் குணங்கள் தோஷம் என்று ப்ரசங்கிக்கையாலே
இங்கே பிடித்துக் கர்ப்பித்துக் கொண்டு போரு கிறது என்று அருளிச் செய்வர் –
—————
சூரணை -351-
தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —
இனி தோஷம் நினையாது ஒழிகிறது -இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமை என்று பகவத் பாகவத தோஷங்களை இவன் நினையாது ஒழிகிறது
தன் பக்கலிலே சில சம தம ஆத்ம குணங்களும்
குரு மந்த்ர தேவதா விஷயங்களில் ப்ரேமம் யுண்டாய் இருக்க
அபராத ஸஹஸ்ர பாஜநம் -என்று தன்னை அத்யந்த தோஷ துஷ்டனாக நினைக்கிறாப் போலே அவர்கள் பக்கலிலும் சில தோஷம் யுண்டாய் இருக்க
குண அம்ஸத்தையே நினைக்க வேண்டியோ என்னில் -அங்கன் அன்று –
அவர்கள் பக்கல் முதல் தன்னிலே அத்தோஷங்கள் இல்லாமையாலே தோஷம் நினையாது ஒழிகிறது என்கிறார் –
—————-
சூரணை -352-
தோஷம் உண்டு என்று நினைக்கில் பர தோஷம் அன்று- ஸ்வ தோஷம் –
தோஷம் உண்டு என்று நினைக்கில் -இத்யாதி -யுக்த பிரகாரம் அன்றிக்கே அவர்கள் பக்கல் தோஷ அம்சங்கள் இன்றிக்கே இருக்கிறதோ என்று நினைக்கில்
அது பர தோஷம் அன்று –
தனக்குப் பரரான பகவத் பாகவத விஷயங்களில் உண்டான தோஷம் அன்று –
தான் ஈஸ்வரனுடைய தண்ட தரத்வ ஹேதுக்களான அபராத பூயிஷ்டனாக இருக்கையாலும்
தனக்குத் தேஹ யாத்ரா தோஷங்கள் தவிராமையைக் காண்கை யாலே அவற்றை அத்ததீயருக்கும் யுண்டாக நினைக்கையாலும்
ஆகையால் ஸ்வ த்ருஷ்டியில் திமிர தோஷத்தாலே தீப சந்திரன்கள் ப்ரத்யேகம் இரண்டாய்த் தோன்றுகிறாப் போலே
கேவலம் ஸ்வ தோஷத்தாலே தோற்றும் இத்தனை என்கிறார் –
—————-
சூரணை -353-
ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-
சூரணை -354-
ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –
ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –இத்யாதி -தோஷம் யுண்டாகத் தோற்றுகிறது பரர் பக்கலிலேயாய் இருக்க –
அது இவன் பக்கலிலே தோஷத்தால் யானபடி என் என்னில்
யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் நான்யத்தயோர் பவதி லக்ஷண மத்ர ஜாது
தூரத்தாயிதம் தவ ஹி யத் கில ராஸ கோஷ்ட்யாம் தத் கீர்த்தநம் பரம பாவந மாம நந்தி -என்றும்
தேஷாம் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -என்றும் சொல்லுகையாலே
அவர்களுடைய வைபவ அதிசயத்தாலே அவர்களுக்குப் ப்ரத்யவாய ப்ரஸங்கம் இல்லை என்னாதே
ஞான மாந்த்யத்தாலே தன்னுடைய தோஷத்தை அவர்கள் மேலே ஆரோபித்து இருக்கையாலும்
அவர்களை இத்தோஷ துஷ்டர்களாக நினைத்தால் மாதா பிதாக்கள் அளவில் பண்ணும் தூஷணம் தன் பக்கலிலே வந்து
பர்யவசிக்குமா போலே அவர்களோடுள்ள பந்தத்தாலும் கேவலம் ஸ்வ தோஷமேயாய் விடும் -என்கிறார் –
————-
சூரணை-355-
ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –
ஸ்வ தோஷம் இல்லை யாகில் -இத்யாதி -இங்கனே ஸ்வ தோஷம் என்று அவர்கள் பக்கல் தோஷம் இல்லாமையேயாக நெஞ்சில் பட்டதாகில்
அவர்கள் பக்கல் குண ஞானம் ஒன்றுமே அந வரதம் நடக்க வேணும் -என்கிறார் –
————-
சூரணை -356-
நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —
நடந்தது இல்லை யாகில் இத்யாதி -இப்படி அவர்கள் பக்கல் குண ஞானமே நடவாதே சில தோஷம் இல்லையோ என்று நினைக்கில்
அவர்கள் பக்கல் தோஷ ஞானமே இவனுக்கு ஸ்வரூபக நாஸகம் ஆகையாலே தோஷமாம் -என்கிறார் –
————–
சூரணை -357-
இது தனக்கு அவசரம் இல்லை –
சூரணை -358-
ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-
இது தனக்கு இத்யாதி -முதலிலே இந்த பகவத் பாகவத தோஷ அனுசந்தானத்தில் இவ்வதிகாரிக்கு அவசரம் இல்லை
அமர்யாதா -ஷூத்ர-என்று தொடங்கித் தனக்கு அனுசந்தேயமான ஸ்வ தோஷ அனுசந்தானத்துக்கு
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே ஸா ஹானி -என்றும்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சொல்லுகிற பகவத் குண அனுசந்தானத்துக்கும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -என்றும்
தொழுவாரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -என்றும்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றார் -என்றும் சொல்லுகையாலே
அந்த பாகவத குண அனுசந்தானமே காலம் போரு கையாலே என்கிறார் –
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யாத் பகவத் பிரபாவம் பகவான் ஹி வேத்தி ததா பகவந்தோ பகவத் பிரபாவம் -என்றார் இறே சர்வஞ்ஜை யான ஸ்ரீ பூமிப பிராட்டியும் –
——————-
சூரணை -359-
சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்கக் கடவன் –
ஸம்ஸாரிகள் தோஷம் இத்யாதி -மனஸ்ஸுக்குத் தீமையாவது -பகவத் பாகவத தோஷ க்ரஹண மாத்ரமே அன்றிக்கே
ஸாமான்யரான ஸம்ஸாரிகள் அளவிலே தோஷ தர்சனம் பண்ணுகையும் அதுக்குத் தீமையாகையாலே –
கர்த்து மிஷ்டம நிஷ்டம் வா க ப்ரபுர் விதிநா விநா கர்த்தார மன்ய மாரோப்ய லோக ஸாத்யாதி குர்வதி -என்று
இருக்கக் கடவ இவ்வதிகாரி ப்ராக்ருதல் பக்கல் யுண்டாய்த் தோற்றுகிற தோஷமும்
இகழ்வில் இவ்வனைத்தும் -என்றிராத் தன்னுடைய ஞான மான்யத்தாலே வந்த தோஷம் என்று இருக்கக் கடவன் –
————-
சூரணை -360-
அதுக்கு ஹேது பந்த ஞானம் –
அது என் -அஸத் கல்பரான நித்ய ஸம்ஸாரிகள் பக்கல் யுண்டான தோஷத்தை தத் வியாவ்ருத்தனான தன்னது என்று நினைக்கலாமோ என்ன
இங்கனே நினைக்கைக்கு ஹேது பந்த ஞானம் -என்கிறார் –
இங்கு பந்த ஞானம் என்கிறது ஸர்வ சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு லீலா ரஸ விஷய பூதராய் -நித்ய முக்தரைப் போலே தாங்களும் ரஸிக்கை அன்றிக்கே
தங்களை ஸ்வரூபம் அழிந்தும் அவனுக்கே அசித்வத் விநியோகப்படும்படியான -அப்ருதக் சித்த சம்பந்த ஞானத்தால் -என்றபடி –
கீழ்ச் சொன்ன பந்த ஞானம் மொய்ம்மாம் பொழிலில் சொல்லுகிற ஞானம் போலே
இந்த பந்த ஞானம் புகழு நல் ஒருவனில் ஞானம் போலே –
———–
சூரணை -361-
இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –
இறைப்பொழுதும் இத்யாதி –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும்
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே -என்றும் அருளிச் செய்கையாலே
ஸிஷிதா ஸ்வரூபனான இவ்வதிகாரியுடைய ஞானத்துக்கு ப்ராக்ருதருடைய தோஷம் விஷயம் அல்லாமையாலே முதலிலே தோற்றாது -என்கிறார் –
———–
சூரணை -362-
தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –
ஆனால் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -தொடக்கமான வற்றில் ஸம்ஸாரிகள் தோஷம் தோற்றுகைக்கு அடி என் என்ன
அவர்களுக்குத் தோற்றுகிறது நிவர்த்தன அர்த்தமாக என்கிறார் –
இப்படிப்பட்ட ஞாதாக்களுக்கு ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் தோற்றுவது அவர்களை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்காக என்னுதல் –
தாங்கள் அவர்கள் பக்கல் கை வாங்குகைக்காக என்னுதல்
இவை இரண்டு அர்த்தத்தையும்
ஒரு நாயகமாய்
நண்ணாதார்
ஒன்றும் தேவு –இத்யாதிகளில் அருளிச் செய்தார் இறே –
————-
சூரணை -363-
பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –
பிராட்டி இத்யாதி -இப்படி ஸம்ஸாரிகள் அளவில் தோஷ தர்சனம் பண்ண ஒண்ணாது என்கிற அளவே அன்று
அந்த ஸம்ஸாரிகள் தான் தன் அளவிலே அபராதங்களைப் பண்ணினாலும் ப்ரபந்ந அநுஷ்டான ப்ரகாசைகையான பிராட்டி -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகள் தன் பக்கல் பண்ணின குற்றங்களை
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கு ஏகாந்தத்தில் உட்பட
ஏக தேசமும் அறிவியாதாப் போலே -தீக்குறளை சென்றோதோம் -என்கிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்திலும் ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்காதல் -திருவடிக்காதல் -அறிவித்ததாக ஒரு பாசுரமும் இல்லை இறே –
————–
சூரணை -364-
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —
இப்படி அறிவிக்க ஒண்ணாமைக்கு அடி என் என்ன -அறிவிக்க யுரியவன் -இத்யாதியாலே -சொல்லுகிறது -அதாவது –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் -இத்யாதிப்படியே பரமபத நிலயனாய் -நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் அநந்யார்ஹன் ஆக்குகையிலே
அபேக்ஷை யுண்டானால் சூழ்ந்து தானே அவதரித்து –
ந நமே யந்து கஸ்சந -என்று அவ்வாதாரங்களுக்கு பிரயோஜனம் தோற்றா விடிலும்
கர்ஷக ஹ்ருதயம் போலே காலாந்தரத்தே யாகிலும் பலிப்பித்துக் கொள்கிறோம் என்று அக்குறை தோற்றாதே
ஆனந்த நிர்ப்பரனாய்க் கொண்டு இருந்து அங்குள்ள ஸாரஞ்ஞரான நித்ய ஸூரிகள்
அவதார பிரயோஜனத்தை ஆதரித்துக் கேட்டாலும் -அவாக்ய அநாதர-என்று இருக்கிற இருப்பாக அந்நிய பரதை பண்ணி
அவர்களோடும் வாய் திறவாதே மறைக்கும் என்னா நின்றால் பர தந்த்ரனான இவனுக்கு அறிவிக்க ஒண்ணாது என்னும் இடம்
சொல்ல வேண்டா விறே என்கிறது –
—————
சூரணை -365-
குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –
குற்றம் செய்தவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படித் தனக்குப் பிறர் செய்யும் குற்றம் பகவத் பாகவத விஷயங்களில் மறந்தும் தோன்ற ஒண்ணாத மாத்ரமே என்று-
அவர்கள் பக்கல் இவ்வதிகாரிக்கு உபகார ஸ்ம்ருதி பர்யந்தமாக நடுவுள்ள குணங்கள் யதாவாக நடக்க வேணும் என்கிறார் – அது எங்கனே என்னில்
ப்ரத்யக்ஷத்தில் ஒருவன் அபஹாரத்தைப் பண்ணினால் -சாந்தி ஸம்ருத்த ம்ருதம் -என்றும்
ந ஷமா சத்ருஸோ பந்து ந க்ரோதோ சத்ருஸோ ரிபு -என்றும் சொல்லுகையாலே
க்ஷமையே கர்த்தவ்யம் என்று அவனோடே எதிர் இடாமல் போருகையும்
இப்படி நாம் பொறுத்து நாம் புழங்கினால் ஈஸ்வரன் இவனை பாகவத அபசாரத்தில் பிழை எழுதி தண்டிக்குமாகில் இவன் சீற்றத்துக்கு விஷயமாவதே என்றும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையும் நடக்க வேணும் –
இவ்விடத்தில் அருளிச் செய்யும் வார்த்தை
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வர் –
இனி சிரிக்கை யாவது -குணஸ்சேத பர ஸம் யோகாத் தோஷஸ் சேத் ருசி மன்வயாத் மத்யஸ் தஸ்ய சிதே சஸ்ய கிம் கார்யம் ஸ்துதி நிந்தயோ -என்று
இவன் சொல்லுகிற வற்றால் ஆத்மா அஸ்ப்ருஷ்டனாய் இருக்க -இவன் யாரைப் பரிபவிக்கிறான் என்று சிரிக்கையும் –
அவன் பக்கல் உகப்பாவது -தன்னைக் கண்டால் சத்ருக்களைக் கண்டால் போலே இருக்கையாலே
ஒருவன் தனக்கு வைர ஸத்ருவானவனை பரிபவித்தால் உகக்குமாப் போலே ஒரு உகப்பும்
உபகார ஸ்ம்ருதியாவது -நமக்கு உண்டான தோஷம் நமக்குத் தெரியாது இறே –
நம்முடைய பிரகிருதி தோஷம் எல்லாம் அறியானேயாகிலும் அதில் நாம் அறியாதனவும் எல்லாம் அறிவித்தானே என்று யுண்டாம் உபகார ஸ்ம்ருதியும்
ஆக இவ்வைந்து ஸ்வ பாவமும் இவ்வதிகாரிக்கு யுண்டாக வேணும் என்கிறாராய்த்து
இனித் தான்
க்நந்தம் ஸபந்தம் பருஷம் வதந்தம் யோ ப்ராஹ்மணம் ந பிரணமேத் யதார்ஹம் ச பாப க்ருத் ப்ரஹ்ம தவாக்நி தக்தோ வத்யஸ் ச தண்ட்யஸ் ச ந ஸாஸ்மதீய -என்று
சாமான்யேன பருஷ பாஷாணா திகளிலே ப்ரவ்ருத்தனாய் இருப்பான் ஒருவனைக் கண்டால் அவனோடே எதிரிடாத மாத்ரம் அன்றிக்கே
தான் தலை சாய்த்து அவனை அனுவர்த்தித்து விடா விடில் இவன் தானே சர்வ பிரகார தண்ட்ய னாகவும் பகவத் வாக்கியம் யுண்டாகையாலும் –
அவ்வளவு அன்றிக்கே
ரூஷா ஷராணி ஸ்ருண் வந்வை ததா பாகவதேரிதான் ப்ரணாம பூர்வகம் ஸாம்யோ யோ வேத வைஷ்ணவவோ ஹி ஸ -என்று
விசேஷஞ்ஞனாய் இருப்பான் ஒரு பாகவதன் செவி பொறாத படின் சிவிட்கென்ற வார்த்தையைச் சொல்லக் கேட்டாலும் –
சேஷியானவன் நம்மை வேண்டினபடி நியமித்துக் கொள்ளுகிறான் என்று நினைத்து அந்தப் பாகவதனை
ப்ரணாம பூர்வகமாக ஷமிப்பித்துக் கொள்ளுமவன் வைஷ்ணவன் என்றும் உண்டாகையாலே
கீழ் ப்ரதிபாதித்த அர்த்தங்கள் இவ்வதிகாரிக்கு அநுஷ்டேயம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-
Leave a Reply