Archive for the ‘ஸ்ரீ வசன பூஷணம்’ Category

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- முதல் பிரகரணம் -உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

July 20, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———–

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை முதல் பிரகரணத்தில் அருளிச் செய்து தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

பிரபத்திக்கு இத்யாதி
ந தேச காலவ் ந அவஸ்த்தாம் யோகோஹ்யய மபேஷதே -என்றும்
ந திதி ந ச நக்ஷத்ரம் ந க்ரஹோ ந ச சந்த்ரமா ஸ்ரத்தைவ காரணம் நிரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே -என்றும்
சொல்லுகிறபடியே இதுக்கு தேச கால நியமம் இல்லை –

—————

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

நிரபேஷ உபாயமான இதுக்கு -பிரபத்தவ்ய விஷய நியமமே உள்ளது என்கிறார் மேல் -கர்மத்துக்கு -இத்யாதியாலே

—————–

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இவ் வுபாய ஸுகர்ய சாதன அர்த்தமாக ஏதத் ப்ரதிகோடி சாதனங்களுக்கு -தேச காலாதி சாபேஷதை -உண்டு என்கிறார் –
இத்தால்
யஜ்ஜேந தாநேந தபஸா அ நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-என்கையாலே
பக்திக்கு பிரதம உபகாரமான கர்மத்துக்கு தேசோயம் ஸர்வ காம துக்-என்னும்படியான புண்ய ஷேத்ரமும்
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத-என்கையாலே வஸந்தாதி காலம்
ஆக்நேயம் அஷ்டாகபாலம் ஐந்தரம் த்வாதஸ கபாலம் -இத்யாதி பிரகார விதாயக ஸாஸ்த்ர உக்தங்களான
அவ்வவ் உபாயங்களும்
இவை தான் த்ரை வர்ணிகருக்கே கர்த்தவ்யங்கள் ஆகையாலும் -அது தன்னிலும்
கிருஷ்ண கேஸோக்நீநாததீத -என்கையாலே இவை அத்தனையும் ஸர்வதா வேணும் என்கிறார் –

————-

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே–இதுக்கு தேச கால நியமம் இல்லை –

இவ்வோபாதி ப்ரபத்தியும் உபாயமாய் இருக்கச் செய்தே அவை வேண்டா என்கைக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார்
ச ஏஷ தேச கால -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாகப் பெருமாளை நோக்கித் திருவடி விண்ணப்பம் செய்த வார்த்தை இத்யாதியாலே

————–

சூரணை-27-

இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்-

தேச காலாதி நியமம் இன்றிக்கே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்னும்படியான இவ்வர்த்தம்
ஸகல பிராமண ஸாரமான த்வ்யத்தில் ஸ்ரீமத் பதத்தில்
மதுப்பில் விசதம் என்கிறார்

———–

சூரணை-28-

பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

இனி பிரகார நியதி இத்யாதியாலே
யுக்தமான தேச காலாதிகளில் விசேஷித்து பிரகார அதிகாரி பல நியமங்கள் இல்லை என்னும் இடத்தை விவரித்து
அருளிச் செய்கிறார் மேல் –

———-

சூரணை-29-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

இந்த பிரகார நியதி இல்லாமை ப்ரபத்தாக்கள் பக்கல் எங்கும் காணலாம் –
அது எங்கே கண்டது என்ன -கீழே பிரஸ்த்துதரா னவர்களில் – திரௌபதி அப்ரயதையான தசையிலே பிரபத்தி பண்ணுகையாலும்
நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -என்கிற ஹேயர் நடுவே அர்ஜுனன் இப்பிரபத்தி அர்த்தத்தைக் கேட்கையாலும்
பிரகார நியதி இல்லாமை விசதம் இறே –

————-

சூரணை -30-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

ஸூத்தி அஸூத்யாதிகள் இத்யாதி
கீழ் அஸூத்தரான தசையிலே ப்ரபன்னரானமை சொல்லுகையாலே
அவ் வஸூத்தி தான் இதுக்கு அங்கமாகிறதோ என்ன
அஸூத்தி அங்கம் அல்லாதவோபாதி ஸூத்தியும் இதுக்கு அங்கம் அல்ல
ருசி பிறந்த தசையில் நின்ற நிலையே அதிகாரம் -என்கிறார் –

————–

சூரணை -31-

இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

வேல் வெட்டிப் பிள்ளைக்கு -இத்யாதியாலே இவ்வர்த்தத்தில் ஆப்த வசனத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பெருமாள் சமுத்திர ராஜனான வருணனை சரணம் புகுந்த இடத்தில் ப்ராங் முகத்வாதி நியமங்களோடே சரணம் புகுருகையாலே
யத் தாசரதி ஸ்ரேஷ்ட -இத்யாதி க்ரமத்தாலே அல்லாதாருக்கும் அவை அநுஷ்டேயங்கள் ஆகாதோ -என்று வேல் வெட்டிப்பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய
அது அங்கனே அன்று காணும் -ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -என்று பெருமாளுக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்த
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே கால் தோய்த்தல் -அடங்கின வெற்றிலை உமிழ்தல் -செய்யாமையாலே
அவை சர்வ சாதாரணம் அன்று காணும்
அவர் ஆசார ப்ரதாநமான குலோத் பவராகையாலே அவை தானே வந்தது அத்தனை –
தீஷிதனுக்கு கர்ம யோக்யதா ஹேதுவான சிகா யஜ்ஜோ பவீதங்கள் கிடந்தவோ பாதி நை சர்கிகமானவை கிடக்குவுமாய்
அவனுக்கு நித்தியமான சந்தியாவந்தனம் இல்லாதாவோ பாதி இவனுக்கும் ஸ்வீ கார தசையிலே தத் அங்கமாக ஒரு நியதி வேண்டாமையாலே
இவன் நின்ற நிலையே காணும் இதுக்கு அதிகாரம் -என்று அருளிச் செய்தார் –

—————-

சூரணை -32-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அதிகார நியமம் –இத்யாதி
திரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் ஸத்ருக் ஜனார்த்தனம் -என்று
ஷத்ரியரான தர்ம புத்ராதிகள் சரணம் புகுருகையாலும்
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று ஸ்திரீயான திரௌபதி சரணம் புகுருகையாலும்
ஸ பித்ரா சேத்யாதி தமேவ சரணம் கத -என்று தேவ யோனியான காகம் சரணம் புகுருகையாலும்
கிருபா மாத்ரா மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்று திர்யக் யோனியான காளியன் சரணம் புகுருகையாலும்
ஸ து நாகவர ஸ்ரீ மான் -இத்யாதி மனஸா சிந்தயத் ஹரிம் -என்று கஜேந்திரன் சரணம் புகுருகையாலும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்று ராக்ஷஸ யோனியான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுருகையாலும்
அஞ்சலிம் ப்ராங் முக க்ருத்வா -என்று ஸர்வாதிகாரன பெருமாள் சரணம் புகுருகையாலும்
ஸ பிராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய -என்று பெருமாளை பிரியில் தரியாதபடி அநந்யார்ஹரான இளைய பெருமாள் சரணம் புகுருகையாலும்
அதிகாரி நியமம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

பல நியமம் -இத்யாதியாலே
கீழ்ச் சொன்ன அதிகாரிகளுக்கு பலம் ஒருபடிப்பட்டு இராமையாலே
ஸகல பல ப்ரதமான இவ்வுபாயத்துக்குப் பல நியமம் இல்லை -என்கிறார்-

———

சூரணை -34-

விஷய நியமம் ஆவது-குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –

சூரணை -35-

ஆழ்வார்கள் பல இடங்களிலும்-பிரபத்தி பண்ணிற்றும்-அர்ச்சாவதாரத்திலே –

மேல் -விஷய நியமம் -இத்யாதியாலே
கீழே -விஷய நியமமே உள்ளது -என்று ப்ரதிஜ்ஜை பண்ணினதை ப்ரதிபாதிக்கிறார் –
ஸமஸ்த கல்யாண குண பரி பூர்த்தி உள்ள இடமே சரண்ய விஷயம் என்றும் –
அது தான் அல்லாத இடங்களை பற்றி அர்ச்சாவதாரத்திலே அதி சாய்த்து இருக்கும் என்றும் –
இக்குண பூர்த்தியாலே அனுஷ்டாதாக்களான ஆழ்வார்களும்
பிறந்த வாற்றிலும் மற்றும் க்வா சித்கமாக அவதாராதிகளிலே சரணம் புகுந்தார்களாகிலும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும்
இத்யாதிகளிலே உகந்து அருளின நிலங்களிலே விசேஷித்து சரணம் புகுகையாலும்
அர்ச்சாவதாரமே ஸகலர்க்கும் சரண்ய விஷயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

——————-

சூரணை -36-

பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

பூர்ணம் -இத்யாதி -இத்தால் –
ப்ரமாதாக்களுடைய அனுஷ்டானமே அன்றிக்கே -கடவல்லியில் -த்வயத்தில் -பூர்வ உத்தர கண்ட மத்யத்திலே
ஓதப்படுகிற பிரமாண ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதிக்கிறார் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ருச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வஸிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -என்னக் கடவது இறே –

———-

சூரணை-37-

பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்-இருட்டறையிலே விளக்குப் போலே-பிரகாசிப்பது இங்கே –

ப்ரபத்திக்கு இத்யாதி -இத்தால் -அர்ச்சையிலே இக் குணங்கள் பிரகாசிக்கும் படியை அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி ரூப உபாயங்களில் அஞ்ஞனாய் -அஸக்தனாய் -அகிஞ்சனனாய் -அபராத பூர்ணனானவன் –
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
கண்டு பற்றுகைக்கும்
இவன் கைம்முதல் பாராமைக்கும்
பற்றும் இடத்தில் இவன் தோஷத்தைக் குணமாகக் கொள்ளுகை
முதலானவற்றுக்கும் அபேக்ஷிதங்களான
ஸுலப்ய
வாத்ஸல்ய
அவாப்த ஸமஸ்த காமத்வாதி -குணங்கள்
பகவத் ஸ்வரூப திரோதாநகரியான இவ்விபூதியில்
இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆஸ்ரயிக்கும் படி நிற்கையாலே
பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவை இவ்விடத்திலே விசேஷித்து பிரகாசிக்கும் என்கிறார் –

——————-

சூரணை -38-

பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும் குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை-தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இப்படி இவ்விடத்தில் எல்லாக் குணங்களும் பரிபூர்ணமே யாகில்
அர்ச்சயஸ் ஸர்வ ஸஹிஷ்ணு -இத்யாதிப்படியே –
இச் சேதனன் கை பார்த்து இருக்கிற படி எங்கனே என்ன
ஆஸ்ரித அர்த்தமாக அக்குணங்களை அமைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்று
ஸுலப்ய காஷ்டையை ஸாதிக்கிறார் –

—————

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு எதிர்த்தட்டான நித்ய ஸூரிகள் பக்கல் ஆஸ்ரயண உப யோகியான இக்குணங்களுக்கு
விஷயம் இல்லாமையாலே பர அவஸ்தையில் பகல் விளக்குப் பட்டு இருக்கும்
அவற்றுக்கு விஷயமுள்ள இடத்திலே ப்ரகாசித்த வத்தனையான பின்பு அவை அன்றோ என்ன
பூதக ஜலம் போலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
பூதக ஜலம்-இத்யாதியாலே
எங்கும் ஜல ஸாம்யம் யுண்டே யாகிலும் -தடாக ஜலம் ஸர்வ கால -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வருக்கும் உபயோக யோக்யமாமோ பாதி
பரத்வாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இக்குணங்கள் ஏகீ பாவித்து இருந்ததே யாகிலும்
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அந்தர்யாமித்வம் அதீந்திரியாகார ஸ்வ பாவ விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
இவை நாலிலும் வைத்துக் கொண்டு அர்ச்சாவதார இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
ஸர்வதா சமாஸ்ரயணீயம் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்
அதிலே தேங்கின மடுக்கள் -என்றது
அர்ச்சா முகமாக ப்ராசுர்யேண உகந்து அருளுவது அவதார விக்ரஹங்கள் ஆகையாலே –

———

ஆனால் இவ்வர்ச்சா வவதாரம் ஆஸ்ரயித்து இருக்கிற சேதனனுக்குச் செய்யும் உபகாரம் தான் என் என்ன
செய்யும் உபகாரங்களை அருளிச் செய்கிறார் -இது தான் ஸாஸ்த்ரங்களால் -இத்யாதியால்

சூரணை -40-

இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இது தான் –இப்படி ஸூலபமான அர்ச்சாவதாரம் தான்
அதீந்த்ர்ய அர்த்த ப்ரகாசகங்களான ஸாஸ்த்ரங்களாலும்
அஞ்ஞாத ஞாபந முகத்தாலே திருத்த அரிதாம் படி பகவத் வ்யதிரிக்தங்களான ஸப்தாதி விஷய அனுபவ அபி நிவேசம் பண்ணி
நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு வர்த்திக்கிற சேதனர்க்கு -தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -என்கிறபடியே
அவர்கள் வாசலிலே சென்றாகிலும் தன் வடிவழகை அனுபவிப்பித்து வை முக்கியத்தை பற்றி -பிரதம பாவியான ருசியை உண்டாக்கி
விஷய வை லக்ஷண்யத்தாலே யாதாவான ருசி பிறந்தால் தன்னைப் பெறுகைக்கு வேறே ஓன்று தேட வேண்டாதே
எடுத்தாப் போலே கோயிலாம் படியான தானே உபாயமாய் –
தன்னைப் பற்றின அநந்தரத்திலே சேஷ பூதனான இவனுக்கு போக்யமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித
கைங்கர்யத்தையும் கை மேலே பண்ணிக் கொடுக்கும் என்கிறார் –

ஆக
ப்ரபத்திக்கு தேச நியமம்-என்று தொடங்கி
பிரபத்தி வை லக்ஷண்யத்தையும்
பிரபத்தவ்ய விஷய வை லக்ஷண்யத்தையும்
ப்ரதிபாதித்தார் –

———-

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

மேல் இந்த அர்ச்சாவதாரம் தன்னிலே ப்ரபத்தாக்களான அதிகாரிகள் த்ரி விதராய் இருப்பர்கள் என்கிறார் –
இது தன்னில் -இத்யாதியால்

———

சூரணை -42-

அஞ்ஞரும்–ஞானாதிகரும்-பக்தி பரவசரும் —

அவர்களுடைய த்ரை வித்யம் இருக்கும் படி எங்கனே என்னில் -அஞ்ஞரும் இத்யாதியால்
ஸம்ஸார ஆர்ணவ மக்நா நாம் விஷய அக்ராந்த சேதஸாம் -என்கிறபடியே
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலிலே விழுந்து நஷ்ட ஸர்வ சேஷ்டராய் -விவித விஷய க்ராஹகங்களால் வந்த
வ்யஸன பரம்பர அபி பூதராகையாலே இத்துக்க நிவ்ருத்தி அர்த்தமாக உபாயாந்தரங்களிலே இழிகைக்கு
ஒருபடியாலும் ஞான சக்திகள் இல்லாமையாலும்
விஷ்ணு போதம் அல்லது வேறு கத்தி இல்லை என்று ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியானவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயாந்தரங்களில் இழிகைக்கு யோக்யதை இல்லாத படியான அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப யாதாத்ம்ய ஞானாதிக்யத்தால்
ப்ராப்த சேஷியான அவன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
இவ்விஷயத்தில் வடிவு அழகில் உண்டான வை லக்ஷண்ய அனுஸந்தா நத்தாலே ஈடுபட்டு
இதர உபாய அனுஷ்டானத்தில் இழியவும் கூட ஸக்தர் அல்லாத படி இட்ட கால் இட்ட கையராம் படி
பக்தி பரவசராய் இருக்கையாலே ஸகல பர ஸமர்ப்பணம் பண்ணுவாருமாய்
இப்படி இவர்கள் ராஸி த்ரய அந்தர் பூந்தராய் இருப்பார் என்கிறார் –

———-

சூரணை -43-

இவர்களுடைய த்ரை வித்யம் எங்கே காணலாம் என்னும் அபேக்ஷையிலே அருளிச் செய்கிறார்

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-

ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –

பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இனி அஸ்மதாதிகள் -என்றது
ப்ரபந்ந அதிகாரிகளிலே வேறே சிலரை ப்ரக்ருதி பாரவஸ்யத்தாலே அஞ்ஞராக அருளிச் செய்ய மாட்டாமையாலே
ஆதி -ஸப்தத்தாலே -இவ்வதிகாரி பாஹுல்யத்தை அருளிச் செய்கிறார் –
ஞான ஆதிக்யத்தாலே ப்ரபன்னரான ஆச்சார்யர்கள் என்றது
நாத யாமுனர் தொடக்கமானவர்களை
ஆழ்வார்கள் பக்தி பரவசர் என்னும் இடம் அவர்கள் பாசுரங்களாலே அறியலாம் –

———–

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இவ்வாகாரங்கள் ராஸி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ ஆகாரங்களே உள்ளது என்னும் படி அவற்றிலே ஊன்றிப் போருகையாலே

———–

சூரணை -45-

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

அசித் சம்பந்தம் அடியான அஞ்ஞானத்தாலும்
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய வேதனத்தால் யுண்டான ஞான ஆதிக்யத்தாலும்
பகவத் விஷயத்தில் பக்தி பாரவஸ்யத்தாலும்
சரணம் புகுகையாலே மூன்று ராஸியும் கீழ்ச் சொன்ன தத்வ த்ரய ஞான நிபந்தமாய் வரும் என்கிறார் –

———

சூரணை -46-

என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

இத்தால் பரமாச்சார்யாருடைய பாசுரத்தாலே இம்மூன்று அதிகாரிகளுடைய நினைவு பிரகாசிக்கும் என்கிறார் –

———

சூரணை -47-

அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –

சூரணை -48-

முக்கியம் அதுவே –

அவ்வாழ்வாருடைய திரு உள்ளத்தால் பர பக்தி பாரவஸ் யத்தால் வந்த ப்ரபத்தியேயாய் இருக்கும் –
பகவத் வை லக்ஷண்யம் அடியாக வந்தது ஆகையால் முக்யமும் அதுவே என்கிறார் –

———

சூரணை -49-

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம்

அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –

த்ரை வித்ய பேதத்துக்குப் பிரமாணம்
இதில் தேவ என்கிறது பக்தி விஷயமாக

————

சூரணை -50-

இதம் சரணம் அஜ்ஞானாம் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–ஸ்ரீ லஷ்மி தந்த்ர ஸ்லோகம் -100-

பாரம் திதீர்ஷதாம்-என்கிறது மூவருக்கும் ஒக்கும்

———

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே-இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –

இதில் பக்தி பாரவஸ் யத்தாலே ப்ரபன்னரானவர்களுக்கு -அதனுடைய பாக விசேஷத்தாலே வந்த அவஸ்த்தா பேதங்களாலே
ஸ்வரூப ஹானியான ப்ரவ்ருத்தியிலே மூட்ட -இந்த பிரபத்தி விஸ்வாசம் குலையக் கடவதாய் இருக்கும் என்று
அவ்வதிகாரிகளான ஆழ்வார்களுடைய அனுஷ்டானங்கள் விஷய வைலக்ஷண்ய அதீனமாய் வருகையாலே
ஸ்வரூப ஹானி அன்று என்று பரிஹரிக்கிறார் –

———-

சூரணை -52-

தன்னைப் பேணவும் பண்ணும் –தரிக்கவும் பண்ணும் –

சூரணை -53-

இந்த ஸ்வபாவ விசேஷங்கள்-கல்யாண குணங்களிலும்-திரு சரங்களிலும்-

திரு நாமங்களிலும்-திரு குழல் ஓசையிலும்-காணலாம்-

அவ் விஷய வைலக்ஷண்யம் ஆழ்வார்களை ஒருபடிப் பட்டு இருக்க ஒட்டாமை –
அவ்விஷய அனுபந்திகளானவற்றின் பக்கலிலும் காணலாம் என்கிறது
பக்தி பாரவஸ் யத்தாலே -பந்தோடு கழல் மருவாள் -இத்யாதியில் படியே தன்னைப் பேணாமையும்
இட்ட கால் இட்ட கைகள் -இத்யாதிப்படியே தறியாமையும் யுடையராய் இருப்பாரை
அவன் வரவைக் குறித்து ஸ்வயமேவ -காரை பூணும் -இத்யாதில் படியே தந்தாமை அலங்கரித்துப் போரவும்
அத்தசையிலே அவன் வரக்கொள்ள அவ்வரவு தானே அநிஷ்டமாய்
போகு நம்பீ –
கழகமேறேல் நம்பீ -இத்யாதில் படியே தள்ளித் தரித்து இருக்கவும் பண்ணும் அவஸ்த்தா விசேஷங்களைப் பிறப்பிக்கிற
ஸ்வ பாவ விசேஷங்கள் -வல்வினையேனை ஏற்கின்ற குணங்களை உடையாய் -என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -என்றும் இத்யாதிகளாலே
கல்யாண குணங்களிலும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே -என்றும்
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்றும் இத்யாதிகளாலே
திருச்சரங்களிலும்
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -என்றும்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று இத்யாதிகளாலே
திரு நாமங்களிலும்
அவனுடைய தீம் குழல் ஈரும் -என்றும்
ஆ கள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -என்றும்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராயே -என்றும் இத்யாதியாலே
திருக் குழல் ஓசையிலும் தோற்றும் என்கிறார் –

————

சூரணை -54-

இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்-பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே-இருப்பது ஓன்று –

இப்படி பக்தி பாரவஸ்ய ப்ரபத்தியில் வரும் ஸம்சய நிவ்ருத்தியைப் பண்ணி -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி
உக்தையான ப்ரபத்தியினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி –
நிரூபாதிக சேஷ வஸ்துவினுடைய ஸ்வரூப அனுரூபமான இந்த பிரபத்தி தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்று தொடங்கி
பிதாவுக்கு -இத்யாதியாலே -நிஷேகாதி முகத்தாலே தன்னை உண்டாக்கின ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து
புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே உபய ஸம்பந்த விருத்தம் என்கிறார் –

————–

சூரணை -55-

இது தனக்கு ஸ்வரூபம்-தன்னைப் பொறாது-ஒழிகை –

ஆனால் இது தனக்கு வேஷம் எது என்னச் சொல்கிறது மேல் -இது தனக்கு -இத்யாதி
இப்பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபம் தன்னை உபாயம் என்னப் பெறாது ஒழிகை

————-

சூரணை -56-

அங்கம் தன்னை-ஒழிந்தவற்றை-பொறாது ஒழிகை –(சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –)

இப் பிரபத்திக்கு அங்கம் தன்னை ஒழிந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமானவை ஒன்றையும் ஸஹியாது ஒழிகை

———-

சூரணை -57-

உபாயம் தன்னை பொறுக்கும்-

சூரணை-58-

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –

அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –)

ஆனால் தன்னை யுபாயம் என்னப் பொறுக்கும் இந்த ஸித்த உபாய வ்யதிரிக்தமான உபயாந்தரம் தன்னை உபாயம் என்னவும் பொறுக்கும்
தனக்கு அவிநா பூதமாகையாலே ப்ரவ்ருத்தி ஸ்வரூபமான அம்சத்தையும் பொறுக்கும் –

——–

சூரணை -59-

இது இரண்டையும் பொறாது-

இந்த பிரபத்தி
உபாயத்வத்தையும்
சேதன க்ரியாதிகள் அங்கம் ஆகுகையும்
பொறாது என்கிறார் –

———–

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்-அப்ரதிஷேதமுமே-வேண்டுவது –

ஆனால் பல ஸித்தி உண்டாம்படி எங்கனே என்ன -பலத்துக்கு என்று தொடங்கிச் சொல்லுகிறது
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்த ஸித்தமான தத் ஏக ரஷ்யத்வ ரூப ஆத்ம ஞானமும்
ரக்ஷகனுடைய ஸ்வீ கார விஷய பூதனான தன் விலக்காமையுமே
பொறுக்க அபேக்ஷிதம் என்கிறார் –

————

சூரணை-61-

அல்லாத போது-பந்தத்துக்கும்-பூர்த்திக்கும்-கொத்தையாம் –

இனி அல்லாத போது -என்றது -அநாதி காலம் அஹம் கர்த்தா -அஹம் போக்தா -என்று போந்த இத்தனையிலும் சில உண்டாக வேண்டாவோ என்ற போது
பந்தத்துக்கும் இத்யாதி
ததேக சேஷமாய்த் ததேக ரஷ்யமான பந்தத்துக்கும்
அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வ ரூபமான பூர்த்திக்கும்
மாலின்யமாம் –

———

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –அத்தை விளைத்து கொள்ளாது-ஒழிகையே வேண்டுவது –

ஆகையால் -ஆபத்தை -என்று தொடங்கி -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அபூரணனான தான்
மம மாயா துரத்யயா -என்கிற அவித்யா ஸம்பந்த ரூபமான ஆபன் நிவ்ருத்திக்கு ஆயாஸிக்க வேணும் என்று ப்ரமித்து
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா -என்கிறபடியே
அவ்வாபத்தை சத சாகமாகப் பணைப்பித்துக் கொள்ளாது ஒழிகையே இவனுக்குக் கர்தவ்யம் என்கிறார் –

—————-

சூரணை -63-

ரஷணத்துக்கு அபேஷிதம்-ரஷ்யத்வ அனுமதியே –

ஆனால் நித்ய ஸம்ஸாரியான இவனை ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வராதபடி ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ரக்ஷிக்கும் படி எங்கனே என்னில்
ரக்ஷணத்துக்கு இத்யாதி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிற இவனுக்கு ரக்ஷண தர்மத்துக்கு வேண்டுவது
ஸ்வரூப பத ரஷ்ய மாத்ரமான இவனுடைய –
வைத்தேன் மதியால் -என்கிற அனுமதி மாத்திரமே அபேக்ஷிதம் -என்கை –

————

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —

ஆனால் இப்படி இத்தசையில் இசைவை அபேக்ஷித்து இருந்து ரக்ஷிக்கும் இடத்தில் அவ்வனுமதிதான் சாதனம் ஆகாதோ என்னில்
ஆகாது என்னும் இடத்தைப் பல யுக்திகளாலே அருளிச் செய்கிறார் -எல்லா உபாயத்துக்கும் -என்று தொடங்கி
ஜ்யோதிஷ்டோமாதிகளை அனுஷ்டி என்றால் -அப்படிச் செய்கிறோம் என்ற அனுமதி மாத்ரத்தால் அவற்றை அனுஷ்ட்டித்தான் ஆகாமையாலும்
இம்மாத்திரத்தாலே சேதனனான ஆகாரம் தெரிவிக்கின்ற இத்தனையே யாகையாலும்
அவன் ஏவி அடிமை கொள்ளும் இடத்தில் இவ்வனுமதி பல வேளையிலும் அனுவர்த்திக்கையாலும்
அத ஏவ விருத்தம் இல்லாமையாலும்
சைதன்ய ஆதாரமான அசித் வியாவ்ருத்தி மாத்ரமாய்
அதிகாரி விசேஷணமான இவன் அனுமதியை உபாயமாக்க ஒரு வழி இல்லை என்கிறார்
அசாதாரணமான ஸ்த்ரீயை அபிமதனானவன் ஸ்தந போஷண அத்யவஸர ப்ரதீஷனாய் அனுபவித்தால் அவள் அவ்வனுபவத்துக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினாள் ஆகாள் இறே –

————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்-உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்-உபேயத்தில் உகப்பும் –

இந்த அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஸாதனமே யல்ல வாகில் இது எதுக்கு பிரயோஜனம் என்ன
உபாய தசையில் அவன் பண்ணின உபகாரத்தில் -உனக்கு என் செய்கேன் -என்கிற உபகார ஸ்ம்ருதியும்
உபேய தசையில் எதிர் விழியால் உண்டான உகப்புக்கும் உறுப்பு -என்கிறார் –

————-

சூரணை-66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே-பிராப்திக்கு உபாயம்-அவன் நினைவு —

இப்படி அத்தலையால் வந்த நினைவே உபாயம் என்கைக்கு ஆப்த வசனத்தை எடுக்கிறார் –
உன் மனத்தால் -இத்யாதியாலே –

———–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

ஸர்வஞ்ஞனாய் -காருணிகனான அவன் நினைவு காதாசித்கம் ஆகிறது என்
அது நித்யமானால் ஆகாதோ என்ன
அது தான் எப்போதும் உண்டு -என்கிறார் –

————–

சூரணை -68-

அது பலிப்பது-இவன் நினைவு மாறினால் –

ஆனால் அது ஸர்வதா பலம் ஆகாது ஒழிகிறது என் என்ன -அது பழிப்பது இத்யாதி
ஸர்வஜ்ஜோபி ப்ரதீக்ஷதே -என்கிறபடியே நான் எனக்கு உரியேன் என்கிற இவன்
கை வாங்கும் அளவை கடாக்ஷித்து அருளுகையாலே என்கிறார் –

———

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இதுக்கு உதாஹரணம் -அந்திம -காலத்துக்கு இத்யாதி -அதாவது
நஞ்சீயர் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய அந்திம தசையிலே அறிய வேணும் என்று எழுந்து அருள
அவர் -இப்போது எனக்குத் தஞ்சமாக ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன
வாரீர் இப்போது உமக்குத் தனிபாம் தேட இருந்தீர்
இத்தலையில் தங்கம் என் என்கிற நினைவு குளிகை தானே காணும் தஞ்சம்
ஆனபின்பு ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் நிர் அந்வயராய் நிர்ப் பயராய் இருக்காய் காணும் உமக்கு
ஸ்வரூப அனுரூபமான தஞ்சைமாவது -என்று அருளிச் செய்தார் –

————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

ஆக
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பெறாது ஒழிகை -என்று தொடங்கி
இவனுடைய ஸ்வீ காரம் உபாயம் ஆகாது -ஸ்வரூபமாம் அத்தனை என்னும் இடத்தை இவ்வளவும் உப பாதித்து
இங்கே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை ச ப்ரகாரமாக சோதிக்கிறார்
ப்ராப்தாவும் என்று தொடங்கி –
இப்படி ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் அந்வயம் இல்லாத படி இவனுடைய ஸ்வரூப சித்த்யதிகள் அவன் அதீனம் ஆகையாலே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து -என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாக இத் தலையை வந்து பிராபிக்கக் கடவானும்
நயாமி -என்கிறபடியே இவனுக்குப் ப்ராபகனும்
இவனைப் ப்ராபித்தால் உகப்பானும் அவனே என்று உபபாதிக்கிறார் –

————–

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

இப்படி எல்லாமே அவனே என்கைக்குத் தான் நிபந்தநம் என் என்னில்
ஸர்வதா ஸ்வ ஸ்வா தந்தர்ய ராஹித்யமே ஸ்வரூபமாம் படி-பாரதந்தர்ய சேஷத்வங்கள் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப தர்மங்களாய்க் கொண்டு பலிக்கையாலே -என்கிறார் மேல்
இவை பலிக்கிற படி தான் எங்கனே என்னில் -ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதி
அசித்வத் உண்டான அத்யந்த பாரதந்தர்யத்தாலே ஸ்வ யத்ன நிவ்ருத்தி உண்டாகையாலும்
பரகத அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி உண்டாகையாளுண்ம் அவை இரண்டும் பலித்தது என்கிறார் –

———-

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

இவ்வோபாதி ஞான சிகீர்ஷா ப்ரயத்னங்களும் ஆத்ம தர்மம் அன்றோ -அவற்றுக்குப் பிரயோஜனம் என் என்ன -பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி என்று தொடங்கி –
பிரதானமான சேஷத்வ பாரதந்தர்யங்களுக்கு சேஷமாய்க் கொண்டு இவை அவற்றை ச ப்ரயோஜனமாக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாரதந்தர்யத்தாலே பலித்த ஸ்வ யத்ன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான கர்த்ருத்வம் அடியாக வந்த ப்ரயத்னம் ஆகையாலே
அந்த பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி ரூபமான பலமன் அந்த ப்ரயத்னத்தால் என்றும்
தத் விஷய ப்ரீதியாலே பர அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே பலித்த ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான ஞாத்ருத்வத்துக்குப் பலம்
அன்ன மதந்த மத்மி-என்றும்
பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே
இத்தலையில் பிரவிருத்தி கண்டு விக்ருதமான பகவத் விஷயத்தினுடைய ப்ரீதிக்கு எதிர் விழி கொடுக்கையால் வந்த ப்ரீதி என்றும் அருளிச் செய்கிறார்
அந்த ப்ரீதி தானே இறே இவனுக்கு அதந்தமத்மி -என்கிற நிலை நின்ற போக்த்ருத்வமாவது –

—————–

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

ஆனால் சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களும் ஆத்ம தர்மங்களாய் இருக்க
சேஷத்வ பாரதந்தர்யங்களை ப்ரதானம் ஆக்கி ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களை அவற்றுக்கு சேஷமாக்குகைக்கு நியாமகம் ஏது –
மற்றைப்படி யானாலாகாதோ என்ன -அது சேராது என்னும் இடத்தை -ஞான ஆனந்தங்கள் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ்வாத்மாவுக்கு பஹிரங்கமான அசித் வ்யாவ்ருத்தி ரூபமான ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும் படி அந்தரங்கமான ஈஸ்வர வ்யாவ்ருத்தி ரூபமான தாஸ்யம் அந்தரங்கமாகையாலே தத் தர்மங்களையும் தத் அனுரூபமாகக் கொள்ள வேணும் இறே என்கிறார்
அந்தரங்க பஹி ரங்க யோர் அந்தரங்கம் பலீய-என்னக் கடவது இறே –

————–

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்–அந்ய சேஷத்வமும்-வந்தேறி-

முன்பு அஹமிதமபி வேத்மி -என்று ஞான ஆனந்த ரூபமான அஹம் அர்த்தமும் தத் தர்மங்களுமான ஞான ஆனந்தங்களும் அன்றோ ப்ரகாசித்துப் போந்தது
இப்போது அன்றோ தாஸ்யாதிகள் ப்ரகாசிக்கிறது -ஆகையால் இது வந்தேறி யன்றோ என்ன
ஆகந்துக விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே அபி பூதமாய்க் கிடந்த வித்தனை –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யம் ஸ்வதஸ் ஸித்தம் இறே -என்கிறார் -இது தான் வந்தேறி அன்று -என்று தொடக்கி –

——————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இதில் சேஷத்வ விரோதி -இத்யாதியாலே சாமான்யேன சேஷத்வத்துக்கு விரோதி தனக்குத் தான் கடவன் என்கை –
விசேஷித்து பகவச் சேஷத்வத்துக்கு விரோதி இதர சேஷமாகை என்கிறார் –

——————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

அஹங்காரம் -இத்யாதி -இப்படி ஸ்வரூபத்துக்கு வந்தேறியான அழுக்கு அறுத்தால் –
யஸ்யாஸ்மி –
பரவாநஸ்மி –இத்யாதிகளாலே சொல்லப்படுகிற
தாஸ்ய விஸிஷ்டமான ஆத்மாவுக்கு வாஸ்தவமான நாமம் அடியான் இறே என்கிறார்-

———-

சூரணை -78-

க்ராம குலாதிகளால்-வரும் பேர்-அநர்த்த ஹேது –

க்ராம குலாதிகளால் -இத்யாதி -கீழ் இப்படி உக்த ஸ்வரூபமான னவனுக்கு
கோயிலிலே வாழும் வைட்டணவன் -என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி -இத்யாதியாலும் வருகிற நிர்த்தேசம் ஒழிந்து
அல்லாத ஒவ்பாதிக குல சரண கோத்ராதிகளாலே வருமது ஸ்வரூப ஹானி என்று அதுக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார் –

———

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -என்று

———-

சூரணை -80-

உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —

உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

ஆக இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை -என்ற பாசுரத்திலே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை இவ்வளவாக
பாரங்கதமாக்கி -அப்பாசுரத்தால் பலித்த ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூபமான உபாய உபேயங்களிலே நிஷ்டரான அதிகாரிகளை
இப்ப்ரபந்ந அதிகாரிக்கு த்ருஷ்டாந்தமாக வெளியிடுகிறார் -உபாயத்தில் -என்று தொடங்கி -எங்கனே என்னில் –
உபாய அத்யவசாயத்தில் நெருப்பை நீராக்க வல்ல பிராட்டி ஸ்வ ரக்ஷணத்தில் இழியாதே
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று இருந்தால் போலேயும்
ஸ்த்ரீத்வத்துக்குப் படி எடுக்க வேண்டும்படியான திரௌபதி அம் மஹா சதஸ்ஸிலே பிறந்த பரிபவத்தில் உரிக்கிற துகிலை வாஸனையாலே தானும் ஒரு கை பற்றாது ஒழிந்தால் போலேயும்
திருக்கண்ண மங்கை யாண்டான் பத்தராவி திருவடிகளிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி அவர் கைப்புடையிலே கண் வளர்ந்தால் போலேயும்
இவ்வதிகாரியும் இருக்க வேணும் என்கிறார் –

ஆனால் உபேய அதிகாரிகள் இருக்கும் படி எங்கனே என்கிற சங்கையிலே சொல்லுகிறது -உபேயத்தில் -என்று தொடங்கி –
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றும்
குருஷ்வ மாம் அநு சரன் -என்றும்
பெருமாளைப் பிரியில் தரியாதே பின் சென்று
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஸர்வவித கைங்கர்யங்களையும் அதிகரித்து
அது தன்னிலும்
ஸ்வயம் து ருசிரே தேசே -இத்யாதியாலே அவனுக்கு உகந்த அடிமையிலே அதிகரித்த இளைய பெருமாளைப் போலேயும்
ஆஸ்ரயண வேளையிலும் புருஷீ கரித்து -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்கிறபடி
அடிமை கொள்ளுகைக்கு முற்பாடையான பிராட்டி விஷயமாகத் தம்மை அழிய மாறி அடிமை செய்த ஜடாயு மஹா ராஜரையும்
திரு நாராயண புரத்தில் வேத நாராயணர் விஷயமாக அக்னி பயத்தால் வந்த அபாயத்தில் அந்த பகவத் ஸுகுமார்ய அநுஸந்தானத்தாலே
ஸ குடும்பராக விதக்தராம் படி ஸாஹஸ ப்ரவ்ருத்தி பண்ணின திரு நறையூர் அரையரையும்
தத் சித்த விமலாஹ்லாத -இத்யாதிப்படியே
தான் யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே முடிந்த சிந்தையந்தியைப் போலேயும் இருக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

இனி உக்தரான உபாய அதிகாரிகள் தம்தாமுக்கு உள்ள கைம்முதல்களைக் கழித்து விடக் காண்கையாலே
உபாய தசையில் இவ்வதிகாரியும் தம் கைம்முதலாய் உள்ளவற்றைக் கழிக்கக் கடவன்
என்னும் இடத்தை -பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –

—————

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

இனி பசியராய் இருப்பார் -என்று தொடங்கி
உடம்பு தன்னடையே போயிற்று -என்னும் அளவும்
அவ்வுபேய அதிகாரிகளுடைய அனுஷ்டானத்தை விசதமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –

————-

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —

உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும்-

உபாயத்துக்கு இத்யாதியாலே
இப்படி இவ்வ்வநுஷ்டானங்களில் சிஷ்டாசாரம் யுண்டாகையாலே கீழே ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்திகளிலே ப்ரஸ்துதரான
இவ்விரண்டு அதிகாரிகளுக்கும் அவை அநுஷ்டேயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்
தறியாமையும் வேணும் என்னும் அளவும் –

——————

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

ஆனால் பெரிய யுடையாருக்கு -அவ்யவஸ்தித்வ ஹி த்ருஸ்யதே யுத்தே ஐயபராஜயவ் -என்று
யுத்தத்தில் வெற்றி தோல்விகள் வ்யவஸ்திதங்கள் இல்லாமையாலும்
சிந்தயந்திக்கு அனுபவ அலாபத்தாலே ஸ்வயமேவ சரீரம் விடுகையாலும்
முடிகை பிராப்தம்
உத்தம வர்ணரான திரு நறையூர் அரையர் ஒன்றையும் பாராதே ஸ்வயமேவ ஆத்ம பாதகராய்க் கொண்டு செய்த அதி ஸாஹஸ ப்ரவ்ருத்தி
ஸாஸ்த்ரங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் சேராது இறே என்ன
இவனுக்கு வைதமாய் வரும்து இறே -என்று தொடங்கி அது சேரும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
விதமாய் வரும்து என்றது -சில பலாந்தரங்களை உத்தேசித்து
ப்ராஹ்மணார்த்தே கவார்த்தே வா ஸம்யக் ப்ராணன் பரித்யஜேத் -இத்யாதி
விதி பரதந்த்ரமாய் வரும் வியாபாரங்கள் இறே இவ்வதிகாரிக்கு விடலாவது
விஷய வை லக்ஷண்யத்தாலே ராக ப்ரேரிதமாய்க் கொண்டு தானே வருமத்தைத் தள்ள ஒண்ணாது இறே –

——————–

சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் -என்றது
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான அவ்வனுஷ்டானத்தில் உபாயத்வ புத்தி யுண்டாய்த்தாகில்
அது ஸ்வரூப ஹானி யாகையாலே தானே இத்தை நிவர்த்திப்பிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
இவ்விஷயம் தன்னை உபாயமாக அனுசந்திக்கில் -அது ஸித்த உபாயமாகையாலே தானே நிவர்த்திப்பிக்கும் என்னுதல்
இனி உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம் -என்றது –
இவ்விரண்டும் இன்றிக்கே உபேய வை லக்ஷண்ய அனுசந்தானம் தானே ப்ரவர்த்திப்பித்தது என்கிறார் –

————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய ப்ரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

உபேயம் என்ன ஸாஸ்த்ர விருத்தங்களான ஏவம் வித ப்ரவ்ருத்தியிலே இவர் ப்ரவர்த்திக்கலாமோ என்ன
அப்ராப்த விஷயங்கள் -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார்
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சிஷ்ட கர்ஹிதமாய்
ஜூகுப்ஸா விஷயங்களுமாய்
உதர்க்கத்தில் நரகாவஹமான விஷயங்களிலே அபி நிவிஷ்டமானவனும் தன்னை அழிய மாறியும் அத்தைப் பெற வேணும் என்று இரா நின்றால்
எல்லா வழியால் அதற்கு எதிர்த்தட்டாய் ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்ட இவருக்கு இப்படிப் படச் சொல்ல வேணுமோ என்கிறார் –

————

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

ப்ரயோஜன மநுத்திஸ்யா ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்கையாலே
இது உபாயமாய் ஸம்பவிக்கிலோ என்னில் -அனுஷ்டானமும் -இத்யாதி
கீழ்ச் சொன்ன உபாய அதிகாரி லக்ஷண தயா வந்த அனுஷ்டானங்கள் உபாயத்தில் அந்வயியாதவோ பாதி
இவருடைய இந்த அனுஷ்டானமும் உபாயத்தில் அந்வயியாது
அங்கன் அன்றாகில் இது தான் உபேய அதிகாரிகள் எல்லாருக்கும் அநுஷ்டேயமாம் இறே –

——————

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

இவர் அநித்யமான சரீரத்தை அழிய மாறின இதுக்குப் படுகிறதோ
நித்தியமான ஆத்ம வஸ்துவும் அஸத் சமமாம் படி அத்யந்த விலக்ஷணரானவர்களும் விஷய வைலக்ஷண்யத்தாலே அநந்ய உபாயத்வாதிகள் குலைந்து
அலமாவா நிற்க என்று அவ்வனுஷ்டானத்தில் ப்ரஸித்தியைப் பிரகாசிப்பிக்கிறார் -அநந்ய உபாயத்வமும் -என்று தொடங்கி
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
மற்றை நம் காமன்கள் மாற்றும் -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
அநந்ய உபாயதவாதிகள் யுடைய பிராட்டி
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு -நோற்கின்றேன் காம தேவா -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன் –இத்யாதியாலே
அவை குலையும்படியான ப்ரவ்ருத்திகளிலே ப்ரவர்த்திக்கையாலும்
அல்லாத ஆழ்வார்களும்
நோற்ற நோன்பு -என்று தொடங்கி அடுத்ததுசுத்து பிரபத்தி பண்ணுகையாலும்
மடல் எடுக்கையாலும்
ஓதி நாமம் குளித்து -இத்யாதியாலே உபாயாந்தரங்களிலே இழிய நினைக்கையாலும்
இவ்வநுஷ்டானம் ப்ரத்யக்ஷம் இறே -என்கிறார் –

————-

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

ஆனால் அவர்கள் செயல் தானும் அஞ்ஞான கார்யமாய் இருந்ததே என்ன -அத்தைப் பரிஹரிக்கிறார் ஞான விபாக கார்யம் -இத்யாதி
பகவத் வை லக்ஷண்ய ஞானத்தினுடைய பரிபாக தசையிலே உண்டாமதான பக்தி பாரவஸ் யத்தாலே முன்னாடி தோற்றாதே
இப்படிப்படும் அலமாப்புக் கண்டு அங்கு அதிசயித புருஷார்த்த அந்வயியாய் விடும் என்கிறார்
அடிக்கழஞ்சு பெறுகை யாவது
அதில் அந்வயித்த அம்சம் பல ரூபமாய் இருக்கையாலே அத் யுத்தமம் என்கை-

————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

உபாய பலமாய் –இத்யாதியால் –
இத்தலையில் ஸ்வீ காரமும் பொறாத சுணை யுடைய உபாயத்துக்கும் இந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூப வியாபாரங்கள் விலக்காகாவோ என்ன
அந்த உபாய ஸ்வீ கார அநந்தரம் பெரும் பேறு அன்றோ என்னுதல்
அன்றிக்கே
உபாய பூதனுடைய அநாதி கால கிருஷி பலமாய் அபி நிவேச அதிசயத்தாலே உபாயாந்தரங்களிலும் ப்ரவ்ருத்திக்கும் படியான
இவனுடைய துடிப்பைக் கண்டு அவனுக்குப் பிறக்கும் முகோலாசம் ப்ராப்ய அந்தர் கதமாகையாலே ஸித்த உபாயத்துக்கு அவை விலக்கு ஆகாது என்கிறார் –

————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இந்த ப்ரேம அதிசயத்தால் வந்த கலக்கம் விலக்கு ஆகாது என்னும் இடத்தை விசதம் ஆக்குகிறார் -ஸாத்ய ஸமாநம் -என்று தொடங்கி -அதாவது
ஸர்வதா இவ்வுபாயம் தான் புருஷகார குண விக்ரஹங்களால் பூர்ணமாய்க் கொண்டே இருக்கையாலே
ஸர்வதா ஸாத்யத்தோடே ஒக்கும் என்றும்
ஸித்தமுமாய் ஸர்வ சக்தித்வாதிகளோடே கூடி இருக்கையாலே
ப்ரேமாந்த்யத்தாலே இப்படிப் பதறும்படி விளம்பத்தைப் பொறாது என்றும் அன்றோ இதர உபாயங்களை பற்ற இவ்வுபாயத்துக்கு ஆதிக்யம்
ஸாத்ய ப்ராவண்யம் –இத்யாதி -இப்படிப்பட்ட ப்ராப்யத்தில் த்வராதிசயத்தாலே இறே ப்ரதமத்திலே தான் இந்த ப்ராபகத்தை ஸ்வீ கரிக்கிறது
ஆகையால் விஷய வை லக்ஷண்ய அதீனமாய் வந்த அதி ப்ரவ்ருத்தி உபாய விரோதி யாகாது
ஸ்வரூப அனுரூபமாம் இத்தனை என்று திரு நறையூர் அறையருடைய அதி ப்ரவ்ருத்தியில் சங்கையை இவ்வளவாகப் பரிஹாரம் பண்ணி நின்றது –

———–

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

மேல் -இவனுக்குப் பிறக்கும் -என்று தொடங்கி -இப்படி இந்த ப்ராவண்யம் பல வேளையிலே யாராது உபகாரகமாகை அன்றிக்கே
தன்னுடைய உத்பத்தியிலே ஸந்நிபத்ய உபகாரகங்களான ஆத்ம குணங்களுக்கு மூலமும் தானே யன்றோ என்கிறது –

————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

அது எங்கனே என்னில் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றும்
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி -என்றும்
கண்டு கேட்டு -என்று தொடங்கி -கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்றும்
இப்படி விலக்ஷண விஷய தர்சனத்தாலே முதலில் ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசையற்று என்கையாலும் -என்கிறார் –

——————-

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

ஆத்ம குணங்களில் -இத்யாதி -சமமாவது -பர தாராதிகளில் போகாத படி இந்திரியங்களை நியமிக்கை
தமமாவது -உபஸமநம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –

——————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இவை இரண்டும் உண்டானால் என்று தொடங்கி -இவன் சம தம உபேதனானவாறே ஸதாசார்ய ஸ்வீ காரம் உண்டாகும்
அவ்வங்கீ கார்த்தாலே ருஷோ யஜும் ஷி -இத்யாதில் படியே
ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்திரம் ஸித்திக்கும்
இது ஸித்தித்தவாறே ஸகல வேத வேத்யமான ஸர்வேஸ்வரன் சந்நிஹிதனாம்
அவன் சந்நிஹிதனானவாறே அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷம் அதி ஸூலபமாம் -என்கிறார் –

————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இனி ப்ராப்ய லாபம் என்று தொடங்கி -ஸிம்ஹ அவ லோகந ந்யாயத்தாலே யுக்த அர்த்தத்தை ஸ்த்திரீ கரிக்கிறாதல்
நிஸ் ரேணிகா ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு இவற்றினுடைய ஸ்வரூப ஸித்தி உண்டாம் என்கிறார் ஆதல்
மீள ஆச்சார்ய லாபம் என்கிறது ஸ்வரூப ஞான பிரதர் என்றும் சொல்லுவார் –

——–

சூரணை -99-

இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படிப் பகவத் ப்ராவண்யம் மூலமாக வந்த ஆத்ம குணங்களால் வரும் பல பரம்பரைகளைச் சொல்லுகிறது
ப்ரபந்ந அதிகாரிக்கு விஷய விரக்தியில் ஊற்றம் சொல்லுகைக்காக –
இவ்விஷயத்தில் ஒரோ வகைகளாலே உபாதேய புத்தி பண்ணி இருக்கிற ஐஸ்வர்ய காமனையும் உபாசகரையும் எடுக்கிறார் -இது தான் -என்று தொடங்கி
இது தான் என்றது இவ்வாத்ம குணம் தான் என்றபடி
ஐஸ்வர்ய காமருக்கும் -இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா -என்கையாலே
இந்திரிய ஜய அர்த்தமாக பர தாராதிகள் நிஷித்தங்கள்
ஸ்வ தாராதிகள் ப்ராப்ய தயா உபாதேயங்கள்
உபாஸகனுக்கு சாந்தோ தாந்த -இத்யாதிகளில் படியே உபாஸன விரோதித்வேந பர தாராதிகள் பரித்யாஜ்யங்கள்
ஸ்வ தாராதிகள் ஸஹ தர்ம சாரிணீத்வேந உபாதேயங்கள்
ப்ரபன்னனுக்கு பகவத் அனுபவ விரோதித்வேந உபாயமும் பரித்யஜ்யம் –

———

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

இனி பிரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்கிறது -ஸ்வ தாராதிகள் மற்றை இருவருக்கும் உபேய தயாவும் உபாய தயாவும் உபாதேயங்கள் ஆகையாலும்
ஏகாந்தீ து வினிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை -பஃத்யுபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ண ஏக சாதன -என்கிறபடியே
இவன் ததேக போகனுமாய் ததேக உபாயனுமாகையாலே இவனுக்கு ஸ்வ தாரதாதிகளையும் விடுகை அவர்களைப் பற்ற ஆதிக்யம் -என்றபடி –

—————-

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

இது தான் இத்யாதி –இந்த இதர விஷய விரக்தி ப்ரபன்னனுக்குப் பிறக்கும்படி தான் எங்கனே என்னில்
கீழே அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகளை -இவ்விடத்தில் அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார்
பக்தி பாரவஸ்ய ப்ரபன்னர்க்கு விஷய வை லக்ஷண்யத்தாலும்
ஞாணாதிக்ய ப்ரபன்னர்க்கு நிர்ஹேதுக கிருபையாலும் பிறக்கும்
சிலருக்கு ஆசாரத்தாலே என்றது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா -என்கிற பகவத் ஆஜ்ஞ அதி லங்கனத்தாலே வந்த தண்ட தரத்வம் அடியாக வருகிற ஆசாரத்தாலே யாதல்
ராமாவதாராதிகளில் அவருடைய ஆசாரம் அஸ்மத்தாதிகளைக் குறித்து அன்றோ என்னுதல்
எம்பார் முதலான ஆச்சார்யர் அனுஷ்டானங்களாலே யாதல்
இவ்விஷய விரக்தி பிறக்கும் -என்கிறார் –

———-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ் வதிகாரிகளுக்கு அந்த வை லக்ஷண்யாதிகள் விரக்தி உண்டாக்கும் க்ரமம் என் என்னில்
அவனுடைய அபரிச்சின்னமான திவ்ய ஸுந்தர்யம்
நோ பஜநம் ஸ்மரன் நிதம் ஸரீரம் -என்கிறபடியே
,முதலிலே இதர விஷய ஞானம் இல்லாத படி பண்ணும்
அவனுடைய அருள் அன்ன மென்னடையினார் கலவியை அருவருக்கப் பண்ணும்
கீழ்ச் சொன்ன பகவத் பாகவத அனுஷ்டானங்கள் ஆகிற ஆசாரம் பயத்தை உண்டாக்கும் என்கிறார் –

——–

சூரணை -104-

இவையும் ஊற்றத்தைப் பற்றச்  சொல்லுகிறது –

இவையும் -என்றது -கீழேயும் ஊற்றம் சொல்லுகையாலே அஞ்ஞானமும் அரிசியும் பயமும் அதிகாரி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்க
ஒவ்வொன்றிலே ஊற்றமாய் இருக்கையாலே –

——-

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் —

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

அருசி பிறக்கும் போதைக்கு -இத்யாதி -இவ்வதிகாரிகளுக்கு அருசி பிறப்பது விஷயங்களுடைய தோஷ பூயிஷ்டதையைக் கண்டாலோ என்னில்
அதுவும் ஒரு ஹேது
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராது என்று விடுமதுவே பிரதான ஹேது -என்கிறார் –

———

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

பகவத் விஷயத்தில் -இத்யாதி -கீழே மால் பால் மனம் சுழிப்ப -இத்யாதி ப்ரமாணங்களாலே இதுக்குப் ப்ரதிகோடியாக எடுத்த
பகவத் விஷயத்தில் பிரவணராகிறதும் -கல்யாண குண தர்சனத்தாலேயோ -ஸ்வரூப அனுரூபம் அன்றோ என்ன
இக் குணங்கள் அவ்வஸ்து கதமே யாகிலும் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறது -என்னும் இடத்தை ன் அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தா பர்யந்தமாக அருளிச் செய்கிறார் –

———-

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதியாலே இவ்வர்த்தத்தை
பர்வதோயம் அக்னி மான் தூமத்வாத் யத் யக்னி மான் ந பவதி தர்ஹி தூமவான் அபி ந பவதி -என்னுமா போலே
அநிஷ்ட ப்ரசங்க முகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
அதாவது -ஸ்வரூப அனுரூபம் என்றும் ஸ்வரூப ஹானி என்றும் கொள்ளாத போது அபி நிவேச அனுரூபமாக அவன் முகம் காட்டாத படியாலே
அவனுடைய குண ஹானியே தோற்றுகிற அளவிலும் ஆழ்வார்கள் மேன்மேல் என அவ்விஷயத்திலே மண்டுகையும்
ஸம்ஸாரத்திலே தோஷம் ஸர்வ ஸம் பிரதிபன்னமாகக் காணா நிற்கச் செய்தேயும் அதிலே ஆதரித்துப் ப்ரவர்த்திக்கையும் கூடாது இறே என்கிறார்
இதர விஷய தோஷ தர்சனத்தாலே விடப்படுமாகில் -அஸ் ஸம்ஸார அனுபவ தசையிலே சிலருக்கு அசிந்திதமாக ராஜ்ய ஷோபம் பிறந்து
அவர்கள் ச குடும்பமாக பர்வத ஆரோஹணம் பண்ணா நிற்க -மத்யே மார்க்கே கர்ப்பிணிக்கு ப்ரஸவ காலமாகத் தன்னால் பரிஹரிக்க அரிதான பாரங்களாலும்
புத்ர பஸ் வாதி பாரவஸ் யத்தாலும் அத்யந்த பீதி யுக்தனாய்ப் போரு கிற சமயத்திலே அபஹர்த்தாக்களால் ப்ராண பர்யந்தமான
ஆபத்து வந்தாலும் இற்றை அளவுக்கு பிராணன் ஆகிலும் கிடந்ததே என்று தான் முடியும் அளவும் அதில் அருசி பிறவாதே
புத்ரா தய கதமம மீ -இத்யாதில் படியே அக்குடும்ப ரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கக் காண்கையாலும் கூடாது இறே
ஆகையால் சம்சாரத்தைத் தோஷம் கண்டு கை விடுகிறதும் இல்லை
பகவத் விஷயத்தை குணம் கண்டு பற்றுகிறதும் இல்லை –
ஸ்வரூப ஹானி என்று விடுகையும்
ஸ்வரூப பிராப்தம் என்று பற்றுகையுமே
நிலை நின்ற ஆகாரம் என்கிறார் –

———–

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

கொடிய என்னெஞ்சம் -இத்யாதி -பகவத் விஷயம் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறதுக்கு பிரமாணங்கள் –

—————–

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் —

குண கிருத தாஸ்யத்திலும் -இத்யாதியாலே சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரஸித்துக்கு அடி -ரஹஸ்ய த்ரயத்தில்
சேஷத்வமும் குணத்தால் வந்தது -என்ற அநந்தரம்
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்றும்
குண அத்யவசாயம் சொல்லா நிற்க ஸ்வாமித்வத்தாலே ஸ்வரூப அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் -என்ற அநந்தரம்
சேஷித்வத்திலே நோக்கு -என்கையாலும்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றிலும் குண க்ருதமாய் வருமத்தைப் பற்ற ஸ்வரூப பிரயுக்தமானது ப்ரபலமாகையாலே -என்கை –

————–

சூரணை -112-

அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–

இவ்வர்த்தத்துக்கு உதாஹரணம் -அநஸூயைக்கு -இத்யாதி
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாள் எழுந்து அருளின போது அவன் அநஸூயை இடுவித்துப் பிராட்டியை ஆதரிப்பித்த அநந்தரத்திலே
அவள் பெருமாள் ஸுகுமார்யத்தைக் கண்டு பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீகளுக்கு பார்த்தாக்களே கிடீர் தேவதை
இவ்வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் காட்டிலே வந்த நீர் இவர் அளவிலே இன்று போலே என்றும் இருக்க வேணும் கிடீர் -என்ன
அவளைப் பார்த்து -இவரையும் இவர் வை லக்ஷண்யத்தையும் வ்யதிரேகித்துக் காட்ட வல்லேனாகில் இறே
இவ்வழகை ஒழியவும் நாம் பெருமாளுக்கு நல்லேன் ஆண்மை காட்டலானமை -என்றாள் –

————

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

ஆனால் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -என்னும்படி இப்படி சத்தா ப்ரயுக்த தாஸ்யத்தை யுடைய ஸ்வரூபத்துக்கு முன்பு சொன்ன
அநந்ய தைவத்தாதிகள் குலையும்படியான பகவத் விஷயத்தில் அதி ப்ரவ்ருத்திகள் சேருமோ என்னில்
அதுக்கடி ப்ராவண்யம் -என்று தொடங்கி -சத்தா பிரயுக்த ஸம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வருகிற
ப்ரவ்ருத்தி களாகையாலே சேரும் என்கிறார் மேல் –
அவ்வாதி ப்ரவ்ருத்திக்கு அடி பகவத் விஷயத்தில் ப்ராவண்ய அதிசயம்
அப்பிராவண்யத்துக்கு அடி -மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற சம்பந்தம்
அஸ் ஸம்பந்தம் தான் வந்தேறி அன்று –

———

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

யாவதாத்ம பாவி அப்ருதக் ஸித்தமான அந்த சத்தை ஸ்வ சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வரும் பகவத் அனுபவம் பெறா விடில்
மாந்து சோர்கிற பசியிலே சோறு பெறாத போது பிராணன் போமா போலே குலையும்
அது குலையாமைக்காக -இத்யாதி -இஸ் சத்தா ஸத் பாவ ஹேதுவாய்க் கொண்டு பி வரும் வியாபாரங்கள் எல்லாம் வருந்தியும் விடப்போகாத படியுமாய்
விழுக்காட்டில் ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய் இருக்கும்
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் என்று சோத்ய பரிஹாரம் பண்ணுகிறார் –

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்-முதல் பிரகரணம் –புருஷகார உபாய வைபவ பிரகரணம் –சூர்ணிகை-1-22- —

July 17, 2022

நமஸ் ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜன்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலி நே

ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பதாஸ்ரயம்
வஸோ பூஷா ப்ரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸாதரம் —

—————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –
மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –

———–

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான -ஸர்வேஸ்வரன் -தன் நிர்ஹேதுக கிருபையாலே
அசித் அவிசேஷிதாந் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
கரண களேபர விதூரராய் -போக மோக்ஷ ஸூ ன்யரான சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
இவர்களுக்கு புருஷார்த்த -தத் சாதன -ஞானம் பிறக்கைக்காக வேதங்களையும் -வேத உப ப்ரும்ஹணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் கொடுத்து அருள
அவற்றில் சொல்லுகிற தத்வ ஹித புருஷார்த்தங்கள் ஒருவருக்கும் அவகாஹித்து அறிய அரிதாகையாலே
தத் அவகாஹன சதுரரான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்த வசன ஸ்ரேஷ்டங்களாலே அலங்க்ருதமான அர்த்த விசேஷங்களை
பிள்ளை தம் பரம கிருபையாலே இவ்வசன பூஷண கிரந்த முகேந அருளிச் செய்கிறார் –


சூர்ணிகை -1- வேதார்த்தம் அறுதியிடுவது -ஸ்ம்ருதி -இதிஹாஸ -புராணங்களாலே –

இத்தால் இப் பிரபந்த ப்ரதிபாத்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரதிபாதிக ப்ரமாணம்
பிரம விப்ர லம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமான வேதம் என்னும் இடம்
உபக்ரமத்திலே -உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று அருளிச் செய்கையாலும்
ப்ரத்யக்ஷம் ஏகம் ஸர்வாகா -இத்யாதி க்ரமத்திலே அல்லாதார் ப்ரத்யஷாதிகளை ப்ரமாணமாகக் கொள்ளா நிற்க
ஆதவ் வேதா பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்று பிரமாணாந்தரங்களில் பிரதான பிரமாணமாக பட்டர் வேதத்தை அங்கீ கரிக்கையாலும்
இவரும் வேதார்த்தம் அறுதியிடுவது -என்று உபக்ரமித்து அருளிச் செய்கிறார் –

வேதார்த்தம் அறுதியிடுவது –
பூர்வ உத்தர பாக த்வய ரூபமான நிகில வேத வேதாந்த தாத்பர்ய நிச்சயம் பண்ணுவது –

ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே -என்றது
ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே-என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ யேத் -என்றும்
சொல்லுகையாலே இவற்றைக் கொண்டே அவற்றை அறுதியிட்டு வேண்டும் என்கிறார்

———————————

சூரணை-2

ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

ஸ்ம்ருதியாலே இத்யாதி –
இத்தால் இந்த வேதத்தினுடைய பூர்வ உத்தர பாக்க த்வயத்தில்
கபந்த மீமாம்சகனான பாட்டனையும்
ராஹு மீமாம்சகனான மாயா வாந்தியையும்
போல் அன்றிக்கே -உபய பாகமும் ஏக ஸாஸ்த்ர தயா பிரமாணமாக அங்கீ க்ருதம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
இதில் எந்த பாகத்தில் அர்த்தம் எத்தாலே அறுதி யிடக் கடவது என்னில்
ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தங்களை விதிக்கிற ஸ்ம்ருதியாலே கர்ம பாகமான பூர்வ பாக அர்த்தத்தை அறுதி யிடக் கடவது என்கிறார்
மற்றை இரண்டாலும் -இத்யாதி
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டி தாதிகளை பிரகாசிப்பிக்கிற இதிஹாஸ புராணங்களாலே உத்தர பாக அர்த்தத்தை அறுதி இடக் கடவது -என்கிறார் –

——–

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இவை இரண்டிலும் -இத்யாதி
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் -இத்யாதிப்படியே
பகவத் அவதாரமான வேத வியாசனனாலே மஹா பாரதம் ப்ரவ்ருத்தமாகையாலும்
வேத வேத்யே பரே பும்ஸி -இத்யாதிப்படியே
சாஷாத் வேத அவதாரமான ஸ்ரீ ராமாயணம் அயோ நிஜரான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரவ்ருத்தமாகையாலும்
இதிஹாசம் ப்ரபலம் என்கிறார் –

———-

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

அத்தாலே அது முற் பட்டது –என்றுகீழ் உக்தமான பிரகாரத்தாலும்
இதிஹாஸ புராணாநி கல்பான் என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் -என்றும்
இத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் முற்பட எடுக்கையாலே
புராணத்துக்கும் ப்ரமாணத்வ ஸாம்யம் உண்டாய் இருக்க இதிஹாசம் முற்பட்டது
வர்ண ஸாம்யம் உண்டாய் இருக்க க்ஷத்ரியாதிகளுக்கு முன்னே ப்ராஹ்மணனை எடுக்குமா போலே முற்பட்டது -என்கை –

———

சூரணை -5-

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-

இனி -இதிஹாஸ ஸ்ரேஷ்டம் -என்றது
நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி
பாரத வம்சத்தையும்
பூசல் பட்டோலையும் -புணர்ந்து
தத் அர்த்தமாக -வாசம் ஸுரி கதாலாப கங்கயைவ புநீம் அஹே -என்று எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாத படி
கோன் வஸ்மின் -என்று தொடங்கி அவனுடைய அவதார சேஷ்டிதங்களையே சொல்லித் தலைக்கட்டுகையாலே
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -இத்தால்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும்
ஸ்ரீ மத் ராமாயணம் அபி பரம் ப்ரணிதா த்வச் சரித்ரே -என்றும் சொல்லுகிறபடியே
சாமாந்யேன ஸ்திரீகளுக்குச் சிறை இருக்குமது ஹேயமாய் இருக்க
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற தன்னை
அழிய மாறி
சிறை இருந்த தேவ ஸ்திரீகளை விடுவித்து
அவ்விருப்பிலே பிராணி ரக்ஷண அர்த்தமாகாது தான் இருக்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்கிறது –

தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -என்னக் கடவது இறே

மஹா பாரதத்தில் –இத்யாதி
ஸ்திரீகளுக்கு சிறை இருக்குமோ பாதி புருஷனுக்கு தூது போகை ஹேயமாய் இருக்க
புருஷோத்தமனான தான் ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே
இன்னார் தூதன் என நின்றான் -என்னும்படி
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க -நிற்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்லுகிறது –

——–

சூரணை-6-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

இவை இரண்டாலும் இத்யாதி
ஆக -வேதார்த்தம் என்று தொடங்கி -பிராமண சோதனத்தைப் பண்ணி –
இப்படி சோதிதமான பிராமண ப்ரதிபாதிதமான அர்த்தம் புருஷகார -உபாயங்கள் -என்று பிரதமத்திலே ப்ரஸ்தாவித்து –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா – என்று
தர்மே பிரமீய மாணே ஹி வேதேந கரணாத்மநா -என்றும்
தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாய ஸம்பவாமி -என்றும்
வேதங்களுக்கும் வேத்யனுக்கும் சேதனர்க்கும்
சித்த ஸ்வரூபமான தர்ம சம்ஸ்தாப நத்திலே தாத்பர்யமாகையாலே
இப்பிரபந்தத்திலும் ஒரு முமுஷுவுக்கு ஞாதவ்யமான தத்வ ஹிதாதி ஸகல அர்த்தங்களையும் சாதியா நின்றதே யாகிலும்
உபாய யாதாத்ம்யத்தை வெளியிடுகையிலே தாத்பர்யமாகையாலே அதுக்கு உபயுக்தமாக பிரதமத்திலே புருஷகார உபாயங்களை அருளிச் செய்கிறார் –
சிறை இருக்கையும்
தூது போகையும் -ஆகிய
இவை இரண்டாலும் புருஷகார உபாயங்களினுடைய வைபவங்களை சொல்லிற்றாய் விட்டது என்கிறார் –

————

சூரணை -7-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

புருஷகாரமாம் போது -என்று தொடங்கி
ப்ரஸ்துதமான புருஷகார வேஷத்துக்கு அனுரூபமான குணங்களை விதிக்கிறார் –
இதில் கிருபை வேணும் என்றது –
தன்னைப் பற்றும் போது அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே -சேதன விஷயமாக கிருபை வேணும்
புருஷகார தசையில் தான் ஈஸ்வரனைப் பற்றும் போதும் அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே
அவனுக்கு சேஷபூதையாய் நம்முடைய நினைவே தனக்கு நினைவாம்படி இருக்கிறவள் சொல்லும் கார்யம் என்றும்
கொள்ளுகைக்காகவும் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் என்கிறது –

————————

சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

பிராட்டி முற்படப் பிரிந்தது –இத்யாதியாலே
யுக்தமான குணங்கள் புருஷகாரத்துக்கு பிராமண ஸித்தம் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –
இதில் முற்படப் பிரிந்தது கிருபையை வெளியிட்டபடி எங்கனே என்னில்
இஹ சந்தோ ந வா சந்தி -இத்யாதியாலே
பர அநர்த்தம் கண்டு ஸஹிக்க மாட்டாதே
மித்ர மௌபயிகம் கர்த்தும் -இத்யாதியாலே அநர்த்த பரிஹாரத்தை அருளிச் செய்கையாலும்
கார்யம் கருணமார்யேண – என்று தன்னை நலிந்தாரையும் ரஷிக்கை யாலும்
கிருபையை வெளியிட்டு அருளினாள்-

வந வாஸ வ்யாஜேந வந்த நடுவில் பிரிவில்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்துர் மா பரிஹாஸ்யதி என்று
பெருமாள் நினைவை பின் சென்று
பாஸ்கரேண ப்ரபா யதா -என்கிற தான் பிரிந்து இருக்கையாலே
பாரதந்தர்யத்தை வெளியிட்டாள் -என்கிறார்

அநந்தரம் -இத்யாதியாலே
வால் மீகி தன் ஆஸ்ரமத்தில் நின்றும் இவளை எழுந்து அருள்வித்துக் கொண்டு வர
ஜனக ஸமான மஹரிஷி இடத்திலே இருக்கையாலே நீ செய்ய வேண்டுவது ஓன்று இல்லையே யாகிலும்
லோக அபவாத பரிஹார அர்த்தமாக ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணி வா என்ன
நான் பெருமாளுக்கு அநந்யார்ஹை யாகில் பூமி நீயே ஜனனியானமை தோற்ற இடம் தா -என்று
எழுந்து அருளுகையாலே அநந்யார்ஹத்தை வெளியிட்டு அருளினாள் என்கிறார் –

————–

சூரணை-9-

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் – என்றது
இப்படி அவதார ப்ரயுக்தமான ஸம்ஸ்லேஷ தசையோடு விஸ்லேஷ தசையோடு வாசியற
ஸீதா சமஷம் காகுஸ்த்தம் இதன் வசனம் அப்ரவீத் -என்றும்
ஸீதாம் உவாஸ -என்றும் சொல்லுகையாலே -ஸம்ஸ்லேஷ திசையிலும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ –இத்யாதிகளாலே விஸ்லேஷ தசையிலும் புருஷீ கரிக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் ப்ரகாசிக்கும் என்கிறார் –

—————-

சூரணை-10-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –

ஸம்ஸ்லேஷ தசையில் இத்யாதியாலே
இவள் இன்ன தசையில் இன்னாரைத் திருத்தும் என்னும் வகையை அருளிச் செய்கிறார்

————-

சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் நிறுத்துவதும் -என்று தொடங்கி
இவ்வகையில் இவள் திருத்தும் பிரகாரம் ஏது என்ன

நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைத் திருத்தி உபதேசிக்கை யாவது –
பிதேவ த்வத் ப்ரேயான் -இத்யாதியில் படியே
தேஹம் பொல்லா வாக்கை -தேஸம் இருள் தரும் மா ஞாலம் -தேசிகரோ என்னில் பகவத் விமுகர்
மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -இவர்கள் தோஷத்தை வாத்சல்யத்துக்கு இரையாக்கி அங்கீ கரித்து அருளீர் -என்று உபதேசிக்கையும்

இச்சேதனனைத் திருத்தி உபதேசிக்கை யாவது
விதித –இத்யாதி களாலே அவனுடைய வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்துப் பற்றுவிக்கையும்

—————–

சூரணை-12-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

உபதேசத்தாலே -இத்யாதியால் -இப்படி இருவருக்கும் உபதேசிகையாலே
சேதனனுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யமான -கர்ம பரதந்த்ரனாய் புஜிக்கை -குலையும்
ஈஸ்வரனுக்கு சேதனருடைய புண்ய பாப அநு ரூபமாக அநுபவிக்கக் கடவோம் என்று
இருக்கும் ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யமும் குலையும் என்கிறார்
இவ் விரண்டு வகைக்கும் ஈஸ்வரன் ஸஹித்தோம் என்கை இறே உள்ளது –

————-

சூரணை -13-உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

உபதேஸத்தாலே மீளாத போது என்றது
நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலும் -அநாதி கால பாப வாஸனையாலும் -இவ்விருவரும் மீளாத போது என்றபடி
சேதனரை -இத்யாதி –
சேதனரை அருளால் திருத்துகை யாவது
பங்கயத்தாள் திருவருள் -என்கிற காருண்ய வர்ஷத்தாலே பதம் செய்விக்கை
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
உசிதைர் உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி –என்கிறபடியே
கச்சை நெகிழ்த்தல் -கண்ணைப் புரட்டுதல் செய்து -வடிவு அழகாலே மயக்கி -வசமாக்கிக் கொள்ளுகை –

———————-

ஆக
ஸ்ரீ ராமாயணத்தால் சொன்ன புருஷகார ஸ்வரூபத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லி
மஹா பாரத ப்ரதிபாத்யமான உபாய ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் மேல் -அறியாத அர்த்தங்களை -என்று தொடங்கி

சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

அர்ஜுனனுக்குத் தத்த்வ விவேகாதிகளாலே அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகையாலே -ஆச்சார்ய க்ருத்யத்தையும்
தானே அவனை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகையாலே புருஷகார க்ருத்யத்தையும்
கிருஷ்ணம் தர்மம் ச நாதனம்-என்று உபாயம் தானேயாய் இருக்கச் செய்தே
அவ் வர்ஜுனன் -த்வமே உபாய பூதோ மே பவ – என்னாது இருக்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே –

அன்றிக்கே
வஸ்து உபேயமாய் இருக்க இவனுடைய செயலறுதியாலே உபாயம் ஆகிறான் ஆகையாலே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது ஆகவுமாம்

ஆச்சார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டவன் -தானே உபாய க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
இங்கே இப் பிரபந்த தாத்பர்யமான சரம உபாயம் ஸூசிதம் –

————-

ஆக
கீழ் -புருஷகார உபாயங்களினுடைய வை லக்ஷண்யத்தை ச பிரகாரமாக அருளிச் செய்தாராய் நின்றது
இனி புருஷகாரம் உபாயம் சொல்லிற்று என்னாதே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று என்பான் என் என்ன
இவற்றுக்கு வைபவமாவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -புருஷகாரத்துக்கும் -இத்யாதி –

உபய சாதாரண வைபவம்
சூரணை-15-

புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

இதில் தோஷமும் குண ஹானியும் ஆகிறது -அக்ருத்ய கரணமும் க்ருத்ய அகரணுமும் -ஆகையாலே இவை இரண்டையும் பார்த்து
சேதனரை புருஷகார உபாய பூதரானவர்கள் விட மாட்டாத அளவன்றிக்கே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்கிறபடியே
அவர்களை அங்கீ கரிக்கும் இடத்தில் -அவை தன்னையே ஆதரணீயமான உபஹாரமாக்கி அங்கீ கரிக்கை -என்கிறார்
த்யஜ்யதே யதி தோஷேண குணேந பரி க்ருஹ்யதே ஸ்வ ஸாதாரண அர்த்தோயம் ஆஸ்ரிதஸ்ய க்ருதம் பலம் -என்னக் கடவது இறே –

————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் இரண்டும் இத்யாதி –
இரண்டும் என்கிறது -கீழ் ப்ரஸ்துதமான -புருஷகார உபாயங்களை –
மறித்து இரண்டு என்கிறது -தோஷ குண ஹானிகளை
இவை இரண்டும் போனவாறே அங்கீ கரிக்கிறோம் என்று இருக்கில்-இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது-புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் அந்த தோஷ குண ஹாநிகள் உண்டாகை
புருஷகாரத்துக்கு அந்த தோஷ குண ஹாநிகள் வரும்படி எங்கனே என்னில் –
மாத்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே ஸ்தநந்த்ய ப்ரஜையினுடைய தலையைத் திருகித் தள்ளும் தாயைப் போலே இவனை உபேக்ஷிக்கையாலும்-பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையே வடிவான தன்னுடைய கிருபையை இவனுக்கு பண்ணாது ஒழிகையாலும்
உபாயத்துக்கு தோஷ குண ஹாநிகள் ஆவது
பித்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே-ஷிபாம் யஜஸ் ரம ஸூபான் -என்று தள்ளுகையும்-இவனுடைய தோஷங்களை கணக்கறு நலமான தன் வாத்சல்யத்துக்கு இரையாக்காது ஒழிகையும்

————–

சூரணை-17-

இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் குலைந்தது என்று இருக்கில் –இத்யாதி
சேதனன் நம்முடைய தோஷ குண ஹானிகள் போனவாறே அன்றோ
இது நெடும்காலம் அங்கீ கரியாதவன் இன்று அங்கீ கரிக்கிறது என்று இருக்கில் இவனுக்கு அவை உண்டாம்படி என் என்னில்
தம் ஸ்வம் ஆகையாலே விட மாட்டாமல் ஸ்வாமி யானவன் அங்கீ கரித்தான் என்று இராமையாலே தோஷமும்
நம் தோஷங்களைப் பாராதே நிர் ஹேதுகமாகப் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அங்கீ கரித்தான் என்று இராமையாலே குண ஹானியும் யுண்டாய்த்து என்கிறார் –

———–

சூரணை -18-

ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இனி புருஷகாரம் இவை இரண்டும் பாராதே இப்படிப் பச்சை யாக்கி அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம் -என்று அவ்வர்த்தத்தை வெளியிடுகிறார்
இங்கு ராஷசிகளுக்கு தோஷ குண ஹானிகளாவது
ததை வார்த்ராபராதா -என்னும்படி தர்ஜன பர்த்ஸ நாதிகளிலே ஸந்ததம் தத் பரைகளானதுவும்
ஸ்த்ரீத்வ சாமான்யத்தை இட்டாகிலும் த்ரிஜடாதிகளைப் போலே அனுகூல பாஷணாதிகள் பண்ணாமையும்

இவற்றைப் பச்சையாக்கி அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
இவர்களை நலிய ஆர்த்தித்த திருவடியைக் குறித்து
பாபாநாம் வா ஸூபா நாம் வா -என்றும்
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞயா விதேயாநாம் ச தாஸீ நாம் க குப்யேத் வாந ரோத்தம -என்றும்
ஸ்வாமிக்கு சந்த அநு வ்ருத்திகளாய்க் கொண்டு சாவதானைகளாக நலிந்தவர்கள் ஓக்க பூர்ண அதிகாரிகள் உண்டோ –

இப்படி ஸ்வாமி கார்யம் செய்தார் தண்ட் யராம் இடத்தில் உன்னோடு அவர்களோடு வாசியுண்டோ என்று மன்றாடி மறுதலைத்து
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்னும்படி அவர்களை ரக்ஷித்து
பவேயம் சரணம் ஹி வ -என்று அங்கீ கரிக்கையாலே ப்ரகாசிதம் –

————

சூரணை-19-

ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

சூரணை-20-

திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது-கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இனி உபாய பூதன் இரண்டும் பாராதே அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன -அத்தைச் சொல்லுகிறது மேல்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் -இத்யாதி
ஊர்வசியையும் முறை கூறி உபேக்ஷிக்கும் படி -இந்த்ரிய ஜெயம் பண்ணினவர்களில் ப்ரதானனாய்
ப்ரவஹ்யாம் யந ஸூயவே -என்று வைப்பான அர்த்தங்களையும் பரக்க உபதேஸிக்கும் படி பரம ஆஸ்திகனாய்
பிராணஸ்ய ப்ராண -என்று லோகத்தில் தாரகங்களானவற்றுக்குத் காரகனான கிருஷ்ணனுக்கும் -அர்ஜுன கேஸவஸ் யாத்மா -என்னும்படி ப்ராண பூதனான அர்ஜுனனுக்கு
தோஷம் பாராதே அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
பந்துக்கள் இத்யாதியாலே
அவனுக்கும் ஸாமான்ய தோஷமும் விசேஷ தோஷமும் உண்டு என்னும் இடம் காட்டுகிறார் –
அதாவது
யுத்த யுன்முகனான ஷத்ரியனுக்கு வத பீதி வர்த்தித்தால் யாகத்தில் பஸ்வாலம்பந பீதியோ பாதி ப்ராயச்சித்த விஷயமாகையாலே
ஆச்சார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பவுத்ரான் ஸகீம் ஸ்ததா ஸ்வ ஸூரான் ஸூ
ஹ்ருதஸ் சைவ சேநயோர் உபயோர் அபி -என்று
ப்ரக்ருதி பந்துக்கள் பக்கல் யுண்டான ஸ்நேஹமும் -சாமான்யேன உண்டான பர அநர்த்த அஸஹமான காருண்யமும்
இவர்களை வதித்தால் வரும் அநர்த்தத்தில் பீதியும் வர்த்தித்த சாமான்ய தோஷமும் பாராமையும்
சங்க சக்ர கதா பாணே -இத்யாதியால்
சரணாகதையான திரௌபதியினுடைய பரிபவத்தை தர்ம ஆபாஸ அதி லங்கந பீதியாலே கூடப்பார்த்துக் கொண்டு இருந்த விசேஷ தோஷமும் பாராமையும் அங்கீ கரித்தமை யுண்டு -என்கிறார் –

—————–

சூரணை -21-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க- வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

பாண்டவர்களை -இத்யாதியாலே
இந்த தோஷ துஷ்டதையை அர்ஜுனனுக்கும் ஸ்தீரி கரிக்கிறார்
ஞானாதிகரான பீஷ்மாதிகள் தன்னை யுள்ளபடி அறிந்து இருக்கச் செய்தே அவர்களையும் நிரசித்தது
அவளுடைய பரிபவத்தைப் பொறுத்து இருக்கையாலே இறே
இங்கனே இருக்க அர்ஜூனாதிகளை நிரசியாது ஒழிந்தது விரித்த தலை கண்டு பொறுக்க மாட்டாதவன் வெறும் கழுத்துக் கண்டு பொறுக்க மாட்டாமை இறே -என்கிறார்

——–

சூரணை -22-

அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

அர்ஜுனனுக்கு -இத்யாதியாலே
இப்படி தலை யறாத மாத்ரமேயோ
அநுகூலா சரணங்களைப் பண்ணிற்றும் இவளுக்காக இறே என்கிறது
அங்கன் அல்லது பிரபத்தி யுபதேச அநந்தரத்திலே
இதம் தே நாதபஸ்காய -இத்யாதி –இச்சீரிய அர்த்தத்தை இவனுக்கு வெளியிட்டோமே என்று அனுதபிக்கக் கூடாது இறே

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை இவ்வளவாகத் தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

———–

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்

July 17, 2022

ஸ்ரீ உவே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் முதன் முறையாக ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை மேலைத் திரு மாளிகை ஸ்ரீ கோவிந்தாரியாருடைய பார்யை
ஸ்ரீ மதி அலமேலு மங்கை அம்மங்கார் அவர்கள் 1919-1920-தமிழக அரசின் கீழ்த் திசைச் சுவடி நூலகத்துக்கு வழங்கியதாக நூலாகக் குறிப்பு உள்ளது
ஓலைச் சுவடியின் தொடக்கத்தில்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை திரு மாளிகை பொன்னப்பங்கார் ஏடு –
என்று குறிப்பிடப் பெற்று உள்ளது

இந்த சுவடியின் தொடக்கத்தில்
நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மநே ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே -என்ற தனியனும்
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பத ஆஸ்ரயம்
வாஸோ பூஷா பிரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸா தரம் –

தேவ ராஜர் என்ற இயல் பெயர் கொண்ட நாலூர் ஆச்சான் பிள்ளை திருவடிகளைப் பற்றியவர்

ஸ்வாதீந தேசிகர் –கூர குலோத்தம தாசர் என்ற ஆச்சார்யரைத் தமக்கு அதீனராக யுடைய திருவாய் மொழிப்பிள்ளை என்றபடி
பாண்டிய அரசனின் பிரதான மந்திரியான திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை
ஆழ்வார் திருநகரியை காடு திருத்தி நாடாக்கி –
மறைத்து வைக்கப்பட்டு இருந்த நம்மாழ்வார் உத்சவ விக்ரஹத்தையும் தேடி எடுத்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்வித்து
ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அக்ரஹாரத்தையும் ஏற்படுத்தி
பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் பிரதிஷ்டை செய்வித்து
இவை அனைத்தையும் அவர் அரசுச் செல்வாக்குக் காரணமாக ஸ்வ ஆதீனமாகச் செய்த படியால் ஸ்வா தீன தேசிகர் என்று வழங்கப்பட்டார் -என்றுமாம் –

திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனைவருமே திருவாய் மொழிப்பிள்ளை என்றே வழங்கப்படுவதால்
மா முனிகளுக்கும் பிற்காலத்தில் வந்தவராலும் பண்ணப் பெற்றும் இருக்கலாம்


இதில் எங்கும் காணப்படாத சில அரிய ஐதிஹ்யங்கள் இடம் பெற்று உள்ளன –

1-உடையவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் -சூர்ணிகை -332-ல் காணப்படுகிறது
திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத் பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்த்வத்தை விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் என்ன –
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்து ஏற எழுந்து அருள
ஆழ்வானை அருளப் பாடிட்டு-பல வேளையிலே இப்படிச் செய்தாயே -என்ன
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால்
ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் -என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் பிரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே

2- இதே போல் பட்டருக்கு நஞ்சீயருக்கும் இடையே நடந்த பரிமாற்றம் வேறு எந்த நூலிலும் இடம் பெறாமல் இதில் சூர்ணிகை -338 ல் காணப் படுகிறது

பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்தது என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தானம் ஒழிய இல்லை என்ன
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே
ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளினை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போக விட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்திலே தனம் இருக்கிறது -அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திரு மாளிகையிலே செலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையில் வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர
அத்தைக் கண்டு அருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்து அழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள் என்று அருளிச் செய்தார் இறே

3- மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் செய்த சரம கைங்கர்யம் –
மற்ற வியாக்யானங்களிலும் குறிப்பிடப்பட்டாலும் இதில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் சம்வாதம் விரிவாக உள்ளது -சூர்ணிகை -234-

இச் செய்தியை உடையவர் கேட்டருளி ஸ்ரீ பாதத்திலே சென்று கண்டு லோக உபக்ரோஸம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினாள் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆகில் அங்கு உற்றைக்கு அநந்யார்ஹனான அடியேனை நியமிக்கலாகாதோ என்ன
ஆசார பிரதானரான பெருமாள் இப்படி பெரிய உடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜனும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமைகளுக்கு நான் போடும் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடைவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது -என்கிறார்
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையால் நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் அத்தனை
நான் பெருமாளின் அதிகனாய் தவிரவோ
இவர் அப்பஷியில் தண்ணியராய் தவிரவோ என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் என்று பிரசித்தம் இறே

4- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே
கீழை யூரிலே தேவதாசி பக்கலிலே சக்தராய் சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே
இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க -அத்தாலே விஷண்ணராய்ப் பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும்
இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்பந்திக்க
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு வந்து ஸ்ரீ பாதத்தின் கீழே தெண்டனாக விழுந்து
இப்படி இவ்வடிகளுக்கு அமுதுபடி த்ரோஹ பர்யந்தமாக ஆத்ம நாசம் பிறக்கும் அளவில் தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக -உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே
அப்போதே அவர்கள் நினைவு மாறி என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய் இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர
அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாமாய்த்து –

5- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வார் –

6- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி வினோத அர்த்தமாகப் புறம் திண்ணையைக் காட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்திய ராத்திரி யானைவாறே
தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என் -இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக
அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு அவர்களால் வந்த
வியஸனத்தை நிவர்த்திப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக
அத்தை அவளுக்கு ஸூஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் –என்றும் –


இதிஹாச புராண கதைகள் –
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹருதீ கரித்து சூர்ணிகை -260-இல் –

ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வார்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு தம் அசல் அகத்தில் அவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற யம தூதரும் வந்து ப்ரவேசிக்க -இவன் கையும் திருப் பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு
மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய் ப்ரவேசித்துக் கிடக்க-அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க
அத்தைக் கண்டு அப் பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித்த திருவடிகளிலே சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே

அடுத்தது சூர்ணிகை -321-இல்
இந்த குரு ஸூஸ்ருஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச சென்ற ப்ராஹ்மண புத்ரனைத்
தன்னுடைய பசு பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து அப் பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக்
கன்று உண்கிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகைகளாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து அப்பச்சிலைகளும் தீய்ந்தவாறே
எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க
அவ்விடத்திலும் கன்றுண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

நிர்வாஹங்கள்
சூர்ணிகை -54-
பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமா போலே
இதுக்கு -மா முனிகள் -தாமப்பனுக்கு புத்ரனானவன் –நீ என்னை ரக்ஷிக்க வேணும் -என்று எழுத்து வாங்கினால்
இவரோ -ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே –என்று அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -165-இல்
ஆபரணம் அநபிமதமாய்-அழுக்கு அபிமதமாய் -இரா நின்றது இறே
இதற்கு மா முனிகள் -லோகத்தில் விஷய ப்ரவணராய் இருப்பவருக்கு அபிமத விஷயத்தினுடைய ஓவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய்
அநவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே -என்கை –
இவரோ -அதாவது ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு -இவளை அந்தப்புரம் ஏற அழைப்பியுங்கோள் என்று அந்தரங்கரை நியமிக்க –
அவர்கள் பயாதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கு என் வந்தாள் என்று அநாதரிக்க
அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்து புஜித்தான் என்று ப்ரஸித்தம் இறே -என்று இவ்விஷயம் ஒரு கதை போலச் சொல்லப் படகியுள்ளது –

சூர்ணிகை –181-இல்
அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே
என்பதை விளக்க -அத் தோஷமாவது -ஸ்மஸாந அக்னி கிளம்பினால் மருங்கு அடைந்து தூற்ற அளவிலே சுடும் –
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்னீ பாத்திரங்கள் எல்லாவற்றையும் தக்தம் ஆக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனான இவ் வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் என்று விளக்கமாக உள்ளது –
மற்ற வியாக்யானங்களில் இந்த விளக்கம் இல்லை –

சூர்ணிகை -96-இல்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும்
இதுக்கு மா முனிகள் -சமமானது அந்தக்கரண நியமனம் -தமமாவது பாஹ்ய கரண நியமனம்
இவரோ -சமமானது பர தாராதிகளில் போகாதபடி இந்திரியங்களை நியமிக்கஇ
தமமாவது -உபஸ மனம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
என்று அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –240-இல்
ஜீவாத்மாக்களுக்கும் பிராட்டிக்கும் ஆறு பிரகாரங்களால் சாம்யம்
இத்தை விளக்க மற்ற வியாக்யானங்களில்
1-அநந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரண்யத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4- ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5- விஸ்லேஷத்தில் தரியாமை
6-தத் ஏக நிர்வாஹ் யத்வம்
இவரோ
ஞான -ஆனந்தங்களும் -சேஷத்வ பாரதந்தர்யங்களும் -ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் -விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையும்
ஆகிற அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே அவளோடு ஸர்வ ஸாம்யம் இல்லையாகிலும்
இவ்வாறு பிரகாரங்களாலே தத் ஸாம்யம் யுண்டு என்கிறார்
இவளுக்கு உண்டான அதிகமான பிரகாரங்கள்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ சம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூரகத்வம் -முதலானைவை இறே என்று
வேறு ஆறு பிரகாரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் வேறுபாடுகளும் உண்டு என்று சுட்டிக் காட்டப் படுகிறது

சூர்ணிகை –169-இல்
பரம ஆர்த்தனைப் பற்றியது
இத்தனை விளக்கும் போது
ஆர்த்தன் என்பது –

ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
என்று ஆர்த்தனிலும் திருப்தானிலும் மூன்று வகைகளை அருளிச் செய்கிறார்
இந்த விஷயம் மற்ற வியாக்யானங்களில் கூறப்பட வில்லை

சூர்ணிகை – 335-இல்
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி என்ற ஸூ த்ரத்துக்கு
சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும் -ஆச்சார்யனுக்குத் தன்னுடைய தேஹ ரக்ஷணமும் கர்த்தவ்யம் அன்று என்றதாயிற்று -மா முனிகள் வியாக்யானம்
இவரோ
அதே கருத்தும் மற்ற ஒரு நிர்வாஹமும் -அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யன் தான் -தான் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே
அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும்
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் சிஷ்யன் தான் பலகாலும் ப்ரவர்த்தித்திக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம்

———-

பாசுரங்களின் உட் பொருள்கள்
இன்னார் தூதன் என நின்றான் -பாசுர விளக்கம் -சூர்ணிகை -5-இல்
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க நிற்கையாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
அதாவது -நின்றான் -முன்பு இருந்த குறை தீர்ந்து பூரித்து நின்றான் –

சூர்ணிகை -380-இல் அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் -என்பதற்கு
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியும் சினம் உண்டாகக் கூடாது இறே –
அகற்றிடினும் -கூடாதது கூடினாலும் என்றபடி –

—-

ஸூ த்ரங்களின் சொல் பொருள்களின் உட் கருத்து
ஈஸ்வரன் தானும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு இருக்கும் -என்றதன் கருத்தை
அடுத்த சூர்ணிகை வியாக்யானத்தில்
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும்படியான
இரண்டு தலையையும் சத்தை உண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு –
அவதரித்து
தூத்ய முகேந கடகனாய்
இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போனதான் இறே
அர்ஜுனனைக் குறித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றதும் கார்யகரம் ஆய்த்து இல்லை
அது பின்புள்ளாருக்கு-ஸதாச்சார்ய உபதேசத்தகாலே பலமாயிற்று இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை என்கிறது –
ஸ்வ தந்த்ரனான இவனால் ஆசைப்பட மட்டுமே முடியும் -என்பதைக் காட்டி அருளுகிறார்


பிரமாணங்கள்
மற்ற வியாக்யானங்களில் இல்லாத பலவும் இவரால் காட்டப்பட்டுள்ளன
சூர்ணிகை -268-இல்
ஆசா மஹா சரண ரேணு ஜூஷா மஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மலத ஒவ் ஷதீ நாம் யா துஸ் த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் சுருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸு நாம் வா ந காமயே காம் கதம்போ பூயாஸம் ருந்தோ வா யமுனா தடே என்றும் இத்யாதிகளாலே
ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்த் தாவராதிகளை ஆசைப்பட்டான் இறே

——-
உவமைகள்
வேறு உபாயங்களைக் கை விடுகைக்கு காரணம் அவை ஸ்வரூப விரோதங்கள் -சூர்ணிகை -115-என்ற கருத்தை விளக்க
ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும்-குடம் சுமைக்கையும் அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார்

சூர்ணிகை -174-இல்
ஆறு ஏறினாருக்குத் தெப்பம் வேண்டாவோ பாதி -என்ற உதாரணமும்

சூர்ணிகை -199-இல்
வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வதா ரோஹணம் பண்ணுமோ பாதி -என்கிற உதாரணமும் காட்டப்படுகிறது –

——————–

ஸூத்ர அர்த்தோ வர்ண்யதே தத்ர வாக்யை ஸூத்ர அநு சாரிபி
ஸூத்ரத்தை அநு சரித்த வாக்யங்களால் ஸூத்ரார்த்தம் இதில் வர்ணிக்கப்படுகிறது –

————

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

தஸ்மை ராமாநுஜார்யாய -நம பரம யோகிநே -யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் –ஸ்ருத பிரகாசிகை

பூர்வ அபிதேயேந ஸஹ யேந தர்ம விசேஷண அனந்தர அபிதேயஸ் சம்பத்யதே ஸ தர்ம விசேஷ அனந்தர அபிதேய விஷ்டஸ் சங்கதி
இதுவே சங்கத்தின் லக்ஷணம்
முதலில் சொல்லப்பட்ட விஷயத்துடன் எந்த தர்ம விசேஷத்தால் அடுத்துச் சொல்லப்படும் விஷயம் சம்பந்தித்து இருக்கிறதோ
அடுத்துச் சொல்லப்படும் விஷயத்தில் உள்ள அந்த தர்ம விசேஷம் சங்கதி ஆகும்

முதல் திருவாய் மொழி -பரத்வ பரம்
இரண்டாம் திருவாய் மொழி பஜ நீயத்வம்
பரத்வம்-காரணம் -பஜ நீயத்வம் -கார்யம் -மேன்மை உள்ள வஸ்துவைப் பற்றினாள் தானே புருஷார்த்தம் கிட்டும் -கார்யதா சங்கதி

மூன்றாம் திருவாய் மொழி -ஸுலப்ய பரம் -பஜ நீயத்வம் வர இதுவே காரணம் -காரணதா என்பது சங்கதி

அப்படியே
ப்ரசங்க
ஆக்ஷேப
த்ருஷ்டாந்த
ப்ரத் யுதாஹரணம்
அபவாதம்
அதி தேச
உபோத்காத –முதலிய பல சங்கதிகள் உள்ளன

இவை அனைத்துமே ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையால் நன்கு காட்டப் பட்டுள்ளன –

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

———

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தம்மை மிகக் கொண்டு கற்றோர் -தம்முயிர்க்கு
மின்னணியாய்ச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம்
என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் பி-

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல இவ் வார்த்தை மெய் இப்போது

சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

————

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற -ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

ஸ்ரீ வசன பூஷண சீர்மை –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 4, 2022

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற /ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரயே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூத்ரங்கள் –
5-முதல் -22-ஸூத்ரங்கள்/ மேல்- -18-ஸூத்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70 -ஸூத்ரங்கள் -வரை
71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூத்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூத்ரங்களில்
பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூத்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை

5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூத்ரங்கள் –366–முதல் -406 –வரை

6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூத்ரங்கள் -407-முதல் -463-ஸூத்ரங்கள் வரை –
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரயே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

6 ப்ரகரணமாக பிரிக்கும் தனியன் 

(1)பேறு தருவிக்கும் அவள்தன்பெருமை, (2)ஆறு, (3)பெறுவான் முறை,(4)அவன்
கூறு குருவை பனுவல், (5)கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்,
(6)மாறில் புகழ் நற்குருவின் வண்மையோடெலாம்  வசன பூடணம் அதில்
தேறிட நமக்கருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே.

9 ப்ரகரணமாக பிரிக்கும் தனியன் 
 

(1)திருமாமகள்  தன் சீர் அருள் ஏற்றமும்
(2)திருமால் திருவடி சேர் வழி நன்மையையும்
(3)அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
(4)மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
(5)ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
(6)நாரணன் தாள் தரு நல்குரு நீதியும்
(7)சோதி வானருள் தூய மா குருவின்
பாத மா மலர்  பணிபவர் தன்மையும்
(8)தீதில் வானவர் தேவன் உயிர் களை
ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
(9)மன்னிய இன்பமும் மா கதியும் குரு
என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும்
வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை
இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர்
மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவரே.

Thaniyan 1(6 ப்ரகரணம் ) Sutrams Thaniyan 2( 9 ப்ரகரணம்) Sutrams
ப்ரபந்த உபோத்காதம் 1-4 உபோத்காதம்(Introduction) 1-4
புருஷகார வைபவம் 5-13 புருஷகார வைபவம் 5-13
உபாய வைபவம் 14-79 உபாய வைபவம் 14-114
அதிகாரி நிஷ்டை 80-307 உபாயாந்தர தோஷம் 115-141
சித்தோபாய நிஷ்டர் வைபவம் 142-242
ப்ரபன்ன தினசர்யை 243-307
ஆசார்ய அனுவர்த்தன க்ரமம் 308-365 சதாசார்ய லக்ஷணம் 308-320
சிஷ்ய லக்ஷணம் 321-365
பகவன் நிர்ஹேதுக
க்ருபா ப்ரபாவம்
366-406 பகவன் நிர்ஹேதுக
க்ருபா ப்ரபாவம்
366-406
சரம ப்ராப்ய ப்ரபாகம் 407-463 சரம ப்ராப்ய ப்ரபாகம் 407-463
————

முன்பே பேர் அருளாள பெருமாள்-கிருபா மாத்திரை ப்ரசன்னாசார்யர்களையும் அனுக்ரஹிப்பதால் பேர் அருளாளர் -என்ற திரு நாமம் –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையால் மணர்பாக்கத்தில் இருப்பார் ஒரு நம்பியாரை -இவரும் ஒரு அர்ச்சகர் ஸ்வாமி -திருச்சானூர் கைங்கர்யம் –
பிராட்டிக்கு செய்யும் கைங்கர்யம் காரணமாக விசேஷ கடாக்ஷம் – விசேஷ கடாஷம் பண்ணி அருளி
தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை
தாமே அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து -நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே வர்த்தியும் -இன்னமும் உமக்கு
இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கே
சொல்லுவோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே –

அவர் இங்கே வந்து-ஸ்ரீ ரெங்கம் வந்து – பெரிய பெருமாளை சேவித்து கொண்டு -தமக்கு முன்பே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும்
அசல் அறியாதபடி அனுசந்த்தித்து கொண்டு -ஏகாந்தமான தொரு கோவிலிலே வர்த்தியா நிற்கச் செய்தே –
பல மண்டலப் பெருமாள் என்ற காட்டு அழகிய சிங்கர் கோயிலிலே –
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கமான முதலிகளும் தாமுமாக பிள்ளை–பிள்ளை லோகாச்சார்யார் – ஒருநாள் அந்த கோவிலிலே
யாத்ருச்சிகமாக எழுந்து அருளி -அவ்விடம் ஏகாந்தமாய் இருக்கையாலே -ரஹச்யார்த்தங்களை
அவர்களுக்கு அருளி செய்து கொண்டு எழுந்து அருளி இரா நிற்க –

அவை தமக்கு பேர் அருளாள பெருமாள்
அருளி செய்த அர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே -அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து
பிள்ளை ஸ்ரீ பாதத்தில் விழுந்து –அவரோ நீர் -என்ன -ஆவது என் -என்று பிள்ளை கேட்டு அருள –

பேர் அருளாள பெருமாள்
தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியையும் -இத் தேசத்தில் போர விட்டு அருளின படியையும் –
விண்ணப்பம் செய்ய கேட்டு -மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்து அருள -அவரும் அங்குத்தைக்கு அந்தரங்கராய்
வர்த்திக்கிற நாளிலே –

பெருமாள்–அரும் பதத்தில் பெரிய பெருமாள் என்பர் – அவருக்கு ஸ்வப்பனத்திலே இவ் அர்த்தங்கள் மறந்து போகாதபடி
அவற்றை ஒரு ப்ரபந்தம் ஆக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளமாக –
அவர் இப்படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –

ஆனால் அப்படி செய்வோம் என்று
திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் ப்ரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே-
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப் போலே –

பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அநு சந்தாதாக்களுக்கு ஔஜ்வல்யகரமாய் இருக்கையாலே
இதுக்கு வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று-

இதுக்கு திருமழிசை அண்ணாவாப்பங்கார் ஸ்வாமிகளின் அரும்பத விளக்கம்
இங்கே சமாக்யையை விவரிக்கிறார் -ரத்ன பிரசுரமான -என்று தொடங்கி -திருநாமம் ஆயத்தகு -என்னும் அளவாக –
ரத்னம் ச தத் பூஷணம் ச ரத்ன பூஷணம் என்று கர்ம தாரயனை ஆஸ்ரயிக்கும் அளவில் கனக -கந்தலே நைவ ரத்னம் உன்மீல்யதே -என்கிறபடியே
பொன் சேராத ரத்னம் ஒளி யுடைத்தல்லாமையாலே அது பூஷணமாகா மாட்டாது -என்று
கர்ம தாரயனை விட்டு -ரத்னை ப்ரசுரம் ரத்ன ப்ரசுரம் ரத்ன பிரசரம் ச தத் பூஷணம் ச ரத்ன ப்ரசுர பூஷணம் -என்றாய்
சாக பிரிய பார்த்திவ சாக பார்த்திவ -என்றுமா போலே உத்தர பத லோபத்தாலே ப்ரசுர பதம் லுப்தமாய் ரத்ன பூஷணம் என்கிறது –
அதில் பிராஸுர்யத்துக்கு ஸ்வ ஆஸ்ரயம் பிரதி விசேஷ்ய தயா பான ஸ்தானத்தில் ஸ்வ ஆஸ்ரய ஸாமாநாதி கரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றும் என்னும் நியமத்தாலே
இங்கும் பிராஸுர்ய ஆஸ்ரய ரத்ன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ ப்ரதியோகித்வம் பிராஸுர்யத்திலே தோற்றக் கடவது –
ரத்ன பிரசுர பூஷணத்தில் ரத்ன விஜாதீயம் தான் பொன்னே யாகை யுசிதம் என்று திரு உள்ளம் பற்றி
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேராமாப்போலே -என்று அருளிச் செய்கிறார்

சப்தத்துக்கு விஜாதீயமாவது அர்த்தமாய் -அர்த்தம் அற்பமாய் -சப்தம் பிரசுரம் என்று சித்தித்ததாக பிரசங்கிக்கும் ஆகையாலே
வசன பூஷணம் என்ற திரு நாமத்தில் வசன சப்தம் பூர்வாச்சார்ய வசனமாய் –
பிராஸுர்யம் தத் அபேக்ஷயா விசேஷ்யமாய்த் தோற்றும் அளவிலே
பூர்வாச்சார்ய வசன சாமானாதிகரண தத் விஜாதீய நிஷ்ட அல்பத்வ பிரதி யோகிகமாய்த் தோற்றக் கடவது
அதில் பூர்வாச்சார்ய வசன விஜாதீயமாவது ஸ்வ வசனம்
ஸ்வ வசனம் ஸ்வல்பமாய் ஓர்வாச்சார்ய வசனம் பிரசுரமாய் இருக்கை
ஸ்வ கபோல கல்பிதத்வ சங்கா வ்யுதசன த்வாரா ப்ராமாண்யத்துக்கு அத்யந்த அவஸ்யகம் என்று திரு உள்ளம் பற்றி அருளுகிறார் பூர்வாச்சார்யர்களுடைய வசன பிரசுரமாய் -என்று

——————-

இனி பூர்வாச்சார்கள் வசனங்களை உதாஹரித்த இடங்கள் –
1-அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –69-ஜீயர் -நஞ்சீயர்

2-திருக் குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–122-

3-பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –126-
இவ்வாக்கியம் பிள்ளான் வாக்கியம் என்று வியாக்யானம்

4-தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை–177-ஜீயர் -நஞ்சீயர்

5-ஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-192-

6-ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –443-பிள்ளை வடக்குத் திருவீதிப்பிள்ளை

———-

இனி பூர்வர்கள் வார்த்தைகளை வசன அநு பூர்வீ நிர்த்தேசம் பண்ணாமல் வார்த்தை என்றே எடுத்த இடங்கள் –

1-இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-31-

வார்த்தை–யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை —

2-அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது–112-

வார்த்தை-அவர் குண ஹீநருமாய்-விரூபருமான அன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது -என்று அருளிச் செய்த வார்த்தை –

3-இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-203-

வார்த்தை-மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே
ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –
ஆனபின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் –
இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

4-மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-234-

வார்த்தை-ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க
வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

5-பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–385-

வார்த்தைகளை–யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஞ்ஞாத ஸூஹ்ருதம் என்ன பிறந்ததாய்-
அவ்வளவிலே கிடாம்பி பெருமாள் இருந்தவர் -நமக்கு பகவத் விஷயம் போல ஸூஹ்ருத தேவர் என்னும் ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயர் என்ன –
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது – நினைக்கிற விஷயம் தன்னைக் காண் -என்று அருளிச் செய்ய –
ஆக -இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பது -என்றபடி –

6-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –166-

ஸ்ரீ ராம வார்த்தை -ஸ்ரீ சீதா வார்த்தை -இருவர் அபிப்ராயப்படி அருளிச் செய்த ஸ்லோகங்கள் உண்டே-

————-

இனி பூர்வர் வசனங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸூத்ரங்கள்-

1-அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –73-

இதுக்கு மூலம் நம்பிள்ளை ஈடு -8-7-11-அடிச்சேர் வகை -ஞான ஆனந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம் -சேஷத்வம் ஆயிற்று –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

அடியேன் உள்ளான் -8-8-2-என்னுள்ளான் என்ன வேண்டும் இடத்தில் அடியேன் உள்ளான் என்கையாலே ஞான ஆனந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் என்கை –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

2-இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —40-

இதுக்கு மூலம் -நம்பிள்ளை ஈடு -10-2-அவதாரிகை
உகந்து அருளின நிலங்களில் நிலை தான் முதலிலே பகவத் விஷயத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலாய்
ருசி பிறந்தால் -யே எதா மாம் பிரபத்யந்தே என்கிறபடியே ஸுலப்யத்துக்கு நிலமுமாகையாலே உபாய பாவமும் பூர்ணமாய்
ப்ராப்ய பூமியில் கொடு போம் இடத்தில் ஆதி வாஹிக கணத்தில் பிரதானனான தானே ஹார்த்த அநு க்ருஹீத -என்கிறபடியே வழியில் பிரதிபந்தகங்களைப் போக்கிக் கொடு போகைக்கும் முற்பாடனாகைக்கும் உடலாய்
ஸம்ஸார சம்பந்தம் அற்று அவ்வருகே போனால் செய்யும் அடிமையை விரோதி கிடக்கச் செய்தே காதா சித்கமாகச் செய்கைக்கும் உடலாய்  இருக்கும் இறே

ஆக -ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய்
ருசி பிறந்த போதே உபாயம் ஆகைக்கும் உடலாய்
ஞான பக்தி வர்த்தகங்களுமாய்
விரோதியும் கிடக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே
திரு அநந்த புரமே பரம ப்ராப்யம் என்றதாயிற்று –

———-

3-ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப்  போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —413-

(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே சரம பர்வம் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தே –
இது வருகிற வழி தான் என்-என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

இதற்கு மூலமான நம்பிள்ளை ஈடு -7-10- அவதாரிகை –
இனித் தான் வேத வாக்யங்களும் -ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூப பிராப்தி அளவும் சொல்லவே
அதுக்கு அவ்வருகில் கைங்கர்யமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்ம பிராப்தி அளவும் சொல்லி விடும் –
ஆழ்வார்கள் -வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று அது தன்னையே சொல்லா நிற்பர்கள்
பிராப்தி பலமான கைங்கர்யத்தில் ருசியாலே ஸம்ஸாரம் த்யாஜ்யம் -ஸர்வேஸ்வரன் உத்தேச்யன் என்ற ஞானம் பிறந்து
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் -பேஷஜம் பகவத் பிராப்தி -என்று பகவத் பிராப்தி அளவிலே நின்றார்கள்
அவர்களில் காட்டில் மயர்வற மதிநலம் அருளினன் என்று பகவத் ப்ரஸாத லப்தமான ஞானத்தை யுடையரான இவர்களுக்கு வாசி இது வாயிற்று –

———–

4-பிரஜை தெருவிலே இடறி –தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –அப்படிச் சொல்லாம் -இறே –370-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –371-

இதற்கு மூலமான பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-பெரிய திருமொழி -11-8-5-
தள்ளி –
எல்லாவற்றுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே ஸம்பந்தம் இருப்பது –
தான் இடறித் தாய் முதுகிலே குத்தும் பிரஜையைப் போலே
அத்தலையாலே வந்ததுக்கு அவனை இன்னாதாமோ பாதி
இத்தலையாலே வந்ததுக்கும் அவனை இன்னதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே

————–

4-ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –242-

இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி -11-5-5-
இடைச்சிக்குப் பரிச்சின்னனாய் இருந்தானே யாகிலும்
ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்குமே –

———–

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –147-

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் –
அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –

இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை சரணாகதி கத்ய வியாக்யானம்
தஸ்மாத் ப்ரணம்ய -இத்யாதி
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது
யாருடைய ஹ்ருதயத்தாலே என்னில் -ஸ்வ ஹ்ருதயத்தாலே
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபி முக்யம் பண்ணினானே யாகிலும்
ரிபூணம் அபி வத்ஸல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் –
என்கிற அவன் படி பார்த்தால் இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒருங்குறையும் இல்லை
ஆகிலும் பதி விரதையாய் இருப்பவள் நெடு நாள் வியபசரித்துப் பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரக்ஷிக்க வேணும் என்று முன்னே நின்றால்
வருகை தானே அபராதமாய்
அதுக்கும் மேலே
என்னை ரக்ஷிக்க வேணும் என்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹானியுமாயும் இருக்கும் இறே –

——————–

இனி பூர்வர்களின் பாசுரங்களைத் திரு உள்ளத்தே கொண்டு அருளிச் செய்த ஸூத்ரங்கள் –

1-ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –432-

இதுக்கு மூல ஸ்லோகம்

யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –

———-

2-தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —439-

இதுக்கு மூல ஸ்லோகம்

நாராயணா அபிவிக்ருதம் யாதி குரோ பிரஸ்யுதஸ்ய துர்புத்தே- கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-

————

3-கைப் பட்ட பொருளை கைவிட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்க
கடவன் அல்லன் –448-

இதுக்கு மூல பிரமாணம்

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே
லப்ப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தம் அந்வேஷதி ஷிதெவ்-என்றும் –

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழி படுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டார் யேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று -என்றும் சொல்லக் கடவது -இறே- ஞான சாரம் -34-

—————-

4-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –449-

இதுக்கு மூல பிரமாணம்

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா
சாஸ்திர கம்யந்து ய ஸ்மரேத்
ஹஸ்தஸ்த்த முதகம் த்யக்த்வா
கநஸ்த்தம் ஸோ அபிவாஞ்ச்சதி-என்றும் –

எட்ட இருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விரும்புறுதல் -பொட்டெனத்தன்
கண் செம்பளித்து இருந்துக் கை துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று (ஒத்து )ஞான சாரம் -33-
-என்று சொல்லக் கடவது இறே – இது வ்யூஹாதிகளுக்கும் உப லஷணம்-

————–

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —450-

இதுக்கு மூல பிரமாணம்

ஏனைவ குருணா யஸ்ய ந்யாச வித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்த்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்றும் –

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ்த் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்றும் சொல்லக் கடவது இறே–ஞான சாரம் -36-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ஸீதையின் மஹாசரித்ரமும் ஸ்ரீ அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1 July 19, 2017 By ஸ்ரீ துளசிராமன்

October 14, 2020

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ்சரிதம் மஹத்”– ஸ்ரீ வால்மீகி ராமாயணம், பாலகாண்டம் 4-7.

ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது ராமாயண காவியத்திற்கு ஸ்ரீ ஸீதையின் மஹாசரித்ரம் என்றும் பெயரிட்டார்.
ஸ்ரீ வால்மீகி ராமாயணமானது – ஸ்ரீ ஸீதையை ராவணன் அபகரித்தது, அவளை ஸ்ரீ ராமர் சந்தேகித்தது,
அவளை அக்நி பரீக்ஷை செய்வித்தது, ஒரு வண்ணான் சொன்ன அபவாதம் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பியது,
இறுதியில் அவள் பூமி ப்ரவேசம் செய்தது முடிய இவ்வாறாக தொடர்ந்து ஸ்ரீ ஸீதையின் துயரங்களை சொல்லும்
ஒரு காவிய நூல் என்று தத்துவம் அறியாமல் சிலர் சொல்கின்றனர். ஸ்ரீராமரையும் ஆணாதிக்கவாதி என்று சாடுகின்றனர்.
மேற்படி அபத்தங்களை மறுத்து, அவற்றை ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளின் படியே விளக்கி,
அவள் சரித்திரமே திருவஷ்டாக்ஷரத்தின் தத்துவ விளக்கம் என்பதை அறுதியிடவே இந்த வ்யாஸம் எழுதப்பட்டது.

ஸ்ரீ ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலிலிருந்து சில ஸ்ரீஸூக்தி ப்ரமாணங்கள்.

ஸ்ரீஸூக்தி #5:-இதிஹாஸ ஶ்ரேஷ்டமான ஶ்ரீராமாயணத்தாலே சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது.
பாரதத்தாலே தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது.

ஸ்ரீஸூக்தி #6:இவை இரண்டாலும் புருஷகார வைபவமும், உபாய வைபவமும் சொல்லிற்றாயிற்று.

ஸ்ரீஸூக்தி #7:புருஷகாரமாம் போது க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.

ஸ்ரீஸூக்தி #8:பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக,
நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக,
அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.

———-

முன்னுரை:

யத்யபி ஏஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித: |
அத்வைத முபசர்தவ்யஸ் ததாப்யேஷ மயா பவேத் ||– அயோத்யா காண்டம் 117 ஆம் ஸர்கம்.

எனது கணவர் ஸ்ரீராமரான இவர் ,ஒரு கொடுங்கோலன் (SADIST/PSYCHO) ஆக இருப்பாரே ஆனாலும்கூட,
என் மனத்தில் எவ்வித சஞ்சலமும் இன்றி,நான் அவருக்கு பணிவிடை கொண்டுதானிருப்பேன்.

கிம் புநர்யோ குணஶ்லாக்ய: ஸாநுக்ரோஶோ ஜிதேந்த்ரிய: |
ஸ்திராநுராகோ தர்மாத்மா மாத்ருவத் பித்ருவத் ப்ரிய: ||

ஆனால் இவரோ எல்லோராலும் புகழத் தக்க குணங்கள் உடையவர் ! கருணை மிக்கவர்! புலன்களை வென்றவர் !
என்மீது நிலையான அன்பு வைத்திருப்பவர் ! தர்மாத்மா !
ஒரு தாயைப் போலும்,ஒரு தந்தையைப் போலும் என்மீது மனப்பூர்வமான நேசமுள்ளவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும்,அவரை அனுசரித்துப் போவதிலும்
(காட்டிற்கு உடன் வந்ததிலும்) ஆச்சரியம் தான் என்ன?

இவ்வாறு ஸ்ரீ ஸீதையின் ஏக்கமானது “என் கணவர் ஸ்ரீராமர் சகல கல்யாண குணங்கள் நிரம்பியவர். உலகம் நிறைந்த புகழாளர்.
அதனால் தான், நான் என்னதான் கற்புக்கரசியாய் இருப்பினும், எவ்வளவு தான் தர்மங்கள் அனுஷ்டித்தாலும்
எனக்கு என்று ஒரு தனிப்புகழ் கிட்டுவதில்லை. என் கீர்த்தியானது குடத்திலிட்ட விளக்கு போலுள்ளது.
எனவே ஒரு கொடூரனுக்கு வாழ்க்கைப்பட்டு, இதேபோல் தர்மங்கள் அனுஷ்டித்து, கற்புக்கரசியாய் இருந்தால் தான்
என்னுடைய க்யாதியும் குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிக்கும்.
ஆனால் ஸ்ரீ ராமரோவெனில் மிகவும் நல்லவர். எனவே இப்பிறவியில் நான் விரும்பும் இந்த வாய்ப்பு கிட்டாது” என்று இருந்தது.

இனி வ்யாசத்திற்கு வருவோம்.

அயோத்தியா காண்டத்தின் இறுதி சர்க்கங்களில் தான் ஸ்ரீ ஸீதையின் சரிதம் தொடங்குகின்றது. 117ஆம் சர்க்கத்தில்
ஸ்ரீ ஸீதையும் அநசூயையும் உரையாடுகின்றனர். அப்பொழுது மஹரிஷி ஸ்ரீ அத்ரியானவர் கூறுகிறார்:

தஶ வர்ஷஸஹஸ்ராணி யயா தப்தம் மஹத் தப: |
அநஸூயா வ்ரதை: ஸ்நாத்வா ப்ரத்யூஹாஶ்ச நிவர்திதா: ||
தாம் இமாம் ஸர்வ பூதாநாம் நமஸ்கார்யாம் தபஸ்விநீம் |
அநஸூயேதி யா லோகே கர்மபி: க்யாதிமாகதா: ||– அயோத்யா காண்டம் -117, 11 &13

அநஸூயை என்னும் இவள் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றியிருக்கின்றாள்.
எல்லாவித இடையூறுகளையும் விலக்கி,வ்ரதங்களை முழுமையாக செய்து முடித்தவள்.
எல்லா பிராணிகளாலும் வணங்கத்தக்கவள். கீர்த்தி பெற்றவள்! முதியவள்! கோபம் என்பதே ஒருபொழுதும் அறியாதவள் !
தன் அன்பு நிறைந்த நற்கர்மங்களால் “அநஸூயா” என்று உலகில் புகழ் பெற்றவள்.

இவ்வாறு தன் மனைவியை பலவாறு புகழ்கின்றார். அநஸூயை என்றால் பொறாமை இல்லாதவள் என்று ஒரு பொருளுண்டு.
பிறரால் பொறாமைப்படக் கூட முடியாத இடத்தை அடைந்தவள் என்று மற்றோரு பொருளும் உண்டு.
ஸ்ரீ ஸீதை “தாயே! நானும் உன்னைப் போல் புகழ்பெற விரும்புகின்றேன்” என்றாள்.

அப்பொழுது அநஸூயை, “பேரழகியும், குணவதியும், சௌபாக்யவதியுமானயான ஸ்ரீ ஸீதா! புகழ்பெற்ற ஸ்ரீ ராமனால்,
சுயம்வரத்தில் நீ அடையப்பட்டாய் என்று கேள்விப்பட்டேன். எது,எப்படி நிகழ்ந்ததோ, அவற்றை அப்படியே விஸ்தாரமாக கூறுவாய்”
என்று பூர்வ வ்ருத்தாந்தங்களை கேட்கின்றார்.

ஸ்ரீ ஸீதையும் தனது அயோநிஜ பிறப்பு தொடக்கமான வ்ருத்தாந்தங்களை ரஸமாக சொல்கின்றார்.
கலப்பை உழுத மண்ணில், புழுதியும் தூசுகளும் பட தன்னை ஸ்ரீ ஜனகர் கண்டெடுத்தது
(பாம்ஸு குண்டித ஸர்வாங்கீம் ஜநகோ விஸ்மய: அபவத்). “இவள் உன்திருமகள் ! சாதாரண மானுட பெண்ணன்று ” என்ற
அசரீரி வாக்கினை கேட்டு ஸ்ரீ ஜனகர் மகிழ்ந்தது, தாய் ஸுநயநா அரவணைப்பில், தர்ம சூக்ஷ்மமான நல்லுரைகளுடன் வளர்ந்தது,
சாவித்திரி – சத்தியவான், அத்ரி – அநஸூயா, ரோஹிணீ – சந்திரன்,அருந்ததி – வசிஷ்டர் போன்ற
உதாரண தம்பதியர் பற்றிய கதைகள் கேட்டது, பின்பு திருமணம் நடந்தது,
வனவாஸம் செல்லும் முன்னர் மாமியார் கூறிய அறிவுரைகள் என்று விஸ்தரித்து வர்ணனம் செய்கிறாள்.

முடிவில் ஸ்ரீ அநசூயை சீதையைப் பாராட்டுகின்றார். தன்னுடைய திவ்யமான மாலை, என்றுமே கசங்காத / அழுக்கடையாத வஸ்த்ரம்,
வாசனை த்ரவ்யம், அணிகலன் இவற்றை ஆசீர்வாதமாகக் கொடுக்கின்றார்.
ஸீதையை அணிகலன்களால் பலவிதமாக அலங்காரம் செய்கின்றார். வாசனைத் திரவியங்களை பூசி,
“ஸீதா ! நீ உற்றார் உறவினர்களையும், கௌரவத்தையும், சுக போகங்களையும் துறந்து உன் கணவனுடன்
வனவாஸம் செய்ய வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. கற்புக்கரசிகள் இப்படித்தான் நடக்க வேண்டும்”.

அதற்கு ஸ்ரீ ஸீதை -“தாயே! என் தந்தை ஜனகர், எனக்கு சிவ தனுஸை கன்யா சுல்கமாக வைத்தார்.
எந்த வீரன் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றுகிறானோ, அவனுக்கே என் பெண் மாலை இடுவாள் என்று அறிவித்திருந்தார்.
ஸ்ரீ ராமனும் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றினார். இதனால் மகிழ்ந்து போன என் தந்தை என்னைத் கன்யாதானம் கொடுக்க சித்தமானார்.
ஸ்ரீ ராமரோ என் தந்தையின் உத்திரவின்றி நான் எதுவுமே செய்வதில்லை என்று மறுத்துவிட்டார்.
பிறகு தூதுவர்கள் சென்று ஸ்ரீ தசரதரை அழைத்து வந்து, அவர் சம்மதித்த பிறகே என்னை மணந்தார்.

தீயமாநம் ந து ததா ப்ரதிஜக்ராஹ ராகவ: |
அவிக்ஞாய பிது: சந்தம் அயோத்யாதிபதே: ப்ரபோ: ||– அயோத்யா காண்டம்- 118-51

தன் தந்தையார் பார்த்து நிச்சயித்த பெண்ணான என்னை மணந்தார்.
“என் அழகில் மயங்காமல், பித்ரு வாக்ய பரிபாலனம் என்னும் தர்மத்தை அனுஷ்டித்தார்.
எனக்கு காதல் திருமணத்தில் விருப்பமில்லை. தர்மத்தில்தான் பெரு விருப்பம்.
ஏனெனில் இன்று ஒரு அழகியை விரும்புபவன், நாளை அவளினும் அழகியாக தன் பார்வைக்கு படும்
வேறு ஒருத்தியை விரும்பலாம். எனவே இது அவர் மீது இருந்த அன்பினை இருமடங்கு பெருக்கியது.

ப்ரியா து ஸீதா ராமஸ்ய தாரா: பித்ருக்ருதா இதி |
குணாத் ரூபகுணஶ்சாபி ப்ரீதிர் பூயோ அப்யவர்ததா ||
தஸ்யாஶ்ச பர்தா த்விகுணம் ஹ்ருதயே பரிவர்ததே |– பாலகாண்டம்-77-28

எனது ஸ்ரீ ராமர் – பித்ரு வாக்ய பரிபாலனம், மாத்ரு பக்தி,ஏக பத்னி வ்ரதம், சரணாகத ரக்ஷணம்,
ப்ராத்ரு ஸ்நேஹம் போன்ற தர்மங்களும், தயை, க்ஷமை, பக்தி, தவம், த்யானம், ஸத்யம், இந்திரிய நிக்ரஹம்
போன்ற ஆத்ம குணங்களும், தன் அன்பர்கள் மீது வாத்சல்யம்,ஸௌசீலம், ஸௌலப்யம், ஆர்ஜவம் போன்ற குணங்களும்,
சிறந்த லாவண்யம், சவுந்தர்யம், ப்ரம்ம தேஜஸ் என்னும் ரூப லக்ஷணங்களும், புகழும்,
ஸ்ரீ விஷ்ணுவுக்கு நிகரான வீரதீர பராக்கிரமங்களும், த்ரிலோக ஐச்வர்யமும் (வ்யாப்தா, நியந்தா) ,
குபேரனுக்கு நிகரான செல்வமும், ப்ருஹஸ்பதியைப் போன்று சகல சாஸ்திர நிபுணத்வமும் ,வாய்மை,
பெரியோர்கள் / அன்பர் சொல் கேட்டல் என்னும் பல குணங்களும் கூடியவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும், அவரை அனுசரித்துப் போவதிலும் ஆச்சரியம் என்ன?
இத் துணை கல்யாண குணங்கள் படைத்த ராமனை வேறு எந்தப் பெண் மணந்திருந்தாலும் இப்படித் தான்,
சந்திரனைப் பிரியாத ரோஹிணியை போன்று கூடவே இருப்பாள்.
என்றிவ்வாறெல்லாம் ஓடிய அவளது உள்ளக்கிடக்கை தனை பெருமாளும் அறிந்தான்.

“உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறியும்” பெருமாள், அவளுடைய குணாதிசயங்களை வெளியிட சங்கல்பித்தார்.

———————–

பிராட்டியானவள் நாமெல்லாம் பெருமாளை அடைய புருஷகாரம் ஆகின்றாள் (சிபாரிசு).

இதனை தர்க்க பூர்வமாக நிறுவுவோம். (உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்பன தர்க்க பாஷையின் அங்கங்கள்
அதாவது உறுப்புக்கள் ஆகும். எனவே நீங்களும் என்னுடன் கொஞ்சம் தர்க்கம்- ந்யாயம் பயிலுங்கள்).

உத்தேசம்: (பெயரிடல்)
அதற்கு அவளிடம் 1)க்ருபை, 2)பாரதந்த்ர்யம், 3)அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று குணங்கள் வேண்டும்.

லக்ஷணம்: (விளக்குதல்)
1) க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை.
ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு
இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும்.
2) பாரதந்தர்யமாவது பரமபுருஷனுக்கு உரிமைப் படுகை. ஸ்வதந்த்ரனான அவனை அனுவர்த்தித்து
(அவன் சொன்னபடியெல்லாம் நடந்து) அவனை வசப்படுத்த வேண்டியிருப்பதால் பாரதந்தர்யம் வேணும்.
3) அநந்யார்ஹ சேஷத்வமாவது அவனுக்கன்றி மற்றவனுக்கு உரிமைப் படாதொழிகை.
பிராட்டி எம்பெருமானிடத்தில் சென்று “இந்த ஜீவனை நீ அங்கீகரிக்க வேணும்!” என்றால்
“இவள் நம்மைத் தவிர வேறொரு விஷயத்திற்கு சேஷப்படாமல் (அடிமைப்படாமல்) நமக்கே அதிசயத்தை (நன்மை)
விளைவிக்குமவள் ஆகையாலே நம்முடைய காரியத்தையன்றோ இவள் சொல்லுகிறாள்” என்று பரமன் நினைத்து,
அவள் சொன்னபடி செய்கைக்கு உறுப்பாக அநந்யார்ஹத்வமும் வேணும்.

பரீக்ஷை: (சரி பார்த்தல்)
அவளுக்கு இம் மூன்று லக்ஷணங்களும் இருக்கும் படியை நாம் எங்ஙனே அறியலாம் என்னில் –
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்று தரம் பிரிந்து
இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்.
எப்பிரிவில் எக்குணம் வெளியாயிற்று என்னில்:

ராவணன் பிரித்தான் என்னும் சாக்கிலே முதலில் ஸ்ரீ பெருமாளைப் பிரிந்து இலங்கைக்கு எழுந்தருளின
சமயத்தில் “க்ருபா குணம்” வெளியாயிற்று.
முற்பட பிரிவு – க்ருபையை காட்டியது (க்ருபை – பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை).

தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தமையாலும்;
அச்சிறையிலே தன்னை இரவும் பகலும் ஹிம்சித்த ராக்ஷஸிகள், ஒருநாள் திரிஜடையின் கனவு வ்ருத்தாந்தம் கேட்டார்கள்.
அக்கனவிலே ராவணன் தோல்வியுற்று, தெற்கு – எம திக்கிலே கழுதைமீது, அழைத்துச் செல்லப்பட்டதாகவும் (மாண்டுபோதல்),
ஸ்ரீ பெருமாள் வெற்றி பெற்று ஸ்ரீ அயோத்தியில் ஸ்ரீ ஸீதையுடன் முடிசூடியதாகவும் கண்டமை கேட்டு மிகவுமஞ்சி நடுங்கினார்கள்.
ஸ்ரீ பிராட்டி அவர்களை நோக்கி “நானிருக்க நீங்கள் அஞ்சுவதென் ? அஞ்சவேண்டா !! என்று அபய ப்ரதானம் செய்தமையாலும்;
இந்த அபய ப்ரதானம், வெறும் வாய்ச் சொல்லாய் ஒழியாமல் ,ராவண சம்ஹாரத்திற்குப் பின் தனக்கு ஸோபனம் (நற்செய்தி)
சொல்ல வந்த அனுமன், அந்த ராக்ஷஸிகளை சித்திரவதை (கொடிய முறையில் கொலை) செய்ய எத்தனித்தார்.
அப்பொழுது அவரோடே மன்றாடி, பிறர் படும் ஹிம்ஸையைக் கண்டு பொறுத்திருக்கும் படியான
மனக்கொடுமை எனக்கில்லை என்று அறிவுறுத்தியும்,
அவ்வரக்கிகளின் குற்றங்களை நற்றங்களாக உபபாதித்தும் அவர்களைக் காத்து அருளியமையாலும், க்ருபா குணம் விளங்கிற்று.
இக்குணம் வெளியிடுவதற்கேயாம் ஸ்ரீ பிராட்டிக்கு நேர்ந்த முதற் பிரிவு.

ஸ்ரீ பிராட்டியே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் அன்னையாதலால், தாய் ஸ்தானத்தில் நின்று ராவணனுக்கு
சொன்ன உபதேசங்களுள் சிலவற்றை இங்கே காணலாம்.

ஸுந்தரகாண்டம் 21ஆம் சர்கம்:
இஹ ஸந்தோ ந வா ஸந்தி ஸதோ வா நாநுவர்தஸே ||
இங்கே,இலங்கையில் சான்றோர்கள் யாரும் இருக்கவில்லையா? அல்லது அவர்கள் இருந்தும்,
நீ அவர்களை பின்பற்றவில்லையா? ஏன் இப்படி அதர்ம வழியில் இழிந்து அழிவைத் தேடுகின்றாய் ?

மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம: ஸ்தானம் பரீப்ஸதா
வதே ச அநிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப ||
உனக்கு கோரமான அழிவு வேண்டாம் என்று எண்ணினால், புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமனுடன் நட்புக்கொள்
(காலைப் பிடிக்கத் தேவை இல்லை, கையையாவது பிடி. அதாவது நட்புறவு கொள்வதே போதுமானது)

விதித ஸ ஹி தர்மக்ஞ: ஶரணாகதி வத்ஸல:
தேந மைத்ரீ பவத் தே யதி ஜீவிதும் இச்சஸி ||
அறம் அறிந்த ஸ்ரீ ராமர் சரணடைந்தவர்களிடம் பேரன்பு கொண்டவர். நீ உயிருடன் இருக்க விரும்பினால்
அவருடன் நட்புக்கொள். அவர் நீ செய்த அனைத்து அபசாரங்களையும் மன்னிப்பார்.

ஆயினும் ராவணன் திருந்தவில்லை. அநாதி துர்வாசனையினால், எவ்வளவு உபதேசித்தும் இவன் திருந்தவில்லையே
என்று பரிதபித்தாள். ஐயோ ! இவனுடைய துர்புத்தி நீங்கி அனுகூலபுத்தி உண்டாக வேணும் என்று
ஜீவாத்மா திறத்தில் தான் செய்யும் பரமகிருபையாலே அவனை தீ மனங்கெடுத்து வழிப் படுத்தப் பார்த்தாள்.

பிரிவு என்றால் என்ன ?
நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்தவையேதம் த்விஜோத்தம ||– விஷ்ணுபுராணம் 1-8-17

உலகிற்கெல்லாம் தந்தை பகவான் என்றால், மஹாலக்ஷ்மீ ஜகன்மாதாவாய், கருணைக்கடலாய் நிற்கின்றாள்.
பகவானை விட்டு ஒருபோதும் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவன் விஷ்ணு. அதுபோல் இவளும் எங்கும் நிறைந்திருப்பவள்.
ஆக மிதுனமாய் நிற்கும் இவர்களே நமக்கு பெருந்தெய்வம்.

பராசர ரிஷி, தன்னுடைய விஷ்ணு புராணத்தில் – பிராட்டியானவள் பகவானை விட்டுப் பிரியாதவள்.
அவளுடன் நித்ய சம்பந்தம் உள்ளவன் எம்பெருமான் என்று முதலில் பொதுவாகக் கூறியவர் பின்னர்
அந்த நித்ய சம்பந்தத்தை பல பிரகாரங்களால் விளக்குகின்றார்.

அர்த்தோ விஷ்ணு இயம் வாணீ ||
அர்த்த: என்னும் பொருள் ஆண்பாலினத்தைச் சார்ந்து ஸ்ரீ பகவானது விபூதியாக அதாவது ஸ்ரீ பகவானாக கூறப்படுகின்றது.
வாணீ என்னும் சொல் பெண்பாலினத்தைச் சார்ந்து ஸ்ரீ லக்ஷ்மியின் விபூதியாக அதாவது ஸ்ரீ பிராட்டியாக கூறப்படுகின்றது.

சொல் மற்றும் பொருளின் சம்பந்தமும் நித்தியம் என்பது சாஸ்திரங்களால் வலியுறுத்தப்படுகின்றது.
இதனால் சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்பவர் ஸ்ரீ விஷ்ணு ஸ்ரீ லக்ஷ்மீ என்னும்
திவ்ய தம்பதிகள் என்பதும் சொல்லப்பட்டதாகின்றது.

நீதி பிராட்டி என்றால் நியமம் பெருமாள்;
புத்தி பிராட்டி என்றால் போதம் பெருமாள்;
சத்க்ரியா பிராட்டி என்றால் தர்மம் பெருமாள்;
ஸ்ருஷ்டி பிராட்டி என்றால் ஸ்ரஷ்டா பெருமாள்;
பிராட்டி பூமி என்றால் ஹரியே பூ-தரன் (பர்வதம் (அ) ராஜா);
பிராட்டி துஷ்டி என்றால் ஹரியே சந்தோஷம்;
பிராட்டி இச்சை என்றால் ஹரியே காமம்;
பிராட்டி ஆஜ்யாஹுதி (நெய்) என்றால் ஜனார்தனனே புரோடாஸம்.

கிம் சாதி பஹுநோக்தேந ஸங்க்ஷேபேண இதமுச்யதே ||

பலவாறு சொல்லி பயன் என்ன ? சுருங்கச் சொல்கிறேன் ஒன்றை.

தேவ திர்யங் மநுஷ்யாதௌ புந் நாமா பகவாந் ஹரி: |
ஸ்த்ரீநாம்நீ ஶ்ரீ: ச விக்ஞேயா நாநயோர் வித்யதே பரம் ||

தேவ ஜாதி, திர்யக் ஜாதி, மனுஷ்ய ஜாதி மற்றும் உள்ளவை இவைகளில் ஆண் பாலினத்தைச் சார்ந்தவை
அனைத்தும் பெருமாள் விபூதியாய் ஸ்ரீ விஷ்ணு என்றே சொல்லப்படும்.
பெண் பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும் ஸ்ரீ லக்ஷ்மியினுடைய விபூதியாய் ஸ்ரீ லக்ஷ்மி என்றே சொல்லப்படும்.
விபூதியென்றால் செல்வம் என்று பொருளாகும்). பல விபூதிகளைச் சொல்ல வேண்டும் என்று தொடங்கிய ரிஷி,
பல படிகளையும் காட்டி, முழுதும் சொல்ல முடியாமல் போய் “இவ்வாறே மேலும் கண்டு கொள்க ” என்று தலைக் கட்டுகின்றார்.

ஸ்ரத்தயா அதேவோ தேவத்வம் அஶ்நுதே ||

அதாவது தேவன் அல்லாதவன் ஸ்ரத்தையாகிற ஸ்ரீ லக்ஷ்மியினால் தான் தேவனாகும் தன்மையை அடைகிறான் –
என்று வேதமும் சொல்லுகின்றது.

இப்படி ஸ்ரீ லக்ஷ்மியானவள் நொடிப்பொழுதும் பிரியாது வாழும் மார்பனே என ஸ்ரீ நம்மாழ்வாரும்,
’அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்றும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும் இதையே, ’திருவுக்கும் திருவாகிய செல்வா’ என்றும் கூறுகின்றனர்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்யையானவள். பகவானைப் போல் ஆதியும் அந்தமும் இல்லாதவள்.
ஸ்ரீ பகவானைப் போல் எங்கிருந்தாவது தோன்றுகின்றாள், மறைகின்றாள்.
மறுபடி வேண்டும்போது மற்றோரிடத்திலிருந்து ஆவிர்பவிக்கின்றாள்.
ஸ்ரீ பகவான் அதிதி மகனாக அவதரித்தபோது இவள் பத்மையானாள்.
ஸ்ரீ பரசுராமனாக அவதரித்த போது இவள் தரணியாகத் தோன்றினாள்.
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீ ஸீதையாகவும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ ருக்மிணியாகவும் இவளே அவதரித்தாள்.
அவன் தேவனாக அவதரித்தால் தேவப் பிறவியை மேற்கொள்கிறாள்.
அவன் மனித பிறவியை எடுத்தால், இவளும் மனிதப் பிறவியை ஏற்கிறாள்.
இப்படி எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானுக்கு ஏற்ப அவதரிக்கின்றாள். பிரிவதே இல்லை.

அனுமனும் இதைக் கூறுகின்றான்:

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் |
தேந அயம் ஸ ச தர்மாத்மா முஹூர்தம் அபி ஜேவதி ||– ஸுந்தரகாண்டம் 15-52

இந்தத் தேவியின் மனம் ஸ்ரீ ராமனிடத்திலும், ஸ்ரீ ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது.
அதனால்தான் இந்த ஸ்ரீ தேவியும், தர்மாத்மாவான ஸ்ரீ ராமரும், இது நாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர்.

நாட்டைப் படை என்று அயன் முதலாத்தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே– ஸ்ரீ நாச்சியார் திருமொழி

குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன்.
அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்.
விமலன் – அவ்விளையாட்டுக்களால் தனக்கொரு பாவமோ கர்மமோ அண்டாதவன்.

திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

ஸ்ரீ ஒப்பிலியப்பனால் படைத்து, பேணப்பட்டு, அழிக்கப்படும் சோலையே இந்த மூவுலகங்களும் என்று ஸ்ரீ நம்மாழ்வாரும் பாடினார்.

இங்கே ஸ்ரீ பெருமாளை சொன்னது ஸ்ரீ பிராட்டிக்கும் உபலக்ஷணம் ஆகும்.

அவதாரத்தில் பிரிவு என்பது ஒரு நாடகம், அவ்வளவே.

பிறர் சமையல் செய்யக் காணும்,நாம் அதைக் கற்பது போலவும்,
ஆசிரியர் பரிசோதனைச் சாலையில் செய்யக் காணும் நாம் அதைக் கற்பது போலவும் தான் அவை.
JUNIOR LAWYER, HOUSE SURGEON போல நாமும் SENIORS செய்யக் கண்டு PRACTICALS கற்கின்றோம்.
இதிஹாச புராணங்களில் ஸ்ரீ பெருமாளும், ஸ்ரீ பிராட்டியும், நித்யர்களும், பக்தர்களும், ரிஷிகளுமாக உபநிஷத்,
ஸ்ம்ருதிகளில் காணும் விதி, நிஷேத தர்மங்களை அனுஷ்டித்தும், த்யஜித்தும் காட்டுகின்றனர்.
நாமும் விதி, நிஷேதங்களை அறிந்து கைக்கொள்ளவே அல்லது விடவே தான் அவை நடத்தப்படுகின்றன.

———–

ஸ்ரீ பத்ம புராணமானது ஸ்ரீ புலஸ்த்ய ப்ரஜாபதி ,ஸ்ரீ பீஷ்மருக்கு உபதேசித்தது ஆகும்.
இது 1)ஸ்ருஷ்டி கண்டம், 2)பூமி கண்டம், 3)ஸ்வர்க கண்டம், 4)பாதாள கண்டம் மற்றும் 5)உத்தர கண்டம்
என்று ஐந்து பாகங்களால் ஆனது.

நாம் அன்றாடம் சேவிக்கும்

பார்வத்யுவாச
கேநோபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்|
பட்யதே பண்டிதைர் நித்யம் ஶ்ரோதும் இச்சாம் அஹம் ப்ரபோ|| -பத்ம புராணம் -5-72-334
ஈஶ்வர உவாச
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே|
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராந்நே|| பத்ம புராணம்- 5-72-335
என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பலஶ்ருதி ஸ்லோகங்கள் ஸ்ரீ பத்ம புராணம் உத்தர கண்டத்தை சேர்ந்தவை.

ஶ்ரீராமோ ராமபத்ரஶ்ச ராமசந்த்ரஶ்ச ஶாஶ்வத: |
ராஜீவலோசந ஶ்ரீமாந் ராஜேந்த்ரோ ரகுபுங்கவ: || என்று தொடங்கும்
ஶ்ரீராம அஷ்டோத்தர ஶதநாம ஸ்லோகமும் இக் கண்டத்தை சேர்ந்தது.

மேலும் இப்புராணத்தில் பரம ஶிவனார் பார்வதி அம்மைக்கு உபதேசித்த ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகத்தினை,
தான் கேட்டு, பிறகு CUSTOMIZE செய்த, ஸ்ரீ பீஷ்மர், பின்னர் அதனை மஹாபாரதத்தில்
அநுஶாஸநிக பர்வத்தில் ஸ்ரீ யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கின்றார்.

பகவத் கீதையின் 18 அத்யாயங்கள் பற்றி 18 கதைகள் இங்கு உண்டு.
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் மாஹாத்மியமான – ஆத்மதேவர் – துந்துலி கதை,
கோகர்ணன் 7 நாள்களில் செய்த பாகவத ஸப்தாஹம்,
அதன் ஶ்ரவண பலனாக துந்துகாரி மோக்ஷம் பெறுதல் போன்றனவும் இப்புராணத்தில் உள்ளன.
உத்தர ராமாயணத்தில் விரிவாக சொல்லப்படாத லவகுஶா வரலாறு, ராமர் செய்த அஶ்வமேத யாகம், அனுமனின் திக்விஜயம் ,
யாகக்குதிரையை லவகுஶர்கள் கைப்பற்றுவது, ஶத்ருக்நருடன் அவர்களின் யுத்தம்,
மற்றும் பாலகாண்டம் ராம சகோதரர்களின் நாமகரணம் ,
பெயர்க்காரணம் போன்றன சுவாரஸ்யமாக சொல்லப்படுகின்றன.
மஹாபாரதத்தின் ஸ்த்ரீபர்வம் , அநுஶாஸநிக பர்வம், போன்றவைகளுக்கும் இதுவே மூலம் ஆகும்.

———

ஸ்ரீ வால்மீகி ராமாயணமானது 24,000 ஸ்லோகங்களாலானது.
இது உத்தரகாண்ட ஸ்லோகங்களையும் கூட்டி வரும் தொகையாகும்.
ஸ்ரீ கம்ப ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களுக்கு, ஒருமுறை சடையப்ப வள்ளலை புகழ்ந்து ஒரு வரி அமைந்துள்ளது.
அவ்வாறே ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களும் ஸ்ரீ காயத்ரி மந்த்ரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்தினை கொண்டு தொடங்கும்.
அவ்வாறு தொடங்கும் 24 ஸ்லோகங்களை கொண்டு விளங்கும் ஸ்ரீ காயத்ரி ராமாயணம் என்னும் ஸ்தோத்ரமும் உளது.
அதில் இறுதி மூன்று பாக்களும் உத்தரகாண்டத்தைச் சேர்ந்தவை. அவை பின்வருமாறு ….

22.)சாலநாத் பர்வதஶ்சைவ கணா தேவஸ்ய கம்பிதா:| 7-16-26
சசால பார்வதி சாபி தட ஸ்லிஷ்ட மஹேஶ்வரம்||

23.)தாரா புத்ரா புரம் ராஷ்ட்ரம் போகாச் சாதந போஜநம்| 7-34-39
ஸர்வமேவா விபக்தம் நௌ பவிஷ்யதி ஹரீஶ்வர||

24.)யாமேவ ராத்ரிம் ஶத்ருக்ந பர்ணஶாலாம் ஸமாவிஶத்| 7-66-1
தமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூத தாரகாத்வயம்

உத்தரகாண்டம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்லோகங்களாலும், 111 ஸர்கங்களாலும் ஆனது.
ஸ்ரீ ராமாயணம் தொடங்கும் பொழுதே உத்தரகாண்ட கதாபாத்திரங்களான ஸ்ரீ லவ குஶர்கள்,
அதனை ஶ்ரீராமருடைய திருவோலக்கத்தில் (அஶ்வமேத யாகஶாலையில்) அரங்கேற்றுவதாக அமைந்துளது.

உத்தரகாண்டத்தினைப் பற்றி பாலகாண்டத்தில் பின்வருமாறு விவரணம் கூறப்பட்டுள்ளது.

ராமாபிஷேக அப்யுதயம் சர்வ ஸைந்ய விஸர்ஜநம்|
ஸ்வராஷ்ட்ர ரஞ்சநம் சைவ வைதேஹ்யா ச விஸர்ஜநம்|| ராமாயணம் -1-3-38
இங்கு ஸ்ரீ பிராட்டியை காட்டிற்கு அனுப்பியது(வைதேஹ்யா ச விஸர்ஜநம்) என்று
பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாயண முன்னுரையில் கூறப்படுகின்றது.

அநாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வஸுதா தலே|
தத் சகார உத்தரே காவ்யே வால்மீகி: பகவாந் ரிஷி: || ராமாயணம் -1-3-39
பொருள்: இவைகளை எழுதிய பின்னர், மண்ணுலகில், இதற்கு பிறகும் , ஸ்ரீ ராமர் செய்யபோகும் பற்பல
நற் செயல்கள் பற்றியும் ,பிற விவரங்களையும் தெய்வாம்ஶம் பொருந்திய முனிவர் ஸ்ரீ வால்மீகி,
அடுத்த பகுதியான உத்தர காண்டத்தில் வரைந்து நிறைவு செய்தார்.

சதுர்விஶ்மஸஹஸ்ராணி ஶ்லோகாநாம் உக்தவாந் ரிஷி: |
ததா ஸர்கஶதாந் பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்|| ராமாயணம்-1-4-2
பொருள்: முனிவர் அந்தக் காவ்யத்தில் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்க்களும், ஐந்நூறு ஸர்கங்களும்
ஆறு காண்டங்களும் மேலும் ஒரு காண்டமும் உள்ளதாக இயற்றினார்.

ஸ்ரீ ராமாயணத்தின் மொத்த காண்டங்கள், ஸ்லோகங்கள், ஸர்கங்கள், பாராயண முறைகள்-விளக்கங்கள்,
இன்னின்ன சர்கத்திற்கு வெவ்வேறு பாராயண பலன்கள் என்று வாயு புராணம் உமா-பரமேஶ்வர சம்ஹிதை,
மற்றும் ஸ்ரீ ராமாயணத்தின் மாஹாத்மியம் ஸ்காந்த புராணத்தில்
ஸ்ரீ நாரத-ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதைகளில் விரிவாகக் காணலாம்.

———-

தப: ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிப்ப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| – பாலகாண்டம்-1-1

இதுவே ஸ்ரீ ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் ஆகும். முதன் முதலில் தொடுக்கும் பாசுரத்தில்
திருமகளை வழிபட்டு தொடங்குவதானது ஒருவித மங்கல வழக்கு என்பர் .
ரிஷிகளுக்கு தவமே தனம்(செல்வம்) ஆகும். தபோதனம் என்பதற்கு இலக்கண குறிப்பாக
இருபெயரொட்டு பண்புத்தொகை அல்லது கர்மதாரய ஸமாஸம் என்கிறது வீரசோழியம்.
இதைத்தான் மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று வைத்து ஸ்ரீ பிராட்டியை வணங்கியே ,
தன் காவியத்தை, “ஸீதையின் மஹாசரித்ரமாகத்” தொடங்குகின்றார்.

முதல்பாகத்தில் “பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக” என்று
ஸ்ரீ ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிய ஸ்ரீவசனபூஷண வரிகளை கண்டோம்.
இவ்விரண்டாம் பாகத்திலே “நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக” என்னும்
வரிகளை விளக்கமாகக் காண்போம்.

பிராட்டி நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக.

ஒரு ஜீவாத்மாவுக்கு அவன் இச்சிக்கும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பனவாற்றை,
ஸ்ரீ பரமன் அருள்செய்ய, ஸ்ரீ பிராட்டியின் சிபாரிசு(புருஷகாரம்) அவசியமாகிறது என்று பார்த்தோம்.
அங்ஙணம் சிபாரிசு செய்ய ஸ்ரீ பிராட்டியிடம் காணப்படும் இன்றியமையாத குணங்களாக
1) க்ருபை ,2)பாரதந்த்ர்யம் மற்றும் 3) அநந்யார்ஹத்வம் என்றும் பார்த்தோம்.
அக்குணங்களில் க்ருபையை முற்பாகத்தில் கண்ட நாம் பாரதந்த்ர்யம் என்னும் குணத்தை இங்கே பரக்கக் காணலாம்.

பாரதந்த்ர்யம் என்றால் என்ன?

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும்.
“நான்” என்னும் சொல்-ஸ்தூலமாக ஜீவனையும்,
ஸூக்ஷ்மமாக –அவ்வாத்மாவினுள் உறையும், அந்தர்யாமியான பரமனையும் குறிக்கும்.
நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு.
அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி)
மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு.
அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்.
(இங்கே மனஸை அர்பணித்தல் என்பது உடலுக்கும் பொருந்தும்).
நம் உடலை கரணகலேவரம் என்பர் வடநூலார் (கரணம்=புலன்(6), கலேவரம்=உடல்).
அவற்றை தனக்காகக் கொள்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும்.
பாரதந்த்ர்யம் சாத்வீகமானது. ஆனால் ஸ்வாதந்த்ர்யமோ ராஜஸமானதாம்.

தனக்கு கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்றனை தேர்வு செய்ய பயன்படும் மனதின் செயல்பாடு “புத்தி” எனப்படும்.
எடுத்துக்காட்டாக பெண்டிர் பதின்மரிடம் 1000 சேலைகளை, அவர்களின் பார்வைக்கு வையுங்கள்.
அவர்கள், தமக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும்.
அவ்வாறன்றி தன் கணவனுக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது பாரதந்த்ர்யம் ஆகும்.
[புத்தியின் ந்யாசம்/(அவனிடத்தில் வைத்தல்) பாரதந்த்ர்யம் என்பர்.]

1. தயரதரும் கௌசல்யையும்

அயோத்யா காண்டம் 12 ஆம், ஸர்கத்தில் சக்கரவர்த்திக்கும் ,கைகேயிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தை பின்வருமாறு.
கைகேயி “ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம், பரதனுக்கு பட்டாபிஷேகம்” என்று இரண்டு வரங்கள் கேட்டு,
பிடிவாதம் செய்கின்றாள். சக்கரவர்த்தியாரோ அனலில் இட்ட புழுவாகத் துடிகின்றார்.
மந்திரத்தால் கட்டுப்பட்ட நாகம்போல சீறுகின்றார். அப்பொழுது கௌசல்யா தேவியார் பற்றிய நினைவு வந்து
அவளை, கைகேயிக்கு ஒப்பிட்டு –
“ஹே ந்ருஸம்ஶே ! நீயோ ஹிம்சையே இயல்பாகக் கொண்டவள் ! அஹிம்ஸா தேவியான அவளோவெனில்,

யதா யதா ச கௌசல்யா தாஸீவச்ச ஸகீவ ச |
பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவத் ச உபதிஶ்டதி ||
ந மயா ஸத்க்ருதா தேவீ ஸத்காரார்ஹா க்ருதே தவ | -12-68

பொருள்: அந்தந்த சமயத்திற்கேற்றபடி ஒரு வேலைக்காரியைப் போல, ஒரு தோழியைப் போல, மனைவியாக,
ஒரு சகோதரியைப் போல ,தாயைப் போல கௌசல்யை நடந்து வந்திருக்கின்றாள். என்னுடைய பாராட்டுக்குரிய அவளை,
உன்னிடமிருந்த பயம் காரணமாக பகிரங்கமாக நான் பாராட்டியதே இல்லை – என்று புகழ் பாடுகின்றார்.

சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது.
இதற்கு ஆசார்யர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு –“தயரதன் இரண்டாம் தாரமாக சுமித்ரா தேவியையும்,
பிறகு மூன்றாம் தாரமாக கைகேயி தேவியையும் மணம் முடித்து இல்லம் திரும்பும்பொழுது கௌசல்யை
அவனுக்கு கற்பூர ஆலத்தி காட்டினாள். இது ஒரு இளைய சகோதரி ,அத்தம்பதியரின் நல்வாழ்வு, ஆயுள், ஒற்றுமை
வேண்டி செய்யும் மங்கல சம்ஸ்காரம் ஆகும். இதுகண்டே தயரதர் அவளை “பகிநீவச்ச” என்று பாராட்டினார்.

இதுவே கைகேயியானவள், தனக்குப் பிறகு ,மேலும் நான்காவது தாரமாக ஒருத்தியை, தயரதன் கொண்டு வந்திருந்தால்
அங்கு பூரிக்கட்டை, தட்டு, பாத்திரம் பறந்திருக்கும். எனவே கௌசல்யை தன் புத்திக்கு அனுசரித்து நடக்காமல்,
தன் கணவனுடைய புத்திக்கு அனுசரித்து நடந்தாள். சம்பராசுர யுத்தத்தில் தயரதனை காப்பாற்றிய கைகேயி ,
அவன் கொடுத்த இரண்டு வரங்களையும் ஸ்வீகரித்தாள். இதுவே கௌசல்யைக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருந்தால்,
அவ்விரு வரங்களையும் நிராகரித்திருப்பாள். ஏனெனில் ஒரு மனைவிக்கு தன் கணவனின் “புத்திக்கு அனுசரித்து நடத்தல்”
என்பதற்கு மேம்பட்ட வரம்/சிறப்பு என்று ஒன்று கிடயாது. வரம் என்றால் கணவன் என்றும் ஒரு பொருளுண்டு.
“நான் பெண்ணல்ல! “நான்” –இந்த பெண் உடம்பு- என்னும் கூட்டில் வாழும் ஒரு ஆத்மா ஆவேன்!
இப்பிறப்பில் என் கணவனுக்கு அனுசரித்து நடத்தலே எனது வரம் (சிறந்த தர்மம்)!
சுகம்-துக்கம் ,குளிர்-வெயில்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி என இவையெல்லாம் மனோ வ்யாபாரங்களேயன்றி
ஆத்ம குணங்கள் அல்ல” என்றும் தெரிந்து வைத்திருந்தாள்.

“கடமையை செய்! பலனில் விருப்பம் கொள்பவனாய் இராதே!” – என்னும் கீதை வசனம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.
இங்கு கௌசல்யையுடைய இயல்பாக ரிஷி காட்டியது பாரதந்த்ர்யம்.
கைகேயியுடைய இயல்பாக காட்டியது ஸ்வாதந்த்ர்யம். இம்மஹா குணத்திற்கு வசப்பட்டே அன்றோ,
எம்பெருமானும் அவளுடைய திருவயிற்றில் 12 திங்கள் கர்ப்பவாசம் செய்தது.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” -பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய்
(அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம்.
அதைத் தான்

“மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்”-என்றும்

“ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்” என்றும்–உருகுகின்றார் சடகோபர்.

மேலும் பாரதந்த்ர்யத்திற்கு, ஒரு தலையாய உதாரணம் காண்போம்.

2. ஶத்ருக்னரும் பரதரும்

“கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக: |
ஶத்ருக்நோ நித்யஶத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:” -அயோத்யா காண்டம்-1-1

பொருள்: தன் தாய்மாமன் யுதாஜித்தின் கேகயநாட்டிற்கு செல்லும் பரதனால், பாபமில்லாதவனும்,
நித்ய சத்ருக்களாம் ஐம்புலன்களை வென்ற ஶத்ருக்நன், மகிழ்ச்சி பொங்க, அழைத்துச் செல்லப்பட்டான் என்கிறார்
கவிக் குயில் வால்மீகி. 23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால்,
இது வைக்கப்பட்ட தட்டானது தாழும்.
ஒரு உடைவாளோ, வில்லோ எடுத்துச் செல்லப்பட்டது போலே ஶத்ருக்நன் எடுத்துச் செல்லப்பட்டான்”—என்பது செயப்பாட்டு வினை.
அதற்கும் மேலாக, “ப்ரீதி புரஸ்க்ருத:”-அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் ஆதிகவி.
(அதாவது கடகராசியில் நாலாம் பாதத்தில் குரு உச்சம் பெற்று மகிழ்வது போன்றதாம் இதுவும்.)
இங்கு செய்வினை ஏன் வரவில்லை ? செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன பெரிய வாசியென்று கேட்கலாம் !
செய்வினையில் பரதன் எழுவாய்(கர்தா காரகம்), ஶத்ருக்நன் பயனிலை (கர்ம காரகம்) ஆயிருப்பர்.
செயப்பாட்டு வினையால் ஶத்ருக்நன் எழுவாய், பரதன் கரணகாரகம் ஆகின்றனர்.
இங்கு ஶத்ருக்நனுக்கு முதன்மை இடத்தை கொடுக்கின்றார் மஹரிஷி.

ஏனெனில், ராமாயண காவியத்தில் ராமர் –“பெரியோர் சொல் கேட்டல்” என்னும் சாமான்ய தர்மத்தை(ORDINARY) அனுஷ்டித்துக் காட்டினார்.
லக்ஷ்மணன் “தன் புத்திக்கு அனுசரித்து, ராமனை விட்டுப் பிரியாது அணுக்கத் தொண்டாற்றினார் / பகவத் கைங்கர்யம்”.
இது விஶேஷ(GOOD) தர்மம் ஆகும். இதனை ஶேஷத்வம் என்பர். இதில் சிறிது ஸ்வாதந்த்ர்யம் கலந்திருக்கும்.
ஆனால் லக்ஷ்மணன் அயோத்தியில், பெற்றொருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பது தான் ராமரின் திருவுள்ளம் ஆகும்.
மேலே, பரதன் 14 ஆண்டுகள் ராமரை பிரிந்தும் அவருடைய திருப்பாதுகைகள் வைத்து ராஜ்யபரிபாலனத்தை செய்தார்.
இதனை பாரதந்த்ர்யம் என்பர். ராமருடைய திருவுள்ளம் உகக்க, ராமருடைய புத்திக்கு அனுசரித்து தொண்டாற்றினார்.
இந்த தர்மம் விஶேஷதரம்(BETTER) ஆகும். ஆனால் ஶத்ருக்நன் பரதனின்(ராமபக்தனின்) திருவுள்ளம் உகக்க தொண்டாற்றினார்.
இந்த தர்மம் விஶேஷதமம்(BEST) ஆகும். பகவத் பக்தியை விட பாகவத பக்தியே சிறந்தது என்று காட்டவே
மேற்படி ஸ்லோகத்தில் செயப்பாட்டு வினை எடுத்தாளப்பட்டது.
நீத:-அழைத்துச் செல்லப்பட்டவன் ,ப்ரீதிபுரஸ்க்ருத: -கௌரவிக்கப்பட்டவன்/”
தனக்கு எது இயல்போ அவ்வாறே இருக்குமாறு விடப்பட்டவன்” என்பன வினையாலணையும் பெயர்கள்.
இரண்டும் செயப்பாட்டு வினையில் வந்து பாரதந்த்ர்யம் காட்டுகின்றன.
p(பரதனுக்கு அடிமைப்பட்டு கிடப்பதே அவனது இயல்பு/ஆநந்தம் ஆகும்.)

3.ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரமும்

ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய ஶ்ரீபாஷ்ய நூலில் கடவுள் வாழ்த்து/ ஆசார்யர்கள் வாழ்த்துப் பகுதியில்

“பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மசூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸங்க்ஷிபுஹு:|
தந்மதாநுஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே ||” – ஶ்ரீபாஷ்யம்-3

பொருள்: போதாயந பகவானால் செய்யப்பட்டுள்ளதும், மிக விரிவாகவுமுள்ள ஸ்ரீப்ரஹ்மஸுத்ர வ்ருத்தியை
நம் பூர்வாசார்யர்கள் மிகச் சுருக்கமாக எழுதினார்கள்.
அவர்களுடைய திருவுள்ளத்தை அனுஸரித்தே ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன.
என்று எழுதுகின்றார். இங்கு யாப்பு/சந்தஸ் கருதி “என்னால்(மயா)” என்னும் சொல் விடப்பட்டது.
எனவே அதையும் (அத்யாஸம்) சேர்த்துக் கொண்டு “என்னால் ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன”
என்று பொருள் கொள்ள வேண்டும். இதுவும் செயப்பாட்டு வினை ஆகும். இங்கு ராமானுஜரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.
பாஷ்யத்தினை தன் புத்திக்கு ஏற்றவாறு எழுதாமல், பூர்வாசார்யர்கள் (குஹதேவர், டங்கர், த்ரமிடர், நாதமுனிகள், ஆளவந்தார் முதலியோர்)
திருவுள்ளத்திற்கேற்ப எழுதுகின்றார். இந்தப் பண்பு

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாது – தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்.–என்ற உபதேச ரத்தினமாலை-71 ஆம் வெண்பாவுக்கேற்ப அமைகின்றது.

4. ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ எம்பெருமானும்

“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”
என்று தன்னை ஒரு கருவியாக்கி ,தனது ப்ரபந்தங்களை ஸ்ரீ எம்பெருமான் தானே எழுதிக்கொண்டான் என
ஸ்ரீ திருவாய்மொழியில் ஸ்ரீ நம்மாழ்வாரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.

5. ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பிகளும்

ஒருமுறை ஶ்ரீரங்கத்திற்கு பகைவர்களால் கேடு விளையுமென்று, எல்லோரும் அஞ்சியிருந்த சமயம்
ஸ்ரீ பெரியநம்பிகள் ஸ்ரீ ராமாநுஜரிடம்,-“நான் இத்திருத்தல நன்மை வேண்டி, வேத சம்ஹிதைகள்,ப்ரபந்தங்கள் ஓதிக்கொண்டே,
இத்திருவரங்கத்தை வலம் வரப் போகின்றேன். ஆனால் என்னுடன் மற்றொருவர், எனக்கு பின்னால் வர வேண்டும்.
அப்படி என்னுடன் வலம் வருபவர் –“ஒருவர் பின்னால் நான் செல்கிறேன்”- என்ற எண்ணம் கொள்ளாதவராக
இருத்தல் வேண்டும் என்றார். “அப்படி ஒருவர் கிடைப்பது அரிது”- என்றார் ஸ்ரீ ராமாநுஜர்.
”ஏன் !நம் ஸ்ரீ ஆழ்வானை அனுப்பலாகாதோ?“-என்றார் ஸ்ரீ நம்பிகள். சரியென ஸ்ரீ கூரத்தாழ்வாரை அனுப்பினார் ஸ்ரீ ராமானுஜர்.
ஸ்ரீ நம்பிகள் முன்னே செல்ல, பாரதந்த்ர்யத்தில் மூழ்கி முக்குளித்த ஸ்ரீ ஆழ்வானும் “தன் சித்தம், புத்தி, அபிமாநம் என ”
அனைத்திலும் ஸ்ரீ பெரியநம்பிகளே தன்னுடைய ஆத்மா என்ற நிஷ்டையுடன், அவர் பின்னே செல்ல ,திருவலமும் இனிதே முடிந்தது.
இந்த நிகழ்ச்சி திருவாய்மொழி -ஈடு முப்பத்தாறாயிரப்படி -7-10-5 ஆம் பாசுர ஐதிஹ்யத்தில் காணலாம்.

6. ஸ்ரீ மதுரகவிகளும் ஸ்ரீ நம்மாழ்வாரும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. – ஸ்ரீ கண்ணிநுண்சிறுத்தாம்பு- 2

ஸ்ரீ நம்மாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளும் பொழுது ,அவர் சீடரான ஸ்ரீ மதுரகவிகள், பிரிவாற்றாமையால் தானும்
உடனே வைகுந்தம் செல்ல விழையாமல், தன் ஆசார்யன் திருவுள்ளத்திற்கு உகப்பாக
“அவர் அருளிய திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களை
உலகில் ப்ரசாரம் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார்.
இவர் “ஆசார்யர் சடகோபருக்கு மேலாக தேவு மற்று அறியேன்” என்று வாழ்ந்தவர்.

———–

இனி விஷயத்திற்கு (பிராட்டி நடுவில் பிரிந்தது) வருவோம்.
உத்தரகாண்டத்தில் 42 ஆம் ஸர்கத்தில் ஸீதை கர்ப்பம் தரிக்கின்றாள்.
அப்படியான நாளில் ஶ்ரீராமர் அவளிடம் “அழகான முகமுடையவளே ! வைதேஹீ! எனக்கு புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டிற்று.
நீ ஆசையாக ஏதாவது எண்ணியிருந்தால்,அவையனைத்தையும் என்னிடம் கூறு” –என்றார்.
அதற்கு ஸ்ரீ ஸீதை – ராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும் ,பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை மட்டும்
உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகின்றேன்.
கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளுமான அவர்களின் பர்ணசாலைகளை நான் விரும்புகின்றேன்.
மேற்கூறிய ஒழுக்கமுள்ள முனிவர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகின்றேன்.
இப்படியாக எனது ஆசைகள் உள்ளன” -என்றாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக ,
உலகினர் ஸீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளை ஸ்ரீ ராமர் காட்டுக்கு அனுப்பினார்.
இந்தப் பிரிவிற்கு பலன் என்ன கிட்டியது என்றால் –ஸ்ரீ ராமர் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும் ,
கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல் -அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி ஸ்ரீ ஸீதை இருந்தாள்.
இப்படியாகத் தன் பத்தினித்தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே ஸ்ரீ ராமனைப் பிரிந்த பயனாகும்.
ஸ்ரீ மஹரிஷி இதனை மேலும் விளக்குகின்றார்.

உத்தரகாண்டம் 48 ஆம் ஸர்கம் –ஸ்ரீ லக்ஷ்மணன் அவளை கங்கை கரையில் ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்திற்கு அருகில் இறக்கி விட்டான்.
ஸ்ரீ ராமர் அவளை கானகத்தில் விட்டு வர சொன்ன காரணத்தையும் கூறினான்.

ந கலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே |
த்யஜேயம் ராகவம் வம்ஶே பர்துர் மா பரிஹாஸ்யதி || -8

பொருள்: சுமித்திரையின் மகனே ! ஸ்ரீ ராமன் மூலமாக உண்டான இந்த கர்ப்பம், இக்ஷ்வாகு குலத்திற்கு இல்லாமல்
போய்விடக் கூடாது என்ற காரணத்தால் அல்லவோ நான் இன்னமும் கங்கையில் விழுந்து உயிர் துறக்காமல் உள்ளேன் என்றாள்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் –“மாயும் வகையறியேன் வல்வினையேன்” என்கிறார்.
இங்கு பிரிவாற்றாமை காரணமாக ,தன் புத்திக்கு அனுசரித்து தற்கொலை செய்துகொள்ளாமல்,
ஸ்ரீ ராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்ப, அவன் குலம் தழைக்கவும், கர்ப்பம் வாழவும், தன் உயிரை பிடித்திருந்தாள்.

பதிர் ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து பதிர்கதி:|
ப்ராணைர் அபி ப்ரியம் தஸ்மாத் பர்து கார்யம் விஶேஷத: || – 17

பொருள்: எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், உறவினனாகவும்,மோக்ஷமாகவும் உள்ளானோ ,
அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது இருந்தால்
அதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.- என்றாள்.
இப்படியாக நடுவிலே பிரிந்து பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள்.
தன் மாமியார் கௌசல்யா தேவியின் வழியிலே அச்சு பிசகாமல் நின்றாள்.
ஸ்ரீ மஹரிஷியும் தன்னுடைய மஹாகாவியத்திற்கு “ஸீதாயா: சரிதம் மஹத்” என்று பத்திரம் /பட்டா எழுதி கொடுத்துள்ளார்.
வழிபாட்டில் மக்களும், ஸ்ரீ பெருமாளை விட ஸ்ரீ பிராட்டிக்கே முதன்மை இடம் கொடுக்கின்றனர்.

ஸ்ரீ தைத்தீரிய உபநிஷத்தில் “தபஸா ப்ரம்ஹ விஜிக்ஞாஸஸ்வ, தபோ ப்ரம்ஹ இதி”
(தவத்தினால் பரமனை அறியவேண்டும், தவமே பரமனாவான்” என்று காண்கிறோம்.
மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொன்னபடி, தப: என்பது ஆண்பால் சொல். இது ஸ்ரீ திருமாலைக் குறிக்கும்.
அதன் பொருளான சிந்தா(சிந்திக்கும் செயல்) என்பது பெண்பால் சொல். இது ஸ்ரீ திருமகளைக் குறிக்கும்.
எனவே ஸ்ரீ பிராட்டியும் தவசீலர்களின் இருப்பிடத்தில் வாழ விரும்பினாள்.
ஶ்ரீ: என்பது “ஶ்ரிங் ஸேவாயாம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்படும். ஶ்ரீ: – ஶ்ரயதே இதி ஶ்ரீ: என்பது வ்யுத்பத்தி.
இதற்கு நாராயணனை இருப்பிடமாக உடையவள்/ வணங்குபவள் / தொண்டு புரிபவள் என்பது பொருள்
(பாரதந்த்ர்ய, அந்ந்யார்ஹங்களுக்கு விளக்கம்).
ஶ்ரீ: ஶ்ரீயதே இதி ஶ்ரீ: என்று கொண்டால் பிற ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடம், வணங்கத்தக்கவள் ,
தொண்டினை ஏற்பவள் என்றும் பொருள்(க்ருபைக்கு விளக்கம்).
இதையே மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று “சிறையிருந்தவள் ஏற்றமாக” காவியத்தை தொடங்குகின்றார்.

ஸ்ரீ பிராட்டி, தான் திருவயிறு வாய்த்திருந்த தகவலை ,ஒருநாள் பூங்காவில் ஸ்ரீ பெருமாளோடு இருந்த சமயத்தில் தெரிவிக்கின்றாள்.
“என்ன வரம் வேண்டும்” என்று கேட்கிறார் ஸ்ரீ பெருமாள். நாட்டில் தன் மீது அபவாதம் கிளம்பியது என்று முன்னமே அறிந்தவள்,
ஸ்ரீ பெருமாளுக்கு எவ்விதத்திலும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே தபோவனம் செல்ல விருப்பம் தெரிவிகின்றாள்.
இதை அறியாத ஸ்ரீ பெருமாளும், மறுநாள் காலையில் ஸ்ரீ லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கின்றார்.
அதன் பிறகு நடக்கும் ஆலோசனையில் தான் பத்ரன் என்னும் ஒற்றன் மூலம் நாட்டில் நிலவும் அபவாதம் தெரிய வருகின்றது.
அவளை ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தருகே விட்டு வரும்படி ஸ்ரீ இளையாழ்வாரை பணிக்கின்றார் பெருமாள்.
பிறகு தொண்ணூற்று ஐந்தாம் ஸர்கத்தில் ,ஸ்ரீ லவகுசர்கள் மூலம் ஸ்ரீ ஸீதா விருத்தாந்தம் அறிகின்றார்.
அவளை திரும்ப அழைக்கின்றார்.
48 ஆம் ஸர்கம் முதல் 97 ஆம் ஸர்கம் வரையில் நடந்த பிரிவில் பாரதந்த்ர்யம் வெளியாகின்றது.
“சிறையிருந்தவள்” என்று க்ருபையும்,
“ஏற்றம்” என்று பாரதந்த்ர்யமும் மற்றும் அநந்யார்ஹத்வமும் பொருள் தருகின்றன.

——————-

கட்டுரையின் மங்கல வாழ்த்து:

அபிரதிபந்தக பாரதந்தர்யம் என்னும் தடையற்ற, நிபந்தனைகளற்ற பக்திநிலைக்கு எடுத்துக்காட்டாக
ஸ்ரீ குலசேகராழ்வார் மேலும் சில பாசுரங்களை காட்டுகின்றார். அவை பின் வருமாறு:

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
பால்நோக்காய் ஆகிலும் உன்பற்றல்லால் பற்றிலேன்
தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே–பெருமாள் திருமொழி -5-3

பொருள்: மீன்கள் வாழ்வதற்கேற்ற நீர்வளமிக்க, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருவிற்றுவக்கோடு என்னும்
திருத்தலத்து எம்பெருமானே! அடியேனாகிய என்பால் நீ கருணை காட்டாவிடினும்,
உன்னையன்றி எனக்கு, வேறு ஒரு புகலில்லை. மக்களை காப்பதற்காக! என்று மாலையணிந்த மன்னவன்,
தான் செய்யவேண்டிய காவல் பணியிலிருந்து தவறி, தன்குடிகளைக் காக்காமல், தானே முனைந்து எப்படிப்பட்ட
துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே பார்த்துவாழும் மக்களைப்போல,
உன் திருவடிகளையே எப்பொழுதும் எண்ணியுள்ளேன்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே
ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-பெருமாள் திருமொழி -5-4

பொருள்: [பாலக்காடு ஜில்லாவில், பட்டாம்பி நகருக்கு அருகில்,] திருவிற்றுவக்கோடு என்னும் திவ்யதேசத்தில்
எழுந்தருளியுள்ள பெருமாளே! வைத்தியன் சிகிச்சைக்காக கத்தியாலே அறுப்பதுவும், பழுக்கக் காய்ச்சிய ஊசியினால்
சூடுபோதுவதும் செய்தாலும், அவனிடத்தில் நீங்காத அன்புடைய நோயாளியைப்போல, நீ உன் மாயையினால் நீங்காத
துயரத்தை எனக்குத் தந்தாலும், நான் உன்னுடைய அடிமையாக இருந்து, உனது அருள்நோக்கிக் காத்திருப்பேன்.

[குறிப்பு: ஸ்ரீ பெருமாள் திருமொழியினை அருளியவர் ஸ்ரீ குலசேகர ஆழ்வாராவார்.
வைணவ உரை நூல்களில், கண்ணனை அவன், இவன் என்று ஏக வசனத்தில் அழைப்பார்.
ஆனால் சக்கரவர்த்தித் திருமகனை பெருமாள் என்று மரியாதை கொடுத்து விளிப்பார்.
பெருமாள் என்றாலே அது சக்கரவர்த்தி திருமகன்தான். குலசேகர ஆழ்வாரும் மாசிமாதம், ஸ்ரீராமபிரானுடைய
புனர்பூசம் திருநக்ஷத்திரத்தில் அவதரித்தார். தினமும் தன் அரண்மனையில் இராமாயண பாராயணம் செய்விப்பார்.
அவருக்கு திருவாராதன மூர்த்தியும் ஸ்ரீராமபிரானாவார்.
இவ்வாழ்வார்
1.)“திருத்தாலாட்டு” (மன்னுபுகழ் கௌசலை-எட்டாம் திருமொழி),
2.)“தயரதர் புலம்பல்” (வன்தாளிணை வணங்கி-ஒன்பதாம் திருமொழி),
3.)“சம்பூர்ண ராமாயணம்” (அங்கணெடு மதிள்-பத்தாம் திருமொழி)
என்று ஸ்ரீ பெருமாளைப் பாடினார்; அந்த ஸ்ரீ பெருமாள் தானே தன் திருக் கரத்தால் ஆராதித்து வந்த
ஶ்ரீரங்கநாதராகிய ஸ்ரீ பெரியபெருமாளை உகந்து
4.)“மங்களாஶாசனம்” (இருளிரியச் சுடர்மணிகள்-முதல் திருமொழி),
5.)“அடியார் குழாம்” (தேட்டரும்திறல் தேனினை- இரண்டாம் திருமொழி),
6.)“அரங்கனின் மீதான காதல்” (மெய்யில் வாழ்க்கையை-மூன்றாம் திருமொழி)
என்று பாடினார்.
எனவே அவரது நூலில் மிகுதியான பாகம் ஸ்ரீ பெருமாளைப் பற்றியே இருந்தலால்,
அதற்கு “ஸ்ரீ பெருமாள் திருமொழி” என்றே திருநாமம் சூட்டினர் பெரியோர்.

இப்பாசுரங்களுக்கும் மேற்குறித்த முதல் குறட்பாவிற்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டினாள் ஸ்ரீ பிராட்டி.

ஸ்ரீ ராமாயணத்தின் தோற்றுவாய் கூறும் சிறையிருந்தவள் ஏற்றம்:

ஒருநாள் தமஸா நதிக்கரையில், சிஷ்யர் பரத்வாஜருடன் மகரிஷி ஸ்ரீ வால்மீகி சென்றார்.
அப்பொழுது ஒருவேடன், பனைமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் ஜோடியில் ஆண்பறவையை அம்பெய்திக் கொன்றான்.
ஆண்பறவையின் உடலின்மிது விழுந்து பெண்பறவையானது பிரிவால் கதறித் துடித்தது.
பறவைகளின்மீது இரக்கமும், அவற்றின்மீது பகைகொண்ட வேடன்மீது கோபமும்கொண்டு, பொறுக்காமல் ஸ்ரீ மகரிஷி, வேடனை

மா நிஷாத பிரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீ ஸமா |
யத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||

-“ஏ வேடனே! காமத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் பறவைகளில் ஒன்றினை கொன்ற நீ,
பலகாலம் நிம்மதியின்றி அலைவாய்(உனக்கு அமங்கலம் உண்டாகுக)” என்று சபித்தார்.

அவர் வெகுண்டு சொன்ன அவ்வார்த்தைகள், மேற்கூறிய சுலோகமாக அனுஷ்டுப் சந்தஸில்,
வீணையில் இசையமைத்து பாடத்தக்கவகையில் அமைந்து, மஹரிஷி வாயில் சாபமாக, அவரையும் அறியாமல் வெளிப்பட்டது.
சினத்தின் வயப்பட்டு சாபம் கொடுத்து விட்டோமே என்ற கவலையும், அது எப்படி சாபம், சுலோகமாகப் பிறந்தது என்ற
பிரமிப்புமாக ஸ்ரீ மகரிஷி, பின்னர் ஆஸ்ரமம் திரும்பினார். நீண்டநேரம் சிந்தித்தும் அதற்கு விடைகிட்டவில்லை.
அப்பொழுது, சுயம்புவான பிதாமகர் பிரம்மா அங்கு தோன்றினார்.

“கோபதாபங்கள் ஆகிய உணர்ச்சிகளுக்கு வசப்பட்டோமே!” என்ற கவலைகொண்ட ரிஷியை சமாதானம் செய்து,
அந்த சுலோகத்தில் மா = இல்லை, நிஷாத = வேடன் என்னும் சொற்களை மா = திருமகள், நிஷாத = கேள்வன்;
அதாவது மாநிஷாத = திருமகளுக்குக் கேள்வன் என்னும் வேற்றுமைத் தொகை தத்புருஷ சமாசமாக மாற்றி
“ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனான திருமாலே! காமத்தால் வெறி கொண்ட அரக்கனான ராவணனை கொன்றாய்!
உனக்கு பல்லாண்டு மங்கலம் உண்டாகுக” என்னும்படியாக பொருளை மங்களசரணமாக மாற்றி உரைத்தார்.

அநுபந்த சதுஷ்டயம்:

எந்த ஒரு நூலையும் எழுதுமுன், அந்நூலானது தடையின்றி எழுதி முடிக்கப்பட வேண்டியும்,
அந்நூலானது உலகில் நன்கு பரவப்பட்டு புகழ் படைக்க வேண்டியும்,
1) இஷ்டதேவதையௌ நமஸ்கரித்து ஒரு சுலோகம் எழுதுவது வழக்கம்.
மேலும் அக்கலையினை கற்பவர்களுக்கு அந்நூலில் ஈடுபாடு(பிரவ்ருத்தி) உண்டாகும் வண்ணம்
2) விஷயம் அல்லது அந்நூலில் கூறப்படும் கருப்பொருள்,
3) அதிகாரி அல்லது அந்நூலைக் கற்க தகுதியுள்ளவர் யாவர்,
4) மற்றும் அந்நூலைக் கற்பதனால் கிடைக்கும் பலன் என்னும் இந்த நான்கினை அநுபந்த சதுஷ்டயமாக அந்த சுலோகத்தில் தெரிவிப்பர்.

மேலும், சரஸ்வதியை மஹரிஷியினுடைய வாக்கில் அமரவைத்து தான் பயிலும் சதகோடி ராமாயணம் என்னும்
நூறுகோடி சுலோகங்களுள்ள நூலிலிருந்து மேற்கண்ட சுலோகத்தின் மூலம் இவ்வாறு
அநுபந்த-சதுஷ்டய சுலோகம் பாட வைத்ததாக பிரம்மா மருள் நீக்கினார்.

அது சாபமல்ல! இலக்கண யாப்பு, தளை கொண்டு, அடிக்கு 16 அக்ஷரங்களாய், இரண்டடி கொண்ட
அனுஷ்டுப் சந்தஸில் அமைந்த அனுபந்தம் என்று தெரிவித்தார்.
மேலும் மகரிஷியை அந்த சுலோகத்தையே முன்னுதாரணமாக- இதிகாச்ச-சுருக்கமாக வைத்து, அந்த முறையிலேயே,
விஸ்தாரமாக, தன்னைப் படைத்த ஸ்ரீமந் நாராயணனுடைய, ராமாவதாரத்தை, ஒரு முழுக் காவியமாகப் பாடப் பணித்தார்.

ஆகவே இதுவே ஸ்ரீ ராமாயணத்தின் முதலடி என்பர்.

ஸ்ரீ ராமாயணம் (ராமன் சொன்ன வழியில்) = “சிறையிருந்தவள் ஏற்றம்” என்று
ஸ்ரீ சீதை நடந்து காட்டியது” என்றும் பெரியோர் பணிப்பர்.

இதில்,
1) “பிரம்மனானவர் – திருவுடன் கூடிய திருமாலைப் பல்லாண்டு பாடுவது” என்பது இஷ்ட தேவதா நமஸ்காரமாகும்.
2) “திருமாலானவர் இவ்வுலகை நலிக்கச்செய்யும் ராவணனை ஒழிக்க அவதாரம் செய்த வரலாறு” என்பது நூலின் விஷயமாகும்.
3) ஶ்ரீமந்நாராயணன் சேதன, அசேதனங்களுக்கு இருப்பிடமாதலால், அவனுக்கு பல்லாண்டு பாடியமை என்னும் வியாஜத்தினால்,
இந்நூலினைக் கற்கும் தகுதி, “நமக்கும் அவனுக்குமான அயனசம்பந்தம் கருதி,
அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பது” அதிகாரி சம்பந்தமாகும்.
4) இந்நூலினை கற்பதனால் –“அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும்
அனைத்து வித மங்கலங்களும் உண்டாகும்” என்பது பலனாகும்.

பாரதந்த்ர்யத்தின் வகைகள்:
முற்பட்ட பாகங்களில், பாரதந்தர்யம் என்றால் என்னவென்று பார்த்தோம்.
இனி அதன் வகைகளை இக்கட்டுரையில், தர்க்கத்தின் துணைகொண்டு காணலாம்.

ஸோபாதிகம் (அ ) ஒருகாரணம் பற்றியது:
கிஷ்கிந்தா காண்டத்தில் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் ஸ்ரீ அனுமனைச் சந்திக்கின்றனர். அவர்களை யாரென்று வினவிய
ஸ்ரீ அனுமனிடம், ஸ்ரீ லக்ஷ்மணர் தன்னை, “ஸ்ரீ ராமருடைய வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம், ஆர்ஜவம் போன்ற
எண்ணிறந்த குணங்களால் கவரப்பட்டு, அவருடைய அடிமையானவன். அவருடைய இளைய சகோதரனுமாவேன்.” என்று
தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் இங்கு உபாதி என்னும் சூக்ஷ்மத்தினை ஆதி கவி நமக்குக் காட்டுகின்றார்.
அதாவது ஸ்ரீ லக்ஷ்மணன் தான் ஸ்ரீ ராம பிரானுக்கு அடிமையாக இருப்பதற்கு காரணம் அவரிடமுள்ள எண்ணிறந்த
குணங்களே என்று சொல்கிறார். இது ஒரு காரணம் பற்றி வந்த தொண்டு மனப்பான்மை / அடிமைத்தனம்/ பக்தி நிலை ஆகும்.

நிரூபாதிகம் (அ ) காரணம் பற்றாதது (அ ) இயற்கையானது:
இதுவே அயோத்யா காண்டத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தியாரும் துஞ்சி, ஸ்ரீ ராமபிரானும் வனம் சென்ற பின்னர்,
ஸ்ரீ வசிஷ்டர் தன்னை முடிசூடுமாறு நிர்பந்திக்கும் பொழுது ஸ்ரீ பரதன்,
“இந்த ராஜ்யமும் நானும் ஸ்ரீ ராம பிரானுக்கு உடைமைகள்,” என்று தான் ஸ்ரீ ராமபிரானுக்கு எவ்வித காரணமுமின்றி
[பாரதந்த்ர்யமாக]பணியாளனாக இருப்பதைத் தெரிவிக்கிறார். ஶ்ரீராமபிரானுக்கு அடிமைப்பொருளான நான்,
அவருடைய இன்னொரு அடிமைப்பொருளான ராஜ்யத்தை எங்ஙனம் ஆளுவேன் என்று ஸ்ரீ வசிஷ்டரைக் கேட்கிறார்.
அதாவது இந்த ராஜ்யம் எப்படி ஒரு உயிரற்றதான, மற்றும் ஶ்ரீராமருக்கே உரியதான பொருளோ,
அவ்வாறே நானும் உயிருள்ளவனாயினும் ஶ்ரீராமருக்கே அற்றுத் தீர்ந்த பொருள் என்கிறார்.

அப்பொழுது ஸ்ரீ வசிஷ்டர் ஒரு உதாரணம் காட்டுகின்றார். அணிகலன் ஒரு சுதந்திரமற்ற /பாரதந்த்ர்ய வஸ்துவாகும்.
அதை காக்கும் கஜானாபெட்டியும் ஒரு பாரதந்த்ர்ய வஸ்துவாகும். ஆனால் அந்தப் பாரதந்த்ர்ய பொருளான- கஜானாபெட்டியானது,
மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அணிகலனை உள்ளே வைத்துக்கொண்டு காப்பதுபோல,
ஸ்ரீராமருக்கு பாரதந்த்ர்ய பொருளான நீயும், மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அவனது ராஜ்ஜியத்தை காப்பாற்று என்கிறார்.

அதற்கு பரதன், “நீர் சொல்வது மிகவும் சரிதான்! ஆனால் அவ்விரண்டு பாரதந்த்ர்ய வஸ்துக்களுக்கு(பெட்டி+ஆணிகலன்)
எஜமானனானவன், பத்திரமாக அணிகலனை பெட்டியில் வைத்துச் சென்றால் தானே, அணிகலனை பெட்டியானது காக்கும்?
எனக்கு எஜமானரான ஸ்ரீ ராமர் அவருடைய, ராஜ்யத்தினை காக்க, அங்ஙனம் எனக்குக் கட்டளை யிடவில்லை.
எனவே நானும் காட்டிற்கு சென்று ஸ்ரீ ராமரை சந்தித்து; அவர் எனக்கு நேரே கட்டளையிட்ட பின்னரே,
ஆட்சியா அல்லது வனவாசமா என்பதுபற்றி மேலே சிந்திப்பேன்” என்றார்.

அவ்வாறே ஸ்ரீ சித்திரகூட வனத்தில் ஸ்ரீ ராமபிரானைச் சந்தித்து; அவரும் பலவாறு நிர்பந்தித்த பின்னர் தான்,
அவருடைய பாதுகைகளைப் பெற்றுத் திரும்பி, ஸ்ரீ அயோத்திக்கு வெளியே ஸ்ரீ நந்தி கிராமத்திலிருந்து அரசாட்சி புரிந்தார்.

அவர் நிரூபாதிகமாக,(அ) இயற்கையாக, எவ்வித காரணமுமின்றி பாரதந்த்ர்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஸ்ரீ லக்ஷ்மணனோ தான் ஸ்ரீ ராமபிரானுக்கு பாரதந்த்ர்யமாக/பணியாளனாக இருப்பதற்கு
ஸ்ரீ ராமனின் குணங்களே காரணம் என்று காட்டுகிறார். இதற்கு உபாதி என்று பெயர்.
உபாதை என்றால் வியாதி என்றும் சொல்லுவார்கள். அதாவது
புகை உருவாக ஈரவிறகினை எரிப்பது காரணம் ஆகும். இங்கு விறகு பக்ஷம்; நெருப்பு ஹேது; புகை சாத்தியம்;
ஆனால் ஈரம் உபாதி ஆகிறது.
அவ்வாறே ஸ்ரீ லக்ஷ்மணனிடம் ஸ்ரீ ராம பக்தி ஏற்பட ஸ்ரீ ராமனின் குணங்களே உபாதியாகின்றன.
இதைவிட ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யம் மேலானது, நிரூபாதிகமானது (உபாதி அற்றது/இயற்கையானது) என்று காட்டுகின்றார் ஸ்ரீ ஆதிகவி.

அபிரதிபந்தகம் (அ ) தடையற்றது :
இனி ஸ்ரீ பிராட்டியினுடைய விஷயத்திற்கு வருவோம். உத்தர காண்டத்தில், தான் கர்ப்பம் தரித்ததை ஸ்ரீ பெருமாளிடம் சொல்கின்றாள்.
மேலும் கங்கைக்கரையில் ரிஷிகளின் ஆஶ்ரமத்தில் தங்க விருப்பமும் தெரிவிக்கின்றாள்.
மறுநாள் ஸ்ரீ லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக ஸ்ரீ ராமபிரானும் அனுமதி தந்து, மந்திராலோசனை காரணமாக,
அவளிடமிருந்து விடைபெறுகிறார். அன்று இரவு பத்ரன் மூலமாக அபவாதம் தெரிய வந்து, ஸ்ரீ சீதையை
ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தருகில் விட்டுவருமாறு ஸ்ரீ லக்ஷ்மணனைப் பணிக்கின்றார்.
கங்கைக்கரையில் இறக்கிவிடும் ஸ்ரீ இளையாழ்வாரும் அவளிடம், நடந்ததை விளக்குகின்றான்.

அபவாதம் பொறுக்காத ஸ்ரீ பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள்.
ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள்.
தானும் ஸ்ரீ பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு,
பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன்!
ம்ம்! ஸ்ரீ லக்ஷ்மணரே! ரதம் அயோத்திக்குத் திரும்பட்டும்!!” என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்யவில்லை.
ஸ்ரீ ராமபிரானின் திருவுள்ளத்தினைத் துல்லியமாக அறிந்து அவ்வண்ணமே வாழ்ந்து காட்டினார்.
இதற்கு தர்க்கத்தில் அபிரதிபந்தகம் என்று பெயர்.

ஸோபாதிகத்துக்கு உதாரணம்:
நீரிலே மின்சாரம் கடத்த முடியாது. ஆனால் அந்நீரில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால் மின்சாரத்தை எளிதாகக் கடத்தலாம்.
நீர் என்பது ஹேது அல்லது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம் அல்லது சாத்தியம்; எலுமிச்சைச் சாறு என்பது உபாதி.
இதனை வினையூக்கி அல்லது செயலூக்கி என்னலாம். அதாவது இயற்கையாகவே மின்கடத்தும் திறன் இல்லாத நீரினை
அவ்வாறு ஆக்குவது உபாதி. எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு தான் வியாப்தி ஆகும்.
இங்கே வியாப்திக்கு உபாதி உதவுகின்றது. இதனை ஸ+உபாதிக+வியாப்தி == ஸோபாதிக வியாப்தி என்பர்.
இதுவே ஸ்ரீ லக்ஷ்மணரின் பக்தி நிலையாகும்.

நிரூபாதிகத்திற்கு உதாரணம்:
உலோக கம்பிகளுக்கு இடையே மின்சாரத்தை கடத்தலாம்.
இங்கும் உலோகக் கம்பி என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்; உலோகத்தில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு வியாப்தியாகும்.
இதனை நிர்+உபாதிக+வியாப்தி == நிரூபாதிக வியாப்தி என்பர் (உபாதி இல்லாதது). இது ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யமாகும்.

தடைக்கு உதாரணம்:
ஆனால் அக்கம்பிகளுக்கு இடையில் அதற்குத் தடையாக ஒரு கட்டையோ, பிளாஸ்டிக் டேப்போ, வெற்றிடமோ இருந்தால்
மின்சாரம் பாயாது. இதற்கு பிரதிபந்தகம் என்பர்.
இங்கே உலோகக்கம்பி என்பது ஹேது; மின்சாரம் என்பது சாத்தியம்; பிளாஸ்டிக் டேப்(INSULATION TAPE) என்பது பிரதிபந்தகம்.
அதாவது இயற்கையாக மின்சாரம் பாயக்கூடிய உலோக கம்பிகளுக்கு இடையே அதற்கு தடையாக வருவது பிரதிபந்தகம் ஆகும்.
இங்கு ஶ்ரீராமபிரான் பிராட்டிக்குத் தன்னை ஒரு கொடுங்கோலனாக காட்டிக்கொண்டதை,
ஸீதையின் பாரதந்த்ர்யத்திற்கு பிரதிபந்தகமாக உதாரணம் கொள்ளலாம்.

அப்பிரதிபந்தகத்துக்கு உதாரணம்:
மின்காந்த சுற்றுக்களில் மின்சாரம் கடத்தலாம். அதற்கு தடையாகக் கட்டையோ, வெற்றிடமோ இருந்தாலும் கூட மின்சாரம் கடத்தலாம்.
ஏனெனில் மின்சாரமும் காந்தப்புலனும் பரஸ்பர சம்பந்தம் கொண்டவை. இதற்கு சமவாய சம்பந்தம் என்பர் தார்க்கிகர்கள்.
அவை மின்காந்த அயனிகளால் ஆனவை. அவற்றைப் பிரிக்கவே முடியாது. அவற்றுக்குத் தடையே கிடையாது.
இங்கே மின்காந்த சுற்று என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்;
மின்சாரமும் காந்தப்புலனும் சமவாய சம்பந்தம்கொண்டவை என்னும் அறிவே வியாப்தியாகும்.
இதுபோன்று ஸ்ரீராமரும் சீதையும் இணை பிரியாதவர்கள் ஆவர்.
“அகர முதல எழுத்தெல்லாம்,” என்னும் முன்னடியில் வரும் அகாரமானது ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது.
அகாரமானது “காக்கும் இயல்வினன் கண்ண பெருமானான,” ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது.
“ஆதிபகவன் முதற்றே உலகு,” என்னும் பின்னடியும் இந்தத் தம்பதியரையே சுட்டுகின்றது.

சிறந்தது எது:
ஸ்ரீ லக்ஷ்மணனின் பக்தி நிலை ஸோபாதிகம். ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யம் நிரூபாதிகம்.
ஆனால் பிராட்டியின் ஸ்ரீ பாரதந்த்ர்யம் தான் அபிரதிபந்தகம் என்பது மஹரிஷியின் தீர்ப்பு ஆகும்.

பின்குறிப்பு:
மேற்கண்ட அனுபந்த-சதுஷ்டயம் திருக்குறளிலும் மற்றும் கம்பராமாயணத்திலும் உண்டு. திருக்குறளில்,
1) ஆதிபகவன் என்பது இஷ்டதேவதா,
2) தர்மார்த்த உபதேசம் என்பது விஷயம்,
3) தமிழரனைவரும் அதிகாரிகள் மற்றும்
4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பது பலன்.

குறட்பாவில் பயின்ற “உலகு” என்னும் வியாப்யத்தினை வைத்துக் கம்பநாடரும்,
“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”–என்று தொடங்குகின்றார்.
தலைவர், முதல்வர் என்பன [பர்யாய சொற்கள்] ஒருபொருட் பன்மொழிகள்.
குறட்பாவில் வியாபகமான “ஆதிபகவனை” கம்பர் “தலைவர்” என்று கொண்டார்.

கம்பனிலும்,
1) ஸ்ரீ திருமால் இஷ்ட தேவதா,
2) ஸ்ரீ ராமாவதாரம் விஷயம்,
3) தமிழர்களனைவரும் அதிகாரிகள் மற்றும்
4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் பிரயோஜனங்களை சரணாகதி மூலம் அடைவது பலன்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

சகல பூர்வாச்சார்ய சித்தாந்த சாரம் – –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

June 21, 2018

1-சரீராத்மா பாவம் விசிஷ்டாத்வைத திறவு கோல் –
2-எந்த விதத்திலும் எம்பெருமானுடைய குணப்பெருமையிலே முழு நோக்கு –
தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் -தாதாமி புத்தி யோகம் தம் யே ந மாம் உபயாந்தி தே-10-10-
ப்ரீதி பூர்வகம் -என்பதை பஜதாம் என்பதுடன் சேர்த்து ஆதி சங்கரர் –
நம் பாஷ்யகாரரோ தாதாமி என்பதுடன் அன்வயித்து
ஆழ்வார் -வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-என்பதைத் திரு உள்ளத்தில் கொண்டு –
ப்ரீதி பூர்வகம் இத்யஸ்ய பஜநான் அந்வயே பிரயோஜனம் மந்தம் –
ததாமி இத்யநேந அந்வயே து –பரம உதாரத்வாதி பகவத் குண கண பிரகாசநேந மஹத் பிரயோஜனம் –
இத்யா அபிப்பிராயேண ப்ரீதி பூர்வகம் ததாமி அன்வயம் யுக்த -என்று அருளிச் செய்கிறார் –
அல்ப ஸந்துஷ்டன் -ஸூ ஆராதனன்-பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலின் –
தொழகே கருதுவதே துணிவது சூதே –

பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம -என்கிற உபநிஷத் வாக்யத்துக்கும்
தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம -என்று அன்வயித்து நம என்று வாயினால் சொல்வதையும் கனத்ததாக திரு உள்ளத்தில் கொள்கிறான் –

அஞ்சலி பரம் வஹதே -பாரமாக வஹிக்கிறான்
சேதனராக இருக்கும் வாசிக்கு ஏதேனும் செய்து -அது ஆகிஞ்சன்யமும் அநன்ய கதித்வமும் அடியாக விளையும்
அவனது கருணைக்கு விரோதி ஆகக் கூடாதே –

நெறி காட்டி நீக்குதியோ
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும்
அத்யாவசாயம் வேண்டுமே -பிறர்களுக்கு அரிய வித்தகன் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -தேவரீர் கிருபைக்குத் தண்ணீர் துரும்பாக ஏதேனும் பிரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ –
உபாய கோடியில் எள்ளளவும் அந்வயியாமல் ஸ்வரூபத்து அளவிலேயே நிற்க வேண்டுமே –

பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
இரு கையையும் விட்டேனோ திரௌபதியைப் போலே
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே-என்னும் படி -பரமாபதம் ஆபன்னோ மனசா அசிந்தயத் ஹரிம் –

நிர்ஹேதுக கிருபையே -என்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே –
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
வெறித்தே அருள் செய்வர்
அ வ்யாஜ உதார பாவாத் -1-10- ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்தார் இத்தைக் காட்டவே –
ஸ்ரீ பரமபத சோபானத்திலும் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி போலவே –
அஞ்ஞாத யாதிருச்சிக ஆனு ஷங்கிக பிரா சங்கிக சாமான்ய புத்தி மூல ஸூஹ்ருத விசேஷங்களை வ்யாஜமாகக் கொண்டு
விசேஷ கடாக்ஷம் பண்ணி -என்று அருளிச் செய்கிறார் –

சம்சார தந்த்ர வாஹித்வாத் ரஷ்ய அபேஷாம் பிரதீஷதே -என்று இருந்தாலும்
நாசவ் புருஷகாரேண ந சர்வ அன்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்சையா வஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசன-என்கிறான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் –

த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாமதி சரணாகதி –
இயம் கேவல லஷ்மீ ச உபாயத்வ ப்ரத்ய யாத்மிகா
ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தே கிம்பு நஸ் ஸஹ காரிணாம்–நியாஸ சித்தாஞ்சம் -தேசிகன் –
பிரபத்திக்கே உபாயத்வம் இல்லை என்னும் போது-அதன் சஹகாரிகள் ஆனவற்றுக்கு அது இல்லை என்னும் இடம்
தனிப்படச் சொல்ல வேண்டாம் என்பதே இந்த ஸ்லோகார்த்தம் –

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -விதிக்கும் உபாயத்வம் அநிவார்யம்-என்று பிறர் நினைக்க கூடுமே எண்ணில்
அதுக்கு சமாதானம் -நியாஸ திலகத்தில்-ஹேதுர் வைதே விமர்சே-என்கிற ஸ்லோகத்தில் –
ஒவ் ஒரு வித்யையிலும் எம்பெருமானுடைய ஒவ் ஒரு ரூபம் அறியக் கடவதாய் இருக்கும் கணக்கிலே
இந்த பிரபத்தி வித்யையில் -இதர அநபேஷ உபாயத்வமே இங்கு அறியத் தக்க ரூபம் -என்பது இந்த ஸ்லோகார்த்தம் –

இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –அவன் கிருஷீ பலனே -ஸ்வீகாரமும் –
ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணி அருளும் கிருஷீ பலம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
நிதாநம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண -ஸ்ரீ தேசிகன்
வரத தவ கலு பிரசாதாத்ருத சரணமிதி வசோபி மே நோதியாத் –ஸ்ரீ கூரத் தாழ்வான்-

ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந்
ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –ஒன்பதில் கால் ஸ்வ சப்த பிரயோகம் –
அசித் வியாவ்ருத்த வேஷமாகவும் -ஸ்வரூப அதிரேகி அல்லாதபடியாகவும் உள்ளதற்கு மேலே மிகையான பிறவிருத்திகள் கூடாதே –
ஷாம்யஸ்யஹோ தத் அபிசந்தி விராம மாத்ராத் –ஸ்ரீ கூரத் தாழ்வான்
சசால சா பஞ்ச முமோச வீர
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று-ஸ்ரீ பூதத்தாழ்வார் –

உபபத்தேச் ச –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-3-2-4- ஸ்ரீ பாஷ்யத்தில் –
ப்ராப்யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ்யைவோ பாயத்வோப பத்தே -என்றும்
நாயமாத்மா ப்ரவசநேந லப்ப்யா –தநூம் ஸ்வாம் —
இதி அநந்ய உபாயத்வ ஸ்ரவணாத்-என்றும்
அம்ருதஸ்யைஷ சேது -என்றும்
இதி அம்ருதஸ்ய ஸ்வஸ்ய ஸ்வயமேவ ப்ராபக இதி சேதுத்வ வியபதேச உபபத்தேச் ச -என்றும்

பலமத உபபத்தே -3-2-37- ஸ்ரீ பாஷ்யத்தில்
ச ஏவ ஹி சர்வஞ்ஞஸ் சர்வ சக்தி மஹா உதாரோ யாகதா நஹோமாதிபி உபாசனேந ச ஆராதித ஐஹிக ஆமுஷ்மிக
போகஜாதம் ஸ்வரூப அவாப்தி ரூபம் அபவர்க்கம் ச தாதுமீஷ்டே-
ந ஹ்ய சேதனம் கர்ம க்ஷண தவம்ஸி காலாந்தரபாவிபல சாதனம் பவிதுமர்ஹதி–என்ற ஸ்ரீ ஸூக்திகளைக் கைக் கொண்டே
ஸ்ரீ தேசிகனும் கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷையில்
நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித-உபாயதாம் ப்ரீத்யஜ்ய ந்யஸ்யேத் தேவேது தாம் அபீ -என்கிற ஸ்லோக வியாக்யானத்தில்
ஸ்வயம் ஸ்வாதுத்வாத் க்ஷணிகஸ்ய காலாந்தர பாவிபல சாதனத்வ அனுபபத்தி தர்ச நாச்ச நாஸ்ய ஸ்வ வ்யாபாரே மோக்ஷ
உபாயதா புத்திரபி ஸ்யாதிதி பாவ அந்ததஸ் தைஸ்தைர ஆராதிதோ பகவாநேவ ஹி ஸர்வத்ர உபாய –என்று அருளிச் செய்துள்ளார் –

மோக்ஷ உபாய பிரபத்தி -ஆறு வார்த்தைகளில் ஓன்று உண்டே –
ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் -தத் ப்ராப்தயே ச தத்பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யந் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேண அபி
சாதனம் அஸ்தீதிம் அந்வாந –பிரபத்தியை உபாயமாகக் கொண்டு பிரகிருதி மண்டலத்தை விட்டு -என்றும் உண்டே-
பிரபத்தி உபாயத்துக்கு ஆபாத ப்ரதீதியிலே உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹமாம் படி இருக்கையாகிற குற்றம் உண்டே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -ப்ரபத்திக்கு உபாயம் அவன் நினைவே –
புழு குறித்தது எழுத்து ஆமா போலே-குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந –
நல்லதாக முடியும் நம் செயலை உபாயம் என்று சாதிக்க நினைப்பது சமஞ்சம் அன்று
பிரபத்த்வயனான பரம புருஷனையே பிரபத்தி என்று வியபதேசம் –

3-சேதன லாபம் ஈஸ்வரனுக்கே –ஆஸ்ரித சம்ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே –
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் –
அபி ஷிஸ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணன் க்ருத க்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே –
கதாஹமைகாந்திக நித்ய கிங்கர ப்ரகர்ஷயிஷ்யாமி -தன்னுடைய அனுவ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷம் இ றே சேதனனுக்குப் பிராப்யம்
ப்ரகர்ஷயிஷ்யாமி –த்வத் தாஸ பூதஸ்ய மே த்வத் ப்ரகர்ஷ ஏவ பிரதானம் பிரயோஜனம் இதி பாவ
ஏவஞ்ச ஸ்வாதீந ஸ்வார்த்த கர்த்ருத்வ பிரம ரஹித கைங்கர்ய பிரார்த்தனா க்ருதா பவதி – –

யதி பரம புருஷாயத்தம் முக்த ஐஸ்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வதந்த்ரத் வேந தத் சங்கல்பாத் முக்தஸ்ய புனராவ்ருத்தி சம்பவா சங்கேத் யத்ராஹ-
பரமபுருஷ ஞானி நம் லப்த்தவா–ச மஹாத்மா ஸூ துர்லபா –
ஞானி து ஆத்மவை மே மதம் -என்று இருப்பான் – ஸ்வ கத /பரகத ஸ்வீ காரம் -மர்க்கடகிசோர நியாயம் -மார்ஜாரகிசோர நியாயம் –
தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்யயோகம் காங்க்ஷ மானஸ்ய யோகிந அஹம் ஸூலப -அஹமேவ ப்ராப்ய –
ந மத்பாவ ஐஸ்வர்யாதிக-ஸூ ப்ராபச்ச-தத் வியோகம் அஸஹமான-அஹமேவ தவம் வ்ருணே-
மத் ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாக தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த —
யமேவைஷ வ்ருணுதே தேன லப்த
இதி ஹி ஸ்ருயதே வஹ்யதே ச
தேஷாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேனமாம் உபயாந்தி தே
தேஷாம் ஏவ அனுகம்பார்த்த மகா அஞ்ஞானஜம் தமஸ் நாசயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா இதி –

சூரணை -142-இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –
சூரணை-143-அவன் இவனை பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே அருளியவற்றையே மா முனிகள் இங்கே காட்டி அருளுகிறார் –

தத் வியோகம் அஸஹமான-அஹமேவ தவம் வ்ருணே–பிரிந்து இருப்பதை பொறுக்க மாட்டாமல் தானே வரிப்பதே பரகத ஸ்வீகாரம்
மத் ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாக தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த –என்பதே
ஸ்வ கத ஸ்வீ கார பற்றாசை நன்றாக கழிக்கிறது -அவன் கிருஷிபலத்தால் பற்றுவிக்க நாம் பற்றுகிறோம் –

எனது ஆவி தந்து ஒழிந்தேன் -தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை ஆறவில்லை செய்தனன் –
அஹம் அத்யைவ மாயா சமர்ப்பித-என்றதுமே
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினாயே –
மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ -நியத ஸ்வமிதி பிரபுத்ததீ -அதவா கிம் னு சமர்ப்பயாமிதே –
யானே நீ என்னுடைமையும் நீயே –
பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது —சூர்ணிகை -146-
இத்தையுடைய உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன் -சமர்ப்பணீயம் ஏது-சமர்ப்பகர் யார் –
சமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யம் இல்லை -சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்தர்யம் இல்லை –
சம்சார பீதியால் சமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாம்ய ஞானத்தால் அனுசயிக்கையுமாக-இரண்டும் யாவன் மோக்ஷம் அனுவர்த்திக்கக் கடவது
கைங்கர்ய பிரார்த்தனைக்கு பூர்வபாவியான கைங்கர்ய ருசியையும் கூட அபராத கோடியிலேயாய்
தத் கிங்கரத்வ விபவே ஸ்ப்ருஹய அபராத்யன் –
கலந்த பெரு நல் உதவிக்கு கைம்மாறாக ஆத்மாவை மீளா அடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தன் ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து அனுசய பிரகாசனம் பண்ணுகையும் வேண்டுமே
த்வய உச்சாரண அநு உச்சாரணத் தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்ததே பழுத்த ஆத்ம சமர்ப்பணம்
மதுரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே அஹங்கார மிஸ்ரமான உபயாந்தரம்
தானே கர்த்தா போக்தா என்று இருக்கும் ஸ்தூல அஹங்காரங்கள் / ஸ்வ யத்னா ரூபதா ஸூஷ்ம அஹங்காரம் -அனைத்தும் கழிய வேண்டுமே
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் –
யாவதாத்ம நியத த்வத் பாரதந்தர்ய உசிதா-நியாஸ திலகம் –

சர்வ சக்தி யுக்தன் -விசித்திர சக்தி யுக்தன் -விலக்ஷண சக்தி யுக்தன் -அத்புத சக்தி யுத்தம் -ஆச்சர்ய சக்தி யுக்தன் –
அகடிதகடநா சமர்த்தன் -பராஸ்ய சக்திர் விவிதைத ஸ்ரூயதே
கிம் சாதன -க்வ நிவஸன் -கிம் உபாதான -கஸ்மை பலாய -சருஜதீச இதம் சமஸ்தம் –
இத்யாத்ய நிஷ்ட்டி தகு தர்க்க மதர்க்க யந்த-த்வத் வைபவம் ஸ்ருதி விதோ விதுரப்ரதர்க்யம் —
அத்புத சக்தி என்பதே சாரம் -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் –
சகல வஸ்து விலக்ஷணஸ்ய-சாஸ்த்ரைக சமதி கம்யஸ்ய-அசித்தய அப்ரமேய -அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ த்வயார்த்த வார்த்தை முத்துக்கள் —

June 11, 2018

ஸ்ரீ த்வயார்த்த வார்த்தைகள் –

பெரிய பிராட்டியாரையும் -பெருமாளையும் – இவர்களுக்கு பிரிவில்லாமையும் -பெருமாளுடைய பொருளையும் –
அருள் சுரக்கும் திருவடியையும் -திருவடிகள் சரணாம் படியையும் – அரணாம் திருவடிகளை அடையும் படியையும் –
அடைந்து ஆரா அனுபவத்தையும் -அருள் உடையவன் ஆக்கத்தையும் – அநுபவத்தில் உகப்பையும் –
அநுபவத்தில் அழுக்கை அறுக்கையும் சொல்லுகிறது -த்வயம் -த்வயத்தாலே திருவடிகளை அநு சந்திப்பான் —

த்வயத்தில் ச விசேஷணமான நாராயண பதத்தாலே பர ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரபத்யே -என்கிற உத்தமனாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி நமஸ் ஸூ க்களாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நமஸ் சப்தத்தில் மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
சரண சப்தத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –

திருமந்த்ரார்த்த சரம ஸ்லோகார்த்த- இரண்டு அர்த்தத்திலும் ருசி வுடையவனுடைய அநு சந்தான பிரகாரம் -த்வயம் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-த்வயம்-
உபேய யாதாம்ய பிரதிபாதன பரம்-த்வயம்-
புருஷகார பிரதானம் -த்வயம்-

பிராட்டியை  ஈஸ்வரனோடு  சமானை என்பாரையும் –சேதனரோடு சமானை என்பாரையும் —
வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ -என்கிற சப்தத்தாலே –
ஆஸ்ரயணீயம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது மதுப்பாலே –
நிர்க் குணம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
நிர் விக்ரஹன் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சரணவ் -என்கிற பதத்தாலே –
உபாயாந்தர நிஷ்டரை வ்யாவர்த்திக்கிறது -சரணம் -என்கிற பதத்தாலே –
உபாய ஸ்வீகாரத்தை உபாயம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -பிரபத்யே -என்கிற பதத்தாலே –
பிராப்யம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே
த்ரிமூர்த்தி சாம்யதையை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
கைங்கர்யம் புருஷார்த்தம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சதுர்த்தியாலே –
கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது நமஸ்ஸாலே –

பட்டர் ஜீயருக்கு த்வயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து அருளி –
இதில் உத்தரார்த்தம் அநு சந்திக்கலாவது பரம பதத்தை சென்றாலாய் இருக்கும் –
இங்கே இவ் அர்த்ததம் அநு சந்தித்தவன் ஜீவன் முக்தன் என்று அருளிச் செய்தார் –

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்து பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

பாடல் கொட்டையப் பிள்ளை வார்த்தை –
பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லுகிறது–உத்தர கண்டம் அநந்ய பிரயோஜனத்வம் சொல்லுகிறது –
பூர்வ கண்டம் -பகவத் கிருபைக்கு வர்த்தகம்–உத்தர கண்டம் -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் இரு வருக்கும்-ஈஸ்வரன் -சேதனன் -ஓன்று போலே காணும் –
பூர்வ கண்டம் -அசித் வ்யாவ்ருத்தி–உத்தர கண்டம் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி –
நான் அடியேன் -பெரிய திருமொழி -7-3-1- என்று நம் பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு
தஞ்சம் என்று நினைத்துக் கொண்டு போரா நிற்கச் செய்தேயும் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலே-த்வயத்தை மிகவும் ஆதரித்து போருவார்கள் –
இதனுடைய அருமையையும் பெருமையையும் சீர்மையையும் பாராதே -வந்தபடி வரச் சொல்லார்கள்–நம் பூர்வாச்சார்யர்கள் என்று –
அதிகாரி துர் லபத்தாலே -இதனுடைய அருமை சொல்லிற்று–
கர்ம ஞான பக்தி நிர்வ்ருத்தி பூர்வகம் ஆகையாலே இதனுடைய பெருமை சொல்லிற்று –
ரஹஸ்ய த்ரய த்தில் வ்யாவ்ருத்தி வுண்டாகையாலே சீர்மை சொல்லிற்று –

த்வயத்தில் அர்த்தம் உபாயாந்தரங்களைப் பொறாது–சப்தம் சாதநாந்தரங்களைப் பொறாது –
பிரபத்தியை சக்ருத் என்பர் ஆழ்வான் -உடனே–சதா என்பர் முதலி யாண்டான்–சக்ருதேவ என்பர் பட்டர்
பக்தியில் காட்டில் பிரபத்திக்கு வாசி -அதி க்ருதாதி அதிகாரம் -சர்வாதிகாரமாகையும் –சாத்தியம் சித்தமாகையும் -கர்ம அவசாநம்
-சரீர அவசநாம ஆகையும் -அந்திம ஸ்ம்ருதியும் -அவனதேயாகையும் –
ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான்-திருவடிகளிலே பண்ணின பிரபத்தி யாகையாலே –
பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல பிரதமாகையாலே –
இவன் நம்மை உபாயமாக பற்றி பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம்
கடல் கலங்கினால் போலே கலங்கும்
-உத்தர கண்டத்தாலே -உன்னையே–உபாயமாகப் பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போவான் ஒருவன் அல்லன் -என்று
ஈஸ்வரன் மாஸூ ச என்று சேதனன் கண்ணா நீரை துடைத்தால் போலே –
சேதனனும் ஈஸ்வரனை -மாஸூ ச-என்கிறான் –
பிரகிருதி -விசேஷணம்–விக்ருதி -அனுபவம்–ஏதத் விக்ருதி -வ்ருத்தி விசேஷம்–பிரக்ருத்யந்தரமும் விக்ருத்யந்தரமும் -ஆத்ம நாசம் –

பின்பு அழகிய பெருமாள் ஜீயர் சில வைஷ்ணவர்களைக் காட்டி த்வயத்தில் பூர்வ கண்டத்துக்கும் உத்தர கண்டத்துக்கும்
வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளை அருளிச் செய்தபடி –
பெருமாளும் பெரிய பிராட்டியாரும் அபிமதங்களை முடிப்பார் என்று இருக்கை –
அபிமதங்கள் தான் எவை என்னில் -பெருமாளும் பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பில் எல்லாம் அடிமையும் செய்ய வேணும் என்று இருக்கையும்
-அடிமைக்கு விரோதி கழிய வேணும்  என்று இருக்கையும் -என்று அருளிச் செய்தபடி நினைத்து இருக்கிறார்கள் –

ஸ்ரீ பாதத்தில் அவர்கள் நினைத்து இருப்பது ஏது என்று ஜீயர் கேட்க -இம் மஹோ உபகாரத்தை பண்ணினவன் -த்வயார்த்தத்தை  அருளியது
-என்று நினைத்து இருப்பது -பின்னையும் ஜீயர் புருஷகாரமாய் இருக்கும் இவள் -அகலகில்லேன் -என்று ஆழம் கால் படா நிற்க –
புருஷகார பூதை யாகிறபடி எங்கனே என்னில் -அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -திருவாய் மொழி -3-10-8-  என்றும்
-பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்றும் 
-நிற்கச் செய்தேயும் ஜகத் நிர்வாகமும் சொல்லுகிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார் –

நம்பியை கோவர்த்தன தாசர் -அர்ஜுனனைப் போலே யாகிலும் யோக்யதை வேண்டாவோ என்ன –
ஷத்ரியவாதிகளும் வேணுமோ என்றார் –
அதிகாரிக்கு அபராதாநாம் ஆலயத்வமும் – ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -ஸ்வ ஞானமும் -ஸ்வரூப பிரகாசமும் -வேணும் –
பூர்வ அபராதம் பொறுக்கைக்கு புருஷகாரம் வேணும் – கால நியதி பாராமைக்கு மதுப்பு வேணும் –
புருஷகாரம் தான் ஜீவிக்கைக்கு சீலாதி குணங்கள் வேணும் – அது தான் -கார்யகரம் ஆகைக்கு ஞான சக்தியாதி குணங்கள் வேணும் –
சம்சாரிகளுக்கு ருசி ஜநகமுமாய் -முமுஷுக்களுக்கு சுபாஸ்ரயமுமாய் முக்தருக்கு போக்யையும் ஆகைக்கு விலஷண விக்ரகம் வேணும் –
உபாய சௌகுமார்யத்துக்கு நைர பேஷ்யம் வேணும் – அதுதான் பலத்தோடே வ்யாப்தம் ஆகைக்கு ச்வீகாரம் வேணும் –
கீழ் புருஷகாரம் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதை யாகவேணும் –
கீழ் உபாய பூதன் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதன் ஆக வேணும் –
சேஷத்வத்து அளவு அன்றிக்கே -சேஷத்வ வருத்தியும் வேண்டும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி அன்றிக்கே
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேண்டும் –

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று
-ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் -நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு
மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்

எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த
அம்பங்கி அம்மாளுக்கு உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –
பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன -இத்தனை தூரம்
பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –

ஸ்வீகாரத்தில் உபாய புத்தியும் -பேற்றில் சம்சயமும் காண் ஒருவனுக்கு மோஷ விரோதி –
சாபராதிகளான சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வாமியான எம்பெருமானைப் பற்றும் இடத்து -தன் அபராத பரம்பரைகளைப் பார்த்து பிற்காலியாதே
-பின் பற்றுகைக்கு புருஷகார பூதையான பிராட்டியை சொல்லுகிறது -ஸ்ரீ -என்கிற பதத்தாலே –

இப்படி புருஷகார பூதையான பிராட்டி அவனோடே சேர இருப்பது ஒரு தேச காலங்களிலேயோ
என்னில் -பிராப்ய பிரபாவான்களைப் போலே பிரியாத நித்ய யோகங்களைச் சொல்லுகிறது -மதுப்பு –

இப் புருஷகாரமும் மிகை என்னும்படியாய் இவள் தானே குறை சொல்லிலும் -செய்தாரேல் நன்று செய்தார் –
பெரியாழ்வார் திருமொழி -4-9-2- என்று பரிந்து நோக்கும் வாத்சல்யாதி குணம் சொல்கிறது -நாராயண -பதத்தாலே –

ஆஸ்ரிதரை கைவிடாதே சௌலப்யம் சொல்லுகிறது -சரணவ் -பதத்தாலே –

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் என்கிறது சரணம் என்கிற பதத்தாலே –
அவன் திருவடிகளில் இத்தனை நன்மை உண்டாய் இருக்க -இந்நாள் வரை இழந்தது இவன்
பற்றாமை இறே -அக் குறைகள் தீர பற்றும் பற்றுகையைச் சொல்லுகிறது பிரபத்யே -என்கிற பதத்தாலே –

இப்படி பூர்வ கண்டம் சொல்லி நின்றது –
மேல் உத்தர கண்டம்சொல்லுகிறது–இதில்
மதுப்பாலே இவனோடே கூடி இருக்கிற இவளும் உத்தேச்யை யாகையாலே -நாம் ஏதேனும் ஒரு
கிஞ்சித்காரம் செயிலும் -அவனோடே கூடி இருந்து ஒன்றை பத்தாக்கி அவன் திரு உள்ளத்தை உகப்பிக்கும்
ஆகையாலே -அவனோடு கூடி இருந்தவள் என்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே –

நம்மோடு நித்ய முக்தரோடு வாசி யற எல்லாரையும் சமமாக ரஷிக்கும் ஸ்வாமித்வம் சொல்லுகிறது -நாராயண பதத்தாலே –

இப்படி ஸ்வாமியான எம்பெருமான் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமான சர்வவித
கைங்கர்யங்களையும் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கும்படி யைச் சொல்கிறது சதுர்த்தியாலே –

இப்படி இருந்துள்ள அடிமை செய்யும் இடத்து -அவன் உகந்த உகப்பு ஒழிய தான் உகந்த உகப்பை தவிரச் சொல்கிறது -நம -என்கிற பதத்தாலே –

ஸ்ரீ மத என்கிற பதத்தாலே -திரு மார்பில் நாய்ச்சியாரோடே அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே -என்கிற பதங்களாலே திருவடிகளை அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மதே நாராயண -என்கிற பதங்களாலே -அருகு இருந்த நாய்ச்சிமாரோடே -இட்ட தனி மாலையையும் – கவித்த திரு அபிஷேகத்தையும்
-சிவந்த திரு முக மண்டலத்தையும்-அனுசந்திக்கிறார் –
ஆய -நம -என்கிற பதங்களாலே கைங்கர்யத்தை அனுசந்திக்கிறார் –

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன்வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று -பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
-அவனும் அங்கே சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
-நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் -இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
-என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் –
அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ -என்று
உடையவருக்கு விண்ணப்பம் செய்ய -அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்ததுரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி —உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி —உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் -ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து -அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –
பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி -அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து —
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –

சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு –
பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி -பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே -இவள் புருஷகாரமாக கொண்டு
ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் -ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும்
-எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி -எனக்கு இஷ்ட தமமாய்
-நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –

பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால
சர்வ அவஸ்த  உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் -இதனுடைய அநுக்ர மணம் -இருக்கும்படி
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞானான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் -இவனுடைய அபராதம்
அவன் திரு உள்ளத்தில் படாதபடி -அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி -மதுப்பாலே -இவளுக்கு அவனைப் பிரிய
சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி -நாராயண பதத்தாலே -இவள் புருஷகாரமும்
மிகை யாம் படியாக -அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரணவ் -என்கிற பதத்தாலே -இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
-சுவீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி -சரணம் -என்கிற பதத்தாலே -அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றிச் சொல்லி –
உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே -உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்யவாசம் பண்ணுகிற படியை சொல்லி –
நாராயண பதத்தாலே அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கிற சதுர்த்தியாலே -இவ்விருவருமான சேர்த்தியிலே இப்ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து -அத்யா ஹார்யமான ஸ்வ சப்தத்தாலே பெற்றபடி சொல்லி –
நமஸ் ஸாலே அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு உகக்கும் அது ஒழிய
தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக்கட்டுகிறது-

ஆழ்வான் எம்பெருமானாரை -ப்ரபத்தி என் பட்டு இருக்கும் -என்று கேட்க –
அது கர்மாதிகளை விட்டல்ல தான் இருப்பது –ஒன்றில் ஆயிரம் இல்லை -ஆயிரத்தில் ஓன்று உண்டு
குளப்படியில் கடல் இல்லை கடலில் குளப்படி உண்டு
ஆகையாலே எல்லாம் ப்ரபத்தியிலே உண்டு என்று அருளிச் செய்தார் –
அதில் இவை கண்டபடி  எங்கனே என்னில்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயிலே இட்டு பல்லாலே அசைக்குமா போலே த்வயத்தை உச்சரிக்கை கர்மம்
அவன் அதன் ரசத்தை பானம் பண்ணுமா போலே இடை விடாதே அனுசந்திக்கை -ஜ்ஞானம்
அவன் அந்த ரசத்தாலே தன்னை மறந்து இருக்குமா போலே இவனும்
அதின் அர்த்த அனுசந்தானத்தாலே ரச அதிசயினாய் தன்னை மறந்து இருக்கும் அது -பக்தி
அத்தாலும் பிரபன்னனுடைய அனுஷ்டானம் இருக்கும்படி பிறந்துடையவள் ஒப்பனை போலேயும்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயில் இட்டு நீரை நாக்காலே போக்குமா போலேயும்
பிரபன்னனுக்கு த்வய அர்த்த அனுசந்தானம் ஒழிய தேக யாத்ரை செல்லாது

திருமந்தரம் விலைப்பால் த்வயம் முலைப் பால்

நம்முடைய த்வயம் இருக்கும் படி–
கரை கட்டின காவேரியும் -கரை கட்டாக் காவேரியுமாய் -அப்படி இறங்கும் துறையுமாய் இருக்கும் -அவை எவை என்னில்
பரம பதம் -கரை கட்டாக் காவேரி ராம கிருஷ்ணாதி விபவம் கரை கட்டின காவேரி அப்படி இறங்கும் துறை திருமந்த்ரமும் த்வயமும் –
இங்கன் ஒத்தவனைக் காண்பது எங்கனே என்னில்-
திருவனந்தாழ்வான் மடியிலும் பெரிய திருவடி முதுகிலும் சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும்
இருப்பவன் இறே நமக்கு ப்ராப்யன் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –457-463- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் –
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் – படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

இப்படி ஸ்வரூப ஹானி வரும் என்னும் பயத்தாலே -விடுகிற அளவு -போராது
ப்ராப்த விஷய ப்ரவண சித்ததையாலே -ப்ராக்ருத சகல போக்ய வஸ்துக்களும் பிரதிகூலமாகத் தோற்றும் அவஸ்த்தை பிறக்கவும் வேணும் –
ஸ்வரூபம் குலையாமைக்கு – என்கிறார் மேல் –

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –
அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

(ஆயி ஸ்வாமிகள்-தத் வ்யதிரிக்த ஷேத்ராதி ஷுத்ர விஷயங்கள் அடங்க த்ருஷ்ட்டி விஷயமாகவே தோன்ற வேண்டுமே-நல்ல மனையாள் இத்யாதி இருந்தாலும் நெருப்பில் இட்ட விறகு போலே பரிபக்குவ நிஷ்டை வேண்டுமே-ஸ்வரூபம் நழுவாமல் இருக்க வேண்டும்)

அதாவது –
ஷேத்ராணி மித்ராணி தநாநிநாத புத்த்ராச்ச தாராபசவோ க்ருஹாணி த்வத் பாத பத்ம ப்ரவணா ஆத்மவ்ருத்தே பவந்தி சர்வே பிரதிகூல ரூப -என்று
பேரருளான பெருமாளைக் குறித்து -பிரம்மா விஜ்ஜாபித்த ஸ்லோகத்தில் சொல்லுகிற -ஷேத்ரம் மித்ரா தந -ஆதிகளான-சமஸ்த வஸ்த்துக்களும்-
அக்நி கல்பமாய் தோற்றும்படியான  அவஸ்த்தை  பிறக்க வேணும் -ஸ்வரூப பிரஸ்யுதி பிறவாமைக்கு -என்கை –

இந்த ஸ்லோக அர்த்தத்தை –
நல்ல புதல்வர் -இத்யாதியாலே -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே –

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-இப்படி ஓர் ஒன்றே விலக்ஷணமாய் நாட்டார்க்கு ஸூக வாஹமாய் இருக்கும் இவை எல்லாம் –துக்க அவஹம் என்றே மனஸூக்குத் தோற்றி-
அல்லல் என்ற சப்தம் துக்க வாசியே யாகிலும் கீழ்ச் சொன்னவற்றைச் சொல்லுகிறது ஆகையாலே துக்காவஹம் என்றே சொல்ல வேணும்-ஜ்வலிக்கிற அக்னி போலே தாப கரமாகில் –அவ் வவஸ்தை பிறந்த அதிகாரிகளுக்கு ஸ்வ யத்னத்தால் துஷ் ப்ராபமான ஸ்ரீ பரமபதத்தில் போய் அடியார்கள் குழாங்களுடன் கூடி இருக்கும் இருப்பு ஸூலபமாம் –அதாவது இப்படியான அதிகார பாவம் பிறந்தவர்களுக்கு ஸ்ரீ ஈஸ்வரன் சீக்ரமாக
பரம பதத்தைக் கொடுக்கும் என்றபடி –

ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத –புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாதபத்ம ப்ரவணாத் மவ்ருத்தேர் பவந்தி சர்வே பிரதிகூல ரூப–என்று
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட வசனம்

———————————————–

இனிமேல் பிராப்ய பூமியில் ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னுமத்தை அறிவிக்கைக்காக -அவற்றினுடைய உபாய  சதுஷ்டய சாதாரண்யத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில்  ஜிஹாசையும் –
அனுபவ அலாபத்தில்  ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-பக்தி -பிரபத்தி -ஆச்சார்ய ஸூவ கத அபிமானம் -ஆச்சார்யர் நம்மை அபிமானிப்பது -இந்த நான்கும்-சர்வ உபாய அதிகார சாதாரணங்கள் -அவசியம் அபேக்ஷிதம் -ஸ்ரீ வைகுண்டம் -ப்ராப்ய பூமி -ஆசை பிராவண்யம்
சம்சாரத்தில் வெறுப்பு இல்லாமல் தரியாமை-என்று நேராக சொல்லாமல் -ஆச்சார்யர் திருவடிகளே ப்ராப்ய பூமி -சரம பர்வ நிஷ்டருக்கு
ஒளிக் கொண்ட சோதி -மாக வைகுந்தம் -உடன் கூடுவது என்று கொலோ -முக்த ப்ராப்ய பூமி பெற்று அல்லது தரியாத நிரதிசய பிராவண்யம்
கொடு உலகம் காட்டேல்-முமுஷுக்களுக்கு இதுவே த்யாஜ்யம் -சம்சார தர்சனத்தில் வெருவி-
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கில்லேன் -ஆத்ம தாரணம் முடியாமல் ஸூ பாஸ்ரய விக்ரஹம் -தேவரீர் திருமேனி அனுபவம் இல்லையாகில்
காணுமாறு அருளாய் –ப்ருஹத்-ப்ரஹ்மம் அனுபவம் இல்லாவிடில் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் –
மத் விஸ்லேஷம் அஸஹம்–தேஷாம் ஞானி நித்ய யுக்த –எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவர்கள் –
உள்ளம் துடிப்பு இருக்க வேண்டும் -மலைச்சுமையான ஆத்ம தாரணம்-
பகவத் -ஆச்சார்ய -ஸூ கத -பரகத –இப்படி நான்கும் என்றும் ஒரு நிர்வாஹம்
பக்தி பிரபத்தி ததீய அபிமானம் ஆச்சார்ய அபிமானம் என்றுமாம்
சரம கடாக்ஷம் -ஸூபாஸ்ரய-தத் பிரதான –தத் சம்பந்தி -இப்படி நான்கும் பிரதம மத்யம சரம நிஷ்டருக்கும் -இப்படி -12-விதங்கள் –
தேசிகர் உள்ள தேசம் -தேசிக தர்சனீய விக்ரஹம் -ஏதத் அனுகுண பிராவண்யம் கைங்கர்யம் வேண்டுமே )

ப்ராப்ய பூமி -ஆவது -தனக்கு வகுத்த சேஷியான விஷயம் எழுந்து அருளி இருக்கிற தேசம் –

தத் ப்ராவண்யம் ஆவது -அத் தேசத்தை கிட்டி அல்லது தரியாத அதி மாத்ரமான ஆசை –

த்யாஜ்ய பூமி ஆவது -அவ் விஷயத்தை அகன்று இருக்கைக்கு உடலான தேசம் –

தஜ் ஜிஹாசை ஆவது -இத்தை விட்டே நிற்க வேணும் என்னும் இச்சை –

அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண யோக்யதை -யாவது -வகுத்த சேஷியான விஷயத்தினுடைய விக்ரஹாத் அனுபவம் பெறாத போது-
தேக தாரணமான போஜனம் இல்லாவிடில் தேகம் தரியாதாப் போலே -தான் தரித்து இருக்கைக்கு யோக்யன் அன்றிக்கே இருக்கை-

உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் -என்றது -இவை இத்தனையும் -உபாய சதுஷ்டய அதிகாரிகளுக்கும் – அதிகார அநு குணமாக வேண்டும் -என்றபடி –

உபாய சதுஷ்டயம்-ஆவது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தாலே -என்று துடங்கி -கீழ் அருளிச் செய்த
பக்தி பிரபத்திகளும் -ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் —
பகவத் விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் – ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் –ஆகவுமாம்–

இதில் முற்பட்ட யோசனைக்கு கௌசித்தியம் உண்டு –
கீழே நான்கு உபாயத்தையும் சேர இவர் தாமே அருளிச் செய்ததுக்கு சேருகையாலே-
இதில்
பக்தி பிரபத்தி நிஷ்டர் இருவருக்கும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்கிற ப்ராப்ய பூமியான பரம பதத்தில் பிராவண்யமும் –
வரம் ஹூத வஹஜ்வாலா பஞ்சரா ந் தர்வ்ய வஸ்த்திதி ந ஸௌரி சிந்தா விமுக ஜநசம் வாச வைசசம்-
கொடு வுலகம் காட்டேல் -என்னும்படி
ப்ராப்ய வஸ்துவை இழந்து -ப்ராக்ருத மத்யே இருக்கைக்கு உடலான சம்சாரம் ஆகிற த்யாஜ்ய பூமியில் ஜிஹாசையும்
உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்று இலேன் -என்கிறபடியே –
பகவத் அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண  அயோக்யதையும் -அவஸ்யம் உண்டாக வேணும் –

ஆசார்ய விஷயத்தில் -ஸ்வகத பரகத ஸ்வீகார நிஷ்டரான இருவருக்கும் –
எல்லாம் வகுத்த இடம் என்று இருக்கையாலே -ஆசார்யன் எழுந்து அருளி இருக்கிற தேசம் ப்ராப்ய பூமியாய்-அவனைப் பிரிந்து இருக்கிற  இடம் த்யாஜ்ய பூமியாய் –
அவனுடைய விக்ரஹாதிகளே அனுபவ விஷயமும் ஆகையாலே – பிராப்ய பூமியில் ப்ராவண்யாதிகள் மூன்றும் -இவனுக்கு அநு குணமாக
அவஸ்யம் உண்டாக வேணும் என்று -அதிகார அநு குணம் விபஜித்து சொல்லக் கடவது –

அன்றிகே –
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்று தாம் அருளிச் செய்த பிரபந்தத்தை அப்யசித்தவர்களுக்கு வாசஸ்த்தானம்-
ததீய வைபவமே நடக்கும் ஸ்ரீ வைகுண்டம் என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –
சரம பர்வ நிஷ்டரானவர்களுக்கும் -ஸ்வ ஆசார்யன் உகந்த பகவத் விஷயத்தில் பரி பூர்ண அனுபவாதிகள் சித்திப்பது அவ்  விபூதியிலே ஆகையாலும்
பிராப்ய பூமி பரம பதம் – இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே -அதுக்கு விரோதியான சம்சாரம் -த்யாஜ்ய பூமி –
அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண அயோக்யதை -ஆவது -ஸ்வ ஆசார்ய விஷயத்திலும் அவன் உகந்த பகவத் விஷயத்திலும் உண்டான அனுபவம் பெறாத அளவில் -தான் தரித்து இருக்க மாட்டாமை என்று -இங்கனே யோஜிக்கவுமாம் –

——————————————————————

பூர்வ உக்த உபாய சதுஷ்டயத்திலும் -பகவத் விஷயத்தை அவலம்பித்து இருக்கிற – பக்தி பிரபத்திகள்  ஆகிற உபாய த்வயமும் -இவ் வதிகாரிக்கு நழுவி நின்ற பிரகாரத்தை கீழ்
அருளிச் செய்த அநந்தரம்-
ஆசார்யனை தான் பற்றும் பற்று -என்றும் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம்- என்றும் அருளிச் செய்த ஆசார்ய விஷயத்தில் –
ஸ்வ கத பர கத ச்வீகார ரூப உபாய த்வத்துக்கும்-
பிரமாண தர்சனம் பண்ணுவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
ப்ரதமம் -ஸ்வகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

(தாவு பௌ–இருவருக்கும் நியாமேந-பல சித்தி –
பிரபத்திக்கு சரண்ய ஹ்ருதய அனுசாரி யாக இருக்க வேண்டும் –
பரம தயாளு -என்பதால் அது இங்கு இல்லை -அஹங்கார கர்ப்பம் –பழுது என்று ஒத்துக் கொண்டு -பழுது ஆகாது -பல சித்தியில் -என்று இரண்டுக்கும் இதுவே பிரமாணம் –
அபலை சிறு பெண் -பிஞ்சாய் பழுத்து அவள் ஸ்ரீ ஸூக்தி அடுத்ததுக்கு -)

(ஆயி ஸ்வாமிகள்-பூர்வ உபாயம் என்பது ஆச்சார்யரை நாம் பற்றும் பற்று -ஸூ கத ஸ்வீ காரம்-அடுத்த சூரணை-ஆச்சார்யர் நம்மைப் பற்ற-பரகத ஸ்வீ காரம் -அதுக்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்
அடியார் அடியார் -வேறு பாடு தோன்ற வீறுடன் மிக்கு வீற்று இருப்பர் – -இவர்கள் –
உபாயத்வ பிரகாசத்வம் காட்டும் பிரமாணங்கள் –
அமோகமாய் -அத்விதீயமாய் -பழுது ஆகாமல் ஒன்றாய் –
அறிவிக்க அறிந்தேன் –
ஆஸ்ரித ரக்ஷணம் -பாற் கடலான் -அதுவே ஸ்வரூப நிரூபனம் -ப்ராப்தமான திருவடிகள் -இறங்கினதே அருள தானே
வழுவாத -பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லாமல் -வகை உபாயம்
நிரந்தரம் அனுகூல வ்ருத்தி பண்ணும் -வைகல் தொழுவாரை -கைங்கர்யம்
உத்தாராகராக -கொண்டு சரணம் புகுந்து -உஜ்ஜீவிக்கும் அவர்கள் வாழ்வார்
கலந்த வினை -ஸ்வரூபத்தில் பிரிக்க முடியாமல் கலந்த அவித்யாதி -கர்மா வாசனா ருசி -போக்கி கொண்டு
விண் திறந்து -வாசலை திறந்து -வீற்று -விகசித ஞானம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று வ்யாவ்ருத்தராய் இருக்கார் -மிக்கு –
பூர்வ உபாயத்துக்கு முக்கிய பிரமாணம் –
அமோகமாய் –ஸ்வ கத ஸ்வீ காரமும் வீணாகாதே -இங்கே ஆச்சார்ய அனுசார ஹ்ருதயம் சங்கை இல்லையே -பரதந்த்ரன் என்பதால் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு -அங்கும் ததீயருக்கே -)

பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல்-தொழுவாரைக் கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்து வினை கெடுத்து விண்டு இறந்து
வீற்று இருப்பார் மிக்கு –
அதாவது –
அமோகமாய் இருப்பதோர் உபாயம் அறிந்தேன்-
ஆஸ்ரயிப்பார்க்கு சமாஸ்ரணீயனாய் கொண்டு-திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து -நாள் தோறும் அநுகூல விருத்தியை பண்ணிக் கொண்டு போரும் ஞானாதிகரைக் கண்டு
தங்களுக்கு தாரகமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் அவர்கள் –
ஆத்மாவோடே அவிநா பூதமான பாபத்தைப் போக்கி -ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் திறந்து -அங்கே சம்ருத்தமான ஞானாதிகளை உடையராய் -ததீய கைங்கர்ய நிரதராய் கொண்டு – வ்யாவிருத்தராய் இருப்பர் என்று -பரம ஆப்தரான – திருமழிசைப் பிரான் அருளிச் செய்த -பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் -என்கிற பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்பட சொன்ன ஸ்வகத ஸ்வீகார மாகிற உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்கை-

இத்தால் –
ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

குருணா யோபி மன்யேத குரும் வாயோபி மந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் -பரத்வாஜ சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது -இறே

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன-பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும்  உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

———————————————–

இனிமேல் பரகத ஸ்வீகாரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

(ஆயி ஸ்வாமிகள்–தங்கள் தேவர் -நமக்கு அல்ல என்று விலக்குகிறாள்-பிராட்டி -உற்றது சொல்லும் நல்ல துணை –உயிரான தோழி
அனந்தஸாயி -நாகணை -நம்மை -எட்டாது இருக்கும் -நம்மை மறப்பிக்கும் உபய விபூதி ஐஸ்வர்ய செருக்கு
எல்லாரையும் கும்பீடு கொள்ளும் முதலியார் -அதி ஷூத்ரராய் சிறு மானிடர் -என்னவும் பற்றாமல் முடியும் தண்ணியம் நாம்
அவரை சிறுக்கப் பண்ணவோ -ஸ்வ தந்த்ரர் செய்வதை பார்த்து இருக்கலாம் –
ஸ்ரீ வில்லிபுத்தூர் அவதார வாசியால் சர்வ வியாபக வஸ்துவை தன சித்தத்தில் அடக்கி ஆளும் பெரியாழ்வார்
ஆச்சார்ய தேவோ பவ -அவர் நாங்கள் தேவர்
பேசிற்றே பேசும் ஏக கண்டர் -ஆழ்வார்கள் அனைவரையும் சேர்த்து தங்கள் தேவர் –
சாண் கரு முக மாலை இடுதல் -வாராய் –வருவிப்பார் -வல்ல பரிசு -வல்லமை –
நீராட இத்யாதி -பண்ணை நனைத்துதல்
அஞ்சலி பண்ணி
நம் கால் நடையில் கழுத்தில் கப்படம் -கட்டுப்பட்டு அரங்கில் விழுவான் –
தேர் யானை இத்யாதி இல்லை -காண்போம் -பிஞ்சில் பழுத்த பாசுரம்

த்வயம் சொல்லி -ஏற்றி -தபஸ் -அநந்ய பிரயோஜனர் -அத்யந்த பாரதந்தர்யம்
பகவான் இடம் -பாரதந்தர்யம்
அதி பாரதந்தர்யம் நாம் ஆச்சார்யர்
அத்யந்த -அவர் அபிமானித்தில் ஒதுங்கி
உறை கழற்றியவர் பாசுரம்

நமோ –ஆச்சார்ய பிரணவம் -ஆரம்பத்திலும் முடிவிலும் -வேதாந்த தாத்பர்யம் -பிரணவ ஸஹிதம்-
ஸ்வா பாவிக -தேவரீர் யுடைய –அடியேனுக்கு பிராப்தமான ப்ராப்தமான -போக்யமான அரவிந்த -திருவடிகளில்
பிரேம அதிசய சீமா பூமி – பஹுமந்தவ்யர் நாத முனி பார்த்து -அடியேனுடைய கிருத்யம் பாராமல் -அக்ரித்ரிம என்ற சரம ஸ்லோகம் –

ஞானம் பெற யோக்யதை இல்லாத பசுவோ பஷியோ மனிசனோ -நடுவில் வைத்தது –
ஸ்ரீ வைஷ்ணவ திருவடி பற்றி அதன் பலமாகவே ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் –
அபிமானத்தால் -பெறுதற்கு அறிய பரமபதம் பிராபிக்கும்
இந்த நான்கும் முக்கிய -பர-பரதர–பரதமமான பிரமாணம்
இதில் தானே பசுவும் பஷியும்
ப்ரபத்திக்கு சேஷம் காரணம் என்று கொள்ள வேண்டாம் –
ஞானம் யோக்யதை இல்லாத பசு பஷி எடுத்ததால் இது ஸூவ தந்த்ர உபாயம் என்று ஸூ ஸ்பஷ்ட பிரமாணம் இது

ஆச்சார்யர் மூலம் தானே பகவத் பிரபத்தி -அதே போலே ஆச்சார்ய அபிமானம் பகவத் பிரபத்தி நிரபேஷம் இல்லை
ஈஸ்வர ஸுஹார்த்தம் பொதுவாக அனைவருக்கும் உண்டே –
பலம் தானே கொடுக்கும் -பெருமாள் புருஷகாரம் ஆச்சார்ய லாபம் பகவானால் பார்த்தோம் 
இவ்வர்த்தம் -ப்ரத்யக்ஷமாக யதிராஜா இடம் வசப்பட்டு -திருவடிகளை – –தான் அது தந்து –
கால த்ரயேபி-அடுத்த ஸ்லோகம் -சரணாகதி -கூட நீர் நம் பொருட்டு செய்தீர் -அதுவே ஷேம கரம் நமக்கு-
நல்ல என் தோழி -பெரியாழ்வார் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் –
தங்கள் தேவர் -அவருக்கு பிடித்தம் என்பதால் –
இவளுக்கு அவர் அபேக்ஷிதம் என்றால் நம் தேவர் என்று இருக்க வேண்டுமே -)

அதாவது –
1-தோழி யானவள் -தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது -அவன் –
ந த்யஜேயம் -என்ன வார்த்தையும் -பெரிய ஆழ்வார் வயிற்றில் பிறப்பையும் -ஆயிற்று –
இப்போது அவன் வார்த்தை தனக்கு பலியாத மாத்ரத்தை கொண்டு -இது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இனி இவள் எங்கனே  ஜீவித்து தலை கட்டப் போகிறாள் என்னும் இழவு தோற்ற இருக்க –
அவளைப் பார்த்து என்னிலும் என் இழவுக்கு நோவு படும் படி ஸ்நிக்தையான என்னுடைய தோழி -அநந்த சாயியாய்-அத ஏவ- சர்வ ஸ்மாத் பரராய் இருக்கிறவர் -அதுக்கு மேலே -ஸ்ரீ யபதியாய் -ஒருவருக்கும் எட்ட ஒண்ணாத பெருமையை உடையராய் இருப்பார் ஒருவர் -தேவ யோநியில் பிறந்து-சிறிது அணைய நிற்கையும் அன்றிக்கே –
அவருக்கும் நமக்கும் பர்வத பரம அணுக்கள் ஓட்டை வாசி போரும்படி ஷூத்ரரான மனுஷ்யர் நாமான பின்பு நம்மால் செய்யலாவது உண்டோ –
அவர் ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைத்தார் என்றதைக் கொண்டு -நம்மால் அவரை வளைக்கப் போகுமோ -அது கிடக்கட்டும் –
நமக்கு பேற்றுக்கு வழி உண்டு காண்-
ஸ்ரீ வில்லி புத்தூரில் அவதரித்த ஏற்றத்தை உடையராய் -சர்வ வ்யாபக வஸ்துவை தன் திரு உள்ளத்தில் அடக்கி கொண்டு இருக்கிற பெரிய ஆழ்வாரை -ஆசார்ய தேவோ பவ -என்கிறபடியே -நமக்கு தேவரான -தமக்கு தேவராய் இருக்கிற அவரை –
ஓர் இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-
திருமஞ்சனத்தை சேர்த்து வைத்து அழைக்கவுமாம்-
திருக்குழல் பணியை சமைத்து வைத்து அழைக்கவுமாம்-
திருவந்திக் காப்பிட அழைக்கவுமாம் –
அன்றிக்கே
நாம் தம்மை முன்னிட்டாப் போலே -தனக்கு புருஷகாரமாவரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம் –
நல்லதொரு பிரகாரம் வருவித்தார் ஆகில் -அத்தைக் கண்டு இருக்கக் கடவோம் –
நாம் மேல் விழக் கடவோம் அல்லோம் -என்று
ஆண்டாள் அருளிச் செய்த -நல்ல என் தோழி -பாட்டையும் –

2-ஈஸ்வரன் என்று பாராதே -தனக்கு எதிரியான ஹிரண்யாசுரனைக் -கூறிய திரு வுகிராலே-வர பலங்களால் பூண் கட்டி இருக்கிற மாரவை –
பொன் மலை பிளந்தால் போல் இரண்டு கூராம்படி அநாயாசேன -கிழித்துப் பொகட்ட மிடுக்கை உடைய நரசிம்ஹத்தை –
அந்தி அம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்று அநந்ய ப்ரயோஜனராய்  கொண்டு மங்களா சாசனம் பண்ணி இருப்பாரை ஜயிக்குமே-
வ்யாவிருத்தராய் இருக்கிற அவர்கள் பக்கலிலே ந்யஸ்த பரராய் -அவர்கள் அபிமானத்திலே ஒதுங்கி இருப்பாருடைய ஸூக்ருதம் -என்று –
திரு மழிசை பிரான் -அருளிச் செய்த – மாறாய தானவனை -என்கிற பாட்டையும் –

3-அக்ருத்ரிம-என்று துடங்கி -ஸ்வாபாவிகமாய்-தேவருடைய ப்ராப்தமுமாய் -போக்யமுமான –
திருவடிகளில் உண்டான பிரேமத்தினுடைய அதிசயத்துக்கு எல்லை நிலமாய் இருப்பாராய்-
அந்த பிரேம பிரகர்ஷத்துக்கு அடியான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை உடையராய் –
வித்தையாலும் -ஜன்மத்தாலும் -அடியேனுக்கு பிதா மகராய் இருக்கிற -நாத முனிகளைப் பார்த்து -அடியேனுடைய விருத்தத்தைப் பாராதே -பிரசன்னராய் அருள வேணும் -என்று பரம ஆசார்யான ஆளவந்தார் அருளிச் செய்த -வேதாந்த தாத்பர்யமான -ஸ்தோத்ர ரத்னத்தில் -சரமமான ஸ்லோகத்தையும் –

4-ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத பசு பஷிகள் ஆகவுமாம்- ஞான யோக்யதை உள்ள மனுஷ்யர் ஆகவுமாம் – யாவர் சிலர் பகவத் சம்பந்தமே நிரூபகமாம் படி இருப்பானொரு ததீயனோடே சம்பந்த்தித்து  இருக்கிறார்கள் – அவர்கள் அந்த வைஷ்ணவனாலே – ப்ராப்ய பூமியான பரம பதத்தை ப்ராபிப்பர்கள் என்கையாலே –
ஞானம் உண்டாககவுமாம் -இல்லையாகவுமாம் – ததீய அபிமானமே உத்தாரகம் –
என்னும் இடத்தை ஸூஸ்பஷ்டமாக சொல்லுகிற -பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ  சம்ஸ்ரயா தேனை வதே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிற பௌராணிக ஸ்லோகத்தையும் –

ஆசார்ய அபிமானம் ஆகிற இந்த பரகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்றபடி –

———————————————-

கீழ்ச் சொன்ன பிரபத்தி நிஷ்டனான அதிகாரிக்கு -உபாய அதிகாரத்தில் குறை உண்டாகிலும் -அது பாராமல் ஈஸ்வரன் – கார்யம் செய்கைக்கு உடலாகக் கொண்ட -உபாய சேஷமாய் இருந்த -ஆசார்ய அபிமானத்தை -இப்போது ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் -என் –
அன்றிக்கே –
உபாய ஆகாரமும் கூடுமோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் -மேல் –

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு
அங்கமாய் –
ஸ்வ தந்த்ரமுமாய் –
இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-ப்ரபத்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் ஆச்சார்ய அபிமானம் இருக்குமே -பிரபத்தி பக்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் இருக்குமா போலே –
சதாச்சார்யனால் ஸ்வீ கரிக்கப்படும் உபாயம் —
கர்ம ஞான பக்தி உபாயாந்தரங்களுக்கு விச்சேத பரிகார அர்த்தம் -தத் வர்க்கமான -அங்கமாய் -அங்க பிரபத்தி
யாவதாத்மாபாவி ஸ்தான த்ரய பக்தி பிரார்த்தித்து -பிராப்ய ரூப பக்தி நித்தியமாக கத்ய த்ரயத்தில் உண்டே –
இரண்டு ஆகாரங்கள் -விதி பேதத்தாலும் அதிகாரி பேதத்தாலும் –
ஈஸ்வர ஸ்வா தந்திரம் கண்டு பயந்த -பயப்படாத அதிகாரிகள் பேதம் உண்டே –
சரமாய் ஸூ ஸ்பஷ்டமாய் –பசு பஷிக்கு பிரபத்தி இல்லையே -வைஷ்ணவனைப் பற்றி -அதனால் ஸ்வ தந்த்ரமாகவே உண்டே –
ஆச்சார்ய உபதேசம் எல்லா வித்யைக்கும் வேண்டும் -சகல உபாயத்துக்கும் அங்கமாய் இருக்கும்
தேனை ஏவ -அந்த வைஷ்ணவனை பற்றிய ஒன்றே எதிர்பார்த்து -தானே ஸ்வ தந்திரமாயும் இருக்கும் –
பிரபத்தி ஸ்வ தந்த்ர உபாயம் இந்த கைங்கர்ய உபயோகி பக்திக்கு –
ஸூ இதர உபாயாந்தரங்களுக்கும் இது -பக்தி ப்ரபத்திகளுக்கு-இவர் தானே உபதேசிக்க வேண்டும் –
அதனால் அங்கம் -அபிமானம் இருப்பதால் தானே உபதேசம் –
தெய்வம் போலே ஆச்சார்யரை உபாசி -சித்த -ஸ்வ தந்திரம்
பக்தி ஸ்வதந்த்ரம் மேலே பிரபத்தி போலே பிரபத்திக்கு இந்த சரம பிரபத்தி
பக்திக்கு அந்தர்யாமி விஷயம்
பிரபத்திக்கு அர்ச்சாவதாரம் விஷயம்
சரம பிராப்திக்கு சாஷாத் தெய்வம் பீதக வாடைப்பிரான் பிரம குருவாக வந்ததே விஷயம்
நம்பி மூத்த பிரான் -ஆதி சேஷனா பெருமாளா -சங்கை –
தசாவதாரம் சேஷ அம்சம் -அவதாரம் விசேஷ அதிஷ்டானம் தானே -பயனுக்காக சக்தி இறக்கி
அதே போலே சேஷ பூதன் ஆச்சார்யரும் -தன் ஆச்சார்யருக்கு சேஷ அம்சம் –
விசேஷ அதிஷ்டானம் -செய்து -பரத்வாதி சரம பகவத் அவதாரம் –
பரத்வம் -வ்யூஹ -விபவ -அந்தர்யாமி அர்ச்சை அடுத்த -நிலை
பக்திக்கு அந்தர்யாமி -பிரபத்திக்கு அர்ச்சை -ஆச்சார்ய அபிமானத்துக்கு இந்த ஆறாவது அதிஷ்டானம் என்றவாறு
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் – -ஸ்தோத்ர ரத்னம் இதே போலே ஆனால் அங்கு பராங்கதிம்-இல்லை காது கண் பெறுவது -பிரபத்தி பண்ணாதவனுக்கு —பசு பஷிர்-பிரபத்தி கிடையாதே -)

அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே –
தமேவ சரணம் கச்ச -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
விரோதி பாப ஷயத்துக்கும் -பக்தி விருத்திக்கும் – உடலாய்க் கொண்டு உபாயந்தரமான பக்திக்கும் -அங்கமுமாய் –
தத் த்யாக பூர்வகமாக -மாம் ஏகம் சரணம் வ்ரஜ-என்று விதிக்கும்படி –
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும் ஸ்வயமேவ உபாயமாகக் கொண்டு -ஸ்வ தந்திர உபாயமாய் இருக்கும் பிரபத்தி போலே

உபாய அதிகார மாந்த்யத்தைப் பார்த்து -ஈஸ்வரன்  உபேஷியாமல் கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆகையாலே -ஸ்வ இதர உபாயமான பிரதிபத்திக்கு
சாபல்யத்தையும் உண்டாக்கி நின்று கொண்டு -அவ் வழியாலே-அதுக்கு அங்கமாய் –
அத்தை ஒழிய தன்னை உபாயமாகக் கொள்ளும் அளவில் -அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளுக்கு தானே உபாயமாகக் கொண்டு -ஸ்வ தந்த்ரமாயுமாய் இருக்கும் -என்கை –
 

அன்றிக்கே –
அநாச்சார்யோ பலப்தாஹி வித்யேயம் நஸ்யதி த்ருவம் -என்றும் –
சாஸ்த்ரா திஷூ ஷுத்ருஷ்டாபி சாங்கா சஹப லோதய ந பிரசித்திய தீவை வித்யா விநாசது பதேசத -என்றும் சொல்லுகையாலே –
ஏதேனும் ஒரு வித்தையை அவ லம்பிக்கும் அதுக்கு -ஆசார்ய உபதேசம் வேண்டுகையாலே –
ஆசார்ய அபிமானம் சகல உபாய அங்கமாய் இருக்க -தேனைவ தே  பிரயாஸ்யந்தி -என்று ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் என் -என்ன –
ஆசார்ய அபிமானம் தான் -என்று துடங்கி -அருளிச் செய்கிறார் ஆகவுமாம் —

அதாவது –
பிரபத்தி தான் கர்ம ஞான பக்திகள் ஆகிற -உபாயாந்தரங்களுக்கு -உத்பத்தி விருத்தி விரோதி பரிஹார அர்த்தமாக -விஹிதமாய் கொண்டு –
தத் அங்கமுமாய் –
அநந்ய சாத்த்யே ஸ்வா பீஷ்டே  மகா விஸ்வாச பூர்வகம் தத் ஏக உபாய தாயாச்ஞா பிரபத்தி சரணாகதி -என்கிறபடியே
அந்ய உபாயங்களை ஒழிந்து-தன்னையே உபாயமாகக் கொள்ளும் அளவில் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட ப்ராப்த்திக்கு -ஸ்வயமேவ நிர்வாஹகமாய் கொண்டு –
ஸ்வ தந்த்ரமாய் இருக்குமா போலே –

ஆசார்ய அபிமானம் ஆகிற இது தான் –
ஏதேனும் ஒரு உபாயத்துக்கும் ஆசார்ய உபதேசம் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
அவ் வழியாலே உபாயாந்தரங்களுக்கு அங்கமாய் இருந்ததே ஆகிலும் –
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் – பசுர் மனுஷ்ய பஷீவா -இத்யாதிப் படியே
ஸ்வயமேவ உத்தாரகம் ஆகையாலே -ஸ்வ தந்திர உபாயமுமாய் -இருக்கும் -என்கை —

—————————————————

இப்படி ஸ்வதந்த்ரமான இவ் வுபாயத்துக்கு அதிகாரி இன்னார் -என்று அருளிச் செய்கிறார் –

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

இயலாமை இல்லை-ஸ்வரூப விருத்தம் என்பதால் அந்வயிக்க சக்தி இல்லை என்று இருக்கும் அதிகாரி -என்றவாறு –
பிரபத்தி -விநிவ்ருத்தி ரூபம் தானே -இதில் சக்தி -ஈஸ்வர ஸ் வாதந்த்ரத்தால் என்ன ஆகுமோ -தெரியாத ஒன்றில் அன்வயம் எதற்கு என்கிற சக்தி –
இதில் இருந்து தாண்டி -வேறுபட்ட சரம அதிகாரி –
பக்தி -கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு பிறக்கும் -விஸிஷ்ட வேஷஅனுசந்தான சித்த துஷ்கரத்வ பிரபத்தியாலும் -இங்கு சக்தி இயலாமை -ஆயாசம்
நிஸ்க்ருஷ்ட வேஷம் ஸ்வரூபம் பாரதந்தர்யம் அறிந்து அசக்தி -பகவத் ஸ்வா தந்த்ரயத்துக்கு விரோதி ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
பாரதந்தர்யம் அறிந்தவனே பிரபதிக்கு அதிகாரம் –
இங்கும் விஸிஷ்ட நிஸ்க்ருஷ்ட வேஷம் -அத்வயவாசாய ஞானம் -மஹா விசுவாச மாந்தியதாலும் –சம்சாரம் இருப்பதால்–
நிஸ்க்ருஷ்ட வேஷத்தில் நிராங்குச ஸ்வா தந்திரம் கண்டு பயந்துஅ சக்தி –
இப்படி நாலு வித அ சக்தி சொல்லி மேலே
சரம -நிலை நின்ற அதிகாரம் -ஸூ வ ஆச்சார்யர் பரதந்த்ர -சதாச்சார்ய அபிமான விசேஷ -பரதந்த்ர சேஷி தானே நம் ஆச்சார்யர்
ஸ்வரூப விருத்தம் அந்வயிக்க கூடாதே -பக்தியில் இருந்து பிரபத்தி
இங்கு பிரதம -சரம -ஸ்வாதந்த்ர ஜெனித பயத்தால் தான் –

அதாவது -உபய பரிகர்மி தச்வாந்தஸ்ய -என்கிறபடியே –
ஜன்மாந்தர சகஸ்ர சித்த கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு-
ஜனிக்குமதாய் -ஸ்வ பாரதந்த்ர்ய விரோதியான -ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கும் -பக்தி உபாயத்தில் -துஷ்கரத்வ புத்தியாலும் -ஸ்வரூப விரோதித்வ புத்தியாலும் -நாம் இதுக்கு சக்தர் அல்ல என்று கை வாங்கினவனுக்கு -நிவ்ருத்தி சாத்திய தயா -ஸூகரமுமாய் -பகவத் பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப அநு ரூபமான -பிரபத்தி உபாயம் –

அத்ய அவஸ்ய ஞான ரூபமான பிரபத்தி உபாயத்தில் -மகா விஸ்வாசம் உண்டாகை அரிதாகையாலும்-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யா பயத்தாலும் -நாம் இதுக்கு சக்தன் அல்ல என்று தேங்கினவனுக்கும் பசு வாதிகளுக்கும் கார்யகரம் ஆகையாலே -விஸ்வாஸ அபேஷமும் அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவுமாய் இருக்கும் -பரதந்த்ர்ய ஸ்வரூபனுடைய சதாசார்யனுடைய  அபிமான ரூபமான இந்தசரம உபாயம் -என்கை –

பக்தியில் அசக்தனுக்கு -துஷ்கரத்வ ஸ்வரூப விரோதித்வங்கள் இரண்டும் ஹேதுவாகிலும்-இவ்விடத்தில் ஸ்வரூப விரோதித்வமே பிரதான ஹேது –
பிரபத்தியில் அசக்தனுக்கும் விஸ்வாச்யமாந்த்ய பகவத் ஸ்வா தந்த்ர்ய பயரூப ஹேது த்வயம் உண்டே ஆகிலும் -பகவத் ஸ்வ தந்த்ர்யமே பிரதான ஹேது –
ஸ்வ தந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –
பகவத் ஸ்வ தந்தர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று -என்று இறே இவர் தாமே கீழ் அருளிச் செய்தது –

இத்தால்-
அந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவனே -பிரபத்தி அதிகாரி யாமோபாதி-
இவ் உபாய அதிகாரியும் -அநந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவன்-என்றது ஆயிற்று –

அன்றிக்கே –
இதன் ஸ்வ தந்த்ரவத்தை -பக்தியில் அசக்தனுக்கு -இத்யாதியாலே -ஸ்தீகரிக்கிறார்  ஆகவுமாம் –
வாக்யார்த்த யோசனையில் பேதம் இல்லை –
பக்தியில் அசக்தனைக் குறித்து -விஹிதமான பிரபத்தி உபாயம் ஸ்வ தந்த்ரம் ஆனாப் போலே பிரபத்தியில் அசக்தனை குறித்து -விஹிதமான இதுவும் -ஸ்வ தந்தரமாக குறை இல்லை -என்று கருத்து –

( அதிகாரி ஸ்வரூபமாகவும் -ஸ்வ தந்த்ர உபாயம் என்பதை பக்தி பிரபத்தி போலே இதுவும் என்று திருடிகரிக்கிறார் என்ற இரண்டு யோஜனை )

————————————————————–

சூரணை -463-

இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம்
பல பர்யந்தம் ஆக்கும் —

அநந்யார்ஹ சேஷத்வ ஞானமே மொட்டு -நமஸ் பரதந்த்ர ஞானம் பூ / அவனாலே அனுபவிக்கப்படுபவன் பல பர்யந்தம் –
அதுக்கும் மேலே அவனுக்கும் அவன் அடியார்க்கும் -அவர்களே உபாயம் பாகவத பாரதந்தர்யம் -அவர்கள் கைங்கர்யமே பலம் -என்று இருக்க வேண்டும்
அதுக்கு மேலே ஆச்சார்ய விஷயம்
அன்றிக்கே
பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் -ஆச்சார்ய சேஷத்வம் என்றுமாம்
ஸ்வ தந்த்ர உபாயம் மட்டும் இல்லை -பிரதமத்தில் ஸ்வரூப ஞானம் -அபிமான அன்வய காலத்திலே-
அநாதி காலம் இழந்து சரக்காய் உலர்ந்து போன ஜீவாத்மா -உபய சேஷத்வம் -மிதுனம் -பல்லவம்
அம்ருத வர்ஷத்தால் சரம அளவாக வளர்த்து பிரணவ அர்த்தம் ஆனபின்பு -பார தந்தர்யம் புரிய வைப்பார் –
மடை திறந்த கடாக்ஷத்தால் -தத் ஏக போக்யத்வ சித்த சரம அனுபவ கைங்கர்யம் ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும்
சேஷத்வ ஞானம் பல்லவிப்பித்து பாரதந்த்ர ஞானம் பூ பூக்க வைத்து -பழுக்க போக்யமாக கூட்டிச் செல்லும்
ஸ்வ தந்தர்ய த்வத்யம் தோஷம் இல்லை -பிரதமத்தில் பிரஸ்துதமான புருஷகார பூர்வகமாக பகவத் உபாயமே சரம உபாயமாக பழுக்கும்
அது தான் பூத்து காய்த்து பழமானது என்று வடக்குத்திருவீதி பிள்ளை பலகாலும் அருளிச் செய்வார்
ஆக
சார வசன–கண்ணி–பரதந்த்ர சேஷியை பற்றுமதுவே ஸ்வரூப அனுரூப உபாயம்
துர்லபம் ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
சரம சேஷியே அனைத்தும் -விரக்தி விஷயம் சம்சாரம்
உபகாரர் உத்தாராகர் -சம்பந்த சரம சேஷி
ஸ்வரூப ஞானம் தொடங்கி பல பர்யந்தம் உஜ்ஜீவிக்கும் –

இந்த நிஷ்டை துர்லபம் -நம் ஆச்சார்ய கடாக்ஷத்தாலே கிட்ட வேண்டும் –

அதாவது –
இப்படி கீழ் சொன்ன ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி -பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் -சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி -நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -என்றபடி –

பரம ரஹஸ்யமான திரு மந்த்ரத்தில் பத த்ரய -ப்ரதிபாத்யமான -அநந்யார்ஹ சேஷத்வாதி ஆகார த்ரயமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாய் – அது தான் சர்வ பர்வ பர்யந்தமாய் இறே இருப்பது -இவை தான் ஆசார்ய உபதேசாதிகளாலே  -லப்யங்கள் ஆகையாலும் –
இவ் உபதேசாதிகளுக்கு அடி -இவன் நம்முடையவன் என்கிற ஆசார்ய அபிமானம் ஆகையாலும் – ஆச்சார்ய அபிமானம் இவற்றை உண்டாக்கும் -என்கிறது –

ஆக -இப்படி இருந்துள்ள -பத த்ரய அர்த்த நிஷ்டையை -இவ் வாசார்ய அபிமானம் இவனுக்கு உண்டாக்கி -உஜ்ஜீவிப்பித்தே விடும் படி சொல்லிற்று ஆயிற்று –

அதவா –
இப்படி ஸ்வதந்த்ர்ய உபாயமான இது -இவன் ஸ்வரூபத்தை பர்வ க்ரமேண உஜ்ஜீவிக்கும்படியை பிரகாசிப்பியா நின்று கொண்டு -இவ் வர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –
அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமம் பகவத் விஷயத்தில் அன்வயிப்பித்து –
அநாதி காலம் தத் அந்வய ராஹித்யத்தாலே -வாடினேன்-என்னும்படி -யுறாவிக் கிடந்த ஸ்வரூபத்தை பல்லவிதமாக்கும்-
பின்பு பாகவத விஷயத்தில் ஊன்றுவித்து -பல அந்வய யோக்கியம் ஆக்குகையாலே
பல்லவிதமாய் இருந்த இத்தை புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் –
நின்று தன் புகழ் ஏத்த -என்கிறபடியே சரம பர்வத்தில் -நிலை பெறுத்தி-
புஷ்பிதமாய் இருந்தவற்றை பல பர்யந்தம் ஆக்கும் -என்னவுமாம் –

ஆக –
இப் பிரகரணத்தால் –
ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு -பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் என்னும் பிரசங்கம் இல்லாமையும் -407
இவ் வர்த்த நிர்ணய பிரமாணம் இன்னது என்னுமதும்-409-
இவ் வர்த்த ஸ்தாபனத்துக்கு ஈடான உபபத்தியும்-410- -ஐதிக்யமும் -411-
இவ் வர்த்த உபபாதன அர்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும் -412-
இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு சத்ருசமாகக் கொள்ள வேணும் ப்ராபகம் என்னும் அதுவும் -425-
அல்லாத போது வரும் -தூஷணமும் -426-
ஈஸ்வர விஷயத்தில் இவனுக்கு உள்ள சரணவத் பாரதந்த்ர்ய அனந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு -427-
ஈஸ்வரனைப் பற்றும் அதில் இவனைப் பற்றும் அதுக்கு உள்ள விசேஷமும் -428-
ஈஸ்வர சேதனர்கள் இருவருக்கும் இவன் உபகாரகன் என்றும் -429
ஈஸ்வரனும் ஆசைப்படும் பதத்தை உடையவன் என்றும் -430
இவன் பண்ணும் உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரம் இல்லை என்றும் -432
இவனோட்டை சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்றும் -433
ஈஸ்வரனை உபகரித்த இவனிலும் -இவனை உபகரித்த ஈஸ்வரனே மகா உபகாரகன் -என்றும் -436
இவ் ஆசார்ய வைபவமும் -ஆத்ம குணம் உண்டானாலும்
ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ்கில் அந்த பிரயோஜனமும் அவத்யகரமும் ஈஸ்வர நிஹ்ரக ஹேதுவாம் படியும் -437-438-439-
ஆசார்ய சம்பந்த விச்சேதத்தில் பகவத் சம்பந்த த்வர்பலமும் -440-
ஆசார்ய அன்வயத்துக்கும் பாகவத சம்பந்தம் அபேஷிதம் என்னும் அதும் -441-442-443-
ஆசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்னும் இடத்தில் -ஆப்த உபதேசமும் –
இவ் வர்த்தத்தினுடைய ஸ்தீரீகரணமும்-444-445-
இவ் வாசார்ய அபிமான நிஷ்டனான அவன் சுலபமான இவ் விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை ரஷகமாக விஸ்வசிக்கக் கடவன் அல்லன் -என்றும் -448-
பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் -என்றும் -450-
இவனுக்கு பிரதிகூல அநு கூல அநு பயர் இன்னார் என்றும் -451
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கு விநியோகமும் -452-
இவனுக்கு நிஷித்த அனுஷ்டானமும் 453–விஹித போகாதிகளும் -த்யாஜ்யம் என்னும் இடமும் -455-
ஸ்வரூப பிரஸ்யுதி வாராமைக்கு வேண்டும் அவஸ்தையும் -457-
ப்ராப்ய பூமி ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அதுவும் -458-
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார உபாய த்வய பிரமாணங்களும் -459-460-
ஆசார்ய அபிமானத்தின் ஸ்வ தந்திர உபாயத்வமும் -461-
தத் அதிகாரி நிர்ணயமும் -462-
இவ் ஆச்சார்ய அபிமானம் இச் சேதனனுக்கு உண்டாக்கும் பல பரம்பரையும் 463–சொல்லுகையாலே -சதாச்சார்ய அபிமானமே சர்வருக்கும் உத்தாரகம் -என்னும் இடம் சொல்லப்பட்டது –

ஆக
இத்தால்
வாக்ய த்வயயோ உக்யதா- உபாய உபேய -சரம அவதியை -அருளிச் செய்தார் ஆயிற்று –
வாழி ஸ்ரீ பிள்ளை உலகாசிரியன் —
வாழி திருமழிசை அண்ணா அப்பன் ஐயங்கார் ஸ்வாமி -ஸ்ரீ ரகுவரர் வாழி –
நேர் பொருளும் நீள் கருத்தும் அருளி -பார் பகர் தென்னெறியால் தமிழ் வழங்கியவர் வாழி 
வாழி ஆய் ஸ்வாமிகள் –
வாழி ஸ்ரீ மணவாள மா முனிகள் —

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –450-456- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது -நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் – படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

இப்படி ஸூலபமான ஆசார்ய விஷயம் ஸ்வ ரஷணத்துக்கு உண்டாய் இருக்க
இத்தை உபேஷித்து துர்லபமான பரத்வாதிகளை வாஞ்சிக்க கடவன் அல்லனே ஆகிலும் –
ப்ராப்யத்வேன அவை இவனுக்கு வாஞ்சநீயங்கள் அன்றோ என்ன -அவை எல்லாம் ஆசார்யனே என்று இருக்கக் கடவன் -என்கிறார் –

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யரே பிராப்தம் -அனுபவத்துக்கு போக்கு வீட்டு வைகுண்ட செல்வனார் மேல் -ஏதத் ஸாம கானம் 
ஆர்த்தி உடன் -கூப்பீட்டு கேட்க்கும் இடம்
துடித்து எழுந்து அரை குலைய குதித்த அவதார ஸ்தலங்கள்
கண்ணையும் மனத்தையும் வளைக்கும் அர்ச்சை
தேனும் பாலும் -நிரதிசய போக்யமான அந்தர்யாமி ஓவாத ஊணாக ஊட்டும்-நின்ற ஒன்றை உணர்ந்து
பரமபதம் இத்யாதிகள் ஸ்தலம் -இங்கு -இடம் தான் -அனைத்தும் ஆச்சார்யர் திருவடி –
பகவத் அபிமத ஸ்தலம் -விமல சரம திருமேனியை -குற்றம் அற்ற கடைசியான விக்ரஹம் -திருவடி உப லக்ஷணம் –
அன்றிக்கே–பிரகாரம் நிலைகளைப் பற்றி
அவனுக்கும் தனக்கும் வகுத்த இடம்-ஆச்சார்யரே உபாயம் உபேயம் முக்த கண்டம் –
பகவானுக்கும் ஆச்சார்யர் -அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அவனுக்கும் உத்தேச்யம்
மனக்கடலில் வாழ வல்ல என் மாய -வ்யூஹம்
வில்லாளன் என் நெஞ்சத்து உள்ளான் -விபவம்
ஒருவன் அடியேன் உள்ளான் அந்தர்யாமி
திருவேங்கடமே எனது உடலே -அவனுக்கும் நமக்கும் இதுவே வகுத்த இடம் -அடியார் திருமேனியையையே விரும்பி உள்ளான் -)

அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –
நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –
திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே -இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
ஏஷாம் இந்தீவரஸ்யாமோ ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டத -என்றும் –
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் –
சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –
இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் -தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-

வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் – ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய வியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–

அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே -அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று
இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்கவுமாம் —

———————————————

ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகத்வ -ஸ்வரூப வர்த்தகத்வ –
தத் உபய ரஹீதத்வங்களாலே -பிரதிகூலராயும் -அனுகூலராயும் -அநு பயராயும்-
இருக்கும் அவர்களை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

சரம அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகர் பிரதிகூலர் -விபரீத அந்யதா ஞானிகள் -ஸ்வ தந்த்ரர்கள் தேவதாந்த்ர பரர்கள்
ஸ்வரூபம் வளர்க்கும் அனுகூலர் -உண்மையாக உணர்த்தும் சரம அதிகாரிகளான ஆச்சார்ய பரதந்த்ரர்
ஆச்சார்யர் பாரதந்தர்யம் அற்ற கேவல ஈஸ்வர பரதந்த்ரர்-உபேஷனீயர்
சம்பாஷணாதி அயோக்யர் ஸஹவாஸி அயோகியர் -பிரதிகூலர்
சதா அனுபவ யோக்யர்-அனுகூலர்

அதாவது –
இப்படி ஆசார்ய அபிமான நிஷ்டனாய் -பரத்வாதி பஞ்சகத்திலும் உள்ள ப்ராவண்யம் உடைய -இவ் விஷயத்திலே ஒரு மடைப் படுத்தி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் இவ் வதிகாரிக்கு –
அணுகில் ஆத்ம நாசத்தை பிறப்பிக்கும் பிரதி கூலர் -ஆத்ம அபஹாரிகளான ஸ்வ தந்த்ரரும் –
பாரதந்த்ர்யத்துக்கு இசைந்து வைத்தே பகவத் வ்யதிரிக்த தேவதைகளுக்கு பாரதந்த்ரமாய் இருக்குமவர்களும் —
 ஸ்வ சம்சர்க்கத்தாலே ஸ்வரூபத்தை வளர்க்கும் அனுகூலர் –
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து -தச் சரம அவதி நிஷ்டரான சதாசார்யா பரத்ந்த்ரர் –

இப்படி ஸ்வரூப நாசகரும் ஸ்வரூப வர்த்தகரும் அல்லாமையாலே -வெருவதலுக்கும் விருப்பத்துக்கும் விஷயம் அல்லாத வுபேஷணீயர் –
சரம பர்வமான ஆசார்ய பாரதந்த்ர்யத்தில் ஊற்றம் அன்றியிலே பிரதம பர்வமான பகவத் பாரதந்த்ர்யத்தில் ஊன்றி நிற்கும் அவர்கள் -என்றபடி –

பிரதிகூலரை சொல்லுகிற இடத்தில் -ஸ்வ தந்திர தேவதாந்திர பரதந்த்ரர் இருவரையும் சொன்ன இது –
பிரபத்தி பிரகரணத்தில் சொன்ன மற்று உள்ள பிரதிகூலருக்கும் உப லஷணம்-
பிரதம பர்வ நிஷ்டனுக்கு பிரதிகூலரான அவர்கள் இவனுக்கு பிரதிகூலர் அல்லாமை இல்லை இறே –

இத்தால் கீழ் பகவத் பிரபன்ன அதிகாரிக்கு -சஹவாச தந் நிவ்ருத்திகளுக்கு உறுப்பாக அனுகூல பிரதிகூல தர்சனம் பண்ணு வித்தாப் போலே –
ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனுக்கும் சஹவாச நிவ்ருத்தி விஷயமான பிரதிகூலரையும் -சஹவாச விஷயமான அனுகூலரையும் -தர்சிப்பித்து –
தத் அதிகமான வுபேஷணீய விஷயமும் இவனுக்கு ஓன்று உண்டு என்னும் இடம் தர்சிப்பித்தாராய் ஆயிற்று —

————————————————-

இவ் வதிகாரிக்கு உண்டாக வேண்டும் பிரதிபத்திய அனுஷ்டானங்களை பல படியாலும் அருளிச் செய்தார் கீழ் –
இந்த பிரசங்கத்திலே -அந்ய உபாய நிஷ்டருடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -உண்டான விநியோக விசேஷத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-நாராயணனே நமக்கே பறை தருவான் -அடுத்து செய்யும் கிரிசைகள் -அதிகாரி விசேஷணம் -சித்த உபாயம் நழுவாமல் இருக்க –
சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் -எதற்கு –
அதிகாரி எதிர்பார்க்காமல் ஆச்சார்யர் -அருளுவதால் உபேய அங்கமாய் இருக்கும் –
நம்பிள்ளை மரத்தை தொட்டு முக்தி -அளித்தார் -அரங்க மாளி இடம் நீர் என்னை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -ஸ்ரீ பாஷ்யகாரர் –
பசுர் மனுஷ்ய பஷி வா –ஆச்சார்யர் சம்பந்தம் மூலம் –
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்
அதிகாரம் உண்டேல் அவன் -உபாயம் உண்டேல் என்று சொல்ல வில்லை -பிரபன்னனுக்கு அவன் அருளுவான் -உபாயாந்தர ப்ரச்னம் இல்லை –
எதி-யத்னம் செய்பவர்களில் பிரதானர் எதிராசர் என்றவாறே -ஊமை செவிடருக்கும் அருளினார் –
ஜடாயு -ஞானம் அனுஷ்டானம் நிறைய இருந்ததே -ஸ்ரீ ராம கைங்கர்ய நிஷ்டர் -சம்பாதியும் உதவினார் முதலிகளுக்கு —
அதிகாரி சாபேஷமும் இல்லை ஆச்சார்யர் இடம் –
பிராப்தி அனுபவ காலத்தில் ப்ரீதி வளர்க்க திரு முக மலர்த்திக்கு ஞானம் அனுஷ்டானங்கள் அனுபவம் ரசிக்க –
ப்ராப்ய அந்தர்பூதமாய் ஞான அனுஷ்டானங்கள் -உபேய அங்கமாய் இருக்கும் -மற்றவர்களுக்கு உபாயம் நழுவாமல் இருக்க வேண்டும் –
ஆச்சார்ய அபிமதமாய் கொண்டு ஞான அனுஷ்டானங்கள் -இந்த சரம அதிகாரிக்கு போகம் வளர்க்க
மற்றவர்களுக்கு இவை உஜ்ஜீவனம் -அன்ன பானாதிகள் ஜீவனம்
இந்த சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் ஜீவனம்
ப்ராப்யமாயும் பிராப்ய அங்கமாயும் என்று இரண்டு நிர்வாஹம் -ஆச்சார்ய முக மலர்த்தியே பிராப்தி அன்றோ
சம்பாவித ஸ்வ பாவங்கள் ஞான அனுஷ்டானங்கள் -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -தான் ஞான அனுஷ்டானங்கள் சப்தத்தால் இங்கே)

அதாவது –
தத்வ ஞானமும் -தத் அநு ரூபமான அனுஷ்டானமும் -ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனை ஒழிந்த அதிகாரிகளுக்கு –
உபாயம் அதிகாரி சாபேஷம் ஆகையாலே -உபேய ப்ராப்தி அளவும் -உபாய அதிகாரம் நழுவாமல் நடக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு –
அவ்வழியாலே உபாய சேஷமாய் -இருக்கும் –

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்  ஆகையாலும் -உபாய அதிகார சேஷமாக வேண்டுவது ஓன்று இல்லாமையாலே –
இவ் வதிகாரிக்கு உண்டான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் ஆசார்யன் முக மலர்த்தி ஆகிற உபேயத்துக்கு சேஷமாய் இருக்கும் -என்கை –

இவனுக்கு உபேயமாய் இருக்கும் என்ற பாடம் ஆனபோது -ஆசார்யனுக்கு அபிமதமாய் கொண்டு இவை தான் அவனுக்கு உபேயமாய் இருக்கும் -என்றபடி –

———————————————-

இப்படி ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் -ஆசார்ய ப்ரீதி ஹேதுவாக நினைத்து
குறிக் கொண்டு வர்த்திக்கும் இவ் வதிகாரிக்கு அவஸ்யம் நிவர்தநீயங்களை அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி -பிரதமம் -நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

(ஆயி ஸ்வாமிகள்-மேல் படியில் இருக்கும் இந்த பஞ்சம -சரம அதிகாரி -இவனை பார்த்து மற்றவர்கள் செய்வார்களே –
ஞானம் அனுஷ்டானம் ஜீவனமாக கொண்ட இந்த அதிகாரி -அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானங்கள் –
சரம அதிகாரியான தன்னையும் -தன்னைக் கண்ட பிறரையும் நசிப்பிக்கும் –
மீண்டு வர முடியாத படி -ஆகையால் வாசனையுடன் விட வேண்டும்-அனைத்து அதிகாரிகளுக்கும் சாதாரணமான நிஷித்த அனுஷ்டானம் இங்கே சொல்லிற்று -)

அதாவது –
ஏவம் பூதனான இவ் வதிகாரிக்கு -பரதார பரிஹரகாதி நிஷித்த அனுஷ்டானம் –
ஸ்வ விநாசத்தையும்-ஸ்வ அனுஷ்டானம் கண்டவருடைய விநாசத்தையும் –
பண்ணுகையாலே -பரி த்யஜிக்க படுமது ஓன்று என்கை-

————————————————

உபய விநாசமும் இத்தாலே வருகிறபடி எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும்

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூபம் அழியாதே -நசிப்பது என்பது பின்னடைவு –
நிஷித்த அனுஷ்டானத்தில் பயம் கேட்டு அந்வயிப்பதால் பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரம் –
தனக்கு பிராமாதிகமாய் அறியாமல் செய்த அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டாதானம் கண்டு அநாதரித்தும்
ஞானியான இவன் செய்ய நாம் செய்தால் என் என்று -நோ இதராணி-ஆதரித்து பண்ணும் நல்லத்தை மட்டும் பின் பற்ற வேண்டுமே –
வேணும் விவேக ஞானமும் வேணும் –
தேஜஸ் குற்றங்களை மறைக்கும் -தெரியாமல் செய்த குற்றங்கள் -இவனுக்கு -பார்த்து பிறர் அநர்த்தம் படுவார்கள் –
ஆகையால் அறியாமலும் நிஷித்த அனுஷ்டானங்கள் தவிர்க்க வேண்டுமே
அவனுக்கு அது கிடையாது என்னும்படி அன்றோ உயர்ந்த நிலை சரம பர்வ நிஷ்டனுக்கு)

அதாவது –
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி –
பகவத் -பாகவத -ஆசார்ய -விஷயங்கள் மூன்றுக்கும் -அபிமத விஷயமாய் இருக்கிற தான் நசிக்கிறது –
அம் மூவருக்கும் அது அநிஷ்டம் ஆகையாலும் -அபசாரம்-ஆவது -அநிஷ்ட கரணம் ஆகையாலும் –
அதி க்ரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கையாலே –

பிறர் நசிக்கிறது -சரம பர்வ பர்யந்தமாக வந்து நிற்கிற பாகவத உத்தமனான தன்னை நிஷித்த அனுஷ்டானம் பண்ணினான் என்று அநாதரித்து-
தத்வ வித்தான இவன் இப்படிச் செய்கிறான் -இதில் தோஷம் இல்லையாகப் பட்டன்றோ -நமக்கு பின்னை என் என்று –
தன்னுடைய அனுஷ்டானத்தை தாங்கள் அங்கீகரித்தும்  -என்கை —

அநாதரிப்பார் பாகவத வைபவம் அறியாதவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிப்பார் -ப்ராப்த ப்ராப்ய விவேக ஸூன்யர் ஆனவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிக்கிறவர்கள் நசிக்கிறார்கள்-அநாதரித்தவர்கள் நசிப்பான் என் –
தோஷம் கண்டால் அநாதாரிக்கல் ஆகாதோ என்னில் –
ராஜ புத்ரனனுக்கு தோஷம் உண்டானால் -ராஜா தான் சிஷித்து கொள்ளும் அது ஒழிய
அவனை அநாதரித்தவர்கள் மேலே நிக்ரஹம் பண்ணி தண்டிக்குமா போலே –
ஸ்வ அபிமதனான இவனுக்கு தோஷம் உண்டானாலும் -சர்வேஸ்வரன் தானே திருத்திக் கொள்ளும் அது ஒழிய
பிறர் அநாதரிக்க பொறாமையாலே- அநாதரித்தவர்களுக்கு விநாசமே பலிக்கையால் அநாதரிகல்  ஆகாது –

அபிசேத ஸூதுரா சாரோ பஜதேமாம நந்யபாக் சாதுரேவச மந்தவ்யஸ் சம்யக்வ்யவஹி தோஹிச-என்று
பாஸக விஷயமாக அருளிச் செய்தபடி கண்டால்-எல்லை நிலத்தில் வந்து நின்ற இவ் வதிகாரி விஷயத்தில் இவன் இருக்கும்படி சொல்ல  வேண்டா இறே-

ஆகையால்-
இப்படி தானும் பிறரும் நசிக்கும்படி இருக்கையாலே -இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் பரித்யாஜ்யம் -என்றது -ஆயிற்று –

———————————————

இப்படி பரதாராதி போகம் -ஸ்வ -பர -விநாச ஹேது வாகைக்கு அடி -சாஸ்திர நிஷித்தமாகை -இறே –இங்கன் அன்றிக்கே -சாஸ்திர விஹித விஷயமான -ஸ்வதார போகத்துக்கு குறை இல்லையே -என்ன -அருளிச் செய்கிறார் -மேல் –

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்கச் செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

(ஆயி ஸ்வாமிகள்-சாஸ்திரம் விஹிதம்-விசிஷ்ட விஷயம் -வர்ணாஸ்ரமம்-சரீரத்துடன் உள்ள ஆத்ம வேஷம் -நிஸ்க்ருஷ்ட சாஸ்திரம் ரஹஸ்ய த்ரயம் தானே –
கணவனும் மனைவியும் -நிலம் கீண்டதும் -சொல்லிப்பாடி -அது குற்றம் இல்லை -அநந்ய போகத்வ ரூபம் -ஸ்வரூபம் விருத்தம் ஆகக்கூடாதே
நிரந்தர ஸ்னேஹ ரூபம் -பக்த்யா அநந்யா ஸ்நேஹம்-வேதாந்தம் விதிக்கும் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சிந்தனை வேணும்
அந்தரம் -நடுவே குறுக்கே -அநந்தரம் தடங்கல் இல்லாமல் – அநந்யத்வம் பங்கம் உண்டாகும் 
எம்பார் போல்வார் -விசிஷ்ட வேஷத்திலும் -எங்கும் இருட்டு காண வில்லையே விரக்த அக்ரேஸர்-கைங்கர்யம் முகப்பே கூவி பணி -அர்த்தி அபேக்ஷ நிரபேஷமாய் இருக்குமே)

அதாவது –
விசிஷ்ட வேஷ விஷயீயான சாஸ்த்ரத்தாலே விதிக்கப் பட்ட -ஸ்வ தாரத்தில் போகம் -தாத்ருச சாஸ்திர நிஷித்தமான -பர தார போகம் போலே –லோக விருத்தமும் -அன்று –
செம்பினால் இயன்ற பாவையை தழுவுகை முதலான கோர துக்க அனுபவம் பண்ணும் நரக ஹேதுவும் அன்று —
இப்படி ப்ரத்யஷ பரோஷ சித்தங்களான லோக விருத்த நரக ஹேதுக்கள் இரண்டும் அற்று இருக்கச் செய்தே -அநந்ய போகாத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய் -சாந்தோதாந்த உபதர ஸ்திதி ஷூச்சமாஹிதோ பூத்வாத்மந்யே வாத்மானம் பஸ்யேத்-இத்யாதிகளாலும் –
திருமந்த்ராதிகளாலும் -உபாசகனோடு பிரபன்னனோடு வாசி அற-இருவருக்கும் -விஷய போகம் ஆகாது என்னும் இடத்தைப் பிரதிபாதிக்கிற -வேதாந்தத்துக்கு விருத்தமாய் -தோஷ தர்சனத்தாலும் -அப்ராப்த்த தர்சனத்தாலும் -விஷய போகத்தை அறுவறுத்து   இருக்கும்
ஆசார்ய பிரதானரான சிஷ்டர்களாலே ஹேயம் என்று நிந்த்திக்ப் பட்டு இருக்குமதாய் -அப்ராப்த விஷய விரக்தி பிரியனான ஆசார்யனுக்கு அநபிதம் ஆகையாலே –
ஆசார்ய முக கமல விகாச அனுபவ ரூப ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமாய் -இப்படி அநேக அநர்த்தா வஹமாய் இருக்கையாலே -இவ் வதிகாரிக்கு பரித்யாஜ்யம் -என்றபடி –

——————————————

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்
ஸ்வரூபம் குலையும் –

பித்ரு கடன் –தீர்க்க -தர்ம புத்தயா -செய்தாலும் -ஸ்வரூபம் குலையும் –
விஹித போகத்தால்-பிரஜைகளால் -இவை பிரபன்னனுக்கு இல்லை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றதோடு விரோதிக்கும் –
தேவ ரிஷி பித்ரு கணங்களுக்கு கிங்கரன் அல்லனே பிரபன்னன் –
கீழே நின்ற நிலைக்கே இல்லாத போது இங்கு சொல்ல வேண்டுமோ –
பகவத் ஏக போக ஸ்வரூபம் குலையக் கூடாதே

அதாவது –
விஹித விஷய பிரவ்ருத்தியில் காமுகதயா வரும் போக்யதா புத்தியை விட்டு -உபாசகரான மகரிஷிகள் தொடக்கமான சிஷ்டர்
பைத்ரு கருண மோசக பிரஜோத் பாதந அர்த்தமாகவும் -ஸ்நான திவசத்தில்  அங்கீகரியாவிடில் ப்ப்ரூனஹத்யாதி தோஷம் உண்டு என்னும்  அத்தைப் பற்றவும் -தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்குமா போலே –
இவனும் அப்படி தர்ம புத்த்யா ப்ரவர்த்தித்தாலும் சித்த தர்ம நிஷ்டனான இவனுக்கு -அந்ய தர்ம அந்வயம்-விரோதி ஆகையாலே –
அநந்ய உபாயத்வ  ரூபமான ஸ்வரூபம் குலையும் -என்கை-

இத்தால்-
போக்க்யதா புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய போகாத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமோ பாதி – தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய உபாயத்வ ரூபமான ஸ்வரூபம் -குலையும் என்கை —

ஆன பின்பு ஒருபடியாலும் -இவ் அதிகாரிக்கு விஹித  விஷய பிரவ்ருத்தி ஆகாது என்றது -ஆயிற்று –

ஆகையாலே
ஏதேனும் ஒருபடி அன்வயித்தாலும் ஸ்வரூப ஹானி தப்பாது – ஆன பின்பு பரித்யஜிக்க வேணும் என்னும் இடம் நிச்சிதம் -இறே-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –441-449- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –
பெரும்குடி என் என்னில் –

இப்படி ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய -பகவத் சம்பந்தம் லபியாமையாலே –
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு இரண்டும் வேணும் என்னும் அத்தை தர்சிப்பித்த அநந்தரம்-
பாகவத விஷய சம்பந்தமும் அவ்வோ பாதி இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அத்தை
தர்சிப்பிக்கைக்காக தத் விஷயநத்தை அனுவதிக்கிறார்

அதாவது –
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு -பகவத் சம்பந்த ஸ்தாபாகமான ஆசார்ய சம்பந்தமும் –
தத் ஸ்தாபிதமான பகவத் சம்பந்தமும் ஆகிய உபயமும் போராதோ-
ப்ராப்ய மத்யம பர்வ உக்த தயா -நடுவில் பெரும்குடி போலே இருக்கிற பாகவதர்களோடே-சாத்விகைஸ் சம்பாஷணம் -என்கிற
சம்பந்தம் அத்தை பற்ற வேண்டுவது என்கிறதாகில்-என்கை –

பாகவத சமுதாய சம்பந்தம் -நமஸ் ஆழ்ந்த அர்த்தம் -எதுக்காக -ஆச்சார்ய பிராப்திக்காகவா பகவத் பிராப்திக்காகவா -ப்ரச்னம்-

——————————————-

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –
சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

இப்ப்ரசனத்துக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது
உபக்ந அபேஷமாய் வளருவதொரு கொடியை அதின் பரிணாமத்துக்கு எல்லாம் இடம் கொடுக்கத் தக்க பெரியதொரு பக்நத்திலே
சேர்க்கும் போது-முதலிலே அது தன்னோடே சேர்க்கப் போகாமையாலே-தரைப் படாமல் முந்துற -தான் இதுக்கு ஆஸ்ரயமாய் கொண்டு –
அணுகி நின்று தன்னோட்டை அந்வய முகேன கொள்கொம்பில் கொழுந்துவிக்கும் சுள்ளிக்கால் அபேஷிதம் ஆகையால் –
கோல் தேடி யோடும் கொழுந்து போலே -அபிமுகனான இச் சேதனன் -ஆஸ்ரித தப்பதியாமல் உத்தரிப்பிக்கும்
மகத ஆசார்யன்( பேராளன் பேரோதும் பெரியார் ) திருவடிகளில்
அன்வயிக்கும் போது -முதலில் ததன்வயம் சித்திக்கை அரிது ஆகையாலே -முந்துற தாங்கள் அசந்னராய் நின்று -தங்களோடு இணைக்க வைத்து –
அவ்வழி யாலே ஆசார்ய விஷயத்தில் சேர்க்கும் -பாகவதர்களோட்ட சம்பந்தம் அவஸ்ய அபேஷிதம் -என்கை–
இப்படி ஆசார்ய அன்வயத்துக்கு அடி பாகவதர்கள் ஆகையால் -ஆசார்ய லாபம் பகவானாலே -என்பான் ஏன் என்னில் -அதுக்கு குறை இல்லை –
பாகவத அன்வயம் தனக்கு அடியவன் ஆகையாலே -ஆபிமுக்க்ய பர்யந்தமாக தானே கிருஷி பண்ணிக் கொண்டு வந்து –
பின்னை பாகவதர்களோடு இணக்கி -அவ்வழியாலே இறே அவன் தான் ஆசார்ய விஷயத்தில் சேர்ப்பது –
இது இத்தனையும் இவர் அருளி செய்த த்ருஷ்டாந்தத்திலே சித்தம்-
(அத்வேஷம் ஆபீ முக்கியம் -பர்யந்தம் தானே -மேலே பாகவதர்கள் மூலம் )
எங்கனே என்னில் –
சேதனனை- கொடியினுடைய ஸ்தாநே யாகவும்-
பாகவதர்களடைய சுள்ளிக் காலினுடைய ஸ்தாநேயாகவும் -அருளிச் செய்கையாலே
கர்ஷகனாய் இருப்பான் ஒருவன் ஸ்வ பிரயோஜன அர்த்தமாக –
முதலிலே வித்தை இட்டு -முளைவித்து -கொழுந்து விடும் அளவும் –
வளர்த்து கொண்டு போந்த தொரு கொடியை-இனி இதுக்கு இனி ஒரு பக்னம் வேண்டும் என்று
தானே யுபக்னமும் தேடி -அதிலே சென்று ஏறுகைக்கு  சுள்ளிக் காலும் நட்டு –
அவ்வழியாலே உபபக்னத்தில் சேர்க்குமா போலே –
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் -ஸ்வ பிரயோஜன அர்த்தமாக இச் சேதனனை முதலிலே  சிருஷ்டித்து –
ஈச்வரச்யச  ஸௌ ஹார்த்தம் -இத்யாதிப் படியே -க்ரமேண ஆபிமுக்க்ய பர்யந்தமாக விளைத்து –
இவனுக்கு ஓர் ஆசார்யனையும் இன்னான் என்று -தானே திரு உள்ளம் பற்றி –
அவனோடு சேரும் பாகவதர்களோடு முதல் அன்வயிப்பித்து –
அவ்வழியாலே ஆசார்ய விஷயத்தில் அன்வயிப்பிக்கும் என்னும் இடம்
தோற்றுகையாலே-கொள்கொம்பிலே ஏறவிட்ட கர்ஷகனுக்கே -அந்த கொடியால் உள்ள பிரயோஜனம் போலே –
ஆசார்ய விஷயத்தில்  ஈஸ்வரன் சேர்த்த சேதனனால் உள்ள  பிரயோஜனமும் ஈச்வரனது என்னும் இடமும் பலிதம் –
இனி அசேதனமான கொள்கொம்பு போல் அன்றியே -சேதன உத்தமனான இவ் ஆசார்யன் தானும் பர சம்ருத்த்ய ஏகபரன்
ஆகையாலே -ஸ்வ சேஷியான ஈஸ்வரனுடைய பிரயோஜனமே ஸ்வ பிரயோஜனமாக நினைத்து இருக்கும் இறே –

வளர் இளம் கொடி-ஆத்மா –சுள்ளிக்கால் -போலே–கோல் தேடி ஓடும் கொழுந்ததே போலே மால் தேடி போகும் –
அபி முகனான இவனுக்கு ஆச்சார்ய சம்பந்தம் பெற –ததீய சம்பந்தம் -நடுவில் –
அப்புறம் நடுவில் தருவித்துக் கொள்ள வேண்டும் -பகவத் ப்ரேமம் வளரவும் இந்த சம்பந்தம் திடமாக இருக்கவும் –
போதயந்த பரஸ்பரம் சம்சாரத்தில் வேண்டுமே –
பாகவதர்கள் -மூன்று கர்தவ்யம் -ஆச்சார்யர் இடம் சேர்ப்பித்து –
அப்புறம் தேவதாந்த்ர சம்பந்தம் வராமல் பக்தி ஞானம் வளர்க்க –
அங்கும் அந்தமில் பேரின்பத்து அடியவரோடு கைங்கர்யம் வர்த்தகத்துக்கு -வேண்டும் –
ஆச்சார்ய சம்பந்தம் ததீய சம்பந்தம் ஒன்றுமே போதும் –
பகவத் ஸமாச்ரயணத்துக்கு இரண்டும் வேண்டும் -கையைப் பிடித்து கூட்டிச் செல்பவர்கள் இவர்கள் –

——————————————————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

இனி -இந்த சூரணை தொடக்கி ஆசார்ய அபிமானமே உத்தாரகம்-என்னும் அளவாக
இப்படி ததீயர் முன்னாக பற்றப் படும்  சதாச்சார்யனுடைய அபிமானமே உஜ்ஜீவனத்துக்கு
உசித உபாயம் என்று இப் பிரபந்த தாத்பர்யத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார் –

பெருவிலையான ஆபரணத்துக்கு நாயகக் கல் போலே ஆயிற்று
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு இப் பிரதேசம் நாயக ரத்னமாய் இருக்கும்படி –
இத்தனையும் அருளிச் செய்கையைப் பற்ற வதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது கீழ் அடங்கலும்-
மேல் அடங்கலும் இதில் நிஷ்டையை ஸ்தாபிககிறது–
இதில் பிரதமத்தில் –
இவ் அர்த்தம் -சத் சம்ப்ரதாய சித்தம் என்று சர்வரும் விசவசிக்கைக்கு உடலாக –
இது தமக்கு ஆப்த உபதேச லப்தம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநாதிகாலம் தானே எனக்கு நிர்வாஹன் என்று இருக்கும் தன்னுடைய துர் அபிமானத்தாலே இவன் நமக்கு சேஷம் –
இவன் கார்யம் நமக்கே பரம் என்று தன்னை -உஜ்ஜீவிப்பிகைக்கு உடலான ஈஸ்வர அபிமானத்தை அழித்து கொண்ட இவனுக்கு –
துர்கதியே பற்றாசாக அங்கீகரித்து -தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிப் போரும் பரம தயாளுவான ஆசார்யன் –
இவன் நம்முடையவன் என்று அபிமானித்து இருக்கும் அந்த அபிமானம் ஒழிய வேறு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று –
சகல சாஸ்திர சார வித் அக்ரேசரான-நம்பிள்ளை-திருவடிகளிலே பழுக்க சேவித்து -தத் ஏக பரதந்தரராய் –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -அவர் அருளிச் செய்ய கேட்டு –
தந் நிஷ்டராய் இருக்கும் நம்முடைய ஆசார்யரான பிள்ளை -தஞ்சமாக பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்றபடி –
ஆகையால்-ஆசார்ய அபிமானமே இவ் ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் -என்று கருத்து –

ரத்னம் போன்ற சூரணை இது -மேம் பொருள் பாசுரம் போலே -கீழே பெட்டி-மேலே மூடி போலே
வடக்குத்திரு வீதிப்பிள்ளை திரு வாக்கு -இவர் திருத் தமப்பனார் தானே -பலகாலும் அருளிச் செய்ய கேட்டு இருப்பார் –
நமஸ் பாத தாத்பர்யம் ததீயர் முன்னால் ஆச்சார்யரைப் பற்றி அவர் அபிமானம் உஜ்ஜீவன ஹேது –
சிர காலம் சதாச்சார்ய சேவா மூலம் பெற்ற பிரமேய சாரம்
சர்வ சமாதி பரம் சர்வேஸ்வரன் தவம் மே மதீயத்வ அபிமானம் -அஹம் மே-மன்றாடி குலைத்துக் கொண்டு-
அஸத்சமனான–நம்முடையவன் விசேஷ கடாக்ஷம் பண்ணி அபிமானம் ஒன்றே உஜ்ஜீவன ஹேது -வேறு ஒன்றும் இல்லை –
நம்மாழ்வார் அவதாரமான நம்பிள்ளை திருவடிகளில் கைங்கர்யம் செய்து -அடியேனுக்கு தஞ்சம் –
தேன் பொழிய அருளிச் செய்து வடக்குத் திரு வீதி பிள்ளை கேட்டு அருளிச் செய்து
விசேஷ கடாக்ஷ பூதர்–தத் ஏக பர தந்த்ரர் –எத்தனை தடவை ஏகாந்தமாக கேட்ட பொழுது எல்லாம் இந்த பரம ரஹஸ்யம்
அருளிச் செய்ய பிள்ளை லோகாச்சார்யார் -நெஞ்சும் செவியும் நிறைய கேட்டு –
இதுவே தஞ்சம் -என்று அறுதியிட்டு நிர்ப்பரராய் நிஸ் சம்சயனாய் இருக்கலாமே –
அஷ்டாதச ப்ரபந்தங்களில் சரம பிரபந்தம் -ஸ்ரீ வசன பூஷணம் -அதில் இது சரம வசனம் –

இவன் நம்முடையவன் என்று அபிமானித்து இருக்கும் அந்த அபிமானம் ஒழிய-ஆச்சார்யரை நாம் அபிமானத்து இருப்பதும் உஜ்ஜீவன ஹேது இல்லை –

————————————————

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

இப்படி ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை-என்பான் என்-
சாஸ்திர சித்தங்களான பக்த்த்யாத் உபாய விசேஷங்கள் உண்டே என்கிற சங்கையிலே –
இது ஒழிந்தவை எல்லாம் -இவனுக்கு உபாயம் அன்றிக்கே நின்றமையை அடைவே அருளிச் செய்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் பக்தி உபாயம் இன்றி நின்ற படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் ப்ராப்தி சாதனா தயா விஹிதையாய்  ஸ்வ யத்ன சாத்த்யையான பக்தி –
பகவத் ஏக பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தை உண்டாக்கும்
என்னும் பயத்தாலே இவனுக்கு உபாயம் அன்றியிலே நழுவி நின்றது -என்கை –

சாஸ்திரம் விதித்த பக்தி பிரபத்தி -ஸ்வரூபம் நினைக்க பயம் -ஸ்வ பர அனுசந்தான -பயம் த்வயம்
நம் தோஷ அவன் ஸ்வா தந்தர்ய அனுசந்தான த்வயத்தாலும் பயம் –
ஸ்வரூப ஹானி -பாரதந்தர்யத்துக்கு கொத்தை -பக்தி விருத்தம் –
ஸூ யத்ன சாதிய பக்தி உபாயம் உறங்குகிறவன் கையில் எலுமிச்சம் பழம் போலே தன்னடையே நழுவுமே

——————————————

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

அநந்தரம்-பிரபத்தி உபாயம் அன்றியே நின்றபடியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஸ்வ பாரதந்த்ர்ய அநு ரூபையாய்-மகா விசுவாச ரூபையான பிரபத்தி –
பந்த மோஷ உபய நிர்வாஹனான பகவான் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே
மீளவும் -கர்ம அநு குணமாக வைத்த சிந்தை வாங்குவித்து சம்சரிப்பிக்கில் செய்வது என் என்கிற மகா பயத்தாலே –
இவனுக்கு உபாயம் அன்றியிலே நழுவி நின்றது -என்கை –

பந்த மோக்ஷ ஹேது தன் இச்சைப்படியே -செய்யும் பகவத் ஸ்வாதந்தர்யம் -மஹா பயம் –
தத் விஷய மஹா விசுவாசம் குலைந்து பிரபத்தி நழுவுமே
நடுங்கினவன் நெஞ்சில் தைர்யம் போலே நினைவற நழுவுமே
ஸூவ ஸ்வரூப பர ஸ்வரூப அனுசந்தானந்தத்தால் -சரம உபாயம் ஞானம் வந்தவனுக்கு-முமுஷுவுக்கு –
பஞ்சம உபாயம் அறிந்தவனுக்கு இரண்டும் நழுவும்

———————————————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

அநந்தரம் -ஆசார்ய விஷயத்தில் ஸ்வகீய ஸ்வீகாரம் உபாயம் அன்றிகே ஒழிந்தமையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்யனையும் உபாயமாக- தான்- ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் –
ஸ்வ பலித்வ கர்த்ருத்வ ரூபமாய் -ஸ்வரூப நாசகமாய் இருக்கிற அஹங்காரத்தை உள்ளே உடைத்தாய் -இருக்கையாலே –
ஸ்வ விநாச கரமான காலனை பரிகிரஹித்து -அந்தப் பொன்னாலே அங்குள்யக தாரணம் பண்ணினால் அவத்ய கரமோபாதி
தன்னுடைய ஸ்வரூபத்துக்கு அவத்ய கரமாய் இருக்கும் -என்கை –
ஆகையால் இதுவும் உபாயம் அன்றியே நின்றது என்று கருத்து –

தூ மணி / நோற்று சுவர்க்கம் -தூங்கும் -என்றாலே பிரபத்தி -ஸூ வகத பிரபத்தி –
ஆனந்தம் ப்ரஹ்மானோ வித்வான் -ஸூ கத பிரபத்தி சுருதி வாக்கியம் -தூ மணி பாசுர விஷய வாக்கியம்
ஏஷ-அவன் யாருக்கு தன் ஆனந்தம் ஊட்டுகிறானோ -பரகத் ஸ்வீ காரம்
ஆச்சார்ய அபிமானமும் -இதே போலே ஸ்வா தந்த்ரயம் வர யோக்யதை இல்லாமல் இருக்க வேண்டுமே
அகங்கார கர்ப்பம் -ஆச்சார்ய உபாய வாரணம் -நித்ய ஸ்வாமி -அவனுடைய ஸ் வம்மான தானே –
சொத்து பிரார்த்திக்க கூடாதே -தனக்கு ஆச்சார்யர் உபாயமாக
வேணும் என்பது ஸ்வரூப விருத்தமான பற்று –ஸூ பலித்தவ -அபிமானித்து சொத்தை ஸ்வாமி கொள்ள வேண்டுமே -பாரதந்த்ரயம் சித்திக்கும் –
நாம் பலன் அடைகிறோம் என்ற உத்தி அகங்கார கர்ப்பம் ஆகுமே
ஸூ விநாசம் பாராமல் -தங்க மோதிரம் -வாங்க கூடாத காலன் பொம்மை -சாவாமல் பிழைத்தால் -அருளாழி மோதிரம் -இட்டு வாழுமோ பாதி –
பகவத் விஷயம் போலே -ஸூவ கத–குரங்கு குரங்கு குட்டி போலவும் – பரகத-பூனை பூனைக்குட்டி போலவும் இங்கும் உண்டே –
பக்தி முதல் நிலை -ஸூவகத பிரபத்தி அடுத்து -பர கத பிரபத்தி அடுத்து இதிலும் -பர ஸ்வா தந்திரம் -கொத்தை –
ஆகையால் ஆச்சார்யர் அபிமானம் -இதிலும் -பர கத ஸ்வீ காரம் வேண்டுமே –
ஆச்சார்யர் பயனுக்காக -என்றே இருக்க வேண்டுமே –
உபாயம் எதிர்பார்ப்பு பக்தியில் -அதிகாரி எதிர்பார்ப்பு -அடுத்து பிரபன்னன் இடம் –
ஆச்சார்யர் அபிமானம் இத்தையும் எதிர்பார்க்காமல் -மத் அர்த்தம் இந்த செயல் -என் பொருட்டு இது என்ற எண்ணமும் இருக்காதே –
இதில் -ஸூ பல ஸூ யத்னம் அஸஹத்வ ஸ்வரூபம் என்று உணர வேண்டும் – –
சேஷத்வம் -பலன் நம்மது இல்லை பாரதந்த்ரம் முயற்சி நம்மது இல்லை –
பகவத் அத்யந்த அபிமத -விசேஷ ப்ரீதி குலைய கூடாதே -ஸ்வரூபம் நாஸகம் அடையும்

——————————————————-

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

பாரிசேஷயாத் கீழ் தாம் அருளிச் செய்ததே உபாயம் என்று தலை கட்டுகிறார்-
(பாரி சேஷம் –பாதிப்புக்கள் இல்லாமல் -கீழே சொன்னதையும் வேறே எதுவும் இல்லாமல் இருக்க வேண்டுமே –
ஸூ கத ஸ்வீ காரமும் இல்லாமல் -என்றபடி –
சம்சாரத்தில் வெறுப்பு -பரதந்த்ரம் ஸ்வரூபம் அறிந்து -சேதனன்-சம்சார பீதி -அனைத்துக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டுமே –
ஆச்சார்ய அபிமானம் -உபாயத்தையோ அதிகாரி யோக்யதையையோ -அதிகாரியையோ எதிர்பார்க்காதே –
விசேஷ ஸாத்ய சித்தியே பாரி சேஷம் -அனைவருக்கும் பொருந்தும் -)

அதாவது –
மோஷ சாதனா தயா சாஸ்திர சித்தங்களான -பக்தியாதிகள் ஒன்றும் உபாயம் அன்றியிலே நின்ற பின்பு -நிரதிசய க்ருபாவானாய்
நிர்ஹேதுகமாக-தன்னை அங்கீகரித்து அருளி -நிரபயமாக நோக்கிக் கொண்டு போரும் ஆசார்யன்- இவன் நம் உடையவன் என்று இருக்கும்
அந்த அபிமானமே இவனை சம்சாரத்தின் நின்று நம்மை உத்தரிப்பிக்கும் -என்கை –
ஆக –
ஸ்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -என்று துடங்கி –
உபபாதித்து கொண்டு வந்த -சரம உபாய ஸ்வரூபத்தை -உள்ளபடி சோதித்து நிர்ணயித்து அருளினார் ஆயிற்று –

வேதார்த்தம் ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -தொடக்கமும் முடிவும் சேர்த்து -அருளிச் செய்கிறார் -இதுவே கடைந்து எடுத்த தாத்பர்யம் –
தரணம் தாண்டுதல் -சம்சாரம் தூண்டுவிக்கும் -உத்தாரகம் –
சரம உபாய ஸ்வரூபம் சோதனம் பண்ணி நிச்சயித்து -கல்லை ஆராய்ந்து சோதித்து போலே உமி -ஸூ கத தோஷம் இருக்கக் கூடாதே
சம்சாரம் தாண்டுவித்து ஸ்ரீ வைகுண்டத்துக்கு தூக்கி வைக்கும் -உத்தாரணம் உத்தாரகம்

—————————————————

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கைவிட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்க
கடவன் அல்லன் –

அநந்தரம் இவ் உபாய நிஷ்டனான அதிகாரிக்கு –
கர்தவ்ய அகர்தவ்ய விசேஷங்களை விஸ்தரேண அருளி செய்கிறார் –
அதில் பிரதமத்தில் -சுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை இச்சிப்பான் அல்லன் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்தன முகேன அருளிச் செய்கிறார் –

அதாவது –
கையிலே இருக்கிற தனம் போலே அதி சுலபனாய் இருக்கிற ஆசார்யனை குறைய நினைத்து –
அநாதாரத்தாலே கை விட்டு -பூமியிலே பிறர் புதைத்து வைத்த தனம் போலே –
எட்டுப் படாமையாலே -அரும் பொருள்-என்னும்படி -துர்லபமான
பகவத் விஷயத்தை ரஷகமாக பற்ற -விச்வசிக்க கடவன் அல்லன் -என்கை –
சுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே
லப்ப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தம் அந்வேஷதி ஷிதெவ்-என்றும் –
பற்றி குருவை -என்று துடங்கி –
தன் கைப் பொருள் விட்டார் யேனும் காசினியில் தாம் புதைத்த
வப்பொருள் தேடித் திரிவான் ஒத்து -என்றும்
சொல்லக் கடவது -இறே-

தீர்த்த அடியான் -சதாச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கி -அற்று தீர்ந்த -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
அத்யாவசியம் -விசேஷத்தை அருளிச் செய்கிறார் -அத்யந்த ஸூ லபம் -சீரியன் -அத்யாவசாய மாந்தியத்தால் –
மந்த புத்தி குழப்பம் -பாக்யம் அற்று விட்டு
புதைத்த பொருளாய் -எட்டுப்படாமல் துர்லபமான பகவத் விஷயத்தை உத்தேச்யமாக வருந்தி தேட கடவன் அல்லன் –
ஸுலப்யமே குறையாக நினைக்கப் பண்ணுமே -சஜாதீய பத்தி பண்ணி அநாதரித்து -அத்யாவசியம் குலைந்து –
பிறர் புதைத்த புதையலை தேடி -அரும் பொருள் -பகவத் விஷயம் ரக்ஷகன் என்று தேடி அலைந்து -வீணாகிறார்களே –
உபாயம் -கர்மாதிகளை விட்டு -அபாயம் -துர் நடத்தை பற்றாமல் -பிரதம பர்வ நிஷ்டை
அதே போலே சரம பர்வ த்தில் -தான் பற்றவும் கூடாது -ஆச்சார்யர் இடம் தோஷமும் காண முயலக் கூடாது -பிரதம பர்வ ஆஸ்ரயணம் கூடாதே –
சோதித்து அருளிச் செய்கிறார்
சுள்ளிக்கால் இத்யாதி -442-புருஷகார வைபவமும்
பூர்வ உத்தர கிரந்தங்கள் உபாயா வைபவம்
உபாயாந்தர தோஷம் -ஸூ ஸ்வதந்த்ர பர ஸ்வாதந்த்ர –உபாயாந்தர தோஷமும்
-446-ஸூ வீ கய ஸ்வீகாரம் கூடாது என்றும்
-452-சாதனத்தவ நிஷ்டை மேலே -அருளிச் செய்கிறார்

————————————–

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

இன்னமும் திருஷ்டாந்த முகத்தாலே சுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு –
துர்லபமான பகவத் விஷயத்தை ஆசைப் படுவான் அல்லன் என்கிறார் மேல் –

அதாவது –
பிபாசை விஞ்சின போது -சடக்கென பானம் பண்ணலாம்படி பாத்ர கதமாய் கொண்டு
தன் கையில் இருக்கிற ஜலத்தை சுலபதையே ஹேதுவாக அநாதரித்து-
தரையிலே உகுத்து ஆகாசச்தமாய் கொண்டு எட்டாதபடி யாயும் –
பூமி ஸ்த்தமாய் இருக்கிற தூரஸ்தமாயும்-
ஆசன்னமாய் இருக்கச் செய்தே – பெருகும் காலம் ஒழிய வற்றின காலம் இன்றிக்கேயும் –
எப்போதும் உண்டானாலும் – அவ்வளவும் சென்று ஜீவிக்க வேண்டியும் –
இருந்த இடம் தன்னிலே உண்டானாலும் கநித்ராதிகள் கொண்டு கல்லிப் பெற வேண்டி இருக்கும்
ஜீமூதாதிகளின் ஜலத்தை ஆசைப் படுமவனைப் போலே-
ரஷக அபேஷை பிறந்த தசையில் -அப்போதே தனக்கு உதவும் படி கைபுகுந்து இருக்கிற
ஆசார்ய விஷயத்தை -ஸௌலப்யமே பற்றாசாக உபேஷித்து-
பரம ஆகாச வர்த்தியாய் -துஷ் ப்ராபமாய் இருக்கிற பரத்வத்தையும் –
பூமியிலேயாயும் -ஷீராப்தி அளவும் செல்ல வல்ல வர்களுக்கு அன்றி -உதவாத வியூகத்தையும் –
ஆசன்னமாக வந்தும் தத் காலிகர்க்கு ஒழிய பச்சாத்யர்க்கு உதவாத விபவத்தையும் –
நித்ய சந்நிதி உண்டாயும் சம்பாஷணாதிகளால் இவனோடு கை கலந்து இராத -அர்ச்சாவதாரத்தையும் –
இருந்த இடம் தன்னிலே உண்டாய் இருந்ததே ஆகிலும் -யம நியம ஆதி க்ரமேண யத்நித்து தர்சிக்க வேண்டும் அந்தர்யாமித்வத்தையும் –
ஆசைப் படக் கடவன் அல்லன் -என்கை –
சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்ய ந் துய  ச்மரேத் ஹஸ்த சத்த முதகம் த்யக்த்வா கநச்தம் சோபிவாஞ்ச்ச்சதி-என்றும் –
எட்ட இருந்த குருவை இறை அன்று என்று விட்டு -என்று துடங்கி – அம்புயத்தை பார்த்து இருப்பான் ஒத்து ஞான சாரம் -33-
-என்று சொல்லக் கடவது இறே – இது வ்யூஹாதிகளுக்கும் உப லஷணம்-

கண்ணால் காணும் ஆச்சார்யர் விட்டு சாஸ்த்ர கம்யமான பகவானையே தேடி –
ஜீமுத ஜலத்தையும் -ஆகாச நீர் -ஸ்ரீ வைகுண்டம்
சாகர சலிலத்தையும் -ஷீராப்தி -ஓர் இடம் தான் இருக்கும்
சரித் சலிலத்தையும் -ஓடும் நதி நீர் போலே விபவங்கள்-காலாந்தரத்தில்
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- குளங்கள் கிணறு நீர் அர்ச்சை-அந்தர்யாமி -/
வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –
மனன் உணர்வு அவை இலன் -பொறி உணர்வு அவை இலன் -அறிந்து அறிந்து தேறி தேறி -சம்சார காட்டுத்தீ -பெரும் விடாய் பிறந்தவனுக்கு
-தெளிந்து குளிர்ந்து-நிறைந்த கரஸ்த சரஸ திவ்யோதகம் -சுலப சகல தாப கர சதாச்சார்யன் இருக்க –
அத்யந்த ஸுலப்யமே பற்றாசாக உபேக்ஷித்து -நாக்கு வற்றக் கடவன் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –