(ஸ்ரீ வசன பூஷணம் -மணி மகுட வியாக்கியானங்கள் மா முனிகள் அருளிச் செய்து –
இங்கு 53–59-பாசுரங்களால் அதன் மகிமையையும்
மேலே எல்லா பாசுரங்களாலும் அதன் சாரமும் அருளிச் செய்கிறார் –
அப்ரதிம வைபவம் -53-
இப்பிரபந்த திருநாமம் வந்த ஹேது –54-
அதிகாரி துர்லபம் -55-
அர்த்த கிரஹணம் பண்ண நமக்கு உபதேசம் –56-
இந்த ஸ்ரேஷ்ட அர்த்தம் அறிந்து அதிகாரி துர்லம் ஆனதுக்கு ஹேது –57-
இதுக்கு வியாக்கியானங்கள் -பிரபந்த கர்த்தாவின் திரு உள்ளத்துக்கு பொருந்துமாறு இருந்தால் ஆதரணீயம் –58-
ஸ்வ பர போக்யமாக இருக்கும் பிரபந்தம் -59-)
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய வைபவத்தையும் அவராலே அருளிச் செய்யப் பட்டதாய் ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரம் -என்றும் –
சாங்காகில திராவிட சம்ஸ்க்ருத ரூப வேதவ் சாரார்த்த சங்க்ரஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ திருவாய்மொழி யினுடையவும் மற்றை அருளிச் செயலினுடையவும் அர்த்தத்தை பிரதி பாதிக்குமதாய் பூர்வோக்தமான அருளிச் செயல்களின் வியாக்யான அர்த்தங்களையும் பொதிந்து கொண்டு இருப்பதாய்-
அது தான் ஸ்ரீ பகவத் அபிப்ராயம் என்னுமது தோற்ற
ஸ்ரீ பகவத் அவதார விசேஷமான அவராலே அருளிச் செய்யப் பட்டதுமாய்
ச க்ரமமாக த்வ்யார்த்த பிரதிபாதகமுமாய் சரம பர்வ நிஷ்டையை முடிவாம்படி
அத்தை முடி போலே யுடையதுமாய்-அத்தாலே அ சத்ருசமாய் இருப்பதுமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய வைபவத்தையும் பஹூ முகமாக அருளிச் செய்வாரான இவர்
சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரசா வாக்ய ஜாதம்
சர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
அகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–ஸ்ரீ வசன பூஷண தனியன்
புருஷகார வைபவஞ்ச சாதனசஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே–ஸ்ரீ வசன பூஷண தனியன்
இப்பாட்டில்-
இப்படி ஸ்ரீ லோகாச்சார்யர் என்று லோக பிரசித்தரான இவர் லோக உஜ்ஜீவன அர்த்தமாக
தம்முடைய கிருபையாலே செய்து அருளின )அஷ்டாதச ) ரஹஸ்ய பிரபந்தங்களில் காட்டில்
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான சீர்மையை அருளிச் செய்கிறார் –
(ஏழு பாசுரங்களால் சீர்மையும் அடுத்து பத்து பாசுரங்களால் சாரமும் அருளிச் செய்கிறார் )
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் யிப்போது–53-
யண்ணல்-ஸ்ரேஷ்டர் -ஸ்வாமி –
கலை-ஸாஸ்த்ரங்கள்
திராவிட வேத ஸாஸ்த்ரமான திருவாய் மொழி சாரம் -ரஹஸ்ய வேத சாஸ்திரமே ஸ்ரீ வசன பூஷணம்
கோ வா பிரபந்த இஹ லோக குரு பிரபந்த சாத்ருச மேவ சகலேஷு வாங் மயேஷு தத்ராபி கிம் வசன பூஷண துல்யம் அந்யத் இதம் வசனம் சத்யம் ந மித்யா
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன் –
தஸ்ய நாம மஹத்யச-என்கிறபடியே திரு நாமம் அடியாக வந்ததாய் இருப்பதான
எண்ணிறந்த யசஸை யுடையராய் –
ஸ்ரீ முடும்பை இறைவன் -என்னும் படி
ஸ்ரீ முடும்பை என்னும் மகா நகரத்துக்கு நிர்வாஹகரான ஸ்ரீ லோகாச்சார்யர் –
(ராஜ மந்திரி அருகில் முடும்பை கிராமம் உள்ளது
கந்தாடை என்றும் விஞ்சி மூரி என்ற கிராமமும் ஆந்திராவில் உள்ளதாம்
விஜய நகர சாம்ராஜ்யம் தான் புனர் நிர்மாணம்
ஹரிஹரர் புக்கர் தொடங்கி கிருஷ்ண தேவ ராயர்
நிறைய இடங்களை அந்தணர்களுக்கு கொடுத்து -இக்குடும்பத்தார் அங்கு போய் இருந்து இருக்கலாம் )
அன்றிக்கே –
ஸ்ரீ முடும்பை உலகாரியனான அண்ணல் -என்னுதல் –
ஸ்ரீ முடும்பை -குடிப்பேர்
கீழே ஸ்ரீ ஈயுண்ணி மாதவர் -என்றாப் போலே
இவரையும் – ஸ்ரீ முடும்பை உலகாரியன் -என்கிறது –
ஜ்ஞாநாதிகர் யுடைய சம்பந்தம் உள்ளது அடங்கலும் அடிக் கழஞ்சு பெற்று இருக்கும் இறே –
(சிறியாழ்வான் அப்பிள்ளையே ஈயுண்ணி மாதவர் )
உலகாரியன் -இன்னருளால் செய்த கலை யாவையிலும் –
இவர் அபேஷா நிரபேஷமாக தம்முடைய அஹேதுகமான கிருபையாலே யாய்த்து
அசேஷ திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்தது
அண்ணலான முறையாலே இறே இவற்றை இன்னருளாலே செய்து போந்தது –
அவை தான் அநேகங்கள் ஆகையாலே-யாவை -என்னும் அத்தனை –
யாவையிலும் என்றதுக்கு
இப்படி அருளிச் செய்த அசேஷ ரஹஸ்யங்களிலும் வைத்துக் கொண்டு
ஒரு ரஹஸ்யத்துக்கும்-
உன்னில் –
நன்றாக ஆராய்ந்து நிரூபிக்கில் –
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை –
அத் யுஜ்வலமான ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய கௌரவம் ஒன்றுக்கும் இல்லை –
அவை பல என்னும் காட்டில்-அவற்றில் ஓன்று தான் அர்த்த பூர்த்தியை யுடைத்தான
இதனுடைய பெருமைக்கு ஒப்பாக வல்லதோ –
அதாவது
ஆர்ஷ வசனங்களான அத்யாத்ம சாஸ்த்ரங்களில் காட்டில்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல் மேலாய்
அத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்று அவர்கள் அருளிச் செயலில் தாத்பர்யங்களை
வெளியிடுகிற ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகள் மேலாய்
அவற்றைக் காட்டிலும்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருளை யுடைய இவருடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகளாய் உள்ள அசேஷ ஸ்ரீ ரஹஸ்யங்களும் மேலாய்
அவற்றில் காட்டிலும்
அதிசய அர்த்த கௌரவத்தை யுடைத்தாய் இதிஹாச ஸ்ரேஷ்ட இத்யாதிப் படியே
கீழ் உக்தமான அர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கையாலே
வந்த பெருமையை யுடைத்தாகையாலே-ஸ்ரீ வசன பூஷணம் ஸ்வ பிரபந்தங்கள் பர பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் அதிசயிதமாய் இருக்கத் தட்டில்லை –
(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -5-)
ஆகையாலே இறே இவர் இப்படி அ சத்ருசமாக அருளிச் செய்தது –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகளில் காட்டிலும் இவர் திவ்ய பிரபந்தங்கள் அதிசயிதமாய் இருக்கிறது இவற்றைக் கொண்டே அவற்றின் தாத்பர்யம் அறிய வேண்டுகையாலே –
புகழ் அல்ல இவ் வார்த்தை –
புகழ வில்லை -என்னுமா போலே இப் பிரபந்தத்தை விசேஷமாக சொல்லுகிற இவ் வார்த்தை-கேவலம் அர்த்த வாதமாய் ஸ்துதி பரமாய் இருப்பது ஓன்று அன்று –
மெய் யிப்போது-
இப்போது இதன் வைலஷண்யத்தை நிரூபித்துச் சொல்லுகிற இப் பிரபந்த விஷயமான வார்த்தை சத்தியமே –இவர் தாம் பொய் இல்லாதவர் ஆகையாலே மெய் இப்போது -என்று இவ் வர்த்தத்தின் உடைய ஆப்திக்கு உடலாக சத்யம் பண்ணி சாதித்து அருளுகிறார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை என்கிற வார்த்தை
மெய் – சத்யம் சத்யம் -என்னுமா போலே –
இத்தால்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பல என்னுமதுவும்
அவற்றிலும் ஸ்ரீ வசன பூஷணம் அ சத்ருசமான வைபவத்தை யுடையது என்னுமதுவும்
த்யோதிக்கப் பட்டது –
—————————————-
ஏவம் வித வைலஷண்யத்தை யுடைய இப்பிரபந்ததுக்கு வக்தாவானவர் தாமே
தத் அனுகுணமாக திருநாமம் சாத்தின படியை அருளிச் செய்கிறார் –
(காரணப் பெயர் என்னலாம் படி திரு நாமம் சாத்தி அருளினார் என்றபடி )
(திரு சேர்த்தே -திரு வாராதனம் -ஸ்ரீ குண ரத்ன கோஸம் -ஸ்ரீ வசன பூஷணம்
டன் வந்தான் கதை -திருவரங்க சுத்தி மொத்தமும் களவு -திரு வேண்டாம் சொன்னதால் மொத்த திருவும் போனதே )
(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் என்ன –-இது ஒன்றே மோக்ஷ ஏக ஹேது -ஆகவே ஏவ காரம் –அவனது அபிமானம் மோக்ஷம் பந்தம் இரண்டுக்கும் ஹேது ஆகுமே-உலக விஷய தோஷ தர்சனம் -பகவத் விஷயத்தில் எளிதாக மூட்டும்
இங்கு பகவத் ஸ்வா தந்தர்யம் அறிந்து ஆச்சார்யரைப் பற்றுவது அடுத்த படி-அதுக்கும் மேலே ஆச்சார்யர் நம் மேல் வைக்கும் அபிமானம் –-மக்நான் -உத்தாரதே -ஏக காரணம் -ஸஸ்த்ர பாணிநா -அவனே ஆச்சர்யராக -திரு அவதாரம் -)
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் –54-
(என் என்னு -பாட பேதங்கள்
சீர் -வைபவம் உடைய
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே-ஸ்ரீ வசன பூஷணமாக அருளிச் செய்து அருளிய
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரே -தாமே ஆத்மாவுக்கு அன்றோ இப் பூஷணம்-ரத்னம் -வைரம் போல் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்-அதுக்கு தங்கம் போல் இவரது ஸ்ரீ ஸூக்திகள் )
பிராதாம்
பிரபத்தி பதவீம் மயதாம்
குரு நாம் ரோஹிஷ்ணுநா
வசன ரத்ன கதம்ப கேந
ஏதாம் க்ருதிம்
ஹ்ருதய
புத ஆத்ம பூஷாம் -கற்றோர் -கல்வி தனில் ஆசை உள்ளோர் –
தத்தம் வரம் வசன பூஷண நாமதேயம் –
முன்னம் குரவோர் –
பூர்வ காலத்திலே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு அவ்வருகு உண்டானவர்களாய்
நமக்கு நாதரான ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் சர்வ ஆத்மாக்களுடையவும் ஹிதத்தைக் குறித்து
அருளிச் செய்த திவ்ய ஸூக்திகள் தன்னை மிகவும் தத் பிரசுரமாம் படி ( பிராஸுர்யம் -நிறைந்து ) இதுக்கு ஆப்த பிரமாணமாக ( பிரம-உண்மை ஞானம் -கரணம் -கருவி ) அங்கீ கரித்து யாய்த்து இவர் இத்தை பிரபந்தீ கரித்தது -என்கை –
மொழிந்த வசனங்கள் –
ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசகமாக அருளிச் செய்த திவ்ய வசனங்களை –
அவர்கள் தாம் பலர் ஆகையாலே ஆப்திக்கு உடலான அவர்கள் வசனங்களும் பலவாய் இருக்கிறபடி –
வசனங்கள் தன்னை மிகக் கொண்டு –
தர்மஜ்ஞ்ஞஸ் சமய பிரமாணம் வேதாச்ச-(மனு ஸ்ம்ருதி ) -என்கிறபடியே
அல்லாத பிரமாணங்கள் அநேகங்கள் யுண்டாய் இருக்கவும் அதில் அனுஷ்டாதாக்களான இவர்களுடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-அத்தை இதுக்கு முக்ய பிரமாணமாக அங்கீ கரித்து அந்த வசன பிரசுரமாய் இறே இத்தை அருளிச் செய்து அருளிற்று
(மூதறியும் அம்மனைமார் -மேலையால் செய்வனகள் -செய்யாதன செய்யோம்
இதுவே முக்கியம் -வேதாஸ் ச -அதுவும் பிரமாணம் என்பர் இதுக்கு இரண்டாம் பக்ஷம் )
ரத்ன பூஷணம் சமைப்பார் பல ரத்னங்களை முந்துறச் சேர்த்துக் கொண்டு சமைக்குமா போலே இவரும் வசன பூஷணம் சமைக்கிறவர் ஆகையாலே அர்த்தவத்தான வசனங்களை மிகவும் கொண்டு கூட்டின படி –
ஸூ வ்யாஹதானி மஹதாம் ஸூஹ்ருதாநி ததச் சத
சஞ்சின் வந் தீர ஆஸீத சீலஹாரி சிலம்யதா-( பாரதம் )–என்னக் கடவது இறே –
(களத்து நெல்லைத் திரட்டி -பிரயத்தனம் -செய்து -கண்ணும் பருத்தாக சேகரிப்பது போல் தீரர்கள் )
இப்படி இவற்றைக் கொண்டு செய்கிறது ஆர்க்கு என்னில் –
கற்றோர் தம் உயிர்க்கு –
கற்றோர்க்கு வரிசை கொடுக்கைக்காக-
அதாவது
தங்களுக்கு ஹிதைஷிகளாய் இருக்கிற ஆச்சார்யர்களுடைய சந்நிதியாலே
ஜ்ஞாதவ்ய ( அறிய வேண்டிய )சகலார்த்தங்களையும் நன்றாக கேட்டு இருக்கிறவர்கள் உடைய ஸ்வரூபத்துக்கு
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று -(பெரிய திருமொழி – 8-10-3-)
அறியக் கற்று வல்லார் -(திருவாய் -5-5-11 )-என்னக் கடவது இறே
(கற்றோருக்கும் கல்வி தன்னில் ஆசை உடையோர்களுக்கும்-கற்றோர்க்கு இல்லாமல் கற்றோர் தம் உயிருக்கு -ஆத்மாவுக்கு தானே இது )
மின் அணியாச்-
ஏவம் விதரான அதிகாரிகள் உடைய ஸ்வரூப ஔஜ்வல்யத்தை யுண்டாக்கும் படியான ஒளியை யுடைய பூஷணமாக –
உயிர்க்கு மின் அணியாச் –
அநித்தியமான உடலுக்கு பூஷணம் சமைப்பார் நடுவே-இவர்-நித்தியமான உயிர்க்கு பூஷணம் சமைத்தார் இறே –
உயிர்க்கு மின் அணியாச் –
கௌஸ்துபதுக்கும்-கௌஸ்துபம் -என்னலாம் படி இருக்கை-வைகுண்ட ப்ரிய கண்ட பூஷணமாய் இறே இருப்பது-
(குரு மா மணிப் பூ திகழும் திரு மார்பு –
ஸ்ரீ வத்சம்-அசித் -மச்சம் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ பிரதிநிதி-நீல நாயக்கல் –கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
ரத்னத்துக்கு ரத்னம் இப்பிரபந்தம்-ஆபரணத்துக்கு ஆபரணம் இது
புருடன் மணி வரமாக )
சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–(ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-)
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே –
ஔஜ்வல்ய ரூபமான ஆபரணமாய் சேரும்படி என்னுதல் –
ஸ்வரூபத்துக்கு சேரும் படி -என்னுதல் –
கீழ்ச் சொன்ன வசனங்கள் எல்லாம் அன்யோன்யம் சந்தர்ப்பமாம் படி சமைத்தவரே பேரிட்டார்
சமைக்க –என்றது –
பண்ண -என்றபடி
ஆரஞ்சமைக்க -என்று இறே இவர்கள் சாதிப் பேச்சு இருப்பது –
(இவர்கள் -பொற் கொல்லர்கள் )
சமைத்தவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின் –
அதாவது –
ஆபரண நிர்மாணகர் தாமே அந்த ஆபரணத்துக்கு அனுகுணமானதோர் அபிதானத்தை கற்ப்பிக்குமா போலே-வசன சந்தர்ப்ப ரூபமான வசன பூஷணத்தை நிர்மித்த அந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தாமே ஸ்ரீ வசன பூஷணம் என்கிற இந்த அதிசயமான திரு நாமத்தை இந்தப் பிரபந்தத்துக்கு சாத்தி அருளினார் -என்கை –
(பாடின ஆழ்வார் பாட பாட்டுடைத்தலைவனே மிதுனமாக திருவாறன்விளையில் கேட்ட ஏற்றம் திருவாய் மொழி வால்மீகி ராமாயணம் குசலவர்கள் பாட பெருமாள் மட்டும் கேட்டு -பாட்டுடைத்தலைவி கேட்க்காமல் போனதே )
பின் –
சேரச் சமைத்த பின் -என்னுதல்-
அந்த ரஹஸ்யங்களை அருளிச் செய்த பின் -என்னுதல் –
(காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் இவர் கால ஷேபம் –
தேவப்பெருமாள் நியமனம் அடியாகவே பிரபந்தம் உருவானது )
அவரே பேரிட்டார் –
பிதா புத்ரஸ்ய நாம குர்யாத் -என்கிறபடியே
தமக்கு அதிசயமான திரு நாமத்தை தமப்பனார் (வடக்குத் திருவீதிப்பிள்ளை )ஆதரித்து சாத்தினாப் போலே இத்தை ஈன்ற தாயான தாமும் அப்படியே இதுக்கு அதிசயமான திரு நாமத்தைச் சாத்தி அருளினார் ஆய்த்து –
இந்த பிரபந்தம் மூலமாக விறே இவருடைய ஜ்ஞான சந்தானம் அவிச்சின்னமாய் நடந்து செல்லுகிறது –
(தம் அப்பனார் -அப்பா -அப்பன் -உபகாரகன் -தகப்பன் மருவிய சொல்
பிள்ளை லோகாச்சார்யார் -என்று ஆச்சார்யர் திரு நாமமே ப்ராஸூர்யம் ஆனது போல் இவரது இந்த ப்ரபந்தமும் -)
வசன பூஷணம் என் பேர் –
ரத்ன பிரசுரமான பூஷணத்தை ரத்ன பூஷணம் என்னுமா போலே ஆச்சார்ய வசன பிரசுரமாய்-அனுசந்தாக்களுக்கு ஒஜ்வல்ய கரமாய் இருக்கையாலே
இதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆய்த்து-என்று ஸ்ரீ ஜீயர் தாமே இதன் வியாக்யான பிரவேசத்தில் அருளிச் செய்து அருளினார் இறே
வசன பூஷணம் என் பேர் இக் கலைக்கு இட்டார் –
இந்த -ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்தரத்துக்கு –இப்படி திவ்யமாய் இருப்பதொரு திரு நாமத்தை நிர்தேசித்து அருளினார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்துத் தாழ் வடத்தை- இது ஒரு கோவை இருந்தபடி என் -என்று -அதன் வாசி அறிந்தவர்கள் கொண்டாடுமா போலே இதுவும்-வாங்மணி ஸ்ரக் க்ரைவேய பூஷாத் மகம் -என்னும்படி வசன சந்தர்ப்பத்தை யுடைத்தாகையாலே –
இக்கலை -என்று
இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –
(கலை இலங்கு மொழியாளர் -கலை -சாஸ்திரம் –மொழி பாஷை அர்த்தங்கள் –செந்தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர்-இதுவும் ப்ரஹ்மம் அடைய வழி காட்டி அருளுவதால் ஸாஸ்த்ரம்-மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -கர்ம விசாரம்-ப்ரஹ்ம விசாரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் போல் இது ரஹஸ்ய த்ரய ஸாஸ்த்ரம் -)
———————————————————-
புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே
கீழ்-
ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் சாத்தும் படியான இதன் பெருமையை அருளிச் செய்தார் –
இதில்-
ஏதத் அர்த்த தர்சிகள் யுடையவும்-
ஏதத் பிரதிபாத்ய அனுஷ்டாதாக்கள் யுடையவும்-
அருமையை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் —
(இது ஸ்வ சோதனைக்கே -இன்னும் ஒருவரைப் பார்த்து நீர் ஸ்ரீ வசன பூஷணம் படி
நடக்க வில்லை என்று சொன்னால் சொன்னவனே அறியாதவன் ஆகிறான் )
(த்வாபர யுகத்திலே வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார் ஸூ துர்லபம் –
கலியில் -அத்தையும் தாண்டி பாகவத சேஷத்வம் அறிந்து அறிந்தபடி அனுஷ்ட்டிப்பார் மஹா துர்லபம் அன்றோ-மதுரகவி நிஷ்டை ஓர் ஒருவர் தான் உண்டு -சத்ருக்ந ஆழ்வான் -வடுக நம்பி -போல்வார் – )
ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது –55-
த்யானந்திகே
வசன பூஷண வாரி ராசேக
சதாம் அபிதேய ரத்னம்
தே
சத் ப்ரகர்ஷ தே சஞ்சரிந்தி
யஹா கோபி சாம்பவி சேத்
விரலோகி
ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய அகாதமான அர்த்தத்தை அதிலே அவகாஹித்து
உள் புகுந்து உள்ளது எல்லாம் அறிவார் ஆர் –
எத்தனை அதிசயித ஜ்ஞாநராய் இருப்பார்க்கும் இத்தை ஸ்வ யத்னத்தால் அறிய வென்றால் துர் அவஹாகமுமாய் துஸ் தரமுமாய் இறே இருப்பது –
முதலடியில் அல்லாதவற்றில் இதுக்கு யுண்டான வாசி அறிந்து இத்தைப் பாடம் பண்ணுவார் அரிதாய் இருக்கும் –
அது ஒரு படி செய்தார்கள் ஆகில் அர்த்தம் அறிகை அரிதாய் இருக்கும் –
அதுவும் பெரு வருத்ததோடு கூட மேல் எழ சிறிது அறிந்தார்களே யாகிலும்
ஆழ் பொருள் எல்லாம் அறிவார் மிகவும் தேட்டமாய் இறே இருப்பது –
ஆழ் பொருள் –
ரத்னாகாரமானது-(ஆகாரம் -இருப்பிடம் )
மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் -(பெரிய திருமொழி -2-8)–என்னும்படி ஆழ் கடலான தனக்குள்ளே மணி முக்தாதிகளான சிறிய பதார்த்தங்களைக் கொண்டு இருக்கும் –
அதுக்கு தேசிகரான முழுகுவர் இறே முழுகி எடுப்பார் –
மற்றை யார்க்கும் கரை யருகும் செல்ல ஒண்ணாதாய் இருக்கும்
அப்படியே
ஸ்ரீ வசன பூஷண வாரிராசி யான இதுவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளான
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிற அகாத அர்த்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
(வேதியர் -மிக்க வேதியர் -வேதியர் பொருள் -மிக்க வேதியர் பொருள் -வேதத்தின் உள் பொருள் –மிக்க வேதத்தின் உள் பொருள் -ஆழமான அர்த்தம்-
ததீய சேஷத்வ பாரதந்த்ரம் -அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
பக்தி யோகம் தாண்டி பிரபத்தி தாண்டி தான் பற்றும் பற்றும் உத்தாரகம் அன்று என்று உணர்ந்து-ஆச்சார்யர் தாமே அபிமானித்து கைக்கொள்ளுதல்
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு –
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை வேண்டுமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
இவன் நம்முடையவன் என்று –இவரே ஆண் பிள்ளை என்று ராமானுஜர் அனந்தாழ்வானை அபிமானித்தது போல்-தான் பற்றும் பற்று அக்னி ஸ்பர்சம் அகங்கார கர்ப்பமாய் இருக்குமே )
இதுவும் அறிவித்தேன் ஆழ் பொருளை -(நான்முகன் )-என்னும்படி தேசிகர் அறிவித்தாய் ஆய்த்து அறியலாவது –
வாக்ய சங்கதிர் இத்யாதி ஸ்ருதம் விநா மகதாம் அபி அஸஹ்யாநி -என்று இறே
அறிகையில் உள்ள அருமை இருப்பது –
(கடலுக்கும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் சாம்யம் சொல்லி வருகிறார் )
அங்கும் –
செழும் கடல் அமுதினில் பிறந்த (திருவிடந்தை )-அவள் பிரயோஜனமாய் இருக்கும் –
இங்கும்
புருஷகார வைபவம் -தொடங்கி -(26 சூரணைகள் )-ஆச்சார்ய அபிமானம் -ஈறாக
ஆறு பிரகரணத்தாலும் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாம் ஆழ் பொருள்களாய் இருந்ததே யாகிலும்
சரம பிரகரணத்தில்-(குரோர் உபாயதாஞ்ச யோ)
சரம உபாயத்துக்கு சேஷமாய் இறே இருப்பது –
ஆகையால் இறே –
திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும் -என்று தொடங்கி
மன்னிய இன்பமும் மா கதியும் குரு வென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும் -என்று இறே
பொருள் முடிவாக அருளிச் செய்தது-
(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)
(ஒன்பது பிரகரணங்கள் ஆறாகும் பொழுது
முதல் அதுவே
2-3-4-5- பிரகரணங்கள் -இரண்டாவதும் மூன்றாவதும்
6-7-இரண்டும் சேர்ந்து நாலாவது ஆகும் –
8-ஐந்தாவது
9-ஆறாவது பிரகாரணம் ஆகும் )
(புருஷகார வைபவஞ்ச சாதனஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே)
(பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )
(1-புருஷகார வைபவஞ்ச-பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை -(1-22-)
2-சாதனஸ்ய கௌரவம்-ஆறு -( 23-79 )
3-தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய–பெறுவான் முறை -( 80-307-)
4-சத்குரு உபசேவனம் -அவன் கூறு குருவை பனுவல் (308-365-)
5-ஹரிதயாம் அஹேதுகீம்–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான் (366-406 )
6-குரோர் உபாயதாஞ்ச–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு ( 409-469 )
எலாம் வசன பூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )
பெரு விலையனான ஆபரணத்துக்கு
நாயகக் கல் போலே யாய்த்து
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு
இப் பிரதேசம் -(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-447 )
நாயக ரத்னமாய் இருக்கும் படி
(எண்ணிக்கையில் நடுவில் உள்ள சூரணை கொள்ளாமல் விஷயத்துக்கு நாயகம்
மேம்பொருள் பாசுரம் திருமலைக்கு போல் )
இத்தனையும் அருளிச் செயலைப் பற்ற அதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது
கீழ் அடங்கலும் மேல் அடங்கலும் இதன் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது -என்று இறே
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் இடத்துக்கு ஸ்ரீ ஜீயர் வியாக்யானம் செய்து அருளிற்று –ஆகையால் இதுவே ஆழ் பொருளாகக் கடவது –
வேதம் ஒரு நான்கின் உட்பொருள் தந்த மெய்ப்பொருள் -என்று தொடங்கி
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாகும் என்னுமது -( ஞானசாரம்-31- )-என்று இறே அருளிச் செய்தார் –
(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-ஆச்சார்யர் திருவடிகளே அரண் என்பதே மெய் பொருள் )–தன்னுடைய ஆச்சார்யன் – இறைவன் என்றது சேஷி -என்றபடி –தன்னிறைவன் என்கையாலே –சர்வ சாதாரண சேஷியான ஸ்ரீ ஈஸ்வரனைப் போல் அன்றிக்கே
தனக்கு அசாதாரண சேஷி யாவவன் -என்கை -அவனுடைய திருவடிகளே –
பிரதம பர்வத்தோபாதி- சரம பர்வத்திலும் திருவடிகளே இறே உத்தேச்யம்-அவதாரணத்தாலே அதனுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் சொல்லுகிறது-தாளே அரணாக என்றும் –சேஷித்வ சரண்யத்வங்களைச் சொல்லுகையாலே
ப்ராப்யத்வம் அர்த்தாத் சித்தம் இறே-குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம் ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா -என்று ஸ்ரீ சாத்விக தந்த்ரத்திலே-த்வய பிரசங்கத்தில் தத் உபதேஷ்டாவான ஸ்ரீ ஆச்சார்யனுடைய வைபவம் பகவானால் அருளிச் செய்யப்பட்டது இறே
அன்றிக்கே
பேறு தருவிக்குமவன் தன் பெருமை -என்று தொடங்கி
நல் குருவின் வன்மையோடு எல்லாம் ஸ்ரீ வசன பூஷணம் அதில் தேறிட நமக்கு அருளுகையாலே
ஆறு பிரகரணத்தில் உக்தமான அசேஷார்த்தங்களும்
ஒரு சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு
ஓர் ஒன்றே ஜ்ஞாதவ்யமாக வேண்டுகையாலே
எல்லாம் ஆராய்ந்து அறிய வேணும் என்று ஆழ் பொருள் என்கிறார் ஆகவுமாம்-
முந்தின யோஜனையில்-
ஆழ் பொருள்கள் எல்லாம் என்கிறதுக்கு சேர-
மற்றை அர்த்தங்கள் எல்லாம் ஆஸ்ரயண விதி சேஷங்களாய் அறியப் படுமதாய் இருக்கும்
தன்னை அறியும் போது உக்த லஷண யுக்தனான தான் என்று அறிய வேணும் –
ஆச்சார்யனை அறியும் போது ஆறு பிரகரணத்தாலும் பிரதி பாதிக்கப் படுகிற
ஷட் பத ( த்வய ) நிஷ்டனாக அறிய வேணும் –
ஆகையால் ஆழ் பொருள்கள் எல்லாம் அறிய வேணும் –
இதில் அர்த்தங்கள் எல்லாம் சாப்தமாக (மேல்) எழத் தோன்றி இருந்ததே யாகிலும்
இதுக்கு எல்லாம்-சர்வார்த்தான் விபரீதாம்ச-(ஸ்ரீ கீதை 18-32)- -என்னும் படி விபரீத அர்த்தத்தை கற்பித்து அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்வார் ஒழிந்து
இதில் யதார்த்த ஞானத்தை யுடையராய்
இத்தை விஸ்வசித்து உஜ்ஜீவிப்பார் அரிதாய் இறே இருப்பது
ஆமார் அறிவுடையார் ஆவார் அரிதன்றே–(பெரிய திருவந்தாதி 37 )என்னக் கடவது இறே
ஆகையாலே அறிவார் ஆர் -என்கிறார்-
ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை — பெரிய திருவந்தாதி-37-
(வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-சரணாகதி செய்வார்க்கு -விபரீத அர்த்தம் –தான் அருள் செய்யும் நினைத்தவருக்கு உகந்து செய்வான் )
இனி மேல் இதன் அனுஷ்டாதாக்களின் அருமையை அறிவிக்கிறது –
ஆரது சொல் நேரில் அனுஷ்டிப்பார் –
தத் விபரீதங்களை அனுஷ்டித்துப் போருமது ஒழிய
தத் உக்த அர்த்தத்தின் படியே
நேரே நெறியே ஆசரித்து போருவார் ஆர் –
ஸ்ரீ வசன பூஷண வழியிலே வழி படுவார் யுன்டாவது அரிதாய் இறே இருப்பது –
(கற்க கசடற கற்க கற்றபின் அதுக்கு தக்க நிற்க வேண்டுமே )
அல்லாத சாஸ்த்ரங்களை அறிந்து அனுஷ்டிப்பார் யுண்டாகிலும்
இந்த திவ்ய சாஸ்திரத்தின் படியே அனுஷ்டிப்பார் அரிது இறே
ஆகையால் அருளிச் செய்தவர் தாமே அதின் படியை
ஊனமற ஆசரித்து இருக்கும் நாளை நாள் எனை நினைந்து -என்று
அந்த பரம ரஹஸ்ய பிரதிபாதகமான அர்த்தத்தின் படி அசங்குசிதமாக அனுஷ்டிக்கும் படியையும்
தத் பலமாக ஆச்சார்ய அநு ஸ்மரணத்தையும்-அருளிச் செய்தார் இறே –
இதன் ஆழ் பொருளை அறிந்தும்-அது சொல் நேரில் அனுஷ்டித்துப் போருவார்
ஸ்ரீ உலகாரியன் அருள் தப்பாமல் எய்திய தரத்தை யுடைய
ஸ்ரீ ஜீயர் தாம் ஒருவரும் இறே உள்ளது –
இனி இந்த மகா பிருத்வியிலே எல்லாம் சம்பாவிதங்களாய் இருக்க
தாத்ருசரான இவர்களைக் கிட்டாதோ என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக –
ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே — என்கிறார் –
இத்தை அறியவும்
அனுஷ்டிக்கவும்
அருமருந்து போலே ஓர் ஒரு மகாத்மாக்கள் யுண்டாகில் உண்டாம் அத்தனை காண் —
ஓர் ஒருவர் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கரம் அண்ணனும்
அவருக்கு
ச ப்ரஹ்மசாரிகளாய்
செந்தமிழ் சேர் ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர் அன்றி
தேவு மற்று அறியாத ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரும் தத் பரதந்த்ரர் இறே –
(பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -இவர் பூர்வாஸ்ரம இயற் பெயர் கோவிந்த தாசர் அப்பர்
திருக்குமாரர் – அழகிய மணவாள ஜீயர் —
இவர் திருக்குமாரர் வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர் -)
அண்ணனை எண்ணில் மற்று ஒருவரை எண்ணாது என் அணி விரலே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ தாசரான ஸ்ரீ அண்ணா மதிக்கும் படியான ஸ்ரீ மதுரகவி தாசர்
அண்ணன் போல்வார் ஒருவர் யுண்டாகில் யுண்டாம் அத்தனை
ச மகாத்மா ஸூ துர்லப -என்றும்-
ஸூ துர்லபா பாகவதாஹி லோகே -என்றும்-
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்றும் -சொல்லுகிறபடியே
பகவத் பரராய் இருப்பவர்கள் தான் தேட்டமாய் இறே இருப்பது –
இனி
அனுகூலரான ஆச்சார்ய பரதந்த்ரர் அத்யந்த அபூர்வராய் இறே இருப்பது –
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு
ராமோ ராமோ ராம இதி -என்று ஒரு நாடாக யுண்டாய்த்து
ஆச்சார்ய பாரதந்த்ர்யதுக்கு
பரத அனுஜரான ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஒருவர் இறே உள்ளது
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்வார் பத்துப் பேர் யுண்டு இறே-அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் யுண்டு இறே
வடுக நம்பி ஆண்டானையும் ஆழ்வானையும் இரு கரையர் என்பர் -என்று இப்படி
குரு பக்தோத்த மோத்தம -என்னும்படி குரு பக்தர் ஆகையாலே
உத்தமோத்தமராய் ஸ்ரீ மான்களான அதிகாரிகள் ஓர் ஒருவரை இறே அருளிச் செய்தது –
(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே – அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது —சூரணை -408–
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-)
யுண்டாகில் -என்கிற எதி சப்தத்தாலே
ஓர் ஒருத்தர் தானும் துர்லபம் என்று தோற்றுகிறது-
இப்படி அலாப்ய லாபமானது கிட்டிற்று ஆகில் அவ்வளவு காண் –
உள்ளமே –
ஸ்ரீ வசன பூஷண் பூஷிதமான மனசே –
அதில் அகாதமான அர்த்தத்தை அறிந்து
தத் உக்தமான அனுஷ்டானத்தையும் ஆசரித்துக் கொண்டு போருமவர்களை
ஆதரித்துக் கொண்டு போருவாய் நீயே அன்றோ –
என் -ஓர் ஒருத்தர்க்கு ஒழிய அது எல்லார்க்கும் இது யுண்டாகாதோ-என்ன
எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
தாங்களும் தங்களில் வைஷ்ணவர்கள் என்று இருக்கில் எல்லார்க்கும் அதில் கம்பீரமான அர்த்தத்தை ஸ்வ யத்ன ரூப ஞானத்தாலே அறியவும்
தத் ப்ரதிபாத்யமான விலஷண அனுஷ்டானத்தை
ஸ்வ யத்ன ரூப சக்தியாலே அனுஷ்டிக்கவும்
அசக்யமாய் இருப்பது ஓன்று அன்றோ –
அண்டாதது -அடங்காதது –
அத்தாலும் அசக்யமானது -என்றபடி –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாய் இறே இருப்பது
அது –
என்று அர்த்தத்தில் துரவாஹத்வமும்
அனுஷ்டானத்தில் அசக்யத்வமும்
தோற்றி இருக்கிறது –
லோகோசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே தத்வார்த்த
தர்சினோ லோகே தந் நிஷ்டாச்ச ஸூ துர்லபா-
ஜகதாச்சார்யரசிதே ஸ்ரீ மன் வசன பூஷணே தத்வஜ் ஞ்ஞாநஞ்ச
தன் நிஷ்டாம் தேஹி நாத யதீந்திர மே-என்றும் சொல்லக் கடவது இறே –
(உபதேச ரத்ன மாலை அறிய பலனும் எந்தை எதிராசன் இன்னருள் கிட்டும் –
அது கிட்டியவாறே ஸ்ரீ வசன பூஷண அர்த்தமும் அனுஷ்டானமும் கிட்டும் –
திருவாய் மொழி பெரிய திருமொழி அறியவும் எங்கள் கதியே ராமானுஜ முனியே அருள வேண்டும்
இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தனில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா – )
————————————————
கீழ் ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே -என்று அதிகாரிகள் சங்குசிதராய் இருக்கிறபடியைக் கண்டு சர்வரும் வசன பூஷண அதிகாரிகளாம் படி திருத்துவோம் என்று
திரு உள்ளம் பற்றி அபி முகராய் இருக்கிறவர்கள் ஆபி முக்யமே பற்றாசாக இதில்
அர்த்த நிஷ்டை யுடையராம் படி அவர்களைக் குறித்து -பரோபதேசம் பண்ணி அருளுகிறார்
உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து –56-
உக்ராத் பவாப்தி குஹராத் -உக்ரமான சம்சார புதைகுழி
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-ஜிதந்தே ஸ்தோத்ரம் )
த்ருதம் உத்தகீர்ஷா
ஜாயேதுவோ யதி ஜனார்த் உபாய ஏக
ஆலோகியதாம்
வசன பூஷண ஆத்ம நீதம்
நிஷ்டீயதாம் தத்
நியமேன
தத் யுக்த மார்க்கே
உய்ய நினைவுடையீர் –
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற மனசை யுடையவர்களே
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -என்கிறபடியே-மனஸ் சஹகாரம் ஆகிற சம்பத்தை யுடைய நீங்கள்
(பழுதிலா ஒழுகல் ஆறு -வேதம் கற்க வேண்டும் -இதுக்கு மனம் ஒன்றுமே போதுமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )
இந்த சம்பத்தின் மேலே எந்த அதிகாரத்தை ஆர்ஜித்துக் கொள்ளப் போகிறீர்கோள் –
ஈஸ்வரன் படியைப் பார்த்தாலும்-ஆபி முக்யத்துக்கு அவ்வருகே –
அந்யன் நசேச்சதி ஜனார்த்தன -என்னும் படி இறே இருப்பது –
திரு மந்த்ரத்தின் யுடைய தாத்பர்யமான இப் பிரபந்த அப்யாச அனுஷ்டானங்களுக்கும்
ஸ்ரத்தை இறே வேண்டுவது –
(வேத சாரம் – உபநிஷத் சாரதர -அநுவாக சார தம- காயத்ரியில் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கு தானே திருமந்திரம் )
ஆகையால் இவ்வளவு ஆனுகூல்யம் யுடைய –உங்களுக்குச் சொல்லுகின்றேன் –
உங்கள் உஜ்ஜீவனத்திலே ஊன்றி இருக்கிற நான் உங்கள் கார்யம் பலிக்கும் தனையும்
இந்தப் பரமார்த்தத்தை சொல்லா நிற்கிறேன் –சொல்ல உபக்ரமித்தல் சொல்லி முடித்தல் செய்ய வில்லை –நீங்கள் அதிலே நிலை நிற்கும் தனையும் நான் சொல்லுகை தவிரேன் –
(நமது உஜ்ஜீவனமே மா முனிகள் நினைவு -சொல்லுகின்றேன் வர்த்தமானம் –
சொன்னேன் என்று முடிக்க வில்லையே-இது வரை முன்னுரை தானே -இனி மேல் தானே ஸ்ரீ வசன பூஷண சாரங்கள் )
ஆகில் நீர் சொல்லப் புகுகிற அந்த ரஹஸ்யம் தான் ஏது என்னில் –
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த –
பூர்வாச்சார்யர்களைப் போலே அர்த்தத்தின் சீர்மையைப் பார்த்து ரஹஸ்யமாக உபதேசித்துப் போருகை அன்றிக்கே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தம்முடைய கரை புரண்ட கிருபையாலே பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும் படி
முற்காலத்திலே மொழி பட்டோடும் கவியமுதம் -(திருவாய் – 8-10-5 )-என்னும்படி தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்து அருளின –
செய்ய கலையாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் –
அனுகூலருக்கு ஸ்வார்த்த பிரகாசத்தை பண்ணிக் கொண்டு இருப்பதான ஆர்ஜ்வத்தை உடைத்தாய் சாஸ்திர ரூபமாய் இருப்பதான ஸ்ரீ வசன பூஷணமுடைய கம்பீரமான அர்த்தத்தை –
கற்று –
சத் சம்ப்ரதாய நிஷ்டரான சதாச்சார்யர்கள் சந்நிதியிலே அவர்கள் அப்யசிப்பிக்க அப்யசித்து –
தத் பலமாக –
அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து –
அந்த அப்யச்தமான அர்த்தத்துக்கு அனுகுணமான நிஷ்டையிலே அதனுடைய கௌரவத்தை அறிந்து நில்லுங்கோள்- உங்களுக்கு உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆழ் பொருளைக் கற்று -அதனுக்காம் நிலையில்-நிற்கை யாவது –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்கிற அகாத அர்த்தத்தை ஸ்வாச்சார்யர்கள் சந்நிதியிலே சேவித்து ( காலஷேபம் கேட்டு-உணர்ந்து ) அதன் கௌரவத்தை அறிந்து அதுக்கு அனுகுணமான நிஷ்டையில் நிஷ்டராய் இருக்கை -என்றபடி –
கேட்டிருக்கையாய் இருக்கும் (443)-என்றும்
கேட்டிருப்பார் -என்றும் – சொல்லக் கடவது இறே –
(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-)
(பூர்வர் அருளிச் செய்ய கேட்டு அதன்படி இருக்க வேண்டுமே விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பார் )
இத்தால்
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டையே உஜ்ஜீவனம் என்றது ஆய்த்து –
(இதில் உறுதியே உஜ்ஜீவனம் –
தொழுது எழு என் மனமே
தொழுதால் எழலாம் உஜ்ஜீவனம்
தொழுவதே உஜ்ஜீவனம் -இதுவே வாழ்க்கை
பிறந்தார் உயர்ந்தே -பிறந்து உயர வேண்டாம் -உயர்ந்தே பிறந்தவர் ஆகிறார்
அதுவே போல் இதில் உறுதியான மனசே உஜ்ஜீவனம் )
——————————————-
கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து -என்று அந்வயத்தாலே இதில் அர்த்தத்தை ஸ்தாபித்தவர் –கல்லாதது என்னோ கவர்ந்து -என்று வ்யதிரேகத்தாலும் இதில் அர்த்தத்தை ஸ்தாபித்து அருளுவாராய் அபி முகராய் செய்கிறோம் என்று ஆறி இருந்த கீழில் அவர்களைக் குறித்து-இவர்கள் இத்தை அபிநிவேசத்துடன் அதிகரியாமைக்கு அடி ஒன்றும் காண்கிறிலோம் -என்று ஸ்வ விசாரமாகப் பண்ணி அருளுகிறார் –
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து —57-
ஏ தேசிகா அதிகதானி
உபதேச ரத்னானி
ஆஸஸ்ய தே சதி
ததா ஆஸ்ரயிதம் சக்தா
தே யத்ன தகா
வசன பூஷண கூடம் அர்த்தம்
நைவ ஆஸ்ரயந்தி
பரிசீலன குதோந வித்வான்
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் –
ஸ்வ பர ஹித பரராய் இருக்கிற தேசிகர்கள் சந்நிதியில் ப்ரஸ்ன கால பிரதீஷராய் –
ஸ்ரவித்த ஸ்லாக்கியமான அர்த்தத்தை –
(சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் -ஸ்ரீ நியாஸ விம்சதி —–1-ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய -ஸ்ரீ நியாஸ விம்சதி–3-)-சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —
சிந்தை தன்னில் மாசறவே –
சம்சய விபர்யய ரூபமான மநோ மாலின்யாதிகள் ச வாசனமாகப் போம் படி –
(சம்சய விபர்யய ரூபமான ஐயம் திரிபு )
யூன்ற மனனம் செய்து –
ஸ்ருதஸ்ய அர்த்தஸ்ய யுக்தி தோநு சிந்தனம் மனனம் -என்கிறபடியே
ஸ்ருதமான அர்த்தத்தை ஹிருத் கதமாக மாசற்றால் மனனம் -என்னும் படி மனனம் பண்ணி
ஆசரிக்க வல்லார்கள் தாம் –
உக்தமான அனுஷ்டானத்தில் ஒன்றும் நழுவாமல் – ஆசரிக்க வல்ல சக்தியை யுடைய தாங்கள் –
வசன பூஷணத்தின் வான் பொருளைக் –
தங்கள் அனுஷ்டானதுக்கு அனுக்ரமணி போலே இருக்கிற ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய
சீரியதான அர்த்தத்தை –கனத்த பொருளை –
கல்லாதது என்னோ கவர்ந்து –
குருவான அர்த்தத்தை குருக்கள் சந்நிதியிலே அபி நிவேசத்துடன் இவர்கள் அதிகரியாமைக்கு ஹேது என்னோ –
(குரு -பெரியது லகு சிறியது -குருக்கள் ஆச்சார்யர்கள்-ஆழமான அர்த்தத்தை ஞானத்தால் பெரிய ஆச்சார்யர்கள் )
மா நிதியம் வசன பூஷணம் யுண்டே அதின் படியை யூனமற வாசரித்து -என்னும் படி
மகா நிதி போலே இருக்கிற இத்தைப் பெற்று வைத்து-அந்தகன் -அநந்த நிதி கண்டால் போலே அபேஷையோடே அதிகரிக்க வேண்டி இருக்க —அத்தை உபேஷித்து–வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இருக்கிறது ஏதோ –
இவர்கள் தங்களுக்கு ஞான சக்தியாதிகள் யுண்டாய்-
இதுக்கு அர்த்த பூர்த்தியும் யுண்டாய் இருக்க –
இத்தை மேல் விழுந்து மண்டி அதிகரியாமைக்கு அடி அறிய அரிதாய் இருக்கிறது –
அறிகைக்கும் அனுஷ்டிக்கைக்கும் ஈடான ஞான சக்திகள் தங்களுக்கு இல்லை என்ன ஒண்ணாது –அனுஷ்டேயார்த்த பிரகாசகமான இதுக்கு அர்த்த பூர்த்தி இல்லை என்ன ஒண்ணாது –ஆயிருக்க இப்படி இருக்கிறது அபி நிவேச மாந்த்யம் இறே என்றத்தை தாம் நிரூபிக்கும் முகத்தாலே இது யுண்டாம்படி திருத்தி அருளுகிறார் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -என்னும்படி சாஸ்திர அனுஷ்டான யோக்கியமாய் இறே மனுஷ்ய ஜன்மம் தான் இருப்பது –
(நா வாயில் உண்டே–ஏத்தும் பொழுது உண்டே -என் நினைந்து போக்குவார் இப்போதே –
கர்த்ருத்வாதி கரணம் –ஞானம் வடிவு ஞானம் ஸ்வரூபன் -அறிவுடையவன் கர்த்தா –
செயல்படும் திறன் -சாஸ்திரம் அர்த்தவத்தாக ஆகவே –
கட்டளை இடுவதால் சாஸ்திரம் -ஸாஸனாத் -பின்பற்ற ஒருவன் இருந்தால் தானே
அது இருக்க பிரயோஜனம் -பொருள் உள்ளதாகும் –
இதுவும் திவ்ய சாஸ்திரம் -இதுக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டுமே -)
இத்தால்
இவ் வர்த்தம் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராமல்
சத் த்வரராய் சமக்ரமான இச்சையாலே சாதித்து அறிய வேணும் என்று கருத்து –
(துடிப்பால் த்வரையுடன் இருக்க வேண்டுமே-பேறு தப்பாது என்று துணிகையும் பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே-அடையும் இடம் ஸ்ரேஷ்டம் -விரோதி பாஹுல்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரன் -பண்ணும் சரணாகதி எளிது –-மூன்றாலும் நம்பிக்கை விஸ்வாசம் குறையுமே
அதே போல் இங்கும் ஆபிமுக்யம் மாத்திரம் உள்ளது -அடைந்தே தீர வேண்டும் என்னும் பெரு விருப்பம் அபிநிவேசம் வர -மாந்த்யம் குறைக்க உபதேசித்து அருளுகிறார் )
————————————————————————
உய்ய நினைவுடையீர் என்று கீழே இவராலே உபதேசிக்கப் பட்டவர்கள் (56-57)
இந்த உபதேசம் பலித்தவாறே-
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்றும் -என்றும்
ஸ்ரீ வசன பூஷணத்தின் வான் பொருளைக் கல்லாதது என்னோ -என்றும்
இப்படி அதன் அர்த்தத்தை நாங்களும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி
அந்வய வ்யதிரேகங்களாலே பல காலும் அருளிச் செய்யா நின்றீர் –
(நம் கண்ணன் கண் அல்லாதோர் கண்ணே -அன்வயம் வ்யதிரேகம்
முதல் ஆழ்வார்கள் அன்வயமாகவும் திருமழிசை ஆழ்வார் வியதிரேகமாகவும்
நம்மாழ்வார் இரண்டாலும் அருளிச் செய்தார்களே
அதே போல் கீழே இரண்டு பாசுரங்களும்)
நாங்கள் அதில் அர்த்த க்ரஹணம் பண்ணும் உபாயம் என் என்ன –
ஆகில் சத் சம்ப்ரதாய நிஷ்டராலே ஸ்லாகநீயமான வியாக்யானம் யுண்டாகில்
அத்தை அதிகரித்து அம் முகத்தாலே அறியுங்கோள் என்கிறார் –
(உண்டாகில்-என்பதால் துர்லபம் –மா முனிகள் காலத்திலும் பலவும் இருந்ததாகவும்
அவை லுப்தமாகவும் இருந்தமை தோற்றும் –நாலூர் ஆச்சான் பிள்ளையும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்பர் –அது லுப்தம் இப்பொழுது –
இப்பொழுது ஆய் ஸ்வாமிகள் மா முனிகள் வியாக்யானங்களே உள்ளன )
அன்றிக்கே
அபேஷா நிரபேஷமான தத் அர்த்த விஷயமாக வியாக்யானம் யுண்டாகில்
அத்தையும் நிரூபண முகேன அறிந்து ஆதரியுங்கோள் என்கிறார் ஆகவுமாம்-
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய் –58-
அற்ற-அற்றுத் தீர்ந்த
நச்சி அதிகரியும்-விரும்பி அந்வயிக்க வேண்டும்
மத்யஸ்தர் –பேச்சுப்பார்க்கில் கள்ள பொய் நூல்களும் க்ராஹ்யம் பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் ஆறு மூன்றும் கழிப்பனவாம் –
ஸச் சம்பிரதாய ஸ்துதியா
சதத உபலால்யா
லப்யதே சேத்
வசன பூஷண வாக்ய ஸீதா
ச வ்யஞ்ஜபி ஸகல மர்த்தயா பதார்த்த ஜாதம்
மத்யஸ் யைவ தசயா நநு பாவயநீய-
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் –
அதாவது-
ஓதி-ஓதுவித்து-ஆதியாய் வரும் அந்தணர் அறா திருவாலி –என்கிறபடியே
விச்சேதியாத சத் சம்ப்ரதாயத்திலே சம்பத்தை யுடையராய் தம்மைப் போல-
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-
வாக்யா லங்க்ருத வாக்யாநி வ்யாக்யாதரம் (தினசரி )-என்றும்
(வாக்யா லங்க்ருத–ஸ்ரீ வசன பூஷணம் -கால ஷேபம் செய்து அருளும்
மா முனிகளை நான் வணங்குகிறேன் )
வாக்ய சங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் சர்வான்
குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத் -என்றும் சொல்லுகிறபடி
(வாக்ய சங்கதி -தொடர்பு
வாக்யார்த்த தாத்பர்யாணி -தாத்பர்யஅர்த்தம்
யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான பதே பதே -பூர்வர் நிர்வாகம்படியே
ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் -கொஞ்சம் கூட தானே கல்பிக்காமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
சர்வான் குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்-மறைந்து கிடந்த பொருள்களை பரம காருண்யத்தால் வெளியிட்டு அருளி )
ஸ்ரீ வசன பூஷண வியாக்யான ( விலஷணராய் ) விசஷணராய் ஆச்சார்ய சந்நிதியிலே அநவரத ஸ்ரவணத்தை யுடையராய் இருக்குமவர்கள் ஸ்ரவித்தக்கால் -என்கை –
(வர வர முனி சம்பு -கத்யம் பத்யம் இரண்டும் கலந்து -ராமாநுஜ சம்புவும் உண்டாம்
கேட்டக்கால் -கேட்பித்துக்கால் என்றபடி )
சச் சம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் விசதமாகக் கை வந்து இருக்கும் படியான
மதிப்பை யுடையராய் இருக்கும் தாங்கள் கேட்டக்கால் –
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் —
அதாவது –
ஸ்ரீ சீதா சரிதமான ஸ்ரீ ராமாயணத்தைக் கேட்ட விசேஷஞ்ஞர் எல்லாம்
அஹோ கீதஸ்ய மகாத்மியம் -என்று ஆதரித்தால் போலேயும் -(ஹஸித்தம் பாஷிதம் சைவ இத்யாதி )
செவிக்கினிய செஞ்சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியை-கேட்டாரார் வானவர்கள்-( 10-6-11 ) -என்றால் போலேயும்
சுத்த சம்ப்ரதாய பிரவர்தகர் ஆனவர்கள் இத்தைக் கேட்டு இதுவும் ஒரு வியாக்யானம் இருந்த படியே என்ற ஈடுபட்டுக் கேட்குமதான வியாக்யானம் தான் யுண்டாகில் –
(வல்லர் என வல்லவர் -ஸ்ரேஷ்டர் ஸ்லாக்யிக்கும் படி )
அன்றிக்கே –
மெச்சும் வியாக்கியை தான் –
என்று மதிப்பானவர்கள் மதிக்கும் படியான வ்யாக்கியை தான் -என்னவுமாம் –
(ஈடுபாடும் மதிப்பும் வேண்டுமே -தடை இருந்தாலும் விலக்காமைக்கு ஈடுபாடும்
நச்சு அணுக மதிப்பும் -ஆக இரண்டும் வேண்டுமே )
வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் –
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் அற்றுத் தீர்ந்த மதி யுடையீர் -என்னவுமாம் –
வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர ரசிதா
வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை பிரசன் நாமே
ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா (வர வர முனி காவ்யம் )-என்னக் கடவது இறே —
(வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர -ஸ்ரீ வசன பூஷண வியாக்யாதா வான ஸ்ரீ மா முனிகள்
ரசிதா வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்– அனைத்து வேதாந்த அர்த்தங்கள் சாரங்கள்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை -நிறைந்த ஆழமான அர்த்தங்கள் -தொடர்பு கூட்டங்களை
பிரசன் நாமே ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா—பரம கிருபையால் சாந்தமான மனஸ்ஸால் அர்த்தங்களை வெளிப்படுத்தட்டும் )
ஆகில் –
என்கிற எதி சப்தத்தாலே-அதனுடைய தௌர்லப்யம் தோற்றுகிறது –
அப்படி அலப்யமானது லபித்ததாகில்
நச்சி அதிகரியும் நீர் –
வசன பூஷண அதிகாரிகளாய்-உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சை யுடைய
நீங்கள் இத்தை விருப்பத்துடனே அதிகரியுங்கோள்-
கல்லாதது என்னோ கவர்ந்து -என்ன வேண்டாத படி யாய்த்து இப்போது இவர்க்கு –
வசன பூஷணத்துக்கு அற்ற –
ஸ்ரீ வசன பூஷணதுக்கு-மெச்சும் வ்யாக்யானமாய் இருக்கு மதானவற்றை –
(ஏற்ற என்றபடி )
மதி யுடையீர் மத்தியத்தராய் —
நச்சி அதிகரிக்கும் இடத்து-விவேக பரிகரமான மனசை யுடைய நீங்கள் மத்யஸ்த பாவனையாலே-அர்த்தத்தின் சீர்மையை ஆராய்ந்து பார்த்து உங்கள் அதிகாரி பூர்த்திக்கு உடலாக அதிகரியுங்கோள் –
இத்தால்
சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –
மாறில் முடும்பை யுலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும்
வல்லிருக்கைச் சீறும் படி திருத் தாழ்வரைத் தாதன்
தெரிந்து எனக்குத் தேறும்படி யுரைத்தான்
திருத் தாள்கள் என் சென்னியதே -என்றும் -வசனக் கலனும்-(வசன பூஷணமும் )
ஆச்சார்ய ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்தநஸ்ய வியாக்யாம் அகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே
ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே
அவை அடி ஒத்தி இறே மற்றை வ்யாக்யானங்கள் யுண்டானது –
அவர்களோபாதி
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
அவர் -(ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் )
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடக்கமான சகல பிரபந்தங்களுக்கும்
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ரஹஸ்யங்களுக்கும் அர்த்தம் கேட்டார் -என்று பிரசித்தம் இறே
அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-
(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )
(பூர்வர் வியாக்யானங்கள் இருந்தால் மா முனிகள் பண்ண மாட்டார் –
பெரியாழ்வார் திருமொழி -வியாக்யானத்தில் பார்த்தோம் –
ஆய் ஸ்வாமி வியாக்யானம் இருக்க -செய்தமை –
சம காலத்தவர் என்று இருக்கலாம் -இருவரும் சந்தித்தது உண்டே –
ஞான சதுர்த்திகள் மேலே -ஸூத்ரம்
இரண்டு நிர்வாகங்கள்
ஆய் ஸ்வாமி -காட்டி -பொருந்த வில்லை என்று அருளிச் செய்து -வேறே நிர்வாகம் காட்டி உள்ளார்
அவரை சந்தித்து பேசியபின்பு அவர் நியமனம் அடியாகவே செய்து இருக்கலாம்
அதே போல் ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானங்களிலும் வாசி உண்டே
நடு நிலையில் இருந்து நீங்கள் பார்த்து கைக்கொள்ள வேண்டும் என்று இங்கே அதனாலே உண்டே
இனி இனி -20 பாசுரங்களில் வேறே வேறே பாசுரங்கள் ஆய் ஸ்வாமி காட்டி உள்ளார் –
மா முனிகளுக்கு விளாஞ்சோலை பிள்ளை இடம் கேட்டு திருவாய் மொழிப் பிள்ளை பெற்ற ஏற்றம் உண்டு –
வேளுக்குடி வரதாச்சார்யர் சதாபிஷேக ஸ்வாமிகள் இது பற்றி முன்பே பேசி உள்ளார்கள் –
பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய் மொழிப் பிள்ளை -வியாக்யானமாக இன்று உள்ளது அவரது இல்லையாய் இருக்கலாம்
அவர் சந்ததி -இன்றும் திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமி என்றே உண்டு –
இது ஒண்ணான அவரது இல்லை என்று காஞ்சி ஸ்வாமிகள் சொல்வார்
மா முனிகளுக்கு பின் உள்ளார் செய்ததாக இருக்கலாம் )
——————————————————–
ஸ்ரீ வசன பூஷணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பாருலகைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் ( யதீந்த்ர ப்ரவண பிரபாவம் )-என்கிறபடியே
தம்முடைய பரம கிருபையாலே பரோபதேசம் பண்ணி
சத்கார சஹவாச யோக்யர் ஆனாரையும் திருத்தி –
இனி
தம் உபதேச நிரபேஷமாக திருத்தின சத் ஸதா அனுபவ யோக்யரான ஆச்சார்யர்களைப் பார்த்து
இதன் ரஸ்யதையை அவர்கள் உடன் பேசி அனுபவிக்கிறார் –
அன்றிக்கே –
தம் உபதேசம் கேட்டு திருந்தினவர்களை ஸ்ரீ ஆரியர்காள் -என்று கௌரவ்யதை தோற்ற
அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
(நஞ்சீயரை பட்டர் கொண்டாடினால் போலவும்
பொலிக பொலிக பொலிக என்று தம்மால் திருந்திய ஸமூஹம் கண்டு
மங்களா சாசனம் பண்ணிய நம்மாழ்வார் போலேயும்
கண புரம் -கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறு வரே —
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே )
ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடையார்கள் பண்டே -(3-7-3-)-என்றும்
ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -என்றும்
அருளிச் செய்தால் போலே இவர் தாம் தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை
மத் குரு என்றும்
நம் இறைவர் என்றும் இறே அருளிச் செய்து போருவ்து –
சீர் வசன பூஷணத்தின் செம் பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —-59-
சார்த்தா ஸ்மராமி
யதி வசன பூஷணாதி
வாஸோ வதாமி
யதி வா மதுரா மமாபி
ஆர்யா கதன்னு பவதாம் மனஸ் ப்ரஸன்ன
பூம்னா த்யோகி
விஷய அதிசயவாஹஹா
சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச்-
அந்யருக்கு ஆழ் பொருளாய் -அரிதாய் -இருக்குமது-
தமக்கு செம்பொருள் என்று செவ்வியதாய் இருக்கிறபடி –
செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–
நெஞ்சாலே நிரூபிக்கிலுமாம்–
வாக்காலே அனுசந்திக்கிலுமாம் இதிலொரு நிர்பந்தம் இல்லை –
ஏதேனும் ஒரு காரணத்தாலே அனுசந்திக்கப் பெறிலும்
நித்ய அபூர்வமான போக்யமாய் இருக்கும் –
(எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கும் )
சாரார்த்த சங்க்ரஹம் ஆகையாலே
சதா அனுவர்த்தனம் பண்ணுகிற மனசுக்கு இனிதாய் இருக்கும் –
மகா ரச வாக்ய ஜாதம் -ஆகையாலே
வாக்குக்கு இனிதாய் இருக்கும்
இவர் மனத்தாலும் வாயாலும் கவர்ந்து அனுபவிக்கிறார் –
கீழில் அவர்களை இறே (சத்கார சஹவாச யோக்யர் ஆனாரை)
கல்லுங்கோள் சொல்லுங்கோள் -என்று விதிக்க வேண்டுவது –
தமக்கு அங்கன் அன்றிக்கே
இது பள்ள மடையாய் இருக்கிறபடி –
கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் -என்றும்
சிந்தை தன்னால் கல்லாதது என்னோ கவர்ந்து -என்றும் சொல்லக் கடவது இறே –
ஆரியர்காள் என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ –
செஞ்சொற் கவிகாள் -என்னுமா போல
இதில் அனுபவத்துக்கு தேசிகராய் இருக்குமவர்களே -என்கிறார் –
(அண்ணிக்கும் அமுதாகும் என் நாவுக்கே –
நான் கண்ட நல்லதுவே போல் )
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது –
உங்களைப் போல் பேரளவுடையன் அன்றிக்கே
அடியேன் சிறிய ஞானத்தன்-( 1-5-7 )-என்கிறபடியே
அத்யல்ப ஞானத்தை யுடையனாய் இருக்கிற எனக்கு –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -(2-5-4)-என்கிறபடியே
தொண்டர்க்கு அமுதான-(9-4-9)
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதத்தின் யுடைய சாரமான ஸ்ரீ வசன பூஷணமானது
நித்ய அபூர்வமுமாய்
நிரதிசய போக்யமுமாய்
இரா நின்றது –
விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் -( 5-1-1 ) -என்னுமா போல
ஹர்ஷ பிரகர்ஷத்தால் யுண்டாம தொரு பாசுரம் —
ஆரியர்காள் உம் தமக்கு எவ் வின்பம் உளதாம் –
ஆர்ய போகமாய் இருக்கிற இதடியாக ததேக போகராய் இருக்கிற உங்களுக்கு
எவ்வளவு ஆனந்தம் யுண்டாம்
அங்கே யுண்டான ஆனந்தம் இவர்க்கு இதடியாக இங்கே யுன்டாகிற படி
அது தான் இன்ப மிகு விண்ணாடு இறே –
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —
எனக்கு என்னளவிலேயாய் இருக்குமா போல
உங்களுக்கும் உங்கள் அளவுகளிலேயாய் இராதோ
வைதேஹி ரமஸேகச் சித்ர கூடே மயா சகா -என்னுமா போலே
(மூவருக்கும் -ஆனந்தம் துல்யம் -ஹேதுக்கள் வேறே வேறே போல் )
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போல கண்டு
அவர்களோடு அதில் அனுபவ ரஸ்யதையை அநு பாஷித்து அருளுகிறார் ஆகவுமாம் –
இது தான் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -ஸ்ரீ திரு வாய் மொழியில் படி யாய்த்து –
இத்தால்
இதனுடைய நிரதிசய போக்யதா அதிசயத்தால் யுண்டான
வைபவம் சொல்லிற்று ஆய்த்து-
——————————————-
ஸஸ்த்ர பாணியாக அவனே ஆச்சார்யராக திரு அவதாரம்
ஆச்சார்யர் மூலம் அவனை அடைவது முதல் நிலை
ஆச்சார்யர் மூலம் ஆச்சார்யரை அடைவதே இறுதி நிலை
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே சாரார்த்தம் –
இத்தை புரிய வைக்கவே -60-70- -ஆச்சார்ய வைபவம் சொல்லும்
ஸ்ரீ வசன பூஷண ஸாரார்த்தங்களை 11 பாசுரங்களால் ஸ்வாமி வெளியிட்டு அருளுகிறார் –
ஆக ஸ்ரீ வசன பூஷணத்துக்காகவே –18 பாசுரங்களும் அதுக்கும் முன்பாக —
மூன்று 50-52-பாசுரங்கள் பிள்ளை லோகாச்சார்யார் வைபவம்
ஆக கீழ் (ஏழு பாசுரங்களில் )
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே நிர்மிதமான ரஹஸ்யங்களில்
1-ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான அப்ரதிம வைபவத்தையும்-(53)
2-அதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆகைக்கு அடியையும் -(54 )
3-ஏதத் அர்த்த அபிஞ்ஞரும் அனுஷ்டாதாக்களும் ஏகைக புருஷர் என்னுமத்தையும் -(55)
4-ஏதத் அர்த்த க்ரஹண விஷயமாக பரோபதேசம் பண்ணி யருளியும்-(56)
5-இதின் அர்த்தத்தை அபி நிவேசத்துடன் அதிகரியாமைக்கு ஹேது சிந்தனையும்-(57)
6-ஏதத் விஷயமாக விலஷண பரிக்ரஹ வியாக்யானம் யுண்டாகில் அது அங்கீகாரம் என்னுமத்தையும்-(58 )
7-இது தான் ஸ்வ பர விபாகம் அற நிரதிசய போக்யமாய் இருக்கும் என்னுமத்தையும்-(59 )
தர்சிப்பித்தாராய் நின்றார் –
இனி (மேல் எல்லாம் )
ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இந்த திவ்ய பிரபந்தத்திலே
வேதார்த்தம் அறுதி இடுவது (1)-என்று தொடங்கி-
அத்தாலே அது முற்பட்டது (4)-என்னும் அளவாக
பிரதிபாத்ய அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணங்களை ஒருங்க விட்டு
(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே–சூரணை-1–
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –சூரணை-2-
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –சூரணை -3-
அத்தாலே அது முற் பட்டது –சூரணை -4-
அதே போல் இங்கும் முதல் 29 பாசுரங்களில் தமிழ் வேதங்களையே ப்ரமாணமாகக் கொண்டு என்றபடி )
இதிஹாச ஸ்ரேஷ்டம்-( 5 ) என்று தொடங்கி
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று
உக்தார்த்தை இதுக்குக் கீழ் நிகமித்து
(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை -5-
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –சூரணை-407-
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் உக்த அர்த்தம் )
அவர்களைச் சிரித்து இருப்பார் யுண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் என்று -(சூரணை- 409 )
சரம பிரமேயத்துக்கு சரம பிரமாணத்தை ஒருங்க விட்டால் போலே
(சரம பிரமேயம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
சரம பிரமாணம்-கண்ணி நுண் சிறுத்தாம்பு )
இவரும்
அருளிச் செயல்களினுடையவும் ஏதத் வ்யாக்யானங்களுடையவும் -(முதல் 38 பாசுரங்கள் திவ்ய பிரபந்தம் )
தாத்பர்ய ரூபமாய் (ஸ்ரீ வசன பூஷணத்தை )
சரம பிரகரண பர்யந்தமான அந்த ஸ்ரீ வசன பூஷணத்தை கீழ் அடங்கலும்
அருளிச் செய்த அர்த்தங்களுக்கும்
மேல் அருளிச் செய்யப் புகுகிற சரம பர்வ நிஷ்டாக்ரமங்களுக்கும்
ஆப்த தமமான பிரமாணமாக (ஸ்ரீ வசன பூஷணத்தை ) அங்கீ கரித்த படியே அதில் தாத்பர்யமான
சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை
சரமத்திலே
இப் பாட்டுத் தொடங்கி
மேல் எல்லாம் ( 73 பாசுரங்கள் வரை )தர்சிப்பித்து அருளுகிறார் –
(சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதையே –
அதுவும் கடைசி சூரணை இல்லை -பிரமேயமே சரமம்
சரமத்திலே இப் பாட்டுத் தொடங்கி –பேடிகா விபாகத்தில் சரமம் இதுவே சரம ஸ்லோகம் போல் )
இதில்
முதல் பாட்டில்
தங்களுக்கு அசாதாரண சேஷியான ஸ்ரீ ஆச்சார்யன் விஷயத்தில்
அல்பமும் பக்தி இன்றிக்கே இருக்குமவர்கள்
சாதாரண சேஷியான ( எல்லாருக்கும் பொதுவான )ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே பக்தியைப் பண்ணிலும்
பக்தி க்ருதனான (க்ரீதனான -விற்கவும் வாங்கவும் அமைத்துக் கொள்வானே )
அவன் தான் அவர்களுக்கு பிராப்ய லாபத்தைப் பண்ண
இச்சித்து இரான் ஆகையாலே அவர்கள் பிராப்யத்தை பிராபியார்கள் என்கிறார் –
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —60-
(அம்புயை கோன்-ஆச்சார்யர் இடம் அன்பு லேசமும்-அத்வேஷம் மாத்ரம் – இல்லையாகில்
புருஷகாரமும் துர்லபம் என்று காட்டி அருளவே இங்கு இப் பத பிரயோகம்
கமல வாஸினி -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே உலர்த்துவான்
தண்ணீர் பசை -ஆச்சார்ய ஸம்பந்தம் -இல்லையாகில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
மிதுனத்தை ப்ராப்யமாகக் காட்டி அருளுவதே ஆச்சார்யர் தானே
உளன் அலன் எனில் -ஸப்த பிரயோகம் -இல்லை எனில் போல் இல்லாமல் இங்கும் -அளிக்க வேண்டி இரான்
தான் -அளிக்க -வேண்டி இரான் -மூன்று பத பிரயோகங்களும் வியாக்யானம் உண்டே
இன்ப மிகு விண்ணாடு -திரு நாடு -இரண்டு பத பிரயோகம்
நந்த கோபன் கோயில்- உன் கோயில் -இரண்டும் திருப்பாவையில் –
நாயக ரத்னம் -ஆச்சார்யர் -பின்பு நப்பின்னை -பிராட்டி -பின்பு அவனைப் பற்றுகிறோம் )
பக்திம் விகாய
பத யோகோ நிஜ தேசிகஸ்ய
பக்தி பிரகர்ஷம் அபி யே பகவதி
தேப்ய
ரமா ஸஹஜர பரமம் பதம் யத் தாதும்
நஹி இச்சதி
நாதேபி ச தல் லபந்தே
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் –
மருளாம் இருளோட மத்தகத்துக்கு தந்தன் ( தன் தான் ) அருளாலே வைத்தவராய் -ஞான சாரம்
தனக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய அங்க்ரி யுகளம் தன்னிலே யாய்த்து –
பிரபத்தி ( பிரதிபத்தி உறுதி என்றுமாம் ) பண்ண பிராப்தம் –
அவன் தன் தாளையே யுன்னுவதே சால யுறும்( ஞான சாரம் 38 )-என்று இறே இருப்பது –
ஆகையால்
தஸ்மாத் பக்திர் குரௌ கார்ய (அந்திம உபாய நிஷ்டையில் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லும் இடம் )-என்கிறபடியே
(ஷத்ரிய பந்து அன்றோ பராம் கதி கண்டு கொண்டான் என்பதுக்கு மூலம் )
அவன் விஷயத்திலே அதி ஸ்நேஹத்தைப் பண்ண வேண்டி இருக்க –
அத்தைச் செய்யாதே –
(வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-)
(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)
அன்பு ஓன்று இல்லாதார்-
பக்தையக தேசமும் இல்லாதார்
அந்தாமத்து அன்பு செய்து -என்று ஈஸ்வரனும் கூட
அதி ஸ்நேஹம் பண்ணும் விஷயத்திலே யாய்த்து
இவர்கள் அபி நிவேச லேசமும் இன்றிக்கே ஒழிகிறது-
அது இன்றிக்கே ஒழிந்தால் ஆவது என் –
பகவத் பக்தி யுன்டானால் என்ன –
அன்பு தன் பால் செய்தாலும் –
ஸ்வ விஷயத்திலே பக்தி ஜனகன் ஆனவன் இடத்தில் அன்றிக்கே
(பகவத் விஷயத்தில் பக்தி உண்டாக்கியவன் அன்றோ ஆச்சார்யர் )
அன்பனான தன் விஷயத்தில்,அன்பைச் செய்தாலும் –
(இவன் அன்பன்-அவர் அன்பை ஏற்படுத்தியவர் –
தன் பால் -அவர் பாசுரம் கொண்டே தான் அறுதி இட வேண்டும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் சிறுத்தாம்பு –-11–
ஆகவே அதே அன்பு சப்த பிரயோகம் இங்கு -காதல் அபிநிவேசம் இல்லாமல் அதே அன்பு சப்த பிரயோகம்)
பிறர்க்கு அரிய வின்னபாதகத்தி -( திருச்சந்த விருத்தம் -100) –என்றும்
அரும் பெறல் அன்பு—(திருக்குறும் தாண்டகம் 5-) என்றும் சொல்லும்படியான
(பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –திருக் குறும் தாண்டகம் –5)
பெறற்கு அரியதான பக்தியை – சரம விஷயத்தில் பக்தி அன்றிக்கே
பிரதம பர்வமான ஸ்வ விஷயத்தில் பரி பூரணமாகப் பண்ணினாலும் –
அப்படிப் பட்டவர்கள் தன் பிரசாத்துக்கு பாத்ரம் இன்றியே ஒழிகையால்
அம்புயை கோன்-இன்பமிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயீ காரம் அடியாக யுண்டான
ஸ்ரீ பிராட்டி புருஷகார பலத்தாலே
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுக்குமவனான ஸ்ரீ மாதவன் -( ராமானுஜ -68 )
ஆச்சார்ய விஷயத்திலே ஆதரம் மட்டமாய் இருக்கிறவர்களுக்கு
பிராப்ய பிரதானத்தில்( அளிக்க -பிர தானம் ) ப்ரீதி இன்றியிலே ஒழியும் –
(வேண்டி தேவர் இரக்க -தேவர்கள் பிரார்த்திக்க தானும் விரும்ன்பி –
இச்சன் ஹரி கணேஸ்வர -போல் –
அவனுக்கு விருப்பம் இருக்காது இங்கும் _
ஆதலால் நண்ணா ரவர்கள் திரு நாடு –
இப்படிக் கொடுக்குமவன் கொடாது ஒழிந்தால்
தெளி விசும்பு திரு நாடு -( 9-7-5 )ஆன பிராப்ய தேசத்தை ப்ராபியார்கள் –
ப்ராப்ய பலம்-( லாபம் ) பிராபகத்தாலே -( 93-)-என்னக் கடவது இறே –
இன்பமிகு விண்ணாடு –
அந்தமில் பேரின்பம்-(10-9-11) -என்றும்
நலமந்த மில்லதோர் நாடு- -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்வ விஷயத்தில் ஆபி முக்ய லேசமே பார்த்து
மோஷ பிரதானத்தில் தீஷித்து இருக்கும் அவன் தான் –
அவர்கள் விஷயத்தில் ஔதார்யத்தைப் பண்ண இச்சியான் –
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
தான் விண்ணாட்டில்( விண்ணாட்டை விட ) சால விரும்பும் விஷயத்தில் விருப்பம் இன்றிக்கே ஒழிகையால்
பரம வ்யோம சப்த அபிதேயமான பரம பதத்தை அனுக்ரஹிக்க இச்சியான்
ஆகையால்
ஏனத்துருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் ( முதல் திருவந்தாதி -91 )-என்கிறபடியே
அவர்களுக்கு திரு நாடு சித்திக்கை அரிதாய் இருக்கும் –
வானவர் நாட்டை நீ கண்டு கொள் ( 3-9-9-)-என்று கொடுக்கும் -உதாரனானவன்
தான் கொடுக்க இச்சியாது ஒழிந்தால்
இவர்களுக்கு பிராப்யத்தை பிராபிக்க விரகு என் –
இழந்தே போம் இத்தனை என்று மனத்து உயிர்க்கும் -இத்யாதி –
இத்தால் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் (437)-என்று தொடங்கி
இத்தை ஒழிய ஸ்ரீ பகவத் சம்பந்தம் துர்லபம் (440 )-என்னும் அளவும்
அருளிச் செய்த அர்த்தம் பிரதி பாதிக்கப் பட்டது –
(ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —சூரணை -437
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –
பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –சூரணை -438-
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே –
ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —சூரணை-439-
இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –சூரணை -440-
இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –
ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –)
(தான் அளிக்க வேண்டி இரான் -மூன்று சப்தங்கள்
தான் தான் அளிக்க வேண்டும் -வேறே யாரும் கொடுக்க வல்லவர் அல்லர் –
அளிக்க தான் வேண்டும் -நாம் பிரார்த்திக்க மட்டுமே அதிகாரி -வேண்டினால் அளிப்பார் –
பயம் -சோகம் பிரபத்திக்கு அதிகாரம் -உபாயாந்தர சம்பந்தமும் உபாயத்தில் ஸ்வீ கார புத்தியும் இருந்தால்
நம் பக்கல் விசேஷ ப்ரீதியுடன் -அபிமானதுடன் -வேண்டி அளிப்பான்
தான் இச்சித்து அளிக்க வேண்டும் –
மடி பிடித்துக் கேட்க முடியாது பிரதான அர்த்தம் இல்லை -கடமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் –
மேலைத் தொண்டு உகளித்து -பொரு சிறைப் புள் உகந்து ஏறுவான் –
இதுவே விசேஷ அபிமானம் -வேண்டி -பத அர்த்தம் –
பக்தி இல்லாதவனுக்கு கீதை சொல்லாதே –
சச பூஜ்யக -என் அளவிலாவது அடியார்களைப் பூஜிக்க வேண்டும் என்றானே –
ஆணை மீறினால் விசேஷ அபிமானம் வராதே –
திருமேனி திருவடி ஸ்தானம் தானே அடியவர்கள் –ஸ்வரூபத்தில் மட்டும் பக்தி வைத்து
திவ்ய மங்கள விக்ரஹத்திலும் அன்பு வைக்க வேண்டுமே – )
(ஏணி படகு த்ருஷ்டாந்தம்-ஆச்சார்யர் சம்பந்தம் பொருந்தாது -தாமரை நீர் சம்பந்தம் தான் பொருந்தும்
பகவத் சம்பந்தம் குலையும் என்றது -விசேஷ அபிமானம் குலைவதையே சொல்லிற்று
அந்தர்யாமித்வம் -வியாபகம் பொது -அது குலையாதே
சேஷ சேஷி பாவ ரூப சம்பந்தம் -உயிர்கள் எல்லாம் அரங்கனுக்கு -ஆச்சார்யரால் உணர்த்தப்பட்டது
ததீய சேஷத்வ பர்யந்தமாக ஆக வேண்டுமே அது நிலைக்க –
ஆச்சார்ய பக்தி இல்லை என்றால் தத் சேஷத்வமும் நிலை நிற்காதே –
சம்பந்தம் தெரிந்து கொண்டால் தானே மோக்ஷம் -உஜ்ஜீவனம் —
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞான ஜென்மம் –
பேயாழ்வார் சம்பந்தம் அடியாக திரு மழிசை ஆழ்வாரும் இவர் அடியாக கணி கண்ணனும் பெற்றார்கள்
சத்தா ப்ரயுக்தம் மோக்ஷ ஹேது இல்லை-அறிய வேண்டுமே – -அறிந்து கொள்ள தேவை ஆச்சார்யர் வேண்டுமே –
இது குலைந்தால் -நிமித்தம் போனால்- நைமித்திகமும் போகுமே –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -ஆழ்வார்
இவர் நண்ணாரவர்கள் திரு நாடு-என்கிறார்
ராமானுஜர் அவதரித்த பின்பு நாம் நாதர் உடையவரானோமே
ஆச்சார்ய சம்பந்தம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று அன்றோ
மா முனிகள் இப்படி வலி உறுத்தி அருளிச் செய்கிறார் )
(காஞ்சி ஸ்வாமி -இப்பாட்டில் எழுவாய் அம்புயை கோன் –
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோனில் அந்வயிக்கும் –
அதே போல் தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார் –
சேர்த்து -மா முனிகள் பால் அன்பு இல்லாவிட்டால் –
மா முனிகள் வாக்கால் வர அவன் பிரயோகம் இப்படி அருளினான் –
மற்றது எல்லாம் காற்றிலும் நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
தேவி மற்று அறியேன் குருகூர் நம்பி
மாறனை மிக்குமோர் தேவும் உளதோ –
மால் தனை என்றே நான் கொண்டேன் -என்பாராம் -அவர் திரு வாக்கால் வரும்படி சங்கல்பம்
அம்புஜ நாயகனான தேவ நாதன் -திரு வயிந்த்ர புரத்தில் உபந்யசித்தாராம் –
அம்புஜ வல்லித் தாயார் -ஹேமாப்ய நாயகி
ஓர் ஒருவர் உண்டாகில் -மா முனிகள் போல் என்று இங்கே முன்பே பார்த்தோம் )
—————————————–
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே உபதேச ரத்ன மாலையும் அருளிச் செய்கிறார் –
பூர்வாச்சார்யர்களின் உபதேச ரத்னங்களைக் கொண்டே என்றும் கொள்ளலாம்
இனி-
கேவல சதாச்சார்ய சம்பந்தத்தாலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
ஸ்ரீ வைகுண்டத்தை தந்து அருளும் என்கிறார் –
(கேவல -மட்டுமே -தப்பாக மட்டம் என்று உபயோகம்
இது ஒன்றே போதும்
ஆச்சார்ய சம்பந்தம் வந்த பின்பு ஆத்மகுணங்கள் வளர்ந்து மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவோம் )
இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
(கீழும் அம்புயை கோன் -இங்கும் திரு மா மகள் கொழுநன்-ஸ்ரீ சம்பந்தம்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே
பேறும் இழவும் -திருமால் -எங்கும் திருமால் அன்று இன்மை கண்டு )
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –61-
அடைந்தக்கால்-துர்லபம் -திருவடி -பக்ஷிகள் -கடகர்
தானே -வேறே ஸஹ காரி வேண்டாமால் -ஸ்ரீயப்பதி தானே -தன்னாலே -இவரே ஆச்சார்யர் -நான்கு அர்த்தங்கள் –
(திரு மா மகள் கொழுநன்-தானே குருவாக இருந்து வைகுந்தம் தரும்
ஆச்சார்யர் அந்தராத்மாவும் அவனே –சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி -என்றும்
ஸஸ்த்ர பாணிநா -என்றுமாம்
அக்னி ஸூர்யன் சப்தமே அவனை குறிக்கும்
பவக் கடலை உறிஞ்சி -முன்னே கூட்டிச் செல்லும் -அவன் அன்றோ –
குரு -சொல்லே அவனைக் குறிக்கும் -கு அந்தகாரம் ரு தன் நிவாரஹம்-
தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குரு-ரஹஸ்ய த்ரயம் அறிந்து அனுஷ்ட்டித்து –
சேஷ சேஷி பாவம் அறிந்து உபாய உபேய பாவம் அறிந்து -திருமந்திரமும் சரம ஸ்லோகமும் அறிந்து –
சரணாகதி அனுஷ்டானம் செய்து -த்வய நிஷ்டர் )
ஞானம் பரம்
தத் உசித ஆசாரண்யஞ்ச யஸ்ய
தஸ்மிந் குரோவ் பரமபக்தி ஜூஷே ஜனா
பவ்மா
ஸ்வயம்
மது ரஸா விலாய பத்ம ஜாயா காந்தன்
கருணயா
நிஜ தாமம் தத்தே
ஞானம் அனுட்டானம் –
ஞானமாவது-
உபாய அத்யாவசாய ரூபமாயும்
உபேய த்வரா விஷயமாயும் -உண்டான அறிவு
(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பெயர் -133-
உபாய விஷயத்தில் ஞானமும் உபேய விஷயத்தில் அனுஷ்டானமும் –
என் பணி எது என்னாதே அது ஆட்ச்செய்வதே )
அனுட்டானமாவது –
தத் அனுகுணமாக
அலர்மேல் மங்கை உறை மார்பா யுன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -(6-10-19)–என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நான் என்றும் -(3-3-1-)
நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே-(1-9-1-) -என்றும்
சொல்லப் படுகிற உபாய உபேய அனுஷ்டானம் -என்கை –
(உபாய அனுஷ்டானம் உபேய அனுஷ்டானம் இரண்டுக்கும் இரண்டு நம்மாழ்வார் -ஒரே பாசுரம் கலியன் )
இதுவே இறே வாக்ய த்வயத்தில் பிரதிபாதிக்கிறது –
ஆகையால் ஷட் பத நிஷ்டனான சதாச்சார்யனை இறே இங்கு
சமாஸ்ரயணீயனாக அருளிச் செய்கிறது –
(அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை )
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல மகா பாகவதன் ஆக வேணும் இறே –
(உடையவர் என்று நேராக அருளிச் செய்யாமல் -இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் -திருவரங்கத்தை திரு உள்ளத்தில் கொண்டே
இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்—60-
காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய ஸரணம் ப4க3வத் ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணே அர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வஸ் ஆஸ்ரிதாநாம் ||-ஸ்ரீ யதிராஜ விம்சதி)
இவை-
இவை யன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவேனேலும் -(பெரிய திருவந்தாதி )-என்கிறபடி
சத் அசத் விவேக பரிகரமான-ஞானம் என்றத்தாலே
விடுமவற்றை விட்டு
பற்றுமவற்றைப் பற்றியும் போருகிற-
த்யாஜ்ய உபாதேய ரூபமாய் இருக்கிற அனுஷ்டானங்கள்
என்கிற இவை யாகவுமாம்-
(ஞானம் அனுஷ்டானம் ஒருமை இவை பன்மை –
ஆகவே சத் அஸத் விவேக ஞானத்தால் த்யாஜ்ய உபாதேய அனுஷ்டானங்களை இவை என்கிறார்
போதரிக்கண்ணினாய் ஞானமும் நா உடையாய் அனுஷ்டானமும் போல் )
ஆச்சார்யனுக்கு அடையாளம் –
அறிவும் அனுஷ்டானமும் -என்றும்
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் -என்று இறே
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது –
ஸ்வ ஞானம்
பிராபக ஞானம்
ப்ராப்ய ஞானம்
முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் (ஏதத் அந்யத் ந கிஞ்சன)-என்னும்படி
(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி த்ரய ஞான ஸ்லோகம் இது
பஞ்சீ கரணத்தை த்ரயீவக் கரணம்-தேஜோ பன்னங்கள் பிருத்வி அப்பு தேஜஸ்ஸூ மூன்றையும் சுருக்கிச் சொல்வது போல்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் பர வ்யூஹ விபவம் ஸ்பஷ்டம் –
அந்தர்யாமியை பரத்வத்திலும் அர்ச்சையை விபவத்தில் சுருக்கி -இதுவும் ஐந்தை மூன்றாக சொல்வது )
ஸ்வ ரூப அனுரூபமான உபாய உபேய விஷய ஞானம் –
இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய ஞான அனுஷ்டானங்களை —
(ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் பாரதந்தர்யம் அறியவே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியும் ஏற்படுமே
இதுவே உபாய உபேய ஞானம் -இதுவே த்வயார்த்தம் -பூர்வ வாக்யமுயம் உத்தர வாக்கியமும் –
ஞானம் -ஒரே வார்த்தை -விளக்கி -த்வயத்தில் கோத்து –
ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யத்தோடே சேர்த்து அருளுவது அழகு )
நன்றாகவே யுடையனான குருவை –
இவற்றால் பரி பூர்ணனாய் இருப்பான் ஒரு பரம சத்வ நிஷ்டனை
ஆஸ்ரயித்தால் ஆயத்து கார்ய கரமாவது
இவற்றில் ஓன்று குறையிலும் ஆஸ்ரயிக்கும் அவனுக்கு அந்த ஆஸ்ரயண பலம் தலைக் கட்டாது
காட்டுத் தீ சூழ்ந்த விடத்து அந்தனும் பங்குவும் ( குருடனும் நொண்டியும் ) கூடி இருந்தால்
அப்ரயோஜனமாகவே இறே இருப்பது
சஷூஷ் மானுமாய் சரணவானுமாய் இருப்பான் ஒருவனாலே இறே அத்தைத் தப்பிப் பிழைக்கல் ஆவது –
ஆகையால் அனுஷ்டான ஹீனமான ஞானமும் ஞான ஹீனமான அனுஷ்டானமும் அகிஞ்சித்கரம் இறே
(கண் -ஞானம் கால் அனுஷ்டானம் -சம்சாரம் காட்டுத் தீ-ஆகவே இந்த த்ருஷ்டாந்தம்
பாவாடவி வர்ணனம் ஸ்ரீ மத் பாகவதத்தில் பெரிய அத்யாயம் உண்டே -அடவி காடு -சம்சாரம் என்னும் காடு –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாக இல்லையே -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மம் அடியாகவே -இப்படி இரண்டும் போல்
நம் ஆச்சார்யர் உபகார ஆச்சார்யர் -அவர் கொண்டு போய் உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்க்க
அவருக்கு ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே இருப்பதால் அது கார்யகரம் ஆகுமே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார் -இல்லாதார்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் – )
ஞான ஹீனம் குரும் பிராப்ய -என்று தொடங்கி –
யதாபாரம் ந கச்சதி -என்னக் கடவது இறே –
கண்ணும் காலும் உண்டானால் இறே ஒருவனைக் கரை ஏற்றலாவது-
அந்த அநந்த க்ரஹண வசக -இத்யாதி –
(குருடன் கண் தெரிந்தவன் வசம் இருந்தால் தானே தாண்ட முடியும் )
தன்னை அக்கரை ஏற்ற வல்ல ஞானாதி பரி பூர்ணனாய் இருப்பான் ஒருவன் என்று இறே
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –
ஆகையால் அசங்குசித ஞான அனுஷ்டானங்களை யுடையவர்களை ஆய்த்து ஆச்சார்யர்களாக ஆஸ்ரயிப்பது-
(விஷ்ணு போதம் -சர்வம் ஞானம் ப்லவம் படகு-ஸ்ரீ கீதை – -அவன் திருவடியே-ஆச்சார்யர் – அவனை அடைவிக்கும் )
குருவை அடைந்தக்கால் –
அஞ்ஞான நிவர்த்தகனாய் ஆசார பிரவர்த்தகனாய் (அனுஷ்டான பிரவர்த்தகனாய்) இருக்கிற ஆச்சார்யனை
உபாய யுபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
தனக்கு பிராப்யனாயும் பிராபகனாயும் அத்யவசித்து ஆஸ்ரயித்தக்கால் —
(கு சப்த அந்தகார வாசக ரு தத் நிவாரகத்வம்
குரு -பெரிய லகு சிறிய
தமேவ -இங்கு -மாம் ஏகம் அங்கு -கீதாச்சார்யன் -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பீடம் ஆசைப்பட்டு மேற் கொண்டான் அன்றோ
அடைவது -திடமான உறுதியான விஸ்வாசத்துடன் ஆஸ்ரயப்யதே )
அடைந்தக்கால் –
நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல
அஞ்சினான் புகலிடம் ஆன ஆச்சார்ய அபிமானத்தை
(அசைலம் -அஞ்சினான் புகலிடம்
சம்சாரம் கண்டு அஞ்சி ஈஸ்வரனைப் பற்ற –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யம் பற்றி அஞ்சினால் ஆச்சார்யரைப் பற்ற வேண்டுமே
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் )
(ஆச்சார்ய அபிமானத்தை ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே ) அவன் பிரசாதத்தால் பிராபிக்கப் பெற்றால் –
தங்களுக்காக சரண வரணம் பண்ணி ரஷிக்கும் அவனை தாங்கள் சரணமாக அடைந்தக்கால் –
(ஸ்வகத ஸ்வீ காரம் கூடாதே -ஆகவே அடைந்தக்கால் -பரகத ஸ்வீ காரத்தையே கொள்ள வேண்டும் )
குருவை அடைந்தக்கால் –
குருரேவ பரம் ப்ரஹ்மம்-என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்றும் சொல்லுகிறபடியே
குருதரனான குருவை ஆஸ்ரயித்தக்கால்-
(குருவே ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே குரு -இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் )
இப்படி அலாப்ய லாபமானது லபிக்கப் பெற்றால்
அந்த ஆஸ்ரயண ராஜ குல மகாத்ம்யத்தாலே ( ப்ரபந்ந குல மஹாத்ம்யம் -அரசு இளம் குமரன் போல் )
ஸ்ரீ யபதியானவன் ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் –
அடைந்தக்கால் மா நிலத்தீர் –
பசு மனுஷ்ய பக்ஷி வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா -(சாண்டில்ய ஸ்ம்ருதி )-என்கிறபடியே
அவனுடைய அபிமானத்திலே அந்தர்பாவத்தை யுடையார் ஆனக்கால் –
மா நிலத்தீர் –
மகா பிருத்வியில் உள்ளவர்களே
ஞாலத்தார் தமக்கும் வானத்தவருக்கும் பெருமான்-(திருவாய்-3-5-8-)-என்கிறபடியே
(ஞாலத்தார்-படு கரணன் பக்கலில் தாய் அபிமானம் மிக்கு இருக்குமே -ஆகவே முதலில் இது )
அவனோடு யுண்டான அவர்ஜ நீய சம்பந்தம் யுடையவர்கள் ஆகையாலே உங்களை விட மாட்டுகிறிலன்
ஞாலத்தார் பந்த புத்தியும் -என்று இறே அருளிச் செய்தது –
(ஈஸ்வர பந்தத்தை இங்கே சொல்கிறது -சம்சார பந்தத்தை அல்ல )
இப்படி பிரதிபத்தியிலும் அதி ஸூலபமான உபாயத்தை இறே நாம் உங்களுக்கு விதிக்கிறது-
(நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ் உயிர்க்கும் அறிய என்று அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-சூரணை -203-
1-ஞாலத்தார் பந்த புத்தியும்–ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் )
ஆனால் நீர் சொன்னபடி அடைந்தால் ஆவது என் என்னில் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே-குருவாகையாலே-தத் ஆஸ்ரயணத்துக்கு
தேனைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
அந்தத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்கிறார் –
(தேனைவதே-அந்த ஆச்சார்யர் பலத்தால் -தானே குருவான படியால் -நாம் அடைந்தக்கால் -தானே தரும் )
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-(10-8-1-) -என்றும்
(நின்றவன் படுத்தவன் இங்கு வந்து இருந்தான் )
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -(பெரியாழ்வார் -5-2-10-)-என்றும் சொல்லுகிறபடி
இவன் இடத்திலே -என்னுள்ளம் மாலுக்கு இடம் -என்னும் படி
விசிஷ்ட அதிஷ்டானமாக எழுந்து அருளி இருக்கையாலே அவன் தானே என்று சொல்லலாம் இறே
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -என்று இறே அருளிச் செய்தது –
(விசிஷ்ட அதிஷ்டானமாக-லஷ்மீ விசிஷ்டனாக -பிராட்டி உடன் கூட நம் உள்ளத்தை இருப்பிடமாக கொண்டான் -அது போலவே
தானே குருவாக அதிஷ்டானமாக -தேர்ந்து எடுத்துக் கொள்வான் -திருவடியைப் பற்றிக் கார்யம் கொள்ளுமா பாதி தானே )
இப்படி அவிநாபாவமுமாய்-அநதிக்ரமண (பிரிக்க முடியாததாயும் -உதற முடியாத காரணத்தாலும் )
ஹேதுவாயுமாய் இருக்கிற இவ் உபாயத்தாலே
தேனார் மலர் மேல் திருமங்கை -(பெரியாழ்வார்-1-3-7 )-என்னும் படியான
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன்
அவள் சார்வான ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டருக்கு பலம் கொடுப்பது அவளுக்கு உகப்பாகையாலே
(பூ மேல் திரு -நமக்கு என்னும் சார்வு -பேயாழ்வார்
த்வயம் பிராட்டியாலே பேறு சொல்லுமே
மஹரீஷீணாம் ஸூக வாஹனம் -அணைத்துக் கொண்டது போல் )
யஸ்யா வீஷ்ய முகம் (ஸ்ரீ ஸ்தவம் -கூரத்தாழ்வான் )-என்று அவள் முக மலர்த்திக்காக
கேவலம் சமபந்தம் மாத்ரமே பற்றாசாகக் கொண்டு தானே மேலே விழுந்து
ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் –
ஸ்வயமேவ பரந்தாமா ஸ்வயம் நயதி மாதவ -என்னுமா போலே —
(அவ்வானவருக்கு மவ்வானவர் –உவ்வானவர் உடைமை என்று உரைத்தார் –
பெரிய பிராட்டியார் பரிகரம் ஆச்சார்யர் )
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் –
தன்னோட்டை சேர்த்தியாலே
மது சம்ருதியை யுடைத்தான தாமரைப் பூவை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையாளாய்
ஸ்ரீ என்று திரு நாமத்தை யுடையாளாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
தனக்கு வல்லபனான அவனை வசீகரித்து
ஸ்வ சம்பந்தம் அடியாக யுண்டான கடகத்வத்தை யுடைய ஸ்ரீ ஆசார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு
பல சித்தியை பண்ணுவிக்குமவள் ஆகையாலே ( கொடுக்க வைப்பவள் தானே பிராட்டி )
அவளுடைய பிரீதிக்காக தான் ஏறிட்டுக் கொண்டு
உபாய நிரபேஷனாய்-
அஹம் மோஷயிஷ்யாமி -என்கிறபடியே –
திரு மா மகள் கொழுநன் தானே –
திருமால் வைகுந்தம் -( 10-7-8 )-என்று சொல்லப் படுகிற
தன்னதான ஸ்ரீ வைகுண்ட வான் போகத்தை தந்து அருளும் —
(கொடுப்பதைக் கொடுத்தால் தானே கொடுப்பான் -லௌகிக விஷயம் போல் )
வைகுந்தம் தரும் –
வீடும் தரும் நின்று நின்றே -( திருவாய் -3-9-9 )-என்கிறபடியே இருவருமான சேர்த்தியிலே
நித்ய கைங்கர்ய நிரதனாய் வாழும் படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்து அருளும் –
இதில் சம்சயம் இல்லை —
இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
ஆக இத்தால் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –
——————————
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -வேதமே பரம சாஸ்திரம் -கேசவன் பரம தத்வம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜா ஜகத் குரு –நாத்ர சம்சயம் -கூரத்தாழ்வான் -சம்ஸ்க்ருதம் விசேஷத்தில்
இங்கு மா முனிகள் தமிழில் பொதுவாக மா நிலத்தீர் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு
ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-
ஆச்சார்ய சம்பந்தத்தாலும்
அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு
உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய (ஸ்ரீ வசன பூஷண ஸாஸ்த்ர தாத்பர்ய ) நிஷ்டராய்
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து
தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான
தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில் நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –
(அன்னை குடிநீர் அருந்தி அழும் குழவி -இதே அர்த்தம் ஆர்த்தி பிரபந்த பாசுரம் )
உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-
மாயன் பரம பதம்-அவனே பரமபதம் -அதுவாகவே –
பையரவில்-அறி துயில் அமர்ந்த –
கையிலங்கு நெல்லிக் கனி -ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாம் – மாயன் பரமபதம் உங்களுக்காகும்
பொன்னடியாம் செங்கமல போதுகளை -உன்னி சிரத்தாலே தீண்டில் -யதீந்த்ர பிரவணர் திருவடி பலத்தாலே பெறுவோம்
உஜ்ஜீவநாய யதி
நிஷ்டீயதாம்
நிஜ குரோவ் சரணார விந்த
சத்யம் ப்ரவீணீ
மனுஷா
பணி சாயிநா
தத் திவ்யம் பரம்
கர தல ஆமல தலகம்
பவேத் வஹ
உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே-விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
(ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வாபஞ்ச சதா ஸ்மர
விருப்பம் இருந்தாலே போதும் )
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாத்ரம் யுண்டாகில்
மனஸ் சஹகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ரிய பிரசங்கம் இல்லை-( இம்மையில் வறுமை இல்லை )
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-
(விலக்காமை வருவது பரம பதம் பெறுவது போல் அருமை அன்றோ )
இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –
உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை
உம் தம் ஆச்சார்யர் திருவடிகளில்
உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து என்கிறபடி அதி ஸ்நேஹம் வைக்கும் படி பாருங்கோள்
உம் குருக்கள் தம் பதத்தே
சார்ந்தது என் சிந்தை -உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து -ராமானுஜ -71-
மனம் மொழி செய்கை மூன்றுமே -மிகவும் கூர்ந்து -அமுதனார்
வையும் அன்பு தன்னை -மிகவும் விட்டு –அன்பு லேசமும் வைத்து
அதி ஸ்நேஹம் –வையும் அன்பு தன்னை ( இவ்வளவு இறங்கி வந்து நம்மைக் கைக்கொள்ளுகிறார் )
நிதியை அடியிலே இட்டு வைக்குமா போலே -அன்பையையும் அடியிலே வைத்து
பாத மூலம் பற்றி இருப்பதே பிராப்தம் (வேர் பாத மூலம் )
உம் குருக்கள்
என் குருக்கள் அடியிலோ அன்பை வைக்கச் சொல்கிறது
உங்களுடைய அஞ்ஞானத்தை போக்கி -ஞான தீபம்–ப்ரதோ குரு
விஞ்ஞானம் ப்ரதானாதிகளை கொடுக்கும் -மஹா உதாரர் -மஹா உபகாரகர்
ஆதி சப்தம் -அறிவு கொடுத்து -வைராக்யம் விளைவித்து -தட்டித் திருத்தி -ஆனந்தம் வளர்த்து -ரக்ஷித்து -உசாத்துணையாக இருந்து
விமல சரம விக்ரஹ ஏக தேசமாய் -திருவடி –
கு அந்தகாரம் -ரு அத்தைப்போக்கி -மங்க ஒட்டு உன் மா மாயை என்று ஆழ்வார் காலைக் கட்டி
விட வைக்கும் படி அன்றோ அவனது வியாமோஹம் -இருந்தான் கண்டு கொண்டே –
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உள்ள
திருவடிகளில் பரிவராக -பதத்தே -என்பதன் அர்த்தம்
திருப்பாதம் கமலபாதம் போல்
குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் அடிக்கு அன்பர் –
அன்புக்கு அடியில் அன்பு வையும் –
அன்பு அவர் கண்ணே வைத்து -( திருக்குறும் தாண்டகம் -18-) என்கிறபடி – பகவத் பஜனம் அரிது
‘இந்த எளிய வழியைப் பற்றுங்கோள்
(அடி -மூலம் -ஆச்சார்யர் திருவடிகளே மூலம் )
(அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம்-ஞான சாரம் –39-)
(அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ-ஞான சாரம் –40-)
(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-)
இந்த மா நிலத்தீர்
உங்கள் ஆச்சார்யர் உங்களுக்காக இங்கு வந்து அவதரித்து எதிர் சூழல் புக்கு
இந்த மஹா பிருத்வியிலே ஜனித்து -அதில் வசிக்கப் பெற்ற பாக்யம் உடையவர்களே
இருந்த ஊரில் இருக்க எத்தவம் செய்தீர்கள் -4-4-7–என்றும்
பாத தூளி படிதலால் பாக்யம் செய்ததே-4-4-6- -என்றும்
ஊரும் நாடும் உலகமும் தங்களை போலே ஆக்குமவர்கள் அன்றோ
(பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4 6-)
(குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4-7-)
மானிடர்க்காய் -அவன் தாளிணை -என்கிறபடியே
உங்களை ரஷிக்கவே சர ரூபியாய் நடமாடும்
சசார வஸுதா தல
சஞ்சரிக்கும் -கோயில் ஆழ்வார் ஸ்தாவர விமானம் -இது ஜங்கம விமானம்
மாதவன் என்னும் கோயில் அமைத்து
இது எல்லாம் மத்தர்த்தம் என்று விசாரித்து
அச் சரண யுகங்களில் சங்கத்தைப் பண்ணுங்கோள் அன்பு வையுங்கோள்
எங்கும் திரிந்து அரங்கன் அம்மானுக்கே சங்கம் உண்டாக்க அன்றோ தீர்த்தகரராய் திரிந்து உள்ளார்கள் –
(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் -ஞான சாரம்–38-)
(ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே-பெருமாள் திருமொழி –2-6-)
இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –
அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூஸ்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்போதித்து அருளுகிறார் ஆகவுமாம்-
(முதலிகள் அனைவருக்கும் விபீஷணன் கை கூப்பியது போல் இவர் அனைவருக்கும் உபதேசம் –
ஆசை வைப்பார் யாவராவது கிடைப்பாரா என்னும் நப்பாசையால் )
நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன
மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –
பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –
(உண்மை விளம்பி -நன்மை விரும்பி -ஆப்த வாக்கியம் )
மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷ கண சன்னிதௌ–(ஸூ ந்தர 51) -என்று
(கரடி குரங்கு கூட்டத்தில்-மஹா பக்தர்கள் சமூகம் – பெருமாள் ப்ரதிஜ்ஜை )
அந்த மகா பரிஷத்திலே சத்ய வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –
இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-
அடியிலே அன்பு யுண்டாகையாலே-
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் (முதல் திருவந்தாதி -32-)-என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –
(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-32–
அணைவரே -தேற்ற ஏகாரமும் எதிர்மறை ஏகாரமுமாம் -தன்னேற்றமும் -இரண்டு அர்த்தமும் -உண்டே
இமையாத கண் -ஞானக்கண் -இந்திரிய வசம் இல்லாதார்-நமையாமல்- வைகுந்த நகர் அணைய மாட்டார்கள்
இப்படிப்பட்டவர்களும் -பெருமாள் வர விலக்காமல் இருந்தால்-ஆகத் தணைப்பார் அணைவரே- பெறுவார்கள் -)
மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -( 2-8-1)-என்றும் –
தயா சஹா ஸீநமனந்த போகி நீ–(ஸ்தோத்ர ரத்னம் )என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீநம் -( கத்ய த்ரயம் )-என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில் (ஞான சாரம் )
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை (ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிறவனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோகதாம் ஆப்நோதி-(உபநிஷத் )என்கிறபடியே சித்திக்கும் –
(ஸ்ரீ விசிஷ்டன் குண விசிஷ்டன் விக்ரஹ விசிஷ்டனை ப்ராப்யமாக இருக்கும் அவனை அனுபவிக்காமல் –
விதியால் ப்ராபகமாக பற்றுகிறோம் சரணம் ப்ரபத்யே )
இது தான்
ஏவம் வித் பாதேன அத்யாரோஹதி (கௌஷீக உபநிஷத் )-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக கல்பிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –
(சகல கைங்கர்யங்களையும் சென்றால் குடையாம் போலே சித்திக்கும்
பரம போகி-ஆதி சேஷன் -அனந்த போக்யம் அனுபவிக்கும் நித்யர் -சாடு )
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் –
ஸ்வ சம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால்
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று
(பலம் -பிரயோஜனம் -பலம் -நெல்லிக்கனி திருஷ்டாந்தம் )
அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும்-(ராமானுஜ -104) -என்றும்
(சேஷ ராமானுஜ திருமேனியில் ஈடுபட்ட நான் சேஷி ராமானுஜ -கண்ணனைக் காட்டித் தரிலும் வேண்டேன் )
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -( 4-10-11-)-என்றும்
இவர்களுக்கு கரதல ஆமலகம் போலே- (நெல்லிக் கனிக்கு வடமொழி -கரதல ஆமலகம்)
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –
கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்
பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -(ஸ்ரீ முதல் திருவந்தாதி-85)-என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -(வைகுண்ட ஸ்தவம் )-என்னும் படியான மைப்படி மேனி இறே –
(படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ -ஸ்ரீ முதல் திருவந்தாதி–85-)
பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி
அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ் வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –
(சென்றால் குடையாம் –நிவாஸ இத்யாதி )
உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா –
அவன் தானே தரவும் வேண்டா –
(ஆம் -மோக்ஷயிஷ்யாமி போல் -நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே விட்டுப்போம் போல் இங்கும் )
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களேதாயே இருக்கும் –
புங்க்தே போகாந் அந்விதித நிருபஸ் சேவைகச்ய அர்ப்பகாதி-( ந்யாஸ திலகம் ) -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்ம தன்றோ தாய முறை தான் -( ஆர்த்தி பிரபந்தம் -)-என்றும் சொல்லக் கடவது இறே –
உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-
ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –
பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-(ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி-18)-
உய்ய நினைவு -உஜ்ஜீவனம் -உத்தாரணம் -இதுக்கு த்வரிக்கையே –
அடியார் குழாங்களைக் கூடி நித்ய கைங்கர்யம் செய்யவே த்வரிப்பது –
உய்விப்பதற்கு ஆற்றல் நம் குருக்கள் இடம்-அவர்கள் உபகாரம் செய்து –
உத்தார ஆச்சார்யர் உடையவர் இடம் சேர்த்து அருளுவார் – –
ஆகவே அன்பு வைக்க வேண்டும் இவர் இடம்
பாலர் -ஜடர் -மூடவன் -அந்தகன் -சதாசார்யரை அடைந்து நல் கதி அடைவோமே –
திருக்கையால் தீண்டப்பற்றி மரங்களும் நாள் கதி அடைந்ததை அறிவோம் –
ஸாஸ்த்ர கண்ணால் தான் பகவானைக் காண முடியும்
ஊனக் கண்ணாலே நாம் ஆச்சார்யரைக் காணலாம்
கையில் ராமானுஜனில் நீர் இருக்க அத்தைப் பருகாமல் வானை எதிர்பார்ப்பது போலே ஆகுமே
சித்தர் பவதி வா ந இதி சம்சயவா அச்யுத -நிஸ் சம்சயம் -பக்தர் கைங்கர்யம் செய்தால் –
குருவால் யார் அபிமானம் செய்யப்பட்டாலும் குருவை அபிமானித்தாலும் நியமமாக பரம புருஷார்த்தம் கிட்டும்
இரண்டிலும் ஆச்சார்ய அபிமானம் ஸ்ரேஷ்டம் –
——————————————————————————-
கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
(தரதி -தாண்டுவித்து )
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
(சம்சார நிவர்த்தகமான திருமந்திரம் உபதேசிப்பவரே நேரே ஆச்சார்யர் )
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில்
இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யனுடைய மனஸ் தான்-
(க்ருதம் -செயல் -ஞா -ஞானம் அறிவு-கிருதஞ்ஞனான-செய் நன்றி உடையவனான )
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –
ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-
உபகாரமானவது-உபகாரமான-அது -பெருமையை நினைத்து வித்தராகிறார்
தேசாந்தரத்தில்–ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு-சேவைக்கு – அசலாக உள்ள தேசமே தேசாந்தரம்
இனி-வஸ்து ஸ்திதி -உண்மை இப்படி இருக்க
அறியோம் யாம்-ஆதிசேஷனான இவரே அறியார் -இத்தால் யாருமே அறியார் –
மனசில் தூயதாகப் பட்ட பின்பு யாரும் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றவாறு –
உஜ்ஜீவநாயா விஹிதா
குரூனோ உபகார
சிஷ்டே சித்தே –
விமலா யதி சேதாநானாம்
தேசாந்தரே நிவசனம் ந மநோபி வ்ருஷயேத்
வாஸம் கதம் பவதேதி
வயம் ந வித்மே
ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே
அது -என்னும் அத்தனை –
(கல் தச்சன் -கரடு முரடு மாத்துபவன் -ஆசாரி -ஆச்சார்யன் -அவஸ்து வாக உள்ளவனை வஸ்துவாக்கி –
பிரதியுபகாரம் -ஈஸ்வர த்வயமும் சதுஷ்ட்ய விபூதிகளும் வேண்டுமே
அது -ஸப்த பிரயோகம் ஸ்ரேஷ்டம்- பயம் –
பேதை பாலகன் அது ஆகும்
அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டு
தம் பேறாக -நம் குற்றம் பாராமல்-மங்களா சாசன பரராக்கிய -கடக க்ருத்யம்
திவளும் -அமுத்தினாள் பிறந்த அவள் -நின் தாள் நயந்து இருந்த -இவள் –
இரண்டாலும் பெருமையை சொன்னது போல் இங்கும் )
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –
உபகாரமானது –
ஆத்ம நோஹ் யதி நீசஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தாரம் ஆசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
(நீசரான நமக்கும் யோகிகள் பெரும் பேற்றை பரம கிருபையால் )
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
உனக்கென் செய்கேன் -என்றும்
இப்படி ஈடுபடும்படி
பெரு நல் உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக
பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –
ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –
(தேடிப் பிடிக்கும் படி அன்றோ இருப்பது )
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –
தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து (அடைந்த வஸ்து -ஆர்த்தி பிரபந்தம்-57- )-என்றும்
(ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்கவே வஸ்துவானேன் -ஜெகதாசார்யர் )
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -(46)-என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே-(21) -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –
இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு
தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –
தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்ய சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல்
க்ருதஞதா பல பிரத்யுபகார சாபேஷமான மனஸ்ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது-
(ஆச்சார்ய திரு உள்ளம் உகப்புக்காக அன்றோ அனந்தாழ்வான் திருமலைக்கு உடையவராய் விட்டுப் பிரிந்தது )
இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ்சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -(ராமானுஜ –100-)-என்னும்படி
பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
( ராமம் மே அனுகதா த்ருஷ்ட்டி -தசரதன் )
ஆகையால்-
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்-310 )-என்கிறபடி
சஹ வசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விஸ்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே-
(தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –ஸஹ வாசத்தையும் –பலமாக நினைக்கை —ஸ்ரீ வசன பூஷண-சூரணை-309-)
(நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
(உன் மனசால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே )
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –சூரணை -310-
அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி)
அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-
(ஸ்ரீ ஆளவந்தாரை பிரிந்து நோய் வாட-என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்ததே -ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான்)
இனி
விஸ்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விஸ்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானாம்சமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத ( பிராயச்சித்தம் இல்லாத ) பாபம்-என்னும் படியான
க்ருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விஸ்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –
(என் செய் கேன் உலகத்தீரே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் இங்கு இவரும் )
இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஜ்ஞராய் இருக்குமவர் (மா முனிகள் )ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –
நித்யம் குரும் உபாசீத -என்கிற
சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்ய வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –
அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்ய பதச் சாயையிலே இருந்து-
பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய் ( பல்லவம் துளிர் )
(ஆத்ம புஷ்பத்தை நிழலில் வைத்து சரீரத்தை வெய்யில் இட வேண்டுமே
மொட்டு துளிர்த்து பூத்து பழுத்து -நிலைகளை அடைய வேண்டுமே )
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –
இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து
ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
(முதல் திருவந்தாதி -91 -வியாக்யானத்தில் இந்த ஐதிக்யம் )
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –
(ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன –
நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-நாடோறும்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ )
(ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு –
கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –
ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –
ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க –
ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று
கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில்
நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –)
————————————————
கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்
அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய
பிரசங்கம் இல்லை என்கிறார் –
தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-
சிஸ்ரூஷணம் நிஜ குரு
உபதேதி வாம்
ஏனாம் ப்ரமேய தரணீம்
பிரதிபத்ய மான
ஹே வாத் யஜந்தி
நிஜ தேசிக பாத மூலம்
தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய்
தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –
அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது
(ப்ரக்ருதிம் அதிஷ்டாயா -சாஷாத் நாராயண தேவனே சஸ்த்ர பாணியாய் –
அவனே -ஈஸ்வர இச்சை என்பதால் கர்மாதீனம் இல்லை –
அவதாரமும் அவனைப் போல் -இருப்பதும் நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே )
அந்நாட்டிலே போனால்
எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
(அம்ருத சாகரான் நிமக்னன் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் )
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற
இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –
(திவ்ய மங்கள விக்ரஹம் அங்கு வியர்க்காதே -திருவடி பிடித்து விட முடியாதே )
நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -(6-8-2 )-என்றும்
குருக்களுக்கு அனுகூலராய்-(பெரியாழ்வார் 4-4-2) -என்றும் சொல்லக் கடவது இறே –
(பிராகிருத பதார்த்தம் சமர்ப்பிக்கவும் கைங்கர்யம் செய்வதற்கும் இரண்டு பிரமாணங்கள் )
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-
(திருவாய் மொழி –4-3-11-ஈட்டில்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே மண்ணூடேயே -ஸ்ரீ ராமானுஜர் போல் –120-ஸம்வத்சரம் இல்லாமல் –
பராசர பட்டரை பால்யத்திலே இழந்ததால் -நஞ்சீயர் -வருந்தி இருக்க
நம் பெருமாள் கவலைப்படாதீர் பிள்ளை ஒருவரைத் தருவோம் -என்று
நம்பிள்ளையைக் கொண்டு இவர் திருவடிகளில் சேர்த்து அருளினார் அன்றோ )
(பட்டர் –60-68 திரு நக்ஷத்ரம் இருந்து இருப்பதாக சொல்வர் )
(யதன்ன புருஷ பவதி பெருமாளுக்கு சாஸ்திரம் அனுபவித்த தனக்குப் பிடித்த ஓன்றை பெருமாளுக்கு
பூதங்கள் -சிந்தப்புடைத்து -செங்குருதி கொண்டு பூதங்கள் அந்தப்பலி கொடுத்து திருமாலிருஞ்சோலை –
வர்ணாஸ்ரமம் படி வாழ்ந்து ஸாஸ்த்ரம் அனுமதித்த ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஆச்சார்ய பிரிய தனம் -அவருக்கு பிடித்த ஒன்றையே சமர்ப்பிக்க வேண்டுமே )
அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும்
சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற
நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் படலாய் இருக்க –
அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில்
அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –
ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான
சத்தை யுடையராய் இருக்கிற ஆச்சார்ய பர தந்த்ரரில்–
அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –
அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில் அத்தனை போக்கி —
அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும்
ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது
அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-
தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற
இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது –
சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –
(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–ஸப்த காதை–1-)
மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–
யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உன் தனக்கே யாட்கொள்ளு உகந்து (ஆர்த்தி பிரபந்தம்-11- )-என்று ஆதரித்து
(எந்நாளும் -யாவதாத்ம பாவி -அத்ர பரத்ர சாபி தமிழ் படுத்துகிறார் )
போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –
இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே–
தம் திரு உள்ளத்திலே பரிவு – தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –
(மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை -இவர்களைச் சொன்னவாறு
பொன்னடிக்கால் ஜீயர் -வான மா மலை ஜீயர் வடநாட்டு யாத்திரை மா முனிகள் நியமனம் அடியாக சென்று பின்பு
வெகு காலம் கழித்து தான் திரும்பினாராம் -வடக்கே நிறைய சிஷ்யர்கள் இன்றும் இவராலேயே –
கூட இருந்து சரம கைங்கர்யம் செய்தவர் கோயில் அண்ணன் -கந்தாடை ஆண்டான் தான் என்பர்
இது சிஷ்யர் ஆச்சார்யர் பிரிவுக்கு த்ருஷ்டாந்தம்
பாதுகை ஸ்தானீயம் -அண்ணன் ஸ்வாமி மா முனிகளுக்கு – முதலியாண்டான் ராமானுஜர் போல்
எம்பார்-ராமானுஜர் போல் -பதச்சாயை -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
பாத ரேகை -பொன்னடிக்கால் ஜீயர் -சாயை கூட நிழலில் பிரியலாம் -ஆகவே ரேகையே பிரியாது )
அந்த அனந்தரத்திலே–
எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் -(எம் காயம் )தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் –
என்றும் அருளிச் செய்தாராம் –
ஆக இத்தால்
தத் பாத சேவை ஏக தாரகராய் இருக்கும் ஆச்சார்ய பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விஸ்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-
————————————————————–
(கீழ் இரண்டும் ப்ராசங்கிகம் –
ஆச்சார்யர் சிஷ்யர் விஸ்லேஷ வியசனம் அடியாக வரும் அனர்த்தங்கள் )
கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும்
கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான
சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை அருளிச் செய்து–
அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான
ஸ்வரூப
தேக
சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும்
அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும்
அருளிச் செய்கிறார் இதில் –
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-
தேசாரும் சிச்சனவன்-ஆச்சார்யர் திருமேனியை ப்ரீத்தி உடன் நோக்கும் தேஜஸ் உடைய சிஷ்யன்
ஆருயிரை-எம்பெருமானும் விரும்பும் படியான கௌஸ்துப ஸ்தானீயம் -ஆத்மவஸ்து –
அந்தே சதக குரு
ஆத்ம ரஷாம் சிஷ்ய
ப்ரக்ருஷ்ய குரு தாம்
குரு தேக ரஷாம்
அர்த்தம் ஸூ ஸூஷ்மம் இமாம் ஆகலயந்தி சிந்தே
துர்லபாத் அபி வர்த்தனி தத்ர நிஷ்டா
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதானாதி முகத்தாலே
நல் வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை
ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் –
அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-
தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களாவஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –
(ஞானியை விக்ரஹத்துடன் ஆராதிக்கும் -சரம விமல திரு மேனி –
திரு நாராயண புரத்தில் வீற்று இருந்த கோலத்துடன் எழுந்த அருளப் பண்ணி
வாழை மரம் தோரணம் கட்டி கோயில் பிரசாதம் -அபய ஹஸ்த பிரசாதம் சாதிப்பார்களாம்
இங்கு ஸந்யாஸ ஜீயர் அப்படி
திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் சாதிப்பார்களாம்
ஸந்நிதி கதவு திறந்து மாலை -அருளப்பாடு அப்பொழுதும் உண்டாம்
உபநிஷத் சேவை உடன் தந்த பல்லக்கு
வீதியில் தட்டு அமுது செய்து
பின்னால் அடுத்த ஸ்வாமி
அவரை குழியில் எழுந்து அருளப் பண்ணி
திருமேனி பரிவட்டம் வஸ்திரம் கணையாழி உபதண்டம் இவருக்கு சாத்தி அப்பொழுது தான் இவர் ஜீயர் ஆவார்
திருவரஸில் அதே பல்லக்கில் எழுந்து அருள பண்ணி வருவார்களாம்
திருமண் ஸ்ரீ சூர்ணம் பிரிக்காமல் தீட்டு நாள்களிலும் உண்டாம் திரு நாராயண புரத்தில் )
ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்- (ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -333-)என்றும்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -(சூரணை -334-)-என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும்
இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –
(இருவரும்-பிள்ளை லோகாச்சார்யார் -மா முனிகள் சொன்னதாக பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இருவரும்
நாயனாரும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளிச் செய்தார்கள் – )
(ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –(ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -335)
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-)
ஆசையுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்த அநஸூயா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன்
தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–
ஸ்நிக்தோ ஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –
(சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -திவ்ய மங்கள விக்ரஹ மங்களா சாசனம் தானே உண்டே எங்கும் )
ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -(திருவாய் -9-6-6 )-என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய்
இப்படி
ஊணும் பூணுமாய் (அன்னமும் கௌஸ்துபமும் )இருக்கும் என்னுமது தோற்றுகிறது
சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -( திருவாய் 10-7-4-த்யாஜ்ய தேக வ்யாமோஹம் )-என்றும்
ஷணேபி தே யத் விரஹ அதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விஸ்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –
என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள்
சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த ஸூஷ்ம ஞானத்தை
சாஸ்திர முகத்தாலும்
சதாச்சார்ய வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –
கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில்
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –
ஆகையால்
ஆச்சார்ய பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –
(கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை-339-
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –
அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை –
என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –
ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –
அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –சூரணை -345-
அது என்ன அருளிச் செய்கிறார் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –(சம்யக் ஆச்சாரம் சமாசாரம் )
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –)
ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில்
ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –
(ஆச்சார்ய நிஷ்டர்களை விட சிஷ்ய நிஷ்டர்களையே விளக்கும் சூரணைகள் பல எங்கும் உண்டே
ஆச்சார்ய லக்ஷணம் 12 சூரணை களும் அதில் மும் மடங்கு சிஷ்ய லக்ஷணம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே
சிஷ்ய லக்ஷணம் அறிவதில் அருமை உண்டே )
(முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் =
ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —
நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு
நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,
பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.
பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)
(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-
அத்யாதராதி
நிஜ குரும் கலி வைரி தாஸர்
நித்யாம் விபூதிம் அவத்யம்
நிரந்தரம் யஹா
சிஸ்ரூஷா தேக குரு மானஸ
தஸ்ய நிஷ்டாம்
பஸ்யான் மநோ ஹர பதே முனி புங்கவஸ்ய
பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-
ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று
தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் —
தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –
பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
(அது -ஸ்ரேஷ்டமான அந்த அதுவும் )
துளிக்கின்ற பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -( 2-9-)-என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே —என்றும் (மா கம் -பெரிய திவம் இங்கு )
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது ( திருமங்கை )-என்றும் சொல்லுகிறபடியே
எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று
அருளிச் செய்து போருவர் -என்கை-
இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம்
தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே கைங்கர்யத்திலே யாய்த்து – இவர்
ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –
(அர்ச்சிராதி மார்க்கம் திருவேங்கட யாத்திரை அக்ரூர கமனம் மூன்றுமே நித்ய அனுசந்தானம் –
இவை எல்லாம் இவருக்கு ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போருமே –
அந்தாமத்து அன்பு செய்து எங்கும் பக்க நோக்கு அறியாத பைந்தாமரைக் கண்ணன்
அஸ்மாத் துல்யோ பவ தி -இதுக்கும் அவனே முன்பே அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ )
(திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.)
நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் –
பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்-
(பக்கத்து திருமாளிகை அம்மையார் திருமாளிகைக்கு எழுதிக் கொடுத்த ஐ திக்யம் முன்பே பார்த்தோம்
கொற்றி அம்மை பிராட்டிக்கு -சமன் கொள் வீடு தந்த ஐ திக்யம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் –
நாகப்பழம் கொடுத்த பெண் பிள்ளை
ஸ்த்ரீகளே அறிந்த ரஹஸ்யம் -)
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத் யது குணைர் உபசாரைஸ் சதா உசிதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான
சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை
(வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கு மென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.)
நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-(திருவட்டாறு பதிகம் )-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்-( 1-10-4 ) -என்றும் சொல்லுகிறபடி
அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –
(சாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம் –
ஆச்சார்யர் வாழ்வும் வாக்குமே எளிதில் அனுபவித்து அனுஷ்ட்டிக்கலாம் படி இருக்குமே )
ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே -(விருப்பமுடன் கேட்டு நினைத்து இடைவிடாமல் சிந்தித்து )
இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –
(ஆர்த்தி பிரபந்தம் -வடுக நம்பி நிலை மதுரகவி நிலையை அபேஷித்து அருளுவார் )
இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே
அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் (பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரும் )
அருளிச் செய்தார் இறே –
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து
தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே
ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-
(ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கு ஸ்ரீ அப்பிள்ளை வியாக்யானம் உண்டு என்று இங்கே காட்டி அருளுகிறார் )
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply