ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –
———
சூரணை -115-
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –
இனி -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்-என்று தொடங்கி -இப்படி இதர விஷயங்களை ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விடுகிறாப் போலவும்
பகவத் விஷயத்தில் ஸ்வரூப ப்ராப்தம் என்று பற்றுகிறாப் போலவும்
உபாய தசையில் உபாயாந்தரங்களும் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்றே விடப்படுகின்றன -என்று
அங்கம் தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை -என்று தொடங்கிக் கீழ்ப் ப்ரஸ்துதமாய் வருகிற உபாயத்துக்கு அங்கமான
உபாயாந்தர தியாகத்தை இங்கே வெளியாக அருளிச் செய்கிறார் -ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும் -இத்யாதி
இதர உபாய தியாகத்துக்குத் தன்னுடைய அஞ்ஞான அசக்திகளும் ஹேதுவாய் இருந்ததே யாகிலும் -அது பிரதான ஹேது அன்று
ஆனால் ஏதாவது என்ன -ஸ்வரூப விரோதமே -இத்யாதி
அத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்கள் -ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும் குடம் சுமைக்கையும்
அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார் –
—————-
சூரணை -116-
பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு உபாயம் –
பிராபகாந்தாரம் இத்யாதி -அஞ்ஞர்க்கு உபாயம் என்றது –
இப்படி அத்யந்த பாரதந்தர்ய ஞானம் பிறவாதார்க்கு உபாயம் -என்றபடி
————-
சூரணை -117-
ஞானிகளுக்கு அபாயம்-
ஞானிகளுக்கு அபாயம்-என்றது –
அத்யந்த பாரதந்தர்ய ஞானம் யுடையாருக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயங்கள் ஸ்வரூப விரோதி யாகையாலே –
—————-
சூரணை -118-
அபாயமாய் ஆயிற்று-ஸ்வரூப நாசகம் ஆகையாலே —
அகில வேதாந்த விஹிதமானவது அபாயமானபடி என் என்னில்
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயம் இல்லாத ஸ்வரூபத்தை அழிக்குமவை யாகையாலே
அத்தை விவரிக்கிறார் -ஸ்வரூப நாசமாகையாலே –
————-
சூரணை -119-
நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –
இவ்வர்த்தத்தில் பிரமாணம் உண்டோ என்னில்
இதுக்குப் பிரமாணமாக -நெறி காட்டி நீக்குதியோ -என்று ஆப்த தமரான ஆழ்வார் பாசுரத்தைப் பிரகாசிப்பிக்கிறார் –
——————
சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-
வர்த்ததே மே -இத்யாதி -இப்படி ஸ்வரூப ஹானியாம் அளவன்றிக்கே
பய ஜனகமுமாய் -சோக ஜனகமுமாயும் இருக்கும் என்னும் இடத்துக்கும் பிரமாணம் காட்டுகிறார்
இதில் -ஸரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -என்கையாலே
உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு அனுரூபமான வர்த்தமான தேஹத்திலும் -தேஹாந்தர ப்ராப்தி கதியிலும் பயம் உண்டாகா நின்றது -என்கையாலும்
அர்ஜுனனுக்கு இதர உபாய ஸ்ரவண அநந்தரம் சோகம் பிறக்க -மா ஸூ ச -என்ன வேண்டுகையாலும்
பய ஜனகமும்
சோக ஜனகமும் -என்கிறது –
—————–
சூரணை -121-
இப்படிக் கொள்ளாத போது–ஏதத் பிரவ்ருத்தியில்-பிராயச் சித்தி விதி கூடாது –
இப்படிக் கொள்ளாத போது -இத்யாதி -இதர உபாயங்கள் ஸ்வரூப நாஸகம் என்றும் -பய ஜனகம் -சோக ஜனகங்கள் -என்றும் ஸாஸ்த்ர அபிப்ராயமாகக் கொள்ளா விடில்
அஸ் சாஸ்திரம் தானே உபாயாந்தரங்களில் உபாய புத்தியைப் பண்ணின ப்ரபந்ந அதிகாரியைக் குறித்து
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யே ததேவஹி -அபாய கரணே சைவ ப்ராயச்சித்தம் ஸமா சரேத்
ப்ராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத் -என்று
இதர உபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணினவனுக்கு அபாய கரணத்தோடே ஓக்க -ப்ராயச் சித்தம் பண் என்று விதிக்கக் கூடாது இறே என்கிறார்
அதாவது ஸூ த்ர ஸ்பர்சத்தில் இறே ப்ராஹ்மணனுக்கு ஸ்நான விதி உள்ளது –
சஜாதீயனான ப்ராஹ்மணன் ஸ்பர்சத்தில் அவ்விதி இல்லை இறே –
——————–
சூரணை-122-
திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–
அவ் வபிப்ராயத்தைப் பற்ற இறே ப்ராமாணிகரான பிள்ளான் வார்த்தையும் -அது எங்கனே என்னில் -திருக் குருகைப் பிரான் -இத்யாதி
சாத கும்ப மயம் என்றது -ஸ்வர்ண மயமான கும்பம் -என்ற படியாய் -இத்தால்
பக்திக்கு ஆஸ்ரயமாய் விலக்ஷணமான ஞான ஆனந்த ஸ்வரூபத்தை நினைத்து –
அதில் உண்டான கங்கா ஜலத்தை பகவத் விஷயத்தில் பக்தியாகவும் நினைத்து
இவை இரண்டும் உபாதேய தமமானாலும்-அஹங்கார மஹா பாந மத மத்தான் மாத்ருஸா -என்று
அஹங்காரத்திலே மதிரா புத்தி உண்டாகையாலே
அந்த ஸ்வ யத்ன ஸ்பர்ச மாத்ரத்தை மதிரா பிந்துவாக நினைத்து இப்படி தத் ஸ்பர்சமுள்ள உபாயம் தோஷ துஷ்டம் என்று அருளிச் செய்தார் இறே என்கிறார்
இவ்வளவும் அன்றிக்கே பல விஸத்ருசமும் -என்கிறது –
———————–
சூரணை -123-
ரத்னத்துக்கு பலகரை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –
ரத்னத்துக்கு பலகரை போலேயும்-இத்யாதியாலே பல கரையும் எலுமிச்சம் பழமும் ரத்னத்துக்கும் ராஜ்யத்துக்கும்
ஸத்ருசம் அன்றே யாகிலும் அவற்றை உபஹாரமாகக் கொடுத்தே யாகிலும் அவரவர் அபிமதங்கள் பெறக் காணா நின்றோமே
அவ்வோபாதி தானாகாத் தட்டென் -என்ன –
—————–
சூரணை -124-
தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –
தான் தரித்ரன் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யை தே தஸ்ய தத் தநம் -என்று
தான் ஸ்வரூபத அகிஞ்சனன் ஆகையாலே ஒரு வழியாலும் தனக்கு கிஞ்சித் கரிக்கலாவது இல்லை என்ன –
————–
சூரணை -125-
அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –
அவன் தந்தத்தை -இத்யாதி -அது என் –
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்கையாலே
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவனுக்கு கிஞ்சித் கரித்தாலோ -என்ன
அக்கரணங்கள் உடையவனைக் குறித்து கரணம் விநியோகப்பட வேணும் என்கிற க்ரமத்திலே உபகரிக்கில் அது உபாயம் ஆகாது -உபேயமாய் விடும்
அடைவு கெட -இத்யாதி -மதீயம் என்று ஸமர்ப்பிக்கில் ராஜ தனத்தை ஏகாந்தத்திலே அபஹரித்து ஓலக்கத்திலே உபஹரிக்குமோ பாதி களவு வெளிப்படும் –
————–
சூரணை -126-
பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –
பர்த்ரு போகத்தை -இத்யாதியாலே -அவ்வளவும் அன்று -பதி வ்ரதையானவள் பார்த்தாவுக்கு உடம்பு கொடுத்து
அத்தை ஜீவனார்த்தம் என்று நினைக்கில்
பர்த்ரு பார்யா ஸம்பந்தம் குலையுமா போலே
உபய ஸ்வரூப விருத்தமும் -என்கிறார் –
—————
சூரணை -127-
(ஸ்வரூப நாசகமான வற்றை )வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –
சூரணை -128-
ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –
ஸ்வரூப நாசகமான வற்றை -என்று தொடங்கி -இப்படி அநேக தோஷ பூயிஷ்டமான உபாஸனத்தை வேதாந்தங்களில் சேதனனைக் குறித்து
த்யாயீத உபாஸீத -என்று விதிக்கிறபடி எங்கனே என்ன
ஒவ்ஷத ஸேவை -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
மரணாந்தமான வியாதி நிவ்ருத்திக்கு மஹா ஒவ் ஷதத்தை விதித்தால் அது ஒருவனுக்கு ருசியாதாப் போலே
வைப்பாம் மருந்தாம் -என்கிற ஏக ரூபையாய் ஸம்ஸார பேஷஜமான ஸக்ருத் ஸேவை என்றாலும் அதில் ருசி விஸ்வாசங்கள் பிறவாதார்க்கு
அவர்கள் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால் அவர்கள் வாசனை பண்ணின அபிமத வஸ்துக்களிலே கலந்தாகிலும் அவனுக்குப் பிரயோகிப்பாரைப் போலே
அவ்வேதாந்தங்களும் ப்ரவ்ருத்தி யுபாயங்களிலே பரந்தவர்களுக்கு நிவ்ருத்தி ரூப உபாயத்தில் ருசி விஸ்வாசங்கள் பிறவாமையாலே
தமேவ ஸாத்யம் -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும்
அத்யயனத்துக்குப் பிரதிநிதியாக -நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி – என்றும் இத்யாதி களாலே
இதர உபாயங்களிலே ஸ்வ தந்த்ர உபாயமான ஈஸ்வரனைக் கலந்து உபாயமாக்கி ப்ரயோகிக்கிறது அத்தனை –
———–
சூரணை -129-
இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –
இத்தைப் ப்ரவ்ருத்திப்பித்தது -இத்யாதி -இப்படிக்கு கலந்தாகிலும் இதர சாதனத்தை விதித்தது
குமைத்திட்டுக் கொன்று உண்பர் அறப் பொருளை அறிந்து ஓரார் -என்கிறபடியே
சரீர போஷண அர்த்தமாக அஸாஸ்த்ரீயமான ஹிம்ஸையிலே அனவரத தத் பரரான அவர்களை அதில் நின்றும் மீட் கைக்காக
அக்னீ ஷோமீயம்ப ஸூமால பேத -இத்யாதி வைதிக ஹிம்ஸையிலே மூட்டினது அத்தனை என்கிறார்
———————–
சூரணை-130-
இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –
ஆனால் விதித்து வைத்து இப்போது விடச் சொல்கிறது என் என்ன -இது தான் -இத்யாதி –
அடியிலே ஆஸ்திகனாகைக்காக அபிசார கர்மத்தை விதித்து வைத்து –
அனந்த்ரம் அவனை அத்ருஷ்ட பரன் ஆக்குகைக்காக-அவற்றை நிஷேதித்து வைத்தவோ பாதி
இதில் விதி நிஷேதங்கள் உசிதம் -என்கிறார் –
————–
சூரணை -131-
அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –
அந்த அபிசார விதியை முதலிலே நாஸ்திகனாய் ஸாஸ்த்ரத்திலே விஸ்வாஸம் இல்லாதவனுக்கு தத் விஸ்வாஸ ஹேதுவாக விதித்தது
சாதனாந்தரத்தை விதித்தது -ஈஸ்வரோஹம் அஹம் போகீ -என்கிறவன் தன்னை ஈஸ்வர சேஷம் என்று இருக்கைக்காக –
—————
சூரணை -132-
அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –
அது தோல் புரையே போம் -இத்யாதி -அந்த ஸ்யேந விதி கேவலம் தேஹ போஷண அர்த்தமாக வாகையாலே -அத்தேஹ அவசானத்திலே அந்த விதியும் போம் –
இந்த இதர உபாயம் ஆத்ம ஸ்வரூப ஞானம் அடியாக வருகையாலே ஸ்வரூப நாஸகம் -என்கிறார் –
——————-
சூரணை-133-
இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –
இது தான் கர்ம ஸாத்யம் -இத்யாதி -ஸர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் -என்றும்
யஜ்ஜேந தாநேந -இத்யாதியில் சொல்லப் படுகிறவை
தர்மான்நாதி துஸ் சரம் தானான்நாதி துஷ் கரம் -என்றும் சொல்லுகையாலும்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி -நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கையாலும்
இதற்கு துஷ்கரத்வ தோஷம் உண்டு -என்கிறார் –
————
சூர்ணிகை – 134–
பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை-
ஆக -பிராப காந்தர பரித்யாகத்துக்கும் -என்று தொடங்கி -பிரபத்தி அங்க தயா த்யாஜ்யமான இதர உபாயங்களினுடைய தோஷ பூயிஷ்டதையை
ஸ்வரூப நாஸகம்
பய ஜனகம்
சோக ஜனகம்
பல வி ஸத்ருசம்
உபய ஸ்வரூப விருத்தம்
துஷ்கரம்
இத்யாதிகளாலே சொல்லிப்
பற்றப்படும் பிரபத்தி யுபாயத்துக்கு இவ் வாசக தோஷமும் இல்லை -என்று தொடங்கி
இவ்வுபாய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் மேல்
அதில் இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்று விசேஷிக்கையாலே
மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் ஸூ சிதம் –
———–
சூர்ணிகை —135-
ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்-
இனி மேல் -ஆத்ம யாதாத்ம்ய கார்யம் ஆகையாலே -என்று தொடங்கி இவ்வுபாய வை லக்ஷண்யத்தை உபபாதிக்கிறார் -அதாவது
இவ்வுபாயம் அத்யந்த பரதந்தர்ய ஞானம் பிறந்தால் வருமாதாகையாலே அத்யந்தம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததுமாய்
சிற்றுகை -சிதறுகையாய்-அலைய வேண்டா என்கையாலே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிற
ஸ்வ வியாபார ஸூந்யதையாலே பெறுமதாகையாலே யுக்த தோஷங்கள் இல்லாமையே யன்றியே ஸூ கரமுமாயும் இருக்கும் –
———-
சூர்ணிகை –136-
பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –
சூர்ணிகை –137-
ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும் –
சூர்ணிகை –138-
பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை-
பூர்ண விஷயம் -இத்யாதி -இவனுடைய சைதன்யம் அடியாகச் சில கிஞ்சித் கரிக்க நினைக்கில்-சரண்யனானவன்
ஸ்ரீ யபதியாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் -இருக்கையாலே
அவ்வைபவ அனுரூபமாக உபகரிக்க அரிது என்ன
அகிஞ்சனான இவன் அகன்றே போம் அத்தனையோ என்ன
இவன் தன் விலக்காமையைத் தெரிவிக்கின்ற வியாபார மாத்ரமான கேவல அபிமிக்க ஸூ சகத்தாலே அவன் திரு உள்ளம் உகக்கும் –
ஆகையால் இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பூர்த்தி இறாயாதே அபி நிவேசித்துப் பற்றுகைக்கு அடியான அத்தனை -என்கிறார் –
—————
சூர்ணிகை–139—
பத்ரம் புஷ்பம் — அந்யாத் பூர்ணாத் — புரிவதுவும் புகை பூவே –
இதில் பிரமாணம் என் என்ன -பத்ரம் புஷ்பம் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்கிரா திரு முகப் பாசுரத்தாலும்
அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் நதே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று
கிறுசதனனை ஐஸ்வர்யத்தாலே வஸீ கரிக்க நினைத்த த்ருதராஷ்ட்ரனைக் குறித்து ஸஞ்சயன் சொல்லுகையாலும்
புரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று
அவ்வர்த்தத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கையாலும்
ஆபி முக்ய ஸூசகமே வேண்டுவது என்று அருளிச் செய்கிறார் –
——
சூர்ணிகை –140-
புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –
சூர்ணிகை –141-
ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –
இப்படி ஸூகரமான மாத்ரமே அன்று -இது பல ஸத்ருசமும் என்கிறார் -புல்லைக்காட்டி -இத்யாதியாலே -அதாவது
போக ரூபமான
புருஷகார
குண
விக்ரஹங்களே உபாயமுமாய்
அது தானே உபேயமுமாய் இருக்கையாலே இவற்றுக்குப் பிரிவில் யாகையாலே
இவ்வுபாயம் -ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -என்று ஸூக ரூபமாய் இருக்கும் -என்கிறார் –
——————-
சூரணை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
சூரணை-143-
அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —
இனி இக் குற்றங்கள் இல்லை என்ற இடத்தே ஸூ சிதமான குற்றத்தைத் தோற்றுவியா நின்று கொண்டு
இவ்வுபாயத்தில் ஸ்வ கதமான ஸ்வீ காரமும் ஸ்வரூப ஹானி என்கிறார் மேல் -இவன் அவனைப் பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
அஞ்ஞனாய் -அசக்தனாய் இருக்கிற இவன் ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியானவனைத் தன் பேறாகத் தான் பற்றும் அன்று
அஹங்கார கர்ப்பமான இதர சாதனங்களோ பாதி விலக்ஷண உபாயமாக சாதித்த இந்தப் பிரபத்தியும் சாதனம் அன்று
அவன் தன் பேறாகத் தான் விஷயீ கரிக்கும் அன்று இவனுடைய மஹா பாதகாதி ஸமஸ்தமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது –
——–
சூரணை -144-
இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –
சூரணை -145-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –
அவை எங்கே கண்டோம் என்ன -ஸ்ரீ பரதாழ்வான் இத்யாதியாலே -அவ்விரண்டத்தையும் வெளியிடுகிறார் -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பரதாழ்வான் -ஏபிஸ் ஸ சிவைஸ் ஸார்த்தம் -இத்யாதியாலே தம்முடைய பேற்றை மநோ ரதித்து
ஸேஷ்யே புரஸ் தாச்சா லாயாம் யா வந்த மே ப்ரஸீ ததி-என்று அவருடைய பிரபத்தி தானே
சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாமையாலே
நீரே ஸ்வ தந்தரராய் நம்மைப் பரதந்த்ரராக்கி மீட்க வந்தீரோ -என்கையாலே தீமையாய்த் தலைக்கட்டிற்று இறே
ஸிஷ்ட பரிபாலனமும் துஷ்ட நிக்ரஹமும் பண்ணிப் போந்த சக்ரவர்த்தித் திரு மகன்
நெடும் காலம் வன்னியராய் வழி யடித்துத் திரிந்த நம்மைக் கண்ட போதே
தலை அறுக்கை தவிரார் என்று ஸ்வ தோஷ அணு ஸந்தானராய் முகம் காட்டாதே இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளுக்கு
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்சநேந ச -என்றும்
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்றும்
அருளிச் செய்யும்படி அது தானே நன்மையாய்த் தலைக்கட்டிற்று இறே –
————
சூரணை -146-
சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —
இப்படி சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாத பிரபத்தி ஸ்வரூப ஹானி என்னும் அர்த்தத்தை
ஆச்சார்ய அனுஷ்டான ப்ரஸித்தியாலே விஸதீ கரிக்கிறார் -சர்வ அபராதங்களுக்கும் -இத்யாதியாலே -அதாவது
ப்ராயச் சித்த அந்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷணாம் கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாம் படி ஸர்வ அபராத ப்ராயச் சித்தமாக ப்ரஸித்தமான ப்ரபத்தியும்
அபராத கோடியிலே யாகையாவது கத்யத்திலே பாஷ்யகாரர் தாம் பண்ணின பிரபத்தி சரண்ய ஹ்ருதய அநு சாரி அன்றோ என்று சங்கித்து
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் -என்று அபராத ஷாமணம் பண்ணுகையாலும்
மத் வ்ருத்தம் அசிந்த யித்வா நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்று ஆளவந்தார் ஷாமணம் பண்ணுகையாலும்
ஷாமணம் பண்ண வேண்டும் படி நின்றது இறே என்கிறார் –
——————
சூரணை -147-
நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –
அது அபராதம் என்னும் இடத்தை லோக த்ருஷ்ட்டி ப்ரக்ரியையாலே அருளிச் செய்கிறார் -நெடு நாள் -என்று தொடங்கி –
சிர காலம் ஸ்வ பர்த்ரு வ்யதிரிக்த விஷய அனுபவ பரவஸையாய்ப் போந்த பார்யை அவ்வியாபாரத்தில் லஜ்ஜையும் பர்த்ரு தந்தத்தால் வரும் பயமும் இன்றிக்கே
அவன் ஸந்நிதியிலே நின்று உனக்கு அநந்யார்ஹை யாம்படி நீ தாலி கட்டின என்னை நீயே அங்கீ கரித்து புஜிக்க வேணும் என்று அபேக்ஷிக்குமா போலே இறே
அநாதி காலம் அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யங்களாலே -அசன்னேவ-என்னும்படி கை கழிந்தவன் இப்போது நிரூபாதிக சேஷியான நீயே ரக்ஷிக்க வேணும் என்று தான் சரணாகதனாகை –
—————-
சூரணை -148-
கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –
இப்படி ஸ்வ கத ப்ரபந்ந அதிகாரிகளான காக்க விபீஷணாதிகள் பக்கலிலேயும்
க்ருபயா பர்யபாலயத் -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும்
கார்யகரமாகக் காணா நின்றோமே என்ன -கிருபையால் வரும் -இத்யாதி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூப கிருபையாலே -ஆஸ்ரித பரதந்த்ரனாய்க் கொண்டு அவர்களையும் அங்கீ கரிக்குமதுவும் இல்லை என்கிறது அன்று
அத்தைப் பற்ற பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன்னுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பராதீனனாய் அங்கீ கரிக்குமதுவே
அத்யந்தம் பலவத்தரம் -என்கிறார் –
———–
சூரணை -149-
இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-
இப்படிப்பட்ட பர கத ஸ்வீ காரத்தை -நாயமாத்மா -என்று தொடங்கி
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று
வேத புருஷனும் விஸ்தரித்துச் சொன்னான் என்கிறார் –
இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது -பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —
நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்
யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் –
கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
————
சூரணை -150-
அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –
அபேஷா நிரபேஷமாக -இத்யாதி-தம் தாம் பக்கல் நினைவு இன்றிக்கே இருக்க
ஏஷ ஸர்வ பூதஸ்து பரிஷ் வங்கோ ஹனூமதா மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந -என்றும்
வாத மா மகன் மற்கடம் -இத்யாதிப்படியே திருவடிக்கு
ஏழை ஏதலன் – இத்யாதிப்படியே குஹப்பெருமாளுக்கும்
இப் பர கத ஸ்வீ காரம் உண்டாயிற்று என்று இதுக்கு அதிகாரிகளைக் காட்டுகிறார் –
———————–
சூரணை -151-
இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –
இப்படி ஸ்வா தந்தர்யத்தாலே தான் நினைத்தபடி அங்கீ கரிக்குமாகில் அந்த ஸ்வா தந்தர்யம் ஷிபாமி -என்று உபேக்ஷிக்கைக்கும் ஹேது வாகாதோ -என்ன
அந்த ஸ்வாதந்தர்யத்தால் விஷயீ கரிக்கும் இடத்தில் புருஷகார ஸாக்ஷி பூர்வகமாக விஷயீ கரிக்கையாலே
அவனாலும் விடப்போகாது என்கிறது மேல் -இவன் முன்னிடுமவர்களை -இத்யாதி
இச்சேதனன் புருஷகாரமாக முன்னிடுமவர்களை உபாய பூதனான தானும்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்கையாலே ஒவ் பாதிகமுமாய்
அவள் -அகலகில்லேன் -என்று இருக்கையாலே நித்யமாயுமாய் இருக்கையாலே
அது இருவருக்கும் உண்டு இறே என்கிறார்
ஸ்ரீ மத் பதத்திலே எல்லாரும் இவளை முன்னிட அவனும் முன்னிட்டு அங்கீ கரிக்கும் என்ற இடம்
ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக -மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்று முன்னிட்டுப் பற்றுகையாலே அவன் பக்கலிலும்
நிவேதியத மாம் க்ஷிப்ரம் -என்று விபீஷணன் முன்னிட்டு
மஹா ராஜரை -ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்று பெருமாள் முன்னிடுகையாலே அபய பிரதானத்திலும் காணலாம் –
————–
சூரணை –152
இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –
இருவரும் இத்யாதி -தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கை யாவது –
பஹு தோஷ துஷ்டனாகையாலே சேதனன் அபராத ஷாமணார்த்தமாக முன்னிடும்
ஈஸ்வரன் தன் ஸ்வா தந்தர்யத்தாலே சேதனன் தன்னைக் கிட்ட ஒண்ணாதபடி இருந்த குற்றம் அவர்கள் நெஞ்சில் படாதபடி பண்ணுகைக்காக முன்னிடும் –
———
சூரணை-153 —
ஸ்வரூப சித்தியும் அத்தாலே –
சூரணை-154–
ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—
ஸ்வரூப சித்தியும் அத்தாலே -ஸ்வரூபம் ஸித்திக்கை யாவது என் என்னில்
ஒவ் பாதிகமுமாய் -இத்யாதி சேதனருக்குத் ததீயர் என்றே அவர்களுக்கு சேஷமாகையாலே ஒவ் பாதிகமுமாய் –
அது தான் யாவதாத்ம பாவி என்று நமஸ்ஸூ சொல்லுகையாலே அது தான் நித்யமானவோ பாதி
ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமும் பற்றி ஸ்வரூப லாபம் என்கிறது
——–
சூரணை-155–
அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —
அநித்யமான இத்யாதி -மோக்ஷயிஷ்யாமி என்னும் அளவில் அநித்யமானவையான அவஸ்யம் அநு போக்தவ்ய மான
கர்ம பரதந்த்ரனாய்க் கொண்டு புஜிக்கிற கர்ம பாரதந்தர்யமும்
கர்ம அனுரூபமாக இவனைப் புஜிக்கக் கடவ ஸங்கல்ப பாரதந்ரயமுமாகிற
இவ்விரண்டு பாரதந்தர்யமும் குலைவதும் இப்புருஷகாரத்தாலே –
————-
சூரணை-156–
ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —
ஸ ஸாஷிகம் இத்யாதி -இப்படி ஸாக்ஷி ஸஹிதமான ஒவ் பாதிகமுமாய் நித்யமுமான இப்பந்தத்தை ஸர்வ ஸக்தியான அவனோடே
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ்ம தாதே கீடஸ்ய ஸக்தி -என்று அஸ் சக்தியை அதிக்ரமிக்கும் இவனோடே வாசியற
இருவராலும் இல்லை செய்ய வரிதாய் இருக்கும் –
———–
சூரணை -157-
என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –
இருவராலும் இல்லை செய்யப் போகாமைக்கு -மேல் இரண்டு பிரமாணங்களும்
————
சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –
கர்மணி வ்யுத்பத்தியில்-இத்யாதி -கர்மணி த்விதீயா என்கையாலே
கர்மணி வ்யுத்பத்தியில் ஸ்வரூபத்தாலும் ப்ரணயித்வ குணத்தாலும் வருகிற ஸேவா கர்த்தாக்களுடைய
சங்கோச ராஹித்யத்தை நினைப்பது என்று
இவ் வர்த்தத்தில் பிராமண ப்ராபல்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்
சேஷித்வே பரம புமான் பரிகாராஹ்யேதே தவஸ் ஸ்பாரணே -என்னக் கடவது இறே –
———-
சூரணை -159-
அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –
சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –
அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து
ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –
நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே
தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –
——————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-
Leave a Reply