ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-
லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –
யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பூதம் சரஸ் ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குல சேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோஸ்மி நித்யம்
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்“ தொடங்கி பொதுத் தனியன்கள் ஸேவித்த பின்…
லோக குரும் குருபிஸ் ஸஹ பூர்வை: கூர குலோத்தம தாஸம் உதாரம் |
ஸ்ரீநகபதி அபிராம வரேசௌ தீப்ரசயாந குருஞ்ச பஜேஹம் (தீப்ரசயம் வரயோகி நமீடே) ||–-ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸாதித்தது
அடியேன் பிள்ளை லோகாசார்யர், மஹா காருணிகரான கூர குலோத்தம தாஸர், திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை), அழகிய மணவாள பெருமாள் பிள்ளை (மாமுனிகளின் தாய்வழிப் பாட்டனார்/மாதாமஹர்), திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதர் (மாமுனிகள் திருதகப்பனார்) ஆகிய பூர்வாசார்யர்களை வணங்குகிறேன்
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||
ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அருளிச் செய்தது. இதன் திரண்ட பொருள்: வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரும், ஸம்ஸாரப் பாம்பினால் கடியுண்டு கட்டுண்டவர்களின் உயிர் காக்கும் மருந்தும் ஆகிய அடியேன் ஆசார்யர் பிள்ளை லோகாசார்யரை வணங்குகிறேன்.
லோகாசார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||–-ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை அருளியது
ஸ்ரீ பிள்ளை லோகாசாயார்யாரின் க்ருபைக்குப் பாத்ரரானவரும்,கௌண்டிந்ய குலத்துக்கு அணிகலனுமான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.
நம: ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே ||-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
குந்தீ நகரம் (இப்போது கொந்தகை) எனும் ஊரில் திருவவதரித்தவரும், ஸ்ரீசைலநாதர் (திருமலை ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை) எனும் திருநாமம் கொண்டவரும், கைங்கர்ய ஸ்ரீயினால் எப்போதும் ப்ரகாசமாய் ஜ்வலிப்பவரும் ஆன அடியேன் ஆசார்யரை வணங்குகிறேன்.
லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயிதாந்தரம் |
ஜ்ஞான வைராக்யஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும் ||-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
செந்தாமரையில் சேர்ந்த ராஜ ஹம்ஸ பக்ஷி போல் பிள்ளை லோகாசார்யர் திருவடியில் பணிந்த (மாதாமஹரான) ஞான வைராக்யங்களில் கடல் போன்ற அழகிய மணவாள பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ர விதம் |
ஸுந்தர குருவர கருணாகந்தளித ஜ்ஞாந மந்திரம் கலயே ||-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையின் திவ்ய க்ருபையால் பேணப் பட்டவரும் குற்றமற்ற சாஸ்த்ர ஞானம் பெற்றவரும் ஆன திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரை வணங்குகிறேன்.
ஸ்ரீவசன பூஷணத்துக்கே உரிய விசேஷத் தனியன்கள்-ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் (பகுதி), ஒன்பது ப்ரகரணங்களாகவும் பகுக்கும் க்ரமத்தை இந்தத் தனியன்கள் விளக்குகின்றன:
புருஷகார வைபவம் ச ஸாதநஸ்ய கௌரவம்
தததிகாரி க்ருத்யம் அஸ்ய ஸத் குரூப ஸேவநம் |
ஹரி தயாம் அஹைதுகீம் குரோருபாயதாஞ்ச யோ
வசன பூஷணே வதஜ் ஜகத் குரும் தமாஸ்ரயே ||
1-எம்பெருமான் சேதனரை ஏற்கும்படி சிபாரிசு செய்யும் பிராட்டியின் மஹிமைகள்
2-பகவானை அடைய பகவானே உபாயம் எனும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றிய அதிகாரிகள் இயல்பு-செயல்கள்
4-இந்த அதிகாரிகள் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யன் அறுதி உபாயம் (வழி) என்பது–விஷயங்களை ஸ்ரீவசன பூஷணத்தில் கருணையுடன் விளக்கிய பிள்ளை லோகாசார்யரை நான் சரணடைகிறேன்.
பேறு தருவிக்குமவள் தன் பெருமை (1) ஆறு (2) பெறுவான் முறை (3)
அவன் கூறு குருவைப்பனுவல் (4) கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள்தான் (5)
மாறில்புகழ் நற்குருவின் வண்மை (6) யொடெலாம் வசன பூடணமதில்
தேறிட நமக்கருள் முடும்பை இறையவன் கழல்கள் சேரென்மனனே
மனமே! முடும்பை குலம் வந்த வள்ளல் லோகாசார்யர் திருவடிகளை சரணம் பற்றி உஜ்ஜீவனம் அடைவோம். அவர் அருளிய நூலின் ஆறு விஷயங்களாவன:
1-புருஷகாரம் செய்யும் பிராட்டியின் பெருமை
2-எம்பெருமானே உபாயமாய் இருக்கும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றினோர் பெருமை
4-அத்தகையோர் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யனே அறுதி உபாயம் என்பது
ஸாங்காகில த்ரவிட ஸம்ஸ்க்ருத ரூப வேத ஸாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரஸ வாக்ய ஜாதம் |
ஸர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம் வந்தே ஸதா வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம் ||
ஸர்வஜ்ஞரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸாதித்ததும் கற்றறிந்த ஞானிகளுக்கு மகிழ்வூட்டுவதும் வேத வேதாந்த விஷயங்களை மிகச் சில சொற்களிலேயே எளிதாக விளக்குவதுமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை அடியேன் எப்போதும் வணங்குகிறேன்.
அகுண்டோத் கண்ட வைகுண்ட ப்ரியாணாம் கண்ட பூஷணம் |
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசந பூஷணம் ||
பேரின்பம் விளைக்கும் பரம பதம் அடைய விழையும் முமுக்ஷுக்களின் பேச்சுக்கு ஆபரணம் போன்றது லோக குருவாகிய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம்.
திருமாமகள் தன் சீரருளேற்றமும் (1) திருமால் திருவடி சேர்வழி நன்மையும் (2)
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (3) மெய்வழியூன்றிய மிக்கோர் பெருமையும் (4)
ஆரணம் வல்லவர் அமரு நன்னெறியையும் (5) நாரணன்றாள் தரு நற்குருநீதியும் (6)
சோதிவானருள் தூயமாகுருவின் பாதமாமலர் பணிபவர் தன்மையும் (7)
தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுமின்றி எடுக்கும்படியையும் (8)
மன்னியவின்பமும் மாகதியும் குருவென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும்
அசைவிலாதவேதமதனுள் அனைத்தையும் (9) வசனபூடண வழியாலருளிய
மறையவர் சிகாமணி வண்புகழ் முடும்பை இறையவன் எங்கோன் உலகாரியன்
தேன்மலர்ச்சேவடி சிந்தைசெய்பவர் மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவரே
ஸ்ரீ முடும்பை வந்த வள்ளல் ஆசார்ய ஸ்ரேஷ்டர்,வேத விற்பன்னர்களின் முடியில் ரத்னமாக இருப்பவரோ, சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை ஸ்ரீவசன பூஷணத்தின் மூலம் வெளியிட்டாரோ, அத்தகைய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் தேன் போன்ற திருவடிகளை யார் த்யானம் செய்கிறாரோ அவர் இவ்வுலகிலேயே பேரின்பமான பகவத் பாகவத அனுபவம் மற்றும் கைங்கர்யத்தைப் பெறுவார். ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்திரத்தில் அருளிய பொருள்களாவன:
1-ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் ஏற்றம்
2-எம்பெருமானை அடைய அவனே உபாயமாய் இருப்பதின் ஏற்றம்
3-கர்ம ஞான பக்திகளாகிற பிற உபாயங்களின் தாழ்ச்சி
4-எம்பெருமானே உபாயம் என்றுள்ள ப்ரபந்நர் ஏற்றம்
5-ப்ரபந்நர் நித்யாநுஷ்டானம்
6-சீரிய ஆசார்யனின் குணங்களும் அவர் அநுஷ்டானங்களும்
7-நல்ல சிஷ்யனின் இயல்புகள்
8-நித்ய ஸூரிகள் தலைவன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா
9-ஆசார்யன் உபாயமும் உபேயமும் எனும் சரம பர்வ நிஷ்டை
(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)
லோகாசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே |
தத்வார்த்த தர்சினோ லோகே தந்நிஷ்டாச்ச ஸுதுர்லபா: ||
லோகாசார்யரால் ஜீவர் உத்தரணத்துக்காக அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ வசனபூஷணத்தை நன்கு அறிந்தோரும் அதை அநுஷ்டிப்போரும் காண அரிது.
த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே–
திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு
ஜகதாசார்ய ரசிதே ஸ்ரீமத்வசநபூஷணே |
தத்த்வஜ்ஞாநாஞ்ச தந்நிஷ்டாம் தேஹிநாத யதீந்த்ரமே ||
ஜகதாசார்யரான யதிராஜரே! பிள்ளை லோகாசார்யரால் அருளப்பட்ட ஸ்ரீமத் வசன பூஷண திவ்ய சாஸ்த்ர ஞானம் பெறவும் அதை அநுஷ்டிக்கவும் அடியேனுக்கு க்ருபை செய்தருள்வீராக!
அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூத்ரங்கள்-மேல்- -18-ஸூத்ரங்கள் புருஷகார வைபவம்-
2– சாதனச்ய கௌரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூத்ரங்கள் –23- முதல் -70 -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூத்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் -பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –
7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூத்ரங்கள் –308-முதல் -365-ஸூத்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூத்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூத்ரங்கள் -407-முதல் -463-ஸூத்ரங்கள் வரை –
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-
Leave a Reply