ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம் –8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம்–மூன்றாம் பிரகரணம் –சூர்ணிகை -366-380 -நாலாம் பிரகரணம் -சூர்ணிகை -381-406—

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படிப் பிரித்து அனுபவம் –

————

சூரணை -366-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஆகக் கீழ் ஸிஷ்ய ஆச்சார்யர்களுடைய பரிமாற்றத்தை அருளிச் செய்து
அதில் சிஷ்யனுடைய பரிமாற்றமாக உபகார ஸ்ம்ருதியில்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்ற இடத்தில்
மனஸ்ஸுக்குத் தீமையாவது -என்று தொடங்கி -பகவத் பாகவத தோஷங்களையும்
அல்லவவு அல்லாத ஸம்ஸாரி தோஷங்களையும்
இவன் காண்பான் அல்லன் என்றும்
அஸ் ஸம்ஸாரிகள் பக்கல் தோஷம் காண ஒண்ணாத அளவே அன்று -அவர்கள் தன் பக்கல் பண்ணும்
அபஹாரங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் என்றும்
இன்னும் அவ்வளவே அல்ல
அவ்வபகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி பர்யந்தமான அதிகாரங்கள் யுண்டாக வேணும் என்றும் கீழே சொல்லி
ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷங்களையும் -என்ற இடத்தே தொடங்கி
கர்ப்பிதமாய்க் கொண்டு வருகிற பகவான் நிர்ஹேதுக ப்ரபாவத்தை விசதமாக
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –என்று தொடங்கி மேலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹே-இத்யாதி
துரந்தஸ்யா நாதேர பரிஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநா சாரோஹம் ந்ருப ஸூர ஸூபஸ்யாஸ் பதமபி -என்றும்
தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்றும்
ஆளவந்தாரும் அருளிச் செய்கையாலே
இவனுக்கு அநர்த்தங்களான தோஷங்களைப் பற்றிப் பார்த்தால் பயங்கரங்களாக இருக்கும் என்றும்
ஸ்வரூப உஜ்ஜீவங்களான பகவத் தயாதி குணங்களைப் பற்றிப் பார்த்தால் அந்த பய நிவ்ருத்திக்கே உடலாய் இருக்கும் என்றும் அருளிச் செய்கிறார் –

————

சூரணை-367–

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கும் –

பய அபயங்கள் -இத்யாதி -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–அஜ்ஞதையே சித்திக்கையாவது -அவனுடைய தயா குண அனுசந்தானத்தை விட்டு
இது நெடும்காலம் ஸம்ஸாரத்திலே நெருக்கி தண்டித்துக் கொண்டு போந்தான் இறே என்று ஈஸ்வரனுடைய தண்ட தரத்வத்தை அனுசந்தித்து பயப்படுகையும்
ஸ்வ தோஷ அனுசந்தானத்தை விட்டு இந்நாள் வரை நம்மைத் தண்டித்தானே யாகிலும் நம் பக்கலிலே இத்தனை ஆத்ம குணங்களால் வந்த ஆனுகூல்யம் யுண்டான பின்பு இனி பயம் இல்லை என்று இருக்கையும்
இவ்வதிகாரிக்கு உண்டாமாகில் முன்பு ஸம் சரிக்கைக்கு ஹேதுவான அறிவு கேடே இன்னம் பலித்து விடும் என்கிறார் –

———–

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

சூரணை -369-

பந்த-அனுசந்தானம் –

ஆனால் -நலிவான் இன்னம் -இத்யாதி -இந்த பயாபயங்களினுடைய மாறாட்டில் அஞ்ஞதையே ஸித்திக்குமாகில்
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானாதிகரான ஆழ்வார்களுக்கு ஈஸ்வர விஷயத்தில்
உண்ணிலாவிய
மாற்றமுள வாகிலும் -இத்யாதிகளிலே பயம் நடப்பான் என் என்னில்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் -என்றும்
இத்யாதிகளில் படியே ஸகலவித பந்துவும் அவனே என்று இருக்கிற பந்த அநுஸந்தானத்தாலே என்கிறார் –

—————

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

இன்னமும் இவ்வதிகாரிகளுக்குப் பிறந்த தஸா விசேஷத்தைக் கொண்டு அறுதியிட வேணும் –
அவ்வதிகாரிகளுடைய தஸா விசேஷங்கள் எவை என்னில்
ஸாஸ்த்ர ஞான மூலமாகப் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களே பிரதானமாக அநுஸந்திக்கும் அதிகாரிக்குப்
பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும்
அந்த ஸாஸ்த்ரத்தாலும் -ஸாஸ்த்ர தாத்பர்யமான திரு மந்திரத்தாலும் பிறந்த ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களுக்கும்
சேஷத்வ பாரதந்ர்யங்களுக்கும் சம கக்ஷியாக அநுஸந்திக்குமவனுக்குப் பேறு இழவுகள் இரண்டும் தன்னாலேயாய் இருக்கும் –
அந்த ஸாஸ்த்ரத்தாலும் திருமந்திரம் அடியாகப் பிறந்த சேஷத்வ பாரதந்தர்யங்களே பிரதானமாக அத்யவசித்து இருக்கும்
அதிகாரிக்குப் பேறு இழவுகள் இரண்டும் ஈஸ்வரனாலே இருக்கும் –
ஆகையிறே ஆழ்வார்கள் அவ்விரண்டையும் அவன் பக்கலிலே ஏறிட்டு அருளிச் செய்தது –
இது இங்கே முக்த அவஸ்தை பிறந்த அதிகாரியினுடைய ஞானமாகையாலே முமுஷு அதிகாரியினுடைய அனுசந்தான கிரமத்தை அருளிச் செய்கிறார் பிரஜை தெருவிலே இடறி -இத்யாதியாலே
இத்தால் அந்த பந்த அனுசந்தானத்தால் பலிக்கும் காரியத்தை ஒரு புடை ஒப்பான த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறது –
அதாவது -ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியில் அநந்ய கதியான ப்ரஜை ஸ்வ இச்ச ஸஞ்சாரம் பண்ணுகிற தெருவிலே ஸ்வயமேவ இடறி
ஆத்தாள் வந்த வேதநாதிசயத்தாலே அகத்தேற ஓடி வந்து தனக்கு வருகிற விரோதம் முதலிலே அறியாதவளுமாய்த் தான் இடறுகிற இடத்திலும் இன்றிக்கே உண்டானாலும்
விலக்குகைக்கு அசக்தையுமாய் ஸோபாதக பந்த யுக்தையுமான மாதாவின் முதுகிலே மோதி கிலேசம் தீரக் காணா நின்றால்
ஸர்வஞ்ஞனுமாய்-ஸர்வ வியாபகனுமாய் -ஸர்வ சக்தியாய் -ஸதா சன்னிஹிதனுமாய்-ஸர்வ நியாந்தாவுமாய் -நிருபாதிக பந்துவுமாய்
நிரவதிக வாத்சல்ய யுக்தனுமான அவன் ஸ்வ கர்ம பலமான ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களையும் போகாது ஒழிந்தால்
அம்மாதாவின் அளவன்றிக்கே மிகவும் அவன் பக்கலிலே ஏறிட்டு வெறுக்கலாம் இறே என்கிறார் –

—————

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –

பிரஜையை இத்யாதி -அஞ்சு வயஸ்ஸுக்கு உட் பட்ட பிரஜையினுடைய ஹத்யாதி தோஷங்கள் மாதா பிதாக்களுடையது என்று
மன்வாதி ஸ்ம்ருதிகள் சொல்லா நிற்க -க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்-பதந ஹேதுவான கிண்னற்றங்கரையிலே பதறிக் கொண்டு போகிற பிரஜையை சந்நிஹிதை யான பெற்ற தாயானவள் எடுத்து ரஷியாதே அத்தை அனுமதி பண்ணி விட்டால் அவள் தானே இறே வலியத் தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே
ஆகையால் ஸ்வரூப நாஸ யோக்கியமான இந்த ஸம்ஸார மண்டலத்தில் நின்றும் ஸர்வத்ர ஸந்நிஹிதனான ஸர்வேஸ்வரன் –
உனது அருளால் வாங்காய் -என்கிறபடியே
தங்களை எடாது ஒழிந்தால் ததேக ரஷ்யரான ஆழ்வார்களுக்கு அப்படி அருளிச் செய்யலாம் இறே என்றபடி –

———————-

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இப்படி ஈஸ்வரன் இவர்களை எடாத அளவேயோ -முமுஷுக்களாய் -ஆர்த்த அதிகாரிகளான இவர்கள் அந்தமில் பேரின்பத்தை இழந்து
அநந்த கிலேச பாஜனமான இஸ் ஸம்ஸாரத்திலே அனுபவிக்கைக்கு ஹேது அவனுடைய அனுமதி அன்றோ என்ன -இவனுடைய அனுமதி -இத்யாதி –
கீழே ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ அனுமதி -என்ற இடத்தில் சேதனனுடைய அனுமதி-பேற்றுக்கு ஹேதுவான உபாயத்தில் அந்வயியாதோ பாதி
அத்யக்ஷஸ் ச அநுமந்தா ச -என்கிற ஈஸ்வரன்
இவன் நம்முடைய வஸ்துவாய் -வேறே சேஷ்யந்தரம் இன்றிக்கே இவனோடு இவன் விரோதியான கர்மத்தோடே வாசி யற நாம் இட்ட வழக்கான பின்பு
இவன் நமது விபூதிக்குப் புறம்பு ஆகிறான் அல்லனே
இன்று அன்றாகில் இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளுகிறோம் என்று பண்ணும் அனுமதியும் இழவுக்கு ஹேது அல்ல என்கிறார் –

இனி கிண்னற்றங்கரைக்குப் பிரஜை போகத் தாய் பண்ணின அனுமதி மாத்ரத்தாலே அவள் தள்ளினாள் ஆய்த்தும் இல்லை இறே –

———–

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

ஆனால் அந்த இழவுக்கும் பேற்றுக்கும் ஹேதுக்கள் எவை என்ன -இழவுக்கு அடி -இத்யாதி –
இச் சேதனன் அந்தமில் பேர் இன்பத்தை இழக்கைக்கு ஹேது கால ஆர்ஜிதமான கர்மம்-
அத்தைப் பெறுகைக்கு ஹேது ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபை –

——————-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

மற்றைப்படி இத்யாதி – ஆத்ம குணங்களால் உண்டான ஆனுகூல்யத்தாலே பேறு யுண்டாய்த்து என்றும்
ஈஸ்வரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே இது நெடும் காலம் இழந்தோம் என்றும் சொல்லில்
மேல் அநந்த காலமும் இவ்விழவே பலித்து விடுகைக்கு உடலாம் -என்கிறார் –

———-

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை
தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே –

அவன் ஸர்வ சேஷியாய் ஸர்வ ரக்ஷகனாய் இருக்க அநாதி காலம் ஸம்ஸார ஆர்ணவ மக்நனாயக் கொண்டு தளர்ந்த இவன்
அப்படிச் சொன்னால் வருவது என் என்னில் -எடுக்க நினைக்கிறவனை -இத்யாதி –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
இவனை ஸம்ஸார தாபத்தாலே வெதுப்பி -ஹித பரனாய்க் கொண்டு -எடுக்க நினைக்கிற ஈஸ்வரனை இது நெடும் காலம்
இஸ் ஸம்ஸாரத்திலே உன் ஸ்வா தந்தர்யத்தாலே தள்ளினாய் என்று நைர் க்ருண்யத்தை ஏறிடுகை
தன் அநவதானத்தாலே ஆழ்ந்த குழியிலே விழுந்தான் ஒருவனை அருகே நின்றான் ஒருவன் ஐயோ என்று எடுக்கப் புக
அவஸாநத்தையே ஹேதுவாக அவன் ஒரு வழியே போகிறவனை நீயே அன்றோ தள்ளினாய் என்றால்
நிர்க்ருணனாய் எடுக்க உத்யோகியாதாப் போலே எடாமைக்கு உறுப்பாய் ஸம் சரிப்பிப்பைக்கு உடலாய் விடும் அத்தனை இறே –

—————–

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-

சீற்றம் உள -இத்யாதி -இவ் வர்த்தத்தில் இந்த லௌகிக வியாபார த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு தர்சிப்பிக்க வேணுமோ
ஸம்ஸார தாபார்த்தரான திருமங்கள் ஆழ்வார்
மாற்றம் உள -என்கிற திரு மொழியில் –
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்த பாசுரத்தைக் கேட்ட அநந்தரத்திலே
எம்பெருமான் சீறினமை தோற்ற -சீற்றமுள -என்று
அநு போக்தாவான ஆழ்வார் தாமே இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே —

————-

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்–இத்யாதி -ஆனால் அவன் படிகள் எல்லாம் அறிந்து -அனுபவிக்கிற ஆழ்வார் -அப்பாசுரத்தாலே
அவனுக்குச் சீற்றம் யுண்டானமை அறிந்தால் மீளவும்
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று அருளிச் செய்தபடி எங்கனே –
அதுக்கு ஹேது என் என்னில் –
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேஸே -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்றும்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
சொல்லலாம் படியான அவனுடைய அருள் என்னும் ஒள் வாள் உருவி வினை முதிர்ந்து இருந்த கனமும்
காற்றத்திடைப்பட்ட கலவரைப் போலே ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -உண்டாகையாலும் அருளிச் செய்யப் பண்ணும் என்கிறார் –
மஹதா புண்ய புஞ்ஜேந க்ரீதேயம் காயநவ் ஸ்த்வயா ப்ராப்த துக்கோததே பாரந்த்வராயா வன்ன பிப்யதே -என்கையாலே
கலவர் மனம் போலே என்கிறார் –

—————-

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டு என்னா -சேஷியான அவனுக்குச் சீற்றம் பிறக்கும்படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன
சீறினாலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
நிராச கஸ் யாபி ந தாவதுத் சஹே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம் ருஷா நிரஸ்தோபி ஸி ஸூஸ்த நந்தயோ ந ஜாது மாதுஸ் சரணவ் ஜிஹாசதி-என்கிறபடியே
சீற்றத்தாலே தெறிக்கத் தள்ளினாலும் சென்று திருவடிகளை பூண் கொள்ளலாம் படி எளியனாய் இருப்பன்
ஒரு வத்சலனை லபித்தால் வாய் வந்த படி யுக்த பிரகாரம் எல்லாம் சொல்லலாம் இறே என்கிறார் –

—————–

சூரணை -380-

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -க்ருபயா பர்யபாலயத் -அரி சினத்தால் -என்று ஸ பிரகாரமாக அத்தை தர்சிப்பிக்கிறார் –
ஸ தம் பூமவ் நிபதிதம் சரண்யஸ் சரணாகதம் வதார்ஹமபி காகுத்ஸ்த் த க்ருபயா பர்யபாலயத் -என்றும்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே இருந்தேனே -என்றும்
யுண்டாகையாலே இதில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியுஞ்சினம் உண்டாகக் கூடாது இறே
கூடாதது கூடினாலும் என்றபடி

ஆக -கீழே -பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது என்றவத்தை இவ்வளவாய் ப்ரதிபாதித்துக் கொண்டு போவது –

———————————————————-

நாலாம் பிரகரணம்

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி உடன் கேடனாய்-
இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –
தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப் போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

த்ரிபாத் விபூதியிலே -இத்யாதி -லீலா விபூதி அநிருத்தர் அபிமான அந்தர் கதமாய் இருக்கையாலே வாஸூ தேவாதிகளான மற்றை மூவருடையவும்
அபிமான அந்தர் கதமான திரிபாத் விபூதியிலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -ஸ்ரியா ஸார்த்தம்
நித்ய ஸூரிகளோடே பரிபூரணமான அனுபவம் அனுவர்த்தியா நிற்க -அந்த நித்ய விபூதி ரக்ஷணமாகிற ஜீவனத்தாலே
உண்டி உருக்காட்டாத படியாய் -ஸ ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே தன்னைத் தனியனாக நினைத்துத் தளர்ந்து –
புத்ர பவ்த்ராதிகளோடே ஜீவிப்பான் ஒரு க்ருஹஸ்தன் ஒரு புத்ரன் க்ருதயாக்ருத்ய விவேக ஸூன்யத்தையாலே அஹங்கார மமகார நிமித்தமாக
தேசாந்தரஸ்தன் ஆனால் இவர்களோபாதி இப்போகத்துக்கு இட்டுப் பிறந்த இவன் இப்படி அந்யதா ஆவதே என்று –
அந்த புத்ரன் விஷயமாக பிதாவினுடைய ஹ்ருதயம் புண் பட்டு இருக்குமா போலே
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே -என்று தொடங்கி
தம பரே தேவ ஏகீ பவதி -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று -என்றும் இத்யாதிகளில் படியே
ஸம்ஹ்ருதி சமயத்திலே லீலா விபூதி பூதரான ஸகல சேதனரும் கரண களேபர விதுரராய்
அத ஏவ போக மோக்ஷ ஸூ ன்யராய்க் கிடக்கிற படியைக் கண்டு -தன்னோடு உண்டான நிருபாதிக பந்துவே ஹேதுவாக
அவர்கள் பக்கலிலே திரு உள்ளம் குடி கொண்டு -அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கிற நியாயத்தாலே
அவர்களை பிரிந்தால் இப்படி இவர்கள் இஸ் ஸம்பந்த ஞான ஸூ ன்யராய்க் கொண்டு கிடப்பதே என்று தன் கேவல கிருபா பாரவஸ்யத்தாலே
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே – மிகவும் விஸ்லேஷ அசஹனாய்
களே பரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்றும்
சொல்லுகிறபடியே சமாஸ்ரயண முகேந தான் அவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு தயமான மனாவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானத்தைப் பண்ணி கரண களேபரங்களைக் கொண்டு
நின்றனர் இருந்தனர் -என்ற பாட்டின் படியே இவர்களுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப வியாபாரங்கள் யுண்டாகைக்கு
ஆதா வீஸ்வர தத்த யைவ புருஷ ஸ்வா தந்தர்ய ஸக்த்யா ஸ்வயம் தத்தத் ஞான சிகீர்ஷண ப்ரயதநாத் யுத் பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
முதலிலே சக்தி விசேஷங்களையும் கொடுக்க அது தன்னையே கொண்டு
பரமேஸ்வர ஸம்ஞ ஜோஜ்ஞ கி மந்யோ மய்ய வஸ்திதே -என்கிற ஹிரண்ய ஸிஸூ பாலாதிகளைப் போலே இந்த்ரிய கோசரனாய் நின்று ரக்ஷிக்க நினைக்கில்
அஹங்கார மமகாரமாகிற அஞ்ஞான ரூபேண நிவாரிப்பார்கள் என்று நினைத்துக் கண்ணுக்குத் தோற்றாத படி
அதீந்த்ரியனாய்க் கொண்டு அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் -இப்படி அந்தர்யாமியாய் இருக்கும் இடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் ஒரு ஸ்மரண மாத்ரமும் இன்றிக்கே உறங்கிக் கிடக்கிற பிரஜையைப் பெற்ற தாயானவள் இத்தசையில் இதனுடைய ரக்ஷணம் நமக்கே இறே பரமாவது என்று அதன் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சேஷியான -தான் அறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக இவர்களுக்கு ஸம்பந்த ஞானம் இல்லை என்று விடுகைக்கு அஸக்தனாய் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் -என்றும்
ஸூபா ஹிதா கஹ்வரேஷ்டி -என்றும்
அடியேன் உள்ளான் -என்றும்
என்னாவி என்னுயிர் -என்றும்
இத்யாதிகளில் படியே இவ்வாத்மாக்களுடைய அகவாயிலே அணைத்துக் கொண்டு ஒருவனுக்கு ப்ராக்தநமான க்ஷேத்ரம் பரராலே அபஹ்ருதமானால்
அந்த க்ஷேத்ர அபஹாரி யானவன் ஆண்டு கொண்டு போருமித்தைப் பற்றவும் உடையவன் அநு சயித்துத் தொடருகை அந்த க்ஷேத்ர அனுபவத்துக்கு ப்ராபல்ய ஹேதுவாமோ பாதி
தவம் மே அஹம் மே குதஸ் தத் -இத்யாதி ஸ்லோக ப்ரகாரத்திலே ஸம்ஸாரி சேதனன் நான் எனக்கு உரியன் என்கிற இது அநாதி ஸித்தமாய்ப் போரு மதிலும்
நாம் ஸ்வாமியானமை தோற்ற சத்தா தாரனாய்க் கொண்டு தொடர்ந்து கொண்டு போரும் அளவன்று என்று நிரந்தரமாக
அவர்கள் சத்தையை ரக்ஷித்து ஸ்வர்க்க நரகாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இப்படி சத்தா தாரகனாய்ப் போரு கையாலே இவர்களோடே உடன் கேடனாய்
அவர்கள் பிரகிருதி வஸ்யராய்க் கொண்டு அஸத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போதும் அள்ளல் சேற்றிலே இழிந்து அளைகிற பிரஜையை அதுக்கு அத்யக்ஷனான பிதா நிவாரிக்கப் பார்த்தால் அதன் சோகம் காண மாட்டாமையாலே
அனந்த்ரம் ஒரு கால் அத்தைக் கழுவி எடுத்துக் கொள்கிறோம் என்று அனுமதி பண்ணி இருக்குமோ பாதி
அனாதையான வாசனா ருசிகளுக்கு ஈடாக அவற்றில் நின்றும் மீட்க மாட்டாதே அநு மந்தாவான தன் அனுமதி தானத்தைப் பண்ணி
உண்மையிலே உதாஸீனன் இன்றிக்கே இருக்கச் செய்தே உதாசீனரைப் போலே இருந்து
ஸர்வஞ்ஜோபி ஹி விஸ்வேச ஸதா காருணிகோபி சந் ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிறபடியே
ஆள் பார்த்து உழி தருகிறவன் ஆகையால் அஸத் கர்மங்களில் நின்றும் இவர்களை மீட்க்கைக்கு அவசரம் பார்த்து

அந்த பர ஹிம்சாதிகளான அஸத் கர்மங்களிலே
பகவத் பாகவத அபசாரிகளை யாதிருச்சிகமாக ஹிம்ஸிக்கை தொடக்கமான நன்மை என்று பெயர் இடலாவதொரு தீமையும் சர்வஞ்ஞனான தான் காணாதே
ஸர்ப்ப சந்தஷ்டனான ஒருவனுடைய நெற்றியைக் கொத்தி ரக்தப்பசை யுண்டோ என்று சோதித்துப் பார்த்தால் மந்த்ர ஒவ்ஷாதி ஸர்வ பிரகாரத்தாலும் அப்பசை காணாது ஒழிந்தால் அந்தரங்கராய் இருப்பார் இனி இவ்விஷயம் நமக்கு கை புகுறாது என்று கண்ண நீரோடு கால் வாங்கிப் போருமாப் போலே
ஸம்ஸார போகி ஸந்துஷ்டானான இவனை ஸர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஸர்வேஸ்வரன் யாதிருச்சிகாதி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவிக்கப் பார்த்தால்
த்விதா பஜ்யேயாம்-என்ற ராவணனைப் போலே ஒரு வழியாலும் உஜ்ஜீவன ஹேது காணா விட்டால் அவனை அம்பாலே அழித்து மீண்டாப் போலே
இவன் அங்கீ கார யோக்யன் அன்று என்று -ஸஞ்சாத பாஷ்ப -என்கிறபடியே கண்ண நீரோடே ஸர்வ ஸக்தியான தான்
ஸாஸ்த்ரமும் -உபதேசமும் –தன்னுடைய நிர்ஹேதுக கிருபையும் -விநியோகப்படுகைக்கு விஷயம் வேணும் என்ற நினைவாலே மீளுவது
இப்படிப்பட்ட நினைவை யுடைய தன் திரு உள்ளத்துக்கு ஈடாக யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களை யுடைய ஒரு சேதனனைப் பெற்ற அளவிலே
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன -என்றும் இத்யாதிகளில் படியே
என்னூரைச் சொன்னாய்-என் பேரைச் சொன்னாய் -என்றும்
ஒரு பாகவதன் காட்டிலே வழி போகா நிற்க அவன் பின்னே பர ஹிம்ஸா பரனாய் இருப்பான் ஓரு படனும் யாதிருச்சிகமாக ஸா யுதனாயக் கொண்டு போக
அவ்வளவிலே காட்டில் வழி பறிகாரர் இந்த பாகவத பரிபாலன அர்த்தமாக வருகிறானாக நினைத்து அவனைப் பறியாதே பயப்பட்டுப் போக
அந்தப்படனுக்கு அந்த வியாபாரத்தை ஈஸ்வரன் ஸூ ஹ்ருதமாக முதலிட்டான் என்கையாலே -என்னடியாரை நோக்கினாய் -என்றும் –
ஒரு பாகவதன் கர்ம காலத்திலே வழி நடந்து தாஹ தூரனாய்ச் செல்லா நிற்க அத்தசையிலே தன் செய்க்குச் சாவி கடிந்து இறைக்கிறான் ஒருவன்
அந்நீரிலே கால் தோய்ந்தாரையும் கடிக்கொன்டு விலக்கி இறையா நிற்க
அசிந்திதமாக அப்பாகவதன் அதில் தன் விடாய் தீர்த்துப் போக – அத்தை ஈஸ்வரன் அவனுக்கு ஸூ ஹ்ருதமாக்கி மூதலிக்கையாலே அவர்கள் விடாயைத் தீர்த்தாய் என்றும்
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி விநோதார்த்தமாக புறம் திண்ணையைக் கட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்ய ராத்ரி யானைவாரே தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என்
இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக -அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு
அவர்களால் வந்த வ்யஸனத்தை நிவர்ப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக அத்தை அவளுக்கு
ஸூ ஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும்
இப்புடைகளிலே சில ஸூ ஹ்ருத லேசங்களை ஸ்வ கார்ய வஸராய்க் கொண்டு வழி போவார் மடியிலே வலிய மறைத்து மாங்காயைப் பொகட்டு அத்தை அடையாளமாக ஆஜ்ஞா புருஷன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே
மித கலஹ கல்பநா விஷம வ்ருத்தி லீலா தயா பஹிஷ் கரண தவ்ஷ்கரீ விஹித பாரவஸ்ய ப்ரபு ஸ்வ லஷித ஸமுத்கமே
ஸூ ஹ்ருத லக்ஷணே குத்ர சித் குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந -இத்யாதிகளில் படியே
ஈஸ்வரன் லீலா ஸங்கல்ப நிர்வாஹண அர்த்தமாக ஏறிட்டு
இப்படிக் கீழே யுக்தமான யாதிருச்சிகாதிகளை ஒரு ஜென்மத்தில் ஒருக்காலே ஏறிட்டு விடுகை அன்றிக்கே -ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக சிலர் ஸ்வர்ண பரீஷை பண்ண வரப் பொன் வாணியன் அதிலே ஆதார அதிசயத்தாலே
அப்பொன்னை வாங்கி உரை கல்லிலே உரைத்து அதன் சீர்மையை அறிந்து முகப்பிலே எடுத்து கால தைர்க்யத்தோடே கால் கழஞ்சு என்று திரட்டி
ஆகர்ஷகமான ஆபரண யோக்யமாக்குமா போலே -சேதனனுடைய ஜென்ம பரம்பரைகள் தோறும்
என்னடியாரை நோக்கினாய் –விடாயைத் தீர்த்தாய் –என்று இத்யாதிகளான ஆனு ஷங்கிகம் என்ன –
ஏவம் விதமான ஸூ ஹ்ருத விசேஷங்களை ஸர்வஞ்ஞனனான தானே கல்பித்து
யம் ஏப்யோ லோகேப்ய உன்னி நீஷதி ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி தம் -என்கிறபடியே
இஸ் ஸூ ஹ்ருத விசேஷங்களை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கிறார் –

———

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –சுருக்கம் ஓழியக் காணலாம் –

ஈஸ்வரன் இப்படி விஷயீ கரிக்க எங்கே கண்டோம் என்ன -லலிதா சரிதாதிகளிலே விஸ்தரேண காணலாம் என்கிறார் -அதாவது
லலிதை என்பாள் ஒரு ராஜ கன்யகை பூர்வ ஜென்மம் பாப பிராஸுர்யத்தாலே எலியாய் ஜனித்து ஓர் எம்பெருமானுடைய கோயிலிலே இதஸ் ததஸ் சஞ்சாரியாய் நிற்க
அவ்வெம்பெருமான் ஸந்நிதியிலே எரிகிற ஒரு தீபம் திரி எரிகிற ஸமயத்திலே அது தைலேச்சுவாய்க் கொண்டு தலை வைத்ததாயிற்று
தன் முகேந ஜ்வலித்த திரு விளக்கு நெடும் போது நின்று எரிய அதில் உஷ்ணத்தாலே இழிந்து ஓடுகிற அத்தை அப்போதே ஒருவன் அடிக்க
அந்த ஸூ ஹ்ருத விசேஷத்தாலே தத் ஸ்மரணையோடே இவ்வதிகா ஜென்மத்தை லபித்து இப்படியான பின்பு நமக்கு கர்த்தவ்யம்
அநந்த தீப முச்யதே -என்கிற இத் திரு விளக்குத் திருப்பணியே யாக வேணும் என்று தனக்குச் செல்லுகிற தேசத்திலே திருப்பதிகள் எங்கும்
பரிபூர்ண தீபத்தால் தேஜிஷ்டமாம் படி பண்ணி அவள் முக்தையானாள் என்று ப்ரஸித்தம் இறே –

இனி ஆதி சப்தத்தால் நினைக்கிறது –
ஸூ வ்ரதை என்பாள் ஒரு ருஷி கன்யகை பால்யத்தில் மாதா பிதாக்களும் மரித்து தன்னைப் பாணி கிரஹணம் பண்ணுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்கையாலே
இவ்விருப்பு இருக்க வேண்டா என்று அவள் அக்னி பிரவேசம் பண்ணுகையிலே உத்யோகிக்க
அவ்வளவிலே யமன் ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து இப்படி நீ ஆத்மகாதகை யாகலாகாது காண் என்ன
அவளும் கிலேச யுக்தமாக இவ்விருப்பு இருக்கப் போகாது என்ன
உனக்கு இக் கிலேசத்துக்கு அடி பூர்வ ஜென்மத்திலே நீ யொரு வேஸ்யையாய் இருப்புதி –
உன்னகத்திலே ஒரு ப்ராஹ்மண புத்ரன் வந்து ப்ரவேசிக்க முன்பே உன்னோடே வர்த்திப்பான் ஒரு மூர்க்கன் அவனை வதிக்க அந்த ப்ராஹ்மண புத்ரனுடைய ஸ்திரீயும் மாதா பிதாக்களும் பர்த்ரு ஹீனை யாவாள் என்றும்
பித்ரு ஹீனை யாவாள் என்றும் மாத்ரு ஹீனை யாவாள் என்றும் -உன்னை சபிக்க அத்தாலே காண் உனக்கு இந்த கிலேசம் வந்தது என்ன
ஆனால் இப்படி ஹேயையான எனக்கு இந்த ஜென்மம் உண்டானபடி என் என்ன -அதுக்கு ஹேது ஒரு பாகவதன் உன் க்ருஹ ப்ராந்தத்திலே விஸ்ரமிக்க அவனைத் தலையாரிக்காரன் கள்ளன் என்று பிடித்து ஹிம்ஸிக்க நீ அத்தைத் தவிர்த்து
அவன் பக்கலிலே அத்யாத்மம் கேட்ட பலம் காண் இது என்றான் இறே
அவன் அவளுக்கு உபதேசித்த அர்த்தம்
குரு ப்ரமாணீ க்ருத சித்த வ்ருத்தயஸ் ததாகமே ஸூ ப்ரணத ப்ரவ்ருத்தய
அமாநிநோ டம்ப விவர்ஜித நராஸ் தரந்தி ஸம்ஸார ஸமுத்ர மஸ் ரமம் -என்றது இறே இதிஹாஸ சமுச்சயத்திலே –

———————————

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்-வாளா தந்தான் என்று இருப்பர்கள்-

அஞ்ஞர் இத்யாதி -இனி ஆகிஞ்சன்ய ஏக சரணமான ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறவாத அஞ்ஞரானவர்கள்
ஒரு ராஜா ஒருவன் கையிலே வாளைக் கொடுத்து நீ கைக்கு ஆயிரம் பொன்னைப் பொன்னுக்கு நம்மை சேவி என்று நியமித்து விட
அவன் வாள் தந்தமையை மறந்து இவ் வாளாலே இப்போகம் பெற்றோம் என்று கேவலம் வாளின் மேலே கர்த்ருத்வத்தை ஏறிடுமா போலே
அடியிலே கரண களேபர ப்ரதாநம் பண்ணின ஈஸ்வரனை மறந்து -நம் கையிலே ஸூ ஹ்ருதாதிகளாலே அவன் நம்மை கிருபை பண்ணினான் இத்தனை இறே என்று இருப்பர்கள் –

————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

ஞானவான்கள் இத்யாதி -அந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிறந்த முமுஷுக்கள் அந்த ஸ்வரூப தசையோடு புருஷார்த்த தசையோடு வாசியற
பகவன் நிர்ஹேதுக கிருபையாலே பலித்தது என்று எப்போதும் உபகார ஸ்ம்ருதியாலே ஈடுபடா நிற்பர்கள்
என்னும் இடத்துக்கு ப்ராமண பாஹுல் யத்தை -இன்று என்னைப் பொருளாக்கி -இத்யாதிகளாலே அருளிச் செய்கிறார் –

———————–

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

பாஷ்யகாரர் காலத்திலே -இத்யாதி -பார்த்த இடம் எங்கும் பகவத் ஏக பரராம்படி பண்ணுகிற பாஷ்யகாரர் காலத்திலே யாதிருச்சிகமாக ஒரு நாள் பெரிய திரு மண்டபத்துக்குக் கீழாக நம்பெருமாளுடைய புறப்பாடு பார்த்து ஏகாக்ர சித்தராய்க் கொண்டு கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் குவிந்து மஹா லோகமாய் இருந்ததொரு சமயத்திலே
நாதே ந புருஷோத்தமே த்ரி ஜகதாமேகாதிபே சேதஸா சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸூரே நாராயணே திஷ்டதி
யம் கிஞ்சித் புருஷாதமம் கதி பயாக்ரமே ஸமல் பார்த்ததம் சேவாயை ம்ருகயா மஹே நரமஹோ மூடா வராகா வயம் -என்கிறபடியே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் எத்தனை பதக்தர் வாசல்கள் தோறும் ஆபிமுக்யத்துக்கு இடம் பார்த்துத் தட்டித் திரிந்தோம் என்று தெரியாது
இப்படிப்பட்ட நாம் இன்று லோக நாயகரான பெருமாள் திரு வாசலிலே இவருடைய புறப்பாடு பார்க்க என்ன ஸூ ஹ்ருதம் பண்ணினோம்
என்று ஸ ஹேதுக விஷயமான இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -அவ்வளவில் ஒரு ஞானாதிகர் இவரைப் பார்த்து பிரபாகரன் எம்பெருமானை ஒழிய
அபூர்வம் என்ற ஒன்றை ஆரோபித்துக் கொண்டால் போலே நீரும் ஒரு ஸூ ஹ்ருத தேவரை எங்கே தேடி எடுத்தீர் என்ற வார்த்தை
நிர்ஹேதுகத்வத்தை ஸ்தாபிக்கிற இவ்விடத்தே அனுசந்தேயம் என்கிறார் –

——————

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

ஆகையால் அஞ்ஞாதமான–இத்யாதி -இப்படிக் கேவலம் அத்தலையாலே பேறாகையாலே இச்சேதனருடைய புத்தி பூர்வம் அல்லாத
அஞ்ஞாத ஸூஹ்ருத லேசங்களையே அவலம்பித்துக் கொண்டு அங்கீ கரிக்கையே அவனுக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இனி இப்படி இத்தனையில் யாதிருச்சிகாதிகளை யாகிலும் ஹேதுவாக்கி அவன் அங்கீ கரிக்குமான பின்பு கேவலம் அத்தலையாலே பேறு என்கிற அர்த்தம்
அசங்கதம் ஆகிறதோ என்ன -இவையும் கூடி விளையும் படி இறே என்று தொடங்கிச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
யுக்தமான யாதிருச்சிகாதிகளும் வஷ்யமாணமான அபாபத்வமுமாகிற இவையும் கூட உண்டாம் படி இறே
இந்த யாதிருச்சிகாதிகளுக்கு ஆஸ்ரயமான இவன் தன்னை ஸ்ருஷ்டி காலத்திலே அவன் கரண களேபரங்களைக் கொடுத்து
இவனை யுண்டாம் படி பண்ணிற்று என்கிறார் –

—————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் -இருக்கும் –

அது தன்னை -இத்யாதி -ஒவ்க பத்யம் அநுக்ரஹ கார்யமாகையாலே அவன் தான் நிர்ஹேதுக கிருபையாலே
கரண களேபர ப்ரதான த்வாரா இவனை அவன் ஸ்ருஷ்டித்த படியை நிரூபித்தால்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளில் தத் அதீனனான இவன் தனக்குத் தன் தலையால் ஒன்றும் செய்ய வேண்டாதபடியாய் இருக்கும் –

——————

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

அது எங்கனே என்னில் -பழையதாக இத்யாதி -ஒருவன் தனக்கு ப்ராக்தனமான க்ஷேத்ரத்தைப் பலகாலும் உழுவது நடுவது விளைவதாய்
இப்படி கிருஷி பண்ணிக் கொண்டு போரா நின்றால் அக் கர்க்ஷகனுடைய புத்தி பூர்வம் அன்றிக்கே இருக்க அவன் கிருஷி பண்ணுகிற கட்டளை போலே
அரி தாளிலே விழுந்த உதிரி முளைத்து அவனுக்கு நல்ல பசியிலே புஜிக்கலாம் படி அது பல பர்யந்தமாமா போலே
விடை யடர்த்த பக்தி யுழவன் பழம் புனத்தில் வித்தும் இட வேண்டும் கொலோ-என்கிறபடியே
இந்த யாதிருச்சிகாதிகள் தான் பரபக்திக்கு கர்ஷகனான ஈசுவரனுடைய புத்தி பூர்வகமாகவும் வேண்டாதே
தானே விளையும்படி இறே பழம் புனமாகிற ப்ரக்ருத் யம்சமாய்
மன ஏவ மனுஷ்யாணாம்
யத்தி மனஸா த்யாயதி -இத்யாதி க்ரமத்தாலே
அந்த யாதிருச்சிகாதிகளுக்கு மூலமான மனஸ்ஸைத் தன் பால் மனம் வைக்கும் படி அந்த கர்ஷகன் திருந்த ஸ்ருஷ்டித்த க்ருஷிக் கட்டளை என்கிறார் –

———–

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அவை தான் எவை என்னில் -ஆத்மாக்கள் அநந்தமாகையாலே ஒரு சேதனனுக்கு புண்ய ரூபமாகவும் பாப ரூபமாகவும் உண்டான
ஸ்வயம் ஆர்ஜிதமான கர்மங்களினுடைய பலங்கள் நரகாதிகளிலே நெடும் காலம் நிஸ் சேஷமாக அனுபவித்து
இனி பவிஷ்யமான காலத்திலே அந்தப் புண்ய பாப ரூபங்களை பூர்வ வாஸனா ருசி மூலமாக ப்ரவர்த்திக்கும் அத்தனை என்னும் படி
கர்ம பல அனுபவத்தில் அவன் கை ஒழிந்து அச்ச பாபனாய் நிற்கிற தசையிலே
அபேஷேத கதிம் நிரூணாம் கர்மணோ கஹநாம் கதிம் -என்கிறபடியே
நாஹம் தேவோ ந மர்த்யோ வா -என்கிற க்ரமத்திலே நாம் தாம் ஆர் என்று தன் ஸ்வரூபத்தை உணர்ந்து நம் ஸ்வரூபம் இதுவான பின்பு
நாம் இப்போது நிற்கிற நிலை ஏது நமக்கு இனிமேல் கர்தவ்யமாவது ஏது என்று இவனுக்கு அபூர்வமாகப் பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு
அந்த ஆத்ம குணங்களாதல் -பூர்வ யுக்தமான யாதிருச்சிகளாதல் -என்கிறார் –

—————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை-பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

அசிந்திதமாக ஒரு சேதனனுக்கு யாதிருச்சிகாதிகள் சம்பவிக்கும் க்ரமத்தை
யதா ஹி மோஷகா பந்த்தே பரிபர்ஹமுபேயுஷி நிவ்ருத்த மோஷணோத்த் யோகாஸ் ததா சந்த உதாசதே-என்று தொடங்கிச் சொல்லுகிற
பகவச் சாஸ்திரத்தத்திலே ஒரு பாகவதன் உத்ஸவ அர்த்தமாக ஆபரணாதிகளிலே அலங்க்ருதனாய்க் கொண்டு வழி போகா நிற்க
அவன் பின்னே கார்ய பரனாய்க் கொண்டு வருகிறான் ஒரு ஆயுத பாணியைக் கண்டு அந்த பாகவதனைப் பறிக்க வந்த மோக்ஷகர்
அந்த மோக்ஷண வியாபாரத்தின் நின்றும் நிவ்ருத்தராக -அத்தாலே -அந்த பின் வந்த படனுக்குப் பெரியதொரு ஸூ ஹ்ருத பலமாய் வந்து பலித்த படி
யாதொரு படி அப்படி அல்லாதாருக்கும் இவை யுண்டாம் என்று சொல்லுகையாலே இவ்வர்த்தம் பிரபல ப்ராமண யுக்தம் என்கிறார் –

ஆக
த்ரி பாத் விபூதியில் என்று தொடங்கி
நிர் ணீதமான அர்த்தம் ஈஸ்வரன் சேதனனுக்குத் தன் நிர்ஹேதுக கிருபையாலே கரண களேபரங்களைக் கொடுத்து
யாதிருச்சிகாதிகளையும் இவனுக்கு யுண்டாக்கும் இடத்தில் இவற்றில் இவன் அறிய வருமவை ஒன்றும் இல்லாமையாலே
உஜ்ஜீவனம் யாதிருச்சிகாதிகளாலும் இன்றிக்கே கேவலம் நிர்ஹேதுகம் என்னும் இடம் நிச்சிதம் என்றதாயிற்று –

——————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் -இறே –

வெறிதே அருள் செய்வர் -இத்யாதி -அதுக்கடி-ப்ரமாணிகரில் ஆப்த தமரான ஆழ்வார்
வெறிதே அருள் செய்வர் -என்று விசேஷித்து இவ்வர்த்தத்தை வெளியிடுகையாலே இறே -என்கிறது –

—————-

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அவ்விடத்தில் தன் கைம்முதல் கொண்டு திரு உள்ளம் உகக்கும் படி -செய்வார்கட்க்கு அருள் செய்வர் -என்கையாலே
அவ்வருள்களுக்கு ஹேது ஸூ ஹ்ருதமாய்த்து இல்லையோ என்னில்
அங்கனே விவஷையாகக் கொள்ளும் இடத்தில் -வெறிதே -என்ற பாசுரம் ஸ்வ வசன விருத்தத்வேந அசங்கதமாம் என்கிறார் –
செய்வார்கட்க்கு என்று
தான் செய்ய நினைத்தவர்கட்க்கு என்ற போது
வெறிதே என்ற இடம் சங்கதமாம் இறே –

—————————–

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆகிடுமானாலும் இவனுக்கு பகவத் விஷயீ கார பூர்வ பாவியான அத் வேஷ ஆபி முக்யங்கள் மாத்ரம் ஸூ ஹ்ருதம் அடியாக வந்ததானாலோ என்ன
அத்தைத் துடைக்கிறார் மேல் -பகவத் ஆபி முக்யம் இத்யாதி -அதாவது
அத்வேஷ அநந்தர பாவியான பகவத் விஷயத்தில் இவனுக்கு யுண்டாம் ஆபி முக்யம் இவன் பண்ணின ஸூ ஹ்ருதம் அடியாக அன்றிக்கே
பகவத் கிருபையாலே வேணுமாகில் யுண்டாகிறது
ஏதத் பூர்வ பாவியாய் அகிலாத்ம குண ப்ரதானமான அத்வேஷ மாத்ரம் இத் தலையில் ஸூ ஹ்ருதம் அடியாக சம்பாவித்ததானாலோ என்னில்
அநாதி காலம் ஸம்ஸரித்து பகவத் விமுகனாய்ப் போந்த இவனுக்கு அவ்விஷயத்தில் அத்வேஷ யுக்தனாகை யாகிற இம்மஹா பலத்துக்கு
அஞ்ஞனாய் -அசக்தனாய் அஸ்வதந்த்ரனாய் இருக்கிற இவன் பண்ணும் ஸூ ஹ்ருதத்தைக் காரணம் ஆக்குகை
தூரதோ நிரஸ்தம் என்கிறார் –

——————

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

ஸாஸ்த்ரமும் விதியாதே -இத்யாதி -இப்படி பகவச் ஸாஸ்த்ர ப்ரஸித்தமான ஸூ ஹ்ருதங்களினுடைய அனுஷ்டான க்ரமத்தை
ஏஷ ஏவம் குர்யாத் -என்று ஒரு ஸாஸ்த்ரங்களும் விதியாதே –
அந்த ஸாஸ்த்ரங்களினுடைய விதி விஷயமான நாமும் அறியாதே வருமவையான பின்பு ஸூ ஹ்ருதம் என்ற ஒன்றை முதலிலே
அநபிஞ்ஞரான நாம் நாம கரணம் பண்ணும் படி எங்கனே என்று வ்யுத்பித் ஸூ க்களுக்கு சங்கையாக
தன் நிவ்ருத்யர்த்தமாக அதுக்கு நாமதேய கர்த்தாக்கள் நாம் அன்று
பிதா புத்ரஸ்ய நாமதா -என்ற ந்யாயத்தாலே
ஸர்வஞ்ஞனாய்-நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸர்வேஸ்வரன் என்று ஆச்சார்ய பரம்பரையை ஆஸ்ரயித்து
இவ்வர்த்தத்தை அத்யவசித்து இருக்கையாய் இருக்கும் என்று யுக்த அர்த்தத்தை த்ருடீ கரிக்கிறார் –

—————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இவ்வர்த்த விஷயமாக இத்யாதி -இந்த நிர்ஹேதுக ஸ ஹேதுக ரூபமான இவ்வர்த்தம் விஷயமாக மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பாசுரங்களிலேயும்
மாதவன் என்றதே கொண்டு
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன –
இத்யாதிகளாலும்
வெறிதே அருள் செய்வர்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்னும் இத்யாதிகளிலும்
ஸ ஹேதுகமாகவும்
நிர் ஹேதுகமாகவும்
அருளிச் செய்கையாலே -ப்ரதீதியில் அவை அந்யோன்யம் விருத்த யுக்திகள் போலே ப்ரதிபாஸிக்கும்
இனி அல்லாதவற்றைப் பற்ற இத்திரு நாமத்துக்கு வாசி அறியாது இருக்க வசன மாத்ரத்தைக் கொண்டு
அந்தப்புர பரிகரர் சொல்லும் அத்தை அன்றோ இவன் சொல்லிற்று என்றும்
ஆழ்வீர் திருமாலிருஞ்சோலை மலை என்றீரே என்ன
அவரும் நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேனோ என்ன
இப்போது இப்படிச் சொன்னீரே என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்றும்
இப்படி அந்த ஸ ஹேதுக ப்ரதிபாஸ வாக்யங்களுக்குச் சொல்லும் பரிஹாரங்களும் இவ்வர்த்தத்துக்கு உபோத் பலகமாக ஸாஸ்த்ரங்களிலே
ஏவம் ஸம் ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேந மஹா மதே ஆச்சார்ய விஷயீ காரத் ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்றும்
நாசவ் புருஷகாரேண ந சாப்யன்யேந ஹேது நா கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -என்றும்
இத்யாதி வக்தவ்யங்களான பிராமண விசேஷங்களும்
இப்பிரபந்த விஸ்தர பீதயா பறக்க பரக்க அருளிச் செய்கிறிலோம் என்கிறார் –

————-

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆகையால் இத்யாதி -பிரதமத்திலே இவனுக்கு அத்வேஷ ஆபி முக்யங்கள் உண்டாய்த்தும் அத்தலையாலே யான பின்பு
கேவல பகவன் நிர்ஹேதுக கிருபையாலே உஜ்ஜீவனம் ஆகையாலே இச்சேதனன் தன் பக்கல் விமுகனான ஸம்ஸார தசையிலும் கூடக்
கீழ் யுக்தமான பிரகாரத்திலே உஜ்ஜீவிக்கைக்கு கிருஷி பண்ணின
காருண்யாதி குண விசிஷ்டனாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை அனுசந்தித்தால் முமுஷுவானவன் எப்போதும்
ஸம்ஸார துக்க நிமித்தமாக நிர்ப்பயனாய் நிர்ப்பரனாய்
இருக்கும் அத்தனை என்று கீழே -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்றத்தை நிகமிக்கிறார் –

————

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –வ்யாப்தியும் –

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

எதிர் சூழல் புக்கு இத்யாதி -இப்படி இவ்வதிகாரி தான் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே உஜ்ஜீவிக்கைக்குக் கிருஷி பண்ணின ஈஸ்வரன் அளவில்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -என்கிற படியே
த்ரி பாத் விபூதி -என்று தொடங்கிச் சொன்ன ஸ்ருஷ்டி மாத்ரத்தையே ஆஸ்ரித அர்த்தம் என்று அனுசந்தித்து
நிர்ப்பயனாய் இருக்கும் அளவே யன்று
சத்தா தாராகத்வேந ஸர்வ ஸாமான்யமாக உண்டான வியாப்தியையும்
முற்றுமாய் நின்ற எந்தாயோ என்கையாலே
கீழ்ச் சொன்ன ஸ்ருஷ்ட்டியையும்
எதிர் சூழல் புக்கு -என்ற இடத்தில் சொல்லுகிற அவதாரத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆழ்வார்கள் அனுசந்தித்தாப் போலே
ஸ்வார்த்தமாக என்று இறே இந்த ஞானாதிகரும் அனுசந்தித்து நிர்ப்பயராய் இருப்பது -என்கிறார் –

———————

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் –

கர்ம பலம் போலே -இத்யாதி -இத்தால் கீழ் அர்த்தமாக வந்த வியாப்திக்குத் த்ருஷ்டாந்தமாக அந்த அவதாரத்தைச் சொல்லுகிற
எதிர் சூழல் புக்கு -என்கிற ப்ரமாணத்திலே
விதி சூழ்ந்தது -என்று பகவத் கிருபையை விதி ஸப்தத்தாலே அருளிச் செய்வான் என் என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம்-என்கிற விதி ரூப கர்ம பல அனுபவம் அவர்ஜனீயம் ஆனால் போலே
அவனுடைய கிருபா பலமும் இவ்வதிகாரிக்கு அனுபவித்தே விட வேண்டும்படி இருக்கையாலே
கர்ம பலம் போலே கிருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்கிறார் –

———–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

சேதனன் கர்ம பரதந்த்ரனாகையாலே தத் பலம் அனுபவிக்கிறான் -அச்சேதனனுக்கு
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ் மதாதே கீடஸ்ய சக்திர் பத ரங்க பந்தோ
யத் த்வத் க்ருபா மப்யதி கோச கார ந்யாயா தசவ் நஸ்யதி ஜீவ நாஸம் -என்கையாலே
அக்கிருபையைத் தகைய வழி யுண்டே என்ன
இவனே யல்ல
ஸர்வ சக்தியான அவன் தானும் கூடத் தகைந்தாலும் இவ்விருவர் ஸ்வா தந்தர்யத்தாலும் தகைய ஒண்ணாத படி
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே
அவனுடைய நிர்ஹேதுக கிருபை பெருகப் புக்கால் சேதனனுடைய ஸ்வா தந்தர்ய ரூபமான அஹம் மமதைகளாகிற கரையும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்ய ரூப தண்ட தரத்வமாகிற கரையும் இடியும்படி உத் கூலமாய்க் கொண்டு பெருகும் என்கிறார் –

—————-

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இனி பய ஹேது கர்மம் என்று தொடங்கி -கீழே ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது என்றஇரண்டையும் நிகமித்து
ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறார் –
இப்படி இவன் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து பயப்படுகைக்கு ஹேது
ந நிந்திதம் கர்ம ததஸ்தி -என்கிற ஸ்லோகத்தின் படியே
அந்த தோஷ ஹேதுக்களான துஷ் கர்மங்கள் பகவத் குண அனுசந்தானத்தாலே நிர்ப்பரனாய் இருக்கைக்கு ஹேது
அநுத்தமம் பாத்தரமிதம் தயாயா -என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீ நம் -என்றும் அருளிச் செய்கையாலே
அவனுடைய ஸகல குண ஸாகல்யமான நிர்ஹேதுக கிருபை
இந்த முமுஷு அதிகாரிக்கு அந்த கர்ம ஹேதுவான பயமும் காருண்ய ஹேதுகமான அபயமும்
முந்நீர் ஞாலம் சீலமில்லாச் சிறியேன் -துடக்கமானவற்றிலும்
வைகுந்தா மணி வண்ணன்
கேசவன் தமர் -தொடக்கமானவற்றிலும்
ஆழ்வாருக்கு பர்யாயேண அனுவர்த்தித்திக் கொண்டு போந்தாப் போலே
பேஷஜம் பகவத் ப்ராப்தி -என்கிற பகவத் பிராப்தி பலிக்கும் அளவும் பர்யாயேண ஸ்வயமேவ அனுவர்த்தித்து விடும் என்கிறார் –
தன்னை இட்டுப் பார்த்தால் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாகவும்
அவனை இட்டுப் பார்த்தால் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாகவும் நினைக்கை
இவனுக்கு சரீர அவசானத்து அளவும் ப்ராப்தம் இறே –

——————

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது-

நிவர்த்ய ஞானம் இத்யாதி -இந்த பயா பயங்களினுடைய சரம அவதியான ஹேதுக்களாவது
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்னும்படி
நிவர்த்யமான அவித்யாதி ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய ஞானமும் –
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் -என்னும்படி
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கிற தந் நிவர்த்தகத்தினுடைய ஞான சக்த்யாதி கல்யாண குண யாதாத்ம்ய ஞானமும் -என்றதாய்த்து –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading