Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -125-132–அரும் பத விவரணத்துடன்–

December 24, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நூற்று இருபத்து  ஐஞ்சாம் வார்த்தை

பிரபன்ன அதிகாரிக்கு கார்யம் ஒன்றாய் இருக்க –
மூன்று அவஸ்தை கூடிக் கார்யம் ஆக வேணும் –
அவை யாவன –
ஆஸ்ரயண அதிகாரம் –
பல அதிகாரம் –
போக அதிகாரம் –

இவற்றுக்கு வேஷம் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
அத்யாவச்யமும் –
பரபக்தி பரஞான பரம பக்தியும் –

இவற்றுக்கு விஷயம் –
சீலாதி குண விசிஷ்டனுமாய் –
ஞான சக்தியாதி குண விசிஷ்டனுமாய் –
ஆனந்தாதி குண விசிஷ்டனுமாய் -இருந்துள்ள ஸ்ரீ யபதி –

இவன்
தன் ஆகிஞ்சன்யத்தையும் –
அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு –
ஆஸ்ரயண அபேஷை பண்ண –

அவனும் தன்  சீலாதி (ஆதி ஸுலப்யம் வாத்சல்யம் இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு ஆஸ்ரயணீயனாம் –

இவன் அத்யாவச்யத்தை முன்னிட்டு பல அபேஷை பண்ண –
அவன் ஞான சக்தியாதி (ஆதி பிராப்தி பூர்த்தி இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு பல பிரதனாம் –

இவன் பர பக்தி பர ஞான பரம பக்திகளை முன்னிட்டு போக அபேஷை பண்ண –
அவன் ஆனந்தாதி (ஆதி ஸ்ரீயப்பதித்வம்)குணங்களை முன்னிட்டு போக்தாவாம் –

————————————————

நூற்று இருபத்து ஆறாம் வார்த்தை-

சோமாசி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –
பகவத் பிரவ்ருத்தி விரோதி -ஸ்வப் பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி –
பக்தியும் உபாயம் அன்று –
பிரபத்தியும் உபாயம் அன்று –
பிரபத்தவ்யனே உபாயம் –

————————————————-

நூற்று இருபத்து ஏழாம் வார்த்தை

சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே –
தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று
ஜீயர் அருளிச் செய்தார்

(உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தி இருந்தால் தெளிந்து இருக்கலாம் –ஆனாலும் பிராப்தி இல்லை என்று கைங்கர்ய ரூபமாக அனுஷ்டானம் செய்து பிராபகமும் பிராப்யமும் அவனே என்றே மஹா விசுவாசம் இருந்தால் தெளிந்து இருக்கலாம்- என்பர் நஞ்சீயர் -இதன் விவரணம் அடுத்த வார்த்தை)

—————————————————-

நூற்று இருபத்து எட்டாம் வார்த்தை-

அமுதனார் சிறியாச்சானை –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி  இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –

என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ
உம்முடைய அந் அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் –
பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –

(நூல் புடவை போல் அடியேன் ஒரு நாளும் அனுஷ்டானம் விடக்கூடாது -நீங்கள் பட்டுப் புடவை போல் -என்பாராம்)

ஆசார்யர்களில் சிலர் –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் –
ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே  யன்றோ -என்று அருளிச் செய்தார் –

(உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய் -என்னைக்கடவது -பரதாழ்வானும் இழக்கலாம் குகனும் பேற்றைப் பெறலாம் அன்றோ -)

———————————————————

நூற்று இருபத்து ஒன்பதாம் வார்த்தை-

பிரபன்னனுக்கு புத்தி பூர்வ அபசாரம் புகுருகைக்கு வழி இல்லை —
பிரமாதத்தாலே புகுந்தது ஆகில் –
ஞானமும் அனுதாபமும் -ஒரு தலையாக அபுத்தி பூர்வமாம் இத்தனை —
அநுதாபம் பிறந்தது இல்லை யாகில்
ஞானம் பிறந்தது இல்லையாகக் கடவது என்று
ஜீயர் அருளிச் செய்தார் –

(பிரபத்தி இது பிரார்த்தனா மதி சரணாகதி -கத்யர்த்த புத்யர்த்த -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் இல்லை என்றால் ஞானம் இல்லாமல் பிரபத்தியாகாதே )

———————————————————–

நூற்று முப்பதாம் வார்த்தை

நம் பிள்ளை நம் ஜீயரை –
இதர உபாயங்களுக்கு பிரமாணங்களும் பஹூள்யமாய் அனுஷ்டானங்களும் பஹூள்யமாய் இருக்க –
இதுக்கு (பிரபத்திக்கு )பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி யிரா நின்றது –
இதுக்கு அடி என் -என்று – கேட்க –

நான் நினைத்து இருக்கும் அதுக்கு அவ்வருகு உமக்கு வேண்டுவது ஓன்று உண்டோ –
இருவர் கூடி ஓர் ஆற்றில் இழிந்து போகா நின்றால்
முந்தினவன் முந்தாதவன் கையைப் பிடிக்கும் போது -இதுக்கு ஒரு பிரமாண அபேஷை உண்டோ –
வேண்டில் பிரமாணங்களாலும் ஒரு குறை இல்லை –

இனி பிரமாணங்கள் காண வேணும் என்று நினைத்து இரேன் –
இருந்ததே குடியாக சம்சாரிகளாய் -நாலத்திரண்டு உத்தம அதிகாரிகளாய் இருந்தால்
அவர்களுக்கு (சம்சாரிகளுக்கு)ஒரு உத்கர்ஷைதையும் இவர்களுக்கு ஒரு அபகர்ஷைதையும் உண்டோ –
ஸ்வரூப பிராப்தம் என்னும் அத்தனை ஒழிய –
ஸ்வர்க காமோ யஜேத- என்கிறபடியே
ஸ்வர்க்க பலத்தை அனுபவிக்க சாதனமாக ஸாஸ்த்ரம் சொல்லா நிற்கச் செய்தேயும் ஆரூரில் ஒருவரே யஜித்தான் என்னும் போது- இதுக்கோ (ப்ரபத்திக்கு -அது பிரவ்ருத்தி இதுவோ நிவ்ருத்தி யாக இருக்க)உமக்கு ஆள் பற்றப் புகுகிறது -என்று
அருளிச் செய்ய
பிள்ளையும் க்ருதார்த்தரானார் –

(ஆச்சார்யன் நினைவுக்கு மேல் சிஷ்யனுக்கு வேறே ஒரு பிரமாணம் தேவையில்லை -பிரமாணங்கள் வேண்டுமானால் பலவும் உண்டே-முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே – தஸ்மான் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-இத்யாதிகள் பலவும் உண்டேன் –
ஆழ்வார்களுக்கு, ஆச்சார்யர்களுடைய ஸ்வ அனுபவ ஸித்தமான இதுக்கு வேறே பிராமண அபேக்ஷை இல்லை –ஸர்வதா கர வீராதீந் ஸூதே சாகர மேகலா ம்ருத ஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாண தஸாம் கதா–ஸூபாஷித நீவி -கடல் சூழ்ந்து இவ்வுலகில் கள்ளிச்செடி போன்ற பயனற்ற பொருள்கள் எங்கும் காணலாய் இருக்கும் -இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மூலிகை தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்குமே -அது போல் உத்தம ப்ரபன்னர்கள் நாலிரண்டு பேர்கள் இருப்பதால் அவர்களுக்கு தாழ்வில்லை)

———————————————————-

நூற்று முப்பத்தோராம் வார்த்தை –

பட்டர் திருவணையாட எழுந்து அருளா நிற்க –
சேது ஸ்நானம் செய்தல் -பாதிரிக் கொடியிலே -போது வைகி வந்து –
அஸ்தனமாக -ஒரு வேடன் அகத்திலே புக-

அவன் தான் இருந்த ஆசனத்தையும் வாங்கிப் பொகட்டு –
ஒரு கட்டிலையும் கொடுக்க -அதிலே எழுந்து அருளி இருந்து

இவன் நம்முடைய வைபவத்தை அறிந்து செய்தான் அல்லன் –
க்யாதி பரனாய் செய்தான் அல்லன் –
நம்மாலே உபக்ருதனாய்ச் செய்தான் அல்லன் –
தன்னுடைய கிருஹத்திலே புகுந்தோம் என்கிற அபிமானம் இறே அவன் இது செய்ய வேண்டிற்று –

ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என் நினைந்து இருக்கிறானோ -என்று அநுசந்தித்து அருளி –
ஐயா இற்றைக்கு விசேஷம் என் என்று கேட்டருள –

நாயன்தே காட்டுக்கு வேட்டைக்கு போனேன் –
அங்கே ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன் –
அதனுடைய தாயானது பின்னே முடுகி வந்து -ஒரு எரி வெளி -(பொட்டை வெளி )-யானவாறே  முன்னே வந்து
கும்பிட்டு கிடந்தது -எனக்கு அத்தைக் கண்டு வ்யசனமாய்க் குட்டியை விட்டேன் -என்றான் –

இத்தைக் கேட்டு –
இது சேதனனுக்கு இல்லாத ஓன்று –பரம சேதனனுக்கு உள்ளது ஓன்று -மாமேகம் சரணம் வ்ரஜ என்று இம் முசலுக்கு உபதேசித்தார் இல்லை –
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மனா -(பிராணனைக் கூடக் கொடுத்து விரோதியையும் காப்பாற்ற வேண்டும்)என்று வேடனுக்கு உபதேசித்தார் இல்லை –
அவ்யவதாநேன சரணாகதி பலித்ததே இதொரு பிரமாண பிரசித்தி என் -என்று அருளிச் செய்தார் –

(ப்ரபத்திக்கு பிரமாணம் வேண்டாமே என்றும் கீழ் வார்த்தைக்கு இது த்ருஷ்டாந்தம்)

———————————————————————

நூற்று முப்பத்து இரண்டாம் வார்த்தை

எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த அம்பங்கி அம்மாளுக்கு
உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –

பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன –
இத்தனை தூரம் பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு
த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -109-124–அரும் பத விவரணத்துடன்–

December 14, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நூற்று ஒன்பதாம் வார்த்தை –

உபாயத்தை நிலை இட்டவர்கள் –
பிராட்டியும்
த்ரௌபதியும்
திருக் கண்ண மங்கை ஆண்டானும் –

உபேயத்தை நிலை இட்டவர்கள்
இளைய பெருமாளும் –
பெரிய உடையாரும்
சிந்தயந்தியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்

சீதோ பவ என்னும் சக்தியோடே தன்னுடைய தனி இருப்பை மாற்ற வல்லவள் –
பெருமாளுடைய ஸ்வரூபத்துக்கு கொற்றையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும் –

லஜ்ஜை இல்லாத கோஷ்டியில் லஜ்ஜை வுடையவள்
அவன் கையிலே தன்  லஜ்ஜையை பொகட்டு இருந்த படியாலும்-

திருக் கண்ண மங்கை ஆண்டான் ஸூவ வியாபாரத்தை விட்டார்-தம் பர பரப்பை மாற்றி வகுத்தவன் வாசலிலே ஒதுங்கின படியாலும் –
உபாயத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –

நில் என்ன -குருஷ்வமாம் அநு சரம் –என்கிறபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற படியாலும் –
க்ரி யதா மிதி மாம் -வத என்கிற படியாலும் –
லஷ்மணேந கதாம் கதிம் (பெருமாளும் இளைய பெருமாள் பரமபதம் போக தானம் போவதாக அருளிச் செய்து –)-என்னும் படியான பிராப்தியாலும் –
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம் கைப்பட்டது அவர்க்கே யாகையாலும் –

பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் -வகுத்த விஷயத்தை பிரிந்து தம் தாமுடைய உடம்பைப் பேணாமையாலும் –

சிந்தயந்தி வகுத்த விஷயத்தை கண்ட மாத்ரத்திலே விரோதியான உடம்பை விட்டு நிற்கையாலும்-உபேய அனுபவத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –

ஸ்ரீவசன பூஷணம் சூரணை -80 முதல் 84 இவை உண்டே –

——————————————————-

நூற்று பத்தாம் வார்த்தை

வங்கி புரத்து ஆச்சி (மணக்கால் நம்பி சிஷ்யன் வங்கிபுரத்து நம்பியின் திருத்தகப்பனார்)-கிடாம்பி ஆச்சானுக்கு –
பகவத் சேஷமாய் –
அநாதி காலம் எம்பெருமானோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்ட ஜந்துவுக்கு –
எம்பெருமான் திருவடிகளில் -பிணைத்துப் பிழைப்பிக்க பிராட்டி உளள் என்று இரும் –
என்று அருளிச் செய்தார் –

———————————————————–

நூற்று பதினோராம் வார்த்தை

விட்டுப் பற்றித் தேறி இருக்கை -அதிகாரி க்ருத்யம்
விடுவித்து பற்றுவித்து விலக்கி அடி யறுக்கை- உபாய க்ருத்யம்
என்று வடக்குத் திரு வீதி பிள்ளை

————————————————————

நூற்று பன்னிரண்டாம் வார்த்தை

உபாயத்தில் அத்யவசாயம் ஆவது –
சங்கா த்ரய நிவ்ருத்தி பூர்வகமாக அத்யவசிக்கை –

சங்க த்ரயம் ஆவது –
ஸ்வ க்ருத தோஷ தர்சனம் –
உத்தேச்ய துர்லபத்வம் –
உபாய பல்குத்வம் –

இம் மூன்று சங்கையும் –
1-சர்வஞ்ஞத்வம் –
2-சர்வ சக்தித்வம் –
3-பரம காருணி கத்வம் –
4-பரம ஔ தார்யத்வம் –
5-ஆஸ்ரித வத்சலத்வம் –
6-அசரண்ய சரணத்வம் –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் –
8-நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் –
9-ஸ்ரீயபதித்வம் –
10-நாராயணத்வம் –
இப் பத்து குணங்களையும் அனுசந்திக்க நிவ்ருத்தமாகும் –
எங்கனே என்னில் –

1-ஆஸ்ரித வாத்சல்யத்தை அனுசந்திக்க –
ஸ்வ க்ருத தோஷம் தர்சனத்தாலே வருகிற சங்கை கழியும் –

2-சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -பரம காருணிகத்வ -பரம ஔ தார்யத்வ -ஆகிற நாலு குணங்களையும் -அனுசந்திக்க –
உத்தேச்ய துர்லபத்தாலே வருகிற சங்கை கழியும் –

3-அசரண்ய சரண்யத்வம் -அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் -ஆகிய இவை இரண்டையும் அனுசந்திக்க
உபாய பல்குவத்தால் வருகிற சங்கை கழியும் –

மேல் மூன்று குணங்களும் மூன்றுக்கும் பொது –
எங்கனே என்னில் –
ஸ்ரீ ய பதித்வம் அனுசந்திக்க -தோஷம் கண்டு அஞ்ச வேண்டா –

நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் அனுசந்திக்க -உத்தேச்ய துர்லபம் கண்டு அஞ்ச வேண்டா –

நாரயணத்வத்தை அனுசந்திக்க உபாய பல்குத்வம் கண்டு அஞ்ச வேண்டா –

இக்குணங்கள் மாம் -என்கிற பதத்தால் அனுசந்தேயங்கள் –
எங்கனே என்னில் –
1-உன்னில் காட்டில் உன் கார்யம் அறிவேனுமாய் –
2-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு ஷமனுமாய் –
3-உன்னிலும் உன் கார்யத்துக்கு நேர்ந்து இருப்பேனுமாய் –
4-உன் கார்யம் செய்யும் இடத்தில் என்றும் செய்வேனுமாய் –
5-உன் குற்றம் காணாது இருப்பேனுமாய் –
6-உன் குற்றம் போக்யமாய் இருப்பேனுமாய் –
7-உனக்கு பற்று இல்லாத அன்று பற்றாய் இருப்பேனுமாய் –
8-உன் தரம் பாராது இருப்பேனுமாய் –
9-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு பிராப்தனுமாய் –
10-உனக்கும் எனக்கும் தாரகையான சர்வேஸ்வரிக்காகவே  உன் கார்யம் செய்வேனுமாய் –
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே -இவள் குற்றம் காட்டிலும் விட ஒண்ணாத குடல் துடக்கையும் உடையேனுமாய் இருக்கிற என்னை என்றபடி –

————————————————————–

நூற்று பதிமூன்றாம் வார்த்தை

த்யாக விசிஷ்டம் ஸ்வீகாரம்
ஸ்வீகார விசிஷ்டம் அதிகாரம்
குண விசிஷ்டம் உபாயம்
லஷ்மீ விசிஷ்டம் உபேயம்

(ஸர்வ தர்மான் பரிதிசயம் செய்து ஸித்த உபாயமான அவனை ஸ்வீ காரம் -அனுபவம் கைங்கர்யம் செய்ய பிரபன்ன அதிகாரிக்கு ருசி வந்து ஸ்வீ காரம் பண்ண வேண்டும்
விடுவித்து பற்றுவிக்கைக்கு கல்யாண குண விசிஷ்டன் -ஆஸ்ரய சவுகர்ய குணங்களும் ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டிய குணங்களுடன் கூடிய அவனே உபாயம்
கைங்கர்யம் மிதுனத்தில் தானே ஆகவே ஸ்ரீ யபதி வேண்டும் என்றவாறு -)

——————————————————–

நூற்று பதினான்காம் வார்த்தை –

நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசர் –
அர்ஜுனன் பிரஸ்னம் பண்ண –
சர்வஞ்ஞனுமாய் – சர்வ சக்தியுமாய் இருக்கிறவன்
பண்டு போல் சொல்ல மாட்டேன் -என்றது என் -என்று
கூரத் ஆழ்வானைக் கேட்க –

திரௌபதி குழல் முடித்த பின்பு பண்டு போலே அவன் வாய் புறப்படுமோ -என்று
திரு உள்ளக் கருத்து -என்று அருளிச் செய்தார் –

(அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —சூரணை -22)

——————————————————

நூற்று பதினைந்தாம் வார்த்தை

பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் –
நம் பக்கல் தம் பேற்றுக்கு -நம -என்னாதவர்களை
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -திருவாய் மொழி 3-9-9- என்னும்படியாய்
இருப்பதொரு ஔதார்ய விசேஷம் –

நார வஸ்துவுக்கு நைரந்தர்ய வேஷம் —
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
பேற்றுக்கு நிர் பரனாய் போருகையும் –
தத் பிரதிபந்தகமான பாபத்தில் ஆர்த்தனாய்ப் போருகையும் –

(மதுராபிந்து மிஸ்ரமான இத்யாதி —ஸ்வா தந்தர்யம் முழுவதும் கழியாமல் -உபாசகர்களுக்கும் –நாராயணனே என்றும் இல்லாதவர்களுக்கும் -பேற்றை அருளும் இயல்வினன்-நமக்கு பொறுப்பு துரப்பு -நிர்பரோ – நிர்பயா-பேறு தப்பாது என்று-இருந்தாலும்-பேற்றுக்குத் த்வரிக்கவும் வேண்டுமே -)

————————————————————–

நூற்று பதினாறாம் வார்த்தை

எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை
ஸ்வ ஸ்வரூப வைசத்ய தசையாவது –
பர ஸ்வரூப விஷயத்தில் -ஸ்வீகார -த்யாக பிரகார –
பிரதிபத்தி நிவ்ருத்தியில் வ்யவஸ்தனாய்ப் போருகை –

விட்டுப் பற்ற என்று அருளிச் செய்வர் ஆழ்வான் –

பற்றி விட -என்று அருளிச் செய்வர் முதலி யாண்டான் –

பிச்சுத் தெளிந்து கண் விழிக்கை என்று ஆண்டான் –

(முந்துற யுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடு — மாலிருங்கோலை வணங்குதும் வா மட நெஞ்சே -பெரிய திருமொழி -9-8-1-என்றபடி விஷயாந்தரங்களை விட்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் -கூரத்தாழ்வான் -இந்த நிஷ்டை ஆழ்வான் போன்ற வைராக்ய சீலருக்கே கூடுமோ ஒழிய ஸம்ஸாரிகளுக்குக் கூடாது -என்ற திரு உள்ளம் பற்றிய முதலியாண்டான் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – என்றபடி அவன் இனிமையே இவற்றைப் போக்க உபாயமாகும் என்பர் -பால் குடித்து பித்தத்தைத் தீர்த்துக் கொள்ளுவது போல் இது -)

(ஸ்வீ கார பிரகாரம் -பற்றுதல் -த்யாஜ்ய பிரகாரம் -விடுவது -பிரதிபத்தி பிரகாரம் -பற்றிய பற்றும் உபாயம் இல்லை -இசைவித்து தனது தாளிணைக்கீழ் இருத்தும் அம்மான்
பரிதிஜ்ய -விட்டே பற்ற வேண்டும் -பண்ணி இருந்தால் அல்லவே -விடுகையை முன்னிட்டு பற்ற வேண்டும் தியாக விஸிஷ்ட ஸ்வீ கார்யம் கீழே பார்த்தோம்
வீடு மின் முற்றவும் –உம்முயிர் வீடு செய்மினே -நடுவில் வீடு செய்து -விட்ட பின்பு பற்ற வேண்டும் -முக்யத்வம் காட்டவே ஆழ்வார் அருளிச் செயல்
கூரத்தாழ்வான் இவை பற்றிய நிர்வாஹம்
முதலியாண்டான் -அவனைப்பற்றவே மற்றவர் விட்டுப்போம் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – -இத்யாதி -உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விலகும் அன்றோ – -லௌகிக த்ருஷ்டாந்தம் -இதுக்கு பால் குடித்து பித்தத்தைத் தீர்த்துக் கொள்ளுவது போல் இது-)

—————————————————————

நூற்று பதினேழாம் வார்த்தை

எம்பார் வார்த்தை –
ஸ்வீக்ருத உபாய பூதனாகை யாவது -ஸ்வீக்ருத பூதனாகை –
அதாவது –
ஸ்வ கத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து -பரகத ஸ்வீகாரத்துக்கு விஷயமாய் விடுகை –
அதாவது
ஸ்வார்த்த பிரவ்ருத்தியும் -ஸ்வ பிரவ்ருத்தியும் விட்டு –
பரார்த்த பிரவ்ருத்தியிலும் – பர பிரவ்ருத்தியிலும் அந்வயிக்கை –

உனக்கு என்று நிவ்ருதிக்கையை விட்டு –
எனக்கு  என்ன நான் பிரவ்ருதிக்க என்று உள்ளே புகுரு -என்று
ஈஸ்வரன் வாக்கியம் -சரம ஸ்லோகம் அருளியது –

(அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து-இறைவர், யாருக்காக அருள விரும்புகிறார் என்பதை அறியாமல், தான் விரும்பியவர்களிடம் தன்னிச்சையாக அருளைச் செய்வார்.)

(நான் எனக்கு நீர் நுமது விட்டு –அவன் ஆனந்தத்துக்காக அவனுக்கும் அவன் அடியாருக்குமாக இருக்க வேண்டும் -உபாய சிந்தனை விட்டு உபேய அனுபவத்தில் இழிந்து கைங்கர்யங்களில் இழிய வேண்டும் -அவன் தானே அருள வர-ஸ்வாமி சொத்தை அனுபவிக்க இழிய விலக்காமையே வேண்டுவது)

(அடங்கெழில் சம்பத்து, அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதுஎன்று, அடங்குக உள்ளே)

———————————————————————————–

நூற்று பதினெட்டாம் வார்த்தை –

நடதூர் அம்மாள் – திரு வெள்ளறை -பிள்ளை (எங்கள் ஆழ்வார் -விஷ்ணு சித்தர்-அம்மாள் ஆச்சார்யர் எனப்படுவர்)-ஸ்ரீ பாதத்திலே சரம ஸ்லோகார்த்தம் கேளா நிற்கச் செய்தே –
பிள்ளை -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று அருளிச் செய்ய

அம்மாள் -இது ஒரு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் இருந்த படி என் -என்ன –

பிள்ளையும் –
நீர் இப்படி சொல்லுவான் என் –
அதிகாரிக்கு சேர்ந்தத்தை விடச் சொல்லில் அன்றோ நீர் இப்படி சொல்ல வேண்டுவது –
அதிகாரிக்கு சேராததை யன்றோ விடச் சொல்லிற்று –
ஆகையால் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் அன்று காணும் இது –
அதிகாரிக்கு ஸ்வரூப ஹானி யாகையாலே காண் இத்தை விடச் சொல்லிற்று –
என்று அருளிச் செய்தார் –

(அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு பொருந்தாத ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான இவ் வுபாயங்களை யன்றோ விடச் சொல்கிறான் -ஆகவே ஸ்வா தந்தர்யம் மேலீட்டால் விடச்சொல்கிறான் அல்லன் -ஸ்வரூபத்துக்கு தக்கது என்பதாலேயே பரித்யஜிக்கச் சொல்கிறான்)

———————————————————–

நூற்று பத்தொன்பதாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை வார்த்தை
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -விடுகை உபாயமோ பற்றுகை உபாயமோ -என்று கேட்க
விடுகையும் உபாயம் அன்று –
பற்றுகையும் உபாயம் அன்று –
விடுவித்து பற்றுவிக்கிறவனே உபாயம் -என்று அருளிச் செய்தார் –

(மாம் ஏகம் -நடுவில் அருளிச் செய்தது இந்த அர்த்தம் -ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளால் செய்த கிருஷி பலன் அனைத்துமே)

————————————————————–

நூற்று இருபதாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யமோ
பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபமோ -என்று கேட்க

முமுஷு தசையில் -ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யம் –
முக்த தசையில் -பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபம் என்று
திருநகரிப் பிள்ளை அருளிச் செய்தார் –

(முமுஷு தசையில் அவரவர் நினைவாகிற ஸ்வரூபத்துக்குத் தக்கபடி ஆத்மானுபவம் ஸ்வார்த்த கைங்கர்யம் பரார்த்த கைங்கர்யம் கிடைக்கும் -முக்தி தசையிலும் அவ்வாறே)

(தேகமே ஆத்மா கீழ் நிலை -ஞான ஆனந்த -ஸ்வதந்த்ர -பரதந்த்ரன்-பரகத -மேல் மேல் ஸ்வரூப நிஷ்டை -புருஷார்த்தம் -விரும்புகை பிரார்த்திக்கை -ஸ்வரூபத்துக்குத் தக்க ப்ராப்யம் – ஐஸ்வர்யம் -கைவல்யம் -சேஷத்வம் அறிந்து உபாஸகனாகி ஸ்வார்த்த அனுபவம் -ஆச்சார்ய அபிமானம் ஒன்றே உத்தாரகம் -அங்கு சென்ற பின்பு மேல் மேல் உணர வாய்ப்பில்லையே -அனுபவம் மாத்திரமே -ஆகவே கிடைத்த பேற்றைக் கொண்டு ஸ்வரூபத்தை முக்தன் அறிகிறான்)

——————————————————–

நூற்று இருபத்தோராம் வார்த்தை

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
சம்சாரத்தினுடைய பொல்லாங்கையும் –
மந்த்ரங்களினுடைய பன்மையும் கண்டு
நம் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –

ஆகையால் அன்றோ தானே உபாயமாக வேண்டுவது என்று அருளிச் செய்தார் –

(மந்த்ரங்கள் உபாயம் அல்லவே -மந்த்ரம் ப்ரதிபாத்யனான தானே உபாயம் -மந்த்ராணாம் பரமோ மந்த்ரம் -குஹ்யானாம் பரமோ குஹ்யம் -மந்திரத்தால் மந்த்ரத்தை மறவாது வாழலாம் மடநெஞ்சமே)

————————————————————–

நூற்று இருபத்திரண்டாம் வார்த்தை

அப்பிள்ளைப் பிள்ளைக்கு பட்டர் –
பெரிய பெருமாள் கண் வளருகிறபடி புத்தி பண்ணினீரே –
என்று அருளிச் செய்த வார்த்தை –

வைஷ்ணவன் கர்மங்களினுடைய கனத்தைப் பார்த்து பயப்பட –
மடித்த திருக்கையில் திரு விரல்கள் –
உன்னை ரஷிக்கைக்கு கவித்த முடி அன்றோ -என்று தொட்டுக் காட்டுகின்றன –

திருவடிகளிலே நேரே பொகட்ட திருக்கை –
பிரஜையினுடைய நாவிலே முலைக் கண்களை நெருடிக் கொடுக்கும் மாதாவைப் போலே
திரு வடிகள் புகலிடம் என்று காட்டுகிறது -என்று அருளிச் செய்தார் –

(கிரீடம் ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருத புஜ விதி ஈச அதீசத்வாத் கடதே இதி ஸம்ஸ்ருஸ்ய வததி-நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி பாஹு ததிதர ஸ்ப்புடம் ப்ருதே பாத அம்புஜ யுகளம் ஆஜானு நிஹித–1-110-)

(ஸ்ரீ பெரிய பெருமாளுடைய தலையணையாக செய்து கொள்ளப்பட்ட திருக் கையானது திரு அபிஷேகத்தை தொட்டு ப்ரம்ம ருத்ராதிகளுக்கும் தலைவர் ஆகையால் இந்த திரு அபிஷேகம்-இவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது என்று சொல்லா நின்றது -வலது திருக்கை பரத்வத்தை ஸ்புடமாக்கும்-முழந்தாள் வரையில் நீட்டி வைக்கப்பட்டுள்ள -மற்ற ஒரு திருக்கையானது திருவடியைத் தொட்டுக் காட்டி தாழ்ந்தவர்களுக்கு இத் திருவடிகளே முக்கியமான புகல் என்றும் சொல்லா நின்றது போலும் -இடது திருக் கை ஸுவ்லப்யம் பறை சாற்றும்)

———————————————————-

நூற்று இருபத்து மூன்றாம் வார்த்தை –

எம்பெருமான் உபாயமாம் இடத்தில் –
விஷய சாபேஷனுமாய்
வ்யாபார நிரபேஷனுமாய்
இருக்கும் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –

(சரணம் அடையும் பொழுது புருஷனை எதிர் பார்ப்பன் -ஆனால் அவன் முயற்சியை எதிர்பாராதவன் -)

(உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -268-)

(சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் –ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் –புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை –கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து)

————————————————————

நூற்று இருபத்து நாலாம் வார்த்தை

விக்கிரமச் சோழன் திரு வீதியிலே திருவரங்க செல்வர் எழுந்து அருளா நின்றால் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் நாள் தோறும் ஆயுதம் எடாமல் சேவிப்பர் -(ஆயுதம் பிடித்த கையுடன் சேவிப்பார் என்றபடி)

அருளாள பெருமாள் எம்பெருமானார் –
பிள்ளாய் -உம்முடைய ஆயுதம் என்று விநியோகப் படுவது -என்று கேட்க –

உம்முடைய அஞ்சலி பவித்ரம் விநியோகப் படும் அன்று –
அடியேனுடைய ஆயுதம் விநியோகப்படும் -என்றார் –

(நற்செல்வன் தங்காய் -லஷ்மணன் ஊர்மிளையுடன் சேர்ந்து க்ருஹஸ்த தர்மம் அனுஷ்ட்டிக்கும் பொழுது இவனும் பால் கறப்பான்-ஈஸ்வர திரு முகம் உல்லாஸமாக கைங்கர்யத்துக்காகவே இரண்டுமே என்றவாறு)

————————————————————————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -97-108–அரும் பத விவரணத்துடன்–

December 14, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

தொண்ணூற்று ஏழாம் வார்த்தை

ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -(வருந்தி சண்டை இடும்) –சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் பாரதந்த்ர்யம் சிலுகிடும் –சித்தோ உபாய ஸ்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –

(பாரர்த்த அனுபவ கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -ஸ்ருதி சிரஸ் -இவற்றையே சொல்லும் -ஐஸ்வர்யம் கைவல்ய ஸ்வார்த்த கைங்கர்யங்கள் கூடாதே -நம் ப்ரவர்த்தி நிவ்ருத்தி அவன் ஆதீனம் என்பதே பாரதந்தர்யம் -நம் பற்றும் பற்றும் கார்யகரம் அல்லவே -இசைவித்து தன் தாளிணைக்கீழ் வைத்தான் என்பதை உணர வேண்டுமே)

———————————————————-

தொண்ணூற்று எட்டாம் வார்த்தை

பிள்ளை திரு நறையூர் அரையரும் நம்பி திரு வழுதி வளநாடு தாசரும் –
வேம்பு முற்ற முற்ற கைக்குமா போலே
இவ் வாத்மாவும் ஒரு நாளைக்கு ஒரு நாள் விஷயாந்தரங்களிலே மண்டா நின்றது –
இதுக்கு பகவத் பிராப்தி கூடுமோ -என்று -பட்டரைக் கேட்க –

சரீர வியோக சமயத்திலே யாகிலும் இஸ் சரீரத்தில் உபேக்ஷையை பிறப்பிக்கையாலும் –
ஸ்ரீ மாலாகாரருக்கு தன் வடிவு அழகைக் காட்டினால் போலே –
இவனுக்கும் வடிவு அழகை காட்டுகையாலும் -அது கூடும் -என்று அருளிச் செய்தார் –

இதுக்கு பிரமாணம் –
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி – (பகவத் பக்தர்கள் யமனுடைய நாட்டுக்குச் செல்ல மாட்டார்கள் அன்றோ)

(ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி -என்று சாஸ்திரம் சொல்லுகையாலும்-வேண்டாமை நமன் தமர் என்றமரை வினவப் பெறுவார் அலர்-(பெரிய திருமொழி 10-6-5 )என்கிற பகவத் யுக்தியாலும்-உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -(பெரிய திருமொழி -8-10-7)என்று அபியுக்தர் சொல்லுகையாலும் பரிஹர மதுசூதன ப்ரபன்னான்-என்று எமன் தானே சொல்லுகையாலும் – பாகவதர் ஆனவர்களுக்கு யமவச்யத்தை வரக் கூடாது என்னும் இடம் பிரசித்தம்)

(அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —55)

——————————————————

தொண்ணூற்று ஒன்பதாம் வார்த்தை –

சம்சார பீதியும் –
ப்ராப்ய ருசியும் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
ஸ்வ தோஷ ஞாபனமும் – –
ஸ்வரூப பிரகாசமும் –
ஸ்வரூப ஞானமும் –
இவை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம் –

ஸ்வரூபஞ்ஞன் ஸ்வரூப நிரூபணம் பண்ணுகையாவது –
ஸ்வதஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான நித்ய கைங்கர்ய அந்விச்சா விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி –

(ஞாத்ருத்வம் என்றாலே போக்த்ருத்வம் தானே வருமே -அது நீங்க வேண்டுமே-தன்னுடைய அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்தையும் -ப்ராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கிற எம்பெருமான் ஸ்வரூபத்தையும் அறிந்தவன் தனது ஸ்வரூபத்தை நன்கு ஆராய்ந்தால் ஸர்வஞ்ஞனான எம்பெருமான் விஷயத்தில் ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்யும் போது அந்த அடிமை தனது ஆனந்தத்துக்கு உறுப்பாகும் என்னும் எண்ணம் நீங்கப்பெறுவான் – இந்த எண்ணம் நீங்கப்பெறாதவனாகில் இவன் ஸ்வரூபஞ்ஞனாக முடியாது -ஸர்வஞ்ஞனான சர்வேஸ்வரன் இவனது உள் மனதை அறிந்து மோக்ஷ நிலையிலும் ஸ்வார்த்த கைங்கர்யத்தை அருளி விடுவான் -)

————————————————————

நூறாம் வார்த்தை

உபாசகனை ஈஸ்வரன் புஜிப்பிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –
பிரபன்னரை ஈஸ்வரன் புஜிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –

(ஸ மஹாத்மா ஸூ துர்லப-பெறற்கரிய அவனைப்பெற்று தான் அனுபவிப்பதில் ஊற்றமுடையவனாய் இருப்பான் அன்றோ-என்னையும் முற்றப்பருகினான் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -)

—————————————————–

நூற்றோராம் வார்த்தை –

அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் (சப்தாதி போகங்கள் -விஷயாந்தரங்கள்)-அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் (பொருத்தமில்லாதது)-

அநுபாதேய போக ஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் –
ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் –

அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட-அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்

அல்லாதவை –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் —
அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்

(ஸ்வா தந்தர்யத்தில் ஒரு சிறிய ஸூஷ்ம அம்சம் -தன்னை ரஷித்துக் கொள்ள தானே முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பக்தி யோகம் போன்ற உபாயாந்தரங்களிலே மூட்டி பிராரப்த கர்மம் முடியும் வரையில் எண்ணிறந்த ஜென்மங்கள் எடுத்து முயற்சி செய்யும்படி பண்ணி அஞ்ஞானத்தைப் போக்கி இவன் விரும்பிய ஸ்வார்த்த மோக்ஷத்தைச் சாதித்துத் தரும் -என்றவாறு)

————————————————————–

நூற்று இரண்டாம் வார்த்தை

எம்பார் வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதிலும்
ஸ்வயம் ஸ்வ தோஷ தர்சனம் பண்ணுகை ஸ்வ சாமர்த்யம் –

ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனுக்கு கூட கூடாத படியான ஸ்வபாவம் உண்டாய் இருக்கும் –

(சேஷத்வ பாரதந்தர்ய பெருமை அவனாலும் முழுவதாக உணர முடியாதவையாய் இருக்கும் -ஆகவே நம் தோஷங்கள் -மலைபோல் இருக்கவே -இவற்றை ஆராய்ந்து விண்ணப்பம் செய்யவே பேற்றை அடையலாம்)

புருஷனுக்கு பும்ஸ்த்வ நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த நிரூபணம் பண்ணுமதிலும்
புருஷ தேக நிரூபணம் பண்ணுகையே புருஷார்த்தம் –

(புருஷோத்தமன் தேஹமான பாகவதர்கள் உலாவும் பெருமாள் -சங்கம பரதேவதை அறிவது எளிது அன்றோ)

ஸ்வரூபஞ்ஞனுக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச விசேஷத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

(அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஆர்த்தி ஹரத்வம் முக்கியம்)

ஸ்வரூப வைசைத்ய தசையாவது –
பர ஸ்வரூப விசேஷத்தில் ஸ்வீகார  பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தியில் அவ்யவசிதனாய் போருகை –

ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்தூல தேகாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக(அப்ராக்ருத -அங்கு சென்று பெறப்போகும்)ஸ்வ தேக பரிக்ரஹ இச்சாதிசயமும் தேக போக்யதையும் சத்ருசம் –

ஸ்வ ஸ்வரூப விஷய ஞான பூர்த்தி நிஷ்டையாவது —
பர ஸ்வரூப விஷய தர்சநாதி பிரகார பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
பர ஸ்வரூபத்தில் ஆர்த்தி விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி விசேஷ நிஷ்டை –

ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமாவது
பர ஸ்வரூப வைசைத்ய ஸ்மரண பூர்வகமாக-
பர ஸ்வரூப விஷய வ்யதிரிக்த விஷய கைங்கர்ய ருசி நிவ்ருத்தி பிறக்கை(உண்டியே உடையே என்று உகந்தோடும் –இம்மண்டலுடன் கூடாமல்) ஸ்வகத ஞானம் 

ஸ்வரூபம் -பர கத ஞானம் -உபாயம் –

இதர பல போக்த்ருத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பூர்வகமான சம்யக் பல போக்த்ருத்வ பிரதிபத்தி விசேஷ நிஷ்டனானவன் –
சர்வோத்க்ருஷ்ட ஜாதனுமாய் (விண்ணுளாரிலும் சீரியர்)-சர்வ விஸஜாதீயனுமாய் –
சர்வ உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாயாந்தர்க்க தனானவன் –
சஜாதீத்வ பிரதிபத்தியும் -சஜாதீத்யத்வ வ்யாவ்ருத்தி விசேஷ நிஷ்டையும் உண்டு என்று –
புத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இவ்வார்த்தையால் அஞ்சர்த்தம் பிரதிபாதிகப் படுகிறது —
1-இதர விஷய ராக நிவ்ருத்தியும் –
2-விகித விஷய ராக பிரவ்ருத்தியும் –
3-இதர உபாய த்யாகமும் –
4-சித்தோ உபாய ஸ்வீகாரமும் —
5-ஹித பரன் பக்கல் யதா பிரதிபத்தியும் –

(சேஷத்வ பாரதந்தர்யமாகிற ஸ்வரூபம் ஆராய்ந்து நிரூபணம் பண்ணுவதே சால அரிதாகும் -ஸ்வ தோஷம் நிரூபணம் அறிந்து எம்பெருமான் திரு முன்பே விண்ணப்பம் செய்வது எளிது -அதுவே அவன் இரக்கத்துக்கு ஹேதுவாகும் –
எம்பெருமான் உகந்த வாழும் தேஹங்களான பாகவதர்கள் பெருமைகளை ஆராய்வது மிகவும் எளிதாகும் -மோக்ஷ ப்ராப்தியில் ஆசையைவிட அஞ்ஞானம் ப்ராக்ருத தேகம் நீங்க த்வரையே பிரதானம் -பரார்த்த அனுபவ கைங்கர்யங்களே பரம புருஷார்த்தம் என்றும் இருக்கும் – ஞானீ த்வாத்மைவ மே மதம்
வானவர்க்காவர் நற் கோவையே –
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –
சீதனையே தொழுவார் விண்ணுள்ளாரிலும் சீரியரே -பிரமாணங்கள் அனுசந்தேயம்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும் -)

————————————————————————

நூற்று மூன்றாம் வார்த்தை

நஞ்சீயர்  சரம தசையில் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வ விஷயமான வியாதி சாந்த்யர்த்தமான பிரபதநமும் ஸ்வரூப ஹானி —
இது தான் பாரதந்த்ர்யத்துக்கு தூஷணம்

பர விஷய வியாதி சாந்த்யர்த்தமான சாங்க பிரபதநமும் ஸ்வரூப ஹானி –
இது ஈஸ்வரனுடைய பர ரஷண விஷயமான சர்வஞ்ஞத்வாதிகளுக்கு தூஷணம்

(ஹித பரனான எம்பெருமான் நம்முடைய கர்மம் கழிவதற்கும் ஆத்மாவின் நன்மையின் பொருட்டும் இந்த நோயை அளித்திருக்கிறான் -இதை நீக்குவதும் அவன் பொருப்பே என்றும் இருக்காமல் கால்கட்டி அவனை நிர்பந்திப்பது பாரதந்தர்யத்துக்கு முரணாகுமே -பிறர் நோயைப் பரிஹரிக்கவும் அவனை வேண்டுவது அவன் ஸ்வரூபத்தை அழிப்பதாகும்)

—————————————————

நூற்று நாலாம் வார்த்தை –

அனந்தாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
இது என் ஜீயா -ஸூகுமாரராய் இருக்கிற நீர் –
வேர்த்த போது நீராடி -பசித்த போது அமுது செய்து -பட்டரை சேவித்து இருந்தால் –
சந்யசித்து வந்திலீர் என்று உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளுவார் உண்டோ –
இனி என் என்று பார்த்து மந்த்ராந்தரங்களை அடைய விட்டு –
திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து  -த்வயைக நிஷ்டர் ஆவீர் -என்று வாழ்த்தி –பின்னை அருளிச் செய்த வார்த்தை

த்ருஷ்டத்தில் உள்ளது எல்லாம் பட்டருக்கு ஆக்கினோம் –
த்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் என்று இருப்பதோர் இருப்பு உண்டு
அது பூர்வ தசையிலும் அநர்த்தாயவாம் (கீழ் நின்ற வேதாந்தி தசையை விட அநர்த்தமாகும்)-என்று பார்த்து –த்ருஷ்டதுக்கு கடவார் பெருமாள் – அத்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் -என்று இரும்

த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்
த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில்
ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது –
பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –

(தேஹ யாத்ரையாய் பெரிய பெருமாள் பொறுப்பு -ஆத்மயாத்ரை ஆச்சார்யர் பொறுப்பு என்றும் இருக்க வேண்டும் -தேஹ யாத்திரையில் கர்மம் அனுகுணமாக குறைகள் ஏற்படுவதற்கு ஆச்சார்யர் ஹேதுவாக மாட்டாரே -தேஹ யாத்திரையும் ஆச்சார்யர் என்றும் நினைப்பவனுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படலாம் -ஆச்சார்யராக வெறுத்தவனுக்கு பெருமாள் கை கொடுக்க மாட்டார்-பெருமாளை வெறுத்தால் ஆச்சார்யர் புருஷகாரம் செய்து கோபத்தை தணித்து கதி அருளப் பண்ணுவார் என்பதே இவ் வார்த்தையின் கருத்து -)

—————————————————

நூற்றஞ்சாம் வார்த்தை

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை (த்வைதி -சேஷி மிதுனம் இல்லை -சரீராத்ம பாவமும் இவர்களுக்கு இல்லை)சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று –
பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அவனும் அங்கே சந்நிஹிதனாக –
வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் –
இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து (நின் ஆணை திருவாணை அருளிச் செய்து)அருளினார் –அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

——————————————————————

நூற்று ஆறாம் வார்த்தை

பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி
சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ –
என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –

அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம்
வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –

(ஷட் பதம் சேர்த்துப் பார்த்தால் -பிரித்து பார்த்தால் அஷ்ட பதம் -25 அக்ஷரங்கள் -மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய பரிஹீருதம்)

——————————————————————-

நூற்று ஏழாம் வார்த்தை

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –

திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் –
த்வயம் சிஷ்ய வாக்கியம் –

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால்
ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –

உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை
மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது-ஸூவ ரக்ஷண நிவ்ருத்தியும் வேண்டும் -கைங்கர்ய த்வரையும் வேண்டுமே -)

————————————————————–

நூற்று எட்டாம் வார்த்தை –

பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –

உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி –
உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –

(ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -இரண்டும் கொத்தை -யாவையும் யாவரும் தானாய் -உபாயமாக தேவதாந்த்ர சம்சர்க்கம் ஹானி தானே-உபாயத்துக்கு இரண்டுக்கும் பிராட்டி த்ருஷ்டாந்தம் -உபேயத்துக்கு இரண்டுக்கேமே இளையபெருமாள் திருஷ்டாந்தம் -நில் என்றாலும் வந்ததார்- வந்து பெருமாள் உகப்பாகாக கைங்கர்யம் செய்தார் அன்றோ)

இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் –
ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து –
அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –

பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி –
அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –

சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு -பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி –
(த்வய பதார்த்தங்கள் அழகாக அருளிச் செய்கிறார் மேல்)பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே
இவள் புருஷகாரமாக கொண்டு ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் –
ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும் –
எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி
எனக்கு இஷ்ட தமமாய் -நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவ்ருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –(இதுவரை பூர்வார்த்தம் -மேல் உத்தரார்த்தம்)

பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த  உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –

அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் –
இதனுடைய அநுக்ரமணம் -இருக்கும்படி(கீழ் சொன்னதை விளக்கிச் சொல்வது)
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் –இவனுடைய அபராதம் அவன் திரு உள்ளத்தில் படாதபடி –
அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி –

மதுப்பாலே –
இவளுக்கு அவனைப் பிரிய சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி –

நாராயண பதத்தாலே –
இவள் புருஷகாரமும் மிகை யாம் படியாக –
அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –

சரணவ் -என்கிற பதத்தாலே –
இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
ஸ்வீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி –

சரணம் -என்கிற பதத்தாலே –
அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றைச் சொல்லி –

உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே –
உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் (இங்கும் ஒன்றைப் பத்தாக்க புருஷகாரம் வேண்டுமே)ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்ய வாசம் பண்ணுகிற படியை சொல்லி –

நாராயண பதத்தாலே
அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –

ஆய -என்கிற சதுர்த்தியாலே –
இவ்விருவருமான சேர்த்தியிலே இப் ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து –

அத்யாஹார்யமான ஸ்வ சப்தத்தாலே
பெற்றபடி சொல்லி –

நமஸ் ஸாலே
அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு
உகக்கும் அது ஒழிய தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக் கட்டுகிறது

(பாரதந்தர்ய அனுரூபமான ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கீழ் -இங்கு சேஷத்வ அனுரூபமான ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ வித கைங்கர்யங்களைப்பண்ண வேண்டுமே
புகளின்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் -பூர்வ வித அத்யாஹாரம்
அடிமை செய்ய வேண்டும் நாம் உத்தர வாக்கியத்தில் அத்யாஹாரம் -கைங்கர்யம் பெற நம்மையும் சேர்த்துக்கொள்ளுவார்)

(பற்றும் பற்றில் உபாயத்வ புத்தி வைப்பது அநந்ய சரணத்வமாகிய சேதன ஸ்வரூபத்துக்கு முரண்பட்டதாகும் -கைங்கர்ய அனுபவ போக்யதையை அறிந்து வைத்தும் அதில் நின்றும் மீள்வது ப்ராப்ய ருசியோடு முரண்படும் -பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகளே விடாது திண் கழலாய் இருக்கும் -முமுஷுப்படி -146-)

———————————————–——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -85-96 –அரும் பத விவரணத்துடன்–

December 12, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

எண்பத்து ஐஞ்சாம் வார்த்தை

தேவகி பிராட்டியார் -(திருக் கோட்டியூர் நம்பியின் குமாரத்தி) -அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால் –
தத் அநு ரூபமான பிரதான அநுபவ விசேஷத்தை அநுபவாந்தரத்துக்கு  உறுப்பாக்குகையும் அநு பயுக்தம் —

உக்தார்த்த ஸ்ரவணம் பண்ணினவனுக்கு உபாயாந்தர த்யாகம் உடம்போடே கூடாது –

ஆச்சார்ய -முக்ய -அனுபவம் கொண்டு பகவத்-அமுக்ய -அனுபவத்துக்கு உபாயம் ஆக்குவது ஒட்டாது

(ஆச்சார்யனுக்கு சேஷமாயும் பரதந்த்ரமாயுமுள்ள தனது ஸ்வரூபத்தை அறிந்தவன் அதற்குத் தக்கபடி ஆச்சார்யரது குணங்களையும் திருமேனியையும் அனுபவிக்கையாகிற முக்கிய அனுபவத்தை எம்பெருமானது ஸ்வரூப ரூப குண விபூதியை அறிந்து அனுபவிக்கையாகிற அமுக்கிய அனுபவத்துக்கு உபாயமாக்குவது ஒட்டாது -இதைக்கேட்டு அறிந்தவனுக்கு உபாயாந்தர தொடர்புக்கு பிரசக்தியே இல்லையே -ஆகவே ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று உபாயாந்தர பரித்த்யாகத்துக்கும் ப்ரஸக்தி இல்லையே-ப்ரஸக் தஸ்ய ஹி ப்ரதிஷேத-எது உண்டாவதற்கு இடமுள்ளதோ அதையே உண்டாக்கலாகாது என்றும் நிஷேதிக்க முடியும் என்கிற நியாயத்தை அனுசந்திப்பது -)

—————————————————————————————————-

எண்பத்து ஆறாம் வார்த்தை

பொன் நாச்சியார் கூரத் ஆண்டாளுக்கு பிரசாதித்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணவே –
ஸ்வரூப அநு ரூபமான உபாய உபேயாதிகள் உபபன்னமாய் போரும் காணும் -என்று
அருளிச் செய்தார்–

ஆசார்ய சேஷத்வ பாரதந்த்ர்யங்களே ஸ்வரூப நிரூபக தர்மம் –

ஆசார்ய அபிமானமே உபாயம் –

ஆசார்யன் உகக்கும் கைங்கர்யமே உபேயம்

(ஸ்வரூப நிரூபணம்-ஆச்சார்ய சேஷத்வ பாரதந்தர்யங்கள் -ஸ்வரூப நிரூபக தர்மம் என்றும் நிஷ்கர்ஷிக்கை -ஸ்வரூப அநு ரூபமான உபாய உபேயாதிகள்-கீழ் சொன்ன ஸ்வரூபத்துக்குத் தக்க ஆச்சார்யன் அபிமானமாகிற உபாயமும் -ஆச்சார்யன் உகக்கும் கைங்கர்யம் முதலானவை யாகிய உபேயங்களும்)

(பாகவதர்கள் வந்து ஒரு தோடு எடுக்கவே திரும்பிப் படுக்க எடுக்காமல் போகவே அசித் வத் பாரதந்தர்யத்துடன் இருக்காமல் போனாயே -சொல்லிக் கொடுத்தார் அன்றோ)

———————————————————

எண்பத்து ஏழாம் வார்த்தை

பிரபன்னன் ஆகையாவது –
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -நமக்கு எம்பெருமான் பண்ணித் தந்து அருளும்
என்று த்வய அனுசந்தான முகத்தாலே ஒருகால் விஸ்வசித்து இருக்கை –

பிரபத்தி நிஷ்டை யாவது –
பிரபத்தி பிரகாரமும் -பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை –

பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகை யாவது –
பிரபத்தாவினுடைய க்ருத்யமான பிரபதநத்தை பிராபகம் என்று நினையாது ஒழிகையும் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வாதினம் என்று நினையாது ஒழிகையும் –

பிரபத்தி பிரபாவம் (அருமை பெருமை சீர்மை)நெஞ்சிலே படுகை யாவது –
பிரபத்தி பண்ணினவனுடைய பிரக்ருதியில் பிராக்ருத நிரூபணம் பண்ணாது ஒழிகை

பிரக்ருத் யாத்ம விவேகம் உடையவன் ஆகில் –
பிரபன்னனை பிரபாவத்தை இட்டுக் காணாதே-பிரக்ருதியை இட்டுக்  கண்டான் ஆகில் – பழைய ப்ராக்ருதனாயே விடும் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –

(பஞ்ச சம்ஸ்காரம் பண்ணும் பொழுது ஆச்சார்யர் த்வயம் உபதேசிக்க ஸிஷ்யன் அதை உச்சரிக்கும் பொழுதே ப்ரபன்னன் ஆகி விடுகிறான் -இருந்தாலும் ப்ரபத்தி நிஷ்டை நாளடைவில் பிரபத்தி பிரகாரமும் பிரபாவமும் நெஞ்சிலே படப்பட ஏற்படும் –
பற்றும் பற்றுமாகிய உபாய ஸ்வீ காரமும் உபாயமல்ல -நம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் அவன் வசப்பட்டவை பிரபத்தி பிரகாரம் -ப்ரபன்னர்கள் பிரக்ருதியில் இருந்தாலும் பிரகிருதி வசப்படாதவர்கள் என்பதே பிரபத்தியின் பிரபாவம் -ப்ரபந்தனை தேஹ சம்பந்த்தால் தாழ்வாக எண்ணினால் பிரபத்தி நிஷ்டை நழுவி ப்ரபன்னனாவதற்கு முன் இருந்த பிராகிருத நிஷ்டைக்குச் செல்கிறான் -என்று கருத்து -)

——————————————————————

எண்பத்து எட்டாம் வார்த்தை

பட்டர் ஸ்ரீ பாதத்தில் சம்பந்தம் உடையார் ஒரு சோமயாஜி யரான ஸ்ரீ வைஷ்ணவர் –
எனக்கு திரு வாராதன க்ரமத்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பட்டரும் இவருக்கு உடையவருடைய நித்ய பிரகாரத்தை அருளிச் செய்ய –

அவரும் அது கொண்டு நெடு நாள் திருவாராதனம் பண்ணிப் போரச் செய்தே –
ஓன்று இரண்டு நாள் பட்டர் திருவாராதனத்தில் சேவித்து இருந்தார் –
அங்கு தமக்கு அவர் அருளிச் செய்தவை ஒன்றும் கண்டிலர்

அவர் திருவாராதனம் பண்ணி யருளின படி –
தாம் திருமஞ்சனம் பண்ணி சேலை சாத்தி திருநாமம் சாத்தி -அமுது செய்ய தளிகை வைத்த அளவிலே –
தெற்கு ஆழ்வாரை -எழுந்து அருளி வைத்துக் கொண்டு -வாரும் கோள் -என்று
தமக்கு படைத்த திருப் போனகத்தையும் தண்ணீர் அமுதத்தையும்
அமுது செய்யப் பண்ணி பிரசாதப் பட்டு அருளினார் –

இத்தைக் கண்டு அந்த ஸ்ரீ வைஷ்ணவர்
எனக்கு அருளிச் செய்த படி ஓன்று
தேவரீர் இப்படி செய்து அருளிற்று -இதுக்கு அடி என் என்று – ஆரத்தியோடே கேட்க –

சகல வேத  சாஸ்திரங்களையும் ஆராய்ந்த -இடத்து
உமக்கு அப்படி அல்லது சொல்லலாவல் இல்லையாய்  இருந்தது –
என்னை நிரூபித்த இடத்து -கால் ஆழும்  நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று
தளர்ச்சி அடையும் என்னை பார்க்கும் பொழுது –
இப்படி ஒழிய செய்கைக்கு ஒரு செயல் கண்டிலேன் என்று அருளிச் செய்தார் –

(சோமயாஜியர் -சோம யோகம் செய்து பூர்வ காண்டத்தில் ஊன்றி இருப்பவர் -இப்படிப் பட்டவருக்கு விஸ்தார திருவாராதனத்தால் தான் பிரதிபத்தி பிறக்கும் -பட்டருடைய திருவாராதனப் பெருமாள் தெற்காழ்வார்-எம்பெருமானைக்கண்டபின்பு காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -நிலை போன்ற பட்டருக்கு சுருக்கமான திருவாராதன க்ரமமே பொருந்தும் என்றவாறு -)

——————————————————————–

எண்பத்து ஒன்பதாம் வார்த்தை

மருதூர் நம்பி -(எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர்) –
தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே அபராதம் பண்ணின சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான் –அநாதி காலம் திருவடிகளிலே அபராதம் பண்ணின நான் பெறாது இருக்கை வழக்கோ -என்று அழ –அப்போதே பரமபதத் தேற எழுந்து அருளினார் –

———————————————————————-

தொண்ணூறாம் வார்த்தை

நம்பிள்ளை அப்பிள்ளை பிள்ளைக்கு அருளிச் செய்தபடி –
ஸ்ரீ வைஷ்ணவன் சரீர நிபந்தனமான ஐஸ்வர்யாதிகளை எம்பெருமான் பக்கலிலே அபேஷிக்கும் பொழுது –
மூன்று தோஷம் பிரசங்கிக்கும் –
அவையாவன –

1-சித்தியாத அம்சத்தில் ஸ்நிக்தன் ஆகையும் – –
2-தன் ஸ்வரூபத்துக்கு சேராதவற்றை சேர்க்கத் தேடுகையும்
3-பர ஸ்வரூப சமாதானத்துக்கு சமாதி பங்கம் பண்ணுகையும் –

இதில் சித்தியாத அம்சத்தில் ஸ்நிக்தன் ஆகையாவது –
கிடையாத அம்சத்துக்கு ஆசைப்படுகை –

சர்வ பல பிரதனான எம்பெருமான் பக்கலிலும் கிடையாது இருப்பது உண்டோ என்னில் –
உண்டு –

அதிகார அநு குணமாக பிரபதனம் பண்ணாதவை சில உண்டாக –
யஸ்ய அனுக்ரகம் இச்சாமி தஸ்ய வித்தாம் ஹராம் யஹம் –இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகையாலே —

இவ்விடத்தில் இவ் அதிகாரி ஆர் என்னில் –
சதாசார்ய வரணம் பண்ணின சதாசாரவான் –

இவனுக்கு இது லபியாமைக்கு அடி –
இவன் ஆச்சார்ய வரணம் பண்ணுகிற போது பண்ணின பிரபதனத்துக்கு விருத்தம் -ஆகையாலே –

தன் ஸ்வரூபத்துக்கு சேராத அம்சத்தை சேர்க்கத் தேடுகையாவது –
ராஜ புத்ரன் புளிந்த புத்திரன் -(வேடன் மகன்) -குடிக்கும் கூழுக்கு ஆசைப்படுமா போலே –
அப்ராக்ருத அனுபவ அந்வயியாகைக்கு ஈடான ஆகாரங்கள் லபித்த சேதனன்
பிராக்ருத அனுபவ அந்வயியாகை –

பர ஸ்வரூப சமாதானத்துக்கு சமாதி பங்கம் பண்ணுகையாவது –
நெடு நாள் இழந்து போன சேதனனை இன்று நேராக கிட்டப் பெறுவதே என்று
க்ருதார்த்தனாய் இருக்கிற ஈஸ்வரன் ஹிருதயத்தை வ்யாகுலாஸ்ரயம் ஆக்குகை –

இதுக்கு உதாஹரணம் –
பார்யை பர்த்தா ஸ்நிக்தன் ஆனான் இறே என்ன –
புருஷாந்தர சம்சர்கேச்சை நடையாடா நின்றது என்றால் அவனே தேடிக் கொடுக்கிறான் அல்லன் –
தன்னுடைய பாதிவ்ரத்யமும் குலையும் –
அவன் நெஞ்சம் வ்யாகுலம்  ஆகும் என்று அருளிச் செய்தார் –

————————————————————-

தொண்ணூற் றோராம் வார்த்தை

சிறியாண்டான் -(எம்பெருமானாரின் சிஷ்யர் )-
கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை எம்பெருமானாருக்கு அறிவித்து –
அவரால் -மாறொன்று இல்லா மாருதி -என்று கொண்டாடப் பட்டவர் —
தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –

திருவேங்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் –
பழைய நரகங்கள் ஒழிய வேறே எனக்கு ஒரு நரகம் சிருஷ்டிக்க வேண்டும் —
அன்றிக்கே
என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் –
பழைய திருநாடு போராது-எனக்கு என ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேணும் –

(ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -ஈஸ்வர குண அனுசந்தானம் அபாய ஹேது)

——————————————————–

தொண்ணூற்றிரண்டாம் வார்த்தை –

பட்டினிப் பெருமாள் என்றார் ஒருவரை எம்பெருமானார் –
நாலில் பத்தில் கண்டு அருளினால் —பெருமாளே -என்று அருளிச் செய்ய

இவரும் ஜீய ஜீய -என்பர் –
இவரும் அற்றைக்கு கிருதார்த்தர் ஆனோம் என்று அருளிச் -செய்வர் –
இவரும் நாலு மூன்று நாள் திரு முடிக் குறையிலே அனுசந்திதுக் கொண்டு இருப்பர் –
ஒரு நாள் ராத்ரி  கள்ளர் களவு கண்டு போகா நிற்கச் செய்தே
இவரைக் கண்டு – இங்கே ஒராள் இருந்த தென்று -அவர்களில் ஒருவன் சொல்ல –
அது அங்கே பண்டே இருப்பதொன்று –
இம்மரம் பிறர்க்கு சொல்லில் காண் அவன் நம்மைச் -சொல்லுவது என்று மற்று உள்ளாருக்குச் சொல்ல
இத்தை எம்பெருமானார் கேட்டு நின்று அருளிச் செய்தார் –

—————————————————————

தொண்ணூற்று மூன்றாம் வார்த்தை –

அத்ருஷ்டத்தை த்ருஷ்டமாக அனுசந்தித்தும்–
த்ருஷ்டத்தை அத்ருஷ்டமாக அனுசந்தித்த போதும் இறே
இவன் முமுஷூ வாவது -என்று
பட்டர் அருளிச் செய்தார் –

(அக்கரை –இக்கரை -என்னுமவர்கள்-அவன் உபாயமாவது தன்னிடம் வேலை செய்ய அதிகாரி ஸ்வரூபம் இது போல்வன -அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் அன்றோ – -)

——————————————————–

தொண்ணூற்று நாலாம் வார்த்தை –

திருக் கோட்டியூர் நம்பி அந்திம தசையில் –
திரு உள்ளக் கருத்தேது -என்று முதலிகள் கேட்க –
சக்கரவர்த்தி திருமகனார் திரு உள்ளக் கருத்தை ஒரு பஷி புண் படுத்திற்று -என்றார் –
(ஈட்டில் 6-8-6- இந்த புறா கதை அருளாள பெருமாள் எம்பெருமானார் வார்த்தையாக அருளி இருக்கிறார் -இருவரும் அந்திம தசையில் இந்த வார்த்தை அருளி இருக்கலாம் -)

(ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு-அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,-‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.-இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:-‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;-இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது-பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –)

—————————————————————

தொண்ணூற்று  ஐஞ்சாம் வார்த்தை

அத்துழாய் பெரிய நம்பி ஆபத் தசையிலே –
நாம் இங்கு நின்றும் கோயில் ஏறப் போனாலோ -என்ன –
நாம் அங்கு போய் பிரக்ருதியை விட்டால்
நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிச் சாரும் போது –
நம்பி அகப்பட கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ -என்று பயப்படார்களோ –
என்று அருளிச் செய்தார் –

(தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கி.மீ. தொலைவில் உள்ள பசுபதி கோயில் -தஞ்சாவூர் அருகில் -கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து ஸ்ரீ ரெங்கம் போகும் வழியில் உள்ளது -அங்கு தான் பெரிய நம்பி திருவரசு உள்ளது)

————————————————————

தொண்ணூற்று  ஆறாம் வார்த்தை

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பீஜ பூதமான சம்சாரத்தில் அருசியும் –
ஸ்வ பாரதந்த்ர்ய மூலமான உசித கைங்கர்யத்தில் ருசியும் –
தன்னுடைய ஞான அனுஷ்டானங்களில் பிராவண்ய புத்தியும் –
இதுக்கு அடியான முமுஷூக்களின் சஹவாசத்தில் கர்த்தவ்ய புத்தியும் –
இதனுடைய விபாக தசையான நித்ய முக்தர் பரம பதத்தில் உத்தேச்ய புத்தியும் —
இவை பிரபன்ன நிஷ்டை –

ஸ்வரூபம் ஒரு மிதுனம் என்று இருக்கையும்
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் மிதுன விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கையும் –
ஸ்வரூப விரோதி ஸ்வா தந்த்ர்யம் என்று இருக்கையும் –
இவை பரமை காந்தி நிஷ்டை –

இவை இரண்டு வார்த்தையும் ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் -செய்தவை –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -73-84–அரும் பத விவரணத்துடன்–

December 11, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

எழுபத்து மூன்றாம் வார்த்தை

ஸ்வீகாரத்தில் உபாய புத்தியும் –
பேற்றில் சம்சயமும் காண் ஒருவனுக்கு மோஷ விரோதி –

சாபராதிகளான சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வாமியான எம்பெருமானைப் பற்றும் இடத்து –
தன் அபராத பரம்பரைகளைப் பார்த்து பிற்காலியாதே
பின் பற்றுகைக்கு புருஷகார பூதையான பிராட்டியை சொல்லுகிறது –
ஸ்ரீ -என்கிற பதத்தாலே –

இப்படி புருஷகார பூதையான பிராட்டி அவனோடே சேர இருப்பது
ஒரு தேச காலங்களிலேயோ என்னில் –
பிரபா பிரபாவான்களைப் போலே பிரியாத நித்ய யோகங்களைச் சொல்லுகிறது –
மதுப்பு –

(அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா -யுத்த -121-19 -அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா-ஸூந்தர –21-16-)

இப் புருஷகாரமும் மிகை என்னும்படியாய் இவள் தானே குறை சொல்லிலும் –
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2- என்று
பரிந்து நோக்கும் வாத்சல்யாதி குணம் சொல்கிறது –
நாராயண -பதத்தாலே –

(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

ஆஸ்ரிதரை கைவிடாதே சௌலப்யம் சொல்லுகிறது –
சரணவ் -பதத்தாலே –

(பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது -திண் கழலாய் இருக்கும் –சூரணை -146-ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாக  சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும்-பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-என்னும் படி-நாராயண -பதத்தில் சொன்ன -குண விசிஷ்டனான அவனும் கைவிடிலும் -திரு அடிகள் தன் வைலஷண்யத்தாலே-துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது-வண் புகழ் நாரணன் திண் கழல் -திரு வாய் மொழி -1-2-10-என்கிறபடியே பற்றினாரை நழுவ விடாதே திண்மையை  உடைத்தாய்  இருக்கும் -என்கை-)

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் என்கிறது
சரணம் என்கிற பதத்தாலே –

அவன் திருவடிகளில் இத்தனை நன்மை உண்டாய் இருக்க –
இந்நாள் வரை இழந்தது இவன் பற்றாமை இறே –
அக் குறைகள் தீர பற்றும் பற்றுகையைச் சொல்லுகிறது
பிரபத்யே -என்கிற பதத்தாலே –

இப்படி பூர்வ கண்டம் சொல்லி நின்றது –

மேல் உத்தர கண்டம் சொல்லுகிறது–
இதில்
மதுப்பாலே
இவனோடே கூடி இருக்கிற இவளும் உத்தேச்யை யாகையாலே –
நாம் ஏதேனும் ஒரு கிஞ்சித்காரம் செயிலும் –
அவனோடே கூடி இருந்து ஒன்றை பத்தாக்கி அவன் திரு உள்ளத்தை உகப்பிக்கும்
ஆகையாலே -அவனோடு கூடி இருந்தவள் என்கிறது –
ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே –

நம்மோடு நித்ய முக்தரோடு வாசி யற எல்லாரையும் சமமாக ரஷிக்கும் ஸ்வாமித்வம் சொல்லுகிறது –
நாராயண பதத்தாலே –

இப்படி ஸ்வாமியான எம்பெருமான் திருவடிகளிலே –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமான சர்வவித கைங்கர்யங்களையும் பண்ண வேணும் என்று
பிரார்த்திக்கும்படியைச் சொல்கிறது சதுர்த்தியாலே –

இப்படி இருந்துள்ள அடிமை செய்யும் இடத்து –
அவன் உகந்த உகப்பு ஒழிய
தான் உகந்த உகப்பை தவிரச் சொல்கிறது –
நம -என்கிற பதத்தாலே –

————————————————–

எழுபத்து நாலாம் வார்த்தை

நாச்சிமாரை ஈஸ்வரனில் காட்டிலும் குறையச் சொல்லும் இடமும் –
ஒக்கச் சொல்லும் இடமும் –
எழச் சொல்லும் இடமுமாய் இருக்கும்

இதுக்கு பிரமாணங்கள் –
இவன் பிரபத்தி பண்ணும் படியைச் சொல்லும் இடத்தில் –
இவள் ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும்
ஒக்கச் சொல்லுகிற இடத்தில் -ஐக்யம் சொல்லுகிறது என்றும் –
எழச் சொல்லும் இடத்தில் சௌலப்யம் சொல்லுகிறது என்றும்
பிரபத்தி பண்ணக் கடவன்

(இவளும் அவனுக்கு சேஷபூதை -ஸ்வரூபம் என்றும் தாழ்வாகவும் –ஐகரஸ்யாத் தயா-ஸ்ரீ ஸ்தவம் -1- திரு உள்ளங்களும் ஓன்று ஸாம்யம் -ஆஸ்ரித ஸூலபன் -பரதந்த்ரன் ஏறிட்டுக் கொள்வான் -அன்றோ -)

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –1

எல்லா உலகங்களுக்கும் ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும் மற்றும் உள்ள எல்லாவற்றையும் உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய் ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் இந்த எம்பெருமானுக்கு அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக ஆக மாட்டாது அன்றோ-அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-)

(உயர்வாக சொல்லச் சொல்ல மகிழ்ந்து அவனது கவசம் பூரிக்கும் அன்றோ -வெந்நீருக்கு தண்ணீர் வேண்டும் -தண்ணீருக்கு தண்ணீர் வேண்டாமே)

—————————————————-

எழுபத்து ஐந்தாம் வார்த்தை

பிள்ளை நம் ஜீயர் ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ பாஷ்யம் வாசியா நிற்கச் செய்தே –
திருப் போனகம் சமைந்தது -என்றவாறே –
சொக்கத் தேவரை திருவாராதனம் பண்ணி வாரும் -என்று அருளிச் செய்ய –

அடியேன் திருவாராதனத்தை அறிந்தேனோ -என்று விண்ணப்பம் செய்ய –

நானோ சால க்ரமம் அறிந்து இருக்கிறேன் ?
த்வயத்தைக் கொண்டு திருவடி விளக்கி  அமுது செய்ய மாட்டீரோ ?
என்று அருளிச் செய்தார் –

——————————————————————

எழுபத்து ஆறாம் வார்த்தை

உகந்து அருளின இடங்கள் பலவிடமாய் –
திருப் போனகம் படைப்பது ஒன்றே யானால்
அமுது செய்யப் பண்ணும்படி என் என்று பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –

த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் நடுவே –
சர்வ மங்கள விக்ரஹாய -என்று விசேஷண சஹிதமாக உச்சரித்து
அமுது செய்து அருளப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார் –

————————————————————————–

எழுபத்து ஏழாம் வார்த்தை

இவ் வாத்மாவுக்கு பெரிய பிராட்டியார் பிரியத்தை பண்ணி யருளும் —
எம்பெருமான் ஹிதத்தை பண்ணி யருளும் –
பிரிய ஹிதங்கள் இரண்டும் சேர ஜீவிக்கிறபடி எங்கனே என்னில் –

ஆஸ்ரீத விஷயத்திலும் -அநாஸ்ரீத  விஷயத்திலும் —

ஆஸ்ரீதர் பக்கல் இவள் பண்ணி யருளும் பிரியத்துக்கு ஆஸ்ரீதர் பெரும் பிழைகள் பாராதே
பெரிய பிராட்டியார் திரு உள்ளத்தைப் பின் செல்லும் –
இவ்விடம் இவளுடைய பிரிய கார்யமான வாத்சல்யம் ஜீவித்த படி –

அநாஸ்ரீதர் பக்கல் ஹிதம் செய்யும் போது –
இவற்றின் உடைய பிரக்ருதியின் பொல்லாங்காலே இவை நம்மை (நன்மை)இழவா நின்றன -என்று
பிரஜைகளுடைய கிரந்தியை அறுப்பாரைப் போலே-இவள் இசைவோடே கூடி ஹிதத்தைச் செய்து அருளும் –
இவ்விடம் இவனுடைய ஹித கார்யமான ஸ்வா தந்த்ர்யம் ஜீவித்த படி –

ஆகையால்
ஆஸ்ரீதர் பக்கல் பிரியமும் –
அநாஸ்ரீதர் பக்கல் ஹிதமும்
இருவர் திரு உள்ளத்துக்கும் சேருகிறது –

——————————————————————–

எழுபத்து எட்டாம் வார்த்தை

1-பிராயச் சித்த வ்யாவ்ருத்தி –
2-உபாயாந்தர வ்யாவ்ருத்தி —
3-உபேய வ்யாவ்ருத்தி –
4-அதிகாரி வ்யாவ்ருத்தி –
5-பிராப்யாந்தர வ்யாவ்ருத்தி –
6-தேவதாந்திர வ்யாவ்ருத்தி –
7-போகாந்தர வ்யாவ்ருத்தி —
8-ஸ்வ போக வ்யாவ்ருத்தி —

(பிராயச்சித்தங்களும் உபாயாந்தரங்களும்-ஸாத்யமாய் பலம் கொடுக்க எம்பெருமானையும் மற்ற பல அங்கங்களையும் அபேக்ஷித்து இருக்கும் -ஸித்த உபாயமோ வேறு ஒரு முயற்சியும் எதிர்பாராமல் ஸித்தமாய் பலம் கொடுப்பதற்கு வேறு ஒன்றை அபேக்ஷியாது இருக்கும் – இரக்கத்துடன் கூடிய எம்பெருமான் உபாயமாகவும் உகப்போடு கூடிய எம்பெருமான் உபேயமாகவும் இருக்கிறபடியால் இந்த ஸித்த உபாயத்துக்கு உபேயத்தில் காட்டில் வேறுபாடு உண்டு – இரக்கமும் இனிமையும் சேர்ந்து உபாய உபேய இரண்டுமே இவன்-உபாயமாகப் பற்றும் அதிகாரி அஞ்ஞனாய் அசக்தனாய் இருக்க-ஸித்த உபாயமோ என்னில் ஸர்வஞ்ஞனாய் ஸர்வசக்தனாய் ஸஹகாரி அபேஷனாய் இருப்பதால் அதிகாரி வ்யாவ்ருத்தியும் உண்டு –ஆக உபாயத்துக்கு நாலு வேறுபாடுகள் -மேல் உபேயத்துக்கு நாலு வேறுபாடுகள் -மிதுனம் ப்ராப்தமாய் பரம போக்யமாய் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமுமாய் இருக்கும் -காணிலும் உருப்பொலார் சேவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரம் தர மிடிக்கில்லா தேவர் -பொல்லாத தேவர் திருவல்லாத தேவர் -அல்ப அஸ்திரமில்லா நித்ய ஸ்வரூப ப்ராப்த பரார்த்த அனுபவ கைங்கர்யம் பரம ஸ்ரேஷ்டமாய் இருக்குமே -)

—————————————————————–

எழுபத்து ஒன்பதாம் வார்த்தை

பட்டர் ஒருவருக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது  நம் ஜீயர் –
பிராட்டி முன்னிலையாக பற்றுகிற இதுக்கு பிரயோஜனம் என் என்று கேட்க

இவள் சந்நிதியாலே -மிகவும் சாபராதியான காகம் தலை கொண்டு தப்பிற்று –
அத்தனைக்கு அபராதம் இன்றியிலே இருக்க இவள் சந்நிதி இல்லாமையாலே-
ராவணன் தலை யறுப்பு உண்டான் –

இளைய பெருமாள் பிராட்டி முன்னிலையாக பெருமாள் திருவடிகளைப் பற்றி
தம்மை நில் என்ற சங்கல்பத்தையும் -அழித்துப் பெருமாளையும் பெற்று விட்டார் –

மற்றும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஸ்ரீ குஹப் பெருமாள் தொடக்கமானவர்
பிராட்டி முன்னிலையாகப் பெற்றார் ஆய்த்து –
முமுஷுப்படி -சூரணை -135-

(குகப்பெருமாள் பெருமாள் உகந்த கைங்கர்யம் பெற்றான் -உற்ற தோழன் நீ இங்கு இரு – இளைய பெருமாள் தான் உகந்த கைங்கர்யம் பெற்றான் -விபீஷணனும் பிராட்டி இலங்கை சென்றபின்பே ஆபாச பந்துவை விட்டு பெருமாள் இடம் வந்து சேர்ந்தான் -)

(இவள் சன்னதியால் காகம் தலைப் பெற்றது –அதில்லாமையால் ராவணன் முடிந்தான் –சூரணை -135-

தேவ்யா காருண்யா ரூபய-என்கிறபடி கிருபை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்த்ர்யத்தை அமுக்கி கிருபையைக் கிளப்பும் அவளான இவள் சந்நிதியாலே –அபராதத்தை தீரக் கழியச் செய்து -ப்ரஹ்ம அஸ்த்ரத்துக்கு இலக்காய்-தலை அறுப்பு உண்ணத் தேடின காகம் –க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடி க்ருபா விஷயமாய் தலைப் பெற்றுப் போயிற்று –அப்படி இருக்கிற இவள் சந்நிதி இல்லாமையாலே போக்கற்று செயல் மாண்டு நின்ற நிலை ஒத்து இருக்க செய்தேயும் -காகத்தோபாதி அபராதம் இன்றிக்கே இருக்க –ராம சரத்துக்கு இலக்காய் ராவணன் முடிந்தே போனான் -என்கை –ஆகையால் ஆஸ்ரயிப்பாருக்கு இவள் சந்நிதியே வேணும் என்று கருத்து –ஆக ஸ்ரீ மத் பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று)

——————————————————————–

எண்பதாம் வார்த்தை

ஸ்ரீ மத் என்கிற பதத்தாலே –
திரு மார்பில் நாய்ச்சியாரோடே அனுசந்திக்கிறார் –

ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே -என்கிற பதங்களாலே
திருவடிகளை அனுசந்திக்கிறார் –

ஸ்ரீ மதே நாராயண -என்கிற பதங்களாலே –
அருகு இருந்த நாய்ச்சிமாரோடே -இட்ட தனி மாலையையும் –
கவித்த திரு அபிஷேகத்தையும் -சிவந்த திரு முக மண்டலத்தையும்-அனுசந்திக்கிறார் –

ஆய -நம -என்கிற பதங்களாலே
கைங்கர்யத்தை அனுசந்திக்கிறார் –

(ப்ரபத்திக்கு விஷயம் அர்ச்சாவதாரமாகையாலே த்வயத்தில் பாதங்களை அர்ச்சாவதார எம்பெருமான் விஷயத்தில் சமன்வயப்படுத்தி அருளிச் செய்கிறார்-திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலை..)

———————————————————————

எண்பத் தோராம் வார்த்தை

வஸ்துமான் வஸ்துவை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
வஸ்து விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
விநியோகம் போகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
போகம் அபிமதத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
அபிமதம் அநு குணத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
அநு குணம் பரனுக்கு பாங்காய் இருக்கும் –

(கீழிருந்து படிப்படியாக -எம்பெருமானுக்கு பிராட்டிமார் முதலானோர் அனுகுணமாய் அனுரூபமாய் -அபிமதகைளாய் இருப்பதால் எம்பெருமானுக்கு போகம் ஸித்திக்கும் -அவர்கள் எம்பெருமானுக்கு போக்யப் பொருளாக இஷ்ட விநியோஹ அர்ஹமாய் இருக்கும் -ஆகவே அவர்களுக்கு வஸ்துத்வம் ஸித்திக்கிறது -இப்படி கணக்கற்ற எண்ணிறந்த வஸ்துக்களை யுடையவனாகையாலே எம்பெருமான் ஸ்வாமிகள் -வஸ்துமான் -ஆகிறான் -)

——————————————————————————

எண்பத்து இரண்டாம் வார்த்தை

பட்டர் ஜீயருக்கு த்வயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து அருளி –
இதில் உத்தரார்த்தம் அநு சந்திக்கலாவது பரம பதத்தை சென்றாலாய் இருக்கும் –
இங்கே இவ் அர்த்தம் அநு சந்தித்தவன் ஜீவன் முக்தன்
என்று அருளிச் செய்தார் –

(பரார்த்த அனுபவ கைங்கர்யங்களை சொல்லும் உத்தர வாக்கியத்தின் அர்த்தங்களை பரிபூர்ணமாக அறிவது பரமபதத்திலேயாய் இருக்கும் – ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பகவத் நிர்ஹேதுக கிருபையால் இங்கேயே அறிந்து முக்த பிராயராய் இருப்பார்கள் -)

(ஞான-தர்சன -பிராப்தி தசைகள் -சமானாகார சாஷாத்காரமே அர்ச்சிராதி கதி மார்க்கத்தின் மத்யத்திலே கிட்டும் -தெளி விசிம்பு ஏறலுற்றால் -அதுவும் வேண்டாமே திருவாறன்விளையே பிராப்யம் -அவனை ப்ராபகம் என்று கொண்டு பின்பு மருள் ஒழி மடநெஞ்சே -முனியே நான்முகனில் திருவாணை இட்டும் பிராப்தி பெற்றார் அன்றோ -)

———————————————————–

எண்பத்து மூன்றாம் வார்த்தை

வயாக்ரா சிம்ஹங்களோ பாதி உபாய வேஷம் –
யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம் என்று
திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –

(புலியும் ஸிம்ஹமும் போலே எம்பெருமான் உபாயமாம் போது தன்னோடு ஒத்த மற்ற ஒரு உபாயத்தைப் பொறுக்க மாட்டான் -யானைக் கூட்டத்திலுள்ள எல்லா யானைகளுடன் சேர்ந்து தலைமை யானை போகங்களை அனுபவிப்பது போலே எம்பெருமான் உபேயமாகும் போது பிராட்டிமார் நித்ய முக்தர்களுடன் சேர்ந்தே உபேயமாகிறான்)

(அடியார்கள் குணங்களுடன் உடன் கூடியே அனுபவம் -ஸமஸ்த பரிவாராய -திவ்ய மங்கள விக்ரஹாய நம -ராமானுஜ முனி வேழம்)

வ்யாமோஹம் உபாயம் –
முக மலர்த்தி உபேயம் என்று எம்பார் அருளிச் செய்வர் –

(ஸ்வாமிக்கு உடமையான நம் பக்கல் உள்ள பேர் அன்பே நம்மைக் கடைத்தேற்றும் உபாயமாகிறது – அந்த வ்யாமோஹம் அடியாகவே ஸ்ருஷ்ட்யாதி யத்னங்களைப் பண்ணி நம்மை கடைத்தேற்றுகிறான் -பகவத் திருமுக விலாஸமே உபேயம் -உத்தேச்யம்)

——————————————————————-

எண்பத்து நாலாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி பெரிய முதலியாரைப் பார்த்து –
உபாய அம்சத்தில் தஞ்சமாக நினைத்து இருப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய

இது நெடும் காலம் ஸ்வரூப நிரூபணம் பண்ணப் பெற்று வைத்து
உபாய நிரூபணமே பண்ண தேடுவதே என்று -விஷண்ணராய் அருள –

ஆகில் உபாயம் வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –

அபிரூபையான ஸ்திரீ அழகை மட்டிக்க மட்டிக்க –
அபிரூபனாய் ஐஸ்வர்யர்ய வானுமான புருஷன்  அந்தரங்கமாக ஆழம் கால் படுமா போலே –அஞ்ஞனான சேதனன் -அழுக்கு அறுக்க அழுக்கு அறுக்க
அவ் வீஸ்வரன் திரு உள்ளம் அத்ய அசந்னமாய்ப் போரும் காணும் –
என்று அருளிச் செய்தார் –

(பர ஸ்வரூபம் ஸ்வ ஸ்வரூபம் அறியாமல் மண்டிக் கிடக்கும் அழுக்கைப் போக்குமதுவே வேண்டியது அவன் முக மலர்த்திக்கு-அத்தையும் அவன் இன்னருளாலே நடத்தி கொள்வான் -வேறு உபாய அனுஷ்டானம் ஒன்றுமே வேண்டியதில்லை என்றவாறு -)

(சேஷத்வ ஞானம் வந்ததுமே ஸூவ பிரயோஜனம் நிவ்ருத்தி ஏற்படும் பாரதந்தர ஞானம் வந்ததும் ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஏற்படும் அன்றோ)

——————————————————————-—

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -61-72–அரும் பத விவரணத்துடன்–

December 10, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

அறுபத்தோராம் வார்த்தை

ஸ்ரீ பரத ஆழ்வான் பெருமாளை வந்து சரணம் புக்கது பலியாது ஒழிவது என் -என்ன
பலித்தது -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் -எங்கனே என்னில் –

இவன் தான் பீதனாய் வந்து சரணம் புக்கது –
பரதனுக்கு ராஜ்யம் -என்கிற ஸ்வரூப விருத்தமான ஸ்வா தந்த்ர்யத்தை கழிக்கைக்கு அன்றோ –
திருவடி நிலை ஆழ்வார்களைக் கொடுத்து -தத் பரதந்த்ரனாய் போய் இரு -என்ற போதே
அந்த பய நிவ்ருத்தி பிறந்தது –

அதுக்கு பிரமாணம் -ஆரு ரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்ன சஹிதோ பலீ (ஸமன்வித பலீ பாடபேதம்)-(அயோத்யா -113-1- பலமுடையவனான பரதன் மிக உகப்புடன் சத்ருக்கனனுடன் தேரில் ஏறினான்)-என்று —
இவன் மீள வேணும் என்று பிரார்த்தித்தது செய்யாது ஒழிந்தது
ருஷயோஸ் ப்யாகமன் சர்வே வதா யாசூர ரஷசாம் -(பால -1-44-அஸூர ராக்ஷஸர்களை அழிப்பதற்காக எல்லாமே ரிஷிகளும் சரணம் அடைந்தனர்)என்று சரணாகதரான ரிஷிகளுடைய ரஷண அர்த்தமாக – இவன் மீண்டு எழுந்து அருள வேணும் -என்றத்தை மறுத்து எழுந்து அருளினார் –
என் போல் என்னில் –விருந்தினராய் வந்தவர்களுடைய த்ருப்த் யர்த்தமாக க்ருஹவானவன்
பார்யைக்கும் தனக்கும் பக்வமான சோற்றை இட்டு இருவரும் பட்டினி கிடக்குமா போலே –
அவனுக்கு ஸ்வ விஸ்லேஷத்திலும் காட்டில் தமக்கு பரத விஸ்லேஷம் துஸ் சஹமாய் இருக்க –ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகளுடைய த்ருப்த் யர்த்தமாக மறுத்து எழுந்து அருளினார் –

———————————————————————————————–

அறுபத்து இரண்டாம் வார்த்தை

மழலைக் கூற்றத்து நாராயணப் பிள்ளை –

த்ருஷ்டார்த்தமாக பண்ணின பிரபத்தி பலிக்க காண்கிறிலோம் –
இது போலேயோ அத்ருஷ்டர்தமும் -என்று நம்பிள்ளையைக் கேட்க –

த்வத் அனுபவ விரோதி யானவற்றை எல்லாம் போக்கி –
த்வத் அனுபவத்தை தர வேணும் என்று பிரபத்தி பண்ணி த்வத் விருத்த பிரபத்தியை
பண்ணினால் -இவனுக்கு ஹிதத்தை எம்பெருமான் செய்து அருளுகையாலே  பலிக்குமோ –முதல் பண்ணின பிரபத்தியை -நிரூபியாமல் காண் இது சொல்லிற்று –

(த்ருஷ்டார்த்தமாக பண்ணின பிரபத்தி-இவ்வுலக பலன்களை உத்தேசித்துச் செய்யும் சரணாகதி பலிக்காமல் இருக்கக் காண்கிறோம் -உன் அனுபவத்துக்குத் தடையானவற்றை எல்லாமே போக்கி உன் அனுபவத்தையே தர வேணும் என்றும் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது ஏற்கனவே செய்த சரணாகதிக்கு முரணாக இஹ போகத்துக்காக சரணாகதி செய்தால் ஹித பரனான எம்பெருமான் அதைப் பலிக்கச் செய்ய மாட்டான் அன்றோ)
ஆனால் -வரத யதி ஹ வஸ்து வாஞ்சாம் யஹம் தவ சரண லப அவிரோதஸ் தத
யதி ந பவதி தத் பிரதேஹி பிரபோ ஜடிதி விதர பாதமேவ அந்யதா வரதராஜ ஸ்தவம் -89– என்று பிரமாணம்

(வரத யதிஹ வஸ்து வாஞ்சாம் யஹம் தவ சரண லப அவிரோதஸ் தத
யதி ந பவதி தத் ப்ரதேஹி ப்ரபோ ஜடிதி விதர பாதமேவ அந்யதா -89-

ஹே வரத ப்ரபோ
அஹம் இஹ யத் வஸ்து வாஞ்சாமி –அடியேன் இங்கே யாது ஒரு வஸ்துவை விரும்புகிறேனோ
தத -அந்த வஸ்து வாஞ்சையினால்
தவ சரண லபா விரோதஸ்–உனது திருவடிகளைப் பெறுதற்கு பிரதிபந்தமானது
ந பவதி யதி –உண்டாக மாட்டாதாகில்
தத் ப்ரதேஹி–அந்த வஸ்துவை தந்து அருள்
அந்யதா –நான் ஒரு வஸ்துவை விரும்புவது உன் கமல பத ப்ராப்திக்கு பிரதிபந்தகம் ஆகுமாகில்
பாதமேவ ஜடிதி விதர –திருவடியையே உடனே தந்து அருள்

தரிசனத்துக்கு தர்சனம் இழந்த ஆழ்வான் எம்பெருமானார் நியமனத்தாலே திருக்கண் பெற
ஸ்தவம் அருளிச் செய்கிறார் ஆகையால் அந்த பிரார்த்தனைக்கு உபோத்காதமாய் இந்த ஸ்லோகம்-மாம்ச சஷுஸ்ஸை தா என்று நேர் கொடு நேர் பிரார்த்திக்க மாட்டாமையாலே அத்தை உள்ளடக்கி வ்யங்க்ய மரியாதையாலே இந்த பாசுரம்
யத் தச் சப்தங்களை இட்டு பாசுரம் இடுகிறார் -மாம்ச சஷுஸ் ஆகிற ஷூத்ர ப்ரயோஜனத்தில்-விருப்பத்தை தம் வாயால் வெளியிடக் கூசி –)

———————————————————————————————-

அறுபத்து மூன்றாம் வார்த்தை

நஞ்சீயர் சரம தசையில் -குட்டக்குடி இளை யாழ்வார் –
த்வயத்தை அநு சந்தித்தால் ஆகாதோ -என்ன –
உனக்கு -அநு சந்திக்க வேண்டாதே எனக்கு இப்போது வேண்டுகிறது என்-நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ விருப்பது -என்று அருளிச் செய்தார்-

(நடையாடித் திரியும் உனக்கும் பிராகிருத விஷய சம்ஸர்க்கம் ஏற்படக் கூடுமாகையால் அது நீங்குவதற்கு த்வய அனுசந்தானம் வேண்டியிருக்கிறது -விஷயங்களில் இருந்து தொடர்பு நீங்கி எம்பெருமானையே சிந்தித்திக் கொண்டு அசைய முடியாமல் கிடக்கும் எனக்கு த்வய அனுசந்தானம் தேவையில்லை என்றார் -என்கிறவாறு -)

———————————————————————————————

அறுபத்து நாலாம் வார்த்தை
காகத்தினுடைய விஷயீ கார சமயத்தில் -ததஸ் தஸ்ய அஷி காகஸ்ய ஹி நஸ்தி ஸ்ம ஸ தஷிணம் (அந்த ராமபிரான் அந்த காகாசூரனுடைய வலது கண்ணை அழித்தார்)–என்கிறபடியாலே -சரணாகதன் ஆனாலும் முன்பு உண்டான கர்மங்கள் அநு பாவ்யங்களோ -என்னில்
இது பண்ணின குற்றத்துக்கு தக்க தண்டம் பண்ணிற்று அன்று -தன் திருவடிகளிலே பண்ணின மகா அபராதத்தாலே சர்வ லோக பரித்யக்தமான காகத்தை வெறுமன் பொறுத்து விட்டால்-பொறுத்தமைக்கு அடையாளம் தெரியாது இறே
ஆகையால் தாம் பொறுத்தமைக்கு அடையாளம் பண்ணி விட்டார் இத்தனை -அது தானும்
திருமேனியிலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இடம் கொடுத்தவோ பாதி நினைத்துச் செய்தார் இத்தனை-
ஒரு கண்ணால்  இரண்டும் கண்ணும் கொள்ளக் கடவ கார்யம் கொள்ளும் காக ஜாதி யாகையாலும் –ஆத்ம சத்தையைக் காட்டி லும் பொறாத படியால் அவ்  அபதாரத்தைப் பண்ணின காகத்துக்கு இது தண்டமாக போராமையாலும் -பொறுத்தமைக்கு அடையாளம் வேண்டுகையாலும் -இங்கனே ஒரு கண் அழிவு கண்டார் இத்தனை -போக்கி -தண்டம் அன்று என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –

(ஆத்மாவின் சத்தையையே அழித்தாலும் பொறாதபடியான அஸஹ்ய அபசாரம் பண்ணிய காகம் -ஆகவே இது தண்டன் அல்ல -ப்ரஹ்மாஸ்திரம் வீணாகக் கூடாது என்றும் திரு உள்ளம்)

————————————————————————————————

அறுபத்து ஐந்தாம் வார்த்தை
பிரபன்னனுக்கு பிரபத்தி வசனம் பலகாலம் வர்த்திக்க வேணுமோ -ஒரு கால் அமையாதோ
என்று கேட்க -பிள்ளை யருளிச் செய்கிறார் –
பிரபத்யவ்யனுக்கோ -பிரபத்தாவுக்கோ -நீர் ஆர்க்கு கேட்கிறது -பின்பு –
பிரபத்யவ்யனுக்கு இவன் ஒருகால் உச்சரித்தது அமையும் –
பிரபத்தானவன் பிராப்யத் திருஷ்ணை யாலே அதினுடைய சித்தி யளவும் செல்ல ஆவர்திக்கை தவிரான் –
அது என் போல் என்றால்-பிபாசிதன் ஆனவன் ஒருகால் தண்ணீர் என்றதே கொண்டு –
வார்க்கிறவன் வார்க்கக் கடவனாய் இருக்க -பிபாச அதிசயத்தாலே தண்ணீர்  செல்ல –
தண்ணீர் தண்ணீர் -என்று ஆவர்த்திக்குமா போலே பலகால் ஆவர்த்திக்குமது
விதி ப்ர  உக்தமாய் வரக் கடவது அன்று –
ப்ராப்ய த்ருஷ்ண அதிசயத்தாலே ராகப் ப்ர  உக்தமாய் வரக் கடவது என்று அருளிச் செய்தார்

(ஜப்த்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்-குருபரம்பரை பூர்வகமாக இல்லாத த்வயமும் த்யாஜ்யம்)

———————————————————————————————-

அறுபத்து ஆறாம் வார்த்தை

எண்ணாயிரத்து திருவாய்க் குலத்து ஆழ்வான் -பிரபத்தி புத்தி பூர்வகமாக பண்ணின
அபராதத்துக்கு(பாபம் என்று அறிந்தே செய்யும் அபசாரம்) பிராயச் சித்தம் ஆகுமோ -என்று நம் ஜீயரைக் கேட்க -பிரபத்தி பிரபாவத்தைப் பார்த்தால் புத்தி பூர்வத்துக்கும் பிராயச் சித்தமாகும் -ஞானம் பிறந்த பின்பு புத்தி பூர்வகம் கூடாது –ப்ரமாதிகத்துக்கு -(கவனக் குறைவுக்கு) -அனுதாபம் உண்டு -பயப்பட வேண்டா என்று அருளிச் செய்தார் –

(ஷமா ஷோடஸி -ஸ்லோகம் எம்பெருமானார் இடமும் விண்ணப்பித்து அருளிச் செய்த ஸ்லோகம்)

————————————————————————————————-

அறுபத்து ஏழாம் வார்த்தை
பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி –
விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுகை பிரபத்தி –

————————————————————————————————-

அறுபத்து எட்டாம் வார்த்தை –
கண்ணியனூர் சிறியாச்சான் -தாசரதி என்னும் திரு நாமம் கொண்டவர் -எம்பாரை தண்டம் இட்டு திரு உள்ளத்தில் தஞ்சமாக நினைத்து இருக்குமத்தை எனக்கு அவசியம் அருளிச் செய்ய வேணும் -என்ன -தாசரதீ எம்பெருமானார் ஸ்ரீ பாத த்வயம் ஒழிய தஞ்சமாய் இருப்பது இல்லை என்று அருளிச் செய்தார் –

(

அரங்கன் தஞ்சம் என்று அடைந்த எம்பெருமானாரே தஞ்சம் –

ஈந்தனன் ஈயாத இன்னருள்* எணிண்ல் மறைக்குறும்பைப்-
பாய்ந்தனன்* அம்மறைப் பல்பொருளால்,* இப் படியனைத்தும்-
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை* வேர்பறியக்-
காய்ந்தனன்* வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே)

————————————————————————————————-

அறுபத்து ஒன்பதாம் வார்த்தை
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் சில வைஷ்ணவர்களைக் காட்டி த்வயத்தில் பூர்வ
கண்டத்துக்கும் உத்தர கண்டத்துக்கும் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளை அருளிச் செய்தபடி -பெருமாளும் பெரிய பிராட்டியாரும் அபிமதங்களை முடிப்பார் என்று இருக்கை –
அபிமதங்கள் தான் எவை என்னில் -பெருமாளும் பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பில்
எல்லாம் அடிமையும் செய்ய வேணும் என்று இருக்கையும் -அடிமைக்கு விரோதி கழிய வேணும்  என்று இருக்கையும் -என்று அருளிச் செய்தபடி நினைத்து இருக்கிறார்கள் –
ஸ்ரீ பாதத்தில் அவர்கள் நினைத்து இருப்பது ஏது என்று ஜீயர் கேட்க -இம் மஹோ
உபகாரத்தை பண்ணினவன் -த்வயார்த்தத்தை  அருளியது -என்று நினைத்து இருப்பது –

பின்னையும் ஜீயர் புருஷகாரமாய் இருக்கும் இவள் -அகலகில்லேன் -என்று ஆழம் கால்
படா நிற்க -புருஷகார பூதை யாகிறபடி எங்கனே என்னில் -அல்லி மலர் மகள் போக
மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -திருவாய் மொழி -3-10-8-நிற்கச் செய்தேயும் ஜகத்
நிர்வாகமும் செல்லுகிறது-சொல்லுகிறது இல்லையோ -பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்றும் -ஜகத் நிர்வாகமும் செல்லுகிறது-சொல்லுகிறது இல்லையோ – என்று அருளிச் செய்தார் –

(அவன் ஸ்ரீ தேவி பூமா தேவியுடன் ஈடுபட்டுக் கொண்டே இருந்தும் படைத்துக் காத்து அழிக்கும் கார்யங்களை செய்வது போல் ஒரே சமயத்தில் எம்பெருமானிலும் ஈடுபடுவதும் புருஷகாரம் செய்வதும் பிராட்டிக்கும் பொருந்தும் என்றவாறு)

————————————————————————————————

எழுபதாம் வார்த்தை

நம்பியை கோவர்த்தன தாசர் -அர்ஜுனனைப் போலே யாகிலும் யோக்யதை வேண்டாவோ-என்ன –ஷத்ரியத்வாதிகளும் வேணுமோ என்றார் –

(அர்ஜுனன் முமுஷு அல்லவே -ப்ரபன்னனுக்கு அர்ஜுனன் போலே யாவது தகுதி இருக்க வேண்டாவோ என்பதை கேள்வி -அவன் ஷத்ரியன் என்பதால் ஷத்ரியத்வம் வேண்டும் என்றும் சொல்ல வேண்டி வருவதால் கேள்வி சரியானதல்ல என்கிறார்-மேல் அதிகாரி -பிராட்டி -எம்பெருமான் இவர்களிடம் இருக்க வேண்டியவற்றை விவரிக்கிறார்)

அதிகாரிக்கு
அபராதாநாம் ஆலயத்வமும் –
ஆர்த்தியும் –
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் –
ஸ்வ ஞானமும் –
ஸ்வரூப பிரகாசமும் -வேணும் –

(ப்ரபத்யே -என்று உணர்த்தப்படும் அதிகாரிக்கு -தான் குற்றங்களுக்கு எல்லாமே கொள்கலன் என்று அனுசந்திக்க வேண்டும் என்றும் -எம்பெருமானைப் பெற வேண்டும் என்னும் துடிப்பும் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்தவ அனுசந்தானங்களும் -சேஷத்வமும் அசித்வத் பாரதந்தர்ய ஸ்வரூப ஞானமும் வேண்டும்)

(அதிகாரி பற்றி அருளிச் செய்து த்வய பதார்த்தம் அருளிச் செய்கிறார் மேல்)

பூர்வ அபராதம் பொறுக்கைக்கு புருஷகாரம் வேணும் –
கால நியதி பாராமைக்கு மதுப்பு வேணும் –
புருஷகாரம் தான் ஜீவிக்கைக்கு சீலாதி குணங்கள் வேணும் –
அது தான் -கார்யகரம் ஆகைக்கு ஞான சக்தியாதி குணங்கள் வேணும் –

சம்சாரிகளுக்கு ருசி ஜநகமுமாய் –
முமுஷுக்களுக்கு சுபாஸ்ரயமுமாய்
முக்தருக்கு போக்யையும் ஆகைக்கு
விலஷண விக்ரகம் வேணும் –

(ஐயப்பாடு அறுக்கவும் ஆதரம் பெருக்கவும் அரங்கனுக்கு அழகு உண்டே)

உபாய சௌகுமார்யத்துக்கு நைர பேஷ்யம் வேணும் –

அதுதான் பலத்தோடே வ்யாப்தம் ஆகைக்கு ஸ்வீகாரம் வேணும் –

(பூர்வ வாக்யார்த்தம் அருளிச் செய்து மேல் உத்தர வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார்)

கீழ் புருஷகாரம் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதை யாக வேணும் –

கீழ் உபாய பூதன் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதன் ஆக வேணும் –

சேஷத்வத்து அளவு அன்றிக்கே –
சேஷத்வ வ்ருத்தியும் வேண்டும் –

(என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -அவா தத்வ த்ரயங்களையும் தாண்டி அன்றோ பெருகி இருக்கும்)

ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி அன்றிக்கே
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேண்டும் –

———————————————————————————————

எழுப்பத் தோராம் வார்த்தை

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸர்க்கு –

ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது
தானும் பிறரும் தஞ்சம் அன்று –
ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை
அனுசந்தித்து பிழைத்தல் –
நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு மேற்பட்டது இல்லை
என்று அருளிச் செய்தார் –

(வங்கி புரத்து நம்பி எம்பெருமானாரின் சிஷ்யர் -மணக்கால் நம்பியுடைய சிஷ்யரான வங்கி புரத்தாய்ச்சி வம்சத்தர்)

———————————————————————————————–

எழுபத்து இரண்டாம் வார்த்தை

எம்பெருமானார் பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று –பிரபத்தி என் -என்று விண்ணப்பம் செய்ய –

கனிப் பழம் -தானே -கம்பு அற்றால் போலே இருக்கும் என்ன -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது – என்று விண்ணப்பம் செய்ய –

(ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”-ஞான சாரம் -1-)

ஆகில் இவ் அர்த்தத்தை திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் கேளும் -என்ன —இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் -சக்ரு தேவ -என்று அருளிச் செய்ய –சஹ சைவ–சடக்கென திருவடிகளில் விழ வேணும் -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் இவ் அர்த்தத்தை திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் இத்தனை பிசகுகைக்கு உண்டோ –
ஒரு ரேகை மாத்ரம் என்ன – (அதாவது நாம் பற்றும் பற்று ஸ்வீகாரம் ஆகுமோ -என்ற சங்கை வேண்டாம் – கையில் உள்ள ரேகை போலே அதிகாரி விசேஷணம் ஆகவே இருப்பது பரிகாரம் என்ற கருத்து – )இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய –

ஆகில் இவ் அர்த்தத்தை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஸ்ரீ பாதத்திலே கேளும்  என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய

அவரும் ததீய பர்யந்தமாக  காணீர் -என்று அருளிச் செய்தார் –
பாகவத அபிமானத்துக்கு விஷயம் ஆகிறவனுக்கு பிரபத்தி ஏற்பட்டு எம்பெருமான் அருள் கிட்டும் -(இதுவே ஸர்வ முக்தி பிரசங்கம் ஆகாமைக்கு ஹேது )

(ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-

ஆர்த்த பிரபத்திக்கு வேஷம் இருக்கும் படி என் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கேட்க–கனிப் பழம் காம்பற்றால் போலே இருக்கும் என்று அருளிச் செய்தார் என்று பிரசித்தம் இறே
ப்ராப்ய ருசியாலே –ப்ராப்ய ஆபாசங்களிலும் ப்ராபக ஆபாசங்களிலும் பற்று அற்று ஆர்த்தியால் வந்த பாரவஸ்யத்தாலே பிராபத்தான ரூபேண திருவடிகளில் விழும் விழுக்காடு என்று-ஆர்த்த ப்ரபத்தியைச் சொல்லுகிறது–யதா பரா நந்வயி பிர்த்துஸ் சக ஸ்ம்ருதி பிர்விநா -தேன தத் புரதஸ் பாதாஸ் ஸா பிரபத்திஸ் ததா பவேத் -என்று இந்த பிரபத்தி வேஷம் தான் ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் ஸங்க்ரஹேன சொல்லப்பட்டது இறே)

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -49-60–அரும் பத விவரணத்துடன்–

December 8, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நாற்பத்து ஒன்பதாம் வார்த்தை –

பொன்னைப் புடமிடப்  புடமிட உருச் சிறுகி -ஒளி விஞ்சி – மாற்று எழுமா போலே –
சங்கோசம் அற்று -ஞான விகாசம் உண்டானவாறே –
நாய்ச்சிமாருடனே சாம்யம் சொல்லலாய் இறே இருப்பது-
இத் ஆத்மாவுக்கு என்று -திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் .

(ஜீவாத்மாவாகிற பொன் -ரஹஸ்யத்ரய ஞானமாகிய அக்னியில் புடமிடப்பட்டால் தேஹ சம்பந்தத்தால் ஏற்படும் அழுக்குகள் நீங்கி முக்த தசையில் கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்ய ஷட்கம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் –ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பது –விஸ்லேஷத்தில் தரியாமை -ததேக நிர்வாஹகத்வம் -இவற்றில் ஸாம்யம் பெறுகிறான் -)

————————————————————————————————

ஐம்பதாம் வார்த்தை

அழுக்கு அடைந்த மாணிக்கத்தை நேர் சாணையிலே ஏறிட்டு கடைந்தால்
பளபளக்கை வடிவாய் இருக்குமா போலே –
அஞ்ஞனான சேதனனுக்கு
திரோதான நிவ்ருத்தியிலே அடியேன் என்கை வடிவாய் இருக்கும்
என்று முதலியாண்டான்-

(ரஹஸ்யத்ரய ஞானமாகிய சாணையில் இட்டுக்கடைவதால் சரீர சம்பந்தத்தால் ஏற்பட்ட அஞ்ஞானம் கர்மம் வாஸனை ருசி முதலியவை கழிந்தால் முக்த ஜீவனான ரத்னத்துக்கு பகவத் சேஷத்வம் ஆகிய ஒளி பிரகாசிக்கும் என்றவாறு -)

———————————————————————————————

ஐம்பத்து ஒன்றாம் வார்த்தை

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு
அழியாத பேர் -அடியான்-என்று -இறே -என்று
வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஸ்ரீ வசன பூஷணம் சூரணை -77-

(அஹங்காரம் தான் –தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் –
இரண்டு வகை பட்டு இறே இருப்பது –அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதி களாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத- ஆத்மா தாஸ்யம் –இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –)

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

———————————————————————————————-

ஐம்பத்து இரண்டாம் வார்த்தை

உத்பத்தியையும் –
உடைமையையும் –
உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் –
உடைமைக்கு உடைமை இல்லாமையையும் –
உத்பத்தி யானவைகளை உடையவனுடைய உயர் நிலையையும் –
உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும்
சொல்லுகிறது திரு மந்த்ரம் –

(காரணனைச் சொல்லும் அகாரம் -மற்ற அனைத்துப் பொருள்களும் அவனிடமிருந்து உண்டானவை என்றும் சொல்கிறது -உகாரம் அவ்வுடைமை பிறருக்கு உரியது அல்லாமல் இருக்கும் ஊற்றத்தைச் சொல்கிறது- நமஸ் ஸப்தம் எம்பெருமானின் உடைமையான ஜீவனுக்கு ஒரு உடைமையும் இல்லாததைச் சொல்கிறது -நார ஸப்தம் அனைத்தும் உடைமைகளையும் உடைய உடையவனின் சேஷித்வம் போன்ற உயர்வுகளைச் சொல்கிறது – அயன ஸப்தம் உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான அநாதியான உறவைச் சொல்கிறது – என்று கருத்து -)

தர்மத்தையும் –
தர்மத்தில் களை யறுப்பையும் –
கண்ணனையும்
கண்ணன் கருத்தையும் –
கதியையும்
பற்றும் படியையும் –
பரனையும்
பற்றுமவனையும் –
பாபத்தையும்
பாபத்தில் பற்று அறுகையும் –
சொல்லுகிறது சரம ஸ்லோகம்

(ஸர்வ தர்மான் -உபாயாந்தரங்களையும் -பரித்யஜ்ய -அவற்றில் உபாய புத்தியை அடியோடு விடுகையும் -மாம் என்று கண்ணனையும் -ஏகம் உபாய ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி கூடாது என்கிற கண்ணனுடைய திரு உள்ளத்தையும் -சரணம் என்றும் உபாயத்தையும் -வ்ரஜ என்றும் அவ்வுபாயத்தைப் பற்றுகையும் -அஹம் என்று ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட பரனையும் -த்வா என்று அவனை உபாயமாகப் பற்றும் ஜீவனையும் -ஸர்வ பாபேப்யோ என்றும் அந்தப் ஜீவனுக்கு அநிஷ்டமான ஸகலத்தையும் மோக்ஷயிஷ்யாமி என்றும் அவை அடியோடே விட்டுப்போவதையும் சொல்கிறது என்று கருத்து -)

பெரிய பிராட்டியாரையும் –
பெருமாளையும் –
இவர்களுக்கு பிரிவில்லாமையும் –
பெருமாளுடைய பொருளையும் –
அருள் சுரக்கும் திருவடியையும் –
திருவடிகள் சரணாம் படியையும் –
அரணாம் திருவடிகளை அடையும் படியையும் –
அடைந்தார்  அனுபவத்தையும் –
அருள் உடையவன் ஆக்கத்தையும் –
அநுபவத்தில் உகப்பையும் –
அநுபவத்தில் அழுக்கை அறுக்கையும்
சொல்லுகிறது -த்வயம் –

திரு மந்த்ரத்தாலே -திரு அபிஷேகத்தை அநு சந்திப்பான் –

சரம ச்லோகத்தாலே -திரு மார்பில் நாச்சியாரோட்டைச் சேர்த்தியை அநு சந்திப்பான் —

த்வயத்தாலே திருவடிகளை அநு சந்திப்பான் –

(திருமந்திரத்தில் ஸ்வாமித்வம் பிரதானம் -ஆகவே திரு அபிஷேகத்தை அனுசந்திக்க வேண்டும்-மாம் என்றும் திருமார்பைத் தொட்டுக் காட்டுவதால் பெரிய பிராட்டியாருடன் சேர்ந்தே இருக்கும் பெருமானை அனுசந்திக்க வேண்டும்)

————————————————————————————————

ஐம்பத்து மூன்றாம் வார்த்தை

அர்த்த பஞ்சகமும் ரகஸ்ய த்ரயத்தில் சொல்லுகிற படி எங்கனே என்னில் –
திரு மந்த்ரத்தில் –
நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்று உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் ஷஷ்ட் யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –

சரம ஸ்லோகத்தில் –
மாம் -அஹம் -என்ற பதங்களால் பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
வ்ரஜ -என்கிற மத்யமனாலும் (முன்னிலைச் சொல்)-த்வா -மாஸூச -என்கிற பதங்களாலும் ஸ்வ ஸ்வரூபம் சொல்லிற்று –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கையாலே -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்தம் சொல்லிற்று -(நிவ்ருத்தி அடைந்ததும் தன்னுடைய பேறு கிட்டும் அன்றோ)
சர்வ பாபேப்யோ என்று விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
ஏக பதத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –

த்வயத்தில்
ச விசேஷணமான நாராயண பதத்தாலே பர ஸ்வரூபம் சொல்லிற்று –
பிரபத்யே -என்கிற உத்தமனாலே(தன்னிலைச் சொல்) ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி நமஸ்ஸூக்களாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
சரண சப்தத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –(உபாயம் க்ருஹம் ரக்ஷகம் மூன்று அர்த்தங்களும் உண்டானாலும் இங்கு உபாயமே விவஷிதம்)

ஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்தரம்

ஸ்வரூப அநு ரூபமான உபாயத்தை விதிக்கிறது சரம ஸ்லோகம்

இவை இரண்டு அர்த்தத்திலும் ருசி வுடையவனுடைய அநு சந்தான பிரகாரம் -த்வயம் –

சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -திரு மந்த்ரம்

சரண்ய ருசி பரிக்ருஹீதம்-சரம ஸ்லோகம்

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-த்வயம்

ஆத்ம யாதாம்ய பிரதிபாதன பரம் திருமந்தரம்

உபாய யாதாம்ய பிரதிபாதன பரம்-சரம ஸ்லோகம்

உபேய யாதாம்ய பிரதிபாதன பரம்-த்வயம்

பிராப்ய பிரதானம் -திருமந்தரம்

பிராபக பிரதானம் -சரம ஸ்லோகம் –

புருஷகார பிரதானம் -த்வயம்

——————————————————————————————-

ஐம்பத்து நாலாம் வார்த்தை –

ஆச்சார்ய  அங்கீகாரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி
திரு மந்த்ரத்தில் உபதேசித்த -அர்த்தத்தை – பத ஸ -அநு சந்திக்கும்படி சொல்லுகிறது –

1-ஈஸ்வர சேஷ பூதன் –
2-அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் –
3-விலஷண நிரூபகன் –
4-ததீய பர தந்த்ரன் –
5-தத் சம்பந்த யுக்தன் –
6-கிங்கர ஸ்வ பாவன் -என்று தன்னை அநு சந்திப்பது –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
1-ரஷகத்வ பிரதி சம்பந்தி -பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
2-அந்ய சேஷத்வ பிரதி சம்பந்தி -நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹத்வம் சொல்லி –
3-அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான -சேதன வைலஷண்யம் சொல்லி
4-ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –
5-சோபாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தம் சொல்லி –
6-அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த பிரகாரம் சொல்லித் தலைக் கட்டுகிறது 

——————————————————————————————-

ஐம்பத்து ஐஞ்சாம் வார்த்தை

(யஜ தேவ பூஜாயாம் -நம் சம்ப்ரதாயத்தில் திருவாராதானமே யாகம்)

நிருபாதிக தேவதா பரமாத்மா

நிருபாதிக ஹவிஸ் ஆத்மா

ஜீவாத்மாக்கள் ஜீவாத்மாவுக்கு செய்வது உண்டோ –

நிருபாதிக மந்த்ரம் -பிரணவம்

நிருபாதிக யாகம் -ஆத்ம யாகம்

தேவதாம் உத்திஸ்ய த்ரவ்யத் யாகோ யாக

(தேவதாம் உத்திஸ்ய த்ரவ்யத் யாகோ யாக-தேவதையை உத்தேசித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பிப்பது யாகமாகும் -யாக லக்ஷணம் –ஸாஷாத் தேவ புராணோ அசவ்-புராண புருஷனாலே எம்பெருமானே நேரே தேவ ஸப்தத்துக்குப் பொருள் ஆவான் – இயல்வான தேவனான எம்பெருமானுக்குத் தக்க இயல்வான ஹவிஸ்ஸு ஆத்ம சமர்ப்பணமே -இந்த யாகத்தைத்தெரிவிக்கும் இயல்வான மந்த்ரம் பிரணவமே ஆகும் -ப்ரகர்ஷ ஸ்தோத்ரம் -இத்தாலே நன்கு ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறார் -பிரணவம் -அர்த்தம்-)

——————————————————————————————–

ஐம்பத்து ஆறாம் வார்த்தை

திருநகரிப் பிள்ளை –

பிரதம பதத்தில் -(அகாரார்த்தம்)
1-ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வமும் –
2-சர்வ சேஷித்வமும் –
3-ஜகத் காரணத்வமும் –
4-ஸ்ரீ ய பதித்வமும் -சொல்லுகிறது —எங்கனே என்னில் –

ஆள்கின்றான் ஆழியான் -திருவாய்மொழி -10-4-3-என்றும்
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் -திருவாய் மொழி -1-4-5-என்றும் –
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -திரு நெடும் தாண்டகம் -10-என்றும் –
மூ வுலகும் காவலோன் -திருவாய் மொழி -2-8-5-என்றும் சொல்லுகையாலே–
சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –

(ஆழியான் – விரோதி நிரஸனம் -உகந்து ரக்ஷணம் நல்கி -கீர்த்தியே ஸர்வ ரக்ஷகத்வம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)

நெடியோய்க் கல்லது மடியதோ வுலகு -திரு வாசிரியம் -5-என்றும் –
உலகம் மூன்றுடன் வணங்கு -திருவாசிரியம் -3-என்றும் –
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -திருவாய் மொழி -3-8-1-என்றும் –
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவன் -பெருமாள் திரு மொழி -8-10-என்றும்–
இத்யாதிகளாலே சர்வ சேஷித்வம் சொல்லிற்று –

நாபிக் கமல முதற் கிழங்கே -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த (பஹுஸ்யாம்)தனி முதல் -திருவாய் மொழி -8-8-4-என்றும் –
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் மொழி -4-10-1-என்றும் –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய் மொழி -7-5-4-என்றும்–
இத்யாதிகளாலே ஜகத் காரணம் சொல்லிற்று –

திருநாரணன் -திருவாய் மொழி -4-1-1-என்றும் –
திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-என்றும் –
திருமால் -திருவாய் மொழி -8-3-9-என்றும்–இத்யாதிகளாலே ஸ்ரீ ய பதித்வம் சொல்லிற்று – 

தாதர்த்யத்தாலே (அவனையே ப்ரயோஜனமாகக் கொண்ட ஆறாம் வேற்றுமை)-ஏறிக் கழிந்த சதுர்த்தி யாலே
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் –திருவாய்மொழி -5-7-3-என்றும் –
இன்று என்னைப் பொருளாக்கி -திருவாய்மொழி –10-8-9-என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக -பெரிய திருமொழி -8-10-9-என்றும் –
அடியேன் பிறந்தேன் -பெரிய திருமொழி -8-9-8-என்றும்–இத்யாதிகளாலே
சேஷத்வம் உதித்தபடி சொல்லிற்று –

த்வதீய பதத்தாலே -(உகாரார்த்தம்)
1-ஆத்மாவினுடைய சேஷத்வாந்தர நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வத்தையும் 
2-ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வத்தையும் சொல்லிற்று -எங்கனே என்னில் –

மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் -பெரிய திருமொழி –8-10-5-என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4-என்றும் –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து -பெரிய திருமொழி –6-3-5-என்றும்-இத்யாதிகளால் –
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவன் -திருவாய் மொழி -4-10-4-என்றும் –
வானவர் தம்மை யாளுமவன் -திருவாய் மொழி –3-6-4-என்றும் –
நான்முகனும் இந்திரனும் மற்றை யமரரும் எல்லாம் -திருவாய் மொழி –1-9-10-என்றும் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய -திருவாய் மொழி –2-7-12-என்றும் -இத்யாதிகளாலே –
ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வம் சொல்லிற்று –

த்ருதீய பதத்தாலே –(மகாரார்த்தம்)
1-ஆத்மாவினுடைய ஞான ஆனந்தத்வமும் –
2-ஞான குணகத்வமும் –
3-ப்ரக்ருதே பரத்வமும் –
4-நித்யத்வமும் -சொல்லுகிறது -எங்கனே என்னில் –

என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை -நான்முகன் திருவந்தாதி -54-என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்றும் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-என்றும் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -திருவாய் மொழி -8-8-5-என்றும்–இத்யாதிகளாலே
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வம் சொல்லிற்று –

(தர்மி ஞானம் -தர்மபூத ஞானம் -ஆக்கையில் புக்கு என்பதால் பிரக்ருதியில் நின்றும் வேறுபட்ட -நின்ற ஓன்று நித்யத்வம் -நான்குக்கும் நான்கு பிரமாணங்கள்)

ஆக பிரதம பதம் சொல்லிற்று ஆய்த்து

மத்யம பதத்தாலே
ஆத்மாவினுடைய சாதநாந்தர நிவ்ருத்தியும் –
சரீர வத் சேஷத்வமும் –
ததீய சேஷத்வமும் –
பரதந்த்ரனுக்கு அநு ரூபமான ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –

வந்து எய்துமாறு அறியேன் -திருவாய் மொழி –7-6-6-என்றும் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -திருவாய் மொழி –5-7-1-என்றும் –
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஒன்றில்லை -திருமாலை -17-என்றும் –
உன்னைக் காணும் மார்க்கம் ஓன்று அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் -திருமாலை -32-என்றும்–
இத்யாதிகளாலே சாதநாந்தர நிவ்ருத்தி சொல்லிற்று

உம் உயிர் வீடுடையான் -திருவாய் மொழி -1-2-1-என்றும் –
அடியேன் உள்ளான் -திருவாய் மொழி –8-8-2-என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
என்னுடைய வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் —இத்யாதிகளாலே
சரீர வத் சேஷத்வம் சொல்லிற்று –

பயிலும் திருவுடையார் எவரேலும் -திருவாய் மொழி -3-7-1-என்றும் –
எம்மை யாளும் பரமர் -திருவாய் மொழி –3-7-1- என்றும் –
பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடைய நாதர் -திருவாய் மொழி –3-7-2-என்றும் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1-என்றும் –
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம் -பெரிய திருமொழி -2-6-4-என்றும் —இத்யாதிகளாலே
ததீய சேஷத்வம் சொல்லிற்று –

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -திருவாய் மொழி –6-2-8-என்றும்
செய்ய சூழ் சுடர் ஞானமாய்-திருவாய் மொழி –3-6-7-என்றும் –
மழுங்காத ஞானமே படையாக -திருவாய் மொழி –3-1-9- என்றும் –
துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -திருவாய் மொழி –3-10-9- என்றும் —இத்யாதிகளாலே
சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –

(உபாயத்துக்கு ஞானம் சக்தி பிராப்தி பூர்த்திகள் அவஸ் யமாகையாலே அவற்றைத் நான்கு பாராக்களில் சொல்லுகிறது)

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் -பெரிய திருமொழி -6-7-1-என்றும் –
ஆட் கொள்ள வல்லான் -பெரிய திருமொழி –8-9-6-என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் -திருவாய்மொழி -2-7-7-என்றும் –
அருளி அடிக் கீழ் இருத்தும் -திருவாய்மொழி -8-8-11-என்றும் —இத்யாதிகளாலே சர்வ சக்தித்வம்-

எல்லாம் உலகும் உடைய ஒரு மூர்த்தி -திருவாய்மொழி -5-8-4-என்றும் –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட் செய்வார் மேவிய வுலகும் மூன்றவை யாட்சி -திருவாய்மொழி –8-1-1- என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் -நாச்சியார் திருமொழி -11-3-என்றும் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -திருவாய்மொழி –1-2-7- என்றும்–இத்யாதிகளால்  –(பூர்த்தி-)அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லிற்று –

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் -திருப்பல்லாண்டு -10-என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -திருவாய்மொழி -7-9-10-என்றும் –
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு -பெரிய திருமொழி -2-8-9-என்றும் –
உயிர்கள் எல்லா வுலகும் வுடையவன் -திருவாய்மொழி -3-2-11-என்றும்–இத்யாதியாலே
நிருபாதிக சேஷித்வம் (பிராப்தி -)சொல்லிற்று

ஆக இவற்றாலே –
சர்வஞ்ஞத்வம் –
சர்வ சக்தித்வம் –
அவாப்த சமஸ்த காமத்வம் –பூர்த்தி –
நிருபாதிக சேஷத்வம் –பிராப்தி –
சொல்லி ஈஸ்வரனுடைய உபாயத்வம் சொல்லிற்று –

நார சப்தத்தாலே  சேதன அசேதனங்களுடைய நித்ய சமூகங்களை சொல்லிற்று
நிற்கின்றது எல்லாமே நெடுமால் என்றும் ஓதாதார் கற்கின்றது எல்லாம் கடை –நான்முகன்-54

அயன சப்தத்தால்-ஈஸ்வரனுடைய
சர்வ ஸ்வாமித்வமும் –
சர்வ வித பந்துத்வமும் –
சர்வ ஆதாரத்வமும் –
சர்வ வித நியந்த்ருத்வமும் சொல்லிற்று -எங்கனே என்னில் –

எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் -திரு வாய்மொழி –1-9-1-என்றும் 
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –திருவாய்மொழி -9-6-4-என்றும் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் -திருவாய்மொழி -8-8-2-என்றும் –
நானுன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை -நான்முகன் திருவந்தாதி -7-என்றும்–இத்யாதியாலே
சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவர் -திருவாய் மொழி -5-1-8-என்றும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -திருவாய்மொழி -7-8-1-என்றும் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் –
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் அவை யல்ல னாய் -திருவாய்மொழி -3-6-9-என்றும் —இத்யாதிகளாலே
சர்வ வித பந்துத்வம் சொல்லிற்று –

ஆவிககோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1-என்றும் –
நாட்டினான் தெய்வம் எங்கும் -திருமாலை -10-என்றும் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -திருவாய் மொழி -5-2-8- என்றும் —இத்யாதிகளாலே
சர்வ ஆதாரத்வம் சொல்லிற்று –

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய்மொழி -2-9-3-என்றும் –
நீ யோநிகளைப் படை யென்று நிறை நான்முகனைப் படைத்தவன் -திருவாய்மொழி -1-5-3-என்றும் –
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் -திருச் சந்த விருத்தம் -109-என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் -திருவாய்மொழி -6-10-11-என்றும் —இத்யாதிகளாலே
சர்வ நியந்த்ருத்வம் சொல்லிற்று –

இனி சதுர்த்தியாலே –
சேதநருடைய -தேச கால அவஸ்தா பிரகார உசித வ்ருத் அபேஷை சொல்லுகிறது -எங்கனே என்னில் –

உள்ள வுலகளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ -பெரிய திருவந்தாதி -76-என்றும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திருவாய்மொழி -3-3-1-என்றும் –
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட -நாச்சியார் திருமொழி -4-1-என்றும் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மொடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய்மொழி -8-3-7-என்றும்
சென்றால் குடையாம் முதல் திருவந்தாதி-53-என்றும் –
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29-என்றும்-
அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்றும் –
கூவிப் பணி  கொள்ளாய் -திருவாய்மொழி -8-5-7- என்றும் –
நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே -பெரிய திருமொழி -1-9-1-என்றும் – இத்யாதிகளாலே
வ்ருத்தி அபேஷை சொல்லித் தலைக் கட்டுகிறது

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிற பாட்டை பிரணவ அர்த்தமாக அனுசந்திப்பது

(விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-)

யானே -திருவாய் மொழி -2-9-9-என்கிற பாட்டை மத்யம பத அர்த்தமாக அனுசந்திப்பது –

(யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-)

எம்பிரான் எந்தை -பெரிய திருமொழி -1-1-6-என்கிற பாட்டை த்ருதீய பத அர்த்தமாக அனுசந்திப்பது —

(எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-)

ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி -3-3-1- என்கிற பாட்டை சதுர்த்தி அர்த்தமாக அனுசந்திப்பது —

(ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

அகாரத்தோ விஷ்ணுர் ஜகதுதய ரஷா பிரளய க்ருத் மகார்த்தோ ஜீவஸ் தது பகரணம்
வைஷ்ணவ மிதம் உகாரோஸ் அனந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோஸ் த்ரயீ சாரஸ் த்ர்யாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத் –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஸ்லோகி முதல் ஸ்லோகம் –

(அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-உலகத்தைப்படைத்து காத்து அழிக்கும் விஷ்ணுவே அகத்தின் பொருள் -ஜீவன் மகாரத்தின் பொருள் -விஷ்ணுவின் உடைமையான இந்த அசேதனப்பொருள்கள் ஜீவனுக்கு இந்திரியம் சரீரம் முதலியவற்றால் இருந்து கொண்டு பிராகிருத போகங்களை அனுபவிக்கவும் இஷ்ட சாதனங்களை அனுஷ்ட்டிக்கவும் உபகரணமாய் இருக்கின்றன -இந்த ஜீவ பர ஸம்பந்தம் சேஷ சேஷி பாவத்தைக்காட்டும் உகாரம் -ருக் யஜுர் சாம மூன்றுவேத சாரங்களான அகார மகார உகாரங்களைச் சேர்த்து ப்ரணவமாகி இந்த அர்த்தங்களை உணர்த்துகிறது –)

—————————————————————————————————–

ஐம்பத்து ஏழாம் வார்த்தை

பிராட்டியை  ஈஸ்வரனோடு  சமானை என்பாரையும் -சேதனரோடு சமானை என்பாரையும் -வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ -என்கிற சப்தத்தாலே –

(ஏகாயன -ஏகமே அயனம் மிதுனம் அயனம் அல்ல என்பர் -ஸ்ரீயதே -இவள் அவனை ஆச்ரயிக்கிறாள் -ஸ்ராயதே -மற்ற அனைவரும் இவளை ஆஸ்ரயிக்கிறார்கள்)

ஆஸ்ரயணீயம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது மதுப்பாலே –

நிர்க் குணம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –

நிர் விக்ரஹன் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சரணவ் -என்கிற பதத்தாலே –

உபாயாந்தர நிஷ்டரை வ்யாவர்த்திக்கிறது -சரணம் -என்கிற பதத்தாலே –

உபாய ஸ்வீகாரத்தை உபாயம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -பிரபத்யே -என்கிற பதத்தாலே –

பிராப்யம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே

த்ரிமூர்த்தி சாம்யதையை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –

கைங்கர்யம் புருஷார்த்தம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சதுர்த்தியாலே –

கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது நமஸ்ஸாலே –

————————————————————————————————–

ஐம்பத்து எட்டாம் வார்த்தை –

பாடல் கொட்டையப் பிள்ளை வார்த்தை –

பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லுகிறது
உத்தர கண்டம் அநந்ய பிரயோஜனத்வம் சொல்லுகிறது –

பூர்வ கண்டம் -பகவத் கிருபைக்கு வர்த்தகம்
உத்தர கண்டம் -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் இருவருக்கும்-ஈஸ்வரன் -சேதனன் -ஓன்று போலே காணும் –

பூர்வ கண்டம் -அசித் வ்யாவ்ருத்தி
உத்தர கண்டம் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி –

(பூர்வ கண்ட அனுசந்தானம் எம்பெருமான் கிருபையை வளர்க்கும் -உத்தர கண்ட அனுசந்தானம் அவனுடைய உகப்பை வளர்க்கும் –சேதனனுக்கு சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -எம்பெருமானார் அநாதி காலமாக பெறாமல் இருந்த சேதனன் கிட்டியதால் -இருவருக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி -ஜீவனுக்கு பரமம் உகந்த கைங்கர்ய பேறு -ஈசனுக்கு சேதன லாபமாகிய பேறு -இவ்வாறு இருவருக்கும் இஷ்ட ப்ராப்தி-
அசித்வத் பாரதந்தர்யம் இருந்தாலும் உபாயமாகப் பற்ற ஞாத்ருத்வம் இருப்பதால் ஜீவ அசித் வ்யாவ்ருத்தி பூர்வ கண்டம் காட்டும் -ஜீவனை கைங்கர்யம் செய்யும் சேஷபூதனாகவும் ஈஸ்வரனைக் கைங்கர்யம் கொண்டு உகக்கும் சேஷியாகவும் காட்டுவதால் உத்தர கண்டம் ஜீவ ஈஸ்வர வ்யாவ்ருத்தி காட்டும் -)

நான் அடியேன் -பெரிய திருமொழி -7-3-1- என்று நம் பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு தஞ்சம் என்று நினைத்துக் கொண்டு போரா நிற்கச் செய்தேயும் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலே த்வயத்தை மிகவும் ஆதரித்து போருவார்கள் –

(சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1-)

இதனுடைய அருமையையும் பெருமையையும் சீர்மையையும் பாராதே -வந்தபடி வரச் சொல்லார்கள் நம் பூர்வாச்சார்யர்கள் என்று – அதிகாரி துர் லபத்தாலே -இதனுடைய அருமை சொல்லிற்று-கர்ம ஞான பக்தி நிர்வ்ருத்தி பூர்வகம் ஆகையாலே இதனுடைய பெருமை சொல்லிற்று –ரஹஸ்ய த்ரயத்தில் வ்யாவ்ருத்தி வுண்டாகையாலே சீர்மை சொல்லிற்று –

—————————————————————————————————-

ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை

த்வயத்தில் அர்த்தம் உபாயாந்தரங்களைப் பொறாது-த்வயத்தில் -சப்தம் சாதநாந்தரங்களைப் பொறாது –

பிரபத்தியை சக்ருத் என்பர் ஆழ்வான் – (உடனே)
ஸதா என்பர் முதலி யாண்டான்
ஸக்ருதேவ என்பர் பட்டர்

(ஸஹஸ -உடனே என்பதே ஸக்ருத் -தன்னுடைய தகுதியின்மையைப்பார்த்துத் தயங்காமல் எம்பெருமானின் குணத்தை விஸ்வஸித்து சடக்கென ப்ரபன்னனான் -இது கூரத்தாழ்வான் நிர்வாஹம்-ஒரு தரம் -என்றே பொருள்கொண்டு இதுவரை அநாதிகாலம் சம்சார ஆர்ணவத்தில் மகனனாய் இருந்தவன் ஒரு தடவை சரணம் புக்கு பின்பும் மேலுள்ள காலம் முழுவதும் ஆனந்த சாகரத்தில் அழுந்தி கிடப்பானாகையாலே ஆயுள் உள்ளவரை சரணம் புகுந்து கொண்டே இருந்தாலும் ஒரு தடவை தான் சொல்லலாமாகையாலே த்வயத்தை எப்போதும் அனுசந்திப்பதற்கும் ராம சரம ஸ்லோகப்படி ஒருதடவை அனுசந்திப்பதற்கும் முரண்பாடில்லை என்பது முதலியாண்டான் நிர்வாஹம் -எம்பார் நிர்வாஹமும் இதுவே –ஸக்ருத்வே எம்பெருமான் கைக்கொள்ள ஆச்சார்யர் உபதேசிக்கும் அதுவே போதுமானது -இனிமையாலே த்வய அனுசந்தானம் எப்போதும்-ஒரு கால் சொன்னால் போதாது என்ற நினைவால் அன்று என்பது பட்டர் நிர்வாஹம் -)

பக்தியில் காட்டில் பிரபத்திக்கு வாசி –
அதி க்ருதாதி அதிகாரம் –சர்வாதிகாரமாகையும் –
சாத்தியம் சித்தமாகையும் –
கர்ம அவசாநம் – சரீர அவசநாம் ஆகையும் –
அந்திம ஸ்ம்ருதியும்  அவனதேயாகையும் –

ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான் திருவடிகளிலே பண்ணின பிரபத்தி யாகையாலே –பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல பிரதமாகையாலே –
இவன் நம்மை உபாயமாக பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம் கடல் கலங்கினால் போலே கலங்கும்

உத்தர கண்டத்தாலே –
உன்னையே உபாயமாகப் பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போவான் ஒருவன் அல்லன் -என்று ஈஸ்வரன் மாஸூ ச என்று சேதனன் கண்ணா நீரை துடைத்தால் போலே -சேதனனும் ஈஸ்வரனை -மாஸூ ச-என்கிறான் –

பிரகிருதி -விசேஷணம்
விக்ருதி -அனுபவம்
ஏதத் விக்ருதி -வ்ருத்தி விசேஷம்
பிரக்ருத்யந்தரமும் விக்ருத்யந்தரமும் -ஆத்ம நாசம் –

(எம்பெருமானுக்கு விசேஷணமாய் இருப்பது ஜீவனுக்கு எப்பொழுதும் உள்ள இயல்பாகும் -எம்பெருமானைப்பற்றிய ஞானம் உண்டானபோது அவன் அருளாலே இவனுக்கு உண்டாகும் மாறுபாடு விக்ருதி அவனது அனுபவமாகும் -இவ்வனுபவம் முற்றினால் அவனுக்கு ஏற்படும் செயலில் பகவத் கைங்கர்யம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் அன்றோ -)

(எம்பெருமானுக்கு விசேஷணமாய் இருப்பது நமக்கு பிரகிருதி இயல்பு என்றும் எண்ணாமல் தன்னை ஸ்வ தந்த்ரனாகவும் -மற்றவர்களுக்கு விசேஷணமாகவும் எண்ணும் ப்ரக்ருதியாந்தரமும் -எம்பெருமானை ஒழிந்த தேவதாந்தரங்கள் முதலானோர்க்குத் தொண்டு செய்வதும் விஷயாந்தரங்களை அனுபவிப்பதும் விக்ருத்யாந்தரம் வ்ருத்த்யாந்தரம் -இவை மூன்றும் ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து விடும் -இருந்தும் இல்லாதது போல் ஆக்கிவிடும் -என்றவாறு)

“அஹமேவ பரம் தத்துவம்”-நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.“தர்சநம் பேத ஏவச”-சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”-இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.அஹம் ஸ்மராமி மத் பக்தம் -ஸ்ரீ வராஹப் பெருமாள் அருளிச் செய்தது உண்டே-தேஹாவஸாகே முக்கிஸ்யாத்”சரீர முடிவில் மோட்சமுண்டு -மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.-பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

—————————————————————————————————–

அறுபதாம் வார்த்தை

வருணன் விஷயத்தில் பெருமாள் பண்ணின பிரபத்தி பலியாது ஒழிந்தது –
சரணாகதியின் சீர்மையை அறியும் சரணாகதன் அல்லாமையாலே –

பெருமாள் வருணனை சரணம் புகுகிற போது ப்ரான்முகத்வாதி நியம சஹிதர் ஆனபடியாலே சரணாகதர் ஆவார்க்கு எல்லாம் நியம அபேஷை உண்டா என்று வேல் வெட்டி நாராயண பிள்ளை நம் பிள்ளையைக் கேட்க –
சரணாகதிக்கு நியம அபேஷை உண்டாய் செய்தார் அல்லர் –
இஷ்வாக்குகள் ஏதேனும் ஓன்று செய்யிலும் நியமத்தோடு அல்லது செய்ய மாட்டாத வாசனையாலே செய்தார் – என்று அருளிச் செய்தார் –

(-வேல் வெட்டி பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில் பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே – இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி – என்று உபதேசித்தான் ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய்  இருக்கையாலே – தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது –என்று அருளி செய்த வார்த்தை –)

—————————————————–————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -37-48-அரும் பத விவரணத்துடன்–

December 7, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——————————————-

முப்பத்து ஏழாம் வார்த்தை –

பர க்ருதேபரத்வம் -ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வம் –சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹதை -சேஷ பூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தி -நிவ்ருத்தமான ஸ்வரூபத்தை உடைய பாரதந்தர்யம் -பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வம் -அதுக்கு அனுரூபமான உபாயம் அவன் திருவடிகளே -உபாய பலமான கைங்கர்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்தி நாராயணன்-எங்கனே என்னில் –

பஹூ விரோதி பீஜமான ஸ்வா தந்த்ர்யம் மேலிட்டால் –
பகவத் பரதந்த்ரர் அல்லோமோ –
நமக்கு ஸ்வா தந்த்ர்யம் கடவதோ -என்று
அகார அர்த்தத்தை அநு சந்தித்து மீளுவான் –

அசேவ்ய சேவைகள் வந்து மேலிட்டால் –
நாம் அனந்யர்க்கு சேஷமோ –
பகவத் அனந்யார்ஹ சேஷ பூதர் அலலோமோ என்று
உகார அர்த்தைத்தை அநு சந்தித்து மீளுவான் –

சரீரத்திலே கார்ச்யஸ் தூலாதிகள் மேலிட்டால் –
நாம் ஞான ஆனந்த ஸ்வரூப பரர் அல்லோமோ –
நித்யர் அல்லோமோ –
ஏக ரூபர் அல்லோமோ –
நாம் ஸ்வயம் பிரகாசம் அன்றோ -மகார்த்தர்த்தை அநு சந்தித்து மீளுவான் –

தீர்ந்த இடம் அன்றோ –
ஒன்றால் ஒரு குறைவற்ற இடம் அன்றோ –
அநு பாவ்யமேல்லாம் நார சப்த அந்தர்கதம் அன்றோ என்று
நாராயண பதத்தை அநு சந்தித்து மீளுவான் —

ஸ்வரூபத்தோடு சேராத இதர பரிமாற்றங்கள் மேலிட்டால் –
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தி கைங்கர்யம் அன்றோ என்று
சதுர்த்தியில் அர்த்தைத்தை அநு சந்தித்து மீளுவன் –

இப்படி பரிஹரித்துக் கொள்ளாத போது –
பிறருக்கு உபதேசிக்கிறதுக்கும் –
இதில் தனக்கு பிறந்த ஞானத்துக்கும் என்ன பிரயோஜனம் உண்டு என்று அநு சந்திப்பான் –

——————-

முப்பத்து எட்டாம் வார்த்தை –

நஞ்சீயரான வேதாந்திகளுக்கு பெரிய பட்டர் ஏகாந்தத்திலே பணித்த பரம ரஹஸ்யம்

தேக ஆசக்த ஆத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்ம த்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்த வாபாச லோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபல தீச்சேத சதுர்தீம் ப்ரபன்ன—அஷ்ட ஸ்லோகி ஸ்லோகம் -4-

தேக ஆசக்த ஆத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்ம புத்தி -பவதி யதி-தேஹத்திலே ஊன்றின ஆத்ம புத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –த்ருதீயம் பதம் சாது வித்யாத் – பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-

ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி- ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்

இதர சேஷத்வதீ சேத்-அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்-இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –

ஆத்ம த்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் 
ஆத்ம த்ராண உந்முக சேத் – ஸ்வ ரஷணத்தில் ஊக்கம் யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் – நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –

பாந்த ஆபாஸ லோல – ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத் நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்-சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன-இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் –

முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

ஆறு வித அல் வழக்குகளும் போகுமே திருமந்த்ரத்தால் –
ஸ்வா தந்த்ர அபிமானம் போக வேண்டுமே -தாதர்த்த சதுர்த்தி யுடன் சேர்ந்த அகாரத்தால்
அந்நிய சேஷத்வம் -உகாரார்த்தம் -அநந்யார்ஹ சேஷத்வம்
தேஹ விலக்ஷணன் ஜீவாத்மா மகாரம் -சொல்லும் -தேஹாத்ம அபிமானம் போக்கும்
நமஸ் -ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிக்கும்-
சொல்லினால் சுடுவேன் –பிராட்டி -தூய அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு கற்பிக்கும் -வில்லும் சொல்லும் –
நித்ய நிருபாதிக பந்து அறிந்து -மால் பால் மனம் சுளிக்க மங்கையர் தோள் கை விட்டு அவன் உகப்புக்காகவே -இருக்க வேண்டுமே

அர்த்த பஞ்சக அர்த்தமும் திரு மந்திரத்தில் உண்டு –
பிரணவத்தால் ஜீவ ஸ்வரூபம்
நாராயண -பர ஸ்வரூபம்
அகண்ட நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபம் –
சகண்ட நமஸ் -பிரிந்த நமஸ் -ம ந -ம விரோதி ஸ்வரூபம்
ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி பிராப்ய ஸ்வரூபம்

நவ வித சம்பந்த அர்த்தமும் இதில் உண்டு
ரமா பதி-பார்த்தா பிதா இத்யாதி -தத்வ த்ரயம் -மூன்றும் ஐந்தும் ஒன்பதும் எட்டு எழுத்திலே உண்டே
காரணத்வ வாசி அகாரம் பிதா -பித்ரு
ரக்ஷகத்வம் வாசி அகாரம் -ரக்ஷகம் ரஷ்ய –
லுப்த சதுர்த்தி சேஷ சேஷி
உகாரம் பர்த்தா பார்யா
மகாரம் ஜேயம் ஞாதா
நாராயணா -மூன்று தொடர்பு -வேற்றுமை தொகை அன்மொழி தொகை -இரண்டு சமாசங்கள்
ஸ்வாமி சொத்து -ஆதார ஆதேய
நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் அந்தராத்மா சரீர ஆத்மா
ஆய -போக்த்ரு போக்ய சம்பந்தம் -அவன் உகப்பே பிரயோஜனம்

இது பற்றியே பராசர பட்டர் நஞ்சீயருக்கு அருளிச் செய்த வார்த்தையே இது

நஞ்சீயரான வேதாந்திகளுக்கு பெரிய பட்டர் ஏகாந்தத்திலே பணித்த பரம ரஹஸ்யம்
திருமந்திர ஞானம் பிறந்தாலும் இங்கே இருக்கிறவன் ஆகையாலே ஸ்வரூபத்தோடே சேராத துரித பரம்பரைகள் வந்து மேல் இட்டால் திரு மந்திரங்களின் பதங்களின் அர்த்தங்களை அநுஸந்தித்து பரிஹரித்து மீளுவான்
எங்கனே என்னில்
1-பஹு விரோதி பீஜமான ஸ்வா தந்தர்யம் மேலிட்டால் –பகவத் பாரதந்த்ரர் அல்லோமோ –
நமக்கு ஸ்வா தந்தர்யம் கடவதோ -என்று அகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான் –

2-அஸேவ்ய சேவைகள் வந்து மேலிட்டால்-நாம் அந்நியருக்கு சேஷமோ – பகவத் அநந்யார்ஹ சேஷ பூதர் அல்லோமோ -என்று உகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

3-சரீரத்தில் கார்ஸ்ய ஸ்தூலாதிகள் மேலிட்டால் –நாம் ஞான ஆனந்த ஸ்வரூபர் அல்லோமோ -நித்யர் அல்லோமோ -ஏக ரூபர் அல்லோமோ –நாம் ஸ்வயம் ப்ரகாஸம் அன்றோ என்று மகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

4-நமக்கு ஒரு புருஷார்த்தம் சம்பாதிக்க வேண்டாவோ -என்று சாதன அனுஷ்டானம் பண்ணத் தேடினால் ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பகவத் பரதந்த்ரர் அல்லோமோ –
ஸ்வ தந்த்ரர் அன்றோ ரக்ஷணத்துக்குக் கடவன் என்று நமஸ்ஸில் அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

5-தனக்கு உபகாரமாக எழுந்து அருளி இருக்கிற அர்ச்சாவதாரத்திலே சில குறை வந்து பிறந்து- கண்ணுக்கு விஷயமானால் – சேதனனுடைய இழவுக்கு ஈஸ்வரன் -ப்ருசம் பவதி துக்கிதம் -ஆனால் போலே -ஈஸ்வரனுடைய இழவுக்கு துக்கிதன் ஆகாத போது நாராயண பதத்தோடு உறவு போட்கன் என்று அனுசந்தித்து- பர வ்யூஹ விபாவாதிகள் எங்கும் உள்ள குறைகள் தீர்ந்த இடம் அன்றோ –ஒன்றால் ஒரு குறைவற்ற இடம் அன்றோ – அநு பாவ்யம் எல்லாம் நார ஸப்த அந்தர்கதம் அன்றோ என்று நாராயண பதத்தை அனுசந்தித்து மீளுவான் –

6-ஸ்வரூபத்தோடு சேராத இதர பரிமாற்றங்கள் மேலிட்டால் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தி கைங்கர்யம் அன்றோ என்று சதுர்த்தியில் அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

7-இப்படி பரிஹரித்துக் கொள்ளாத போது -பிறருக்கு உபதேசிக்கிறதுக்கும் இதில் தனக்குப் பிறந்த ஞானத்துக்கும் என்ன பிரயோஜனம் உண்டு என்று அனுசந்திப்பான் –

8-ஸ்வ பவ்ருஷத்தாலே தன் காரியம் தான் நிர்வஹிப்பதாக நினைத்தான் ஆகில் அகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

9-அந்நியரை ரக்ஷகராக நினைத்தான் ஆகில் உகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

10-சாதனத்தில் தனக்கு அன்வயம் உண்டு என்றும் ஸ்ரீ வைஷ்ணவ சம புத்தியும் பண்ணினான் ஆகில் நமஸ்ஸூ ஸப்தார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

11-ஈஸ்வர விபூதி பூதரோடே தனக்கு ராக த்வேஷம் நடையாடிற்று ஆகில் நார சப்தார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

12-ஒவ்பாதிக பந்துக்கள் பக்கலிலே பந்துதா பிரதிபத்தி பண்ணினான் ஆகில் அயன சப்தார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான் –

13-புத்ர பஸூ அந்நாதி தொடக்கமாக- ஸ்வர்க்க ஐஸ்வர்யம் நடுவாக -கைவல்யம் முடிவாக- உண்டானவற்றில் புருஷார்த்த புத்தி பிறந்ததாகில் சதுர்த்தியில் அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்-

ஸர்வம் வஸ்து- பிரமாணம் ப்ரமேயம்
பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ப்ரமேயம் -த்ரவ்யம் -அத்ரவ்யம்
அத்ரவ்யம் -ஸப்தாதிகள் ஐந்தும் -ஸத்வம் ரஜஸ் -தமஸ் -ஸம்யோகம் -சக்தி
த்ரவ்யம் -ஜடம் -அஜடம்
ஜடம் -ப்ரக்ருதி -24 தத்வங்கள் -காலம் -3
அஜடம் -பராக் -ப்ரத்யக் –
பராக் -நித்ய விபூதி-தர்ம பூத ஞானம்
ப்ரத்யக் -ஜீவன் ஈஸ்வரன்
ஈஸ்வரன் -பரம் வ்யூஹம் -வைபவம் அந்தர்யாமி -அர்ச்சை
ஜீவன் -பத்தன் முக்தன் நித்யன்
பத்தன் -புபுஷு முமுஷு
புபுஷு -அர்த்த காம பரன் -தர்ம பரன்
தர்ம பரன் -தேவதாந்த்ர பரன் -பகவத் பரன்
முமுஷு -கைவல்யார்த்தி -பரம மோஷார்த்தி
பரம மோஷார்த்தி -பக்தன் -பிரபன்னன்
பிரபன்னன் -ஏகாந்தி -பரமைகாந்தி
பரமைகாந்தி -திருப்தன் -ஆர்த்தன்

——————————————————————————————–

முப்பத்தொன்பதாம் வார்த்தை-

ஸ்த்ரீ ஸூத்ராதிகளுக்கு திருமந்திர பாடத்தில் அதிகாரம் இல்லை –
அர்த்தத்தில் அதிகாரம் உள்ளது -என்று நம்பிள்ளை அருளிச் செய்ய –

அத்ருப்தரைப் போலே -திருக் குருகூர் தாசர் இருந்தவாறே –

இவர்க்கு புருஷார்த்தம் ஸித்திக்கு உறுப்பான அர்த்தத்தில் அதிகாரம் உண்டாகில்
அப்ரயோஜனமான பாடத்தில் அதிகாரம் இல்லை –
ஆக இத்தால் இவருக்கு வருமது என் -என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————-

நாற்பதாம் வார்த்தை –

திருமந்த்ரத்தாலே –
1-ரஷகத்வ பிரதி சம்பந்தி பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
2-அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லி –
3-அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான சேதன வைலஷண்யம் சொல்லி –
(இம்மூன்றும் பிரணவ அர்த்தங்கள் )

4-அஹங்கார மமகார நிவ்ருத்தி பூர்வகமான ஸ்வரூப பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –(இது நமஸ் அர்த்தம் -எல்லை என்றது ததீய பாரதந்தர்யம் )

5-ஔபாதிக நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக பந்துத்வம் சொல்லி –
6-அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லித் தலை கட்டுகிறது –(இவ்விரண்டும் நாராயண –ஆய -பதார்த்தங்கள் )

விசேஷண பிரதானம் -ஆஸ்ரயணம்
விசேஷ்ய பிரதானம் – உபாயம்
உபய பிரதானம் -உபேயம் –

(ப்ரபத்யே -பிரபதனம் -த்வய பூர்வ வாக்யம் -ஆஸ்ரயிக்கும் போது புருஷகார பிராட்டியே பிரதானம்-உபாயம் -விபூதிகள் குணங்களுடன் கூடிய நாராயணன் பிரதானம்
உத்தர வாக்கியம் -உபேயம்-மிதுனம் பிரதானம்)

ரஷகனாய் -சேஷியாய் இருக்கும் இருப்பை -உணருகை -ஈஸ்வர ஸ்வரூபம் –
ரஷ்யமாய் சேஷமாய் இருக்கும் இருப்பை உணருகை -ஆத்ம ஸ்வரூபம் –
ரஷகத்வ ஸ்வாமித்வங்கள் வ்யவஸ்த்திதானால் போலே -ஸ்ரீய பதித்வமும் -வ்யவஸ்திதம் –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த பதார்த்தங்களும் பகவத் அபிமாநத்திலே கிடக்கிறது –

புறம்புள்ளார் இப்படி சொல்லா நிற்கச் செய்தே தாங்கள் அபிமாநியா நிற்பர்கள் –
தாய் மடியிலே கிடந்தது உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையில் அகப்பட்டுக்
கூப்பிடுமா போலே தன்னை உணர்ந்த தஸை –

கண்ணை விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப் பயனாய் இருக்குமா போலே –
எம்பெருமானை உணர்ந்த தசை –

உபாய தசையிலே எம்பெருமானாலே எம்பெருமானை பெறும் இத்தனை ஒழிய
தம் தாம் நன்மை கொண்டு பெற நினையார் -ஸ்வரூப ஞானம் உடையார் –

(தன்னாலும் பிறராலும் வரும் நன்மை விலைப்பால் போலே-அவனால் வரும் நன்மை முலைப்பால் போலே)

1-இந்த ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்தால்-அகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
2-ஒருவனுடைய வ்ருத்தத்தை இட்டாதல்-ஜென்மத்தை இட்டாதல் -தண்ணியதாக நினைக்கில் மகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
3-பிறர் தனக்கு ரஷகர் என்று இருந்தானாகில் உகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
4-தனக்குத் தான் ரஷகன் என்று நினைத்தபோது நமஸ் ஸுக்கு அர்ஹன் அல்லன் –
5-தன் கார்யத்துக்கு தான் கடவன் என்று நினைத்த போது நாராயண பதத்துக்கு அர்ஹன் அல்லன் –
6-செய்ததொரு கைங்கர்யத்தை தான் உகத்தல் பிறர் உகத்தல் செய்யில் சதுர்த்திக்கு அர்ஹன் அல்லன் –

இவ் வர்த்தம் ஒரு அதிகாரி அறிந்து தவிர்ந்த போது திருமந்த்ரார்தம் கை புகுந்ததாகக் கடவது –அல்லாத போதை திருமந்த்ரதோட்டை சம்பந்தம் சந்தேஹம் ஆம் இத்தனை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

————————————————————————————————

நாற்பத்தோராம் வார்த்தை

1-ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் மேலிட்டதாகில் பிரணவத்தில் பிரதம பதார்த்தை அநு சந்திப்பான் –
2-இதரர் பக்கலில் சேஷித்வ பிரதிபத்தி நடை யாடிற்றாகில் உகாரராத்தை அநு சந்திப்பான் 
3-தேவோஹம் என்று இருந்தானாகில் மகார்த்தத்தை அநு சந்திப்பான் -(சேஷத்வ ஞானானந்த ஸ்வரூபன் – அஹம் சப்த கோசரம் -இதம் சப்த கோசரம் அல்லவே)
4-ஸ்வ ரஷண விஷயத்தில் கரைந்தான் ஆகில் நமஸ் சப்தார்த்தை அநு சந்திப்பான் –
5-ஈஸ்வர விபூதிகளோடே காறு காறு என்றானாகில் -நார சப்தார்த்தை அநு சந்திப்பான் —
6-சப்தாதி விஷயங்களில் போக்ய புத்தி பிறந்ததாகில் ஆய சப்தார்த்தை அநு சந்திப்பான் –

———————————————————————————————–

நாற்பத்து இரண்டாம் வார்த்தை –

பிரமாணம் -பத த்ரய யாத்மகமாய் இருக்கும் -(திரு மந்த்ரம்)
பிரமேயம் பர்வ த்ரய யாத்மகமாய் இருக்கும் –(அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹம்)
அதிகாரி -ஆகார த்ரய யாத்மகமாய் இருக்கும் –

பிரமாணம் பதத் த்ரய யாத்மகமாகை யாவது -பிரதம பதம் -மத்யம பதம் -த்ருதீய பதம் –

பிரமேயம் பர்வ த்ரய யாத்மகமாகை யாவது -பொருந்த விட்ட திருவடிகளும்(ஆசந பத்மத்தில் அழுந்திய திருவடிகள்) -அஞ்சல் என்ற திருக்கையும் – சிவந்த திரு முகமண்டலமும் (முகமும் முறுவலும்)-

அதிகாரி ஆகார த்ரய யாத்மகமாகை யாவது -அனந்யார்ஹ சேஷ பூதனாய் -அநந்ய சரணானாய் -அநந்ய போக்யனாய் இருக்கை –

பிரதம பதம் -அனந்யார்ஹ சேஷத்வ பிரகாசகம் –
பொருந்த விட்ட திருவடிகள் அனந்யார்ஹதைக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் –

மத்யம பதம் அநந்ய சரணத்வ பிரகாசமாய் இருக்கும் –
அஞ்சல் என்ற திருக்கை அநந்ய சரணத்வத்துக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –

த்ருதீய பதம் அநந்ய போக்யத்வ பிரகாசமாய் இருக்கும் —
சிவந்த திருமுக மண்டலம் அநந்ய போக்யத்வ பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

————————————————————————————————

நாற்பத்து மூன்றாம் வார்த்தை –

வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து -ஆஸ்ரணீயம் –
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட வஸ்து -உபாயம்
சமஸ்த கல்யாண குண விசிஷ்ட வஸ்து -போக்யம்
ஆஸ்ரயண பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்
சேஷத்வ பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்
கைங்கர்ய பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்
பிரமாணம் -நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி -திருவாய் மொழி -1-3-8-என்றும்-(ஆஸ்ரயண பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்)
திருமாலே -நானும் உனக்கு பழ வடியேன் –திருப்பல்லாண்டு -11-(சேஷத்வ பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்)என்றும் –
அடிமை செய்வர் திருமாலுக்கு -திருவாய் மொழி -6-5-11-(கைங்கர்ய பிரதி சம்பந்தி -ஒரு மிதுனம்)என்றும்-

(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் -ஆஸ்ரயண சவுகர்ய ஆபாத குண விஸிஷ்ட நாராயணன்-மாம் ஸப்தார்த்தம்
ஞானம் சக்தி ஸர்வ ஸ்வாமித்வமாகிற ப்ராப்தி அவாப்த சமஸ்த காமத்துவமாகிய பூர்த்தி -கருணை -ஆஸ்ரித கார்ய ஆபாத குண விஸிஷ்ட நாராயணன் -அஹம் ஸப்தார்த்தம்
மிதுனமே ஆஸ்ரயிக்கத்தக்கவர்கள் -அனுபவிக்கத்தக்கவர்கள் என்பதற்கு பிரமாணங்கள்)

————————————————————————————————-

நாற்பத்து நான்காம் வார்த்தை

சர்வ ரஷகத்வமும் -சர்வ ஸ்மாத் பரத்வமும் -ஸ்ரீ ய பதித்வமும் -சர்வ சேஷித்வமும் –
சர்வஞ்ஞத்வமும் -சர்வ சக்தித்வமும் -சமஸ்த கல்யாண குணாத்மகத்வமும் -இவை அகார்த்தங்கள் –
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் -அனந்யார்ஹ சேஷத்வமும் -உகாரார்த்தம் –
ஞாநாநந்த லஷணத்வமும் ஞான குணகத்வமும் -ஏக ரூபவத்வமும் -ஸ்வயம்
பிரகாசத்த்வமும் -இவை மகாரார்த்தம் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -ஸ்வரூப அநு ரூபமான உபாயமும் –உபாயத்துக்கு எல்லை நிலமான அத்யந்த பாரதந்த்ர்யமும் -பாரதந்த்ர்ய பராகாஷ்டையான
ததீய சேஷத்வமும் -இவை நமஸ்  சப்தார்த்தம்
சேதன அசேதனங்களினுடைய நித்யத்வமும் -சமூஹத்வமும் -அசங்க்யாதத்வமும் -இவை
நார சப்தார்த்தம் –
சர்வ வித பந்துத்வமும் -உபய விபூதி நாதத்வமும் -ஆதாரத்வமும் -காரணத்வமும் –
நியந்த்ருத்வமும் -இவை -அயன சப்தார்த்தம் –
நித்ய கைங்கர்யம் -சதுர்த்யர்த்தம்

————————————————————————————————

நாற்பத்து ஐஞ்சாம் வார்த்தை

ஸ்வரூபம் ஸ்வரூபாந்தரத்தை பொறாது(அநந்யார்ஹ சேஷத்வம் -அந்நிய சேஷத்வம் பொறுக்காதே)
சாதனம் சாதநாந்தரத்தை பொறாது
பிரயோஜனம் பிரயோஜநாந்தரத்தை பொறாது

————————————————————————————————-

நாற்பத்து ஆறாம் வார்த்தை –

பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுமாக திரு வீதியிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே –
விளையாடிக் கொண்டு வருகிற பிள்ளைகளைப் பார்த்து – பிள்ளைகாள் -திரு மந்த்ரத்திலே பிறந்தால் – போலே உங்களுக்கு இத்தனை செருக்கு என் என்று அருளிச் -செய்தார்

(வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, -121)

(குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-)

(திருமந்த்ரமே பெற்ற தாய் -அத்தை உபதேசித்து அருளிய ஆச்சார்யரே தஞ்சமாகிய தந்தை -அருளப்பெற்ற நாம் ஸம்ஸார பயம் இல்லாமல் செருக்குடன் வாழலாமே -)

————————————————————————————————–

நாற்பத்து ஏழாம் வார்த்தை

திருக் குருகை பிரான் பிள்ளான் அருளிச் செய்த வார்த்தை –
பிரணவத்தில் மத்யம அஷரத்தை சிஷித்து வைத்தும் -ராஜ த்வாரங்களிலே நுழையா நின்றார்கள் –
மத்யம பதத்தை சிஷித்து வைத்தும் இடை வேலிக்கு பிணங்கி நின்றார்கள் –
த்ருதீய பதத்தை சிஷித்து வைத்தும் தாம் தாம் போக்தாக்களாக நின்றார்கள்-

(நமஸ்ஸு மமகாரத்தை அடியோடு அறுக்கிறது என்றும் அறிந்து வைத்தும் தனது நிலத்துக்கும் அண்டை நிலத்துக்கும் இடையிலுள்ள வெளியைப் பற்றி வழக்காடுகிறார்களே)

—————————————————————————————————

நாற்பத்து  எட்டாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  பாரதந்த்ர்யம் இருக்கும்படி என் என்று கேட்க –

ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக சர்வ சக்தியை அண்டை கொண்டு –
உபாயத்தில் -கந்தல் அற்று -உபேயத்தில் த்வரை விஞ்சி இருக்கை –
பாரதந்த்ர்யம் என்று அருளிச் செய்தார் –

(தான் பற்றிய பற்றையும் உபாயமாக நினையாமல் பேற்றிலே த்வரையுடன் இருக்க வேண்டுமே -)

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -25-36-அரும் பத விவரணத்துடன்–

December 7, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

 ——————————————-

இருபத்தஞ்சாம் வார்த்தை –

(ரக்ஷகத்வாதிகளை அழித்தல்
அர்த்த அநர்த்த ஹேது)

ரஷகத்வத்தை அழித்தான் –
சேஷத்வத்தை அழித்தான் –
பரத்வத்தை அழித்தான் –
விக்ரஹத்தை அழித்தான் –
அருளை அழித்தான் –
அடியாரை அழித்தான் -(ஜங்கம விமானம் -உலாவும் பெருமாள் -நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே)
விபூதியை அழித்தான் –
பந்தத்தை அழித்தான் –
வ்ருத்தியை அழித்தான் –

தன்னை சரீரியாக பிரபத்தி பண்ணி அனர்த்தப் படுதல்
தன்னை சரீரமாக பிரபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல்
செய்யும் அத்தனை -என்று பிள்ளை அருளிச் செய்தார் –

(அநாதி காலமாகப் ஸம்ஸாரி சேதனன் நிற்கும் நிலைகளை அருளிச் செய்கிறார் –
அழித்தான் -என்றது இல்லை செய்தான் -தானும் இல்லையென்று ஆக்கி பிரசாரத்தின் மூலம் பிரர்களையும் இல்லை யாக்கினான் –
எம்பெருமானுக்கு சரீரமாக எண்ணுவதே இவ்வனர்த்த பரிஹாரமாக உஜ்ஜீவிக்க உபாயமாகும்)

(ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் –ஒரு நல் சுற்றம் –அத்விதீயமான -விலஷண -பந்து- பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித-அகவாயில் நின்று சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் பரம பந்து -பாந்தவ ஆபாத லோசனாய் தானே அழிந்து போகிறாய் -)

————————————————–

இருபத்து ஆறாம் வார்த்தை –

(பாரதந்தர்ய வியவசாய வ்ருத்தி நாஸ ஹேதுக்கள்)

பௌருஷத்தை -ஏறிட்டுக் கொள்ளுகை -பாரதந்த்ர்யத்தை அழிக்கை –
வியாபாரத்தை -ஏறிட்டுக் கொள்ளுகை-வ்யவசாயத்தை அழிக்கை –
விஷயாந்தரங்களிலே அந்வயிக்கை வ்ருத்தியை அழிக்கை –
என்று ஆச்சான் பிள்ளை –

————————————————–

இருபத்து ஏழாம் வார்த்தை –

ஜீவ ஈஸ்வரர்களின் பரிமாற்றம் -ஞானம் ஞானத்துக்கு விநியுக்தம் -ஞானம் ஞானத்துக்கு சேஷம்-ஜீவ ஸ்வரூப திரேதாந நிரூபணம் -ஸ்தூல ஸூஷ்ம சரீர கதநம்–மதி முக மடந்தையர் முகத்திலே விழிக்கை

ஞானம் -ஞானத்தை விநியோகம் கொள்ளும்படி என் என்னில் –
இவன் கரண த்வாரா விநியோகப்படும்
அவன் விக்ரஹத் த்வாரா விநியோகம் கொள்ளும் –

ஞானம் ஞானத்துக்கு சேஷமானபடி என் என்னில் –
யாதொன்றினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி யாதொன்றில் கிடக்கிறது
அது சேஷியாக தட்டில்லை –

(ஞான ஸ்வரூபனான ஜீவன் ஞான ஸ்வரூபனான எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதும் எம்பெருமான் ஏற்றுக் கொள்ளுவதும் -கை கால் அவயவங்கள் போல் சாமரம் வீசுவதும் ஏற்றுக்கொள்ளுவதும் போல் -சென்றால் குடையாம் இத்யாதி –
ஜீவ ஸ்வரூபன் சேஷத்வம் -ஈஸ்வர ஸ்வரூபன் சேஷித்வம் -ஜீவனுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம்)

இப்படி இருக்கிற ஞானத்தை அவித்யை மூடினபடி எங்கனே என்னில்
ஞான ஆஸ்ரயம் ஆகையாலே -கல்லு கலங்காதே -நீர் கலங்கும் இத்தனை இறே
ஞானத் த்ரவ்யம் இறே -எப்போதும் ஒக்க கலங்கி அல்லது இராதே
அப்ராப்தத்திலே கலங்குதல் -ப்ராப்தத்திலே கலங்குதல் இறே –

(ஸூர்யன் ஒளியை மேகம் மறைப்பது போல் தர்மபூத ஞானத்தை அவித்யை கர்மம் மறைக்கும் -தர்மபூத ஞானம் விபூவாய் இருந்தாலும் நீர் போல் கலங்கிக் கொண்டே இருக்கும் -தர்மி ஸ்வரூபன் அணுவாய் இருந்தாலும் விகாரமற்று இருக்கும் -கல்லைப் போல் கலங்காமல் இருக்கும்-தர்மி ஸ்வரூம் குணாஸ்ரயமாய் இருப்பதால் த்ரவ்யமாகும் -தர்ம பூத ஞானம் கிரியாஸ்ரயமாய் இருப்பதால் த்ரவ்யமாகும் -இதற்கு லீலா விபூதியிலும் நித்ய விபூதியிலும் கலக்கமுண்டு -இங்கு மதிநலம் அருளப்பெறுவதற்கு முன்பு பிராகிருத விஷயங்களைக் கண்டு கலங்கும் -அங்கு எம்பெருமான் வைலக்ஷண்யம் கண்டு என் வருகிறதோ என்ற கலக்கம் உண்டாகும் -)

ஸ்தூலத்தில் ஸூஷ்மம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான இந்த்ரியங்களிலே வியாபித்து இருக்கும் -ஸ்தூலம் கழியும் பொழுது –
சரீரம் யதவாப் நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர
க்ருஹீத் வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாஸ யாத் -கீதை -15-8-என்கிறபடியே
வாயு கந்தத்தை கொய்து கொண்டு போமா போலே இந்திரியங்கள் ஸார வத்தையாம் –

(ஸ்தூலத்தில் ஸூஷ்மம் இருக்கும்படி எங்கனே என்னில் —வாயுவானது மணமுடையவற்றிலிருந்து மணத்தை அவற்றின் ஸூஷ்ம அவயவங்களுடன் கூட எடுத்துச் செல்வது போல் ஜீவனும் சாரமான இந்திரியங்களை ஸூஷ்ம சரீரத்துடன் எடுத்துச் செல்கிறான் -ஆக ஸ்தூலத்தில் ஸூஷ்மம் மலரில் மணம் போலவும் பாலில் நெய் போலவும் ஸாரமாய் இருக்கிறது என்று கருத்து —அருசி அவிஸ்வாசம் அடியாகப் புகும் -பகவத் விஷயத்தில் ருசியின்மை அநாதி பாப வாசனையால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை யினாலே உண்டாகும்)

ஸரீரம் யத வாப்நோதி யச்சாப் யுத் க்ராமதீஸ்வர– க்ருஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர் கந்தா நிவாஸயாத்–৷৷15.8৷৷

ஈஶ்வர: – – இந்த்₃ரியங்களை நியமிப்பவனான ப₃த்₃த₄ஜீவன்(கரணாதிபன் -கரண அதிபன் -பத்தாத்மா -அதிப அதிபன் ஸர்வேஸ்வரன் ) யத் ஶரீரம் அவாப்நோதி- (முன் ஶரீரத்தை விட்ட பின்)யாதொரு ஶரீரத்தை அடைகிறானோ (அந்த ஶரீரத்திற்கு) யச்ச அபி உத்க்ராமதி – எந்த ஶரீரத்திலிருந்து கிளம்புகிறானோ (அந்த ஶரீரத்திலிருந்து) வாயு:ஆஶயாத் – காற்றானது – (மலர் முதலான மணமுடைய) பொருள்களிலிருந்து க₃ந்தா₄ந் – மணம் மிக்க சிறு துகள்களை இவ – (எடுத்துச் செல்வது) போல் ஏதாநி – இந்த இந்த்₃ரியங்களை க்₃ருஹீத்வா – (கிளம்பும் ஶரீரத்திலிருந்து) எடுத்துக் கொண்டு ஸம்யாதி – (அடையும் ஶரீரத்துக்குச்) செல்கிறான்

அருசி அவிஸ்வாசம் அடியாகப் புகும் –ஸ்தூலம் விட்ட போதே ஸூஷ்மம் விடாது ஒழிவான் என் என்னில் –பிராக்ருத தேசத்திலே அப்ராக்ருத சரீரம் இல்லாமையாலே -இது யாதொரு
தேசத்திலே விட்டது -அது அப்ராக்ருத தேசமாம் இத்தனை –

1-இது கமன சாதனம் ஆகையாலும்
2-போகிற வழியில் உள்ள தேவ ஜாதிகள் சத்கரித்து ஸ்வரூபம் பெறுகைக்கும்
3-ஸூஷ்மம் விட்டால் பன்னிரண்டு கோடி ஆதித்யர்களை அழலைக் கழற்றி ஒளியைத் தேக்கினாப் போலே தேஜஸ்ஸு புற வெள்ளப் பட்டால் -தேவ தேசங்களில் உள்ளார் எதிர் நின்று கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற ஒண்ணாமையாலே —

4-இன்னம் ராஜ மஹிஷி அந்தப்புரத்துக்கு போகும் போது தட்டுப்பாய் இட்டுப்
போகை ஸ்வரூபம் இறே –
அப்போது தேவ ஜாதிகளும் –
இடர் கெட எம்மைப் போந்தளியாய் –திருவாய் மொழி -10-1-4-என்றும் –
நீணகர் நீளெரி வைத்தருளாய் -திரு விருத்தம் -92-என்றும் சொல்லி –
கருமம் தலைக் கட்டினால் எதிரம்பு கோக்கும் அசத்துக்கள் ஆகையாலே –
இப்படிப்பட்ட ஹேயர் கண் படாமல் போய் வைகுந்த திருவாசலில் இழிந்து
தட்டுப்பாய் வாங்கும் இத்தனை -அதாவது விரஜையில் இழியும் இத்தனை –

(ஸ்தூல ஸரீரம் இல்லாமல் ஸங்கல்ப லேசத்தாலேயே அங்கு கொண்டு போக முடியாதோ என்னில் ஞான ஆனந்த மயமான ஜீவ ஸ்வரூபன் ஸூஷ்ம சரீரம் விட்ட வுடன் 12 கோடி ஸூர்ய ஒளி தேஜஸ்ஸுடன் இருக்காய் அந்த ஒளி வெள்ளத்துக்கு முன் தேவனே ஜாதிகள் ஸத்காரம் செய்து தங்கள் ஸ்வரூபம் பெற முடியாதே -ராஜ மஹிஷியைப் பல்லக்கிலே தட்டுப்பாயிட்டு இவர்கள் கண்களிலே காட்டாமல் அழைத்துச் செல்வது போல் ரஜோ தமோ குண தேவஜாதிகள் காணாமல் ஸ்வரூபத்தை மறைக்கும் தட்டுப்பாய் போல் ஸூஷ்ம சரீரத்தை இட்டு மறைத்து முக்த ஜீவனுடைய அழைத்துச் செல்கிறான் -விரஜா நதியில் இழிந்த பின்னர் தட்டுப்பாயை வாங்கி விடுகிறான் -)

திரை வாங்கினால் மதி முக மடந்தையர் முகத்தில் விழிக்கும் இத்தனை –
சதம் மாலா ஹஸ்தா -என்று ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்க கடவ அப்ரசஸ்ஸூக்கள்
இவனை ஒப்பிக்க வைத்தால் அவர்கள் முகத்திலே இறே இவன் விழிப்பது –

ஸ்வரூபம் இருக்கும்படி ஞானமாய் இருக்கும் -அவன் உகப்பிலே பிறக்கையாலே இறே
அதாவது
அவனுடைய ஞான ஆனந்தத்திலே இவன் சத்தை கிடக்கை –
அவன் உகப்பிலே பிறக்கையாலே இறே இவனை -தண்ணீர் தண்ணீர் -என்னப் பண்ணுகிறது(ஞாநீ துர்லப-அறிவார் உயிரானாய்)

———————————————————-

இருபத்து எட்டாம் வார்த்தை –

ரஷ்ய ரஷக சம்பந்தம் -பிதா புத்ர சம்பந்தம் -சேஷ சேஷி சம்பந்தம் –
பர்த்ரு பார்யா சம்பந்தம் -ஞாத்ரு ஞேய சம்பந்தம் -ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் –
சரீர சரீரி சம்பந்தம் -ஆதார ஆதேய சம்பந்தம் -போக்த்ரு போக்ய சம்பந்தம்-

(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி – 2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி – 3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி – 4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி – 5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி – 6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி – 7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி 8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி – 9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி-திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.-நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள்)

—————————————————————

இருபத்து ஒன்பதாம் வார்த்தை

பிரணவத்தில் சதுர்த்தியாலே சேஷத்வயை சொல்லி –
அகாரத்தாலே -சேஷத்வ பிரதிசம்பந்தியை சொல்லி –
மகாரத்தாலே சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் சொல்லி –
அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹத்வம்
சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –

அகாரத்தாலே -ரஷகனைச் சொல்லி –
மகாரத்தாலே -ரஷ்ய வஸ்துவைச்  சொல்லி –
சதுர்த்தியாலே -ரஷ்ய ரஷ்ய பாவத்துக்கு வேண்டும் உறவு சொல்லி –
அவதாரணத்தாலே -ரஷ்ய ரஷ்யகங்களினுடைய லஷ்ய லஷணம் சொல்லுகையாலே
உபாயம் சொல்லிற்று –

அகாரத்தாலே பிராப்ய வஸ்துவைச் சொல்லி –
மகாரத்தாலே ப்ராப்தாவைச் சொல்லி –
சதுர்த்தியாலே பிராப்ய பலமான கைங்கர்யத்தைச் சொல்லி –
அவதாரணத்தாலே -கைங்கர்ய பிரகாரத்தை சொல்லுகையாலே பிராப்யம் சொல்லிற்று –

பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று
நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி யாலே -புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
ம-என்கிற இத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்கிற இத்தாலே -உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
ஆகையாலே சகல வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகம் சொல்லிற்று –

——————————————————–

முப்பதாம் வார்த்தை –

ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி –
ஆஸ்ரயமான ஞான ஆனந்த லஷண வஸ்துவை பின்பு சொல்லுகைக்கு ஹேது என் -என்னில் –
1-அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்களில் காட்டில் –
பிரதான நிரூபகம் சேஷத்வம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும் –
2- தாஸ்ய ரசத்தில் இழிய ஒட்டாத ஆத்ம அனுபவ மாத்ரத்தில் பர்யவசிப்பதொரு
அந்தராயம் உண்டாகையாலே தத் பரிஹாரார்த்தமாகவும் –

3-நெருப்பிலே புக்கு சிலர் வேவாரைக் கண்டால் -அவர்களை இன்னார்
என்று பாராதே பற்றி எரிகிற நெருப்பை அவிக்கையிலே யத்னம்
பண்ணுவாரோபாதி -அதாஹ்யமான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் பற்றி தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை அகற்றுவிக்கையிலே தாத்பர்யம் ஆகையாலும் —

4-புஷ்பத்துக்கு ஸ்லாக்யதை பரிமளத்திலே ஆகிறவோபாதி -ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம் இஸ் ஸ்வபாவ விசேஷத்தாலே ஆகையாலும் -இவ்வோ பிரதான்யத்தை பற்ற பிரதமத்தில் சேஷத்வத்தை உபாதானம் பண்ணிற்று –

(சேஷத்வத்தை அறிவிக்கும் லுப்த சதுர்த்தியை பிரதமத்தில் சொல்லி -அந்த சேஷத்வத்துக்கு இருப்பிடமான ஞானானந்த லக்ஷணமான ஆத்மாவைக் காட்டும் மகாரத்தால் பின்பும் அருளிச் செய்வதற்கு நான்கு ஹேதுக்கள் காட்டப் பட்டன-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -திருக்கோஷ்டியூர் நம்பி கூரத்தாழ்வானுக்கு அருளிச் செய்த வ்ருத்தாந்தம்-)

—————————————————————

முப்பத்தோராம் வார்த்தை

இவ் வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டிய மாங்கல்ய ஸூத்ரம் திரு மந்த்ரம் -என்று
பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வர் –

(எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –முமுஷுபடி-சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள சூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு  திரு அஷரமாய்–மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –)

——————————————————————-

முப்பத்து இரண்டாம் வார்த்தை –

சம்சார வர்த்தகமாய் இருக்கும் தாலிக் கயிறு பதினாறு இழையாய் -இரண்டு சரடாய் -இருக்கும் –
கைங்கர்ய வர்த்தகமான மங்கல்ய ஸூத்ரம் எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வ ரஷணத்தில் அசக்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியாலும் –பலித்த ஈஸ்வரனை நாம் பேணுகையை வெளி இட்டு இருப்பது ஒரு சரடுமாய் இருக்கும் –

(முதல் சரடான பிரணவம் ஜீவனுடைய அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூப உணர்ச்சியையும் -அடுத்த சரடான நமஸ்ஸு தன்னை ரக்ஷித்துக்கொள்வதில் சக்தியின்மையையும் -மூன்றாவது சரடான நாராயண பதம் ஸ்வரூப உணர்ச்சியாலும் ஸ்வ ரக்ஷண அசக்தியாலும் எம்பெருமான் உகப்புக்கே யானதான கைங்கர்யத்தை வெளியிடுவதாய் இருக்கும் -)

(வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.-121)

—————————————————————

முப்பத்து மூன்றாம் வார்த்தை –

சேஷத்வ ஞானம் இல்லாதவர்க்கு பிரணவத்தில் அந்வயம் இல்லை –
தேகாத்ம அபிமானிகளுக்கு நமஸ்சில் அந்வயம் இல்லை –
கைங்கர்ய ருசி இல்லாதவர்க்கு நாராயண பதத்தில் அந்வயம் இல்லை –

சேஷத்வ ஞானம் இருக்கும் படியை இளைய பெருமாள் ஆசரித்து  காட்டினார் –
எங்கனே என்னில் –
பெருமாள் -நில் -என்ன- பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு-பெருமாள் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து -பெருமாளுக்கும் பிராட்டிக்கும் அடிமை செய்கையாலும் -எல்லை நிலத்திலே பிராட்டியை பிரிந்து பத்து மாசம் ஆறி இருந்த பெருமாள் -இளைய பெருமாளைப் பிரிந்து பகல் அமுது செய்யாதே -நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -என்று பின் தொடர்ந்த இளைய பெருமாளை -நீ என்னை யன்றி இலை – என்று பின் தொடரும்படி இருக்கையாலும் 

(நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்-ந ச அஹம் ராகவ-அயோ -53-31- உன்னைப் பிரிந்து உயிர் துறக்க மாட்டேன் -இளையபெருமாள் -கடைசில் பெருமாளைக் விட்டுப் பிரிந்து போது அன்றும் பகல் அமுது செய்யாமல் –நீ என்னை யன்றி இலை –
என்று  -அத்யைவ அஹம் கமிஷ்யாமி லஷ்மணோ கதாம் கதிம் -லஷ்மணன் சென்ற வழியிலே இன்றே பின் செல்வேன் -என்று பெருமாள் பின் தொடரும்படி இருப்பது இளையபெருமாளுடைய சேக்ஷத்வாசரணம் – இத்தால் பிராணவார்த்தம் அறிந்ததனால் சேஷத்வ ஞானம் இருக்கும்படியை இளைய பெருமாள் நடத்துக் காட்டினது நிரூபிக்கப் பட்டது -)

ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத அத்யந்த பரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரதாழ்வான் ஆசரித்து காட்டினார் –எங்கனே என்னில் –
என் மகன்-மோவாய் எழ வேணும் — (தாடி மீசை முளைத்தல் -புருஷனுக்கு உரிய ஸ்வாதந்த்ர்யம்-எழுதல் )என்ற கைகேயி யாகிற காள ராத்ரியினுடைய பாபப் பட்டோலையைச் சுட்டு -ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஜ்ஞ ந ச ராகவஸ்ய –மத் பாபமே வாத்ர நிமித்த வாஸீத் வன பிரவேச ரகுனந்தஸ்ய -என்றும் – விலலாப சபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம் -என்றும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹசி -என்றும் புனைந்த சடையும் உடுத்த மரவுரியும் புழுதி யாரந்த வடிவும் தளர்ந்த நடையுமாய் -ஸ்வரூப ஹானியை விளைப்பித்து பிணம் தின்னி இருந்த தேசத்தை விட்டு -எனக்கு-என்று கைகேயி வயிற்றில் பிறப்பு பின்னே தள்ள -பெருமாள் அருள் முன்னே நடத்த -ஒரு நடையிலே ஒன்பது நடை நடந்து -எழுந்து அருளி இருந்த சித்ர கூடத்திலே சென்று–வகுத்த திருவடிகளைப் பெற்று விடை கொண்டு -பின்பு அவத்யம் விளைக்கும் படை வீட்டில் புகாதே புறப்படை வீட்டிலே -ராமாகமன காங்ஷை யோடே -பதினாலாட்டை நாள் இருந்தபடியாலும் 

(நமஸ் பதத்தை அறிந்ததனால் ஏற்படும் அத்யந்த பாரதந்தர்ய ஞானத்தினால் ஸ்ரீ பரதாழ்வான் நடந்து காட்டினமை -கைகேயியுடைய பாவ வரத்தைச் சுட்டி எரித்து -பிணம் தின்னிக்கழுகு போல் இருந்த கைகேயி இருந்த தேசம் விட்டு -அவள் வயிற்றில் பிறப்பு பின் இருந்து தள்ள -பெருமாள் அருள் முன்னிருந்து இழுக்க –ஸ்வரூப அனுரூபமான அடி சூடும் அரசைப்பெற்று அத்யந்த பாரதந்தர்யத்தால் ஸ்வ ரக்ஷணத்தில் ஸ்வ அந்வயம் இல்லாமையை நடத்திக் காட்டினான்)

ஈஸ்வரனை பேணுகையை ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஆசரித்துக் காட்டினார் -எங்கனே என்னில் –
பெருமாள் அல்லாது அறியாத -ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லாது அறியாத -பெருமாள் உகப்பின் எல்லை நிலத்தில் அடிமை செய்கையாலும் –

இம் மூன்று அர்த்தத்தையும் பிராட்டி ஆஸரித்துக் காட்டினாள் -எங்கனே என்னில் –
கைகேயி வர வ்யாஜத்தாலே பெருமாள் வனத்துக்கு எழுந்து அருளுகிற போது பிரியாதே
பின் தொடர்ந்த உணர்த்தியாலும் –
பெருமாளைப் பிரிந்து தனி இருந்த அன்று தனி இறுப்பு  மாறத் தான் துரும்பு நறுக்காத ஸ்வ
ரஷணத்தில் அசக்தியாலும் –
பரிகரமாய் வந்த திருவடி வாலிலே கொளுத்தின நெருப்பை -சீதோ பவ-என்று அவித்து ஈஸ்வரனைப் பேணுகையாலும் –

(பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –-ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை-8-)

(சொல்லினால் சுடுவேன்-அது தூயன ராமன் வில்லுக்கு மாசு என்று ஸ்வ சக்தியை விட்டாள் திரௌபதி லஜ்ஜையை விட்டாள் -திருக்கண்ண மங்கை யாண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டாள்)

இவ் வர்த்தத்தை பரமாசார்யரான நம் ஆழ்வாரும் ஆசரித்துக் காட்டினார் -எங்கனே என்னில் –கண்கள் சிவந்து – 8-8
கரு மாணிக்க மாலை -8-9
நெடுமாற்கு அடிமை -8-10
என்ற மூன்று திருவாய் மொழியிலே –

(கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -இரண்டிலுமாக-பிரணவத்தில் நடுப் பதத்தாலும்-நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாக ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லி நின்றது –-அவனுக்கு தம்மை அநந்யார்ஹ சேஷமாக அனுசந்தித்து –மிகவும் ப்ரீதரானவர் –அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே -அவ்வளவில் பர்யவசியாதே -அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்து அளவும் சென்று -அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்று அத்யவசித்து –அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை-அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ- அதனைச் சொல்லுகிறது -நெடுமாற்கு அடிமை-)

————————————————————————————————

முப்பத்து நான்காம் வார்த்தை

ஈஸ்வர சேஷ பூதன் என்றும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் என்றும்
தத் விலஷண லஷண நிரூபகன் என்றும்
அஹங்கார நிவ்ருத்தன் என்றும்
தத் சம்பந்த யுக்தன் என்றும்
கிங்கரர் ஸ்வபாவன் என்றும்
தன்னை அநு சந்திப்பது –

———————————————————————————————–

முப்பத்து ஐந்தாம் வார்த்தை –

பிரமாண -பிரமேய -பிரமாதக்களை சேர அநு சந்திக்கும் படி –

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அனந்யார்ஹ சேஷத்வம் —
ஏதத் பிரகாசம் -பிரணவம்
அனந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் பொருந்த விட்ட திருவடிகள் –

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய சரணத்வம் –
ஏதத் பிரகாசம் -நமஸ்ஸூ —
அநந்ய சரணத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் அமைத்த திருக்கை -(வைத்த அஞ்சல் என்ற திருக்கை)

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய போகத்வம் –
ஏதத் பிரகாசம் -நாராயண பதம் –
அநந்ய போகத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் திரு முறுவல்

இதுக்கு கருத்து -தான் அறிகை -சைதன்யம் அறுகை -சதனாந்தரம் -சாத்யாந்தரம் அறுகை
அதாவது –
வேர் அறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை

(முதல் பதமான பிரணவத்தின் அர்த்தத்தை முற்கூறியபடி அறிந்தால் சேதனன் தன்னை அறிந்து அநாதி காலமாகத் தன்னை அறியாமல் இருக்க மூல காரணமாக இருந்த அசித் சம்பந்தம் வேரறுக்கப் பெறுவன் -நமஸ் பதார்த்தம் அறிந்தால் ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தியில் முயல்வதைத் தவிர்வான் -நாராயண பதார்த்தம் அறிந்து ஐஸ்வர்யம் -சப்தாதி விஷயங்கள் -கைவல்யாதிகளில் பற்று அறுந்து விடும் -)

(இவை எல்லாம் நமக்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவிக்ரஹத்தில் காணலாம்படி இருக்கும்.-‘அஞ்சல்’ என்று வைத்த திருக்கையும், கவிழ்த்த திருமுடியும், திருமுகமும் முறுவலும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகளும், திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்களுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்.-அஞ்சல்’ என்று வைத்த திருக்கை வாத்ஸல்யத்தையும், கவிழ்த்த திருமுடி ஸ்வாமித்துவத்தையும் குறிக்கின்றன.திருமுகமும் முறுவலும் ஸௌசீல்யத்தையும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகள் ஸௌலப்யத்தையும் குறிக்கின்றன.திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்கள் ஞான சக்திகளைக் குறிக்கின்றன)

————————————————————————————————–

முப்பத்தாறாம் வார்த்தை

திரு மந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்று- திருக் குருகை பிரான் பிள்ளான் அநு சந்தித்து அருளுவர் –

திரு மந்த்ரம் பிராப்யம் சொல்லுகிறது என்று -பிள்ளை திரு நறையூர் அரையர் அநு சந்தித்து அருளுவர் —

இவ்வாத்மாவினுடைய அனந்யார்ஹத்வம் சொல்லுகிறது என்று -நஞ்சீயர்  அநு சந்தித்து அருளுவர் —

இவ்வாத்மாவினுடைய பாரதந்த்ர்யம் சொல்லுகிறது என்று-எம்பார் -அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் மூன்று பதத்தாலும்- ஞான வைராக்ய பக்திகளை வெளி இடுகிறது -என்று முதலியார் (பெரிய முதலியார் நாதமுனிகள்)அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் மூன்று பதத்தாலும் -அபிஜன வித்யா வ்ருத்தங்களை வெளி இடுகிறது என்று ஆள வந்தார் அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் அர்த்த பஞ்சகத்தையும் சொல்லுகிறது என்று நம்பிள்ளை அநு சந்தித்து அருளுவர் —

பாணிக் க்ரஹணமும்- உடன் மண நீரும் -சதுர்த்தி கலவியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —

(மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும் நமஸ் பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் -)

ஸ்வரூபத்தில் உணர்த்தியையும் –
ஸ்வ ரஷணத்தில் அசக்தியையும் –
எம்பெருமானைப் பேணுகையும் சொல்லுகிறது என்று முதலி யாண்டான் அநு சந்தித்து அருளுவர் —-

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -13-24–அரும் பத விவரணத்துடன்–

December 6, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

 ———————————————————————–

பதின்மூன்றாம் வார்த்தை –

(ஈஸ்வர சேஷ விபூதி த்வயம்
ஜீவ த்ரைவித்யம்
பத்த த்ரைவித்யம்
புந ஜீவ த்ரைவித்ய கதநம்
த்ரிவித ஜீவ விஷய ஈஸ்வர ஸங்கல்பம்)

உபய விபூதியும் ஈஸ்வரனுக்கு சேஷமாய் இருக்கும் –
இதில் இருக்குமவர்கள் பக்தரும் -முக்தரும் -நித்தியரும் –
பத்தர் இரண்டு படி -முமுஷுக்களும் சம்சாரிகளும் –

இவர்கள் தான் அஹங்காரம் மம ஹாரம் கழிந்து இருப்பாரும் –
அஹங்காரம் மம ஹாரங்களிலிலே அகப்பட்டோம் என்று இருப்பாரும் –
அஹங்கார மம காரங்களோடு உடன்பட்டு இருப்பாருமாய் இருக்கும் –

இதில் கழிந்தவர் -நித்தியரும் முக்தரும் –
அகப்பட்டோம் என்று இருப்பார்-முமுஷுக்கள்
உடன்பட்டு இருப்பார் -நித்ய சம்சாரிகள் –

இதில் கழிந்து இருப்பாரை எம்பெருமான் தன் இனிமைக்கு விஷயம் ஆக்கும் –
அகப்பட்டோம் -என்று இருப்பாரை -தன் இரக்கத்துக்கு விஷயம் ஆக்கும் –
உடன்பட்டு இருப்பாரை தன் லீலைக்கு விஷயம் ஆக்கும் -என்று முதலி யாண்டான் –

(இனிமைக்கு விஷயம் ஆக்கும்-நித்ய முக்தர்களை எம்பெருமான் போக்ய பதார்த்தங்களைப் போல் அனுபவிப்பான்- இரக்கத்துக்கு விஷயம் ஆக்கும் –முமுஷுக்களை நிர்ஹேதுக கிருபையாலே முக்தர்கள் ஆக்குவான்-லீலைக்கு விஷயம் ஆக்கும் –ஸம்ஸாரிகளைப் படைத்தல் காத்தல் அழித்தல் முதலான செயல்களுக்கு உட்படுத்தித் தான் லீலா ரஸம் அனுபவிப்பான் -)

——————————————————-

பதினான்காம் வார்த்தை-

(ஈஸ்வரனுடைய லீலைக்கு விஷயம்
ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு விஷயம்)

(பெரிய)ஆச்சான் பிள்ளை கோஷ்டியில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரள இருந்து –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
அருளிச் செய்தபடி –

நாம் லீலைக்கு விஷயமோ -இரக்கத்துக்கு விஷயமோ -என்று
விண்ணப்பம் செய்ய –
உடன் பட்டு இருந்தோம் ஆகில் லீலைக்கு விஷயம் ஆகிறோம் –
அகப்பட்டோம் என்று இருந்தோம் ஆகில் -இரக்கத்துக்கு  விஷயம் ஆகிறோம் -என்று அருளிச் செய்தார் –

(கோவிந்த ஸ்வாமி சரித்ரம் அறிவோம் -உள்ளத்துக்கு உள்ளே இருந்து சம்சார ப்ராவண்யம் உண்ணும் தீராமல் இருக்காய் இங்கு இருந்து அனுபவித்து வர அருளினான் அன்றோ -)

——————————————————

பதினஞ்சாம் வார்த்தை –

(ஞான வ்யவசாய அபேஷா அருசி விசேஷங்கள்
அர்த்த பஞ்சக நிஷ்கர்ஷம்)

ஸ்வ  ஸ்வரூபம் -ஞான பிரதானம் –
உபாயம் -வ்யவசாய பிரதானம்
பிராப்யம் -அபேஷா பிரதானம்
விரோதி -அருசி பிரதானாம்
என்று -முதலி ஆண்டான் அருளிச் செய்வார்-

ஆத்ம ஸ்வரூபம் -தன்னுடைய சேஷத்வ பாரதந்தர்யத்தை உள்ளபடி அறிவதை முக்யமாகக் கொண்டிருக்கும்-மதி ஹர்ஷே மன ஞாநீ மன அவபோதனே -ஞானானந்தம் விட சேஷத்வ பாரதந்தர்யம் முக்கியம் -உபாயமாகிற எம்பெருமான் தன்னையே உபாயமாக உறுதி பூண்டவர்களையே நிர்ஹேதுமாக ரஷித்து அருள்வான் -ஆகையால் உபாயத்துக்கு வேண்டுவது உறுதியே என்று கருத்து -ஒழிவில் காலமெல்லாம் –இத்யாதி உனக்கே நாம் ஆட் செய்வோம் –பிரார்த்தனையையே முக்யமாகக் கொண்டிருக்கும் -அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தம் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் –வாசனைகளும் ருசிகளும்-தேஹ சம்பந்தமும்)ஐந்திலும் ருசி இல்லாமல் இருக்கையே முக்யம் –

(சம்பந்த உபாய பலன்களில் -உணர்த்தி -துணிவு -பதற்றம் -பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு -தோழி தாயார் மகள் -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் பேற்றுக்குத் த்வரிக்கையும் வேண்டுமே)

—————————————–

பதினாறாம் வார்த்தை

(அந்யதா விரோதி பஞ்சக நிரூபணம்
விரோதி த்ரயம்
ஸ்வரூப உபாய உபேய விரோதி நிரூபணம்)

அவன் போக்தா -இவன் போக்யம்
வ்யாமோஹம் -உபாயம் –
எதிர் விழி பெறுகை -உபேயம் –

(அஹம் அன்னம் அஹம் அந்நாத-படியே ஸ்வாமியாய் ஸர்வேஸ்வரன் சொத்தான ஜீவனைப்பெற்று அனுபவிப்பவனாய் இருப்பான் -சேதனன் அனுபவிக்கப் படுபவனாய் இருப்பான் -இருவருக்கும் போக்த்ருத்வமும் போக்யத்வமும் உண்டேயாகிலும் ஸர்வேஸ்வரனுக்குப் போக்த்ருத்வமும் சேதனனுக்கு போக்யத்வமும் முக்யம் என்று கருத்து
ஸ்வாமிக்கு உடைமையான ஜீவனை இது நம்முடைய வஸ்து-அளியல் நம் பையல் – என்னும் பேரபிமானமே -சேதனன் உஜ்ஜீவிக்க உபாயமாய் இருக்கும் –
சேதனன் அனுபவ ப்ரீதி உந்த கைங்கர்யங்களைச் செய்யும் பொழுது எம்பெருமான் ஆனந்தம் கொள்வதாகிற எதிர்விழி விழித்து அருள அத்தைப் பெருகையே ஜீவனுக்கு உபேயம்-அவன் ஆனந்தம் கண்டு நாமம் ஆனந்தப்பட்டு வேண்டுமே –படியாய்க் கிடந்து பவளவாய் காண வேண்டுமே)

அவனுக்கு மிடறு பிடியாய் போருவது-அந்யதா விரோதி -இது தான் ஐந்து வகை
1-தேஹத்தை ஆத்மாவாக புத்தி பண்ணுகையும்
2-இதர தேவதைகளை பர தத்வமாக புத்தி பண்ணுகையும்
4-இழி தொழில்களை உபாயமாக புத்தி பண்ணுகையும்
4-அவற்றாலே விஷயாந்தரங்களை  போக்யமாக புத்தி பண்ணுகையும்
5-நின்ற சேதனரை எல்லாம் விரோதிகளாக புத்தி பண்ணுகையும்

ஸ்வரூப விரோதி -உபாய விரோதி -உபேய விரோதி -என்று மூன்று –
தேஹாத்மா அபிமானம் -அந்ய சேஷத்வம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் -இவை ஸ்வரூப விரோதி –
ரஷகாந்தரம் -சாதநான்தரம் -சித்தோ உபாயத்தில் அவிஸ்வாசம்-இவை உபாய விரோதி –
ஐஸ்வர்ய கைவல்யம் -ஸ்வ அனுபவமான பகவத் கைங்கர்யம் இவை உபேய விரோதி –

ஸ்வரூப யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -தாந்தி பிறக்கிறது இல்லை –(புலனடக்கம் ஏற்படாது)
விரோதி யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -அச்சம் பிறக்கிறது இல்லை –
உபாய யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -வ்யவசாயம் பிறக்கிறது இல்லை –
போக யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -த்வரை பிறக்கிறது இல்லை –

(ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறையுடையோம்-ரக்ஷகாந்தரம் அற்று -அநந்ய கதித்வம் -கொண்டு -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்-என்று இருக்க வேண்டும்-சாதனாந்தரம் அற்று அகிஞ்சனனாக இருக்க வேண்டும் அன்றோ-என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -பரார்த்த கைங்கர்யம் –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யானும் கொள்ளும் சிறப்பே)

———————————————————–

பதினேழாம் வார்த்தை

(தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
ஈஸ்வரனுடைய சேஷித்வ சரீரித்வ தர்மித்வாதி
ஜீவனுடைய சேஷத்வ சரீரத்வ தர்மத்வாதி
சேஷித்வாதி சதுஷ்ட்யத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி
ஸதாசார்ய வைககல்ய த்வைவித்யம்
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஈஸ்வர கிருஷி நிரூபணம்
ஸால பஞ்சிகா நர்த்தனம்
முமுஷு ஞாதவ்யங்கள்)

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ பாதத்தில் அம்மங்கி அம்மாள் தண்டன் இட்டு -அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படியை அருளிச் செய்ய வேண்டும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எங்கள் ஆழ்வானும் –
தர்சநாந்திரிகளை நிரசிக்கவோ –
ஸ்வ தர்சன ஸ்தாபநம் பண்ணவோ –
தர்சனம் இருக்கும்படி கேட்கவோ -என்று அருளிச் செய்ய –

(விஷ்ணு சித்தர் என்றும் பெயர் பெற்றவர் -தினவு கெடச் சொல்லுவர் திருவெள்ளறை சோழியர் -என்ற புகழ் பெற்ற பூர்வ ஸிகர் -ஆழ்வானுக்குத் துல்யமாக எம்பெருமானாரால் அபிமானிக்கப்பெற்று எங்கள் ஆழ்வான் எனப்பெற்றவர்)

இவரும்
தர்சநாந்திரிகளை  நிரசிக்கவும்-ஸ்வ தர்சன ஸ்தாபனம் பண்ணவும் தேவரீர் எழுந்து அருளி இருந்தீர் –
அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படி அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு அருளிச் செய்த சாரார்த்த சதுஷ்டயம் –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் –
தங்களுக்கு தஞ்சமாகவும்
உத்தாரகமாகவும்
போக்யமாகவும் அனுசந்தித்தும்
உபதேசித்தும் போருவது நாலிரண்டு அர்த்தம் உண்டு -(நாலு ஞானங்களும் நாலு யதாத்ம்ய ஞானங்களும்-அறிந்து அறிந்து தேறித் தேறி -)

அவையாவன -ஸ்வரூப ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் –
விரோதி ஞானம் என்றும் விரோதி யாதாம்ய ஞானம் என்றும் –
பல ஞானம் என்றும் பல யாதாம்ய ஞானம் என்றும் –
உபாய ஞானம் என்றும் -உபாய யாதாம்ய ஞானம் என்றும் –

இதில் ஸ்வரூப -ஞானமாவது -ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும்படி –
பகவத் அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –
ஸ்வரூப யாதம்ய ஞானமாவது பகவத் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி பாகவத சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –

(அசேதன வ்யாவ்ருத்தி ஞான ஆனந்தங்கள்-புற இதழ் -அநந்யார்ஹ சேஷத்வ பாரதந்தர்யம் ஈஸ்வர வ்யாவ்ருத்தி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியனோ -உள் இதழ் -வடிகட்டி ததீய பர்யந்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை)

விரோதி ஞானமாவது -பரம பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு அழியாத நினைவு –
விரோதி யாதாம்ய ஞானமாவது -வருந்தி ஒரு பாகவதனோடே சம்ஸ்லேஷிக்க தொடங்கி –
அவன் பக்கலிலே தோஷ தர்சனம் பண்ணுகை –

(மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்வம் -கயா குண்டம் ஸங்கல்பித்து ஆயர் பிள்ளைகளை ஸம்ஸ்லேஷம் தொடர செய்தானே -போதயந்த பரஸ்பரம்)

பல ஞானமாவது -ஒரு பாகவதன் நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல்
செய்கை அன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம் போக்யமாம் போலே ஆகிலும் போக்யம் என்று இருக்கை –
பல யாதாம்ய ஞானமாவது -ஆர்த்த பிரபத்தியை பண்ணி -அக்கரைப்பட ஒருப்பட்டு இருக்கச் செய்தே – மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -அவர்களுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கே இருக்கையிலே ஒருப்படுகை –

உபாய ஞானமாவது- சம்பந்த ஞானம் –
சம்பந்த ஞானம் தான் –
சம்பந்த ஞானம் என்றும் –
சம்பந்த யாதாம்ய ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் நாலு வகையாய் இருக்கும் –

இதில் சம்பந்த ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும் தெளிய அறிகை —
சம்பந்த யாதாம்ய ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும் தெளிய அறிகை –

சம்பந்த ஸ்வரூப ஞானமாவது -அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும் தெளிய அறிகை –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமாவது -தர்மி தர்மங்களினுடைய ஐக்யத்தை தெளிய அறிகை அதாவது விசிஷ்ட வேஷத்தில் அவன் ஒருவனுமேயாய் -தான் இல்லை என்னலாம் படி இருக்கை-

(உடன் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -சரீராத்ம பாவம் -அதுக்கும் மேல் நியதி பிரகாரம் -பூவுக்கு மணம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -பரன் உடன் ஓன்றி என்னும் அல்லல் தீர்க்க வேண்டுமே -வெண்மை சங்குக்கும் வேஷ்ட்டிக்கும் பிரகாரம் -ஆனால் சேதன அசேதனங்கள் இவன் ஒருவனுக்கே பிரகாரம் -விஸிஷ்ட ப்ரஹ்மம் ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்-)

உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-

(கோட்டுக் கால் கட்டில் மேல்- சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல் இத்தால் – சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான சேஷத்வே கர்த்ருத்வம்-பர கத அதிசய ஆதேன இச்சையா- ஜ்ஞாத்ருத்வே கர்த்ருத்வம் கர்த்ருத்வே கர்த்ருத்வம் போக்த்ருத்வே கர்த்ருத்வம்-ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்த்தல் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆகிற கால்களை உடைத்தாய்-அந்த கர்த்ருத்வ விஷயமான தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற பட்டங்களை உடைத்தாய் தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற கட்டில் மேல் என்கிறது –மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்– சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற படுக்கையின் மேலேறி –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா – வர்க்கம் வர்க்கம் ஆகிற விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை -(குழல் )உடைய நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –)

சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே – பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை – அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –

தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —

ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை 
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –அசித் கல்பனாய் -முதல் (ஆத்ம சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்தை)அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து அங்கீகரிப்பதே -என்று கிருதஞ்ஞனாய் போருகை –

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ நம்மை அவன் அங்கீ கரித்தான்  என்று தன் பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும் விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –

போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் –

——————————————————————

பதினெட்டாம் வார்த்தை –

(பர ஸ்வரூப யாதாத்ம்ய நிரூபணம்
ஸ்வ ஸ்வரூபாதி யாதாத்ம்ய நிரூபணம்
உபாய யாதாத்ம்யம்)

பர ஸ்வரூபம் இருக்கிறபடி என் -பர ஸ்வரூபம் யாதாம்யம் இருக்கிறபடி என் –
ஸ்வ  ஸ்வரூபம் இருக்கிறபடி என் -ஸ்வ ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் –
ஸ்வரூப அநு ரூபமான பல ஸ்வரூபம் இருக்கிறபடி என் -பல ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
தத் விரோதி ஸ்வரூபம் இருக்கும்படி என் -விரோதி ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
தந் நிவ்ருத்திக்கும் பலசித்திக்கும் உபாய ஸ்வரூபம் இருக்கும் படி என் -உபாய ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
என்னில் –

பர ஸ்வரூபம் -சேதன அசேதன ஆத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் நியந்த்ருத்வம் –
பர ஸ்வரூப யாதாம்யம் -அது நமது விதி வகை -என்கிறபடி அர்ச்சாவதார பர்யந்தமான ஆஸ்ரீதபாரதந்த்ர்யம் –

(அது நமது விதி வகையே (10-6-1 ) ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் நமது விதியை நியமநத்தை எதிர்பார்த்து இருக்கிறானே -ஆஸ்ரித பாரதந்தர்யம் -அர்ச்சக பராதீனன் -ஸ்வா தந்தர்யத்தின் எல்லை நிலம் -)

இனி பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் ஆவது –
1-ப்ரக்ருதே பரம் -2-ஞாநாநந்த லஷணம் -3-நித்யம் –
4-ஏக ரூபம் -5-ஞான குணகம் –6-ஸ்வயம் பிரகாசம் –
7-ஈஸ்வர சேஷம் -8-அனந்யார்ஹம் -9-ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்த்ர்யம் –

இதனுடைய யாதாம்யம் ஆவது –
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு -என்றும் –
அடிகளையே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்றும் சொல்லுகிறபடி ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை –

இனி ஸ்வரூப அநு ரூபமான -பல ஸ்வரூபம் ஆவது –
பகவத் ஸ்வரூப ரூப குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
இதனுடைய யாதாம்யம் இருக்கிறபடி –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்கிறபடியே இந்த கைங்கர்ய பிரதி சம்பந்தியான சேஷியினுடைய ஹர்ஷம் –

தத் விரோதி ஸ்வரூபம் ஆவது –
தேகத்தில் ஆத்மா புத்தியும் –
தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தியும் –
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கலில் ஸ்வ தந்திர புத்தி பண்ணுகையும் —

இதனுடைய யாதாம்யம் யாவது –
ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்ய அந்தர்கதமான அஹங்கார மம காரங்கள் –

தந் நிவ்ருத்திக்கும் புருஷார்த்த ஸித்திக்கும் உபாயமாவது –
ஸித்த ஸ்வரூபனாய் -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் இருந்துள்ள ஈஸ்வரன் திருவடிகள் 
இதனுடைய யாதாம்யமாவது –
அதிகாரி விசேஷணத்தையும் சஹியாதபடியான சஹகாரி நைரபேஷ்யம் –

(ஸுலப்யம் ஸுசீல்யம் வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஆகிய ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்களுடனும் ஞானம் சக்தி ப்ராப்தியாகிய ஸர்வ ஸ்வாமித்வம் -பூர்த்தியாகிய அவாப்த ஸமஸ்த காமத்வம்-கருணை யாகிய ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்களுடன் கூடியிருக்கும் ஸர்வேஸ்வரனது திருவடித் தாமரைகள் -)

(இசைவித்து உன் திருவடிக் கீழ் இருத்தும் அம்மான் -விடுவித்து பற்றுவிக்கும் அவன் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும்- உபாயம் தன்னைப் பொறுக்கும் -இது இரண்டையும் பொறுக்காது)

————————————————-

பத்தொன்பதாம் வார்த்தை –

(போக ப்ராப்த சாதன விரோதிகள்
த்ரிவித விரோதி காரணம்
கைங்கர்யாதி விரோதி நிரூபணம்)

போக (சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணோ)விரோதி -விஷய (விஷயாந்தர ப்ரக்ருதி)பிராவண்யம்
பிராப்ய (போகம் அனுபவம் -பிராப்தி கைங்கர்யம்)விரோதி -மமதை
சாதன விரோதி -அஞ்ஞான கர்த்ருத்வம்
த்ரிவித விரோதிக்கும் காரணம் -அஹங்காரம் –
கைங்கர்ய விரோதி -ஸ்வா தந்த்ர்யம்(கைங்கர்யத்தில் களை அறுக்க வேண்டுமே)
ருசி விரோதி -சப்தாதிகள்
சமாஸ்ரயண விரோதி -தேவதாந்த்ரம்/ஞான விரோதி -அஞ்ஞானம்/ சேஷத்வ விரோதி -தேவதாந்த்ரம்
சரணாகதி விரோதி -உபாயாந்தரம்
ஸ்வரூப விரோதி -பாகவத அபசாரம்
புருஷார்த்த விரோதி -விஷய ப்ராவண்யம் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர்

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –ஞான சாரம்–-28-

———————————————————————————————————————

இருபதாம் வார்த்தை –

(ப்ரபந்ந பரிஹார்ய ஷட்கம்
விரோதி ஷட்க நிரூபணம்-கதாந்தர ஸ்ரவண நிஷேதம்)

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தை –
பிரபன்னனுக்கு பரிஹார்யம் ஆறு -அவையாவன –
ஆஸ்ரயண விரோதி –
ஸ்ரவண விரோதி –
அனுபவ விரோதி –
ஸ்வரூப விரோதி –
பரத்வ விரோதி -ப்ராப்தி விரோதி -என்று –

இவற்றில் -ஆஸ்ரயண விரோதி –ஆவது –
அஹங்கார மமகாரங்களும் -பலாபிசந்தியும் –புருஷகாரத்தை இகழ்கையும் -பேற்றில் சம்சயமும் –

ஸ்ரவண விரோதி -யாவது –
தேவதாந்திர விஷயங்களிலே அவசமாக செவி தாழ்க்கை -(காண்பாரோ கேட்பரோ தான் -)

அனுபவ விரோதி -யாவது –
போகத் த்ரவ்யம் கொண்டு புக்கு ஸ்நானத் த்ரவ்யம் கொண்டு புறப்படுகிற விஷய அனுபவேச்சை

ஸ்வரூப விரோதி -யாவது
பரதந்த்ரனாக இசையாதே ஸ்வ தந்த்ரனாக கை விஞ்சுகை

பரத்வ விரோதி யாவது –
முற்றல் ஷேத்ரஞ்ஞரான ப்ரம ருத்ராதிகளை ஈஸ்வரனாக பிரமிக்கை –

பிராப்தி விரோதியாவது -கேவலோரோட்டை சேர்த்தி –

(பரம பாவனம் -சாணிச்சாறு போல் உபாய புத்தியில் கண் வைக்காமல் போக்யம் என்று உபேயத்திலே கண் வைக்க வேண்டும் -கமல பாதம் -திருப்பாதம் மட்டும் அல்லவே)

————————————————————-

இருபத்தோராம் வார்த்தை –

விஷயாந்தரங்களின் தண்மை
பகவத் அனுவர்த்தன விரோதி
ஆச்சார்ய அனுவர்த்தன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவ அனுவர்த்தன விரோதி
உபாய அத்யாவசாய விரோதி
உபேய ருசி விரோதி
பகவத் அனுவர்த்தநாதி பஞ்சகம்

சரீராதி பஞ்சகம்
ஸ்வரூப விரோதி நிரூபணம்
ஸ்வ ரக்ஷணாதி ப்ராப்த்ய பாவ ஹேது நிரூபணம்
உபாய விரோதி நிரூபணம்
ஸாதநாந்தராதிகளுக்கு சாதனத்வ அபாவ நிரூபணம்
லஷ்ம்யாய அநுபாயத்வ நிரூபணம்
ப்ராப்தி விரோதி நிரூபணம்
தேஹாதிகளுக்கு அபோக்யத்வ நிரூபணம்
கைவல்யம் விதவா அலங்காரம்
ஸ்வரூப அனுரூப புருஷார்த்த ஸ்ரைஷ்ட்யம்

பகவத் அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம் -சரீரம்
ஆசார்ய அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம்-புத்ர மித்ராதிகள் –(நல்ல பதத்தாலே மனை வாழ்வர் கொண்ட பெண்டிர்-அனுகூலர் -பிரதிகூலர் கூடாது)
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம்–இதர சஹவாசம் .
உபாயத்வ அத்யாவச்யத்துக்கு – பிரதிபந்தகம்-அர்த்த ப்ராவண்யம்
உபேய ருசிக்கு பிரதிபந்தகம் -விஷய ப்ராவண்யம் –

(பகவத் ஆஜ்ஜா -ஆணை -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் –ஸாஸ்த்ரங்களில் உள்ளபடி நடத்தலே பகவத் அநுவர்த்தனம்)

(இவ் வைந்துமே ஐந்துக்கும் தடையாய் இருந்த போதிலும் பிரதானம் ஒவ்வொன்றும் என்று கருத்து)

இவற்றுக்கு ஒன்றுக்கு ஒன்றிலே தாத்பர்யம் –
என்று ஸ்ரீ திருநகரி பிள்ளை வார்த்தை -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை –

ஸ்வரூப விரோதியாவது
ஸ்வ ரஷணம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் -அந்ய சேஷத்வம் -தேக ஆத்ம அபிமானம் -மமதை –
என்கிற இவை —

(ஸ்வ ரஷணம் -தன்னைத் தானே ரஷித்துக் கொள்ளுதல் -திருமந்த்ரத்திலே நமஸ் அர்த்தமாகிய -அநந்ய சரணத்வமாகிற ஸ்வரூபத்துக்கு விரோதி
ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் -அகாரார்த்த எம்பெருமான் ஸ்வா தந்தரியத்துக்கும் லுப்த சதுர்த்தி யர்த்த ஜீவ பாரதந்தர்யத்துக்கும் விரோதி
அந்ய சேஷத்வம் -உகாரார்த்த அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு விரோதி
தேக ஆத்ம அபிமானம் -மகார்த்த ஞானம் ஆனந்த ஸ்வ ஸ்வரூபத்துக்கு விரோதி –
மமதை -தேஹத்தைச் சேர்ந்தவைகளை தன்னுடைமையாக நினைக்கை)

அவன் ரஷகன் ஆகையாலே ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லை –
அவன் சேஷி யாகையாலே -ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தில் பிராப்தி இல்லை —
அவன் பராத்பரன் ஆகையாலே -அந்ய சேஷத்வத்தில் பிராப்தி இல்லை —
இவன் ஞாநானந்தி யாகையாலே -தேக ஆத்ம அபிமானத்தில் பிராப்தி இல்லை —-
ஈஸ்வர விபூதி யாகையாலே -மமதையில் பிராப்தி இல்லை —

உபாய விரோதியாவது -சாதநாந்தரம் -ஸ்வ யோக்யதை -அர்த்தம் -அதிகாரி விசேஷணம் -அபிமதம் –
அதாவது -சரீரவத் சேஷம் ஆகையாலே -சாதனாந்தரங்களில் பிராப்தி இல்லை –
பத்தாத்மா வாகையாலே -ஸ்வ யோக்யதைக்கு பிராப்தி இல்லை –
அசேதனம் ஆகையாலே அர்த்தம் -இஷ்ட அநிஷ்டங்கள் அறிகைக்கு யோக்யதை யில்லாமையாலே- சாதனத்தில் பிராப்தி இல்லை –
அதிகாரி விசேஷணம் சைதன்யம் கார்யம் ஆகையாலே -சாதனத்தில் பிராப்தி இல்லை –
ஸித்த சாதனம் சஹாயாந்தரத்தை சஹியாமையாலே இவன் அபிமதத்துக்கு சாதனத்தில் பிராப்தி இல்லை -(சஹாயாந்தர நைரபேஷ்யம்-இவன் அபிமதமான பிராட்டிக்கு புருஷகாரம் மட்டுமே உண்டு உபாயத்தில் அன்வயம் இல்லையே)

பிராப்தி விரோதியாவது –
தேகத்தில் போக்ய புத்தியும் -தேகத்தை பற்றி வருமவற்றில் புருஷார்த்த புத்தியும் –
பிரம லோக பிராப்தியில் புருஷார்த்த புத்தியும் -கைவல்யத்தில் புருஷார்த்த புத்தியும் —
அதாவது –
தேகம் ஸ்வபாவ துர் கந்தம் ஆகையாலே புருஷார்த்தம் ஆகமாட்டாது –
தேகத்தை பற்றி வருமவை தனக்கு அல்லாமையாலே புருஷார்த்தம் ஆகமாட்டாது —
ஸ்வர்க்க ஐஸ்வர்யம் -ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -கீதை -9-21-என்கையாலே புருஷார்த்தம் ஆக மாட்டாது –
பிரம லோக பிராப்தியும் -ஷூதபிபாசையாலே -இஹ லோகத்திலே வந்து ஸ்வ மாம்ஸ பஷணம் பண்ணிப் போரும் என்று சொல்லுகையாலே ஸூகமாக மாட்டாது –
கைவல்யமும் விதவாலங்காரம் போலே -ஸ்வ அனுபவம் ஆகையாலும் -சிற்று இன்பம் ஆகையாலும் புருஷார்த்தம் ஆக மாட்டாது –

(அநந்தமாக)அல்பம் அன்றியிலே -அஸ்தரம் அன்றியிலே -அபோக்யம் அன்றியிலே -அப்ராப்தம் அன்றியிலே இருக்குமதிறே -ஸ்வரூப பிரயுக்தமான புருஷார்த்தமாவது –

—————————————————————

இருபத்திரண்டாம் வார்த்தை-

(சித் அசித் ஸ்வ பாவ பேத கதநம்
ஜீவ ஈஸ்வர ஸ்வ பாவ பேத கதநம்)
சரீரம் ஜடமாய் இருக்கும் -ஆத்மா ஞான மயமாய்(அஜடம் ஸ்வயம் ப்ரகாசமாய் ப்ரத்யக்காய்) இருக்கும் –
துக்காத் மகமாய இருக்கும் -ஆனந்த மயமாய் இருக்கும் –
அழுக்காய் இருக்கும் -நிர்மலமாய் இருக்கும் –
அழியுமதாய் இருக்கும் -நித்யமுமாய் இருக்கும் –
பரிணாமியாய் இருக்கும் -ஏக ரூபமாய் இருக்கும் –
விபுவாய் இருக்கும் -அணு வாய் இருக்கும் –
இருளாய் இருக்கும் -ஒளியாய் இருக்கும் –
நித்ரையாய் இருக்கும் -உணர்ச்சியாய் இருக்கும்
கோபமாய் இருக்கும் -ஷமை யாய் இருக்கும் –
அசுத்தமாய் இருக்கும் -சுத்தமாய் இருக்கும் –

ஈஸ்வரன் -ரஷகனாய் இருக்கும் –சேஷியாய் இருக்கும் -காரணமாய் இருக்கும் -சரீரியாய் இருக்கும் –தாரகனாய் இருக்கும் -வ்யாபகனாய் இருக்கும் -நியந்தாவாய் இருக்கும் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கும் –சரண்யனாய் இருக்கும் -சேவ்ய னாய் இருக்கும் -பல சொல்லி என் -நாயகனாய் இருக்கும் –

ஆத்மா -ரஷ்யமாய் இருக்கும் -சேஷமாய் இருக்கும் -கார்யமாய் இருக்கும் -சரீரமாய் இருக்கும் –தார்யமாய் இருக்கும் -வ்யாப்யனாய் இருக்கும் -நியாம்யனாய் இருக்கும் -பர தந்த்ரனாய் இருக்கும் –சரணாகதனாய் இருக்கும் -சேவகனாய் இருக்கும் -பல சொல்லி என்-அடியனாய் இருக்கும் –

(ஆத்மாவை கார்யம் என்றது -இல்லாதது உருவானது அல்ல -நித்யம் அன்றோ -கர்ம அனுகுணமாக பிறவி-சரீரம் ஏற்றுக்கொண்டு கர்மபலன் அனுபவிப்பான் என்றபடி)

———————————————————————

இருபத்து மூன்றாம் வார்த்தை-

ஆத்ம வாதம்
ஆத்ம விஷயக விப்ரதிபத்தி நிரூபணம் -விப்ரதிபத்தி நிரஸனம்
நையாயிகாதி மத நிராஸம்
வேதாந்த்ர பரத்வ நிராஸம்
ஏகாயன மத நிராஸம்
ஆத்ம ஸ்வரூப நிஷ்கர்ஷம்

கரணங்களை ஆத்மா வென்பார் –
இந்திரியங்களை ஆத்மா வென்பார் —
மனஸ்ஸை ஆத்மா வென்பார் —
பிராணனை ஆத்மா வென்பார் –
இவை தனித் தனியே ஆத்மா வென்பார் —
இதினுடைய சமுதாயம் ஆத்மா வென்பார் —
பிரக்ருதியை ஆத்மா வென்பார் —
இதுக்கு வேறு பட்டு இருக்கும் ஆத்மா என்று கொள்ளச் செய்தேயும் -ஜடம் ஆத்மா வென்பார் –(அஸ்வயம் பிரகாசம் -கல்லைப்போல் -மற்ற ஒன்றின் உதவியால் பிரகாசிக்கும் என்பர்)
ஷணிகம் வென்பார் –(க்ஷணம் தோறும் அழிந்து உருவாகும்-புத்த மதம் -)
ஞானம் என்பர் ஞானமுடையவன் அல்ல -அத்வைதி மதம் –
விபு என்பர் –நையாயிகர் மதம் -கண்ணுக்கு தோன்றும்படி இருக்கும் என்பர்
அநித்தியம் என்பர்
ஏகாத்மா என்பர் –ஒரே ஆத்மா அனைத்தும் சரீரங்களிலும் என்பர்
பரிணாமி ஆத்மா என்பர் –ஜைனர் மதம்
ஸ்வதந்த்ரர் ஆத்மா என்பர்
பாரதந்தர்யம் கொள்ளா நிற்கச் செய்தே யும் கர்மத்துக்கு பரதந்த்ரர் என்பர் -(ஈஸ்வரனை ஒத்துக் கொள்ளாமல் )
மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரர் என்பர்
பித்ருக்களுக்கு பரதந்த்ரர் என்பர்
க்ருஹங்களுக்கு (கண்டவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் )பரதந்த்ரர் என்பர்
க்ரஹங்களுக்கு பரதந்த்ரர் என்பர்
அக்னிக்கு பரதந்த்ரர் என்பர்
இந்திரனுக்கு பரதந்த்ரர் என்பர்
பிரம்மாவுக்கு பரதந்த்ரர் என்பர்
ருத்ரனானுக்கு பரதந்த்ரர் என்பர்
ஏகாயன எம்பெருமானுக்கு ருக்கு -(திருவில்லா மால் )பரதந்த்ரர் என்பர்

இப்படி பஹு பிரகாரங்களாலே விப்ரதிபத்தி -விருத்த பிரதிபத்தி பண்ணுவார்கள் -விப்ரதிபத்தி எங்கனே என்னில்

காலும் கையும் போனாலும் இருக்கக் காண்கையாலே இவை ஆத்மா ஆக மாட்டாதே
இதே போல் கண்ணும் காதும் -ஞான இந்திரியங்கள் ஆத்மா ஆக மாட்டாது

மனச்சு ஜடம் ஆகையாலே ஆத்மா வாக மாட்டாது -(நான் எனது மனசில் சிந்தித்தேன் என்றாலே நான் வேறே மனாஸ் வேறே என்றதாயிற்று)
பிராணன் வாயு விசேஷம் ஆகையாலே ஆத்மா வாக மாட்டாது –
ஒரு கரணத்துக்கு வந்த கிலேசத்தாலே மற்றைக் கரணங்களும் கிலேசிக்க காண்கையாலே
தனித் தனியே ஆத்மா வாக மாட்டாது -(தர்மபூத ஞானத்தால் தானே அறிகிறோம் -)
இவற்றினுடைய சமுதாயமான சரீரம் ஆத்மா வாக மாட்டாது –
எங்கனே என்னில் –

உன்னுடைய கால் -என்னுடைய கை -என்னுடைய சரீரம் விதேயமாய்த்து -என்கையாலும் –
மாதா பிதாக்கள் செத்த அநந்தரம் காண்கிற சரீரத்திலே ஒன்றும் முகம் மாறிப் போகாமே கிடக்க –அப்பா எங்கே போனாய் -அம்மா எங்கே போனாய் -என்று முன்னாள் ஆதரித்துப் போந்த சரீரம் தன்னை அரை நாழிகை அகத்தில் கிடக்கவும் பொறாதே -சவம் -என்று பேரிட்டு -தர்சித்த தோஷத்துக்கு நெய்யும் நெருப்பும் கொண்டு குளிக்கை யாலும் -அஞ்ஞரும் கூட சவ சரீரத்திலே ஆத்மா புத்தி பண்ணாமையாலே சரீரம் ஆத்மா வாக மாட்டாது —

இவன் இருந்த பொது ஞானம் நடை யாடுகையாலே ஜடம் ஆத்மா வாக மாட்டாது —
முன்பு செய்த கார்யம் சொல்லுகையாலே ஷணிகம் ஆத்மா வாக மாட்டாது —
நான் இத்தை செய்யா நின்றேன் என்கையாலே ஞானம் ஆத்மா வாக மாட்டாது –

ஆத்மா சரீரத்தில் நின்றும் புறப்பட்டு போம்போது சுற்றில் இருந்தார்க்கு தெரியாமையாலே
விபு ஆத்மா வாக மாட்டாது –

போன ஜன்மம் சில தர்மம் செய்கையாலே இஜ் ஜன்மம் சுகமாய் இருந்தோம் -இஜ் ஜன்மமும் சில ஸூ க்ருதங்களை செய்தால் -வருகிற ஜன்மமும் சுகமாய் இருக்கலாம் -என்று செய்யக் காண்கையாலும் – சரீரத்தை விட்டு போய் ஸ்வர்காதி அனுபவம் பண்ணுவதாக ஜ்யோதிஷ்டோமாதி சாதனத்திலே இழிகையாலும் ஆத்மா அநித்தியமாக மாட்டாது –

ஒரு சேதனன் சுகிக்க -ஒரு சேதனன் துக்கிக்க -ஒரு சேதனன் நலிய-
ஒரு சேதனன் நலிவு படக் காண்கையாலும் -ஏக ஆத்மாவாக மாட்டாது –

பிறந்தவன்று சாகிற பிரஜையினோடு ஆத்மாவோடு -நூறு வயசு புக்கு சாகிறவனுடைய
ஆத்மாவோடு வாசி யற கண்ணுக்கு தெரியாமையாலே -பரிணாமி ஆத்மாவாக மாட்டாது –

தனக்கு அநிஷ்டமான துக்கத்தைப் போக்கிக் கொள்ள மாட்டாமையாலும் -இஷ்டமான சுகத்தை அழைத்துக் கொள்ள மாட்டாமையாலும் -தான் செய்கிறேன் என்று கார்யத்தை செய்து தலைக் கட்ட மாட்டாமையாலும் -ஸ்வ தந்த்ரம் ஆத்மாவாக மாட்டாது –

கர்மத்துக்கு பரதந்த்ரனாக மாட்டான் -அது அசேதனம் ஆகையாலே –
இவனுடைய ஆபந் நிவாரணம் பண்ண மாட்டாமையாலே -மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரனாக மாட்டான் —
ரஷகத்வம் இல்லாமையாலே பித்ருக்களுக்கு  பரதந்த்ரனாக மாட்டான் –
இப்படி யாகையாலே க்ரஹங்களுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
அசித் ஆகையாலும் -தன்னைப் பிறர் ரஷிக்க வேண்டுகையாலும் –
ஆஸ்ரய அஸி ஆகையாலும் (-தன்னை அண்டிய விறகு போல்வனவற்றை அழிப்பதாகையாலும் )- அக்நிக்கு பரதந்த்ரனாக மாட்டான் —

ஸாப உபஹதனாகையாலும் -(கௌதம ஸாபத்தால் பீடிக்கப் பட்டவன் )-
தன்னுடைய ராஜ்யத்தை பிறர் கையிலே பறி  கொடுத்து கிலேசிக்கையாலும் -இந்தரனுக்கு
பரதந்த்ரனாக மாட்டான் —

மது கைடபர் கையில் வேதத்தைப் பறி கொடுக்கையாலும் –
ருத்ரனாலே நலியப் படுகையாலும் -பிரம்மாவுக்கு  பரதந்த்ரனாக மாட்டான் –

தான் அபிமாநித்த  பாணனைக் காட்டிக் கொடுத்து தன்னைக் கொண்டு நெகிழ -நழுவ -நிற்கையாலும் பிரம சிரசு தன் கையிலே ஒட்டிக் கிடக்க -சர்வேஸ்வரன் பக்கலிலே சென்று -என் ஆபத்தை போக்கி அருள வேணும் -என்று நோக்கிக் கொள்கையாலும் -ருத்ரனுக்கு  பரதந்த்ரனாக மாட்டான் –

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கையாலே -ஏகாயன எம்பெருமானுக்கு  பரதந்த்ரனாக மாட்டான் –

இனி இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சேஷத்வம் -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கையாலே ததீய சேஷத்வமேயாகக் கடவது –

———————————————————–

இருபத்து நான்காம் வார்த்தை

தத்வ த்ரயாதி த்ரய நிரூபணம் -ஸம்ஸார ஸ்வபாவ கதநம்

(தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,-இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்)

தத்வ த்ரயம்
அதில் ஆத்ம தத்வ த்ரயம்
அதில் பத்தாத்மாகள் த்ரயம் -அர்த்த காம பரர்-தர்ம பரர்-மோஷ பரர் –
அதில் சேஷத்வ ஞானமுடையார் த்ரயம் -அரசன்-தேவதை -பகவானுக்கு சேஷம் –
அதில் பகவத் சேஷத்வ ஞானமுடையார் த்ரயம்-ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி
ஆத்ம ப்ராப்தி காமர் த்ரயம் -அசித்தோடு கலந்த ஆத்ம அனுபவம் -கைவல்யர் -ப்ரஹ்மாத்மக அனுபவம் -(வந்தவர் எதிர் கொள்ள -மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை என்றும் இல்லையே இவர்கள்.)
அதில் பிரபன்ன அதிகாரிகள் த்ரயம் -அஞ்ஞானிகள் -ஞானாதிகரர்கள் -பக்தி பாரவச்யர்கள் .

(ஆத்ம ப்ராப்தி காமர் த்ரயம் –
அசித்தோடு கலந்த ஆத்ம அனுபவம் –துருவ நக்ஷத்ரத்துக்கு மேலே ஆகாச கங்கா உத்பத்தி ஸ்தானத்தை அனுபவ ஸ்தானம் என்பர் எங்கள் ஆழ்வான் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-98-99-100)
கைவல்யர் -விரஜா நதிக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் நடுவிலுள்ள ஸ்தானம் அனுபவ ஸ்தானம் –முக்தானாம் பரமம் கதி -வியாக்யானத்தில் பட்டர் -பாத்மபுராணம் உத்தர காண்டம் -256 அத்தியாயத்தில் இது உண்டு
ப்ரஹ்மாத்மக அனுபவம் -ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி -உபநிஷத் -அர்ச்சிராதி கதி ப்ரஹ்ம ப்ராப்தி-ஸ்ரீ வைகுண்டமே அனுபவ ஸ்தானம்
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-43)

அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன

ஞாநீ துர்லப-அறிவார் உயிரானாய்பரமபதத்தில் சென்றாலும் குண அனுபவத்தில் மட்டுமே இருப்பவர் -கைங்கர்ய நிஷ்டர்களை விட தாழ்ந்தவர் -இதிலும் ஸ்வார்த்த பரம் -பரார்த்த பரத்தை விட தாழ்ந்தவர் -இப்படி த்ரயம் அங்கும் -வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று -இரண்டு வகைகள் அருளிச் செயல்களில் உண்டு -சுகோ முக்த வாமதேவ முக்த இத்யாதி அனுபவம் மாத்திரமே உள்ளவர்கள் -ஸ்வ கத பிரபத்தி நிஷ்டர்கள் ஸ்வார்த்த கைங்கர்யத்திலும் பரகத பிரபத்தி நிஷ்டர்கள் பரார்த்த கைங்கர்யத்திலும் இருப்பார்கள் –
கைவல்யார்த்தி அர்ச்சிராதி கதியில் சென்று திரும்பாமல் விரஜை தாண்டி ஆத்ம அனுபவத்தில் இழிந்து கேட்டே போகிறார்கள் -இங்கு யோஜனா பேதம் உண்டு

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .