ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
———————————————————————–
பதின்மூன்றாம் வார்த்தை –
(ஈஸ்வர சேஷ விபூதி த்வயம்
ஜீவ த்ரைவித்யம்
பத்த த்ரைவித்யம்
புந ஜீவ த்ரைவித்ய கதநம்
த்ரிவித ஜீவ விஷய ஈஸ்வர ஸங்கல்பம்)
உபய விபூதியும் ஈஸ்வரனுக்கு சேஷமாய் இருக்கும் –
இதில் இருக்குமவர்கள் பக்தரும் -முக்தரும் -நித்தியரும் –
பத்தர் இரண்டு படி -முமுஷுக்களும் சம்சாரிகளும் –
இவர்கள் தான் அஹங்காரம் மம ஹாரம் கழிந்து இருப்பாரும் –
அஹங்காரம் மம ஹாரங்களிலிலே அகப்பட்டோம் என்று இருப்பாரும் –
அஹங்கார மம காரங்களோடு உடன்பட்டு இருப்பாருமாய் இருக்கும் –
இதில் கழிந்தவர் -நித்தியரும் முக்தரும் –
அகப்பட்டோம் என்று இருப்பார்-முமுஷுக்கள்
உடன்பட்டு இருப்பார் -நித்ய சம்சாரிகள் –
இதில் கழிந்து இருப்பாரை எம்பெருமான் தன் இனிமைக்கு விஷயம் ஆக்கும் –
அகப்பட்டோம் -என்று இருப்பாரை -தன் இரக்கத்துக்கு விஷயம் ஆக்கும் –
உடன்பட்டு இருப்பாரை தன் லீலைக்கு விஷயம் ஆக்கும் -என்று முதலி யாண்டான் –
(இனிமைக்கு விஷயம் ஆக்கும்-நித்ய முக்தர்களை எம்பெருமான் போக்ய பதார்த்தங்களைப் போல் அனுபவிப்பான்- இரக்கத்துக்கு விஷயம் ஆக்கும் –முமுஷுக்களை நிர்ஹேதுக கிருபையாலே முக்தர்கள் ஆக்குவான்-லீலைக்கு விஷயம் ஆக்கும் –ஸம்ஸாரிகளைப் படைத்தல் காத்தல் அழித்தல் முதலான செயல்களுக்கு உட்படுத்தித் தான் லீலா ரஸம் அனுபவிப்பான் -)
——————————————————-
பதினான்காம் வார்த்தை-
(ஈஸ்வரனுடைய லீலைக்கு விஷயம்
ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு விஷயம்)
(பெரிய)ஆச்சான் பிள்ளை கோஷ்டியில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரள இருந்து –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
அருளிச் செய்தபடி –
நாம் லீலைக்கு விஷயமோ -இரக்கத்துக்கு விஷயமோ -என்று
விண்ணப்பம் செய்ய –
உடன் பட்டு இருந்தோம் ஆகில் லீலைக்கு விஷயம் ஆகிறோம் –
அகப்பட்டோம் என்று இருந்தோம் ஆகில் -இரக்கத்துக்கு விஷயம் ஆகிறோம் -என்று அருளிச் செய்தார் –
(கோவிந்த ஸ்வாமி சரித்ரம் அறிவோம் -உள்ளத்துக்கு உள்ளே இருந்து சம்சார ப்ராவண்யம் உண்ணும் தீராமல் இருக்காய் இங்கு இருந்து அனுபவித்து வர அருளினான் அன்றோ -)
——————————————————
பதினஞ்சாம் வார்த்தை –
(ஞான வ்யவசாய அபேஷா அருசி விசேஷங்கள்
அர்த்த பஞ்சக நிஷ்கர்ஷம்)
ஸ்வ ஸ்வரூபம் -ஞான பிரதானம் –
உபாயம் -வ்யவசாய பிரதானம்
பிராப்யம் -அபேஷா பிரதானம்
விரோதி -அருசி பிரதானாம்
என்று -முதலி ஆண்டான் அருளிச் செய்வார்-
ஆத்ம ஸ்வரூபம் -தன்னுடைய சேஷத்வ பாரதந்தர்யத்தை உள்ளபடி அறிவதை முக்யமாகக் கொண்டிருக்கும்-மதி ஹர்ஷே மன ஞாநீ மன அவபோதனே -ஞானானந்தம் விட சேஷத்வ பாரதந்தர்யம் முக்கியம் -உபாயமாகிற எம்பெருமான் தன்னையே உபாயமாக உறுதி பூண்டவர்களையே நிர்ஹேதுமாக ரஷித்து அருள்வான் -ஆகையால் உபாயத்துக்கு வேண்டுவது உறுதியே என்று கருத்து -ஒழிவில் காலமெல்லாம் –இத்யாதி உனக்கே நாம் ஆட் செய்வோம் –பிரார்த்தனையையே முக்யமாகக் கொண்டிருக்கும் -அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தம் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் –வாசனைகளும் ருசிகளும்-தேஹ சம்பந்தமும்)ஐந்திலும் ருசி இல்லாமல் இருக்கையே முக்யம் –
(சம்பந்த உபாய பலன்களில் -உணர்த்தி -துணிவு -பதற்றம் -பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு -தோழி தாயார் மகள் -பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் பேற்றுக்குத் த்வரிக்கையும் வேண்டுமே)
—————————————–
பதினாறாம் வார்த்தை
(அந்யதா விரோதி பஞ்சக நிரூபணம்
விரோதி த்ரயம்
ஸ்வரூப உபாய உபேய விரோதி நிரூபணம்)
அவன் போக்தா -இவன் போக்யம்
வ்யாமோஹம் -உபாயம் –
எதிர் விழி பெறுகை -உபேயம் –
(அஹம் அன்னம் அஹம் அந்நாத-படியே ஸ்வாமியாய் ஸர்வேஸ்வரன் சொத்தான ஜீவனைப்பெற்று அனுபவிப்பவனாய் இருப்பான் -சேதனன் அனுபவிக்கப் படுபவனாய் இருப்பான் -இருவருக்கும் போக்த்ருத்வமும் போக்யத்வமும் உண்டேயாகிலும் ஸர்வேஸ்வரனுக்குப் போக்த்ருத்வமும் சேதனனுக்கு போக்யத்வமும் முக்யம் என்று கருத்து
ஸ்வாமிக்கு உடைமையான ஜீவனை இது நம்முடைய வஸ்து-அளியல் நம் பையல் – என்னும் பேரபிமானமே -சேதனன் உஜ்ஜீவிக்க உபாயமாய் இருக்கும் –
சேதனன் அனுபவ ப்ரீதி உந்த கைங்கர்யங்களைச் செய்யும் பொழுது எம்பெருமான் ஆனந்தம் கொள்வதாகிற எதிர்விழி விழித்து அருள அத்தைப் பெருகையே ஜீவனுக்கு உபேயம்-அவன் ஆனந்தம் கண்டு நாமம் ஆனந்தப்பட்டு வேண்டுமே –படியாய்க் கிடந்து பவளவாய் காண வேண்டுமே)
அவனுக்கு மிடறு பிடியாய் போருவது-அந்யதா விரோதி -இது தான் ஐந்து வகை
1-தேஹத்தை ஆத்மாவாக புத்தி பண்ணுகையும்
2-இதர தேவதைகளை பர தத்வமாக புத்தி பண்ணுகையும்
4-இழி தொழில்களை உபாயமாக புத்தி பண்ணுகையும்
4-அவற்றாலே விஷயாந்தரங்களை போக்யமாக புத்தி பண்ணுகையும்
5-நின்ற சேதனரை எல்லாம் விரோதிகளாக புத்தி பண்ணுகையும்
ஸ்வரூப விரோதி -உபாய விரோதி -உபேய விரோதி -என்று மூன்று –
தேஹாத்மா அபிமானம் -அந்ய சேஷத்வம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் -இவை ஸ்வரூப விரோதி –
ரஷகாந்தரம் -சாதநான்தரம் -சித்தோ உபாயத்தில் அவிஸ்வாசம்-இவை உபாய விரோதி –
ஐஸ்வர்ய கைவல்யம் -ஸ்வ அனுபவமான பகவத் கைங்கர்யம் இவை உபேய விரோதி –
ஸ்வரூப யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -தாந்தி பிறக்கிறது இல்லை –(புலனடக்கம் ஏற்படாது)
விரோதி யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -அச்சம் பிறக்கிறது இல்லை –
உபாய யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -வ்யவசாயம் பிறக்கிறது இல்லை –
போக யாதாம்ய ஞானம் பிறவாமையாலே -த்வரை பிறக்கிறது இல்லை –
(ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறையுடையோம்-ரக்ஷகாந்தரம் அற்று -அநந்ய கதித்வம் -கொண்டு -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்-என்று இருக்க வேண்டும்-சாதனாந்தரம் அற்று அகிஞ்சனனாக இருக்க வேண்டும் அன்றோ-என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -பரார்த்த கைங்கர்யம் –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யானும் கொள்ளும் சிறப்பே)
———————————————————–
பதினேழாம் வார்த்தை
(தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
ஈஸ்வரனுடைய சேஷித்வ சரீரித்வ தர்மித்வாதி
ஜீவனுடைய சேஷத்வ சரீரத்வ தர்மத்வாதி
சேஷித்வாதி சதுஷ்ட்யத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி
ஸதாசார்ய வைககல்ய த்வைவித்யம்
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஈஸ்வர கிருஷி நிரூபணம்
ஸால பஞ்சிகா நர்த்தனம்
முமுஷு ஞாதவ்யங்கள்)
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ பாதத்தில் அம்மங்கி அம்மாள் தண்டன் இட்டு -அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படியை அருளிச் செய்ய வேண்டும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எங்கள் ஆழ்வானும் –
தர்சநாந்திரிகளை நிரசிக்கவோ –
ஸ்வ தர்சன ஸ்தாபநம் பண்ணவோ –
தர்சனம் இருக்கும்படி கேட்கவோ -என்று அருளிச் செய்ய –
(விஷ்ணு சித்தர் என்றும் பெயர் பெற்றவர் -தினவு கெடச் சொல்லுவர் திருவெள்ளறை சோழியர் -என்ற புகழ் பெற்ற பூர்வ ஸிகர் -ஆழ்வானுக்குத் துல்யமாக எம்பெருமானாரால் அபிமானிக்கப்பெற்று எங்கள் ஆழ்வான் எனப்பெற்றவர்)
இவரும்
தர்சநாந்திரிகளை நிரசிக்கவும்-ஸ்வ தர்சன ஸ்தாபனம் பண்ணவும் தேவரீர் எழுந்து அருளி இருந்தீர் –
அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படி அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு அருளிச் செய்த சாரார்த்த சதுஷ்டயம் –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் –
தங்களுக்கு தஞ்சமாகவும்
உத்தாரகமாகவும்
போக்யமாகவும் அனுசந்தித்தும்
உபதேசித்தும் போருவது நாலிரண்டு அர்த்தம் உண்டு -(நாலு ஞானங்களும் நாலு யதாத்ம்ய ஞானங்களும்-அறிந்து அறிந்து தேறித் தேறி -)
அவையாவன -ஸ்வரூப ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் –
விரோதி ஞானம் என்றும் விரோதி யாதாம்ய ஞானம் என்றும் –
பல ஞானம் என்றும் பல யாதாம்ய ஞானம் என்றும் –
உபாய ஞானம் என்றும் -உபாய யாதாம்ய ஞானம் என்றும் –
இதில் ஸ்வரூப -ஞானமாவது -ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும்படி –
பகவத் அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –
ஸ்வரூப யாதம்ய ஞானமாவது பகவத் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி பாகவத சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –
(அசேதன வ்யாவ்ருத்தி ஞான ஆனந்தங்கள்-புற இதழ் -அநந்யார்ஹ சேஷத்வ பாரதந்தர்யம் ஈஸ்வர வ்யாவ்ருத்தி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியனோ -உள் இதழ் -வடிகட்டி ததீய பர்யந்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை)
விரோதி ஞானமாவது -பரம பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு அழியாத நினைவு –
விரோதி யாதாம்ய ஞானமாவது -வருந்தி ஒரு பாகவதனோடே சம்ஸ்லேஷிக்க தொடங்கி –
அவன் பக்கலிலே தோஷ தர்சனம் பண்ணுகை –
(மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்வம் -கயா குண்டம் ஸங்கல்பித்து ஆயர் பிள்ளைகளை ஸம்ஸ்லேஷம் தொடர செய்தானே -போதயந்த பரஸ்பரம்)
பல ஞானமாவது -ஒரு பாகவதன் நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல்
செய்கை அன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம் போக்யமாம் போலே ஆகிலும் போக்யம் என்று இருக்கை –
பல யாதாம்ய ஞானமாவது -ஆர்த்த பிரபத்தியை பண்ணி -அக்கரைப்பட ஒருப்பட்டு இருக்கச் செய்தே – மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -அவர்களுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கே இருக்கையிலே ஒருப்படுகை –
உபாய ஞானமாவது- சம்பந்த ஞானம் –
சம்பந்த ஞானம் தான் –
சம்பந்த ஞானம் என்றும் –
சம்பந்த யாதாம்ய ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் நாலு வகையாய் இருக்கும் –
இதில் சம்பந்த ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும் தெளிய அறிகை —
சம்பந்த யாதாம்ய ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும் தெளிய அறிகை –
சம்பந்த ஸ்வரூப ஞானமாவது -அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும் தெளிய அறிகை –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமாவது -தர்மி தர்மங்களினுடைய ஐக்யத்தை தெளிய அறிகை அதாவது விசிஷ்ட வேஷத்தில் அவன் ஒருவனுமேயாய் -தான் இல்லை என்னலாம் படி இருக்கை-
(உடன் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -சரீராத்ம பாவம் -அதுக்கும் மேல் நியதி பிரகாரம் -பூவுக்கு மணம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -பரன் உடன் ஓன்றி என்னும் அல்லல் தீர்க்க வேண்டுமே -வெண்மை சங்குக்கும் வேஷ்ட்டிக்கும் பிரகாரம் -ஆனால் சேதன அசேதனங்கள் இவன் ஒருவனுக்கே பிரகாரம் -விஸிஷ்ட ப்ரஹ்மம் ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்-)
உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-
(கோட்டுக் கால் கட்டில் மேல்- சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல் இத்தால் – சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான சேஷத்வே கர்த்ருத்வம்-பர கத அதிசய ஆதேன இச்சையா- ஜ்ஞாத்ருத்வே கர்த்ருத்வம் கர்த்ருத்வே கர்த்ருத்வம் போக்த்ருத்வே கர்த்ருத்வம்-ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்த்தல் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆகிற கால்களை உடைத்தாய்-அந்த கர்த்ருத்வ விஷயமான தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற பட்டங்களை உடைத்தாய் தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற கட்டில் மேல் என்கிறது –மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்– சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற படுக்கையின் மேலேறி –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா – வர்க்கம் வர்க்கம் ஆகிற விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை -(குழல் )உடைய நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –)
சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே – பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை – அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –
தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –அசித் கல்பனாய் -முதல் (ஆத்ம சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்தை)அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து அங்கீகரிப்பதே -என்று கிருதஞ்ஞனாய் போருகை –
கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ நம்மை அவன் அங்கீ கரித்தான் என்று தன் பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும் விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –
போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –
இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் –
——————————————————————
பதினெட்டாம் வார்த்தை –
(பர ஸ்வரூப யாதாத்ம்ய நிரூபணம்
ஸ்வ ஸ்வரூபாதி யாதாத்ம்ய நிரூபணம்
உபாய யாதாத்ம்யம்)
பர ஸ்வரூபம் இருக்கிறபடி என் -பர ஸ்வரூபம் யாதாம்யம் இருக்கிறபடி என் –
ஸ்வ ஸ்வரூபம் இருக்கிறபடி என் -ஸ்வ ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் –
ஸ்வரூப அநு ரூபமான பல ஸ்வரூபம் இருக்கிறபடி என் -பல ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
தத் விரோதி ஸ்வரூபம் இருக்கும்படி என் -விரோதி ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
தந் நிவ்ருத்திக்கும் பலசித்திக்கும் உபாய ஸ்வரூபம் இருக்கும் படி என் -உபாய ஸ்வரூப யாதாம்யம் இருக்கிறபடி என் —
என்னில் –
பர ஸ்வரூபம் -சேதன அசேதன ஆத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் நியந்த்ருத்வம் –
பர ஸ்வரூப யாதாம்யம் -அது நமது விதி வகை -என்கிறபடி அர்ச்சாவதார பர்யந்தமான ஆஸ்ரீதபாரதந்த்ர்யம் –
(அது நமது விதி வகையே (10-6-1 ) ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் நமது விதியை நியமநத்தை எதிர்பார்த்து இருக்கிறானே -ஆஸ்ரித பாரதந்தர்யம் -அர்ச்சக பராதீனன் -ஸ்வா தந்தர்யத்தின் எல்லை நிலம் -)
இனி பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் ஆவது –
1-ப்ரக்ருதே பரம் -2-ஞாநாநந்த லஷணம் -3-நித்யம் –
4-ஏக ரூபம் -5-ஞான குணகம் –6-ஸ்வயம் பிரகாசம் –
7-ஈஸ்வர சேஷம் -8-அனந்யார்ஹம் -9-ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்த்ர்யம் –
இதனுடைய யாதாம்யம் ஆவது –
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு -என்றும் –
அடிகளையே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்றும் சொல்லுகிறபடி ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை –
இனி ஸ்வரூப அநு ரூபமான -பல ஸ்வரூபம் ஆவது –
பகவத் ஸ்வரூப ரூப குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
இதனுடைய யாதாம்யம் இருக்கிறபடி –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்கிறபடியே இந்த கைங்கர்ய பிரதி சம்பந்தியான சேஷியினுடைய ஹர்ஷம் –
தத் விரோதி ஸ்வரூபம் ஆவது –
தேகத்தில் ஆத்மா புத்தியும் –
தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தியும் –
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கலில் ஸ்வ தந்திர புத்தி பண்ணுகையும் —
இதனுடைய யாதாம்யம் யாவது –
ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்ய அந்தர்கதமான அஹங்கார மம காரங்கள் –
தந் நிவ்ருத்திக்கும் புருஷார்த்த ஸித்திக்கும் உபாயமாவது –
ஸித்த ஸ்வரூபனாய் -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் இருந்துள்ள ஈஸ்வரன் திருவடிகள்
இதனுடைய யாதாம்யமாவது –
அதிகாரி விசேஷணத்தையும் சஹியாதபடியான சஹகாரி நைரபேஷ்யம் –
(ஸுலப்யம் ஸுசீல்யம் வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஆகிய ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்களுடனும் ஞானம் சக்தி ப்ராப்தியாகிய ஸர்வ ஸ்வாமித்வம் -பூர்த்தியாகிய அவாப்த ஸமஸ்த காமத்வம்-கருணை யாகிய ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்களுடன் கூடியிருக்கும் ஸர்வேஸ்வரனது திருவடித் தாமரைகள் -)
(இசைவித்து உன் திருவடிக் கீழ் இருத்தும் அம்மான் -விடுவித்து பற்றுவிக்கும் அவன் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும்- உபாயம் தன்னைப் பொறுக்கும் -இது இரண்டையும் பொறுக்காது)
————————————————-
பத்தொன்பதாம் வார்த்தை –
(போக ப்ராப்த சாதன விரோதிகள்
த்ரிவித விரோதி காரணம்
கைங்கர்யாதி விரோதி நிரூபணம்)
போக (சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணோ)விரோதி -விஷய (விஷயாந்தர ப்ரக்ருதி)பிராவண்யம்
பிராப்ய (போகம் அனுபவம் -பிராப்தி கைங்கர்யம்)விரோதி -மமதை
சாதன விரோதி -அஞ்ஞான கர்த்ருத்வம்
த்ரிவித விரோதிக்கும் காரணம் -அஹங்காரம் –
கைங்கர்ய விரோதி -ஸ்வா தந்த்ர்யம்(கைங்கர்யத்தில் களை அறுக்க வேண்டுமே)
ருசி விரோதி -சப்தாதிகள்
சமாஸ்ரயண விரோதி -தேவதாந்த்ரம்/ஞான விரோதி -அஞ்ஞானம்/ சேஷத்வ விரோதி -தேவதாந்த்ரம்
சரணாகதி விரோதி -உபாயாந்தரம்
ஸ்வரூப விரோதி -பாகவத அபசாரம்
புருஷார்த்த விரோதி -விஷய ப்ராவண்யம் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர்
சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –ஞான சாரம்–-28-
———————————————————————————————————————
இருபதாம் வார்த்தை –
(ப்ரபந்ந பரிஹார்ய ஷட்கம்
விரோதி ஷட்க நிரூபணம்-கதாந்தர ஸ்ரவண நிஷேதம்)
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தை –
பிரபன்னனுக்கு பரிஹார்யம் ஆறு -அவையாவன –
ஆஸ்ரயண விரோதி –
ஸ்ரவண விரோதி –
அனுபவ விரோதி –
ஸ்வரூப விரோதி –
பரத்வ விரோதி -ப்ராப்தி விரோதி -என்று –
இவற்றில் -ஆஸ்ரயண விரோதி –ஆவது –
அஹங்கார மமகாரங்களும் -பலாபிசந்தியும் –புருஷகாரத்தை இகழ்கையும் -பேற்றில் சம்சயமும் –
ஸ்ரவண விரோதி -யாவது –
தேவதாந்திர விஷயங்களிலே அவசமாக செவி தாழ்க்கை -(காண்பாரோ கேட்பரோ தான் -)
அனுபவ விரோதி -யாவது –
போகத் த்ரவ்யம் கொண்டு புக்கு ஸ்நானத் த்ரவ்யம் கொண்டு புறப்படுகிற விஷய அனுபவேச்சை
ஸ்வரூப விரோதி -யாவது
பரதந்த்ரனாக இசையாதே ஸ்வ தந்த்ரனாக கை விஞ்சுகை
பரத்வ விரோதி யாவது –
முற்றல் ஷேத்ரஞ்ஞரான ப்ரம ருத்ராதிகளை ஈஸ்வரனாக பிரமிக்கை –
பிராப்தி விரோதியாவது -கேவலோரோட்டை சேர்த்தி –
(பரம பாவனம் -சாணிச்சாறு போல் உபாய புத்தியில் கண் வைக்காமல் போக்யம் என்று உபேயத்திலே கண் வைக்க வேண்டும் -கமல பாதம் -திருப்பாதம் மட்டும் அல்லவே)
————————————————————-
இருபத்தோராம் வார்த்தை –
விஷயாந்தரங்களின் தண்மை
பகவத் அனுவர்த்தன விரோதி
ஆச்சார்ய அனுவர்த்தன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவ அனுவர்த்தன விரோதி
உபாய அத்யாவசாய விரோதி
உபேய ருசி விரோதி
பகவத் அனுவர்த்தநாதி பஞ்சகம்
சரீராதி பஞ்சகம்
ஸ்வரூப விரோதி நிரூபணம்
ஸ்வ ரக்ஷணாதி ப்ராப்த்ய பாவ ஹேது நிரூபணம்
உபாய விரோதி நிரூபணம்
ஸாதநாந்தராதிகளுக்கு சாதனத்வ அபாவ நிரூபணம்
லஷ்ம்யாய அநுபாயத்வ நிரூபணம்
ப்ராப்தி விரோதி நிரூபணம்
தேஹாதிகளுக்கு அபோக்யத்வ நிரூபணம்
கைவல்யம் விதவா அலங்காரம்
ஸ்வரூப அனுரூப புருஷார்த்த ஸ்ரைஷ்ட்யம்
பகவத் அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம் -சரீரம்
ஆசார்ய அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம்-புத்ர மித்ராதிகள் –(நல்ல பதத்தாலே மனை வாழ்வர் கொண்ட பெண்டிர்-அனுகூலர் -பிரதிகூலர் கூடாது)
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநு வர்த்தநத்துக்கு பிரதிபந்தகம்–இதர சஹவாசம் .
உபாயத்வ அத்யாவச்யத்துக்கு – பிரதிபந்தகம்-அர்த்த ப்ராவண்யம்
உபேய ருசிக்கு பிரதிபந்தகம் -விஷய ப்ராவண்யம் –
(பகவத் ஆஜ்ஜா -ஆணை -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் –ஸாஸ்த்ரங்களில் உள்ளபடி நடத்தலே பகவத் அநுவர்த்தனம்)
(இவ் வைந்துமே ஐந்துக்கும் தடையாய் இருந்த போதிலும் பிரதானம் ஒவ்வொன்றும் என்று கருத்து)
இவற்றுக்கு ஒன்றுக்கு ஒன்றிலே தாத்பர்யம் –
என்று ஸ்ரீ திருநகரி பிள்ளை வார்த்தை -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை –
ஸ்வரூப விரோதியாவது
ஸ்வ ரஷணம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் -அந்ய சேஷத்வம் -தேக ஆத்ம அபிமானம் -மமதை –
என்கிற இவை —
(ஸ்வ ரஷணம் -தன்னைத் தானே ரஷித்துக் கொள்ளுதல் -திருமந்த்ரத்திலே நமஸ் அர்த்தமாகிய -அநந்ய சரணத்வமாகிற ஸ்வரூபத்துக்கு விரோதி
ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் -அகாரார்த்த எம்பெருமான் ஸ்வா தந்தரியத்துக்கும் லுப்த சதுர்த்தி யர்த்த ஜீவ பாரதந்தர்யத்துக்கும் விரோதி
அந்ய சேஷத்வம் -உகாரார்த்த அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு விரோதி
தேக ஆத்ம அபிமானம் -மகார்த்த ஞானம் ஆனந்த ஸ்வ ஸ்வரூபத்துக்கு விரோதி –
மமதை -தேஹத்தைச் சேர்ந்தவைகளை தன்னுடைமையாக நினைக்கை)
அவன் ரஷகன் ஆகையாலே ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லை –
அவன் சேஷி யாகையாலே -ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தில் பிராப்தி இல்லை —
அவன் பராத்பரன் ஆகையாலே -அந்ய சேஷத்வத்தில் பிராப்தி இல்லை —
இவன் ஞாநானந்தி யாகையாலே -தேக ஆத்ம அபிமானத்தில் பிராப்தி இல்லை —-
ஈஸ்வர விபூதி யாகையாலே -மமதையில் பிராப்தி இல்லை —
உபாய விரோதியாவது -சாதநாந்தரம் -ஸ்வ யோக்யதை -அர்த்தம் -அதிகாரி விசேஷணம் -அபிமதம் –
அதாவது -சரீரவத் சேஷம் ஆகையாலே -சாதனாந்தரங்களில் பிராப்தி இல்லை –
பத்தாத்மா வாகையாலே -ஸ்வ யோக்யதைக்கு பிராப்தி இல்லை –
அசேதனம் ஆகையாலே அர்த்தம் -இஷ்ட அநிஷ்டங்கள் அறிகைக்கு யோக்யதை யில்லாமையாலே- சாதனத்தில் பிராப்தி இல்லை –
அதிகாரி விசேஷணம் சைதன்யம் கார்யம் ஆகையாலே -சாதனத்தில் பிராப்தி இல்லை –
ஸித்த சாதனம் சஹாயாந்தரத்தை சஹியாமையாலே இவன் அபிமதத்துக்கு சாதனத்தில் பிராப்தி இல்லை -(சஹாயாந்தர நைரபேஷ்யம்-இவன் அபிமதமான பிராட்டிக்கு புருஷகாரம் மட்டுமே உண்டு உபாயத்தில் அன்வயம் இல்லையே)
பிராப்தி விரோதியாவது –
தேகத்தில் போக்ய புத்தியும் -தேகத்தை பற்றி வருமவற்றில் புருஷார்த்த புத்தியும் –
பிரம லோக பிராப்தியில் புருஷார்த்த புத்தியும் -கைவல்யத்தில் புருஷார்த்த புத்தியும் —
அதாவது –
தேகம் ஸ்வபாவ துர் கந்தம் ஆகையாலே புருஷார்த்தம் ஆகமாட்டாது –
தேகத்தை பற்றி வருமவை தனக்கு அல்லாமையாலே புருஷார்த்தம் ஆகமாட்டாது —
ஸ்வர்க்க ஐஸ்வர்யம் -ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -கீதை -9-21-என்கையாலே புருஷார்த்தம் ஆக மாட்டாது –
பிரம லோக பிராப்தியும் -ஷூதபிபாசையாலே -இஹ லோகத்திலே வந்து ஸ்வ மாம்ஸ பஷணம் பண்ணிப் போரும் என்று சொல்லுகையாலே ஸூகமாக மாட்டாது –
கைவல்யமும் விதவாலங்காரம் போலே -ஸ்வ அனுபவம் ஆகையாலும் -சிற்று இன்பம் ஆகையாலும் புருஷார்த்தம் ஆக மாட்டாது –
(அநந்தமாக)அல்பம் அன்றியிலே -அஸ்தரம் அன்றியிலே -அபோக்யம் அன்றியிலே -அப்ராப்தம் அன்றியிலே இருக்குமதிறே -ஸ்வரூப பிரயுக்தமான புருஷார்த்தமாவது –
—————————————————————
இருபத்திரண்டாம் வார்த்தை-
(சித் அசித் ஸ்வ பாவ பேத கதநம்
ஜீவ ஈஸ்வர ஸ்வ பாவ பேத கதநம்)
சரீரம் ஜடமாய் இருக்கும் -ஆத்மா ஞான மயமாய்(அஜடம் ஸ்வயம் ப்ரகாசமாய் ப்ரத்யக்காய்) இருக்கும் –
துக்காத் மகமாய இருக்கும் -ஆனந்த மயமாய் இருக்கும் –
அழுக்காய் இருக்கும் -நிர்மலமாய் இருக்கும் –
அழியுமதாய் இருக்கும் -நித்யமுமாய் இருக்கும் –
பரிணாமியாய் இருக்கும் -ஏக ரூபமாய் இருக்கும் –
விபுவாய் இருக்கும் -அணு வாய் இருக்கும் –
இருளாய் இருக்கும் -ஒளியாய் இருக்கும் –
நித்ரையாய் இருக்கும் -உணர்ச்சியாய் இருக்கும்
கோபமாய் இருக்கும் -ஷமை யாய் இருக்கும் –
அசுத்தமாய் இருக்கும் -சுத்தமாய் இருக்கும் –
ஈஸ்வரன் -ரஷகனாய் இருக்கும் –சேஷியாய் இருக்கும் -காரணமாய் இருக்கும் -சரீரியாய் இருக்கும் –தாரகனாய் இருக்கும் -வ்யாபகனாய் இருக்கும் -நியந்தாவாய் இருக்கும் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கும் –சரண்யனாய் இருக்கும் -சேவ்ய னாய் இருக்கும் -பல சொல்லி என் -நாயகனாய் இருக்கும் –
ஆத்மா -ரஷ்யமாய் இருக்கும் -சேஷமாய் இருக்கும் -கார்யமாய் இருக்கும் -சரீரமாய் இருக்கும் –தார்யமாய் இருக்கும் -வ்யாப்யனாய் இருக்கும் -நியாம்யனாய் இருக்கும் -பர தந்த்ரனாய் இருக்கும் –சரணாகதனாய் இருக்கும் -சேவகனாய் இருக்கும் -பல சொல்லி என்-அடியனாய் இருக்கும் –
(ஆத்மாவை கார்யம் என்றது -இல்லாதது உருவானது அல்ல -நித்யம் அன்றோ -கர்ம அனுகுணமாக பிறவி-சரீரம் ஏற்றுக்கொண்டு கர்மபலன் அனுபவிப்பான் என்றபடி)
———————————————————————
இருபத்து மூன்றாம் வார்த்தை-
ஆத்ம வாதம்
ஆத்ம விஷயக விப்ரதிபத்தி நிரூபணம் -விப்ரதிபத்தி நிரஸனம்
நையாயிகாதி மத நிராஸம்
வேதாந்த்ர பரத்வ நிராஸம்
ஏகாயன மத நிராஸம்
ஆத்ம ஸ்வரூப நிஷ்கர்ஷம்
கரணங்களை ஆத்மா வென்பார் –
இந்திரியங்களை ஆத்மா வென்பார் —
மனஸ்ஸை ஆத்மா வென்பார் —
பிராணனை ஆத்மா வென்பார் –
இவை தனித் தனியே ஆத்மா வென்பார் —
இதினுடைய சமுதாயம் ஆத்மா வென்பார் —
பிரக்ருதியை ஆத்மா வென்பார் —
இதுக்கு வேறு பட்டு இருக்கும் ஆத்மா என்று கொள்ளச் செய்தேயும் -ஜடம் ஆத்மா வென்பார் –(அஸ்வயம் பிரகாசம் -கல்லைப்போல் -மற்ற ஒன்றின் உதவியால் பிரகாசிக்கும் என்பர்)
ஷணிகம் வென்பார் –(க்ஷணம் தோறும் அழிந்து உருவாகும்-புத்த மதம் -)
ஞானம் என்பர் ஞானமுடையவன் அல்ல -அத்வைதி மதம் –
விபு என்பர் –நையாயிகர் மதம் -கண்ணுக்கு தோன்றும்படி இருக்கும் என்பர்
அநித்தியம் என்பர்
ஏகாத்மா என்பர் –ஒரே ஆத்மா அனைத்தும் சரீரங்களிலும் என்பர்
பரிணாமி ஆத்மா என்பர் –ஜைனர் மதம்
ஸ்வதந்த்ரர் ஆத்மா என்பர்
பாரதந்தர்யம் கொள்ளா நிற்கச் செய்தே யும் கர்மத்துக்கு பரதந்த்ரர் என்பர் -(ஈஸ்வரனை ஒத்துக் கொள்ளாமல் )
மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரர் என்பர்
பித்ருக்களுக்கு பரதந்த்ரர் என்பர்
க்ருஹங்களுக்கு (கண்டவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் )பரதந்த்ரர் என்பர்
க்ரஹங்களுக்கு பரதந்த்ரர் என்பர்
அக்னிக்கு பரதந்த்ரர் என்பர்
இந்திரனுக்கு பரதந்த்ரர் என்பர்
பிரம்மாவுக்கு பரதந்த்ரர் என்பர்
ருத்ரனானுக்கு பரதந்த்ரர் என்பர்
ஏகாயன எம்பெருமானுக்கு ருக்கு -(திருவில்லா மால் )பரதந்த்ரர் என்பர்
இப்படி பஹு பிரகாரங்களாலே விப்ரதிபத்தி -விருத்த பிரதிபத்தி பண்ணுவார்கள் -விப்ரதிபத்தி எங்கனே என்னில்
காலும் கையும் போனாலும் இருக்கக் காண்கையாலே இவை ஆத்மா ஆக மாட்டாதே
இதே போல் கண்ணும் காதும் -ஞான இந்திரியங்கள் ஆத்மா ஆக மாட்டாது
மனச்சு ஜடம் ஆகையாலே ஆத்மா வாக மாட்டாது -(நான் எனது மனசில் சிந்தித்தேன் என்றாலே நான் வேறே மனாஸ் வேறே என்றதாயிற்று)
பிராணன் வாயு விசேஷம் ஆகையாலே ஆத்மா வாக மாட்டாது –
ஒரு கரணத்துக்கு வந்த கிலேசத்தாலே மற்றைக் கரணங்களும் கிலேசிக்க காண்கையாலே
தனித் தனியே ஆத்மா வாக மாட்டாது -(தர்மபூத ஞானத்தால் தானே அறிகிறோம் -)
இவற்றினுடைய சமுதாயமான சரீரம் ஆத்மா வாக மாட்டாது –
எங்கனே என்னில் –
உன்னுடைய கால் -என்னுடைய கை -என்னுடைய சரீரம் விதேயமாய்த்து -என்கையாலும் –
மாதா பிதாக்கள் செத்த அநந்தரம் காண்கிற சரீரத்திலே ஒன்றும் முகம் மாறிப் போகாமே கிடக்க –அப்பா எங்கே போனாய் -அம்மா எங்கே போனாய் -என்று முன்னாள் ஆதரித்துப் போந்த சரீரம் தன்னை அரை நாழிகை அகத்தில் கிடக்கவும் பொறாதே -சவம் -என்று பேரிட்டு -தர்சித்த தோஷத்துக்கு நெய்யும் நெருப்பும் கொண்டு குளிக்கை யாலும் -அஞ்ஞரும் கூட சவ சரீரத்திலே ஆத்மா புத்தி பண்ணாமையாலே சரீரம் ஆத்மா வாக மாட்டாது —
இவன் இருந்த பொது ஞானம் நடை யாடுகையாலே ஜடம் ஆத்மா வாக மாட்டாது —
முன்பு செய்த கார்யம் சொல்லுகையாலே ஷணிகம் ஆத்மா வாக மாட்டாது —
நான் இத்தை செய்யா நின்றேன் என்கையாலே ஞானம் ஆத்மா வாக மாட்டாது –
ஆத்மா சரீரத்தில் நின்றும் புறப்பட்டு போம்போது சுற்றில் இருந்தார்க்கு தெரியாமையாலே
விபு ஆத்மா வாக மாட்டாது –
போன ஜன்மம் சில தர்மம் செய்கையாலே இஜ் ஜன்மம் சுகமாய் இருந்தோம் -இஜ் ஜன்மமும் சில ஸூ க்ருதங்களை செய்தால் -வருகிற ஜன்மமும் சுகமாய் இருக்கலாம் -என்று செய்யக் காண்கையாலும் – சரீரத்தை விட்டு போய் ஸ்வர்காதி அனுபவம் பண்ணுவதாக ஜ்யோதிஷ்டோமாதி சாதனத்திலே இழிகையாலும் ஆத்மா அநித்தியமாக மாட்டாது –
ஒரு சேதனன் சுகிக்க -ஒரு சேதனன் துக்கிக்க -ஒரு சேதனன் நலிய-
ஒரு சேதனன் நலிவு படக் காண்கையாலும் -ஏக ஆத்மாவாக மாட்டாது –
பிறந்தவன்று சாகிற பிரஜையினோடு ஆத்மாவோடு -நூறு வயசு புக்கு சாகிறவனுடைய
ஆத்மாவோடு வாசி யற கண்ணுக்கு தெரியாமையாலே -பரிணாமி ஆத்மாவாக மாட்டாது –
தனக்கு அநிஷ்டமான துக்கத்தைப் போக்கிக் கொள்ள மாட்டாமையாலும் -இஷ்டமான சுகத்தை அழைத்துக் கொள்ள மாட்டாமையாலும் -தான் செய்கிறேன் என்று கார்யத்தை செய்து தலைக் கட்ட மாட்டாமையாலும் -ஸ்வ தந்த்ரம் ஆத்மாவாக மாட்டாது –
கர்மத்துக்கு பரதந்த்ரனாக மாட்டான் -அது அசேதனம் ஆகையாலே –
இவனுடைய ஆபந் நிவாரணம் பண்ண மாட்டாமையாலே -மாதா பிதாக்களுக்கு பரதந்த்ரனாக மாட்டான் —
ரஷகத்வம் இல்லாமையாலே பித்ருக்களுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
இப்படி யாகையாலே க்ரஹங்களுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
அசித் ஆகையாலும் -தன்னைப் பிறர் ரஷிக்க வேண்டுகையாலும் –
ஆஸ்ரய அஸி ஆகையாலும் (-தன்னை அண்டிய விறகு போல்வனவற்றை அழிப்பதாகையாலும் )- அக்நிக்கு பரதந்த்ரனாக மாட்டான் —
ஸாப உபஹதனாகையாலும் -(கௌதம ஸாபத்தால் பீடிக்கப் பட்டவன் )-
தன்னுடைய ராஜ்யத்தை பிறர் கையிலே பறி கொடுத்து கிலேசிக்கையாலும் -இந்தரனுக்கு
பரதந்த்ரனாக மாட்டான் —
மது கைடபர் கையில் வேதத்தைப் பறி கொடுக்கையாலும் –
ருத்ரனாலே நலியப் படுகையாலும் -பிரம்மாவுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
தான் அபிமாநித்த பாணனைக் காட்டிக் கொடுத்து தன்னைக் கொண்டு நெகிழ -நழுவ -நிற்கையாலும் பிரம சிரசு தன் கையிலே ஒட்டிக் கிடக்க -சர்வேஸ்வரன் பக்கலிலே சென்று -என் ஆபத்தை போக்கி அருள வேணும் -என்று நோக்கிக் கொள்கையாலும் -ருத்ரனுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கையாலே -ஏகாயன எம்பெருமானுக்கு பரதந்த்ரனாக மாட்டான் –
இனி இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சேஷத்வம் -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கையாலே ததீய சேஷத்வமேயாகக் கடவது –
———————————————————–
இருபத்து நான்காம் வார்த்தை
தத்வ த்ரயாதி த்ரய நிரூபணம் -ஸம்ஸார ஸ்வபாவ கதநம்
(தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,-இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்)
தத்வ த்ரயம்
அதில் ஆத்ம தத்வ த்ரயம்
அதில் பத்தாத்மாகள் த்ரயம் -அர்த்த காம பரர்-தர்ம பரர்-மோஷ பரர் –
அதில் சேஷத்வ ஞானமுடையார் த்ரயம் -அரசன்-தேவதை -பகவானுக்கு சேஷம் –
அதில் பகவத் சேஷத்வ ஞானமுடையார் த்ரயம்-ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி
ஆத்ம ப்ராப்தி காமர் த்ரயம் -அசித்தோடு கலந்த ஆத்ம அனுபவம் -கைவல்யர் -ப்ரஹ்மாத்மக அனுபவம் -(வந்தவர் எதிர் கொள்ள -மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை என்றும் இல்லையே இவர்கள்.)
அதில் பிரபன்ன அதிகாரிகள் த்ரயம் -அஞ்ஞானிகள் -ஞானாதிகரர்கள் -பக்தி பாரவச்யர்கள் .
(ஆத்ம ப்ராப்தி காமர் த்ரயம் –
அசித்தோடு கலந்த ஆத்ம அனுபவம் –துருவ நக்ஷத்ரத்துக்கு மேலே ஆகாச கங்கா உத்பத்தி ஸ்தானத்தை அனுபவ ஸ்தானம் என்பர் எங்கள் ஆழ்வான் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-8-98-99-100)
கைவல்யர் -விரஜா நதிக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் நடுவிலுள்ள ஸ்தானம் அனுபவ ஸ்தானம் –முக்தானாம் பரமம் கதி -வியாக்யானத்தில் பட்டர் -பாத்மபுராணம் உத்தர காண்டம் -256 அத்தியாயத்தில் இது உண்டு
ப்ரஹ்மாத்மக அனுபவம் -ஸ ஏநாந் ப்ரஹ்ம கமயதி -உபநிஷத் -அர்ச்சிராதி கதி ப்ரஹ்ம ப்ராப்தி-ஸ்ரீ வைகுண்டமே அனுபவ ஸ்தானம்
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-43)
அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:
அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன
ஞாநீ துர்லப-அறிவார் உயிரானாய்பரமபதத்தில் சென்றாலும் குண அனுபவத்தில் மட்டுமே இருப்பவர் -கைங்கர்ய நிஷ்டர்களை விட தாழ்ந்தவர் -இதிலும் ஸ்வார்த்த பரம் -பரார்த்த பரத்தை விட தாழ்ந்தவர் -இப்படி த்ரயம் அங்கும் -வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று -இரண்டு வகைகள் அருளிச் செயல்களில் உண்டு -சுகோ முக்த வாமதேவ முக்த இத்யாதி அனுபவம் மாத்திரமே உள்ளவர்கள் -ஸ்வ கத பிரபத்தி நிஷ்டர்கள் ஸ்வார்த்த கைங்கர்யத்திலும் பரகத பிரபத்தி நிஷ்டர்கள் பரார்த்த கைங்கர்யத்திலும் இருப்பார்கள் –
கைவல்யார்த்தி அர்ச்சிராதி கதியில் சென்று திரும்பாமல் விரஜை தாண்டி ஆத்ம அனுபவத்தில் இழிந்து கேட்டே போகிறார்கள் -இங்கு யோஜனா பேதம் உண்டு
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply