ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -61-72–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

அறுபத்தோராம் வார்த்தை

ஸ்ரீ பரத ஆழ்வான் பெருமாளை வந்து சரணம் புக்கது பலியாது ஒழிவது என் -என்ன
பலித்தது -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் -எங்கனே என்னில் –

இவன் தான் பீதனாய் வந்து சரணம் புக்கது –
பரதனுக்கு ராஜ்யம் -என்கிற ஸ்வரூப விருத்தமான ஸ்வா தந்த்ர்யத்தை கழிக்கைக்கு அன்றோ –
திருவடி நிலை ஆழ்வார்களைக் கொடுத்து -தத் பரதந்த்ரனாய் போய் இரு -என்ற போதே
அந்த பய நிவ்ருத்தி பிறந்தது –

அதுக்கு பிரமாணம் -ஆரு ரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்ன சஹிதோ பலீ (ஸமன்வித பலீ பாடபேதம்)-(அயோத்யா -113-1- பலமுடையவனான பரதன் மிக உகப்புடன் சத்ருக்கனனுடன் தேரில் ஏறினான்)-என்று —
இவன் மீள வேணும் என்று பிரார்த்தித்தது செய்யாது ஒழிந்தது
ருஷயோஸ் ப்யாகமன் சர்வே வதா யாசூர ரஷசாம் -(பால -1-44-அஸூர ராக்ஷஸர்களை அழிப்பதற்காக எல்லாமே ரிஷிகளும் சரணம் அடைந்தனர்)என்று சரணாகதரான ரிஷிகளுடைய ரஷண அர்த்தமாக – இவன் மீண்டு எழுந்து அருள வேணும் -என்றத்தை மறுத்து எழுந்து அருளினார் –
என் போல் என்னில் –விருந்தினராய் வந்தவர்களுடைய த்ருப்த் யர்த்தமாக க்ருஹவானவன்
பார்யைக்கும் தனக்கும் பக்வமான சோற்றை இட்டு இருவரும் பட்டினி கிடக்குமா போலே –
அவனுக்கு ஸ்வ விஸ்லேஷத்திலும் காட்டில் தமக்கு பரத விஸ்லேஷம் துஸ் சஹமாய் இருக்க –ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகளுடைய த்ருப்த் யர்த்தமாக மறுத்து எழுந்து அருளினார் –

———————————————————————————————–

அறுபத்து இரண்டாம் வார்த்தை

மழலைக் கூற்றத்து நாராயணப் பிள்ளை –

த்ருஷ்டார்த்தமாக பண்ணின பிரபத்தி பலிக்க காண்கிறிலோம் –
இது போலேயோ அத்ருஷ்டர்தமும் -என்று நம்பிள்ளையைக் கேட்க –

த்வத் அனுபவ விரோதி யானவற்றை எல்லாம் போக்கி –
த்வத் அனுபவத்தை தர வேணும் என்று பிரபத்தி பண்ணி த்வத் விருத்த பிரபத்தியை
பண்ணினால் -இவனுக்கு ஹிதத்தை எம்பெருமான் செய்து அருளுகையாலே  பலிக்குமோ –முதல் பண்ணின பிரபத்தியை -நிரூபியாமல் காண் இது சொல்லிற்று –

(த்ருஷ்டார்த்தமாக பண்ணின பிரபத்தி-இவ்வுலக பலன்களை உத்தேசித்துச் செய்யும் சரணாகதி பலிக்காமல் இருக்கக் காண்கிறோம் -உன் அனுபவத்துக்குத் தடையானவற்றை எல்லாமே போக்கி உன் அனுபவத்தையே தர வேணும் என்றும் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது ஏற்கனவே செய்த சரணாகதிக்கு முரணாக இஹ போகத்துக்காக சரணாகதி செய்தால் ஹித பரனான எம்பெருமான் அதைப் பலிக்கச் செய்ய மாட்டான் அன்றோ)
ஆனால் -வரத யதி ஹ வஸ்து வாஞ்சாம் யஹம் தவ சரண லப அவிரோதஸ் தத
யதி ந பவதி தத் பிரதேஹி பிரபோ ஜடிதி விதர பாதமேவ அந்யதா வரதராஜ ஸ்தவம் -89– என்று பிரமாணம்

(வரத யதிஹ வஸ்து வாஞ்சாம் யஹம் தவ சரண லப அவிரோதஸ் தத
யதி ந பவதி தத் ப்ரதேஹி ப்ரபோ ஜடிதி விதர பாதமேவ அந்யதா -89-

ஹே வரத ப்ரபோ
அஹம் இஹ யத் வஸ்து வாஞ்சாமி –அடியேன் இங்கே யாது ஒரு வஸ்துவை விரும்புகிறேனோ
தத -அந்த வஸ்து வாஞ்சையினால்
தவ சரண லபா விரோதஸ்–உனது திருவடிகளைப் பெறுதற்கு பிரதிபந்தமானது
ந பவதி யதி –உண்டாக மாட்டாதாகில்
தத் ப்ரதேஹி–அந்த வஸ்துவை தந்து அருள்
அந்யதா –நான் ஒரு வஸ்துவை விரும்புவது உன் கமல பத ப்ராப்திக்கு பிரதிபந்தகம் ஆகுமாகில்
பாதமேவ ஜடிதி விதர –திருவடியையே உடனே தந்து அருள்

தரிசனத்துக்கு தர்சனம் இழந்த ஆழ்வான் எம்பெருமானார் நியமனத்தாலே திருக்கண் பெற
ஸ்தவம் அருளிச் செய்கிறார் ஆகையால் அந்த பிரார்த்தனைக்கு உபோத்காதமாய் இந்த ஸ்லோகம்-மாம்ச சஷுஸ்ஸை தா என்று நேர் கொடு நேர் பிரார்த்திக்க மாட்டாமையாலே அத்தை உள்ளடக்கி வ்யங்க்ய மரியாதையாலே இந்த பாசுரம்
யத் தச் சப்தங்களை இட்டு பாசுரம் இடுகிறார் -மாம்ச சஷுஸ் ஆகிற ஷூத்ர ப்ரயோஜனத்தில்-விருப்பத்தை தம் வாயால் வெளியிடக் கூசி –)

———————————————————————————————-

அறுபத்து மூன்றாம் வார்த்தை

நஞ்சீயர் சரம தசையில் -குட்டக்குடி இளை யாழ்வார் –
த்வயத்தை அநு சந்தித்தால் ஆகாதோ -என்ன –
உனக்கு -அநு சந்திக்க வேண்டாதே எனக்கு இப்போது வேண்டுகிறது என்-நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ விருப்பது -என்று அருளிச் செய்தார்-

(நடையாடித் திரியும் உனக்கும் பிராகிருத விஷய சம்ஸர்க்கம் ஏற்படக் கூடுமாகையால் அது நீங்குவதற்கு த்வய அனுசந்தானம் வேண்டியிருக்கிறது -விஷயங்களில் இருந்து தொடர்பு நீங்கி எம்பெருமானையே சிந்தித்திக் கொண்டு அசைய முடியாமல் கிடக்கும் எனக்கு த்வய அனுசந்தானம் தேவையில்லை என்றார் -என்கிறவாறு -)

———————————————————————————————

அறுபத்து நாலாம் வார்த்தை
காகத்தினுடைய விஷயீ கார சமயத்தில் -ததஸ் தஸ்ய அஷி காகஸ்ய ஹி நஸ்தி ஸ்ம ஸ தஷிணம் (அந்த ராமபிரான் அந்த காகாசூரனுடைய வலது கண்ணை அழித்தார்)–என்கிறபடியாலே -சரணாகதன் ஆனாலும் முன்பு உண்டான கர்மங்கள் அநு பாவ்யங்களோ -என்னில்
இது பண்ணின குற்றத்துக்கு தக்க தண்டம் பண்ணிற்று அன்று -தன் திருவடிகளிலே பண்ணின மகா அபராதத்தாலே சர்வ லோக பரித்யக்தமான காகத்தை வெறுமன் பொறுத்து விட்டால்-பொறுத்தமைக்கு அடையாளம் தெரியாது இறே
ஆகையால் தாம் பொறுத்தமைக்கு அடையாளம் பண்ணி விட்டார் இத்தனை -அது தானும்
திருமேனியிலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இடம் கொடுத்தவோ பாதி நினைத்துச் செய்தார் இத்தனை-
ஒரு கண்ணால்  இரண்டும் கண்ணும் கொள்ளக் கடவ கார்யம் கொள்ளும் காக ஜாதி யாகையாலும் –ஆத்ம சத்தையைக் காட்டி லும் பொறாத படியால் அவ்  அபதாரத்தைப் பண்ணின காகத்துக்கு இது தண்டமாக போராமையாலும் -பொறுத்தமைக்கு அடையாளம் வேண்டுகையாலும் -இங்கனே ஒரு கண் அழிவு கண்டார் இத்தனை -போக்கி -தண்டம் அன்று என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –

(ஆத்மாவின் சத்தையையே அழித்தாலும் பொறாதபடியான அஸஹ்ய அபசாரம் பண்ணிய காகம் -ஆகவே இது தண்டன் அல்ல -ப்ரஹ்மாஸ்திரம் வீணாகக் கூடாது என்றும் திரு உள்ளம்)

————————————————————————————————

அறுபத்து ஐந்தாம் வார்த்தை
பிரபன்னனுக்கு பிரபத்தி வசனம் பலகாலம் வர்த்திக்க வேணுமோ -ஒரு கால் அமையாதோ
என்று கேட்க -பிள்ளை யருளிச் செய்கிறார் –
பிரபத்யவ்யனுக்கோ -பிரபத்தாவுக்கோ -நீர் ஆர்க்கு கேட்கிறது -பின்பு –
பிரபத்யவ்யனுக்கு இவன் ஒருகால் உச்சரித்தது அமையும் –
பிரபத்தானவன் பிராப்யத் திருஷ்ணை யாலே அதினுடைய சித்தி யளவும் செல்ல ஆவர்திக்கை தவிரான் –
அது என் போல் என்றால்-பிபாசிதன் ஆனவன் ஒருகால் தண்ணீர் என்றதே கொண்டு –
வார்க்கிறவன் வார்க்கக் கடவனாய் இருக்க -பிபாச அதிசயத்தாலே தண்ணீர்  செல்ல –
தண்ணீர் தண்ணீர் -என்று ஆவர்த்திக்குமா போலே பலகால் ஆவர்த்திக்குமது
விதி ப்ர  உக்தமாய் வரக் கடவது அன்று –
ப்ராப்ய த்ருஷ்ண அதிசயத்தாலே ராகப் ப்ர  உக்தமாய் வரக் கடவது என்று அருளிச் செய்தார்

(ஜப்த்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்-குருபரம்பரை பூர்வகமாக இல்லாத த்வயமும் த்யாஜ்யம்)

———————————————————————————————-

அறுபத்து ஆறாம் வார்த்தை

எண்ணாயிரத்து திருவாய்க் குலத்து ஆழ்வான் -பிரபத்தி புத்தி பூர்வகமாக பண்ணின
அபராதத்துக்கு(பாபம் என்று அறிந்தே செய்யும் அபசாரம்) பிராயச் சித்தம் ஆகுமோ -என்று நம் ஜீயரைக் கேட்க -பிரபத்தி பிரபாவத்தைப் பார்த்தால் புத்தி பூர்வத்துக்கும் பிராயச் சித்தமாகும் -ஞானம் பிறந்த பின்பு புத்தி பூர்வகம் கூடாது –ப்ரமாதிகத்துக்கு -(கவனக் குறைவுக்கு) -அனுதாபம் உண்டு -பயப்பட வேண்டா என்று அருளிச் செய்தார் –

(ஷமா ஷோடஸி -ஸ்லோகம் எம்பெருமானார் இடமும் விண்ணப்பித்து அருளிச் செய்த ஸ்லோகம்)

————————————————————————————————-

அறுபத்து ஏழாம் வார்த்தை
பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி –
விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுகை பிரபத்தி –

————————————————————————————————-

அறுபத்து எட்டாம் வார்த்தை –
கண்ணியனூர் சிறியாச்சான் -தாசரதி என்னும் திரு நாமம் கொண்டவர் -எம்பாரை தண்டம் இட்டு திரு உள்ளத்தில் தஞ்சமாக நினைத்து இருக்குமத்தை எனக்கு அவசியம் அருளிச் செய்ய வேணும் -என்ன -தாசரதீ எம்பெருமானார் ஸ்ரீ பாத த்வயம் ஒழிய தஞ்சமாய் இருப்பது இல்லை என்று அருளிச் செய்தார் –

(

அரங்கன் தஞ்சம் என்று அடைந்த எம்பெருமானாரே தஞ்சம் –

ஈந்தனன் ஈயாத இன்னருள்* எணிண்ல் மறைக்குறும்பைப்-
பாய்ந்தனன்* அம்மறைப் பல்பொருளால்,* இப் படியனைத்தும்-
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை* வேர்பறியக்-
காய்ந்தனன்* வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே)

————————————————————————————————-

அறுபத்து ஒன்பதாம் வார்த்தை
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் சில வைஷ்ணவர்களைக் காட்டி த்வயத்தில் பூர்வ
கண்டத்துக்கும் உத்தர கண்டத்துக்கும் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளை அருளிச் செய்தபடி -பெருமாளும் பெரிய பிராட்டியாரும் அபிமதங்களை முடிப்பார் என்று இருக்கை –
அபிமதங்கள் தான் எவை என்னில் -பெருமாளும் பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பில்
எல்லாம் அடிமையும் செய்ய வேணும் என்று இருக்கையும் -அடிமைக்கு விரோதி கழிய வேணும்  என்று இருக்கையும் -என்று அருளிச் செய்தபடி நினைத்து இருக்கிறார்கள் –
ஸ்ரீ பாதத்தில் அவர்கள் நினைத்து இருப்பது ஏது என்று ஜீயர் கேட்க -இம் மஹோ
உபகாரத்தை பண்ணினவன் -த்வயார்த்தத்தை  அருளியது -என்று நினைத்து இருப்பது –

பின்னையும் ஜீயர் புருஷகாரமாய் இருக்கும் இவள் -அகலகில்லேன் -என்று ஆழம் கால்
படா நிற்க -புருஷகார பூதை யாகிறபடி எங்கனே என்னில் -அல்லி மலர் மகள் போக
மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -திருவாய் மொழி -3-10-8-நிற்கச் செய்தேயும் ஜகத்
நிர்வாகமும் செல்லுகிறது-சொல்லுகிறது இல்லையோ -பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்றும் -ஜகத் நிர்வாகமும் செல்லுகிறது-சொல்லுகிறது இல்லையோ – என்று அருளிச் செய்தார் –

(அவன் ஸ்ரீ தேவி பூமா தேவியுடன் ஈடுபட்டுக் கொண்டே இருந்தும் படைத்துக் காத்து அழிக்கும் கார்யங்களை செய்வது போல் ஒரே சமயத்தில் எம்பெருமானிலும் ஈடுபடுவதும் புருஷகாரம் செய்வதும் பிராட்டிக்கும் பொருந்தும் என்றவாறு)

————————————————————————————————

எழுபதாம் வார்த்தை

நம்பியை கோவர்த்தன தாசர் -அர்ஜுனனைப் போலே யாகிலும் யோக்யதை வேண்டாவோ-என்ன –ஷத்ரியத்வாதிகளும் வேணுமோ என்றார் –

(அர்ஜுனன் முமுஷு அல்லவே -ப்ரபன்னனுக்கு அர்ஜுனன் போலே யாவது தகுதி இருக்க வேண்டாவோ என்பதை கேள்வி -அவன் ஷத்ரியன் என்பதால் ஷத்ரியத்வம் வேண்டும் என்றும் சொல்ல வேண்டி வருவதால் கேள்வி சரியானதல்ல என்கிறார்-மேல் அதிகாரி -பிராட்டி -எம்பெருமான் இவர்களிடம் இருக்க வேண்டியவற்றை விவரிக்கிறார்)

அதிகாரிக்கு
அபராதாநாம் ஆலயத்வமும் –
ஆர்த்தியும் –
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் –
ஸ்வ ஞானமும் –
ஸ்வரூப பிரகாசமும் -வேணும் –

(ப்ரபத்யே -என்று உணர்த்தப்படும் அதிகாரிக்கு -தான் குற்றங்களுக்கு எல்லாமே கொள்கலன் என்று அனுசந்திக்க வேண்டும் என்றும் -எம்பெருமானைப் பெற வேண்டும் என்னும் துடிப்பும் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்தவ அனுசந்தானங்களும் -சேஷத்வமும் அசித்வத் பாரதந்தர்ய ஸ்வரூப ஞானமும் வேண்டும்)

(அதிகாரி பற்றி அருளிச் செய்து த்வய பதார்த்தம் அருளிச் செய்கிறார் மேல்)

பூர்வ அபராதம் பொறுக்கைக்கு புருஷகாரம் வேணும் –
கால நியதி பாராமைக்கு மதுப்பு வேணும் –
புருஷகாரம் தான் ஜீவிக்கைக்கு சீலாதி குணங்கள் வேணும் –
அது தான் -கார்யகரம் ஆகைக்கு ஞான சக்தியாதி குணங்கள் வேணும் –

சம்சாரிகளுக்கு ருசி ஜநகமுமாய் –
முமுஷுக்களுக்கு சுபாஸ்ரயமுமாய்
முக்தருக்கு போக்யையும் ஆகைக்கு
விலஷண விக்ரகம் வேணும் –

(ஐயப்பாடு அறுக்கவும் ஆதரம் பெருக்கவும் அரங்கனுக்கு அழகு உண்டே)

உபாய சௌகுமார்யத்துக்கு நைர பேஷ்யம் வேணும் –

அதுதான் பலத்தோடே வ்யாப்தம் ஆகைக்கு ஸ்வீகாரம் வேணும் –

(பூர்வ வாக்யார்த்தம் அருளிச் செய்து மேல் உத்தர வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார்)

கீழ் புருஷகாரம் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதை யாக வேணும் –

கீழ் உபாய பூதன் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதன் ஆக வேணும் –

சேஷத்வத்து அளவு அன்றிக்கே –
சேஷத்வ வ்ருத்தியும் வேண்டும் –

(என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -அவா தத்வ த்ரயங்களையும் தாண்டி அன்றோ பெருகி இருக்கும்)

ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி அன்றிக்கே
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேண்டும் –

———————————————————————————————

எழுப்பத் தோராம் வார்த்தை

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸர்க்கு –

ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது
தானும் பிறரும் தஞ்சம் அன்று –
ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை
அனுசந்தித்து பிழைத்தல் –
நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு மேற்பட்டது இல்லை
என்று அருளிச் செய்தார் –

(வங்கி புரத்து நம்பி எம்பெருமானாரின் சிஷ்யர் -மணக்கால் நம்பியுடைய சிஷ்யரான வங்கி புரத்தாய்ச்சி வம்சத்தர்)

———————————————————————————————–

எழுபத்து இரண்டாம் வார்த்தை

எம்பெருமானார் பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று –பிரபத்தி என் -என்று விண்ணப்பம் செய்ய –

கனிப் பழம் -தானே -கம்பு அற்றால் போலே இருக்கும் என்ன -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது – என்று விண்ணப்பம் செய்ய –

(ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”-ஞான சாரம் -1-)

ஆகில் இவ் அர்த்தத்தை திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் கேளும் -என்ன —இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் -சக்ரு தேவ -என்று அருளிச் செய்ய –சஹ சைவ–சடக்கென திருவடிகளில் விழ வேணும் -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் இவ் அர்த்தத்தை திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் இத்தனை பிசகுகைக்கு உண்டோ –
ஒரு ரேகை மாத்ரம் என்ன – (அதாவது நாம் பற்றும் பற்று ஸ்வீகாரம் ஆகுமோ -என்ற சங்கை வேண்டாம் – கையில் உள்ள ரேகை போலே அதிகாரி விசேஷணம் ஆகவே இருப்பது பரிகாரம் என்ற கருத்து – )இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய –

ஆகில் இவ் அர்த்தத்தை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஸ்ரீ பாதத்திலே கேளும்  என்ன –

இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய

அவரும் ததீய பர்யந்தமாக  காணீர் -என்று அருளிச் செய்தார் –
பாகவத அபிமானத்துக்கு விஷயம் ஆகிறவனுக்கு பிரபத்தி ஏற்பட்டு எம்பெருமான் அருள் கிட்டும் -(இதுவே ஸர்வ முக்தி பிரசங்கம் ஆகாமைக்கு ஹேது )

(ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-

ஆர்த்த பிரபத்திக்கு வேஷம் இருக்கும் படி என் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கேட்க–கனிப் பழம் காம்பற்றால் போலே இருக்கும் என்று அருளிச் செய்தார் என்று பிரசித்தம் இறே
ப்ராப்ய ருசியாலே –ப்ராப்ய ஆபாசங்களிலும் ப்ராபக ஆபாசங்களிலும் பற்று அற்று ஆர்த்தியால் வந்த பாரவஸ்யத்தாலே பிராபத்தான ரூபேண திருவடிகளில் விழும் விழுக்காடு என்று-ஆர்த்த ப்ரபத்தியைச் சொல்லுகிறது–யதா பரா நந்வயி பிர்த்துஸ் சக ஸ்ம்ருதி பிர்விநா -தேன தத் புரதஸ் பாதாஸ் ஸா பிரபத்திஸ் ததா பவேத் -என்று இந்த பிரபத்தி வேஷம் தான் ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் ஸங்க்ரஹேன சொல்லப்பட்டது இறே)

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply