ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
————
நூற்று ஒன்பதாம் வார்த்தை –
உபாயத்தை நிலை இட்டவர்கள் –
பிராட்டியும்
த்ரௌபதியும்
திருக் கண்ண மங்கை ஆண்டானும் –
உபேயத்தை நிலை இட்டவர்கள்
இளைய பெருமாளும் –
பெரிய உடையாரும்
சிந்தயந்தியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
சீதோ பவ என்னும் சக்தியோடே தன்னுடைய தனி இருப்பை மாற்ற வல்லவள் –
பெருமாளுடைய ஸ்வரூபத்துக்கு கொற்றையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும் –
லஜ்ஜை இல்லாத கோஷ்டியில் லஜ்ஜை வுடையவள்
அவன் கையிலே தன் லஜ்ஜையை பொகட்டு இருந்த படியாலும்-
திருக் கண்ண மங்கை ஆண்டான் ஸூவ வியாபாரத்தை விட்டார்-தம் பர பரப்பை மாற்றி வகுத்தவன் வாசலிலே ஒதுங்கின படியாலும் –
உபாயத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –
நில் என்ன -குருஷ்வமாம் அநு சரம் –என்கிறபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற படியாலும் –
க்ரி யதா மிதி மாம் -வத என்கிற படியாலும் –
லஷ்மணேந கதாம் கதிம் (பெருமாளும் இளைய பெருமாள் பரமபதம் போக தானம் போவதாக அருளிச் செய்து –)-என்னும் படியான பிராப்தியாலும் –
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம் கைப்பட்டது அவர்க்கே யாகையாலும் –
பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் -வகுத்த விஷயத்தை பிரிந்து தம் தாமுடைய உடம்பைப் பேணாமையாலும் –
சிந்தயந்தி வகுத்த விஷயத்தை கண்ட மாத்ரத்திலே விரோதியான உடம்பை விட்டு நிற்கையாலும்-உபேய அனுபவத்துக்கு ஸீமா பூமி இவர்கள் –
ஸ்ரீவசன பூஷணம் சூரணை -80 முதல் 84 இவை உண்டே –
——————————————————-
நூற்று பத்தாம் வார்த்தை
வங்கி புரத்து ஆச்சி (மணக்கால் நம்பி சிஷ்யன் வங்கிபுரத்து நம்பியின் திருத்தகப்பனார்)-கிடாம்பி ஆச்சானுக்கு –
பகவத் சேஷமாய் –
அநாதி காலம் எம்பெருமானோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்ட ஜந்துவுக்கு –
எம்பெருமான் திருவடிகளில் -பிணைத்துப் பிழைப்பிக்க பிராட்டி உளள் என்று இரும் –
என்று அருளிச் செய்தார் –
———————————————————–
நூற்று பதினோராம் வார்த்தை
விட்டுப் பற்றித் தேறி இருக்கை -அதிகாரி க்ருத்யம்
விடுவித்து பற்றுவித்து விலக்கி அடி யறுக்கை- உபாய க்ருத்யம்
என்று வடக்குத் திரு வீதி பிள்ளை
————————————————————
நூற்று பன்னிரண்டாம் வார்த்தை
உபாயத்தில் அத்யவசாயம் ஆவது –
சங்கா த்ரய நிவ்ருத்தி பூர்வகமாக அத்யவசிக்கை –
சங்க த்ரயம் ஆவது –
ஸ்வ க்ருத தோஷ தர்சனம் –
உத்தேச்ய துர்லபத்வம் –
உபாய பல்குத்வம் –
இம் மூன்று சங்கையும் –
1-சர்வஞ்ஞத்வம் –
2-சர்வ சக்தித்வம் –
3-பரம காருணி கத்வம் –
4-பரம ஔ தார்யத்வம் –
5-ஆஸ்ரித வத்சலத்வம் –
6-அசரண்ய சரணத்வம் –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் –
8-நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் –
9-ஸ்ரீயபதித்வம் –
10-நாராயணத்வம் –
இப் பத்து குணங்களையும் அனுசந்திக்க நிவ்ருத்தமாகும் –
எங்கனே என்னில் –
1-ஆஸ்ரித வாத்சல்யத்தை அனுசந்திக்க –
ஸ்வ க்ருத தோஷம் தர்சனத்தாலே வருகிற சங்கை கழியும் –
2-சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -பரம காருணிகத்வ -பரம ஔ தார்யத்வ -ஆகிற நாலு குணங்களையும் -அனுசந்திக்க –
உத்தேச்ய துர்லபத்தாலே வருகிற சங்கை கழியும் –
3-அசரண்ய சரண்யத்வம் -அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் -ஆகிய இவை இரண்டையும் அனுசந்திக்க
உபாய பல்குவத்தால் வருகிற சங்கை கழியும் –
மேல் மூன்று குணங்களும் மூன்றுக்கும் பொது –
எங்கனே என்னில் –
ஸ்ரீ ய பதித்வம் அனுசந்திக்க -தோஷம் கண்டு அஞ்ச வேண்டா –
நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் அனுசந்திக்க -உத்தேச்ய துர்லபம் கண்டு அஞ்ச வேண்டா –
நாரயணத்வத்தை அனுசந்திக்க உபாய பல்குத்வம் கண்டு அஞ்ச வேண்டா –
இக்குணங்கள் மாம் -என்கிற பதத்தால் அனுசந்தேயங்கள் –
எங்கனே என்னில் –
1-உன்னில் காட்டில் உன் கார்யம் அறிவேனுமாய் –
2-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு ஷமனுமாய் –
3-உன்னிலும் உன் கார்யத்துக்கு நேர்ந்து இருப்பேனுமாய் –
4-உன் கார்யம் செய்யும் இடத்தில் என்றும் செய்வேனுமாய் –
5-உன் குற்றம் காணாது இருப்பேனுமாய் –
6-உன் குற்றம் போக்யமாய் இருப்பேனுமாய் –
7-உனக்கு பற்று இல்லாத அன்று பற்றாய் இருப்பேனுமாய் –
8-உன் தரம் பாராது இருப்பேனுமாய் –
9-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு பிராப்தனுமாய் –
10-உனக்கும் எனக்கும் தாரகையான சர்வேஸ்வரிக்காகவே உன் கார்யம் செய்வேனுமாய் –
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே -இவள் குற்றம் காட்டிலும் விட ஒண்ணாத குடல் துடக்கையும் உடையேனுமாய் இருக்கிற என்னை என்றபடி –
————————————————————–
நூற்று பதிமூன்றாம் வார்த்தை
த்யாக விசிஷ்டம் ஸ்வீகாரம்
ஸ்வீகார விசிஷ்டம் அதிகாரம்
குண விசிஷ்டம் உபாயம்
லஷ்மீ விசிஷ்டம் உபேயம்
(ஸர்வ தர்மான் பரிதிசயம் செய்து ஸித்த உபாயமான அவனை ஸ்வீ காரம் -அனுபவம் கைங்கர்யம் செய்ய பிரபன்ன அதிகாரிக்கு ருசி வந்து ஸ்வீ காரம் பண்ண வேண்டும்
விடுவித்து பற்றுவிக்கைக்கு கல்யாண குண விசிஷ்டன் -ஆஸ்ரய சவுகர்ய குணங்களும் ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டிய குணங்களுடன் கூடிய அவனே உபாயம்
கைங்கர்யம் மிதுனத்தில் தானே ஆகவே ஸ்ரீ யபதி வேண்டும் என்றவாறு -)
——————————————————–
நூற்று பதினான்காம் வார்த்தை –
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசர் –
அர்ஜுனன் பிரஸ்னம் பண்ண –
சர்வஞ்ஞனுமாய் – சர்வ சக்தியுமாய் இருக்கிறவன்
பண்டு போல் சொல்ல மாட்டேன் -என்றது என் -என்று
கூரத் ஆழ்வானைக் கேட்க –
திரௌபதி குழல் முடித்த பின்பு பண்டு போலே அவன் வாய் புறப்படுமோ -என்று
திரு உள்ளக் கருத்து -என்று அருளிச் செய்தார் –
(அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —சூரணை -22)
——————————————————
நூற்று பதினைந்தாம் வார்த்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் –
நம் பக்கல் தம் பேற்றுக்கு -நம -என்னாதவர்களை
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -திருவாய் மொழி 3-9-9- என்னும்படியாய்
இருப்பதொரு ஔதார்ய விசேஷம் –
நார வஸ்துவுக்கு நைரந்தர்ய வேஷம் —
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
பேற்றுக்கு நிர் பரனாய் போருகையும் –
தத் பிரதிபந்தகமான பாபத்தில் ஆர்த்தனாய்ப் போருகையும் –
(மதுராபிந்து மிஸ்ரமான இத்யாதி —ஸ்வா தந்தர்யம் முழுவதும் கழியாமல் -உபாசகர்களுக்கும் –நாராயணனே என்றும் இல்லாதவர்களுக்கும் -பேற்றை அருளும் இயல்வினன்-நமக்கு பொறுப்பு துரப்பு -நிர்பரோ – நிர்பயா-பேறு தப்பாது என்று-இருந்தாலும்-பேற்றுக்குத் த்வரிக்கவும் வேண்டுமே -)
————————————————————–
நூற்று பதினாறாம் வார்த்தை
எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை
ஸ்வ ஸ்வரூப வைசத்ய தசையாவது –
பர ஸ்வரூப விஷயத்தில் -ஸ்வீகார -த்யாக பிரகார –
பிரதிபத்தி நிவ்ருத்தியில் வ்யவஸ்தனாய்ப் போருகை –
விட்டுப் பற்ற என்று அருளிச் செய்வர் ஆழ்வான் –
பற்றி விட -என்று அருளிச் செய்வர் முதலி யாண்டான் –
பிச்சுத் தெளிந்து கண் விழிக்கை என்று ஆண்டான் –
(முந்துற யுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடு — மாலிருங்கோலை வணங்குதும் வா மட நெஞ்சே -பெரிய திருமொழி -9-8-1-என்றபடி விஷயாந்தரங்களை விட்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் -கூரத்தாழ்வான் -இந்த நிஷ்டை ஆழ்வான் போன்ற வைராக்ய சீலருக்கே கூடுமோ ஒழிய ஸம்ஸாரிகளுக்குக் கூடாது -என்ற திரு உள்ளம் பற்றிய முதலியாண்டான் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – என்றபடி அவன் இனிமையே இவற்றைப் போக்க உபாயமாகும் என்பர் -பால் குடித்து பித்தத்தைத் தீர்த்துக் கொள்ளுவது போல் இது -)
(ஸ்வீ கார பிரகாரம் -பற்றுதல் -த்யாஜ்ய பிரகாரம் -விடுவது -பிரதிபத்தி பிரகாரம் -பற்றிய பற்றும் உபாயம் இல்லை -இசைவித்து தனது தாளிணைக்கீழ் இருத்தும் அம்மான்
பரிதிஜ்ய -விட்டே பற்ற வேண்டும் -பண்ணி இருந்தால் அல்லவே -விடுகையை முன்னிட்டு பற்ற வேண்டும் தியாக விஸிஷ்ட ஸ்வீ கார்யம் கீழே பார்த்தோம்
வீடு மின் முற்றவும் –உம்முயிர் வீடு செய்மினே -நடுவில் வீடு செய்து -விட்ட பின்பு பற்ற வேண்டும் -முக்யத்வம் காட்டவே ஆழ்வார் அருளிச் செயல்
கூரத்தாழ்வான் இவை பற்றிய நிர்வாஹம்
முதலியாண்டான் -அவனைப்பற்றவே மற்றவர் விட்டுப்போம் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – -இத்யாதி -உறங்குவான் கைப்பண்டம் போல் தானே விலகும் அன்றோ – -லௌகிக த்ருஷ்டாந்தம் -இதுக்கு பால் குடித்து பித்தத்தைத் தீர்த்துக் கொள்ளுவது போல் இது-)
—————————————————————
நூற்று பதினேழாம் வார்த்தை
எம்பார் வார்த்தை –
ஸ்வீக்ருத உபாய பூதனாகை யாவது -ஸ்வீக்ருத பூதனாகை –
அதாவது –
ஸ்வ கத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து -பரகத ஸ்வீகாரத்துக்கு விஷயமாய் விடுகை –
அதாவது
ஸ்வார்த்த பிரவ்ருத்தியும் -ஸ்வ பிரவ்ருத்தியும் விட்டு –
பரார்த்த பிரவ்ருத்தியிலும் – பர பிரவ்ருத்தியிலும் அந்வயிக்கை –
உனக்கு என்று நிவ்ருதிக்கையை விட்டு –
எனக்கு என்ன நான் பிரவ்ருதிக்க என்று உள்ளே புகுரு -என்று
ஈஸ்வரன் வாக்கியம் -சரம ஸ்லோகம் அருளியது –
(அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து-இறைவர், யாருக்காக அருள விரும்புகிறார் என்பதை அறியாமல், தான் விரும்பியவர்களிடம் தன்னிச்சையாக அருளைச் செய்வார்.)
(நான் எனக்கு நீர் நுமது விட்டு –அவன் ஆனந்தத்துக்காக அவனுக்கும் அவன் அடியாருக்குமாக இருக்க வேண்டும் -உபாய சிந்தனை விட்டு உபேய அனுபவத்தில் இழிந்து கைங்கர்யங்களில் இழிய வேண்டும் -அவன் தானே அருள வர-ஸ்வாமி சொத்தை அனுபவிக்க இழிய விலக்காமையே வேண்டுவது)
(அடங்கெழில் சம்பத்து, அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதுஎன்று, அடங்குக உள்ளே)
———————————————————————————–
நூற்று பதினெட்டாம் வார்த்தை –
நடதூர் அம்மாள் – திரு வெள்ளறை -பிள்ளை (எங்கள் ஆழ்வார் -விஷ்ணு சித்தர்-அம்மாள் ஆச்சார்யர் எனப்படுவர்)-ஸ்ரீ பாதத்திலே சரம ஸ்லோகார்த்தம் கேளா நிற்கச் செய்தே –
பிள்ளை -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று அருளிச் செய்ய
அம்மாள் -இது ஒரு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் இருந்த படி என் -என்ன –
பிள்ளையும் –
நீர் இப்படி சொல்லுவான் என் –
அதிகாரிக்கு சேர்ந்தத்தை விடச் சொல்லில் அன்றோ நீர் இப்படி சொல்ல வேண்டுவது –
அதிகாரிக்கு சேராததை யன்றோ விடச் சொல்லிற்று –
ஆகையால் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் அன்று காணும் இது –
அதிகாரிக்கு ஸ்வரூப ஹானி யாகையாலே காண் இத்தை விடச் சொல்லிற்று –
என்று அருளிச் செய்தார் –
(அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு பொருந்தாத ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான இவ் வுபாயங்களை யன்றோ விடச் சொல்கிறான் -ஆகவே ஸ்வா தந்தர்யம் மேலீட்டால் விடச்சொல்கிறான் அல்லன் -ஸ்வரூபத்துக்கு தக்கது என்பதாலேயே பரித்யஜிக்கச் சொல்கிறான்)
———————————————————–
நூற்று பத்தொன்பதாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை வார்த்தை
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -விடுகை உபாயமோ பற்றுகை உபாயமோ -என்று கேட்க
விடுகையும் உபாயம் அன்று –
பற்றுகையும் உபாயம் அன்று –
விடுவித்து பற்றுவிக்கிறவனே உபாயம் -என்று அருளிச் செய்தார் –
(மாம் ஏகம் -நடுவில் அருளிச் செய்தது இந்த அர்த்தம் -ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளால் செய்த கிருஷி பலன் அனைத்துமே)
————————————————————–
நூற்று இருபதாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யமோ
பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபமோ -என்று கேட்க
முமுஷு தசையில் -ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யம் –
முக்த தசையில் -பிராப்ய அநு ரூபமான ஸ்வரூபம் என்று
திருநகரிப் பிள்ளை அருளிச் செய்தார் –
(முமுஷு தசையில் அவரவர் நினைவாகிற ஸ்வரூபத்துக்குத் தக்கபடி ஆத்மானுபவம் ஸ்வார்த்த கைங்கர்யம் பரார்த்த கைங்கர்யம் கிடைக்கும் -முக்தி தசையிலும் அவ்வாறே)
(தேகமே ஆத்மா கீழ் நிலை -ஞான ஆனந்த -ஸ்வதந்த்ர -பரதந்த்ரன்-பரகத -மேல் மேல் ஸ்வரூப நிஷ்டை -புருஷார்த்தம் -விரும்புகை பிரார்த்திக்கை -ஸ்வரூபத்துக்குத் தக்க ப்ராப்யம் – ஐஸ்வர்யம் -கைவல்யம் -சேஷத்வம் அறிந்து உபாஸகனாகி ஸ்வார்த்த அனுபவம் -ஆச்சார்ய அபிமானம் ஒன்றே உத்தாரகம் -அங்கு சென்ற பின்பு மேல் மேல் உணர வாய்ப்பில்லையே -அனுபவம் மாத்திரமே -ஆகவே கிடைத்த பேற்றைக் கொண்டு ஸ்வரூபத்தை முக்தன் அறிகிறான்)
——————————————————–
நூற்று இருபத்தோராம் வார்த்தை
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
சம்சாரத்தினுடைய பொல்லாங்கையும் –
மந்த்ரங்களினுடைய பன்மையும் கண்டு
நம் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –
ஆகையால் அன்றோ தானே உபாயமாக வேண்டுவது என்று அருளிச் செய்தார் –
(மந்த்ரங்கள் உபாயம் அல்லவே -மந்த்ரம் ப்ரதிபாத்யனான தானே உபாயம் -மந்த்ராணாம் பரமோ மந்த்ரம் -குஹ்யானாம் பரமோ குஹ்யம் -மந்திரத்தால் மந்த்ரத்தை மறவாது வாழலாம் மடநெஞ்சமே)
————————————————————–
நூற்று இருபத்திரண்டாம் வார்த்தை
அப்பிள்ளைப் பிள்ளைக்கு பட்டர் –
பெரிய பெருமாள் கண் வளருகிறபடி புத்தி பண்ணினீரே –
என்று அருளிச் செய்த வார்த்தை –
வைஷ்ணவன் கர்மங்களினுடைய கனத்தைப் பார்த்து பயப்பட –
மடித்த திருக்கையில் திரு விரல்கள் –
உன்னை ரஷிக்கைக்கு கவித்த முடி அன்றோ -என்று தொட்டுக் காட்டுகின்றன –
திருவடிகளிலே நேரே பொகட்ட திருக்கை –
பிரஜையினுடைய நாவிலே முலைக் கண்களை நெருடிக் கொடுக்கும் மாதாவைப் போலே
திரு வடிகள் புகலிடம் என்று காட்டுகிறது -என்று அருளிச் செய்தார் –
(கிரீடம் ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருத புஜ விதி ஈச அதீசத்வாத் கடதே இதி ஸம்ஸ்ருஸ்ய வததி-நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி பாஹு ததிதர ஸ்ப்புடம் ப்ருதே பாத அம்புஜ யுகளம் ஆஜானு நிஹித–1-110-)
(ஸ்ரீ பெரிய பெருமாளுடைய தலையணையாக செய்து கொள்ளப்பட்ட திருக் கையானது திரு அபிஷேகத்தை தொட்டு ப்ரம்ம ருத்ராதிகளுக்கும் தலைவர் ஆகையால் இந்த திரு அபிஷேகம்-இவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது என்று சொல்லா நின்றது -வலது திருக்கை பரத்வத்தை ஸ்புடமாக்கும்-முழந்தாள் வரையில் நீட்டி வைக்கப்பட்டுள்ள -மற்ற ஒரு திருக்கையானது திருவடியைத் தொட்டுக் காட்டி தாழ்ந்தவர்களுக்கு இத் திருவடிகளே முக்கியமான புகல் என்றும் சொல்லா நின்றது போலும் -இடது திருக் கை ஸுவ்லப்யம் பறை சாற்றும்)
———————————————————-
நூற்று இருபத்து மூன்றாம் வார்த்தை –
எம்பெருமான் உபாயமாம் இடத்தில் –
விஷய சாபேஷனுமாய்
வ்யாபார நிரபேஷனுமாய்
இருக்கும் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –
(சரணம் அடையும் பொழுது புருஷனை எதிர் பார்ப்பன் -ஆனால் அவன் முயற்சியை எதிர்பாராதவன் -)
(உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -268-)
(சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் –ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் –புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை –கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து)
————————————————————
நூற்று இருபத்து நாலாம் வார்த்தை
விக்கிரமச் சோழன் திரு வீதியிலே திருவரங்க செல்வர் எழுந்து அருளா நின்றால் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் நாள் தோறும் ஆயுதம் எடாமல் சேவிப்பர் -(ஆயுதம் பிடித்த கையுடன் சேவிப்பார் என்றபடி)
அருளாள பெருமாள் எம்பெருமானார் –
பிள்ளாய் -உம்முடைய ஆயுதம் என்று விநியோகப் படுவது -என்று கேட்க –
உம்முடைய அஞ்சலி பவித்ரம் விநியோகப் படும் அன்று –
அடியேனுடைய ஆயுதம் விநியோகப்படும் -என்றார் –
(நற்செல்வன் தங்காய் -லஷ்மணன் ஊர்மிளையுடன் சேர்ந்து க்ருஹஸ்த தர்மம் அனுஷ்ட்டிக்கும் பொழுது இவனும் பால் கறப்பான்-ஈஸ்வர திரு முகம் உல்லாஸமாக கைங்கர்யத்துக்காகவே இரண்டுமே என்றவாறு)
————————————————————————-————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply