ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -25-36-அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

 ——————————————-

இருபத்தஞ்சாம் வார்த்தை –

(ரக்ஷகத்வாதிகளை அழித்தல்
அர்த்த அநர்த்த ஹேது)

ரஷகத்வத்தை அழித்தான் –
சேஷத்வத்தை அழித்தான் –
பரத்வத்தை அழித்தான் –
விக்ரஹத்தை அழித்தான் –
அருளை அழித்தான் –
அடியாரை அழித்தான் -(ஜங்கம விமானம் -உலாவும் பெருமாள் -நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே)
விபூதியை அழித்தான் –
பந்தத்தை அழித்தான் –
வ்ருத்தியை அழித்தான் –

தன்னை சரீரியாக பிரபத்தி பண்ணி அனர்த்தப் படுதல்
தன்னை சரீரமாக பிரபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல்
செய்யும் அத்தனை -என்று பிள்ளை அருளிச் செய்தார் –

(அநாதி காலமாகப் ஸம்ஸாரி சேதனன் நிற்கும் நிலைகளை அருளிச் செய்கிறார் –
அழித்தான் -என்றது இல்லை செய்தான் -தானும் இல்லையென்று ஆக்கி பிரசாரத்தின் மூலம் பிரர்களையும் இல்லை யாக்கினான் –
எம்பெருமானுக்கு சரீரமாக எண்ணுவதே இவ்வனர்த்த பரிஹாரமாக உஜ்ஜீவிக்க உபாயமாகும்)

(ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் –ஒரு நல் சுற்றம் –அத்விதீயமான -விலஷண -பந்து- பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித-அகவாயில் நின்று சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் பரம பந்து -பாந்தவ ஆபாத லோசனாய் தானே அழிந்து போகிறாய் -)

————————————————–

இருபத்து ஆறாம் வார்த்தை –

(பாரதந்தர்ய வியவசாய வ்ருத்தி நாஸ ஹேதுக்கள்)

பௌருஷத்தை -ஏறிட்டுக் கொள்ளுகை -பாரதந்த்ர்யத்தை அழிக்கை –
வியாபாரத்தை -ஏறிட்டுக் கொள்ளுகை-வ்யவசாயத்தை அழிக்கை –
விஷயாந்தரங்களிலே அந்வயிக்கை வ்ருத்தியை அழிக்கை –
என்று ஆச்சான் பிள்ளை –

————————————————–

இருபத்து ஏழாம் வார்த்தை –

ஜீவ ஈஸ்வரர்களின் பரிமாற்றம் -ஞானம் ஞானத்துக்கு விநியுக்தம் -ஞானம் ஞானத்துக்கு சேஷம்-ஜீவ ஸ்வரூப திரேதாந நிரூபணம் -ஸ்தூல ஸூஷ்ம சரீர கதநம்–மதி முக மடந்தையர் முகத்திலே விழிக்கை

ஞானம் -ஞானத்தை விநியோகம் கொள்ளும்படி என் என்னில் –
இவன் கரண த்வாரா விநியோகப்படும்
அவன் விக்ரஹத் த்வாரா விநியோகம் கொள்ளும் –

ஞானம் ஞானத்துக்கு சேஷமானபடி என் என்னில் –
யாதொன்றினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி யாதொன்றில் கிடக்கிறது
அது சேஷியாக தட்டில்லை –

(ஞான ஸ்வரூபனான ஜீவன் ஞான ஸ்வரூபனான எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதும் எம்பெருமான் ஏற்றுக் கொள்ளுவதும் -கை கால் அவயவங்கள் போல் சாமரம் வீசுவதும் ஏற்றுக்கொள்ளுவதும் போல் -சென்றால் குடையாம் இத்யாதி –
ஜீவ ஸ்வரூபன் சேஷத்வம் -ஈஸ்வர ஸ்வரூபன் சேஷித்வம் -ஜீவனுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம்)

இப்படி இருக்கிற ஞானத்தை அவித்யை மூடினபடி எங்கனே என்னில்
ஞான ஆஸ்ரயம் ஆகையாலே -கல்லு கலங்காதே -நீர் கலங்கும் இத்தனை இறே
ஞானத் த்ரவ்யம் இறே -எப்போதும் ஒக்க கலங்கி அல்லது இராதே
அப்ராப்தத்திலே கலங்குதல் -ப்ராப்தத்திலே கலங்குதல் இறே –

(ஸூர்யன் ஒளியை மேகம் மறைப்பது போல் தர்மபூத ஞானத்தை அவித்யை கர்மம் மறைக்கும் -தர்மபூத ஞானம் விபூவாய் இருந்தாலும் நீர் போல் கலங்கிக் கொண்டே இருக்கும் -தர்மி ஸ்வரூபன் அணுவாய் இருந்தாலும் விகாரமற்று இருக்கும் -கல்லைப் போல் கலங்காமல் இருக்கும்-தர்மி ஸ்வரூம் குணாஸ்ரயமாய் இருப்பதால் த்ரவ்யமாகும் -தர்ம பூத ஞானம் கிரியாஸ்ரயமாய் இருப்பதால் த்ரவ்யமாகும் -இதற்கு லீலா விபூதியிலும் நித்ய விபூதியிலும் கலக்கமுண்டு -இங்கு மதிநலம் அருளப்பெறுவதற்கு முன்பு பிராகிருத விஷயங்களைக் கண்டு கலங்கும் -அங்கு எம்பெருமான் வைலக்ஷண்யம் கண்டு என் வருகிறதோ என்ற கலக்கம் உண்டாகும் -)

ஸ்தூலத்தில் ஸூஷ்மம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான இந்த்ரியங்களிலே வியாபித்து இருக்கும் -ஸ்தூலம் கழியும் பொழுது –
சரீரம் யதவாப் நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர
க்ருஹீத் வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாஸ யாத் -கீதை -15-8-என்கிறபடியே
வாயு கந்தத்தை கொய்து கொண்டு போமா போலே இந்திரியங்கள் ஸார வத்தையாம் –

(ஸ்தூலத்தில் ஸூஷ்மம் இருக்கும்படி எங்கனே என்னில் —வாயுவானது மணமுடையவற்றிலிருந்து மணத்தை அவற்றின் ஸூஷ்ம அவயவங்களுடன் கூட எடுத்துச் செல்வது போல் ஜீவனும் சாரமான இந்திரியங்களை ஸூஷ்ம சரீரத்துடன் எடுத்துச் செல்கிறான் -ஆக ஸ்தூலத்தில் ஸூஷ்மம் மலரில் மணம் போலவும் பாலில் நெய் போலவும் ஸாரமாய் இருக்கிறது என்று கருத்து —அருசி அவிஸ்வாசம் அடியாகப் புகும் -பகவத் விஷயத்தில் ருசியின்மை அநாதி பாப வாசனையால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை யினாலே உண்டாகும்)

ஸரீரம் யத வாப்நோதி யச்சாப் யுத் க்ராமதீஸ்வர– க்ருஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர் கந்தா நிவாஸயாத்–৷৷15.8৷৷

ஈஶ்வர: – – இந்த்₃ரியங்களை நியமிப்பவனான ப₃த்₃த₄ஜீவன்(கரணாதிபன் -கரண அதிபன் -பத்தாத்மா -அதிப அதிபன் ஸர்வேஸ்வரன் ) யத் ஶரீரம் அவாப்நோதி- (முன் ஶரீரத்தை விட்ட பின்)யாதொரு ஶரீரத்தை அடைகிறானோ (அந்த ஶரீரத்திற்கு) யச்ச அபி உத்க்ராமதி – எந்த ஶரீரத்திலிருந்து கிளம்புகிறானோ (அந்த ஶரீரத்திலிருந்து) வாயு:ஆஶயாத் – காற்றானது – (மலர் முதலான மணமுடைய) பொருள்களிலிருந்து க₃ந்தா₄ந் – மணம் மிக்க சிறு துகள்களை இவ – (எடுத்துச் செல்வது) போல் ஏதாநி – இந்த இந்த்₃ரியங்களை க்₃ருஹீத்வா – (கிளம்பும் ஶரீரத்திலிருந்து) எடுத்துக் கொண்டு ஸம்யாதி – (அடையும் ஶரீரத்துக்குச்) செல்கிறான்

அருசி அவிஸ்வாசம் அடியாகப் புகும் –ஸ்தூலம் விட்ட போதே ஸூஷ்மம் விடாது ஒழிவான் என் என்னில் –பிராக்ருத தேசத்திலே அப்ராக்ருத சரீரம் இல்லாமையாலே -இது யாதொரு
தேசத்திலே விட்டது -அது அப்ராக்ருத தேசமாம் இத்தனை –

1-இது கமன சாதனம் ஆகையாலும்
2-போகிற வழியில் உள்ள தேவ ஜாதிகள் சத்கரித்து ஸ்வரூபம் பெறுகைக்கும்
3-ஸூஷ்மம் விட்டால் பன்னிரண்டு கோடி ஆதித்யர்களை அழலைக் கழற்றி ஒளியைத் தேக்கினாப் போலே தேஜஸ்ஸு புற வெள்ளப் பட்டால் -தேவ தேசங்களில் உள்ளார் எதிர் நின்று கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற ஒண்ணாமையாலே —

4-இன்னம் ராஜ மஹிஷி அந்தப்புரத்துக்கு போகும் போது தட்டுப்பாய் இட்டுப்
போகை ஸ்வரூபம் இறே –
அப்போது தேவ ஜாதிகளும் –
இடர் கெட எம்மைப் போந்தளியாய் –திருவாய் மொழி -10-1-4-என்றும் –
நீணகர் நீளெரி வைத்தருளாய் -திரு விருத்தம் -92-என்றும் சொல்லி –
கருமம் தலைக் கட்டினால் எதிரம்பு கோக்கும் அசத்துக்கள் ஆகையாலே –
இப்படிப்பட்ட ஹேயர் கண் படாமல் போய் வைகுந்த திருவாசலில் இழிந்து
தட்டுப்பாய் வாங்கும் இத்தனை -அதாவது விரஜையில் இழியும் இத்தனை –

(ஸ்தூல ஸரீரம் இல்லாமல் ஸங்கல்ப லேசத்தாலேயே அங்கு கொண்டு போக முடியாதோ என்னில் ஞான ஆனந்த மயமான ஜீவ ஸ்வரூபன் ஸூஷ்ம சரீரம் விட்ட வுடன் 12 கோடி ஸூர்ய ஒளி தேஜஸ்ஸுடன் இருக்காய் அந்த ஒளி வெள்ளத்துக்கு முன் தேவனே ஜாதிகள் ஸத்காரம் செய்து தங்கள் ஸ்வரூபம் பெற முடியாதே -ராஜ மஹிஷியைப் பல்லக்கிலே தட்டுப்பாயிட்டு இவர்கள் கண்களிலே காட்டாமல் அழைத்துச் செல்வது போல் ரஜோ தமோ குண தேவஜாதிகள் காணாமல் ஸ்வரூபத்தை மறைக்கும் தட்டுப்பாய் போல் ஸூஷ்ம சரீரத்தை இட்டு மறைத்து முக்த ஜீவனுடைய அழைத்துச் செல்கிறான் -விரஜா நதியில் இழிந்த பின்னர் தட்டுப்பாயை வாங்கி விடுகிறான் -)

திரை வாங்கினால் மதி முக மடந்தையர் முகத்தில் விழிக்கும் இத்தனை –
சதம் மாலா ஹஸ்தா -என்று ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்க கடவ அப்ரசஸ்ஸூக்கள்
இவனை ஒப்பிக்க வைத்தால் அவர்கள் முகத்திலே இறே இவன் விழிப்பது –

ஸ்வரூபம் இருக்கும்படி ஞானமாய் இருக்கும் -அவன் உகப்பிலே பிறக்கையாலே இறே
அதாவது
அவனுடைய ஞான ஆனந்தத்திலே இவன் சத்தை கிடக்கை –
அவன் உகப்பிலே பிறக்கையாலே இறே இவனை -தண்ணீர் தண்ணீர் -என்னப் பண்ணுகிறது(ஞாநீ துர்லப-அறிவார் உயிரானாய்)

———————————————————-

இருபத்து எட்டாம் வார்த்தை –

ரஷ்ய ரஷக சம்பந்தம் -பிதா புத்ர சம்பந்தம் -சேஷ சேஷி சம்பந்தம் –
பர்த்ரு பார்யா சம்பந்தம் -ஞாத்ரு ஞேய சம்பந்தம் -ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் –
சரீர சரீரி சம்பந்தம் -ஆதார ஆதேய சம்பந்தம் -போக்த்ரு போக்ய சம்பந்தம்-

(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி – 2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி – 3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி – 4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி – 5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி – 6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி – 7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி 8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி – 9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி-திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.-நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள்)

—————————————————————

இருபத்து ஒன்பதாம் வார்த்தை

பிரணவத்தில் சதுர்த்தியாலே சேஷத்வயை சொல்லி –
அகாரத்தாலே -சேஷத்வ பிரதிசம்பந்தியை சொல்லி –
மகாரத்தாலே சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் சொல்லி –
அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹத்வம்
சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –

அகாரத்தாலே -ரஷகனைச் சொல்லி –
மகாரத்தாலே -ரஷ்ய வஸ்துவைச்  சொல்லி –
சதுர்த்தியாலே -ரஷ்ய ரஷ்ய பாவத்துக்கு வேண்டும் உறவு சொல்லி –
அவதாரணத்தாலே -ரஷ்ய ரஷ்யகங்களினுடைய லஷ்ய லஷணம் சொல்லுகையாலே
உபாயம் சொல்லிற்று –

அகாரத்தாலே பிராப்ய வஸ்துவைச் சொல்லி –
மகாரத்தாலே ப்ராப்தாவைச் சொல்லி –
சதுர்த்தியாலே பிராப்ய பலமான கைங்கர்யத்தைச் சொல்லி –
அவதாரணத்தாலே -கைங்கர்ய பிரகாரத்தை சொல்லுகையாலே பிராப்யம் சொல்லிற்று –

பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று
நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி யாலே -புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
ம-என்கிற இத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்கிற இத்தாலே -உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
ஆகையாலே சகல வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகம் சொல்லிற்று –

——————————————————–

முப்பதாம் வார்த்தை –

ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி –
ஆஸ்ரயமான ஞான ஆனந்த லஷண வஸ்துவை பின்பு சொல்லுகைக்கு ஹேது என் -என்னில் –
1-அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்களில் காட்டில் –
பிரதான நிரூபகம் சேஷத்வம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும் –
2- தாஸ்ய ரசத்தில் இழிய ஒட்டாத ஆத்ம அனுபவ மாத்ரத்தில் பர்யவசிப்பதொரு
அந்தராயம் உண்டாகையாலே தத் பரிஹாரார்த்தமாகவும் –

3-நெருப்பிலே புக்கு சிலர் வேவாரைக் கண்டால் -அவர்களை இன்னார்
என்று பாராதே பற்றி எரிகிற நெருப்பை அவிக்கையிலே யத்னம்
பண்ணுவாரோபாதி -அதாஹ்யமான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் பற்றி தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை அகற்றுவிக்கையிலே தாத்பர்யம் ஆகையாலும் —

4-புஷ்பத்துக்கு ஸ்லாக்யதை பரிமளத்திலே ஆகிறவோபாதி -ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம் இஸ் ஸ்வபாவ விசேஷத்தாலே ஆகையாலும் -இவ்வோ பிரதான்யத்தை பற்ற பிரதமத்தில் சேஷத்வத்தை உபாதானம் பண்ணிற்று –

(சேஷத்வத்தை அறிவிக்கும் லுப்த சதுர்த்தியை பிரதமத்தில் சொல்லி -அந்த சேஷத்வத்துக்கு இருப்பிடமான ஞானானந்த லக்ஷணமான ஆத்மாவைக் காட்டும் மகாரத்தால் பின்பும் அருளிச் செய்வதற்கு நான்கு ஹேதுக்கள் காட்டப் பட்டன-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -திருக்கோஷ்டியூர் நம்பி கூரத்தாழ்வானுக்கு அருளிச் செய்த வ்ருத்தாந்தம்-)

—————————————————————

முப்பத்தோராம் வார்த்தை

இவ் வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டிய மாங்கல்ய ஸூத்ரம் திரு மந்த்ரம் -என்று
பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வர் –

(எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –முமுஷுபடி-சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள சூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு  திரு அஷரமாய்–மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –)

——————————————————————-

முப்பத்து இரண்டாம் வார்த்தை –

சம்சார வர்த்தகமாய் இருக்கும் தாலிக் கயிறு பதினாறு இழையாய் -இரண்டு சரடாய் -இருக்கும் –
கைங்கர்ய வர்த்தகமான மங்கல்ய ஸூத்ரம் எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வ ரஷணத்தில் அசக்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியாலும் –பலித்த ஈஸ்வரனை நாம் பேணுகையை வெளி இட்டு இருப்பது ஒரு சரடுமாய் இருக்கும் –

(முதல் சரடான பிரணவம் ஜீவனுடைய அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூப உணர்ச்சியையும் -அடுத்த சரடான நமஸ்ஸு தன்னை ரக்ஷித்துக்கொள்வதில் சக்தியின்மையையும் -மூன்றாவது சரடான நாராயண பதம் ஸ்வரூப உணர்ச்சியாலும் ஸ்வ ரக்ஷண அசக்தியாலும் எம்பெருமான் உகப்புக்கே யானதான கைங்கர்யத்தை வெளியிடுவதாய் இருக்கும் -)

(வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.-121)

—————————————————————

முப்பத்து மூன்றாம் வார்த்தை –

சேஷத்வ ஞானம் இல்லாதவர்க்கு பிரணவத்தில் அந்வயம் இல்லை –
தேகாத்ம அபிமானிகளுக்கு நமஸ்சில் அந்வயம் இல்லை –
கைங்கர்ய ருசி இல்லாதவர்க்கு நாராயண பதத்தில் அந்வயம் இல்லை –

சேஷத்வ ஞானம் இருக்கும் படியை இளைய பெருமாள் ஆசரித்து  காட்டினார் –
எங்கனே என்னில் –
பெருமாள் -நில் -என்ன- பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு-பெருமாள் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து -பெருமாளுக்கும் பிராட்டிக்கும் அடிமை செய்கையாலும் -எல்லை நிலத்திலே பிராட்டியை பிரிந்து பத்து மாசம் ஆறி இருந்த பெருமாள் -இளைய பெருமாளைப் பிரிந்து பகல் அமுது செய்யாதே -நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -என்று பின் தொடர்ந்த இளைய பெருமாளை -நீ என்னை யன்றி இலை – என்று பின் தொடரும்படி இருக்கையாலும் 

(நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்-ந ச அஹம் ராகவ-அயோ -53-31- உன்னைப் பிரிந்து உயிர் துறக்க மாட்டேன் -இளையபெருமாள் -கடைசில் பெருமாளைக் விட்டுப் பிரிந்து போது அன்றும் பகல் அமுது செய்யாமல் –நீ என்னை யன்றி இலை –
என்று  -அத்யைவ அஹம் கமிஷ்யாமி லஷ்மணோ கதாம் கதிம் -லஷ்மணன் சென்ற வழியிலே இன்றே பின் செல்வேன் -என்று பெருமாள் பின் தொடரும்படி இருப்பது இளையபெருமாளுடைய சேக்ஷத்வாசரணம் – இத்தால் பிராணவார்த்தம் அறிந்ததனால் சேஷத்வ ஞானம் இருக்கும்படியை இளைய பெருமாள் நடத்துக் காட்டினது நிரூபிக்கப் பட்டது -)

ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத அத்யந்த பரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரதாழ்வான் ஆசரித்து காட்டினார் –எங்கனே என்னில் –
என் மகன்-மோவாய் எழ வேணும் — (தாடி மீசை முளைத்தல் -புருஷனுக்கு உரிய ஸ்வாதந்த்ர்யம்-எழுதல் )என்ற கைகேயி யாகிற காள ராத்ரியினுடைய பாபப் பட்டோலையைச் சுட்டு -ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஜ்ஞ ந ச ராகவஸ்ய –மத் பாபமே வாத்ர நிமித்த வாஸீத் வன பிரவேச ரகுனந்தஸ்ய -என்றும் – விலலாப சபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம் -என்றும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹசி -என்றும் புனைந்த சடையும் உடுத்த மரவுரியும் புழுதி யாரந்த வடிவும் தளர்ந்த நடையுமாய் -ஸ்வரூப ஹானியை விளைப்பித்து பிணம் தின்னி இருந்த தேசத்தை விட்டு -எனக்கு-என்று கைகேயி வயிற்றில் பிறப்பு பின்னே தள்ள -பெருமாள் அருள் முன்னே நடத்த -ஒரு நடையிலே ஒன்பது நடை நடந்து -எழுந்து அருளி இருந்த சித்ர கூடத்திலே சென்று–வகுத்த திருவடிகளைப் பெற்று விடை கொண்டு -பின்பு அவத்யம் விளைக்கும் படை வீட்டில் புகாதே புறப்படை வீட்டிலே -ராமாகமன காங்ஷை யோடே -பதினாலாட்டை நாள் இருந்தபடியாலும் 

(நமஸ் பதத்தை அறிந்ததனால் ஏற்படும் அத்யந்த பாரதந்தர்ய ஞானத்தினால் ஸ்ரீ பரதாழ்வான் நடந்து காட்டினமை -கைகேயியுடைய பாவ வரத்தைச் சுட்டி எரித்து -பிணம் தின்னிக்கழுகு போல் இருந்த கைகேயி இருந்த தேசம் விட்டு -அவள் வயிற்றில் பிறப்பு பின் இருந்து தள்ள -பெருமாள் அருள் முன்னிருந்து இழுக்க –ஸ்வரூப அனுரூபமான அடி சூடும் அரசைப்பெற்று அத்யந்த பாரதந்தர்யத்தால் ஸ்வ ரக்ஷணத்தில் ஸ்வ அந்வயம் இல்லாமையை நடத்திக் காட்டினான்)

ஈஸ்வரனை பேணுகையை ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஆசரித்துக் காட்டினார் -எங்கனே என்னில் –
பெருமாள் அல்லாது அறியாத -ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லாது அறியாத -பெருமாள் உகப்பின் எல்லை நிலத்தில் அடிமை செய்கையாலும் –

இம் மூன்று அர்த்தத்தையும் பிராட்டி ஆஸரித்துக் காட்டினாள் -எங்கனே என்னில் –
கைகேயி வர வ்யாஜத்தாலே பெருமாள் வனத்துக்கு எழுந்து அருளுகிற போது பிரியாதே
பின் தொடர்ந்த உணர்த்தியாலும் –
பெருமாளைப் பிரிந்து தனி இருந்த அன்று தனி இறுப்பு  மாறத் தான் துரும்பு நறுக்காத ஸ்வ
ரஷணத்தில் அசக்தியாலும் –
பரிகரமாய் வந்த திருவடி வாலிலே கொளுத்தின நெருப்பை -சீதோ பவ-என்று அவித்து ஈஸ்வரனைப் பேணுகையாலும் –

(பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –-ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை-8-)

(சொல்லினால் சுடுவேன்-அது தூயன ராமன் வில்லுக்கு மாசு என்று ஸ்வ சக்தியை விட்டாள் திரௌபதி லஜ்ஜையை விட்டாள் -திருக்கண்ண மங்கை யாண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டாள்)

இவ் வர்த்தத்தை பரமாசார்யரான நம் ஆழ்வாரும் ஆசரித்துக் காட்டினார் -எங்கனே என்னில் –கண்கள் சிவந்து – 8-8
கரு மாணிக்க மாலை -8-9
நெடுமாற்கு அடிமை -8-10
என்ற மூன்று திருவாய் மொழியிலே –

(கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -இரண்டிலுமாக-பிரணவத்தில் நடுப் பதத்தாலும்-நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாக ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லி நின்றது –-அவனுக்கு தம்மை அநந்யார்ஹ சேஷமாக அனுசந்தித்து –மிகவும் ப்ரீதரானவர் –அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே -அவ்வளவில் பர்யவசியாதே -அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்து அளவும் சென்று -அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்று அத்யவசித்து –அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை-அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ- அதனைச் சொல்லுகிறது -நெடுமாற்கு அடிமை-)

————————————————————————————————

முப்பத்து நான்காம் வார்த்தை

ஈஸ்வர சேஷ பூதன் என்றும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் என்றும்
தத் விலஷண லஷண நிரூபகன் என்றும்
அஹங்கார நிவ்ருத்தன் என்றும்
தத் சம்பந்த யுக்தன் என்றும்
கிங்கரர் ஸ்வபாவன் என்றும்
தன்னை அநு சந்திப்பது –

———————————————————————————————–

முப்பத்து ஐந்தாம் வார்த்தை –

பிரமாண -பிரமேய -பிரமாதக்களை சேர அநு சந்திக்கும் படி –

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அனந்யார்ஹ சேஷத்வம் —
ஏதத் பிரகாசம் -பிரணவம்
அனந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் பொருந்த விட்ட திருவடிகள் –

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய சரணத்வம் –
ஏதத் பிரகாசம் -நமஸ்ஸூ —
அநந்ய சரணத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் அமைத்த திருக்கை -(வைத்த அஞ்சல் என்ற திருக்கை)

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய போகத்வம் –
ஏதத் பிரகாசம் -நாராயண பதம் –
அநந்ய போகத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் திரு முறுவல்

இதுக்கு கருத்து -தான் அறிகை -சைதன்யம் அறுகை -சதனாந்தரம் -சாத்யாந்தரம் அறுகை
அதாவது –
வேர் அறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை

(முதல் பதமான பிரணவத்தின் அர்த்தத்தை முற்கூறியபடி அறிந்தால் சேதனன் தன்னை அறிந்து அநாதி காலமாகத் தன்னை அறியாமல் இருக்க மூல காரணமாக இருந்த அசித் சம்பந்தம் வேரறுக்கப் பெறுவன் -நமஸ் பதார்த்தம் அறிந்தால் ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தியில் முயல்வதைத் தவிர்வான் -நாராயண பதார்த்தம் அறிந்து ஐஸ்வர்யம் -சப்தாதி விஷயங்கள் -கைவல்யாதிகளில் பற்று அறுந்து விடும் -)

(இவை எல்லாம் நமக்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவிக்ரஹத்தில் காணலாம்படி இருக்கும்.-‘அஞ்சல்’ என்று வைத்த திருக்கையும், கவிழ்த்த திருமுடியும், திருமுகமும் முறுவலும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகளும், திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்களுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்.-அஞ்சல்’ என்று வைத்த திருக்கை வாத்ஸல்யத்தையும், கவிழ்த்த திருமுடி ஸ்வாமித்துவத்தையும் குறிக்கின்றன.திருமுகமும் முறுவலும் ஸௌசீல்யத்தையும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகள் ஸௌலப்யத்தையும் குறிக்கின்றன.திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்கள் ஞான சக்திகளைக் குறிக்கின்றன)

————————————————————————————————–

முப்பத்தாறாம் வார்த்தை

திரு மந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்று- திருக் குருகை பிரான் பிள்ளான் அநு சந்தித்து அருளுவர் –

திரு மந்த்ரம் பிராப்யம் சொல்லுகிறது என்று -பிள்ளை திரு நறையூர் அரையர் அநு சந்தித்து அருளுவர் —

இவ்வாத்மாவினுடைய அனந்யார்ஹத்வம் சொல்லுகிறது என்று -நஞ்சீயர்  அநு சந்தித்து அருளுவர் —

இவ்வாத்மாவினுடைய பாரதந்த்ர்யம் சொல்லுகிறது என்று-எம்பார் -அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் மூன்று பதத்தாலும்- ஞான வைராக்ய பக்திகளை வெளி இடுகிறது -என்று முதலியார் (பெரிய முதலியார் நாதமுனிகள்)அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் மூன்று பதத்தாலும் -அபிஜன வித்யா வ்ருத்தங்களை வெளி இடுகிறது என்று ஆள வந்தார் அநு சந்தித்து அருளுவர் —

திருமந்தரம் அர்த்த பஞ்சகத்தையும் சொல்லுகிறது என்று நம்பிள்ளை அநு சந்தித்து அருளுவர் —

பாணிக் க்ரஹணமும்- உடன் மண நீரும் -சதுர்த்தி கலவியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —

(மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும் நமஸ் பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் -)

ஸ்வரூபத்தில் உணர்த்தியையும் –
ஸ்வ ரஷணத்தில் அசக்தியையும் –
எம்பெருமானைப் பேணுகையும் சொல்லுகிறது என்று முதலி யாண்டான் அநு சந்தித்து அருளுவர் —-

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply