ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
————
நூற்று இருபத்து ஐஞ்சாம் வார்த்தை
பிரபன்ன அதிகாரிக்கு கார்யம் ஒன்றாய் இருக்க –
மூன்று அவஸ்தை கூடிக் கார்யம் ஆக வேணும் –
அவை யாவன –
ஆஸ்ரயண அதிகாரம் –
பல அதிகாரம் –
போக அதிகாரம் –
இவற்றுக்கு வேஷம் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
அத்யாவச்யமும் –
பரபக்தி பரஞான பரம பக்தியும் –
இவற்றுக்கு விஷயம் –
சீலாதி குண விசிஷ்டனுமாய் –
ஞான சக்தியாதி குண விசிஷ்டனுமாய் –
ஆனந்தாதி குண விசிஷ்டனுமாய் -இருந்துள்ள ஸ்ரீ யபதி –
இவன்
தன் ஆகிஞ்சன்யத்தையும் –
அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு –
ஆஸ்ரயண அபேஷை பண்ண –
அவனும் தன் சீலாதி (ஆதி ஸுலப்யம் வாத்சல்யம் இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு ஆஸ்ரயணீயனாம் –
இவன் அத்யாவச்யத்தை முன்னிட்டு பல அபேஷை பண்ண –
அவன் ஞான சக்தியாதி (ஆதி பிராப்தி பூர்த்தி இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு பல பிரதனாம் –
இவன் பர பக்தி பர ஞான பரம பக்திகளை முன்னிட்டு போக அபேஷை பண்ண –
அவன் ஆனந்தாதி (ஆதி ஸ்ரீயப்பதித்வம்)குணங்களை முன்னிட்டு போக்தாவாம் –
————————————————
நூற்று இருபத்து ஆறாம் வார்த்தை-
சோமாசி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –
பகவத் பிரவ்ருத்தி விரோதி -ஸ்வப் பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி –
பக்தியும் உபாயம் அன்று –
பிரபத்தியும் உபாயம் அன்று –
பிரபத்தவ்யனே உபாயம் –
————————————————-
நூற்று இருபத்து ஏழாம் வார்த்தை
சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே –
தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று
ஜீயர் அருளிச் செய்தார்
(உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தி இருந்தால் தெளிந்து இருக்கலாம் –ஆனாலும் பிராப்தி இல்லை என்று கைங்கர்ய ரூபமாக அனுஷ்டானம் செய்து பிராபகமும் பிராப்யமும் அவனே என்றே மஹா விசுவாசம் இருந்தால் தெளிந்து இருக்கலாம்- என்பர் நஞ்சீயர் -இதன் விவரணம் அடுத்த வார்த்தை)
—————————————————-
நூற்று இருபத்து எட்டாம் வார்த்தை-
அமுதனார் சிறியாச்சானை –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ
உம்முடைய அந் அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் –
பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –
(நூல் புடவை போல் அடியேன் ஒரு நாளும் அனுஷ்டானம் விடக்கூடாது -நீங்கள் பட்டுப் புடவை போல் -என்பாராம்)
ஆசார்யர்களில் சிலர் –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் –
ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே யன்றோ -என்று அருளிச் செய்தார் –
(உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய் -என்னைக்கடவது -பரதாழ்வானும் இழக்கலாம் குகனும் பேற்றைப் பெறலாம் அன்றோ -)
———————————————————
நூற்று இருபத்து ஒன்பதாம் வார்த்தை-
பிரபன்னனுக்கு புத்தி பூர்வ அபசாரம் புகுருகைக்கு வழி இல்லை —
பிரமாதத்தாலே புகுந்தது ஆகில் –
ஞானமும் அனுதாபமும் -ஒரு தலையாக அபுத்தி பூர்வமாம் இத்தனை —
அநுதாபம் பிறந்தது இல்லை யாகில்
ஞானம் பிறந்தது இல்லையாகக் கடவது என்று
ஜீயர் அருளிச் செய்தார் –
(பிரபத்தி இது பிரார்த்தனா மதி சரணாகதி -கத்யர்த்த புத்யர்த்த -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் இல்லை என்றால் ஞானம் இல்லாமல் பிரபத்தியாகாதே )
———————————————————–
நூற்று முப்பதாம் வார்த்தை
நம் பிள்ளை நம் ஜீயரை –
இதர உபாயங்களுக்கு பிரமாணங்களும் பஹூள்யமாய் அனுஷ்டானங்களும் பஹூள்யமாய் இருக்க –
இதுக்கு (பிரபத்திக்கு )பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி யிரா நின்றது –
இதுக்கு அடி என் -என்று – கேட்க –
நான் நினைத்து இருக்கும் அதுக்கு அவ்வருகு உமக்கு வேண்டுவது ஓன்று உண்டோ –
இருவர் கூடி ஓர் ஆற்றில் இழிந்து போகா நின்றால்
முந்தினவன் முந்தாதவன் கையைப் பிடிக்கும் போது -இதுக்கு ஒரு பிரமாண அபேஷை உண்டோ –
வேண்டில் பிரமாணங்களாலும் ஒரு குறை இல்லை –
இனி பிரமாணங்கள் காண வேணும் என்று நினைத்து இரேன் –
இருந்ததே குடியாக சம்சாரிகளாய் -நாலத்திரண்டு உத்தம அதிகாரிகளாய் இருந்தால்
அவர்களுக்கு (சம்சாரிகளுக்கு)ஒரு உத்கர்ஷைதையும் இவர்களுக்கு ஒரு அபகர்ஷைதையும் உண்டோ –
ஸ்வரூப பிராப்தம் என்னும் அத்தனை ஒழிய –
ஸ்வர்க காமோ யஜேத- என்கிறபடியே
ஸ்வர்க்க பலத்தை அனுபவிக்க சாதனமாக ஸாஸ்த்ரம் சொல்லா நிற்கச் செய்தேயும் ஆரூரில் ஒருவரே யஜித்தான் என்னும் போது- இதுக்கோ (ப்ரபத்திக்கு -அது பிரவ்ருத்தி இதுவோ நிவ்ருத்தி யாக இருக்க)உமக்கு ஆள் பற்றப் புகுகிறது -என்று
அருளிச் செய்ய
பிள்ளையும் க்ருதார்த்தரானார் –
(ஆச்சார்யன் நினைவுக்கு மேல் சிஷ்யனுக்கு வேறே ஒரு பிரமாணம் தேவையில்லை -பிரமாணங்கள் வேண்டுமானால் பலவும் உண்டே-முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே – தஸ்மான் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-இத்யாதிகள் பலவும் உண்டேன் –
ஆழ்வார்களுக்கு, ஆச்சார்யர்களுடைய ஸ்வ அனுபவ ஸித்தமான இதுக்கு வேறே பிராமண அபேக்ஷை இல்லை –ஸர்வதா கர வீராதீந் ஸூதே சாகர மேகலா ம்ருத ஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாண தஸாம் கதா–ஸூபாஷித நீவி -கடல் சூழ்ந்து இவ்வுலகில் கள்ளிச்செடி போன்ற பயனற்ற பொருள்கள் எங்கும் காணலாய் இருக்கும் -இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மூலிகை தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்குமே -அது போல் உத்தம ப்ரபன்னர்கள் நாலிரண்டு பேர்கள் இருப்பதால் அவர்களுக்கு தாழ்வில்லை)
———————————————————-
நூற்று முப்பத்தோராம் வார்த்தை –
பட்டர் திருவணையாட எழுந்து அருளா நிற்க –
சேது ஸ்நானம் செய்தல் -பாதிரிக் கொடியிலே -போது வைகி வந்து –
அஸ்தனமாக -ஒரு வேடன் அகத்திலே புக-
அவன் தான் இருந்த ஆசனத்தையும் வாங்கிப் பொகட்டு –
ஒரு கட்டிலையும் கொடுக்க -அதிலே எழுந்து அருளி இருந்து
இவன் நம்முடைய வைபவத்தை அறிந்து செய்தான் அல்லன் –
க்யாதி பரனாய் செய்தான் அல்லன் –
நம்மாலே உபக்ருதனாய்ச் செய்தான் அல்லன் –
தன்னுடைய கிருஹத்திலே புகுந்தோம் என்கிற அபிமானம் இறே அவன் இது செய்ய வேண்டிற்று –
ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என் நினைந்து இருக்கிறானோ -என்று அநுசந்தித்து அருளி –
ஐயா இற்றைக்கு விசேஷம் என் என்று கேட்டருள –
நாயன்தே காட்டுக்கு வேட்டைக்கு போனேன் –
அங்கே ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன் –
அதனுடைய தாயானது பின்னே முடுகி வந்து -ஒரு எரி வெளி -(பொட்டை வெளி )-யானவாறே முன்னே வந்து
கும்பிட்டு கிடந்தது -எனக்கு அத்தைக் கண்டு வ்யசனமாய்க் குட்டியை விட்டேன் -என்றான் –
இத்தைக் கேட்டு –
இது சேதனனுக்கு இல்லாத ஓன்று –பரம சேதனனுக்கு உள்ளது ஓன்று -மாமேகம் சரணம் வ்ரஜ என்று இம் முசலுக்கு உபதேசித்தார் இல்லை –
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மனா -(பிராணனைக் கூடக் கொடுத்து விரோதியையும் காப்பாற்ற வேண்டும்)என்று வேடனுக்கு உபதேசித்தார் இல்லை –
அவ்யவதாநேன சரணாகதி பலித்ததே இதொரு பிரமாண பிரசித்தி என் -என்று அருளிச் செய்தார் –
(ப்ரபத்திக்கு பிரமாணம் வேண்டாமே என்றும் கீழ் வார்த்தைக்கு இது த்ருஷ்டாந்தம்)
———————————————————————
நூற்று முப்பத்து இரண்டாம் வார்த்தை
எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த அம்பங்கி அம்மாளுக்கு
உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –
பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன –
இத்தனை தூரம் பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு
த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply