Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -229-240–அரும் பத விவரணத்துடன்–

February 3, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -229-
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை
ஒளித்துப் போருவார்கள் -த்வயத்தில் சப்தத்தை ஒதுக்கி ஒளித்துப் போருவார்கள்

———————————————————–

வார்த்தை -230-
திருமந்த்ரமும் சரம ஸ்லோகமும் ஆசார்ய வாக்கியம் –
த்வயம் சிஷ்ய வாக்கியம் -த்வயத்தில் பூர்வ கண்டத்தின் அர்த்தத்தை அனுசந்தித்தால்
ஸ்வ ரஷணார்தமாக விலங்கிக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட பிராப்தி
இல்லை -உத்தர கண்டத்தின் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொறிகைக்கு
அவசரம் இல்லை -மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் –த்வயம் சிஷ்ய வாக்கியம் –த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்து பொகட பிராப்தி இல்லை – உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –நூற்று ஏழாம் வார்த்தை-(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது -)

—————————————————————————–

வார்த்தை -231-
பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் ஜ்ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண
அதிகாரியான இப் பிரபன்னனுக்கு -உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –

இவ் விரண்டு அர்த்தத்துக்கும் நிரசன பூதர்-ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தேயும் ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து அஸோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும்-

பெருமாள் நில் என்று இருக்கச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து -காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த
இளைய பெருமாளும் –

——————————————————————————-

வார்த்தை -232-
சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் –
த்வயத்தில் இரண்டு கண்டத்தின் அர்த்தத்தையும் கொண்டு பிரபன்னனானவன்
கால யாபநம் பண்ணக் கடவன் –

——————————————————————

வார்த்தை -233-
ஆசார்ய சமாஸ்ரயணம் எப்போது -அப்போது பிறந்தானாகக் கடவன் –
அன்று முதல் சரீர அந்தம் அளவாக கீழ்ச் சொன்னபடி செய்து போரும் ஆகில் இறே
தன் ஸ்வரூபத்துக்கும் இவன் ஸ்வரூபத்துக்கும் சேருவது –
அல்லாத போது எம் பெருமான் இவனைப் புருஷகார முகத்தாலே விடமாட்டாதே விதியே என்று ரஷிக்கும் இத்தனை –

————————————————————————–

வார்த்தை -234-
நஞ்சீயருக்கு பெரிய பட்டர் (வேத வ்யாச பட்டர் தம்பி இருப்பதால் பராசர பட்டர் பெரிய பட்டர்)அருளிச் செய்த பத்து அர்த்தம் –
சரக்கு ஏற்றின மரக்கலத்துக்கு கேடு காற்றாலே யாதல் -சமுத்ரஸ்த பர்வத
சிகரம் தட்டியாதல் -பெரும் கடல் பாய்ந்தாதல் -மஹா மத்ஸ்யங்களினுடைய
புச்ச விஷேபங்களாலே யாதல் -ப்ரதீகாரம் இல்லாத அழிவு வருமா போலே
எம்பெருமான் திருவடிகளிலே பண்ணி வைத்த பிரபத்திக்கும் -பாகவத விஷயங்களிலே
அறிந்தும் அறியாததும் பண்ணின அபசாரங்களாலே சில அந்தராயங்கள் நாஸ
பர்யந்தமாக உண்டாகவே  சம்பவிக்கும் தத் பய சம்பாவன நிவ்ருத்தி அர்த்தமாக
இப் பத்து அர்த்தத்தை கேட்டு புத்தி பண்ணி அனுஷ்டித்து நிர்ப் பரனாய் மார்பிலே
கை வைத்து உறங்கும் அவை என் என்னில் –
1-ஆசார்யன் திரு உள்ளத்தாலே அநவரதம் நினைக்கும்படியாக சரீரார்த்த பிராணங்களை
அழிய மாறி யாகிலும் ஒரு கைங்கர்யம் உறுதியாகச் செய்வது –(ஸரீரம் அர்த்தம் பிராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத்-ஒன்றையாவது ஒழுங்காக விடாமல் ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்கும்படி செய்ய வேண்டும்)
2-பகவத் விஷயத்திலும் எல்லாரும் கொண்டாடும்படியாகவும் -திரு உள்ளத்துக்கு
பாங்காகவும் -தன் நெஞ்சு உணரவும் ஒரு ஸ்ரீ கார்யம் செய்வது –
3-பாகவத விஷயத்திலும் அப்படியே பல ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலும் –
இன்னான் கல்யாண குணங்களை உடையவன் -பகவத் பாகவத விஷயங்களில்
செய்து போரும்படி அழகு இது -என்று கொண்டாடும்படி போருவது –
4-சர்வ சாஷியாய் நினைவின் தலையிலே குடி இருக்கிற எம்பெருமான் (உள்ளூவார் உள்ளத்து உடன் இருந்து அறிதி)சிரியாதபடி வறை நாற்றமான(பொசிங்கின நாற்றம் -காந்தல்) அல்ப அஸ்திர பல ஸ்ரத்தையாலே ஏகாந்தத்திலும் அந்ய தேவத உபசானாதிகளை ஆஸ்ரியாது ஒழியவும் -அந்ய தேவத உபாசகரோடு
சஹ கமன சஹ வாஸ சஹ அவஸ்தான சம்பாஷணங்களை வருந்தியும் ஒழியவும் –
5-வறை நாற்றத்தை ஆசைப்பட்ட பெருச்சாளி இடரிலே  அகப்பட்டு அனர்த்தப்
படுமா போலே அநர்த்த சம்பந்த ரதி நிமித்தமான போஜன ஆசன சயனாதி
சம்பந்த்தாலே ஜ்ஞான ஹானி பிறந்து -விபரீத ஜ்ஞானமும் பிறந்து –
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலும் பஹிஷ் க்ருதனாய் விடும் – சிரஸ் சேத பர்யந்தமான மஹா ஆபத்து சம்பாதிதம் ஆனாலும் ஆத்ம தர்ம ப்ரஸ்யுதி பிறவாதபடி த்ருட
அத்யாவசாய நிஷ்ட ஆகாதனாகவும் -இதுக்கு த்ருஷ்டாந்த பூதர் இவர்கள் இறே
பெரிய நம்பியும் கூரத் ஆழ்வானும் -(தரிசனத்துக்காக தர்சனம் இழந்தவர் கூரத்தாழ்வான் -பசுபதி கோயிலில் பெரிய திருநம்பி திருவரசு உள்ளது -திட அத்யாவசிய -கோயிலுக்கு சென்று ஆச்சார்யர் திருவடி சேராமல் உறுதி கொண்டவர்)
6-சாமான்ய சாஸ்த்ரத்திலே கண் வையாதே(காண்பரோ கேட்பரோ தாம் -திருமாலை -7-) விசேஷ சாஸ்த்ரத்திலே அநவரத த்ருஷ்டியாய் -அனுஷ்டானத்திலும் அப்படியேயாய் -தன்னை ஒருங்கப் பிடித்து (ஆர்ஜவம் மனம் மொழி மெய் மூன்றும் சேர்ந்து)நிஸ் சம்சயனாய் இருக்கை –ஆதி பரதனும் திருக்கண்ண மங்கை யாண்டானும் இறே இதுக்கு பிரமாண பூதர் -(ஸ்வ வியாபாரத்தை விட்டார் -ரிஷி -மான் நினைத்து மானாகி பின்பும் ஆதிஜட பரதர் -ரைக்குவர் -விருத்தாந்தம்)நமக்கு எட்டாத நிலம் அன்றோ -என்னில் – ஏறுவான் சாரும் குதிரை இறே -இள நெஞ்சர்க்கு எல்லாம் இத்தை அத்யவசிக்க அருமை இல்லை –ஒருத்தி அப்யாசத்தாலே மலையை எடுத்துக் காட்டினாள்  என்னும் பழம் சொல் இல்லையோ –(கல் எடுத்து- குன்று எடுத்து- பின்பு மலையை எடுத்தாள்)
7-கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான பிரதான ஷேத்ரங்களில்
நித்ய வாசம் பண்ணுதல் -அங்கே நித்ய வாசம் பண்ணி அபியுக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பலகாலும் நினைக்கும்படி ஆப்தம் பண்ணி அர்த்த உபகாரத்தாலே யாதல் –
சேஷ வ்ருத்தியாலே யாதல் -அனுவர்த்தித்துக் கொண்டு போரவும் –
8-புத்ர மித்ர களத்ர ஷேத்ர அர்த்த தேஹாதிகளிலே அதி ப்ரசக்தி -ப்ரதிபத்தி
பண்ணாதே -ஆசார்யன் ஆத்ம ஹிதம் பண்ணினதுக்கு ஒரு வாசி தோற்ற அவற்றோடு
ஓட்டற்றுப் பரிமாறவும் –
9-பகவத் பாகவத கைங்கர்யத்தில் மிகவும் தாத்பர்யம் உடையவனாய்
சம்சாரத்தின் அநித்யத்வத்தை அனுசந்தித்து அவற்றோடு வேரோடு ஓட்டற விடுகையும்
10-நித்யனாய் பிரிய பூதனாய் சர்வ வித பந்து பூதனான எம்பெருமானை -நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே  (101-அவர் நினைவு ஸத்ய ஸங்கல்பம்)-என்று அனுசந்தித்து வரவும்
இப்பத்தர்த்தம் பிரதிபத்தி ஸ்தானம் –

——————————————————————

வார்த்தை -235-
கந்தாடை யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –(முதலியாண்டான் வார்த்தையாகவும் இதே வார்த்தை உண்டு)
ஸ்ரீ வைஷ்ணவன் சம்சார மண்டலத்திலே இருக்கும் இருப்பை -பிராட்டி ராவண
பவனத்திலே இருந்து காட்டினாள் -எங்கனே என்னில் –
1-பிராட்டி இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள்
திருவடிகளை அகற்றினால் போலே இவனுக்கு ததீய அபராதம் எம்பெருமான் திருவடிகளை அகற்றும் –
2-பிராட்டிக்கு ராவண ஸ்பர்சம் போலே இவனுக்கு தேக சம்பந்தம் –
3-பிராட்டிக்கு தர்ஜன பர்த்ஸநாதிகளை (கைகளாலும் வாயாலும்–மிரட்டுதல் பயமுறுத்தல் முதலானவை)பண்ணின ராஷசிகள் சஹ வாஸம் போலே இவனுக்கு களத்ர புத்ராதி சஹ வாஸம் –
4-பிராட்டிக்கு மாரீச தர்ஸனம் போலே இவனுக்கு விஷய ப்ராவண்யம் –
பிராட்டிக்கு ராவண தர்ஸனம் போலே இவனுக்கு இந்திரியங்கள்(மநோ ரஜஸீயன் -மனமும் பத்து இந்திரியங்களும்)
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு -காட்சி -போலே இவனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி ராம குணங்களை சொன்னால் போலே இவனுக்கு
ஆழ்வார்கள் அருளிச் செயல் –
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரலாறு சொன்னால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த குரு பரம்பரை -(அந்தப்புரம் ஊடலைச் தீர்த்த கடகரான மோதிரம் -லஷ்மீ நாதஸ்ய ஸிந்து இத்யாதி -)
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் கொடுத்தால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த திருமந்தரம் –
9-பிராட்டிக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெண் பிள்ளைகள் உசாத் துணை ஆனால் போலே
இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத் துணை –
10-பிராட்டிக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து பெருமாள் பிராட்டியை
எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு போனால் போலே விரோதியான பிரகிருதி
சம்பந்தத்தை அறுத்து எம்பெருமான் பரமபதத்துக்கு ஏறக் கொண்டு போகை –

இப் பத்து வார்த்தையும் அனுஷ்டான பர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவன் சரீரத் தளவும்
நிரபயமாக இருந்து எம்பெருமான் திருவடிகளைப் பெறும் –

————————————————————————

வார்த்தை -236-
காண வேணும் என்று ஆசைப்படுகை காட்சி –
அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுகை -அனுபவிக்கை –
கைங்கர்யத்தை ஆசைப்படுகை  -அநுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யம்
இவை இத்தனையும் ஏக காலத்தில் கிடைக்கும் (கடிக்கும் கூடும்)அக்கரைப் பட்ட அதிகாரிக்கு –

—————————————————————————–

வார்த்தை -237-

ஒரு முமுஷுக்கு மூன்று த்யாஜ்யம் -மூன்று உபாதேயம் -அது என் என்னில் –
பௌருஷ சங்கம் -காம சங்கம் -அர்த்த சங்கம் -இவை மூன்றும் (த்யாஜ்யம்)
ஆசார்ய விக்ரக சங்கம் -ஆசார்ய கைங்கர்ய சங்கம் -ஆசார்யன் அருளிச் செய்த வார்த்தையில் அதி சங்கம் இவை மூன்றும்  (உபாதேயம்)-

(சிஷ்யன் ஆச்சார்யர் திருமேனியை உகந்து கைங்கர்யம் பண்ண வேண்டும்)

———————————————————————–

வார்த்தை -238-
ஸ்வ ஸ்வரூப விரோதி -சம்பந்த விமோசனத்வம் -ஸ்வ ஸ்வரூப தர்ஸனத்வம் –
ஸ்வ ஸ்வரூப அநு பவத்வம் -ஸ்வ ஸ்வரூப விகாஸ வ்ருதித்வம் -ஸ்வ ஸ்வரூப அவிகாஸ அநு பவத்வம் -உபய விகாஸ வ்ருத்தித்வம் –

(ஸ்வ ஸ்வரூப விரோதிகளை ஆறுவகையாகப் பிரித்துக் காட்டுகிறது
1- பகவத் பாகவத ஆச்சார்யர்களுடன் உறவை அறுத்துக் கொள்ளுகை
2- எம்பெருமானை அறிவதில் ஊன்றி இராமல் ஸ்வ ஆத்மாவையே அறிவதில் ஊன்றி இருக்கை
3- எம்பெருமானைக் அனுபவிப்பதில் ஈடுபடாமல் ஸ்வ ஆத்மாவையே அனுபவிப்பதில் ஈடுபடுகை
4- கைங்கர்யத்தை பரம ப்ராப்யமாகக் கொள்ளாமல் தமது ஸ்வரூப ஆவிர்பாவத்தையே எல்லையாக கொள்ளுதல்
5-ஸப்தாதி விஷயங்களை அனுபவிக்கை
6-கைங்கர்யத்தை முக்யமாகக் கொள்ளாமல் குண அனுபவத்தையே முக்யமாகக் கொள்ளுதல்)

———————————————————————————–

வார்த்தை -239-

ஜ்ஞான தசை -பிராபக தசை -ப்ராப்தி தசை -பிராப்ய தசை -என்று நாலு
ஜ்ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராபக தசையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிட்டு இருக்கக் கடவன்
ப்ராப்ய தசையில் த்வரையை முன்னிட்டு இருக்கக் கடவன் –

(1-ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை அறியும் ஞான தசையில் ஞானம் கனிந்த நலமான பக்தி முற்றி ஸ்வ பர ஸ்வரூபங்களை மாறாடி அவனுடைய ஞானம் சக்த்யாதிகளை மறந்து மங்களாசாசனம் செய்பவனாய் இருக்க வேண்டும்
2-அவனையே உபாயமாக உறுதி கொள்ளும் பிராபக தசையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக்கொண்டு அவனே உபாயமாக உறுதி கொள்ள வேண்டும்
3-பிராப்தி தசையில் பேற்றுக்குத் துடிப்புடன் இருக்க வேண்டும்
4-அடைந்த பின்பு கைங்கர்யங்களில் பாரித்து அனைத்தையுமே செய்ய உறுதி கொள்ள வேண்டும் -)

——————————————————————————————–

வார்த்தை -240-
அநுபவம் விச்சேதியாமைக்கும் -உசாத் துணைக்குமாக வாய்த்து
தேச விசேஷம் வேண்டுகிறது –

(மருள் ஒழி மடநெஞ்சே -அர்ச்சா ப்ராவண்யம் -திருவாறன் விளையே வேண்டுவேன் வைகுந்தம் வேண்டாமே என்றாரே கீழ் -இங்கு அர்ச்சாவதாரத்தைப் ப்ராப்யமாகக் கொண்டு அங்கு அடியார் குழாங்களுடன் உடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டுமே)

————————————————————————————–—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -217-228–அரும் பத விவரணத்துடன்–

February 3, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

 வார்த்தை -217-
சிஷ்யன் ஆசார்ய விஷயத்தில் அர்த்த முகத்தாலே (செல்வம் சமர்ப்பித்து)பிரதிபத்தி பண்ணும் இடத்து –அப்போது அங்குத்தைக்கும் அடி உண்டு இல்லை என்று நிரூபிக்க கடவன் அல்லன் –தன் சரீர தாரணத்தோ பாதியாகிலும் அங்குத்தைக்கு அம் முகங்களாலே ப்ரீதி பண்ணுகை ஸ்வரூபம்-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————————-

வார்த்தை -218-
நஞ்சீயர் பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாக தோளிலே தண்டை வைக்கப் புக –
உம்முடைய வேஷத்துக்கு விருத்தமாக செய்யலாகாது காணும் -என்று பட்டர் அருளிச் செய்ய –
இங்குத்தை கைங்கர்யத்துக்கு ஏகாந்தம் என்று வேஷ பரிக்ரஹம் பண்ணினேன் –
இது தானே இதுக்கு விரோதி யாகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் -என்றார் –

——————————————————————————————-

வார்த்தை -219-

வைஷ்ணவனுக்கு கரண த்ரயத்தாலும் கால ஷேபம் ஏது என்னில் –
ஆசார்ய கைங்கர்யம் – பகவத் கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் –
இவை மூன்றும் தன்னில் ஒக்குமோ -என்னில்

ஸ்வரூபத்தை உணர்ந்தவன்-ஆசார்ய கைங்கர்யமே பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் என்று இருக்கும் –
ப்ரபாவஜ்ஞன் -(சர்வேஸ்வரனுடைய பெருமையை மட்டுமே உணர்ந்தவன் )-பகவத் கைங்கர்யமே பிரதானம் என்று இருக்கும் –
உபயத்திலும் உணர்வு இல்லாதான் -(உபாய உபேய யாதாம்ய ஞானம் இல்லாதவன்) -மூன்றையும் தத் சமம் என்று இருப்பான் –

(பகவத் கைங்கர்யத்தை விட பகவான் உகக்கும் ஆச்சார்யர் கைங்கர்யமே ஸ்ரேஷ்டம் என்றும் ஆச்சார்யர் உகந்த பாகவத கைங்கர்யம் அதிலும் ஸ்ரேஷ்டம் என்றவாறு)

———————————————————————————————

வார்த்தை -220-
எல்லா ஆசார்யர்கள் உடைய அபிப்ராயமும் -எல்லா ஆழ்வார்கள் திரு உள்ளக்  கருத்தும் – எல்லா வேதங்களுடைய கதியும் –எல்லா சாஸ்திரங்கள் உடைய நினைவும்- நிரூபித்த அளவில் –
ஆசார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனம் -என்று நஞ்சீயர்  நம் பிள்ளைக்கு அருளிச் செய்தார் என்று வடக்கு திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர் –

(உண்ட போது ஒருவார்த்தை உண்ணாத பொது ஒருவார்த்தை -அல்லாமல் மதுரகவி நிலைப்படியே நிற்போம் -பெருமாளும் கிம் குரு -விசுவாமித்திரர் சொற்படியே நடந்து காட்டி –சத்ருக்னன் நிஷ்டை –வடுக நம்பி நிஷ்டை – ஆதி ஜட பரதர் -ஸ்ரீ பாத தூளியே பரம பாவனத்வம்-)

————————————————————————————————

வார்த்தை -221-
ஆசார்ய கைங்கர்யம் -தனக்கு பசி விளைந்து உண்ணுகை -(பரம போக்யம்-)
பாகவத கைங்கர்யம் தாய்க்கு சோறு இடுகை -(விலக்க ஒண்ணாத கடமை -)
பகவத் கைங்கர்யம் -ஒப்பூண் உண்ணுகையும் -(பலரில் ஒருவனாக உண்கை -)
மூப்புக்கு சோறு இடுகையும் –(வயசான ஏழை எளியவர்களுக்கு சோறு இடுகை –)
என்று வடுக நம்பி அருளிச் செய்வர் –

————————————————————————————————-

வார்த்தை -222
ஆச்சான் பிள்ளை தேவியார் -மடத்தில் பிள்ளையோடே (பெரியவாச்சான் பிள்ளை மடத்தை நிர்வகிக்கும் சிஷ்யனுடன்)பிணங்கி -வாரு கோலே போய்க் கிட – என்ன –
மடத்தில் பிள்ளையும் -வாழும் மடத்துக்கு ஒரு வாரு கோலும் வேணும் காணும் – இவ் வார்கோல் தலைக் கடையை விளக்கி – (பஹிரங்க கைங்கர்யம் செய்து-சென்றால் குடையாம் போல்)-திண்ணையிலே கிடக்கவோ –திருப் பள்ளி யறையை விளக்கி -(அந்தரங்க கைங்கர்யம் செய்து-புல்கும் அணையாம் போல்) -உள்ளே கிடக்கவோ -என்று விண்ணப்பம் செய்தார் –

———————————————————————————————–

வார்த்தை -223-
பகவத் பிரசாதம் பகவத் ருசியைப் பிறப்பிக்கும்–
பகவத் ருசி ஆசார்ய அங்கீகாரத்தை பிறப்பிக்கும்–
ஆசார்ய அங்கீகாரம் ஸ்வீகார ஞானத்தை பிறப்பிக்கும் –(எம்பெருமானை உபாயமாக பற்றும் அறிவு )- ஸ்வீகார ஞானம் பகவத் ப்ராப்தியை பிறப்பிக்கும்-
பகவத் ப்ராப்தி தத் கைங்கர்யத்தை பிறப்பிக்கும்-
தத் கைங்கர்யம் ததீய கைங்கர்யத்தை பிறப்பிக்கும் –

(திருக்கோயில்களில் பிரசாதம் ஏற்பாடும் இதற்காகவே தானே -பிரசாதம் அருள் என்றும் தளிகை பிரசாதமும் -)

———————————————————————————————-

வார்த்தை -224-
உடையவர் அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
ஒருவன் பிரபன்னன்  ஆனால் – அவனுடைய தேக யாத்ரை கர்ம ஆதீனம் ஆகையாலே -கரைய வேண்டா –கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆம் இத்தனை –
ஆத்ம யாத்ரை பகவத் ஆதீனம் ஆகையாலே அதில் தனக்கு அந்வயம் இல்லை –
உண்டு என்று இருந்தான் ஆகில் -ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை –
ஆகையால் உபய யாத்ரையும் கொண்டு அந்வயம் இல்லை –

ஆகையால் கரண த்ரயங்களையும் கொண்டு வேண்டிற்று செய்து திரியவோ -என்னில் -அது ஸ்வரூபம் அன்று –இனி உபாயாந்தரத்தில் அந்வயம் இல்லா விட்டால் ப்ராப்யமான கைங்கர்யத்தில் அந்வயிக்கும் இத்தனை –

(சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-)

இங்கே இருக்கும் நாள் செய்யும் கைங்கர்யம் ஆறு -அவை யாவன –
1-நீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிக்கவும் -அதுவும் மாட்டிற்று ஆகில்
2-அருளிச் செயலை ஓதி ஓதுவிக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
3-உகந்து அருளின திவ்ய தேசங்களிலே அமுதுபடி சாத்துப்படி ஆராய்ந்து போரவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
4-திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டி இருக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
5-த்வயத்தின் அர்த்த அனுசந்தானம் பண்ணவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
6-என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் அபிமாநத்திலே ஒதுங்கி இருக்கவும் –

(நாரதர் தமது பூர்வ ஜென்மத்தில் ரிஷிகளுக்கு கைங்கர்யம் செய்து சேஷம் உண்டு பெற்றத்தால் கிடைத்த பேறு என்றார் அன்றோ)

இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவது மூன்று விஷயங்கள் உண்டு –
அவர்கள் ஆர் என்னில் –
அநு கூலரும் -பிரதி கூலரும் -அநு பயரும் –

இதில் அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதி கூலர் ஆவர் பகவத் த்விட்டுக்கள் -எம்பெருமானை த்வேஷிப்பவர்கள் –
அநு பயர் ஆவார் சம்சாரிகள்

இதில் அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -சந்தன குஸும தாம்பூலாதிகளைப் போலவும் – நிலாத் தென்றல் சந்தனம் போலேயும் –அபிமத விஷயம் போலேயும் -உகந்து வர்திப்பான் –
பகவத் த்விட்டுக்களைக் கண்டால் சர்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான் –
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே (கல் மண் கட்டைகளைப் போல்)உபேஷித்து வர்த்திப்பான்
 

இப்படி வர்த்திக்க ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம ப்ராவண்யம்
அர்த்த காமம் அடியாக அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமானம் பண்ணினால் –
ராஜ புத்ரனை அவமானம் பண்ணினால் ராஜ ஹ்ருதயம் புண் படுமா போலே தத் த்வாரா (ராஜாதி ராஜ ஸர்வேஸ்வரனான)எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் –
பிரதி கூலரான பகவத் த்விட்டுகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் -ராஜா சார்வ பௌமனாய் இருக்க – ராஜ மஹிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கலிலே மடிப் பிச்சை புக்கால் ராஜாவுக்கு அவத்யமாம் போலே- எம்பெருமானுக்கு அவத்யமாய் –தத் த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் –
அநு பயரான சம்சாரிகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாரைப் போலே நமக்கும் பிறர்க்கும் வாசி அறிந்திலன் -இவனுக்கு பிறந்த ஞானம் கார்ய கரமாக பெற்றிலோமே என்று இவன் அளவில் ஈஸ்வரன் உதாசீனனாய் போரும் –

——————————————————————————————-

வார்த்தை -225-
முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை
பிரபன்னன்  யாவச் சரீரம் கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில்
தேகத்தில் ஆத்ம புத்தி தவிர்கையும்-தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி தவிர்கையும் – தேகாத்பரனான ஆத்மாவை தானாக நினைத்து இருக்கையும் -ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இருக்கையும் –

பாரதந்த்ர்யத்துக்கு எல்லை ஏது எனில் -ததீய சேஷத்வ பர்யந்தம் என்று இருக்கையும் ,
உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் கரண த்ரயத்தாலும் ஆனவளவும் அநு கூலராய் போரவும் -வருந்தியும் பிரதி கூல்யம் தவிரவும் (தவிர்க்க வேண்டியவை முக்கியம் -வருந்தியும் செய்ய வேண்டும் -ஆந்தனையும் கைகாட்டி ஆனவளாவும் அனுகூலராய் போக வேண்டுமே)
ஆசார்ய ருசி பரி க்ருஹீதமான த்வயார்தம் நெஞ்சில் பட அனுசந்திக்கையும் –
உகந்து அருளின நிலங்களிலே பலகாலம் புக்கு முகம் காட்டவும் –
அருளிச் செயலைக் கொண்டு போது போக்கையும் –
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தாலே ஷூந் நிவ்ருத்தி மாத்ரத்திலே பர்யாப்தி பிறக்கவும் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி பூர்வகமாக  சம்சார பீதனாகையும் -பரதேவதா -பரனான பெருமாள் இடம் – பிரதிபத்தியும்-பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்யத்தில் ருசியும் -சாதனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாய வ்யவஸ்தையும் –

இவை இத்தனையும் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீ காரத்தாலும் ஸித்திக்கும் என்று அத்யவசித்து இருக்கையும் –ஆசார்ய சந்நிதி இல்லாத போது விடாய்த்தவன் தண்ணீர் பெற்றான் ஆகிலோ என்னுமா போலே யிருக்கவும் – பகவத் சந்நிதி இல்லாதபோது  நடு வழியிலே பசித்தவன் ஊரைச் சேரப் போமா போலே இருக்கவும் –

இவ் வதிகாரிக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஜாதமான பிரஜைக்கு தாய் முலைப் பாலைப் போலே –
எம்பெருமானுடைய தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போலே –
ஆழ்வார்கள் அருளிச் செயல் அமிர்த பானம் போலே –
சாமான்ய சாஸ்திர ஸ்ரவணம் அநபிமத போஜனம் போலே
விவித பலங்களான நாநாவித பகவத் மந்திர ஜபாதிகள் வாஸனா பலத்தாலே வந்ததாகில் சம்சார தர்ம அனுவர்தனம் போலே –
த்வயர்த்த அனுசந்தானம் ப்ராப்ய தேச வாஸ ஸூக சமானம் என்னலாம் இத்தனை இறே -மற்றுச் சொல்லலாவது இல்லை –

———————————————————————————————-

வார்த்தை -226-
ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் -என்னில் -த்ருஷ்டத்திலே கர்மாதீனம் –
அங்கு ஏதேனும் சுருங்கிற்று உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது எம்பெருமானைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – எம்பெருமானை வெறுத்தோம் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் .

(த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்-த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –வார்த்தை -104

(தேஹ யாத்ரையாய் பெரிய பெருமாள் பொறுப்பு -ஆத்மயாத்ரை ஆச்சார்யர் பொறுப்பு என்றும் இருக்க வேண்டும் -தேஹ யாத்திரையில் கர்மம் அனுகுணமாக குறைகள் ஏற்படுவதற்கு ஆச்சார்யர் ஹேதுவாக மாட்டாரே -தேஹ யாத்திரையும் ஆச்சார்யர் என்றும் நினைப்பவனுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படலாம் -ஆச்சார்யராக வெறுத்தவனுக்கு பெருமாள் கை கொடுக்க மாட்டார்-பெருமாளை வெறுத்தால் ஆச்சார்யர் புருஷகாரம் செய்து கோபத்தை தணித்து கதி அருளப் பண்ணுவார் என்பதே இவ் வார்த்தையின் கருத்து -)

——————————————————————————————–

வார்த்தை -227-
எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரோடே பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அனர்த்தப் பட ஒண்ணாது என்று பெருமாள் திருவடிகளில் எழுந்து அருளி நிற்கச் செய்தே -அவனும் அங்கே
சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யம் இல்லை -நான் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள்
இவ்வாத்மாவுக்கு தஞ்சமாய் இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை -என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து
சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டரானார் –

(எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று –
பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அவனும் அங்கே சந்நிஹிதனாக –
வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் –
இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் –அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் -நூற்றஞ்சாம் வார்த்தை–)

——————————————————————————————-

வார்த்தை -228-
பட்டர் -த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ –என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அனுசந்திகைக்கு குறை இல்லை -ஆகிலும் இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறு ஒரு பாசுரத்துக்கு சுரவாது -என்று அருளிச் செய்தார் –

(பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ – என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –அதுக்கு குறை இல்லை –ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –-நூற்று ஆறாம் வார்த்தை)

———————————————————–——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -205-216–அரும் பத விவரணத்துடன்–

January 14, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

இரு நூற்று ஐஞ்சாம் வார்த்தை
எம்பெருமானார் -திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ  பாதத்திலே நின்று நெடு நாளோடு கூட
ஸ்தோத்ரம் கேட்டருளி சாத்தினவாறே -இனி ஜ்ஞான கார்யத்தில் உமக்கு கர்த்தவ்யம் ஒன்றும் இல்லை -பெரிய நம்பிக்கு பிரியமாக கோயில் திருவாராதனம் நடத்தல் ஆகாதோ -என்று சரம ஸ்லோக அர்த்தத்தையும் அவ்வளவிலே அருளிச் செய்து -விடை கொடுத்து அருள –
இவரும் விடை கொண்டு -திருக் குளக் கரையிலே (திருப்பாற்கடல் என்னும் புஷ்கரணிக் கரையிலே)எழுந்து அருள -முதலியாண்டான் எம்பெருமானார் தாழ்த்த அருளினவாறே ஸ்ரீ பாதத்திலே கண்டு வர வேணும் என்று வர -ஓரடி முற்பட்டீர் இல்லையே –எனக்கு சரம ஸ்லோகம் அருளிச் செய்த உருகு பதத்தோடு எழுந்து அருளி  இருக்கிறார் -புக்கு தண்டனிட்டு வா –என்று அருளிச் செய்ய-ஆண்டானும் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டனிட்டு நிற்க-
ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே யிருந்தாய் -என்று விஷயீ கரித்து -சரம ஸ்லோக
அர்த்தத்தை அருளிச் செய்து -உனக்கு பரிஹரிக்க வேண்டுவது மூன்று படு குழி உண்டு –
அத்தைக் கேள் -என்ன -அருளிச் செய்யலாகாதோ -என்ன -வித்வான் -அபிஜாதன் -எம்பெருமானார் மருமகன் என்கிறவற்றை -எல்லாம் -உத்தேச்ய என்று இராதே –
எம்பெருமானார் திருவடிகளில் பண்ணின சம்பந்தமே உனக்கு உத்தாரக ஹேது -என்று இரு
என்று அருளிச் செய்ய-அத்யந்த ஹேயனாய் இருக்கிற என்னையும் தங்களோடு ஒரு கோவையிலே கோப்பதே -என்று கண்ணும் கண்ண நீருமாய் விடை கொண்டு எம்பெருமானார் ஸ்ரீ பாதத்து ஏறப் போந்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(இங்கு நம்பி சுருக்கமாக அருளிச் செய்து உடையவரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி அருளி இருக்க வேண்டும் -குரு பரம்பரா ப்ரபாவத்தில் ஆண்டானுக்கும் ஆழ்வானுக்கும் சரம ஸ்லோகார்த்தம் அருளிச் செய்வதால் இருப்பதற்கு பொருந்தும் -எம்பெருமானார் சம்பந்தமே உத்தாரகம் என்று நினைத்து இருக்கும் உங்கள் கோஷ்ட்டியில் அடியேனையும் சேர்த்து அருளினீரே என்று உகப்புடன் ஆண்டான் அருளிச் செய்கிறார் -)

————————————————————————————————

இரு நூற்று ஆறாம் வார்த்தை
எம்பெருமானார் -உந்து மத களிற்றன் என்கிற பாட்டை அனுசந்தித்துக் கொண்டு
திருக் கோட்டியூர் நம்பி திரு வாசலிலே -சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்கிற இடத்தை அனுசந்திக்கிற போது -நம்பி திரு மகளார் -தேவகிப் பிராட்டியார் -திருக் கதவைத் திறந்து கொண்டு புறப்பட -எம்பெருமானார் விழுந்து தெண்டன் இட்டு கிடக்க -நெரித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போக-
நம்பி -இது என் பெண்ணே -என்ன -என்னை எம்பெருமானார் தண்டன் இட்டார் -என்ன –
அதுக்கு பயப்பட வேணுமோ என்று அருளிச் செய்து -எம்பெருமானார் உள்ளே புக்கு அருளினவாறே –
இளையாழ்வீர் -இப்போது அனுசந்தானம் உந்து மத களிற்றனோ -என்று அருளிச் செய்தார்
என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(இங்கும் குரு பரம்பரா ப்ரபாவத்திலும் இவ்வாறு உள்ளதை மூவாயிரப்படி அரும்பதகாரர் பெரிய நம்பி -அத்துழாய் -என்று அருளிச் செய்கிறார்)

————————————————————————————————–

இரு நூற்று ஏழாம் வார்த்தை
நம்பி திருவழுதி வள நாடு தாசர் -ஓருரு கண்ணி நுண் சிறுத் தாம்பை அருளிச் செய்து –
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டினவாறே
ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் லீலா விபூதியில் இத்தை ஒருவன் ஸ்ரத்தை பண்ணி -அநுசந்திக்க -அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்கனே -என்று கேட்க -அது இருந்தபடி கேளீர்-கூரத் தாழ்வான் திரு மகனார் திரு வவதரித்த பின்பு இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்து காண் என்று அருளிச் செய்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(-நம்புவார்களுக்குப் பதி ஸ்ரீ வைகுண்டம் என்றும் அவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டமாகும் -இரண்டு நிர்வாஹங்கள் உண்டே-நம்புவார் பதி வைகுந்தமாகும் பட்டர் காலத்திலேயே பலித்தது என்று அறியலாம்)

—————————————————————————————————-

இரு நூற்று எட்டாம் வார்த்தை
ஆள வந்தார் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் வர்த்திக்கிறவர்கள் -ஒரு நாள் இருவரும் -ஆற்றுக்கு எழுந்து அருளி ஒருவர் புறப்பட்டு வர -ஆள வந்தார் அருளிச் செய்த வார்த்தை -அன்றிலினுடைய அவஸ்தை பிறந்த போது காண் ஆத்ம ஞானம் பிறந்தது ஆவது -என்று அருளிச் செய்தார் –

(ஆத்ம யதாத்ம்ய ஞானம் பிறந்தால் அன்றில் மிதுனம் போல் -ஸ அநவஸ்தான லக்ஷணம்-பாகவத விஸ்லேஷம் தரியாமல் இருப்பார்கள் அன்றோ -)

——————————————————————————————————

இரு நூற்று ஒன்பதாம் வார்த்தை

ஆளவந்தார் திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற போது -தெய்வ வாரி யாண்டானை
மடத்துக்கு வைத்து -திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற அளவிலே -சந்நிதியில் முதலிகளைப் பார்த்து -குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கோள் –என்று அருளிச் செய்து அருளி-திரு முகத்தைப் பார்த்து அருள -மாசமும் திவசமும் அன்று தானாய் இருந்த படியாலே-ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே என்று  போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க –

தெய்வ வாரி யாண்டானுக்கு ஆளவந்தாருடைய விஸ்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க – வைத்யர்கள் பலரும் பார்த்த இடத்தில் -விஷய ஸ்ப்ரூஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்று சொல்ல –

உமக்கு எந்த விஷயத்தில் ஸ்ப்ருஹை யாய் இருக்கிறது -என்று கேட்க -அடியேனுக்கு ஆளவந்தார் விஷயம் ஒழிய வேறேயும் ஒரு விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்ய

ஆகில் இவரை அங்கே கொண்டு போங்கள் என்று வைத்யர்கள் சொல்ல -இவரை கட்டணத்திலே கொண்டு போக -ஒருநாளைக்கு ஒரு நாள் திருமேனி பெருத்து நடக்க வல்லராய் வருகிற அளவிலே -ஆளவந்தாரும் திருவனந்தபுரம் சேவித்து
மீண்டு எழுந்து அருளா நிற்க -தெய்வ வாரி யாண்டானும் தெண்டம் சமர்ப்பித்து எழுந்து இருக்க மாட்டாமல் இருந்தபடியைக் கண்டு –

பெருமாள் ஸ்வ தந்த்ரருமாய் ஸூ ரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரதாழ்வான் வைத்த இடத்தில் இருந்தார் -நான் ஸ்வ தந்த்ரனும் அன்றிக்கே ஸூரனும் அன்றிக்கே இருக்கையாலே இறே நாம் வைத்த இடத்தில் இராதே நீர் வந்தது -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
 இத்தைக் கேட்டு தெய்வ வாரி யாண்டான் -நாம் வந்து ஸ்வரூப ஹாநி பட்டோம் -என்று சத்தை குலைந்து கிடக்க –
என்னை -ஸ்வ தந்த்ரனுமாக்கி ஸூ ரனுமாக்கி எழுந்து இருக்கிறோம் என்று கிடக்கிறாயோ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –

வைத்த இடத்தே இராதே வந்து ஸ்வரூப ஹாநி பட்டால் போலே –இதுவும் ஒரு ஸ்வரூப ஹாநியாய் ஆய்த்தோ -என்று பர பர என எழுந்து இருந்து நிற்க –
ஆளவந்தாரும் -இதொரு அதிகார  விசேஷம் இருந்தபடி  என் -என்று உகந்து -போர இளைத்தாயே -என்று கிருபை பண்ணி -திருவனந்தபுரத்து திருக் கோபுரம் தோன்றுகிறது –ஸ்ரீ பத்மநாபப் பெருமாளை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது -என்று ஸ்வ ஆசார்யரான ஆளவந்தார் திருவடிகளைக் காட்டி -கூட சேவித்துக் கொண்டு மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் –

(உலாவும் பெருமாள் ஆச்சார்யர் உரேனியும் பெருமாள் அவன் -எம்பெருமானார் ஆளவந்தார் சேவிக்க வந்து அரங்கனை செவிக்காமல் மீண்ட ஐதிக்யம் -இதுவன்றோ எழில் ஆலி என்றான் அவனும்)

—————————————————————————————————

இரு நூற்று பத்தாம் வார்த்தை

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன –

தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

—————————————————————————————————-

இரு நூற்று பதினோராம் வார்த்தை

பெரிய நம்பி திருமகளார் அத்துழாய் புக்ககத்திலே இரா நிற்க -ஒருநாள் தீர்த்தமாடத் துணை வர வேணும் -என்று மாமியாருக்கு அருளிச் செய்ய -உன் சீதன வெள்ளாட்டியை கொண்டு போ என்று தடுத்துச் சொல்ல -நம்பி பக்கல் வந்து-நம்பீ என்னை இப்படி சொன்னார் என்ன –
நாம் அறியோம் உங்கள் ஜீயருக்கு சொல்லும் -என்ன -இவளும் அங்கு சென்று விண்ணப்பம் செய்ய –
அருகே இருந்த முதலி யாண்டானைப் பார்த்து -உமக்கு இந்தாரும் அம்மா ஸ்ரீ தன வெள்ளாட்டி -என்று திரு உள்ளமாய் -இவரைக் கொண்டு போ -என்ன -ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடப் பண்ணு வித்து –இவருடைய புக்ககத்திலே நின்று -தாஸ வ்ருத்திகளை செய்யத் தொடங்கினார் -இவருடைய புக்ககத்தார் –
இது என் ஆண்டான் -என்ன -என்னை வர விட்ட உடையவரும் எங்கள் நாய்ச்சியாரும் சொன்னது செய்ய வேணுமே -என்ன -அவர்களும் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஏறப் போய் -நம்பீ முதலி யாண்டானை ஏற விட்டு இப்படி எங்களை நசிப்பிக்கிறது என் -என்ன -நாம் அறிந்தோமோ -எம்பெருமானாருக்கு சொல்லுங்கோள்-
என்ன -அங்கே  சென்று விண்ணப்பம் செய்ய – உடையவரும் -ஆண்டானை அத்துழாய்க்கு ஸ்ரீ தன அடிமையாகக் கொடுத்தோம் -அங்கு உங்களுக்கு நிற்க ப்ரியம் அன்று  ஆகில் இங்கே நின்று அடிமை செய்கிறது -என்று அருளிச் செய்து அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

—————————————————————————————————–

இரு நூற்று பன்னிரண்டாம் வார்த்தை

த்ரை லோக்யாள் -என்பாள் ஒரு ஸ்த்ரி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் வங்கி புரத்து ஆச்சி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருக்கும் -அங்கே அனந்தாழ்வான் எழுந்து அருள -அவரை ஆறு மாசம் சேவித்து இருந்து-அவர் எழுந்து அருளினவாறே ஆச்சி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்றாள் -அவரித்தனை நாள் வந்திலையீ என்ன –
அனந்தாழ்வானை சேவித்து இருந்தேன் என்ன -அவர் நான் சொன்னதிலும் ஏற்றமாக சொல்லிற்று உண்டோ -என்ன –
உண்டு -உம்மை ஆஸ்ரயித்து -பதினாறாட்டை நாளுண்டு (பதினாறு வருட காலம்)-எம்பெருமானார் திருவடிகளைத் தஞ்சம் என்றீர் இத்தனை -அவர் ஆறு மாசத்திலே உம்முடைய திருவடிகளே  தஞ்சம் என்னும்படி பண்ணினார் – என்றாள் –

——————————————————————————————————–

இரு நூற்று பதிமூன்றாம் வார்த்தை

அப்பன்  என்பவர் -ஆழ்வான் உடைய அந்திம தசையிலே -ஸ்ரீ பாதத்திலே சேவிக்கப் பெற்றிலேன்-எனக்கு ஹிதாம்சம் அருளிச் செய்ய வேணும் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய – ஊரையும் ஸ்வாஸ்யத்தையும் விட்டு மேற்கு நோக்கி ஓரடி இட்ட போதே ஹிதாம்சம் அற்றது சொல்ல வேணுமோ என்று அருளிச் செய்தார் –

(இத்தால் ஸதாச்சார்யரை ஆஸ்ரயிக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்ட உடனே ஹிதாம்சம் கிட்டி விடும் -மற்ற செயல்கள் எல்லாமே காலஷேபத்துக்கே உறுப்பாகும் என்றவாறு)

——————————————————————————————————

இரு நூற்று பதினாலாம் வார்த்தை

முதலியாண்டான் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே மோஷம் -என்ன –
கூரத் ஆழ்வான் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -என்ன –
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -என்று
பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே -4-4-2-ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே ஆகவேணும் -என்ன –
ஆழ்வான் -அங்கன் அன்று -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப்பாட்டிலே நடக்கிற நமக்கு
எல்லாருக்கும் ஸ்வ அனுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -ஆக வேணும் என்று அருளிச் செய்தார் -ஆண்டானும் அப்படியாம் என்று மிகவும் ப்ரீதரானார் –

——————————————————————————————————–

இரு நூற்று பதினைந்தாம் வார்த்தை

ஈஸ்வரன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்யனை தஞ்சம் என்று இருப்பான் –
ஆசார்யன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்ய வைபவம் சொன்னவனை தஞ்சம் என்று இருப்பான் –

(பல கரணம் கருவி உபாயம் ஆச்சார்யன் -பல ப்ரதன் எம்பெருமான் -பொன்னுலகாளீரோ புவனம் முழுவதும் ஆளீரோ-ஆச்சார்யர் பலப்ரதன் -ஆச்சார்ய வைபவம் -குருவி காட்டும் மூலையில் இருவரும் வாழ்வோம்-ஆச்சார்யரைக் காட்டிக் கொடுத்த பாகவதர்கள் தஞ்சம் – உபாயம்)

——————


216-வார்த்தை
பிள்ளை பின்பு அழகிய ஜீயர் மடத்திலே ஒரு நாள்  எழுந்து அருளி இருக்க -எல்லாருக்கும் ஆழ்வாருடைய அவஸ்தை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருக்கும் நிலை –உண்டாய் பெற வேண்டி இரா நின்றது -ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிற நாங்கள் செய்வது என் -என்று விண்ணப்பம் செய்ய -இங்கு அந்த அவஸ்தை பிறந்தது இல்லை யாகிலும் சதாசார்ய விசேஷ கடாஷத்தாலே- ஸ்தூல சரீர விமோசநத்துக்கும்  கைங்கர்ய ப்ராப்திக்கும் நடுவே – அவ் வவஸ்தை பிறப்பித்து- எம்பெருமான் கார்யம் செய்யும் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் அருளிச் செய்வர்-

(ஸ்வீக்ருத சித்த சாதனர் இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்–சூரணை-100–இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி -சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும்)

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -193-204–அரும் பத விவரணத்துடன்–

December 31, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

நூற்று தொண் நூற்று மூன்றாம் வார்த்தை
அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
(ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் —ஊற்றத்தைப் பற்றச் சொன்னது -அக்னி கார்யமான காம்ய கர்மாக்களைச் செய்து ஸ்வர்க்கம் போவதை அகற்றுபவரும்-கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தா –11-9-உபாயங்களைப் பார்த்து எனக்கு மிக்க பயம் உண்டாகிறது -இவ்வாறு அஞ்சுபவர்களுக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான ப்ரபத்தியை உபதேசித்து அச்சம் போக்கி அருளும் ஆச்சார்யர்கள்-)

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று நாலாம் வார்த்தை
துக்க அனுபவம் – பிரகிருதி
துக்க அநுபவிதா -ஆத்மா
துக்க அசஹை – பிராட்டி
துக்க நிவாரகன் -ஈஸ்வரன் –

———————————————————————————————

நூற்று தொண் நூற்று ஐந்தாம் வார்த்தை –
நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ  மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இறே மடுவின் கரையிலே வந்தது –
இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக –
நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஆறாம் வார்த்தை –
ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம்
பிள்ளை இன்றிக்கே இருந்து -பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே
ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு -அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று –அப் பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து -வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் –என்று வினவுவர் –

ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் –இதுக்கு ஹேது என் -என்ன -நான் அவனுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னேன் காண் -என்ன –

அவன் எங்கே நீர் எங்கே -இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன –

ஒருவன் விலங்கிலே கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது -விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் –

அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –

(ஆச்சார்யர் கிருத்யம் அவனை வேண்டிக் கொள்வது ஒன்றே -அவன் கிருத்யம் இவனை ஆச்சார்யர் இடமும் சேர்த்து திருத்திப் பணி கொள்ளச் செய்வதே -இதை நன்கு அறியலாம் இந்த வ்ருத்தாந்தத்தின் மூலம்)

போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே ஆதரியாதே இருக்க -முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில் உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய -அவரும் அப்படியே செய்ய –
பிற்றை நாள் அவ் வூரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் -அதுக்கு பின்
ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

(முதலியாண்டான் கிருத்யம் கூட்டி உடையவர் திருவடி சேர்ப்பது -உடையவர் உத்தாரகராய் இருந்து உஜ்ஜீவிப்பித்து அருளுவர்)

———————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஏழாம் வார்த்தை
மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு (திருவரங்கத்துக்கு கிழக்கு உள்ள திருவானைக்கா)பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு
சொல்லுவன் -அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில
கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் -அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம் பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் –அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று எட்டாம் வார்த்தை
நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில் அனர்த்தப் பட்டோம் இத்தனை இறே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்

(ஆளிப்பிள்ளான் -தாழ்ந்த குலத்தவராகிலும் சதாசார்யர்கள் அபிமானத்துக்குப் பாத்திரமானவர் -வர்ணாஸ்ரம தர்ம வரம்புகளை மீறலாகாது -அருளிச் செய்த வார்த்தை -சாமான்ய ஸாஸ்த்ர அர்த்தம் -சதாசார்யர் அபிமானத்துக்குப் பாத்திரமாய் இருக்கும் எவரும் எப்பொருளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கைக் கொள்ளத் தக்கவையே -என்கிற வார்த்தைக்கும் அனுஷ்டானத்துக்கும் மிகவும் பொருந்தும் அன்றோ)

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று ஒன்பதாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

(ஸம்ஸார மண்டலத்தில் எம படர் நலியாமல் இருக்க ஆச்சார்யர் சம்பந்தம் சொல்ல வேண்டும் -அங்கு எம்பெருமானாருடைய ஆச்சார்யருக்கும் தமையனார் என்றும் கேட்டு உகப்பார்கள் அன்றோ)

(அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-

உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்)

————————————————————————————————-

இரு நூறாம் வார்த்தை
அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –இவை இத்தனையும் உண்டான போது-ஆய்த்து ஈடேற லாவது-

(யஸ்ய ராமஸ்ய பஸ்யதி -யார் பெருமாளை சேவிக்கவில்லையோ -யாரை பெருமாள் கடாக்ஷிக்க வில்லையோ -இரண்டும் போல் இங்கும்–இரண்டு ஸமாசமாகக் கொண்டு-நாம் அபாகவதர்களைத் த்யஜிக்க வேண்டும் -அபாகவதர்களும் நம்மை த்யஜிக்க வேண்டும் -இதே போல் மற்ற அனைத்துக்கும் கொள்ள வேண்டும்)

————————————————————————————————-

இரு நூற்றோராம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள –
இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் -ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –

(திருமந்திர சரம ஸ்லோகார்த்தங்களைக் கேட்க 18 தடவை வந்த பின்பும் மறுபடியும் சில உருக்கள் அவற்றைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்வதற்காக மீண்டும் பல தடவை வருவேன் என்றார் என்கிறபடி)

————————————————————————————————

இரு நூற்று இரண்டாம் வார்த்தை
பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் (நம்மாழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும் -5126-1200=3926 வருஷங்கள் இடைவெளி உண்டே -880-1440=600 வர்ஷம் தானே நாதமுனிகள் தொடக்கி மா முனிகள் வரை நம் குருபரம்பரை-)எல்லாரையும் அறிய வேண்டாவோ –என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க -அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது –
இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இறே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார்

(மதுரகவி வம்சத்தார் அனைவரையும் அறிய வேண்டாவோ என்பது கேள்வி)

————————————————————————————————

இரு நூற்று மூன்றாம் வார்த்தை
நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே
ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய –
உம்முடைய சிஷ்யர் அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன –
அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –

————————————————————————————————

இரு நூற்று நாலாம் வார்த்தை
பட்டர் திருவணை யாட (சேது சமுத்திரம் நீராட)எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள –
அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

———————————————-—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -181-192–அரும் பத விவரணத்துடன்–

December 31, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

நூற்று எண்பத் தோராம் வார்த்தை

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தை உடைத்தாய் இருப்பர் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பட்டணங்களில் நின்றும் திருமலையைத் திருவடி தொழ போகா நிற்கச் செய்தே –
வளத்தான் மங்கல முடையான் திண்ணையிலே கிடந்த அளவிலே —

அவன் எங்கேறப் போகிறி கோள் -என்ன –

இவர்களும் திருவேங்கடமுடையானை திருவடி தொழப் போகிறோம் -என்ன –

இவனும் -நானும் போகிறேன் -என்று சொல்லி -இவனும் கூடப் போய்
அவர்களும் இரண்டு மூன்று பயணம் போன அளவிலே –
இவனுடன் உறவற்று தங்களிலே கூடிப் போக புக்க படியால் –

இவனும் என்னை -ஸ்ரீ வைஷ்ணவனாக்கி கொண்டு போக வேணும் -என்று இவர்களை
பலகாலும் வேண்டிக் கொள்ள –

இவர்களும் பேசாதே போய் திருமலை யிலே வந்தவாறே
அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து தண்டன் இட்டு நிற்க –

அவரும் இவர்களை காரியங்கள் கேட்டு
இவர்களுக்கு சில வார்த்தைகளும் அருளிச் செய்து -திருவேம்கடமுடையான் பாடேறப் போகலாகாதோ –
என்று அருளிச் செய்த அளவிலே –

இவனும் என்னை ஸ்ரீ பாதத்திலே காட்டிக் கொடுக்க வேணும்-என்ன –

அவரும் அத்தைக் கேட்டு –
அவன் சொல்லுகிறது ஏது -என்று கேட்டருள –

ஆஸ்ரயிக்க வேணும் -என்கிறான் என்று விண்ணப்பம் செய்ய –

அனந்தாழ்வானும் வாராய் என்று அழைத்து -உனக்கு என் பாடே ஹிதம் கேட்க வேணுமோ –
என்று கேட்டருள –

வேணும் -என்னை ரஷித்து அருள வேணும் -என்ன –

ஆனால் என் பக்கலில் ஹிதம் கேட்கில் உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் -என்று அருளிச் செய்ய –

அவனும் -இவை போக அமையும் -என்று விண்ணப்பம் செய்ய
ஆனால் நீ யான் புகும் தேசம் புகுவாய் என்றும் அருளிச் செய்து ஹிதத்தையும் அருளிச் செய்த வாறே (
ரஹஸ்ய த்ரய மந்த்ரார்த்தங்களை அருளிச் செய்து)

(அனுக்ரஹம் செய்ய நினைப்பவன் சொத்தை பறித்துக் கொள்வான் -சிலைக்கை வேடர் பறித்துக் கொண்டு இவர்களுக்கு யோக்யதை பண்ணி அருளுவார் -அஹோபிலமடம் -பாசுரம்)

நெல்லுக்கு பால் வற்ற வற்ற தலை வணங்குமா போலே –
சரணாகதி நெஞ்சிலே பற்ற  பற்ற
தன் மேல் கிடக்கிற பொன்னடங்க வாங்கி ஆசார்ய தஷிணையாக கொடுத்து –
ஊரிலே வந்தவாறே –

இவர் ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார் என்று பல ஸ்ரீ வைஷ்ணவர்களும் வந்து காண –
அவர்களுக்கு வேண்டுமவை கிஞ்சித்கரிக்கப் புக்கவாறே –

இவருடைய மாதா பிதாக்கள் இவரை அழைத்து –
ரிஷிகளைப் போலே இருக்கிற பிராமணர் வந்து புகுந்து பிரசாதித்து போகா நின்றார்கள் –
செய்கிற தர்மத்தை விலக்கல் ஆகாது –
உம்மை விஸ்வசித்து இருக்கிற எங்களுக்கும் ஏதேனும் தர வல்லீரோ -என்று கேட்க –

அப்படியே செய்கிறேன் -என்று தான் தேடிய த்ரவ்யத்தை ஆள் விழுக்காட்டிலே
இட்டு இவர்களுக்கும் கொடுத்து
தாமும் தம்மோபாதியைப் பற்றி -அருளிச் செயலும் ஓதி -ஸ்வரூப ஞானம்
பிறந்து பிற்றை யாண்டு திருமலை ஏற வர –

அனந்தாழ்வான் -கண்டீரே -அப்போதே இவை உம்மை விட்டு அகலும்
என்று சொன்னேன் -என்று அருளிச் செய்ய –

அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –
என் பக்கலிலே ஹிதம் கேட்டால் நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று –
அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று –
அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே –
ஸ்ரீ பாதத்துக்கு அடிமை என்னும் இடம் கண்டேன் -என்று
விண்ணப்பம் செய்ய –

இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————-

நூற்று எண்பத் திரண்டாம் வார்த்தை

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து –
நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக

நாயந்தே அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –

இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன –

ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் பரம பதம் பெற வேணும் -என்ன –

தந்தோம் -என்று திரு உள்ளமாக –

இத்தை உடையவர் கேட்டருளி -காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள –

இது என் -என்ன –

நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

(அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: |
ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: ||

,நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட(காலத்தால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை(முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள். ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும்)

————————————————————————————————–

நூற்று எண்பத்து மூன்றாம் வார்த்தை

உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு –
ஸ்ரீ விபீஷணப்  பெருமாள் ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக –
சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட –

உடையவர் அருளிச் செய்த படி –
கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்கு பெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –

(நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியாக ஓடிப் புல்லுக்கும் அங்கே பொசியுமா போலே பெருமாள் கடாக்ஷமாகிய வெள்ளம் குரு பரம்பரை த்வாரா நம் வரையில் பாயுமே)

(சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம் )

————————————————————————————————–

நூற்று எண்பத்து நாலாம் வார்த்தை

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று
ஆழ்வானை முதலிகள் கேட்க –

ஓர் இரவெல்லாம் விசாரித்து –
பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் –

ந த்யஜேயம் -என்றார் பெருமாள் –
ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் –

நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை –
இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –

(“மித்ரபாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந”ஏதத்வ்ரதம் மம

‘பாபானாம் வ சுபானாம் வதார்ஹாணாம் பிலவங்கம கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்ச்சித் ந அபராத்யதி‘ -)

 

——————————————————————

நூற்று எண்பத்து ஐஞ்சாம்  வார்த்தை

ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க –
பெரிய நம்பி தண்டன் இட –
உடையவர் அஞ்சலி பண்ணிப் போக –
உடையவரை இது என் என்று கேட்க –
அப்போது –
அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ நமக்கு ஸ்வரூபம் –
என்று அருளிச் செய்தார் –

(ஆளவந்தார் கோஷ்ட்டியுடன் எழுந்தருளுவதாக நினைத்து தெண்டனிட்டேன் -எம்பெருமான் திருத்துழாயான நித்ய ஸூரியைத் தனது திருமுடியில் வைத்துக்கொண்டாலும் இசைந்து இருப்பது பாரதந்தர்ய ஸ்வரூபமாம் போல் இசைந்திருப்பதே ஸ்வரூபம்-வளர்த்ததனால் பயன் பெற்றேன் கைகூப்பி வணங்கினாளே-திருத்துழாயை திருமுடியிலும் வைத்து அனுபவிப்பான் அன்றோ -இஷ்ட விநியோக அர்ஹமாகவே இருக்க வேண்டும்)

—————————————————————————————

நூற்று எண்பத்து ஆறாம் வார்த்தை

அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –
ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது –
அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன –

இது ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய

ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது –
வேறு ஒருவருக்கும் இல்லை –
ஒருவரை தண்டன் இடக் கடவதாய்
அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————-

நூற்று எண்பத்து ஏழாம் வார்த்தை

எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக –

என் பரமாச்சார்யர் வார்த்தையைக் கேட்டு சொன்னேன் இத்தனை –
அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் –
பரம பதத்தில் அளவும் சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று
ஆள வந்தார் அருளிச் செய்வர் —

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –

(யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ-மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் )-அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக-)

———————————————————————————————

நூற்று எண்பத்து ஒன்பதாம் வார்த்தை

திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க –
ஆளவந்தார் அருளிச் செய்தாராக
திருமாலை யாண்டான் நிர்வஹித்தது ஒழிய –
பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து –
இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய –

இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று
திருமாலை யாண்டான் அருளிச் செய்து –
இங்கனே நடவா நிற்கச் செய்தே –

அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை பிறப்பித்து ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழவாலே அருளிச் செய்கிறார் –
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய –

இத்தை எம்பெருமானார் கேட்டருளி –
முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே  நடவா நிற்க –
நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது –
இங்கனே யாம் இத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை -அறியாக் காலத்துள்ளே –
அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார்
என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய –

இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி –
ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று
திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் – 

(நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை-கீழே பார்த்தோம்

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –

அவரும் தண்டன் சமர்ப்பிக்க –

அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –

ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன

அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –

அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –

அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –

(அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;-ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.-அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்))

———————————————————–

நூற்று தொண்ணூறாம் வார்த்தை

ஸ்ரீ எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க –
அம் மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள –

இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக –
நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறேன் -என்ன –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே –
பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க –

என்ன எம்பெருமானாரும் -என்ன திருச்  செல்வமும்  –
எம்பெருமானார் வெள்ளை   சாத்தி  எழுந்து அருளினார் –
இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய –

அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் –

ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும் இடியுமாய் குளிரிலே ஈடுபட்டு –
இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் –
என்று அருளிச் செய்ய –

முதலிகளும் அங்கே எழுந்து அருளி –
வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க –

பிராமணக் குரலாய் இருந்தது -பெரு விடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து –வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து –சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய –

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க –

நீங்கள் ஸ்ரீ எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –

நாங்கள் ஸ்ரீ நல்லான் அடிமைகள் -எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் –
அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன –

ஆகில் அவர் இறே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட –

இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க –

உடையவரும் -நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள –

பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே (பானையோடு ) சமர்ப்பித்து –இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய –

அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் –

மற்றை நாள் விடிந்த வாறே –
அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் –
ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட –

அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் –(எம்பெருமானாருடன் -குருபரம்பரையில் உள்ளது -மேல்கோட்டைக்கு சென்றார்கள்-வன்னி புஷ்கரணி -மேல்கோட்டைக்கு பின்பக்கம் செல்லும் வழி)
அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய்
ஒரு வேடன் அகத்திலே விட்டு வர –

அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-
ராத்ரி உண்ணப் புக்க வாறே –
பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று –
அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து –
இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் –

அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் – உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன –

வேண்டா -என்றார்கள் –

உங்களுக்கு பயப்பட வேண்டா –
நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –

நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க –

நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே  கோயிலிலே வந்து இருந்தோம் –என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய்  இருக்கும் –
அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் –
திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும் இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் –
இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் –
நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் —

இது என் பெண்ணே என்றார் –

உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் –
நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே –

அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகையாலே காண் என்று அருளிச் செய்ய –

அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும்  -என்ன –
அப்போது அருளிச் செய்து அருளினார்–

பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது –
அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே –
அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே –
அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று விண்ணப்பம் செய்தேன் –
அப்போது சாத்தி இருந்த ஸ்ரீ பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார் –
நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் -என்றவாறே –

திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து –
இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –

அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து –உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி –திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு தண்டன் சமர்ப்பித்து –முதலிகளை -ஸ்ரீ பாதம் விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –

முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள –

இவளும் திருப் போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து –திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் –கறுத்து நீண்டு இருந்தது – எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே

அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –

முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாத ரஷையை ஏறி அருளப் பண்ணி திருவடி விளக்கி –அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய –

அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே –
எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் –அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன –

அவளும் விண்ணப்பம் செய்தாள் –

வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன –

அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் –
எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து –
எம்பெருமானார் திருவடிகள் போலே இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே –

நான் காண் -என்ன –

அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே –

கண்ண நீரைத் துடைத்து –
விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது –முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய –

அவர்களும் அமுது செய்து கண் வளர –

(உடையவர் மட்டும் அமுது செய்ய வில்லையே
பெருமாளுக்கு அமுது செய்யாமல் தனது திருவடிகளுக்குத் தானே பிரசாதம் என்பதால்
கொங்கில் பிராட்டி என்பவளே இவள் )

இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து –
மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி –
பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி
தான் பிரசாதப் படாதே கிடக்க –

இது என் -என்று கேட்க –

கோயில் நின்றும் எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம்
என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே –

நான் இதுக்கு என் செய்ய  வேணும்-என்ன –

நீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன –

இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க –

இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி –

விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு –
இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் –
இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய –

எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி –
அந்த க்ராமத்திலே நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே அவற்றை உடையவர் தரித்து அருளினார் –

(அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியாரைப் போலே)

———————————————————————————————

நூற்று தொண் நூற்றோராம் வார்த்தை

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாத்ரம் -(குசல பிரஸ்ன மாத்திரமே போல்)

ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –

ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை –

குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய – ஸ்ருதி பிரமாண பிரதிபன்ன வ்ருத்தய –
அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

ஆச்சார்யனையே -அவரது வாக்கையே -பரம ப்ரமாணமாக வுடைய கருத்தை யுடையவர்களாய் -அதனாலேயே வேதமாகிய பிரமாணத்தில் விஸ்வாசமுடையவர்களாய் -கர்வம் ஆடம்பரம் அற்றவர்களாய் இருப்பவர்கள் சம்சாரக் கடலை எளிதில் தாண்டுகிறார்கள் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று இரண்டாம் வார்த்தை

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் –

ஞானப் பிரதானமும் –
ஞான வர்த்தகத்வமும்- ஆசார்ய  க்ருத்யம் –

புருஷகாரத்வமும் –
கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் –

விரோதி நிவர்தகத்வமும் –
பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

(நூற்று நாற்பத்து மூன்றாம் வார்த்தை-கீழே பார்த்தோம்

அதிகாரி க்ருத்தியம் –
ஆசார்ய க்ருத்தியம் –
புருஷகார க்ருத்தியம் –
உபாய க்ருத்யம் -என்று நாலு –

இதில்
அதிகாரி க்ருத்யம் ஆவது –
ஆசார்ய ஸு ஸ் ருஷ்யமும் –
க்ருதஜஞதையும் –
உபாயத்தில் அத்யாவச்யமும் –

உபாய க்ருத்யம் யாவது –
விரோதி நிவர்த்தகத்வமும் –
பிராப்ய ஸித்தி கரத்வமும் –

புருஷகார க்ருத்யம் ஆவது –
அபராத ஷாம கத்வமும் –
கைங்கர்ய வர்த்த கத்வமும் –

ஆசார்ய க்ருத்யம் ஆவது –
அஜ்ஞாத ஜ்ஞாபனமும் –
ருசி பிரவர்த்த கத்வமும் –)

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -169-180–அரும் பத விவரணத்துடன்–

December 28, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

நூற்று அறுபத்து ஒன்பதாம் வார்த்தை

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு ஹித காமனாய் இருக்குமவன் –

சிஷ்யனாவான் -சர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –(பார்யை சரீரம் நினைவு அனைத்துமே ஒதுக்கி அத்யந்த பாரதந்தர்யம்)

———————————————-

நூற்று எழுபதாம் வார்த்தை

உடையவர் -சந்யசித்து அருளுகிற போது –
சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க –
முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –

இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –

(அஜகத் -விட்டுப் பிரியாத மருமகன் – பாதுகை-திரிதண்டம் மூன்றும் ஆண்டான்)

———————————————–

நூற்று எழுபத் தோராம் வார்த்தை

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் –
எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன –

பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –

வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி –தஸ்யாம் அன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –

(உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன -அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து -அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை)

——————————————————————-

நூற்று எழுபத் திரண்டாம் வார்த்தை

ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் இரண்டுக்கும் தலை –
ஆத்ம சமர்ப்பணமும் –
ஆத்ம அபஹாரமும் –

இவற்றிலும் விஞ்சின ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் –
ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே
க்ருதஜ்ஞதையும் –
க்ருதக்நதையும் –

(கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யா லவ் விருளைத் துரத்தில னேல் உயிரை
உடையவன், நாரணன் என்றறிவா ரில்லை உற்றுணர்ந்தே.–59-)

———————————————————–

நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –

அவரும் தண்டன் சமர்ப்பிக்க –

அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –

ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன

அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –

அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –

அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –

(அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;-ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.-அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்)

(இத்தால் சொல்லிற்று ஆய்த்து –ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி -)இது அடுத்த வார்த்தையுடன் சேர இருப்பது பொருத்தமாய் இருக்கும்

———————————————————————

நூற்று எழுபத்து நாலாம் வார்த்தை –

பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு ஒருகால் திரு மேனி பாங்கு இன்றியிலே கண்
வளர்ந்து அருளும் போது
தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து –
நான் இப்போது திருவடி சாராமல் -ஆலச்யம் -(காலதாமதம் )-பொறுத்து
இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி –
ஏழை ஏதலன் -(கோவிந்த ஸ்வாமி விருத்தாந்தம் இதில் உண்டு)
ஆழி எழச் சங்கு -இவற்றை பெருமாள் திருவடிகளில் விண்ணப்பம் செய்து –
பிரபத்தி பண்ணும் கோள் -என்ன –  

அவர்களும் அப்படியே செய்து
ஜீயருக்கு திரு மேனி பண்டு போலே பாங்காய்த்து –

இதைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை
ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு –
ஜ்ஞான வ்ருத்தருமாய் வயோ வ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செய்தார் –
இது இவருடைய ஸ்வரூபத்துக்கு சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –

பிள்ளையும் –
அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம் –
சகல வேத சாஸ்திரங்களும் போவது பிள்ளை எங்கள் ஆழ்வானுக்கு ஆய்த்து –
அவரைச் சென்று கேளும் கோள் என்ன –

அவர்களும் எங்கள் ஆழ்வானைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யிலே சங்கம் போலே காணும் -என்ன -(இச்சுவை தவிர அச்சுவை பெறினேம் வேண்டேன்)

பிள்ளை இதைக் கேட்டு அருளி -அழகிது
பிள்ளை திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளும்கோள் -என்ன –

அவரும் -துவக்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும் -என்ன –

இதையும் கேட்டருளி -ஆகிறது
அம்மங்கி யம்மாளைக் கேளும்கோள் -என்ன –

அவரும் -பிள்ளை கோஷ்டியில் இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயம்
கேட்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –

மீளவும் பிள்ளை இத்தையும் கேட்டருளி –
அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளும்கோள்  என்ன –-(அம்மங்கி அம்மாள் தகப்பனாராக இருக்கலாம் -)

அவரும் –
பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் –
கஸ்தூரி திரு நாமமும் -பரமபதத்தில் கண்டேன் இல்லையாகில் –
மூலையடியே முறித்துக் கொண்டு மீண்டு வருவேன் என்று அன்றோ பட்டர் அருளிச் செய்தார் –
அப்படியே இவரும் பெருமாள் திருமுக மண்டலத்தையும் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் -என்றார்

பிள்ளை -இவை  கேட்டருளி -ஜீயர் திருமுக மண்டலத்தை பார்த்து சிரித்து –
இவை எல்லாம் உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ -என்ன –

இவை இத்தனையும் அன்று -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்ய –

ஆனாலும்
உம்முடைய அபிப்ராயத்தை சொல்லும் என்ன –

பிள்ளை (பின்னை)தேவரீர் சர்வஜ்ஞர் ஆகையாலே அறிந்து அருளாதது  இல்லை –
ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளி இட்டருள திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன் –
தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி –
தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி -உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் –
சுழற்றிப் பணி மாறுகிற (திருவாலவட்டம் )கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார் –

இதைக் கேட்டருளி பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் –
இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற
சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

(பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-)

—————————————————————————

நூற்று எழுபத்து ஐந்தாம் வார்த்தை

நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே
கையிலே இருந்த சில பொன்னை வாங்கி பட்டர் ஸ்ரீ பாதத்திலே இட்டு தண்டன் இட்டவாறே பட்டர் அத்தை எடுத்து இவரைப் பார்த்து –
நான் கொடுத்த த்ரவ்யத்தில் சாபேஷராய் இருக்கிற இவர் உபதேசித்த ஜ்ஞானம்
நமக்கு உத்தாரக  ஹேதுவாக புகுகிறதோ என்று -உனக்கோடுகிறது -என்று கேட்டருளி –

இவரைப் பார்த்து -சர்ப்பதஷ்டனாய் ம்ருதனான ராஜகுமாரனுடைய சம்ஸ்கார தசையிலே –
மந்திர ஔ ஷத சக்தி உடையனாய்  இருப்பான் ஒருவன் வந்து –
உன் மகனைப் பிழைப்பிக்க இந்த ராஜ்யத்தை தா என்னிலும்
கொடுக்கும் படியான புத்திர வாத்சல்யத்தை உடைய ராஜாவின் பக்கலிலே –
ஒரு பிடி சோறு வேண்டி உண்டு ம்ருதனான ராஜ புத்ரனைப் பிழைப்பிக்கும் பிரக்ருதிமான்கள் எல்லாரும் உண்கிற சோற்றிலே இவனுக்கு இச்சை உண்டாய்த்து என்னா அந்த விஷ ஹரண சக்தியில் ஏதேனும் குறைந்தது இல்லை இறே –

அப்படியே எல்லாரும் ஸ்ப்ருஹை  அர்த்த காமங்களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும் நாங்கள்  உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் –

இத்தால் –
ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் –
இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா –
இவர்களையும் பிரக்ருதி மான்களோ பாதி யாக நினைக்கல் ஆகாது –
எங்கனே என்னில் –

காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள்
புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் –
ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் –
சத்ருசம் சேஷ்டதே  ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே
வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று அருளிச் செய்தார் –

(சிந்தாம் அபரிமேயாம் ச ப்ரலயாந்தாம் உபாஸ்ரிதா–
காம உப போக பரமா ஏதாவதிதி நிஸ்சிதா–৷৷16.11৷৷

ஆஸூர ப்ரக்ருதிகள் -அளவிட ஒண்ணாததாய் பிரளய காலம் வரையில் இருந்து சாதிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியதான கவலையை உடையவர்களாய் காம அனுபவத்தையே பரம புருஷார்த்தமாக நினைப்பவர்களாய் புருஷார்த்தம் என்பது இவ்வளவே -இதற்கு மேல் இல்லை – என்னும் உறுதி பூண்டவர்களாய் உள்ளனர் –

ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷

சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் – அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் – அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –)

————————————————————

நூற்று எழுபத்து ஆறாம் வார்த்தை

நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை –
காஞ்சோரிச்  சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது –

முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று –
பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு –
தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளின வாறே
இத்தை ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ –
நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய –

அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

இத்தால்
ஆசார்ய புத்ர பௌத்ராதிகளும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்
என்று கருத்து –

————————————————

நூற்று எழுபத்து ஏழாம் வார்த்தை

பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே –
திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா –

திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று
பெரிய ஜீயர்-(கூர  நாராயண ஜீயர்-கூர குலோத்தம தாஸர் இவர் வம்சத்தவர்) -அவர்களை அழைத்து –
நான் பெருமாள் திருக்குழல் சிக்கு நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது –
பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக
திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ –
என்று அருளிச் செய்தார் –

(இத்தால் -சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து)

(இதே வார்த்தை நஞ்சீயர் அருளிச் செய்ததாகவும் சொல்வர்)

————————————————–

நூற்று எழுபத்து எட்டாம் வார்த்தை

தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று –(பட்டர் திரு வம்சத்தில் )–
நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய –

அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து –
எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் –
என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –

(ஆச்சார்ய வம்சத்தில் பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தம்முடைய தமையனாரைப் போலவே கௌரவிக்கத் தக்கவர் -என்கிற நம்பிள்ளையுடைய பிரதிபத்தியைக் காட்டுகிறது)

———————————————

நூற்று எழுபத்து ஒன்பதாம் வார்த்தை

நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில்
சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ –

கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் –
ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் –
என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –

(ஆச்சார்யன் ஸம்ஸ்லேஷம் பரமபத்தைக் காட்டிலும் உத்தேஸ்ய தமம் என்றதாயிற்று)

———————————————————–

நூற்று எண்பதாம் வார்த்தை

பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை –
அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து –
அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து –
பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆச்சர்யத்தை காண்கைகாக
எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க –

அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன –

அங்கே விசேஷம் என் என்று கேட்க –

சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று
சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –

(சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||)

யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின்
ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸ்ஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று
சொல்லிப் போக விட –

அவன் தன்னை அங்கு நின்று போகச் சொன்னேன் -என்று
ப்ரஹ்ம ரஷஸ்ஸூ சொல்ல –

யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு –
மஹா மந்தரத்தையும் ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸ்ஸூ முன்னே போய் நிற்க –

ரஷஸ்ஸூம் முடக்கின காலை பின்னையும் நீட்டி –
வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று
அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ
நீ உன் ஜன்மமும் அறியாய் –
என் ஜன்மமும் அறியாய் -என்ன –

ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில்
உன்னுடைய ஜன்மம் ஏது –
என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –

உன்னுடைய ஜன்மம்
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய்
அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி -திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து –
அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் –
அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் –

இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் –
யாகம் பண்ணினேன் -மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம  ரஷஸ்ஸூ ஆனேன் -என்ன –

ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன

உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –
அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவர் -என்று
உடையவரைக் காட்டி –
அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார் ஆகில் போகிறேன் -என்ன –

ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன –

ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன –

இவ்வரசு முறிந்து விழும் -என்று
அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று –

யாதவ பிரகாசனும் -இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் -என்று மிகவும் உபஸ்லோகித்து(கொண்டாடி புகழ்ந்து)
மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –

(கோகர்ணன் சரித்திரம் மூங்கில் கண்ணி ஒவ்வொன்றாக முடிந்து ஏழாம் நாள் போன விருத்தாந்தம் இதே போல் உண்டு)

——————————————————–———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -157-168–அரும் பத விவரணத்துடன்–

December 27, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

நூற்று ஐம்பத்து ஏழாம் வார்த்தை

சத்ருக்களுக்கு கரைய வேண்டா –
ஸ்வாமியுமாய் –
ஸ்ரீய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

(காமாதிகள் -உள் சத்ருக்களுக்கு கரைய வேண்டாமே -ஸ்வாமி கார்யம் அன்றோ உடம்பின் அழுகைப் போக்கி அருளுவார்)

—————————————————–

நூற்று ஐம்பத்து எட்டாம் வார்த்தை

ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் –
1-(அர்த்த பஞ்சக)ஞான ப்ரதன் –
2-அனுஷ்டான ப்ரதன் –
3-உபாய ப்ரதன் -என்று

(ஆத்ம ஞானம் கை புகுந்தால் ஆச்சார்யன் கைப் புகுரும்-ஆச்சார்யன் கை புகுந்தால் மந்த்ரம் கைபுகும் -மந்த்ரம் கைபுகவே மற்றதும் கையதுவே)

ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் –
1-உபாயத்துக்கு முற் பாடர் –
2-உபேயத்துக்கு எல்லை நிலமாய் –
3-இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –

(மத் சித்தா -மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -திருநெடும் தாண்டகம் முப்பதும் -துஷ்யந்த ரமதிய -இருவருக்கும் ஆனந்தம் -)

பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை –
1-புருஷகார பூதை –
2-கைங்கர்ய வர்த்தகை –
3-நித்ய ப்ராப்யை -என்று –

ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் –
1-ருசி ஜநகன் –
2-மோஷ ப்ரதன் –
3-உபாய பூதன் -என்று –

(ஆதாரம் பெருக வைத்த அழகன் -ருசி ஜனக -லாவண்யம் திருக்குறுங்குடியில் -பாதமே சரண மாக்கும் உதார குணம் வானமாமலையில் கொழுந்து விடும் -)

—————————————————-

நூற்று ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை

ஸ்வபாவ அந்யதா ஞானம் –
ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இறே
அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

(சிஷ்யன் ஆச்சார்யனுக்கு தன்னதாக நினைத்து தன் ஆத்மாவை சமர்ப்பிப்பது சேஷத்வ ஸ்வரூப நிரூபிக்க தர்மத்தை மாறாடி நினைக்கும் விபரீத ஞானமாகும் -அதே போல் தமது ஆச்சார்யர்க்கு பரதந்த்ரனான தான் தம்முடைய சிஷ்யனுக்கு ஞானம் பிரதானம் பண்ணுவதாக ஒரு ஆச்சார்யன் நினைப்பதும் விபரீத ஞானமே ஆகும்)

———————————————————

நூற்று அறுபதாம் வார்த்தை

ஈஸ்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங் கன்றை -(விதை–)
சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி –
ததீய அபராதமும் – விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி –
கைங்கர்ய அனுவர்த்தநமாகிற -மடையாலே –
ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி –
அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே –
பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து –
விபரீத அங்கீகாரமாகிற மாடும்
சப்தாதி விஷயமாகிற பேய்க் காற்றும் – புகுராமே –
பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி –
தளிரும் முறியும் மொட்டும் செலுந்துமாய் -(கொழுந்துமாய்-)
அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே பரமை காந்தி

(திருப்பள்ளித் தாங்கன்று =விதை –செலுந்து =கொழுந்து-பக்தி உழவனின் கிருத்யம் நன்றாக விளக்கி அருளுகிறார் -ஷேம கிருஷி பலன்)

——————————————————–

நூற்று அறுபத் தோராம் வார்த்தை –

பரம சேதனனாகிற பசியன் –
ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் –(அவகாத ஸ்வேதம் போல் -அவகாதம் -குத்துவது)
சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி –
வேதாந்தமாகிற உரலிலே –
உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து –
உடம்பாகிற உமி கழித்து -(தேஹாத்மபிமானம் தீர்த்து)
மனனமாகிற அடுக்கலிட்டு –
நிதித்யாசநமாகிற சுளகாலே -(ஸ்ரவணம் -மனனம் -நிதித்யாசிதவ்யம் – வேண்டாதவற்றை தள்ளி வேண்டியவற்றை நன்றாக உன்னி)
விவேகமாகிற கொழி கொழித்து –
அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து –
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து –
ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி –
சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி –
அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து –
சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி –
பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-
பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி –
அனுபவமாகிற அடுப்பிலே –
விஸ்லேஷமாகிற நெருப்பை இட்டு –
இருவினையாகிற விறகை மடுத்து –
த்வரை யாகிற ஊத்தூதி –
ஆற்றாமையாகிற கொதி கொதித்து –
பரமபக்தி யாகிற பொங்கினாலே -(பக்குவ தசையில்)
ஸூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே
ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு –
அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே(12 லோகம் -12 படிகள் -மேல் விரஜா நதி) மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி
அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே –
அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் –

இவை இரண்டும் முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை

———————————————————–

நூற்று அறுபத்திரண்டாம் வார்த்தை

கலங்குகிறதும் –
கலக்குகிறதும் –
கலங்கிக் கிடக்கிறதும் —
தெளிகிறவனும் –
தெளிவிக்கிறவனும் –
தெளிந்து இருக்கிறவனும் –

கலங்குகிறான் -சேதனன் –

கலக்குகிறது -அசித் –

கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –

தெளிகிறான் -சேதனன் –

தெளிவிக்கிறான் -ஆசார்யன் –

தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் -(தெள்ளிய சிங்கம் அன்றோ)

ஆகையால்
கலங்குகிற தன்னையும் –
கலக்குகிற அசித்தையும் –
தெளிவிக்கிற ஆசார்யனையும் –
தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

(தத்வ த்ரய ஞானம் -பகவத் பாகவத ஆச்சார்ய-ஈஸ்வர தத்வத்துக்குள் அடங்கும்)

——————————————————————–

நூற்று அறுபத்து மூன்றாம் வார்த்தை

நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-
தெற்கு ஆழ்வார் பட்டர் – (தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்)
ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி –
உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள –

ஜீயர் –
பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று
விண்ணப்பம் செய்ய –(திருப்பரியட்டமும் இல்லாமல் சேவை பெற்றால் மோக்ஷம் பெறுவோம் என்பர்)

பட்டரும் இத்தை –
திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய அர்ச்சகர் -அருளிச் செய்ய –

அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –

பெருமாளும் புறப்பட்டு அருளி –
சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள –

ஜீயரும் அனுபவித்து –
நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து –
பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் –
நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -(அறிந்த சாரார்த்தங்களை அருளிச் செய்யப் போகிறேன்)
அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய –

நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
என்று விண்ணப்பம் செய்ய –

மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே
இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று
பின்னையும் அருளிச் செய்த வார்த்தை –

ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் என்று இராதே
ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய –

இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க –

உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன –

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால்
இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன –

அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது –
த்ருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் -(த்ருப்த-நிந்தைக்கு உரிய களிப்பு இங்கு)
ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான்(த்ருப்த-துடிப்புடன் இருந்தோம் -அவருக்குக் கிட்டிய பேறு நமக்கும் கிட்டும் என்ற கொண்டாடத்தக்க களிப்பு இங்கு) -என்று அருளிச் செய்ய –

பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி –

அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் –
அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள –
அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க –
ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க –

அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ –
அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-(ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான்-என்பதற்கு அனுஷ்டான த்ருஷ்டாந்தம் இது)

அநந்தரம்
தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ
இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க –

பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் –
இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –(சூழ் விசும்பு பதிக்கப்படு அங்குள்ளார் கொந்தளிக்கக் கண்டு)

———————————————————————

நூற்று அறுபத்து நாலாம் வார்த்தை

பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை –
பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன –
பிரசாதக் கிழியின் அருகே -பணக் கிழியும் இருக்க –
அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க –
இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு –
இடம் பெற்ற அளவிலே இருவரும்(பாப புண்ய கர்மங்கள் இரண்டுமே) உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –

——————————————————————–

நூற்று அறுபத் தஞ்சாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ராகத் த்வேஷம் கொண்டாடி அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட –
பரிபவப் படுவாரும் தாமேயாம் –பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் –
அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

—————————————————————–

நூற்று அறுபத் தாறாம்  வார்த்தை

இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர –
இவர்களைச் சேர விட்டு அருள  என்று -ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய –
ஜகத்தில் ஈஸ்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –

ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் –
அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன –
ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –

அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் –
த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் –
நாம் இவர்களை சேர விடும்படி என
என்று அருளிச் செய்ய —

இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

(மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை -அத்ருஷ்டம் -நரகம்)

————————————————————

நூற்று அறுபத்தேழாம் வார்த்தை

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று –
தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆண்டான் அருளிச் செய்த படி –

ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் –
பார்யா சமனுமாய் –
சரீர சமனுமாய் –
தர்ம சமனுமாய் இருக்கும் –

அதாவது –
சொன்னத்தை செய்கையும் –
நினைத்தத்தை செய்கையும் –
நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

(ஞானம் நினைவாயே இருக்கும் -சரீரம் நினைத்தபடி செய்யும் -பார்யா சொன்னதைச் செய்பவள்)

———————————————————–

நூற்று அறுபத்து எட்டாம் வார்த்தை-

அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு
ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி –

சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன்
பர்த்ரு சமனுமாய் –
சரீரி சமனுமாய் –
தர்மி சமனுமாய் -இருக்கக் கடவன் –

அதாவது
ஏவிக் கொள்ளுகையும் –
எடுத்து இடுவிக்கையும் -அதாவது
அசேதனத்தைக் கொண்டு -நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் –
எடுத்துக் கொள்ளுகையும் –
என்று அருளிச் செய்தார் –

(சிஷ்ய லஷ்மண பூர்த்தி ஆண்டானிடம் -ஆச்சார்ய சிஷ்யன் லக்ஷணங்கள் இரண்டுமே பூர்ணமாக இருப்பவர் ஆழ்வான்)

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -145-156–அரும் பத விவரணத்துடன்–

December 26, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

———

நூற்று நாற்பத்து ஐஞ்சாம்  வார்த்தை

நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால்
சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு
பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

(நூலில் பூக்கள் -பாவனம் -போக்யமாயும் இருக்கும் -ஆச்சார்யர் உபதேசங்களும் பாவநத்தவமும் போக்யமாயும் இருக்குமே -அனுபவ பரம் -ஆனந்தம் -திருத்திப்பணி கொள்ளும் ஆச்சார்யர்_

————————————————————-

நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் —
பெரிய பிள்ளையையும் –(பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் )-
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் –
இவள் சோகார்த்தையாக —

ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன

அநாதி காலம் பாப வாசனைகளாலே –
ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன

கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் –
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளைக்குமாப் போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

(நாட்டில் பிறந்து படாதன பட்டு -சோம்பாது பிரயோஜநமாக ஆக்கப் பண்ணிய பக்தி உள்ளவன்-அரங்கமாளி யானதும் என்னை ஆளவே -)

——————————————————————-

நூற்று நாற்பத்து ஏழாம் வார்த்தை

ஞானப் பிரதன் ஆசார்யன் –
ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஞான விஷயம் -எம்பெருமான் –
ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –
சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாத மாகவும் –
அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

(திரு மகள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -தத் கர்ம யந்ந பந்தாய ஸாவித்யா யா விமுக்தயே ஆயாஸாயா பராம் கர்ம வித்யா அந்யா ஸில்ப நைபுணம்.-ஸ்ரீ விஷ்ணு -1-19-41–ஒவ்வொரு சமயங்களில் ஆச்சார்யன் மிகுதியாக அருளைப் பொழியும் பொழுது அதனால் சிஷ்யனுக்கு ஓர் அஹங்காரம் ஏற்பட இடமுண்டு -அதற்கு இடம் கொடுக்காமல் அந்த ஸூ பிரஸாதத்தையும் அப்ரஸாதம் போல் பாவித்து அடங்கியிருக்க வேண்டும் -சிலசமயம் ஆச்சார்யர் அப்ரஸாதம் போல் நிக்ரஹிக்கவும் கூடுமே -அப்பொழுதும் வெறுப்படையாமல் ஸம்மானம் போல் நினைத்து மகிழ்ந்திருக்க வேண்டும் -என்றவாறு -)

—————————————————–

நூற்று நாற்பத்து எட்டாம் வார்த்தை

ஆசார்ய விஷயத்தில் –
கிருதஜ்ஞதை –
விஸ்வாசம் –
ப்ரேமம் –
விஸ்லேஷ பீருவாகை –
சம்ஸ்லேஷ விஷயம் –
மங்களா சாசனம் –
கதி  சிந்தனை –
அனுபவ இச்சை –
இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

——————————————————————

நூற்று நாற்பத்து ஒன்பதாம் வார்த்தை

அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை –
விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை –
ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

(பொருளையே பிரதானமாகக் கொள்பவன் உறவினரையும் ஆச்சார்யரையும் உபேக்ஷித்து விடுவான் –காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா -காமத்தில் ஈடுபடுபவனுக்கு பயமும் லஜ்ஜையும் இல்லை -பசியால் வருந்தியிருப்பவனுக்கு இன்னத்தை உண்ண வேண்டும் இது கூடாது என்கிற பகுத்தறிவும் –ஸ்நாத்வா புஞ்சீத -குளித்தே உண்ண வேண்டும் என்கிற நியதியும் பார்க்கமாட்டான்-ஞானம் முற்றி பக்திரூபாபன்னமான ஆழ்வார்களுக்கு –தொல்லை மாலைக் கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -கண் துயில் அறியாள் -ஸம் யோகா விப்ரயோக அந்தா -அயோத்தியா 05-16- ஸம்ஸ்லேஷமும் விஸ்லேஷத்திலேயே முடியும் என்பதால் ஸூகமும் இல்லை -என்றவாறு)

——————————————————————

நூற்று ஐம்பதாம் வார்த்தை

திருக்கச்சி நம்பி ஸ்ரீ பாதத்திலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆஸ்ரயித்து –
அடியேனை அங்கீகரித்து அருள வேணும் -என்ன

நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –

பெருமாளும் -நம்மை அவனுக்கு சொல்லும் என்ன –

நம்பியும் பெருமாள் பிரபத்தியை அருளிச் செய்ய –

ஸ்ரீ வைஷ்ணவரும்
க்ருதார்த்தராய்
ஷண காலமும் பிரியாதே சேவிக்க –

இவருடைய பிரகிருதி பந்துக்கள் இது கண்டு பொறுக்க மாட்டாமல்
இவரைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண வேணும் என்ன –

இவரும் ஆகில் அநந்த சரஸ்சில் தீர்த்தமாடி -வாரா நின்றேன் என்று போந்து
நம்பி ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நிற்க –

நீர் போகா விட்டதென்-
அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே -என்ன –

அத்தனையோ
அடியேனுக்கு என்று சோகம் பொறுக்க மாட்டாமல் –
சோகார்த்தராய் பரம பதத்துக்கு எழுந்து அருளினார் –

(ஆச்சார்யன் விஸ்லேஷ ப்ரசங்கத்திலே மூச்சடங்கப்பெற்ற பரமபாகவதர் வ்ருத்தாந்தம் – ப்ராப்ய பிராபகங்கள் நாமே என்றும் அந்த வைஷ்ணவருக்குச் சொல்லும் என்றது-அஹமேவ பரதத்வம் –மாமும் அஹமும் நாமே -ப்ராப்யமும் பிராப்பகமும் நாமே -ஈஸ்வர பரிக்ருஹீத சரம ஸ்லோகம் வராஹ ராம கிருஷ்ண சரம ஸ்லோகார்த்தங்களை பிரஸாதித்து அருள -இவர் உறவினர் நம்பியாகிய வைஸ்யரை ஆஸ்ரயித்ததுக்கு பிராயச்சித்தம் பண்ண முயல -இவரும் அனந்தசரஸ்ஸில் நீராடப்போவதாக அவர்களிடம் சொல்லிவிட்டு நம்பியிடம் இருக்காய் -நம்பியும் நிர்பந்தித்து தேஹ பந்துக்களை விரோதியாமல் அங்கேயே செல்ல நிர்பந்திக்க -அந்த விஸ்லேஷ பிரசங்கத்திலே பரமபதமடைந்தார் -)

—————————————————-

நூற்று ஐம்பத் தோராம் வார்த்தை

அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை –
ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு –
த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி –
உதகம் பண்ணிக் கொடுத்தான் –

(வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று-121-)

————————————————————–

நூற்று ஐம்பத்திரண்டாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு –
அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க –
அருளிச் செய்த வார்த்தை –

போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து –
போக காலம் வந்தவாறே -குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி –
சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு –
அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து –
தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே
இவனுடைய அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு –
போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

—————————————————-

நூற்று ஐம்பத்து மூன்றாம் வார்த்தை

எங்கள் ஆழ்வான் –
ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு –
அழிச்சாட்டத்தை விட்டு -அலமாப்பை விட்டு –(அழிச்சாட்டம் –ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு -அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் -)-
அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று –
அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்

அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க –
லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான் –(பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்)

——————————————————————-

நூற்று ஐம்பத்து நாலாம் வரத்தை(அழகான ப்ராஸம் மோனைகள் நிறைந்த வார்த்தை-கீழேயும் அகார ஆகார வார்த்தைகள் இதே போல்)

நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க –
நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –

எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க –
ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –

(ஏழையர் ஆவி உண்ணும் –
சேட்டை தன் மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே -)

ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க –
சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–(சில்வானர் -அற்பர்கள் -)

ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க
அஞ்ஞரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –

மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க –
மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —(மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் -)

வடுக நம்பி –
நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-
நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் —
செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு வழி இல்லை —

ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால்
எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் –
தாரகமாவும் –
போஷகமாவும் –
போக்யமாயும்
இருப்பவன் ஆகிறான்-

————————————————-

நூற்று ஐம்பத்து ஐந்தாம் வார்த்தை

தான் வைஷ்ணவனாய் அற்றால்
தனக்கு தன் ஆசார்யனில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை –
உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் –

என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே –
என்னை விஷயீகரித்து –
அத் தலைக்கு ஆக்கினவன் அன்றோ -என்று
சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

ஆசார்யனும் –
என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே-
விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே –
என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ –
பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று
உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

(பகவத் விஷய ப்ராவண்யத்தால் ஒருவர் மற்ற ஒருவருடைய தோஷங்களைப் பாராமல் இருப்பதால் இருவரும் துல்யம் என்றவாறு(

———————————————————-

நூற்று ஐம்பத்து ஆறாம் வார்த்தை

ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு
அந்தக் கரணம் விதேயமாகும் –

அந்தக்கரணம் விதேயமான வாறே அந்தர்யாமி பிரசன்னனாம் –

அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே – அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –

இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் –

இவை கழிகிற அளவன்றிக்கே –
அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

(அந்தர் தோஷம் -உள்ளே இருக்கும் அஞ்ஞானம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -ப்ரக்ருதி ருசி வாஸனை போல்வன-)

——————————————————————–——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -133-144–அரும் பத விவரணத்துடன்–

December 26, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நூற்று முப்பத்து மூன்றாம் வார்த்தை

இதர உபாயங்களில் காட்டில் பிரபத்திக்கு வாசி பத்து –
இதர உபாயங்கள் –
1-அதிக்ருதாதிகாரமாகை –
2-விதி பரதந்த்ரனாய் செய்கை –
3-பிராரப்த கர்ம அவசாநத்திலே பலமாகை –
4-அந்திம ஸ்ம்ருதி வேணும் என்கை –
5-அசேதனமாகை –
6-சாத்யமாகை –
7-பலம் கூட துணை வேணும் என்கை –
8-பல ப்ராப்திக்கு ஈஸ்வரனை அபேஷிக்கை –
9-ஸ்வரூப விரோதியாகை –
10-பிரப்யத்துக்கு விசத்ருசமாகை –

இது
1-சர்வாதிகாரமாகை –
2-ஆசார்ய ருசி பரிக்ரஹமாகை –
3-தேக அவசாநத்திலே பலமாகை –
4-அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகை –
5-பரம சேதனமாகை –
6-சித்த உபாயமாகை –
7-சஹாயாந்தர நிரபேஷமாகை –
8-ஒன்றாகை –
9-ஸ்வரூபத்தொடு சேருகை –
10-பிராப்யதுக்கு சத்ருசமாகை –

(கஜேந்த்ரனும் பேற்றை பெற்றான் அன்றோ-பசுர் மனுஷ்ய பஷீரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்  -மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் – இதர உபாயங்கள் சர்வேஸ்வரனை பற்ற வேண்டும் -ஈஸ்வரனோ சஹாயாந்தர உபாயம் –பல கரணனும் பல பிரதனனும் அவனே-ஒன்றாகை -பிராப்தி –ஆத்ம நிலை நின்ற பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபம் -ப்ராப்யமான அவனுக்கு ஸத்ருசம் இதுவே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அன்றோ -)

——————————————————————-

நூற்று முப்பத்து நாலாம் வார்த்தை

கர்மம் கைங்கர்யமாய் இருக்கும்
ஞானம் ஸ்வரூபமாய் இருக்கும் –
பக்தி போக பரமாய் இருக்கும் -ப்ராப்யம் (கைங்கர்யம்)தாரகமாய் இருக்கும்
உக்தி (த்வயம்)கால ஷேபமாய் இருக்கும்-

(கர்மம் கைங்கர்யத்திலே புகும்-ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் – பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –சூரணை-271-

ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்–நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே- ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும்-பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே – போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான ருசியிலே அந்தர்பவிக்கும் –சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே –அத்யந்த பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-)

உபாயத்தில் அனுஷ்டானம் சக்ருத் –இதில் அத்யவசாயம்  -யாவச் சரீர பாதம்-உபேயத்தில் ருசி யாவதாத்மபாவி –

ஓரொன்றில் அநுக்தமாய் -அவஸ்யம் ஞாதவ்யங்களான(சொல்லப்படாததாய் -ஆனால் அவஸ்யம் அறிந்து கொள்ள வேண்டியதாய்) அர்த்த விசேஷங்களுக்கு
விவரணம் ஆகையாலே -ரஹஸ்ய த்ரவ்யமும் ஒருவனுக்கு ஞாதவ்யமாக கடவது –
எத்தை எது விவரிக்கிறது -என்னில்

ச விபக்திகமான அகாரத்தை உகார மகார அஷர த்வயமும் விவரிக்கிறது -(அகாரத்தை உகாரமும் லுப்த சதுர்த்தியை மகாரமும் விவரிக்கும்)
அவ் அஷர த்வயத்தையும் -மந்திர சேஷ பத த்வயமும் விவரிக்கிறது -(உகாரத்தை நமஸ்ஸும் மகாரத்தை நாராயணாயா விவரிக்கும்)
அப் பத த்வ்யதையும் த்வயத்தில் வாக்ய த்வயம் விவரிக்கிறது –
அவ் வாக்ய த்வயதையும் ஸ்லோகத்தில் அர்த்த த்வ்யமும் விவரிக்கிறது –

அதில் அகாரத்தை அஷர த்வயத்தில் பிரதம அஷரம் விவரிக்கிறது –
விபக்தியை மகார அஷரம் விவரிக்கிறது –

இதில் பிரதம அஷரத்தை பிரதம பதம் விவரிக்கிறது –
அனந்தர அஷரத்தை அனந்தர பதம் விவரிக்கிறது –

இதில் பிரதம பதத்தை பிரதம வாக்கியம் விவரிக்கிறது –
அனந்தர பதத்தை அனந்தர வாக்கியம் விவரிக்கிறது –

இதில் பூர்வ வாக்யத்தை பூர்வ அர்த்தம் விவரிக்கிறது –
உத்தர வாக்யத்தை உத்தர வாக்கியம் விவரிக்கிறது –

இதில் சேஷத்வ பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற அகாரத்துக்கு
அநந்ய சேஷத்வ வாசகமான உகாரம் விவரணமாகிற படி என் என்னில் –
அகார வாச்யனுடைய சேஷித்வம் ஆஸ்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ –
அநந்ய சாதாரணமாய் இருக்குமோ -என்று சந்திக்தமானால் –
அதனுடைய அநந்ய சாதாரணத்வ பிரகாசம் ஆகையாலே –உகாரம் அகார விவரணம் ஆகிறது -எங்கனே என்னில் –
உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சித்திப்பது –
அதுக்கு பிரதி சம்பந்தியான சேஷித்வம் ஓரிடத்தில் இளைப்பாறில் -(திருச் சங்கு சக்கரத்தாழ்வார் அவன் திருக்கைகளிலேயே இளைப்பாறி இருக்குமா போல்)
அங்கன் அன்றியிலே அநேகம் சேஷிகள் ஆகில் அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாது –
அந்யராய் இருப்பார் சில சேஷிகள் உண்டாகில்
அந்ய சேஷத்வம் சித்திப்பது ஒழிய அனந்யார்ஹ சேஷத்வம் சித்தியாதே –
ஆகையாலே அகார வாச்யனுடைய சமாப்யதிக தாரித்ர்யத்தை சொல்லிற்றாயிற்று –

சதுர்த்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு
ஆஸ்ரய விசேஷ பிரகாசகமாய்க் கொண்டு விவரணம் ஆகிறது மகாரம் –
நிராஸ்ரயமான ஸ்திதி இல்லையே –
பகவத் வியதிரிக்தரை தன்னோடு பிறரோடு வாசி யற அந்யராகச் சொல்லி –
அவர்களுக்கு அனன்யார்ஹன் இச் சேதனன் என்கிறது உகாரம் –

இதில் கழி யுண்கிற தேவதாந்தராதி மாத்ரத்தாலே அந்ய சப்தத்துக்கு பூர்த்தி இல்லாமையாலே
அவ்வன்ய சப்தத்தில் அந்விதமான தன்னையும் கழித்து
அனன்யார்ஹதையை பூரிக்கிற முகத்தாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் -(அந்நியரில் அந்நிய தமராக தன்னையே நினைக்க வேண்டுமே -அதுவே – -நமஸ் -நான் எனக்கு அல்லன்) அஹமபி ந மம -என்கிறபடி
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யத்தை சொல்லுகிறது நமஸ் சப்தத்திலே இறே – ஆகையாலே உகார விவரணம் ஆகிறது நமஸ் சப்தம் –

சேஷத்வத்துக்கு ஆஸ்ரய விசேஷ பிரகாசகமான மகார வாச்யனுடைய சேஷத்வ பூர்த்தி பிரகாசிப்பது – அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி -என்கிறபடியே
கிஞ்சித்காரத்தாலே யாதல் – ஆகையால் கிஞ்சித்கார பிரகாசகமாய்க் கொண்டு மகார விவரணம் ஆகிறது நாராயண பதம் -(கைங்கர்யம் செய்யாமல் சேஷத்வம் ஸித்திக்காதே -கைங்கர்யம் பண்ணப் பெருவேனாக என்பதே நாராயணாயா)

1-அத்யந்த பாரதந்த்ர்ய பிரயுக்தமாய் வருகிற உபாய விசேஷத்தினுடைய ஸ்வரூபம் என்ன -2-இதில் இழிகைக்கு ஏகாந்தமான துறை என்ன -3-அவ் வுபாய விசேஷமாய் செய்ய வேண்டிய அம்சம் என்ன –இவற்றை பிரகாசிப்பிக்கையாலே
நமஸ் சப்த விவரணம் ஆகிறது த்வயத்தில் பூர்வ வாக்கியம் -(லஷ்மீ விஸிஷ்டமாய் குண விஸிஷ்டமாய் உபாயம் இருக்கும் என்றும் -இழியும் திருவடிகள் என்றும் -ப்ரபத்யே -என்று புத்தியும் பண்ண வேண்டுமே -இவற்றை விவரிக்க வேண்டுமே)

கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்கிற இடத்தைக் காட்டி –
அதுக்கு களையான அம்சத்தையும் கழித்து தருகையாலே
நாராயண சப்தத்துக்கு விவரணம் ஆகிறது உத்தர வாக்கியம் -(ஸ்ரீ மதே நாராயணாய நம -அவர்கள் -மிதுனம் ஆனந்தத்துக்காகவே)

அவ் உபாய ஸ்வீகாரம் சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகம் ஆகையாலே –
தத் பிரகாசகமாய்க் கொண்டு -பூர்வ வாக்யத்துக்கு விவரணம் ஆகிறது பூர்வார்த்தம் –

உத்தர வாக்யத்தில் சொன்ன பிராப்ய ஸித்தி விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக கடவது
என்று விவரிக்கிறது உத்தரார்த்தம் –

சர்வாதிகாரமாயும் -அதிக்ருதாதிகாரமாயும் (அத்யந்த பாரதந்தர்யம் உணர்ந்து அனுஷ்ட்டிக்கவும் வேண்டுமே)-ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
இருந்துள்ள வாக்ய த்வயத்தில்
பூர்வ வாக்கியம் பிராபகமாயும் –
உத்தர வாக்கியம் பிராப்யமாயும்
இருந்ததே யாகிலும் –
பூர்வ வாக்கியம் பத த்ர்யாத்மகமாயும் -அர்த்த த்ர்யாத்மகமாயும் இருக்கும் –

இதில் 1-ஸ்ரீ மத் -என்கிற பிரதேசம் புருஷகாரம்-3- சரணம் பிரபத்யே -என்கிற பதம் அதிகாரி கிருத்தியம் – 2-நடுவு நாராயண சரணவ் -என்கிற பதம் உபாயம் –

உபாயம் புருஷகார சாபேஷமாயும்  அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –
பலத்தில் வந்தால் அந்ய நிரபேஷமாய் இருக்கும் –

உத்தர வாக்யமும் பத த்ரயாத்மகமாய் இருக்கும் –
இதில் 2-ஆய -என்கிற இடம் கைங்கர்யத்தை சொல்லுகிறது –
இதுக்கு கீழ்1- கைங்கர்ய பிரதி சம்பந்தியை சொல்லுகிறது –
மேலில் பதம்-3 கைங்கர்யத்தில் களையை சொல்லுகிறது

———————————————————————————–

நூற்று முப்பத்தஞ்சாம் வார்த்தை

நம் ஆச்சார்யர்கள் திரு மந்தரத்தையும் சரம ஸ்லோகத்தையும் த்வயத்திலே
அனுசந்திக்கும் படி –
இது தான் உபாயம் உபேயம் இரண்டையும் சொல்லுகையாலே த்வயம் என்கிறது –

(விதிப்படி அனுஷ்டிக்கிறோம் என்ற அனுசந்தானம் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணுபவனாக ஆக்கி அருள வேண்டும் -என்பதும் உண்டே-)

திரு மந்த்ரத்தில் உபேய பிரதான்யேன சொல்லுகிற அர்த்தத்தையும் –
சரம ஸ்லோகத்தில் உபாய பிரதான்யேன சொல்லுகிற அர்த்தத்தையும் -(இரண்டிலும் இரண்டுமே இருந்தாலும் பிரதானம் நோக்கம் இதில் தானே)
இதில் பூர்வ வாக்யத்தாலும் உத்தர வாக்யத்தாலும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –

அகாரத்தில் -ஸ்வரூப அநு பந்தித்வத்தால் சொல்லுகிற (ஸ்வரூப நிரூபகமான )லஷ்மீ சம்பந்தத்தையும் –
நாராயண பதத்திலே பிராட்டிக்கும் அந்தர்பாவம் உண்டாகையாலே –
அவ்வழியாலே வருகிற லஷ்மீ சம்பந்தத்தையும் –
த்வயத்தில் உத்தர வாக்யத்தில் -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே சொல்லுகிறது –

அகாரத்தில் சொல்லுகிற சர்வ ரஷகத்வத்தையும் –
இதன் விவரணமான நாராயண சப்ததார்த்தத்தையும்  –
உத்தர வாக்யத்தில் நாராயண பதத்தால் சொல்லுகிறது –

அகாரத்தில் சொல்லுகிற தாதர்த்த்யத்தையும் –
மகாரத்தில் சொல்லுகிற ஜீவ ஸ்வரூபத்தையும் –
அவதாரணத்தாலே சொல்லுகிற அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் –
இதின் விவரணமான நமஸ் ஸில் சொல்லுகிற அத்யந்த பாரதந்த் ர்யத்தையும்
தத் பிரவ்ருதியை பிரார்திக்கிற சதுர்த்தி யர்த்தத்தையும் –
உத்தர வாக்யத்தில் சதுர்தியாலே சொல்லுகிறது –

(வ்யக்த சதுர்த்தி பிரார்த்தனாயாம் சதுர்த்தி -கைங்கர்யம் செய்பவனாக வேண்டும் என்கிற பிரார்த்தனை உண்டே)

திரு மந்த்ரத்தில் நமஸ் சப்தார்தமான அஹங்கார மமகார நிவ்ருதியை
உத்தர வாக்யத்தில் நமஸ் ஸாலே சொல்லுகிறது –

(மூன்று அஹங்கார மமகாரங்கள்-ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் மூன்றும் இருக்குமே – -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயம் இல்லாதை திருமந்திரம் காட்டும் -கைங்கர்யத்தில் களை அறுப்பதை த்வயத்தில் உத்தர வாக்கியம் காட்டும்)

ஆக திரு மந்த்ரம் த்வயத்தில் உத்தர வாக்யத்திலே அந்வயித்தது –

இனி சரம ஸ்லோகம் பூர்வ வாக்யத்தில் அந் வயிக்கும் படி சொல்லுகிறது –
மாம் -என்கிற பதத்தில் ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும் –அஹம் என்கிற  ஸ்வரூப அநு பந்தித்வத்தாலே சொல்லுகிற லஷ்மீ சம்பந்தத்தையும்
த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மத் சப்தத்தாலே சொல்லுகிறது-

மாம் என்கிற பதத்தில் சௌலப்யத்தையும்
அஹம் என்கிற பதத்தில் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும்
இதில் நாராயண -பதத்தாலே சொல்லுகிறது –

(ஆஸ்ரயண சவுகர்ய ஆபாத குணங்களும் ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்களும் நாராயண பதம் காட்டும் -ஸ்வாமித்வம் இரண்டிலும் இருக்குமே -கைவிடாமைக்கும் பிராப்திக்கும் உறுப்பு -)

மாம் என்கிற பதத்தில் சொல்லுகிற -சேநா தூளியும் -சிறுச் சதங்கையும் -தாங்கின உழவு  கோலும் பிடித்த சிறுவாய்க் கயிறும் -நீட்டின திருவடிகளுமாய் நிற்கிற விக்ரஹத்தை
த்வயத்தில் சரணவ் என்கிற பதத்தால் சொல்லுகிறது –

(கையும் உழவு கோலும்–பிடித்த சிறு வாய் கயிறும்–சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும் தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்-அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும் நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் – திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு  சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –)

(கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் – கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –நாயனார்)

ஏக சப்தத்தால் சொல்லுகிற அவதாரண அர்த்தத்தையும் –
சரண -சப்த அர்தத்தையும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிற விரோதி நிவ்ருதியையும் –
த்வயத்தில் சரண சப்தத்தாலே சொல்லுகிறது –

(நாம் பண்ண வேண்டியதை -சப்தமாகவே -வியக்தமாக -அருளிச் செய்து -அவன் கிருத்யத்தை ஆர்த்தமாக அநேக இடங்களிலே அருளிச் செய்வர்கள் –அங்கு அப்பறை கொண்டவாற்றை –நாச்சியார் தெளிவாக அருளிச் செய்துள்ளார்)

வ்ரஜ என்கிற இடத்தில் அர்த்தத்தையும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற அர்த்தத்தையும் –
த்வா -என்கிற இடத்தில் சொல்லுகிற அதிகாரி யையும் –
பிரபத்யே -என்கிற கிரியா பதத்தாலே சொல்லுகிறது-

தர்ம த்யாகம் அங்கே உண்டோ என்னில் –
உபாய ஸ்வீகாரம் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக அல்லது நில்லாமையாலே –
ஸ்வீகாரம் சொன்ன இடத்தில் த்யாகம் சொல்லிற்று ஆயிற்று

ஆக சரம ஸ்லோகம் த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் அந் வயித்தது –

ஆக திரு மந்த்ரத்திலும் -சரம ஸ்லோகத்திலும் சொல்லுகிற அர்த்தம் த்வயத்தில் சேர அந்வயிக்கும் படி சொல்லிற்று –

(முமுஷுப்படி மட்டுமே திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் -விவரண கிரமப்படியும் மற்றவற்றில் திருமந்திரம் சரமஸ்லோகம் த்வயம் -ஸ்வரூப விதி அனுஷ்டான கிரமப்படி அருளிச் செய்துள்ளார்)

சரம ஸ்லோகத்தாலே பூர்வ கண்டத்தை விசதீ கரிக்கிறது –
திரு மந்த்ரத்தாலே உத்தர கண்டத்தை விசதீ கரிக்கிறது –

மாம் -அஹம் -என்கிற பதங்களில் லஷ்மீ சம்பந்தத்தை –
பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மத் பதத்தாலே சொல்லுகிறது –

மாம் -அஹம் -என்கிற பதங்களில் -சௌசீல்ய சர்வஞ்த்வாதிகளை
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் நாராயண பதத்தாலே சொல்லுகிறது –

மாம் -என்கிற பதத்தில் விக்ரஹத்தையும் –
ஏகம் -என்கிற பதத்தில் அர்த்தத வந்த அவதாரண த்தையும் -(பற்றும் பற்றும் உபாயமில்லை -ஸ்வ கதம் இல்லை -என்பதையே ஏக பதம் காட்டும்)
சரணவ் என்கிற பதங்களின் அர்த்தைத்தையும் –
பிரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது –

(உபாயாந்தரங்கள் தேவதாந்தரங்கள் நாம் பற்றும் பற்று மூன்றுமே உபாயம் அல்ல -நீயே உபாயம் என்றும் உணர்வது இசைவித்து என்னையே உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மான் என்பதையே பிரபத்யே காட்டும்)

சரம ஸ்லோகத்தில் சரண சப்தத்தில் இங்குத்தை சரண சப்தத்தாலே சொல்லுகிறது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -வ்ரஜ -த்வா
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – மாசுச -என்கிற பதங்களின் அர்த்தங்களை
பிரபத்யே என்கிற பதத்தாலே சொல்லுகிறது –

(பிரபதனம் பண்ணின உடனே சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி யம் மா ஸூச என்றும் அருளிச் செய்வான் தன்னடையே என்றும் தேறும்)

அகாரத்தில் ஸ்வரூப அநு பந்தியான லஷ்மீ சம்பந்தத்தையும் –
நாராயண பதத்தில் நார சப்தத்தில் லஷ்மீ சம்பந்தத்தையும் –
உத்தர கண்டத்திலே ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே சொல்லுகிறது –

அகாரத்தின் அர்த்தத்தையும் –
நாராயண சப்த அர்த்தத்தையும் —
இங்குத்தை நாராயண சப்தத்தால் சொல்லுகிறது –

அகாரத்தில் சதுர்தியையும் –
பிரணவத்தில் மகாரத்தையும் –
உத்தர கண்டத்தில் சதுர்த்தியாலே சொல்லுகிறது

பிரணவத்தில் மத்யம அஷரத்தையும் -நமஸில் அர்த்தத்தையும் –
உத்தர கண்டத்திலே நமஸ்ஸாலே சொல்லுகிறது –

————————————————————————————

நூற்று முப்பத்தாறாம் வார்த்தை

மத்ஸ்யத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்கிறாப் போலே
ஸ்ரீ மான் உடைய வடிவு இத்தனையும் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியார் -(ஸ்ரீ நாத முனிகள் )-அருளிச் செய்வர் –

ஆசார்யன் பிரமாதா என்றும் –
அர்ச்சாவதாரம் பிரமேயம் என்றும் –
த்வயம் பிரமாணம் என்றும்
அருளிச் செய்வர் -உய்யக் கொண்டார் –

(அநந்த வேதா -த்வயம் அனைத்தையுமே காட்டுமே –ப்ரஹ்மம் -ஆச்சார்யர் உலாவும் பெருமாள் அன்றோ -)

சம்சார விஷ தஷ்டனுக்கு த்வயம் ரசாயநமாய் இருக்கும் என்று
அருளிச் செய்வர் மணக்கால் நம்பி

அதனனுக்கு -குருடனுக்கு -த்வயம் மஹா நிதி போலே என்று
அருளிச் செய்வர் பெரிய முதலியார் -(ஆளவந்தார் -கீழே நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்த்தி பார்த்தோம்)

ஷூ தார்த்தனுக்கு -(பசியால் வருந்தினவனுக்கு) -அம்ருத பானம் போலே என்று
அருளிச் செய்வர் திருமாலை யாண்டான் –

ஸ்த நந்தய பிரஜைக்கு ஸ்தன்யம் போலே என்று
அருளிச் செய்வர் திருக் கோட்டியூர் நம்பி –

பதி விரதைக்கு மங்கள ஸூ த்ரம் போலே என்று
அருளிச் செய்வர் பெரிய நம்பி –

ராஜ குலத்துக்கு (அரசமர்ந்தான் அடி சூடிய அரசர்கள் பிரபன்னர்கள்)முடியும் மாலையும் போலே இப் பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ பாஷ்ய காரர்

சம்சாரத்தில் இவ் உபாய விசேஷம் -விலங்கை விட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே-என்று அருளிச் செய்வர் எம்பார்

ராஜ குமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே -பிரபன்னனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு
வற்றும் என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை

எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யம் பெறுவாரைப் போலே -என்று பணிப்பர் திருக்
குருகை பிரான் பிள்ளான் –

குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாதநாந்தரத்தோடு ஒக்கும் என்று அருளிச்
செய்வர் முதலி யாண்டான் -(ஸ்வரூப விருத்தம் அன்றோ)

அந்தன் -குருடன் -கையிலே சிந்தாமணி வந்தால் போலே என்று அருளிச் செய்வர்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் –

(ந வேதாந்தாத் சாஸ்திரம் –ந த்வயம் ஷேம கரம் -தேசிகன்)

—————————————————

நூற்று முப்பத்து ஏழாம் வார்த்தை –

பிரதம பதத்திலே பாணிக் ரஹணம் –
மத்யம பதத்தாலே உடன் மண நீர்
த்ருதீய பதத்திலே சதுர்த்தி படுக்கையுமாய் இருக்கும் –

(பாணிக் க்ரஹணமும் உடன் மண நீரும் சதுர்த்தி கலவியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —வார்த்தா மாலா -36-மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும் நமஸ் பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் –சம்பந்தம் உணர்த்தும் பிரணவம் -நமஸ் மூன்று விரோதிகள் தொலைய வேண்டும் –)

—————————————————-

நூற்று முப்பத்து எட்டாம் வார்த்தை

ஷேத்ரஜ்ஞ க்ருத்யமான வரம்பை இட்டுக் கொடுக்கிறது பிரதம பதம் –
இடைஞ்சல் வராமல் களை பறித்துக் கொடுக்கிறது மத்யம பதம் –
விளைந்து ஸ்வாமி போகம் கொடுக்கிறது த்ருதீய பதம் –

(பிரணவம் காட்டும் அநந்யார்ஹ சேஷத்வம் கைங்கர்யமாகிற பயிர் விளைய சேதனனுக்கு வரப்பிடுவது போல் இருக்கும் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் -அந்நிய உபாயத்வம் -அந்நிய போக்யத்வமாகிய ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி த்ரயங்களாகிற களைகளைப் பறித்துக் கொடுக்கும் -கைங்கர்யமாகிற பயிர் விளைந்து ஸ்வாமியாய் எம்பெருமானுக்கு போகம் அளிப்பதைக்காட்டும் நாராயணா த்ருதீய பதம்-பக்தி உழவனின் கிருஷீ பலன்)

————————————————————

நூற்று முப்பத்து ஒன்பதாம் வார்த்தை –

திருமந்த்ரத்துக்கு-
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –
என்னில் –

தாத்பர்யார்த்தம் -சகல வேத சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராப்ய ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம்-ஆத்ம ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -சம்பந்த அநு சந்தானம் –

(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி – 2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி – 3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி – 4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி – 5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி – 6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி – 7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி 8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி – 9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி-திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.-நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள்)

த்வயத்துக்கு –
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –
என்னில் –

தாத்பர்யார்த்தம் ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் பிராப்ய பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் மிதுன கைங்கர்ய பிரதான்யம் –
அநு சந்தானம்-ஸ்வ தோஷ அநு சந்தானம்-

(புகல் ஒன்றுமில்லா அடியேன் ஆழ்வார் வியக்தமாக அருளிச் செய்துள்ளார்)

சரம ஸ்லோகத்துக்கு –
தாத்பர்யம் ஏது –
வாக்யார்த்தம் ஏது –
பிரதான அர்த்தம் ஏது –
அநு சந்தானம் ஏது –

என்னில் –
தாத்பர்யார்த்தம் சரண்ய  ருசி பரிக்ருஹீதம் –
வாக்யார்த்தம் -பிராபக ஸ்வரூப நிரூபணம் –
பிரதான அர்த்தம் -ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம் –
அநு சந்தானம் -சௌலப்யம்

————————————————————————

நூற்று நாற்பதாம் வார்த்தை –

ஆஸ்ரயணம் சொல்லி —
ஆஸ்ரயிதாவை சொல்லி –
ஆஸ்ரயணீயன் வேஷம் சொல்லி –
அப்ருதக் ஸ்திதி த்யோதன நித்ய யோகம் சொல்லி –
தஸ்மின் நேவ பராதிசயம் சொல்லி –
பிரபா ப்ரபாவ தோரிவ சேஷ சேஷித்வம் சொல்லி -(அநந்யா ராகவேணாம் பாஸ்கர பிரபா ஏவ)
சதா பூர்த்தி சொல்லி -(ஸ்ரீயப்பதியாய்-அத ஏவ- அவாப்த சமஸ்த காமனாய்)
ஆக லஷ்மீ  விசிஷ்டன் பிரபத்தவ்யன் என்னும் இடம் சொல்லி –
சித் அசித் ஸ்வரூபம் சொல்லி –
உபயமும் பரமனுக்கு சரீரத்வார சேஷம் என்று சொல்லி –
தேஹவத் தேஹி நாநாத்வம் சொல்லி -(உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் உளன்)
தேஹிநோ ஞானதைக ஆகாரதயா சமர் என்று சொல்லி –

ஆகையாலே
ஸ்வபாப ஐக்யம் சொல்லி –
ஸ்வரூப ஐக்யத்தை நிஷேதித்து –
பஞ்ச அவஸ்தையிலும் சந்நிக்ருஷ்ட அவஸ்த அவஸ்திதத்தில் பிரபத்தி என்று சொல்லி -(அர்ச்சாவதாரத்தில் பிரபத்தி ஆழ்வார்கள் –)
ஆத்மன பரஸ்ய ச பிராப்தி சொல்லி –
குண குணி பேதம் சொல்லி -(நாரங்கள் அயனம் -குணங்கள் குணி)
கல்யாண குணை கதாநத்வம் சொல்லி –
ஹேய குண நிஷேதம் சொல்லி -(அனைத்துக்கும் ஆஸ்ரயம் அவனே -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்)
ஷட் விம்ஸ கத்வம் சொல்லி -(எண்ணிலும் வரும்)
புருஷகார நிரபேஷ மாம்படியான வாத்சல்யாதி குணங்கள் சொல்லி -(என்னடியார் அது செய்யார் -இத்யாதி)
நித்யத்வம் சொல்லி –
தத் அப்ராக்ருத த்ரவ்ய ஆஸ்ரயம் என்று சொல்லி –
பர பூர்த்தி சொல்லி –
சந்நிதி சொல்லி -(ஆவிர் பூதம்-அர்ச்சாவதார)
வடிவு அழகு சொல்லி –
சர்வ சாமாநாதி கரண்யம் (சமாஸ்ரயணீயத்வம் )சொல்லி -(நாரங்களுக்கு அயனம் -ஆஸ்ரயம் -உபாயம்-அச்சித்துக்கு பிரயோஜனம் இல்லையே -அர்த்த சங்கோசம் இதுக்குக்nகொள்ள வேணும் -ப்ராப்யம் -ஆதாரம் -)
சௌலப்யம் சொல்லி –
பிரபத்தா ஆர் என்று சொல்லி –
பிரபதவ்யன் ஆர் என்று சொல்லி –
அநந்ய (பர) உபாயத்வம் சொல்லி –
அஸ்மை என்று சொல்லி –அஸ்மாத் என்று சொல்லி -அஸ்ய-என்று சொல்லி -அஸ்மின் -என்று சொல்லி –(அவனுக்காக -அவனால் சத்தை-அவனுடைய உடைமை – அப்ருதக் ஸித்த விசேஷணம் நான்கும் சொன்னவாறு )
பிராப்யம் சொல்லி -பிராபகம் சொல்லி –
கத்யர்த்த த்வாரா புத்யர்த்தம் சொல்லி –
மானஸ பிரபத்தியினுடைய முக்யதை சொல்லி -(திருட அத்யாவஸயம் முக்கியம்)
ஸ ப்ரகார சரணாகதி உபாயம் என்று சொல்லி -(நெல்குத்த வேர்வை வருமா போல் சம்பாவித ஸ்வாபாவங்கள் -அனுகூல்ய சங்கல்பாதிகள் -தன்னடையே ஏற்படும்)
ஸ ப்ரகார லஷ்மீ சஹ சரமான வஸ்துவினுடைய உபாயத்வம் சொல்லி –

பர விசேஷணங்கள் அடைய ப்ராப்யம் என்று சொல்லி –
விசேஷ்ய பிரதிபத்தியிலும் விசேஷண பிரதிபத்தி பரஸ்ய ப்ரீதி ஜனகம் என்று சொல்லி -(ஸ்வரூபத்தை விட திவ்ய மங்கள விக்ரஹமும் குணங்களும் பிரதானம்) ஸ ப்ரகார நாராயணனுக்கு என்று சொல்லி –

ஏவம் விதனுக்கே (லஷ்மீ விக்ரஹ குண விஸிஷ்ட வஸ்து)அஹம் அர்த்த பூதனான நான் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித சர்வ வித கைங்கர்யத்தையும் பண்ணுகிறேன் என்று –ப்ரத்யகாத்மன பலம் சொல்லி –

பிரபத்தியிலே உபாய புத்தி -உபசார சித்தை என்று சொல்லி –பரனே பரம உபாயம் என்று சொல்லி –பிரபத்தி உபாயம் என்று சொல்லி –
இவை உபாயமாம் போது பர ஸ அபேஷம் என்று சொல்லி –
நிரபேஷ உபாயம் அவனே என்று சொல்லி –அத ஏவ உபாய அநவத்யதை சொல்லி -(இதனாலே தான் குற்றமல்லாத உபாயம் அவனே)
ஒன்றுக்கே உபாய உபேய ஆகாரத் த்வயம் கடிக்கும் என்று சொல்லி –
தயா ஷாந்த்யாதி குணங்களாலே சந்நிஹதனுக்கு உபாயத்வம் சொல்லி –
தேச விசேஷ நிலயனுக்கு (ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு)உபேயத்வம் சொல்லி –

உபய விபூதியும் அவனதாய் இருக்க –
ஒரு விபூதியில் நின்றும் ஒரு விபூதிக்கு போகை மோஷம் என்பான் என் என்னில் –

அது மஹாநஸ ஸ்தான(சமையல் அறையிலே) -போக ஸ்தான (பள்ளி அறை)ஸ்தித பர்த்ரு பார்யா சம்யோக ந்யாயம் என்று -சொல்லி –

அவனே பிராபகன் ஆனால்
பாப விதூநந த்வாரா தான்(கர்மம் ஜென்மம் சரீரம் போய்) பிரபத்தி என் என்னில் –
மஹாநசத்திலே  (சமையல் அறையிலே) புஜிக்கும் போது  பழைய வேஷமே போக்யம் –
போக ஸ்தானத்திலே -(பள்ளி அறை) –புஜிக்கும் போது உடுத்த புடைவையை அவிழ்த்து புஜிக்க வேண்டும் என்று சொல்லி –

ரத்ன ஸ்வீகாரம் பண்ணும் போது ருஷிகையில் நின்றும் வாங்கி
மஞ்சூஷா காந்தரத்திலே (தோஷமில்லா ரத்னம் பெற காய்ச்சும் பாத்திரத்தில் வைத்து அழுக்கு நீக்கி -பேழையில் இடுமா போல்)இட வேண்டும் என்று சொல்லி –
த்ரிவித பிரபன்னனுக்கும் (அஞ்ஞானம் ஞானாதிகர் பக்தி பரவஸ்யர்)தேக பாத சமநந்தரம் பரம புருஷார்த்த லஷண மோஷம் சொல்லி –மற்றை இருவருக்கும் (உபாயாந்தரர்)விளம்ப பலம் சொல்லி –
ராஜா அக்ருத ஆபரணங்கள் தன்னதான போது எடுத்து பூணும் அத்தனை என்று சொல்லி –இச்சா பிரவர்தகம் சொல்லி –அல்லாத போது ஈஸ்வரத்வம் தான் இல்லை என்னும் இடம் சொல்லி -(பட்டத்துக்குரிய யானையும் அரசனும் செய்யுமவற்றை ஆராய முடியாதே-நிரங்குச ஸ்வ தந்த்ரன் -அவன் அத்யந்த பரதந்த்ரர்கள் நாம் -)
இத் தலையிலே கைமுதல் அறுகை அவன் கடாஷத்துக்கு அடி என்று சொல்லி –

இத் தலையிலே விஸ்வாசம் பிறக்கை யாவது –
அருள (ஒரே ஹேது)அவனுடைய கிருபையே —
கிருபை பிறப்பது துதிக்கை அழுந்தினால் என்று சொல்லி –
கர்ம அனுபவம் அவனுடைய சிஷை என்று சொல்லி –
சிஷிதன் ஆனவாறே பித்ரு பிரசாதம் பிறக்குமா போலே -தாது பிரசாதாத்-என்கிற பேறு சொல்லித் தலைக் கட்டுகிறது பிரபத்தி வாக்யத்தால் –

—————————————————————————–

நூற்று நாற்பத் தோராம் வார்த்தை –

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்தை விசதமாக அனுசந்திக்கும் படி த்வயம் –
இது த்வயம் -என்று திரு நாமமாக வேண்டிற்று –உபாய உபேய வாசகமான வாக்யத் த்வயத்தை  உடைத் தாகையாலே –

இதில் பூர்வ வாக்கியம் உபாய பரமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் உபேய பரமாய் இருக்கும் –

பூர்வ வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் –
உத்தர வாக்கியம் மூன்று பதமாய் இருக்கும் –

ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்றும் –
சரணம் -என்றும் –
பிரபத்யே -என்றும் -பூர்வ வாக்கியம்

(பிரித்தால் அஷ்ட எட்டாகும்-தவ சொல்லை அத்யாஹாரம் -அகலகில்லேன் பாசுரம் கூப்பிட்டு உன்னடிக்கீழ்)

ஸ்ரீ மதே -என்றும் –
நாராயணாய -என்றும் –
நம என்றும் -உத்தர வாக்கியம்

இதில் ஸ்ரீ என்கிற திரு நாமம் –
ஸ்ரிஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே ஆதல் –
ஸ்ரயதே ஸ்ரீ யதே இதி ஸ்ரீ –என்கிற வ்யுத்புத்தி த்வயத்தாலே –
சேவிக்கும் -சேவிக்கப்படும் -என்கிறது இவ் வர்த்தம் சாபேஷம் ஆகையாலே
யாரை (சேவிக்கும்)யாராலே (சேவிக்கப்படும்)என்ன வேண்டி வரும் –

அவை (சேஷ சேஷித்வம்)தான் அவளுக்கு ஸ்வரூப அநு ரூபமாய் இறே இருப்பது –
எங்கனே என்னில் –
சர்வ பூதானாம் ஈஸ்வரி ஆகையாலே-த்ரிவித சேதனராலும்(பத்த முக்த நித்யர்கள்) சேவிக்கப் படும் –
விஷ்ணு பத்நி ஆகையாலே தான் அவனை சேவிக்கும் என்கிறது –
ஆகையாலே தன்னை ஒழிந்த சகல ஆத்மாக்கள் உடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள்(சத்தா-இருக்கை – ஸ்திதி -இருக்கையில் தொடர்வது -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள்)தன்னுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் –
தன்னுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் அவனுடைய கடாஷ அதீநமாய் இருக்கும் –
ஆகையாலே தன்னை ஒழிந்தாருக்கு தான் ஸ்வாமினி யாய் –
அவனுக்கு பரதந்த்ர்யையாய் இருக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லுகிறது –

இது தான் வ்யுத்பத்தி சித்தமே அன்று -பிரமாண சித்தமும் –
இப்படி வ்யத்பத்தி த்வயத்தாலும் -உபய சம்பந்தமும் சொல்கிறது –
இது தான் புருஷகாரத்திலே நோக்காய் இருக்கும் –

புருஷகாரம் செய்கைக்கு இத் தலையில் பந்தமும் –
அது வாய்க்கைக்கு அத் தலையில் சம்பந்தமும் சொல்லுகையாலே –
வரிக்கும் அவனை –(நம்மிடம் பந்தம் அவனிடம் சம்பந்தம் -நல்ல தொடர்பு)
இவனைக் கைக் கொண்டு அருளும் -என்னும் பிராட்டி –

கைக் கொண்டு அருளுகையாவது என் -என்னுமே அவன் –
ஆபி முக்யம் பண்ணினான் என்னுமே இவள் –

ஆகில் அபராதம் செய்ய பார்த்த படி என் -என்னுமே அவன் –
அது என் இனி -என்னுமே இவள் –

அது என் என்றதுக்கு பொருள் என் -என்னுமே அவன் –
பொருளைக் கேளீர் –
திருவடி திரு வனந்தாழ்வானோபாதி உம்மை அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்து வைத்து –
உம்முடைய பக்கல் விமுகனாய் –
சப்தாதி விஷய பிரவணனாய் –
அதன் காரணமான ஜநநாதி களிலே புக்கு –
அநாதி காலம் கிலேசப்பட்டு போரா நிற்க –
உம்முடைய பாக்யத்தாலே (உம்முடைய பேறாக கைக் கொள்ள வேணும் என்கிறாள்)இற்றை யளவும் சித்தியாத ஆபி முக்யம் இன்று ஒருபடி சித்தித்தால் –
அபராதத்தை உம்முடைய கிருபைக்கு விஷயமாக்கி
உம்முடைய சீலாதி குணங்களையே கிட்டுக்கைக்கு உறுப்பாகும் யோக்யதை சொல்லுகிறது 

எம்பெருமான் பக்கல் யோக்யதை (ஒழிக்க ஒழியாத நவவித ஸம்பந்தத்தால்)இறே உபாய வரணம் பண்ணுகிறது –
இப்படி வரணீய ஸ்வரூபத்தில் புருஷகார பாவத்துக்கு அனுஷ்டானம் உண்டோ என்னில் –
ஸ்ருணோதீதி ஸ்ரீ -ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்னும் இவ் விரண்டாலும் –
ஸ்வரூபத்தில் அனுஷ்டானம் உண்டு என்கிறது –

ஸ்ருணோதி -என்கிறது கேட்கும் என்றபடி –கேட்கிறது என் என்னில் –
ஆஸ்ரயிக்கிற இழிகிற அதிகாரி தன்னுடைய அபராதங்களையும் –
எம்பெருமானுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து –
அவனைக் கிட்டுகை என்பது ஓன்று இல்லை யாகாதே -என்று இவன் பிற்காலித்தில் –

நீ பிற்காலிக்கிறது என் –
உனக்கு ஆபிமுக்யம் அன்றோ வேண்டுவது –
அபராதங்களைப் பொறுப்பிக்கைக்கு நான் இருந்தேன் –
நீ அஞ்சாதே -என்று சொல்லுகை -(இது பிராட்டி நமக்கு அருளிச் செய்யும் மா ஸூச)

ஸ்ரா வயதி -என்கிறது கேட்பிக்கும் என்றபடி –
அதாவது
இவனுடைய அபராதங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக் கதவு அடைத்தால் –
இவனுக்கு வேறொரு புகல்  உண்டோ –
உமக்கும் இவனுக்கும் உண்டான சம்பந்த சம்பந்த விசேஷத்தைப் பார்த்தால் –
உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -என்கிறபடி
குடநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ –ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -என்று –

————————————————————

நூற்று நாற்பத்து இரண்டாம் வார்த்தை –

விஷயம் -ஆத்மா
விஷயீ -ஈஸ்வரன்
விஷய ஸூத்தி கர்த்தா -ஆசார்யன்
விஷய அனுபவ வர்த்தகை -பிராட்டி
விஷய அனுபவ சஹாய பூதர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ–ஆத்மாவை போக்கியப்பொருளாக அனுபவிப்பதால் ஆத்மாதானே விஷயம் -போக்தா அனுபவிக்கும் விஷயீ ஈஸ்வரன் -குற்றங்களைப் போக்கி-அல்வழக்குகளைப் போக்கி அருளி அவனுக்கு உகந்ததாக ஆக்குபவர்களே ஆச்சார்யர்கள் -ஒன்றைப் பத்தாக்கி வளர்ப்பவள் பிராட்டி-அனுபவத்துக்கு ஸஹாய பூதர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள்)

—————————————————–

நூற்று நாற்பத்து மூன்றாம் வார்த்தை

1-அதிகாரி க்ருத்தியம் –
2-ஆசார்ய க்ருத்தியம் –
3-புருஷகார க்ருத்தியம் –
4-உபாய க்ருத்யம் -என்று நாலு –

இதில்
அதிகாரி க்ருத்யம் ஆவது –
1-ஆசார்ய ஸுஸ்ருஷ்யமும் –
2-க்ருதஜ்ஞதையும் –
3-உபாயத்தில் அத்யாவச்யமும் –

உபாய க்ருத்யம் யாவது –
1-விரோதி நிவர்த்தகத்வமும் –
2-பிராப்ய ஸித்தி கரத்வமும் –

புருஷகார க்ருத்யம் ஆவது –
1-அபராத ஷாமகத்வமும் -(பொறுப்பித்தல்)
2-கைங்கர்ய வர்த்த கத்வமும் –

ஆசார்ய க்ருத்யம் ஆவது –
1-அஜ்ஞாத ஜ்ஞாபனமும் –
2-ருசி பிரவர்த்த கத்வமும் –

——————————————————

நூற்று நாற்பத்து நாலாம் வார்த்தை

எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு பிரயோஜனம் –
சேதனருக்கு மோஷத்தில் இச்சை பிறக்கை -(இன்புறும் இவ்விளையாட்டுடையனாய் -சோம்பாது படைப்பது நன்மை உஜ்ஜீவிப்பதற்காகவே –)

அவதாரங்களுக்கு பிரயோஜனம் -மோஷ பிரதானம் பண்ணுகை –(பதினெட்டு நாடார் பெரும் கூட்டம் -உதாரணம் காட்டி அருளி -பவித்ராணம் -இத்யாதிகள் மட்டுமே அல்லவே-)

மோஷ பிரதானம் பண்ணுவது -ஜ்ஞான பிரதானம் பண்ணினால் –

ஜ்ஞான பிரதானம் பண்ணுவது -ஆசார்ய உபதேச முகத்தாலே –

ஆசார்யன் இருவருக்கும் உபகாரகன் -எங்கனே என்னில் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –
சேஷிக்கு சேதனனை உபகரித்தான் –

இப்படி இருக்கிற ஆச்சர்யனுக்கு பிரத்யுபகாரம் பண்ணலாவது –
விபூதி சதுஷ்ட்யமும்
ஈஸ்வரத் த்வயமும் உண்டாகில் –

ஆசார்யன் ஆவான் –
அர்த்த காமங்களில் நசை யறுத்து –
பகவத் பாகவத விஷயங்களில் மிகவும் நசை உண்டாக்கும் அவன் –

(ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —-428--ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –-429—மேன்மேலும் சிருஷ்டி அவதாரங்களைப் பண்ணி வசீகரிக்க பார்த்த இடத்திலும் – ஓர் ஆத்ம வஸ்துவும் எட்டுப் படாமையாலே -இழவாளனாய் இருக்கிற ஈஸ்வரனுக்கு – சேஷமான ஆத்ம வஸ்துவை அஜ்ஞாத ஜ்ஞாபன முகேன திருத்தி -இஷ்ட விநியோக அர்ஹமாமாம் படி கை படுத்தினான் –பகவத் ஜ்ஞான அபாவத்தாலே அசத் கல்பனை கிடந்த சேதனனுக்கு – பகவத் சம்பந்தத்தை அறிவித்து -இச் சேஷியான அவனை காட்டிக் கொடுத்தான் –ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது- விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –432-யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –இத்தால் ஆசார்யனுடைய பிரத்யுபகார அவகாச ரஹித மகா உபகாரத்வம் ஆகிற வைபவம் சொல்லிற்று ஆயிற்று-)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -125-132–அரும் பத விவரணத்துடன்–

December 24, 2012

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நூற்று இருபத்து  ஐஞ்சாம் வார்த்தை

பிரபன்ன அதிகாரிக்கு கார்யம் ஒன்றாய் இருக்க –
மூன்று அவஸ்தை கூடிக் கார்யம் ஆக வேணும் –
அவை யாவன –
ஆஸ்ரயண அதிகாரம் –
பல அதிகாரம் –
போக அதிகாரம் –

இவற்றுக்கு வேஷம் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
அத்யாவச்யமும் –
பரபக்தி பரஞான பரம பக்தியும் –

இவற்றுக்கு விஷயம் –
சீலாதி குண விசிஷ்டனுமாய் –
ஞான சக்தியாதி குண விசிஷ்டனுமாய் –
ஆனந்தாதி குண விசிஷ்டனுமாய் -இருந்துள்ள ஸ்ரீ யபதி –

இவன்
தன் ஆகிஞ்சன்யத்தையும் –
அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு –
ஆஸ்ரயண அபேஷை பண்ண –

அவனும் தன்  சீலாதி (ஆதி ஸுலப்யம் வாத்சல்யம் இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு ஆஸ்ரயணீயனாம் –

இவன் அத்யாவச்யத்தை முன்னிட்டு பல அபேஷை பண்ண –
அவன் ஞான சக்தியாதி (ஆதி பிராப்தி பூர்த்தி இத்யாதிகள்)குணங்களை முன்னிட்டு பல பிரதனாம் –

இவன் பர பக்தி பர ஞான பரம பக்திகளை முன்னிட்டு போக அபேஷை பண்ண –
அவன் ஆனந்தாதி (ஆதி ஸ்ரீயப்பதித்வம்)குணங்களை முன்னிட்டு போக்தாவாம் –

————————————————

நூற்று இருபத்து ஆறாம் வார்த்தை-

சோமாசி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –
பகவத் பிரவ்ருத்தி விரோதி -ஸ்வப் பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி –
பக்தியும் உபாயம் அன்று –
பிரபத்தியும் உபாயம் அன்று –
பிரபத்தவ்யனே உபாயம் –

————————————————-

நூற்று இருபத்து ஏழாம் வார்த்தை

சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே –
தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று
ஜீயர் அருளிச் செய்தார்

(உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தி இருந்தால் தெளிந்து இருக்கலாம் –ஆனாலும் பிராப்தி இல்லை என்று கைங்கர்ய ரூபமாக அனுஷ்டானம் செய்து பிராபகமும் பிராப்யமும் அவனே என்றே மஹா விசுவாசம் இருந்தால் தெளிந்து இருக்கலாம்- என்பர் நஞ்சீயர் -இதன் விவரணம் அடுத்த வார்த்தை)

—————————————————-

நூற்று இருபத்து எட்டாம் வார்த்தை-

அமுதனார் சிறியாச்சானை –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி  இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –

என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ
உம்முடைய அந் அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் –
பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –

(நூல் புடவை போல் அடியேன் ஒரு நாளும் அனுஷ்டானம் விடக்கூடாது -நீங்கள் பட்டுப் புடவை போல் -என்பாராம்)

ஆசார்யர்களில் சிலர் –
உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் –
ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே  யன்றோ -என்று அருளிச் செய்தார் –

(உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய் -என்னைக்கடவது -பரதாழ்வானும் இழக்கலாம் குகனும் பேற்றைப் பெறலாம் அன்றோ -)

———————————————————

நூற்று இருபத்து ஒன்பதாம் வார்த்தை-

பிரபன்னனுக்கு புத்தி பூர்வ அபசாரம் புகுருகைக்கு வழி இல்லை —
பிரமாதத்தாலே புகுந்தது ஆகில் –
ஞானமும் அனுதாபமும் -ஒரு தலையாக அபுத்தி பூர்வமாம் இத்தனை —
அநுதாபம் பிறந்தது இல்லை யாகில்
ஞானம் பிறந்தது இல்லையாகக் கடவது என்று
ஜீயர் அருளிச் செய்தார் –

(பிரபத்தி இது பிரார்த்தனா மதி சரணாகதி -கத்யர்த்த புத்யர்த்த -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் இல்லை என்றால் ஞானம் இல்லாமல் பிரபத்தியாகாதே )

———————————————————–

நூற்று முப்பதாம் வார்த்தை

நம் பிள்ளை நம் ஜீயரை –
இதர உபாயங்களுக்கு பிரமாணங்களும் பஹூள்யமாய் அனுஷ்டானங்களும் பஹூள்யமாய் இருக்க –
இதுக்கு (பிரபத்திக்கு )பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி யிரா நின்றது –
இதுக்கு அடி என் -என்று – கேட்க –

நான் நினைத்து இருக்கும் அதுக்கு அவ்வருகு உமக்கு வேண்டுவது ஓன்று உண்டோ –
இருவர் கூடி ஓர் ஆற்றில் இழிந்து போகா நின்றால்
முந்தினவன் முந்தாதவன் கையைப் பிடிக்கும் போது -இதுக்கு ஒரு பிரமாண அபேஷை உண்டோ –
வேண்டில் பிரமாணங்களாலும் ஒரு குறை இல்லை –

இனி பிரமாணங்கள் காண வேணும் என்று நினைத்து இரேன் –
இருந்ததே குடியாக சம்சாரிகளாய் -நாலத்திரண்டு உத்தம அதிகாரிகளாய் இருந்தால்
அவர்களுக்கு (சம்சாரிகளுக்கு)ஒரு உத்கர்ஷைதையும் இவர்களுக்கு ஒரு அபகர்ஷைதையும் உண்டோ –
ஸ்வரூப பிராப்தம் என்னும் அத்தனை ஒழிய –
ஸ்வர்க காமோ யஜேத- என்கிறபடியே
ஸ்வர்க்க பலத்தை அனுபவிக்க சாதனமாக ஸாஸ்த்ரம் சொல்லா நிற்கச் செய்தேயும் ஆரூரில் ஒருவரே யஜித்தான் என்னும் போது- இதுக்கோ (ப்ரபத்திக்கு -அது பிரவ்ருத்தி இதுவோ நிவ்ருத்தி யாக இருக்க)உமக்கு ஆள் பற்றப் புகுகிறது -என்று
அருளிச் செய்ய
பிள்ளையும் க்ருதார்த்தரானார் –

(ஆச்சார்யன் நினைவுக்கு மேல் சிஷ்யனுக்கு வேறே ஒரு பிரமாணம் தேவையில்லை -பிரமாணங்கள் வேண்டுமானால் பலவும் உண்டே-முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே – தஸ்மான் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-இத்யாதிகள் பலவும் உண்டேன் –
ஆழ்வார்களுக்கு, ஆச்சார்யர்களுடைய ஸ்வ அனுபவ ஸித்தமான இதுக்கு வேறே பிராமண அபேக்ஷை இல்லை –ஸர்வதா கர வீராதீந் ஸூதே சாகர மேகலா ம்ருத ஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாண தஸாம் கதா–ஸூபாஷித நீவி -கடல் சூழ்ந்து இவ்வுலகில் கள்ளிச்செடி போன்ற பயனற்ற பொருள்கள் எங்கும் காணலாய் இருக்கும் -இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மூலிகை தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்குமே -அது போல் உத்தம ப்ரபன்னர்கள் நாலிரண்டு பேர்கள் இருப்பதால் அவர்களுக்கு தாழ்வில்லை)

———————————————————-

நூற்று முப்பத்தோராம் வார்த்தை –

பட்டர் திருவணையாட எழுந்து அருளா நிற்க –
சேது ஸ்நானம் செய்தல் -பாதிரிக் கொடியிலே -போது வைகி வந்து –
அஸ்தனமாக -ஒரு வேடன் அகத்திலே புக-

அவன் தான் இருந்த ஆசனத்தையும் வாங்கிப் பொகட்டு –
ஒரு கட்டிலையும் கொடுக்க -அதிலே எழுந்து அருளி இருந்து

இவன் நம்முடைய வைபவத்தை அறிந்து செய்தான் அல்லன் –
க்யாதி பரனாய் செய்தான் அல்லன் –
நம்மாலே உபக்ருதனாய்ச் செய்தான் அல்லன் –
தன்னுடைய கிருஹத்திலே புகுந்தோம் என்கிற அபிமானம் இறே அவன் இது செய்ய வேண்டிற்று –

ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என் நினைந்து இருக்கிறானோ -என்று அநுசந்தித்து அருளி –
ஐயா இற்றைக்கு விசேஷம் என் என்று கேட்டருள –

நாயன்தே காட்டுக்கு வேட்டைக்கு போனேன் –
அங்கே ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன் –
அதனுடைய தாயானது பின்னே முடுகி வந்து -ஒரு எரி வெளி -(பொட்டை வெளி )-யானவாறே  முன்னே வந்து
கும்பிட்டு கிடந்தது -எனக்கு அத்தைக் கண்டு வ்யசனமாய்க் குட்டியை விட்டேன் -என்றான் –

இத்தைக் கேட்டு –
இது சேதனனுக்கு இல்லாத ஓன்று –பரம சேதனனுக்கு உள்ளது ஓன்று -மாமேகம் சரணம் வ்ரஜ என்று இம் முசலுக்கு உபதேசித்தார் இல்லை –
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மனா -(பிராணனைக் கூடக் கொடுத்து விரோதியையும் காப்பாற்ற வேண்டும்)என்று வேடனுக்கு உபதேசித்தார் இல்லை –
அவ்யவதாநேன சரணாகதி பலித்ததே இதொரு பிரமாண பிரசித்தி என் -என்று அருளிச் செய்தார் –

(ப்ரபத்திக்கு பிரமாணம் வேண்டாமே என்றும் கீழ் வார்த்தைக்கு இது த்ருஷ்டாந்தம்)

———————————————————————

நூற்று முப்பத்து இரண்டாம் வார்த்தை

எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த அம்பங்கி அம்மாளுக்கு
உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –

பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன –
இத்தனை தூரம் பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு
த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .