ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -49-60–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

————

நாற்பத்து ஒன்பதாம் வார்த்தை –

பொன்னைப் புடமிடப்  புடமிட உருச் சிறுகி -ஒளி விஞ்சி – மாற்று எழுமா போலே –
சங்கோசம் அற்று -ஞான விகாசம் உண்டானவாறே –
நாய்ச்சிமாருடனே சாம்யம் சொல்லலாய் இறே இருப்பது-
இத் ஆத்மாவுக்கு என்று -திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் .

(ஜீவாத்மாவாகிற பொன் -ரஹஸ்யத்ரய ஞானமாகிய அக்னியில் புடமிடப்பட்டால் தேஹ சம்பந்தத்தால் ஏற்படும் அழுக்குகள் நீங்கி முக்த தசையில் கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்ய ஷட்கம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் –ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பது –விஸ்லேஷத்தில் தரியாமை -ததேக நிர்வாஹகத்வம் -இவற்றில் ஸாம்யம் பெறுகிறான் -)

————————————————————————————————

ஐம்பதாம் வார்த்தை

அழுக்கு அடைந்த மாணிக்கத்தை நேர் சாணையிலே ஏறிட்டு கடைந்தால்
பளபளக்கை வடிவாய் இருக்குமா போலே –
அஞ்ஞனான சேதனனுக்கு
திரோதான நிவ்ருத்தியிலே அடியேன் என்கை வடிவாய் இருக்கும்
என்று முதலியாண்டான்-

(ரஹஸ்யத்ரய ஞானமாகிய சாணையில் இட்டுக்கடைவதால் சரீர சம்பந்தத்தால் ஏற்பட்ட அஞ்ஞானம் கர்மம் வாஸனை ருசி முதலியவை கழிந்தால் முக்த ஜீவனான ரத்னத்துக்கு பகவத் சேஷத்வம் ஆகிய ஒளி பிரகாசிக்கும் என்றவாறு -)

———————————————————————————————

ஐம்பத்து ஒன்றாம் வார்த்தை

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு
அழியாத பேர் -அடியான்-என்று -இறே -என்று
வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஸ்ரீ வசன பூஷணம் சூரணை -77-

(அஹங்காரம் தான் –தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் –
இரண்டு வகை பட்டு இறே இருப்பது –அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதி களாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத- ஆத்மா தாஸ்யம் –இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –)

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

———————————————————————————————-

ஐம்பத்து இரண்டாம் வார்த்தை

உத்பத்தியையும் –
உடைமையையும் –
உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் –
உடைமைக்கு உடைமை இல்லாமையையும் –
உத்பத்தி யானவைகளை உடையவனுடைய உயர் நிலையையும் –
உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும்
சொல்லுகிறது திரு மந்த்ரம் –

(காரணனைச் சொல்லும் அகாரம் -மற்ற அனைத்துப் பொருள்களும் அவனிடமிருந்து உண்டானவை என்றும் சொல்கிறது -உகாரம் அவ்வுடைமை பிறருக்கு உரியது அல்லாமல் இருக்கும் ஊற்றத்தைச் சொல்கிறது- நமஸ் ஸப்தம் எம்பெருமானின் உடைமையான ஜீவனுக்கு ஒரு உடைமையும் இல்லாததைச் சொல்கிறது -நார ஸப்தம் அனைத்தும் உடைமைகளையும் உடைய உடையவனின் சேஷித்வம் போன்ற உயர்வுகளைச் சொல்கிறது – அயன ஸப்தம் உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான அநாதியான உறவைச் சொல்கிறது – என்று கருத்து -)

தர்மத்தையும் –
தர்மத்தில் களை யறுப்பையும் –
கண்ணனையும்
கண்ணன் கருத்தையும் –
கதியையும்
பற்றும் படியையும் –
பரனையும்
பற்றுமவனையும் –
பாபத்தையும்
பாபத்தில் பற்று அறுகையும் –
சொல்லுகிறது சரம ஸ்லோகம்

(ஸர்வ தர்மான் -உபாயாந்தரங்களையும் -பரித்யஜ்ய -அவற்றில் உபாய புத்தியை அடியோடு விடுகையும் -மாம் என்று கண்ணனையும் -ஏகம் உபாய ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி கூடாது என்கிற கண்ணனுடைய திரு உள்ளத்தையும் -சரணம் என்றும் உபாயத்தையும் -வ்ரஜ என்றும் அவ்வுபாயத்தைப் பற்றுகையும் -அஹம் என்று ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட பரனையும் -த்வா என்று அவனை உபாயமாகப் பற்றும் ஜீவனையும் -ஸர்வ பாபேப்யோ என்றும் அந்தப் ஜீவனுக்கு அநிஷ்டமான ஸகலத்தையும் மோக்ஷயிஷ்யாமி என்றும் அவை அடியோடே விட்டுப்போவதையும் சொல்கிறது என்று கருத்து -)

பெரிய பிராட்டியாரையும் –
பெருமாளையும் –
இவர்களுக்கு பிரிவில்லாமையும் –
பெருமாளுடைய பொருளையும் –
அருள் சுரக்கும் திருவடியையும் –
திருவடிகள் சரணாம் படியையும் –
அரணாம் திருவடிகளை அடையும் படியையும் –
அடைந்தார்  அனுபவத்தையும் –
அருள் உடையவன் ஆக்கத்தையும் –
அநுபவத்தில் உகப்பையும் –
அநுபவத்தில் அழுக்கை அறுக்கையும்
சொல்லுகிறது -த்வயம் –

திரு மந்த்ரத்தாலே -திரு அபிஷேகத்தை அநு சந்திப்பான் –

சரம ச்லோகத்தாலே -திரு மார்பில் நாச்சியாரோட்டைச் சேர்த்தியை அநு சந்திப்பான் —

த்வயத்தாலே திருவடிகளை அநு சந்திப்பான் –

(திருமந்திரத்தில் ஸ்வாமித்வம் பிரதானம் -ஆகவே திரு அபிஷேகத்தை அனுசந்திக்க வேண்டும்-மாம் என்றும் திருமார்பைத் தொட்டுக் காட்டுவதால் பெரிய பிராட்டியாருடன் சேர்ந்தே இருக்கும் பெருமானை அனுசந்திக்க வேண்டும்)

————————————————————————————————

ஐம்பத்து மூன்றாம் வார்த்தை

அர்த்த பஞ்சகமும் ரகஸ்ய த்ரயத்தில் சொல்லுகிற படி எங்கனே என்னில் –
திரு மந்த்ரத்தில் –
நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்று உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் ஷஷ்ட் யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –

சரம ஸ்லோகத்தில் –
மாம் -அஹம் -என்ற பதங்களால் பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
வ்ரஜ -என்கிற மத்யமனாலும் (முன்னிலைச் சொல்)-த்வா -மாஸூச -என்கிற பதங்களாலும் ஸ்வ ஸ்வரூபம் சொல்லிற்று –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கையாலே -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்தம் சொல்லிற்று -(நிவ்ருத்தி அடைந்ததும் தன்னுடைய பேறு கிட்டும் அன்றோ)
சர்வ பாபேப்யோ என்று விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
ஏக பதத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –

த்வயத்தில்
ச விசேஷணமான நாராயண பதத்தாலே பர ஸ்வரூபம் சொல்லிற்று –
பிரபத்யே -என்கிற உத்தமனாலே(தன்னிலைச் சொல்) ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி நமஸ்ஸூக்களாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
சரண சப்தத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –(உபாயம் க்ருஹம் ரக்ஷகம் மூன்று அர்த்தங்களும் உண்டானாலும் இங்கு உபாயமே விவஷிதம்)

ஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்தரம்

ஸ்வரூப அநு ரூபமான உபாயத்தை விதிக்கிறது சரம ஸ்லோகம்

இவை இரண்டு அர்த்தத்திலும் ருசி வுடையவனுடைய அநு சந்தான பிரகாரம் -த்வயம் –

சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -திரு மந்த்ரம்

சரண்ய ருசி பரிக்ருஹீதம்-சரம ஸ்லோகம்

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-த்வயம்

ஆத்ம யாதாம்ய பிரதிபாதன பரம் திருமந்தரம்

உபாய யாதாம்ய பிரதிபாதன பரம்-சரம ஸ்லோகம்

உபேய யாதாம்ய பிரதிபாதன பரம்-த்வயம்

பிராப்ய பிரதானம் -திருமந்தரம்

பிராபக பிரதானம் -சரம ஸ்லோகம் –

புருஷகார பிரதானம் -த்வயம்

——————————————————————————————-

ஐம்பத்து நாலாம் வார்த்தை –

ஆச்சார்ய  அங்கீகாரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி
திரு மந்த்ரத்தில் உபதேசித்த -அர்த்தத்தை – பத ஸ -அநு சந்திக்கும்படி சொல்லுகிறது –

1-ஈஸ்வர சேஷ பூதன் –
2-அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் –
3-விலஷண நிரூபகன் –
4-ததீய பர தந்த்ரன் –
5-தத் சம்பந்த யுக்தன் –
6-கிங்கர ஸ்வ பாவன் -என்று தன்னை அநு சந்திப்பது –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
1-ரஷகத்வ பிரதி சம்பந்தி -பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
2-அந்ய சேஷத்வ பிரதி சம்பந்தி -நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹத்வம் சொல்லி –
3-அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான -சேதன வைலஷண்யம் சொல்லி
4-ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –
5-சோபாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தம் சொல்லி –
6-அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த பிரகாரம் சொல்லித் தலைக் கட்டுகிறது 

——————————————————————————————-

ஐம்பத்து ஐஞ்சாம் வார்த்தை

(யஜ தேவ பூஜாயாம் -நம் சம்ப்ரதாயத்தில் திருவாராதானமே யாகம்)

நிருபாதிக தேவதா பரமாத்மா

நிருபாதிக ஹவிஸ் ஆத்மா

ஜீவாத்மாக்கள் ஜீவாத்மாவுக்கு செய்வது உண்டோ –

நிருபாதிக மந்த்ரம் -பிரணவம்

நிருபாதிக யாகம் -ஆத்ம யாகம்

தேவதாம் உத்திஸ்ய த்ரவ்யத் யாகோ யாக

(தேவதாம் உத்திஸ்ய த்ரவ்யத் யாகோ யாக-தேவதையை உத்தேசித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பிப்பது யாகமாகும் -யாக லக்ஷணம் –ஸாஷாத் தேவ புராணோ அசவ்-புராண புருஷனாலே எம்பெருமானே நேரே தேவ ஸப்தத்துக்குப் பொருள் ஆவான் – இயல்வான தேவனான எம்பெருமானுக்குத் தக்க இயல்வான ஹவிஸ்ஸு ஆத்ம சமர்ப்பணமே -இந்த யாகத்தைத்தெரிவிக்கும் இயல்வான மந்த்ரம் பிரணவமே ஆகும் -ப்ரகர்ஷ ஸ்தோத்ரம் -இத்தாலே நன்கு ஸ்தோத்ரம் பண்ணப்படுகிறார் -பிரணவம் -அர்த்தம்-)

——————————————————————————————–

ஐம்பத்து ஆறாம் வார்த்தை

திருநகரிப் பிள்ளை –

பிரதம பதத்தில் -(அகாரார்த்தம்)
1-ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வமும் –
2-சர்வ சேஷித்வமும் –
3-ஜகத் காரணத்வமும் –
4-ஸ்ரீ ய பதித்வமும் -சொல்லுகிறது —எங்கனே என்னில் –

ஆள்கின்றான் ஆழியான் -திருவாய்மொழி -10-4-3-என்றும்
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் -திருவாய் மொழி -1-4-5-என்றும் –
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -திரு நெடும் தாண்டகம் -10-என்றும் –
மூ வுலகும் காவலோன் -திருவாய் மொழி -2-8-5-என்றும் சொல்லுகையாலே–
சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –

(ஆழியான் – விரோதி நிரஸனம் -உகந்து ரக்ஷணம் நல்கி -கீர்த்தியே ஸர்வ ரக்ஷகத்வம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)

நெடியோய்க் கல்லது மடியதோ வுலகு -திரு வாசிரியம் -5-என்றும் –
உலகம் மூன்றுடன் வணங்கு -திருவாசிரியம் -3-என்றும் –
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -திருவாய் மொழி -3-8-1-என்றும் –
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவன் -பெருமாள் திரு மொழி -8-10-என்றும்–
இத்யாதிகளாலே சர்வ சேஷித்வம் சொல்லிற்று –

நாபிக் கமல முதற் கிழங்கே -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த (பஹுஸ்யாம்)தனி முதல் -திருவாய் மொழி -8-8-4-என்றும் –
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் மொழி -4-10-1-என்றும் –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய் மொழி -7-5-4-என்றும்–
இத்யாதிகளாலே ஜகத் காரணம் சொல்லிற்று –

திருநாரணன் -திருவாய் மொழி -4-1-1-என்றும் –
திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-என்றும் –
திருமால் -திருவாய் மொழி -8-3-9-என்றும்–இத்யாதிகளாலே ஸ்ரீ ய பதித்வம் சொல்லிற்று – 

தாதர்த்யத்தாலே (அவனையே ப்ரயோஜனமாகக் கொண்ட ஆறாம் வேற்றுமை)-ஏறிக் கழிந்த சதுர்த்தி யாலே
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் –திருவாய்மொழி -5-7-3-என்றும் –
இன்று என்னைப் பொருளாக்கி -திருவாய்மொழி –10-8-9-என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக -பெரிய திருமொழி -8-10-9-என்றும் –
அடியேன் பிறந்தேன் -பெரிய திருமொழி -8-9-8-என்றும்–இத்யாதிகளாலே
சேஷத்வம் உதித்தபடி சொல்லிற்று –

த்வதீய பதத்தாலே -(உகாரார்த்தம்)
1-ஆத்மாவினுடைய சேஷத்வாந்தர நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வத்தையும் 
2-ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வத்தையும் சொல்லிற்று -எங்கனே என்னில் –

மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் -பெரிய திருமொழி –8-10-5-என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4-என்றும் –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து -பெரிய திருமொழி –6-3-5-என்றும்-இத்யாதிகளால் –
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவன் -திருவாய் மொழி -4-10-4-என்றும் –
வானவர் தம்மை யாளுமவன் -திருவாய் மொழி –3-6-4-என்றும் –
நான்முகனும் இந்திரனும் மற்றை யமரரும் எல்லாம் -திருவாய் மொழி –1-9-10-என்றும் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய -திருவாய் மொழி –2-7-12-என்றும் -இத்யாதிகளாலே –
ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வம் சொல்லிற்று –

த்ருதீய பதத்தாலே –(மகாரார்த்தம்)
1-ஆத்மாவினுடைய ஞான ஆனந்தத்வமும் –
2-ஞான குணகத்வமும் –
3-ப்ரக்ருதே பரத்வமும் –
4-நித்யத்வமும் -சொல்லுகிறது -எங்கனே என்னில் –

என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை -நான்முகன் திருவந்தாதி -54-என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்றும் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-என்றும் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -திருவாய் மொழி -8-8-5-என்றும்–இத்யாதிகளாலே
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வம் சொல்லிற்று –

(தர்மி ஞானம் -தர்மபூத ஞானம் -ஆக்கையில் புக்கு என்பதால் பிரக்ருதியில் நின்றும் வேறுபட்ட -நின்ற ஓன்று நித்யத்வம் -நான்குக்கும் நான்கு பிரமாணங்கள்)

ஆக பிரதம பதம் சொல்லிற்று ஆய்த்து

மத்யம பதத்தாலே
ஆத்மாவினுடைய சாதநாந்தர நிவ்ருத்தியும் –
சரீர வத் சேஷத்வமும் –
ததீய சேஷத்வமும் –
பரதந்த்ரனுக்கு அநு ரூபமான ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –

வந்து எய்துமாறு அறியேன் -திருவாய் மொழி –7-6-6-என்றும் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -திருவாய் மொழி –5-7-1-என்றும் –
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஒன்றில்லை -திருமாலை -17-என்றும் –
உன்னைக் காணும் மார்க்கம் ஓன்று அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் -திருமாலை -32-என்றும்–
இத்யாதிகளாலே சாதநாந்தர நிவ்ருத்தி சொல்லிற்று

உம் உயிர் வீடுடையான் -திருவாய் மொழி -1-2-1-என்றும் –
அடியேன் உள்ளான் -திருவாய் மொழி –8-8-2-என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
என்னுடைய வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் —இத்யாதிகளாலே
சரீர வத் சேஷத்வம் சொல்லிற்று –

பயிலும் திருவுடையார் எவரேலும் -திருவாய் மொழி -3-7-1-என்றும் –
எம்மை யாளும் பரமர் -திருவாய் மொழி –3-7-1- என்றும் –
பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடைய நாதர் -திருவாய் மொழி –3-7-2-என்றும் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1-என்றும் –
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம் -பெரிய திருமொழி -2-6-4-என்றும் —இத்யாதிகளாலே
ததீய சேஷத்வம் சொல்லிற்று –

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -திருவாய் மொழி –6-2-8-என்றும்
செய்ய சூழ் சுடர் ஞானமாய்-திருவாய் மொழி –3-6-7-என்றும் –
மழுங்காத ஞானமே படையாக -திருவாய் மொழி –3-1-9- என்றும் –
துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -திருவாய் மொழி –3-10-9- என்றும் —இத்யாதிகளாலே
சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –

(உபாயத்துக்கு ஞானம் சக்தி பிராப்தி பூர்த்திகள் அவஸ் யமாகையாலே அவற்றைத் நான்கு பாராக்களில் சொல்லுகிறது)

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் -பெரிய திருமொழி -6-7-1-என்றும் –
ஆட் கொள்ள வல்லான் -பெரிய திருமொழி –8-9-6-என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் -திருவாய்மொழி -2-7-7-என்றும் –
அருளி அடிக் கீழ் இருத்தும் -திருவாய்மொழி -8-8-11-என்றும் —இத்யாதிகளாலே சர்வ சக்தித்வம்-

எல்லாம் உலகும் உடைய ஒரு மூர்த்தி -திருவாய்மொழி -5-8-4-என்றும் –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட் செய்வார் மேவிய வுலகும் மூன்றவை யாட்சி -திருவாய்மொழி –8-1-1- என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் -நாச்சியார் திருமொழி -11-3-என்றும் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -திருவாய்மொழி –1-2-7- என்றும்–இத்யாதிகளால்  –(பூர்த்தி-)அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லிற்று –

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் -திருப்பல்லாண்டு -10-என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -திருவாய்மொழி -7-9-10-என்றும் –
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு -பெரிய திருமொழி -2-8-9-என்றும் –
உயிர்கள் எல்லா வுலகும் வுடையவன் -திருவாய்மொழி -3-2-11-என்றும்–இத்யாதியாலே
நிருபாதிக சேஷித்வம் (பிராப்தி -)சொல்லிற்று

ஆக இவற்றாலே –
சர்வஞ்ஞத்வம் –
சர்வ சக்தித்வம் –
அவாப்த சமஸ்த காமத்வம் –பூர்த்தி –
நிருபாதிக சேஷத்வம் –பிராப்தி –
சொல்லி ஈஸ்வரனுடைய உபாயத்வம் சொல்லிற்று –

நார சப்தத்தாலே  சேதன அசேதனங்களுடைய நித்ய சமூகங்களை சொல்லிற்று
நிற்கின்றது எல்லாமே நெடுமால் என்றும் ஓதாதார் கற்கின்றது எல்லாம் கடை –நான்முகன்-54

அயன சப்தத்தால்-ஈஸ்வரனுடைய
சர்வ ஸ்வாமித்வமும் –
சர்வ வித பந்துத்வமும் –
சர்வ ஆதாரத்வமும் –
சர்வ வித நியந்த்ருத்வமும் சொல்லிற்று -எங்கனே என்னில் –

எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் -திரு வாய்மொழி –1-9-1-என்றும் 
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –திருவாய்மொழி -9-6-4-என்றும் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் -திருவாய்மொழி -8-8-2-என்றும் –
நானுன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை -நான்முகன் திருவந்தாதி -7-என்றும்–இத்யாதியாலே
சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவர் -திருவாய் மொழி -5-1-8-என்றும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -திருவாய்மொழி -7-8-1-என்றும் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் –
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் அவை யல்ல னாய் -திருவாய்மொழி -3-6-9-என்றும் —இத்யாதிகளாலே
சர்வ வித பந்துத்வம் சொல்லிற்று –

ஆவிககோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1-என்றும் –
நாட்டினான் தெய்வம் எங்கும் -திருமாலை -10-என்றும் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -திருவாய் மொழி -5-2-8- என்றும் —இத்யாதிகளாலே
சர்வ ஆதாரத்வம் சொல்லிற்று –

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய்மொழி -2-9-3-என்றும் –
நீ யோநிகளைப் படை யென்று நிறை நான்முகனைப் படைத்தவன் -திருவாய்மொழி -1-5-3-என்றும் –
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் -திருச் சந்த விருத்தம் -109-என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் -திருவாய்மொழி -6-10-11-என்றும் —இத்யாதிகளாலே
சர்வ நியந்த்ருத்வம் சொல்லிற்று –

இனி சதுர்த்தியாலே –
சேதநருடைய -தேச கால அவஸ்தா பிரகார உசித வ்ருத் அபேஷை சொல்லுகிறது -எங்கனே என்னில் –

உள்ள வுலகளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ -பெரிய திருவந்தாதி -76-என்றும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திருவாய்மொழி -3-3-1-என்றும் –
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட -நாச்சியார் திருமொழி -4-1-என்றும் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மொடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய்மொழி -8-3-7-என்றும்
சென்றால் குடையாம் முதல் திருவந்தாதி-53-என்றும் –
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29-என்றும்-
அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்றும் –
கூவிப் பணி  கொள்ளாய் -திருவாய்மொழி -8-5-7- என்றும் –
நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே -பெரிய திருமொழி -1-9-1-என்றும் – இத்யாதிகளாலே
வ்ருத்தி அபேஷை சொல்லித் தலைக் கட்டுகிறது

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிற பாட்டை பிரணவ அர்த்தமாக அனுசந்திப்பது

(விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-)

யானே -திருவாய் மொழி -2-9-9-என்கிற பாட்டை மத்யம பத அர்த்தமாக அனுசந்திப்பது –

(யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-)

எம்பிரான் எந்தை -பெரிய திருமொழி -1-1-6-என்கிற பாட்டை த்ருதீய பத அர்த்தமாக அனுசந்திப்பது —

(எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-)

ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி -3-3-1- என்கிற பாட்டை சதுர்த்தி அர்த்தமாக அனுசந்திப்பது —

(ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

அகாரத்தோ விஷ்ணுர் ஜகதுதய ரஷா பிரளய க்ருத் மகார்த்தோ ஜீவஸ் தது பகரணம்
வைஷ்ணவ மிதம் உகாரோஸ் அனந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோஸ் த்ரயீ சாரஸ் த்ர்யாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத் –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஸ்லோகி முதல் ஸ்லோகம் –

(அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-உலகத்தைப்படைத்து காத்து அழிக்கும் விஷ்ணுவே அகத்தின் பொருள் -ஜீவன் மகாரத்தின் பொருள் -விஷ்ணுவின் உடைமையான இந்த அசேதனப்பொருள்கள் ஜீவனுக்கு இந்திரியம் சரீரம் முதலியவற்றால் இருந்து கொண்டு பிராகிருத போகங்களை அனுபவிக்கவும் இஷ்ட சாதனங்களை அனுஷ்ட்டிக்கவும் உபகரணமாய் இருக்கின்றன -இந்த ஜீவ பர ஸம்பந்தம் சேஷ சேஷி பாவத்தைக்காட்டும் உகாரம் -ருக் யஜுர் சாம மூன்றுவேத சாரங்களான அகார மகார உகாரங்களைச் சேர்த்து ப்ரணவமாகி இந்த அர்த்தங்களை உணர்த்துகிறது –)

—————————————————————————————————–

ஐம்பத்து ஏழாம் வார்த்தை

பிராட்டியை  ஈஸ்வரனோடு  சமானை என்பாரையும் -சேதனரோடு சமானை என்பாரையும் -வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ -என்கிற சப்தத்தாலே –

(ஏகாயன -ஏகமே அயனம் மிதுனம் அயனம் அல்ல என்பர் -ஸ்ரீயதே -இவள் அவனை ஆச்ரயிக்கிறாள் -ஸ்ராயதே -மற்ற அனைவரும் இவளை ஆஸ்ரயிக்கிறார்கள்)

ஆஸ்ரயணீயம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது மதுப்பாலே –

நிர்க் குணம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –

நிர் விக்ரஹன் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சரணவ் -என்கிற பதத்தாலே –

உபாயாந்தர நிஷ்டரை வ்யாவர்த்திக்கிறது -சரணம் -என்கிற பதத்தாலே –

உபாய ஸ்வீகாரத்தை உபாயம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -பிரபத்யே -என்கிற பதத்தாலே –

பிராப்யம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே

த்ரிமூர்த்தி சாம்யதையை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –

கைங்கர்யம் புருஷார்த்தம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சதுர்த்தியாலே –

கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது நமஸ்ஸாலே –

————————————————————————————————–

ஐம்பத்து எட்டாம் வார்த்தை –

பாடல் கொட்டையப் பிள்ளை வார்த்தை –

பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லுகிறது
உத்தர கண்டம் அநந்ய பிரயோஜனத்வம் சொல்லுகிறது –

பூர்வ கண்டம் -பகவத் கிருபைக்கு வர்த்தகம்
உத்தர கண்டம் -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் இருவருக்கும்-ஈஸ்வரன் -சேதனன் -ஓன்று போலே காணும் –

பூர்வ கண்டம் -அசித் வ்யாவ்ருத்தி
உத்தர கண்டம் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி –

(பூர்வ கண்ட அனுசந்தானம் எம்பெருமான் கிருபையை வளர்க்கும் -உத்தர கண்ட அனுசந்தானம் அவனுடைய உகப்பை வளர்க்கும் –சேதனனுக்கு சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -எம்பெருமானார் அநாதி காலமாக பெறாமல் இருந்த சேதனன் கிட்டியதால் -இருவருக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி -ஜீவனுக்கு பரமம் உகந்த கைங்கர்ய பேறு -ஈசனுக்கு சேதன லாபமாகிய பேறு -இவ்வாறு இருவருக்கும் இஷ்ட ப்ராப்தி-
அசித்வத் பாரதந்தர்யம் இருந்தாலும் உபாயமாகப் பற்ற ஞாத்ருத்வம் இருப்பதால் ஜீவ அசித் வ்யாவ்ருத்தி பூர்வ கண்டம் காட்டும் -ஜீவனை கைங்கர்யம் செய்யும் சேஷபூதனாகவும் ஈஸ்வரனைக் கைங்கர்யம் கொண்டு உகக்கும் சேஷியாகவும் காட்டுவதால் உத்தர கண்டம் ஜீவ ஈஸ்வர வ்யாவ்ருத்தி காட்டும் -)

நான் அடியேன் -பெரிய திருமொழி -7-3-1- என்று நம் பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு தஞ்சம் என்று நினைத்துக் கொண்டு போரா நிற்கச் செய்தேயும் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலே த்வயத்தை மிகவும் ஆதரித்து போருவார்கள் –

(சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1-)

இதனுடைய அருமையையும் பெருமையையும் சீர்மையையும் பாராதே -வந்தபடி வரச் சொல்லார்கள் நம் பூர்வாச்சார்யர்கள் என்று – அதிகாரி துர் லபத்தாலே -இதனுடைய அருமை சொல்லிற்று-கர்ம ஞான பக்தி நிர்வ்ருத்தி பூர்வகம் ஆகையாலே இதனுடைய பெருமை சொல்லிற்று –ரஹஸ்ய த்ரயத்தில் வ்யாவ்ருத்தி வுண்டாகையாலே சீர்மை சொல்லிற்று –

—————————————————————————————————-

ஐம்பத்து ஒன்பதாம் வார்த்தை

த்வயத்தில் அர்த்தம் உபாயாந்தரங்களைப் பொறாது-த்வயத்தில் -சப்தம் சாதநாந்தரங்களைப் பொறாது –

பிரபத்தியை சக்ருத் என்பர் ஆழ்வான் – (உடனே)
ஸதா என்பர் முதலி யாண்டான்
ஸக்ருதேவ என்பர் பட்டர்

(ஸஹஸ -உடனே என்பதே ஸக்ருத் -தன்னுடைய தகுதியின்மையைப்பார்த்துத் தயங்காமல் எம்பெருமானின் குணத்தை விஸ்வஸித்து சடக்கென ப்ரபன்னனான் -இது கூரத்தாழ்வான் நிர்வாஹம்-ஒரு தரம் -என்றே பொருள்கொண்டு இதுவரை அநாதிகாலம் சம்சார ஆர்ணவத்தில் மகனனாய் இருந்தவன் ஒரு தடவை சரணம் புக்கு பின்பும் மேலுள்ள காலம் முழுவதும் ஆனந்த சாகரத்தில் அழுந்தி கிடப்பானாகையாலே ஆயுள் உள்ளவரை சரணம் புகுந்து கொண்டே இருந்தாலும் ஒரு தடவை தான் சொல்லலாமாகையாலே த்வயத்தை எப்போதும் அனுசந்திப்பதற்கும் ராம சரம ஸ்லோகப்படி ஒருதடவை அனுசந்திப்பதற்கும் முரண்பாடில்லை என்பது முதலியாண்டான் நிர்வாஹம் -எம்பார் நிர்வாஹமும் இதுவே –ஸக்ருத்வே எம்பெருமான் கைக்கொள்ள ஆச்சார்யர் உபதேசிக்கும் அதுவே போதுமானது -இனிமையாலே த்வய அனுசந்தானம் எப்போதும்-ஒரு கால் சொன்னால் போதாது என்ற நினைவால் அன்று என்பது பட்டர் நிர்வாஹம் -)

பக்தியில் காட்டில் பிரபத்திக்கு வாசி –
அதி க்ருதாதி அதிகாரம் –சர்வாதிகாரமாகையும் –
சாத்தியம் சித்தமாகையும் –
கர்ம அவசாநம் – சரீர அவசநாம் ஆகையும் –
அந்திம ஸ்ம்ருதியும்  அவனதேயாகையும் –

ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான் திருவடிகளிலே பண்ணின பிரபத்தி யாகையாலே –பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல பிரதமாகையாலே –
இவன் நம்மை உபாயமாக பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம் கடல் கலங்கினால் போலே கலங்கும்

உத்தர கண்டத்தாலே –
உன்னையே உபாயமாகப் பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போவான் ஒருவன் அல்லன் -என்று ஈஸ்வரன் மாஸூ ச என்று சேதனன் கண்ணா நீரை துடைத்தால் போலே -சேதனனும் ஈஸ்வரனை -மாஸூ ச-என்கிறான் –

பிரகிருதி -விசேஷணம்
விக்ருதி -அனுபவம்
ஏதத் விக்ருதி -வ்ருத்தி விசேஷம்
பிரக்ருத்யந்தரமும் விக்ருத்யந்தரமும் -ஆத்ம நாசம் –

(எம்பெருமானுக்கு விசேஷணமாய் இருப்பது ஜீவனுக்கு எப்பொழுதும் உள்ள இயல்பாகும் -எம்பெருமானைப்பற்றிய ஞானம் உண்டானபோது அவன் அருளாலே இவனுக்கு உண்டாகும் மாறுபாடு விக்ருதி அவனது அனுபவமாகும் -இவ்வனுபவம் முற்றினால் அவனுக்கு ஏற்படும் செயலில் பகவத் கைங்கர்யம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் அன்றோ -)

(எம்பெருமானுக்கு விசேஷணமாய் இருப்பது நமக்கு பிரகிருதி இயல்பு என்றும் எண்ணாமல் தன்னை ஸ்வ தந்த்ரனாகவும் -மற்றவர்களுக்கு விசேஷணமாகவும் எண்ணும் ப்ரக்ருதியாந்தரமும் -எம்பெருமானை ஒழிந்த தேவதாந்தரங்கள் முதலானோர்க்குத் தொண்டு செய்வதும் விஷயாந்தரங்களை அனுபவிப்பதும் விக்ருத்யாந்தரம் வ்ருத்த்யாந்தரம் -இவை மூன்றும் ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து விடும் -இருந்தும் இல்லாதது போல் ஆக்கிவிடும் -என்றவாறு)

“அஹமேவ பரம் தத்துவம்”-நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.“தர்சநம் பேத ஏவச”-சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”-இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.அஹம் ஸ்மராமி மத் பக்தம் -ஸ்ரீ வராஹப் பெருமாள் அருளிச் செய்தது உண்டே-தேஹாவஸாகே முக்கிஸ்யாத்”சரீர முடிவில் மோட்சமுண்டு -மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.-பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

—————————————————————————————————–

அறுபதாம் வார்த்தை

வருணன் விஷயத்தில் பெருமாள் பண்ணின பிரபத்தி பலியாது ஒழிந்தது –
சரணாகதியின் சீர்மையை அறியும் சரணாகதன் அல்லாமையாலே –

பெருமாள் வருணனை சரணம் புகுகிற போது ப்ரான்முகத்வாதி நியம சஹிதர் ஆனபடியாலே சரணாகதர் ஆவார்க்கு எல்லாம் நியம அபேஷை உண்டா என்று வேல் வெட்டி நாராயண பிள்ளை நம் பிள்ளையைக் கேட்க –
சரணாகதிக்கு நியம அபேஷை உண்டாய் செய்தார் அல்லர் –
இஷ்வாக்குகள் ஏதேனும் ஓன்று செய்யிலும் நியமத்தோடு அல்லது செய்ய மாட்டாத வாசனையாலே செய்தார் – என்று அருளிச் செய்தார் –

(-வேல் வெட்டி பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில் பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே – இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி – என்று உபதேசித்தான் ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய்  இருக்கையாலே – தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது –என்று அருளி செய்த வார்த்தை –)

—————————————————–————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply