Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -349-360–அரும் பத விவரணத்துடன்–

February 25, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -349-
நம்பிள்ளையை -ஒருவன் எம்பெருமானை ஒழிய தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள் –
நித்ய நைமித்திகாதிகளில் -அக்நி இந்திராதிகளை பஜிப்பான் என் –
ஆலயத்தில் பஜியாது ஒழிவான் என் -என்ன –

அக்நி ஹோத்ராதிகளில் அக்நியை உபாசித்தும் ஸமஸாந அக்நிகளை நிவர்தித்தும் போகிறாப் போலே —

இரண்டு இடத்துக்கும் வாசி எங்கனே என்னில் –

நித்யாதிகளில் பகவத் ப்ரகார புத்த்யா பண்ணுகிற உபாசநம் -பகவத் உபாசநமேயாக விதிக்கையாலும் –
அவற்றினுடைய பிரதிஷ்டைகளில் பர அபர தத்வ ப்ரத்யயம் பண்ணி இருக்கும்
தாமஸ புருஷர்களாலே வேத வ்ருத்த ஆகம மந்த்ர ப்ரகிரியையாலே
ஸ்வ தந்தரமாக தேவதாந்த்ரங்கள் க்ருத ப்ரதிஷ்டிதம் ஆகையாலும் –
இவ் விடத்தில் பகவத் ப்ரகார புத்யயா உபாசிக்க விதி இல்லாமையாலும்

தேவதாந்தர வர்க்கங்களில் தூரதோ வர்ஜநீயத்வம் ருத்ரனுக்கு உண்டு –
எங்கனே என்னில் –
சத்வஸ்தருக்கு அத்யந்தம் விரோதியான தம ப்ராசுர்யத்தாலே –

நித்யாதிகளில் போலே ஆலயங்களிலும் பகவத் ப்ரகாரா புத்யயா உபாசிக்கலாமோ என்ன –

அப்படி உபாசிக்க விதி இல்லாமையாலே ஆகாது –

த்யாஜ்யதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் ஸ்வீ காரத்துக்கு உடலாகவும் –
உபாதேயதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் விஷயம் த்யாகத்துக்கு உடலாகவும் கடவதோ
என்று அருளிச் செய்தார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூம் தாமம் -திருவாய்மொழி -2-8-6-என்கிற
பாட்டில் ப்ரஸ்துதமான தேவதாந்தர பஜனம் அர்ஜுனனுக்கு ருத்ரன் பக்கலிலே
ஓர் அஸ்தர லாபத்துக்காக பகவந் நியோகத்தாலே வேண்டிற்று -எம்பெருமானால் நியமிக்க பெற்ற பூஜை –

(தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-பாசுபத அஸ்திரத்துக்காக த்யானம்-)

—————————————————

வார்த்தை -350-

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது -மூன்று பிரகாரமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
சத்கார யோக்யர் என்றும் -சஹ வாஸ யோக்யர் என்றும் -ஸதா அநுபவ யோக்யர் -என்றும் –

சத் கார யோக்யர் -ரூப நாம ப்ரதானர் -உச்சாரண ப்ரதானர் -அபிமான ப்ரதானர் –

சஹ வாஸ யோக்யர் -ஜ்ஞான ப்ரதானர் -அனுஷ்டான ப்ரதானர் -அங்கீகார ப்ரதானர் –

ஸதா அநுபவ யோக்யர்  -ஆர்த்தி பிரதானர் -அபி நிவேச பிரதானர் -அபி ருசி பிரதானர் -என்று
ஆட் கொண்ட வில்லி ஜீயர் –

(ஸத்காரம் செய்ய மட்டுமே யோக்யதை – கூடிய வாழ தகுதி இல்லாதவர் -ரூப நாமங்கள் மட்டுமே தரித்து ஆத்ம குணங்கள் இல்லாமல் அனுஷ்டானங்களும் இல்லாமல் இருப்பவர்கள் – திருமந்ரார்த்தத்தில் ஊன்றாமல் -வைஷ்ணவன் என்று கர்வம் கொண்டிருப்பார்கள் -உத்தம அதிகாரிகளிடமுள்ள ஆர்த்தி அபிநிவேசம் அபிருசி-பெருத்த ஈடுபாடு – இல்லாதவர்கள் -ஸதா அனுபவ யோக்யர் –ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ர வாந் -ஸதா பர குணாவிஷ்ட த்ரஷ்டவ் யஸ் ஸர்வ தேஹிபி -விஷ்ணு தத்வம் -உடலைப் படைத்த பயன் இவர்களை அனுபவிப்பதே -) 

(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே என்னை உள்ளபடி -ப்ராப்ய ப்ராபகங்களாக இருப்பவன் என்று-அறிகிறான்)

———————-

வார்த்தை -351-

வைஷ்ணவன் ஆகையாவது -தத்வ ஜ்ஞான நிஷ்டனாகை –
தத்வ ஜ்ஞானம் தான் -ஆசார்ய விஷயீ கார லப்யம் –
ஆசார்ய விஷயீ காரம் தான் -தத்வத்தை நாமறிய வேண்டும் என்னும் அபிநிவேச
அதிசய பூர்வகமாக பஜன லப்யம் –

இந்த இச்சைக்கு முதலடி பகவத் விஷயத்தில் அத்வேஷம் –
அந்த அத்வேஷதுக்கு காரணம் பகவத் கடாஷம் –

பகவத் கடாஷத்துக்கு ஹேது என் என்னில் –

இஸ் சம்ஸார சேதனனுக்கு அநாதியாக
எம்பெருமான் பக்கல் த்வேஷ தூஷிதத்வம் உண்டாகையாலே அவன் பார்த்து அருளுகைக்கு ஈடாக ஓன்று செய்யக் கூடாமையாகையாலே பகவத் நிர்ஹேதுக கடாஷம் –

ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் -இச் சேதனனுக்கு அஜ்ஞாதமான அநந்ய பிரவ்ருத்தி களிலே பிறப்பன சில ஸூக்ருதம் அடியாக
பார்த்து அருளுகிறான் ஆகையாலே வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராது –

இங்கனே இருப்பதொரு ஸூ க்ருதம் அடியாய் இருக்க
நிரஹேதுகம் ஆவான் என் என்னில் –

விழ விட்டு மறந்து போன பொருளை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தவனை –
நம்மதை நமக்குத் தந்தான் என்று இராதே –
இவன் நமக்குத் தந்தான் என்று இருக்கும் க்ருதஜ்ஞதை போலே –
தன் தலையிலே ஒன்றும் இன்றியிலே இருக்க -எம்பெருமான் பார்த்து அருளினான் என்று
க்ருதஜ்ஞனாய் இருக்கிற இவ்வதிகாரி அபிசந்தியாலே நிர்ஹேதுகம் என்கிறது –

இந்த யாத்ருசிக ஸூ க்ருதம் என்கிறதுக்கு அடி சௌஹார்த்தம் –
அவனுக்கு சர்வாத்ம விஷயமாக எப்போதும் உண்டாய் இருக்க -ஒருத்தனுக்கு
ஒருகாலாக யாத்ருசிக ஸூக்ருததை உண்டாக்குவான் என் என்னில் –

நெடும்காலம் அனுபவித்து போந்ததொரு பாபம் சுருக்கம் ஒழிய தொலைந்த அளவிலே
இந்த சௌஹார்த்தம் இவனுடைய யாத்ருசிக ஸூக்ருததுக்கு அடியாம் –

ஜபாகுஸூமச் (செம்பருத்திப் பூ)சாயை பதார்த்தங்கள் எல்லாம் கிடக்க -பளிங்கிலே பிரதி பலிக்குமா போலே-அச்சபாபனான  அதிகாரி (தேய்ந்த -ஷீணித்த பாபத்தால் –தூய்மையான உள்ளம்)பக்கலிலே சௌஹார்த்தம் பலிக்கக் கடவது-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
யாதிருச்சா ஸூஹ்ருதம்
விஷ்ணோ கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாத்விக சம்பாஷணம்
ஆச்சார்ய பிராப்தி )

(நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்–ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த–ஸாமக்ரீ பரம்பராநாதம்-)

———————————————————-

வார்த்தை -352-

ஒருவன் தன்னை வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கலாவது
எவ்வளவு ஜ்ஞானம் பிறந்தால் -என்று பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –

பகவத் பாகவத விஷயங்களிலே ஒரு உச்சாராயம் கண்டால் நெஞ்சு சிவீல்
என்று இருந்தது இல்லை யாகில் (பொறாமை வராமல்)தன்னை -வைஷ்ணவன் என்று இருப்பது –

சிவீல் என்று இருந்தது ஆகில் நமக்கு எம்பெருமானோடு உறவு இல்லை யாகாதே –
சம்பந்த ஜ்ஞானம் பிறந்தது இல்லை யாகாதே என்று நினைப்பது இருப்பது என்று
அருளினார் –

———————————————————

வார்த்தை -353-
த்ருஷ்டத்துக்கு நாக்கு நீட்டாது ஒழிகையும்
அத்ருஷ்டத்துக்கு கை நீட்டாது ஒழிகையும் காண் –
வைஷ்ணவ லஷணம் -என்று நம் பிள்ளை வார்த்தை –

(நாக்கு நீட்டுதல் -ஆசைப்படுதல் -கை நீட்டுதல் -முயலுதல்)

———————————————————–

வார்த்தை -354-

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது
சர்வ உபாய சூன்யதையோ -இதர விஷய வ்ரக்தியோ -சித்த உபாய ஸ்வீகாரமோ -பகவத் பிரேமமோ -என்று கேட்க –

சர்வ உபாய சூன்யதை சம்சாரிக்கும் உண்டு -இதர விஷய விரக்தி ஷபணனுக்கும்(ஜைனனுக்கும்) உண்டு –
சித்த  உபாய ஸ்வீகாரம் கேவலனுக்கும் உண்டு -பகவத் ப்ரேமம் ஏகாயநனுக்கும் உண்டு –
ஆகையால் இவை இத்தனையும் அன்று –

இவற்றோடே கூட- பகவத் அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தாலே பிறப்பதொரு தாந்தி விசேஷம் –அதாவது -பரிபவத்தில் நிர் தோஷ அநுசந்தானம் -நிர் பரத்வ அநுசந்தானம் -உபகார ஸ்ம்ருதி –இரக்கம் என்று அருளிச் செய்தார்-(சாந்தி தாந்தி மன புலன்கள் அடக்கம்-நாம் பண்ண வேண்டிய நம்முடைய தோஷ அனுசந்தானம் இவர் பண்ணுவதால் அவர் மேல் உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டுமே-பெருமாள் சீற்றம் பட்டு இவற்றை தண்டிக்கக் கூடாதே -இரக்கமும் வேண்டும்)

————————————————-

வார்த்தை -355-

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் –
க்ரியா ப்ரதான்யம் -சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று –

பாவந ப்ரதான்யமே ப்ராதான்யம் – நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று –
நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே

(யாவையும் எவரும் தானாய் அவர்அவர் சமயந் தோறும்
தோய்வுஇலன்; புலன்ஐந் துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதும்ஓர் பற்றுஇ லாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.)

வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் –
நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும் –

நாடாவது -சம்சாரம்
நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் – ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –

(ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.)

—————————————————

வார்த்தை -356-

வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அடுக்கு குலையாத முஷ்டியும்
ஆஸ்திக்யம் குலையாத ஸ்ரீ வைஷ்ணத்வமும்-

(அவனே ப்ராப்யம் ப்ராபகம் -ததீய பர்யந்தம் -பாகவதருக்கு உகந்த கைங்கர்யம் செய்தல் இவற்றில்-உறுதி குலையாமல் மஹா விஸ்வாஸம் -)

——————————————————

வார்த்தை -357-

திருநகரிப் பிள்ளை -ஆழ்வார்கள் அருளிச் செயலிலே அந்வயம் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தன் உயிராக நினைத்து இருப்பன் –
ஆசார்யர்கள் பாசுரங்களிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை தன்னுடைய சத்தை யாக நினைத்து இருப்பன் –
இரண்டோடும் அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை அல்லது ஸ்ரீ வைஷ்ணவன் என்று அறுதி இட ஒண்ணாது-

——————————————

வார்த்தை -358-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இவர்களுக்கு பேராகைக்கு அடி ஏது என்று கேட்க –
1-ஸ்ரீ மத் புத்ரர் ஆகையாலும் (ராஜகுல மஹாத்ம்யம்)-2-ஸ்ரீ மான் பிதா வாகையாலும் -3-ஸ்ரீ புருஷகாரம் ஆகையாலும் -4-ஸ்ரீ மான் வைபவத்தை அறிகையாலும் -5-இவர்கள் ஸ்ரீ மத் பதத்தே பிறக்கையாலும் (த்வய நிஷ்டர்கள்)- ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் -என்று பெரிய கோயில் வள்ளலார் அருளிச் செய்வர்-

————————————————–

வார்த்தை -359-

ஸ்ரீ வைஷ்ணவனுடைய தின சரிதம் –
1-குரு பரம்பரையும் -திரு மந்த்ரத்தினுடைய விசத அநுசந்தானமான த்வயத்தையும்
சதா அநுசந்தானம் பண்ணுகை –
2-த்வய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சஹ வாஸம் பண்ணுகை –
3-அஹங்கார க்ரஸ்தரான சம்சாரிகளோடு அணுகி வர்த்தியாது ஒழிகை-

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-
4-சாத்விக சமாசாரம் ஒழிய நாட்டாருடைய பரிமாற்றங்களை நேராக நிவர்திக்கை –
5-உத்தேஸ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களை உதாசீனம் பண்ணாது ஒழிகை –
6-த்யாஜ்யரான சம்சாரிகளை த்ருஷ்டம் அடியாக அனுவர்த்தியாது ஒழிகை –
7-ஆசூர பிரக்ருதிகளுக்கு அத்ருஷ்ட வார்த்தை சொல்லாது ஒழிகை -(ஸாஸ்த்ர விதி நம்பாமல் விஷ்ணு பக்தர் அல்லாமல் இருப்பவள் அசுர ப்ரக்ருதிகள்-விஸ்வாமித்திரர் திரிசங்குக்கு ஸ்வர்க்கம் தந்தது கூடாதது தானே)
8-சாது பரிக்ரஹமும் சதாசார்ய பிரசாதமும் ஸ்வரூப வர்த்தகம் என்று இருக்கை –
9-பகவத் பாகவத விஷயங்களில் அநுகூல வ்ருத்தியை தேக யாத்ரா சேஷம் ஆக்காது ஒழிகை(வ்ருத்தி செய்து அதற்குக் கூலியாக பணம் வாங்கி கால ஷேபம் பண்ணக் கூடாது)
10-ஸ்துதி நிந்தைகளில் அவிக்ருதனாய் இருக்கை –
11-ஸ்வ தோஷ தர்ஸனம் பண்ணுகை –
12-ஸ்வ ப்ரசம்சை பண்ணாது ஒழிகை –(தற்புகழ்ச்சி கூடாது)
13-ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பாரதந்த்ர்ய பராகாஷ்டை
பாகவத பாரதந்த்ர்யம் என்று இருக்கை –

14-இவ்வோ அர்த்தங்களை அனுசந்தித்து உண்டான அம்சத்துக்கு உபாய பூதனான
எம்பெருமான் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணுகை –
15-இல்லாத அம்சத்துக்கு அநுதாப பூர்வகமாக ஈஸ்வரனை இரக்கை –
16-இவ்வர்த்த நிஷ்டை தனக்கு உண்டான போது நிஷ்டை இல்லாத வேஷ தாரிகளை நெஞ்சாலே நெகிழ நினையாதே பகவத் ப்ரபாவத்தை இட்டு ஆதரிக்கை –

நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -என்று
இவ் வர்த்த நிஷ்டை தான் பகவத் பிரசதத்தாலே பலிக்கும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தாலே வருமதன்று –

அக்ரூர மாலாகார அதீந் பரம பாகவதான் க்ருத்வா-(கீதா பாஷ்ய அவதாரிகை )என்று பிரமாணம் –

(துரா சாரோ அபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக புரா ஸமாஸ்ரயே தாதி தேவம் ஸ்ரத்தாயா சரணம் யதி நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -தீய ஒழுங்கங்களை யுடையனாய் -எதையும் உண்பவனாய் -செய்ந்நன்றி கொன்றவனாய் -நாஸ்திகனாய் அநாதி காலம் இருந்தாலும் ஆதி தேவனான எம்பெருமானை ஸ்ரத்தையுடன் சரணம் அடைந்தானாகில் பரமாத்மாவின் பெருமையால் தோஷ மற்றவன் அவன் என்றும் அறிவாயாக –அக்ரூர மாலாகாரதீந் பரம பாகவதான் க்ருத்வா -கீதா பாஷ்ய அவதாரிகை -அக்ரூரர் மாலாகாரர் முதலானவர்களை பரம பாகவதர்களாச் செய்தவையே இவ் விஷயத்தில் பிரமாணம்-)

இவ்வோ அர்த்தங்கள் தங்களுக்கு உறுப்பாக அதிகரிக்குமவை அல்லது பிறருக்கு சொல்லுகைக்கு கற்குமவை அன்று -(தாமும் அனுஷ்டித்த பின்பே சிஷ்யர்களுக்கு உபதேசித்து அருளி திருத்திப் பணி கொண்டருள வேண்டும்)

———————————————————–

வார்த்தை -360-
பெருமாள் எழுந்து அருளா நிற்கத் திருவடி தொழப் புறப்பட்டருளி
நஞ்சீயர் திருமேனியிலே திருநாமங்கள் இன்றியிலே இருந்தபடியைப் பார்த்து –
பர்த்தாவின் முன்பே தாலி கட்டாமல் நின்ற ஸ்த்ரியைப் போலே இரா நின்றது
திருமண் கொண்டு வாரும் கோள் என்று அருளினார் –

(திருத் தை புஷ்ப உத்ஸவம் கல்யாணி புஷ்கரணிக்கு வேகமாக முக்காடு போட்டு எழுந்தருளி பின்பு மெதுவாகத் திரும்பி உத்ஸவம் கண்டருளுகிறார்)

——————————————-—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -337-348–அரும் பத விவரணத்துடன்–

February 24, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -337-
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி ததீய சேஷத்வம் –
பர ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அர்ச்சாவதாரம் –
விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அஹங்கார மமகாரங்கள் –
உபாய  ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவத் கிருபை –
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவந் முகோல்லாசம் –
என்று நம்பிள்ளை வார்த்தை –

(பெரும் புறக் கடலும் ஸ்ருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்தோடும் இடங்களில்
அயோக்யர்க்கு சமைத்த மடுவும் சாய்கரமும் மாநமேயசரமம் ..சூரணை–74-)

——————————————————————————

வார்த்தை -338-

கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் –
பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –

———————————————————————————–

வார்த்தை -339-
அம்மணி ஆழ்வான் இரு நூற்று காதம் ஆறு வந்து பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டனிட்டு –
நெடுமாற்கு அடிமை அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்று அபேஷிக்க –

பட்டரும் -எம்பெருமானை அறிகை யாவது -அவனுக்கு அரை வயிற்றுப் படி –
ததீயரை அறிகை யாவது -அவனை முழுக்க அறிகை -என்று அருளிச் செய்ய –

இனி பலவகையாக அருளிச் செய்யில் அடியில் மறப்பேன் -என்று அவர்
அது தன்னையே தாரகமாக கொண்டு போனார் –

(பக்த வைபவம் கேட்டால் அல்லிக் கமலக் கண்ணனாக இருப்பானோ அன்றோ_

————————————————————————————

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

(தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10—நறையூர் நம்பிக்கை நூறு பாசுரங்கள் இறுதி பாசுரம் -அடுத்தது திருச்சேறை பாசுரம்-நல்ல மா மலர் சேவடி -என்பதே பாகவதர்களைக் காட்டும்-கால் வாசி –திருவடி பெருமை முழுவதும் அறிய நம்பிக்கு ஆசை)

பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

(அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-)

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

(விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-)

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

(மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-)

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

(பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-)

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

(பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6–திரிதந்தாகிலும் –கரிய கோலத்திரு உரு காண்பன்-ஆழ்வார் உகந்த விஷயம் என்று காண்பன்)

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

(வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-)

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

(ஒருகாலும்-உபாயத்துக்கு புருஷகாரத்துக்காகவும் உபேயத்துக்கு ஸீமா பூமி யாகையாலும் -போதயந்த பரஸ்பரம் ஆகையாலும்)

(தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)

(இவர் முன்னிடுமவரை அவன் முன்னிடுவது இருவரும் தம் தாம் குற்றங்களை ஷமிப்பைக்காக -பெருமாளும் மஹாராஜாரை இட்டே விபீஷணன் அங்கீகாரம் அருளினார்)

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

(மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட (வாடினேன் வாடி தொடங்கி திவ்யதேச மங்களாசாசனமாக உபக்ரமித்து)என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜ புருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

(என்னிலும் மேலாக ததீயரைச் சொன்னீரே என்ன -பிராட்டியை உத்க்ருஷ்டமாக பட்டர் பாட பெரிய பெருமாளுடைய கவசம் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பூரித்து வெடிக்குமா போலே உகப்பான் அன்றோ)

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

(நடையாடும் ஜங்கம விமானம் -பகவானை உள்ளத்துக் கொண்டு உலாவும் பெருமாள் தானே ததீயர்)

———————————————————

வார்த்தை -341-
1-ஒரு தேச விசேஷத்து ஏறப் போய் அனுபவிக்கும் அநுபவம் சாத்மிக்கைக்காகாவும் –
2-உபகார ஸ்ம்ருதிக்காகவும் –
3பிரபத்தி பண்ணின போதே -பரம பதத்து ஏறப் போக்கில் –நச்சுப் பொய்கை என்று சம்சாரிகள் இத் துறையில் இழிவார் இல்லாமையாலும் –
4-இவன் சம்சாரிகளைத் திருத்த வேண்டுகையாலும் –
5-பிரபன்னனுடைய சரீரம் சரம சரீரம் ஆகையாலும் –
6-சர்வேஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும் -(சரம விமல திருமேனி -த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -மங்க ஒட்டி மா மாயை என்று பிரார்த்திக்க வேண்டுமே)
7-இத் தேசத்தில் பகவத் அனுபவம் தான் இவனுக்கு அபூர்வம் ஆகையாலும் -(அச்சுவை பெறினும் வேண்டேன் -திருவாறன்விளை உத்தேச்யம் அவன் உபாயம் என்றும் இருப்பார்கள் அன்றோ)
8-ஆசை கிளரவும் – 9-இவன் தன் இசைவாலும்(மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவர் உலகம் எய்வாரே) இவ் வர்தங்களைப் பற்ற வாய்த்து சரீர அவசாநத்திலே மோஷம் ஆகைக்கு அடி -)மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)

————————————————————-

வார்த்தை -342-

கழிந்த நாளைக்கு அநுதபிக்கையும்
வருகிற காலத்தை பழுது போக்காமையும் -காண்
வைஷ்ணத்வம் ஆகிறது -என்று நம்பிள்ளை –

பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -முதல் திருவந்தாதி -16
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-
பிறந்த பின் மறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-.
அரவணை மேல் கண்டு தொழுதேன் -முதல் திருவந்தாதி -16

———————————————————

வார்த்தை -343-
நம்பிள்ளை நஞ்சீயரை -தான் தனக்கு வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது எவ் வவஸ்தை பிறந்தால் -என்ன –
அர்ச்சாவதாரதுக்கு உயிர் உண்டு என்று நெஞ்சில் பட்ட வன்றும் –
ஒரு வைஷ்ணவன் பக்கல் புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹத்தளவாகிலும் ஸ்நேஹம் பிறந்த வன்றும் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமல் –(கோபம் கொள்ளாமல்) -போக ரூபமான வன்றும் –
பர தார பர த்ரவ்யங்களில் நசை யற்ற வன்றும் –
ஏகாந்தி என்று அறியலாம் –

ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களில் நசை யற்ற வன்று பரமை காந்தி என்று
அறியலாம் என்று அருளிச் செய்தார் -(நாராயணாய பதார்த்தம் அநந்ய போக்யத்வம் வேண்டுமே )

————————————————————-

வார்த்தை -344-
பொன்னாய்ச்சியார் வார்த்தை –
பாண்டிய மண்டலத்திலே ஒரு வைஷ்ணவனுடைய வைஷ்ணவத்தைக் கொண்டாட
எழுதி அணிந்த வைஷ்ணவத்வமோ -எல்லை நிலத்தில் வைஷ்ணவத்வமோ -என்று –

(நாம ரூப மாத்திரமே இல்லாமல் ததீயர் வரை செல்ல வேண்டுமே)

———————————————————-

வார்த்தை -345-

பட்டர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் சேவிப்பார் ஒரு வைஷ்ணவரை –
நீர் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி
என் -என்று கேட்டு வாரும் என்ன –

அவரும் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் செல்ல –
அன்று பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கே  அமுது செய்து அருள –

அவரும் இடம் பெறாமையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யும் அளவும் பேசாதே இருக்க –

அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து –
அமுது செய்து அருளிற்று இல்லையே -நெடும் போதுண்டே இளைப்போடே நிற்கிறது
என்று -அனந்தாழ்வான் தாமும் அவருமாக உள்ளே அமுது செய்து அருளி -பின்னை
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறது -என்ன –

பட்டர் -அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என்னென்று கேட்டு வா என்று அருளிச் செய்து விட்டார் -என்ன –

ஆகில் –
கொக்குப் போலே இருக்கும் -கோழி போலே இருக்கும்–உப்பு போலே இருக்கும் – உம்மைப் போலே இருக்கும் என்றும் விண்ணப்பம் செய்யும் என்றும் அருளிச் செய்தருளினார்

(ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு -அதே போல் நீர் வண்ணனிடம் அசார அல்ப சார சார சார தரங்களை உபேக்ஷித்து சார தமமான பாகவதர்கள் உகந்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று இருப்பார்கள் -கோழி குப்பையைக் கிளறிக் கிளறி நெல் மணியைக் கொள்ளுமா போலே ஸாஸ்த்ரார்த்தங்களை ஆராய்ந்து ஆச்சார்ய அபிமான நிஷ்டையில் ஒதுங்குவார்கள் -உப்பு மறைந்து இருந்து பதார்த்தங்களை போக்யமாக்குவது போல் –பாண்டித்யம் நிர்வித்ய பால்யே ந திஷ்டாஸேத்-பாண்டித்யத்தை மறைந்து குழந்தை போல் கூட்டத்துக்கு போக்யமாக இருப்பார்கள் –இம் மூன்று லக்ஷணங்களும் பரிபூர்ணமாக நிறைந்த உம்மைப் போலே இருப்பர்)

—————————————————————

வார்த்தை -346-

பர ஸம்ருத்தி அஸஹத்வம் –
பர ஸம்ருத்தி ஸஹத்வம்-
பர ஸம்ருத்தி ஸ்வ ஸம்ருத்தி ப்ரயோஜநத்வம்-
பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜநத்வம்-

(நான்கு வித அதிகாரிகள் -மேல் மேல் உயர்ந்தவர்கள் -1–பிறர் மினுக்கும் பொறாமை-பிறர் பெருமை பெறாதவர்கள் -2-பிறர் பெருமை பொறுப்பவர்கள் -3 பிறர் பெருமை தங்களுக்கு பயனாக கொள்பவர்கள் -4- பிறர் பெருமையையும் தம் பெருமையையும் பயனாக கொள்ளாமல் பிறர் பெருமையையே பயனாகக் கொள்பவர்கள்)

(தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-)

————————————————————–

வார்த்தை -347-
ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிறான் சம்சாரத்தில் நசை யற்று -பரம பதத்திலே
ஆசை பிறந்தவன் -இவனுக்கு பரிஹரிக்க வேண்டுவது என் என்னில் –

உடம்பில் ருசி விளையாது ஒழிகையும்
உறவு முறையார் பக்கல் ஆசை வளராது ஒழிகையும் –
உடம்படியாக உகக்கும் அவர்களோடு உறவு கொண்டாடாது ஒழிகையும் –
லோகம் சிலுகிடாமல் ஒதுங்கி வர்த்திக்கையும் –
உடம்புக்கு இரை தேடி ஒருவனுக்கு ஏவல் தொழிலை ஒருபடியாலும் செய்யாது ஒழிகையும் –
உள்ளத்துக்கு உள்ளே நிற்கும் ஒருவன் பக்கல் ஒருபடிப்பட்ட ருசி உண்டாய்ப் போரவும்-(உண்டியே உடையே என்று உகந்து இருக்கும் இம்மண்டலத்தோடே கூடாமையும் -புலன்களை அவன் பால் திருப்பியும்)

தலை அறுப்புண்டவனையும் தலை அறுத்து அத்தாலே சந்நிதியிலே தலையோடு ஏந்தினவனையும் -இவர்களுக்கு கீழான சந்திர ஆதித்யர்களையும் சரணம் என்று புகாது ஒழிகையும் –
இவர்களை சரீரம் ஆகவும் அடிமையாகவும் உடைய எம்பெருமான் பக்கல் ஆன அடிமை செய்து போரவும் –

எம்பெருமானே தஞ்சம் என்று சரணம் புக்கவர்களைத் தனக்குத் துணையாகவும்
உயிராகவும் நினைத்துப் போரவும் –
இவர்களோடு விளையாடியும் பொல்லாங்கு சொல்லாது ஒழியவும் –
இவர்களைப் பொல்லாங்கு சொல்லுவார் உடனே கூடினர் ஆகில் அவர்களை
வாயைக் கிழித்தல் -தான் செவியைப் புதைத்துக் கொண்டு கடக்கப் போதல் செய்யவும் –

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின் பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.-8-இது பகவத் விஷயத்தில் இங்கு பகவத் பக்தரான அடியவர்கள் விஷயத்தில்

எம்பெருமான் திரு வாசலுக்கு உள்ளேயே மயிர் விரித்தல்  -உமிழ்தல்- கால் நீட்டுதல்
தொடக்கமானவை வருந்தியும் தவிரவும் –
ஆபத்துகளாலே புகுந்து ஒதுங்க வேண்டிற்று ஆகில் -அனர்த்தப் படா நின்றோமே -என்று அஞ்சிப் போரவும் –

இப்படிப்பட்ட போது போக்கு சம்சாரத்தில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –

——————————————————————–

வார்த்தை -348-
பட்டரை ஒருவன் -தேவதாந்தரங்களை வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது
ஒழிவான் என் -என்ன –

பிரமாண விரோதம் உள்ள இடத்தில் அன்றோ சந்தேஹம் உள்ளது -இங்கு சந்தேஹம் இல்லை காண் -என்று அருளிச் செய்தார் –

ஆவதென் என்ன –

சத்வ ப்ரசுரரை -ரஜஸ் தம பிரசுரர் அனுவர்த்திக்குமது ஒழிய
சத்வ ப்ரசுரர்- ரஜஸ் தம ப்ரசுரரை அனுவர்த்திக்கக் கடவதோ -என்று அருளிச் செய்தார் –
தேஷாமபி நமோ நம -என்கிறபடியாலே –

(யஸ் த்வைவம் ப்ரஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வஸே -புருஷ ஸூக்தம்-2-5- எவன் பரம புருஷனான உன்னையே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் அறிகிறானோ அவனுக்கு எல்லாமே தேவர்களுக்கும் வசப்பட்டு இருப்பார்கள் –
ஸர்வே அஸ்மை தேவா பலிமா வஹந்தி -சீஷா -5-எல்லா தேவர்களுக்கும் பகவத் பக்தனுக்கு கப்பம் கட்டுகிறார்கள்
தஸ்ய யஞ்ஞ வராஹஸ்ய விஷ்ணோர் அமித தேஜச பிரணாமாம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம -சாந்தி -46-130-அளவற்ற தேஜஸ்ஸை யுடையவனாய் யஞ்ஞ வராஹ ரூபியாய் அவதரித்த விஷ்ணுவுக்கு ஒரு நமஸ்காரம் செய்பவர்களுக்கு இடைவிடாமல் நமஸ்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டும் -என்று யமன் கூறினான் -)

(ஆழி மழைக் கண்ணா –இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும்-என்று பிரார்த்திக்க- இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –-ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் – தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்-தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்- பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -325-336–அரும் பத விவரணத்துடன்–

February 15, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -325-

ஸ்வரூப நாசகரோடு செறிகையும் அநர்த்தம் –
ஸ்வரூப வர்த்தகரோடு செறியாது இருக்கையும் அநர்த்தம் –
என்றும் அசத் சங்கதி அநர்த்தத்தில் தலைக் கட்டும் –
சத் சங்கதி சதா பஸ்யந்தியில் தலைக் கட்டும் -என்று ஆச்சான் பிள்ளை வார்த்தை –

(தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய)

————————————————

வார்த்தை -326-

பெரிய திருநாள் தீர்த்தம் பிரசாதித்து பெருமாள் எழுந்து அருளுகிற போது
எம்பெருமானார் தாமும் தீர்த்தமாடி சேவித்து எழுந்து அருளுகிறவர் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கை கொடுத்து வர –
இதென் -என்று சிலர் விண்ணப்பம் செய்ய –

ஜன்மம் உயர்ந்து இருக்கத் தாழ நின்றோமே என்கிற அபிமாநம் உண்டு இறே எல்லாருக்கும் –அக் கொத்தையும் இல்லாதவர் இறே இவர் -என்று அருளிச் செய்து அருளினார் –

(வேதகப் பொன் -ராமானுஜ ஸ்பர்ச வேதி -என்று அழைக்கப்பட்டார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -இரும்பை பொன்னாக்கும் ஸ்பர்ச வேதி -)

(அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே)

(பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே)

———————————————–

வார்த்தை -327-

பட்டர் நீராடி எழுந்து அருளா நிற்க -ஒரு சைவன் எதிரே வர -அவன் உடம்பில் சாம்பல்
தம் திருமேனியில் படிந்தால் போலே இருக்க –

பின்னையும் போய் நீராடி எழுந்து அருளி
உள்ளே எழுந்து அருளாதே திருமாளிகை வாசலில் நின்று ஆண்டாளை அழைத்து
இப்படி பட்டத்துக்கு பிராயச் சித்தம் அருளிச் செய்ய வேண்டும் -என்ன

ஆண்டாளும் நெடும் போது திகைத்து நின்று -ஸ்ரீ பாத தீர்த்தத்தை  யாகிலும் கொள்ளும்
இத்தனை யன்றோ -என்ன –

அது சேருமோ என்ன –

உயிர் மாளும் அளவில் உயிரை மாறி யாகிலும் உயிரை நோக்க வேண்டாவோ (ஆத்ம நாஸம் வாராமல் உயிரை விட்டாவது நோக்க வேண்டுமே)என்ன –

ஆகில் திரு உள்ளம் ஆனபடி செய்யும் இத்தனை யன்றோ -என்ன –

அவ்வளவிலே ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையரை
ஸ்ரீ பாதம் தாங்குகிற(ப்ரஹ்ம ரதம் தாங்குவார்) சொல்லாமல் சுட்டார் இங்கே தண்டு வாங்க எழுந்து அருள –

ஆண்டாள் அவரைக் கண்டு -தீர்த்தம் வாரா நின்றது -என்ன –

பட்டர் -நமக்கு கூடுகிறதோ என்ன –

முற்றூண் இட்டுக் கறக்கிலும் பசலுக்கு பால் அன்றோ வேண்டுவது -என்ன –

பட்டரும் -அப்படியே செய்கை யன்றோ உள்ளது -என்ன –

கலசப் பானையில் திருமஞ்சனம்
கொண்டு ஸ்ரீ பாதத்திலே சொரிந்து தீர்த்ததையும் பிரசாதப் பட்டு ப்ரீதர் ஆனார் –

—————————————————————–

வார்த்தை -328-
பட்டர் அறியில் சம்மதியார் என்று பட்டருடைய ஸ்ரீ பாதத்தை
வேறே சிலரை இட்டு விளக்குவித்து ஆண்டாள் பிரசாதப்படுவார் என்று
நஞ்சீயர் அருளிச் செய்தார் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

——————————————————-

வார்த்தை -329-
பகவத் சேஷத்வம் சர்வ சாதாரணமுமாய்(சேதனரும் அசேதனரும் பகவத் சேஷம் உடையவர்கள் தானே) -சேதனனுக்கு -பாகவத் சேஷத்வம்-சர்வ அசாதாரணமுமாய் இருக்கும்– பகவத் சேஷ வ்ருத்தி சர்வ ஜன சாதாரணமுமாய் இருக்கும் –பாகவத சேஷத்வமும் பாகவத கைங்கர்யமும் பரமை காந்திக்கே அசாதாரணம் –

———————————————————-

வார்த்தை -330-

பாகவத வைபவம் சொல்லா நிற்கச் செய்தே -ஒருவர் பகவத் விஷயம் சொல்ல-
இப்போது விசேஷம் சொல்லுகிற இடத்தில் சாமாந்யம் என் -என்று ஆச்சான் பிள்ளை –
————————————————————-

வார்த்தை -331-
மத் பக்த விஸ்லேஷ விஷயத்தில் சத்தை உடனே இருக்குமவர்கள்-மத் விஷய சத்ருக்கள் -என்று ஈஸ்வர வாக்யம் –

மறுவலிடாத சப்தாதி விஷயத்தில் ப்ராவண்யத்தில் விரக்தியும் –
வளரா நிற்பதான பாகவத விஷய ப்ராவண்யமும் காண் -வைஷ்ணவ லஷணம் ஆவது -என்று நம்பிள்ளை –

(த்விஷத்தன்னம் ந போக்த்வயம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவான் த்விஷஸே ராஜன் மம பிராண ஹி பாண்டவ-த்வேஷிப்பவர்களது உணவு உண்ணத்தக்கது அன்று-த்வேஷிப்பவர்களுக்கு உணவு அளிப்பதும் கூடாது -அரசனும் உன்னைச் சேர்ந்த பீஷ்ம த்ரோணாதிகளும் பாண்டவர்களைத் த்வேஷிக்கிறீர்கள் -பாண்டவர்கள் எனக்கு உயிர் அன்றோ –)

———————————————————

வார்த்தை -332-
ஒருவனுக்கு ஒரு வ்யசனம் உண்டானால் அந்த வ்யசனம் தீரும்படியாக பிரசாதிக்க வேண்டும் என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அபேஷிக்க –
அந்த ஸ்ரீ வைஷ்ணவனும் பிரசாதிக்க –
அவனுக்கு அந்த வ்யசனம் தீரக் காணா நின்றோம் –
இது பகவத் சக்தி யாலேயோ வைஷ்ணவன் சக்தி யாலேயோ -என்று
பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையை கேட்க

பகவத் சக்தியாலேயே என்று அருளிச் செய்ய –

ஆனால் எம்பெருமானை அபேஷிக்க அமையாதோ -என்ன –

அமையாது -அவனை பிரசாதிப்பித்திக் கொள்ளும் வகை இது வல்லதில்லை -என்ன –

ஒரு வைஷ்ணவன் பிரதிஞ்ஜையை எம்பெருமான் முடித்துக் கொடுத்த இடம் உண்டோ -என்ன –

அர்ஜுனனுக்கு ஜயத்ரதநோபாதி பலம் இன்றிக்கே இருக்க -நான் அஸ்தமிக்கும் முன்பே
ஜயத்ரதனை வதிக்கக் கடவேன் -என்று அர்ஜுனன் பண்ணின பிரதிக்ஜையை
சர்வேஸ்வரன் முடித்துக் கொடுத்தமை கண்டிலீரோ என்று அருளினார் –

———————————————————

வார்த்தை -333-

நம் பிள்ளை வார்த்தை –பிரபன்னர் ஜுவரமாய் கிலேசியா நிற்க –
பிள்ளை காரியார் தாசரும் -சக்ரபாணிப் பிள்ளானும் அறிய வந்த அளவிலே –
இடவகையில் உத்தம நம்பி ரஷகனாய் கிலேசியா நின்றான் என்ன

பிரபன்னர் -வர்த்தமான ரோக ஸாந்தி ரஸ்து – என்று பிரசாதிக்க –

பிள்ளான் -நீர் கிலேசியா நிற்க பிரசாதிக்கை ஆவது என் –
அது சமிக்கை யாவது என் -என்ன –

பிராட்டி ராவண பவனத்தில் இருந்து ராஷசிகளால் கிலேசிகப்பட்டாள் -என்ன –

அவள் -சீதோ பவ ஹநூமத -என்ற வாக்யம் பலித்தது இல்லையோ -என்று மூதலித்துக் கொடுத்தார் –

(தன்னைத் தானே ரக்ஷிக்க மாட்டார்கள் -பாகவதர்களை ரக்ஷிக்காமல் விடமாட்டார்கள் அன்றோ-பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் -தயை- -)

——————————————————–

வார்த்தை -334-

அனந்தாழ்வான் நோவு சாத்திக் கிடந்தார் என்று கேட்டருளி
திருவேங்கடமுடையான் – அனந்தாழ்வானை அறிந்து வாரும் கோள் -என்று
சில ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு அறிவிக்க –

ஆளிட்டு அந்தி தொழுதானோ என்ன –

திருவேங்கடமுடையான் எழுந்து அருளி வாசலிலே வந்து நிற்க

பேசாதே கிடந்தார் –

அனந்தாழ்வான் நான் வர பேசாதே கிடந்தாயீ -என்ன –

ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் வரப் பேசாதே யிருந்தேன் ஆகில் அன்றோ
எனக்கு குறை யாவது -என்ன –

நாம் உம்மை இதனின்றும் போகச் சொல்லில் செய்வது என் என்ன –

நீர் ஒரு கிழமை முற்பட்டீர் இத்தனை யன்றோ –
இருவரும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் இத்தனை -யன்றோ -என்று
அருளிச் செய்தார் –

(பரன் சென்று சேர் திருவேங்கடம்-ஆண்டுக்கு இரண்டு தடவை மலையப்ப ஸ்வாமிகள் அனந்தாழ்வான் தோட்டத்துக்கு எழுந்து அருளி அனுக்ரஹம் செய்து அருளுகிறார்-நீ கைங்கர்யம் எற்றுக் கொள்ள வந்தாய் -அடியேன் ஆச்சார்யன் கைங்கர்யம் செய்ய வந்தேன் -புஷ்ப்ப மண்டபம் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -)

————————————————————-

வார்த்தை -335-
எம்பெருமான் இடைச்சி கையிலே கட்டுண்டு இருந்தபடி –
ராஜா அந்தபுரத்திலே மாலையாலே கட்டுண்டு இருந்தால் போலே –

(கிசோர பாவம் -கோபால விம்சதி –மாலை கொண்டு அங்கு ஆர்த்ததோர் அடையாளம்)

—————————————————————–

வார்த்தை -336-
மூன்று வஸ்துவிலே பகவத் வஸ்து வளரும் என்று பணிக்கும்
திரு வனந்தாழ்வான் மடியிலும் -(சீராட்டி வளர்க்கப்படுகிறார்)
பெரிய திருவடி திரு முதுகிலும்-(பாராட்டி வளர்க்கப்படுகிறார்)
சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும் –

பிராட்டிமார்களுடன் லீலை ரஸம் அனுபவித்துக் கொண்டு இருக்க லீலையாலே ஜகந் நிர்வஹணத்தை மறக்கிறானோ என்று நியமிக்கைகாக-சேனை முதலியார் எழுந்து அருளின வாறே –
இந்தாணும் ஐயர் வந்தார் -என்று நாய்ச்சிமார் உள்ளே புக்கருளுவாராம் –

(வானிளவரசு வைகுந்தக்குட்டன் -தாய் போல் பொங்கும் பரிவுடைய திருவனந்தாழ்வான்-முதுகில் சுமந்து விளையாடும் பெரியதிருவடி -உபாத்தியாயர் போல் கையும் பிரம்புமாக விஷ்வக்சேனர்)

(கிரீட மகுட சூடாவதாம்ஸ-கிருஷ்ண ராஜ முடி ராஜ முடி வைரமுடி)

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

—————————————————–——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -313-324–அரும் பத விவரணத்துடன்–

February 15, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -313
அஜ்ஞனுடைய குணமும் -ஞானவானுடைய குண ஹானி-மூல ஸ்பர்ஸமுள்ள இரும்பு பொன்னாம் என்று இருப்பர்கள் –
பகவத் ஸ்பர்சம் உண்டானால் சம்சாரம் அற்றது என்று இரார்கள் –

(இங்கு குணம் நம்பிக்கை -மூல ஸ்பர்ஸமுள்ள இரும்பு பொன்னாகும் என்று சாமான்யர் இருப்பார்கள் -அத்ருஷ்ட பகவத் ஸ்பர்சம் த்ருஷ்ட ஸம்ஸாரம் அற்றுப்போகும் என்றும் நம்ப மாட்டார்கள் அன்றோ)

த்வார சேஷி பக்கலிலே துவளக் கடவ இக் கெடுவான் –பிரதான சேஷி பக்கலிலே துவளாமல் இழந்து விட்டானே –

(அஞ்ஞானிக்கி உள்ள உறுதி ஞானிக்கு இருக்காதே என்றவாறு-அது தாழ்ந்த விஷயத்தில் இது உயர்ந்த விஷயத்தில்–ப்ரயாக்ராஜ் -60 கோடி மக்கள் நீராட -இங்கு துலா காவேரி ஸ்நாநம் -ஆடிப் பெருக்கு கூட்டம் குறைவு தானே -ஞானம் மிக்கு பிரேமம் இல்லாமல் இழக்கிறார்கள்-த்வார சேஷி-மூல ஸ்பர்ஸமுள்ள இரும்பு பொன்னாகும் என்றும் அறிவித்தவர்-பிரதான சேஷி ஆச்சார்யர் என்றவாறு)

————————————————–

வார்த்தை -314-
ஒருவனுக்கு 1-பாரதந்த்ர்யமும் 2-வ்யவசாயமும் 3-வ்ருத்தியும் வேண்டும் -(ஓம் நாம நாராயண -சம்பந்த உபாய பலன்களில்)

பௌருஷத்தை (ஸ்வ ஸ்வாதந்தர்யம்)ஏறிட்டுக் கொண்டு பாரதந்த்ர்யத்தை அழித்தான் –
வ்யாபாரத்தை (ஸ்வ ப்ரவ்ருத்தி)ஏறிட்டுக் கொண்டு வ்யவசாயத்தை அழித்தான் –
விஷயாந்தர (ப்ரயோஜனாந்தரம்)அனுவ்ருத்தியை ஏறிட்டுக் கொண்டு வ்ருத்தியை அழித்தான் –

——————————————————-

வார்த்தை -315-

ஆத்ம சாஷாத்கார ஞானம் பிறவாமையாலே ஸ்வ தேகாத்ம அபிமானம் போகிறதில்லை –
பகவத் பாரதந்த்ர்ய சாஷாத்கார ஞானம் பிறவாமையாலே ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் போகிறதில்லை –
பகவத போக்யதா விஷய சாஷாத்கார ஞானம் பிறவாமையாலே விஷய ப்ராவண்யம் போகிறதில்லை –

—————————————————–

வார்த்தை -316-
உடையவன் உடைமையை முன்னிட்டுக் கொண்டு கிடந்தான் -(சொத்து இருந்தால் தானே ஸ்வாமி)
உடைமை விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு கிடந்தது (ஸ்வாமியின் உகப்புக்குத் தக்க பயன்பாடு)-விநியோகம் ப்ரீதியை முன்னிட்டுக் கொண்டு கிடந்தது–ப்ரீதி உபாயத்தை முன்னிட்டுக் கிடந்தது -(ஞானீத் மே ஆத்ம -பரமைகாந்தி -உண்ணும் சோறு எல்லாமே கண்ணன் என்றும் இருப்பார்கள் மேல் ப்ரீதி பிறந்து விநியோகம் கொள்வான்)
பர ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஸ்வ ஸ்வரூபத்தை அறிந்திலன் –(பேற்றுக்குத் த்வரை பிறந்து மடல் எடுத்துக் காமன் கால்கள் விழுந்து ஸ்வ ஸ்வரூபன் அறியாமல் இருப்பார்கள் அன்றோ)ஸ்வ ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஜீவனத்தை அறிந்திலன் –

————————————————————

வார்த்தை -317-

உடையவர் திருக்கண்ணபுரத்துக்கு எழுந்து அருளுகிற போது
(ஆளவந்தார் சிஷ்யர் )அம்மங்கிக்கு போய் வருகிறேன் என்ன –
அம்மங்கி உடையவருக்கு பிரசாதித்த வார்த்தை –

அக்நி ஜ்வாலையிலே அகப்படாதே கிடீர்
அரு நஞ்சு தின்னாதே கிடீர்
அ ஸூசி மிதியாதே கிடீர் –
அபலைகளோடே செறியாதே கிடீர் –
ஆஸ்திகரோடு செறிந்து போரும் கிடீர் –

இதுக்கு வ்யாக்யானமாக உடையவர்  (தமது சிஷ்யர்களுக்கு )அருளிச் செய்தபடி –
அக்நி ஜ்வாலை என்கிறது விரோதிகளை –விரோதிகள் சர்ப அக்நி போலே
அவர்கள் ஆகிறார் பாஹ்ய குத்ருஷ்டிகள் –

அரு நஞ்சு என்கிறது ப்ரசன்ன (வேஷம் போட்டுக் கொண்டு இருக்கும்)விரோதிகளை –
ப்ரசன்ன விரோதிகள் எலுமிச்சம் பழம் கருப்பூரமும் போலே (சேர்த்து உண்டால் கெடுதலாகுமே)-
அவர்கள் ஆகிறார்–ரூப நாமங்களை ஏறிட்டுக் கொண்டு உள்ளே புகுந்து
பின்னப் பிரதிபத்திகளாய் இருக்குமவர்கள் –

அ ஸூசி என்கிறது -விரோதிகளை –
விரோதிகள் காஷ்ட லோஷ்டாதிகள் போலே -(அழுக்கு போல் இவர்கள்)
அவர்கள் ஆகிறார் சரீரைக தத் பரரான சம்சாரிகள் –

அபலைகள் என்கிறது அநு கூலரை –
அநு கூலர் கன்னிகளைப் போலே –
அவர்கள் ஆகிறார் -த்யாஜ்ய உபாதேயங்களை தெளிய அறியாதவர்கள் –

ஆஸ்திகர் என்கிறது அநு போக்தாகளை –
அநு போக்தாக்கள் காமிநிகளைப் போலே –
அவர்கள் ஆகிறார் -பூர்ணாதிகாரிகள் -என்று –

————————————————————

வார்த்தை -318-

ஈடனுக்கு –(ஈடன் -அர்த்தங்களை உபதேசிக்கும் ஆசார்யன் )
இழைச்சலிலும் இடும்பையிலும் (தீய சிஷ்யர்களுடன் நெருக்கம் -அவர்கள் தோஷத்திலும்)அச்சம் -ஏறுகையில் அந்வயம் இல்லை –
எடுப்பவனுக்கு ஆயிற்று ஏறுகையில் அந்வயம் உள்ளது –
(தீய சிஷ்யர்கள் ஆகிறார்கள்)சங்கிப்பாரும் -ஸ்ரீ கோசம் திருடுவாரும் -சுவர்ப் புறத்திலே கேட்பாரும் –பொய்க் கண்ணீர் விழ விடுவாரும் -ஒக்கும் ஒக்கும் என்பாரும்– உபாதேயர் அன்று –

———————————————————

வார்த்தை -319-
விரோதிக்கு நல்லாரோடே  (பகவத் பாகவத விரோதிகளுக்கு நல்லவர்கள் -ராவணனுக்கு வாலி போல்வார்)செறியாதே (ஆத்ம)பந்துக்களோடே செறி –
பகவத் ப்ரபாவம் சொல்லுவாரோடே செறியாதே -(பாகவத்) ஸ்வரூப பிரபாவம் சொல்லுவாரோடே செறி
என்று -ஆச்சான் பிள்ளை –

வாரீர் -திருவாய்மொழி -5-2-2-என்கைக்கும் –
வம்மின் -பெரிய திருமொழி -1-1-7-என்கைக்கும் –
பேசுமின் –பெரிய திருமொழி -1-8-9-என்கைக்கும் யோக்யர் அன்று –

ஒட்டோம் -திருப்பல்லாண்டு -3-என்கைக்கே யோக்யர் கூழாட்கள் –

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர்களைக் கண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

பேசுமின் (பேசும் நின்)திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

——————————————————–

வார்த்தை -320-

நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினான் -திருவாய்மொழி -10-6-2-
ஒருவன் -நாட்டாரோடு வார்த்தை சொல்லக் கடவன் அல்லன் -ஆரோடு சொல்லுவது என்னில் –
1-நாராயணனுக்கு வார்த்தை சொல்லுதல் –
2-நாராயண பரமான நெஞ்சுக்கு சொல்லுதல் –
3-நாராயண பரரோடே சொல்லுதல் –
4-நாராயண பரமாக வேண்டும் என்பாருக்கு சொல்லுதல் செய்யக் கடவன் –

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

————————————————————-

வார்த்தை -321-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு
அஞ்சு கோடி த்யாஜ்யமாய்
மூன்று கோடி உபாதேயமாய் இருக்கும் -அதென் என்னில் என்போலே என்னில் –

பதி வ்ரதையாய் இருப்பாள் ஒரு ஸ்திரீக்கு அஞ்சு கோடி
த்யாஜ்யமாய் மூன்று கோடி உபாதேயமாய் ஆனால் போலே –
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள்(சம்சாரிகள்) -வேச்யைகள்(தேவதாந்தரங்கள்) -வேச்யாபதிகள் (தேவதாந்திர பரதந்த்ரர்கள்)-ஒருவனுக்கு கை கொடுத்து வைத்து எழுந்து போனவள் -உள்ளே இருந்து மயக்குகிறவள்

இனி உபாதேயர் ஆவார் -மாதா பிதாக்கள்(திருமந்திரம் த்வயமும்-ஆசார்யர்கள்) -தன் பர்த்தாவுக்கு அவர்ஜநீயரான பந்துக்கள் -(ஸ்ரீ வைஷ்ணவர்கள்)
தன்னோட்டை பதி வ்ரதைகள் (பரமைகாந்திகள்-சபிரமசாரிகள்)-

இவனுக்கு த்யாஜ்யர் -சம்சாரிகள் -தேவதாந்தரங்கள் -தேவதாந்திர பரதந்த்ரர்கள் –
தர்சனத்தில் புகுந்து நின்று தர்ச நாந்திரியாய் போனவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய பிரயோஜனர் உடன் மசக்கு
பரலிட்டு திரிகிறவர்கள் –

இனி உபாதேயர் -ஆசார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சபிரமசாரிகள்

——————————————————-

வார்த்தை -322-

ஒரு வைஷ்ணவனோடே சஹ வாஸம் பண்ணும் போது
அவனுடைய குண தோஷங்கள் இரண்டையும் நிரூபிக்க வேண்டும் –
நிரூபிக்கிறது குணம் கண்டு ஸ்துதிக்கவும் -தோஷம் கண்டு தூஷிக்கவும் அன்று –
நாமே செறுகைக்கும் (போக்குகைக்கு)பற்றுகைக்கும் -என்று ஆச்சான் பிள்ளை –

———————————————————

வார்த்தை -323-
நம்பிள்ளை வார்த்தை –
த்யாஜ்ய விஷயமும் -உதாசீன விஷயமும் -அனுக்ரஹ விஷயமும் -அனுபவ விஷயமும் –
அதாவது –
நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் -நாஸ்திக ஆஸ்திகர் -ஆஸ்திகர் –

நாஸ்திகர் ஆவார் புறம்போடு உள்ளோடு வாசி யற நாஸ்திகர் –(த்யாஜ்ய விஷயம்)
ஆஸ்திக நாஸ்திகர் ஆவார் -புறம்பு ஆஸ்திகரைப் போலேயாய் உள்ளு நாஸ்திகர் -(உதாசீன விஷயம்)
நாஸ்திக ஆஸ்திகர் ஆவார் -புறம்பு நாஸ்திகரைப் போலேயாய் உள்ளு ஆஸ்திகர் –(அனுக்ரஹ விஷயமும்-பேசித் திருத்த வேண்டும்)
ஆஸ்திகர் ஆவார்-உள்ளோடு புறம்போடு வாசி யற ஆஸ்திகராய் இருப்பவர்கள் -(அனுபவ விஷயமும் -)

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்———68-

———————————————————-

வார்த்தை -324-

முதலியாண்டான் மிளகு ஆழ்வானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
கன்னக் கள்வர் நால்வர் -அவர்களை பரிஹரித்து வர்த்திக்க வேண்டும் –
அவர்கள் ஆர் என்னில் –
ஆத்ம அபஹாரி -விபூத்ய அபஹாரி -குணித்வ அபஹாரி -பரத்வ அபஹாரி –

ஆத்ம அபஹாரி யாகிறான் -திருமார்பில் கௌஸ்துபத்தை களவு கண்டவன் -எங்கனே என்னில் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கை –
விபூத்ய அபஹாரி யாகிறான் -ஏகாயநன் -எங்கனே என்னில் மாத்ரு ஹீனன் –
குணித்வ அபஹாரி யாகிறான் -மாயாவாதி -எங்கனே என்னில் நிர்க்குணம் என்கையாலே –
பரத்வ அபஹாரி யாகிறான் -ருத்ர பரத்வ பிரமாண நிஷ்டன் –

இவர்களுக்கு அஞ்ஞானமும் -அந்யதா ஞானமும் -விபரீத ஞானமும் விஞ்சி இருக்கும் –

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -301-312–அரும் பத விவரணத்துடன்–

February 8, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -301-
திருவழுந்தூராள் ஒரு ஸ்த்ரி சோழதிவாகரர் ஸ்ரீ பாதத்திலே நல் வார்த்தை கேட்க
வேணும் என்று வர –
அவர் பிரக்ருதிமான்கள் சொல்லும் வார்த்தையை சொல்ல –
ஊருகிறத்துக்கு (சம்சாரமாகிய பாம்பு)அஞ்சி உள்ளே புகுந்த என்னை உயிர்க் கழுவிலே வைத்தீரே -என்று அவள் சொல்ல –
பரீஷித்தோங்காண் என்று நல் வார்த்தை சொன்னார் –

கடக்கத்தப் பிள்ளை- மின்னலுக்கு அஞ்சி மரத்தடியை அடைந்தவர்களை அந்த மரம் இடியின் கையிலே காட்டிக் கொடுத்தது போல் –சம்சாரத்தில் அஞ்சி ஆச்சார்யர் இடமும் போக தேக சுகத்துக்கு ஆளாக்குகை-ஸம்ஸாரத்துக்குப் பயந்து அத்ருஷ்டம் சேர்ந்தவர்களை-(ஆச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கினவர்களை )- தேக வஸ்யராக்குகைக்கு த்ருஷ்டாந்தம் -)

(மின்னல் தாங்கி இல்லாமல் இடி தாங்கி தான் உண்டு)

—————–

வார்த்தை -302

ஸ்த்ரீ தேகம் கண்ட விஷய ப்ராவண்யனுக்கு பகவத் விஷயத்தில் அன்வயம் இல்லை -பகவத் விஷயத்தில் அன்வயம் உள்ளவருக்கு விஷயாந்தர ப்ராவண்யம் வாராது
(மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் கைவிடுவான் அன்றோ
அவனைப் பற்றி இத்தைக் கேட்பார் அதமத்திலும் அதமர் அன்றோ )

—————————–

வார்த்தை -303

அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்
உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –

———————–

வார்த்தை -304-
சோமாசி யாண்டான் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம்
தன்னை (ஸ்வரூபம் -அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய உபாயத்வம் -அநந்ய போக்யத்வம்)உணர்ந்தாலும் கூடாது
தன் சத்தையை உணர்ந்தாலும் கூடாது
சம்பந்தத்தை உணர்ந்தாலும் கூடாது
சரீரத்தை உணர்ந்தாலும் கூடாது
என்று அருளினார் –

————————————————

வார்த்தை -305-(பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த வார்த்தை)
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் –
அழுந்திக் கிடந்த நாளிலே கரணங்களைத் தந்தீர் – அக் கரணங்களைக் கொண்டு வியபிசரியாத படி ஆச்சார்யரைக் கொண்டு அங்கீ கரித்தும் அருளினீர் -நாம ரூபங்களை தந்தீர் -உபகார ஸ்ம்ருதி -நாம ரூபங்களை உகந்தீர் -அர்ச்சை அவதாரமாக -தமர் உகந்த உருவம்-விஷயாந்தர ப்ராவண்யம் மிக்கு பர நிந்தையே யாத்ரையாகப் போந்த அடியேனை த்வயம் -மந்த்ர ரத்னம் -அநவரதம் அநுஸந்திக்கும்படியும் அருளினீர் -தேவரீர் அருளிய ஏற்றம் ஜென்ம பரம்பரைகள் தோறும் பிறந்து த்வயத்தை உச்சரிக்கும் படியாக வரும் ஏற்றம் பண்ணி அருளினீர் -இவ் வேற்றம் எல்லாம் கீழ்ப்பட்டு பிரகிருதிக்கே- உடம்புக்கே -ஆசை பட்டு விஷயாந்தரம் பற்றி உழன்று இருந்தாலும்-தேவரீர் திரு உள்ளமாகில்-கர்மங்களையும் அறுத்து- அதிகாரி சம்பத்தையும் கொடுத்து அருளுவீர் -தேவரீர்  என் நினைந்திருந்தீர் என்றே இருக்கும் அடியேன் -நிர்பந்தம் பண்ண மாட்டோம் -என்று அனுசந்திக்க வேண்டும் -ஆச்சான் பிள்ளை வார்த்தை

—————————————————–

வார்த்தை -306-
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் -அத்வேஷம் தொடங்ககி ஆத்ம குணங்களைப் பிறப்பித்தது அருளி-ஆச்சார்யர் திருவடிகளில் சேர்த்து அருளினீர்- சம்சார சம்பந்தத்தையும் கழித்து -ஸர்வ அபராதங்களையும் பொறுத்து அருளினீர் (கத்ய த்ரயம் போலவே இங்கும் )-பிரகிருதி சம்பந்தத்தை கழித்து அருளினீர் -சர்வ அபராதங்களையும் பொறுத்து அருளினீர்-அர்ச்சிராதி மார்கத்தையும் பரமபதத்தையும் குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மபாவி நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினீர்- சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனே தேவரீர் செய்து அருளினபடி என் தான் என்று நம்பிள்ளை அநு சந்தானம் –

(இங்கேயே இருந்தாலும் ஆழ்வார் திருவடி பலத்தால் -மாறன் சொல் வேராகவே விளையும் வீடு-நாமும் அநவரதம் இந்த உபகார ஸ்ம்ருதியுடன் இருக்க வேண்டும்)

—————————————————–

வார்த்தை -307-
அநந்ய பிரயோஜனன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்ரம் அல்லேன் –
ஆர்த்த பிரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்கு பாத்ரம் அல்லேன் –
ப்ராமாதிகம் அல்லாமையாலே ஷமைக்கு பாத்ரம் அல்லேன் –

உபகாரகன் என்று உகந்தீர்
அனந்யன் என்று இரங்கினீர்
அவர்ஜீயன் என்று பொறுத்தீர் –
-என்று ஆச்சான் பிள்ளை நைச்ய அனுசந்தானம் –

(எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்று சதாசார்யர் பரம்பரை மூலம் வந்த அர்த்தங்களை சொல்லி சேதனர்களைத் திருத்தி நமக்கு ஆக்கின உபகாரகன் என்றும் உகந்தீர் -அநந்ய கதி என்று இரங்கினீர் -சதாசார்யனை முன்னிட்டு நம்மைப் பற்றினவனாகையால் விலக்க ஒண்ணாதவன் என்றும் அபசாரங்களைப் பொறுத்தீர் -)

——————————————————-

வார்த்தை -308-

ஸ்ரீ வைஷ்ணவனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடப் புக்கால்–
ஆசார்ய வைபவம் இருக்கும் படியே –
உடையவர்கள் செய்யுமதுக்கு கேள்வி உண்டோ-என்றும் அவர்கள் அருளிச் செய்கையாலே
உண்டாகக் கடவது என்றும் -நினைக்கக் கடவன் –

(அமுதனார் ராமானுஜ நூற்றந்தாதியில் ஆழ்வார்கள் திருவடி சம்பந்தம் கொண்டு எம்பெருமானாரைப் புகழ்ந்தது போல்-எம்பாரைக் கொண்டாட ஆம் தகும் என்றார் அன்றோ -அவை எல்லாமே எம்பெருமானார் வைபவத்தாலே வந்ததாகையால் மறுக்கப் போகாதே)

——————————————————-

வார்த்தை -309-
ஓர் அதிகாரியானவன் சம்சாரி பரிபவிக்கும் போது அநு சந்திக்கும்படி நாலு வகையாய் இருக்கும் –
அவையாவன –
1-நாயனும் அடியானும் ஆனால் -அடியானுக்கு பிறந்த பரிபவம் நாயன் அன்றோ ஏற்றுக் கொள்வான் -என்று-அவன் தலையிலே வைத்து தாந்தனாய் இருக்கை —

2-இவன் பண்ணின பரிபவம் தேக ஸ்பர்சியோ ஆத்ம ஸ்பர்சியோ என்று விவேகித்து –
ஆத்மா ஞானாந்த ஸ்வரூபி ஆகையாலே -இப் பரிபவத்துக்கு விஷயம் அல்லன் –
இனி தேகம் இறே பரிபவ விஷயம் –

3-இதுதான் அஸூஸிகளுக்கு எல்லாம் கொள்கலம் ஆகையாலே இதினுடைய தோஷம் எல்லாம்-இவனால் சொல்ல முடியாது இல்லை இறே -என்று வெறுப்பு கேட்டு இருக்கை

4-நாம் இத் தேகத்தின் வாசனையாலே உபாதேயப் புத்திப் பண்ணி போருகையாலே இதினுடைய ஹேயதையை இவன் பரிபவ உக்தியாலே உணரப் பெற்றோமே என்று அவன் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணி இருக்கை

ஒரு வைஷ்ணவன் பிரக்ருதியை பரிபவித்தால் –
இவனுக்கு ஈஸ்வரன் அநர்த்தத்தை சிந்திக்கிறானோ என்று கிருபை பண்ணி இவ்வநர்த்தம் வாராதபடி திருவடிகளிலே சரணம் புகுவான் –

(ஸ்ரீ வைஷ்ணவன் இல்லாமல் வைஷ்ணவன் என்றது ரூப நாமங்களில் மாத்திரமே வைஷ்ணவனாய் ஸம்ஸாரி ஸ்வ பாவம் கழியப் பெறாதவனாய் இருப்பவன் என்று கொள்ள வேண்டும் -)

குற்றம் செய்தவர் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி -365-

(1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை-யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால்  செய்யலாவது ஓன்று இல்லை இறே  –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியை பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே –இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு -ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் –
தனக்கு பிரதி கூலங்களாகவும் – நினைத்து இருக்கையாலே -தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல் – தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல் -செய்தால் உகக்குமா போலே – அவர்கள் அளவில் பிறக்கும் -ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும் -நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான செறுப்புக்களை செய்தும் -இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும் – க்ருதக்ஜ்ஜை – நடக்க வேணும் -என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-)

——————————————————-

வார்த்தை -310-

ஸ்ரீ வைஷ்ணவர் பரிபவத்தில் அனுசந்திக்கும் படி –
இவர் நமக்கு கழுத்துக்கு மேலாக உறவு பண்ணி விடாதே –
அபிமாநித்த இத்தாலே சிஷா ரூபமாக சொல்லப் பெற்றோமே -என்று –
இவருக்கு அடிமையான ஸ்வரூபம் உஜ்ஜீவித்தது -என்று க்ருதார்த்தனாவான் –

—————————————————–

வார்த்தை -311-
ஸ்ரீ வைஷ்ணவன் (உண்மை பேசுபவர் முக ஸ்துதி பண்ணுவர் அல்லர்)ஸ்தோத்ரம் பண்ணினால் நமக்குள்ள குணங்களைச் சொன்னான் என்று -உகக்கக் கடவன் அல்லன் –
இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொன்னான் என்று வெறுக்கக் கடவன் அல்லன் –

சீற்றத்துக்கு விஷயமான நம்மைக் குறித்து – நிர்ஹேதுகமான பிரசாதித்த படியால் உகந்து –
இவர் சொன்ன குணங்கள் நமக்கு முன்பு இல்லையாகிலும் –
இவர் பிரசாதத்தாலே மேல் உண்டாகக் கடவது -என்று விஸ்வசித்து இருப்பன் –

சம்சாரி (முக ஸ்துதி பண்ணுவர் )ஸ்தோத்ரம் பண்ணினால் –
அடியானவனுடைய ஸ்தோத்ரதுக்கு உகப்பான் நாயன் (ஸ்வாமி சொத்தை யுடையவன்)அன்றோ -என்று தான் அதில் அந்வயம் அற்று சாந்தனாய் இருப்பன் –
இவனுடைய ஸ்தோத்ரம் தேக ஸ்பர்சியாய் தோன்றின போது தேகத்தில் இக் குணங்கள் இல்லை –இவன் தன் வாசனையாலே பிரமித்தான் இத்தனை –இக் குணங்கள் ஆத்ம ஸ்பர்சி அன்று -என்று இருப்பன் –

———————————————————–

வார்த்தை -312-
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –
நீர் ஒருகாலும் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போருகிறீர் இல்லை(வருந்துபவர் -உபேக்ஷை உடையவர் அல்லர்)
இதுக்கடி உற்றானான எம்பெருமான் பக்கலிலே உறுதியை உணர்ந்தோ –
அன்றியே உம்முடைய பக்கல் உண்டான உறுதியை உணர்ந்தோ என்று கேட்க –

அடியேனுக்கு இவை இரண்டும் உண்டோ –
உள்ள உறவு இத்தனையும் உடம்போடு வந்த ஊற்றத்தால் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய –

எம்பாரும் இது கேட்டு க்ருதார்த்தராய்(ஸமாநாதராய் உகந்தவராய்) -நீர் இங்கனே சொல்லுவான் என் –
ஆழ்வான் உடன் உண்டான குடல் துவக்காலே -அந்தரங்கமான அர்த்தங்களை ஆராயும்படியான ஆகாரங்களை உடையீர் –
உடையவரால் உண்டான ஞானம் உடையீர் –அதடியாக எங்கள் உடன் உண்டான உறவு அறிவீர் –
இப்படி இருக்க எங்களை நீ இங்கன் உளைப்பிக்கலாமா –
இவ் வாகரங்களிலே உமக்கு உண்டான உறவு உறுதி சொல்லீர் -என்று உறுத்திக் (நிர்பந்தித்து)கேட்க –

பட்டர் விண்ணப்பம் செய்தபடி -என்னுடைய உயிருக்கு உடைமை யாகை  அன்றோ உறுதி யாவது –அங்கன் அன்றியே இவ் உயிருக்கு உறுதி உண்டாகில்-அவ் உயிருக்கு உறுதி உண்டோ – ஆகையால் அவ் உயிரை உணர்ந்த ஆனந்தத்தாலே பிறந்த உறுதி அன்றோ – உண்டாகில் உள்ளது –(பரமாத்ம ஸ்வரூபம் -இத் தத்துவம் அவன் அன்றி இல்லை என்றும் உணர்ந்த உறுதி)என்று விண்ணப்பம் செய்ய –

(இது மட்டுமே போதாதே -கோவிந்த ஸ்வாமிக்கும் பிரகிருதி ஆசை உள்ளது அறிந்து அனுபவித்து பின்பே வாரும் என்றும் அருளிச் செய்தார் அன்றோ)

எம்பாரும் இதில் ஒரு குறை இல்லை -சொன்னபடி அழகிது -ஆனாலும் அவ் விஷய ஸ்பர்ஸத்தை உணர்ந்த ஆனந்தத்திலும் காட்டிலும் இவ் விஷயத்தில் அனாதர அதிசயம் காணும் அபேஷிதமாய் இருப்பது –ஆகையால் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போரீர் -என்று அருளிச் செய்ய –

பட்டரும் கிலேச ஹேதுவான பிரக்ருதியை உணர்ந்து சோகிக்க தொடங்கினார் –
எம்பாரும் அருளிச் செய்த கார்யம் பலித்ததே என்று ப்ரீதரானார் –

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -உபக்ரமித்து -மயர்வற மதிநலம் அருளப் பெற்றும் -இனி இனி இருப்பதின் கால் அழுதார் அன்றோ)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -289-300–அரும் பத விவரணத்துடன்–

February 8, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -289-
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அமுது செய்ய பண்ணும் போது
இழவும் -இரப்பும் -இறுமாப்பும் (சாத்விக கர்வம் )-துணுக்கமும் -சோகமும் -வாழ்வும் உண்டாக வேணும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

(இந்த ஸ்ரீ வைஷ்ணவர் பெருமைக்குத் தக்கபடி அமுது படைக்கப் பெற்றிலோம் என்னும் இழவும் -இவர் அமுது செய்தது நம் பாக்யம் இது அடிக்கடி நேர வேணும் என்ற இரப்பும் -இவர் அமுது செய்ததை நமக்கு நிகரில்லை என்னும் ஸாத்விக அஹங்காரமும் -நாம் இட்டது பாங்காய் இருந்ததோ -அபசாரம் ஏதாவது நடந்ததோ என்னும் பயத்தால் துணுக்கும் – இந்த பாக்யம் இத்தனை நாள் இழந்து இருந்தோமே என்னும் சோகமும் –அத்ய மே ச பலம் ஜன்ம-என்றபடி அமுது படைத்ததால் வாழ்ச்சி பெற்றதாக நினைத்திருக்கை -)

(தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்-அஸ்ரத்தயா தேயம் -ஸ்ரீ தைத்ரிய உபநிஷத் –சிரத்தை யுடன் கொடு -நம்மது இல்லை என்ற எண்ணத்துடன் கொடு
அஸ்ரத்தயா அதேயம்- சிரத்தை இல்லாமல் கொடுக்காதே -என்றுமாம் –
ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் -முகத்தில் சிரிப்பை வைத்து கொடு -வெட்கப்பட்டு கொடு –பயத்துடன் கொடு -உறுதியுடன் கொடு -தானம் வாங்குபவரை இருக்கச் சொல்லி கௌரவ புத்தியால் வணங்கிக் கொடுக்க வேண்டுமே
சாத்விக தானமாக இருக்க வேண்டுமே -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –)

————————————————

வார்த்தை -290-

விளை நகர்ப் பிள்ளை -(பிள்ளை நகரிப் பிள்ளை )-ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணுவர் -என்று பட்டர் கேட்டு -இதுக்கு அபிப்ராயம் அறிய வேணும் – என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள –

அமுது செய்ய காலமானவாறே –
அகத்துக்கு எழுந்து அருள வேணும் -என்ன

பட்டரும் பிள்ளையை அழைத்து –
வாரீர் பிள்ளாய் நீர் என்ன நினைத்து அமுது செய்யப் பண்ணுவீர் என்ன –

அடியேன் பின் வரும் முதலிகளுக்கு முன்பு எழுந்து அருளின முதலிகள் திருப் போனகப் பானை ஒழிச்சுவர் என்கிற இது பிரயோஜனமாக நினைத்து இருப்பன் என்ன –

பட்டரும் முதலிகள் முகம் பார்த்து
இச் சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளினார் –

(அடுத்து வரும் முதலிகளுக்கும் சமைத்து படைக்கும் சாமர்த்தியம் தனக்கும் உண்டு என்ற தொனி இருப்பதால் – க்யாதி லாப ஆசை -உண்ணுவது உஜ்ஜீவனம் அல்ல என்கிறார்-புகழை விரும்பும் சொல் சொல்லாமல் ஸ்வயம் பிரயோஜனமாக செய்தார் ஆகில்
இவருக்கு ஆத்ம உஜ்ஜீவனம் ஆகும் -என்று அருளினார் என்கை)

——————————————-

வார்த்தை -291-

ஸ்ரீ விதுரர் திருமாளிகையில் அமுது செய்தது மடி தடவாத சோறு என்று இறே
இச் சொல்லற்ற சோறு இறே அது -(அச்சோறே உண்ணும் சோறு)

1-மடி தடவாத சோறும் –2-சுருள் நாறாத பூவும் –3-சுண்ணாம்பு தடவாத படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-சூரணை -287-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரை சோதிக்கைக்காக மடியை பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –புக்தவத் சூத்விஜாக்ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  சுசீனி குண வந்திச-என்றுபாவனத்வ -போக்யத்வ -ப்ரசச்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –

(கீழ் பட்டர் –சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளியதும் இதுவே –உண்ணும் சோறு -ஆழ்வார் -அருளிச் செய்தது இதுவே)

———————————————-

வார்த்தை-292-
பிணச் சோறும் -மணச் சோறும் -விலைச் சோறும் -புகழ்ச் சோறும் -பொருள் சோறும்
எச்சில் சோறும் -ஆறும் த்யாஜ்யம் –

மற்றைச் சோறு இறே வைஷ்ணவன் உண்ணும் சோறு -என்று திருக்குறுங்குடி ஜீயர் (தீர்த்தங்குடி ஜீயர் என்றும் சொல்வர்)அருளிச் செய்வர் –

—————————————————–

வார்த்தை -293-
விஷயப் பிராவண்யத்தில் –
கணிகா ஸ்பர்சம் -விதவா ஸ்பர்சதைப் பற்ற யாக சமானம் –
விதவா ஸ்பர்சம் ப்ராஹ்மண ஸ்த்ரி ஸ்பர்சதைப் பற்ற யாக சமாநம் –
ப்ராஹ்மணீ ஸ்பர்சம் மாத்ரு ஸ்பர்சத்தைப் பற்ற யாக சமாநம் –
மாத்ரு ஸ்பர்சம்-வைஷ்ணவி ஸ்பர்சதைப் பற்ற யாக சமாநம் –

(ஒன்றுக்கு ஓன்று மேல் குரூரமானது)

—————————————————–

வார்த்தை -294-
தேஹம் திறள் பொறாது -ஸ்வரூபம் தனி பொறாது –
பகவத் விஷயத்துக்கு வெளியும் திறளும் தேட்டமாய் இருக்கும் –
ஷூத்ர விஷயத்துக்கு இருளும் தனிமையும் தேட்டமாய் இருக்கும் –

(ப்ரஹ்மத்தை எவ்வாறு காண்கிறீர் என்ன சர்வ வ்யாபியான அவன் இருக்க எவ்வாறு காணாமல் உள்ளீர் -என்பாராம் -எம்பாரும் குருகை காவலப்பனும்
கள்ளம் தவிர்ந்து கலப்பாய் -தனி அனுபவம் கூடாதே)

—————————————————–

வார்த்தை -295-

விஷய ஸ்பர்சம் த்விவிதம் –
1-அவிலஷண விஷய ஸ்பர்சம் -என்றும்
2-விலஷண விஷய ஸ்பர்சம் -என்றும் –
அவிலஷண விஷய ஸ்பர்சம் –தேவ தாநத்தில் ஜல கார்யம் போலே பிராயச்சித்த சாத்யம் –
விலஷண விஷய ஸ்பர்சம் -திரு நந்தவனத்திலே ஜல கார்யம் போலே யாவதாத்மபாவி நரக ஹேது –

—————————————————

வார்த்தை -296-
பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை –
இவ்வர்த்தத்தை ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் –
எங்கனே என்னில் –

வாசுதேவன் வலையுள் அகப்படுதல் -திருவாய்மொழி -5-3-6-
மாதரார் கயற்கண் என்னும் வலையில் அகப்படுதல் -திருமாலை -16-

மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளிலே அகப்படுதல் -நாச்சியார் திருமொழி -9-1-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -பெரிய திருவந்தாதி -6-3-4-

வானவர்க்கு வன் துணை அரங்கத்து உறையும் இன் துணையான் -பெரிய திருவந்தாதி -3-7-6-
அவரவர் பணை முலை துணையா -என்று இருத்தல் –பெரிய திருவந்தாதி 1-1-2-

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -திருவாய்மொழி -1-5-4-
பாவையர் வாய் அமுதத்தை பானம் பண்ணுதல் -பெரிய திருமொழி -1-3-5-

நால் வேதப் பயனை பேணுதல் -திருவாய்மொழி -3-4-6-
மாதரார் வன முலைப் பயனை பேணுதல் -பெரிய திருமொழி -1-6-1-

ஓன்று இதுவாதல் ஓன்று அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு விதமாக
அருளிச் செய்தார்கள் –

(இங்கு சொன்னவற்றில் அஸ்திரமாய் அல்பமாய் முதலில் எடுக்கப்பட்ட ஸ்த்ரீ சம்போகத்தில் ஈடுபட்டால் ஆத்ம நாஸமே ஏற்படும் -அநந்தமாய் நித்யனாய் இரண்டாவது எடுக்கப்பட்ட பரமாத்ம அனுபவத்தில் ஈடுபட்டால் ஆத்மா உஜ்ஜீவனம் அடையும் என்றும் ஆழ்வார் அருளிச் செயல்களிலும் காணலாம் அன்றோ -)

——————————————————-

வார்த்தை -297-

அக்கரைச் சடியார் வார்த்தை-
 (தாஸித் தொழில் செய்து வந்த பெண் பிள்ளை) -இவள்
உச்சியம் போதினில் ஷூத்து நலியாது நின்றது என்று என் பக்கலிலே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால் ஷூந் நிவ்ருத்தி பண்ணி உகப்பிக்குமோபாதி

பிரகிருதி வியாதி நலியா நின்றது என்று என் பக்கலிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால்
பிரகிருதி வியாதியை பிரகிருதி இட்டு சமிப்பித்தால் ஆகாதோ என்ன
நம்பிள்ளை அருளிச் செய்தபடி –

வாரீர் தாய் நெடும் காலம் மலடி நின்று பெற்றதொரு பிள்ளை பித்தேறி
உன் பக்கலிலே -உறி போட்டுக் கொள்ளுகைக்கு கயிறு தா –
கழுத்தை அறுத்துக் கொள்ளுகைக்கு அரிவாள் தா -என்று வந்தால் கொடாது ஒழிகிறது
அவன் சரீர நாசத்தை அஞ்சி அன்றோ –
அவ்வளவும் போராதோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஸ்வரூப நாசம் என்று –

——————————————————–

வார்த்தை -298-
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் பத்து முகமாக விரோதிக்கும் –
அவை யாவன -ஸ்வ அநர்த்தம் -பர அநர்த்தம் -சாஸ்திர விரோதம் -பகவன் நிக்ரஹம் –
பாகவத நிக்ரஹம் -ஆசார்ய நிக்ரஹம் -விரோதி வர்தகத்வம் -ஸ்வரூப விரோதம் –
உபாய விரோதம் -உபேய விரோதம் -தேசாந்தர அபாவம் –

தேவதாந்தர பரனுக்கு கலாந்தரேண வாகிலும் பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு –
விஷய ப்ரவணனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை –
ஆகையால்
ஸ்ரீ வைஷ்ணவன் விஷய பிரவணன் ஆகையாவது –
முதலை  முடியோடே விழுங்குமா போலே -என்று ஆச்சான் பிள்ளை –

(கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -8-
மற்றோர் தெய்வம் பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழி யேறிக்கண்டீர் ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைப் புகுவதுவே -4-10-7-)

————————————————————

வார்த்தை -299-
முமுஷுவுக்கு விஷய ப்ராவண்யமும் தேவதாந்திர பஜனமும் சமாநம் –

வெற்றிலையும் சந்தனமுமாய் புக்கு காமனை அர்ச்சிக்கிறதோடு
எருக்கும் தும்பையும் கொண்டு ருத்ரனை அர்ச்சிக்கிறதோடு வாசி இல்லாமையாலே
தேவதாந்தரம் தான் இதுக்கு சத்தை –

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் -பெருமாள் திருமொழி -3-3-..
தேவதாந்தர பரனுக்கு அனந்தர ஜன்மத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு யோக்யதை உண்டு –விஷய பரனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை –
ஆகையால் தேவதாந்தர பஜனத்திலும் க்ரூரம் –
சௌ சாபேஷன் ஸ்நானம் பண்ணி வருமா போலும் காண் -(வ்ருத்தி ஆசௌம் போன்ற தீட்டு உள்ளவன் ) விஷய பிரவணன் பகவத் பரனாய் திரிகிறபடி -பகவத் சந்நிதி நுழைய தக்கவன் அல்லன் – 

ராஜகுமாரன் முடியாதே முடி சாய்க்குமா போலே -(சாமான்யரை வணங்குமா போலே ) ஸ்ரீ வைஷ்ணவன் விஷய ப்ரவணனாகை -பிணம் பிணத்தைத் தேடுமா போல்-சரீரம் தேட்டம் வெறுமனே கிடைக்காதே ஆதலால் பணமும் தேட்டம் – வைஷ்ணவனுக்கு பிணமும் பணமும் தேட்டம் அன்று -மணம் -ஒன்றே தேட்டம் -அழகிய மணவாளனையும் வயலாலி மணவாளனையும் -விரையார் பொழில் வேங்கடவனையும் தேட்டம் –

விஷய ப்ரவணனுக்கு பகவத் விஷயத்தில் அந்வயம் இல்லை -விஷய ப்ராவண்யம் வந்தவாறே பாகவத அபசாரம் வரும் -பாகவத அபசாரம் வந்தவாறே ஆச்சார்ய அபிமானம் போம் -இதனால்-அருமைத் தலை – -மோக்ஷ மார்க்கம் வழி தப்பி அரு நரகமும் கிட்டும்

விஷய ப்ராவண்யம் அற்றவாறே பாகவத அபசாரம் போம் -பாகவத அபசாரம் போனவாறே -ஆச்சார்ய அபிமானம் வரும் -ஆச்சார்ய அபிமானம் வந்தவாறே அர்ச்சிராதிகதி கிட்டும்

——————————————————–

வார்த்தை -300-
முமுஷுவுக்கு தேவதாந்தர ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் -மோஷ பிரதிபந்தகம் –
அதில் இரண்டு ப்ராவண்யம் உண்டானால் காலாந்தரத்திலே ஈடேறலாம்–
ஒரு -(விஷய)-பிராவண்யம் பிரதிபந்தகமாகவே விடும் –

—————————————————–——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -277-288–அரும் பத விவரணத்துடன்–

February 7, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -277-
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெகிழ நினைத்தான் ஆகில் –
நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதாப் போலேயும் –
மலை முறிந்தால் தாங்க ஒண்ணாதாப் போலேயும் –
கடல் உடைந்தால் அடைக்க ஒண்ணாதாப் போலேயும்-
இதுவும்
அப்ரதி க்ரியமாய் இருப்பது ஓன்று –

————————————————————–

வார்த்தை -278-
நாட்டிலே இருந்து பெருமாளை சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம்
விஸ்லேஷ பீருக்களாய் போருகிறவர்கள் –
ஒருகால் ராக த்வேஷம் கொண்டாடி ஒருவன் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தேற வந்து மற்றவருடைய குற்றங்களை விண்ணப்பம் செய்ய

சேவித்து இருந்தவர்களில் சிலர் -அப்படி சொல்லலாமோ என்ன –

ஆச்சான் பிள்ளை –
அவர் சொல்லு கிடீர் தண்டல் படையினான யமன் -பரிஹரம் என்றான்
பிராட்டி- ந கச்சின் நாபராத்யாதி -யென்றாள் –
ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி –4-9-2-என்றான் –
ஆழ்வார்கள் -தமர் எவ்வினையர் ஆகிலும் – முதல் திருவந்தாதி -55-என்றார்கள் –
இப்படி இருக்க அவர் குற்றம் இவரை ஒழிய சொல்லுவார் யார் என்று அருளிச் செய்தார் –

(பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-14 -வெகுதூரம் விலகிப்போ
பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-ஸ்ரீ சீதாப்பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

———————————————–

வார்த்தை -279-

சோமாசி யாண்டானுக்கு அப்பிள்ளை (பட்டர் சிஷ்யர் இவர்) அருளிச் செய்தபடி –
ஆண்டான் தேவரீர் ஞான வ்ருத்தருமாய்  -வயோவ்ருத்தருமாய் -சீலவ்ருத்தருமாய் –
ஸ்ரீ பாஷ்யம் திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகராய் -எல்லாவற்றாலும்
பெரியவராய் இருந்தீர் -ஆகிலும்
சாத்தி இருக்கிற திருப் பரிவட்டத் தலையிலே பாகவத அபசார நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும் –என்று அருளிச் செய்தார் –

————————————————-

வார்த்தை -280-
எம்பெருமான் ஸ்வ விஷயத்தில் அபராதத்தை செய்யலாவது உண்டோ என்று பொறுக்கும்
பாகவத அபசாரமும் இவன்  சாபலத்தாலே வந்ததாகில் -சொல்லலாவதுண்டோ என்று பொறுக்கும் –
அசஹ்யா அபசாரம் ஒருபடியாலும் பொறான் –

சதாசார்யன் ஏறிட்டுக் கொள்ளும் ஆகில் அதுவும் பொறுக்கும் -இதுக்கு உதாஹரணம்
மயி த்வேஷ அனுபந்தோஸ் பூத் சம்ஸ்துதா வுத்யதே தவ -மத்பிதுஸ் தத் க்ருதம்
பாபம் தேவ தஸ்ய பிரணஸ்யது -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21- பிரஹலாதன் வார்த்தை -உன்னை ஸ்துதிப்பதால் என்னுடைய தந்தைக்கு நீண்ட காலம் த்வேஷம் ஏற்பட்டு இருந்தது -தேவனே அதனால் ஏற்பட்ட பாபம் நீங்கள் வேண்டும்) என்ன ஷமித்தான்-(ஹிரண்யன் சரீரம் போனாலும் அவன் செய்த பாப வினைகள் அவன் ஆத்மாவைப் பாதிக்கக் கூடாது -அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டான் -)-பிரகலாதன் வேண்டிக் கொண்ட படி ஷமித்தானே-கூரத் ஆழ்வான் பிரார்த்தித்த படி நாலூரானும் உய்ந்தானே

—————————————————–

வார்த்தை -281-

ஒருவனுக்கு பாகவத சேஷத்வம் ஸ்வரூபம்
பாகவத பிரசாதம் உபாயம்
பாகவத கைங்கர்யம் உபேயம்
பாகவத அபாசாரம் விரோதி
ஔபாதிக பாகவத விஷய ராகமும் -நிருபாதிக பாகவத த்வேஷமும்
ஒருவனுக்கு நிலை நின்ற தோஷம் –

(உபாதி -காரணம் நிமித்தமாக ராகமும் -காரணமே இல்லாமல் விரோதம் காட்டுவதும் நிலை நின்ற தோஷம்)

——————————————————-

வார்த்தை -282-
பிள்ளை வரம் தரும் பெருமாள் தாசர் வார்த்தை –
எம்பெருமான் வெறுக்கும் -மறக்கும் -பொறுக்கும் -ஒறுக்கும் –

பிரயோஜனாந்த பரரை கண்டவாறே நம்முடைய ரஷகத்வத்தை பறித்துக் கொண்டு போவதே என்று வெறுக்கும் –
தன்னளவிலே பண்ணின அபசாரத்தை மறக்கும் -(சர்வஞ்ஞன் தமது ஸத்ய ஸங்கல்பத்தால் இவற்றை மறக்கும்)
ஆஜ்ஞ்ஞாதி லங்கனத்தை பொறுக்கும் –
பாகவத அபசாரத்தை ஒறுக்கும் –

—————————————————————————————-

வார்த்தை -283-

நடாதூர் ஆழ்வான் (வரத விஷ்ணு -நடாதூர் அம்மாளின் பாட்டனார் -எம்பெருமானார் மருமகனார்)ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கையைப் பிடித்துக் கொண்டு போகா நிற்க
நடுவில் திருவீதியில் ஒரு திருக் குலத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அணுகி வர கைக் கொடுத்து
கொண்டு போகிற ஸ்ரீ வைஷ்ணவர்
அவரை ஜாதி நிரூபணம் பண்ணி -கடக்கப் போ – என்ன –

ஆழ்வான் அத்தைக் கேட்டு மூர்ச்சித்தார் –
மூர்ச்சை தெளிந்த பின்பு அருகு நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இது என் -என்ன –

திருக் குலத்தில் திரு வவதரித்து இரண்டு ஆற்றுக்கும் நடுவே வர்த்திகப் பெற்ற மஹானுபாவனா பறையன் –
நெடும்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்  திரிந்த நான் அன்றோ பறையன் -என்று அருளினார் –

—————————————————————————————

வார்த்தை -284-
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அடும் சோறு மூன்று -அடாச் சோறு மூன்று (அறுஞ்சோறு அறாச்சோறு என்றும் பாட பேதம் -ஜீரணமாகும் சோறு ஜீரணமாகாத சோறு என்றவாறு-அடுஞ்சோறு மூன்றையும் 286 வார்த்தையிலும் அடாச்சோறு இதிலும் அடுத்த வார்த்தையிலும் விவரிக்கிறார்-சமையாத சோறு ஜீரணமாகாமல் மனிதனை மரணம் அடையச் செய்வது போலே ஆத்மாவை நசிக்கச் செய்யும் என்று கருத்து -)

அடாச் சோறாவது -அனுகூலரை நெருக்கி ஜீவிக்கையும்
பிரதி கூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கையும் –
சாதனாந்தர புத்த்யா கைங்கர்யம் பண்ணி ஜீவிக்கையும்

அனுகூலரை நெருக்குகையாவது -சர்வேஸ்வரன் உயிர் நிலையிலே கோலிட்டடித்த மாத்ரம் –
ஆயர் கொழுந்தாய் –திருவாய்மொழி -1-7-3–
பத்தராவியை –பெரிய திருமொழி -7-10-1-/10-1-8–(ஞாநி து ஆத்மைவ மே மதம்–என்னது உன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோன்றும்)
நாஹமாத்மா ந மாசசே மத் பக்தைஸ் சாது பிரவிநா -மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உண்டாகையாலே –

இவ்வர்த்தத்தில் வடுக நம்பி வார்த்தை –
பகவத் அபசாரம் -எம்பெருமான் திருமேனியிலே தீங்கு நினைக்கை –
பாகவத அபசாரம் -அவன் திரு மார்பிலே -திருக் கண் மலரிலே -கோலிட்டடித்த மாத்ரம் –
யே பிரபன்னா மகாத்மாநஸ் தே மே நயன சம்பத –(மஹாத்மாக்களான ப்ரபன்னர்கள் எனக்குச் செல்வமான கண் போன்றவர்கள்)என்று உண்டாகையாலே –

இவ் வர்த்தத்தில் வானமாமலை யாண்டான் பணிக்கும் படி –
சாத்விகரை நெருக்குகையாவது -மிதுன போக்யமான ஸ்ரீ கௌஸ்துபத்தில் கரி இட்டுக் கீறின மாத்ரம்

வகுளாபரண சோமயாஜியார் -தெய்வ வாரி யாண்டானை -எம்பெருமான்
இங்கே வந்து அவதரிகைக்கு ஹேது என் என்ன –
பாகவத அபசாரம் பொறாமை என்றார் –
ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்க எம்பெருமான் நெஞ்சு உளுக்கும் –

பிரதிகூலர் பக்கல் சாபேஷன் ஆகையாவது -ராஜ மஹிஷி ராஜ சந்நிதியிலே அற்பன்
காற் கடையிலே நின்ற மாத்ரம் –

———————————————————

வார்த்தை -285-
த்ரிபுவன வீர தேவன் பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு –
நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போகீர் -என்று அபேஷிக்க –
பள்ளி கொள்கிறவர் கை மறுத்தால் உன்னுடைய வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –

இவ் வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் –
பெரிய ஜீயருக்கு(கூரநாராயண ஜீயருக்கு) நியஸ்த பரனானவன் உடுத்த புடைவைக்கு பிரதி கூலர் பக்கலிலே கஞ்சி அரிசி -சில -வேண்டி நிற்கையாவது –
படி பெற்று உண்ணும் பதி வ்ரதை  -மேல் அழிவுக்கு -பர பர்த்ரு ஸ்வீகாரம் பண்ணின மாத்ரம் -என்று அருளிச் செய்தார் –

சாதனா புத்த்யா கைங்கர்யமாவது –
பணி கொள்ளக் கூலி இன்றிக்கே பணி செய்து கூலி வேண்டுகை –

(போற்றும் பொருள் கேளாய் -ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்பும் ஆகும் செய்வேன் -கைங்கர்யம் கூடத்துக்கு கூலி கொடுக்க வேண்டுமே -கொடுத்துக் கொள்ளாமல் -இருக்க வேண்டுமே)

இவ் வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் கோபால ஜீயருக்கு அருளிச் செய்த வார்த்தை –
கைங்கர்யம் பண்ணி பலம் வேண்டுகை யாவது நாடும் ஊரும் அறிய
ஒருவனுக்கு கை கொடுத்த ஸ்திரீயானவள் தன் பர்த்தாவோடே ராத்ரி
சம்ஸ்லேஷித்து விடிந்தவாறே அதுக்கு கூலி தா வென்று அவனை மடி பிடித்து வளைத்த மாத்ரம் –

அது என் -கைங்கர்யம் பண்ணுமவனுக்கு ஜீவிக்க வேண்டாவோ -என்ன –

கொட்டை இட்டு பணி செய்யா நின்றால் -கொட்டின் வாய் தேய்ந்தால்
கொட்டுடையவன் இரும்பிட்டுக் கொள்ளும் இத்தனை யல்லது –
கொட்டு தானே இரும்பிட்டுக் கொள்ளக் கண்டிலோமே –

அப்படியே இவனைக் கைக் கொண்டு பணி கொள்ளும் அவனுக்கே அன்றோ
ஜீவனம் இடுகையும் பரமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –

(களைக்கொட்டு பூ பறிக்க உபயோகிப்பது -மழுங்கினால் -தானே சாணை இடுத்துக் கொள்ளாதே -அவனுக்காகவே ஆளாகி இருந்தால் -அசித்வத் பாரதந்தர்யமாக இருந்தால் பேணுவது அவன் பரமாகவே ஏறிட்டுக் கொள்வான் அன்றோ -இன்றும் பல திருக்கோயில்களில் ஒருவரே நிர்வாஹம் பண்ணுவதைப் பார்க்கிறோமே -அவனே பேணி கைங்கர்யம் வாங்கிக் கொள்கிறான் அன்றோ -)

———————————————-

வார்த்தை -286-
அடும் சோறாவன –
1-அனுகூலர் ஆதரத்தோடு இடுமதும் –
2-சிஷ்யன் இழவாளானாக கொடுக்குமதுவும் –
3-முஷ்டி புக்கு ஜீவிக்குமதும் –

இவ் வர்த்தத்தில் பிரபன்னர் அருளிச் செய்யும்படி –
போக்ய புத்தயா  கைங்கர்யம் பண்ணி ஜீவிக்குமதுவும் –
அனுகூலர் ஆதரத்தோடு கொடுக்குமதுவும் –
அவன் திருக்கை சிறப்பு –(அலம் புரிந்த நெடுங்கை அமரர் வேந்தன்)

ஸிஷ்யன் கொடுக்குமது கருவூலத்தார் கொடுக்கக் கொள்ளுகை –
முஷ்டி புகுந்தது அவன் பிறந்த (பிரித்த ) பேரளவிலே
தண்டிக் கொண்ட மாத்ரம் -அதிலும் பேர் இழிவிலே ப்ரீதி விஷாதம் பிறவாதோ என்ன –

பெறுவதும் ஒரு முஷ்டி இழப்பதும் ஒரு முஷ்டி யாகையாலே –
அப்போது உச்சரிக்கிற பகவத் நாமத்தோடே ஷமிக்கும் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

———————————————

வார்த்தை -287-

போஜன விரோதி யாவது –
ஒரு வைஷ்ணவன் ஆதரத்தோடே சோறிடப் புக்கால் உண்ணுமவன்
ஆஹார சௌஷ்டம் நிரூபிக்கையும் –
இடுமவன் இவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும் –

போஜ்ய விரோதியாவது -இட்டுக் கணக்கு எண்ணும் சோறு

ஸ்வரூப அனுரூபமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் –என்னது நான் இடுகிறேன் என்கிற போஜனத்தை தவிர்ந்து
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2-என்றும் –
நல்லதோர் சோறு -திருப் பல்லாண்டு -8-என்றும் –
உண்ணும் சோறு -திருவாய்மொழி -6-7-1-என்றும் இவற்றைப் புஜிக்கை –

————————————————–

வார்த்தை -288-
உடையவர் திருமலைக்கு எழுந்து அருளுகிற போது உத்தர நல்லூரிலே
எழுந்து அருளின அளவிலே –
வானமாமலை தாசர் என்று ஒரு கோபால ஸ்ரீ வைஷ்ணவர் -ஆய்க் குலத்தை சேர்த்தவர் –
பாலமுது காய்ச்சி கொண்டு வந்து உடையவருக்கு பாங்காக பரிமாற –
உடையவர் விரும்பி அமுது செய்ய –

மீண்டும் எழுந்து அருளுகிற போதும் அப்படியே பாங்காக கொண்டு வந்து பரிமாற –
இது நன்றாய் இருந்ததீ -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர் முன்பு விரும்பி அமுது செய்தவாறே இப்போதும் பாங்காக கொண்டு வந்தேன் -என்ன –

அங்கனேயோ -என்று ஒருநாள் உபவசித்து அருளினார் –

அஹங்காரம் த்வநிக்கையாலே எடுத்துக் கொண்டதுக்கு வருந்தி உபவாசம்
இருந்தார் என்று தாத்பர்யம்

(எம்பெருமானே உண்ணும் சோறு என்றும் இருக்கும் நாம் இத்தை விரும்பி உண்டேன் -என்று அவர் நினைக்கும் படி இதில் விருப்பம் வைத்தது அபசாரம் என்று திரு உள்ளம் பற்றி உபவாஸம் என்றுமாம்)

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -265-276–அரும் பத விவரணத்துடன்–

February 5, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -265-
பிரபன்னத்வம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்மொழி -5-8-8-என்றும் –(அநந்ய கதித்வம் மஹா விஸ்வாஸம்)
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேன் -(கத்யந்தர ஸூன்யத்வம் மஹா விஸ்வாஸம்-)பெருமாள் திருமொழி -5-5-என்றும் –
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே (ஸம்பந்த உறைப்பால் தருதுயரம் -அவனையே சொல்லலாம் அன்றோ)-பெருமாள் திருமொழி -5-1-என்றும்
அருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் –
கடைத்தலை இருந்து வாழும் -திருமலை -38 என்றும் –
படியாய் கிடந்தது (அசித்வத் பாரதந்தர்யம் -குலசேகரன் படி)-பெருமாள் திருமொழி -4-9-என்றும்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -திருவாய்மொழி -9-9-6-என்றும் —
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15-என்றும் –
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3-என்றும்
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27 என்றும்
அவன் செய்யும் சேமம் -திருவாய்மொழி -7-5-10 என்றும் –
அவன் செய்வது செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும்– இருக்கை

——————————————————————————————–

வார்த்தை -266-

முமுஷுத்வம் ஆவது –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்வது -பெரிய திருமொழி -6-3-8-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6-9-3-என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7-என்றும் –
செந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்வாய் -திருவாய்மொழி -8-5–7-என்றும் –
உனக்கு ஆட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -திருவாய்மொழி -5-8-10–என்றும் –
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -3-2-2-என்றும்
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-என்றும் இருக்கை –

——————————————————————————————–

வார்த்தை -267-
காட்டுத் தீ சூழின் போக்கடியற்ற ம்ருகாதிகளைப் போலே -தாபத்ரயாத்மகமான
சம்சார அனுபவ பீதரான முமுஷுகளுக்கு ஆசார்யன் முன்னிலையாக பிரபத்தி
அநுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –

(தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத்தந்த பேர்உதவிக் கைம்மாறாத்
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே!)

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைக் குறித்து ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -(தசரத குமாரனிடம் மைதிலி சமர்ப்பிக்கப் படட்டும்)என்று கொண்டு பெருமாள் திருவடிகளில் பிராட்டியை சமர்ப்பி -என்று அருளிச் செய்தால் போலே -ஆசார்யனும் முமுஷுவைக் குறித்து -இவ்வாத்மாவை எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பி -என்றும் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – கதம் நு ராமாத் பவிதா பயம் ந -(ராமனிடம் ராக்ஷசர்களான நமக்கு எப்படிப் பயமுண்டாகும் -ப்ரஹஸ்தன் வாக்கியம்)என்று கொண்டு ப்ரஹஸ்தாதி வாக்ய தோஷ தூஷிதமான ராவணன் ஹிருதயம் போலே -ஆசார்யன் பிரசாதித்த வார்த்தையும் பிராக்ருத சஹ வாஸ தோஷ தூஷிதமான முமுஷுவின் ஹிருதயத்தில் தொங்காது —

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு–வத்யதா மேஷ தீவ்ரேண தண்டேன சசிவைஸ் சஹ -(இந்த விபீஷணன் மந்திரிகளோடு கூட கடுமையான தன்னை அழிக்கப்பட்டுக் கொல்லப்படட்டும்)என்று கொண்டு மகாராஜர் (ஸூக்ரீவன்)சொன்ன வார்த்தைக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஹ்ருஷ்டராய் நின்றாப் போலே-முமுஷுவும் ஒரு ஞாநாதிகர் நெருக்கிச் சொன்ன வார்த்தைக்கு அதி ப்ரீதனாய் இருப்பான் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச -(என்னாலே லங்கையும் நண்பர்களும் செல்வங்களும் கைவிடப் பட்டன)என்று பரிக்ரஹமானவற்றை விட்டால் போலே முமுஷுவும் பகவத் விஷயம் சொல்லப் போகாத தேசத்தை விட்டுப் போவான்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு கச்த ஏவ வ்யதிஷ்டத-(விபீஷணன் ஆகாயத்திலே நிலை நின்றான்)என்று நிராலம்பனாய் நின்றாப் போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு உபாயாந்தர சூன்யமாய் இருப்பான்(பற்றிலார் பற்ற நின்றான் -ஆவிக்கோர் நின்னலால் பற்றிலேன்)

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத (மக்களையும் மனைவிமாரையம் கைவிட்டு ராகவனை சரண் அடைந்தேன்)-என்று அனுபாதேயங்களை விட்டு போந்தாப் போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு விலங்கான விரோதிகளை விடுவான் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு -ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராமஸ் ஸ லஷ்மண (லஷ்மணனோடு ராமபிரான் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கு ஒரு முஹூர்த்த காலத்தில் விபீஷணன் வந்தான்)-என்று கொண்டு பெருமாள் எழுந்து அருளி இருந்த தேசமே உகந்து வந்தாப் போலே முமுஷுவும் எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசமே தனக்கு தஞ்சமாக பற்றுவான் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு -நிவேதயத மாம் ஷிப்ரம் –
ஆனைய நம் ஹரிஸ் ஸ்ரேஷ்ட -(என்னை விரைவில் ராமபிரானிடம் அடைவியுங்கோள் -வானர அரசனான ஸூக்ரீவா இவ்விபீஷணனை அழைத்து வா)என்கிற இடங்களில் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஒருவனுமே ப்ரஸ்துதனாக கூட வந்த முதலிகளுக்கு இழவு பேறு ஒத்தாப் போலே முமுஷுக்களுக்கு எம்பெருமான் திருவடிகளிலே ஆசார்யன் பண்ணின பிரபத்தியே அமையும் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு
ததஸ்து  ஸூ க்ரீவ வசோ நிசம்ய தத் ஹரிஸ் வரேண அபி ஹிதம் நரேஸ்வர
விபீஷணே நாசூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர -(அந்த ஸூக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குப்பின் மனிதர் தலைவரான ராம பிரான் வாநரர் தலைவனான சுக்ரீவனால் சொல்லப்பட்ட விபீஷண ஆழ்வானோடு சேர்த்தியை இந்திரன் புள்ளரையனான கருடனுடன் சேர்த்தியை அடைந்தது போல் அடைந்தார்-)என்று மகாராஜர்
முன்னிலையாக பெருமாள் விபீஷண ஆழ்வானை கைக் கொண்டு அருளினால் போலே
முமுஷுவையும் ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான் கைக்கொண்டு அருளும்

இப்படி கைக் கொண்டு அருளப் பட்ட பிரபன்னன் -சம்சார மண்டலத்திலே இருக்கும்
இருப்பை -பிராட்டி ராவண பவனத்திலே அசோக வநிஹையிலே இருந்து காட்டினாள் –
1-பிராட்டிக்கு ராவண சம்பந்தம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உடம்போடே சம்பந்தம் –
2-பிராட்டிக்கு ஏகாஷீ ஏக கரணிகளைப் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
3-பிராட்டியை பெருமாள் திருவடிகளில் நின்றும் பிரிக்கைக்கு தோற்றின மாரீசனைப் போலே -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு  முடிகைக்கு தோற்றின -விஷய ப்ராவண்யம்
4-பிராட்டியை தர்ஜன பர்த்ச்நாதிகளைப் பண்ணின ராஷசிகளோடே சம்பந்தம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு புத்ர மித்ராதிகளோடே சம்பந்தம் –
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு போலே ஸ்ரீ வைஷ்ணனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி வர்ஷித்த ராம குணம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் அருளிச் செயல்
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரவு போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் ஆசார்யன் உபதேசித்த குரு பரம்பரை
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆசார்யன் பிரசாதித்த திருமந்தரம்
9-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தைப் பார்த்து -அவ் வழியாலே அணி விரலைக் குறித்து -அவ் வழியாலே திருக்கை தொடக்கமாக அணைத்த திருத்தோள்-திருமேனி எல்லாம் அணைத்து தரித்தால் போலே ஸ்ரீ வைஷ்ணவனும் ஆசார்யன் பிரசாதித்த திருமந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானதோடு தரித்து இருப்பன்
10-பிராட்டிக்கு இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள் திருவடிகளை அகற்றினால் போலே -ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் பாகவத அபசாரம்
11-பிராட்டிக்கு விரோதிகளான ராவணாதிகளை துணித்து பெருமாள் பிராட்டியை திரு அயோதியை ஏறக் கொண்டு எழுந்து அருளினால் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை சவாசனமாக அறுத்து இந்த ஆத்மாவை எம்பெருமான் பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய் நித்ய முக்தரோடு ஒக்க நித்ய கைங்கர்யத்தை கொண்டு அருளும் – 

இப்பத்து வார்த்தையும் அனுஷ்டான பர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு இவ் விடம் தான் பரமபதம் –

(நான்முகனார் பெற்ற நாட்டுளே ஸ்ரீ வைகுந்தமாகும் இவர்களுக்கு வைகுந்தம் மா நகரே மற்றது கையதுவே)

(வார்த்தை -235-
கந்தாடை யாண்டான் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்ரீ வைஷ்ணவன் சம்சார மண்டலத்திலே இருக்கும் இருப்பை -பிராட்டி ராவண
பவனத்திலே இருந்து காட்டினாள் -எங்கனே என்னில் –
1-பிராட்டி இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள்
திருவடிகளை அகற்றினால் போலே இவனுக்கு ததீய அபராதம் எம்பெருமான் திருவடிகளை அகற்றும் –
2-பிராட்டிக்கு ராவண ஸ்பர்சம் போலே இவனுக்கு தேக சம்பந்தம் –
3-பிராட்டிக்கு தர்ஜன பர்த்சநாதிகளை (மிரட்டுதல் பயமுறுத்தல் முதலானவை)பண்ணின ராஷசிகள் சஹ வாஸம் போலே இவனுக்கு களத்ர புத்ராதி சஹ வாஸம் –
4-பிராட்டிக்கு மாரீச தர்சனம் போலே இவனுக்கு விஷய ப்ராவண்யம் –
பிராட்டிக்கு ராவண தர்சனம் போலே இவனுக்கு இந்திரியங்கள்
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு -காட்சி -போலே இவனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி ராம குணங்களை சொன்னால் போலே இவனுக்கு
ஆழ்வார்கள் அருளிச் செயல் –
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரலாறு சொன்னால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த குரு பரம்பரை –
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் கொடுத்தால் போலே இவனுக்கு
ஆசார்யன் அருளிச் செய்த திருமந்தரம் –
9-பிராட்டிக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெண் பிள்ளைகள் உசாத் துணை ஆனால் போலே
இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத் துணை –
10-பிராட்டிக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து பெருமாள் பிராட்டியை
எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு போனால் போலே விரோதியான பிரகிருதி
சம்பந்தத்தை அறுத்து எம்பெருமான் பரமபதத்துக்கு ஏறக் கொண்டு போகை –

இப் பத்து வார்த்தையும் அனுஷ்டான பர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவன் சரீரத் தளவும்
நிரபயமாக இருந்து எம்பெருமான் திருவடிகளைப் பெறும் –)

—————————————————————————–

வார்த்தை -268-
எம்பெருமான் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்தில் ஈடேறலாம் –
ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்திலும் இல்லை

———————————————————————————————–

வார்த்தை -269-
ஆண்டாள் வார்த்தை
ஆசார்யன் விஷயத்தில் அபராதம் பண்ணின நாலூரானும் ஈடேறினான் –
பகவத் விஷயத்தில் அபராதம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான்
பாகவத விஷயத்தில் அபராதம் பண்ணினார் இன்னார் ஈடேறினார் என்று இதுக்கு முன்பு கேட்டு அறிவது இல்லை –

(அம்பரீஷனிடம் அபசாரப்பட்ட துர்வாசர் அவனிடமே மன்னிப்பு கேட்டுப்பெற்று உய்ந்தார் -கிருமி கண்ட சோழன் போல்வார் பலரிடம் அபசாரப்பட்டு அழிந்தே போனார்கள்)

——————————————————————————————-

வார்த்தை -270-

நம்பிள்ளை நஞ்சீயரை அவதாரங்கள் ஏதுக்காக என்ன –
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை -என்று ஜீயர் அருளிச் செய்தார்

(ஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-சூரணை -192-சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை-அழிய மாறி  இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை)

———————————————————————————————

வார்த்தை -271-
தேவகிப் பிராட்டி வார்த்தை –
ந கஸ்சின் ந அபராத்யதி -என்னுமவள் ஆகையாலே பிராட்டியும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்
மித்ர பாவேன -என்னுமவன் ஆகையாலே ஈஸ்வரனும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்-பாகவத விஷயத்தில் அபசாரம் இவர்கள் தங்களுக்கே ஆகிலும் உயிரும் உடலும் பிரியும்படி இறே இருப்பது –
புருஷகார பூதையான பிராட்டி ஒரு கையும் -பிரபத்தி உபதேசம் பண்ணின ஆசார்யன் ஒரு கையுமாக பிராப்ய ஸ்தலம் ஏறப் பிடித்துக் கொண்டு போகிலும் பிரதிபந்தகமாயே விடும் -பிரபன்ன விஷய அபசாரம் –இதுக்கு உதாஹரணம் விண்ணப்பம் செய்வார் திறத்தில் அபசாரம் பண்ணின ஸ்ரீ வைஷ்ணவர் கதை –

(பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-)

(ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே -நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம் –மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன:-தோஷோ யத்யபிதஸ்யஸ்யாத் ஸதா மேததகர்ஹிதம் -பிஸாஸாம் தானவான் ரக்ஷான் பிரதிவ்யான் சைவ ராக்ஷஸாம் -அங்குல்ய க்ரேண தாம்யம்யான் இச்சான் ஹரி கணேஷ்வர:-ஸக்ருதேவ பிரபந்நாய தாஸ்மீகி ச யாசதோ  அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம ) 

(ஆலஸ்ய நிரூபணம் ஆவது -பிரபன்னனானவன் தன்னுடைய திருமேனியை
உபேஷை பண்ணி ஹேயமாய் இருக்குமிடத்தில் குத்சியாமல் அவர் விக்ரகமே
போக்யமாக பாராது இருத்தல் அபசாரம் -இதுக்கு விண்ணப்பம் செய்வார் கதை
கொட்டைப் பாக்கொடு பெருமாளையும் வாயில் இட்ட அரையர் கதை -வார்த்தை -273-)

(விண்ணப்பம் செய்வார் திருமேனியில் இருந்த நோயை இகழ அவர்களுக்கு அவரது நோய் வர -மன்னார்குடி தீர்த்தமாடி போக்கிக்கொள்ள உபதேசித்து போன விருத்தாந்தம் உண்டு)

———————————————————————————————–

வார்த்தை -272-
எல்லா வேதங்களையும் -எல்லா சாஸ்திரங்களையும் -எல்லா ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் – எல்லா ஆசார்யர்கள் பாசுரங்களைப் பார்த்த இடத்தில்
ஒரு வைஷ்ணவனுக்கு நிலை நின்ற ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை –
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதியும் இல்லை –

———————————————————————————————–

வார்த்தை -273-
எம்பெருமானார் தம்முடைய அந்திம தசையிலே அருளிச் செய்த வார்த்தை –
உடையவர் தம்முடைய திரு உள்ளத்திலே ஆர்த்தியோடே விசாரித்து
பெரிய பெருமாளை திருவடி தொழுது விண்ணப்பம் செய்தபடி
சம்சாரத்தில் அருசி பிறந்தது என்று சாங்கப் பிரபத்தியை பண்ணி அருளினார்

இப்போது இது என் என்று பெரிய பெருமாள் வினவி அருள -கால அதிக்ரமம்
பிறந்ததே என்ன -காலத்துக்கு நாம் அன்றோ கடவோம் -சிறிது காலம் உம்மைக் கொண்டு
லோகத்தை திருத்தப் பார்த்தோம் -அறப் பதறினீர் -இனி உமக்கு வேண்டுவது
என் என்ன -சடக்கென திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ன -ஆகில்
இற்றைக் கிழைமைக்கு நாலாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன -அப்போது என்னுடைய சம்பந்த சம்பந்திகள் எல்லாரும் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்து –

(குருபரம்பரையில் ஏழு நாள்கள் என்று உண்டு -பின்பு முதலிகளுக்கு அர்த்த விசேஷங்களை அருளிச் செய்யும் பொழுது நாலு நாள்கள் என்றும் இருப்பதால் முதல் மூன்று நாள்கள் ஸூயா அனுசந்தானம் பண்ணிக்கொண்டு இருந்தார் என்னலாம்)

மடத்துக்கு எழுந்து அருளி -அப்போது முதலிகள் எல்லாரையும் அழைத்து அருளி
ஒருகாலும் அருளிச் செய்யாத அர்த்தங்களை எல்லாம் அருளிச் செய்தார் –
அவ்வர்தங்களை எல்லாம் கேட்டு அதி சங்கை பண்ணி விண்ணப்பம் செய்ய –
இவரும் வெள்ளக்கேடாக ஒண்ணாது என்று இற்றைக்கு நாலாம் நாள் பெரிய
பெருமாள் திருவடிகளில் போகிறோம் என்று அருளிச் செய்ய –

இவருடைய விஸ்லேஷத்தில் ஆத்ம த்யாகம் பண்ணக் கடவோம் என்று முதலிகள் தேறி
இருக்கிற பிரகாரத்தை திரு உள்ளம் பற்றி -ஆளவந்தார் ஸ்ரீ பாதமே -ஆத்ம த்யாகம்
பண்ணினார் உண்டாகில் நம்மோடு அந்வயம் இல்லை என்று அருளிச் செய்ய –
இவர்களும் இத்தைக் கேட்டு மிகவும் சோகார்தராய் -இனி எங்களுக்கு செய்ய அடுப்பது என்
பட்டி புகுதல் -பட்டினி கிடத்தல் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய -அருளிச் செய்த வார்த்தை -(பட்டி புகுதல் -எம்பெருமானாரை விட்டு நம் பெருமாளைப் பற்றிக் கிடப்பது)

சகல வேதங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் சகலமான ஆழ்வார்கள் திவ்ய
பிரபந்தங்களிலும் -சகல ஆசார்ய பாசுரங்களிலும் பார்த்த இடத்தில் -ஒரு அதிகாரிக்கு
த்வயம் ஒழிய மந்த்ரம் இல்லை —
மிதுனம் ஒழிய வஸ்து இல்லை –
மிதுன கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை –
ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-

பாகவத அபசாரம் தான் பஹூ விதம் -அதில் பிரதான அபசாரம் பன்னிரண்டு –
அவை எவை என்னில் -1-ஜன்ம நிரூபணம் –2-சரீர நிரூபணம் -3-பாவ -(பாக )-நிரூபணம் –
4-ஆஸ்ரம நிரூபணம் -5-அவயவ நிரூபணம் -6-ஆலஸ்ய நிரூபணம் –
7-வாஸ நிரூபணம் -8-பந்து நிரூபணம் -9-பிரகாஸ நிரூபணம் –
10-பிரகார நிரூபணம் -11-வர்த்தன நிரூபணம் -12-தோஷ நிரூபணம் –

இதில்
1-ஜன்ம நிரூபணம் ஆவது -ஸூ த்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம்
ததா -வீஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -ந ஸூ த்ரா பகவத்
பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா -சர்வ வர்ணேஷூ தே ஸூ த்ரா
யேஹ் யபக்தா ஜநார்தனே -ய பஸ்யதி ஸூ பாசாரம் வைஷ்ணவம் வீத கல்மஷம்
ஸ வை யஸ்மின் குலே ஜாதம் பிரணமேத் தண்டவத் புவி -கிமப் யத்ராபி ஜாயந்தே
யோகி நஸ் சர்வ யோநிஷூ -பிரத்யஷித ஆத்மா நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்
என்று இத்யாதி புராணங்களிலே சொல்லப்பட்டு இருக்கையாலே தான் வைஷ்ணவர்களை
ஜன்ம நிரூபணம் பண்ணுவது அபசாரம்

(பாகவத அபசாரம் தான் அநேக விதம் –-சூரணை -194–அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –-சூரணை -195–இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்–196-வீட்டு இன்ப இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -சூரணை-75-)

2-சரீர நிரூபணம் ஆவது -புருஷ சரீரம் என்றும் -ஸ்திரீ சரீரம் என்றும் -திருவனந்த
ஆழ்வானை பாம்பு சரீரம் என்றும் -ஸ்ரீ கருட ஆழ்வானையும் -ஸ்ரீ ஜடாயு மகா ராஜரையும்
பஷி சரீரம் என்றும் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானையும் திருவடியையும்
ஸ்ரீ சுக்ரீவ மகாராஜரையும் மிருகங்கள் என்றும் -பிரகலாத ஆழ்வானையும் ஸ்ரீ விபீஷண பெருமாளையும் மகா பலியையும் இவர்கள் முதலான பகவத் தாசரை ராஷசர் என்றும் -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபங்களான சதுர்வித சரீரங்களிலே பகவத் பக்தர் யாதொரு சரீரம் பரிகிரஹித்து இருந்தாலும் இந்த சரீரம் என்று சரீர நிரூபணம் செய்கை அபசாரம்

(மகாபலி இன்றும் திருக் கோவலூர் ஆயனர் திருவடிக் கீழ் அமர்த்தி அருளப்படுகிறவன் அன்றோ – -காமரு சீர் அவுணன் -கொண்டாடப் படுபவர் தானே)

3-பாவ -(பாக) நிரூபணம் ஆவது ஷட்பாவ விகாரமான பால்ய யௌவன வ்ருத்தத்வாதி வயோ நிரூபணம் செய்கை அபசாரம்

(சிறு மா மானிடராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -செல்வச்சிறுமீர்காள் -நீராடப்போதுவீர் -கௌரவிக்க வேண்டுமே -கண புரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை எனப் பெறுவாரோ)

(விண்ணப்பம் செய்வார் திருமேனியில் இருந்த நோயை இகழ அவர்களுக்கு அவரது நோய் வர -மன்னார்குடி தீர்த்தமாடி போக்கிக்கொள்ள உபதேசித்து போன விருத்தாந்தம் உண்டு)

4-ஆஸ்ரம நிரூபணம் ஆவது -ப்ரஹ்மசர்ய -க்ருஹஸ்த -வானப்ரஸ்த -யதியாதிகளில்
ஸ்ரீ வைஷ்ணவர்களை இந்த ஆஸ்ரமம் என்று ஆஸ்ரம நிரூபணம் செய்கை அபசாரம்
5-அவயவ நிரூபணம் ஆவது -திருமேனியிலே ஆதல் -அவயவங்களிலே ஆதல்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஒரு தோஷம் உண்டே ஆகிலும் அவர்கள் ஜ்ஞானமே
சர்வ அவயவ பூர்த்தி என்று பாராமல் இருக்கை அபசாரம்
6-ஆலஸ்ய நிரூபணம் ஆவது -பிரபன்னனானவன் தன்னுடைய திருமேனியை
உபேஷை பண்ணி ஹேயமாய் இருக்குமிடத்தில் குத்சியாமல் அவர் விக்ரகமே
போக்யமாக பாராது இருத்தல் அபசாரம் -இதுக்கு விண்ணப்பம் செய்வார் கதை
 (கொட்டைப் பாக்கொடு பெருமாளையும் வாயில் இட்ட அரையர் கதை -)

7-வாஸ நிரூபணம் ஆவது -கோயில் திருமலை பெருமாள் கோயில் நின்றும்
எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை எத்தனை ஆதரிப்பார்கள் அப்படியே
ஒரு குப்பத்தில் இருந்து எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவரை அவர் இருந்த
ஸ்தலமே திவ்ய தேசம் என்று உத்தேஸ்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை -அபசாரம் –
கருடன் -சாண்டிலி அம்மையார் வ்ருத்தாந்தம் –

(இது வன்றோ எழில் ஆலி என்றான் அன்றோ-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தமாகுமே)
8-பந்து நிரூபணம் ஆவது -தன்னுடைய பிரகிருதி பந்துக்களிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
உண்டாகில் தன்னுடைய ஸ்வாமி என்று உத்தேஸ்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை அபசாரம்
9-பிரகாஸ நிரூபணம் ஆவது -ஆசார்யரையும் சிம்ஹாசனத்தில் அவர்களையும் பூஜ்யர் ஆனவரையும் – பிரசித்தமாக ஆசார்ய கைங்கர்ய தாஸ்ய க்ருத்யம் பண்ணுமவர்களையும் –
உபாய ஸூன்யராய் ஒதுங்கி வர்த்திக்கும் அவர்களையும் ஏக பிரகாரத்தில் ரஷகர் என்று பாராது இருத்தல் அபசாரம் –

(திருமுடித்துறை பகவர் போல் இருப்பாரையும் ரக்ஷகர் என்றே கொள்ள வேண்டும்)
10-பிரகார நிரூபணம் ஆவது -திரு நந்தவனம் செய்கிற பிரபன்னரையும் -திரு
முற்றங்கள் கட்டுவிக்கிற பிரபன்னரையும் -சாத்துப்படி திருமாலை திரு விளக்கு இடுகிற
பிரபன்னரையும் -மற்றும் இத்யாதி பரிசாரகங்கள் செய்கிற பிரபன்னரையும் –
பார்வைக்கு ஒன்றும் செய்ய மாட்டாத வெறுமனே இருக்கிற பிரபன்னரையும்
ஏக பிரகாரத்தில் உத்தேஸ்யர் என்று பாராது இருக்கை அபசாரம்

(கிஞ்சிதாவது செய்யாமல் இருந்தால் கூடாதே -சேஷத்வம் என்றாலே வ்ருத்தி வேண்டுமே -பார்வைக்கு -நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்து -பிரபன்னர் என்பதால் கைங்கர்யம் செய்வதை பிறர் அறியாமல் செய்பவர் என்று கொள்ள வேண்டும்)
11-வர்த்தந  நிரூபணம் ஆவது-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி யாத்ரையான பிரகிருதி வஸ்யர் நிரூபணத்தில் வ்யவஹாரம் பண்ணுதல் -கிருஷி பண்ணுதல் -ஆயுதம் பிடித்து சேவித்தல் – எவ்வகையில் பாங்காய் இருந்தாலும் இவ்வகையில் இருக்கிறார்கள் என்று
நினைக்கை அபசாரம் -இதுக்கு அவரை வியாபாரி கதை

(ரிஷி தபஸ் செய்ய குருவிடம் கூடு கட்டின -குட்டிகள் வளர்ந்து போன பின்பே அசைந்து -நான் தான் அஹிம்சா வாதி என்று சொல்ல -அவரை கடையில் உள்ள வியாபாரி இடமும் செல்லச்சொல்ல -அவர் வீட்டில் -கீரிப்பிள்ளை பாம்பு ஒன்றாக விளையாட இதுவே அஹிம்சை காட்டிய வ்ருத்தாந்தம்)
12-தோஷ நிரூபணம் ஆவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி போகமான பிரவ்ருத்தி
ஸா கதா பாரதீ புண்யா த்ரௌபதி ச பதி வ்ரதா -தத் விதா பாண்டவா தன்யா பிரசன்னே
புருஷோத்தமே -என்று த்ரிவித கரணங்களாலும் அவி சேஷஞ்ஞர் என்றும் –
அனுஷ்டாதா அன்று என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை ஏவ மாதி தோஷங்கள்
நிரூபிக்கை அபசாரம் –

(பாண்டவா தன்யா பிரசன்னே புருஷோத்தமே –மம பிராண பாண்டவ-ஸ்ரீ கிருஷ்ணன் அபிமானம் வைத்த மஹிமை)

தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தோஷத்தை பார்க்க கடவன் அல்லன் –
கண்ணாலே பார்த்து மனசாலே நினைத்து வாக்காலே சொல்லி –
அம்மை கனக மிருகத்தைக் கொண்டு வரச் சொல்லி -பகவானை அனுப்பின அபசாரம் –
அது எங்கனே என்னில் -கந்தர்ப்ப கோடி லாவண்யமாய் பஞ்சோ பஷிணத் மயமாய்
ஹாவு ஹாவு ஹாவு என்று திவ்ய மங்கள விக்ரக அனுபவம் பண்ணி –
சப்தாதி விஷய ப்ராவண்யத்தில் ஒரு ஸுவர்ண பாஸ மிருகத்தை அபேஷித்து
பெருமாளை விட்ட போதே -பரம பாகவதனான இளைய பெருமாளை பருஷ
வாக்யங்களைச் சொன்ன போதே ராஷ சர்கையிலே சிறை போக வேண்டிற்று –
வாசகத்தால் செய்த அபசாரத்துக்கு பிராயச்சித்தம் இல்லை –

ந ஷமாமி கதாசன – மத் பக்தம் ஸ்வ பசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நரா -பத்ம கோடி சதேனா சபி ந ஷமாமி வஸூ ந்தரே -இவை தான் ஓரொன்று பஹூ முகமாய் வந்தேறும் –
இவ் வபராதங்களை தான் பண்ணுகையும் -தனக்கு உத்தேச்யனான ஆசார்யன்
பண்ணிலும் -ந்யம அதி க்ரமம் ரஹசி போதயேத் -என்கிறபடி ஏகாந்தத்தில் நியமித்து
தவிர்ப்பியாது ஒழிகையும் -பரதந்த்ரரானவர்கள் பண்ணுமிடத்தில் முதுகிலே யடித்து
விலக்காது ஒழிகையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் அபராதம் பண்ணும் இடத்தில்
அவர்கள் ஸ்ரீ பாதத்தைக் கட்டிக் கொண்டு ஆனவளவும் நியமித்து தவிர்ப்பியாது ஒழிகையும் -அவர்கள் தவிராத அளவிலே தான் பகவத் விஷயத்தில் சரணம் புகாது ஒழிகையும்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏகாந்தத்தில் பண்ணின அபராதங்களை பிரகாசம் ஆக்குகையும் அபராத ஷாமணம் பண்ணினவர்களை பாகவத அபசாரம் பண்ணினார்கள்  என்று நினைத்து இருக்கையும் இவ்வபதாரங்களுக்கு எல்லாம் அடி –

——————————————————————————————-

வார்த்தை -274-
அவஸ்யம் பரிக்ராஹ்யங்கள் ஆன பன்னிரண்டு அறிய வேணும் -அவை யாவன –
1-ஆகார நியமமும் -2-விஹார நியமமும் -3-அன்ன நியமமும் -4-போஜன நியமமும் –
5-ஸ்நான நியமமும் -6-ஸ்வரூப நியமமும் -7-உபாய நியமமும் -8-உபேய நியமமும் –
9-வாஸ நியமமும் -10-போக நியமமும் -11-ஆசார நியமமும் -12-சம்சர்க்க நியமமும் –
1–ஆகார நியமம் ஆவது -பாகவத அன்னமே புஜிக்கை
2–விஹார நியமம் ஆவது -பகவத ஆலயங்களிலும் திரு நந்தவனங்களிலும் ஸ்வா சார்யன் சஞ்சரிக்கும் ஸ்தலங்களிலும் -மற்றும் விலஷணமான ஸ்தலங்களிலும் சஞ்சரியாதே  மற்ற விடத்திலே சஞ்சரிக்கை –
3–அன்ன நியமம் ஆவது -ப்ராக்ருதர் இடத்தில் தன்னைக் கீழ் படுத்தி ஆர்ஜியாதே
அமுதுபடி -சாத்துப்படி -ஸ்ரீ கார்யம் முதலானவற்றுக்கு அர்ஹமான த்ரவ்யங்களுக்கு
கர்தவ்யதயா அநு கூலரை நெருக்கி ஆர்ஜியாதே ஸ்வ ஷேத்ரத்தில் ஸ்வ சரீரத்தில்
க்ருஷி பண்ணி யாதல் -அநு கூலருடைய ஸ்நேஹத்தாலே வந்த த்ரவ்யம் ஆதல் –
மாதுகர முஷ்டியினால் ஆர்ஜித்த த்ரவ்யம் ஸ்வீகரிக்கையும்
4-போஜன நியமம் ஆவது -இப்படி ஆர்ஜிதமான த்ரவ்யத்தை பகவத் பாகவத
விஷயத்தில் சமர்ப்பித்து பிரசாத பிரதிபத்தி பண்ணும் போது பிரசாத ஸ்வீகாரம்
என்றும் -ஷுந நிவ்ருத்தி மாத்ரம் என்றும் -தேஹ  தாரண மாத்ரம் என்றும் –
புருஷார்த்தம் என்று இருக்கை –
5-ஸ்நான நியமம் ஆவது -பாப விமோசனம் என்று ஆதல் -பிரயோஜனாந்தர நினைவு
ஆதல் -புண் கழுவுகிறோம் என்றாதல் -அதிகாரி சம்பத்துக்கு உடலாக வாதல் -சரீர
மாலின்யத்துக்காக வாதல் அன்றிக்கே -பர்த்ரு போகத்துக்கு பதி வ்ரதை ஸ்நானம் பண்ணுமா போலே பகவத் பாகவத சமாராதனம் செய்கைக்காக ஸ்நானம் பண்ணுகை
6-ஸ்வரூப நியமம் ஆவது -ததீய சேஷமாய் இருக்கை –
7-உபாய நியமம் ஆவது -அநந்ய சாதநனாய் இருக்கை
8-உபேய நியமம் ஆவது அநந்ய பிரயோஜனனாய் இருக்கை
9-வாஸ நியமம் ஆவது -அநந்ய பிரயோஜனரான மகா பாகவதருடைய திருமாளிகை கடைத் தலையிலே ஒதுங்கி வர்த்திக்கை –
10-போக நியமம் -ஆவது -அவர்களுடைய சேவையே எல்லா போகங்களும் என்று இருக்கை
11-ஆசார நியமம் ஆவது -அர்த்த காம அபிமானங்கள் ஹேதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திரு உள்ளத்திலும் ஆசார்யன் திரு உள்ளத்திலும் கலக்கம் வாராமல் வர்த்திக்கை –
12-சம்சர்க்க நியமம் ஆவது -சாத்விகர் அங்கீகாரம் உள்ள தேசத்தில் வசித்து இருக்கை –

இந் நியமங்கள் உண்டாய் போரவே -இவ் வபதாரங்கள் ஒன்றும் புகுராது என்று–அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————-

வார்த்தை -275-
நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக
நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-(திருமாலைக் கண்டேனே)
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெரு மக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

(ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை-நல்லடிக் காலத்தில்  நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார்  இளையார் 
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம்  தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –

ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம்  ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –

ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-

அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –

இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை  அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா  தரித்ரதா  குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-)

—————————————————————————————————-

வார்த்தை -276-
உடலை நெருக்கி உயிர் உடன் உறவு கொண்டாடுவாரைப் போலே காணும்
நாரங்களை நெருக்கி நாராயணன் உடன் உறவு கொண்டாடுகை-

(ஏஷ ஸர்வ பூதாத்மா -ஓர் உயிராய் -ஸர்வம் கலு ப்ரஹ்மம் -பாகவதர்கள் பகவத் சரீரங்களே -நாரங்கள் -என்ற எண்ணம் வேண்டுமே)

——————————————-———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -253-264–அரும் பத விவரணத்துடன்–

February 4, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -253-
அர்த்த லுப்தன் சம்சாரி
ஜ்ஞான லுப்தன் -ஸ்ரீ வைஷ்ணவன்
கைங்கர்ய லுப்தர் -முக்த நித்யர்
தாஸ்ய  லுப்தர் -எம்பெருமான் –(வாஸூ தேவனே ஸர்வம் ஸூ துர்லபம் -ஆற்றங்கரைக் கிடைக்கும் கண்ணன்)

————————————————————————————

வார்த்தை -254-
பத்தன் தன்னை பிரகிருதி என்று இருக்கும்
விஷயீ தன்னை காமுகன் என்று இருக்கும்
கேவலன் தன்னை ஸ்வ தந்த்ரன் என்று இருக்கும்
சாஸ்த்ரி தன்னை சர்வஞ்ஞன் என்று இருக்கும்
கர்மீ தன்னை போக்தா என்று இருக்கும்
ஜ்ஞானி தன்னை வ்ரக்தன் என்று இருக்கும்
பக்திமான் தன்னை மோஷ சாதனன் என்று இருக்கும்
பிரபன்னன் தன்னை அசித் என்று இருக்கும் –(ஞானம் விபாகம் அஞ்ஞான தசை இது -முதலில் கேவல அஞ்ஞானி)

————————————————————————————-

வார்த்தை -255-

பக்தருக்கு சோறும் தண்ணீரும் தாரகம் -ஆஜ்ய ஷீராதிகள்(நெய் பால் போல்வன) போஷக த்ரவ்யம் –ஸ்ரக் சந்தநாதிகள் போக்கியம் –
முமுஷுவுக்கு ஜ்ஞானம் தாரகம் -ஆசார்ய வைபவம் போஷகம் —பகவத் குண அனுசந்தானம் போக்கியம் –
நித்ய முக்தருக்கு மிதுன அனுபவம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் —பகவன் முகோல்லாசம் போக்கியம்

(தாரகம்-வாழ் முதல் – போஷகம்-வளர் முதல் -போக்கியம்-மகிழ் முதல்)

———————————————————————————————

வார்த்தை -256
ஓர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே இரண்டு பேர் ஆஸ்ரயிக்க –
ஒருவர் ஜ்ஞாநாதிகராக ஒருவர் சம்பந்த மாத்ரமே யாய் இருப்பான் என் -என்னில்
பாபம் ஷீணம் ஆகாமை–அப்படியானால் ஆஸ்ரயிக்க கூடுமோ என்னில்
பாபம் தான் த்ரிவித மாகையாலே கூடும் -எங்கனே என்னில் -ஒரு ஸ்திரீக்கு மூன்று பிரதிபந்தகம் உண்டாமா போலே –அவையாவன -பாணி க்ரஹனம் பண்ண ஒட்டாத பாபமும்
பர்த்தாவோடு சம்ஸ்லேஷிக்க ஒட்டாத பாபமும் – புத்திரன் இன்றிகே இருக்கிற பாபமும் –
இவை பர்வ க்ரமத்தாலே போமா போலே அதிகாரிக்கும் சமர்பண விரோதி ஷயமும் -சாதன விரோதி ஷயமும் -ப்ராப்தி விரோதி ஷயமும் என்ற இவை மூன்றும் பர்வ க்ரமத்திலே போக வேண்டுமாகையாலே –

(இம் மூன்றும் ஆச்சார்யன் உபதேசம் -பகவத் பாகவத ஆச்சார்ய அபிமானம் முதலானவற்றை படிப்படியாக நீங்கும் -)

———————————————————————————————-

வார்த்தை -257-
வைஷ்ணவன் என்றும் -ஏகாந்தி என்றும் -பரமைகாந்தி என்றும் -ஆகாரம் மூன்று –
வைஷ்ணவன் ஆகிறான் -தேவதாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் சேஷத்வ ஜ்ஞானம் பிறந்தவன் –
ஏகாந்தி யாகிறான் -சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்த ஸாதனம் ஸ்வீகாரம் பண்ணினவன் –
பரமை காந்தி யாகிறான் -பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக பரம ப்ராப்ய ருசி பிறந்தவன் –

————————————————————————————————-

வார்த்தை -258-
வைஷ்ணவன் அக்ருத்யத்தை பாபம் என்று தவிரும் –
ஏகாந்தி அக்ருத்யத்தை ஸ்வரூப ஹானி என்று தவிரும் –
பரமை காந்தி அக்ருத்யத்தை ருசி இல்லாமையாலே தவிரும் –
அன்னமென்ன நடையினார் கலவியை அருவருத்த அஞ்சினாயேல் -பெரிய திருமொழி -9-7-2-என்னக் கடவது இறே –

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து   அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-2-

————————————————————————————————-

வார்த்தை -259-

வைஷ்ணவன் க்ருத்யத்தை அதிகாரி சம்பத்திக்காக செய்யும் –
ஏகாந்தி க்ருத்யத்தை லோக சங்க்ரஹதயா கர்த்தவ்யம் என்று செய்யும் –
பரமை காந்தி க்ருத்யத்தை கிருபையாலே செய்யும் –

————————————————————————————————

வார்த்தை -260-
வைஷ்ணவன் கைங்கர்யத்தை சாதனம் என்று செய்யும் –
ஏகாந்தி கைங்கர்யத்தை கால ஷேபம் என்று செய்யும் –
பரமை காந்தி கைங்கர்யத்தை ராக ப்ராப்தி என்று செய்யும் –

————————————————————————————————

வார்த்தை -261-
சாந்தனுக்கு சத்வோத்ரேக ஹேது -சத்வோத்தரருடைய சரீராஹார நிரூபணம் பண்ணி சருகு திரட்டாத சம்யக் ஜ்ஞான நிஷ்டை –
ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்வ வர்ண அநு கூலமான ஸூஹ்ருத் தர்சனமே சர்வ அபேஷிதம் –
ஸ்வ ரஷணத்துக்கு பரேச்ச (ஈஸ்வர இச்சா)அநுகூலமான ஸ்வ சேஷத்வமே ஸ்வரூப உபாய உக்தம் —(நின் அருளே பார்த்து இருப்பேனே)
சத்வஸ்தனுக்கு ஸ லஷ்மீகாநுபவ சாதனம் சத்வஸ்த விஷய லஷ்மீகத சம்பந்த ஸார ஜ்ஞானமே -(புருஷகாரம் பண்ணுவிப்பவள் பிராட்டி சம்பந்த ஞானமே போதும்)

————————————————————————————————-

வார்த்தை -262-
சாந்தன் ஆகிறான் சதுர்வித அஹங்காரம் கழித்தவன் -அவை யாவன-1- தேகத்தில் அஹங்காரமும் – 2-ஸ்வரூபத்தில் அஹங்காரமும் – 3-உபாயத்தில் அஹங்காரமும் – 4-உபேயத்தில் அஹங்காரமும் –

தேகத்தில் அஹங்காரம் ஆவது -தேகத்தை தானாக நினைக்கையும் –
தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி பண்ணுகையும் –
தேகாந்தர அனுபவத்தில் புருஷார்த்த புத்தி பண்ணுகையும் –

——————————————————————————————–

வார்த்தை -263-
இது (தேகத்தில் அஹங்காரம்)கழிகை யாவது தேகத்தில் ஆத்ம புத்தி நிவ்ருத்தியும் -தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தி நிவ்ருத்தியும்-தேஹாந்தர அனுபவத்தில் புருஷார்த்த நிவ்ருத்தியும் –

ஸ்வரூபத்தில் அஹங்காரம் ஆவது -தேஹத்தை அண்டை கொண்டு ஸ்வரூபத்தை உறுமுதல் –ஸ்வரூபத்தை அண்டை கொண்டு தேகத்தை உறுமுதல் செய்கை(இவன் கேவலன்) –
இது கழிகையாவது -அவன் வடிவே வடிவாகையாலே பர ஸ்வரூபத்துக்கு உள்ளே ஸ்வ ஸ்வரூபம் விளங்குகை -(இருவரும் ஞானானந்த வடிவு தானே -இது அஹங்கார கர்ப்பமாகக் கூடாது –  அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்  அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே)

உபாயத்தில் அஹங்காரம் ஆவது -ஸ்வகத ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணுகை –
இது கழிகையாவது -ஸ்வகத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத ஸ்வீகாரத்துக்கு விஷயனாகை –

உபேயத்தில் அஹங்காரம் ஆவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை
இது கழிகையாவது -தன் கையாலே தன் மகிரை வகிர்ந்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி கொண்டாட வேண்டாதாப் போலே-அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் -என்று இருக்கை .

———————————————————————————————

வார்த்தை -264-
பத்தன் அவித்யாதீநன்
சாஸ்த்ரி புண்ய பாபாதீநன்
கேவலன் ஸ்வ ஸ்வரூப அதீநன்
முமுஷு (பகவல்லாபார்த்தி இங்கு-சாதனாந்தர நிஷ்டன் -கீழே ப்ரபன்னனான் உள்ளபடியால்)பகவததீநன்
பிரபன்னன் ஆசார்ய அதீநன்
பிரபத்தி நிஷ்டன்(உறுதி குலையாமல் மஹா விஸ்வாஸம் கொண்டவன் -பாகவத அபிமானத்தில் ஒதுங்கியவன்) ததீய அதீநன் .

(அதீனன் அடக்கியவன் என்றும் அபிமானத்தில் ஒதுங்கினவன் என்றும்)

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -241-252–அரும் பத விவரணத்துடன்–

February 4, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -241-
தான் அனுபவிக்கையாவது -அவன் அனுபவிக்கை —அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே
வருந்திப் பெறுவாரும் இரந்து பெறுவாருமாய் இருக்கும் –
செஞ்சொற் கவிகாள் -திருவாய்மொழி -10-7—மங்க ஒட்டு உன் மா மாயம் -10-7-10-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -போலே–
ஆக பிராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

(ஆழ்வாரது திருமேனியை அவ்விடம் கொண்டு சென்று அனுபவிக்கப் பெறாமல் திரு உள்ள வருத்தத்துடன் ஆழ்வாரது ஆத்ம ஸ்வரூபத்தை கொண்டு சென்று அனுபவிக்கிறான் -அதே போல் சிந்தை மற்ற ஒன்றின் திறத்தல்லாத் தன்மை அடைந்த ஆழ்வார் திருவாறன்விளையில் அனுபவித்திலேயே மண்டி இருந்து அங்கு பேர் சொல்லவும் மாட்டாதே மற்று என்றும் அருளிச் செய்தாலும் ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -யாசித்து ஆழ்வாரைப் பெற்று அனுபவிப்பவனாய் இருக்கிறான் -இவரும் மருள் ஒழி நெஞ்சே என்று செல்கிறார்)

(எம்பெருமானாரை பேர் அருளாளனை இரந்து பெற்றான் அரங்கன் -சிந்தை மற்ற ஒன்றிலுமே இல்லா திறத்தில் அல்லாதஆழ்வாரை ஸ்ரீ வைகுண்டநாதன் திருவாறன் விளை எம்பெருமானை இரந்து பெற்றான் -)

—————————————————————————————

வார்த்தை -242-
பகவத் பரர் த்விவிதர் -முமுஷுகள் என்றும் புபுஷுகள் என்றும்
முமுஷுக்கள் தான் த்விவிதர் -பகவத் சரணாகதர்களும் கைவல்யார்த்திகளும்
பகவத் சரணாகதர்கள் த்விவிதர் -உபாசகரும் பிரபன்னரும்
பிரபன்னர் த்விவிதர் -ஆர்த்தரும் த்ருப்தரும்
ஆர்த்த பிரபன்னர் த்விவிதர் -சம்சாரம் அடிக் கொதித்தவர்களும் -பகவத் அனுபவம் பெற்றால் ஒழிய தரிக்க மாட்டாதாரும் –

(பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ)

—————————————————————————————–

வார்த்தை -243-
வ்யதிரிக்தங்களை விட்டு அவனைப் பற்றுகை வைஷ்ணவன் ஆகையாவது –
தன்னை விட்டு அவனைப் பற்றுகை ஏகாந்தி யாகை யாவது –
அவனை விட்டு அவனை பற்றுகை பரமை காந்தியாகை யாவது -அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பற்றுதல் –

(உபாயத்தில் கண் வைக்காமல் உபேய ஏக பரராய் இருக்க வேண்டுமே-உபாயாந்தரங்களைப் பற்றி அவனைப் பற்றவது வைஷ்ணவன் – அவனைப் பற்றி பிரயோஜனநாந்த்ர பரர் அல்லாமல் -அவனை அடைவது ஏகாந்தி -)

——————————————————————————————

வார்த்தை -244-
அம்மங்கி அம்மாள் வார்த்தை –
உடம்பைப் பற்றி சோறு தேடுவாரும்
உறவு முறை பற்றி சோறு தேடுவாரும்
உடம்பரைப் பற்றி சோறு தேடுவாரும் -(உடம்பர் உடம்புடன் உள்ள ஆத்மா- பற்றி கைவல்யார்த்திகள்)
உடம்பர்களைப் பற்றி சோறு தேடுவாரும்(புண்ய கார்யங்கள் செய்பவர்)
லோகத்தைப் பற்றி சோறு தேடுவாரும்
உயிரைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனைப் பற்றி சோறு தேடுவாரும்
அவளைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாருமாய்- இறே இருப்பது –(அவர்கள் ஆனந்தம் கண்டு ஆனந்திக்கவும் வேண்டுமே ஆகவே தன்னையும் இங்கு சேர்ந்தது)

(தேஹாத்ம அபிமானிகளாய் இருந்து உடம்புக்கும் உறவு கொண்டாருக்கும் இஹ லோக ஐஸ்வர்யத்துக்கும் ஸ்வர்க்காதி ஐஸ்வர்யத்துக்கும் பாடுபடுபவர்களும் -உலக நன்மைக்கு பாடுபடுபவர்களும் கைவல்யார்த்திகளும் -மிதுனத்தைப் பற்றி வைத்து ஐஸ்வர்யார்த்திகளாய் இருப்பவர்களும்- பெருமானை மட்டுமே பற்றி பேற்றை பிரார்த்திப்பார்களும் -பிராட்டியை மட்டுமே பற்றி பேற்றை பிரார்த்திப்பார்களும்- மிதுனத்தைப் பற்றி பேற்றை பிரார்திப்பார்களும் -ஸ்வார்த்தமாக பேறு -பரார்த்தமாக பேறு -இவ்வாறு மேல் மேல் உயர்ந்த நிலைகள்)

——————————————————————————————–

வார்த்தை -245-
கலக்கத்தோடு கூடின தேற்றம் ப்ரதம அதிகாரிக்கு
தேற்றத்தோடு கூடின கலக்கம் சரம அதிகாரிக்கு –

(பிரதம அதிகாரிக்கு ஸாம்ஸாரிக கலக்கத்துடன் பகவத் விஷய ஞானத்தை உண்டான தெளிவு உணவு -சரம அதிகாரிக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தினால் அஸ்தானே பயஸங்கை உண்டாகி அவனுக்கு என் வருகிறதோ என்கிற கலக்கம் உண்டு-இவனுக்கு ப்ராப்த விஷயத்தில் கலக்கம்-பொங்கும் பரிவு -ஞான விபாகத்தால் வரும் அஞ்ஞானம் அடிக்கழஞ்சு பெரும்)

———————————————————————————————

வார்த்தை -246-

நஞ்சீயருக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
உபாயாம்ச நிரூபகர் த்ரிவிதர் -எங்கனே என்னில் –
கர்ம ஞான நிஷ்டர் என்றும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டர் என்றும் -சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டர் என்றும் –
இதில் சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -கர்ம ஞாநாதி நிஷ்டனை அருவருக்கும் –
சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டன் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டனை அருவருக்கும்

கர்ம ஞாநாதி நிஷ்டன் கர்ம பரிபாலன பங்கம் பிறக்கிறதோ என்று கலங்கிக் கொண்டு போரும்
சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -சித்த சாதன பரிபாலன பங்கம் பிறக்கப் புகுகிறதோ -என்று கலங்கிக் கொண்டு போரும் –
சித்த உபாயாந்தர்க்கத -தத்வ -நிஷ்டன் சித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு போரும் –(கலக்கத்துக்கு ஹேதுவே இல்லையே -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் ஒன்றே கர்த்தவ்யம்)

(மூன்றாம் வகை -எம்பெருமான் நம்மைப் பற்றும் பற்றே உபாயம் என்றும் உணர்வது அவன் அபிமானத்தில் அடங்கி இருக்கும் -பரகத ஸ்வீ கார நிஷ்டர்-ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனேயாய் இருக்க-அவன் திருமுக விகாஸமே பேறாகக் கொண்டு மார்பிலே கையை வைத்து கவலையும் கலக்கமும் அற்று ஸித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு இருப்பர் -)

—————————————————————————————–

வார்த்தை -247-

திருச் சங்கணித் துறை நம்பிக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
முமுஷு சேதனகதமான ஜ்ஞானம் த்ரிவிதம்
உபாசநாத்மக ஜ்ஞானம் -என்றும் -ப்ரபதநாத்மக ஜ்ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் என்றும் –
உபாசநாத்மக ஜ்ஞானம் உடையவன் -உபாஸ்யன் பக்கலில் தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை  அவனுக்கும் தனக்கும் என்று இருக்கும் –
ப்ரபதநாத்மக ஜ்ஞானம் உடையவன் பிரபத்தவ்யன் பக்கலிலே தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை அவனுக்கே என்று இருக்கும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -போலே உனக்கே நாம் ஆட் செய்வோம் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவன் ஸ்வ தஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான வ்ருத்தியை ஸ்வயம் ஸ்வ கார்யம் என்று இருக்கும் –
இவற்றுக்கு உதாஹரணம் பதிவ்ரதை மாங்கல்ய ஸூத்ரம் பெருகினால் பந்திக்கும் போது பர்த்தாவினுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஹேது வாக்காமல்
தன்னுடைய அநர்த்த வ்ருத்தி என்று நினைத்து இருக்குமா போலே –

(சொத்தான நாம் ஸ்வாமியின் திருமுக விலாஸத்துக்காகவே கைங்கர்யம் செய்வதே கர்த்தவ்யம் கடமை என்று கைங்கர்யம் செய்ய வேண்டும் -இதற்கு த்ருஷ்டாந்தம் பதிவிரதையான ஸ்த்ரீக்கு மங்களஸூத்ரம் அறுந்து போக மறுபடி கட்டிக்கொள்ள நேர்ந்தால் தனக்கு அறியாமல் செய்த தவறே காரணம் -என்று எண்ணுமா போல் -)

——————————————————————————————–

வார்த்தை -248-
நம்பிள்ளை வார்த்தை
ஆத்ம சமர் -பிராண சமர் -திருஷ்டி சமர் -பாஹூ சமர் –
ஆபரண சமர் -ஆயுத சமர் -பாத சமர் -பாத ரேகா  சமர் -பாத ரஷா சமர்-சாயா சமர் –

(அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்வதாலும் -பிரித்துப் பார்க்க முடியாமை இருப்பதாலும் -எப்போதும் பின்னால் தொடர்பவனாக இருப்பதாலும் இவ்வாறு சொல்லலாம் அன்றோ -)

———————————————————————————————

வார்த்தை -249-

சர்வேஸ்வரனைப் பற்றுமவர் ஷட் விதர் -அவர்கள் ஆகிறார் –
உத்தமன் -உத்தம ப்ராயன் -மத்யமன் -மத்யம ப்ராயன் -அதமன் -அதம ப்ராயன்
உத்தமன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமானே தனக்கு எல்லா உறவும் என்று இருக்குமவன் –
உத்தம ப்ராயன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமான் பக்கல் உபஜீவாம்ச்யதுக்கு விரை கட்டுமவன்
மத்யமன் ஆகிறான் மாதவ வைஸ்வர்யதுக்கு மஹானான தபசு பண்ணுபவன்(கைவல்யனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் உண்டு அவை பகவத் கைங்கர்யத்துக்கு உதவாதே)
மத்யம ப்ராயன் ஆவான் -மாதவனைப் பெற்றும் வகுத்த வாழ்வு அறியாதவன்
அதமன் ஆவான் -அம்மானைப் பெற்று அன்னத்தை பற்றுமவன்
அதம ப்ராயன் ஆவான் -அம்மானைப் பெற்றும் அல்லாதாரை பற்றுமவன் –

———————————————————————————————-

வார்த்தை -250-
கந்தாடை யாண்டான் வார்த்தை –
பிரபத்தி நிஷ்டர் மூவர் –சப்த நிஷ்டரும் –அர்த்த நிஷ்டரும் –அபிமான நிஷ்டரும் –

(த்வயத்தில் ஊன்றி இருக்கும் பாகவத அபிமானமே உத்தாரகம் என்றும் இருப்பவர்களே ஸ்ரேஷ்டர் என்றபடி)

———————————————————————————————–

வார்த்தை -251-
அஜ்ஞ்ஞான தசை கும்பகரணனைப் போலே –
தேவதாந்தர பஜனம் பண்ணுகிற தசை ராவணனைப் போலே –
பக்தி தசை சூர்பணகை போலே –
பிரபத்தி தசை ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –என்று நம்பிள்ளை –

————————————————————————————————

வார்த்தை -252-
சர்வ யோக சந்நியாசி -திரு மழிசைப் பிரான்(சாக்கியம் கற்றோம் இத்யாதி -பாக்யத்தால் செங்கண் திருமாலைச் சேர்ந்தோம்)
சர்வ உபாய சூந்யன் -நம் ஆழ்வார்(கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்)
உண்டு உபவாசி -திருமங்கை ஆழ்வார்
சர்வ சங்க பரித்யாகி -எம்பெருமானார் -(தண்டு பவித்ரம் தவிர மற்றவற்றை விட்டார்)

—————————————————————————-———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .