Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை –ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் ..

March 10, 2013

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-)

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-)

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

(ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல தனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் என் கொல் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலி யாண்டான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -442-450–அரும் பத விவரணத்துடன்–

March 10, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—

வார்த்தை -442-
முமுஷுவாய் பிரபன்னனானவன்
1-தன்னை சிறையனாகவும் –
2-பெரும் கடல் பட்டானாகவும் –
3-அந்தகனாகவும் –
4-விஷ தஷ்டகனாகவும் அனுசந்திப்பான் –
அனுசந்திக்கும்படி எங்கனே என்னில் –

தேகம் சிறைக் கூடாகவும்
தேக அனுபந்திகளான பார்யா புத்ராதிகள் சிறைக் கூட்டராகவும் –
அஹங்கார மமகாரங்கள் வளையலாகவும்(கையிலே பூட்டப்படும் விலங்கு காப்பாகவும்)
நாசமான பாசம்-பெரிய திருமொழி -1-3-8- நாலியாகவும்(ஸ்த்ரீ ப்ராவண்யத்தை விலங்குகளை இணைத்திருக்கும் நாலியாகவும்)

(ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே—-1-3-8-)
அவிவேகம் மூட்டாணியாகவும்(பகுத்தறிவின்மையை நாலியையும் விலங்கையும் இணைத்திருக்கும் மூட்டாணியாகவும்)
இந்திரியங்கள் பிரிவாளராகவும்
விஷயங்கள் பிரியளாகவும்
மனஸ்ஸு மேல் தண்டலாகவும்
தான் சிறையனாகவும்
எம்பெருமான் விமோசகனாகவும்
அனுசந்திப்பான் -1-

சம்சாரம் சமுத்ரமாகவும் –
ஆசை பெரு நீராகவும் –
மநோ விகாரம் வாயு ஷோபமாகவும் –
அநுராகம் பெரும் சுழி யாகவும் –
அஹங்கார மமகாரங்கள் க்ரஹ சங்கங்களாகவும்
ஆத்யாத்மிகாதிகள் அலை யொழுங்காகவும்
உடம்பு ஒழுகல் ஒடமாகவும்
தத் ரஷணாதிகள் வன் பாரமாகவும்
தான் பெரும் கடல் பட்டானாகவும்
எம்பெருமான் உத்தாரகனாகவும் அனுசந்திப்பான் —-2-

மனஸ்ஸு கண்ணாகவும் –
ஜ்ஞானம் பார்வையாகவும் –
காமம் காசமாகவும் -(குருடனாவதற்குக் காரணமான காச நோயாகாவும்)
லோபம் காமிநி யாகவும் –
உப போகம் புருஷார்தமாகவும் –
அக்ருத கரணம் வழியாகவும் –
அஞ்ஞானம் கோல் காட்டாகாவும்(கோல் நேர் வழி காட்டாமல் தப்பாகக் காட்டும் அஞ்ஞானம்)
நரகம் படு குழி ஊன்று கோலாகவும் அனுசந்திப்பான் –3-

சம்சாரம் செடியாகவும்
உடம்பு புற்றாகவும்
இந்திரியங்கள் விவரங்களாகவும்(த்வாரங்களாகவும்)
விஷயங்கள் பாம்பாகவும்
அவற்றின் சேர்த்தி விஷமாகவும் –
அவற்றின் சந்நிதி தம்சம் ஆகவும்(தம்சம் –பல்–பாம்புக் கடியாகவும்)
அனுபவம் வ்யாப்தி யாகவும் -(அனுபவமே விஷம் உடம்பு முழுவதும் ஏறுவதாகவும்)
மோஹம் மூர்ச்சையாகவும்
தான் விஷ தஷ்டனாகவும்
எம்பெருமான் தீர் மருந்தாகவும்-திருவாய்மொழி -1-7-4- அனுசந்திப்பான் —–4-

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே

தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ.

—————————————————–

வார்த்தை -443-
பிரபன்ன ஸ்வரூபம் இருக்கும்படி
நம் மனிசர்க்கு த்வயம் ஒழிய அனுசந்தானம் எல்லாம் கடலோசை மாத்ரம்
என்று நஞ்சீயர் அருளிச் செய்ததாக பிள்ளை அருளிச் செய்வர் –

———————————————————-

வார்த்தை -444-

எல்லாம் வேண்டுவதும் பிரபன்னனுக்கு –
ஒன்றும் வேண்டாததும் பிரபன்னனுக்கு –

படுக்கை சேர்த்திக்கு முன்பு இவை எல்லாமும் வேண்டும் –
படுக்கையில் ஏறினால் இவை எல்லாம் மிகை –

(ஸ்த்ரீக்கு ஆபரணங்கள் வஸ்திரங்கள் எல்லாமே ஸம்ஸ்லேஷத்துக்கு முன் வரையில் வேண்டியிருக்கும் -ஸம்ஸ்லேஷத்துக்கு இவையே தடையாகும் பொழுது இவை தேவையில்லாதவையாய் இருக்கும் -அதே போல் சேஷத்வம் முதலிய ஆத்ம குணங்களும் எம்பெருமானுக்கு இனியவையாய் -ஸம்ஸ்லேஷிக்கும் போது அவன் தாழ நின்று பரிமாறும் பொழுது நைச்யம் பாவித்து சேஷத்வத்தை நிலை நிறுத்தப் பார்ப்பது அவன் போகத்துக்குத் தடையாய் இருக்கும் -)

பிணம் கிடக்க மணம் செய்ய ஒண்ணாதாப் போலே காண் இவ் வுடம்பு கிடக்க
வகுத்த கைங்கர்யம் விளையாதபடி –ஆயிட்டு எம்பெருமானைப் பெறுகைக்கு இவ் வுடம்பே அல்ல விரோதம் –தான் செய்யும் நன்மைகளும் விரோதம் -எங்கனே என்னில்

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதியாமா போலே
முன்பு பூஷணத்தை அனுபவிக்க வேணும்-

(தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –சூரணை -160-அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே-ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9 என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ என்று ஸ்வ நைச்ச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் – ஸ்வதந்த்ரோஹம் என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் –அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல –161–-ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் , போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் –ஹாரோபி—162–அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று-ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா –    என்று- சம்ச்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள்)

சம்பந்தம் சம்பாத்தியம் அன்று –
தடை விடுகை சம்பாத்தியம் -அதாவது
பகவத் ப்ராப்திக்கு விரோதியான இச்சா பிரவ்ருத்திகளைச் சொன்னபடி –

(சேதனனுக்கு பரமாத்மாவைப் பெறுகைக்கு சம்பந்த ஞானமும் தனக்காகத் தான் முயலுவதாகிற தடை விடுபடுவதுமே சேதனனால் சம்பாதிக்கத்தக்கது –சேஷ சேஷி சம்பந்தமோ நித்யமாகையாலே சம்பாதிக்க வேண்டாமே -அறிதலே வேண்டுவது -அத்தை உள்ளபடி உணரவே தன்னை ரக்ஷிக்க தான் முயலுவதும் தன்னடையே விடு படும் -அவன் யுகக்காத கைங்கர்யங்களும் விடுபடும் -அவனுக்காகவே தனைக் கொள்ள வேண்டும் என்று இருப்பான் –தடைகள் நீங்கவே பகவத் ப்ராப்தி தன்னடையே ஸித்திக்கும் -)

————————————————————-

வார்த்தை -445-
ஆழ்வான் எம்பெருமானாரை -ப்ரபத்தி என் பட்டு இருக்கும் -என்று கேட்க –
அது கர்மாதிகளை விட்டல்ல தான் இருப்பது –
ஒன்றில் ஆயிரம் இல்லை -ஆயிரத்தில் ஓன்று உண்டு-
குளப்படியில் கடல் இல்லை -கடலில் குளப்படி உண்டு-
ஆகையாலே எல்லாம் ப்ரபத்தியிலே உண்டு என்று அருளிச் செய்தார் –
அதில் இவை கண்டபடி  எங்கனே என்னில்

(கர்மம் ஞானம் பக்தி மூன்றுமே ப்ரபன்னனுக்கும் வேறே ஆகாரங்களால் வேண்டியிருக்கும் என்கிறது இவ் வார்த்தை -)

(கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –சூரணை-271-ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் – சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே – ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே- ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான ருசியிலே அந்தர்பவிக்கும் –சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-)

ராஜ குமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயிலே இட்டு பல்லாலே அசைக்குமா போலே
த்வயத்தை உச்சரிக்கை கர்மம்

அவன் அதன் ரசத்தை பானம் பண்ணுமா போலே இடை விடாதே அனுசந்திக்கை -ஜ்ஞானம்
அவன் அந்த ரசத்தாலே தன்னை மறந்து இருக்குமா போலே

இவனும் அதின் அர்த்த அனுசந்தானத்தாலே ரச அதிசயினாய் தன்னை மறந்து இருக்கும் அது -பக்தி(ஸ்வ வசமில்லாமல் பரவசமாவது)

அத்தாலும் பிரபன்னனுடைய அனுஷ்டானம் இருக்கும்படி-பிறந்துடையவள் ஒப்பனை போலேயும்  –ராஜ குமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயில் இட்டு நீரை நாக்காலே போக்குமா போலேயும் பிரபன்னனுக்கு த்வய அர்த்த அனுசந்தானம் ஒழிய தேக யாத்ரை செல்லாது –

———————————————————————-

வார்த்தை -446
நஞ்சீயர் பட்டரை –
பிரபத்தியாவது ஜ்ஞான விசேஷமோ க்ரியா விசேஷமோ என்று கேட்க
வஸ்து விசேஷம் என்று அருளிச் செய்தார் –

(த்வமேவ உபாய பூத மே பவ ஞானமோ -பர சமர்ப்பணமாகிய கிரியையா என்ன-உபாயம் என்ற பொருளை பிரபத்தி சப்தம் பிரயோகம் பர சமர்ப்பணமாகிய கிரியையும் குறிக்காது -அந்த அறிவையும் குறிக்காது -எம்பெருமானையே குறிக்கும்)

———————————————————————–

வார்த்தை -447-
திருமந்தரம் விலைப் பால்
த்வயம் முலைப் பால்(ஸாஸ்த்ர ஜன்யம் அல்லவே ஆச்சார்யன் உபதேஸத்தால் பெற்றதாகும்)

(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே ஈஸ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே)
—————————————————————–

வார்த்தை-448-
நம்முடைய (ஸ்ரீ ரெங்காவாசிகளின் த்வயம்)த்வயம் இருக்கும் படி
கரை கட்டின காவேரியும் –
கரை கட்டாக் காவேரியுமாய் –
அப்படி இறங்கும் துறையுமாய் இருக்கும் -அவை எவை என்னில்

பரம பதம் -கரை கட்டாக் காவேரி(ந கால தத்ரைவ பிரபு -காலம் பிரபு அல்லவே அங்கு)
ராம கிருஷ்ணாதி விபவம் கரை கட்டின காவேரி
அப்படி இறங்கும் துறை திருமந்த்ரமும் த்வயமும் –

இங்கன் ஒத்தவனைக் காண்பது எங்கனே என்னில்
திருவனந்தாழ்வான் மடியிலும்
பெரிய திருவடி முதுகிலும்
சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும்
இருப்பவன் இறே நமக்கு ப்ராப்யன் –

வானிளவரசு வைகுந்த குட்டன்  வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது
வானிளம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்பச்
தேனளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3-6-3-

(அம்மாவுக்கு பிள்ளை -அப்பாவுக்கு பிள்ளை -ஆச்சார்யருக்கு சிஷ்யன் போல் இம்மூன்றும்)

பரம பதத்ததுக்கு இளவரசாய் உள்ளவன் – விருத்த மந்த்ரிகள் கீழே பால ராஜானனவன் வர்த்திக்குமா போலே ஆய்த்து –மூதுவராம் விண்ணாட்டவர் (திரு விருத்தம்) -என்கிற நித்ய ஸூரிகளை பிரதானர் ஆக்கி –அவர்கள் கீழே தன்னை அமைத்து கொண்டு -இவர்களுக்கு சேஷியாய் இருக்கும் படி-ஸ்ரீ திரு அனந்தாழ்வான் மடியிலும் – ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் – ஸ்ரீ பெரிய திருவடி சிறகின் -கீழிலும் –ஆய்த்து இத் தத்வம் வளருகிறது -என்று இறே ஸ்ரீ பட்டர் அருளி செய்தது –

————————————————————–

வார்த்தை -449-
திருமந்தரம் திருமுகப் பாசுரம்
அருளிச் செயல் படி எடுப்பு –

(பத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனாலேயே அருளிச் செய்யப்பட்டதால் திருமந்திரம் திருமுகப் பாசுரம் -அருளிச் செயல்கள் முக்குவதுமே அதற்க்கு வியாக்யானம் போன்றுள்ளது -)

————————————————————–

வார்த்தை -450-

பகவத் சேஷமாய் வைத்து அகன்று போன ஆத்மாவை எம்பருமானோடே சேர்க்கைக்கு
பற்றாசாக பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கை –

தொண்டனூர் நம்பி தம்முடைய அந்திம தசையிலே மருதூர் நம்பி நடக்க –
இவ்வாத்மா எம்பெருமானைப் பற்றி கரை மரம் சேரும் படி ஒரு வார்த்தை சொல்ல வல்லையே -என்று கேட்க
எம்பெருமானுக்கு இல்லாததுமாய் –
இவ்வாத்மாவுக்கு உள்ளது ஒன்றுமாய்-
எம்பெருமானை பெருகைக்கு பொருள் விலையும் தானேயாய் இருப்பதொரு
அஞ்சலியே காண் என்று அருளிச் செய்தார் –

(அம் ஜலயதி இதி அஞ்சலி -அகார வாஸ்யனான எம்பெருமானை நீர் போல் உருக்குவதால் அஞ்சலி எனப்படுகிறது-அஞ்சலி பரமம் முத்ராம் ஷிப்ரம் தேவ பிரசாததி- -இருவரும் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சிஷ்யர்கள்-)

(தொழாக் கை கையல்ல கண்டோமே -தொழுவித்துக் கொள்ளும் திருக்கையால் தொழுதது கடற்கரையில் பலிக்க வில்லையே-அழுகையும் அஞ்சு நோக்கும் தொழுத கையும் -அங்கு நமஸ் அர்த்தம் அல்ல -பஞ்ச லக்ஷம் ஆயர் பெண்டிரை ஒரு சேரக் காணப் பெற்றதுக்கு க்ருதஜ்ஜை)

அது எங்கனே என்னில் –
அடித்துப் பறிக்கும் தசையிலே ஓர் அறிமுகம் பெற்றால் போலேயும்
கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலேயும்
நமக்கு புருஷகார பூதையான பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கையே வேண்டுவது
இவ் வதிகாரிக்கு பிரகிருதி உடன் இருக்கும் நாள் இத்தனையும் நினைத்து இருக்க வேண்டும் படி(1-வருத்தமும் -2-ஆச்சர்யமும்-3- பயமும்-4- பயநிருத்தியும் -நாலும்-உருப்போட்டான் உருப்படுவான் உருப்போட்டாதவன் உருப்பட மாட்டான் -சின்ன வயசிலேயே சந்தை சொல்லி உருப்போட வேண்டும்-)எங்கனே என்னில்-

1-எம்பெருமானும் நித்யன் –ஆத்மாவும் நித்யமுமாயிருக்க –
இது இற்றை வரை இழப்பதே என்று இழவு பட்டு இருக்கையும்
2-நெடும்காலம் இழப்பித்த உடம்போடு எம்பெருமான் தன்னை ரஷகன் என்று
அநுசந்திக்க வைப்பதே என்று இருக்கையும் –
3-இற்றை வரை இழப்பித்த உடம்பு இருந்தது -இன்னம் இழக்கிலோ -என்று
பயம் பிறந்து இருக்கையும் –
4-பெறுகைக்கு நாம் பண்ணுவது ஒரு நற்றம் உண்டோ -இழக்கைக்கு பயப்பட
இரண்டும் அவனே ஆன பின்பு -தன்னை அனுசந்தித்துத் தளருகையும் –அவனை அனுசந்தத்திது பெரும் தேற்றமும் –இவ் வாகார த்வயமும் –பிரகிருதி சம்பந்தம் அறும் அளவும் இப்படி அநுசந்திக்குமவன் அதிகாரி யாகிறான் –

இவ் வதிகாரிக்கு உபாயத்துக்கு செய்ய வேண்டுவது  ஒன்றும் இல்லை –
த்வயத்தில் பூர்வ கண்டத்தை அனுசந்தித்தால் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தை அநுசந்தித்தால் தலை சொரிய அவசரம் இல்லை

(நூற்று ஏழாம் வார்த்தை
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் – த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை – உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை-மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது-ஸூவ ரக்ஷண நிவ்ருத்தியும் வேண்டும் -கைங்கர்ய த்வரையும் வேண்டுமே -)

1-ஜ்ஞானப் பிரதன் ஆசார்யன் –
2-ஜ்ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
3-ஜ்ஞான விஷயம் எம்பெருமான் –
4-ஜ்ஞான பலம் பகவத் கைங்கர்யம் –
5-பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –

————————————-————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த நாலு வார்த்தைகள் –

March 5, 2013

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த நாலு வார்த்தைகள் –
1-அஞ்ஞான சமயத்திலும் –
2-ஜ்ஞான சமயத்திலும் –
3-ஜ்ஞானம் பக்வமான சமயத்திலும் –
4-ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்திலும் –

1-மாதா பிதாக்களோடு -2-ரூப நாமங்களோடு -3-போஜநாதிகளோடு -4-பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு -5-விதி நிஷேதங்களோடு -6-தேச வாசங்களோடு -7-பந்து வர்க்கத்தோடு -8-ஐஸ்வர்யாதிகளோடு -9 –பிரார்த்தனைகளோடு -வாசியற பேதித்து இருக்கும் -(இந்த ஓன்பதையும் மேல் உள்ள நான்கு தசைகளிலும் வைத்து ப்ரமாணங்களைக் காட்டி அருளுகிறார்)

முதலடியான அஞ்ஞான சமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலும்
சரீரமேவ மாதா பிதரௌ ஜநயத -(ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-18–மாதா பிதாக்கள் சரீரத்தையே உண்டாக்குகிறார்கள் -ஆச்சார்யனைப் போலே ஆத்மாவுக்கு ஒரு புதுப்பிறவியை உண்டாக்குவதில்லை)என்கிறபடியே கேவல சரீரத்தை பெற்றவர்களையே
மாதா பிதாக்களாக அபிமானித்து – அவர்கள் இட்ட பேரும் -அவர்கள் நியமித்த
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -அவர்களை அநுவர்த்தித்து அத்தாலே வந்தேறியான ரூப
நாமங்களும் – அவர்கள் விரும்பின பந்து வர்க்கங்களும் –
அவர்கள் வம்ஸ அபிமாநமும் ஐஸ்வர்யமும் –
அவர்கள் கற்பித்த சம்சார வர்த்தகமுமாய்   இருப்பன சில ப்ரார்தனைகளுமாய்
சம்சாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாப்யதிக தரித்ரனாக(ஓத்தாரும் மிக்காரும் இல்லாதவனாக) அபிமாநித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் -1-

ஜ்ஞானம் பிறந்த சமயத்தில் –
ஐஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரம் அன்று -பெரிய திருமொழி -9-7-8-
ப்ராக்ருத ஏக பரனாய் -பஞ்ச விம்சகனாய்(25) -ஸ்வ ஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய் –
ஏக ரூபனாய் -ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூபனாய் -அச்சேத்யனாய் -அதாஹ்யனாய் –
அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -நித்யனாய் -ஜனன மரணாதிகள் இன்றிக்கே
இருப்பான் ஒரு ஆத்மா உண்டு -வேத சாஸ்த்ரங்கள் உண்டு -புண்ய பாபங்கள் உண்டு –
வர்ண ஆஸ்ரமங்கள் உண்டு –கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தாலே பிரமித்த இத்தனை -என்று உணர்ந்து
நெகிழ்ந்து ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயிதி (ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-16–ஆச்சார்யனே யன்றோ சிஷ்யனை ப்ரஹ்ம வித்யையின் மூலம் புதிய ஞானப் பிறவியை எடுக்க வைக்கிறான் –)என்கிறபடியே – வேத சாஸ்த்ரத்தை மாதாவாகவும் -சாஸ்திர பிரதானம் பண்ணினவனையே பிதாவாகவும் அபிமானித்து -அந்த சாஸ்திரம் விதித்த படியே போஜநாதிகளும் – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் -வேத சாஸ்திரம் போமவர்களையும் பந்துக்களாகவும் -அந்த சாஸ்திர அபிமானத்தால் வந்தேறின ரூப நாமங்களும் – சாஸ்திர அப்யாசம் பண்ணலான தேசமாய் -சாஸ்த்ரத்தை ஐஸ்வர்யமாகவும்
ப்ரார்தனைகளாகவும் அபிமானித்து -ஆத்ம அபிமானங்களில்(அஞ்ஞான தசையில் தேஹாத்ம பரமம் -ஞானம் பிறந்து பக்வமாகாத போது ஸ்வ ஸ்வா தந்த்ர ப்ரமம்) என்னை விஞ்சினார் இல்லை-தன்னை சமாயதிக தரித்ரனாக அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் —2-

ஜ்ஞானம் பக்வமான சமயத்தில் –
சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்த்ரம்
விநாசம் என்றும் -ஈஸ்வர ஸ்வா தந்த்ரம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும் –
பதிம் விஸ்வஸ்ய (தைத் -உலகு அனைத்துக்கும் பதியான இருப்பவன்)-
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -நீ உஜ்ஜீவிக்க வேணும் என்று எண்ணினாயாகில் -உன்னுடைய சத்யையில் உனக்கு விருப்பம் இருந்ததாகில் ஆத்மாவின் உடைமையாய் இருக்கும் தன்மையையும் எம்பெருமான் உடையவனாய் இருக்கும் தன்மையையும் -இவ்விரு தன்மைகளும் இயல்பானவையே தான் என்பதையும் எப்போதும் நினைப்பாயாக -) -இத்யாதி பிரமாணங்களாலும்
ஆலோட்ய சர்வ சாஸ்ராணி விசார்ய ச புந புந இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணஸ் ஸதா –(பார ஆனு -178-11-எல்லா சாஸ்திரங்களிலும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்த போதிலும் நாராயணன் ஒருவனே த்யானிக்கத்தக்கவன் என்பது அசைக்க முடியாத படி தேறும்) -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்
கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஜ்ஞானத்தையும் -தத்வ த்வய வைராக்ய விஷயத்தையும் –
தத் ஏக விஷய பக்தியையும் உடையவனாய் –
தத்வ ஹிதங்களை அறியும் போது -கைப்பறி பறித்தும் (தன் ஷேமத்துக்காக தான் முயலுவதும்)-கிடந்த ஆனை கண்டு ஏறியும் (படுத்திருக்கும் யானை மேல் பாகனின் துணை இல்லாமல் தானே ஏறுவது போல் உலகமேத்தும் தென் ஆனை வடவானை மேல் ஆச்சார்யர் ஸஹாயமில்லாமல் பற்ற முயலுதல்)அல்லாமையாலே லோகத்திலே –
அர்த்த காமோபஹதன் அன்றியிலே வேத சாஸ்திர நிதான ஜ்ஞானனாய்
லோக பரிக்ரஹம  உடையனாய் இருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே சென்று
கண்ணும் கண்ண நீருமாய் -கீழ் தேகாத்ம அபிமாநியுமாயும் -கேவல ஆத்ம அபிமாநியுமாயும் தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய –
ஆசார்யனும் தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து –

இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கும்
ஆத்ம பாரதந்த்ர்யத்துக்கும் வாசகமாய் -இவ்வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் உண்டான
ஒழிக்க ஒழியாத சம்பந்தத்துக்கு –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் ஓன்று உண்டு என்று
பெரிய திருமந்த்ரத்தை ஆசார்யன் தன் இரக்கத்தாலே அருளிச் செய்து –
ஸ்வரூபத்தில் உணர்ச்சியோடு(நவவித சம்பந்தமும் சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபமும் யதாத்ம்யமாக அறிந்து) -ஸ்வ ரஷணத்தில் அசக்தியோடு -ஈஸ்வரனைப்
பேணிக் கொண்டு -வர்த்தி என்று அருளிச் செய்து அருளினால் -தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து –

எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு  திரு அஷரமாய்- மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும் வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)

பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரியதிருமொழி -8-9-7- என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ-பெரிய திருவந்தாதி -5-என்றும் –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
பெரிய திருமொழி -1-9-1- என்று சொல்லுகிறபடியே

திருமந்த்ரத்தை மாதாவாகவும்
ஆசார்யனையே பிதாவாகவும் அபிமானித்து
ஆசார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜநாதிகளும் ( பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்–மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்கிறபடியே அருளிச் செயல்களையே ஸாத்விக ஆகாரம்-உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே.-19- )-
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் –
ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசமே த்வய தேசமாகவும் –
ஆசார்யன் திரு உள்ளத்தாலே சஹ வாஸ யோக்யராக கற்ப்பித்த
பரம சத்வ நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களே பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமாநித்து இருக்கும் ஆசார்ய கைங்கர்யமே
தனக்கு ஐஸ்வர்யமாகவும் -தத் கைங்கர்யத்தின் மேல் உண்டான பிரார்த்தனையே
தனக்கு தேக யாத்ரையாகவும் நினைத்து –

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -நின்னிலங்கு பாதமன்றி
மற்றோர் பற்றிலேன் -திருச்சந்த விருத்தம் -90- என்றும்
கற்றிலேன் கலைகள் –நல் துணையாகப் பற்றினேன் அடியேன் -பெரிய திருமொழி -1-1-8- என்றும்-
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் —
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே -திருமாலை -26-என்றும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து -திருவாய் மொழி -10-6-2- என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-என்றும் சொல்லுகிறபடி தன் வேறுபாடு தோன்ற இந்நிலத்தில் பொருந்தாமையும்

பொருந்தும் நிலத்தில் புகப் பொறாமையும்  வடிவிலே தோன்றும்படி நிர்மலனாய் மோஷ பிரதனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஜ்ஞானப் பிரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவர் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்த இடம் அறியாமல் (உப்புப்போலே உம்மைப்போலே இருக்க வேண்டுமே)இருக்கும் —3-

ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்தில் – தான் கீழ் நின்ற (மூன்று)நிலைகளையும் அடையநெகிழ்ந்து -ஆசார்யன் கட்டின ஸ்வரூப அநுபந்தியான மங்கள ஸூத்ரத்தில்
அர்த்த அனுசந்தானத்துடன் வர்த்தியா நிற்கச் செய்தேயும் –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் -விபரீத ஜ்ஞான ஜநநியான சரீர சம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு (மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)-ஆற்றிலே குளித்துக் கரை ஏறி புக்ககத்தில் உற்றார் அலங்கரிக்கப் போய்(மதிமுக மடந்தையர் இத்யாதி -சதம் மாலா ஹஸ்தா இத்யாதி) -வகுத்த தேசத்திலே முகம் பழகிய திரளிலே சென்று புகுந்து (ஆத்மாவுக்கு பழகின திரள் இதுவே -வந்தேறியான சரீரத்துக்கு பழகின திரள் கீழ் எல்லாமே)-தனக்கென்ன ஒரு ரூப நாமங்கள் ஆதல் –போஜன சயநாதிகள் ஆதல் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஆதல் -விதி நிஷேதங்கள்  ஆதல்-தேச வாஸம் ஆதல் -பந்துக்கள் ஆதல் -ஐஸ்வர்யம் ஆதல் -பிரார்த்தனைகள் ஆதல் –அன்றிக்கே –

அஹம் அன்னம் (நான் எம்பெருமானுக்கு போக்யப் பொருள்)என்னுதல் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி நிற்றல் –சதா பஸ்யந்தி -என்று வைத்த கண் வாங்காதே பார்த்து இருத்தல் – சாயாவா சத்வம் அநுகச்சேத் -(தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வஸ்தோ வா மாதரம் சாயாவா சத்வம் அநுகச்சேத் ததா ப்ரகாரம் யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -இளம் கன்றை யுடைய பசு தனது கன்றையும் கன்று தனது தாய் பசுவையும் நிழல் அசையும் பொருளைப் பின் தொடர்வது போலே பரம் பொருளைப் பின் தொடர்கிறான் முக்தாத்மா –)என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்து
செய்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை-

இவ் வர்த்தம் ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுஷுவுக்கு நாள் தோறும் ஆராய வேண்டுவது ஓன்று –எங்கனே என்னில் –
1-ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்திர சம்பந்தத்தாலே கைப் பிடித்தால் –
பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து  பர்த்தாவினுடைய
அபிமானத்திலே ஒதுங்கினாப் போலேயும் -2-அனுபநீதனாவன் ஒரு மந்திர சம்பந்தத்தாலே
சிகை யஜ்ஜோபவீதங்களைத் தரித்தால் த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும் -3-யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து
அவப்ருத ஸ்நானத்தளவும் யஜமான வேஷத்துக்கு தக்க அனுஷ்டானம் ஆகிறாப் போலேயும்-4-சந்நியாசி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வர்த்தனத்தோடே வர்திக்கிறாப் போலேயும் –இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் (ஜீவன் முக்தி நம் சம்பிரதாயத்தில் கிடையாது -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ஸ்வாமிகள் பன்னி பன்னி ஸாதித்த அர்த்தம் –முமுஷு இங்கு இருக்கும் நாள்களில் முக்தனாகும் த்வரை யுடன் வாழ்வதையே இங்கு காட்டும் -)கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்திக்கிறது எப்போதோ என்று தன் நெஞ்சத்தை உருக்கி தன் வேறு பாடு தோன்ற வர்த்திக்கையே முமுஷு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -எம்பார் பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் —

March 5, 2013

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

முதல் வார்த்தை -(பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத் -(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

இரண்டாம் வார்த்தை -(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

மூன்றாம் வார்த்தை –
இப் பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை என்பது –

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத் தேவர் தம் துவக்கைப் பாராது ஒழிவதே(சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே) -என்றும் –
பரம் தாமத்தை (பரம பதத்தை)பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதியாம் போலேயும்
ஸ்தாலீ ஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும் –(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ (உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா (ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-யுத்த 18-33-ஸ்ரீ ராம சரம ஸ்லோகம்)-என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக –
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன பாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந் நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல் திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் 
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –

(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக   -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றால் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே -போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து –செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும் (எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ)-எம்பாரைப் போலவும்-(எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட -யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப் பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப் பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிலே பட அனுசந்திப்பான்
இப் பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -433-441–அரும் பத விவரணத்துடன்–

March 5, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—

வார்த்தை -433-
ஸ்ரீயபதியாகிற காளமேகத்தின் நின்றும் –
சௌஹார்த்தம் என்கிற ஒரு பாட்டம் மழை விழுந்து –
கிருபை யாகிற நிலத்திலே –

ஜீவனாகிற ஔஷதி முளைத்து –
ஆசார்யன் ஆகிற இப் பிதாவுக்கு
இரக்கம் என்கிற சங்கத்தாலே
ஜ்ஞானம் என்கிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து
ஜீவாத்மா வாகிற பெண் பிள்ளை பிறக்க –(நித்தியமான ஆத்மா பிறப்பதாவது இழந்த ஞானத்தை உண்டாக்கி-ஸ்வரூப ஆவிர்பாவம்)

ருசி யாகிற ஜீவனத்தை இட்டு வளர்த்துக் கொண்டு போந்து
விவேகம் ஆகிற பக்வம் பிறந்தவாறே –
பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து –
எம்பெருமான் (அழகிய மணவாளப் பெருமாள்-)ஆகிறவன் கையிலே –
ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தாரையை வார்த்துக் கொடுக்க

அவனும் சேஷத்வம் ஆகிற மந்திர வாசஸை உடுத்தி
சேஷ வ்ருத்தியாகிற மாங்கல்ய சூத்ரத்தைக்(எட்டு இழையாய் மூன்று சரடாய் -திருமந்திரம்) கட்டி

ரூப நாமங்கள் என்கிற ஆபரணங்களைப் பூட்டி(அடியேன் ராமானுஜ தாஸ்யம் என்பதே ஆபரணம்)
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிற ஆசனத்திலே கொண்டு இருத்தி

பிராபக ஜ்ஞானம் என்பதொரு அக்நியை வளர்த்து
இதர உபாய த்யாகம் என்கிற சமிதைகளை இட்டு 
சித்த உபாய ஸ்வீகாரம் என்கிற பிரதான ஆஹூதியைப் பண்ணி
மூல மந்த்ரத்தாலே ஜயாதி ஹோமங்களைப் பண்ணி
சாஸ்திரங்கள் ஆகிற பொரியைச் சிதறி

சம்பந்த ஜ்ஞானம் என்கிற பூரண ஆஹூதியாலே ப்ராப்தி பிரதிபந்தங்களை நிஸ் சேஷமாக்கி
நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணி
பூர்வாச்சார்யர்கள் ஆகிற பந்துக்களை முன்னிலை யாக்கி –
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து காட்டிக் கொடுக்க

ஆழ்வார்கள் ஈரச் சொல் ஆகிற  அப்போடே சேர விட்டு
வாத்சல்யாதி குண யுக்தனாய் -அவனும் பர்த்தாவான ஆகாரம் குலையாதபடி –
அணைத்து நோக்கிக் கொண்டு போந்து

த்வரை யாகிற பர்வம் விளைந்தவாறே
அவனும் தன் பிரதான மஹிஷியும் கூட அந்தபுரக் கட்டிலிலே கொடு போய்
அந்தமில் பேரின்பத்து அடியார் யாகிற பந்துக்களோடே சேர்ந்து
ஹர்ஷ பிரகர்ஷத்தோடே ஆதரிக்க –
ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையிலே கொண்டேற(அம்ருத சாகராந்தர நிமக்ந -பூம்நா)

விஷய வைலஷண்யம் ஆகிற போக உபகரணங்களோடே
சகல வித கைங்கர்யங்கள் ஆகிற அனுபவத்தோடு மூட்ட
ஆநந்தம் ஆகிற பெருக்காற்றிலே ஆழம் கால் பட்டு
நம -என்பது -போற்றி -என்பது -ஜிதம் என்பது -பல்லாண்டு -என்பதாகா நிற்கும் –

————————————————————————

வார்த்தை -434-
அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை-

பகவத் விஷயம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான
இருபத்தைவரான ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வம் எட்டாது –

வ்யூஹம் கால்கடியாருக்கு
அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில் எப்போதும் திருவடிகளைப்
பிடித்து இருக்க ஒண்ணாது –

இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இறே
இவனையே குறித்து நிற்கும் இடம் இறே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இறே
எங்கனே என்னில் –

(அர்ச்சாவதாரத்தை விட உயர்ந்த அந்தர்யாமித்வம் என்றும் அழகாக விளக்கிக் காட்டுகிறான்)

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-7-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –

(பரத்வமும் வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் அந்தர்யாமிக்குள்ளே அடங்குவதற்கு பிரமாணங்கள்)

இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரத்தோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார்
திருவாராதனம் பண்ணும்படி –

ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய -என்கிறபடியே –
சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை (திருவிருத்தம்)படிந்தாடி –
அத் துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து –
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநாந்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –

அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே
வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –

தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே புரையற்ற அஞ்சலியாலே
திரு வாபரணம் சாத்தி –

நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –

(அடிக்கடி எட்டு மலர்கள் -அஹிம்சா ப்ரதமம் இத்யாதி -என்பக்கர் பூவும் கொணர்ந்தேன் -அஷ்ட வித கல்யாண குணங்கள் ஸூசிதம்)

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3-
என்கிறபடியே பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி

கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி
அஹம் அந்நாத -என்கிறபடியே தானும் புஜித்து
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஜ்ஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை –

இருபத்து நாலு பேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள்(கண் காது மூக்கு வாய் த்வக் -ஞான இந்திரியங்கள்)
இவ் வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ் வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-(ஞானக் கண் )- பறி யுண்டு விடுவார்கள் –

——————————————————–

வார்த்தை -435-
நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு –
அறிவு நடையாடின போதோடு –
(சாத்விக )அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே அநுவர்த்தநத்தோடு -வாசியற
மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில் –

அறிவு கலங்கின போது
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –

அறிவு நடை யாடின போது –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான்
தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் –

அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –

அநுவர்த்தநத்தில் –
அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

——————————————————-

வார்த்தை -436-

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் -ஆக்கலாம் விரகு ஏது- என்று பார்த்த இடத்து –
இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே -இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது –
இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது அவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார்-என்கிற இதுவே பற்றாசாக
நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட
அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

————————————————————

வார்த்தை -437-

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் –
அவருக்கு எல்லாம் பரத்வத்திலேயாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலேயாய் இருக்கும் -எங்கனே என்னில்

அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-

(அன்று தேர் கடாவிய பெருமாள்-அர்ச்சாவதார மஹிமை பேசிய பதிகம் நிகமனம் பாசுரம்-கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-)

அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –

அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் – சிறிய திருமடல் -72-77- என்றும் –

அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் 
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –

அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –

அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்

அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –

அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –

அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3 -என்றும்
இவருக்கு உபாயம்  -குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

——————————————————————-

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -6-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா (சிறிய திருமடல் -55) -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

திருக்கண்களும்-1- ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்-எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று  -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று-

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –

மாயனை -தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

திருமுடியும் –(திருக்குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்-4-போக்யமுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்–எங்கனே என்னில் –

கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூவுலகும் தொழும் சீர் அடியானே –என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

—————–

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் —அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட
ஒண்ணாதாய் இருக்கையும் –உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே (மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி)விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

கார்முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாப சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்-இது கை பட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

அந்தி மூன்றும் அனலோம்பும் -பெரிய திருமொழி -7-5-1-என்றது
காமாக்நி -கோபாக்னி -ஜாடராக்னி –

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் -79
வெட்டி வாளிலும் -சிரமன்(வேலை செய்யும்) வாள் கனத்து இருக்கும் என்றபடி –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -1-4-7–என்றது
அணு கதமான பாபம் -விபு கதமான கிருபைக்கு  எதிர் நிற்குமோ –

நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
1-என்னுடைய சத்தா ஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -2-(அவன் என்னைப் பெற )தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான்
3-வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே  நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
4-என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான்
5-அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்

நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
தேன விநா தருணக்ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
(நீ செய்து என்னைச் சொல்லலாமோ -நீ அன்றி அணுவும் அசையாதே)அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் –
தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –

—————————————————————

வார்த்தை -441

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய (திருமலை)நம்பி(பெரிய நம்பியின் வார்த்தையுமாகலாம்)

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்ய தேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?”-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்-ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும்- என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை – 

(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

(ஆழ்வான் -(அத்வைத க்ரந்தம்-)இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்றல் என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் -–-ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் -)

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது- அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள்)

அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)

பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)

நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது

நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –கொல்லி காவல தாசர்

பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை  வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)

நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)

ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ-களைந்த திருவாபரணமோ- உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை

த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -421-432–அரும் பத விவரணத்துடன்–

March 2, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—

வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது -(அனுஷ்டானமாகவும் இருக்கக்கடவது)

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை (அவனுக்காகவே அவனை அடைய சேவிக்கையே ஸ்வரூபம்)-அதாவது-சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -(இவர் கிடைத்தவுடன் செங்கண்மால் ஆனான் வெளுப்பு தவிர்ந்த மகிழ்ந்தான்)என்றும் -உன்னை சேவித்து(திருப்பாவை -29- தேவதாந்த்ரங்களைத் தவிர்ந்து கண்ணனாக எங்கள் குலத்தில் வந்து பிறந்த புண்ணியம் அன்றோ) என்றும் -சீதனையே தொழுவார்-(திருவிருத்தம் -79) என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மாற்றலால் -(பெரியாழ்வார் -5-1-2)என்றும் இருக்கை

4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
விஷயாந்தரத்துக்காகச் சேருமதும் -த்ரவ்ய ஆர்ஜனத்துக்காகச் சேருமதும்- பர ஹிம்சைக்காகச் சேருமதும் –கால ஷேபத்துக்காகச் சேருமதும்-தவிர்ந்து

ஸம்ஸாரத்திலே அருசி பிறக்கைக்கும் பகவத் விஷயத்திலே ருசி பிறக்கைக்கும் -ஸ்வரூபத்திலே தெளிவு பிறக்கைக்கும்  -ஆசார ப்ரவர்த்தனாகைக்கும் ஆவாரோடு சேருகை -அதாவது -பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன்-பெரிய திரு -7-4-4- -என்றும் உயவேன் உயர்ந்தவரோ டல்லால் -முதல் திரு -64–என்றும் சேருகை

5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –

பகவத் குண அனுபவத்தை -பிறரில் வ்யாவ்ருத்தமாக ஓன்று சொல்லுகிற போது போக்கைத் தவிர்ந்து -பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -63- என்கிறபடியே போது போக்கை-அதாவது ஸ்வரூபம் என்றும் தாரகம் என்றும் போக்யம் என்றும் மறக்க மாட்டாமே சொல்லுகை -அதாவது தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே -திருவாய் -1-6-7-என்றும் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்திருப்பேனே -நாச்சியார் -8-2- என்றும் தொல் சீரை ஓவாத வூணாக வுண் -பெரிய திரு -78-என்றும்- ஏது செய்தால் மறக்கேன் -பெரிய திரு –9-3-3- என்றும் போருகை

6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –

த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும் இவ் வருகுண்டான-(கள்ளர் காட்டுமிருகம் இவற்றால் உண்டாகும்) – பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும் – ஸ்வ ஜாதி விஸ்லேஷம் பொறாமையும்- புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து-

தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் – விபரீதங்கள் புகுராத இடம் என்றும் இருக்கை -அதாவது-

தஞ்சை மா மணிக் கோயிலே தொழுது -பெரிய திருமொழி -1-1-என்றும் –அதனுள் கண்ணா என்றும்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை-

7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

க்ருஷி பண்ணுதல் –
முஷ்டி புகுதல் – –
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-என்றும் -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-என்றும் -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் -என்றும் –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2  -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை-பரிகிரஹிக்கை

8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு – (திருப்பல்லாண்டு-8 )-என்றும் மாற்றிலி சோறு பெரியாழ்வார் -4-4-10 -என்றும் -உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரக்ஷக ஸ்வீகாரங்கள் அன்றியே(ரக்ஷகமும் ஸ்வீ காரமும் பர கதமாக இருக்க வேண்டுமே) ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பஸ்வன்னாதி பதார்த்தத்தையும் –
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் 
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

———————————————————————————————-
வார்த்தை -422-

தெண்மை -திறமை-சதிர் -இளிம்பு இவை நாலும் ஒரு அதிகாரிக்கு அவசியம் அனுசந்தேயம்

தெண்மை -(தெளிவு –)யாவது -தத்வ த்ரய விஷய ஜ்ஞானமும் -பிராப்ய பிராபக விஷய ஜ்ஞானமும்(தத்வ த்ரய ஞானம் வந்து நடுவிலே உள்ள சித்தான ஆத்மா அசித்தான ப்ரக்ருதி பதார்த்தங்களைத்தள்ளி ஈஸ்வரனே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் கொள்ள வேண்டுமே)

திறமை யாவது உபாய அத்யாவசாய ஞானம்-

சதிராவது -நெஞ்சில் நினைத்தது ஒழிய (வாயால்) வாக்கு சொல்லுகை -அதாவது
சம்சாரத்தில் இருக்கும் நாள் பிரகிருதி  சம்பந்தத்தை நினைத்திருக்கும் படி -தம்முடைய க்ருஹத்தில் ராஜ மனுஷ்யன் வந்து விட்டு ஆள் விட்டு நலியா நின்றால்
தனக்கு இவ்விருப்பில் நசையாலே போக மாட்டான்
ராஜ மனுஷ்யன் ஆகையாலே புறப்பட விட மாட்டான் -இனி உள்ளது அகவாயில்
அவன் போகைக்கு திரு விளக்கு பிரதிபலியா நிற்க(உள்ளத்தில் போக்குவதற்கு உபாயம் நினைத்திருக்க) புற வாயிலிலே பிரதி வசனம் பண்ணுமா போலே -பிரகிருதி பந்துக்களும் நாராயணன் வரவிட வந்தவர்கள் ஆகையாலே 
இவர்கள் அளவில் யதா பரகதா நாரீ -என்றும் –
பத்ம பத்ர மிவாம் பஸி (தாமரை இலைத் தண்ணீர் போல்)-என்றும் –
கண்டதோடு பட்டதல்லால் -காதல் மற்று யாதும் இல்லை -திருவாய்மொழி -9-1-1-என்றும்
இருக்கும் அத்தனை அல்லது வேறு செய்யல் ஆவது இல்லை –

(ஸ்ரீ வைஷ்ணவர்களிடத்தில் தானே ஆர்ஜவம் நெஞ்சில் நினைத்தவற்றையே சொல்லி அத்தையே செய்ய வேண்டும் -இங்கு உள் ஓன்று வைத்துக் புறம் ஓன்று பேசுவது சாதுர்யம் -பட்டும் படாமல் சம்சாரிகள் இடம் இருக்க வேண்டும் என்றபடி)

இளிம்பு யாவது -உத்தேச்யர் சொன்ன வார்த்தைக்கு உடன் படுகை –

—————————————————————————–

வார்த்தை -423-
பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் –
ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான் –

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||-ஶ்லோகம் 62 –

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன், நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
ந்ருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜலதேர பாராதுத்ததீர்ண -(து:க்க ஜலதே:அபாராதுத்தீர்ணஸ்)
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

————————————————————————————–

வார்த்தை -424-
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்தளவிலே அத்யாவஸாய  பிரதிபத்தியும்(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை)
5-உபேயத்தளவில் த்வரா  பிரதிபத்தியும்-(பேற்றுக்குத் த்வரிக்கை)
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும்
8-இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக)
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் –
ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

—————————————————————————————-

வார்த்தை -425-

இவற்றிலே
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –

2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79 – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே -பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –

4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை

5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் 
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –

6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை  விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே  தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –

8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை

9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை

10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
புலன் ஐந்து மேவி -2-8-என்றும்-சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-

1-உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
2-உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
3-உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
4-அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
5-த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
6-விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
7-பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
8-வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
9-அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
10-இடிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும்-7-1-
பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப் பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

——————————————————————
வார்த்தை -426-

ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு –
அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் -பகவத் பாகவதரும் –

த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -1-பெறாததிலே செல்லாமை -2-பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
3-இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -4-வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –

(த்யாஜ்யம் என்கிற நினைவு தானே வேண்டும் -சரீரம் கொண்டே கைங்கர்யம் பண்ணவேண்டும் -கர்த்தா அல்லன் என்ற நினைவு வேண்டும் -கர்த்ருத்வம் வேண்டும் உபாயம் என்ற நினைவால் அல்லவே-பிரதிபத்தியையும்-நினைவையும் – நன்றாக விளக்கிக்காட்டி அருளுகிறார்)

இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்று இறுமாவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர்தல தனருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –

எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் –
காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப் பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு  சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-

பெறாததில் செல்லாமை பிறக்கையும் –
பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-
வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதிபத்தி சொல்லிற்று –

———————————————————————–

வார்த்தை -426-
ஒரு குல ஸ்திரீக்கு பாதிவ்ரத்ய ஹாநி என்றும் –
ஸ்த்ரீத்வ ஹாநி என்றும் –
பந்து ஹாநி என்றும் -மூன்று உண்டு –

இவளுக்கு இவை பரிஹார்யம் ஆனவோபாதி அதிகாரிக்கும் இவை பரிஹார்யம் –

அதிகாரிக்கு பாதிவ்ரத்ய ஹாநி யாவது -த்ருஷ்டார்தமாக இதரரை அநுவர்திக்கை –
ஸ்த்ரீத்வ ஹாநி யாவது -த்ருஷ்டத்தை ஈஸ்வரன் பக்கலிலே அபேஷிக்கை –
பந்து ஹாநி யாவது -த்ருஷ்டத்தில் இல்லாமையை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொல்லுகை –

—————————————————————–

வார்த்தை -427-
அதிகாரிக்கு -1-ரூபம் -2-நாமம் -3-உக்தி -4-வ்ருத்தி -5-புத்தி -என்கிற இவை ஐந்தும் வேண்டும் —
இவற்றில் புத்தியே (ஈடுபட்ட அறிவு)பிரதானம் –
அது இல்லையாகில் மற்றை நாலும் அசத் கல்பம் –
ஆகையிறே ஆழ்வார்களும் அதிலே உறைக்கைக்கு அடி -எங்கனே என்னில் –

(உறைப்பை உரைத்தேன் -அறிய அரியது -போல்)

எட்டு பாசுரங்களில் அறிவில்லை என்றால் அனரத்தம் விளையும் என்றும்
அடுத்த எட்டு பாசுரங்களால் -அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சு அனுகூலமாய் இருந்தால் உயர் கதிக்கு செல்வான் என்றும் –
அடுத்த ஒன்பது பாசுரங்களால் -இத்தகைய நெஞ்சையும் அறிவையும் உடையவனை
எம்பெருமான் ஒருகாலும் பிரிய மாட்டான் -என்று அருளினார்கள் –

1-சித்தமும் செவ்வை நில்லாது -திருக்குறும் தாண்டகம் -10 என்றும் –
2-நெஞ்சமும் நீயம் பாங்கல்லையே -திருவாய்மொழி -5-4-2- என்றும் –
3-சிந்தித்து அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8- என்றும்
4-நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4- என்றும்
5-மறந்தேன் இறந்தேன் -பெரிய திருமொழி -6-2-2- என்றும் –
6-உணர்வு ஒன்றில்லா -திருமாலை -34 என்றும் –
7-மனத்திலோர் தூய்மை இல்லை -திருமாலை -30 என்றும் –
8-உள்ளமே ஓன்று நீ உணர மாட்டாய் -திருமாலை -24 -என்றும் –
இது அவிதேயமானால் அநர்த்தம் என்னும் ஆகாரத்தை அருளிச் செய்தார்கள் –

1-உள்ளிலும் உள்ளம் தடிக்கும் -பெரிய திருவந்தாதி -76 என்றும் –
2-உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி -மூன்றாம் திருவந்தாதி -94-என்றும் –
3-நினைக்கும் கால் -மூன்றாம் திருவந்தாதி -81-என்றும் –
4-சிந்தையை செந்நிறுத்தி -திருவாய்மொழி -5-2-6- என்றும் –
5-தொழுமின் தூய மனத்தராய் -திருவாய்மொழி -3-6-7- என்றும் –
6-கூடு மனமுடையீர் -திருப்பல்லாண்டு -4 என்றும் –
7-பாடு மனமுடைப் பத்தருள்ளீர் -திருப்பல்லாண்டு -7 என்றும் –
8-சிந்தித்து இருப்பார்க்கு -நான்முகன் திருவந்தாதி -65 என்றும் சொல்லுகையாலே
இது –(மனம்-) அனுகூலித்தால் உத்தராகம் என்னுமிடத்தை அருளிச் செய்தார்கள் –

இப்படி அனுகூலித்த நெஞ்சுடையவனை ஈஸ்வரன் விஸ்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லுகிறது –(மற்றையாரிடமும் சத்தைக்காக இருப்பான்)
1-மாசற்றார் மனத்துளான் -திருமாலை -22 என்றும் –
2-நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமான் -மூன்றாம் திருவந்தாதி -81- என்றும் –
3-சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பு -பெரிய திருமொழி -2-5-1- என்றும் –
4-அந்தாமத்து அன்பு  செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
5-நெஞ்சமே நீணகராக இருந்த -திருவாய்மொழி -3-8-2- என்றும் –
6-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -3-5-1- என்றும் –
7-வந்தாய் என் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -1-10-9- என்றும் –
8-உள்ளம் புகுந்த ஒருவர் -பெரிய திருமொழி -5-2-3- என்றும் –
9-நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என்நெஞ்சுள் -திருச்சந்த விருத்தம் -65- என்றும்
சொல்லுகையாலே அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஈஸ்வரன் விஸ்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லிற்று –

——————————————————–

வார்த்தை -428-
1-தான் அறுகை–2-சைதன்யம் அறுகை–3-சாராந்தரம் அறுகை–
4-வேர் அறுகை–5-வ்யாபாரம் அறுகை–6- விஷயாந்தரம் அறுகை
என்று ஸ்ரீ வகுளாபரண தாசர் பிள்ளை வார்த்தை –

1-தான் அறுகை யாவது -பிரகார பிரகாரி பாவம் அறிந்து –
யானும் தானாய்  ஒழிந்தான் -திருவாய்மொழி -8-8-4- என்றும் –
யானும் நீ தானே -திருவாய்மொழி -8-1-9- என்றும் –
யானே நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
தானே யாகி நிறைந்து -திருவாய்மொழி -10-7-2- என்றும்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -திருவாய்மொழி -2-3-1- என்றும் -இருக்கை

2-சைதன்யம் அறுகை யாவது -தான் கர்த்தா போக்தா என்னும் நினைவு போவது
செய்த்தலை எழு நாற்றுப் போலே -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும் –
கடைத் தலை யிருந்து -திருமாலை -38-என்றும் –
படியாய்க் கிடந்தது -பெருமாள் திருமொழி -4-9- என்றும் –
பூம் பட்டாம் புல்கும் அணையாம் -முதல் திருவந்தாதி -53-என்றும் இருக்கை –

3-சாராந்தரம்  அறுகை யாவது -எம்பெருமான் முக மலர்த்தி தவிர வேறு ஓன்று உண்டு என்கிற நினைவு போவது –
அஹம் அன்னம் -என்றும் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் 10-10-6- என்றும் உருவமும் ஆர் உயிரும்  உடனே உண்டான் -திருவாய்மொழி -9-6-5- என்றும் –
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தான் -திருவாய்மொழி -10-7-1- என்றும் –
தான் என்னை முற்றப் பருகினான் -திருவாய்மொழி -9-6-10 -(உண்டவன் பருக வேண்டுமே)என்றும் இருக்கை-

4-வேர் அறுகை யாவது -எம்பெருமான் உடன் சம்பந்தம் இல்லாதவன் என்னும் நினைவு போகை
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை -நான்முகன் திருவந்தாதி -7 என்றும் –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-என்றும் இருக்கை

(5-வ்யாபாரம் அறுகை–6- விஷயாந்தரம் அறுகை-இரண்டுமே நாம் அறிந்தவை என்பதால் தனியாக விளக்க வில்லை)

மண் நீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றினால் –
மண்ணானது கீழே படிந்து தெளிந்த நீரானது மேலே நிற்குமா போலே –
அஞ்ஞான மிஸ்ரமான சரீரத்தில் இருக்கிற ஆத்மாவை ஆசார்யன் ஆகிற மகா உபகாரகன் –
திருமந்தரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்ற –
அஞ்ஞானம் பதிந்து ஜ்ஞானம் -பிரகாசிக்கும் –

தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்கும் தனையும் கை பட்ட போதெல்லாம் கலங்குமா போலே –
கலங்கும் என்று அஞ்சி –
கலங்காமல் நோக்குவான் ஒருவன் கண் வட்டத்திலே வர்திக்கை ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

———————————————————————————————

வார்த்தை -429-
ஈஸ்வரனுடைய ஆகாரத் த்ரயமாவது -மேன்மையும் -நீர்மையும் -வடிவு அழகும் –
அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராவதி மன்னன் மணி வண்ணன் -திருவாய்மொழி -5-3-5- என்றும் –
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -திருவாய்மொழி -1-10-11- என்றும் –
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை -திருவாய்மொழி -5-1-5-என்றும் அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினை -அமலனாதி பிரான் -10-என்றும் –
பச்சை மா மலை போல் மேனி அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திருமாலை -2-என்றும் –
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப -கை தொழக் கிடந்த -மூவுலகளந்த -திருவாசிரியம் -1- என்றும்
இத்யாதிகளாலே அனுசந்திப்பான் –

( பிராட்டியை -கண்டேன் ஸீதையை -என்று அருளிச் செய்த திருவடி -இற் பிறப்பு இரும் பொறை -கற்பு என்னும் மூன்றும் களி நடை புரியக் கண்டேன் -இம்மூன்றும் பிராட்டிக்கு –
சேஷி சரண்யத்வ ப்ராபகத்வமும் ஆகிய மூன்றும் அவனுக்கும் உண்டு நமக்கு அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் இருப்பது போல்)

———————————————————————————————–

வார்த்தை -430-
சேதனனுடைய பர்வ த்ரயம் -அதாவது –
ஸ்வரூப விரோதி நிவ்ருத்தி -சாதன விரோதி நிவ்ருத்தி -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தி –(ஓம் நம -நமோ நம -நாராயணாய நம)

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தீர்ர்த மனத்தனாகி -திருவாய்மொழி -7-10-11- என்றும் –
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார் -பெருமாள் திருமொழி -10-5-என்றும்
தாளும்  தடக்கையும் கூப்பி பணியுமவர் -திருவாய்மொழி -3-7-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டேன் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -பெரிய திருமொழி -8-10-9- என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு -உன் கடைத்தலை யிருந்து -திருமாலை -38- என்றும் –
இத்யாதிகளாலே சேதனனுடைய பர்வ  த்ரயத்தை அனுசந்திப்பான் –

(எடுத்த ஒவ்வொரு பாசுரங்களிலும் மூன்று விரோதிகள் நிவ்ருத்தியும் காட்டப் பட்டுள்ளது)

——————————————————————————————-

வார்த்தை -431

அநாதியான கர்ம பிரவாஹத்தாலே- சதுர்வித சரீரங்களிலும் பிரவேசித்து-
சதுர்தச புவனங்களிலும் தட்டித் திரிகிற சேதனரை – ஈஸ்வரன் தன்னை பெறுகைக்கு உறுப்பாக
த்ரிவித சரீரங்களை(தேவ திர்யக் ஸ்தாவர) த்யஜிப்பித்து -மனுஷ்ய ஜன்மத்திலே ஆக்கி  –
கரண த்ரயத்தாலும் -காலத் த்ரயத்திலும் -கர்ம த்ரயத்தில் (நினைத்தல் சொல்லுதல் செய்தல்)அன்வயிப்பித்து
அசித் த்ரயத்துக்கு அவ்வருகு ஆனவன்

குண த்ரயத்தாலே ஷூத்ரனாய் -ஆசா த்ரயத்தாலே அலமந்து -அபராத த்ரயத்தை ஆர்ஜித்து –ஈஷணா த்ரயத்தாலே அடிபட்டு -தத்வ த்ரயத்தை அறியாதே -தாப த்ரயத்தாலே தப்தனான இவனை-
தேவதா த்ரயத்துக்கு சேஷியாய் -மஹிஷி த்ரயத்துக்கு வல்லபனாய் -ஆத்ம த்ரயத்தை ஆளுமவனாய்-த்ரிவித பரிச்சேத ரஹிதனாய் -த்ரிவித காரண வஸ்துவான ஸ்ரீ மான் கடாஷித்து –

விரோதி த்ரயத்தை விடுவிக்கக் கோலி -ஸூக்ருத த்ரயத்தை தொடுமானம் ஆக்கி –
ஆனுகூல த்ரயத்திலே அன்வயிப்பித்து -அனுவர்தன த்ரயத்துக்கு ஆளாக்கி –
அதிகாரி த்ரயத்தை உடைய ஆசார்ய உபதேசமான  -மந்திர த்ரயத்தாலே மாசறுத்து –

பத த்ரயத்தை அறிவிப்பித்து -ஜ்ஞான த்ரயத்திலே நாட்டி வைத்து -சங்கா த்ரயத்தை தவிர்ப்பித்து –
ஆகார த்ரயத்திலே அன்வயிப்பித்து -பர்வ த்ரயத்தாலே போகமாக்கி-
லோக த்ரயத்தை உபேஷிப்பித்து -பாத த்ரயத்திலே கொண்டு போய் –
சாம்ய த்ரயத்தை சம்பன்னமாக்கி -புன்மை த்ரயம் அற்ற  -போகத்தை புஜிப்பிக்கும்

1-த்ரிவித சரீரமாவது -தேவ திர்யக் ஸ்தாவர சரீரங்கள்
2-கரண த்ரயமாவது -மநோ வாக் காயங்கள்
3-கால த்ரயமாவது -பூத பவிஷ்யத்  வர்த்தமானங்கள்
4-கர்ம த்ரயமாவது -நினைக்கை செய்கை சொல்லுகை

நினைக்கை யாவது (நினைத்தலில் குற்றங்களாவன)-பர சம்ருத் யசஹத்வமும் -பராநர்த்த சிந்தனையும் –பர தோஷ பிரதிபத்தியும் -ஸ்வ யாத்ரா நிரூபணமும்

சொல்லுகையாவது(சொல்லுகையில் குற்றங்களாவன) -குடி முடியும்படி தோஷம் சொல்லுகையும் -ஸ்வம் அறுதி கொள்ளும்படி கோட் சொல்லுகையும்(தீக்குறளை சென்றோதோம்) -இதர சரிதங்களை சொல்லுகையும் -பொய் சொல்லுகையும் –

செய்கையாவது (செய்கையில் குற்றங்களாவன)-பர ஹிம்சையும் -பர த்ரவ்ய அபஹாரமும்

5-அசித் த்ரயமாவது -வ்யக்தமும் அவ்யக்தமும் காலமும்
6-குண த்ரயமாவது -சாத்விக ராஜஸ தாமஸும்
7-ஆஸா த்ரயமாவது -அஹங்கார யுக்த ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் –
அதாவது -வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி –
பெரிய திருமொழி -1-1-4-(ஒரே பாசுரத்திலேயே மூன்றும் உண்டு)என்கிற இவை

8-அபாரத த்ரயமாவது -பகவத -அபசாரமும் பாகவத அபசாரமும் அசஹ்ய அபசாரமும் –
9-ஈஷணா த்ரயமாவது -அர்த்தேஷணை -தாரேஷணை -புத்ரேஷணைகள் -(பாசத்தில் அடி பட்டு கிடப்பது)
10-தத்வ த்ரயமாவது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
11-தாப த்ரயமாவது -ஆத்யாத்மிகம் ஆதி தைவிகம் ஆதி பௌதிகம்

12-தேவதா த்ரயமாவது -வானவர் தம்மை யாளுமவன் -திருவாய்மொழி -3-6-2-பிரம ருத்ர இந்த்ராதிகள்
13-மஹிஷீ த்ரயமாவது -ஒருமகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகள் -பெரிய திருமொழி -3-3-9-
14-ஆத்ம த்ரயமாவது -பத்தர் முக்தர் நித்யர்
15-த்ரிவித பரிச்சேத ரஹிதனாவது -காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துக்களாலும் பரிச்சேதிக்கப் போகாது ஒழிகை
16-த்ரிவித காரண வஸ்து வாவது -நிமித்த உபாதான சஹகாரி காரணமாகை –
விசேஷ கடாஷம் ஆவது -சௌஹார்த்தம்

17-விரோதி த்ரயமாவது -ஸ்வ ஸ்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும் -தேஹாத்ம அபிமானமும்
18-ஸூக்ருத த்ரயமாவது -ஆநுஷங்கிகம் -பரா சங்கிகம் -யாத்ருச்சிகம்
19-ஆநுகூல்ய த்ரயமாவது -அத்வேஷமும் ஆபிமுக்யமும் சத் சம்பாஷணமும்

20-அநுவர்த்தன த்ரயமாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் –
21-அதிகார த்ரயமாவது பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாசித-என்கிறபடியே -அறியக் கற்று வல்லார் ஆகை(ஆச்சார்யர்களுக்கு இருக்காய் வேண்டிய மூன்றும் -கேள்வி ஞானம் நிறைந்த வயோ வருத்தராகவும் -அடியார்களை ஆஸ்ரயித்து)
22-மந்திர த்ரயமாவது -சாஸ்திர ருசி பரிக்ரஹீதமும் -சரண்ய ருசி பரிக்ரஹீதமும் –ஆசார்ய ருசி பரிக்ரஹீதமும் –
23-பத த்ரயமாவது -அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் -அந்ய உபாய நிவ்ருத்தியும் – பிரயோஜனாந்தர நிவ்ருத்தியும் பண்ணிக் கொடுக்குமது
24-ஜ்ஞானத் த்ரயமாவது -ஸ்வ ஜ்ஞானம் -ப்ராபக ஜ்ஞானம் -பிராப்ய ஜ்ஞானம் –

25-சங்கா த்ரயமாவது -விரோதி பூயஸ்தையும் -ப்ராப்ய ப்ராசுர்யமும் -உபாய லகுத்வமும்
26-ஆகார த்ரயமாவது -ஈஸ்வரனுடைய மேன்மையும் நீர்மையும் வடிவு அழகும் -அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராபதி மன்னன் மணி வண்ணன் -திருவாய்மொழி -5-3-6-
27-பர்வ த்ரயமாவது -ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியும் -சாதன விரோதி நிவ்ருத்தியும் -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியும் –

28-லோக த்ரயமாவது -பூம் யந்தரிஷத ஸ்வர்க்கம்
29-பாத த்ரயமாவது த்ரிபாத் விபூதி
30-சாம்ய த்ரயமாவது -ரூப சாம்யம் -குண சாம்யம் -போக சாம்யம்
31-புன்மை த்ரயமாவது -அல்பம்  அஸ்திரம் அபோக்யம்

அறுகை யாவது இவை இன்றிலே ஒழிகை-

—————————————————————–

வார்த்தை -432-
சங்கத்தைக் கழித்து -ஈஷணையைக் (ஆஸா பாசங்களைக்)கழித்து -பால்யத்தை கழித்து -யௌவனத்தை கழித்து –ஜரையைக் கழித்து -மரணத்தைக் கழித்து -நரகத்தைக் கழித்து -அவித்யையைக் கழித்து –கர்மத்தைக் கழித்து -வாசனையைக் கழித்து -தாபத் த்ரயத்தைக் கழித்து (அழுக்கு உடம்பும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் கழித்து)-சூஷ்ம த்ரயத்தைக் (இந்திரியங்கள் மனஸ் பிராணன்)கழித்து –
விரஜைக்கு அக்கரைப் படுத்தி -லோகப் ப்ராப்தியை உண்டாக்கி -ரூபப் ப்ராப்தியை உண்டாக்கி –சமீப ப்ராப்தியை உண்டாக்கி -சாயுஜ்யத்தை (சாலோக்யம் சாரூப்யம் சாமீப்யம் சாயுஜ்யம்-ஸோஸ்னுதே ஸர்வ காமான் – பக்தர் பாகவதர்களுடன் கூடிய குண அனுபவம்)உண்டாக்கி –
ஜ்ஞானத்தை (ஸ்வரூப ஆவிர்பாவம்)உண்டாக்கி -பலத்தை உண்டாக்கி –
ஐஸ்வர்யத்தை உண்டாக்கி -வீர்யத்தை உண்டாக்கி –
சக்தியை உண்டாக்கி -தேஜசை உண்டாக்கி -(பகவத் -ஞான பல ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்)
விக்ரஹ அனுபவத்தை உண்டாக்கி -கைங்கர்யத்தை உண்டாக்கி –
இவன் கைங்கர்யத்தை கண்டு அவன் உகந்தால் அவன் உகந்தபடி கண்டு உகக்கை சேஷத்வத்துக்கு பிரயோஜனம்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

(ஈஸ்வரன்–பக்தி உழவன்- பண்ணி அருளும் ஷேம பரம்பரைகள் -அத்தா நீ செய்வன அடியேன் அறியேன் -உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி -)

——————————————-————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -409-420–அரும் பத விவரணத்துடன்–

February 28, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -409-
அன்ன சாங்கர்யம் –
ஜ்ஞான சாங்கர்யம் –
கால சாங்கர்யம் –
தேச சாங்கர்யம் –
போக சாங்கர்யம் –
இவை த்யாஜ்யம் –

(பஞ்சீகரணம் அவன் செய்தது ஸ்ருஷ்டிக்காக -அந்தக் கலப்படம்-சாங்கர்யம்- உபாதேயம்)

சாங்கர்யம் =கலப்படம்(எம்பெருமான் அமுது செய்து அருளிய ப்ரசாதத்துடன் அமுது செய்து அருளாத ப்ரசாதத்துடன் கலப்படம் த்யாஜ்யம் -இதே போல் யதாத்ம்ய தெளிந்த ஆச்சார்யர் அருளிச் செய்த ஞானத்துடன் கலக்கமுள்ளவர் கொடுக்கும் ஞானத்துடன் கலப்படம் த்யாஜ்யம் -கைங்கர்யத்துக்கு செலவு செய்த காலத்துடன் செய்யாத காலக்கலப்பு -உகந்தருளின நிலங்களில் பொழுது போக்குடன் இல்லா பொழுது போக்கு -பாகவதர்கள் உகந்த கைங்கர்யங்களுடன் ஸ்வார்த்த கைங்கர்யங்களின் கலப்பு த்யாஜ்யம்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -எம்மா வீட்டில் எம்மா வீட்டுப் பாசுரம் -)

————————————————————–

வார்த்தை -410-
நடுவில் திருவீதிப் பிள்ளை –
சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –

(துராசார்யராக முன்பே இருந்தாலும் பரமாத்மாவின் பிரபாவத்தால் ஆதிதேவனைப் பற்றியன் அவன் பிரபாவத்தாலே தோஷம் இல்லாதவன் ஆகிறான்)

பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது –
ஔஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

(விரக்தி -அக்ரேஸராக இருந்தால் -ஞானக்குறைவு ஏற்படாது -அங்கே செல்லும் ஆர்த்தியை விட இங்குள்ள தோஷ அனுசந்தானத்தாலே இங்கிருக்கும் இருப்பில் வெறுப்பு முதலில் வரவேண்டுமே-இனி இனி இருப்பதின் கால் கூப்பிட்டு அலற்றினார் ஆழ்வாரும்)

——————————————————————-

வார்த்தை -411-
ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –
அவையாவன –
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன  ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம் –
இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்(இந்த அஞ்சையும் ஸ்பர்சிக்க அஞ்ச வேண்டுமே)

எம்பெருமானுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்
சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீயபதித்வதை அனுசந்திக்க ஏகாயன  ஸ்பர்சம் அறும்
உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –

——————————————————

வார்த்தை -412-
முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு
1-சர்வ பிரகார ரஷகனான (அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்)சர்வேஸ்வரன் விஷயமாகவும் –
2-அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி (பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்)விஷயமாகவும்-
3-மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் –
4-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் –
5-த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் –
6-ஸ்வ சரீர விஷயமாகவும் –
7-சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் –

தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் –
தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் –
சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் –
இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் –
இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும்
அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது –

இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி
அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-

இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் –
இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது –

சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்ய அந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –

பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ஸ்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது –

பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும்
தன்  பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது –

பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள்
என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது -(நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்கள் -அனுகூல பந்துக்கள் உபாதேயம் -பிரதிகூல பந்துக்கள் த்யாஜ்யம்)

ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூநிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது -(பசிக்காகாவே உண்ண வேண்டும் ருசிக்காக மட்டுமே இல்லாமல்)

இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் –
எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே
ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் –
எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் –
கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும் –உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –

————————————————————————

வார்த்தை -413-
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய முமுஷுக்களுடைய கால ஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் –சாதனம் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகையும் 

(மோக்ஷ உபாயமாக இல்லாமல் மோக்ஷ உபாய உபாயமாக-விஸ்வாஸம் நழுவாமல் இருப்பதற்காகவே பிராட்டியைப் பற்றினார் முதலில் கத்ய த்ரயத்தில்)

அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம்
பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் -(பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்)

இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில்
பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் –

இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில்
தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் –

தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –

உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக
நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் –

இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம்
பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – –

ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் -(விருப்பமின்றி இருக்கையும்)

——————————————————————

வார்த்தை -414-
விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் –
உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் –
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் அன்று என்னும் அத்யவசாயத்தை சொல்லுகிறது —தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-என்று இருக்கும் இருப்பு 

———————————————————–

வார்த்தை -415-
1-ஆசார்ய விஷயீகாரமோ -2-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ –
3-பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமோ -4-தன்னுடைய அனுசந்தானமோ –
சம்சார நிவ்ருத்திக்கும்-பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் –

இவை நாலும் அன்று –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி நழுவாது ஒழிகை -(இது வர கீழ்ச் சொன்ன நாலுமே வேண்டும்)

ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் -தன்னுடைய அநுசந்தானமும் -தன்னுடைய கால ஷேமம் –

——————————————————————-

வார்த்தை -416-

ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை

சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை –

கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –

(ரக்ஷகத்வம் அவனுக்கு ஊண் -ராக்ஷசர் தின்ற உடம்பைக் காட்டிய ரிஷிகளுக்கு வெட்க்கி நின்றார் அன்றோ பெருமாள் -ஆளிட்டு அந்தி தொழக் கூடாது அன்றோ-)

——————————————————————-

வார்த்தை -417-
பட்டர் பிரபன்னரை அழைத்தருளி –
உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைந்ததொரு காட்டிலே –
முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க –
அவ்வஸ்தையிலே திரு நாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் -(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய –உபாய புத்தயாக அனைத்தையுமே விட வேண்டுமே-ப்ரபத்தியுமே உபாயம் அன்று-விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்)

———————————————————————-

வார்த்தை -418-
திருவேங்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட
எழுந்து அருளா நிற்க -ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட –

பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன –

அந்த செடியிலே என்ன –

அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி
பிரபன்னர் எழுந்தருளின வாறே -நீர் என்ன நினைத்து விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –

பிரபன்னரும்
கடித்த பாம்பு பலவானாகில் -விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு (தேஹம்)பலவானாகில் திருக் கோனெரியிலே தீர்த்தமாடி
திருவேங்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று நினைத்து இருந்தேன்
என்று விண்ணப்பம் செய்தார் –

(தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போல் இருக்க வேண்டுமே -இந்த அழுக்கு உடம்புக்குள்ளும் ஸுசீல்ய வாத்சல்யத்தால் அவன் எழுந்தருளி நன்மை நியமித்து அருள்கிறான்)

————————————————————–

வார்த்தை -419-
ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து(முதல் நாளும் ஏழாம் நாளும் சேர்த்து உத்ஸவம்)
திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க –
பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே
பெருமாள்  முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக –
இவர் புறப்பட்ட அளவிலே

அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக –
அருளப்பாடு -என்ற அளவிலே
இவரும் வந்து திருவடி தொழ –

நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள –
பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன –

நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள –
முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன –

நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு -என்று திரு உள்ளமாய் அருளினார் –

————————————————————————

வார்த்தை -420-
வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
1-குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –
2-தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள வாசியும்
3-மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உள்ள வாசியும் –
4-தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் –
5-உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் –
6-சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள  வாசியும் –
7-பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் –
8-சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் –
9-ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் –
10-புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –

அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை –

தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் –
பர தேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சக்தியுமாய் இருக்கும்  என்று அறிகை –

மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும்
மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை

தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய்
ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை

உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை

(உபாசகனுக்கு இவை அங்கங்களாக வேண்டும் பிரபன்னனுக்கு அவகாத ஸ்வேதம் போல் தன்னடையே ஏற்படும்)

சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய்
நிரபாயுமாய் இருக்கும் என்று அறிகை

பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆஸ்ரித பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை

சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –

ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்
சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை

புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை

ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –

———————————-———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -397-408–அரும் பத விவரணத்துடன்–

February 27, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -397-
நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள (பெரியவாச்சான் பிள்ளை )
இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட வந்தார்கள் -என்ன(பரிஹாஸமாக உரைத்து சிஷிக்க அதற்கு நம்பிள்ளை) –கோ மூத்தவன் (நியாய அரசன்)பாடே போகாதே நம் பாடே வந்தார்கள் – என்று அருளினார் –

————————————————————

வார்த்தை -398-
சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் —பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –

——————————————————————-

வார்த்தை -399-
பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் –

இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் –அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் –

நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி (அத்ர த்வயம் ஸக்ருத் உச்சாரம்)-
இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் –
இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன –
இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்

——————————————————————-

வார்த்தை –400-
வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து
அருளி இருக்கச் செய்தே –
வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை  பிள்ளை யாழ்வான்-ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் –

பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் -என்ன –

பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் –
சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –

(ஆழ்வான் திருவடிகளிலே ஸம்பந்தமுடைய ஒரு ஆத்மா இப்படித் தட்டுப் பட்டுப் போவதே -என்று இத்தை நினைத்து என் வயிறு எரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை என்று ஆண்டாள் அறியச் செய்தாள் –குற்றம் செய்தவர்கள் பக்கலிலும் அகப்பட ஹித பரராய் தயா -ஆர்த்த்ர-சித்தராய் போருவது ஆழ்வான் சம்பந்தமுடையவர்களுக்கே உள்ளதொன்று இறே)

—————————————————————

வார்த்தை -401-

நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் –
அநபேஷை நடக்கும்படியையும் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –

அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் –
அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் –

ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் –
ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –

(இவற்றை வேண்டாமே என்பது -ஞான ஆனந்தம் மட்டுமே இல்லாமல் சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் வேண்டுமே -இவை அந்தரங்க நிரூபணம்-அடியேன் உள்ளான் -கூரத்தாழ்வான் திருக்கோட்டியூர் நம்பி இடம் சென்று பெற்ற நிதி -கைவல்யத்தில் பிடித்தல் கூடாதே -ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -பெரியாழ்வார் -பகவல் லாபம் ஸ்வார்த்த அனுபவ ஸூப்ரயோஜனத்துக்காகக் கூடாதே -)

———————————————————————

வார்த்தை -402-

எம்பெருமானார் எம்பாரை  நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே –
எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன –
இப்படி எளியனாகில் நமக்கு என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன –
இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது
உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார் –

——————————————————————-

வார்த்தை -403-
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம் அருளிச் செய்யா நிற்க –
இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று
மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள –

எனக்கு சேஷத்வ அனுசந்தானமே அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன –
இவரும் அங்கே செல்ல –

அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி –
அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க –
பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –

(சேஷத்வ பரதந்த்ர ஞானமே அங்கு பரார்த்த கைங்கர்யம் பெற்றுத் தரும் -யோகத்தால் பெறுவது ஸ்வார்த்த கைங்கர்யமாகவே இருக்கும்)

—————————————————————-

வார்த்தை -404-

நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் –
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
முமுஷுவான அதிகாரிக்கு அனுசந்தேயம் -ஸ்வரூபம் -(அசித்வத்)பரதந்த்ரம் –
விரோதி -பிரபலம் (கர்மா வாசனா ப்ரக்ருதி சம்சாரம்)– புருஷார்த்தம்(பரார்த்த அனுபவ பரார்த்த கைங்கர்யம்) -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –

———————————————————————

வார்த்தை -405-
துறை அறிந்து இழிந்து
முகம் அறிந்து கோத்து
விலை அறிந்து பரிமாறி
நினைவு அறிந்து
அடிமை செய்ய வேண்டும் –

(அநந்த வேதங்கள் -அசாரம் –அல்ப சாரம் -சாரம் -சாரதரம் -சாரதமம் -தத்வ ரஹஸ்ய பத த்ரவ்யம் -அர்த்த பஞ்சகம் -நவவித சம்பந்தம் -முத்தான அர்த்தங்களை முகம் அறிந்து கோத்து- -பகவல் முக விலாஸமே பரம பிரயோஜனம்-பகவத் அனுபவ ப்ரீதிகாரித கைங்கர்யம் -ஸ்வார்த்தம் இல்லாமல் ஸூவ பிரயோஜனம் இல்லாமல் -பரார்த்த -பர பிரயோஜன-ததீய நிஷ்டை -)

—————————————————————

வார்த்தை -406-

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் –
அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

(ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -குண சதுஷ்டயம்-அவனுக்கும்-ஈஸ்வரனுக்கும்- உண்டு -சூரணை -297-அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –-அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –-சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –சூரணை -298-இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —சூரணை -299-)

———————————————————

வார்த்தை -407-
நம்பிள்ளை திருவெள்ளறை தேன் கொள் சோலை தாஸர் மாளிகையிலே எழுந்தருளி –
அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு ப்ரீதராய் இருக்க –
இதுக்கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க –

நம்பிள்ளை –
இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் –
எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –

தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் –
தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை -ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் –
எம்பெருமானுக்கே என்கை -பரமபத அநுபவ சத்ருசம் –

————————————————

வார்த்தை -408-
ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு –
ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இறே
என்று பெரியவாச்சான் பிள்ளை –

(கர்மத்தினால் ஆணாகப் பிறந்து இருக்க இயற்கையான ஸ்த்ரீத்வத்தை -மணி வல்லிப்பேச்சு வந்தேறி இல்லையே -ஆழ்வார் 73 பதிகம் ஆண் தன்மை ஏறிட்டுக் கொண்டார்)

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -385-396–அரும் பத விவரணத்துடன்–

February 27, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -385-

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் (முட்டு வலியாய்)கிடக்க –
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் –
திருவேங்கடமுடையான் செய்து அருளுகிறது என் – என்று வெறுக்க –
திருவேங்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

(சீறி அருளாய் -சீற்றமும் அருளின் கார்யமே)

——————————————————

வார்த்தை -386-
அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க –
பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே –
இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

—————————————————————

வார்த்தை -387-

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க –
திருவேங்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக் கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக –

தேவரீரைக் கொண்டு கார்யம் என் கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன –
ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ –
தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

(அடியார் நிலாகின்ற வைகுந்தம் அன்றோ திருமலை)

—————————————————————————————–

வார்த்தை -388-
அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று(த்வார பாலகர்கள் இருக்குமிடம்) அருளப்பாடு என்றவாறே
திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
(நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி)

—————————————————————-

வார்த்தை -389-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க –
பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –

ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –ஏவம் விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீந சங்கல்ப அந்தர்கதர் –

——————————————————————–

வார்த்தை -390-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர்யார்த்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில்
அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும்
ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிறாப் போலே –
அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்

(செல்வ விபீடணன் -அவனுக்காகவே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டருளுகிறான்)

————————————————————-

வார்த்தை -391–
முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு அருளிச் செய்த வார்த்தை எம்பெருமான் சிலரைப் போம் என்னும் –
சிலரை வா வென்னும் –
சிலரைப் போது என்னும் –

பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்தவாறே வா வென்னும் —
அநந்ய பிரயோஜனரை போது என்னும் -(போதுவீர் போதுமினோ -உடனே வாருங்கோள் என்று கை நீட்டி வரவேற்ப்பான்)

(எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-)

இந்த தேசத்தில் ஒரு அநந்ய  பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ –
உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமான் என்றால் விஸ்வசிப்பார் இல்லை –
விஸ்வசித்தால் க்ருதஞ்ஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஞ்ஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் –

இவை மூன்றும் (விஸ்வாசம் -க்ருதஞ்ஜை -ருசி)கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ உபஹதர் ஆகையாலே பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் –
அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் –
இதுவும் கூடிற்றாகில் (பகவத் ப்ரஸாதத்தாலே பெற்றோம் என்றும் நினையாமல்)தங்களை ஸூத்தராக நினைப்பர்கள் –

ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –

சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –

——————————————————

வார்த்தை -392-

திருமாலை யாண்டான் அருளிச் செய்யும்படி –
நாம் பகவத் விஷயம் சொல்லுகிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அது எங்கனே என்னில் –
ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் -தலையாலே எரு சுமந்து ரஷித்து
-அதினருகே கூரை கட்டி -பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால்-கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –

அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை –
பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும்
க்ருதஞ்ஜர் ஆகாத சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

—————————————————————–

வார்த்தை -393-
அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க –
மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன –
அது  என் என்ன –

அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்
பெற்றால் பிரயோஜனாந்த பரர்  ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு
வற்றி இருக்கும் -என்று அருளிச் செய்தார் –

(வாஸூ தேவம் ஸர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லபம்-அர்ஜுனனும் ப்ரயோஜனாந்த பரனாகவே இருந்து போந்தான்)

(சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–பெரிய திருவந்தாதி-17-எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே இவர்களை சூழ்ந்து-அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –)

(அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே-8-3-1-.)

————————————————————-

வார்த்தை -394-

ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க
ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -(சேலை யுமாய்) –பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி –பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள –

இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய –
பெருமாள் சன்னதியே யாகிலும்-பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும் பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

———————————————————

வார்த்தை -395-
1-தேஹாத்ம விவேகம் -2-பரமாத்ம விவேகம் -3-த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் –
4-புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -5-விரோதி அவிரோதி விவேகம் –
6-உபாய அநுபாய விவேகம் -7-வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -8-துஷ்கர ஸூகர விவேகம் -9-ஆசார அநாசார விவேகம் -10-சிஷ்ய ஆச்சார்ய விவேகம் –இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –

(ஸூகரம் அருளிச் செய்த ஸூகர உபாயம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது)

———————————————————-

வார்த்தை -396-

முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு –
1-ப்ராப்ய விஷயமும் -2-பிராபக விஷயமும் -3-ஆச்சார்ய விஷயமும் -4-போஜன விஷயமும் 

ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய்
பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் –மோஷத்தில் கைவல்யம் முதலாக (பகவல் லாபார்த்தத்திலும் ஸ்வார்த்த ஸூ அனுபவ கைங்கர்யங்களும் த்யாஜ்யம்)உள்ள புருஷார்தங்களிலும் கால் தாழாதே இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டனமுமாய் உள்ள ஈஸ்வரன் –

(திருக்கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும் வைத்து அஞ்சேல் என்ற கையும் கவித்த முடியும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்.-நம்பெருமாளின் நான்கு குணங்கள்-குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்.-கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்.-ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம்.-கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.-இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்)

இதில் அத்யாவசியம் (யதாத்ம்யம்)ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே
உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பக்திகளில் கால் தாழாமல் இருக்கை –

ஆசார்ய விஷயமாவது -இவ் வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் –
மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்த்திக்கை –
அதாவது –
உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை –

இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி  லாப பூஜைகளைப் பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம் –என்று இருக்கை –

போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே
என்று ஜீவிக்கை -(வாழ்வதற்காகவே நியாயமாக சம்பாதித்த செல்வம் கொண்டே உண்ணுதல் -உண்ணுவதற்காக வாழக்கூடாதே)

இதில் அத்யாவச்யம் (யதாத்ம்யம்)ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை
அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே
உடம்பை வருத்தி யாதல் -அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு
தேக யாத்ரை நடத்துகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -361-384–அரும் பத விவரணத்துடன்–

February 26, 2013

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -361-
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விஸ்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும் அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் –
எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —

இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானே யாகிலும் –
எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –

————————————————–

வார்த்தை -362-
ஸ்வரூபத்தில் தெளிவும் –
உபாயத்தில் துணிவும் –
உபேயத்தில் த்வரையும்-அதிகாரி க்ருத்யம் என்று நம்பிள்ளை –

(ஸம்பந்த உபாய பலன்களில் உணர்த்தியும் -(தெளிவும் )-துணிவும் பதற்றமும்-(த்வரையும் ) ஆகிய பிரஞ்ஞா அவஸ்தை களுக்குத் தோழி தாயார் மகள் என்றும் பெயர் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்குத் த்வரையும் வேண்டும்-)

————————————————–

வார்த்தை -363-
சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அத்ருஷ்ட சம்பந்தம்(ஆச்சார்யர் தானே அத்ருஷ்டத்துக்கு அபிமானிக்க வேண்டும்) -த்ருஷ்ட சம்பந்தம் –
இவை பார்த்து செய்ய வேண்டும் –

தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு  குழைந்து  போரவும் –
தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக் கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –

(அடியேன் சிறிய ஞானத்தன் நீசனேன் குறை ஒன்றுமிலேன் -என்று இருக்க வேண்டும் -வளர்த்ததனால் பயம் பெற்றேன் மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே -போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும் -ஆட்க்கொள்வான் ஒத்து என்னுயிர் உண்ட மாயன் -எதிர்விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே-இது பகவத் விஷயத்தில் இங்கு பாகவத விஷயத்தில் -பெரியநம்பி ராமானுஜர் கோஷ்ட்டியை வணங்கிய விருத்தாந்தம்)

—————————————————–

வார்த்தை -364-

மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் –
அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன அர்த்தம் ஏது என்று கேட்க –
சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே
மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான்

இருவர் ஆனவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும்
உடம்பு எடுக்கை பொல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் –
ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –

மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை –
ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம் அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –

(கீழ் சாமான்ய தர்மம் -அடுத்து கொஞ்சம் தேவலை -மூன்றாமவன் யாதாதத்ம்யம் அறிந்தவன்-ராம நாமம் செய்தால் என்ன புண்ணியம் செய்ய வேண்டும் என்றவனுக்கு பதிலாக -புண்ணியம் செய்தால் தான் ராம நாமம் சொல்வோம்)

—————————————————————

வார்த்தை -365-

வீர ஸு ந்தரனுக்கு பயப்பட்டு எம்பார் அடிமையான ஜகந்நாத ப்ரஹ்ம ராயருடைய வேச்யை மடத்திலே வந்து இருக்க –
இவளை அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு பயத்தாலே உடையவர் –
எம்பார் இவளை இங்கு நின்றும் போக விட வேண்டும் -என்ன –
எம்பாரும் பயார்தையான இவளை ரஷிக்கவே தர்மம் தானே (மடத்தை)ரஷிக்கும் –
எம்பெருமான் ரஷகன் என்னும் இடமும் – ஆஸ்த்ரீ பாலமும் அறியுமே –
அவனே ரஷகன் என்கிற அவதாரணம் அறிகைக்கு அன்றோ ஆசார்ய சேவை பண்ணுகிறது -என்று விண்ணப்பம் செய்தார் –

(அனைத்தில்லாரும் அறிந்து -உயிரை உடையவன் நாராயணன் என்றும் அறிவித்த எம்பெருமானார் போல் இந்த ஆய்ப்பெண்)

—————————————————————-

வார்த்தை -366-
வீர சிகாமணிப் பல்லவ ராயர் பட்டரை -ராஜ கார்யம் செய்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தித்து நல் வார்த்தை கேட்கப் போகிறதில்லை –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -என்ன –
கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளினார் –

பல்லவ ராயரும் தெரியாமையாலே கையைப் பிசைந்து நிற்க –
கடற்கரை வெளியிலே ஓர் அமிர்த கடல் போலே விட்டுக் கொண்டு இருக்க –
எதிர்கரையிலே பிணம் தின்னிப் பையல் ராவணன் விட்டு இருக்க
எழுபது வெள்ளம் சேனை உணர்ந்து கொண்டு பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கா நிற்க –
பிரக்ருதிமான்கள் ஆகையாலே கண் தூங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே –
பெருமாள் தாமும் தம்பியருமாக முதுகிலே ஆனவனாழிகையைக் (அம்புறாத் துணியைக்)கட்டிக் கையிலே தெரிந்து பெருக்கிப்-பிடித்த அம்பும் தாமுமாக -சில அண்டஜங்கள் முட்டை இட்டு நோக்குமா போலே எழுபது வெள்ளம் சேனையும் சூழ நடையாடும் மதிள் போலே சாரிகையாக வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய கையும் வில்லும் தஞ்சம் என்று ஸுகமே இரும் -என்று அருளினார் –

————————————————————————

வார்த்தை -367-

தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி –
உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன்
உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –

(ஞானம் அற்ற போதும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -அப்போதே ரஷித்தவன் ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு ரக்ஷிக்கச் சொல்ல வேண்டுமோ)

——————————————————–

வார்த்தை -368-

கடக்கத்தப் பிள்ளையைக் கடக்கத்தனொரு பிராமணன் –
உமக்கு தேக யாத்ரை நடக்கிறபடி என் -என்று  கேட்க –
ஸ்வ ரஷண விஷயமாக சித்திரை மாசத்திலே மூக்கு நீர் முன்னடியிலே விழ
ஏற்றம் இறைக்கிற உனக்கு இடுகிற எம்பெருமான்
ந்யஸ்த பரனாய் அணையிலே சாய்ந்து -சார்ந்து -கிடக்கிற எனக்கு இடச் சொல்ல வேண்டுனோ -என்றார் –

(உழவன் கிருஷி பாதி -பக்தி உழவன் பாதியாக -ந்யஸ்த பரனாய் இருக்க உதவச் சொல்ல வேண்டுமோ -ராதா கிருஷ்ணன் ஆய்ப்பாடியில் இன்றும் போர்வையும் உணவு வந்தவர்களுக்கு தந்து அருளுகிறான்-என்றே நம்புகிறார்கள் அங்கு)

————————————————————

வார்த்தை -369-

ஒரு பிராமணன் இறப்பில் நின்றும் விழ -அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள
பிராமணன் -ஆச்சான் -பெருமான் என்னைத் தள்ளினபடி கண்டீரே -என்ன –
அங்கன் அன்று காண் –கர்மத்தாலே நாம் விழுந்தோம் -பெருமாள் எடுத்தார் -என்று நினைத்து  இராய் -என்று அருளினார் –

———————————————————-

வார்த்தை -370-
ஒருநாள் திரு வீதியிலே பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் திரளாக எழுந்து அருளி இருந்து
பகவத் குண அநுசந்தானம் நடவா நிற்க –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -நாம் பண்ணின ஸுக்ருதம் கண்டதே – இப்படி இருக்கப் பெற்றோமே -என்ன
சிறியாச்சான் எழுந்து இருந்து -இது நெடுநாள் பெருமாள் ரஷகர் என்று சிஷித்தோம் –
இப்போது ஒரு ஸுக்ருத தேவர் உண்டாவதே என்றார் –
எம்பெருமான் ரஷகர் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று –
எம்பெருமான் ரஷ்யம் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று-எங்கனே என்னில்
ரஷகன் என்று இருந்தானாகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு சேராது –
ரஷ்யம் என்று இருந்தானாகில் ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு சேராது –

(கோபிக்கும் போதும் தண்டிக்கும் போதும் ஹிதம் என்றே எண்ணில் அவனை வெறுக்காமல் இருப்பது தான் அநந்யார்ஹ சேஷத்வத்த்க்கு பொருத்தமாய் இருக்கும்—சீறி அருளாய் -சீற்றமும் அருள் என்றும் இருக்க வேண்டுமே-மங்களாசாசனமும் நடக்க வேண்டும் -ஞான தசையையும் பிரேம தசையையும் மாறி மாறி வர வேண்டும் -)

(உன் தன்னை பிறவிப் பெரும் தனை புண்ணியம் யாமுடையோம் -அவனே புண்ணியம் -அவனது புண்ணியம் அல்ல)

————————————————————–

வார்த்தை -371-

எம்பெருமான் சாபேஷன்–
பிராட்டியும் ஆசார்யனும் பிரபன்னர்களும் சாபேஷ நிரபேஷர்கள் –

(உபாயாந்தர நிரபேஷன் பிரசித்தமாக இருந்தாலும் புருஷனையும் புருஷார்த்ததையும் எதிர்பார்ப்பதால் ஸாபேஷன் -பிராட்டியும் ஆச்சார்யர்களும் புருஷனை எதிர்பார்ப்பதால் ஸா பேஷமாயும் -வேறே புருஷார்த்தம் எதிர்பார்க்காமல் இருப்பதால் நிரபேஷமாயும் இருப்பார்கள்-ப்ரபன்னர் தம்முடைய யத்னத்தையும் பிறர் உதவியையும் உபாயாந்தரங்களையும் எதிர்பார்க்காமல் புருஷகாரம் சாபேஷாராய் இருப்பார்கள் -)

————————————————————

வார்த்தை -372-
ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளா நிற்க –
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன
சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் –
பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் – 

(ஆஞ்ஞா கைங்கர்யம்-விதித்தவை செய்யாவிடில் பிராயச்சித்தம் உண்டு -அநஞ்ஞா கைங்கர்யம் -பிரியத்துக்காக செய்பபை விடாமல் செய்ய வேண்டுமே -செய்யாவிட்டால் பிராயச்சித்தம் இல்லை –ஈஸ்வர அபிமானம் குறையாமல் பார்க்கக் வேண்டுமே)

——–

வார்த்தை -373-
முதலியாண்டான் திருவாய்மொழி ஓதுகிற போது –
உடையவர் எழுந்து அருளி இருந்து
ஒரு பாட்டு சந்தை இட்ட அளவிலே
இதினுடைய அர்த்த அநுசந்தானத்திலே பரவசரானார் –

(ஓதுவிக்கும் பொழுது காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா மயிர்க் கூச்சம் அறா என் தோள்களும் வீழ் யொழியா மாலுகளா நிற்கும் என் மனனே -பெரியாழ்வார் -5-3-5 ரீதியில் பரவஸமானத்தைக் காட்டுகிறது)

——————————————————

வரத்தை -374-
ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு
அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று எம்பாரை முதலிகள் கேட்க –
எம்பாரும் –
இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய
சௌந்தர்யம் இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ –

(உன்னைக் கண்ணாடிப் புறத்தில் நீ கண்டது இல்லையே இப்படி விஸ்லேஷம் நடந்தது)

எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும்
பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன –

நாங்கள் செய்வது என் -பஹவோ ந்ருப கல்யாண குண
புத்ரஸ்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பஸ்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –

———————————————————————–

வார்த்தை -375-

சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே
ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து விழுந்தாராம் –

————————————————————————

வார்த்தை -376-
முலைகள் இலையான  யுவதியைப் போலே காணும்
ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில் அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –

————————————————————————

வார்த்தை -377-
எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே
வேதங்களும் திருவாய்மொழியாய் வந்து அவதரித்தன –

(வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.-70–அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌)-எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

————————————————————————

வார்த்தை -378-
பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி
ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்
அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –

திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே –

கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –

—————————————————————————-

வார்த்தை -379-
(வார்த்தை–466)

அந்தர்யாமி அறியாதே அர்ச்சாவதாரத்தில் ஈடுபாடன் ஆகையாவது
ஏகாந்தத்தில் பர்த்தாவைப் பருஷித்துப் பரிஹரிப்பதாய்
ஓலக்கத்தே கொண்டாடும் பதி வ்ரதையைப் போலேயும்
திருப்பள்ளியறை இருட்டிக் கிடக்க திரு வீதியிலே அணி விளக்கு ஏற்றுமா போலேயும்
திருப்பள்ளியறை புல் எழுந்து இருக்க திரு வீதி சோதித்து அலங்கரிக்குமா போலேயும்
இருப்பதொன்று –

————————————————————————-

வார்த்தை -380-

ஸாஸ்த்ர விருத்தங்களான துர் விஷயங்களிலே சக்தனாகையும்
ஸாஸ்த்ரங்களுக்கு அவிருத்தங்களான ஸதா சாராதிகளில் விரக்தனாகையும்
ஸாஸ்த்ர விஹிதமாய் ஸ்வரூப அனுகூலமான அர்ச்சாவதாரங்களிலே அசக்தனாகையும்
இம்மூன்றும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான அனுகூலமான நித்ய ப்ரவ்ருத்தங்களுக்கு விருத்தங்களாய் இருக்கும் –

————————————————————————-

வார்த்தை -381–

வைஷ்ணவனுக்கு வஸ்தவ்யம் ஞான அர்த்தமாக ஓர் ஆச்சார்யன் ஸந்நிதியிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் திரு மாளிகையிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
மௌனியாய்க் கொண்டு ஒரு திரு முற்றத்திலே ஆனவளவு கைங்கர்யம் பண்ணி ஒதுங்கி வர்த்தித்தல் –

(ஒதுங்கி வர்த்தித்தல்-ஆஸ்ரயித்து கைங்கர்யம் பண்ணுவதே வாழ்வு வர்த்தித்தல்)

———————————————————————-

வார்த்தை -382-

நம்பி திருவழுதி நாடு தாஸர்க்கும்-பிள்ளை திரு நறையூர் அரையருக்கும்
பட்டர் அருளிச் செய்த வார்த்தை
உகந்து அருளின நிலங்களில் பொய்யே யாகிலும் புக்குப் புறப்பட்டது திரிய அமையும்
அந்திம தசையில் கார்யகரமாம் –

(பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி மெய்யே பெற்றொழிந்தேன்-5-1-1- கடைசி காலத்தில் பரம புருஷார்த்தத்தைப் பெற்றுத் தரும்)

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

———————————————————————-

வார்த்தை -383-

எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் –
அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இறே –
கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே
இம் முத்ரையாலே அநாத் யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –

(அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதாநீ –விஷ்ணு தர்மோத்தரம் -3-33-115-எம்பெருமானை உகப்பிக்கும் மேலான முத்திரை அஞ்சலி யாகும்-எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுமா போல்-அம் ஜலயதி –அகார வாஸ்யனை இருக்கும் –வேங்கடத்துறைவாருக்கு நம –கடமை அது சுமந்தார்கட்கே –வேங்கடத்துறைவார் முதலில் உத்சவராக இருந்தவர் -மலையப்ப ஸ்வாமி ராமானுஜர் பிரதிஷ்டை செய்தருளினார்)

——————————————————————

வார்த்தை -384-
அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம்
கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே அடைய எறும்பாய் இருந்தது –

இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .