ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -241-252–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -241-
தான் அனுபவிக்கையாவது -அவன் அனுபவிக்கை —அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே
வருந்திப் பெறுவாரும் இரந்து பெறுவாருமாய் இருக்கும் –
செஞ்சொற் கவிகாள் -திருவாய்மொழி -10-7—மங்க ஒட்டு உன் மா மாயம் -10-7-10-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -போலே–
ஆக பிராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

(ஆழ்வாரது திருமேனியை அவ்விடம் கொண்டு சென்று அனுபவிக்கப் பெறாமல் திரு உள்ள வருத்தத்துடன் ஆழ்வாரது ஆத்ம ஸ்வரூபத்தை கொண்டு சென்று அனுபவிக்கிறான் -அதே போல் சிந்தை மற்ற ஒன்றின் திறத்தல்லாத் தன்மை அடைந்த ஆழ்வார் திருவாறன்விளையில் அனுபவித்திலேயே மண்டி இருந்து அங்கு பேர் சொல்லவும் மாட்டாதே மற்று என்றும் அருளிச் செய்தாலும் ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -யாசித்து ஆழ்வாரைப் பெற்று அனுபவிப்பவனாய் இருக்கிறான் -இவரும் மருள் ஒழி நெஞ்சே என்று செல்கிறார்)

(எம்பெருமானாரை பேர் அருளாளனை இரந்து பெற்றான் அரங்கன் -சிந்தை மற்ற ஒன்றிலுமே இல்லா திறத்தில் அல்லாதஆழ்வாரை ஸ்ரீ வைகுண்டநாதன் திருவாறன் விளை எம்பெருமானை இரந்து பெற்றான் -)

—————————————————————————————

வார்த்தை -242-
பகவத் பரர் த்விவிதர் -முமுஷுகள் என்றும் புபுஷுகள் என்றும்
முமுஷுக்கள் தான் த்விவிதர் -பகவத் சரணாகதர்களும் கைவல்யார்த்திகளும்
பகவத் சரணாகதர்கள் த்விவிதர் -உபாசகரும் பிரபன்னரும்
பிரபன்னர் த்விவிதர் -ஆர்த்தரும் த்ருப்தரும்
ஆர்த்த பிரபன்னர் த்விவிதர் -சம்சாரம் அடிக் கொதித்தவர்களும் -பகவத் அனுபவம் பெற்றால் ஒழிய தரிக்க மாட்டாதாரும் –

(பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ)

—————————————————————————————–

வார்த்தை -243-
வ்யதிரிக்தங்களை விட்டு அவனைப் பற்றுகை வைஷ்ணவன் ஆகையாவது –
தன்னை விட்டு அவனைப் பற்றுகை ஏகாந்தி யாகை யாவது –
அவனை விட்டு அவனை பற்றுகை பரமை காந்தியாகை யாவது -அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பற்றுதல் –

(உபாயத்தில் கண் வைக்காமல் உபேய ஏக பரராய் இருக்க வேண்டுமே-உபாயாந்தரங்களைப் பற்றி அவனைப் பற்றவது வைஷ்ணவன் – அவனைப் பற்றி பிரயோஜனநாந்த்ர பரர் அல்லாமல் -அவனை அடைவது ஏகாந்தி -)

——————————————————————————————

வார்த்தை -244-
அம்மங்கி அம்மாள் வார்த்தை –
உடம்பைப் பற்றி சோறு தேடுவாரும்
உறவு முறை பற்றி சோறு தேடுவாரும்
உடம்பரைப் பற்றி சோறு தேடுவாரும் -(உடம்பர் உடம்புடன் உள்ள ஆத்மா- பற்றி கைவல்யார்த்திகள்)
உடம்பர்களைப் பற்றி சோறு தேடுவாரும்(புண்ய கார்யங்கள் செய்பவர்)
லோகத்தைப் பற்றி சோறு தேடுவாரும்
உயிரைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனைப் பற்றி சோறு தேடுவாரும்
அவளைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாருமாய்- இறே இருப்பது –(அவர்கள் ஆனந்தம் கண்டு ஆனந்திக்கவும் வேண்டுமே ஆகவே தன்னையும் இங்கு சேர்ந்தது)

(தேஹாத்ம அபிமானிகளாய் இருந்து உடம்புக்கும் உறவு கொண்டாருக்கும் இஹ லோக ஐஸ்வர்யத்துக்கும் ஸ்வர்க்காதி ஐஸ்வர்யத்துக்கும் பாடுபடுபவர்களும் -உலக நன்மைக்கு பாடுபடுபவர்களும் கைவல்யார்த்திகளும் -மிதுனத்தைப் பற்றி வைத்து ஐஸ்வர்யார்த்திகளாய் இருப்பவர்களும்- பெருமானை மட்டுமே பற்றி பேற்றை பிரார்த்திப்பார்களும் -பிராட்டியை மட்டுமே பற்றி பேற்றை பிரார்த்திப்பார்களும்- மிதுனத்தைப் பற்றி பேற்றை பிரார்திப்பார்களும் -ஸ்வார்த்தமாக பேறு -பரார்த்தமாக பேறு -இவ்வாறு மேல் மேல் உயர்ந்த நிலைகள்)

——————————————————————————————–

வார்த்தை -245-
கலக்கத்தோடு கூடின தேற்றம் ப்ரதம அதிகாரிக்கு
தேற்றத்தோடு கூடின கலக்கம் சரம அதிகாரிக்கு –

(பிரதம அதிகாரிக்கு ஸாம்ஸாரிக கலக்கத்துடன் பகவத் விஷய ஞானத்தை உண்டான தெளிவு உணவு -சரம அதிகாரிக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தினால் அஸ்தானே பயஸங்கை உண்டாகி அவனுக்கு என் வருகிறதோ என்கிற கலக்கம் உண்டு-இவனுக்கு ப்ராப்த விஷயத்தில் கலக்கம்-பொங்கும் பரிவு -ஞான விபாகத்தால் வரும் அஞ்ஞானம் அடிக்கழஞ்சு பெரும்)

———————————————————————————————

வார்த்தை -246-

நஞ்சீயருக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
உபாயாம்ச நிரூபகர் த்ரிவிதர் -எங்கனே என்னில் –
கர்ம ஞான நிஷ்டர் என்றும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டர் என்றும் -சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டர் என்றும் –
இதில் சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -கர்ம ஞாநாதி நிஷ்டனை அருவருக்கும் –
சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டன் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டனை அருவருக்கும்

கர்ம ஞாநாதி நிஷ்டன் கர்ம பரிபாலன பங்கம் பிறக்கிறதோ என்று கலங்கிக் கொண்டு போரும்
சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -சித்த சாதன பரிபாலன பங்கம் பிறக்கப் புகுகிறதோ -என்று கலங்கிக் கொண்டு போரும் –
சித்த உபாயாந்தர்க்கத -தத்வ -நிஷ்டன் சித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு போரும் –(கலக்கத்துக்கு ஹேதுவே இல்லையே -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் ஒன்றே கர்த்தவ்யம்)

(மூன்றாம் வகை -எம்பெருமான் நம்மைப் பற்றும் பற்றே உபாயம் என்றும் உணர்வது அவன் அபிமானத்தில் அடங்கி இருக்கும் -பரகத ஸ்வீ கார நிஷ்டர்-ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனேயாய் இருக்க-அவன் திருமுக விகாஸமே பேறாகக் கொண்டு மார்பிலே கையை வைத்து கவலையும் கலக்கமும் அற்று ஸித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு இருப்பர் -)

—————————————————————————————–

வார்த்தை -247-

திருச் சங்கணித் துறை நம்பிக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
முமுஷு சேதனகதமான ஜ்ஞானம் த்ரிவிதம்
உபாசநாத்மக ஜ்ஞானம் -என்றும் -ப்ரபதநாத்மக ஜ்ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் என்றும் –
உபாசநாத்மக ஜ்ஞானம் உடையவன் -உபாஸ்யன் பக்கலில் தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை  அவனுக்கும் தனக்கும் என்று இருக்கும் –
ப்ரபதநாத்மக ஜ்ஞானம் உடையவன் பிரபத்தவ்யன் பக்கலிலே தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை அவனுக்கே என்று இருக்கும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -போலே உனக்கே நாம் ஆட் செய்வோம் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவன் ஸ்வ தஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான வ்ருத்தியை ஸ்வயம் ஸ்வ கார்யம் என்று இருக்கும் –
இவற்றுக்கு உதாஹரணம் பதிவ்ரதை மாங்கல்ய ஸூத்ரம் பெருகினால் பந்திக்கும் போது பர்த்தாவினுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஹேது வாக்காமல்
தன்னுடைய அநர்த்த வ்ருத்தி என்று நினைத்து இருக்குமா போலே –

(சொத்தான நாம் ஸ்வாமியின் திருமுக விலாஸத்துக்காகவே கைங்கர்யம் செய்வதே கர்த்தவ்யம் கடமை என்று கைங்கர்யம் செய்ய வேண்டும் -இதற்கு த்ருஷ்டாந்தம் பதிவிரதையான ஸ்த்ரீக்கு மங்களஸூத்ரம் அறுந்து போக மறுபடி கட்டிக்கொள்ள நேர்ந்தால் தனக்கு அறியாமல் செய்த தவறே காரணம் -என்று எண்ணுமா போல் -)

——————————————————————————————–

வார்த்தை -248-
நம்பிள்ளை வார்த்தை
ஆத்ம சமர் -பிராண சமர் -திருஷ்டி சமர் -பாஹூ சமர் –
ஆபரண சமர் -ஆயுத சமர் -பாத சமர் -பாத ரேகா  சமர் -பாத ரஷா சமர்-சாயா சமர் –

(அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்வதாலும் -பிரித்துப் பார்க்க முடியாமை இருப்பதாலும் -எப்போதும் பின்னால் தொடர்பவனாக இருப்பதாலும் இவ்வாறு சொல்லலாம் அன்றோ -)

———————————————————————————————

வார்த்தை -249-

சர்வேஸ்வரனைப் பற்றுமவர் ஷட் விதர் -அவர்கள் ஆகிறார் –
உத்தமன் -உத்தம ப்ராயன் -மத்யமன் -மத்யம ப்ராயன் -அதமன் -அதம ப்ராயன்
உத்தமன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமானே தனக்கு எல்லா உறவும் என்று இருக்குமவன் –
உத்தம ப்ராயன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமான் பக்கல் உபஜீவாம்ச்யதுக்கு விரை கட்டுமவன்
மத்யமன் ஆகிறான் மாதவ வைஸ்வர்யதுக்கு மஹானான தபசு பண்ணுபவன்(கைவல்யனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் உண்டு அவை பகவத் கைங்கர்யத்துக்கு உதவாதே)
மத்யம ப்ராயன் ஆவான் -மாதவனைப் பெற்றும் வகுத்த வாழ்வு அறியாதவன்
அதமன் ஆவான் -அம்மானைப் பெற்று அன்னத்தை பற்றுமவன்
அதம ப்ராயன் ஆவான் -அம்மானைப் பெற்றும் அல்லாதாரை பற்றுமவன் –

———————————————————————————————-

வார்த்தை -250-
கந்தாடை யாண்டான் வார்த்தை –
பிரபத்தி நிஷ்டர் மூவர் –சப்த நிஷ்டரும் –அர்த்த நிஷ்டரும் –அபிமான நிஷ்டரும் –

(த்வயத்தில் ஊன்றி இருக்கும் பாகவத அபிமானமே உத்தாரகம் என்றும் இருப்பவர்களே ஸ்ரேஷ்டர் என்றபடி)

———————————————————————————————–

வார்த்தை -251-
அஜ்ஞ்ஞான தசை கும்பகரணனைப் போலே –
தேவதாந்தர பஜனம் பண்ணுகிற தசை ராவணனைப் போலே –
பக்தி தசை சூர்பணகை போலே –
பிரபத்தி தசை ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –என்று நம்பிள்ளை –

————————————————————————————————

வார்த்தை -252-
சர்வ யோக சந்நியாசி -திரு மழிசைப் பிரான்(சாக்கியம் கற்றோம் இத்யாதி -பாக்யத்தால் செங்கண் திருமாலைச் சேர்ந்தோம்)
சர்வ உபாய சூந்யன் -நம் ஆழ்வார்(கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்)
உண்டு உபவாசி -திருமங்கை ஆழ்வார்
சர்வ சங்க பரித்யாகி -எம்பெருமானார் -(தண்டு பவித்ரம் தவிர மற்றவற்றை விட்டார்)

—————————————————————————-———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply