ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -301-312–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -301-
திருவழுந்தூராள் ஒரு ஸ்த்ரி சோழதிவாகரர் ஸ்ரீ பாதத்திலே நல் வார்த்தை கேட்க
வேணும் என்று வர –
அவர் பிரக்ருதிமான்கள் சொல்லும் வார்த்தையை சொல்ல –
ஊருகிறத்துக்கு (சம்சாரமாகிய பாம்பு)அஞ்சி உள்ளே புகுந்த என்னை உயிர்க் கழுவிலே வைத்தீரே -என்று அவள் சொல்ல –
பரீஷித்தோங்காண் என்று நல் வார்த்தை சொன்னார் –

கடக்கத்தப் பிள்ளை- மின்னலுக்கு அஞ்சி மரத்தடியை அடைந்தவர்களை அந்த மரம் இடியின் கையிலே காட்டிக் கொடுத்தது போல் –சம்சாரத்தில் அஞ்சி ஆச்சார்யர் இடமும் போக தேக சுகத்துக்கு ஆளாக்குகை-ஸம்ஸாரத்துக்குப் பயந்து அத்ருஷ்டம் சேர்ந்தவர்களை-(ஆச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கினவர்களை )- தேக வஸ்யராக்குகைக்கு த்ருஷ்டாந்தம் -)

(மின்னல் தாங்கி இல்லாமல் இடி தாங்கி தான் உண்டு)

—————–

வார்த்தை -302

ஸ்த்ரீ தேகம் கண்ட விஷய ப்ராவண்யனுக்கு பகவத் விஷயத்தில் அன்வயம் இல்லை -பகவத் விஷயத்தில் அன்வயம் உள்ளவருக்கு விஷயாந்தர ப்ராவண்யம் வாராது
(மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் கைவிடுவான் அன்றோ
அவனைப் பற்றி இத்தைக் கேட்பார் அதமத்திலும் அதமர் அன்றோ )

—————————–

வார்த்தை -303

அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்
உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –

———————–

வார்த்தை -304-
சோமாசி யாண்டான் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம்
தன்னை (ஸ்வரூபம் -அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய உபாயத்வம் -அநந்ய போக்யத்வம்)உணர்ந்தாலும் கூடாது
தன் சத்தையை உணர்ந்தாலும் கூடாது
சம்பந்தத்தை உணர்ந்தாலும் கூடாது
சரீரத்தை உணர்ந்தாலும் கூடாது
என்று அருளினார் –

————————————————

வார்த்தை -305-(பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த வார்த்தை)
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் –
அழுந்திக் கிடந்த நாளிலே கரணங்களைத் தந்தீர் – அக் கரணங்களைக் கொண்டு வியபிசரியாத படி ஆச்சார்யரைக் கொண்டு அங்கீ கரித்தும் அருளினீர் -நாம ரூபங்களை தந்தீர் -உபகார ஸ்ம்ருதி -நாம ரூபங்களை உகந்தீர் -அர்ச்சை அவதாரமாக -தமர் உகந்த உருவம்-விஷயாந்தர ப்ராவண்யம் மிக்கு பர நிந்தையே யாத்ரையாகப் போந்த அடியேனை த்வயம் -மந்த்ர ரத்னம் -அநவரதம் அநுஸந்திக்கும்படியும் அருளினீர் -தேவரீர் அருளிய ஏற்றம் ஜென்ம பரம்பரைகள் தோறும் பிறந்து த்வயத்தை உச்சரிக்கும் படியாக வரும் ஏற்றம் பண்ணி அருளினீர் -இவ் வேற்றம் எல்லாம் கீழ்ப்பட்டு பிரகிருதிக்கே- உடம்புக்கே -ஆசை பட்டு விஷயாந்தரம் பற்றி உழன்று இருந்தாலும்-தேவரீர் திரு உள்ளமாகில்-கர்மங்களையும் அறுத்து- அதிகாரி சம்பத்தையும் கொடுத்து அருளுவீர் -தேவரீர்  என் நினைந்திருந்தீர் என்றே இருக்கும் அடியேன் -நிர்பந்தம் பண்ண மாட்டோம் -என்று அனுசந்திக்க வேண்டும் -ஆச்சான் பிள்ளை வார்த்தை

—————————————————–

வார்த்தை -306-
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் -அத்வேஷம் தொடங்ககி ஆத்ம குணங்களைப் பிறப்பித்தது அருளி-ஆச்சார்யர் திருவடிகளில் சேர்த்து அருளினீர்- சம்சார சம்பந்தத்தையும் கழித்து -ஸர்வ அபராதங்களையும் பொறுத்து அருளினீர் (கத்ய த்ரயம் போலவே இங்கும் )-பிரகிருதி சம்பந்தத்தை கழித்து அருளினீர் -சர்வ அபராதங்களையும் பொறுத்து அருளினீர்-அர்ச்சிராதி மார்கத்தையும் பரமபதத்தையும் குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மபாவி நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினீர்- சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனே தேவரீர் செய்து அருளினபடி என் தான் என்று நம்பிள்ளை அநு சந்தானம் –

(இங்கேயே இருந்தாலும் ஆழ்வார் திருவடி பலத்தால் -மாறன் சொல் வேராகவே விளையும் வீடு-நாமும் அநவரதம் இந்த உபகார ஸ்ம்ருதியுடன் இருக்க வேண்டும்)

—————————————————–

வார்த்தை -307-
அநந்ய பிரயோஜனன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்ரம் அல்லேன் –
ஆர்த்த பிரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்கு பாத்ரம் அல்லேன் –
ப்ராமாதிகம் அல்லாமையாலே ஷமைக்கு பாத்ரம் அல்லேன் –

உபகாரகன் என்று உகந்தீர்
அனந்யன் என்று இரங்கினீர்
அவர்ஜீயன் என்று பொறுத்தீர் –
-என்று ஆச்சான் பிள்ளை நைச்ய அனுசந்தானம் –

(எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்று சதாசார்யர் பரம்பரை மூலம் வந்த அர்த்தங்களை சொல்லி சேதனர்களைத் திருத்தி நமக்கு ஆக்கின உபகாரகன் என்றும் உகந்தீர் -அநந்ய கதி என்று இரங்கினீர் -சதாசார்யனை முன்னிட்டு நம்மைப் பற்றினவனாகையால் விலக்க ஒண்ணாதவன் என்றும் அபசாரங்களைப் பொறுத்தீர் -)

——————————————————-

வார்த்தை -308-

ஸ்ரீ வைஷ்ணவனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடப் புக்கால்–
ஆசார்ய வைபவம் இருக்கும் படியே –
உடையவர்கள் செய்யுமதுக்கு கேள்வி உண்டோ-என்றும் அவர்கள் அருளிச் செய்கையாலே
உண்டாகக் கடவது என்றும் -நினைக்கக் கடவன் –

(அமுதனார் ராமானுஜ நூற்றந்தாதியில் ஆழ்வார்கள் திருவடி சம்பந்தம் கொண்டு எம்பெருமானாரைப் புகழ்ந்தது போல்-எம்பாரைக் கொண்டாட ஆம் தகும் என்றார் அன்றோ -அவை எல்லாமே எம்பெருமானார் வைபவத்தாலே வந்ததாகையால் மறுக்கப் போகாதே)

——————————————————-

வார்த்தை -309-
ஓர் அதிகாரியானவன் சம்சாரி பரிபவிக்கும் போது அநு சந்திக்கும்படி நாலு வகையாய் இருக்கும் –
அவையாவன –
1-நாயனும் அடியானும் ஆனால் -அடியானுக்கு பிறந்த பரிபவம் நாயன் அன்றோ ஏற்றுக் கொள்வான் -என்று-அவன் தலையிலே வைத்து தாந்தனாய் இருக்கை —

2-இவன் பண்ணின பரிபவம் தேக ஸ்பர்சியோ ஆத்ம ஸ்பர்சியோ என்று விவேகித்து –
ஆத்மா ஞானாந்த ஸ்வரூபி ஆகையாலே -இப் பரிபவத்துக்கு விஷயம் அல்லன் –
இனி தேகம் இறே பரிபவ விஷயம் –

3-இதுதான் அஸூஸிகளுக்கு எல்லாம் கொள்கலம் ஆகையாலே இதினுடைய தோஷம் எல்லாம்-இவனால் சொல்ல முடியாது இல்லை இறே -என்று வெறுப்பு கேட்டு இருக்கை

4-நாம் இத் தேகத்தின் வாசனையாலே உபாதேயப் புத்திப் பண்ணி போருகையாலே இதினுடைய ஹேயதையை இவன் பரிபவ உக்தியாலே உணரப் பெற்றோமே என்று அவன் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணி இருக்கை

ஒரு வைஷ்ணவன் பிரக்ருதியை பரிபவித்தால் –
இவனுக்கு ஈஸ்வரன் அநர்த்தத்தை சிந்திக்கிறானோ என்று கிருபை பண்ணி இவ்வநர்த்தம் வாராதபடி திருவடிகளிலே சரணம் புகுவான் –

(ஸ்ரீ வைஷ்ணவன் இல்லாமல் வைஷ்ணவன் என்றது ரூப நாமங்களில் மாத்திரமே வைஷ்ணவனாய் ஸம்ஸாரி ஸ்வ பாவம் கழியப் பெறாதவனாய் இருப்பவன் என்று கொள்ள வேண்டும் -)

குற்றம் செய்தவர் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி -365-

(1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை-யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால்  செய்யலாவது ஓன்று இல்லை இறே  –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியை பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே –இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு -ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் –
தனக்கு பிரதி கூலங்களாகவும் – நினைத்து இருக்கையாலே -தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல் – தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல் -செய்தால் உகக்குமா போலே – அவர்கள் அளவில் பிறக்கும் -ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும் -நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான செறுப்புக்களை செய்தும் -இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும் – க்ருதக்ஜ்ஜை – நடக்க வேணும் -என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-)

——————————————————-

வார்த்தை -310-

ஸ்ரீ வைஷ்ணவர் பரிபவத்தில் அனுசந்திக்கும் படி –
இவர் நமக்கு கழுத்துக்கு மேலாக உறவு பண்ணி விடாதே –
அபிமாநித்த இத்தாலே சிஷா ரூபமாக சொல்லப் பெற்றோமே -என்று –
இவருக்கு அடிமையான ஸ்வரூபம் உஜ்ஜீவித்தது -என்று க்ருதார்த்தனாவான் –

—————————————————–

வார்த்தை -311-
ஸ்ரீ வைஷ்ணவன் (உண்மை பேசுபவர் முக ஸ்துதி பண்ணுவர் அல்லர்)ஸ்தோத்ரம் பண்ணினால் நமக்குள்ள குணங்களைச் சொன்னான் என்று -உகக்கக் கடவன் அல்லன் –
இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொன்னான் என்று வெறுக்கக் கடவன் அல்லன் –

சீற்றத்துக்கு விஷயமான நம்மைக் குறித்து – நிர்ஹேதுகமான பிரசாதித்த படியால் உகந்து –
இவர் சொன்ன குணங்கள் நமக்கு முன்பு இல்லையாகிலும் –
இவர் பிரசாதத்தாலே மேல் உண்டாகக் கடவது -என்று விஸ்வசித்து இருப்பன் –

சம்சாரி (முக ஸ்துதி பண்ணுவர் )ஸ்தோத்ரம் பண்ணினால் –
அடியானவனுடைய ஸ்தோத்ரதுக்கு உகப்பான் நாயன் (ஸ்வாமி சொத்தை யுடையவன்)அன்றோ -என்று தான் அதில் அந்வயம் அற்று சாந்தனாய் இருப்பன் –
இவனுடைய ஸ்தோத்ரம் தேக ஸ்பர்சியாய் தோன்றின போது தேகத்தில் இக் குணங்கள் இல்லை –இவன் தன் வாசனையாலே பிரமித்தான் இத்தனை –இக் குணங்கள் ஆத்ம ஸ்பர்சி அன்று -என்று இருப்பன் –

———————————————————–

வார்த்தை -312-
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –
நீர் ஒருகாலும் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போருகிறீர் இல்லை(வருந்துபவர் -உபேக்ஷை உடையவர் அல்லர்)
இதுக்கடி உற்றானான எம்பெருமான் பக்கலிலே உறுதியை உணர்ந்தோ –
அன்றியே உம்முடைய பக்கல் உண்டான உறுதியை உணர்ந்தோ என்று கேட்க –

அடியேனுக்கு இவை இரண்டும் உண்டோ –
உள்ள உறவு இத்தனையும் உடம்போடு வந்த ஊற்றத்தால் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய –

எம்பாரும் இது கேட்டு க்ருதார்த்தராய்(ஸமாநாதராய் உகந்தவராய்) -நீர் இங்கனே சொல்லுவான் என் –
ஆழ்வான் உடன் உண்டான குடல் துவக்காலே -அந்தரங்கமான அர்த்தங்களை ஆராயும்படியான ஆகாரங்களை உடையீர் –
உடையவரால் உண்டான ஞானம் உடையீர் –அதடியாக எங்கள் உடன் உண்டான உறவு அறிவீர் –
இப்படி இருக்க எங்களை நீ இங்கன் உளைப்பிக்கலாமா –
இவ் வாகரங்களிலே உமக்கு உண்டான உறவு உறுதி சொல்லீர் -என்று உறுத்திக் (நிர்பந்தித்து)கேட்க –

பட்டர் விண்ணப்பம் செய்தபடி -என்னுடைய உயிருக்கு உடைமை யாகை  அன்றோ உறுதி யாவது –அங்கன் அன்றியே இவ் உயிருக்கு உறுதி உண்டாகில்-அவ் உயிருக்கு உறுதி உண்டோ – ஆகையால் அவ் உயிரை உணர்ந்த ஆனந்தத்தாலே பிறந்த உறுதி அன்றோ – உண்டாகில் உள்ளது –(பரமாத்ம ஸ்வரூபம் -இத் தத்துவம் அவன் அன்றி இல்லை என்றும் உணர்ந்த உறுதி)என்று விண்ணப்பம் செய்ய –

(இது மட்டுமே போதாதே -கோவிந்த ஸ்வாமிக்கும் பிரகிருதி ஆசை உள்ளது அறிந்து அனுபவித்து பின்பே வாரும் என்றும் அருளிச் செய்தார் அன்றோ)

எம்பாரும் இதில் ஒரு குறை இல்லை -சொன்னபடி அழகிது -ஆனாலும் அவ் விஷய ஸ்பர்ஸத்தை உணர்ந்த ஆனந்தத்திலும் காட்டிலும் இவ் விஷயத்தில் அனாதர அதிசயம் காணும் அபேஷிதமாய் இருப்பது –ஆகையால் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போரீர் -என்று அருளிச் செய்ய –

பட்டரும் கிலேச ஹேதுவான பிரக்ருதியை உணர்ந்து சோகிக்க தொடங்கினார் –
எம்பாரும் அருளிச் செய்த கார்யம் பலித்ததே என்று ப்ரீதரானார் –

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -உபக்ரமித்து -மயர்வற மதிநலம் அருளப் பெற்றும் -இனி இனி இருப்பதின் கால் அழுதார் அன்றோ)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply