ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -349-
நம்பிள்ளையை -ஒருவன் எம்பெருமானை ஒழிய தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள் –
நித்ய நைமித்திகாதிகளில் -அக்நி இந்திராதிகளை பஜிப்பான் என் –
ஆலயத்தில் பஜியாது ஒழிவான் என் -என்ன –
அக்நி ஹோத்ராதிகளில் அக்நியை உபாசித்தும் ஸமஸாந அக்நிகளை நிவர்தித்தும் போகிறாப் போலே —
இரண்டு இடத்துக்கும் வாசி எங்கனே என்னில் –
நித்யாதிகளில் பகவத் ப்ரகார புத்த்யா பண்ணுகிற உபாசநம் -பகவத் உபாசநமேயாக விதிக்கையாலும் –
அவற்றினுடைய பிரதிஷ்டைகளில் பர அபர தத்வ ப்ரத்யயம் பண்ணி இருக்கும்
தாமஸ புருஷர்களாலே வேத வ்ருத்த ஆகம மந்த்ர ப்ரகிரியையாலே
ஸ்வ தந்தரமாக தேவதாந்த்ரங்கள் க்ருத ப்ரதிஷ்டிதம் ஆகையாலும் –
இவ் விடத்தில் பகவத் ப்ரகார புத்யயா உபாசிக்க விதி இல்லாமையாலும்
தேவதாந்தர வர்க்கங்களில் தூரதோ வர்ஜநீயத்வம் ருத்ரனுக்கு உண்டு –
எங்கனே என்னில் –
சத்வஸ்தருக்கு அத்யந்தம் விரோதியான தம ப்ராசுர்யத்தாலே –
நித்யாதிகளில் போலே ஆலயங்களிலும் பகவத் ப்ரகாரா புத்யயா உபாசிக்கலாமோ என்ன –
அப்படி உபாசிக்க விதி இல்லாமையாலே ஆகாது –
த்யாஜ்யதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் ஸ்வீ காரத்துக்கு உடலாகவும் –
உபாதேயதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் விஷயம் த்யாகத்துக்கு உடலாகவும் கடவதோ
என்று அருளிச் செய்தார் –
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூம் தாமம் -திருவாய்மொழி -2-8-6-என்கிற
பாட்டில் ப்ரஸ்துதமான தேவதாந்தர பஜனம் அர்ஜுனனுக்கு ருத்ரன் பக்கலிலே
ஓர் அஸ்தர லாபத்துக்காக பகவந் நியோகத்தாலே வேண்டிற்று -எம்பெருமானால் நியமிக்க பெற்ற பூஜை –
(தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-பாசுபத அஸ்திரத்துக்காக த்யானம்-)
—————————————————
வார்த்தை -350-
ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது -மூன்று பிரகாரமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
சத்கார யோக்யர் என்றும் -சஹ வாஸ யோக்யர் என்றும் -ஸதா அநுபவ யோக்யர் -என்றும் –
சத் கார யோக்யர் -ரூப நாம ப்ரதானர் -உச்சாரண ப்ரதானர் -அபிமான ப்ரதானர் –
சஹ வாஸ யோக்யர் -ஜ்ஞான ப்ரதானர் -அனுஷ்டான ப்ரதானர் -அங்கீகார ப்ரதானர் –
ஸதா அநுபவ யோக்யர் -ஆர்த்தி பிரதானர் -அபி நிவேச பிரதானர் -அபி ருசி பிரதானர் -என்று
ஆட் கொண்ட வில்லி ஜீயர் –
(ஸத்காரம் செய்ய மட்டுமே யோக்யதை – கூடிய வாழ தகுதி இல்லாதவர் -ரூப நாமங்கள் மட்டுமே தரித்து ஆத்ம குணங்கள் இல்லாமல் அனுஷ்டானங்களும் இல்லாமல் இருப்பவர்கள் – திருமந்ரார்த்தத்தில் ஊன்றாமல் -வைஷ்ணவன் என்று கர்வம் கொண்டிருப்பார்கள் -உத்தம அதிகாரிகளிடமுள்ள ஆர்த்தி அபிநிவேசம் அபிருசி-பெருத்த ஈடுபாடு – இல்லாதவர்கள் -ஸதா அனுபவ யோக்யர் –ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ர வாந் -ஸதா பர குணாவிஷ்ட த்ரஷ்டவ் யஸ் ஸர்வ தேஹிபி -விஷ்ணு தத்வம் -உடலைப் படைத்த பயன் இவர்களை அனுபவிப்பதே -)
(மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே என்னை உள்ளபடி -ப்ராப்ய ப்ராபகங்களாக இருப்பவன் என்று-அறிகிறான்)
———————-
வார்த்தை -351-
வைஷ்ணவன் ஆகையாவது -தத்வ ஜ்ஞான நிஷ்டனாகை –
தத்வ ஜ்ஞானம் தான் -ஆசார்ய விஷயீ கார லப்யம் –
ஆசார்ய விஷயீ காரம் தான் -தத்வத்தை நாமறிய வேண்டும் என்னும் அபிநிவேச
அதிசய பூர்வகமாக பஜன லப்யம் –
இந்த இச்சைக்கு முதலடி பகவத் விஷயத்தில் அத்வேஷம் –
அந்த அத்வேஷதுக்கு காரணம் பகவத் கடாஷம் –
பகவத் கடாஷத்துக்கு ஹேது என் என்னில் –
இஸ் சம்ஸார சேதனனுக்கு அநாதியாக
எம்பெருமான் பக்கல் த்வேஷ தூஷிதத்வம் உண்டாகையாலே அவன் பார்த்து அருளுகைக்கு ஈடாக ஓன்று செய்யக் கூடாமையாகையாலே பகவத் நிர்ஹேதுக கடாஷம் –
ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் -இச் சேதனனுக்கு அஜ்ஞாதமான அநந்ய பிரவ்ருத்தி களிலே பிறப்பன சில ஸூக்ருதம் அடியாக
பார்த்து அருளுகிறான் ஆகையாலே வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராது –
இங்கனே இருப்பதொரு ஸூ க்ருதம் அடியாய் இருக்க
நிரஹேதுகம் ஆவான் என் என்னில் –
விழ விட்டு மறந்து போன பொருளை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தவனை –
நம்மதை நமக்குத் தந்தான் என்று இராதே –
இவன் நமக்குத் தந்தான் என்று இருக்கும் க்ருதஜ்ஞதை போலே –
தன் தலையிலே ஒன்றும் இன்றியிலே இருக்க -எம்பெருமான் பார்த்து அருளினான் என்று
க்ருதஜ்ஞனாய் இருக்கிற இவ்வதிகாரி அபிசந்தியாலே நிர்ஹேதுகம் என்கிறது –
இந்த யாத்ருசிக ஸூ க்ருதம் என்கிறதுக்கு அடி சௌஹார்த்தம் –
அவனுக்கு சர்வாத்ம விஷயமாக எப்போதும் உண்டாய் இருக்க -ஒருத்தனுக்கு
ஒருகாலாக யாத்ருசிக ஸூக்ருததை உண்டாக்குவான் என் என்னில் –
நெடும்காலம் அனுபவித்து போந்ததொரு பாபம் சுருக்கம் ஒழிய தொலைந்த அளவிலே
இந்த சௌஹார்த்தம் இவனுடைய யாத்ருசிக ஸூக்ருததுக்கு அடியாம் –
ஜபாகுஸூமச் (செம்பருத்திப் பூ)சாயை பதார்த்தங்கள் எல்லாம் கிடக்க -பளிங்கிலே பிரதி பலிக்குமா போலே-அச்சபாபனான அதிகாரி (தேய்ந்த -ஷீணித்த பாபத்தால் –தூய்மையான உள்ளம்)பக்கலிலே சௌஹார்த்தம் பலிக்கக் கடவது-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
யாதிருச்சா ஸூஹ்ருதம்
விஷ்ணோ கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாத்விக சம்பாஷணம்
ஆச்சார்ய பிராப்தி )
(நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்–ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த–ஸாமக்ரீ பரம்பராநாதம்-)
———————————————————-
வார்த்தை -352-
ஒருவன் தன்னை வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கலாவது
எவ்வளவு ஜ்ஞானம் பிறந்தால் -என்று பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
பகவத் பாகவத விஷயங்களிலே ஒரு உச்சாராயம் கண்டால் நெஞ்சு சிவீல்
என்று இருந்தது இல்லை யாகில் (பொறாமை வராமல்)தன்னை -வைஷ்ணவன் என்று இருப்பது –
சிவீல் என்று இருந்தது ஆகில் நமக்கு எம்பெருமானோடு உறவு இல்லை யாகாதே –
சம்பந்த ஜ்ஞானம் பிறந்தது இல்லை யாகாதே என்று நினைப்பது இருப்பது என்று
அருளினார் –
———————————————————
வார்த்தை -353-
த்ருஷ்டத்துக்கு நாக்கு நீட்டாது ஒழிகையும்
அத்ருஷ்டத்துக்கு கை நீட்டாது ஒழிகையும் காண் –
வைஷ்ணவ லஷணம் -என்று நம் பிள்ளை வார்த்தை –
(நாக்கு நீட்டுதல் -ஆசைப்படுதல் -கை நீட்டுதல் -முயலுதல்)
———————————————————–
வார்த்தை -354-
ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது
சர்வ உபாய சூன்யதையோ -இதர விஷய வ்ரக்தியோ -சித்த உபாய ஸ்வீகாரமோ -பகவத் பிரேமமோ -என்று கேட்க –
சர்வ உபாய சூன்யதை சம்சாரிக்கும் உண்டு -இதர விஷய விரக்தி ஷபணனுக்கும்(ஜைனனுக்கும்) உண்டு –
சித்த உபாய ஸ்வீகாரம் கேவலனுக்கும் உண்டு -பகவத் ப்ரேமம் ஏகாயநனுக்கும் உண்டு –
ஆகையால் இவை இத்தனையும் அன்று –
இவற்றோடே கூட- பகவத் அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தாலே பிறப்பதொரு தாந்தி விசேஷம் –அதாவது -பரிபவத்தில் நிர் தோஷ அநுசந்தானம் -நிர் பரத்வ அநுசந்தானம் -உபகார ஸ்ம்ருதி –இரக்கம் என்று அருளிச் செய்தார்-(சாந்தி தாந்தி மன புலன்கள் அடக்கம்-நாம் பண்ண வேண்டிய நம்முடைய தோஷ அனுசந்தானம் இவர் பண்ணுவதால் அவர் மேல் உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டுமே-பெருமாள் சீற்றம் பட்டு இவற்றை தண்டிக்கக் கூடாதே -இரக்கமும் வேண்டும்)
————————————————-
வார்த்தை -355-
ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் –
க்ரியா ப்ரதான்யம் -சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று –
பாவந ப்ரதான்யமே ப்ராதான்யம் – நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று –
நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே
(யாவையும் எவரும் தானாய் அவர்அவர் சமயந் தோறும்
தோய்வுஇலன்; புலன்ஐந் துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதும்ஓர் பற்றுஇ லாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.)
வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் –
நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும் –
நாடாவது -சம்சாரம்
நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் – ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
(ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.)
—————————————————
வார்த்தை -356-
வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அடுக்கு குலையாத முஷ்டியும்
ஆஸ்திக்யம் குலையாத ஸ்ரீ வைஷ்ணத்வமும்-
(அவனே ப்ராப்யம் ப்ராபகம் -ததீய பர்யந்தம் -பாகவதருக்கு உகந்த கைங்கர்யம் செய்தல் இவற்றில்-உறுதி குலையாமல் மஹா விஸ்வாஸம் -)
——————————————————
வார்த்தை -357-
திருநகரிப் பிள்ளை -ஆழ்வார்கள் அருளிச் செயலிலே அந்வயம் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தன் உயிராக நினைத்து இருப்பன் –
ஆசார்யர்கள் பாசுரங்களிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை தன்னுடைய சத்தை யாக நினைத்து இருப்பன் –
இரண்டோடும் அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை அல்லது ஸ்ரீ வைஷ்ணவன் என்று அறுதி இட ஒண்ணாது-
——————————————
வார்த்தை -358-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இவர்களுக்கு பேராகைக்கு அடி ஏது என்று கேட்க –
1-ஸ்ரீ மத் புத்ரர் ஆகையாலும் (ராஜகுல மஹாத்ம்யம்)-2-ஸ்ரீ மான் பிதா வாகையாலும் -3-ஸ்ரீ புருஷகாரம் ஆகையாலும் -4-ஸ்ரீ மான் வைபவத்தை அறிகையாலும் -5-இவர்கள் ஸ்ரீ மத் பதத்தே பிறக்கையாலும் (த்வய நிஷ்டர்கள்)- ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் -என்று பெரிய கோயில் வள்ளலார் அருளிச் செய்வர்-
————————————————–
வார்த்தை -359-
ஸ்ரீ வைஷ்ணவனுடைய தின சரிதம் –
1-குரு பரம்பரையும் -திரு மந்த்ரத்தினுடைய விசத அநுசந்தானமான த்வயத்தையும்
சதா அநுசந்தானம் பண்ணுகை –
2-த்வய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சஹ வாஸம் பண்ணுகை –
3-அஹங்கார க்ரஸ்தரான சம்சாரிகளோடு அணுகி வர்த்தியாது ஒழிகை-
நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-
தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-
4-சாத்விக சமாசாரம் ஒழிய நாட்டாருடைய பரிமாற்றங்களை நேராக நிவர்திக்கை –
5-உத்தேஸ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களை உதாசீனம் பண்ணாது ஒழிகை –
6-த்யாஜ்யரான சம்சாரிகளை த்ருஷ்டம் அடியாக அனுவர்த்தியாது ஒழிகை –
7-ஆசூர பிரக்ருதிகளுக்கு அத்ருஷ்ட வார்த்தை சொல்லாது ஒழிகை -(ஸாஸ்த்ர விதி நம்பாமல் விஷ்ணு பக்தர் அல்லாமல் இருப்பவள் அசுர ப்ரக்ருதிகள்-விஸ்வாமித்திரர் திரிசங்குக்கு ஸ்வர்க்கம் தந்தது கூடாதது தானே)
8-சாது பரிக்ரஹமும் சதாசார்ய பிரசாதமும் ஸ்வரூப வர்த்தகம் என்று இருக்கை –
9-பகவத் பாகவத விஷயங்களில் அநுகூல வ்ருத்தியை தேக யாத்ரா சேஷம் ஆக்காது ஒழிகை(வ்ருத்தி செய்து அதற்குக் கூலியாக பணம் வாங்கி கால ஷேபம் பண்ணக் கூடாது)
10-ஸ்துதி நிந்தைகளில் அவிக்ருதனாய் இருக்கை –
11-ஸ்வ தோஷ தர்ஸனம் பண்ணுகை –
12-ஸ்வ ப்ரசம்சை பண்ணாது ஒழிகை –(தற்புகழ்ச்சி கூடாது)
13-ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பாரதந்த்ர்ய பராகாஷ்டை
பாகவத பாரதந்த்ர்யம் என்று இருக்கை –
14-இவ்வோ அர்த்தங்களை அனுசந்தித்து உண்டான அம்சத்துக்கு உபாய பூதனான
எம்பெருமான் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணுகை –
15-இல்லாத அம்சத்துக்கு அநுதாப பூர்வகமாக ஈஸ்வரனை இரக்கை –
16-இவ்வர்த்த நிஷ்டை தனக்கு உண்டான போது நிஷ்டை இல்லாத வேஷ தாரிகளை நெஞ்சாலே நெகிழ நினையாதே பகவத் ப்ரபாவத்தை இட்டு ஆதரிக்கை –
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -என்று
இவ் வர்த்த நிஷ்டை தான் பகவத் பிரசதத்தாலே பலிக்கும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தாலே வருமதன்று –
அக்ரூர மாலாகார அதீந் பரம பாகவதான் க்ருத்வா-(கீதா பாஷ்ய அவதாரிகை )என்று பிரமாணம் –
(துரா சாரோ அபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக புரா ஸமாஸ்ரயே தாதி தேவம் ஸ்ரத்தாயா சரணம் யதி நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந (ஸாத்வத-16-23) -தீய ஒழுங்கங்களை யுடையனாய் -எதையும் உண்பவனாய் -செய்ந்நன்றி கொன்றவனாய் -நாஸ்திகனாய் அநாதி காலம் இருந்தாலும் ஆதி தேவனான எம்பெருமானை ஸ்ரத்தையுடன் சரணம் அடைந்தானாகில் பரமாத்மாவின் பெருமையால் தோஷ மற்றவன் அவன் என்றும் அறிவாயாக –அக்ரூர மாலாகாரதீந் பரம பாகவதான் க்ருத்வா -கீதா பாஷ்ய அவதாரிகை -அக்ரூரர் மாலாகாரர் முதலானவர்களை பரம பாகவதர்களாச் செய்தவையே இவ் விஷயத்தில் பிரமாணம்-)
இவ்வோ அர்த்தங்கள் தங்களுக்கு உறுப்பாக அதிகரிக்குமவை அல்லது பிறருக்கு சொல்லுகைக்கு கற்குமவை அன்று -(தாமும் அனுஷ்டித்த பின்பே சிஷ்யர்களுக்கு உபதேசித்து அருளி திருத்திப் பணி கொண்டருள வேண்டும்)
———————————————————–
வார்த்தை -360-
பெருமாள் எழுந்து அருளா நிற்கத் திருவடி தொழப் புறப்பட்டருளி
நஞ்சீயர் திருமேனியிலே திருநாமங்கள் இன்றியிலே இருந்தபடியைப் பார்த்து –
பர்த்தாவின் முன்பே தாலி கட்டாமல் நின்ற ஸ்த்ரியைப் போலே இரா நின்றது
திருமண் கொண்டு வாரும் கோள் என்று அருளினார் –
(திருத் தை புஷ்ப உத்ஸவம் கல்யாணி புஷ்கரணிக்கு வேகமாக முக்காடு போட்டு எழுந்தருளி பின்பு மெதுவாகத் திரும்பி உத்ஸவம் கண்டருளுகிறார்)
——————————————-—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply