ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -289-300–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -289-
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அமுது செய்ய பண்ணும் போது
இழவும் -இரப்பும் -இறுமாப்பும் (சாத்விக கர்வம் )-துணுக்கமும் -சோகமும் -வாழ்வும் உண்டாக வேணும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

(இந்த ஸ்ரீ வைஷ்ணவர் பெருமைக்குத் தக்கபடி அமுது படைக்கப் பெற்றிலோம் என்னும் இழவும் -இவர் அமுது செய்தது நம் பாக்யம் இது அடிக்கடி நேர வேணும் என்ற இரப்பும் -இவர் அமுது செய்ததை நமக்கு நிகரில்லை என்னும் ஸாத்விக அஹங்காரமும் -நாம் இட்டது பாங்காய் இருந்ததோ -அபசாரம் ஏதாவது நடந்ததோ என்னும் பயத்தால் துணுக்கும் – இந்த பாக்யம் இத்தனை நாள் இழந்து இருந்தோமே என்னும் சோகமும் –அத்ய மே ச பலம் ஜன்ம-என்றபடி அமுது படைத்ததால் வாழ்ச்சி பெற்றதாக நினைத்திருக்கை -)

(தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்-அஸ்ரத்தயா தேயம் -ஸ்ரீ தைத்ரிய உபநிஷத் –சிரத்தை யுடன் கொடு -நம்மது இல்லை என்ற எண்ணத்துடன் கொடு
அஸ்ரத்தயா அதேயம்- சிரத்தை இல்லாமல் கொடுக்காதே -என்றுமாம் –
ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் -முகத்தில் சிரிப்பை வைத்து கொடு -வெட்கப்பட்டு கொடு –பயத்துடன் கொடு -உறுதியுடன் கொடு -தானம் வாங்குபவரை இருக்கச் சொல்லி கௌரவ புத்தியால் வணங்கிக் கொடுக்க வேண்டுமே
சாத்விக தானமாக இருக்க வேண்டுமே -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –)

————————————————

வார்த்தை -290-

விளை நகர்ப் பிள்ளை -(பிள்ளை நகரிப் பிள்ளை )-ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணுவர் -என்று பட்டர் கேட்டு -இதுக்கு அபிப்ராயம் அறிய வேணும் – என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள –

அமுது செய்ய காலமானவாறே –
அகத்துக்கு எழுந்து அருள வேணும் -என்ன

பட்டரும் பிள்ளையை அழைத்து –
வாரீர் பிள்ளாய் நீர் என்ன நினைத்து அமுது செய்யப் பண்ணுவீர் என்ன –

அடியேன் பின் வரும் முதலிகளுக்கு முன்பு எழுந்து அருளின முதலிகள் திருப் போனகப் பானை ஒழிச்சுவர் என்கிற இது பிரயோஜனமாக நினைத்து இருப்பன் என்ன –

பட்டரும் முதலிகள் முகம் பார்த்து
இச் சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளினார் –

(அடுத்து வரும் முதலிகளுக்கும் சமைத்து படைக்கும் சாமர்த்தியம் தனக்கும் உண்டு என்ற தொனி இருப்பதால் – க்யாதி லாப ஆசை -உண்ணுவது உஜ்ஜீவனம் அல்ல என்கிறார்-புகழை விரும்பும் சொல் சொல்லாமல் ஸ்வயம் பிரயோஜனமாக செய்தார் ஆகில்
இவருக்கு ஆத்ம உஜ்ஜீவனம் ஆகும் -என்று அருளினார் என்கை)

——————————————-

வார்த்தை -291-

ஸ்ரீ விதுரர் திருமாளிகையில் அமுது செய்தது மடி தடவாத சோறு என்று இறே
இச் சொல்லற்ற சோறு இறே அது -(அச்சோறே உண்ணும் சோறு)

1-மடி தடவாத சோறும் –2-சுருள் நாறாத பூவும் –3-சுண்ணாம்பு தடவாத படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-சூரணை -287-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரை சோதிக்கைக்காக மடியை பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –புக்தவத் சூத்விஜாக்ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  சுசீனி குண வந்திச-என்றுபாவனத்வ -போக்யத்வ -ப்ரசச்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –

(கீழ் பட்டர் –சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளியதும் இதுவே –உண்ணும் சோறு -ஆழ்வார் -அருளிச் செய்தது இதுவே)

———————————————-

வார்த்தை-292-
பிணச் சோறும் -மணச் சோறும் -விலைச் சோறும் -புகழ்ச் சோறும் -பொருள் சோறும்
எச்சில் சோறும் -ஆறும் த்யாஜ்யம் –

மற்றைச் சோறு இறே வைஷ்ணவன் உண்ணும் சோறு -என்று திருக்குறுங்குடி ஜீயர் (தீர்த்தங்குடி ஜீயர் என்றும் சொல்வர்)அருளிச் செய்வர் –

—————————————————–

வார்த்தை -293-
விஷயப் பிராவண்யத்தில் –
கணிகா ஸ்பர்சம் -விதவா ஸ்பர்சதைப் பற்ற யாக சமானம் –
விதவா ஸ்பர்சம் ப்ராஹ்மண ஸ்த்ரி ஸ்பர்சதைப் பற்ற யாக சமாநம் –
ப்ராஹ்மணீ ஸ்பர்சம் மாத்ரு ஸ்பர்சத்தைப் பற்ற யாக சமாநம் –
மாத்ரு ஸ்பர்சம்-வைஷ்ணவி ஸ்பர்சதைப் பற்ற யாக சமாநம் –

(ஒன்றுக்கு ஓன்று மேல் குரூரமானது)

—————————————————–

வார்த்தை -294-
தேஹம் திறள் பொறாது -ஸ்வரூபம் தனி பொறாது –
பகவத் விஷயத்துக்கு வெளியும் திறளும் தேட்டமாய் இருக்கும் –
ஷூத்ர விஷயத்துக்கு இருளும் தனிமையும் தேட்டமாய் இருக்கும் –

(ப்ரஹ்மத்தை எவ்வாறு காண்கிறீர் என்ன சர்வ வ்யாபியான அவன் இருக்க எவ்வாறு காணாமல் உள்ளீர் -என்பாராம் -எம்பாரும் குருகை காவலப்பனும்
கள்ளம் தவிர்ந்து கலப்பாய் -தனி அனுபவம் கூடாதே)

—————————————————–

வார்த்தை -295-

விஷய ஸ்பர்சம் த்விவிதம் –
1-அவிலஷண விஷய ஸ்பர்சம் -என்றும்
2-விலஷண விஷய ஸ்பர்சம் -என்றும் –
அவிலஷண விஷய ஸ்பர்சம் –தேவ தாநத்தில் ஜல கார்யம் போலே பிராயச்சித்த சாத்யம் –
விலஷண விஷய ஸ்பர்சம் -திரு நந்தவனத்திலே ஜல கார்யம் போலே யாவதாத்மபாவி நரக ஹேது –

—————————————————

வார்த்தை -296-
பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை –
இவ்வர்த்தத்தை ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் –
எங்கனே என்னில் –

வாசுதேவன் வலையுள் அகப்படுதல் -திருவாய்மொழி -5-3-6-
மாதரார் கயற்கண் என்னும் வலையில் அகப்படுதல் -திருமாலை -16-

மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளிலே அகப்படுதல் -நாச்சியார் திருமொழி -9-1-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -பெரிய திருவந்தாதி -6-3-4-

வானவர்க்கு வன் துணை அரங்கத்து உறையும் இன் துணையான் -பெரிய திருவந்தாதி -3-7-6-
அவரவர் பணை முலை துணையா -என்று இருத்தல் –பெரிய திருவந்தாதி 1-1-2-

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -திருவாய்மொழி -1-5-4-
பாவையர் வாய் அமுதத்தை பானம் பண்ணுதல் -பெரிய திருமொழி -1-3-5-

நால் வேதப் பயனை பேணுதல் -திருவாய்மொழி -3-4-6-
மாதரார் வன முலைப் பயனை பேணுதல் -பெரிய திருமொழி -1-6-1-

ஓன்று இதுவாதல் ஓன்று அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு விதமாக
அருளிச் செய்தார்கள் –

(இங்கு சொன்னவற்றில் அஸ்திரமாய் அல்பமாய் முதலில் எடுக்கப்பட்ட ஸ்த்ரீ சம்போகத்தில் ஈடுபட்டால் ஆத்ம நாஸமே ஏற்படும் -அநந்தமாய் நித்யனாய் இரண்டாவது எடுக்கப்பட்ட பரமாத்ம அனுபவத்தில் ஈடுபட்டால் ஆத்மா உஜ்ஜீவனம் அடையும் என்றும் ஆழ்வார் அருளிச் செயல்களிலும் காணலாம் அன்றோ -)

——————————————————-

வார்த்தை -297-

அக்கரைச் சடியார் வார்த்தை-
 (தாஸித் தொழில் செய்து வந்த பெண் பிள்ளை) -இவள்
உச்சியம் போதினில் ஷூத்து நலியாது நின்றது என்று என் பக்கலிலே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால் ஷூந் நிவ்ருத்தி பண்ணி உகப்பிக்குமோபாதி

பிரகிருதி வியாதி நலியா நின்றது என்று என் பக்கலிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால்
பிரகிருதி வியாதியை பிரகிருதி இட்டு சமிப்பித்தால் ஆகாதோ என்ன
நம்பிள்ளை அருளிச் செய்தபடி –

வாரீர் தாய் நெடும் காலம் மலடி நின்று பெற்றதொரு பிள்ளை பித்தேறி
உன் பக்கலிலே -உறி போட்டுக் கொள்ளுகைக்கு கயிறு தா –
கழுத்தை அறுத்துக் கொள்ளுகைக்கு அரிவாள் தா -என்று வந்தால் கொடாது ஒழிகிறது
அவன் சரீர நாசத்தை அஞ்சி அன்றோ –
அவ்வளவும் போராதோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஸ்வரூப நாசம் என்று –

——————————————————–

வார்த்தை -298-
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் பத்து முகமாக விரோதிக்கும் –
அவை யாவன -ஸ்வ அநர்த்தம் -பர அநர்த்தம் -சாஸ்திர விரோதம் -பகவன் நிக்ரஹம் –
பாகவத நிக்ரஹம் -ஆசார்ய நிக்ரஹம் -விரோதி வர்தகத்வம் -ஸ்வரூப விரோதம் –
உபாய விரோதம் -உபேய விரோதம் -தேசாந்தர அபாவம் –

தேவதாந்தர பரனுக்கு கலாந்தரேண வாகிலும் பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு –
விஷய ப்ரவணனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை –
ஆகையால்
ஸ்ரீ வைஷ்ணவன் விஷய பிரவணன் ஆகையாவது –
முதலை  முடியோடே விழுங்குமா போலே -என்று ஆச்சான் பிள்ளை –

(கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -8-
மற்றோர் தெய்வம் பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழி யேறிக்கண்டீர் ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைப் புகுவதுவே -4-10-7-)

————————————————————

வார்த்தை -299-
முமுஷுவுக்கு விஷய ப்ராவண்யமும் தேவதாந்திர பஜனமும் சமாநம் –

வெற்றிலையும் சந்தனமுமாய் புக்கு காமனை அர்ச்சிக்கிறதோடு
எருக்கும் தும்பையும் கொண்டு ருத்ரனை அர்ச்சிக்கிறதோடு வாசி இல்லாமையாலே
தேவதாந்தரம் தான் இதுக்கு சத்தை –

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் -பெருமாள் திருமொழி -3-3-..
தேவதாந்தர பரனுக்கு அனந்தர ஜன்மத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு யோக்யதை உண்டு –விஷய பரனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை –
ஆகையால் தேவதாந்தர பஜனத்திலும் க்ரூரம் –
சௌ சாபேஷன் ஸ்நானம் பண்ணி வருமா போலும் காண் -(வ்ருத்தி ஆசௌம் போன்ற தீட்டு உள்ளவன் ) விஷய பிரவணன் பகவத் பரனாய் திரிகிறபடி -பகவத் சந்நிதி நுழைய தக்கவன் அல்லன் – 

ராஜகுமாரன் முடியாதே முடி சாய்க்குமா போலே -(சாமான்யரை வணங்குமா போலே ) ஸ்ரீ வைஷ்ணவன் விஷய ப்ரவணனாகை -பிணம் பிணத்தைத் தேடுமா போல்-சரீரம் தேட்டம் வெறுமனே கிடைக்காதே ஆதலால் பணமும் தேட்டம் – வைஷ்ணவனுக்கு பிணமும் பணமும் தேட்டம் அன்று -மணம் -ஒன்றே தேட்டம் -அழகிய மணவாளனையும் வயலாலி மணவாளனையும் -விரையார் பொழில் வேங்கடவனையும் தேட்டம் –

விஷய ப்ரவணனுக்கு பகவத் விஷயத்தில் அந்வயம் இல்லை -விஷய ப்ராவண்யம் வந்தவாறே பாகவத அபசாரம் வரும் -பாகவத அபசாரம் வந்தவாறே ஆச்சார்ய அபிமானம் போம் -இதனால்-அருமைத் தலை – -மோக்ஷ மார்க்கம் வழி தப்பி அரு நரகமும் கிட்டும்

விஷய ப்ராவண்யம் அற்றவாறே பாகவத அபசாரம் போம் -பாகவத அபசாரம் போனவாறே -ஆச்சார்ய அபிமானம் வரும் -ஆச்சார்ய அபிமானம் வந்தவாறே அர்ச்சிராதிகதி கிட்டும்

——————————————————–

வார்த்தை -300-
முமுஷுவுக்கு தேவதாந்தர ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் -மோஷ பிரதிபந்தகம் –
அதில் இரண்டு ப்ராவண்யம் உண்டானால் காலாந்தரத்திலே ஈடேறலாம்–
ஒரு -(விஷய)-பிராவண்யம் பிரதிபந்தகமாகவே விடும் –

—————————————————–——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply