Archive for the ‘திரு விருத்தம்’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் –சொன்னால் விரோதம் இது -3-9-

February 23, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நீலோத் பல புஷ்பங்கள் கருநெய்தல் மலர்கள் –திருமேனி சாரூப்பியம்-சாம்யா பத்தி சாமீப்யம் சாலோக்யம் சாயுஜ்யம்-கால் வன்மையால் -கடமாயின எல்லாம் கழித்து -நீர் நிலைகளில் நின்ற தபஸ்ஸின் பயனா குடமாடியவர் நடமாடி உலகு அளந்த இரண்டாலும் மண்ணும் விண்ணும் குலுங்கி -உருகி -ஈடுபட்டு – திருத் தாயார் கீழே புலம்பினாலும் பகவத் கடாக்ஷத்தால் போகிற வழிகள் எல்லாம் பூக்கள் சூழ்ந்து-தெய்வ யோகத்தால் தடங்களும் பூக்களுமாக இருக்க -லோக பதார்த்தங்களை பார்த்து
அதுவும் அவனையே நினைவூட்ட -அவன் இடமே ஈடுபட்டாள்
வியந்தும்-போலி கண்டு அழிந்தும் மகிழ்ந்தும்-சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை கூடாது -என்று உபதேசம் –ஏற்கும் பெரும் புகழ் வானவர் யீசனைப் பாடும் ஏற்கும் புகழ் யுடைய ஆழ்வார் –
நான் வேறே ஒருவருக்கும் என்னாவின் இன் கவி கொடுக்கிலேன்-நா கொடுத்த பயன்-வம்மின் புலவீர் உம் மெய் வருத்தி கை செய்து உய்ம்மினோ –-தேவ பித்ரு ரிஷி -மூன்று ருணங்கள் -கடன் தீர -பாடுங்கோள்

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர் -ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்-ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட – தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.-இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.-ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.-நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
-38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்
—39-முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல் இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு ஹிதம் அருளிச் செய்ய மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க
அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –திரு நகரிக்கு நாதரான ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்-கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஆழ்வாருக்கு –இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று-த்ருஷ்டே பராபரே -கண்டு பேறு ஆழ்வாருக்கு -நமக்கு இத்தை சொல்லியே பேறு
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை- இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் 

கடமாயினகள் கழித்து –ருணானி த்ரிகுண்ய அபாக்ருத்ய -என்கிறபடியே – மூன்று வித கடன்கள் கழிந்த பின்னர் மனசை மோஷத்தில் நிலை நிறுத்த வேண்டும் —ப்ரஹ்ம  சர்யேனருஷிப்ய  யஜ்ஜேன தேவேப்ய பிரஜயா பித்ருப்ய – –மனு ஸ்மரதி – 6-35 – என்று சொல்லுகிற படியே –ப்ரஹ்மசர்யம்  மூலம் ரிஷிகளின் கடனையும் –யாகம் மூலம் தேவர்கள் கடனையும் – பிள்ளைப் பேறு மூலம் பித்ருக்களின் கடனையும் -தீர்க்கக் கடவன் –உஷ்ண காலத்திலேயே –உஷ்ணமான தேசங்களிலே –சரீர க்லேசங்களாலே – சொல்லுகிற ருண த்ரயத்தையும் இறுத்து —தன் கால் வன்மை இத்யாதி –
தன்னுடைய யத்னத்தாலே யாதல்-தபோ பலத்தால் ஆதல்-சத்தையை நோக்கி இட்டு வைத்து –
சீத காலத்திலேயே கடலோடு -குளப் படியோடு வாசி அற –தீர்த்த தேசங்கள் எல்லாம் புக்கு -கழுத்து மட்டும் நீரிலே நின்று –தபஸ்ஸூ பண்ணின அந்த பலத்தாலே -வந்ததோ உங்களுக்கு இப் பரம சாம்யா பத்தி ?–நீல மலர்கள் இப்படி கடன் தீர்கின்றன –கடம்-கடன் –குடமாடி-மன்றிலே தன் அழகை சூறை கொள்ளும் படிக்கு ஈடாக நின்று –குடக் கூத்தை ஆடி-இடையருக்கு உண்டான செருக்குக்கு தலை சாவி வெட்டின படி –

இம் மண்ணும் இத்யாதி –ஒரு தெருவிலே யாதல்-சிலர்க்கு ஆதல்-தன்னை கொடுக்கும் அது அன்றிக்கே லோகமாக வாழும் படி கூத்தாடின படி –குரவை – கலி நடம்- குடக்கூத்து =கரணம் -நோக்கு – தோற்பாவை -ஆறு வகை கூத்துக்கள் மேலு பலவும் சொல்வர் குலுங்க- சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி   –உலகு அளந்து நடமாடிய –இந்திரன் தான் இழந்த பூமியைக் கொண்டு போக –மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –அத்தைக் கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக – இவர் திரு உலகு அளந்து அருளின போதை அழகை தம் பேறாக அனுபவித்தார் –உவந்த உள்ளத்தனாய்-பெருமாளுக்கு தீண்டப்பெற்றோம்-மகா பலிக்கு அவனுக்கே கொடுக்கப்பெற்றோம்-இந்திரனுக்கு இழந்த செல்வம்-ஆழ்வார்களுக்கு சேவை -அழகு அனுபவித்து உகந்து —உரு ஒத்தன நீலங்களே –இப்படி சர்வதா சத்ருசமான வடிவை நீலங்கள் பெருகைக்கு அடி –கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தபசோ ?-இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால் அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலியும் படி இறே பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது –

போலி கண்டு மகிழ்ந்து அருளிச் செய்யும் பாசுரம் –போலி கண்டு மகிழ்வதும் உண்டு – வருந்துவதும் உண்டே –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி–ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -திருவாய் -8-5-8-பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளை காள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதுவே -நாச் திரு -9-4-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்-தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்-கருங்குவளைகள் காடுகளை இடம் கொள்ளாமல் நீர் நிலைகளை கொண்டமையால் தவப்பயன் என்கிறார் –நீண்ட நாள் அனுபவித்து கழிக்கும் கடன்களை தவிர்த்தவாறு–இம் மண்ணும் விண்ணும் குலுங்க -குடமாடி –உலகு அளந்து நடமாடிய பெருமான் -விளையாட்டாகச் செய்தமை தோன்ற
வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் காண்டுமே –இம் மண்ணும் விண்ணும் குலுங்க-மனம் இளகும் படி -நடுங்கும் படி அன்று –சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே – லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி –புஷ்ப்பம் போன்ற திருவடி அன்றோ –

கடமாயினகள் கழித்து-தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து-தன் கால் வன்மையால்-தான் நின்ற அடி யுரத்தாலே--பல நாள்-அநந்த காலம் -பலம் பெறும் அளவும் என்றபடி-தடமாயின புக்கு-அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து–நீர் நிலை நின்ற-நீரிலே நித்ய வாஸம் பண்ணின-தவமிது கொல்-இது தபஸ்ஸாகக் கூடும் இறே–குடமாடி-பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம் காணும்படி குடக் கூத்தாடி–யிம் மண்ணும் விண்ணும் குலுங்க-இந்த பூமியோடு தேவ லோகத்தோடு வாசி யற தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக–இது கீழோடே சேரவுமாம்-வுலகளந்த நடமாடிய–அளக்கிற இடத்திலே அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை–பெருமான் அந்நிய சேஷத்வத்தையும் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும் கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய–பெருமான் உரு-ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே பெருமை சொல்லுவதாக நிறம்–ஒத்தன நீலங்களே-நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன–ஆக இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று
–திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று-சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள் தவம் க்ஷேத்ர வாசமே–இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே–இத்தால்–யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை–அதில் கடமாயின கழித்து –என்கையாலே–கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம்
-என்கிறபடியே இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது-தன் கால் வன்மையால் -என்கையாலே வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி–பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி (நீராடப் போதுவீர் -)நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை–தவமிது கொல் -என்கையாலே-அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி அவிசேஷிதமாய் இருக்கை–குடமாடி இத்யாதியாலே–கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது-உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே ஸாம்யா பன்னரானவர்கள் புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே கீழ்ச் சொல்லிற்று –இப்பாட்டில் பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார் அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள் இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்–நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும் முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு–குருகைக் காவல் அப்பனை-ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க-எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே-இச் சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்–அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன-நான் உனக்கு அது சொல்லுகிறேன்-நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்–ஆவது என் என்னில்-ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன் அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி–இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்–சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று-இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன-இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்-நீலங்களே-கரு நெய்தல் பூக்கள்

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் முக்தர்கள் ஸாரூப்யம் பெற்றதை சாஷாத் கரித்து-அவர்கள் இடைவிடா முயற்சியின் பலன் -தன் கால் வன்மை-என்றும்-பல நாள்-தடமாயின புகுதல் -மரகத மணித் தடாகம் போன்றவன் இடம் ஈடுபட்டு முக்தரை நீல மலர் என்றது யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் கொள்ளும் படியான சிறப்புக்கும் மேன்மைக்கும் முக மலர்ச்சிக்கும் ஆம் –

தாத்பர்யம்
இதில் ஆழ்வார் -சர்வேஸ்வரன் ஆஸ்ரிதற்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணுபவன் ஆகையால் நமக்கும் ஸாரூப்யத்தை அளிக்கும் என்று அனுசந்தித்து உரைத்த பாசுரத்தை கரு நெய்தல்களிலே சர்வேஸ்வரனான நாயகன் போலியைக் கண்டு உரைத்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-நாயகி சந்த்ர ஒளியால் மலர்ந்த கருநெய்தல் மலர்கள்-நிறம்–கிருஷ்ண வாமன திரிவிக்ரம அத் யாச்சர்ய அதி மானுஷ சேஷ்டிதங்கள் –-எம்பெருமான் திரு மேனி ஒத்து இருக்க-இது எதனால் இருக்கும்-சா அங்கமாக -முக்கடன்களைக் கழித்து -கர்ம யோகங்கள் அனுஷ்ட்டித்து-வெய்யில் காலத்தில் மலைகளில் நின்றும்-குளிர் காலத்தில் தடாகங்கள் இருந்தும் செய்த தபஸ்ஸுக்களின் பலமோ நானும் செய்து கிட்டக்க கூடாதோ என்கிறார்

3-9-சொன்னால் விரோதம் -பிரவேசம் –

இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சம்சாரிகள்.
தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்;
‘பருகிக் களித்தேனே!’2-3-9- என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொள்வதற்கு
‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ 2-3-10-என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று,
இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சம்சாரிகளைப் பார்த்தார்;
அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்;
இதர தேவதா பிராவண்யத்தாலும் –விபரீத சாஸ்திர நிஷ்டர் ஆகையாலும் –சப்தாதி விஷய பிராவண்யத்தாலும்
–இதர ஸ்தோத்ரம் பண்ணுகையாலும் கூட்டு அல்லர்
‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே,
பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும்,
பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும்,
தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்,
வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும்,
‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப்
பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.

அவர்களைக் கண்டவாறே, வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; பிறர் கேட்டினைக் கண்டால்
அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும்
கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான நல்வார்த்தை அருளிச்செய்ய,
அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர்,
அவர்களில் தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.

அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே
கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக்
‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய்,
கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய்,
அவர்களுக்குக் கொடுக்கைக்கு உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், ‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால்,
அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும்
குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே,
‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம்
மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம்
போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு;
கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றியே
தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனி இருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும்
இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே நூறு கற்றையாதல்
ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; வார்த்தை -பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -கூட்டில் அறு கலம் -கொடுப்பது முக்கலம்
-ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி நான் ஒரு கலம் பெற்றேன் -போலே-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் –
போர் முகம் அறியானை புலியே என்றேன் -இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -போலே-
இவன்தான் பலநாள் கூடி நெஞ்சு கன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும்
கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் ‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய்,
ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது
ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு
-தூயவன் -தாய் தந்தை பக்கமும் -என்றவாறு -போன்றே அன்றோ கவி பாடுவது?‘ஆனால், வருவது என்?’ என்னில்,
பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமே இவன் தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது?
அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய்,
பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று,
‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;

ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே
அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து
‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான
உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு
தப்பிப் போனார் மகிழுமாறு போன்று தமக்கு -‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’-உண்டான வேறுபாட்டினை
நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.

ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார்

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே
.–3-9-1-

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன்-1-நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த் தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு?-2-ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.-3சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும்
அமுத வெள்ளம் அன்பின் தேன் போலே அவன் இருக்க என் வாயாற்சொல்ல ஒண்ணாது;
ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ?-உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்;-நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார்-அர்த்த ஞான பர்யந்தமாகவும் வேண்டாம் -அனுஷ்டானமும் வேண்டாம் ஒ என்பதால் -கடல் ஓசைக்கு காது கொடுப்பது போலே இவை
கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை-வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.-இன் கவி – இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி.-இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது?-தென்னா தெனா என்று வண்டு முரல் –-பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.
பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?-திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும்
தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்.-யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய
வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார்.1-என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?-2-தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல்.-3-அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது,-நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல்.-

————

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?
–3-9-2-

உளன் ஆகவே எண்ணி –1-அவனைத் தவிர -ஸ்வ தந்தரமாக வஸ்து இல்லையே -அவனைச் சார்ந்து இல்லாமல் ஒன்றும் இல்லையே –2-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?-3-தன்னைக் கட்டிக் கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ,-அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?

ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.-தன்னை – உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, உளன் என்று இசைந்ததால் –நல் நெஞ்சு

கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட,-அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய,
அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன,-ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே?
கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.

கண்ணன் குறுங்குடி –சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம்.
‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்;
அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள்.எந்தையை –
நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை.
அன்றிக்கே,‘கவிபாடுகைக்கு வகுத்த -ப்ராப்த -விஷயமானவன்’ என்னுதல்.
‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி.- பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே –என் குல நாதன் என்கிறார் – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்-

————

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?
–3-9-3-

போம் வழியைத் தரும் –1-அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும்.-2-தன்னைக் கிட்டும் வழியைத் தரும்-3-வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது-நிற்க – இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க போய்க் அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இறே தேடித் போவதே –.-புலவீர்காள் -உங்கள் விசேஷ ஞானத்துக்கு சேருமோ-மானிடம் -பாடுவதில் நன்மை உண்டோ-இழிய -தாழ்ச்சி வேற வருமே வான் கவி -கவிக்கும் அனுரூபம் இல்லையே –

——————

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே
.–3-9-4-

‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை-தம்மையே ஒக்க அருள்செய்வர்’ -தன்னாகவே கொண்டு சன்மஞ் செய்யாமையும் கொள்ளும்’-ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும்.-தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே-புலவீர்காள் – ‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே!-வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன்
ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.

கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,-‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல்,-கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,-என் வள்ளல் –நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.-உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் –

————-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.
–3-9-6-

நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள்.-இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன அது ஆகுமே அன்றோ, பெற்றால்?

ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இறே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை

‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, ‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி.

————

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே
.–3-9-7-

பெருமாள் சிங்காசனமும் ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க, சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க, பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.-உத் ஒன்றையே விரிக்க தானே ஆயிரம் திருவாய்மொழிகளும்-அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது.-திண் தோள் மால் வரை ஒக்கும் – கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும்,
இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’

பாரில் ஓர் பற்றையை – பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே?
அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார்.
அன்றிக்கே,-பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய்,-இருப்பிடமாய் – அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும்,-இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும்
ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர்.-ஆயின்,‘திருணசமன்’ -புல்லுக்கு சமன் -என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள்.பச்சைப் பசும்பொய்கள் பேசவே.– மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-

———–

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?
–3-9-8-

அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார்.அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்-கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார்.-முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.-பிறரை நிஷேதிக்கும் பிரகரணத்தில் சுய அனுஷ்டானம் சொல்வது -பிராப்தி – ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.-

————

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.
–3-9-9-

வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர்.-இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப் படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள்.

உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ?-அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே.-செவியே கண் கண்ணே செவி யாக கொண்ட ஆதி சேஷன் அன்றோ-என்னைப் படைத்து அவனைப் பாட வைத்து –அவன் தாளிணை அடைய வைக்கவே -தன் பயனாகவே சிருஷ்டி-அவன், ‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே,-தன்னை எனக்கு ஆக்கி வைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.ஆழிப்பிரான் – தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.-‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார்.-இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற் போன்று-சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’

நின்று நின்றே – ‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்றுதிருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள்.
அன்றியே,
‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம்.
அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில் பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.

———-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?
–3-9-10-

இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார்.-‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு. சஜாதீயம் -பிறப்பு கர்மம் -பொது தானே இவற்றுக்கு-இந்த ஜன்ம சமாஸ்ரயணத்தால் முந்திய கர்மாக்களும் நிவ்ருத்தி ஆகும் –பத்தி உழவன் பழம்புனமே-

உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ? ‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.

————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
.–3-9-11-

தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலேபரத்துவத்தை யுடையவன் ‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார்

சன்மம் இல்லை – நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –மண்ணை யிருந்து துழாவி -4-4-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கொடுமையான வளைந்த வில்லைப் பிடித்து உள் ள வேடர் இருக்கும்-சூழ் கடம் -பாலை நிலம் காட்ட அன்றோ கூட்டிச் சென்றார்-புணர்ந்து உடன் சென்ற செவிலித்தாய் சொல்லக் கேட்ட-நல்ல தாய் -பெற்ற தாய் பாசுரம்-நாடும் காலம் நோற்றுப் பெற்ற இவள்-சுரம் -பூமி -தாழ்ந்த பூமி-மண்ணை யிருந்து  துழாவி -4-4–என் இள மான் என்று அங்கும் திருத்தாயார் பாசுரம் –

தமிழர் புணர்ந்து உடன் போன தலைமகள் பெற்ற தாயார் களவு நெறியில் கலந்து
தோழி பரிகாரம் சொல்ல உடனே மணம் செய்வது இயல்பு இல்லையேல் அப்பழி அடங்க ஆவலுடன் உடன் கொண்டு தனது இடத்துக்குச் செல்வதும் வேறே இடத்தில் மறைத்து வைப்பது ஓன்று முறைமையால் நடக்கும் கூடைக்கூட்டிப்போக தோழியால் அறிந்த -செவிலித்தாயாய் அதனை நல் தாயும் உணர்த்த கவலையுடன் பேசுகிறாள்–அன்றிக்கே கலந்து பிரிந்த தலைமகள்-தாயார் அறியாமல்
பிரிவாற்றாமை –திருக்கோளூர் பெண் போல் நோக்கிச் செல்ல-நேரிழை நடந்தாள் -அவனூர் வினவி திண்ணம் என் இளமான் புகுமோர் திருக் கோளூரே-வழியில் படும் கஷ்டங்களை தாயார்
இளைஜர் வாத்யம் வில் -பாலை நிலம் அடையாளங்கள் – உடன் போக்கும் தனிப் போக்கும் இதில் உண்டே-

கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும் துர் கதிகளுமான தேசத்திலே போக —திருத் தாயார் இவளைப் படுக்கையில் காணாமையாலே – எல்லாப் படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று – இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–திரு கோளூரில் புகுகிற   பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே –ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே -எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே
–37-நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க – பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய் ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான் ஒரு வேடன் வாய் இட்டு ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் –வியாமோஹ அதிசயத்தாலே அவற்றிலே அத்ய அபிநிவிஷ்டரானார்-இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

கொடுங்காற்  சிலையர் –
யோதா நாமக்னி கல்பானாம் பேசலாநாம்  மகேஷூணாம்
–பால காண்டம் -6 21- –வீரத்தில் அக்னி போன்று யாராலும்-அண்ட இயலாமல் உள்ளவர்களும் –வலிமை மிக்கவர்களும் –திரு அயோத்யையில் காவல் காப்பார்-கடுமை -கையில் வில் -இராமாயண ஸ்லோகம் போல்-கொடுமை -வளைந்த குரூரமான சிலையர் –கோணின காலை உடைய  சிலையர் –ஹிம்சையில் த்வரையாலே எப்போதும் நாணி ஏறிட்டு வளைந்த படியே இறே இருப்பது கொடுமை என்றுமாம் –கால்-நாணி –வில்லுக்கு கொடுமை யாவது –தான் சென்று நலிகை அன்றிக்கே –ஆள் இட்டு நலிகை–சிலையர்-நிரூபகம் –
உண்ணும் போதும்-ஸ்வ ஸ்திரீ யோடு அனுபவிக்கும் போதும்–கையும் வில்லுமாய் இருக்கிறபடி –
எப்போதும் கை கழலா நேமியானோடே-பெரிய திருவந்தாதி -87- பழகினவள்  இறே இவள் –அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது – இது பிறர்க்கு அநர்த்தமாய் இருக்கும் இறே –நாஹரயதி    சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா –அயோத்யா காண்டம் -60 -20 – –பெருமாளின் வலிமையான தோள்கள்-பற்றிய படி செல்லும் அவள் –
கானகத்தில் உள்ள சிங்கம் யானை -போன்றவற்றை பார்த்து அஞ்ச வில்லை-என்னும் படியே
அவன் கையும் வில்லும் நினைத்தார் பயம் கெட்டு இருக்குமா போலே இருக்கிறது அன்று இறே இங்கு –நிரை கோள் உழவர் –பர அபகாரமான கோ க்ரஹனம் பண்ணுகையே ஸ்வயன் க்ருஷியாய் இருக்கும் அவர்கள்-கோ ப்ராஹ்மண ஹிதாயச  -என்று சாது சம்ரஷணம் பண்ணின வரோடே பழகினவள் இறே இவள் –

கொலையில் வெய்ய –கொல்லும் இடத்தில் வெவ்வியராய் இருக்கை-அர்த்தார்தம் ஆகவாதல்-எதிரி என்றாதல்-அன்றிக்கே –துடிப்பு காண்கையே பிரயோஜனமாக கொல்லுகை –சாவக் கொல்லாதே
கிடந்தது உழலும் படி கொல்லுகை –(கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றியே போல் )படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே –-பெரிய திரு மொழி – 11-8 6–ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் –பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே-வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும் நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே-இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில் நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –இடையர்கள் வெட்டி எறிகின்ற மரம் ஓர் இடத்தில் பச்சையாகவும் – மற்று ஓர் இடத்தில் காய்ந்தும் உள்ளது போன்று – குற்று உயிரும் கொலை உயிரும்  ஆக செய்வர் – அவர் பிறரை கொல்லும் இடத்திலும் -அவர்களுக்கும் ஹித ரூபம் ஆக இறே கொல்லுவது –பின்னையும் –
சஞ்சாத பாஷ்ப பர வீர ஹந்தா ராமோ முகூர்த்தம் விமானா பபூவ –கிஷ்கிந்தா காண்டம் -24 -24 –
எதிரிகளை வீழ்த்த வல்லனாகிய  பெருமாள்- சிறிது நேரம் துயரம் அடைந்த மனதுடன் அப்படியே அமர்ந்தான் -என்று கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –

கடுங்கால் இளைஞர் –பர ஹிம்சை பண்ண வென்றால் -பத்து புக்கு பத்து மீள வல்லராய் இருக்கை-
இவர்கள் ஒரு கிரியை செய்ய வேண்டாதே காணவே பயா வஹமாய் இருக்கும் பருவம்–ரசாயன சேவை பண்ணினாரைப் போலே இளகின பருவமாய் இருக்கை –துடி படுங் கவ்வைத்து –பறைகளினுடைய ஓசை உடன் கூடிய கானகம் துடி யினுடைய ஓசையை உடைத்து  – இத் த்வனி உள்ள இடத்தே போகிறது-இருந்தால் தாயினுடைய ஹித வசனம் கேட்க வேணும் என்று –இத் த்வனி உள்ள இடத்து போனால் அழிய -அழிகிற- உடம்பை இறே அழிப்பது –இங்கு நித்தியமான ஆத்மாவை அழிக்கும் –அருவினையேன்–அவன் வேண்டி இராமை இல்லை-இவளுக்கு ருசி இல்லாமை இல்லை-
கிட்டாது ஒழிகிற இது  காண்கிற என்னுடைய பாஹ்ய ஹானி இறே –மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்(நானே தான் ஆயிடுக )

நெடுங்காலம் இத்யாதி –ஆஸ்ரயித்தின் அளவன்று கிடீர் –(நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற கண்ணன் திருவடி -உலகு அளந்த -அளவு அல்லவே இந்த காலத்தில் நீட்சி ) சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து –
பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி
ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற
ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே –தொடுங்கால் ஓசியும் இடை –தொடத் தரியாய் இருக்கிறபடி –நாயகனும் சீர்மை அறிந்து அனுபவியாதே பார்த்து இருக்கும் அத்தனை –ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்ப செல்லும் கொல் ?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திரு கொளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம்காரிகையே
-திரு வாய் மொழி -6 -7-8 – –(நிதி எடுத்தால் பெற்ற இவள் எம்மை நீத்த என் காரிகை )-இவை உண்டோ இல்லையோ -என்று சம்சயிக்க வேண்டி இருக்கிறபடி –மேலும் கீழும் பார்த்தால் இடையும் உண்டு என்று அனுமித்து கொள்ளும் அத்தனை –
இடைக்கு தாரகமாக கையை வைத்தால் –கை தானும் மலையை வைத்தாற் போலே இறே இருப்பது –இள மான் சென்ற –இவ்வழி போக்கும் இத்தனையும் பொறாத பருவம் கிடீர்-சூழ் கடம் – க்ரூரமாய் பரந்து இருந்துள்ள காடு-

அருவினையேன்-நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே கொடும் காற் சிலையர் நிறை கோள் உழவர் கொலையில் வெய்ய-கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து –என்று அந்வயம்–ஸூ குமாரமான இவள் கொடிதான் வழியிலே நடந்து செல்கிறாள் என்று வயிறு எரிந்து திருத் தாயார் பேசுகிறாள்-நிரை கோள் உழவர்--ஜீவன உபாய விருத்திகள் உடையவர் -பசுக்களை ஹிம்சிப்பதை தொழிலாக உடையவர்-சூழ் கடம் -சூழ்ச்சியை யுடைய வழி -வெம்மையால் துயர் விளைத்தல்-துடி –பாலை நிலப் பறை-கண்ணன் நீண் மலர் பாதம் -உலகளந்தான் திருவடி -அன்பர் மனசில் சேர்ந்த திருவடி என்றுமாம் –

ஸ்வாபதேசம் —
இள மான் –பருவத்தையும் பெண்மையும் -அடிமை பூண்ட விசேஷ ஆழ்வார் பக்தி
தொடுங்கால் ஓசியும் இடை–வைராக்யத்தின் முதிர்ச்சி-இடை அழகு ஒன்றும் பொறாத வைராக்யம் –
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-பல பிறப்புக்களில் தவம் ஞானம் யோகம் இவற்றால் தீவினை ஒழிந்தால் அல்லது இவர் நம்மவர் என்று அபிமானிக்க மாட்டார் -தமக்கு சித்தித்த அருமையை சொன்னபடி-சென்ற சூழ் கடமே-சம்சாரம் ஆகிய பெரும் காடு-மேல் எல்லாம் ஆழ்வார் இருள் தரும் மா ஞாலத்தில் கிடந்தது துடிப்பதை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்
ஆழ்வாருக்குப் பிறந்த ஞான பக்தி வைராக்யங்களைக் கண்டு சம்சாரத்தில் இருப்பு துஸ்ஸஹம்
இவள் காடேறப் போனாள் என்று நினைத்த திருத்தாயார் வார்த்தை-இவளுக்காக நான் நெடும் காலம் தவம் செய்து பெற்றேன்-இவளோ ஒசிந்த இடை கொண்டவள்-தனியே ஓர் இடம் போக சக்தி கொண்டவள் அல்லவே-போன இடமோ பெரிய பாலை-வேடர்களும் பயங்கரமாக சஞ்சரிக்க
அவர்கள் பறை ஒலியைக் கேட்டு இவள் என்ன படுகிறாளோ-இது நான் செய்த பாபமே இவற்றுக்கு காரணம்
-என்கிறாள்

4-4-மண்ணை இருந்து துழாவி, –ப்ரவேஸம்–

மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்;
இத் திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்;
இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது;
அந்த ரசத்தை அரையாறு படுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன்.
ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ?
ஆகையாலே ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன்
கிழிச்சீரையைக் -கிழிச்சீரை – பணப்பை.-கெடுத்தால் அதனோடு
போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் -சத்ருசம்-
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக் கொண்டும்,
-சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே
நோவுபட்டுச் செல்லுகிறது.- ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’,
‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்கு மவராகையாலே,
பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்;
‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்;
ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே,
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது,
அதுதானும் மாட்டாது ஒழிவது,
‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது,
ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே-ஆண் ஆறு மேற்கு நோக்கி-நதம்/ நதி பெண் ஆறு கிழக்கு நோக்கி – தேடுவதாய்,
அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது.
இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற
வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவு படுகின்றபடியையும் சொல்லிக் கை வாங்குமளவாக,
அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

நாலாம் திருவாய் மொழியிலே இப்படி மானஸ ஸம்ஸ்லேஷத்தாலே அனுபவிப்பித்து கற்பித்த ஈஸ்வரனுடைய
பிரணயித்வ குணத்தை அனுசந்தித்த ஆதார அநு ரூபமான பாஹ்ய அனுபவ அபி நிவேசத்தைப் பண்ணி
அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர் தம்முடைய ஆர்த்தி சாந்தி ஹேதுவான ஸ்வ பாவங்களை யுடையனான ஈஸ்வரனுடைய
விபூதி திவ்ய யோகத்தையும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்தையும்
பிரதாப அநுக்ரஹ வத்தையும்
உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்திகளையும்
அநு பாவ்ய சேஷ்டிதங்களையும்
பரத்வ சிஹ்னங்களையும்
ஐஸ்வர்ய அபி ரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும்
ஆச்ரித விஷயத்தில் உபகாரகத்வத்தையும்
ஸுலப்ய பாரம்யத்தையும்
அநு சந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு சம்பந்திகளாயும் சத்ருசங்களாயும் உள்ள பதார்த்த தர்சனத்தாலே
ஈடுபட்ட பிரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை நாயகனைப் பிரிந்த
ஆற்றாமை கண்ட நல் தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–
4-4-1-

ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமேஅம் மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’-உப புஜ்யதே -அனுபவிக்கிறேன் — என்றான் அன்றோ விசுவாமித்திரன்?இருந்து – இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல் கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது-துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று-இம் மண்ணை விடமாட்டாமையும் தோன்றுகிறது.
விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். தாங்கள் தெளிந்திருந்தார்களாய்
‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே,
அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல்
வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள்.
‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னா நின்றாள் என்றபடி,-‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில் பிரசித்தி?
‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது.
அடியே பிறந்து அடைய கந்தம் -கந்த தன்மாத்ரை பிருத்வி என்றவாறு -வாமனன் திருவடியால் பெற்ற கந்தம் –பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்

அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும்.-இது வாமனன் மண் ஆகவே இது என் மண் இவர் நினைக்க -இந்தரன் தன் மண் என்று அவனும் என் மண் என்கிறான் –-அவனது எல்லாம் இவரது -பார்த்தா உடையது நாயகிக்கு உண்டே-இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்ற தித்தனை போக்கி,மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று,
வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது.-நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு ‘அக்கரை, இக்கரை’ என்னும்படி
இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும்.இவள் தன்னை மேவா வைகுந்தம் என்கிறாள் ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள். ‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும். அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து, அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து, சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்த முத்திரையாலே தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள்.

கடல் வண்ணன் என்னும் – ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்; அவ் வடிவினைக் காட்டிக் காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்; இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே-(ஏற்றிய திருமேனி’ஏற்றிய விதம்’) சொல்லா நின்றாள் என்றபடி.-தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்று காணும்-இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள்.
அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?-ஆண்டாள் -மையல் ஏற்றி மயக்க -உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -பெரு மயல் இல்லையே-பெய்வளையீரே!-‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள்.-‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ,
நானும் கைமேல் செய்து பார்க்க!’-

———–

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே
.–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, கடல் வண்ணன் -என்று அனுசந்தித்தவாறே கழன்ற வளைகள் ஒழிய சரிந்த வளைகள் பூரித்தன – தொழு விக்கைக்கு ஒப்புவித்து தான் தொழா நின்றாள் -அவனை தொழு விக்கைக்கு இறே ஒப்பித்தது-வீரக் கழலோடே எதிரிகள் லையில் நோவு படுவாரைப் போலே –ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து
இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் –
பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் –சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –அவர்கள் பிரதம ஜாயே புராணா-என்னும் படி இறே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.– இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

————

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?
–4-4-3-

செந்தீயைத் தழுவி –எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்;-தேஜஸாம் ராசி மூர்த்ததாம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவா நின்றாள்.-இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.-ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்-அச்சுதன் என்னும் –‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.-மெய் வேவாள் – இவள் தான் மயக்கத்தாலே கட்டிக் கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில்,அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. –அச்சுதன் முகத்தால் பிறந்த அக்னி -பக்தி இரண்டும் -அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல்.-அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ -பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ -‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.-

எறியும் தண் காற்றைத் தழுவி –-வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. ‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான காற்றும் சுட்டிலது;-இதுவன்றோ ஆச்சரியம்!’-பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.-என்னுடைக் கோவிந்தன் என்னும்-கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்-உலகத்தார் படியும் அன்று; விரஹ நோயினர்கள் படியும் அன்று;

வெறி கொள் துழாய் மலர் நாறும் –‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கலவியால் வந்த பரிமளம் பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே அன்றோ?அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல்.-அனன்யார்ஹ சேஷத்வம் சம்பந்த வாசனை உண்டே –
அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம்.
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ?
-குட்ட நாட்டுத் திருப்புலியூர் திருத் துழாய் வாசனை கமழ்வதை தோழிகள் அன்னைக்கு தெரிவிக்க

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? –-‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.- அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு,‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகா நின்றாள்.-‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;-போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது;
திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது;
ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.

———-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.
–4-4-4-

‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த வடிவோடே அணைக்க வந்ததே-கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா -வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.நின்ற குன்றத்தினை நோக்கி –இவ்வளவிலே ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து,-‘நெடுமாலே வா,’ என்று கூவும் –வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம்.
அங்ஙன் அன்றிக்கே, சீயர்,-நஞ்சீயர்- ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் – யானையின் கலவி.-கதவு இடில் -தடையிடுதல்.-அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,

பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, -‘நாரணன்’-ஒரு காரணம் இன்றியே உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார் காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.-என்று – என்று இப்படிகளைச் சொல்ல. உபகாரம் கறுமை குளிர்த்தி -மூன்றும் சாதுர்ச்யம் -மழை மேகத்துக்கும் இவனுக்கும் – இன மையல்கள் செய்தார் – இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.

———

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–
4-4-5-

கோமள வான் கன்றைப் புல்கி-கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி.-‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு.-கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு,-கோவிந்தன் -மேய்த்தன -வெறுப்புடன் -கன்றுக் குட்டி கழுத்தைக் கட்டி போகின்றான் –என்னை எப்பொழுது கட்டுவான் – ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.-வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,-

போம் இள நாகத்தின் பின் போய் – அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா நிற்கும். – இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி.-‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும் அனுபவத்திற்கும் பெயர்-

கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின்,-அதன் பின்னே போகாநின்றாள். ‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி.
அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ?
‘பரம போகி’ என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும்,
‘பரமனான போகி’என்றும் பொருள் காண்க. போகி – பாம்பு; இன்பத்தை யுடையவன்.
அவன் கிடக்கை ஈது எனும் –அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக் கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.

ஆம் அளவு ஒன்றும் அறியேன் – உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன்-கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி.
அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.-பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத் தாயார்க்கு இருக்கிறது?

அருவினை யாட்டியேன் பெற்ற-அக்கரையளாய் – பரமபதத்திலிருப்பவள்-இவள் தனக்குப் பெறாப் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’ என்கிறாள்.-நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’-திருவிருத்தம், 37.-

————

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!
–4-4-6-

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் 
இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கி யிருந்தாற் போலே காணும் கிடப்பது;-ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள்.
ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது.இடையர் கூத்தாட வில்லை -இங்கு
விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும் போது நிறைந்த பசுக்களையுடைய
கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள் அன்றோ
அதனைக் கேட்டும், அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.

வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் –
‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் –
முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில், ‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த
வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய் ஈது,’ என்பாள்.
உண்டு சேஷித்த வெண்ணெய் உடன் சஜாதீயம் -சம்பந்த பதார்த்தம் -உண்டு விட்டது சேஷித்த என்று சொல்ல ஒண்ணாது –
பொதுவான வெண்ணெய் -வாயது கையதாக பிடித்த போது கையில் சேஷித்த வெண்ணெய் என்றவாறு
‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள்.
‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’ என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணி வைத்தான்;
அதிலே தோற்ற அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறத் தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் :
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு –
தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை
நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.-‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம்.
எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்கை;
‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சியாம்.
ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம்.
தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சியாம்.
இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள்;
என் பெண் கொடி 
இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள்.
ஏறிய பித்து –
இவள் கொண்ட பிச்சு.

——–

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.
–4-4-7-

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் –
இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள்.
பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி.
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும்
திருத்தாயார்க்கு இருக்கிறது.-இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி.

நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் –
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு-‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.

தேறியும் தேறாதும் 
‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.

மாயோன் திறத்தனளே இத்திருவே 
மாயோன் இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன்
என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படி காணும் இவள்படிகள் தாம் இருப்பன’ என்பாள்,
‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்; இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.

———

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே
.–4-4-8-

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு,
சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா
மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து,
‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,
‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,
அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் 
தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற,
இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். ‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும்.
மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே.-பகவத் பிராவண்யம் -அபி நிவேசம் இவருக்கு -சத்தா பிரயுக்தம் -சஹஜம்

———

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே
.–4-4-9-

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற் போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டுமயங்குகின்றதாகிய இதுவும்.
அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச் செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற் போன்று, இதுவும் மயக்கத்தின் காரியம்

சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஜ்ஞான கர்மங்களே சிறகுகள் –
மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ ‘இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து
விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு,
‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.

பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் –
அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து
உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும்.
அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல்.
பின் செல்லும்’ என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே வருகின்றான் என்று நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச் செல்கின்றாள் என்பது.
மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின் மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்துசெல்கின்றாள் என்பது.

அரும்பெறல் பெண்ணினை –
ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும்
அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்ல கண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது;
அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும் பொருள்.

——–

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?
–4-4-10-

பெயர்த்தும் கண்ணா என்று பேசும் –
மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் – அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே
பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள்.
அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’
நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல்.

ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற் போலே காணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது-

——

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே
.–4-4-11-

பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,-என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர்-

சொல் வினையால் சொன்ன பாடல் –சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல்.
அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘சொல் தொழிலால் – அதாவது, வாசிகமான அடிமையால் சொன்ன பாடல்’ என்னுதல்.

நல் வினை என்று கற்பார்கள் –-இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?-ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.

இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. வீற்றிருப்பாரே – அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி இருக்கப் பெறுவர்கள்.கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார்-ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சீதாப்பிராட்டிக்காக செய்ததா-ஆண்மையை நிரூபிக்கச் செய்ததா-இலங்கை அழகுடன் இருக்கக்கூடாது என்று பொறாமையால் செய்ததா-தாயார் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும்
ராத்திரி படுத்தும் பாடு தலைமகன் கொடுமையைக் கூறுதல்-ஆடி ஆடி -2-4- விவரணம் இதுக்கு
அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே-மனத்துக்கு இனியனான ராமன் போய் கொடுமை செய்வாரோ – ஏலாப் பொய்கள் உரைப்பான் -பெண்ணின் வருததம் அறியா கண்ணன் செய்தால் ஆறி இருக்கலாம்-
பிரளயம் -வேஷம் மாற்றி இருள் என்று பேர் கொண்டு வந்து நலிய உதவாமல் உள்ளானே
குளிர்ந்த திருத்துழாய் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக -இக்காலத்திலும் இரங்காமல் -என்ன கொடுமை –சீதாபிராட்டி காகவும் உதவாமல் கொடுமைகள் செய்வதிலே பிரவர்த்தினான் போலும்
அம்மனோ -விஷாத சோதகம்

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் – தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்- ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வேநா நீகே நமர்திதும் -என்று (வானர )முதலிகள் –நான் அழிக்க நான் அழிக்க-என்று சொல்லுமா போலே – வாடையும் ராத்ரியும்-
நான் நான் என்று நலிகிற படி –

இப்படி கால சந்நிதியிலும் போக ஸந்நிதி இல்லாமையாலே மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை-இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கீழ் ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று அதுக்கும் மேலே இருளும் வந்து தோற்றிற்று

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல் இருளும் ராத்திரியும் இவளை நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்-இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
–36–துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —14-எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய ஸூரிகளையும் கூடப் பிரிகையாலே தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை – ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய் இருக்கும் ஆயிற்று –

துழா நெடும் சூழ் இருள் என்று –இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் –பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –சூழ் இருள்-ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது –-தீர்க்கயாமா த்ரியாமா-என்று இறே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –மூன்று ஜாமம் கொண்டது இரவு –சந்தியை -கழித்து 22 அரை நாழிகை தான்-சேர்ந்து உள்ளாருக்கு சட்டு என்று போகும் -பிரிந்தால் ஊழி போல் தானே இருக்கும்–இருள் என்று –வருகிற போது சன்யாசியாய்
கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே-தம் தண் தாரது பெயரா – தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட இத்தைக் கொண்டு –எழா நெடு வூழி–பேராத (அசையாத _ கல்பம் –மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி-எழுந்த-தோற்றின –சம்வர்த்த
பிரளய கல்ப என்னும் படியே (பர்யாய சப்தங்கள் ) பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-தயமாந மநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே –அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு-அவன் பக்கல் கிருபை இல்லாமையால்-இப் பிரளயத்துக்கு முடிவு இல்லை-

விக் காலத்தும்–ஸீதாதா வேண் யுத் க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க தசையாய் இறே இருக்கிறது–ஈங்கு இவளோ – இப்படிப் பட்ட இவள் –
அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-இவளும் இவள் தசையும்-சம்சாரிகள் போலவும் சம்சாரிகள் தசை போல் அல்லவே இவளும் இவள் தசையும் ஐந்து வாசிகள் சாதிக்கிறார்–1-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி -2-அங்கு பிரகிருதி அளவிலே – இங்கு ஆத்மா அளவிலே –3-அங்கு நீர் பிரளயம் – இங்கு ராத்திரி பிரளயம்–4-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு – இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது-5-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –
இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது–

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் – வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-துக்கேந புபுதே ஸீதாம்--திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று அறிந்தால் போலே அறிதல்
ஒழிதல் செய்யும் அத்தனை இறே –கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் –இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும் பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே –பகவத் ருசி மாறுவது
1-சைதன்யம் இல்லையாதல் –2-விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இறே-ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில் இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ-கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ–ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ–எங்களுக்குப் புறப்படில் குற்றம் – தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –வரில் எங்கள் சேஷத்வம் அழியும்-வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –

(பரகத அதிசய ஆதேய )சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது –ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது –(அவனைக் குறைவாளனாக ஆக்காமல் இருப்பதற்காக –நாமே ரக்ஷணத்தில் இழியக்கூடாதே )வைதர்ம்யன் நேஹ வித்யதே -என்னும் படியே பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே-ராவண சந்நிதியில் இருந்து –த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள்(ஆனை போல் பெருமாள் நீ முயல் போல் )
இப்போது(பராங்குச நாயகி ) சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும் ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி –ரக்ஷகத்வம் பிரணயித்தவம் போன்ற ஸ்வரூபம்
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இல்லாமல்-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -மறந்து இருந்தாள் –இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது-ஸ்வரூப ஞானம் இல்லை –
ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ –அத்தலை – நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது-த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே குளப்படி கலக்கினால் போலே அன்று இறே-கடல் கலங்கும் படி(கொசு பூச்சி கடித்தாலும் அறியாமல் உன்னையே நினைந்து இருந்தார்
சமுத்திர இவ கம்பீரமான பெருமாளே கலங்கி )அத்தலை-ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் – இத்தலை –ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இறே இருப்பது-இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இறே இருப்பது-

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை
–நான்முகன் -7-நாரணனே நீ என்னை அன்றி இலை –-பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது-இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன் அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே –உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )

இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே
– ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 — நின் அருள் என்பாலதே- உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் – உனக்கு சேஷ பூதனை ஒழிய சேஷித்வம் இல்லாமையால் இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –நாரங்களை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் – நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது–நமக்கு ஸ்வரூப நாசம் மட்டும் அவனுக்கு ஸ்வரூபமும் குணங்களும் நாசம் ஆகுமே -குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் – சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –

இரங்கார் –வாராது ஒழிந்தால் –பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக் கொள்கிறானே )அம்மனோ – புலி என்னுமா போலே – ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்- அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –ஓ என்று–க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –-அசை என்றுமாம் –இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

சந்த்யா காலமும் வாடையும் கீழே சொல்லி மேலே இருளும் வந்து தோன்ற – நான் முன்னே நான் முன்னே என்று நலியும் படி – கொடுமைகள் -பன்மை –அம்மனோ –ஐயோ என்பது போலே

கடல் வழி விட நிசிசரர் பொடி பட விரு கண் சீறி
வட கயிலையில் எழு விடை தழுவியது மறந்தாரோ
அடல் அரவம் அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலர் முருகலர் துளவும் இரங்காரே-
திருவரங்கக் கலம்பகம்

இவை செய்தது தம் பிரபுத்வம் நிலை பெற பிராட்டியை ரஷிக்க அன்று–துழா-பிரிந்த நாயகியின் உயிரை கை விட்டுத் துழா கின்ற–சூழ் இருள் –தப்ப ஒண்ணாத இருள்–தம் தண் தராது பெயரா–வழா நெடும் துன்பத்தள்--திருத் துழாய் மாலை நிமித்தமாக துன்பப்படுகிறாள்–தம் தண் தராது பெயரா–வூழி எழுந்த-இவளை வருத்தவே இருள் என்னும் கல்பம் என்றவாறு-இருள் என்ற வூழி எழுந்த விக்காலத்தும்--வருகிற பொழுது சந்நியாசி எழும் பொழுது ராவணன் போலே இருளாக வந்து கல்பமாக ஆனதே–இரங்கார் –பிரணயித்தவம் இல்லா விடிலும் ஐயோ என்னவாவது வேண்டாவோ-நெடு ஊழி--கல்பத்துக்கும் எல்லை உண்டே –இக்காலத்திலும் – பிரளய காலத்தில் உதவினவன் இக்காலத்தில் முகம் காட்டாது இருக்கலாமோ –

துழா நெடும் சூழ் இருள் என்று–துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்-தம் தண் தாரது பெயரா-தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின இவ்வளவிலும்–ஈங்கு இவள்-இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்--ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று-இரங்கார்–பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்–அம்மனோ-என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது–நெடிய இருள் இறே என்றும் இருள் பொறுக்க மாட்டாள் என்றும் துக்கம் கனவிது என்றும் இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த கால தைர்க்யம் விஞ்சின அளவிலும் இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர் அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர் இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என் என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி – அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
துழா இதுக்குத் தேடிப் பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ -ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு-நெடும் சூழ் இருள் என்று எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று ஒரு பேரையிட்டு தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே-ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில் அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே-வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்-தன் தண் தாரது பெயரா வழி போவாரை யடைய நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி-அங்கன் அன்றிக்கே வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்-அது அங்கன் அன்றிக்கே இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே அழித்தார் இத்தனை அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால் போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும் முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்-தம் தண் தாரது பெயரா-தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி–எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும் இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்–ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல் அத்யா பன்னை யானவள்-–ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று-இரங்கார்-இரக்கத்தைப் பண்ணுகிறிலர்-அம்மனோ-புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது இந்தக் கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-இலங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய கொடுமைகள் இருந்தபடி என்-ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

ஸ்வாபதேசம் –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் கால விளம்பம் சஹியாத மோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீடிக்க-ஈங்கு இவளோ-வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்--இருள் தரும் மா ஞாலத்தில் சக்தி அற்ற ஆழ்வார் தம் போக்யத்தையே
கூறிக் கொண்டே அது பெறாமல் துடிக்க இரக்கமும் காட்ட வில்லையே-திருவவதரித்து அநிஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அருளும் நீர் இவர் பக்கல் இரங்காது இருப்பது என்னே

தாத்பர்யம்
பகவத் அனுபவ யோக்கியமான தசா விபாகம் பிறந்த அளவிலும் அவன் வந்து உதவாமல் இருப்பதால்
ஆழ்வாருடைய தளர்த்தியைக் கண்டு சர்வேஸ்வரனை நிர்த் தயையானவன் என்று பாகவதர் பாசுரத்தை நாயகனை வெறுக்கும் திருத்தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
தாம் ஆசைப்பட்ட சர்வேஸ்வரன் அணிந்து திருத்துழாய் பெறாமல் மேலே இரவும் வந்து ஒன்றையும் பார்க்கவும் விடாமல் நாலு பக்கம் சூழ்ந்து கல்பம் போல் நலிய ஆற்றாமை மிக்கு இருந்த ஆழ்வாரை
முன்பு ஒரு பிராட்டிக்காக உதவினவன் இந்த தசையிலும் இவளுக்கு உதவாமல் நிர்த்தயன் ஆனான் இனி நாம் செய்வோம் என்கிறார்கள்

2-4-ஆடியாடி -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )

(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது

பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே 
–2-4-1-

ஆடியாடி –ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று-ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி –
தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து – மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது–
ஆர் குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் –
இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –
கண்ணீர் மல்கி –அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்-இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா–இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –-பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –-பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –-கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்-எங்கும் நாடி நாடி – தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து – கண்ணன் என் ஒக்கலையானே-என்று அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே

நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ

வாடிவாடும்-கொம்பை இழந்த தளிர் போலே வாடும்-முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்

இவ்வாணுதலே-ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே-இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ-தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

—————-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே
–2-4-2-

வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது?-உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா – ‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று,-பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்.-‘பெற்ற எனக்கு ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்.

உம்மை நீர் அறியாமை இல்லையே;-நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’

இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது.
‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின்,
‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம்,-அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்;-தானே காட்டக் காணும் இத்தனையே.

——————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
 –2-4-3–

இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,-‘உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்-அரக்கன் இலங்கை செற்றீருக்கு –-‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான்.

எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்.
அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்.

உம்மை இரங்கும்படி செய்யவோ?-அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’

———

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே
 –2-4-4-

இலங்கை செற்றவனே என்னும் – எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே!’ என்னா நின்றான்.-முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள்.-கலங்கிக் கைதொழும் – தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே பிரணயிநி- தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –-இவளே – அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.

———-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-

‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள்.இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும்.
வாய் வெரீ இ-வாய் வெருவி – ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின்,
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.இக்கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள்.

தவள வண்ணர் தகவுகளே-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

———–

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே
–2-4-6-

தகவுடையவனே என்னும் – கெடுவாய் ! ‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள்-முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள்-என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்-.-உள்ளம் உக உருகி நின்று –அமூர்த்தமான -வடிவம் இல்லாத மனமானது-மூர்த்தீ பவித்து – வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப் போகா நின்றது.

———–

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே
 –2-4-7-

தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று.-என் வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான ஆர்த்திகளிலே – துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.-வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் தாபார்த்தோ ஜல சாயிநம் –‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும்.-இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறது காணும்.–தான் பட்ட -தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே!-அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே-வஞ்சனையே –-பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –

—————–

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே
 –2-4-8-

உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;-கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;-உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்.-ஆஸ்ரித அடைந்தவர்கள்-நாஸ்ரித – பகைவர்கள் என்னும்-விபாகம் அற – வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள்.

வஞ்சனே என்னும் –தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்;
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’,
‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து,
உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள்.

இவள் பட்டனவே –
‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய ஸூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்;
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்;
கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்;
என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்?
இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் –

————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–
2-4-9-

இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என்-‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.

விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்
-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.
ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே,
நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான்

சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள்.
அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரு வாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம்
இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் -‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று.
ஆக, ‘அடைந்தவர் பகைவர் என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி.
‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர் தம்முடைய வார்த்தையும்?
கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இவர்கள்.

இவ்வேழைக்கே– அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
 –2-4-10-

இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;-இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்-தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!–இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!–பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘
(ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். பொன் –பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி-ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில்,-கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள்.-பேதை –
‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்.‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’இவள் தானே முடிந்து போகிறாள்?-நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும், என்பாள்,
வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –

——–

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே 
–2-4-11-

நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;-இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.-இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –வாயும் திரையுகளும் -2-1-

February 22, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்
ஏக தேச உருவகம்-மேற்கு திசைப் பெண் புலம்பல்-பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து-பிள்ளை -சந்திரன் அழுகிற பெண் மேற்குத் திக்கு பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்-பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல்-மாலைக்காலம் உயிரை-சத்தையை – மட்டும் நலியாமல் போக வாடை அத்தையும் -ஸஜாதீயம் அன்றோ -துழாவி கவர முயலுகின்றதே
நானும் புலம்புகிறேன்-நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –வாயும் திரையுகளும் -2-1-
வாயும் – எம்மை போல் கோட்பட்டாயே -அங்கு தலைமகள் இது தாய் பாசுரம்
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட காதல் பத்திமைக்கு வரம்பு இல்லையே –

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை இருக்கிற படியை கண்டு – இது என்னவாய் தலைக் கட்டக் கடவது–என்று திருத் தாயார் பயப் படுகிறாள்-இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவைப் பாராதே –இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்–வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –இத் தலை-மேற்கு திசைப் பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே  –

இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு ஸந்நிஹிதமான அளவிலே ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு அனுசந்தித்த பிரகாரத்தை மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை-மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால் நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
 –35-மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து —11–லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற-வாயும் திரை யுகளில் அர்த்தத்தை-வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –அநந்ய பிரயோஜனராய் அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் – தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் பகவத் சம்ச்லேஷம் யுண்டாய் ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி– பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு -பகலை இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள்-சந்த்யா சமயத்திலே ,பிரபலியா நின்றாள் –புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-பால் வாய்-வாயில் முலையை வாங்கில் வாடும்-பகல் இழந்த —இழந்த பர்தாவின் கனத்தைச் (லோக உபகாரத்வத்தைத் ) சொல்கிறது-ஒரு மனு மாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,-பகல் கண்டேன் –என்று இறே சொல்வது-பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -ஸூரியனாக நாராயணனைக் கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81–மேல் பால் திசை பெண் —நாயகி உடைய கனம் சொல்கிறது –(மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே )திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே —மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-(திசா பெண்பால்-சந்திரா ஆண் பால் -பிள்ளை )

உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை —
சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது–பனி வாடை-
நஞ்சூட்டின வாடை –பிராண அவஸ்தமாய் இருக்கையாலே –பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது —நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?-எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று அழியா நின்றது-

இது வோர் பனி வாடை--வாடையின் கொடுமையை வாய் கொண்டு கூற முடியாமல் -இது -சுட்டிக் காட்டுகிறார்-ஓர் –-வேறு துணை இன்றி தானே அஸஹாய ஸூரனாய் நலியும் படி
பனி வாடை--முன்பு குளிர்ந்த நிலை இன்றோ வெவ்வியதாய் இருக்கும் –-ஸ்திரீகளை நடுங்கவைக்கும் வாடை என்றுமாம் –துழா கின்றதே--மர்ம ஸ்தானத்தில் கை வைத்து வாட்டும்
ஓர் வாடை –-நிலா மாலைப் பொழுது கடலோசை சேர்ந்து நெளிவதை தானே பண்ண வற்றாய் இருக்கை-பகல் இழந்த-மேல் பால் இசை பெண் புலம்புறு மாலை –-மாலைப் பொழுதும் தம்மைப் போலே வருந்தும் சந்திரன் ஆகிய பால் மாறாத வாயை யுடைய இளம் குழந்தையை இடுப்பில் வைத்து
கணவனை இழந்ததை சொல்லி கதறி அழுவது போலே அன்றோ மாலைப் பொழுது –உலகு அளந்த-மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்-சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –மாலை இவளை முடிக்காமல் உயிரை விட்டுப் போக அத்தையும் கொண்டு போக வந்ததே இவ்வாடை–மனம் உடையார்க்கு –தம்மைப் போலே உள்ளார்க்கு–மனம் உடையார்க்கு என்று படர்க்கை-தோழி வார்த்தையாகவும் தாயார் வார்த்தையாகவுமாகக் கொண்டு ஆழ்வார் நிலையைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஞ்சிச் சொல்லும் பாசுரம்-

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு-பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண் தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது–பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று-தன்னிடத்து வாய்ந்த பிறைப் பிள்ளை என்றுமாம்–பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்–ஓக்கலாவது –-சுற்றம்–பகல் என்று-ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்–இத்தால் மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று தோற்றுவித்ததாயிற்று–உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல் எல்லை நடந்து தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி-சோல்வான் புகுந்து-கொள்ளுவதாகப் புகுந்து-இது வோர் பனி வாடை–முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –துழா கின்றதே–துழாகின்றது–சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்–பால்வாய் -என்று தொடங்கி மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே-அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால் தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது-(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்-மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )உலகளந்த என்று மேலுக்கு -அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும் குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை-பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்-இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்-தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள் என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்–ஆர்க்கு என்னஉலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி–இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான் உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்-மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும் கண் விழிக்கவும் பெற்றாள் இத்தை அபஹரிக்குமதாய் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே-முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நல்கிற்றை எல்லாம் சோல்வான்-இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது–இதுவோர் பனிவாடை-இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ-இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது–துழா கின்றதே-இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்-இத்தால்-சந்த்ர உதயம்-அத்தால் வந்த பரிச்சேதம்-இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

ஸ்வாபதேசம் –
பால் வாய் பிறைப் பிள்ளை–
ஞானத்தின் சிறு பகுதி பகல் இழந்த-விவேகம் குலைந்த நிலை –
மேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மை வழி காட்டும் பர தந்த்ரர்-புலம்புறு-ஆற்றாமை மிக்கு
மாலை
-உரிய காலம்-ஆற்றாமைக்கு மேலே சம்சார பதார்த்தங்களும் நலிய –
உலகு அளந்த மால் –தானே தீண்டியவன் வேண்டுகின்ற என்னை ஆள் கொள்ளாமல் ஒழிவதே

ஸ்வா பதேசம்
பகவத் விஸ்லேஷத்திலும் , அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்கக் கடவதோ -என்று அஞ்சுகிற படி-

தாத்பர்யம்
நாயகி மோகித்து-ஸந்த்யையும் வாடையும் நலிய ‘ தாயார் இவளையும் சமானமான மேற்குத் திக்கும் கணவனான பகல் ஆகிற ‘ஆதித்யன் மறைந்து போக சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப வைத்தது
துளி ஞானம் பாக்கி போல் அங்கும் பிள்ளை கையிலே உண்டே -உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க-வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ-திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று இருவருக்குமாகத் திருத்தியார் துக்கப்பட்டாள் –

2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –

முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு  ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
 –2-1-1-

நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த -வைவர்ண்யமும் -பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ் விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள்.-துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும் பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும் பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இரா நின்றாய்,’ தத் தஸ்ய சத்ருசம் பவேத்-என்று கூறி இருந்த ஸ்ரீ பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மே போல் நீயும்’ என்கிறாள்.-மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள்.
நெஞ்சம் கோட்பட்டாயே ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ  வேர்ப் பற்றிலே நோவு பட்டாய் ஆகாதே! என்பாள்,  நெஞ்சம் கோட்பட்டாயே’  என்கிறாள்.

இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

——————

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே 
–2-1-2-

ஆள்பட்ட எம்மே போல் நீயும் – ‘நெஞ்சு பறி யுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்  தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறு பாட்டை யுடையதாகப் போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள்-மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.-ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் இல்லை -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லை -என்றபடி

மேல் திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே?
ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள்.-ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள்-அவர்கள் இருவரும் கூடத் துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள்.-‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறா விடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.-சங்கம் -காமம் -அநுராகம் -ஸ்நேஹம் -இத்யாதி அவஸ்தைகளில் பிரதமம் சங்கம் -என்றபடி –

இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே
 –2-1-3-

அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து-கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ?-அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.-பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே-
பிரணயிநி -காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனை யன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’-தோள் நயந்த யாம் என்னாதே தாள் நயந்த யாம் என்றது ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே அடி விடாத வாசனையால்
தேரியும் தேறாமலும் ஸ்வரூபம் குலையாதே அடியோம் தொடர்ந்து குற்றேவல் -அடிச்சியாம் அடிக்கீழ் குற்றேவல்

இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

—————-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –
2-1-4-

காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால்,  இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின்,  காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே- ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினாள் -ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய ப்ரதிஜ்ஜை ஆனவன் ஓரத்து அளவும் -அதாவது- செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள்,  ‘அடல் கொள் படையாழி அம்மான்’ என்கிறாள்.
(ஓரம் -திரு ஆழியின் முனை கூர்மை என்றும் ஸஹஜார்த்தம் -ஆஸ்ரித பக்ஷபாதம் )

உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

—————-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
 –2-1-5-

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்

இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

——–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
 –-2-1-6-

மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற –
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -ஏதத் விரதம் மம என்றும் –
மா ஸூச -என்றும் -எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு- பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே–என்கிறாள் –நைவு வாய -இடம் -நைவுக்கு இடமாய் நைவை யுடைத்தான என்றும் நைவே தானே வடிவு கொண்டு இருக்கிற என்றபடி –எம்மே -எங்களை என்றது நாரை அன்றில் கடல் வாடை வானம் இவைகளைச் சொன்னவாறு -அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 
தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள்,  ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள்.-இதனால், அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி,-இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.

இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

———

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே
 –2-1-7-

மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய,  சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார்  அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: 
அம்மங்கியம்மாளும்  அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப் பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ?’ என்கிறாள் என்பதாம்

எம்பெருமாற்கு –கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது?நாரணற்கு –தன்னுடைமை’ என்றால் வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது?அவனைப் பெறவோ-போன நெஞ்சைப்பெறவோ?-எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.‘உன் இழவு கனத்திருந்ததே! வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் அவசாதம் – நலிவு நீங்கி -ஜீவித்திடுக -வாழ்ந்திடுக,’ என்கிறாள்-

————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –
2-1-8-

இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;-அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச் செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.-காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். காலமாகில் திவா ராத்ரி விபாக விபக்தமாகவே இருக்கும் என்று இருக்கையாலும் காலம் நசித்தது என்று இருக்கிறாள்-

இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

———–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –
2-1-9-

அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
( சாடு -தத் துக்கஸ்ய பாரம் த்ரஷ்டும் அசமர்த்தா ஸதீ இதி த்வனி ) அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;-அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

அம் தாமம் தண் துழாய் ஆசையால் –‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே.-பதி சம்மானிதா சீதா பார்த்தாராம் அஸி தேஷணா (  ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி,-கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’) என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. ( தன் திருக்கழுத்தில் மாலையைச் சாத்தினார் என்று இறே ஆழ்வான் பணிக்கும் படி அஸி தேஷணா என்கையாலே தானும் ஒரு மாலை இட்டால் போலே காணும் -என்னும் ஆழ்வான் )வேவாயே- ‘உக்கக்காலுக்கு உளையக் கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள். –உக்கம் விசிறி –கால் -காற்று  

இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

———–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
 –2-1-10-

இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்-

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின்  ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.
‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின்,   அல்லாது நெருப்பைப் போல அன்று;-வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய்.-இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம்.-இப்பொருளுக்கு வீழ்த்தொழிந்தாய்’ என்பன-உன்பாலே வீழ்த்து –ஒழிந்தாய் இரண்டு சொற்கள். 

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய்,-மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களை – உதவிகளைச்செய்து,
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே!
இனி, ‘மூவா முதல்வா’ என்பதற்கு,-‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’

அச்சேத்யம் என்னும் அது-ஈரும் வேம்-ஈரியாய் உலர்த்த வென்னப் பட-சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-கரணங்கள் முடியானேயில் அவையாக-உடலம் ஆத்ம தர்மம் கொள்ள-காற்றும் கழியும் கட்டி அழக்-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-—சூரணை –132-

உலர்த்த – வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –

இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –

——————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே
 –2-1-11-

இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே – நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ இது நிச்சிதம் -என்கிறார்–ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் 

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.-இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. (அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார். 

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -மின்னிடை மடவார்கள் -6-2-

February 21, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )

ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள் இரட்டைப்படை வந்தால் பெறுவாள்-கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
-ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்-மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் – இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி-ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –-அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்-பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே-நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு கடல் இடத்து கோபித்தாள் என்பர்


இப்படி அவசன்னரான இவர் பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து அது கூடாமையாலே பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு-கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற நாயகியைக் கண்டு தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை-கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும் ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே-அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே-இது தான் அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
-34-கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு
—52-தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று பரிவார வர்திகளான ஸூஹ்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க அவனும் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும் சேஷ்டிதையாலும் தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை – ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும் செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி 

சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி — முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே- அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்–பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,- சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்-மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் -கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே– சாபமானாய ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-வில்லை மட்டும் முதலில் கொடுத்து-மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல்-

சீர் அடி இத்யாதி--ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்-பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?-பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது–சீர் அடி –சீற்றம் உள்ள அடி-அழகை யுடைய அடி-மென்மையான அடி--இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்–தூணிலே ஒதிங்கினோ பாதி  –இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்–கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ-நீர் தோறும் பரந்து நிற்கிறது-அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்–மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே
குலசேகரப்பெருமாள்–அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட-இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை-உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான்–துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே–வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் –அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்
–-ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்--தரம் பாராதே உதைக்கின்ற படி-மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற  வேண்டப் பாடு உடைய நாயகம்-

மாலே--இவளை இப்படி பிச்சேற்றி-இவள் பிச்சைக் கண்டு பிச்சேறி இருகிறவன்–உனது தண்டார் இத்யாதி–-உன் பக்கல் உண்டாய் குளிர்த்தியை உடையதாய் , தாரையும் உடைத்தாய் கொம்பிலே நின்ற போதை காட்டில் , திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே  , மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து–பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9–திருத் துழாய் என்றே பதையா நின்றாள்--பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி  –என்றும்–வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே(இளைய பெருமாளையும் சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )(கடல் தானே ஜனனி-தாயை உதைக்கலாமோ என்னில்–இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்–விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்-இரண்டுமே சாதனம் ஆகாதே–பேறு தப்பாது என்று இருக்கையும்–பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே-அவன் நினைவே இரக்கமே உபாயம்

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் -ஆண்டாள் கூடல் இழைக்கும் பதிகம் –கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே -கூட்டுமாகில் நீ கூடிடு கூடிலே -கோ மகன் வரில் கூடிடு கூடிலே –கூடலாவது -வட்டமாக கோட்டைக் கீறி -அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து-இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால்
இரட்டைப் பட்டால் கூடுகை -ஒற்றைப் பட்டால் கூடாமை -என்று ஸங்கேதம்-பிரிந்தார் இறங்குவது நெய்தல் நிலம் -ஆகையால் கடல் கரையில் கூடல் இழைப்பர்–சிதைக்கின்ற தாழி என்று-ஆழியைச் சீறி-அதனைச் சீறி -என்னாமல்-ஆழியை -சுட்டுப் பெயர்-ஆழி சிதைக்கின்றது -கூடல் வட்டம் கார்யம் கெடுப்பதாக -தன் கார்யம் கை கூடாமை –வெறுப்புக்கு கொண்டு-காலால் உதைக்கின்ற –சீறடி -சீற்றம் கொண்ட அடி -சிறிய அடி–தண்டார் ததைக்கின்ற–மாலையாகத் தொடுக்கப் பட்ட – வாடாத மலர்கள் நிறைந்த-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி-ஆழி என்று கூடல் வட்டம்-கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று அந்த ஆழியை வெறுத்து–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-தன்னொடும் தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற மேனாணிப்போடும்–சீரடி என்று-சிவந்த அடி -என்றுமாம்-சீறடி -என்றும் சொல்வர்மாலே–பெரியவனே-இவள் ஆவி அழித்த பெருமை–பெரிய நீ காணத் தகும் என்று கருத்து–அன்றியே-மாலே உனது தண்டார்-தண் தார் –என்று-மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் -உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற குளிர்ந்த தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு–தார் என்று–மாலை ஆகவுமாம்–பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல் கிலேசிக்கிற கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்-மாதின் திறத்து-கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்-அறியேன் செயற் பால் அதுவே–செய்யத் தக்கது அறிகிறிலேன்–இவளைப் பதைப்பிக்கிற நீயே–பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்-சிதைக்கின்ற தாழி என்று தன் கையில் வியாபாரம் ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி–ஆழியை சீறி -என்று-ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி–தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று–அனுபாதேயத்வ புத்தி பிறந்தால் அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில் இவ் வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது-அதாவது-ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்–மாலே -என்று விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும் ஞான சக்தியாதியாயும் யுள்ள குணங்களின் பெருமை சொல்லுகிறது –மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் –உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று-இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும் –அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல் ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறதுவிஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –மாதின் திறத்து -என்று-ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி–அறியேன் செயற் பால் அதுவே -என்று-ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு -கலந்து பிரிந்த தலைமகள் நாயகன் வரவு தாழ்த்து ஆற்றாமை மீதூர்ந்து பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே–ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம் ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1- தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய் ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய் அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும் இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே –ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ் வாற்றாமைவ்யதிதாம் -ஆரண்ய -29-1- இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை–அநிந்திதாம்–அத் தலையால் வரில் வரும் அத்தனை-அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்–வ்யபேத ஹர்ஷாம்-சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ ––

ஸ்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார் ஆற்றாமை கண்டு விண்ணப்பம் செய்கிறார்கள் –
சிதைக்கின்ற தாழி –தம் கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்கு காரணம் ஆகாது என்று அறிந்து ஆழியைச் சீறி -அவ்வுபாயத்தைக் கைக் கொள்ளாது வெறுத்து தன் சீர் அடியால்-உதைக்கின்ற -அவ்வுபாயத்தை கால் கடைக் கொண்டு தள்ளி விடுகிற ஆழ்வார் ஆற்றாமையை தணிக்கும் உபாயம் நீயே அறிவாய் மாலே –மகா புருஷனான நீ இப்படி உபேக்ஷிப்பது உன் பெருமைக்குச் சேருமோ தனது கூடலை அழிக்கும் கடலைச் சீறி என்றுமாம்-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு , நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோபாதி கூடலோடே கோபிகிறாள்--முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு- அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்-பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று கூடல் இழைக்க புக்கவாறே-கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே -அத்தோடு சீறா நின்றாள்- நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே- சாபமானாய ராமோ ரக்தாந்த லோசன -என்ன- கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

தாத்பர்யம்–கீழே மோஹித்துக் கிடந்த நாயகி–அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள் அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல் சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும் நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள் நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்

6-2-மின்னிடை மடவார்கள்-ப்ரவேஸம்-

பிரகர்ஷமாக -இழுத்துக் கொண்டு போகும் -ப்ரேமத்தால் வந்த கோபம் -பிரணய ரோஷம் –
கலக உத்சவம் -மட்டை உத்சவம் -ஆழ்வார் பெரியவர் சொல் படி சேர்வார்கள் அங்கு
இங்கோ ஆழ்வாரது சங்கல்பம் உடைத்து -கூடுவேன் அவன் –
முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சங்கல்பம் -பெருமாள் தீர்த்து வைப்பது -11 பாசுரம் –
மாசறு சோதி –5-3- தொடங்கி வியஸனம் -அறிவித்த பின்பும் வராமல் இருக்க ப்ரணய ரோஷம் இதில் –

இவ் வாழ்வாராகிறார்
சம்சார பயத்தாலும்,
பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும்,
கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும்
பகவத் விஷயத்தில் கை வைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையரா யிருப்பர்.

“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர் படி உண்டு என்னவுமாயிருந்தது;
“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு, அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது;
(17 இனி திருவாய்மொழியில் 3 இனி திரு விருத்தத்தில் இருபதின் கால் இனி என்றாரே )
“வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேக யாத்திரை செல்லாமையாலே முத்தர் படி உண்டு
என்னலாயிருந்தது;
“நின்னலால் இலேன் காண்” –திருவாய். 2. 3 : 7.-என்று, அது தான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி -சத்யா பிரயுக்தம் –
வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது;
பிரணய ரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது.

“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”
“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,
பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே,
அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.
( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127- உண்டே )

இது தான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது -பால்யாத் ப்ரவ்ருத்தி -ஒன்றே யன்றோ.
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம், பா. 60-என்றும்,
“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து”-திருவாய். 2. 3: 3.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ
இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

இனி, “ஏறாளும் இறையோனும்” -4-8-என்ற திருவாய்மொழியிலே,
அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியிலே,
எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப் பார்த்தார்;
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியிலே,
தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்று சரணம் புக்கார்;
“வைகல் பூங்கழிவாய்” -6-1-என்ற திருவாய்மொழியிலே,
அப் பெரிய துயரத்தோடே கூடத் தூது விட்டார்;

விட்ட ஆள் சென்று அத் தலைப் பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள் செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வரா நிற்க,
அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து,
‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து,
‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்.

அது இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ.
அங்ஙன் செய்யலாமன்று,
இவள் “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய் மொழியில் ‘வேண்டா’ என்ற போதே போமே யன்றோ.
இனி, போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப் போன்று, முடிவுக்கும் அவன் வரவு வேண்டியிருந்தது.
பிரிவில் குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்;
அவன் சந்நிதியில் அவனை ஒழிய அரைக்கணம் முகம் மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ.
அன்றிக்கே,
அவன் பெயர நின்று இத் தலையைப் பண்ணின மிறுக்கு அடங்கலும்,
அவன் சந்நிதியிலே தான் முடிந்து அவனையே நோவு படுத்தப் பார்க்கிறாள் என்னுதல்.

அவன், வரவிலே சிறிது தாழ்க்க, பிரணய ரோஷம் தலையெடுத்து,
‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம் வேண்டா’ என்று முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே.
“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே,
அவரோடு உண்டான பல நாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப் பாட்டாலும்,
பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி.

இப்படிப் பிரணய ரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரி சிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2.
எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு – பெருமை.
பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
மேலும், ஒரே பொருள் என்னலாம்படி கலந்தவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
ஆதலால், பல காலம் பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம் என்க.
தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம் ஆதலாலும்,
‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’-வேண்டற்பாடு-மேன்மை பெருமை –
அபிமானம் – மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க.
மேலிட்டு வார்த்தை சொல்லுகையாவது,- வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், ‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ?
என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இது தன்னை எங்கள் ஐயர் கேட்டால் போர வெறுப்பர்;
“ஒரு பெண் பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என் மகளைக் கைப் பிடித்துக் கொண்டு போன இத்தனை யாகாதே என்று
இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”
‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம் த்வாம் அந்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷ விக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்க வேண்டாவோ?
நான் ‘உம்மோடு கூடப் போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு
பொறுக்க மாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.-
வைதேகி நடந்திலளே – சிறிய திருமடல்

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் க்ருத்ய புக்த ஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-
குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; இவையும் -ஈர்ஷயம் ரோஷம் -அப்படி யாகாதே தான்.
பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம்.
காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்னதாயிருக்க வேண்டாவோ?
பொறாமை -கோபம் -விட்டு விட்டு -காதல் சித்திக்கும் அவள் பெருமையை கண்டு இவன் உகப்பது —
இவள் பெருமையைக் கண்டு உகப்பது வேண்டுமே
நய மாம் வீர –
என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும்.
உமக்கு ஒரு குறையும் இல்லை காணும்; என்னைக் கொடு போகப் பாரும்.
விஸ்ரப்த: –
தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர் வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும்.
பாபம் மயி ந வித்யதே –
பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும்
தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம் எனக்கு இல்லை காணும்.”
இப்படியே யன்றோ பிரணய ரோஷம் தலை எடுத்தால் இருக்கும்படி.

இவ்வளவேயோ? இன்னம், இவர் தாம் இலக்காகச் சொன்னவை யன்றோ இவை!
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )

ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப் புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

(சிர பரிச்சயம்
கலவி வந்து பிரிவும்
வேண்டற்பாடு மூன்றுமே இவளுக்கும் உண்டே
இவற்றை விவரிக்கிறார் மேல் )

இவளும் “மாசறு சோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு,
அது தன்னை “வைகல் பூங்கழிவாய்” என்னும் திருவாய்மொழி யளவும் வரப் பாடு ஆற்றி,
அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு,
தூதுவர்களுடைய வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி,
‘இனி, அவன் தான் வந்தாலும் கலவியாய் அது பிரிவினை முடிவாக வுடைத்தாயல்லது இராது;
ஆன பின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த கோள் வாய் பொறுக்க அரிதாயிருக்கும்;
பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.
இவள் தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில்,
இவர் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே தானே நடக்கும் -அதனால் வருவான் –
இவள் வர வேண்டாம் என்று அன்றோ நினைக்கிறாள் –
அவன் தான் வாரா நின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை அருளிச் செய்கிறார்
‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.

1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி வருவான் என்பதுக்கு இரண்டாவது காரணம்
இனி, அவன் அளவு பார்த்தால்,
அருள் மா கடல் அமுது அன்றோ கிருபா சமுத்ரம் -ஆகவே வந்தே தீருவார்
“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

இப்படி, களித்துச் ‘சரணம்’ –த்ருப்தனாய் -என்றாலும் பொறுக்க மாட்டாதவன்,
‘மாசறு சோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் போர மிறுக்குப்பட்டு
நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம் காட்டாதொழியச் செய்தேயும் தூது விட்டு,
‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று இருக்கையாலும்;

இவ்வளவும் வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும், -(இது மூன்றாவது காரணம் -)
அவன் இயல்பினை நம்பி யிருக்கையினாலும்,
அவன் வரவுக்கு அறிகுறி யான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்;

இவை யெல்லாம் கிடக்க, (இது நான்காவது காரணம் )
‘நம்முடைய பாக்கிய ஹாநி தான் அவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்’ என்று இருக்கையினாலும்;

(இது ஐந்தாவது காரணம் )
‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும் வல்லன்’ என்று இருக்கையினாலும்,
‘இன்னமும் ஒரு கால் கலந்து பிரிந்து நம்மை முடிக்க வேண்டும்’ என்று இருப்பவனாதலானும்
‘வரவு தப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.

அங்ஙனம் நிச்சயித்தவள், தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல்,
அவனோடு வார்த்தை சொல்லுதல் செய்யக் கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக் கொண்டு,
(உம்மைத் தொகை -வரும் போது என்னாமல் வந்தாலும் –
கர்ம பலம் பெரியதே அத்தை தாண்டி வந்தாலும் -என்றவாறு -)
‘அவன் அறியாதது ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து,-
சர்வஜ்ஞ்ஞன் அறியாத இடம் உண்டோ –

காயாம் பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய் அதன் நடுவே அதி மநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய்,
அம் மண்டபத்திலே கழகமாக இருந்து, வந்தாலும் அவனுக்கு
இட்டீடு கொள்ளுகைக்குப் -வார்த்தை பேசி கேட்டு -பற்றாசு இல்லாதபடி
பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை
ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி,
‘இனி, இவர்கள் மறந்தவை எவையேனும் உளவாகில் அவை பெற்று அவனுக்குச் சத்தை உண்டாக வேண்டும்படியாய்,
இப்படிச் சமயமிட்டு, வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன் மதிளை உரக்க விட்டு,
அவனுடைய முற்றறிவினைக் கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும்
வரம்பில் ஆற்றலைக் கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடி யாகவும் அறுதி யிட்டிருந்து,

“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார்,
“கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 12.
அவ் வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய்,
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில்
திரு நாமம் சொல்லுகை பொறுக்க முடியாதவாறு இருப்பது போன்று,
இவர்கள் கோஷ்டியிலும் உகவை தலை மண்டையிட்டு,
திரு நாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள்.
இது இத்தலை இருந்தபடி.

இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால்,
“வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது.
ஸுசி ஸ்ரவா:-“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன,
‘நல்லது செவிப்படுமவன்’என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
“ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸுசி ஸ்ரவா:”-என்பது, ஸஹஸ்ர நாமம்.

இவ்வளவில் ஆறியிருக்குமவன் அன்றே. “பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு
ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர ஒலி செவிப்பட்ட போது, திருவடி நிலை கோத்து எழுந்தருளப் பற்றாமை
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும்
நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே, இப் பதற்றம் இருந்த படியால்
‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம் கை நெருக்கும்படியாய்,
கருத்து அறிந்து நடப்பவனான பெரிய திருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும் புறத்தே மேற் கொண்டு
“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து தோற்றினாற் போலேயும்;

“பரமாபதம் ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண:”-என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத:
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”- என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம், 57.

திரௌபதியைத் துச்சாதனன் நலிகிற போது ரக்ஷகராகப் பிரசித்தரான கணவன்மார்
ஐவர் இருக்க, -வேடிக்கை பார்த்து இருக்க –
“கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற படியே,
நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, “வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து
‘அவள் தனக்கு அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’
“கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”-என்பது, பாரதம் உத். 58 : 22.
என்று இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குழலையும், முடிப்பித்துப்
பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும் போதும்
“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க் கொண்டு
அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே,
அம்புப் படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவ வேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று
நோவுபட்டாற் போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ.

“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்;
அதனால், அம் மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்”
“ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:- என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.
என்று, என் முற்பாடு கண்டு பின் தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ.
“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன்,
இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்”
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.
என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும்
இழவாலே நாணங்கொண்டு, அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ.

இனி, “மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு
அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்”
“வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.
என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒரு தலையானால் சொல்லவேண்டா அன்றோ.

இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, ‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான
விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே!
நமக்கு இனி ஒரு ஆண் தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்?
இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி,
இத்தலையோடே கலந்தல்லது தரிக்க மாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து,
பிரணய கோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு,
இத் தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்:
சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்;
“கருமை நிறம் பொருந்திய கண்களை யுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு.
“ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,-ஸ்ரீராமா. சுந். 16 : 5.

இனி, ‘மேன்மை கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில்,
அந்தப்புரத்தை யானைக்கால் இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே.
இனி, இவ் விஷயத்தைப் பெறுகைக்குத் தாழ்ச்சியே யன்றோ பரிகரம்;
அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும் போது பயன் அற்றதாய் விடு மன்றோ.
இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே.
இசைவின்றிக்கே இருக்க மேல் விழ மாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று,
மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே.
இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக் காடு ஏறப் போக மாட்டானே. என்றது,
‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற
இவர்களை விட்டு நாட்டாரோடு உறவு செய்யப் போவான் அல்லனே என்றபடி.

இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத்
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே.
திருவடியைப் போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.
“ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
என்றது, பிராட்டியைப் போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று என்றபடி.

இனிச் செய்ய அடுப்பது என்? என்று, “இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி,
‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில் காலைக் கட்டிப் பொருத்திக் கொள்ளுகிறோம்’ என்று அறுதி யிட்டான்
ஏவம் பஹு விதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 1.
தலையான உபாயம் இதனைக் காட்டிலும் இல்லையே. இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.

ஆக, இப்படி அறுதி யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு,
அவளுக்கும் தோழிமார்க்கும் தெரியாதபடி கிட்டச் சென்று, அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்தவன் கண்கள்
ஆரளவும் நின்று விளை நீர் அடைத்துக் கொண்டு கிருதார்த்தனாய் நின்றான்.
ஆலோகத்தின் பின் ஆலாபம் முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன்.
அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத் தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய
இனிய பேச்சுக்களைக் கேட்கப் பெறாமையாலும் மிகவும் தளர்ந்து,
‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும் போது அவளிடத்திற் காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ
தோழிமார்களுக்கு இருப்பது; -பிரிவிலும் அப்படியே’ என்று இருந்தான்.
அவர்கள் அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம் மிக்கு இருந்தார்கள்.

இளைய பெருமாள் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்து”
-“ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 2
என்று புருஷகாரம் முன்னாகத் தன்பக்கல் புகுந்தார்க்குத் தன் திருவுள்ளம் இரங்கும்படி தான் அறிவான் அன்றோ,
இங்கு அப்படியே அவர்கள் புருஷகாரமாகவும் பெற்றது இல்லை.
இனி, இத் தலையில் இசைவு உண்டானாலும் அவர்கள் இசையாத அன்று அழைக்கவும் போகாதே;
“இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாலும், “கொல்லத் தக்கவன்” என்றவர்
தம்மையிட்டே “அழைத்துக் கொண்டு வா” என்ன வேண்டிற்று
“ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யாபயம் மயா
விபீஷ்ணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.
அன்றோ. அவ் வழிகளாலும் ஒரு முகம் பெற்றிலன்.
“கணநேரமும் உயிர்பிழைத்திருக்கக் கூடியவனல்லேன்”
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-என்றும்,
“உனக்கும் கணநேரமும் பிரிவின் துன்பம் பொறுக்கமுடியாததாக இருக்கிறதோ”-
“க்ஷணேபி தே யத்விரஹ: அதிதுஸ்ஸஹ:”- என்பது, ஸ்தோத்திர ரத்நம். 56.
என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்க மாட்டாதவன்,
அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.

இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும்
“தண்ட காரண்ய முழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு”
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.-என்கிறபடியே
மயிற் கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தை யுடையவர்களாக,
இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணய ரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில்
பொறுப்பதற்கும் அரிதாம் படியாய்க் கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்து வாரா நிற்க,
இவ் வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத்
தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள்.

இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது.
கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரை புரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க் கொண்டு
தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே
இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின.
தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான் )

அவற்றிலே அவன் செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள்.
‘நம்மைப் பிரிந்த பின்பு சத்தையோடே குறியழியா திருக்கக் கடவ இவன், இவை யெல்லாம் நம்மை
உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்;
இங்ஙனேயாக வேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்;
அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை;
இது நம் பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க,
அவனும் தன்னழகாலும் குணங்களாலும் தன் செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத் தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத் திருவாய்மொழி.

இனி, இத் திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள்,
‘பகவத் விஷயத்தில் பிரணய ரோஷம் தோற்ற-(சா பத்னி சக்களத்தி ) வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று;
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச் செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள்
இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத் விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம்
இத் திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒரு வழி இடுவதே!
ஆன பின்பு-(ஊடல் திறத்தில் கோபத்தால் பாடுகிறாள் ) இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச் செய்தார்.

“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்று விடுவேன்”
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.
என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.

இத் திருவாய் மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம் பற்றித் ‘தன்னழகாலும்’ என்றும்,
“நம்பி” என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும்,
“எம் குழறு பூவையொடும்”, “கையிற் பாவை பறிப்பது” என்பவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும் அருளிச் செய்கிறார்

“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு”

“ஊடற்கட் சென்றேன் மன் தோழி யது மறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு”- என்ற குறட்பாக்களும்,

“புலப்பேன் யான் என்பேன்மன் அந் நிலையே அவர்காணின்க லப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே”

“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர் காணின் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே”- என்ற கலித் தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின் கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.

பங்குனி உத்தரம் பிரணய கலகம் உத்சவம் -ஆழ்வார் தீர்த்து வைப்பார் -இங்கு பராங்குச நாயகி பிரணய ரோஷம்
பெருமாளே தீர்த்து சேர்த்திக் கொண்டான்

இரண்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக உபஜ்ஞமாக ஆச்ரயிக்க யுத்யோகித்தவர் -அநாதி காலம் பகவ த்வேஷத்தாலே
விமுகரான தம்மை ஈஸ்வரன் ஸ்வ யத்னத்தாலே அபிமுகராக்கிக் கொண்ட படியை ஆராய்ந்து இந்த அபி முகீகரணத்துக்கு அடியான
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவ சோபையையும்
அஷோப்ய ஷோபகத்வத்தையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும்
ஆஸ்ரித கார்யர்த்தமான பரிகரவத்தையும்
ஸர்வ லோக நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் அத்யந்த அபி நிவேசத்தையும்
அதிசயித ஜ்ஞாநத்தையையும்
அபிமத தமமான முக சோபையையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -இந்த ஸ்வ பாவ விசேஷங்களாலே ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய்
அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற
கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு
ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!
–6-2-1-

ஆழ்வார் திருக் குழல் பார்த்து -காரைச் சுமந்த மின்னிடை இருந்ததே என்றானாம் —
அவன் பேசியதை வைத்து வெட்டிச் சொல்கிறாள்-‘மின்னிடை மடவார்கள்’ என்கிறார்கள்.-‘அவர்கள் பாடு ஏறப் போகிறவன் இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை –இது ஒரு தேக குணமும் ஆத்ம குணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.-‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.-நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.-அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –-பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சு ஏறித் துடிக்கப் பண்ணினார் யாரோ?-பிரணய ரோஷம் புற வாயிலே செல்லா நிற்கச் செய்தேயும், அக வாயில் நினைவு இது வன்றோ.-அக வாயிலும் துவேஷமே யானாலும் வஸ்து இருந்தபடி சொல்ல வேணுமே.-துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –

மின்னிடை மடவார்கள்- தங்கள் பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன் ஆழங்கால் படும் துறை அறிவார்களே யன்றோ; ‘அப்படியே யன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.-இங்ஙன் அன்றாகில், எதிர்த் தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே. இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,-நின் அருள் சூடுவார் –உன்னுடைய திருவருளைப் பெறுவதற்கு உரியவர்களாய் இருப்பவர்கள்.
இவ்வளவிலே ‘உன் தலையிலே கால் வைக்கப் பிறந்தவர்கள்’ என்று சொல்ல அன்றோ அடுப்பது;-உறவு தோற்றாமல் இருக்கிறவள் அங்ஙனம் சொல்லாளே அன்றோ;-அங்ஙன் சொல்லுமன்று, அது அவனுக்கு இடமாமே.-அவனுக்குப் பிடித்தது –-அத்தையே இங்கும் செய்யத் தொடங்குவான் -இடம் கொடுத்தது ஆகுமே –

பல வார்த்தைகளைக் கேட்க நினைத்திருக்கிறவன் ஒரு வார்த்தையோடே தலைக் காட்டானே: இட்டீடு கொள்ளுகை யன்றோ இவன் தனக்குத் தாரகம்.

நீ செய்யுமவை யெல்லாம் மறைக்கப் போகாது காண். நீ அங்குச் செய்தவை யெல்லாம் கண்டாயே நாங்கள் அறிந்தபடி.-இப்படியே, நீ இங்குச் செய்யுமவை யெல்லாம் அவர்கள் அறிவர்கள் காண்.-உன்னைப் போலே அவர்களுக்கு வேறு பொருள்களில் நோக்கு இல்லை காண்.-உன்னைப் போலே நினையாதே கொள் அவர்களை.-உன்னைக் கலந்து பிரிந்தார் உன்னை அறிந்தபடியே இருப்பர்கள் காண்; –

நான் அது அஞ்சுவன் – நீ இங்கே சிறிது போழ்து கால் தாழ்த்துப் போனால், அவர்கள் உன்னை அரைக்கணம் முகம் மாறினால், நீ பொறுக்க மாட்டாமல் கிடந்து துடிக்கும் துடிப்பு நாங்கள் காண மாட்டோம்;-உன்னைப் போல் அல்லோம் காண் நாங்கள். கலந்து பிரிய வல்லாயும் துடிப்புக் காண வல்லாயும் நீயே காண்;-பிறர் துன்பம் கண்டால் பொறுக்கமாட்டோம் நாங்கள். உன்னோடு உறவு இல்லையே யாகிலும் நீ படும் அலமாப்புக் கண்டால் பொறுக்க மாட்டோம்;-சிலர் கிணற்றில் விழுந்தால் ஒரு குரல் கூப்பிடும் போது உறவு வேணுமோ?-அவர்கள் பக்கல் முகம் பெறாதே நிற்கும் தடுமாற்றத்தை ‘ஆற்றோம்’ என்கிறார்கள்.

அரைக் கணம் இத் தலையை ஒழிய ஜீவிக்க மாட்டாதே செல்லாமையை யுடைய என்னைப்
பொய்யனாக்கிப் புறம்பாக்கி வார்த்தை சொல்லுவதே! என்றான்

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே –-‘என் தான்? நீ பொய்யன் அல்லையோ?’ என்றார்கள்.
‘நான் என்னோடு கலந்து பழகினவர்களில் இதற்கு முன்பு யார்க்குப் பொய் செய்தேன்?’ என்றான்.
‘நீ யார்க்குத் தான் மெய் செய்தாய்’ என்றார்கள். ‘என் தான்? “உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடு அறுத்து” என்று ஏக தார விரதனாய்க் கொண்டு நான் பட்டன எல்லாம் பொய்யோ? என்றான்.
‘அது தான் நீ வேண்டிச் செய்தாயோ? ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறா விடில் மேல் உள்ளன எல்லாம் நமக்கு ஒரு தொகையில் அகப்படா என்று செய்தாய் அத்தனை யன்றோ!
அபலைகளை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு இட்ட வழி யன்றோ?’

சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச் செய்த,-வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்.

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் – அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்;-நீ செய்கிறவை யெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்;
நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள் காண்;
உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம்.
சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை.

‘அறிந்து என்? அறியாவிடில் என்? பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அது வன்றோ’ என்றான் என்றபடி.(பேசவே மாட்டேன் என்று நினைத்து இருந்த உங்களை பேச வைத்தேனே )
இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.
அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-என்னுடைய பந்தும் கழலும் –-‘பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியனவற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
‘அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அதுதானே யன்றோ வேண்டுவது;-ஸ்வரூப ஞானம் -அனன்யார்ஹத்வம் அறிந்து -சொன்னால் அவர்கள் தனம் அவனுக்கு ஆகுமே-அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ-

“தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.-என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான்,-அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.-இது தான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,-பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.-என்னுடைய பந்தும் கழலும்-“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,-ஒன்றை ஒன்று –ப்ரஹ்மத்தை ஜீவன் -உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ-இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. – ஸ்வரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

தந்து போகு நம்பி–நீ இங்கே கால் தாழா நின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;-அதற்கு முன்னே போ. முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;-கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள்.
“கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் -ஆளவந்தார் -பணிப்பர்.
‘என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
‘தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.

உமக்குப் போன விடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;-எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;-இனி, உம்முடைய திருக் கரங்களின் சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;-ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே-உம்-“உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,-இவன் இவற்றைக் கை விட்டுப் போக மாட்டான் என்று அறிந்து அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள்-ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்-

————–

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்;-வார்த்தை கேட்கப் பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்;-இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லை யன்றோ.
‘போ’ என்றா அவன் அலனோ’.
“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” –பெருமாள் திருமொழி, 6 : 8.-என்று,
இதனை உய்ந்த பிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார்.
இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடு நாள் பிரார்த்தித்துக் கிடந்தது அன்றோ;-ஆன பின்னர், அது வன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். “நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச் செய்தார்.
எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர்.-இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று,-சிங்கப் பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம்.
இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால்-‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளை யுறங்கா வில்லி தாசர்.-பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி.
ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இரா நின்றார்கள்;-அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடு நாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி.
எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே,
அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

போகு நம்பி--“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும் போது ஒன்று இரண்டு அடிகள்-வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ.
வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள்.-‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ?-நம்பி –-எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ?-நீர் குறைவற்றவர் அல்லீரோ?-நம்பி –-எங்கள் பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ?
நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு?
“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்;-அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை.
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார்.
இங்கு அவன் வரக் கொள்ள, ‘போ’ என்னா நின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம்.
இவர்கள் இப்படி ‘நம்பி’என்று சொல்லி இருக்கையாவது, இவர்கள் கோஷ்டிக்குத் தக்கான் அல்லன் ஆகையாலே அன்றோ.
தாழ்ச்சியே மேன்மையாமிடத்தில் முதன்மை கொண்டாடுவது போராதே.

உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் –-காணப் பெறாத காரணத்தால் விடாய்த்து உறாவின கண்களும், கண்டு செவ்வி பெற்றுக் குளிர்ந்தன;
அகவாயில் உவகைக்குப் போக்கு வீடாகப் புன்முறுவல் பூக்கவும் பெற்றான்.
இவர்களுடைய ‘போ’ என்று விலக்குகிற வார்த்தையாகிற அமிருத பானத்தாலே அவனுக்குப் பிறந்த வேறுபாடு இருக்கிறபடி.-ஒரு பிரயோஜனத்துக்காகவும் தன்னை வேண்டுவார் இன்றிக்கே இருக்கிற இடத்தே,-தன்னையே பிரயோஜனமாகப் பற்றி இப்படிப் படுவாரைக் கிடையாதன்றோ -அவனுக்கு ஒன்று இரண்டு ஆயிற்று வேறு பட்டன; இவர்களுக்கு எல்லா அவயவங்களும் வேறுபட்டன.-அணு அழிக்குமாறு போல் அன்றே விபு அழிப்பது.-ஆகுலம் –-பூசலும், வருத்தமும், துக்கமும்.

‘போகு நம்பி’ என்னா நின்றீர்கோள்; ‘ஆகுலங்கள் செய்ய’ என்னா நின்றீர்கோள்; இதற்கு அடி என்?’ என்றான்.
வாராய்! நாங்கள் தாம் மனப்பற்று உண்டாய்ச் செய்கிறோம் என்று இருக்கிறாயோ?
சந்திரனைக் கண்ட அளவிலே சந்திர காந்தம் உருகுகிறது என்ன பாவ பந்தம் உண்டாய்?அழிதற்கே நோற்றோமே யாம் – எங்களுக்கு இது இயல்பு காண். இளைய பெருமாள் காடு ஏறப் போகாத அன்று அன்றோ-எங்களால் அழியாதிருக்கலாவது? 

இவர்கள் இப்படிச் சொன்னவாறே, ‘அவ்வழிவு கலவியின் பொருட்டு அன்றோ’ என்று பார்த்து, அவன்,
‘நம்மைக் கண்ட அளவிலே இத்தனை-கரண சைதில்யம்- வேறுபாடு உண்டான பின்பு
மேல் உள்ளவை எல்லாம் செய்து கொள்ளீர்களோ!’ என்றான்.

அதுவோ உன் நினைவு! நாங்கள் அவர்கள் அல்லோம் காண்! நாங்கள் இங்ஙனே அழிந்தே போக நோற்றோம் காண்!-உன்னைப் பிரிந்தால் கலத்தற்கு நோற்றார் வேறே சிலர் காண் என்பார் ‘யாம் அழிதற்கே நோற்றோம்’ என்கிறார்கள்.

நம்மைக் காணுதல் இவனுக்குத் தரித்திருக்கைக்குக் காரணமாக இருந்ததே’ என்னா,-
தர்சனம் ஆஸ்வாச ஹேதுவாக இருந்ததே – முகத்தை மாறிப் பின்னோக்கி இருந்தார்கள்;
அவ்வளவிலே அவன் நெஞ்சிலே மயிர் பாடு-ரோம ஹர்ஷம் உண்டாயிற்று;
‘தோகை மா மயிலார்கள்’ என்கிறான்.
அன்றிக்கே,
‘நமது வைவர்ணியமும் கண்ண நீரும் இவன் காண்பான் அல்லன்;
தெய்வ யோகத்தால் காணுமவற்றை நம்மால் செய்யலாவது இல்லை யன்றோ என்னாத் திரிய இருந்தார்கள்;-அது தானே இவனுக்குக் காரியமாயிற்று;

நின் அருள் சூடுவார் – உன்னோடு கலந்து பிரிவிலே இப்படிப் பிச்சு ஏறும்படி செய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவு படாமல் அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும் நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான்.
உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ கை கண்டதைப் பிரயோகம் செய்வாய்.-கைகண்டது – அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும் சிலேடை.
‘அது யாது?’ என்றான்.

செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது –-“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள்,-நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள் காண்.-சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன் காற் கீழே வந்து விழுவார்கள் காண்.-நான் குழல் ஊதுகை பெண்களை அழைக்கை என்று பிரசித்தம்; அது எனக்கு ஈடு அன்று” என்றான்.-ஆகில், உனக்கு ஒரு நல் விரகு சொல்லக் கேள்:-ஆகள் போக விட்டு – பசுக்களைக் கை கழிய விடுவது, உடனே குழலை ஊதுவது.-‘அறியாதார் பசுக்களை மறிக்க ஊதினான் என்று இருப்பர்கள்;-அதனை அறிந்து போரும் பெண்கள் உன் பக்கலிலே வந்து கிட்டுவர்கள்.
இது தான் உனக்குச் சாதிக்கு ஏற்ற தொழிலும் அன்றோ.

இனி, உபேய அம்சத்தில் கைப்படாதன இல்லை. இனி, நமக்கு ஒரு குறை இல்லை’ என்று பார்த்து, அவ்விடத்திலே இருந்து ஊதுவதற்குப் புக்கான்.
இனி, தான் விதிகளை மீறி ஒரு காரியத்தைச் செய்யுமவன் அலனே; -குழல் ஊதுகை –விதி -உடனே செய்தான் –குழல் ஊது போய் இருந்தே-உனக்குப் பெண்கள் படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.-தோகை மா மயிலார்கள் – இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான்.-‘இவன் ஓதி உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று,-‘இது மயங்கினவன் வார்த்தை’ என்று அவர்கள் வேறுபடுத்துகிறார்கள்.-தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.

செவி ஓசை வைத்து எழ –-குழல் ஓசையைச் செவியாலே வைத்துக் கொண்டு வர.
ஆகள் போக விட்டுக் குழல் ஊது –-பசுக்களைப் போக விட்டுக் குழல் ஊது.
ஊதவே, உன் நினைவும் முடிந்து பசுக்களின் வயிறும் நிறையும்.
‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது;
அது தான் அபிமத விஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று-குழலை வாங்கி ஊதினான்.-போய் இருந்தே குழல் ஊது –-ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள் திரளுகைக்கு நீர் வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.-

———

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?
–6-2-3-

ஐந்துலக்ஷங் குடிகளில் பெண்கள் உளராகையாலே. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.இவர்களுக்குத் தன் பக்கல் பாவ பந்தம் தன் முகத்தால் அறிந்தான் அவன்.-தங்கள் பக்கல் இவனுக்கு உண்டான பாவ பந்தம் கை மேலே கண்டு விட்டார்கள் அவர்கள். உனக்கு இப்படி விரும்பத் தக்கவர்களாய் இருக்குமவர்கள் யாரோ? என்பார் ‘எவர் கொல்’ என்கிறார்கள்.-இவன் பக்கல் பிரணய ரோஷத்தாலே சொல்லுகிறார்களத்தனை போக்கி, இவனோடு கலந்தாரைத் தனக்கு உத்தேசியராகவன்றோ இவர்கள் இருப்பது.

தன் தோள் அழகு கண்டு பெண் பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான தோள் அழகுடையார் உண்டாவதே!
பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே!-மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே!
பழையாரைப் பெற்றாற் போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.-

———–

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.
–6-2-4-

ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களை யுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு அவ்வருகு போக மாட்டாதே நின்று போலே காணும் பசுக்களை மேய்ப்பது!-தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள்

வல்லாய்’என்றதனால், உன்னை யாரேனும் ஒன்றிலே நியமித்தாலும் நீ நினைத்தது
செய்து தலைக்கட்ட வல்லாய் ஒருவன் என்பதனைத் தெரிவித்தபடி.-

நீயும் நாங்களுமானால் எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு?
சேதநரைப் போலே வந்து வார்த்தை சொல்லுவதே!
அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே!
ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாய் உள்ளது!-

————

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
–6-2-5-

உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் -உன் வஞ்சனை எங்கள் அளவன்று; எல்லா வுலகங்களிலும் பிரசித்தங்காண்.
“வாயும் திரையுகளும்” என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
“தம்மைப் போலே உலகமெல்லாம் நினைத்திருக்கும்” என்று இருக்கிறார்.
சம்பந்தம் பொதுவானால் அங்ஙன் நினைத்திருக்க ஒரு தட்டு இல்லை அன்றோ.
அன்றிக்கே,-சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ.
மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.

உன் வஞ்சனைகட்குப் பெரு நிலை நிற்பார்க்கு அன்றோ தெரிவது.
உன் நினைவு அறிந்து கையிலே வந்திருப்பது,
“பகலை இரவு ஆக்க வல்லையோ?” என்று கேட்டால் “ஓம்” என்று கொண்டு சூரியனை மறைப்பது;-இப்படியே அன்றோ அவனுடைய செயல்.
அப் பொய்யில் அவனைப் பேதிக்கிலும் இவனைப் பேதிக்க ஒண்ணா தாயிருத்தலின் ‘திண் சக்கரம்’ என்கிறார்கள்.
சுதந்திரனாகையாலே காரியத்துக்குத் தகுதியாக ஏறிட்டுக் கொள்ளுவான் அவன்;
இவனுக்கு அது இல்லை அன்றோ.

‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று,
அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்;
சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ.
அவற்றை ஆதரித்து வார்த்தை கொள்ளப் புக்கவாறே,
வாராய்! அவை தாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்?
அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்ல காண்!

எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்ல காண்! அவற்றிற்கு அது இயல்பு காண்.-குழகேலே- நாங்கள் வேறாக வார்த்தை சொல்லச் செய்தேயும் கண்டாயே, நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி. அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள் காண்.
குழறுதல் – எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் – லீலாரசம் கொண்டாடுகை.

————-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.
–6-2-6-

‘எங்களது’ என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.-கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே – பிரணயித்வம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் – நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.-நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆன பின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லை காண் என்கிறார்கள்

இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.-அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –

யாம் பழகி இருப்போம்– இப் பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!-நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள். அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,

இத் திரு அருள்கள் எம் பரமே- நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்க வல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.

அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்- “மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேஸ்வரனையும் கூட ஒரு தட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒரு கலா மாத்திரத்திற்கு எடை நிற்க மாட்டாது”-பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று ஸ்வபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;-அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.-ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள் பக்கல் ஏறப்போம் என்ன,

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;-ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

இவ்விடத்தே, பட்டர் அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கிற சர்வேஸ்வரன் நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேஸ்வரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால், ‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க, அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.

———–

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே
.–6-2-7-

இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.எங்கள் கையில் பாவை பறிப்பது –-இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; –ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –-அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே-அதனாலே பாவையைப் பறித்தான்-எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது

அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.-இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.-‘வன்மமே சொல்லி’-என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;–வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.-எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.-‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல் ‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.-அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.

என்னைமார் –-ஆணுடன் பிறந்தார்.-‘தன்மம் பாவம் என்னார்’ என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.-தடி பிணக்கே – பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.-

————–

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?
–6-2-8-

பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,-காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,-சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,-ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய், ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!

பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன்-ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.என் சொலார் உகவாதவரே – உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,-உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.-பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.உன் மேன்மையையும் குணவத்தா ப்ரதையையும் இழக்கக் கிடாய் புகுகிறாய் -ஆப்பான் -இவனை இவர்கள் கடந்து போனார்கள் ஆகில் செய்வது என் என்ன ஜீயர் -அது ஆர்க்கு அழகு -என்று அருளிச் செய்தார் -நின்றார்கள் ஆகில் நினைத்தது பெற்றான் ஆகிறான் -கடந்து போனார்கள் ஆகில் சம்ச்லேஷ அர்த்தமான க்ருஷி தலைக் கட்டிற்று ஆகிறது –

——————–

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
–6-2-9-

பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;-திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.-கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ-தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது? வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.-எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.-

—————-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
.–6-2-10-

காலால் அழித்தது சிற்றிலை யன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல் நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்;
அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.

இந்த ஆயர் குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ் வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.-தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;-பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே-‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள்

நலிவே படுவோம் – இது தான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவே யாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.-

———–

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.
–6-2-11-

தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.-தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.

ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே
நிற்கிற நிலை,வல்லார் ஆடினாற் போலே இருந்தபடி.
அன்றிக்கே,-அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே –வெண்ணெய்க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே –அப்பன் தன்னை – அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –-பிரணய ரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம்
அந்தப் பிரணய ரோஷம் போனவாறே ஏத்தாய் விட்டது.

நல்குரவு இல்லை –-வறுமை இல்லை;-பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது. –அவன் தானே வந்து மேல் விழ நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும்-ஏறாளும் இறையோனும் -4-8-

February 21, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஸத்ய ஸங்கல்பத்தால் ஸர்வ ரக்ஷணம் செய்பவன்–அநாதரத்துடன் இந்த அபலையை ஒதுக்கினீரா
இவள் உபய விபூதியிலும் சேராதவளோ–ஏறாளும் இறையோனும் -4-8-விரிவாக்கம்-அவனால் விரும்பப்படாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம்-மணி மாமை குறைவிலமே அங்கு உண்டே
திருத்தாயார் பாசுரம்-தலைவி ஆற்றாமை கண்டு தோழி வெறுத்து உரைத்தல் என்றுமாம் 

நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே-பெண் பிள்ளை மோஹித்து கிடக்க ,
இவள் மோஹத்தை கண்ட திருத் தாயார் –-மேகோ தயாஸ் சாகர சந்நிவ்ருத்தி இந்தோ விபாக ஸ்புருதா வாயு வித்யுஜ் விபங்க —விஸ்மய பிரபஞ்ச மாயா -என்றும் –பீஷாஸ்மாத் வாத பவதி பீஷோதேதி ஸூர்ய – என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு அவ் வருகு போகாத படி நிர்வஹிக்கிறது-
தன் ஆஞ்ஜையால் அன்றோ —இவ் அளவில் இவளைப் பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-

இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன-ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும் அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே-ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன, பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,-பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க, ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்; பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.–காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய் திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் – இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே
–33–தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-

ஏறு திரு வுடையை ஈசன் உகப்புக்கு
வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு —38—சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே பிராப்தனாய் சீலவானாய் விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –அவனுக்கு வேண்டாத என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து திருவருள் செய்பவன் போல் –உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் –அவனால் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில்-ஆத்மீயங்களை முதலில் வைத்து இங்கும் அருளிச் செய்கிறார்
-ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை
ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –இப்படி அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை-நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

அருளார் திருச் சக்கரத்தாலே –கிருபையால் பரி பூரணமாய் இருக்கிற படி-சர்வேஸ்வரன் அருள் மறுத்த போதும் அருள் கூடு பூரித்து இறே இருக்கிறது-பிராட்டி அருள் மறுத்தாலும் ,மாறாதே இறே இருப்பது ஆழ்வான் அருள்--மடு அருகில் ஊற்று போலே-ஸஹ தர்ம சாரிண -அவன் திரு உள்ளம் படியே இவள்-அம்பரீஷ சக்கரவர்த்திக்கு துர்வாசர் வந்த போது ஜெயித்துக் கொடுத்ததை நினைத்து இருப்பது
ஆழ்வானை ஆஸ்ரயித்தவர் எதிரிகள் இல்லாது இருந்த படியையும் ,-ஆழ்வானை எதிரியாய் பகைத்த போது அவர்களை எம்பெருமானே நேர் இட்டு கொண்டு நோக்கும்படியையும் –மற்றை புகல் இல்லாது இருந்த படியையும் சொல்லிற்று – சுமுகன் கருடன் விருத்தாந்தமும் அறிவோமேஅருளார்-அருள் ஆஸ்ரயித்துக்கு நிரூபகம் —பிரதி பஷத்தை துணிக்கும்  என்று சொல்லா நிற்க செய்தேயும் நிரூபகம் நிற்கும் படி எங்கனே என்னில் –அதுவும் ஹித ரூபம் என்கையாலே–திருச் சக்கரத்தால்-கையில் திரு ஆழி யுமாய் இருக்கும் இருப்பே சர்வேஸ்வரனை சர்வேஸ்வரன் ஆக்கும்(தமஸ பரமோ தாத சங்கு சக்ர கதா தரா -அசாதாரண அடையாளம் இதுவே ) ஈஸ்வரனுக்கு லஷ்மி சம்பந்தம் போலே இறே திரு ஆழியும்

அகல் விசும்பு இத்யாதி–உபய விபூதில் உண்டான அஞ்ஞான அவஹாமான பாபம் போகும் படி
திரு ஆழியின் உடைய தேஜஸ் ஆகிய செம் கோலால் நிர்வஹியா நின்றீர்–அகல் விசும்பு-த்ரி பாதஸ்யாம் அமிருதந்திவி-என்று முக்கூறாக இருக்கை–அங்குத்தை அஞ்ஞானம்   போக்குகை யாவது என்னில்–கையும் திரு ஆழியும் ஆகிய இருப்பை விஸ்லேஷிக்கையில் செய்வது என் என்று விசேஷ வைலஷண்யத்தாலே அதி சங்கை பண்ணினால் அந்த அதி சங்கையை நிவர்த்தி பண்ணி சங்கை கெடுத்து கொடுக்கை–சங்கை ஆகிலும் உள்ளது -பரிஹாரம் வேணுமே-இங்கு உள்ளது ப்ரத்வம்ஸ பாவம்–அங்கு உள்ளது ப்ராக் பாவம்–அபாவம் இன்மை -நான்கு வகைகள் உண்டே-பிராக பாவம் ப்ரத் வம்ஸா பாவம் இத்யாதிகள்–அங்கு அழகைக் காட்டி ரஷிகிறான் –ரஷமாம் சரணாகதம் சங்கு சக்கர கதா பாணி போல் அருளார் சக்கரத்தாய்-

ஈங்கோர்   பெண் பால் இத்யாதி––அபலை அநந்ய கதி அன்றோ ?-அன்றிக்கே-உபய விபூதிக்கும் புறம்பு என்றா ? உமக்கு சக்தி இல்லை என்றா ?–உமக்கு அஞ்ஞான அசக்திகளை ஏறிட்டுக் கொள்ளப் பார்க்கீறீரா- விபூதிக்கு புறம்பு என்றீர் ஆகில்   அஞ்ஜர் ஆவீர்-உமக்கு ரஷிக்க போகாது என்றீர் ஆகில் அசக்தர் ஆவீர்–சாஹம் கேச க்ரஹம் பிராப்தா த்வயி ஜீவத்ய பிரபோ-மகா பாரதம் -உத்தயோக பர்வம் -70-43–நீர் பிரபு ஆவைகையும் உம்மை பற்றினவள் பரிபவத்துக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமீ
(திரௌபதி கேட்டது )-தெரிளோம்-அறிகிறிலோம்-அரவணையீர்-உகப்பார்க்கு உடம்பு கொடோம் என்று பிரதிக்ஜை கண்டிலோம் இறே-இவள் தரை கிடை கிடக்க உமக்கு படுக்கை பொருத்துவதே
படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ-படுக்கையில் கிடப்பார்க்கு தனி கிடை அமையுமோ-

இவள் மாமை-பெறுதற்கு அரிய மாமை –நாம் சர்வ ஸ்ரஷ்டாவாய் இருந்தோம்-இன்னம் பண்ணிக் கொள்கிறோம் என்று கிடக்கிறீரோ-அவன் தான் கை தொட்டு அழிக்கிறான் என்று தோற்றி இருந்த படி-நீர் சிதைக்கிறீர் என்றும் தானே சிதைகிறது என்றும் –ஸூஹ்ருதம் சர்வ பூதானாம்-என்னும் அதுவும் தப்பு அற்று இறே-இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி-இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி-பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி-ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே பேற்றுக்கு அடி கிருபை-இழவுக்கு அடி கர்மம்-இருந்தாலும் அதீத ஞானத்தால் -பிராப்தி அறிந்து அவன் தலையிலே ஏற்றலாமே -இவள் படியையும் பார்த்து அவன் படியையும் பார்த்தால் பேற்றுக்கு கண் அழிவு இல்லையாய் இருந்தது–இவ்வளவாக கண் அழிவு அற்ற பின்பும் வரத் தாழ்ந்த படியாலே
இது என்னதாய் முடிய கடவதோ -என்று திரு தாயார் சோகிக்கிறாள்-

தம்மால் காக்கப் படும் உலகங்களுக்கு உட்படாமல் பஹிர்ப்பூதையோ நான் –-அருளார் திருச்சக்கரம் -அருளாழி புள் கடவீர் போலே அருளே வடிவமான –அரவணையீர் –இத்தசையிலும் உமக்கு படுக்கை பொருந்துவது – படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ – தனிக் கிடை கூடுமோ-இவள் மாமை –இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி-பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே ,-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –

அருளார் திருச் சக்கரத்தால்-ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே–அகல் விசும்பும் நிலனும்–பரந்த விசும்பும் நிலனும்–இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்-மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்–ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ–இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ–தெருளோம்-அறிகிறிலோம்–அரவணையீர் !-படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்-இவள் மாமை சிதைக்கின்றதே – இவளுக்கு இடம் கொடாமல் இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால் அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்-ஸங்கல்ப மயமான திருவாழியாலே விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே நித்ய விபூதியில் அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில் செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே-இருளார் வினைஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார் ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ–இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-இந்த விபூதியிலும் அந்த விபூதியிலும் அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை-அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி–அரவணையீர் -என்கையாலே-அந்த விபூதியில் உள்ளவரோடு நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது–இவள் மாமை சிதைக்கின்றதே –என்கையாலே அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது–இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை ஈடுஅருளார் திருச்சக்கரத்து–உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம் நீர் செய்ய முடியாமல் இருந்ததோ வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது-இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ–ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ-அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது-ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான் ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்-பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே-அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – –ஸஹ தர்ம சாரிணி அன்றோ-ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்–இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்-உன்னை விட்டாலும்-லஷ்மணனை விட்டாலும்-உயிரை விட்டாலும் ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்-எவர்களை – ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்-கர்ப்ப பூதாஸ் தபோ –உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்-தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே-ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்-கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள்

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில் சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும் யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன் அதே அர்த்தம் இங்கும்-மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன் பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே-ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன் ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்–இந்த ராமர் விரதம் அறிவாள் அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம் சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல யாரேனும் யாகிலும் ரஷிப்பேன் இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ–லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ-பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்-ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ-ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்-ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள் பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள் தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்–

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல் அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான் சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் திருச்சக்கரத்தான் ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும் அநாயாசேந ரஷிக்கும் சக்தன் இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான் தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன் அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்-அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும் லீலா விபூதியும் அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில் உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில் அங்கு அதிசங்கை உண்டே நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
-பிராக பாவத்தால் அங்கு இங்கு ப்ரத்வம்ச பாவம்-அழகைக் காட்டி அங்கு இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்–அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே-இவள் மாமை சிதைக்கின்றது-யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ-அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ-அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர் இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்-ஸ்ரீ கீதை -10-39
– எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னை யின்றி யுள்ள பூதமொன்றுமில்லை.–உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே-உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ நெருப்பினால் நனைக்க முடியுமோ–திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்-இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல சா அஹம் கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன் நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன் இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்–என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்-புருஷோத்தமன் அன்றோ ‘ உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ சரணாகதை நான் நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி அருளார் திருச்சக்கரத்தால் இங்கு-சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோதுவாரகா நிலையா – பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே-அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ–அச்யுத சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்–கோவிந்தா-பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ-குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே–புண்டரீகாஷ— விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ-ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால் கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ–மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை–தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ–கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம் இவர்களைக் கூப்பிடவில்லையே–ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
-அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக –இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே--தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில-தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பர்த்தா இருக்க இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார் பண்டே உபதேசம் பெற்றாளே-ஸ்மர்தவ்ய பகவான் ஹரி –பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்-குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல் ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
-ஆழ்வார்-பிரார்த்தனா மதி சரணாகதி-உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம் இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே
– திரு விருத்தம் 75-நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்அரவணையீர்-இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர் –எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ-யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே-இவளை சிதைக்கின்றது-இவளை நோவுபட வைத்து பகுதியாக தான் காண முடியும்-ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்-அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள திருவாழியாலே அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி–இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்–ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது நமக்கு ஒரு புருஷார்த்தமோ என்று அநாதரித்த படியோ-இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-ரஷ்ய வஸ்து பஹிர் பூதை இவள் என்று நினைத்தீரோ–தெருளோம்-அறிகிறிலோம்–அரவணையீர் !–இப்போதும் வாய்த்த படுக்கையிலே கண் வளரா நின்றீர்–இவள் மாமை சிதைக்கின்றதே— இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே-நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் நிலை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமான் இடம் விண்ணப்பம்-கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி பிரியாமையாலே ரஷிக்கும் அங்குள்ளாரை –அத்தைக் கொண்டுவிரோதிகளை இரு துண்டாக்கி ரஷிக்கும் இங்குள்ளாரை -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –-அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு இல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி வைலஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீகார ஹேது உண்டு என்றபடி-அரவணையீர் என்கையாலே அங்கே நித்ய சம்ச்லேஷம் நடக்கிற படி சொல்லுகிறது –

தாத்பர்யம்-சர்வேஸ்வரனுடைய திருமேனியை ஒத்ததாய் மேகங்கள் அவனது ஸ்ம்ருதி விஷயமாய்
நீர் இவளை உபேக்ஷிப்பது எதனால் நீர் உபேக்ஷித்தாலும் தான் உபேக்ஷிக்காமல் ஜகத் ரக்ஷணத்தில் முன்னோடி இருக்கும் திருவாழி-இருள் அஞ்ஞானம் -அதுக்கு காரணமான துஷ் கர்மங்களும்
காரியமும் காரணமும் இதுவே நித்ய விபூதியில் கர்மம் அடியான அஞ்ஞானாதிகளில்லை என்றாலும்
விச்சேதம் விளையுமா என்ற அதிசங்கை உண்டே -அனுபவத்துக்கு இடையூறு வருமோ என்ற கலக்கம் அங்கு உண்டே இவை அனைத்தும் போகும்படி உபய விபூதியிலும் ரஷியா நிற்க இந்த அபலையான அநந்ய கதித்தவமுடைய இவளை உபேக்ஷித்து உமக்கு படுக்கையிலே பொருந்துவதே சேஷ படுக்கையில் கிடக்கிறீரே இவள் சிதைந்து போனாளே -உமது அநாதரவு ஹேதுவா சர்வ சக்தரான நீரே ரஷியா விடில் இவள் என் செய்வாள் இவள் உபய விபூதியிலும் அடங்காதவள் என்ற எண்ணமோ
அறியோம் என்றபடி

4-8-ஏறு ஆளும் இறையோனும்,-ப்ரவேஸம்-

கீழில் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி கூப்பிட்டார்;
இப்படிக் கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது
நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலே யாக அடுக்கும்,’ என்று பார்த்து,
ப்ராப்தனாய் -சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன்
இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோ தான் இது வேண்டுவது?’ என்று விடப் பார்த்து,
அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும்
நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்.
(ஆத்மாத்மீயங்களில் வைராக்யம் இதில் -)

வரி வளையால் குறைவிலமே -என்பதால் நாயகி பாவம் தோற்றும் –
அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்ம வஸ்துவை விரும்பச் சம்பந்தம் உள்ளது;
நாம் நமக்காக இல்லையே -அவனுக்காகத் தானே –
இங்ஙனம் விரும்பாத போது – தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும்
பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?

இத் திருவாய்மொழியிலே வருகின்ற
அடியேனைப் பணி கொண்ட’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்-ப்ராப்தனாய் -என்றும்,
கூறாளும் தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் .
உயிரினால் குறையிலம்-உடம்பினால் குறையிலம் இத்யாதிகளால் -அவனுக்கு வேண்டாத
நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு-என்றும் அருளிச்செய்கிறார்

‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே; காதலர் வேண்டின யாம் வேண்டினமே;
காதலர் எம்மை வேண்டார் எனிலே யாமும் வேண்டலம் இனியே’– என்றார் பிறரும்.

ந தேகம் –
இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற-அத்ருஷ்டம்- பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில்
பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா.
ந பிராணாந் –
சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா.
ந சுகம் –
பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா.
இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா.
இவை யெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்மாவுக்கே அன்றோ? அந்த ஆத்மா தானும் வேண்டா.
இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்?
உன் சேஷத்வ- திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில,
அவை ஒன்றும் எனக்கு வேண்டா.
நாத –
உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில்,
கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ஒரு ஷணமும் பொறுக்க மாட்டேன்;
இவை தம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது;
நசித்துப் போம்படி செய்ய வேண்டும். இது-கண்டாதூர்த்தமான- கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன,
தத் சத்யம் –
அது மெய். மது மதந – ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’
என்றார் ஸ்ரீ ஆளவந்தார்–இது,ஸ்தோத்திர ரத்நம், 57.

மகா ரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை;
பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி.
பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில்,
இருக்கிறது அரக்கியர்கள்-ஸ்ரீராமா. சுந். 26 : 5.-
நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.
பிராணன் -வைத்து தரிக்கலாம் பக்தர்கள் நடுவில் இருந்தால் அவர் வருவார் என்று-

எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்ட படியில் வந்து முகம் காட்டக் காணாமையாலே -அவன் அநாதரித்தானாக நினைத்து
ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அபீஹம்யத்வ அப்ரதிருஷ்யத் வத்தாலுண்டான உபாய பாவத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்தால் வந்த உபேயத்வ பூர்த்தியையும்
உபாய கார்யமான அனுகூல சத்ரு நிரசனத்தையும்
அபிமத விரோதி நிரசனத்தையும்
அஸஹ்ய விரோதி நிரசனத்தையும்
அர்த்த உபதேசத்தால் அநந்யார்ஹம் ஆக்கும் அறிவுடைமையையும்
ஊத்துங்க விரோதி விதாரணத்தையும்
விரோதி சதா விநாஸகத்வத்தையும்
விரோதி சரீர விஹஸ்த தாகரணத்தையும்
அசேஷ விரோதி கண்டநத்தையும்
அனுசந்தித்து -இப்படி ஆஸ்ரித உபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒரு கார்யம் இல்லை என்று
தமக்குப் பிறந்த அநாதர விசேஷத்தை நாயகனான ஈஸ்வரன் ஆதரியாத ஆத்மாத்மீயங்களை
அநாதரிக்கிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே
.–4-8-1-

இதனால், ‘நான், நான்,’ என்பார்க்கும் அணையலாம் படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்,-‘கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்.-காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;சிவன்.-அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு நாபீ கமலத்தில் பிறந்தவன்-என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.

சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய் இருக்குமாகில், தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தை யுடையேன்’ என்று செருக்குற்று இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார்.-கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார்.-தனி உடம்பன்- திவ்யாத்ம சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ?
எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான் இருப்பது?-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

படை தொட்ட –உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன்,-அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையை யுடையவனாய் மேல் விழுவான்.-படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான்,-அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான்.-மாறாளன் –‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல்.கவராத மணி மாமை குறை இலமே –பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால் ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது? அல்லது, நிறக் கேடாமித்தனை அன்றோ? -நிறம் -ஸ்வரூபம் என்றுமாம்-மணி -ஓளி-

———-

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.
–4-8-2-

தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள்-அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன்.-குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில்,
என் உடைமையால் எனக்குதான் பிரயோஜனம் என்?
மலரில் மணத்தையே வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள்.
நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத் தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள்.
மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன்.
1–மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்திய வாசம் செய்வது மார்பிலேயாதலின்,
உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள்.
2– தான் பிறந்த மலர் நெருஞ்சிக் காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்;
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்-(தூவி சிறகு ) மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானே யன்றோ?-அனிச்சப்பூ -நோக்கவே கன்னிச் சிவக்கும் -அன்னத்தின் சிறகு -மென்மையாக இருக்கும் –இவை இரண்டுமே மாதர் அடிக்கு நெரிஞ்சிப் பழம்–என்றவாறு
3–முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன்.-பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று,-இவள் தான் பிறந்த மலரை நினைப்பது.
4-அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!

அணி மானம் தடவரைத் தோள் –எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே,-சர்வ பூஷண பூஷணாய -ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.–அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி.-அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.-அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.

அடல் ஆழித் தடக்கையன் –பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலே யுடையவன்.-இவனுடைய விருத்தம் கை மேலே காணலாய் இருக்கிறபடி.

பணி மானம் பிழையாமே –-நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே,-கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி – கைங்கரியம். மானம் – அளவு.

அடியேனைப் பணி கொண்ட –-இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,
இருவருங்கூட இருந்து காணும் அடிமை கொண்டது. ‘குமரிருந்து போகாமே’ என்பார்,
அடியேனைப் பணி கொண்ட’ என்கிறார்.-இச் சரீரம் இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி.
இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க,-ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு,-ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோ வுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன,-பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’-கவராத மடநெஞ்சால் குறை இலமே –வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு?
நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது.
நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு-சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ் வாக்கியம், ரசோக்தி.
பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ?
தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ?
கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ?
வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ உடையவன் தன் உடைமையை போனான் ஆகில் நானோ இத்தை நோக்குவேன் என்கிறாள் 

————-

மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே
.–4-8-3-

விடம் நஞ்சம் – விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம் என்று சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல். அன்றிக்கே, பேய்ச்சிவிட – பேயானவள் உயிரை விடும்படி,-படம் நாகத்து அணைக் கிடந்த –உணவுக்குத் தகுதியாகக் காணும் கிடந்த படியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது?
நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி.-திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டு விட்டு-அடியார்களுடைய கூக்குரல் கேட்டால் போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ?

பரு வரைத் தோள் – திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது.
கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில் வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே?-பரம் புருடன் – தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று அறப்பெரியன்’ என்று தோன்றிற்று-நெடு மாயன் –என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன்.-மிக்க வியாமோகத்தையுடையவன்-மடி – வயிறு. சுவடு – இனிமை. –
கண்ணன் என் ஒக்கலையானே’ –திருவாய். 1. 9 : 4

கவராத நிறையினால் குறை இலமே –அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், நான் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கவோ-எனக்கு என்னுடைய பெண்மையால் என்ன காரியம் உண்டு?-நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி இருக்கும் பெண் தன்மை.’-

——–

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே 
–4-8-4-

கீழ் ஆத்ம குணம் –நெடும் பணை -ரூப குணம்-நீண்ட வேய் போன்ற தோள்கள் 
அரியன செய்தும் பெற வேண்டிய வடிவு அழகு-ஏழு அடர்த்த உகந்த-ஓன்று இரண்டு அல்ல
ஒரு காலே ஊட்டியாக -இவளை லபித்தோம் என்று உகந்தான்
நப்பின்னை பிராட்டியை விடை கொண்டு வந்து காணும் கைப் பிடித்தது-

சறையினார் -சறைகை மணி என்று ஒரு மணி -இடையர் அரையிலே சேர்த்துக் கட்டி பசுக்கள் த்வனி வழியே வருகைக்காக முன்னே ஓடுவார்கள் –அத்தை உடையவர் என்னுதல் –சறை என்று தாழ்வாய்-தாழ்ந்த இடை ஜென்மத்தில் பிறந்தவர் என்னுதல்
சறாம்பி இருக்கையாய் உடம்பை பேணாது இருக்கை என்னுதல்
பசுக்களின் பின்னே திரிகையாலே தன்னைப் பேண அவசரம் இன்றிக்கே இருக்கை –
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரக்ஷணத்துக்காக தன்னைப் பேணாத வடிவை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது-தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி நதரம் சுசிம் குரங்க ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் –
கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே--அவன் விரும்பாத தளிர் நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
கீழ் மணிமாமை என்ற இடம் -அழகிய நிறம் என்றது
இங்கு தளிர் நிறம் என்றது -ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது

—————

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே
.–4-8-5-

தனிச்சிறையில் –ஒளியையும் ஒளியை உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ-அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி?
விளப்புற்ற 
கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்;
அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.

கிளி மொழியாள் காரணமா –
திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி.-மதுரா மதுரா லாபா -தனிச் சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள்-சேர்ந்தே சொல்லப்படும் ஸ்ரீ ஸூக்திகள்

களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் – தேனை யுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை.-அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும்
அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையே யன்றோ?
ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத் துழாயை இட்டேயாம்.-தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது?-துரும்பால் கிளறிய சக்கரக் கையன்-பாண்டியன் ஏதேனும் ஒன்றைச் சூடிலும் வேப்பம்பூ என்ன கடவது இறே

கடல் ஞாலத்து அளி மிக்கான் – சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்க வேண்டும்’ என்று திருவுள்ளம் இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய்,
பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படி யன்றோ இங்கே வேரூன்றினபடி?’ என்றவாறு.

கவராத அறிவினால் குறை இலம் – அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம்.-பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு?-பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது?-

—————-

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே
.–4-8-6-

அறிவினால் குறை இல்லா –அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட அறியாதது. என்றது,-நாட்டார் அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ? அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி.

நெறி எல்லாம் எடுத்து உரைத்த –கர்மயோகம் முதலாகப் பிரபத்தி யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி.-ஆத்துமாக்களினுடைய பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்?
ஆதலின், ‘நெறி எல்லாம்’ என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை,-ஆத்துமாவினுடைய உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி,-பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.

கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லு முகத்தாலே அவதார ரஹஸ்யத்தை உபதேசித்து,
பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு
பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று,
பின்னர், ‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், ‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே
எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து,
என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, ‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி,-அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி,
இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி,-அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும் தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.

குறிய –கோடியைக் காணி யாக்கிக் கொண்டாற் போலே, வளர்ந்த போதையிற் காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி.-மாண் உருவாகி –பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று,-உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற-முக மலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி.
ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை வடுக விடு நகம் இட்டு வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன்’-என்பதனைத் தெரிவித்தபடி.

கொடுங்கோளால் –வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி.-அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு,-கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு,
செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது;
ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது,
தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே,-அவன் செவ்வைக் கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி.

கிறி அம்மான்-பெரு விரகனான சர்வேஸ்வரன் -அவன் தரும் வழியை அறிந்து வாங்கின விரகு-கவராத கிளர் ஒளியால் குறை இலமே –-செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன்,-முன்னரே இசைந்து தன்னைப் பெற வேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித்-தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ?-கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே
.–4-8-7-

நரசிம்ஹத்தினுடைய மொறாந்த -திறந்த -முகத்தையும், நா மடிக் கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின கையையும்,அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப் பொன்னன். ஆகையாலே,பின்னர் வருத்த மின்றியே கிழித்துப் போகட்டான். நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க் கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ் செய்யுமே அன்றோ?-உகந்த –சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்த படி.-இவன்தான் காற்கட்டி ஆணை யிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல். ஒருவன் கை பார்த்திருப்பார் (ஒருவனுக்குப் பரதந்திரராயிருப்பார்’-கையிலே இருப்பார்’) பலர் உளர் ஆனால், அவர்களிலே சிலவர் இவனோடே கை செய்து, (துணை செய்து’ -கையிலே இருந்து’)அவனுக்குள்ள உடலையும் -உடல் (-தனம் -சரீரம்)-தாங்கள் கண்டபடி அழித்து நீங்கி யுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் கத கத எனச்-(கோபிக்க-ஜ்வலிக்க -)- சொல்ல வேண்டா அன்றோ?-இவர்கள் தாம் நுனி யாடிகள் அலரோ? -ஹஸ்தாக்ரம் -சேநாக்ரம் –இப்படி இவர்கள் தாமே யாவது என், நாம் இருக்க?’ என்று திவ்ய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று.

நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.-கை மேலே இலக்கைப் பெறாதார்க்கு (மாத ஜீவனமான பணமும், இலட்சியமும்)நாடோறும் படி (அரிசிப் படியும், திருமேனியும்,)விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை க்ஷணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ
கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?

மணி நீல வளர் ஒளியான் –மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,-சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.-கவராத வரி வளையால் குறை இலமே 
அவ் வடிவை யுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக் கொள்ளாத
இவ் வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.-

—————-

வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.
–4-8-8-

அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது இவளை யிட்டே அன்றோ?
இவளை-1-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இட்டும் –-இவளை-2-பராங்குச நாயகிக்காக -கனை கழல் காண்பது என்று கொலோ – இவள் காதல் வளர்க்க -என்றுமாம்-

ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப் பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும்-உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒரு காலே பெற வேண்டும்,’ என்கிறாள் என்றபடி.
இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.
சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப் பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன்
வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே
புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது;
இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;
அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே,
இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.

ஒரு கொசுகுத் திரள் இருந்தது என்னா, திருப்பாற் கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ?
அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரி புகழான்’ என்கிறது-

கவராத மேகலையால் குறை இலமே –அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய?
அன்றிக்கே, ‘உடை மாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல்.-உடை மாறாத-மாறாடி உடாத –-அவன் பரியட்டம் இவளுக்கு -போகத்தில் தட்டு மாறும் சீலத்தை ஆசைப்படுகிறாள்
அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன்,
இத் தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா;
அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில்,
நான் எனக்குப் பழியாம்படி பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.

இனி, வரி வளையால் குறையிலமே –வாயாடி–பெரு முழக்கும் -வாயில் ஆடுகிறவர் -வாய்க்கரைப் பற்றை அடுத் தூணாக வுடையவன்.-எதிரிகள் முடுகினால் இவன் தான் வாய்க் கரையிலே இருந்து செய்யும் ஆர்ப் பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன்.
அந்தப் புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய் புகு சோற்றைப் பறித்து ஜீவியா நின்றான்!’ என்று முறைப்பட்டால்,அவன் வாய் விடாச் சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது?
அல்லாத ஆழ்வார்கள் கூரியரே யாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷி யுடையார் இலரே அன்றோ?

மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் –சூஷ்ம புத்தி – கூரிய அறிவினர்;-தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.லஜ்ஜையுமாம்-ஓங்கார வடிவம் பவ்யம் வளைந்து சங்கத்தாழ்வான் மட்டும் –

மரங்கள் போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரி அழலம் புக ஊதிக் கொளுத்தினபடி.
‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ -அவன் மாறாடாத பரிவட்டத்தால் என்ன கார்யம் உண்டு –
ரக்ஷணத்தில் குறைந்த அம்சம் அவனுக்கு அவத்யம்- தன் உடைமை தனக்காய் இருக்கிறது இவளுக்கு அவத்யம் – –

———-

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே
.–4-8-9-

மேகலையால் குறை இல்லா மகள் –-உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும் போலே காண்’ என்று அருளிச் செய்வராம் வங்கி புரத்து நம்பி.

புயம் துணித்து –இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.
தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும்,
உஷை தந்தை அற்றவள் ஆக வொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையை மாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது-

வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் போகத்தில் பொருந்திற்று.-துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் – இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து, உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக் கொண்டு யோக நித்திரை செய்யா நிற்பான்
கவராத உடம்பினால் குறை இலம் –இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க,-நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது.-அவனுக்கு உறுப்பாகவே அன்றோ இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?-அவன் பக்தாநாம் என்று இருக்குமா போலே இவளும் அவனது என்று இறே இருப்பது –

ஆக,-மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’ என்ற அடை மொழிகளால்,-‘ஒப்பனை யழகாலும், ஆத்ம குணத்தாலும், பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.

————

உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.
–4-8-10-

முதற்பாசுரத்தில் சொன்ன சீல குணத்தையும் விரோதிகளை அழித்தலையும் சொல்லி,
அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற் பாசுரத்தில் தொடங்கியதற்குச் சேர முடிக்கிறாள்.-உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல்-துணி பலவாத் துணித்து’ என்றதனால்,
நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச் சொல்லுகிறது.
தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால்,-கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.

இதற்கு முன்னர் எல்லாம் சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது?-அவை தாம் அழியக் கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ?
அதற்காக நித்யமான ஆத்ம வஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப் பாசுரத்தால்.
இதனை வேண்டா என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப் பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய் இருக்கும்
பக்தி வளர்ந்து -ஸ்வாபதேசம் – ஆதலால், அதனைப் பற்ற’ என்க.
இனித்தான், அவனுடைய நித்ய இச்சையாலே அன்றோ இவ் வாத்மாவினுடைய
நித்யமாய் இருக்குந் தன்மையும் உளது?-அவனுக்கு இச்சை இல்லாத-விரும்பாத போது- பின்னை இவ் வாத்தமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.-

—————-

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே
.–4-8-11-

தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப் போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றை யெல்லாம் தன் நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட் கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

வைகுந்தம் நண்ணுவரே –ஓர் உடம்பாய், ‘இது தானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, அந்த முத்தன் பல சரீரங்களை மேற் கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற் கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது,-பல படிகளாலும் அடிமை செய்யப் பெறுவர்.-இங்கே இருந்து அவன் விரும்பாதவை வேண்டா வென்று க்லேசப்படாதே அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி அனுபவிக்கலாம் தேசத்தை பெறுவர்கள்- என்றபடி.
அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?
இவர் திருமேனியை நித்ய முக்தர் திருமேனி போலே விரும்ப –
அவன் விரும்பின படி- சரீரம்- என்று அறியாமல் வேண்டாம் என்கிறார் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்–பாசுரம் -13-தனி வளர் செங்கோல் நடாவு-மல்லிகை கமழ தென்றல் -9-9–

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கீழே பகவத் விஸ்லேஷம் பிரஸ்த்துதமானதே விஸ்லேஷத்தில் அனைத்தும் நலிய- ஜகத்தில் பொருந்தாமல் – மல்லிகை கமழ தென்றல் -9-9-போல் தலைவி இரவி வியஸனம் துறை இது
இரவை விவரித்து பாசுரம் –

ஆஸ்வாசம் ஏற்படுத்தும் பகலை அப நோதித்து- தள்ளி அந்தகாரம் வந்து நலியா நின்றது
இந்த தசையில் வாடையால் வந்த நலிவைத் தவிர்த்து நமக்கு ரக்ஷகராவார் யாரோ என்கிறாள்-

1-ஆஸ்வாச கரமான  காலம் போகையும் ,
2-பிரதி கூலமான காலம் வருகையும் ,
3-அதற்கு ஸஹ காரிகள் குவாலா  லாகையும்
4-ரஷகன் வாராது ஒழிகையும்–முடிந்தோம் இறே என்கிறாள் .

பகல் பதார்த்த தர்சனம் பண்ணி ,இந்த்ரியங்கள் அந்ய பரம் ஆகையாலே , தரித்து இருக்கலாம் –ராத்திரி எல்லாம் ஒக்க ,உபரதமாய் ஒரு மடப் படுகையாலும் , சம்போக யோக்யமான காலம் ஆகையாலும் தரிக்க ஒண்ணாது

இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து ) மோஹ அந்தகாரமும் விஞ்சி ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை பிரிவாற்றாத் தலைமகள் இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே அனுசந்தித்து அருளுகிறார்

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
-13–தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –-

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
நக்ஷத்ராதிகளை அடர்த்து வளரா நின்றுள்ள செங்கோலை நடத்தும் வேறே தேஜஸ் பதார்த்தங்கள் இவன் சந்நிதியில் ஒளி விடாவே-தானே உஷ்ணத்துக்கு ராஜா என்று இருக்கும் ஆதித்யன் வளரா நின்றுள்ள செங்கோலை நடத்துகிற உஷ்ண கிரண ராஜா கொஞ்சமாக ஒளி இல்லாமல் மட்டும் இல்லாமல் முழுவதுமாக அவிந்து போக -நசிக்க –அஸ்தமித்த பின்பு-

தனி வளர் செங்கோல் நடாவு –
பாவியேன் பர பஷம் பட்டது என்கிறாள்-ராத்ரியிலே சந்திரனும் நட்ஷத்ரங்களும் கூட செலுத்தினது எல்லாம் தானே ,-தானே ராத்ரியை போல,சத்தா நாசம் பண்ணி செலுத்துகை அன்றியே..
எதிரிகளும் நிற்கச் செய்தே அசத் கல்பமாம் படி தேஜஸ்ஸாலே அமுக்கி  செலுத்துகை ..-சூரியோதயம் ஆனதும் நக்ஷத்திரங்கள் ஒளி இல்லாத படி-அந்த பரபக்ஷம் ஒன்றுமே எழும்பாமல் உள்ள –இவை இருக்கவே மின்மினி போல் ஆக்கிற்றே-அதே போல் இரவில் இது இல்லாமலே போனதே-அத்தைச் சொல்லவே இது இங்கு-குருந  ப்ரச்சாதையா நஸ்ரியா —கிருஷ்ணன் தனது காந்தியால் பீஷ்மாதிகளின் ஒளி மங்கிப் போனது போலே சந்த்ரவம்சன் -ஸூர்ய குணம் கொண்டு அடக்கியது போல் )

செங்கோல் நடாவு--மனு மாந்த்தாதாக்களை போல–தழல் வாய் அரசு அவிய –-அநபிபவநீயன் கிடீர் இப்படி பட்டான்–அரசு-ஏக வீரன்–அவிய –விளக்கு அவிந்தார் போல- ஒண் சுடரோன் வாராது ஒழிந்தான் -என்னும் தசைக்கு-அவ் வருகே இருந்தபடி-விடியக் காணாமையாலே இவன் முடிந்தான் என்கிறாள்–சூர்யன் மறைய என்னாமல்-அவிய -என்றது – மீண்டும் உதயம் ஆகாமல் இரவே நீண்டதை சொல்லுமே
ஸூர்யன் அழிந்தான் என்னுமா போலே –

பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அரசர் சிறிது அந்தகார சந்த்ராதிகளை அடர்த்து கொண்டு போனது போல் துக்கத்தை மிகப் பண்ணா நிற்கும் அந்தகாரமானது ஆதித்யனும் போய் பிரதிபக்ஷமே இல்லாமல் தனது வேண்டற்பாடு தோன்ற பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கிக் கொண்டதே-

பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்து –
பனித்தல்
-துளிர்த்தலும்-குளிர்த்தியுமாய்-குளிர்ச்சியை வளரா  நின்று உள்ள செங்கோலை உடைய ராத்திரி பூமி பரப்பை அடங்க தனக்கு இருப்பிடமாக கொண்டது ராஜ்ஜியம் பண்ணின ராஜா முடிந்தால் வேற ஒரு ராஜா புகுருமா போல புதுக் கோமுற்றாரை கண்டால் நடுங்குமா போல வீற்று  இருந்தது ஆதித்யன் ராஜ்ஜியம் இத்தனையும் -ராத்ரிக்கு அழகு ஓலக்கம் இருக்க போந்த இத்தனை-(பனி குளிர்ச்சி நடுக்கம் இரண்டு அர்த்தம் உண்டே )வீற்று இருந்து – இனி எதிரிகள் இல்லை என்னும் படி இருந்தது–பனி வளர் செங்கோல் வீற்று இருந்து –அரைகளிலே ஒளித்து கிடந்தார் புறப் படுமா போலே

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கம் வளர்க்கும் காதலை விளைக்கும் திருத்துழாயை அளைந்து கொண்டு கந்தத்தை முகந்து வரும் வாடையை இரு துண்டமாக்கி-தடிந்துவெட்டி உருவம் இல்லாத காற்றை வெட்ட முடியுமோஅது செய்யும் துயரம் பொறுக்க உண்ணாமல் கோபத்தில் சொன்ன வார்த்தை

இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படி நான் சிதிலமாகி உள்ள தசையில் எனது சைத்தில்யத்தைப் போக்கி ரஷிப்பார் உண்டோ
பாதகமான இவை எத்தனை காலம் ஈருமோ-

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து-தினி வளை காப்பவர் ஆர்–
துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை-துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி-இனி வளையை காப்பவர் ஆர் ?—ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்–தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில்  உறைப்பு-(வளை -கற்பு நிறை ஆழ்வார் )-இனி வளை காப்பவர் ஆர் ? –-வந்து கிட்டுவது  காணும் என்று இருக்கிறாள்–வளை காப்பவர் ஆர்–புணர்ச்சியை உண்டாக்கிக் தருவார் யார் –எனை வூழிகள் ஈர்வனவே —அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன –ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-

1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால் பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி-

யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல் அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ, வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ – அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)

(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்-அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற பெருமையை யுடைத்தான மோஹ அந்தகாரமானது ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது–வீற்று இருந்தது பார் முழுதும்-பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும் தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று-துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து-துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி–துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்-இனி வளை காப்பவர் ஆர்-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை இனிக் கழலாமல் நோக்குபவர் யார்–கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் -எனை வூழிகள் ஈர்வனனே-விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும் அழிக்கத் தேடா நின்றது என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்-இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்-இவளை என்கிறாள் தோழி-இப்படி இருவகையால் ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய் அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –

ஸ்வாபதேசம்
ஸர்வேஸ்வரனுடைய பிரிவுக்கு ஆற்றா மாட்டாமல் அறிவு குலைந்து மோகம் தலையெடுத்து தளர்ச்சி பிறந்து தஞ்சம் தேடும்படியான நிலையில் ஆழ்வார் அருளிச் செய்தது-தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய–இருளை ஒழிப்பதும் -வெவ்வியதும் -தடையற்றதும் -ஒப்பிலாதான கதிரவன் ஒளி போல் மதாந்தரங்களை ஒழித்து -அதனால் பிரதாபம் மிக்கு எம்பெருமான் கட்டளையை தடை அற நடத்தி -அதனால் ஒப்பில்லாத விவேகமும் குலையும் படிபனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது –வருத்தத்தை வளரச் செய்கிற பெருமையை யுடைய மோஹ அந்தகாரம் பரவி விட்டது -இனி மேல் பார் முழுதும்-துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து–-அன்புக்கு விஷயமான எம்பெருமான் போக்யதை நினைப்பூட்டி -இவ்வுலகப் பொருளை விலக்கி-இனி வளை காப்பவர் —
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்ஆர் எனை வூழிகள் ஈர்வனனே–கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -கால விளம்பம் அஸஹ்யம் -என்றவாறு –

தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை – காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு வருந்தி உரைத்த நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்-பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து ஸகல பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்-இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இராத்திரி பிரவேசித்தது-இருள் மண்டிற்று-குளிர் நடுங்கத் தொடங்கிற்று-இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்-நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று
என்னை நலிந்தது -பாதியா நின்றது-இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே-நாயகனோ வரவில்லை-எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்

9-9-மல்லிகை கமழ் தென்றல் -ப்ரவேஸம்

திரு நாவாயில் ஆனந்த அனுபவம் -மநோ ரதித்த இவருக்கு -பாதக வர்க்கங்களுக்கு அஞ்சி கூப்பிடும் படி அமைந்ததே –
மாலைப் பூசல் என்பர் இந்த திருவாய்மொழி –
பிராப்ய வஸ்து பெற மனோ ரதித்தார்-கீழில்
உடன் பெற கிடைக்காமல் ஒரு இரவு பட்ட வியசனம்-
கோபிகள் பட்டது போலே ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் பணிக்க-அத்தை எம்பெருமானார் கேட்டு அருளி –
ஆற்றாமையால் முன்பே தூது விட்டு
முடியா நின்றார்-அத்தனை ஆடல் கொடுக்க வல்ல ஆற்றாமை பாராதே –
சங்கையில் பிரிந்த துன்பம் அடைகிறார் -எம்பெருமானார் –

பெற்றி நஞ்சீயர் சிஷ்யர்-
நம்பி திருவரங்க நாராயண தாசர்-நம்பிள்ளை சிஷ்யர் –
பிள்ளை பாடு வினோதம் என்ன பெற்றி கேட்க-
அறுக்கும் வினை சாற்றினோம் -என்றாராய் – உடனே
நாளைக்கு மல்லிகை கமல் தென்றலும்
மாலைப் பூசலும் என்று பெற்றி பணித்தாராம்-
எம்பெருமானார் நிர்வாகம் -படியே பெற்றி பணித்தார் –

ஞானம் பிறந்த பின்பு சம்சாரத்தில் இருந்து கால் வாங்க மாட்டாமல் –ப்ராப்ய தேசம் புகை -மநோ ரதம் மட்டும் -இருக்க
பாதக வர்க்கங்கள் ஈரலாம் படி –பதம் செய்ததாய் ஆயிற்று
பொய் நின்ற ஞானம் -அபேக்ஷித்த பின்பும் இவரைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்ட -இருத்த
விரோதியை அருசி இவ்வளவும் வர நிலை நிற்க –
வேதாந்த -ஜிஞ்ஞாஸூ ப்ரஸ்னம் -தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது

முக்தி கிடைக்கும் வரை அது வரை தான் கால தாமதம் –
முமுஷு தசையில் எப்பொழுது பெறுவோம் என்கிற நிலை போலே இந்த மாலைப் பூசல் –
தஸ்ய மே தாவதேவசிரம் -அது வரை தான் கால தாமதம் -பிராரப்ய கர்மம் தொலையும் வரை –
சிரம் -க்ஷணம் காலமும் நெடும் காலமாக தோன்றுமே -விமோஷே –ஸம்பத்ஸ்ஸே -உத்தம புருஷ சப்தம் தன்னிலை -ஆரம்பம் தஸ்ய -மே –அந்த எனக்கு –
சம்சாரத்தில் நசை அற்ற முமுஷுவான எனக்கு -என்றவாறு –

ஒரு பகல் ஆயிரம் ஊழியாக தோன்றுமே -தெரிந்த பின்பு துடிப்போம்-அதனால் இதுவும் வேதாந்த சித்தம் –
ஸ்வாபதேசம் பகல் கண்டேன் -விடிவு -இருள் தரும் மா ஞாலம் இரவு நடுவில் சந்த்யா காலம் முமுஷுத்வ தசை –
சம்சாரம் ஹேயம் -ஞானம் பிறந்த பின்பு –
அழுக்கு உடம்பும் -இனி யான் உறாமை -அந்த அருசி இது வரை நிலை -அறுக்கும் வினை -சம்சாரம் நீக்க பிரார்த்தித்தார் –
அர்த்தமாக -சப்தம் அணுகப் பெரு நாள் -என்று அருளிச் செய்கிறார் –

முடியானே கரணங்கள் சைதில்யம் சொல்லி –
இதில் அவற்றுக்கு ஆஸ்ரயமான கரணி -அவயவியும் ஒன்றாக அழிகின்றன –
ஞான கர்ம இந்திரியங்கள் ஒன்றாக அழிகின்றன
மல்லிகை – கமழ் ஸ்பர்ச இந்திரியங்கள் –குறிஞ்சி இசை ஸ்ரோத்ரியம் -தோளும் கொண்டு கர்ம இந்திரியம் –

இராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டு போலே ஆயிற்று-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களுக்கு
கிருஷ்ண விரஹத்தாலே ஒரு மாலைப் போது-
குணங்களால் மேம்பட்ட பெருமாளைப் பிரிகையாலே-அங்கு பதினான்கு ஆண்டுகளாய்க் கழியவும் கூடும்
இங்கு இவன் நீர்மையிலே கையடி உண்டு இருக்கையாலே
தீம்பனான நீர்மையிலே ஈடுபட்டு -ஒரு பகல் பல கல்பமாகத் தோற்றுகிறது –

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-திரு விருத்தம் -70
குணங்கள் தாம் கால் கட்டுவான குணங்களாய் அல்லவே-பெருமாள் இடத்தில் கிடந்தவையாய் அன்றோ
இங்கு தர்மி அதுவேயாய் -குணங்களால் மேம்பட்டதாய் –அதற்கு மேலே தீம்பும் ஆனால்-
பாடு ஆற்றப் போகாதே அன்றோ -துன்பம் பொறுக்கப் போகாது என்றது ஆயிற்று-
உலகத்தார் இனிமை உண்டு என்று நினைத்து இருக்கிற-ஐம்புல விஷயங்கள்
அனைத்தும் தமக்கு துன்புறுத்துவனவாக-பெற வேண்டிய பொருளைப் பெறாமல்
ஆண் புலியான ஸ்ரீ வீடுமர்-அர்ஜுனன் கையிலே அம்புகளால் உளைய
ஏவுண்டு கிடந்து துடித்தால் போலே-நடுவே கிடந்தது துடிக்கிறார் –
திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் பசு மேய்க்கப் புறப்பட்டால்
அவன் வரும் அளவும் அவர்கள் படும் பாடு சொல்லுகிறது –

அதாவது பிராமணர்க்கு சந்த்யா வந்தனம் போலே அன்றோ-ஆயர்கட்கு பசு மேய்க்கை ஆயிற்று-
அது சாதிக்கு உரிய தர்மம் ஆகையாலே தவிர்க்க ஒண்ணாது இருக்கும் அன்றோ –
இப்படியாலே அவனை பசுக்களின் பின்னே புறப்பட விட்டு
அவன் வரும் மாலை நேரத்தை பார்த்து இருப்பார்கள் அத்தனை -ஆயிற்று

ஆக
அவன் பசு மேய்க்க போனால் பகல் பொழுதை வருந்தி ஒரு படி ஆற்றினால்
அவன் வரும் காலமான மாலைப் பொழுதும் வந்து முகம் காட்டி
பசுக்களின் முற் கொழுந்து வந்து தலை வைக்கச் செய்தேயும்
அவன் வரக் காணா விட்டால் ஆற்றப் போகாதே அன்றோ –

அதாவது
அவன் தான் முற் கொழுந்திலே வாராமல்-பிற் கூழையிலே நிற்கும் ஆயிற்று-நடுவு படும் அலமாப்பு காண்கைக்காக-
அவன் வரக் கூடிய காலமான மாலைப் பொழுதும் வந்தது-கூட பசுக்களும் வந்தன -ஆ புகும் மாலையும் ஆகின்றது –
பசுக்களும் வந்தன -மாயன் வாரான் –அவன் தான் வரக் காணா விட்டவாறே-

அக்காலத்தில் – மல்லிகையின் பரிமளம்-நல்ல குறிஞ்சி இசை தொடக்கமான இன்பப் பொருள்கள்
தென்றல்
நிலா
கடல் ஓசை
அன்றில்
குழல் ஓசை
முதலானவை துன்புறுத்தத் தொடங்கின-

அவன் முன்னே வந்து இருந்தால் இவை எல்லாம் உத்தேச்யமாக இருக்குமே -சிங்கம் இல்லா விட்டால் நரிக் கூட்டம் நலியும் –
குழல் ஓசையும் அவ்வழியே அவனுடைய குணங்களை நினைவு ஊட்டி நோவு படுகைக்கு-உடலாய் இருக்கும் அன்றோ –

அப்படி இருக்கிற துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்-முன்பு தனித் தனியே இழி சொற்களைப் பேசி நலிந்த-
ஒற்றைக் கண்ணள்-
ஒற்றைக் காதள்-
உள்ளிட்ட அரக்கிகள் பின்பு-அவ்வளவிலே நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து
அதற்கு மேலே சில நலிவுகளைச் செய்ய நினைத்தால் போலே-துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
தனைத் தனியேவும் திரளவும் மேல் விழுந்து நலிய-
அவற்றால் நலிவு பட்டவர் எல்லாரும் கூப்பிட்ட கூப்பீட்டை-இவர் ஒருவருமே கூப்பிடுகிறார்-

இது மாலைப் பூசல் –இரவு முழுவதும் துன்பம் -5-4 ஊரெல்லாம் துஞ்சி –10-3 -காலைப் பூசல் –

ஒன்பதாம் திருவாய் மொழியிலே கீழ் ப்ராப்ய விஷயமான அபி நிவேசத்தாலே ஈடுபட்டவர்
அனுபவ யோக்ய அவஸ்த்தை சந்நிஹிதையாய் இருக்கச் செய்தேயும் அநு பாவ்யானான ஈஸ்வரன்
அஸந்நிஹிதன் ஆகையால் விளம்ப அஷமதாய் படியாக போக்ய பூதனானவனுடைய
ரஞ்ச நீய திவ்ய ஸ்வபாவதையையும்
ரக்ஷண திவ்ய பிரகாரத்தையும்
ரமணீய திவ்ய அவயவத்தையும்
அபிரூப திவ்ய வாஹனத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலபயத்தையும்
அனவதிக ஸுசீல்யத்தையும்
அத்ய யுதார ரூபதையையும்
அதிசயித சம்ச்லேஷத்தையும்
சாபிப்ராய நிரீக்ஷணாதிகளையும்
விஸ்லேஷ அஸக்யமான ஆச்சர்ய ரூபத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான போக்கிய பூதனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலும்
ஸ்மாரகமாயும் ஆஸக்தி ஸூ சகமாயும் இருக்கிற பதார்த்த தரிசனத்தால் வந்த ஸைதில்யத்தாலும்
அல்ப கால விளம்பமும் பொறுக்க மாட்டாமல் கூப்பிட்ட பிரகாரத்தை
பசு மேக்கப் போந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஸந்த்யை வந்து இருக்கச் செய்தேயும் வாராத விளம்பம் பொறுக்க மாட்டாமல்
கோபீ ஜனங்கள் தத் கால சித்த போக்யங்களாலே ஈடுபட்டு பொழுது கண்டு இரங்கிக்
கூப்பிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் —

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான-பொருள்கள் –ஈருமாலோ-தவரும் ஆலோ–மயக்கும் ஆலோ–சிதைக்கும் ஆலோ-தனித் தனியே தன்னை வருத்து கிறபடியை சொல்லுகிறாள்-
மல்லிகை -என்றது முதல்-செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ -எனபது முடிய  இவள் யார் கேட்க கூப்பிடுகிறாள் தான் –

வட்ட வாய் நேமி வலம் கையா போலே எங்கும் வாயாக இருக்குமே வாயுவுக்கு –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு —கிராண இந்த்ரியமான மூக்கிற்கு பாதகமாய்-ஸ்பர்ச இந்த்ரியமான உடம்பையும் அழியா நின்றது -என்பாள்
கமழ் தென்றல் ஈரும் -என்கிறாள் –

அல்லி அம் தாமரைக் கண்ணன் –முதல் உறவு செய்வன கண்களே அன்றோ –கண்ணோடு கண்ணினை கௌவி-ஒன்றை ஓன்று உண்ட பின் அன்றோ-மெய்யுறு புணர்ச்சி உண்டாவது –

எம்மான் –அக் கண் அழகாலே என்னைத் தனக்கே உரியவள் ஆகும்படி செய்தவன் –எம் மாயோன் –அம் மேன்மையை உடையவன்-தாழ்ந்தார் சிலர் உயர்ந்தவர்களோடு கலக்குமா போலே-
கையைக் காலைப் பிடித்து-தாழ நின்று பரிமாறின படி –கலக்கும் போது மின் மினி பறக்கும்படி காணும் கலந்தது –

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு –
அவனும் வாராது இருக்கிறான்-நானும் வருந்தி ஒருபடி ஜீவித்து கிடக்கிறேன்- அவனுக்காக உண்டான இந்த பிள்ளைகளைக் கொண்டு புகலிடம் அறிகிலேன்-
நான் செய்தபடி செய்ய-இம் முலைகளின் வீக்கம் தீர அனுபவிக்கப் பெறுவது எப்போதோ – பஞ்ச காலத்தில் குழந்தைகள் சோறு சோறு என்னுமா போலே படுத்தா நின்றன –
அவன் தானும் கலக்கும் போது எல்லா அங்கங்களிலும் கலப்பதற்கு-ஆற்றல் இல்லாதவன் போலே காணும்-
அவன் இழிந்த துறையும்-இளைப்பாறின இடமும்-மலராள் தனத்து உள்ளான் -இழிந்த துறை-மெல்லியல் தோள் தோய்ந்தாய் -இளைப்பாறின

ஆக-இங்கும் பொருந்தாதே-அங்குப் புகப் பெறாதே-நடுவே நின்று கிலேசப் படுகிற நிலை-மாலை நேரமாகிறது -என்று-இங்கனே ஒரு கருத்தாக சொல்லக் கடவதாய் இருக்கும் –ஸந்த்யா காலத்துக்கு ஸ்வா பதேசம் முக்தன் படும் நிலை –முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று-பேரணி உறு பூசல் ஆனவாறே திரள அமுக்குமாறு போலே-தனித்தனியே நலிந்த பொருள்கள்-வலிமை குறைய குறைய-
பல கூடி வந்து நலியா நின்றன –என்கிறாள்– மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்-திரளாக வந்து நலிகிற படியை-பேசுகிறாள்-

————-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

கிரியா பதம் இல்லை -நலியும் பிரகாரங்கள் -சொல்லாமல் பொருள்களை மட்டும் -நெருப்பு நெருப்பு என்று காத்துமா போலே —இங்கு கீழ் உள்ள நிதானம் கூட இல்லை

ஈருமாலோ -தவருமாலோ -மயக்குமாலோ –சிதைக்குமாலோ -என்ன வேண்டா புலி புலி -எனபது போன்று இவற்றின் பெயரைச் சொன்னாலே அச்சம் உண்டாகிறதே

அன்றிக்கே-இவற்றின் உடைய நலிவை-வாயால் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி யாய் -வேகும்படியாய் -இருக்கையாலே சொல்லாது ஒழிந்தாள்

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-என்றபடி

வாரான் – இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –
வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-
என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ

இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-
பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்–அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்
இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி-துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –

———-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும்
நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-பாஹ்யமான பாதகங்கள் அன்றிக்கே அதி ரமணீயமான -அவன் அவயவங்கள் ஆந்தரங்கமாக நலிய-
அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றது -என்கிறாள்-மனத்தே நின்று ஈரும் -என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்

இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து-முலைகள் இளைக்க -இடையை நுடங்கும் படி -தளரும் படியாக
மார்பு -பக்தி -இடை வைராக்யம் -கண் -ஞானம் -அவனுக்கு-கலக்கும் போது எதிர்த் தலையை பேண அறிந்திலன் –தன் காதல் தீர்ந்தான் இத்தனை -என்றபடி –

ஆகம் தோய்ந்து–இக் கலவியாலே நீராகச் செய்து-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் -இட்டு -அசேதனம் போலே பொகட்டு-அகலுகையே நிரூபகம் கிருஷ்ணனுக்கு –விட்டு அகல் கிருஷ்ணன் -ஸ்வரூப நிரூபக தர்மம்

தனி இளம் சிங்கம்—தனி-இவளுடைய கலவியாலே ஒப்பற்றவனாக இருந்தான்-என்று தோற்றும்படி இருந்தான் –
இளம்–கலக்க கலக்க கீழ் நோக்கிப் பிராயம் புகா நின்றான் ஆதலின்-இளமை -என்கிறது –
சிங்கம்–இவளுடைய கலவியாலே பெறாப் பெறு பெற்றானாய் மேல்-நாணித்து இருந்தான் ஆதலின் -சிங்கம் -என்கிறது –

தாமரைக் கண்ணும் செவ்வாயும் -நீலப்பபனி இரும் குழல்களும் நான்கு தோளும்பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-
அவன் கண்களுக்கு தோன்றாது ஒழிந்தால்–இவை நெஞ்சுக்கு தோன்றாது ஒழிந்தால் ஆகாதோ –தான் போகிறான்-இவற்றை வைத்துப் போக வேண்டுமோ –

தாமரைக் கண்ணும் –கலந்த போது தன் பேறு என்று தோற்றும்படியான-திருக் கண்களை உடையவன் -என்னுதல் –
பிரிவினை நினைத்து வாய் விட மாட்டாதே-ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே தோற்றும்படி நின்ற நிலை -என்னுதல்

செவ் வாயும் –பிரிவினைச் சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே-போதைச் சிவந்த திரு அதரமும்-
இவனுடைய -நிமியும் வாயும் கண்களும் -6-5-2- இருக்கிறபடி-நிமியும் வாய் -உதடு நெளிக்கிற வாய்-

மனத்தே நின்று ஈருமாலோ- மனத்திலே எப்பொழுதும் நின்று நலியா நின்றது
அணைக்கும் படி கைக்கு எட்டுதல்-நெஞ்சுக்கு எட்டாது ஒழியல்-செய்யப் பெற்றிலன் – அறிவு அழிந்து-மறந்து பிழைக்க-ஒண்ணாதபடி-செய்தான் ஆயிற்று –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-அனைவருக்கும் சாதகம் எனக்கு பாதகம் ஆவதே -பிரிந்து இருந்து -ஈடு படுக்கைக்கு ஈடான பாபங்கள் –

———

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ-அபி ரூபமான கருட வாஹனம் உடையவன் புஜித்த -பெண்மை ஆஸ்ரயமும் ஈடு படும் படி -அகவாயில் நலிகிறது ஒழிய-நேராக வந்து நின்றும் பெண்மை –ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன-நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் —அம் பூ இது ஆலோ  -அழகிய பூ போன்ற இது-புஷபமாக நான் இருக்க-பெண்மை ஸ்த்ரீத்வம் -என்னுடைய பெண்மை யாகிற பூ –பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே-மென் மலர்ப் பள்ளி-நலிகிற பொருள்களைச்-சொல்லுகிறாள்-

வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ-சம்ச்லேஷ தசையில் பொதுவாக அனைவருக்கும் -குளிர்ந்த வாடை -இப்பொழுது விஸ்லேஷத்தில் எனக்கு மட்டும் வெவ்வாடை ஆனதே -தாய்மார் வார்த்தையைக் கேட்டு தண் வாடை என்கிறாள்-தன் அனுபவத்தால் வெவ்விய வாடை -என்கிறாள்-வாயோர் அக்னி -ஸூக தாதா -வாயுவின் பிள்ளை அன்றோ நெருப்பு –பிள்ளையை இட்டுச் சொல்லுமா போல்  வெவ்விய வாடை-

மேவு தண் மதியம் வெம் மதியமாலோ – உலகத்தார் வெம்மைக்கு அஞ்சி நிலாவிலே ஒதுங்க காண்கையாலே-தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவன் நெருப்பு மயமான சந்தரன் ஆனான்-அவன் நெஞ்சு அறிந்தவன் ஆகையாலே -இச் சந்திரனும் வேறு பட்டான் –-சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ ஸூக்தம் படி- பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் -என்னக் கடவது அன்றோ-ஆயன் தன் மனம் கல்லானது -9-9-5-அறிந்து மதி கேடாய் இருந்தது

—————

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகுமாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

எல்லா பொருள்களும் தம்தம் தன்மைகளை நீக்கி வேறு பட்டனவாக–நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்-
அவ்வளவிலும் அவனுடைய திருவருள் அரிதானால்-அவனுடை யருள் பெறும் போதரிதே-தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

என்னது என்று விரும்ப அமையும் அன்றோ-துணை இன்றிக்கே ஒழிகைக்கு-
யாமுடை நெஞ்சம் – யாமுடை ஆயன் -யாமுடை தோழி மார்-ஆ புகு மாலையும் ஆகின்றாலோ –

யாமுடை யார் உயிர் காக்குமாறு என் –இத் தனிமையில் ஆத்துமாவைத் தரித்துக் கொண்டு இருப்பதற்கு விரகு -என்-பிறர் உயிர் ஆகில் நோக்கவுமாம்–ஆதலால் யாமுடை உயிர் -என்கிறாள்

————-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அகலகில்லேன் இறையும்-என்று-நித்ய வாசம் செய்கிற பிராட்டியோடு வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன்-முதலானவர்களோடு வாசி அற-உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்-என் உயிரை ஈரா நின்றது–அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது–என்கிறாள் –காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன-காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி –

அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் –பகல் அடு மாலையும் -பகலை முடித்துக் கொடு வந்து-மாலையும் தோற்றா நின்றது –நெஞ்சையும் காண்கின்றிலேன்-எம்பெருமானார் நிர்வாகம்
அன்றிக்கே-மாலையும் காண்கின்றிலேன்-நெஞ்சையும் காண்கின்றிலேன் -என்னுதல் -என்றது –ஆளவந்தார் நிர்வாகம் –
மேலே வருகிற காலத்தின் உடைய கொடுமையைப் பார்த்தவாறே-மாலையே தேட்டமாக இருக்கிறது -என்றபடி
வழியில் போகா நிற்க வழி தெரியாமல் மயங்கினால்-கையில் பொருளைக் கொண்டாகிலும் வழி காட்ட வல்லடிக்காரரை யாகிலும் கிடையாதோ -என்னுமாறு போன்றும்
ஒற்றைக் கண்ணள்- ஒற்றைக் காதள் -தொடக்கமான அரக்கியர்கள்-கையில் காட்டிக் கொடுத்து இராவணன் பேர நின்றால் போலே
ஆற்றலாம்படியான பகலை முடித்துக் கொடு வந்த மாலை நேரமானது-தேட்டமாம்படி யாய் வந்து விழுந்தது -என்றபடி –பகல் -ஜடாயு -மாலை -ராவணன் -இரவு ராக்ஷஸிகள் போல்

ஆருக்கு என் சொல்லுகேன்-மீனுக்கு தண்ணீர் வார்த்தால் போன்று நித்ய ஸூரிகளுக்கு சொல்லவோ
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் பிரமன் முதலானவர்க்கு சொல்லவோ
விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் திரியும் சம்சாரிகட்குச் சொல்லவோ

அன்றிக்கே
ஆச்சார்யனை அடைந்து-ஸ்வரூப ஞானம் பிறந்து-துறும்பு நறுக்கலாகாது -என்று இருக்கிற செங்கோடு குட்டைகளுக்கு சொல்லவோ
செங்கோடு குட்டை -செவ்வையாக கொடுக்கிற நாழி-தாம் கொண்ட கொள்கை விடாதவர்கள்-கிருஹீதக் ராஹிகள்-
உபாய பாவத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை -கைங்கர்யம் வேண்டாம் என்று சொல்ல வில்லை என்று உணராதவர்கள் —
யாருக்கு எதனைச் சொல்ல-சொல்லுதற்கு வார்த்தை இல்லை-கேட்கைக்கு அதிகாரிகளும் இல்லை

———–

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

மேல் கூறிய துன்புறுத்தும் பொருள்கள் -வரிசையாக எட்டு பொருள்களும்-எல்லாம்-திரண்டு வந்து கண் பாராதே நலியா நின்றன –என்கிறாள்-பரிமளம் கொண்ட அகில் புகை -யாழின் நரம்பு -பஞ்சம பண் -குளிர்ந்த சந்தனம் -அளைந்து -சஹகாரி இல்லாமல் போர் உற்ற வாடை
கவசம் பூண்டு -இவற்றை -மணத்தை கானத்தை ராகத்தை குளிர்ந்த சந்தனம் க்ரஹித்துக் கொண்டு செவ்வியான மல்லிகைப் பூ -நஞ்சு -புது மணம் முகந்து -வந்து -வீசா நிற்கும்

ஆருக்கு என் சொல்லுகேன்–நெஞ்சம் உங்களதாய்-துன்புறுத்தும் பொருள்கள் இனிய பொருள்கள் என்று அவற்றைத் தேடித் திரிகிற-உங்களுக்குச் சொல்லவோ-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்- என்கிறபடியே-அதுவும் மீளா இடத்தே புக்கதே –

காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே –
மேகம் போன்று சிரமத்தை போக்கும் வடிவு உடையவனாய்-அவ்வடிவைக் காட்டி என்னை தனக்கே உரியவள் ஆக்கி-எனக்கு உரிமைப் பட்டவனான கிருஷ்ணன் உடைய-
கள்வம் உண்டு-கலவிக் காலத்தில் பேசின தாழ்ந்த பேச்சுகளும்-செய்த செயல்களும்
அவற்றாலே கவரப் பட்ட ஒப்பற்றதான என் மனதானது அவன் பக்கலது-பேச்சும் செய்கையும் – நாச்சியார் திருமொழி -2-4–என்னக் கடவது அன்றோ

————

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-இரண்டு ஏவ காரங்கள் –தீம் குழலே -ஆய்ச்சியர்க்காகவே ஊதுவது –

மேலே தனித் தனியாகவும்-திரண்டும் வந்த-பாதகப் பொருள்கள்-ஒன்றுக்கு ஓன்று முற்கோலி-நலியா நின்றன-என்கிறாள்-சாந்தினில் பஞ்சமம் வைத்து-நான் முன்னே என்றவாறு -அக்காலத்தில் காட்சியால் -உண்டான இனிமை -கேட்பதிலும் இனிமை -கோபால சூடாமணி -பிரகாசிப்பிக்கும் -இதற்கே நான் முடிந்தேன் –

புன் செக்கராலோ –செக்கர் வானமும் சென்று மறையும் அளவாயிற்று -என்றது
மேல் வருகிற காலத்தின் தண்மையைப் பார்த்தவாறே-பகலைப் போன்று மாலைப் பொழுதும் தேட்டமாய் வந்து விழுந்தது-ஆளவந்தார் நிர்வாஹம் படி வியாக்யானம் இது –
எம்பெருமானார் நிர்வாஹம் -புன்மை தண்ணியமாய் -கொடிய செக்கர் வானமும் வாரா நின்றது-

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது –அது -பேச்சுக்கு நிலம் இல்லாத படிக்கு ஆயிற்று கலந்தது –அப்படி கலந்து அகன்ற நம் கண்ணபிரானுடைய-கலக்கிற போதை தாழ்ந்த பேச்சுக்களும்-அவன் வருத்துவதைக் காட்டிலும் வருத்தா நின்றன

பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் –பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு-குழல் ஓசை துன்புறுத்துகிறது -என்னுதல்-இவற்றில் பஞ்சமம் என்கிற பண்ணையும் கூட்டிக் கொண்டு -என்னுதல்

குழற்கே உய்யேன் நான் –துன்புறுத்தும் மற்றைப் பொருள்களுக்கு பிழைத்து இருந்தேன் ஆகிலும்-இக் குழல் ஓசைக்கு நான் பிழைக்க மாட்டேன்-அவை எல்லாம் ஒரு படியும்-இது ஒரு படியும் ஆயிற்று நலிகிறபடி

————–

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி–முக்த ஜீவன் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் –அசித் மிஸ்ராத் விஸுக்தாத் -15 அத்யாய ஸங்க்ரஹ ஸ்லோகம் –சங்கல்ப ரூப ஞானம் -கொண்டே பார்த்து கேட்டு -கண் காது மூலம் இல்லை –பண்டே ஆயர் பெண்கள் நடுவே-இவன் குழல் ஊதுகிற போது-நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில வார்த்தைகளை பேசிக் கொண்டும்-சில செயல்களைச் செய்து கொண்டும்-பாடும் பாட்டை நினைத்து-ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –வாக்கின் பேச்சும் கண்களின் நோக்கும்-மாறாடின படி -என்னுதல் –

அது மொழிந்து இடை இடைத் –இடை இடை -அது -மொழிந்து-
பிரிந்தேன்-ஆற்றேன்-என்றாப் போலே சொல்லுகிற இழி சொற்களை இடை இடையே சொல்லி-ஆயிற்றுப் பாடுவது-தாழ்ந்த செயல்களையும் சொற்களையும் தன் வாயாலே-சொல்ல மாட்டாமையாலே –அது -என்கிறாள் –
எம்பார் -இந்த இடம் வந்தவாறே மோர் உள்ளதனையும் சோறேயோ-தேசிகரும் கூட பாசுரம் இட்டு சொல்ல மாட்டாதே -அது-என்னா நிற்க மத்யஸ்தரான நாம் இதற்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -என்று அருளிச் செய்தாராம் –
அன்றிக்கே –அது ஒழிந்து–என்ற பாடமான போது-அது தவிர்ந்து -என்னுதல் –அதாவது
நடு நடுவே-தாழ்ந்த சொற்களை சொல்லிப் பாடுகிற பாட்டை விட்டு -என்றபடி –
குழகன் என் தன் கோமள பிள்ளாய் –மழலை மென்னகை இடை இடை அருள வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேன் -பெருமாள் திருமொழி -7-7-

பேதுறு முகம் செய்து -நித்ய நிர்விகார தத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம் –

மாயன் வாரான் –தன்னைப் பிரிந்தார் நாணம் உறும்படி-தானே இழவாளனாய் வந்து-காலைப் பிடிக்கும் ஆச்சர்யத்தை உடையவன்-வருகின்றிலன் –

————

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாலையும் வந்தது மாயன் வாரான்–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–வருவதாக சொன்ன காலம் வந்திருக்க-அவன் வருகின்றிலன்-துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே-அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள் –நான் பிழைக்க என்று ஓன்று உண்டோ -முடிந்தேன் -என்றபடி –

கோல நன் நாகுகள் உகளுமாலோ-வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ-திர்யக்குகள் ஆனவை கல்வியால் வந்த உவகைக்கு போக்கு விட்டு களிப்பனவும்-குதித்து ஆடா நின்றனவும் ஆகா நின்றன

கொடியன குழல்களும் குழறுமாலோ-எல்லாரும் ஒரு சேரக் குழல்களை வாங்கி-சாம்யா பத்தி — ஆயர்களுக்கு குழல் உண்டே-வாரணம் ஆயிரம் இத்யாதி –தன்னேராயிரம் பிள்ளைகள் போலே -இங்கேயே அருளுவான் —

————

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

அவன் பக்கல் ஆசை உடையார்-இத் திருவாய் மொழியைச் சொல்லி-அவனைப் பெருங்கோள் என்கிறார்-அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே-திரு மாலை சொன்ன –அப்படிப் பட்ட -கோபிகா ஸ்த்ரீகள் கோகுலத்தில் நின்று –மாலைப் பூசல்-மாநசமாக ஆழ்வார் அங்கே சென்று அருளிச் செய்ய-அவர்கள் எல்லாரும் பட்ட துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை- -வ்யாமோஹனை அடைந்து -அனுபவிப்பார் –
கோபிமார் தனித்த தனியே -திரளாகவும் கூப்பிட்ட பாசுரங்கள் –மாலையும் இருக்கும் மாயனும் இருப்பான் -கைங்கர்யமும் கிட்டும்

இத்தால் ஆழ்வார் உடன் ஸம்ஸலேஷித்தான் -நான்கு பதிகமாக பட்ட பாடு தீர்ந்து அடுத்த திருவாயமொழி மாலை நண்ணி என்பதால்

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு–இப்போது இது சொல்லிற்று-விரகப் பிரளயத்தின் நின்றும்-தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக-அகாராம் ஈஸ்வர விசேஷணம் –அம்மாலை -ஆலோ ஆலோ என்று கதற வைத்த வியாமோஹன்-இப்பாசுரத்தை கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்
–89-அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன் மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் அருள் –அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -28-தண்  அம் துழாய் வளை கொள்வது -கங்குலும் பகலும் -7-2-

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

செங்கயல் பாய் வயல் திருவரங்கா-நாரங்கள் வாழ -அது தாயார் பாசுரம்–இங்கும் பொரு நீர் திருவரங்கா –-சங்குகளை ரஷிக்கும் காவேரி இருக்க -நீர் ரஷியாது இருக்கலாமோ-இது போல் முன்பு யாருக்குமே துன்பம் கொடுக்காமல்-கஜேந்திரன் திரௌபதி ப்ரஹ்லாதனன் போல்வார் அளவிலே விரைந்து வந்து ரஷித்தாய்-திருத்துழாய் நலிய நாம் இழப்போம்-நடுவு பிராப்தியே இல்லாத வாடையும் வந்து நலிய வேண்டுமோ-7-1-இந்திரியங்கள் நலிய -பெண் துன்பப்பட பட -தாயார் கேட்டது 7-2-இங்கு 27 -மகிழ்ந்து -இப்பொழுது 28-வியசனம்-நடுவிலே நடந்ததை-ஆச்சார்யர் வியாக்யானம் கொண்டு அறிய வேண்டும்

கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து , நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக  தலைக் கட்டிற்று.–சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று-தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே —    என்று யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால் ,அவன் பரிகரமும் அப்படியே நிற்கும்-திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடை காற்று   குளிர்ந்து-அது தான் இப் பொழுது சுடத் தொடங்கிற்று-சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே-திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அநந்தரத்திலே உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-

இப்படி பாவநா ஸித்தமான பகவத் அங்கீ காரமும் பதார்த்தாந்தர அநு கூல்யமும் அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –-அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது-தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது-இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே-அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்-அவ்வளவு அல்ல இறே இது ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய் -ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது-ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை-ஆக ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே 
–28-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்
—62-ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே-அழுவது தொழுவது விழுவது எழுவது அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்-ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை-இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி – துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
(இப்பாசுரம்-வேடு பறி உத்சவம் – திருவாலியில் சொல்லி பின்பே வாடினேன் வாடி தொடக்கம் ஆகும் )
ஐக்யமாக அருளிச் செய்தது-சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே-பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது 

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் —இதில் சேதம் (விரோதம்)இல்லை-இது செய்யலாம்–திருத் துழாய்க்கும் தனக்கும் பாத்ய பாதக-சம்பந்தம் உண்டாகையாலே ,-திருத் துழாய் அங்கு உற்ற அசாதாரண பரிகரம் ஆகையாலும்–தனக்கு திருவடி களிலே சம்பந்தம் உண்டு ஆகையாலும்-பாத்ய பாதக  பாவ சம்பந்தம் தனக்கு பாதகமே ஆகிலும்-திருத் துழாயோடு ஒரு சம்பந்தம் உண்டாக அமையும் போலே காணும்–ராஜாக்கள் முனிந்தால் அவன் பரிகரமும் எதிரி யாம் போலே
சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே- அவன் உடைய அசாதாரண திருத் துழாயும் நலிகிறது
(அந்தப்புரத்தில் உள்ளாரைத் தண்டிக்க அசாதாரண பரிகரம் வேண்டுமே )

நடுவே-பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றியிலே இருக்க நலிகிறது என்-விபூதி சாமான்யத்தாலே நலிகிறது அத்தனை நாங்கள் குடி மக்கள் அல்லோம் (அந்தப்புரம் சேர்ந்தவர்கள் அன்றோ )நடுவே-
ஸ்வரூப பிரயுக்தம் அன்று —ஔபாதிகம் என்றுமாம் (ஆகந்துகம் -வந்தேறி என்றபடி )

வாடையைச் சொல்லுகையாலே–பூதங்களில் பிரதானத்தை எடுத்து , பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று-பிரகிருதி பிரவாஹத்தாலே நித்தியமாய் இருக்க ,-இத்தை உபாதி என்னும் படி எங்கனே என்னில்-அந்தவத்தாகையாலே-ஆதி மத்தென்று கொள்ளுகிறோம்-முகத்தில் அழுக்கை கழுவினால் அவ் வழுக்கு  போனதை கண்டு வந்தேறி என்று கொள்ளலாகா நின்றது அழுக்கு இந்த நாள் தொடங்கி பற்றிற்று என்று அறிய வேண்டுவதில்லை என்று-பிரகிருதி என்பது ஒரு நாள் முடியுமே–அந்தவத்து என்றாலே ஆதிமத்தாக இருக்க வேண்டுமே –

வண்ணம் துழாவி –வருகிற போதே கண்ணால் கண்டாரை விழ விட்டு கொண்டு வாரா நின்றது-
கலந்து பெற்ற-நிறத்தை அழித்து கொண்டு வாரா நின்றது–ஓர் வாடை-அத்வதீயன் –தனி வீரன் என்றுமாம்–உலாவும் –தனக்கு எதிரி இல்லாமையால் மத முதிதமான கஜம் பாகனை விழ விட்டு உலாவுமா போலே-வாரா நிற்கும் நிராஸ்ரய்மாய் நில்லாது என்று இந்நிறம் நிற்கும் ஆஸ்ரயத்தை கணிசித்து உலாவா நின்றது- அசம்பாதமாக  உலாவா நின்றது-ஒளியைத் தான் கவர வந்தது
ஒளிக்கு ஆஸ்ரயமான இவள் திருமேனியையும் அழிக்கவே உலவா நின்றது )

இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார் பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும் இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –தலைவி ஏங்குகிற பாசுரம் தான் இது -தாயார் பாசுரம் இல்லை இங்கு –

வள்வாய் இத்யாதி —
ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து இவளை ஹிம்சிக்க வேணும் என்ன- புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு , இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தைச் சொல்லி நாம் நசிவது என்று அருளிச் செய்தார்–வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,
அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய்  இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால் சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-வளைத்த வாய் அலகை உடைத்தான புள்ளானது , சங்கை ஹிம்சியாத படி தன்னுடைய நீர் திரை ஆகிய கையாலே எதிரியோடு பொருது சங்கை ரஷிக்கும் படியான ஊரிலே இருக்கிறவனே-பொரு நீர்-புள்ளானது ஆமிஷித்தை கணிசித்து நீர் கரையிலே இருக்க சங்கானது நம்மை ஹிம்சிக்க போகிறது என்று அறியாது என்னை நீர் நோக்க வேணும் என்று சொல்லாது இருக்க தன் பக்கலிலே வர்த்திக்கும் இவற்றுக்காக அவற்றின் எதிரியான புள்ளின் முகத்திலே தன் திரை ஆகிய கையாலே யுத்தம் பண்ணி உள்ளே போராய் என்று கையை பிடித்து கொண்டு போகா நின்றது –

இத்தால் செய்கிறது –
அசேதனமான நீரானது தன் பக்கலிலே வர்திக்கிறவற்றை இப்படியே நோக்கா நின்றால் பரம சேதனரான தேவரீருக்கு இவள் திறத்து என் செய்ய வேண்டா என்கிறது-பவத் விஷய வாஸிந என்பதையே கொண்டு சராசரங்களை நல்பாலுக்கு உய்த்தினாயே -சுத்த சத்வ மயமான ஆத்மாவை
ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது-திரு அரங்கா அருளாய் —அருளாய் என்ற பொழுது அருளக் கண்டிலர்–இப்படி அருளாது ஒழிவது என் என்னில் ,-
ஈஸ்வரன்-1-கரண களேபராதிகள் நமக்குத் தந்தோம் ஆகில்-2-பக்த்யாதி உபாயங்களை காட்டினோமாகில்-3-இதுக்கு அடியான பிரமாணங்களை காட்டினோம் ஆகில் அவற்றை அனுஷ்டித்து நம்மை வந்து கிட்டுகிறீர் என்று ஆறி இருக்க —சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியான நீ இவற்றை எல்லாம் இங்கனே பண்ணினாய் அத்தனை அல்லது வேறு பட பண்ணிற்று இல்லையே நான் உண்டாய் இருக்க கிட்டும் படி என் என்கிறார்-கூடவே பாரதந்தர்யத்தையும் காட்டி அருளினாய் அன்றோ-அருளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்று அறிவிக்க வேணுமே-நான் உண்டாய் இருக்கும் படி கிட்டும் படி -அடைய காட்டும்படி -உபாயாந்தரங்கள் பல நீ காட்டிப் படுப்பாயோ -பகவத் விஷயத்தில் இதனை அவகாஹரான  இவர் இத்தனை அஞ்சுவான் என் என்னில் பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானம் ஆகையாலே த்யாஜ்ய பூர்வமாக பிராப்யத்தை காட்டிக் கொடு நின்றது பிராப்யத்தில் ருசியும் மிகா நின்றது ருசி அனுகுணமாக பிராப்தி அளவும் செல்லாமையாலே அதுக்கு அடியான விரோதி தர்சனத்தை பண்ணி அஞ்சுகிறார்–சம்சாரத்தை பார்த்தால் பயப்பட வேணும்.. சர்வேஸ்வரனை பார்த்தால் பயம் கெட வேணும் -அவனைப் பார்த்துப் பயம் கெட்டிலன் ஆகில் பகவத் பிரபாவம் அறிந்திலனாம்–சம்சாரம் பார்த்துப் பயப்படிலன் ஆகில் சம்ஸார ஸ்வாபம் அறிந்திலனாம் —ஞான கார்யம் ஆவது ஆகார த்ரயம் உண்டாகை–அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யாத்வம் அநந்ய போக்யத்வம் -சம்சாரம்-மித்யை காண் என்னுதல்– ஔபாதிகம் காண்  என்னுதல் ஜீவன் முக்தி காண் என்று சொல்லும் சூத்ரவாதிகளுக்கு அன்றோ இத்தை- நினைத்தால் அஞ்சாது இருக்கல் ஆவது
(புத்த பாஸ்கர சங்கர )பகவத் பிரபாவமும் அறிந்து , சம்ஸார ஸ்வபாவத்தையும் அறிந்து ,
சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனைப் பெற்றால் அன்றோ சர்வேஸ்வரனுக்கு மாஸூச என்னல் ஆவது — இப்படி மாஸூச என்றால் அன்றோ இவனுக்கு ஸ்திதோஸ்மி என்னாலாவது
சித்த வேண்டா சிந்திப்பே அமையும் உபாயாந்தரங்களில் போகாமல் நிலை பெற்று நில்லுங்கோள் பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் ஸ்திதோஸ்மி நிலை பெற்று இருங்கோள்

திரு அரங்கா –நீ இங்கு வந்து கிடக்கிறது
1-உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ —
2-போக பூமி தேடியோ —
3-ஒரு குறைவாளர் இல்லையாமையோ —
4-ருசி உடையார் இல்லாமையோ —நீ அருளாது ஒழிகிறது என்

அருளாய்–மதி நலம் அருளினன்  என்றால் அதன் பயனான-துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ-அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அநாதியோ —இப்போது உண்டானது அத்தனையோ —அருளாத நீர் திரு நாமம் இப்போது அன்றோ பெறுகிறீர் –உளவோ பண்டும் இன்னன்ன – ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ —1-திரௌபதிக்கு  –2-கஜேந்த்ரனுக்கு–3-பிரகலாதனுக்கு-4-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு–5-காகத்துக்கு –

கூர்மையான வாயின் நுனியால் தன்னிடம் உள்ள சங்குகளை பறவைகள் கொத்தாத படி அலை மோதும் காவேரி –நாரமே தன்னை அண்டினாரை ரஷிக்க நாராயணன் நீ கை விடலாமா-கீழே தோற்றின சம்ஸ்லேஷம் -விஸ்லேஷத்துடன் -முடிய திருத் துழாயும் வாடையும் சேர்ந்து நலிய-ஓர் வாடை –துணை இல்லாமல் தானே நலிய வல்ல அத்விதீயமான வாடை –அவனைச் சேராத நிலையிலும் அவன் சம்பந்தம் கொண்டவை உடைய இனிமையும் பிராகிருத பதார்த்தங்களின் தண்மையையும்-சொல்லுவது உள்ளுறை பொருள்தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-அநந்யார்ஹ சேஷத்வத்தை கவர்ந்து கொள்ளட்டும் அதனை இந்த போக்யதைக்கு நாம் இழப்போமாக -அது வன்றி –நடுவே-வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும்-உன் கட்டளையை அனுசரித்து நடக்கக் கடவதான லௌகிக பதார்த்தம் எம் உருவத்தை மாற்றலுற்றது-வாள்வாய அலகால்-புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா —வஞ்சனை உள்ள பிரகிருதி ஆத்மாவை
ஊழ் வினை மூலம் வருத்தாத படி தடுத்து ரஷிக்கும் ஸ்ரீ ரெங்கா–அருளாய் –அது போலே என்னிடத்துக்கும் அருள் புரியாய்எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன
மனத்தால் ஆராயும் இடத்து -துன்புற்ற நிலையில் இப்படி இரங்காத இடங்கள் முன்பு இல்லையே –
பாவியேனுக்கே இங்கனம் ஆயிற்றே –

தண் அம் துழாய் வளை கொள்வது-அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும் அழகும் யுடைத்தான திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்-நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் – இதில் ஒரு துவக்கற்று-பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம் உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது–வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா-வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே–அருளாய்-நீ அருளக் காண்கிறிலேன்–எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்-உளவோ பண்டும் இன்னன்னவே –இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –

சீதள ஸ்வ பாவராய் தர்ச நீயரான பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்-ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்-வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா-கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே என்கையை ஸூ சிப்பிக்கிறது–அருளாய்-என்று-ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற நீ இரங்கக் காண்கிறிலோம் –எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும் இரங்காது இருந்த விஷயங்கள் முற் காலத்திலும் யுளவோ-இல்லை என்றபடி–ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-திரௌபதி-ஸ்ரீ கஜேந்திரன் தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே-இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு-ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்–இதுவான பின்பு-பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய் அண்ணியனுமாய் இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்-ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று இருக்குமது இல்லை இறே நீருக்கு–திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ-இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ-எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்-மயர்வற மதிநலம் அருளின பின்பு தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே-அப்படியேயோ அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
–அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது என் வளையைக் கொள்வது பிராப்தம்-நாம் இழப்போம் உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்-நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் – உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு எடுப்பதாகா உலவா நின்றது –வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா– வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே-அருளாய்-அருளக் காண்கிறிலேன்–எண்ணம் துழாவும் இடத்து-நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்-உளவோ பண்டும் இன்னன்னவே – இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

தாத்பர்யம்
கீழ் பிரசாதம்-மானஸ மாத்திரம் பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல் -அவசன்னராய்
விபூதி நலிய திருத்துழாய் நலியட்டும் வழிப் போக்கான வாயுவும் கூட நிறத்தையும் கொண்டு என்னையும் கொள்ள வேண்டுமோ-மத்ஸ்யாதிகளை கொக்கின் வாயில் அகப்படாமல் காக்கும் திருக் காவேரி பாயும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்து அருளும் நீர் அருளாமல் உபேக்ஷிப்பது எதனால்
உன்னைச் சேர்ந்த நீர் ரக்ஷிப்பதிலேயே தீஷிதனாய் இருக்க ஆபத் ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வபாவமாக இருக்கும் தேவரீர் இப்போது எனக்காக கொண்ட நவநீத விரதம் எதுக்கு
மித்ர பாவேன விரதம் கொண்ட நீர் -இப்பொழுது நவீன விரதமாய் கொண்டுள்ளீரே –

7-2-கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-ப்ரவேஸம்-

‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்,
‘நம:’ என்ற சொல்லின் பொருள் பல வகையாலும்,
‘தொண்டர் தொண்டர் தொண்டன் தொண்டர் சடகோபன்’ என்று
ததீய சேஷத்துவ பரியந்தமாக உள்ளபடி அநுசந்தித்தாராயற்றது.

‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழியில்,
பெரியபிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கமுடையான்
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்;

இரண்டு சங்கதி
என் திருமகள் சேர் மார்பன் -ஸ்ரீ மத் பதார்த்தர்த்தம் ஸூசகம்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -6-10 -பிரணவம் அர்த்தம்
7-1- விரோதி நிவர்த்தகம் -நமஸ்
7-2- நாராயண அர்த்தம்

அன்றிக்கே
6-10- பூர்வ வாக்கியம் அர்த்தம்
7-1- உத்தர வாக்கியம் -நமஸ்
7-2- ஸ்ரீ மத்நாராயண

அக்னி ஹோத்ரம் பண்ண கோதுமை சமைக்க -பின்பு சொல்லினாலும் அர்த்த க்ரமம் வலியது
ஆகவே முன்பு சமைத்து அக்னி ஹோத்ரம் செய்ய வேண்டுமே -அதே போல்
அர்த்தம் பலம் -விரோதி நிவர்த்தகம் பூர்வகமாக கைங்கர்யம் சித்திக்க வேண்டுகையால் –
நமஸ் -ததீய சேஷத்வம் -தொண்டர் தொண்டர் -சடகோபன் சாதித்தார் -என்பதால்
உத்தர வாக்கியம் நமஸ் சொல்லாதே
அதனால் திரு மந்த்ர நமஸ் மத்திய பதார்த்தம்
சதுர்த்யர்த்தம் கைங்கர்யம் -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
பிராவண்யம்-இதிலே சொல்லுகையாலே திருத் தாயார் பாசுரம் –

‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே தன் பக்கலினின்றும்
நம்மை அகற்றப் பார்த்தானே அன்றோ?’ என்று கூப்பிட்டார் ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்.

பலத்தோடே கூடியுள்ளதாயும், கால தாமதம் இன்றிப் பலிக்கக் கூடியதாயும் இருக்கிற சாதனத்தைப் பற்றின பின்பும்
அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க் கொண்டு கூப்பிடுமத்தனை அன்றோ?
‘இப்படிக் கண்ணழிவற்றது பின்னையும் பலியாது ஒழிவான் என்?’ என்னில், அது பலியா நிற்க,
கிரமப் பிராப்தி பொறுக்கா மாட்டாமல் படுகிறார்;

ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ் வருகான இவருடைய மிருதுத் தன்மையின் ஸ்வரூபம் இருக்கிறபடி.
பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்க மாட்டார்,
ருசி அளவு இல்லாமையாலே‘தத் தஸ்ய ஸத்ரு ஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.. 4–
சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து,
எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ?
பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்;
பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்திய ஸூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்;
பிரிவில் நோவு படுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.

பட்டர், இத்திருவாய்மொழி அருளிச் செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே
அவருடைய பாவ விருத்தியும் -உள்ளக் கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று
திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பார்.
அவனும்,இவர் நமக்கே பரம் என்று அறிவித்தாராகில்,
நாமும் இவர் காரியம் செய்வதாக அற்ற பின்பு செய்து முடித்ததேயாமன்றோ?

இவர் அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் இங்கே இருந்தே குறை அற அனுபவியா நின்றாரகில்,
‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் கொள்ளுகின்ற ஐயமும் -அதிசங்கையும் -போக்குகிறோம்;
நான்கு நாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் காரியம் என்?’ என்று இருந்தான்.

‘பிற்பாடு பொறுக்க மாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில்,
குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும்
வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர் தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்;
இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’என்றிருந்தான்.

இவர் ஒரு முகூர்த்த காலம் இருப்பதானது,
தன்னாலும் திருத்த ஒண்ணாத சம்சாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதற்காக வைத்தான் அவன்;

இவர், ‘நம்படி அறிந்தானாகில், தனக்குச் சத்தியில் குறை இல்லையாகில்,
இது பொருந்தாத நம்மை இட்டுக் காரியம் கொள்ள வேணுமோ?
இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டு என்?’ என்றிருந்தார்.

‘இவ்விருப்பில் பொருந்துவார்’என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-

அவனும், ‘அது பொருந்தாதாவரைக் கொண்டே காரியம் கொள்ள வேணும்’ என்றே அன்றே இருக்கிறது?
தேசிகரைக் கொண்டு காரியம் கொள்ள வேணுமே.

சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யம் அறிந்தவர்கள் தேசிகர் –
பொருந்தி வாழ்வார் உபதேசம் செய்தால் தனக்கு என்று ஒன்றும் பிறர்க்கு ஒன்றும் சொல்வதால் விச்வாஸம் பிறக்காதே –
செய்த சரணாகதி சடக்கெனப் பலியாதொழிந்தது, பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்த மாத்திரம் அன்றோ?

இனித்தான் அவனும்,-பெருமாளும் — ஸ்ரீ பரதாழ்வான் மாதுல குலத்தினின்றும் வந்து தாயாரை வணங்க,
அவள், ‘ராஜந்’ என்ற வெம்மை பொறுக்க மாட்டாமல் பெருமாள் திருவடிகளிலே
தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு,‘தேவரீர் மீண்டருள வேணும்’ என்ன,

பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி,
‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவை யல்லை:
உன்னை ஸ்வதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே,-கைகேயி வஸிஷ்டர் போல்வார் முன்னே –
உன் ஸ்வரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே,

இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் பொகட்டுப் போக வல்லான் ஒரு ஸ்வதந்திரன் அல்லனோ?
இவர் அபேக்ஷித்தது மோக்ஷம் -அவன் கொடுத்தது திருவேங்கடத்தான் திருவடிகளில் கைங்கர்யம் –
ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ?

முற்றறிவினனான சர்வேஸ்வரன் இவர்க்கு ஒடுகிற தசையை அறிந்து, தன்னுடைய வரம்பில் ஆற்றலைக் கொண்டு
இவர்க்கு ஒரு பரிகாரம் செய்ய ஒண்ணாதபடி இவருடைய நிலை விசேடம் இருக்கிறபடி.

இவர் தாமும்
‘விண்ணுளார் பெருமானேயோ’ என்றும்
‘முன் பரவை கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியோ!’(அஜிதன் அவதாரம்) என்றும்,
‘பல முதல் படைத்தாய்!’ என்றும் சொல்லுகிறபடியே,
பரத்துவம், அவதாரம், உலகத்திற்குக் காரணமாய் இருக்குந் தன்மை
இவற்றைச் சொல்லியன்றோ கூப்பிட்டது?

அவற்றுள், பரத்துவம் லோகாந்தரம்-வேறு உலகம் ஆகையாலே, ‘கிட்டப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
அவதாரம் காலாந்தரம் -வேறு காலமாகையாலே, ‘அக்காலத்தில் உதவப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை, தான் அறிந்து செய்யுமது ஆகையாலே,
அசித் அவிசேஷதான் போல் இருந்தோம் -‘நம்மால் செய்யாலாவது இல்லை’ என்று கொண்டு ஆறியிருக்கலாம்;

அந்த இழவுகள் எல்லாம் தீரும்படி எப்பொழுதும் அண்மையிலிருந்து கொண்டு கோயிலிலே –
மாத்ருஸ -ரக்ஷணம் -ஜனனி –பரம பதம் ஷீராப்தி மறந்து ஆசைப்பட்டு –
நமக்கு என்று ரதிங்க -ஹரி இரண்டு திருமணத் தூண்கள் -நடுவில்
திருக்கண் வளர்ந்தருளகிற பெரிய பெருமாள் திருவடிகளிலே விழுந்து தாம் விரும்பியவை பெறாவிட்டால் தரிக்க ஒண்ணாதே அன்றோ?

விஷயம் அண்மையில் இல்லாமலிருத்தல்,
ஞானத்திலே கொத்தை உண்டாதல் செய்யிலன்றோ? தரித்திருக்கலாவது?
நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல்,
மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கின்றார் அன்றோ?

இப்படி இருக்கச் செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய்
ஒரு பிராட்டி நிலையை அடைந்தாராய் அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற நிலையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாமல்,
திருத் தாயார் கூப்பிடும் படியாய் விழுந்தது.

கலவியிலும் பிரிவிலும் பிறக்கும் லாப அலாபங்களாலே தாம் பிராட்டிமார் நிலையை யுடையராகிறார்;
‘திருத் தாயாரான நிலை விளைந்தபடி எங்ஙனே?
விளைந்ததாகில் இவருடைய காதலுக்குக் குறைவு வாரோதோ?’ என்ன,
கிண்ணகம் (வெள்ளம் )பெருகி ஓடா நின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகா நிற்கச் செய்தேயும்
கடலிற்புகும் பாகம், குறையாமல் போய்ப் புகுமாறு போலே ஆயிற்று,
இவருடைய ‘அதனிற்பெரிய என் அவா’ என்கிற பேரவாக் குறையாது இருக்கிறபடி.
ஆகையாலே, இவரக்கு எல்லார் பேச்சும் பேசக் குறை இல்லை.

‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு,’ தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.’
‘பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல் கடல் இடங்கொண்ட
கடலை பஹூமுகமாக அவகாஹிக்கும்’ என்றும் ஸ்ரீ ஸூக்திகள் இங்கு அநுசந்தேயம். (ஆசார்ய ஹ்ருதயம், துவிதிய பிரகரணம்,சூ.32,33,45.)

இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க;
பெருமாளைக் காட்டிலும் இளைய பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே,
பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே,

திருத் தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து,
எந்த நிலையிலும் அவனையே பரிகாரம் கேட்டு தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே,
பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக் கொண்டிருந்து,
‘இவள் அழுவது, தொழுவது. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது,
அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது;
இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது,
எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாதிருக்கிறது என்?’ என்ன,
‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள,அங்கே வரக் காட்டு, என்ன,

பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திருவுள்ளமாக,
‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள்’ என்று விண்ணப்பம் செய்ய,
‘எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அகளங்க பிரஹ்ம ராயர் அடைய வளைந்தான் செய்யா நிற்கச் செய்தே மதிள் போக்குகைக்காக
இளையாழ்வான் அகத்தை வாங்கப் புக,
பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்;
இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்;
ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது;
இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்;
உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச் செய்தார்.

இத் திருத் தாயாரும் எல்லாப் பாரங்களையும் அவன் தலையிலே பொகட்டுப் பெண் பிள்ளையைத் திருமணத் தூணுக்குள்ளே
பொகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு,
ஒரு கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே
எல்லாரும் சென்று பற்றலாம்படி இருக்கிறபடியை நினைத்து,
தன் பெண் பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.

வேர் பற்று -திருவரங்கம் -அடியார்கள் வாழ -அனைத்து உலகும் வாழ –மணவாள மா முனி நூறாண்டு வாழ வேண்டும் –
பத்துப் பத்து கல்யாண குணங்களும் -பரத்வம் காரணத்வம் –ஆர்த்தி ஹரத்வம் -இவை பத்தையும்
கங்குலும் பகலில் வைத்து அருளுகிறார்
ஸ்ரீ ராம ராம ராமேதி -போலே –
32 அர்ச்சைகளுக்கு-திவ்ய தேசங்களுக்கு பல்லாண்டு -அற்ற பற்றர் சுற்றி வாழும் அரங்கனூர்
தென் அரங்கம் –இருப்பாக பெற்றோம் -சடகோபர் திருவாய் மொழி உணவாக கொண்டு மதுரகவி நிலையைப் பெறுவோம்
தெற்கு திக்கு நோக்கி கை கூப்புவோம் நம்மாழ்வார் நினைத்து -நிகம பாசுரங்கள் தோறும் –
6-10-ஆணாக ஆனந்தம் – தொடங்கி –அடுத்து -7-1-ஆணாக துக்கம் –7-2–பெண்ணாக துக்கம்–7-3- பெண்ணாக ஆனந்தம் –
திருமங்கை ஆழ்வார் 2-7- இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -இவரும் 7-2- இங்கு
இரக்கம் உபாயம் / முக விலாசம் பிராப்தம்

இரண்டாம் திருவாய்மொழியில்-கீழே -விஷய இந்திரியாதிகளுடைய அதி பிரவ்ருத்தியை அனுசந்தித்து -ஆர்த்தராய்க் கூப்பிட்டவர் –
கன்னலே யமுதே -என்று கீழே அனுசந்தித்த போக்யத்தையாலே இந்த ஆர்த்தியோடே கூட அதி ப்ராவண்யமும் நடந்து –
ப்ராவண்ய அனுரூபமான அனுகூலம் பலியாமையாலே அது பிரதிபந்தக கார்யம் இ றே என்று அனுசந்தித்து
பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பிக்க வேண்டும் யோக்யதைக்கு ஈடான ப்ராப்ய பூதனுடைய
அநு பாவ்ய சிஹன யோகத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்தி விசேஷத்தையும்
ரக்ஷண பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
ஆஸ்ரித அபேக்ஷித கரத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுத பூர்த்தியையும்
சம் ரக்ஷண உபயுக்தமான சமுத்திர ஸாயித்வத்தையும்
திரு அவதார தசையில் அதி மானுஷ சேஷ்டிதத்தையும்
பிரணயித்வ அதிசயத்தையும்
ஈஸ்வர அபிமானிகளுக்கும் அந்தராத்மாவான ஈச்வரத்வ அதிசயத்தையும்
அனுசந்தித்து இப்படி ரக்ஷகனுமாய் போக்யனுமான அவன் பிரதிபந்தகத்தைப் போக்கி அனுபவிக்கிறீலன்-என்கிற ஆர்த்தி அதிசயத்தாலே
அரதிக்ருதமான அநேக வியாபாரங்களை பண்ணி அவசன்னராய் அர்ச்சாவதார ஸூலபமான பெரிய பெருமாளை நோக்கிப் பிறந்த
அபி நிவேச அதிசயத்தாலே அப்ரக்ரு திங்கரான பிரகாரத்தை அனுசந்தித்துப் பரிவரானவர்கள்
இவருடைய தசையை அவர்க்கு விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
நாயகரான பெரிய பெருமாளோடு விஸ்லிஷ்டையான நாயகியினுடைய ஆர்த்தி அதிசயத்தை அனுசந்தித்து ஆற்றாளாய்
நல் தாயானவள் தன் ஆற்றாமையின் மிகுதியால் அவரை புத்தியால் அபரோக்ஷித்து இரங்கி
யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?
–7-2-1-

கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது;
ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.-என்றும் சிறைக் கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவே காணும் இவள் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது.-முதல் நடை தொடங்கிக் காண வேணும்’ என்று கண்ண நீரை மாற்றப் பாரா நின்றாள்.-‘இது என்ன சாகஸந்தான்! இது, தன்னால் இயலும் என்று தொடங்கினாளோ.-கடல் கொண்ட கண்ணீர் அன்றோ?திருவிருத்தம், 18.–விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே -கண்ண நீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையா நின்றாள்.-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.- வலி இல்லாமையாலே தலைக் கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே, குறையும் அஞ்சலியாலே தலைக் கட்டா நின்றாள்

செங்கயல் –அவ்வூரில் வசிக்கிற திரியக்குகளின் தன்மை இவளுக்கு அரிதாவதே!
அவை தம் நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள்.-நாரத்தைப் பற்றினது களித்து வாழா நின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே?இவள் திறம் செய்யப் பார்த்தது என்?உம்முடைய ஊரில் இருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ, உம்மை ஆசைப்பட்ட இவள்?-விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ 

—————-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?
–7-2-2-

என் செய்கின்றாய் –ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?-தாமரைக் கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.-நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமா போலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ? கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ?

இது பத்தியின் காரியமே யாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது. விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?
சரணம் அடைந்த பின்பு சம்பத்தும் ஆபத்தும் அவன் தலையில் -ரஷா பரம் அவன் ஏற்றுக் கொள்வான் –என் கொலோ முடிகின்றது இவட்கே – ‘இவள் அளவில் தர்மி லோபமேயோ பலிக்கப் புகுகிறது? நீர் பாதுகாக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ! இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது? இவள் இடை யாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்.
‘இவளுடைய நிலை என்னாய் விளையக் கடவது?’ என்னுதல்.

————

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே
–7-2-3-

வட்கு இலள் இறையும் –இதற்குச் சீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று.
நாணத்தைக் கொண்டே அன்றோ பெண்மையை அறிவது?
ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே!

மெய்யே நினைத்து,-மெய்யே சொல்லி,-மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய் -ப்ரக்ருதியாய் -விட்டதே!–மெய் -சாடு- திருமேனி -உண்மை –
‘உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று அவன் பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே அன்றோ?

வானமே நோக்கும் –மணி வண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன்,-ஸப்த ஸஹ-சஹஸ்ரநாமம் -(ஆர்த்த த்வனி கேட்டு வந்து தோன்றுவான் )
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.-அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,
அங்கே சரீர நாசம்-இவளுக்கு ஸ்வரூப நாசம் 

உன்னைக் காணுமாறு அருளாய் –-‘உன்னைக் காண அரிது தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ? –-அருளாய் -உபாயம் –-காணுமாறு -பிராப்யம்

இவள் திறத்து என் செய்திட்டாயே--இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’ –முகத்தாலே-அம்மான் பொடி –

————

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?
–7-2-4-

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா;-இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.-கை கூப்பும்- உணர்த்தியில் தொழுமவள் அல்லள்;-மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;-சாதன புத்தியில் தொழுமது இல்லை;-ஆற்றாமையாலே வருமது தவிர மாட்டாள்.-

இவள் திறத்து என் சிந்தித்தாயே -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து–முற்றறிவினனுக்கும், இவளுக்கு ஓடுகிற நிலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;-திருத் தாயார் தெளிவு இருக்கிறபடி.-அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?-இங்ஙனே மநோ ரதமாயே -சிந்தித்தலாயே போமித்தனையோ,-அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?

————–

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–
7-2-5-

தேறும் –ஒரு காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இதுதானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிறதாயிற்று; மோஹம் செல்லா நிற்க, விரும்பினதைப் பெற்றாரைப் போலே தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்ச வேணுமே?

உய்ந்த பிள்ளை பாடும் போது,
‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச் செய்வராம்.

கை கூப்பும்--இது இவளுக்கு இயல்பு. மேலே ‘மயங்கும் கை கூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கை கூப்பும்’ என்றது:-அல்லாதவை சஞ்சாரியாய் -திரிதலாய்ச் செல்லா நிற்க, இது-கை கூப்பும்- ஒன்றும் நிலையாய்ச் செல்லா நிற்கும்; ஸ்வரூபத்தோடு சேர்ந்தது ஆகையாலே.-நித்ய அஞ்சலி புடா ‘எப்பொழுதும் கை கூப்பிக் கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவதன்றோ?

திருவரங்கத்துள்ளாய் என்னும்--‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.

திருவரங்கத்துள்ளாய் என்னும்-‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.-வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு, ‘ ஒரு முகமே, ஒரு முறுவலே, ஒரு வளையமே’ என்று துதிக்கின்றாள்-அன்றிக்கே, அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’–மயங்கின இவளுக்கு உதவலாகாதோ -ஆணுமாய் மிடுக்கனுமாய் ஆனவனுக்கோ உதவலாவது -அப்பருவத்தில் அபலைக்கு உதவலாகாதோ -பிறரால் வரும் நலிவோ பரிஹரிக்கல் ஆவது -உன்னால் வந்தது பரிஹரிக்கல் ஆகாதோ -இவளுக்கு உதவும் இடத்தில் கால நியதி வேண்டா -உன்னை அழிய மாற வேண்டா —ஆர் அமுதே ‑-இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து–இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ.-தையலை மையல் செய்தானே –இவள் திறத்து அருளாய் என்ற அடுத்த பாசுரத்துடன் அந்வயம்-

—————-

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–
7-2-6-

அத்வேஷம் -தொடங்கி -உபகார பரம்பரைகள் -பலவும் செய்து – வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை பொகட்டு போவது போலே கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின்,-‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.- சாராம்சம் மனசை அபகரித்து -பிராந்தி விளைவித்து இரண்டுக்கும் இரண்டு த்ருஷ்டாந்தங்கள்-மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’-செய்ய வாய்–இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று. தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.

தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்--புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும். அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.–வாய் இடம் வாசல்-திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?

புன்சிரிப்போடு. திவ்ய ஆயுதங்களோடு, நித்திய விபூதியை யுடையனாயிருக்கிற இருப்போடு, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாக இருக்கிறபடி.-பகவானுடைய திருமேனியின் ஸ்பரிசத்தால் உண்டான உவகையாலே மலரந்த படங்களை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவரே! தனிப் படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக் கிடை கிடக்க?-இவள் திறத்து அருளாய் – படுக்கையில் சேர்த்தி பெறா விட்டால், உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழிய வேணுமோ?-இவள் திறத்து –பாடோடிக் -துக்கப்பட்டு -கிடக்கிற இவள் திறத்து.-அருளாய் –-அருள் கொள்வார் தேட்டமான நீர்,-அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக் கிடை கிடக்க விட்டு வைப்பதே!

நீர் அருளாதவர் அல்லீர்;-இவள் அது பெறா விடில் ஜீவிப்பாள் அல்லள்;-இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ?-இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை; இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்குக் காரணம்-‘மத்பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்’-

————-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே
.–7-2-7-

அறடியார்களை வாழ்விக்கையும் அடியார் அல்லாதாரை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீதமாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும்.பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ?-பால -முறை என்றும் இடம் என்றும் இரண்டு நிர்வாகங்கள் –இக் கோமளக் கொழுந்துக்குக் கைம் முதல் ஒன்றுமில்லாதார் பற்றினால் பாதுகாக்கக் கடவ நீர்மையை யுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் பட வேண்டுகிறது, என்னுடைய சம்பந்தம் என்று எண்ணுகிறாள்’ -உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ?

என் தீர்த்தனே என்னும் – –பாவனத்வமும்-ஸுலப்யமும் –-நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல்,
அன்றிக்கே,-நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.

கண்ணும் கண்ண நீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக் கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!

என்னுடையக் கோமளக் கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையை யுடைவள் பிரியப் பொறுக்குமோ?-தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து-பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச் செய்வர் சீயர்.-கொழுந்து –-கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.-இப் பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து,-பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்

———-

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?
–7-2-8-

அழும் –மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,-‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ –அழும் –‘பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.-ஸ்னேகத்தை யுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.-தொழும் –‘புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.-வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.-உபாசகர் -அஞ்சலி பரமாம் முத்ரா வேதாந்தி அபராதர் –-தொழும்--பிரபன்னர்-யோக நிஷ்டன் –-ஆவி அனல வெவ்வுயிர்க்கும் – தொழுதவுடனே வரக் காணாமையாலே, ‘பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று, எரிக்க முடியாத ஆத்துமாவானது நெருப்பு மயமாம்படி ‘நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’

எங்ஙனே நோக்குகேன் என்னும் – தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளும்’ என்று புரிந்து பாரா நிற்கும்.
அன்றிக்கே,-வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினாற்போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து ‘முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே-பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.

செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் – அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே! இப்படிச் சிரமத்தைப் போக்கக்கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? -கோரமாதவம் செய்தனன் கொல் –-என் செய்கேன் –செய்ய வேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே,-வேறு உபாயங்களால் சாதித்துக் கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.

என் திருமகட்கே –இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றோ அவளது?-உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?-சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!என் திருமகட்கே-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –

—————–

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
–7-2-9-

என் திருமகள் சேர் மார்பனே என்னும் –-‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.-‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.-அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.-பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;-நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே-அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ –
மாதர் லஷ்மி -என்று வேண்டிக் கொண்டார்-

புராண ஸ்லோக அர்த்த உபன்யாச யுக்தமாக -புராணிகர்-புரோகிதர் -கட்டியம் -சேவிக்க -அருளிச் செயல் சந்தை -சேர்த்து-மூலம் கேட்க்கைக்காக இயல் -சப்தம் -தாம் அமுது செய்யா நிற்க -அவர் சொல்ல கேட்டு –-பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே-என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,-இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.-இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் –-ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி. அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே – தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே!
‘எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்திய வாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?தெளிகிலேன் – தென் திருவரங்கம் கோயில் கொண்டானே-அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பரியந்தமாக்கிக் கொண்டு நீ கிடந்தால்,
‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?-ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.-அது மாட்டுகின்றிலேன்.-இவள் தனக்கு முடிவு தெளிகிலேன் –-இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப் போமோ?-அவர்கள் எல்லார் படியையும் உடைய இவள் உம்மைப் பெற்றாளாம் விரகு அறிகிறி லேன் –

—————

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
–7-2-10-

மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –-இதனை
‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று,
திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.-
வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள்.-(வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )

இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:
‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்-‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்;
‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று. வடிவுடை வானோர் தலைவனே என்னும்- பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.

‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு
வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:- புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல் மயர்வற மதிநலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.

மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே –
இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே –
என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே –
திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்

வண் திரு வரங்கனே!’ என்னும்;-ஏஷ சர்நிஸ்வ பூ தஸ்து -என்று என்னை தன் பேறாக அணைக்கைக்கு கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே என்னும் –
அடி யடையா தாள் போல் இவள் அணுகி-அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–ஜீவிப்பாரை போலே இருந்து முடிந்து கொடு நின்றாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்-
அங்கனம் ஆகில் மேல் பிரபந்தம் நடவாது என்று -சம்ச்லேஷிக்க பெறாளோ என்று தோற்றும் படி அவசன்னையான இவள் கிட்டி சம்ச்லேஷிக்கப் பெற்றாள் -காள மேக நிமாஸ்யமான பெரிய பெருமாள் திருவடிகளை என்று எம்பெருமானார் நிர்வஹித்து அருளினார்-

—————

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.
–7-2-11-

பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று;
‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக் கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’ என்று பிள்ளை அருளிச் செய்வர்.

இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே- இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர, நித்திய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தை யுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -32- மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –தலைவி போலி கண்டு பேசுதல் –வைகல் பூம் கழிவாய் -6-1-

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நோற்ற நாலும் போல் தூது நான்கும் வரிசையாக நான்கு பாசுரங்களில் அருளிச் செய்கிறார் –

சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே-மேகங்கள் ஸாரூப்யம் பெற்றுள்ளதே-சாதன பலமா -இருக்க முடியாதுஅவனது அருளாகவே இருக்க வேண்டும்-எங்கும் தீர்த்த கரராய் திரிகிறீர்களே-கீதா ஸ்லோகம் உபதேசிப்பவன் -என்னையே பெறுகிறான் -பிரியமானவன் -என்றானே-பகவத் விஷயம் வர்ஷிக்கும் பாகவதர்கள்-எனக்கு வரவில்லையே –-தலைவி போலி கண்டு உரைத்தல் துறை-வைகல் பூம் கழிவாய் -6-1–திரு வண் வண்டூர் -அங்கு குருகு தூது-மேகம் கண்டால் கண்ணன் என்றே ஏறப் பறக்கும்-பராங்குச நாயகி-ஓ மேகங்களே -தாமரைக் கண்ணாவோ போல் துன்பம் மிகுதியால் கூப்பிடுகிறாள்

கீழில் பாட்டில் –மேகங்களே-என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-
உங்கள் திருவடிகளை என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று சொன்ன படியே-இவை செய்ய மாட்டி கோளாகில்-இங்கே வந்து ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் என்ன –எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது –துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு–அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –யோக பிரஷ்டம் போல் -கர்ம யோகம் நழுவி -உலக இன்பமும் இல்லாமல் –நஹி கல்யாண க்ருதி -பெரும் பயத்தில் இருந்து அவனை விடுவிப்பேன்-விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேறே நல்ல பிறவி அளிப்பேன் என்றானே –

இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று பரமபத நிலையன் அளவும் சென்றபடியால் ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப் (முக்தர்களை )போலி கண்டு யுரைத்த (ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே ) தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே
–32-

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின்
 —51-(பம்பை உத்தர தேசம் ரக்ஷண ஸ்தைர்யம்-அறிவித்த குணம் )
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை –என்று அனுசந்தித்து கடகரை இட்டு நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்–ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

மேகங்களோ –
அவற்றைப் பார்த்து தன் ஆற்றாமை எல்லாம் தோற்றக் கூப்பிடுகிறாள் – தன்னுடைய ஆர்த்த த்வனி கேட்டால் கால் நடை தந்து போவார் இல்லை என்று –இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள் -தூராதாவாஹனம்-தூராத் ஆஹ்வானம் – பண்ணுகிறாள்–மேகங்கள் சிறிதிடம் போய்ச் செறித்து (சேர்ந்து) நின்றபடியைக் கண்டு குரல் கேட்டு நின்றதாகக் கொண்டு உரையீர் –என்கிறாள் –கீழ்ச் சொன்னவை எல்லாம் செய்யாது இருக்கச் செய்தேயும் –உரையீர் -என்கிறது –தன் ஆசையில் குறை இல்லாமை-அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –திருமால் திருமேனி யொக்கும் –யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற இவ் வடிவு எங்கே பெற்றி கோள்–அவனும் அவளும் பிரிந்து வெளுத்த வடிவு இன்றியிலே அவனும் அவளுமாக கலந்து புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்-திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது-திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது –நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள் -அவர்களுக்கு உள்ளது ப்ரஷீண அசேஷ பாவமே இறே என்று அத்தையும் வியாவர்த்திக்கிறது –

முக்தன் பரமாத்மாவை அடைந்து பெறும் சாரூப்பியம் விட சிறந்தது அன்றோ உங்களது
அவன் அங்கு-இதுவோ இங்கேயே-விண்ணுளாரிலும் சீரியர் போல் அன்றோ
ப்ரஷீண-கழிந்த –அசேஷ-ஒழிந்த-கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும்-உபய பாவனையும்
இல்லையே-ஸாதனமாகக் கொள்ளாமல் ப்ராப்யமாகவே கொள்ளுவான் அன்றோ-ப்ரஹ்மம் ப்ராப்யம் மட்டும் அங்கே-ஜகத் வியாவாராம் வர்ஜம் அவனுக்கு-ஜகத் ரக்ஷணம் -இவற்றுக்குத் தானே உண்டு
சாதனதயா ப்ரஹ்ம பாவனையும் வேண்டா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் பிரமாணம்-நாங்களும் பாரதந்தர்யம் விட்டு உங்களை போல பண்ண அமையுமே –இவ் வடிவைப் பெறுகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு அதிகார சம்பத்தில் எங்கே பெற்றி கோள் – எவ்வாறு பெற்றீர் –நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே சாதன அனுஷ்டானம் பண்ண அமையும் அத்தனை இனி -என்கிறாள் –

உயிர் அளிப்பான் -மாகங்கள் எல்லாம் திரிந்து –விஷய விபாகம் இன்றிக்கே–சர்வாத்ம ரக்ஷணத்துக்காக -லோகம் எங்கும் திரிந்து–பஹு வசனம்-பிரதேச அநியமத்தைப் பற்ற
(எல்லா ஆகாசங்களிலும் நியமம் இல்லாமல் திரியுமே )-நன்னீர் சுமந்து –திரு வீதியிலே செறிந்து சேர்ந்து ஸ்ரமஹரமான தண்ணீரைக் கொண்டு நின்று –-ஏலக் குழம்பு ஏலக் குழம்பு -என்பாரைப் போலே-கடலில் உப்பு நீரைப் பருகி அம்ருத ஜலம் ஆக்கிக் கொண்டு–நுந்தம் -ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணின தபஸின் பலமோ
இவ் வடிவு எங்கனே யாகப் பெற்றது –சாதனாந்தரம்–ஸாத்ய ஸஹஜ -மூன்றும் உண்டே-அனுக்ரஹத்தால் சாதனாந்தரம் பெற்று -ஸாரூப்யமா -என்று மூன்றும் பக்திக்கு அங்கமான சரணாகதி
ஸ்வ தந்த்ர ப்ரபத்தியும் உண்டே

பொய்கையார் –-மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் –கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் –கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –-நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்-
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குலைந்து நாளும் நாளும்-தொக்க மேக்கப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்
மேகங்களோ -ஓ—தூரமாக இருந்தாலும் கேட்க்கும்படி கூப்பிடுகிறாள் ––நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்-யோகம் -ஒத்து இருக்க காரணமான உபாயம் – மாகங்கள் -ஒரு பொருளின் பல இடங்களைக் குறிக்கும் –நீர்கள் -பன்மை மிகுதி -மேகம் பல நீரும் பல

மேகங்களோ-கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –திருவாய் -4-4-9- என்கிறபடியே பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள் உரையீர்-நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறிலீர்–வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில் திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்-ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு எப் பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து-பிராணிகளை ரஷிக்கைக்காகப் பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து-நன்னீர்கள் சுமந்து ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான ஜல ஸம்ருத்தியைத் தரித்து-நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே-ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்–ஸாம்யா பன்னரைக் குறித்து உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து மறு மாற்றம் பெறாமையாலே–பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
—பெருமாள் திருமொழி -2-6–தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத-நெறி–நன்னெறி-தீதில் நன்னெறி )ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே-பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று–இத்தால் வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது-நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று விஷண்ணரானமை தோற்றுகிறது –மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ உபாயம் என்றால் உழைப்பு இல்லை கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே –

தாத்பர்யம்
மேகங்கள் பதில் சொல்லாமல் போக கூப்பிட்டு அங்கு இருந்தாகிலும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ–தூதும் போக வில்லை–தலையில் காலையும் வைக்கவில்லை–ஸ்வர்ணன வரணையான அவள் -செய்யாள் அவள்–ஸ்வர்ணமும் மாணிக்கமும் சேர்ந்தால் போல் திருமால் திருமேனி வடிவு
என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றீர்கள் என்று கேட்டால்–இதுக்கும் பதில் சொல்லாமல் போகிறீர்கள்
நானே ஊகிக்கிறான்-சர்வேஸ்வரன் நிர்ஹேதுக ரக்ஷணம் தீக்ஷிதத்தை-அவன் கார்யம் நீங்கள் ஏறிட்டுக்கொண்டு ஜல பாரம் தரித்து–அவனே இந்த ஸாரூப்யம் -பெற அருளினான் போலும்
பரமம் குஹ்யம் -18 அத்யாயம் -பக்தி சாஸ்திரம் -யார் சொல்கிறானோ அவனே இந்த பலம் பெறுகிறான்
என்னையே அடைகிறான் சங்கையே இல்லையே என்றானே

ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபி தாஸ்யதி-
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்ஸய
–৷৷18.68৷৷எவன் ஒருவன் மேலான ரஹஸ்யமான இந்த சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களிடம் வியாக்யானம் செய்கிறானோ-அவன் என்னிடத்தில் மேலான பக்தியைச் செய்து என்னையே அடைகிறான் -இதில் ஐயம் இல்லை-குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் –
ஐந்தாவது உபாயம் இது சரம தமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்-

ந ச தஸ்மாந் மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரிய க்ருத்தம–
பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரிய தரோ புவி
–৷৷18.69৷৷இவ் வுலகில் மனிதர்களில் இந்த சாஸ்திரத்தை வியாக்யானம் செய்பவனைக் காட்டிலும் வேறு ஒருவன்-எனக்கு மிகவும் இனியது செய்பவன் இருந்தது இல்லை –அவனைக் காட்டிலும் வேறு ஒருவன் எனக்கு வரும் காலத்தில் மிகவும் இனியவனாக உண்டாக்கப் போவதும் இல்லை-ஸ்ரீ கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாத மாவயோ–
ஜ்ஞாந யஜ்ஞேந தேநாஹ மிஷ்டஸ் யாமிதி மே மதி
–৷৷18.70৷৷-நம் இவர்கள் இடையே நிகழ்ந்த மோக்ஷ உபாயங்களைப் பற்றிய இந்த சம்வாத ரூபமான யோக சாஸ்திரத்தை எவன் ஓதுகின்றானோ அவனால் இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஞான யஜ்ஞத்தினால் நான் ஆராதிக்கப் பெற்றவன் ஆவேன் என்பது என் அபிப்ராயம்-இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் –ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –

6-1-வைகல் பூங்கழிவாய் -ப்ரவேஸம்–

(ஸ்ரீ ராகவன் மஹாத்மா சர்வ லோக சரண்யன் –
ஸுவ்லபயமும் பரத்வமும் இருந்தவன் தானே சரண்யன் ஆகிறான்
அங்கு பரத்வம் பின்பு
இங்கு பரத்வம் நான்கு பாத்தால் முதலில் பின்பு ஸுலப்யம்
இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் –
ஒன்பது திருவாய் மொழிகளால் ஸ்ரீ மத் நாராயணா குணங்களைச் சொல்லி
திருவடி ஒன்பது பாசுரங்களில் சரணம் சொல்லி
அகலகில்லேன் சரணவ்
பிரபத்யே
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிய வேண்டுமே
பக்ஷிகளை ஆஸ்ரயித்து
பிராட்டியைப் பற்றி பெருமானை ஆஸ்ரயிக்கிறார் )

முதற் பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரண் புகுகிறார் இந்த ஆறாம் பத்தால்.

மேல் “நோற்ற நோன்பு” என்ற திருவாய்மொழி தொடங்கி நான்கு முறை சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெற்றிலர்.
பலத்தோடு சம்பந்திப்பிக்கிறதாய் விரைவில் பலத்தைக் கொடுக்கக் கூடியதான உபாயத்தைப் பற்றி யிருக்கச் செய்தேயும்
அபேக்ஷிதம் கிட்டாது ஒழிவான் என்? என்னில், ஆழ்வாருடைய ஹிதத்தைப் போன்று உலகத்தினுடைய ஹிதத்துக்கும்
கடவனாகையாலே ஈஸ்வர புத்தியாலே தலைக் கட்டிற்று இல்லை.

உகந்தருளின நிலங்கள் தோறும் புக்குத் தட்டித் திரிந்தார், அங்குத் தாம் நினைத்தபடி பரிமாறப் பெற்றிலர்;
நினைத்தபடி பரிமாறக் கூடிய அவதாரத்து ஏறப் போனார், அது சென்ற காலாந்தரமாகையாலே கிட்டப் பெற்றிலர்;
அது தானே தளர்த்திக்குக் காரணமாயிற்று.
இனி, எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய், முகப் பழக்கத்தாலும் குறையற்று, சக்தி குறைவுமின்றிக்கே இருக்கிற
இவ்விடமே அமையும் என்று மீண்டார்;
அந்த அநுசந்தானந்தான் கால் நடை தந்து போகாதபடி ஈடுபடுத்திற்று; கால் நடை தருவார் காலிலே விழுந்து தூது விடுகிறார்.
தாம் மேலே அநுசந்தித்த அவதாரம் தூதுவர்க்குச் சென்று அறிவிக்க ஒண்ணாதபடி யாயிருந்தது;
‘இனி அறிவிக்கலாம் படி அண்மையில் நின்றானாகில் திருவண் வண்டூரிலே அறிவிப்போம்’ என்று அங்கே ஆள் விடுகிறார்.

இவர்க்குப் பிறந்தது ஞானத்தாலும் கர்மத்தாலும் உண்டான பக்தி அன்றே! ஒருவன் திருவருள் அடியாக வந்ததன்றோ.
தம் தலையிலேயும் ஒன்று உண்டாய் ‘அது நிரம்பிப் பெற வேணும்’ என்று இருக்கிலன்றோ விளம்பம் பொறுக்கலாவது,
அங்ஙன் சொல்லலாவது ஒன்று இன்றிக்கே இருந்தது. இவர் தாம் பற்றின சாதனந்தான் கால தாமதத்தைச் சகிக்கக் கூடிய தன்றே!
வேறு உபாயங்களைக் காட்டிலும் கால் வாசி ஏற்றம் உண்டே! இங்ஙனே அடிப்பட்ட உபாயத்தைப் பற்றினவர்
ஆறியிருக்க மாட்டார் அன்றோ, ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு ஆள் இட்டு அறிவிக்கிறார்.

‘சரணம் புக்கோமாகில் அத் தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்க வல்ல தன்மையரன்றே.
பிரஹ்மாஸ்திரம் வாய் மடியச் செய்தேயும் இவர் தூது விடுகிற இது,ஞான காரியமோ சாபல காரியமோ தெரிகிறது இல்லை;
சுருதிகளும் கூட “அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று என்று –
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-
மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச் சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது;
பறவைகளின் காலிலே விழுகிற இவர்க்கு ‘அறிவுண்டு’ என்னவும் ஒண்ணாது. ஆனால், என்னாவது? ஏது? என்னில்,
ஞான காரியமான சாபலமன்றோ இவரது. இதர விஷயங்களில் விரக்தி யன்றோ ஞானத்திற்குப் பிரயோஜனமாகச் சொல்லுகிறது,
சாபலம் ஞான காரியம் என்று சொல்லுகிறபடி யாங்ஙனம்? எனின்,
அந்த ஞான பலமாயன்றோ இவ் விஷயத்தில் சாபலம் இருப்பது. ஞானத்துக்கும் வைராக்கியத்துக்கும் சேர்விடமாய் இருப்பவர் அன்றோ இவர்.
ஞான வைராக்ய ராசயே-ஞான வைராக்ய –உலக விஷய -ஞான -அனுராக -பகவத் விஷய –என்பதால் சாபல்யமும் ஞான கார்யம் தானே
ஞானத்தால் உலக விஷயத்தில் வைராக்கியமும் பகவத் விஷயத்தில் சாபல்யமும் வருமே
நஞ்சீயர் திரைக்குள் தாம்பு தழும்பு பார்க்க ஆசைப்பட்டார் அன்றோ

இனி, தூது விடப் பார்த்தால் ஒரு ஐந்திர வியாகரண பண்டிதனைத் தூது விடுகிறது மன்றே.
இத்தால் சொல்லுகிறது, பிராட்டியில் உண்டான ஏற்றமோ? என்னில், அதுவும் உண்டு அன்றோ,
அவர் ஒருவரையும் அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு உள்ளது,
இருவரையும் கூட அநுபவிக்கக் கோலுகிற ஏற்றம் உண்டன்றோ இவளுக்கு.
அத் திரு அவளைப் பற்றும் -இத் திரு இருவரையும் பற்றுமே
விஷயத்துக்குத் தகுதியாக வன்றோ கலக்கம் இருப்பது.
இனித் தான், அத் தலையில் நின்றும் வந்தார்க்கே வார்த்தை சொல்லி விட வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே இவளுக்கு;
இராவண சங்கை இல்லாமையாலே. ஆகையாலே, கண்களால் கண்டாரை யடங்கலும் போக விடுகிறாள்.

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யன்றோ; திருவல்லவாழ், திருவண்வண்டூர் என்பவை எல்லாம் அந் நிலங்கள் அலவோ.
தூது விடுவார், நாயகன் பக்கலிலே சில குணங்கள் கண்டன்றோ விடுவது. என்றது,

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் – நோக்குங்கால்
இல் லிருக்கை முல்லை, இரங்கல் நறு நெய்தல் சொல் விரிந்த நூலின் தொகை.-என்னும் பழம்பாடல் இங்கு நினைவு கூர்க.

இத் தலையில் துயரத்தை யறியுந்தனை அறிவையுமுடையனாய்,
அறிந்து நீர்மையையும் உடையவனாய்-
அறிந்தால் வருகைக்குத் தகுதியான சக்தியுமுடையனாயிருக்க வேண்டுமன்றோ என்றபடி.
அவையெல்லாம் இவள் தூது விடுகிற விஷயத்தில் குறை இல்லை.

அறிவில் வந்தால் – -“ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்
“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.
அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவன்.

நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்” என்றால்
“தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.
“கண்ணீரோடு கூடினவர்” என்னும்படியன்றோ
“ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.
அது இருப்பது.

சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனுக்கு” என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.
“ஸத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.

இனித் தான், நாயகனாவான் –அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி — என்று மிக் குணங்களையுடையவன் அன்றோ,
இத்தகைய குணங்களை யுடையவன் வாராமைக்குக் காரணம், அவ் விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே
அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத் தலையை மறந்தானித்தனை; –இதுவே சிறந்த செல்வம் பெருமாளுக்கு –
காத்தலைச் செய்ய ஒருப்பட்டால்-அஸ்தமித அந்ய பாவம்
“மறைந்து போன மற்றை எண்ணங்களை யுடையதாய்” என்னும்படி யன்றோ இருப்பது;
ஆன பின்பு, துயரத்தை அறிவிக்க வருவான் என்று பார்த்தாள்.

இனி, அறிவித்தால் ஆர்த்திக்கு இத் தலையில் மேற்பட்டார் இன்றிக்கே இருக்குமன்றோ.
அறிவிக்குமிடத்தில், தான் கால் நடை தந்து போக மாட்டாள்,
தன் பந்து வர்க்கம் தனக்கு முன்னே நோவு பட்டாரன்றோ.
இனி, கால் நடை தந்து போகவல்லார் வேண்டுமே;
“யாமுடைத் துணையென்னும் தோழி மாரும் எம்மின் முன் அவனுக்கு மாய்வ ராலோ”-என்பது, ஈண்டு அநுசந்தேயம். (9. 9 : 5.)
தன் பக்கத்தில் வாழ்கிற பறவைகளை, ‘ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பு’ என்று பார்த்து, அவற்றின் கால்களிலே விழுந்து போக விடுகிறாள்.

சீயர், இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கவாறே, உருத் தோறும் அருளிச்செய்யும் வார்த்தை:
‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூடத் திரியச் செய்தேயும்
அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும்.
அவர்கள் தாம் ஒரு தர்ம ஆபாசம் -உபாயாந்தரம்-உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்;
இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என் செய்யப் படுகிறார்’ என்று அருளிச் செய்வர்.

ஏ பிரபுவான கிருஷ்ணனே! நீர் ஜீவித்திருக்கும் போதும், அத்தகைய நான் ஒருவனால் மயிர் பிடித்து இழுக்கப்பட்டவளாய்
பெருந்துன்பத்தை அடைந்து பாண்டு புத்திரர்கள் இருக்கும் சபையை அடைந்தேனே!”-என்றவள் நிலையன்றோ இவளது.
“பெரிய ஆபத்து நேர்ந்த காலத்தில் பகவானாகிய ஹரி நினைக்கத் தகுந்தவர் என்று மஹாத்மாவான வசிஷ்டர்
கூறியது என்னால் அறியப்பட்டது” போலி ரக்ஷகரான கணவன்மார்களாலும் தன்னாலும் நோக்கிக் கொள்ள ஒண்ணாதபடி
அவ்வருகு பட்ட ஆபத்து அன்றோ. பகவான்-பூர்ணரன்றோ!
அபூர்ணர் காரியம் செய்ய வல்லார் என்று காணும் அவன் நினைவு.
‘ஹரி:’ – அடியார்களுடைய பகைவர்களை அழித்தலையே இயல்பாக வுடையவனைப் பற்றினாள்.
பகவான் -ஆறு குணங்களையும் சொல்லி அத்தாலே -ஞானம் முதலான குணங்களால் சொன்ன பூர்த்தியிலே
சக்தியுமுண்டாயிருக்கச் செய்தே,
ஹரி: என்று விசேடிக்க வேண்டிற்று, அல்லாதார்க்கும் இக் குணம் ஓர் ஒருகால் உண்டாகையாலே;
இவனுக்கு அங்ஙன் அன்று; இது இயல்பு என்கைக்காக எடுத்தது.–

பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -முதல் நான்கில்
காருணிகத்வம் -ஐந்தாம் பத்தில் –
பரத்வ சௌலப்யம் -சேர்ந்து -இருந்தால் சரண்யத்வம் கூடுமே -அதுவே ஆறாம் பத்தில்
ராகவாயா மகாத்ம்யாய சர்வ லோக சரண்யா -சௌலப்ய பரத்வம் அங்கும் –
குணங்களைச் சொல்லி நாராயண அர்த்தம் -திருவடி -6-10 ஒன்பது பாட்டுக்களில் -அகலகில்லேன் சரணம் அடைகிறார் –

வேதம் வல்லார்களைக் கொண்டு -விண்ணோர் பெருமான் -பாதம் பணிய –அவரை விதை கொழு கொம்பு பந்தல் போலே –
பஷிகள்-வேதம் வல்லார்கள் பற்றி-பின்பு பிராட்டி பற்றி -பெருமானைப் பற்றுகிறார்

நாரதீய புராணம் -400000-ஸ்லோகங்கள் உள்ளவை -இந்த ஷேத்ரத்தில் அருளினார் என்பர் -பக்தி சாஸ்திரம் இது-

இரண்டாம் தூது இது -6-1—ராமாவதாரத்துக்கு தூது -ஏறு சேவகனார் -பம்பை வட பால் –1-4 -முதல் தூது –
தம் பிழையும் –சிறந்த செல்வமும் –படைத்த பரப்பும் –தமரோட்டை ஸஹ வாசமும் மறப்பித்த
ஷமா –தீஷா –சாரச்ய — சௌந்தர்யங்களை உணர்த்தும்
வ்யூஹ –விபவ –பரத்வ த்வய -அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை –156-

பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ –
காருணிகத்வ -சரண்யத்வ -சக்தத்வ
சத்ய காமத்வ -ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன்
மயர்வை அறுக்க -தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதனா பல உபகாரக் கைம்மாறின்றி
க்ருதஜ்ஞாத பல பிரதி க்ருதமானத்தை யுணர்ந்து
ஆத்மா தர்சன பல பிராப்தி மரண அவதியாகப் பெற்று
கால அசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப்
பிறர் அறியப் பத்துத் தோறும் வெளியிடுகிறார் –சூர்ணிகை –218

இதில் சிறந்த செல்வமும் -தீஷை -மம வ்ரதம் என்றாரே பெருமாள் -அத்தை உணர்த்தும் -விபவ -தூது
நாராதீய பக்தி சாஸ்திரங்கள் இங்கே இருந்து அருளினார் என்பர் –
சர்வ பூதேப்யோ -என் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்துக் கொடுப்பவன் -தானே கண் காட்டாத ஆபத்து –
தீஷை நினைவு படுத்தினால் வருவானே -இதுவே சிறந்த செல்வம் நினைப்பூட்டுகை –

அறிவிப்பே அமையும் -ஜீவ ஸ்வாதந்தர்யம் -கொடுத்ததும் இதுக்கத் தானே –
அறிவிப்பதால் வரவில்லை -ஆனால் அறிவிக்கவும் வேண்டும் என்று அறிந்தவர் –
அவன் கிருபைக்கும் குறையில்லை –
அபராத சஹத்வத்துக்கும் மீறி அன்றோ நமது அபராத பூயிஷ்டம்
இதில் சிறந்த செல்வம் -ஆஸ்ரித ரக்ஷணமே அவனுக்கு செல்வம் -அத்தை அறிவிக்க அமையும் -என்று தூது இதில்
தீக்ஷை -அபயம் சர்வ பூபேப்யோ ததாமி -விரதம் -உண்டே -இத்தை அறிவிக்க வருவானே
பூ -சத்தாயாம்–அவன் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்து அருளும் தீக்ஷை உண்டே -கண் காட்டாமல் இருக்கும் அது தவிர்வானே-

ஆறாம் பத்தில் –கீழ் பத்திலே -ஈஸ்வரனுடைய யுபாய பாவத்தை ஸப்ரகாரமாக நிரூபித்து -அநந்தரம் –
இவ்வுபாய ஸ்வரூபத்தினுடைய ஸ்வீகார பிரகாரத்தை அருளிச் செய்வதாக
உபாய ஸ்வீ காரம் கடகரான ஆச்சார்யர்கள் முகமாக சித்திக்கும் பிரகாரத்தையும்
ஸ்வீ கர்த்தாவான அதிகாரியினுடைய பகவத் அபிமுக்யம் ஸ்வீ காரத்துக்கு அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
அகடிதகட நா சமர்த்தனான ஈஸ்வர விஷயத்தில் பல பிரதத்வ சக்தியில் சம்சயம் இல்லை என்னும் இடத்தையும்
ஆகர்ஷக சேஷ்டிதானாகையாலே ஆஸ்ரயணம் ஸூ கரம் என்னும் இடத்தையும்
தத் ப்ராப்தியை ஆசைப்பட்டார்க்கு அந்நிய பரர் பக்கல் வைராக்யம் அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
ஆத்மாத்மீய பதார்த்தம் எல்லாம் அவன்கிட்ட வழக்காம்படியான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியையும்
தாரகாதிகள் எல்லாம் தானே யான ப்ராப்ய விஷயத்தில் த்வரா யோகத்தையும்
த்வரிதனுடைய பராசக்தியிலே கடகரானார் விஷயத்தில் அத்யந்த ஆதாரத்தையும்
பரிபூர்ணமான ப்ராப்ய ப்ராவண்யம் அதிகாரிக்கு விசேஷணம் என்னும் இடத்தையும்
சர்வ ரக்ஷகனான சரண்யன் பக்கல் ச பிரகார சரணாகதியையும்
அருளிச் செய்து ஸ்வதஸ் ஸித்தமான உபாய விஷயத்தில் ஸ்வீ காரத்தை ஸ்வ அனுஷ்டானமாக அருளிச் செய்கிறார் –

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே
.–6-1-1-

ஒரு கால் கலந்து பொகட்டுப் போன அவனைப் போல் அன்றிக்கே நீங்கள் எப்போதும் இங்கே வசிக்கும் படியாகப் பெற்றேனே! உங்கள் நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்!–ஆச்சார்யர் எப்பொழுதுமே சந்நிஹிதன் -கூட இருந்து திருத்துவார் –-அவன் இருந்தும் உதாசீனனாய் –அழகிய சோலை, குளிர்ந்த தென்றல், இனிய வாசனை தொடக்கமான இவையுமுளவன்றோ.-பிரிந்தவனே பாதகனாகை அன்றிக்கே, இருந்த தேசமும் பாதகமாகை.-ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி –நீங்களே வந்து –

பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணய ரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள்.-‘பாசுரந்தோறும், கிலாம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.-வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-
என்றும் பிறர்க்கு உதவி செய்யவே தேடித் திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்ய வேண்டாவோ!-உபவாசத்தினால் மெலிந்திருக்கிற என் காரியத்தை நிறைவுற்றிருக்கிற உங்களுக்குச் செய்ய வேண்டாவோ.

கை கொள் சக்கரத்து--செந்நெலின் படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.-நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக் கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்-பெருமான் –-வாய்க் கரையிலே எனக்கு ஜீவனத்தை இட்டு என்னை எழுதிக் கொண்டவன்.–வாய் அழகையே -என்றுமாம் – சேஷத்வம் –பிரணத்வம் மூலம் உணர்த்தி –கை கொள் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமான் –இராஜ புத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே, இடைச்செறி கடைச்செறி-மேல் கீழ் போட்டுக் கொள்ளும் மோதிரம்-திருவதரத்தில் பழுப்புக்கும்-சிகப்புக்கும் – கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக் கொடுத்தது.
சேர்த்தியே உத்தேச்யம்- ஆழ்வாருக்கு -மிதுனம் -தான் சேர்ந்து மிதுனத்தில் கைங்கர்யம் –

கண்டு – நான் அநுபவிக்கப் பாரித்த துறைகள் எல்லாம் நீங்கள் காண வன்றோ புகுகிறது.
இவளைப் பற்றினார்க்கு இவளைக் காட்டிலும் பேறு முற்பட்டிருக்குமன்றோ,
ஸ்ரீவிபீஷ்ணாழ்வான் முதலியோர் பக்கலிலே கண்டு கொள்வது.
திருவடி பெருமாள் உடைய ஆலிங்கனம் முதலிலே பெற்றாரே –

கைகள் கூப்பி--இத் தலையில் இராஜ குலங்கொண்டு மேன்மை யடித்திராதீர்கள்; அவர் பழையர் அல்லர், பெருமதிப்பர் கண்டீர்,-தொழுது கொடு நில்லுங்கோள்.

காதன்மை சொல்லீர்-இத் தலையில் பசலை நிறம் தொடக்கமான ஆற்றாமை யடங்கலும் உங்கள் பாசுரத்தில் அவன் அறியும்படி சொல்லுங்கோள்.
காதன்மை என்றவாறே, தம் மளவிலே இத் தலைக்கும் உள்ளது என்று இருப்பர்;
“ஒத்த விஷயமானால், விளையுமதுவும் ஒத்ததாய் இருப்பது” என்றன்றோ அவர் இருப்பது.
அல்லாத ஏற்றங்களைப் போன்றதே அன்றோ ஆற்றாமையில் வந்தால் இருக்கும்படியும் இத் தலைக்கு.-வன் நெஞ்சர் -பெருமாள் காதல் போலே அல்ல மெல்லியலார் -சீதை காதல் –-ஆழ்வார் காதல் மிதுனத்தை பற்றியதால் அதிலும் மேன்மை -மென்மை உண்டே- மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –

———–

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.
–6-1-2-

பேடையின் காதல் அறிந்து கூடத் திரியும் சேவலும் உண்டாகாதே.-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

திருவண் வண்டூர் நாதன் –-‘ஸ்ரீவைகுண்டநாதன்’ என்னுமதிற் காட்டில் உண்டான ஏற்றம் சொல்லுகிறது.-பாதம் கை தொழுது –-கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு.
‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ.
உண்ணா நிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுது வைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்.
“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீ பாதத்தே தலை படத் தண்டன் இட்ட அன்று,
எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் .
அன்றிக்கே,-கிலாம் தோற்றும்படி அவர் திருவடிகளிலே கை சென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது,-தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

அடியேன் –-உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிறவனுக்கு அன்று;
அத் தலையால் வந்த இழவு நீக்கி அவனோடே சேர்க்க இருக்கிற உங்களுக்கு அடியேன் என்கிறாள்.-அடியேன் திறமே-அவன் திறம் போல் அன்று.-என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள்; சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்குப் போருமாகாதே.-

————–

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே
.–6-1-3-

திறங்களாகி –கூட்டம் கூட்டமாக. இவை, திரள் திரளாகத் திரிதல் நம் காரியம் செய்து தலைக் கட்ட என்றிருக்கிறாள்.-“வாயுந் திரையுகளும்” என்ற திருவாய்மொழியில் வாசனையாலே, தன் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாமல் படுகின்றனவாகக் கொண்டு நினைத்திருக்கிறாள். அங்கு, தாம் தாம் விரும்பிய பொருள் பெறாமையாலே-திரு மாலால் நெஞ்சு கோட்பட்டாயே- நோவு படுகின்றன என்று இருந்தாள்; இங்கு, தன் இழவு கண்டு பொறுக்க மாட்டாமையாலே நோவு படுகின்றன என்று இருக்கிறாள்.-பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவு படுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து
அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,-தேடினால் காண்கைக்குச் சம்பாவனை இல்லாத இடமெங்கும் புக்குத் தேடா நின்றனவாதலின் ‘எங்கும்’ என்கிறாள்.-சுயம் பிரபை யுடைய பிலம் அகப்படப் புக்குத் தேடினார்கள் அன்றோ முதலிகள்.

சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்--வாராமை அவன் குற்றம் அன்று கண்டீர், அவ் வூரின் நிறைவு வேறேயும் சிலரை நினைக்க ஒட்டுமோ.-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.-சிறந்த செல்வம் – தகுதியான ஐஸ்வரியம் என்னுதல்.
கலந்து கூட இருக்கிறபோது ‘நீயே எனக்கு எல்லாச் செல்வங்களும்’ என்று சொல்லி வைத்து, இப்போது தனக்கு என்ன ஒரு சம்பத்து உண்டாயிருக்கிறபடி எங்ஙனே என்று இருக்கிறாள். ( பூர்வர் நிர்வாகப்படி )-‘திருவண் வண்டூர்’ என்கையாலே, பரமபதத்தில் வேறுபாடு.-உறையும்’ என்கையாலே, அவதாரத்தில் வேறுபாடு.

கறங்கு சக்கரம் கை – பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியைக் கையிலே யுடையனான சர்வேஸ்வரனை. -பூர்வர் நிர்வாகப்படி –-அன்றிக்கே
பட்டர் நிர்வாகப்படி – இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற,
ஆயுதத்தைச் சுழற்றிப் புன் முறுவல் செய்து இருக்கிறபடி யாகவுமாம்.

இறங்கி நீர் தொழுது பணியீர் –-தொழுங்கோள் என்கிறாள்; தொழுத அளவிலே நில்லாதே, முதலியார் கண்டீர் கோள்;-பிரம்புகள் படாமே கடுக விழுந்து கொடு நில்லுங்கோள் என்கிறாள்.-விழா நின்றாலும் அக வாயைச் சோதியா நிற்பர், அபிமானத்தைப் பொகட்டுக் கொண்டு விழுங்கோள் என்கிறாள்.-பணியீர் – இத் தலையில் நின்றும் சென்றாரை அவன் சொல்லும்படியே யாகிலும் சொல்ல வேண்டுமே.-தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைச் சொல்லும்படியை, இத் தலையில் நின்றும் சென்றாரைச் சொல்லா நிற்கும் அவன்.
ஸ்வரூபத்தால் சொல்லுமவை இவையானால், காதலால் வருமவை சொல்ல வேண்டா அன்றோ.-(சேஷ சேஷி பாவம் அறிந்து சொல்லும் பொழுது காதலால் சொல்லும் என்பது சொல்லவும் வேண்டுமோ )-அடியேன் இடர் பணியீர் – அவன் அறியாதனவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே! அறிந்தானாகில், ஆள் விடப் பார்த்திருப்பானோ.-அடியேன் இடர் பணியீர்-அத்தலைக்கு அடியேன் என்கிறாள் அன்று –சேர்த்தவர்களுக்கு அடியேன் என்கிறாள்.-இரண்டு தலைக்கும் கலவி ஒத்திருக்க,-இத் தலைக்கு வந்த இடரை அறிவியுங்கோள் என்பாள் ‘அடியேன் இடர் பணியீர்’ என்கிறாள். –

————

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.
–6-1-4-

இடர் இல் போகம் மூழ்கி – விஸ்லேஷ கந்தமும் -பிரிவு சிறிதும் இல்லாத கலவி இன்பத்திலே மூழ்கி. நான் செய்தபடி செய்ய, இப்படியே இருப்பாரையும் காணப் பெற்றோம் அன்றோ உலகத்திலே. –
சுக்ரீவன் துக்கம் போக்கி பெருமாள் – போகத்தின் தொடக்கத்திலே பிரிவு பிறந்ததே யன்றோ தனக்கு வீட்டில் ஆய்ச்சிக்கும் ஐயர்க்கும் பர தந்திரராக வேணும்,
நாடு கேட்க வேணும் என்கிற அந்ய பரதை எல்லாம் தீரும்படி தனி இடம் தேடி அனுபவிக்கப் போக, அங்கே இராவணன் வந்து தோற்றினான் அன்றோ தனக்கு; அது இல்லை யன்றோ இவற்றுக்கு.-சீதை யாகவே பராங்குச நாயகி பேசுகிறாள் –-இடர் இல் போகம் மூழ்கி –
புணர்ச்சிக்குப் பாரித்துக் கொண்டிருந்து பிரிவோடே தலைக் கட்டும் என்னைப் போலே ஆகாது ஒழியப் பெறுவதே! இன்னம் தரை காண்கின்றன இல்லை என்பாள் ‘மூழ்கி’ என்கிறாள்.

கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலை –-கடல் போலே சிரமத்தைப் போக்கக் கூடிய தான வடிவை யுடையனாய், அவ் வடிவைத் தாழ நின்று-இத் தலைக்கு முற்றூட்டாக உண்பித்து,-பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவன்.-அன்றிக்கே,-குளிர்ந்த வடிவை பவ்யரைப் போலே நின்று உண்பித்து, இப்போது எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல்.-அன்று தானும் தனக்கு -ஆழ்வாருக்கு -வேண்டுவதாகச் செய்தானல்லன்,-இத் தலையை அழிக்கைக்காகச் செய்தானித்தனை;-அன்று வேண்டி யிருந்தானாகில் இன்றும் வேண்டி இரானோ.

உடலம் நைந்து –-அவ் வுடம்போடே அணைந்து பிரிந்த இவ் வுடம்பு கொண்டு பிழைக்க ஒண்ணாது என்னுமிடம் தாமே அறிவாரே அன்று.-ஒருத்தி –-‘இன்ன காட்டிலே மான் பேடை கிடந்து உழற்றா நின்றது’ என்றால், எய்தவன் கை உணருமன்றோ.-ஒருத்தி உருகும் –
எதிர்த் தலைக்கு இது இல்லை என்னுமிடம் அறிவியுங்கோள். -அணைக்கும் பொழுது இருவர் -உருகுபவள் ஒருத்தியே –ஒருத்தி படும் பாடே என்று சொல்லுங்கோள்–உணர்த்துமினே – உருகப் பண்ணி மறைந்து இருக்கிறவருக்கு அறிவியுங்கோள்–தாம் இத் தலையை மறந்தமையை நினைவூட்டுங்கோள். உணர்த்தி அற்றாரை உணர்த்த வேணுமே.-அறியாதாரை அறிவித்தல் அன்னத்துக்கே பணி யன்றோ;
பண்டும் பிறங்கு இருள் நிறம் கெட அன்னமா யன்றோ அருமறை பயந்தது.-பெரிய திருமொழி, 5. 7 : 3.-

—————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே
.–6-1-5-

ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும், காமத்தாற் பெற்ற பயன்” என்று மூன்றனையும்
பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்கள்.-இரண்டற்கும் பின்னே நிகழ்வது கலவி.
இவை எல்லாமுண்டன்றோ இவளை உடையவனுக்கும்.-கலவியை அதிகரிக்கச் செய்வது காண் இந்தப் பிரிவு என்றால்,-‘அவ்வளவும் ஆறியிருக்க வல்லார்க்கு அன்றோ பின்பு போகத்தின் நிறைவு வேண்டுவது’ என்னப் பெற்றிலேன் என்கிறாள்

வருவனவற்றை அறிந்து நீக்கிக் கொண்டிருப்பவர்கள், விழுக்காடு அறியாதே அகப்பட்டாருடைய காரியத்தைச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ என்பாள். ‘உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள்’ என்கிறாள்.-இந் நிர்த்தேசத்தாலும் இத் திருவாய்மொழி யடங்கலும் ஊடல் அடங்கியிருத்தல் தோற்றுகிறது.-அறிவில்லாத பொருள்களுங்கூடக் கால் வாங்க மாட்டாத தேசங்கண்டீர் என்பாள் ‘சங்கு சேரும்’ என்கிறாள்.-வேறு போக்கிடம் இன்றிக்கே யிருத்தலின் ‘சேரும்’ என்கிறாள்.-மீட்சியின்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.-மிருதுத் தன்மையாலும் குளிர்ச்சியாலும் வேறு ஒன்றனை நினைக்க ஒட்டாதிருக்கை.-சங்குகளை-வெள்ளைகளையும் கூடக் காற்கட்டுகிறதன்றோ மண்பாடு. –சாத்விகர்களை போக ஒட்டாத திவ்ய தேசம் –-ஆக, இரண்டாம் அடியால் வாராது ஒழிந்த இடம் அவன் குற்றம் அன்று கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.

புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு-நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே இருக்கிறவன்-இத் தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர்.-புணர்த்த கையினராய் –-அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கை ஒத்துச் செல்லுங்கோள் கண்டீர். என்றது, வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;

அடியேனுக்கும் போற்றுமினே –-நீங்களும் அவனைப் போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும்.-அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே, இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படி யன்றோ இருப்பது.
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.-அடியேனுக்கும் போற்றுமின் –-அடியேன் இடையாட்டத்தையும் அத் தலைக்கு அறிவிக்க வேண்டும்.-போற்றுகை யாவது கௌரவித்து சொல்லுகை-

——————

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே
.–6-1-6-

போற்றி –சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே, புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்-அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.–ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் -முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள்-யான் இரந்தேன் –-அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;-ஆள் விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.-புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் -நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன்.-இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.-இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

சேற்றில் வாளை துள்ளும் –-பிரளயத்திலே கொண்டு போய் விட்டாலும் யானைக் கன்று போலே செறுக்கிச் சேறு ஆக்குமாயிற்று வாளைகள்.-சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு இல்லாமல் களித்து வாழ்கின்ற தேசமாயிற்று.-அவ்வூரில் பொருள்கள் செருக்கி வாழா நிற்கச் செய்தே கண்டீர் நான் பிரிந்திருந்து தூது விடுகிறது.-

ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு –-அடியார்கள் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று நோவு பட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,-‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,-‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக் கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேஸ்வரனை என்று பட்டர் அருளிச் செய்வர்.(ஆற்றல் -வலிமை கீழே -இதில் -பிரிந்தும் குறி அழியாமை -குத்தல் -பட்டர் நிர்வாகம் )-

—————-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே
.–6-1-7-

ஒரு வண்ணம் சென்று புக்கு –-இதற்கு இரண்டு படியாக அருளிச் செய்வர்கள்.
இத் தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்;
மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர்.
அன்றிக்கே,-செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்;-அதிலே கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.

என்னைக் கண்ட உங்களுக்கு இனிமையிலே நெஞ்சு செல்லுதல்,-பரிபவம் கண்டு இறாய்த்தல் செய்யலாம்படியோ இருக்கிறது. –-பிறர் காரியம் செய்வார்க்கு அவை பார்க்க ஒண்ணுமோ?

திருந்தக் கண்டு –-என்னைப் போன்று மனத்தால் அன்றிக்கே வெளிப் படையாகப் புறக் கண்களால் கண்டு.-இவ் விஷயத்தில் காட்சி யன்றோ பிரயோஜனம், அது உங்களுக்கு முற்படப் பெற்றதே என்பாள் ‘கண்டு’ என்கிறாள்.-இத் தலையில் பசலை நிறத்தைக் கண்ட நெஞ்சாறல் எல்லாம் தீரும்படி, கலவியிலும் பிரிவிலும் ஒருபடியாயிருக்கும் வடிவைக் காணப் போகிறாய் அன்றோ -எப்பொழுதும் ஒருபடிப்பட்டதான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவன்” என்று சொல்லளவேயாய்ப் போகை யன்றிக்கே
அதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டிருக்கிற வடிவைக் காண்பாய்-

———-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.
–6-1-8-

எனக்கு –உங்கள் சொற்கேட்டுத் தரிக்க இருக்கிற எனக்கு.-ஒன்று உரையாய் –
எனக்கு அவன் படிகள் எல்லாம் சொல்ல வேண்டா; ஒன்று சொல்ல அமையும்.
போகத்துக்கு அன்று இவள் தேடுகிறது, சத்தையை நோக்குகைக் கன்றோ பார்க்கிறது.ஓன்று உரை – மறு மாற்றம் ஓன்று சொல் /அடையாளம் ஓன்று சொல் /அவன் இடம் என் விஷயமாக ஓன்று சொல் -மூன்றும் சொன்னவாறு – அவதாரத்தில் ஒன்றும் இங்கு இரண்டும் சொன்னபடி – ஆக, இந்த இரண்டாலும் ஆசாரியன் வார்த்தை கேட்டுத் தரித்தல், அவன் அபிமானத்தாலே தரித்தல் ஒழிய, வேறு ஒன்று இல்லை

வாராமை அவன் குற்றம் அன்று, நிலப் பண்பு கண்டீர் கோள்-காற்கட்டு ஒன்று இரண்டாகில் அன்றோ வரலாவது, அவை நாலு பாடும் சூழ்ந்து நிற்க அவனாலே வரப் போமோ-ஒரு திக்குக்கு ஒன்றே அமைந்திருக்கிறது காணும்.

பெரு நீண் முடி –உபய விபூதிகட்கும் கவித்த முடியை யுடையவன்–உபய விபூதிகட்கு முடையவனாயிருத்தலுக்கு மேலே அன்றோ, அவ் வூர்க்குக் கடவனாயிருத்தல்-இவள் தன்னைத் தோற்பித்துச் சூடின முடி என்னுதல்.(பட்டர் நிர்வாகப்படி என்னை வஞ்சித்த ஓர் அரசே )

கரும் திண் மா முகில் போல் திருமேனி – கறுத்துத் திண்ணியதாயிருப்பதொரு மஹா மேகம் போலே யாயிற்று வடிவு இருப்பது.
அன்றிக்கே,-சிரமத்தைப் போக்கக் கூடிய நிறத்தை யுடைத்தாய், நிலைத்திருப்பதாய் அளவிடற் கரியதான மேகம் போலே இருக்கும் வடிவு என்னுதல்.
அன்றிக்கே,-நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம்.-கறுத்து அகவாய் திண்ணியதா யிருப்பதொரு மேகம் பெறலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர்.

திருமேனி அடிகளையே – வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்ட போதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை.
அன்றிக்கே,-அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச் செய்வர்.-

—————–

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே
.–6-1-9-

அடிகள் கை தொழுது –-திருவடிகளைக் கையாலே தொழுது- அவனுக்கு மறுக்க ஒண்ணாத செயலைச் செய்து-திருவண் வண்டூர் உறையும் –-விடியாத ஊரிலே என்னை வைத்தான், விடியும் ஊரிலே தான் இருந்தான்.-அவன் எந்த விடத்தில் நின்றாலும் அவ் விடம் விடியுமத்தனை அன்றோ.-“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்”-கண்ணனை-நெடுமாலை – அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண் பாராத ஆச்சரியத்தை யுடையவனை.-கண்ணனை–அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை.-நெடுமாலை –-இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவனை.

கடிய மாயன் –-தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையை யுடையவனை.
கண்ணனை நெடுமாலை –-எளிமை-காதா சித்தம்- ஒரு கால விசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது-இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த செயல் கண்டீர் என்று அருளிச் செய்வர் பட்டர்-திறம் கூறுமின்; -ஒரு மஹா பாரதம் இறே-.-வேறு கொண்டு கூறுமின் –-செவிப்படாதபடி ஓலக்கத்திலே சொல்லாமல் ஏகாந்தத்திலே சொல்லுங்கோள்.-அதாவது, அவனும் அவளுமாயிருந்த இடத்திலே சொல்லுங்கோள்-அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.-நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.

என் திரு மார்வற்கு என்னை’-திருவாய்மொழி, 6. 8 : 10.- என்றும்,
‘திருமாலார்க்கு என் பிழைத்தாள்’ -திருவாய். 1. 4 : 7.-என்றும்,
‘மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு’ என்றும்-திருவாய். 9. 7 : 6.-அன்றோ இவர் தமக்குப் பாசுரம்.-தூது அனுப்பிய மற்ற திருவாய்மொழிகளிலும் பிராட்டி முன்னாகத் தானே என்பதால்-இங்கும் அதே போலே என்றவாறு-

————-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.
–6-1-10-

என்னையும் உளள் என்மின்கள் – இன்னமும் நோவு படுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள்.-இதற்கு, “‘இத் தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை;-இத் தலையில் சத்தை உள்ளமையை அறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு பிரவாதம் உண்டு;-அதாகிறது, ஒரு தலை உண்டானால் ஒரு தலை இன்றிக்கே இராது; இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனை யாயிற்று. அதில், தாம் உளராகையால் இத் தலையும் உண்டு என்கை நிச்சிதம்;
ஆன பின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்கு எடுத்துப் பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய், ‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும் இல்லையே வண்டுகள் குறித்து இத்தலையில் சத்தை இன்றி இருப்பார் உளள் ஒருத்தி நானும்
ஒருத்தி என்று சொல்ல -பிள்ளான் நிர்வாஹம்
இத்தலை இல்லை என்றால் அத்தலையும் இல்லையே யாகில் ரஷய வர்க்கத்தில்
நானும் உண்டு எம்பெருமானார் நிர்வாஹம்

மணி மாமை குறையிலனே-நிறம் தொடக்கமானவை இல்லாதவோ பாதி சத்தையும் இல்லை என்று நினைத்து இருப்பான் –உளள் வார்த்தைக்கு சுவாரஸ்யம் பிள்ளான் நிர்வாகம்
ஏறு சேவகனார்க்கு-வார்த்தைகளுக்கும் சுவாரஸ்யம் -வைத்து எம்பெருமானார் நிர்வாகம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் – நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் -(சார தமமான திருமந்திர விவரணமான)-துவயத்தையே ஆதரிக்குமாறு போலே.-இவை தாம் ஆறு பதங்களை யுடையன வன்றோ.
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கித் தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் -திரு மந்திர விவரணம் தானே த்வயம் –-அதனால் இத்தையே ஆதரிப்பார்கள் என்றபடி –

வெறி வண்டு இனங்காள் –-உங்களுக்கு என் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாதா யிருந்தது.-கலவியால் உண்டான வேறுபாடு அடங்கலும் வடிவிலே தோன்றும்படி யாயிருந்தது.-வெறி – வாசனை. வாசனையை யுடைத்தா யிருக்கை.
தனித்துப் போனாலும் வழிக்குப் பாதேயம் போந்திருந்ததே! என்றது, உடம்பை மோந்து கொண்டு போக அமைந்து காணும் இருக்கிறது என்றபடி. இவை தமக்குப் பிரிவு இல்லை என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.-“ஸர்வ கந்த:” என்ற விஷயத்தோடே அணைந்த இவளுக்கு இவற்றின் பரிமளம் கண்டு ஆச்சரியப் படும்படி காணும் வாசனையும் கூட மறந்தபடி.

——

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.
–6-1-11-

மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. –அருணோதயம் -வந்த பின்பு தானே ஸூர்யோதயம் –-அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக் கொண்டாற்போலே, பிரணய ரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேர விட்டுக் கொண்டபடி.-எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்.-அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனை யன்றோ.-அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றே யன்றோ இது.-

மின்னிடை மடவார்க்கு மதனர் – காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்–இவர் தூது விடுகிற விஷயத்துக்கு போக்யராவார்-.-எல்லா வகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக் கடவது.-
தாமரை யன்ன பொன்னார் அடி –-‘அது போல’ என்றும், ‘அது தான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –எம் கானல் அகம் கழிவாய் -9-7-

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தூது போகா விட்டாலும்-கடகர் இல்லை என்றாலும் ப்ராப்யர் தானே-திருவடியாவது தலை மேல் வைக்கக் கூடாதோ-வேங்கடத்துப் பதியாக வாழும் மேகங்களே-திருமலைக்குப் போக ஒருப்பட்டு -போவான் போகின்ற போல் -இருந்தும் எனது கார்யம் செய்யாமல் இருப்பதே -என்று வெறுத்து அருளிச் செய்கிறார்-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே
—9-7-1

நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று பரம பதத்தே தூது விட்டாள்-அது பர பக்தி பர  ஞானம் பரம பக்தி யுக்தர் ஆனார்க்கு  அல்லது புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-அவதாரங்களிலே தூது விடப் பார்த்தாள்– கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே- பிற்பாடர்க்கும் அனுபவிக்கலாம் படி ஸூலபமான திரு மலையிலே திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள்-தீர்த்தம் பிரசாதியாதே-பின்னானார் வணங்கும் சோதி அன்றோ அர்ச்சாவதாரம் -அதிலே தேங்கின மடுக்கள் போல் – திருமூழிக் களம் -தூது -எம் கானல் அகம் கழிவாய் -9-7–பறவைகளைத் தூது அங்கு ஆகாசம் -பறவைகள் இரண்டு சிறகுகள் ஞானம் அனுஷ்டானம் -பக்ஷிகளுக்கு இங்கு மேகம் -உதார ஸ்வபாவம் என்று இங்கு தூது –

பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில் ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க நம்மாலே செய்யலாமோ என்று அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார் சில உதார ஸ்வ பாவரைக் கண்டு இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
இசையிலம்
-என்ற ஒரு பாடம் இசைவலம் -என்ற ஒரு பாடம்–இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே-இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் -இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்-அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது -திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி-இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-இசைகிறவன வில்லை-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
– –31-தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–
87-இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்-அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே-குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்–ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் – துடர் அறு சுடர் அடி -போலே –

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும் மறப்ப்பித்த ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும் வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது

இசைமின்கள்  தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்–திரு மலை நோக்கிப் போகும் மேகங்காள் !-என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்- சொல்லுகிறிலிகோள்–திரு மலைக்கு போகிற பராக்கிலே  பேசாதே
போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டிகோள் ஆகில் உங்கள் திரு அடிகளை என் தலையில்  வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ? திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே எனது கார்யம் செய்யா விட்டாலும் தாஸ்யம் மாறாதே-புணர்த்த கையினாராய் எனக்கும் வணங்குமின்-மேகங்களை-அப்ரோக்ஷித்து – முன்னிலையாகவும் -சம்போதமாகவும் கொள்ளலாம்-படர்க்கையாகவும் கொள்ளலாம்
இசையிலம்-இசைவலம் -இசைவு அலம்-பூர்த்தி-இரண்டு பாட பேதங்கள் –திரு அடியை பிராட்டி –இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் – ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று அருளிச் செய்ய ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல போகா நின்றன

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசை-அழகிய பொன்னாலும் பெரு விலையாலும் மாணிக்கங்களால்(பொன்னில் அழுத்தப்பட்ட மா மணிகள் என்றுமாம் )திக்குகள் உண்டான இருளை சுரமேற்று நிற்பதும் செய்து-(சுரமேற்று நிற்பதும் செய்து-குகைக்குள் போகச் சொல்லி விரட்டி விடுவது ) வலிதான தாளை உடைத்தாய் இருக்கும் திரு மலையிலே —சிமயம்-சிகரங்கள் என்றுமாம் —மலைச்சிகரங்கள் என்றும்-சிகரங்களின் நடுவில் என்றுமாம்-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ –மின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே –ராஜாக்களுக்கு எடுத்து விளக்கு பிடிக்குமா போலே-போவான் வழிக் கொண்ட
போக்கிலே உத்யோகித்த வழி கொண்ட மேகங்காள்  இசைமின்கள் தூது என்றால் இசையுமோ?
என் தலை மேல்-அசைமின்கள் என்றால் அசையுமோ ?–(அந்த மேகங்கள் -படர்க்கை பரோக்ஷம் )
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே –
என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1-
இவர்க்கும் பகவத் விஷயத்தில் யாரேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர் திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-

வானத்தில் பறந்து செல்லும் அன்னம் முதலியவற்றைப் பரமபத நாதனுக்குத் தூதாகவும்
மேகங்களை திருவேங்கடமுடையான் இடம் தூது விடுகிறாள்-கைம்மாறு கருதாமல் உதவும் மேகங்களை -தூது –அவையும் உடன் படாமையாலே – திருமலைக்குச் செல்லும் பாக்யம் உள்ள நீங்கள்
உங்கள் பாதத்தை என் தலை மேல் வைத்தாவது போகுமுன்
–திரு மலை நோக்கி போகும் மேகங்காள் !-
என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-சொல்லுகிறிலி கோள்-
திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டி கோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ ?
திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?சிரசில் அவை கால் படும்படி பிரார்த்தித்து சரணம் செய்தால் பலிக்கும் என்று -விஸ்வஸித்து- யாரேனும் வழி நடந்து செல்வாராம் திவ்ய தேச யாத்திரை செல்கிறார் என்று இருப்பாரே ஆழ்வார்-வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் –
என் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் –
திரு மூழிக் களத்து-உறையும் கொங்கார் பூந்துழாய் முடி எம் குடகு கூத்தற்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ னுமாரோடு -போலே
தூது போவாரைத் திருவடி தன் தலை மேல் சொல்வது உண்டே

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால் அனுமதி பண்ணக் காணகிறிலோம்–என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்-நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால் அது தான் செய்யக்கூடுமோ-அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து–ஸ்லாக்யமான பொன்னும் மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்–வன் தாட்சி மயம் மிசை-வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி–மின் மிளிரிய மின்னைப் ப்ரகாசிப்பவனாய் போவான் வழிக் கொண்ட போகைக்கு வழிப்பட்ட-மேகங்களே-உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை-போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்-இசையைக் கண்டிலோம்–என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால் அனுமதி பண்ணக் கூடுமோ-அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் -திரு வேம்கடத்து ஸ்லாக்யமான ஸ்வரூபமும் மஹார்க்கமான குண ரத்னங்களும் ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்–வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய-வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10- அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய் உஜ்வலமான தீப்தியை யுடையரான(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் ) உதார ஸ்வா பாவமானவர்கள் (எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் ) என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று நான் கால் கட்டினால் அத்தைச் செய்கிறவன வில்லை-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்-அது தவிர்ந்தால் திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள் அப்படி என் தலையிலே உங்கள் காலை நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும் பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே-என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்-

ஸ்வா பதேசம் –
சர்வ சக்தன் இடம் சென்ற நெஞ்சை மீட்க்கப் போமோ என்று கை விட திவ்ய தேச யாத்திரை செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்களை அவன் இடம் தம் குறை விண்ணப்பம் செய்ய – புருஷகாரமாக அவர்களை வரிக்க- அவர்கள் உடன்படாமல் இருக்க எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –என்கிறபடி அவர்கள் திருவடிகளை தம் தலை மேல் வைப்பதும் புருஷார்த்தம் ஆகும் -என்கிறார் –

தாத்பர்யம்–கீழ் அனுப்பின்ன அன்னங்களும் குருகுகளும் தனக்காக தூது செல்லாமல் உலாவி இருக்க
மேகங்களைக் கண்டு தூது விட்டு பிரார்திக்கிறாள்
ஓ மேகங்களே-நா நா விதமான பொன்னாலும் மாணிக்கங்களாலும் பரவும் ஒளியை சர்வ திக்குகளிலும் தீப்தி யுடைய திருமலைக்கு யாத்திரை செல்வதற்காகவே போகும் மேகங்களே
அக்ரூர யாத்திரை -திருவேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி மூன்றுமே நித்தியமாக அபி நிவேசம் கொள்ள வேண்டுமே-மின்னி முழங்கிப் புறப்படும் உங்களைத் தொழுதேன்-ஆண்டாளும் அசேதனம் காலில் விழுந்தால் போல் இவளும் விழுகிறாள்-கீழே சொன்னவை செய்யாமல் போனாலும்
இனி உங்கள் திருவடிகளை எனது சிரசில் அமர்த்தி அடியேனை கிருதார்த்தராக ஆக்க வேண்டும்

ஆறு கால்கள் -கமன சாதனம் சிறகுகள் தானே-ஆச்சார்யர் -பத்னி -புத்திரர் மூவர் -திருவடிகள் ஸ்பர்சமும் பூர்ணமாக கிடைக்க வேண்டுமே இதற்க்காகப் பிரார்த்திக்கிறாள்-இத்தையாவது பிரயோஜனம் ஆக்க வேண்டும் – என்கிறாள் –

9-7-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-ப்ரவேஸம்-

மேல் திருவாய் மொழியிலே அப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே-மிகவும் ப்ரீதியை அடைந்தவர்-
நல்வினைக் குறையாலே-அப்ரீதி இன்மையே தலையெடுத்து-அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதல்
ஆம்படி தனக்கு உண்டான தம்முடைய நிலையினை-அன்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி-அவன் வடிவு அழகில் ஈடுபட்டு-துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று-அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி-திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் நிலை அறியாது இருந்தான் அத்தனை –
அருள் உடையவன் ஆகையாலே-நம் நிலையை அறிவிக்க வரும்-என்று அவற்றை வினயத்தோடு
இரக்கிறாள்-ஒரு பிராட்டி பேச்சாலே தம் நிலையை-அருளிச் செய்கிறார் –

தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-

அஞ்சிறைய மட நாராய் -என்ற திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –என் பிழையே நினைந்து அருளி –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய பொறை உடைமையை அறிவிக்க வருவான் –என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-

வைகல் பூம் கழிவாய் -என்ற திரு வாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே-திரு வண் வண்டூரில் நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை-
தம் துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –என்று அது பற்றாசாக தூது விட்டாள் –

பொன்னுலகு ஆளீரோ-என்ற திரு வாய் மொழியிலே
திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு வலி இல்லாமையாலே போக மாட்டாதே
இருக்கிற பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -அடியார்களோடு-ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே-பற்றாசாக தூது விட்டாள் –

இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே-வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று-அவன் வடிவு அழகையும் குணங்களையும்
பற்றாசாக தூது விடுகிறாள் –

அங்க மாலி அருகில் -திரு மூழிக் களம் –எர்ணா குளம் -திருக் காட்கரைக்கு -கிழக்கே உள்ள திவ்ய தேசம் –
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -சூர்ணிகை -179
திரு மூழிக் களத்து விளக்கு -பின்னானார் வணங்கும் சோதி –
கல்லும் கனை கடலும் -திரு வேங்கடம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு பிரதி நிதி போலே
திரு மூழிக்களம் -அர்ச்சைக்கு தூது இதில் -பிரதி நிதி தானே இந்த திவ்ய தேசம்
அப்பன் -ஸ்ரீ ஸூக்தி நாதன்-ஸ்ரீ மதுரை வேணி நாச்சியார்– பாரத புழா நதி அருகில்
ஹரிதா மகா ரிஷி தவம் -பக்தி ஸூ த்ரங்களை பிரார்த்தித்து -ஸ்ரீ ஸூக்தி -திரு மொழி –
களத்து மேடு -பயிர் செழிக்கும் -மொழி மருவி மூழிக் களம்
லஷ்மணன் தபம் -பரத அபசாரம் போக்கிக் கொள்ள -இங்கே வந்து –லஷ்மண ஸ்வாமி என்றே இந்த பெருமாள் இன்றும் –

ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் -குண ஸ்மரணத்தாலே சிதிலரானவர் அந்த ஸைதில்யம்
பாஹ்ய அனுபவ பர்யந்தமான அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அனுபவ யோக்யமாம் படி திரு மூழிக் காலத்திலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய
அதிசயித போக்யதாகாரத்தையும்
அசாதாரண ஜன அனுபாவ்யத்தையும்
சேஷித்வ பிரகாச ரூப வைலக்ஷண்யத்தையும்
நித்ய அனுபாவ்ய சேஷித்வத்தையும்
நிரதிசய விபூதிமத்வத்தையும்
நித்ய அநபாயினீ சம்பந்தத்தையும்
அத்யுஜ்ஜ்வல திவ்ய அவயவத்தையும்
ஆபி ரூப்ய அதிசயத்தையும்
அசாதாரண சேஷித்வ சிஹ்னத்தையும்
அநுபஹித கிருபா யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலே
கடக முகத்தால் லபிக்கப் பாரித்த பிரகாரத்தை
நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் வ்யதிரேகத்தில் தரிக்க அரிதான அவனுடைய அழகை
அனுபவிக்கைக்காகச் சில பஷிகளை இரந்து தூது போக விடுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாரையிலே அபராத சஹத்வம் பற்றாசாகவும்
வைகல் பூம் கழிவாயில் சேஷித்வ சம்பந்தம் பற்றாசாகவும்
பொன்னுலுகு ஆளீரிலே ஏக ரஸத்வம் பற்றாசாகவும்
இத்திருவாய் மொழியிலே ஸுந்தர்யம் பற்றாசாகவும் தூது விடுகிறாள் –

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

சில நாரைகளைக் குறித்து-கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு-ஒப்பனையும் மனத்தை கவர்கின்ற செயல்களும்
ஆகிற இந்த இரண்டினையும்-எனக்கு ஆக்கி வைத்தவர்க்கு–அவன் தன் அழகாலும் குணங்களாலும்-தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து-உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்-என்கிறாள் —

எம் கானல்-பிறருக்கு கொடுப்பதாக வரும் மமகாரம் -எனது என்னும் செருக்கு- உத்தேச்யமாய் இருக்கும் அன்றோ –

நும் கால்கள் என் தலை மேல் – உதவி செய்கின்றவர்களான உங்கள் கால்களை-நீங்கள் உதவி செய்ய -அதனால் உய்வான் இருக்கிற -என் தலை மேலே
மயிர் கழுவிப் பூ சூட இருப்பாரைப் போலே-அவற்றின் காலாகில் -இவள் தலையிலே இருக்கப் படைக்கப் பட்டன –
இவள் தலையாகில் அவற்றின் கால்கள் வைக்கப் படைக்கப் பட்டு இருந்தது-இரண்டும் பிறர் பொருட்டு இருந்தபடி –

நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர் பத்னி புத்திரர்கள் திருவடிகள் தலையில் தரிக்க –ஆறுகால சிறு வண்டே-
குருவைப் போலே நுமர்கள் -தாரை பிள்ளைகள் -இவர்களையும் நடத்த வேண்டும் –
எனக்காக தூது சென்ற -உத்தம அங்கத்தில் சேர்த்து கிருபை பண்ணி -பாத்ர பூதன்-என்று உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி அளவும் செல்ல வேண்டுமே

——

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

சில குருகு இனங்களைக் குறித்து-தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ –என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –அடியார்களுக்கு -உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பிரார்த்தனை –
அசாதாரண பரிஜனங்கள் உடன் -கூட சேர அர்ஹதை இல்லோமோ-தக்கிலமே கேளீரே

எமராலும் பழிப்புண்டு -அணி மூழிக் களத்து உறையும் -இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு – ஒரு காலத்தில் உண்டான கலவியின் காரணமாக-உறவினர்கள் கை விட்டார்கள் –
ஒரு காலத்திலேயே உண்டான கலவி அளவிலே தாமும் விரும்ப வில்லை -என்றது – உறவினர்கள் கை விட்டதே காரணமாக தாம் கைக் கொள்ள வேண்டும்-
அணி மூழிக் களத்து உறையும்-பிற்பாடர்க்கு காட்சி கொடுக்க வந்து நிற்கிற நிலையில் ஆகிலும் தாம் கைக் கொள்ள வேண்டும் –
இவ் விரண்டும் என் அளவில் விரும்பாமைக்கு காரணம் ஆவதே -என்கிறார் -என்றபடி –இங்கு என்-தம்மைப் பெற்று இருக்கிறேனோ-பந்துக்களைப் பெற்று இருக்கிறேனோ -என்றபடி –
இங்கு உள்ளார் கை விட்டால் பின்பு தம் எல்லைக்குள்-ஆக்கிக் கொள்ள வேண்டாவோ –சர்வேஸ்வரன் இடத்தில் உட்புக உட்புக -அன்று தொடங்கி-கை விடுவார்கள் அன்றோ இவ் உலகத்தார் –

ஸ்ரீ பூமி நீளா நாயகனாய் ஸர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவாராய ஸ்ரீ மத் ராமாநுஜாய நம –அவனுக்கும் –நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் -ஆச்சார்யருக்கும்

———

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

அழகன் -அவயவ சமுதாய அதிசயித போக்யதை-வடிவு கொண்டவனுக்கு நாங்கள் அயோக்கியரோ –தக்கிலமே கேளீர்கள்

கொக்கினங்காள் குருகினங்காள்-கண்ணால் கண்டவற்றை அடைய ஏவுகிறாள் – சிலவற்றைப் போக விட்டோம்-அவை நம் கார்யம் தலைக் கட்டும்-என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –

செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்–முதல் உறவு செய்யும் கண் –அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை –
ஊற்று இன்பத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் –திருவடிகளில் விழுந்தாரை நல் வார்த்தை சொல்லித் தரிப்பிக்கும் முறுவல்

———-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

அழகால் அடிமை கொண்ட ஸூந்தர மூர்த்திக்கு -தூதாக சென்று -வார்த்தை சொன்னால் -உங்கள் ஸாரூப்யம் தேச வாசம் தவிர்க்குமோ-சாமீப்யம் சாம்யாபத்தி சாலோக்யம் சாயுஜ்யம் தவிரான்-
மேக வண்ணம் -வெளுப்பு ஆக்குவானோ என்றுமாம் -வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ -1-4- அங்கு அப்படி அனுபவம் -இங்கு இப்படி அனுபவம் –

பூண்ட நாள் -சீர்க் கடலை உட்க் கொண்டு திரு மேனி நன் நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஞான ஹ்ரதரத்தைப் பூரித்துத் தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து
ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூறும் அடியவர் உறையில் இடாதவர் புயல் கை
அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும் –சூர்ணிகை -155-

————-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று-இருந்தனவாக-பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை-என் பக்கலிலே செய்தவன்-அங்கீ காரியாது ஒழியான் –
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்-செய்ய வேண்டும் –என்கிறாள் –அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ-

கொம்பது பருத்தியாக அங்காடி பாரித்து -பாரித்தால் போலே –தனக்கு பரம பதம் கலவிருக்கையாக இருக்க
அதனைக் காற் கடைக் கொண்டு-அண்மையில் இருப்பாரைப் போல் இருக்க-என் நெஞ்சில் பிரகாசியா நின்றான் -என்று-சிற்றான் கொண்டான் பணிப்பர் –

இது தான் -பருத்து கொம்பிலே இருக்கச் செய்தெ -கடை விரித்து புடவைக்கு விலை பேசுமா போலே
தூத பிரகரணத்தில் வெறுப்பாக சொல்லுவது பொருத்தமோ -கண்ணால் பார்க்க ஆசை கொண்டே சொல்கிறார் என்றபடி –
இத் திரு வாய் மொழிக்குச் சொன்ன வாக்ய அர்த்தத்தோடு சேராது-ஒவ்வொரு சமயங்களில் சொல்லிப் போம் வார்த்தை அன்றோ-எம்பெருமானார் -நிர்வாஹம்
அங்கு உள்ள ஈடுபாடு என் நெஞ்சில் உண்டு-நெஞ்சில் வசிக்கிறான் -சிற்றாற்று கொண்டான் -சொன்னதில் கொஞ்சம் மாற்றி-இதுக்கு சேர-உடனே பெற பாரித்து தூது விடுகிறார் –

துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-மயிர் முடி அழகை பிரகாசிப்பித்து -கேசவ பெருமாள் –
கிலேச நாசன் ஆக வேண்டாமோ -வாசக சப்தத்துக்கு தக்க நடக்க வேண்டாமோ -தூத வாக்கியத்தை செப்புமின்

—————-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

மாதரைத் தம் மார்பகத்தே-அகலகில்லேன் இறையும் என்று வைத்தார்க்கு-சில வண்டுகளைக் குறித்து –உங்கள் வார்த்தை விலை செல்லும்படி- பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள்-என் தூது வார்த்தையை -என்கிறாள் –

நித்ய அநபாயினி -பிராட்டியை திரு மார்பில் உடையவருக்கு உங்கள் வார்த்தை -கேட்ப்பிக்கவும் அவள் உண்டே-கேட்கவும் அவன் இருக்க சொன்னால் போதுமே -சேர்த்தியிலே சொல்லுமின் –

என் வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே- என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்-அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –

——–

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

சில குருகு இனங்களைக் குறித்து-சிலரோடு கலந்து-அவர்களைத் துறந்து-அதுவே புகழாக இருக்கப் போருமோ-என்று அறிவியுங்கோள் –என்கிறாள்

ஸ்ரீ ஸூ க்தி நாதன் பெயர் கொண்டவன் ஆழ்வாரை இப்படி பண்ணினான் என்ற பெயரே நிலை நிற்கும் படி பெற்றான்-பிரதம தம விபூஷணம் -வலி த்ரயம் தாமோதரன் -போலே –

எனக்கு ஓன்று பணியீரேஒரே நாள் -ஒரே வார்த்தை ஒரு சொல் -ஒன்றே மருந்து ஒரே தடவை பிரபத்தி-பரப்பு அற்று ஒன்றான வார்த்தை -பணியீரே -கௌரவத்துடன் சொல்கிறாள்-இரண்டாம் நாள் சொல்லுமது பழி என்று இருக்குமவள் அன்றோ –ஒப்பற்றதான நல்ல வார்த்தை-முடிகிறாள் ஒரு பெண் பிழைக்கச் சொல்லுகிற வார்த்தை அன்றோ –

தோள் துறந்த -என்றதனால்-அவன் தான் அந்தக் காதல் எல்லாம் கொண்டும்-தோளுக்கு அவ்வருகு போக மாட்டிலன் போலே காணும் -என்பதனை தெரிவித்த படி –

————-

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும் –அத்தலையில் அழகினை நினைத்தால்-பாதுகாவல் தேட்டமாய் அன்றோ இருப்பது –
அவனோடு கிட்டிக் கலக்க பெறாமையால் வருவதும்-ஓர் ஆற்றாமை உண்டு-அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்றும் ஒரு ஆற்றாமை உண்டு
அவற்றிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம் –ஸ்ரீ பரத ஆழ்வான் சந்தோஷமாக ஸ்ரீ பாதுகை பெற்று மகிழ்ந்து திரும்பினால் போலே

———

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-சேஷித்வம் போக்யத்வம் சீலத்தவம் -மூன்றும் உள்ள தாம்—தாம்  -ஸ்வரூபம் தம்மை ரூபம்--தம்மைக் கண்ணாடி புறத்தில் கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த நிலைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ- தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-
பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்- பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தகவு -தயா கிருபா -தயைக்கு போராது என்று உரையீர்

தகவன்று என்று உரையீரே—காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே-இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-

உண்ணும் சோறு -கள்வன் கொல்-பதிகங்களில் இதே போலே -தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் கொண்டு போக வேண்டுமோ -பரம பாகவதர் முகம் பார்த்து -அழுத முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ

ஏந்து பூண் முலை பயந்து –பூண் ஏந்து முலை பயந்து –-ஆபரணங்களைத் தரிக்கக் கூடிய முலைகள் பசலை நிறத்தை தரித்து –ஆபரணங்கள் கலவியின் பொருட்டு கழற்றுமவை- பசலை நிறம் கல்வியால் அல்லாது கழலாதே அன்றோ

இணை மலர்க் கண் நீர் ததும்ப–கண்களுக்கு இலக்கு நீராக இருக்க வேண்டி இருக்க நீருக்கு -சோக அஸ்ருக்கு இலக்காவதே

—————-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

தகவன்று என்று உரையீர்கள்-ஆஸக்தியால் நிரவதிக தயாவான் -தகவு இல்லை என்று அருளிச் செய்த உடனே -இப்படி -சந்நிஹிதன் ஆனபின்பு -பிரயோஜனம் இல்லாமல் போகுமே -அவனுக்கு நிரூபகம் அருள் ஆகையாலும்-ஸ்வரூப நிரூபக தர்மமே தயை தானே-அவனுடைய மர்மத்தை அறிந்தவள் ஆகையாலும்-ஆன்ரு சம்சயம் கிருபை தான் தர்மம் சீதை பெருமாள் இடம் -சொல்லி-அதனால் இவள் அறிந்த மர்மம் -–முன்பு -தகவுடையவனே பரிந்து பேசி -அதனை இல்லை -என்கிறாள் -என் தவள வண்ணர் தகவுகளே -2-4-5-என்று திருத் தாயார் சொல்லிற்று பொறாமல்-தகவுடையவனே -என்று-முன்பு அப்படி பேணினாளே-
அருளாத நீர் அருளி–அவர் ஆவி துவரா முன் –அருளாழி புட் கடவீர்-1-4-போலே இதிலும் -சில அன்னம் களைக் குறித்து நான் முடிவதற்கு முன்னே-அவனுக்கு என் நிலையை-அறிவியுங்கோள்

———

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

நோய் அறுக்குமே-சம்சாரம் நிவர்த்திக்கும் -விஸ்லேஷ ரூபம் வியாதி வராது-பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

கிளி மொழியாள் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை-அலற்றிய சொல்-தன் ஆற்றாமையாலே-முறை பிறழச் சொல்லிய சொல் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –