ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
ஸத்ய ஸங்கல்பத்தால் ஸர்வ ரக்ஷணம் செய்பவன்–அநாதரத்துடன் இந்த அபலையை ஒதுக்கினீரா
இவள் உபய விபூதியிலும் சேராதவளோ–ஏறாளும் இறையோனும் -4-8-விரிவாக்கம்-அவனால் விரும்பப்படாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம்-மணி மாமை குறைவிலமே அங்கு உண்டே
திருத்தாயார் பாசுரம்-தலைவி ஆற்றாமை கண்டு தோழி வெறுத்து உரைத்தல் என்றுமாம் –
நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே-பெண் பிள்ளை மோஹித்து கிடக்க ,
இவள் மோஹத்தை கண்ட திருத் தாயார் –-மேகோ தயாஸ் சாகர சந்நிவ்ருத்தி இந்தோ விபாக ஸ்புருதா வாயு வித்யுஜ் விபங்க —விஸ்மய பிரபஞ்ச மாயா -என்றும் –பீஷாஸ்மாத் வாத பவதி பீஷோதேதி ஸூர்ய – என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு அவ் வருகு போகாத படி நிர்வஹிக்கிறது-
தன் ஆஞ்ஜையால் அன்றோ —இவ் அளவில் இவளைப் பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன-ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும் அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே-ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன, பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,-பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க, ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்; பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.–காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய் திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் – இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறு திரு வுடையை ஈசன் உகப்புக்கு
வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு —38—சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே பிராப்தனாய் சீலவானாய் விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –அவனுக்கு வேண்டாத என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து திருவருள் செய்பவன் போல் –உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் –அவனால் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில்-ஆத்மீயங்களை முதலில் வைத்து இங்கும் அருளிச் செய்கிறார்-ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை
ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –இப்படி அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை-நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-
அருளார் திருச் சக்கரத்தாலே –கிருபையால் பரி பூரணமாய் இருக்கிற படி-சர்வேஸ்வரன் அருள் மறுத்த போதும் அருள் கூடு பூரித்து இறே இருக்கிறது-பிராட்டி அருள் மறுத்தாலும் ,மாறாதே இறே இருப்பது ஆழ்வான் அருள்--மடு அருகில் ஊற்று போலே-ஸஹ தர்ம சாரிண -அவன் திரு உள்ளம் படியே இவள்-அம்பரீஷ சக்கரவர்த்திக்கு துர்வாசர் வந்த போது ஜெயித்துக் கொடுத்ததை நினைத்து இருப்பது
ஆழ்வானை ஆஸ்ரயித்தவர் எதிரிகள் இல்லாது இருந்த படியையும் ,-ஆழ்வானை எதிரியாய் பகைத்த போது அவர்களை எம்பெருமானே நேர் இட்டு கொண்டு நோக்கும்படியையும் –மற்றை புகல் இல்லாது இருந்த படியையும் சொல்லிற்று – சுமுகன் கருடன் விருத்தாந்தமும் அறிவோமே—அருளார்-அருள் ஆஸ்ரயித்துக்கு நிரூபகம் —பிரதி பஷத்தை துணிக்கும் என்று சொல்லா நிற்க செய்தேயும் நிரூபகம் நிற்கும் படி எங்கனே என்னில் –அதுவும் ஹித ரூபம் என்கையாலே–திருச் சக்கரத்தால்-கையில் திரு ஆழி யுமாய் இருக்கும் இருப்பே சர்வேஸ்வரனை சர்வேஸ்வரன் ஆக்கும்(தமஸ பரமோ தாத சங்கு சக்ர கதா தரா -அசாதாரண அடையாளம் இதுவே ) ஈஸ்வரனுக்கு லஷ்மி சம்பந்தம் போலே இறே திரு ஆழியும்–
அகல் விசும்பு இத்யாதி–உபய விபூதில் உண்டான அஞ்ஞான அவஹாமான பாபம் போகும் படி
திரு ஆழியின் உடைய தேஜஸ் ஆகிய செம் கோலால் நிர்வஹியா நின்றீர்–அகல் விசும்பு-த்ரி பாதஸ்யாம் அமிருதந்திவி-என்று முக்கூறாக இருக்கை–அங்குத்தை அஞ்ஞானம் போக்குகை யாவது என்னில்–கையும் திரு ஆழியும் ஆகிய இருப்பை விஸ்லேஷிக்கையில் செய்வது என் என்று விசேஷ வைலஷண்யத்தாலே அதி சங்கை பண்ணினால் அந்த அதி சங்கையை நிவர்த்தி பண்ணி சங்கை கெடுத்து கொடுக்கை–சங்கை ஆகிலும் உள்ளது -பரிஹாரம் வேணுமே-இங்கு உள்ளது ப்ரத்வம்ஸ பாவம்–அங்கு உள்ளது ப்ராக் பாவம்–அபாவம் இன்மை -நான்கு வகைகள் உண்டே-பிராக பாவம் ப்ரத் வம்ஸா பாவம் இத்யாதிகள்–அங்கு அழகைக் காட்டி ரஷிகிறான் –ரஷமாம் சரணாகதம் சங்கு சக்கர கதா பாணி போல் அருளார் சக்கரத்தாய்-
ஈங்கோர் பெண் பால் இத்யாதி––அபலை அநந்ய கதி அன்றோ ?-அன்றிக்கே-உபய விபூதிக்கும் புறம்பு என்றா ? உமக்கு சக்தி இல்லை என்றா ?–உமக்கு அஞ்ஞான அசக்திகளை ஏறிட்டுக் கொள்ளப் பார்க்கீறீரா- விபூதிக்கு புறம்பு என்றீர் ஆகில் அஞ்ஜர் ஆவீர்-உமக்கு ரஷிக்க போகாது என்றீர் ஆகில் அசக்தர் ஆவீர்–சாஹம் கேச க்ரஹம் பிராப்தா த்வயி ஜீவத்ய பிரபோ-மகா பாரதம் -உத்தயோக பர்வம் -70-43–நீர் பிரபு ஆவைகையும் உம்மை பற்றினவள் பரிபவத்துக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமீ
(திரௌபதி கேட்டது )-தெரிளோம்-அறிகிறிலோம்-அரவணையீர்-உகப்பார்க்கு உடம்பு கொடோம் என்று பிரதிக்ஜை கண்டிலோம் இறே-இவள் தரை கிடை கிடக்க உமக்கு படுக்கை பொருத்துவதே
படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ-படுக்கையில் கிடப்பார்க்கு தனி கிடை அமையுமோ-
இவள் மாமை-பெறுதற்கு அரிய மாமை –நாம் சர்வ ஸ்ரஷ்டாவாய் இருந்தோம்-இன்னம் பண்ணிக் கொள்கிறோம் என்று கிடக்கிறீரோ-அவன் தான் கை தொட்டு அழிக்கிறான் என்று தோற்றி இருந்த படி-நீர் சிதைக்கிறீர் என்றும் தானே சிதைகிறது என்றும் –ஸூஹ்ருதம் சர்வ பூதானாம்-என்னும் அதுவும் தப்பு அற்று இறே-இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி-இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி-பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி-ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே —பேற்றுக்கு அடி கிருபை-இழவுக்கு அடி கர்மம்-இருந்தாலும் அதீத ஞானத்தால் -பிராப்தி அறிந்து அவன் தலையிலே ஏற்றலாமே -இவள் படியையும் பார்த்து அவன் படியையும் பார்த்தால் பேற்றுக்கு கண் அழிவு இல்லையாய் இருந்தது–இவ்வளவாக கண் அழிவு அற்ற பின்பும் வரத் தாழ்ந்த படியாலே
இது என்னதாய் முடிய கடவதோ -என்று திரு தாயார் சோகிக்கிறாள்-
தம்மால் காக்கப் படும் உலகங்களுக்கு உட்படாமல் பஹிர்ப்பூதையோ நான் –-அருளார் திருச்சக்கரம் -அருளாழி புள் கடவீர் போலே அருளே வடிவமான –அரவணையீர் –இத்தசையிலும் உமக்கு படுக்கை பொருந்துவது – படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ – தனிக் கிடை கூடுமோ-இவள் மாமை –இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி-பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே ,-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –
அருளார் திருச் சக்கரத்தால்-ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே–அகல் விசும்பும் நிலனும்–பரந்த விசும்பும் நிலனும்–இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்-மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்–ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ–இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ–தெருளோம்-அறிகிறிலோம்–அரவணையீர் !-படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்-இவள் மாமை சிதைக்கின்றதே – இவளுக்கு இடம் கொடாமல் இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –
இத்தால் அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்-ஸங்கல்ப மயமான திருவாழியாலே விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே நித்ய விபூதியில் அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில் செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே-இருளார் வினை—ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார் ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ–இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-இந்த விபூதியிலும் அந்த விபூதியிலும் அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை-அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி–அரவணையீர் -என்கையாலே-அந்த விபூதியில் உள்ளவரோடு நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது–இவள் மாமை சிதைக்கின்றதே –என்கையாலே அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது–இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அருளார் திருச்சக்கரத்து–உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம் நீர் செய்ய முடியாமல் இருந்ததோ வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது-இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ–ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ-அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது-ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான் ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்-பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே-அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – –ஸஹ தர்ம சாரிணி அன்றோ-ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்–இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்-உன்னை விட்டாலும்-லஷ்மணனை விட்டாலும்-உயிரை விட்டாலும் ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்-எவர்களை – ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்—உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்-கர்ப்ப பூதாஸ் தபோ –உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்-தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே-ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்-கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –
விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில் சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும் யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன் அதே அர்த்தம் இங்கும்-மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன் பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே-ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன் ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்–இந்த ராமர் விரதம் அறிவாள் அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம் சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல யாரேனும் யாகிலும் ரஷிப்பேன் இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ–லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ-பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்-ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ-ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்-ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள் பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள் தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்–
இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல் அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான் சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் திருச்சக்கரத்தான் ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும் அநாயாசேந ரஷிக்கும் சக்தன் இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான் தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன் அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்-அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –நிலனும் லீலா விபூதியும் அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில் உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில் அங்கு அதிசங்கை உண்டே நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்-பிராக பாவத்தால் அங்கு இங்கு ப்ரத்வம்ச பாவம்-அழகைக் காட்டி அங்கு இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்–அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே-இவள் மாமை சிதைக்கின்றது-யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ-அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ-அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர் இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்-ஸ்ரீ கீதை -10-39– எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னை யின்றி யுள்ள பூதமொன்றுமில்லை.–உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே-உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ நெருப்பினால் நனைக்க முடியுமோ–திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ–
இனி திரௌபதி பரிபவம்-இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல சா அஹம் கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன் நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன் இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்–என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்-புருஷோத்தமன் அன்றோ ‘ உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ சரணாகதை நான் நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி அருளார் திருச்சக்கரத்தால் இங்கு-சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ—துவாரகா நிலையா – பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே-அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ–அச்யுத சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்–கோவிந்தா-பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ-குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே–புண்டரீகாஷ— விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ-ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால் கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ–மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை–தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ–கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம் இவர்களைக் கூப்பிடவில்லையே–ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி-அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக –இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே--தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில-தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பர்த்தா இருக்க இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார் பண்டே உபதேசம் பெற்றாளே-ஸ்மர்தவ்ய பகவான் ஹரி –பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்-குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல் ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்-பிரார்த்தனா மதி சரணாகதி-உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம் இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்—அரவணையீர்-இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர் –எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்-இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ-யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே-இவளை சிதைக்கின்றது-இவளை நோவுபட வைத்து பகுதியாக தான் காண முடியும்-ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்-அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள திருவாழியாலே அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி–இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்–ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?-இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது நமக்கு ஒரு புருஷார்த்தமோ என்று அநாதரித்த படியோ-இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ-ரஷ்ய வஸ்து பஹிர் பூதை இவள் என்று நினைத்தீரோ–தெருளோம்-அறிகிறிலோம்–அரவணையீர் !–இப்போதும் வாய்த்த படுக்கையிலே கண் வளரா நின்றீர்–இவள் மாமை சிதைக்கின்றதே— இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே-நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –
ஸ்வா பதேசம் –
ஆழ்வார் நிலை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமான் இடம் விண்ணப்பம்-கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி பிரியாமையாலே ரஷிக்கும் அங்குள்ளாரை –அத்தைக் கொண்டுவிரோதிகளை இரு துண்டாக்கி ரஷிக்கும் இங்குள்ளாரை -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –-அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு இல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி வைலஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீகார ஹேது உண்டு என்றபடி-அரவணையீர் என்கையாலே அங்கே நித்ய சம்ச்லேஷம் நடக்கிற படி சொல்லுகிறது –
தாத்பர்யம்-சர்வேஸ்வரனுடைய திருமேனியை ஒத்ததாய் மேகங்கள் அவனது ஸ்ம்ருதி விஷயமாய்
நீர் இவளை உபேக்ஷிப்பது எதனால் நீர் உபேக்ஷித்தாலும் தான் உபேக்ஷிக்காமல் ஜகத் ரக்ஷணத்தில் முன்னோடி இருக்கும் திருவாழி-இருள் அஞ்ஞானம் -அதுக்கு காரணமான துஷ் கர்மங்களும்
காரியமும் காரணமும் இதுவே நித்ய விபூதியில் கர்மம் அடியான அஞ்ஞானாதிகளில்லை என்றாலும்
விச்சேதம் விளையுமா என்ற அதிசங்கை உண்டே -அனுபவத்துக்கு இடையூறு வருமோ என்ற கலக்கம் அங்கு உண்டே இவை அனைத்தும் போகும்படி உபய விபூதியிலும் ரஷியா நிற்க இந்த அபலையான அநந்ய கதித்தவமுடைய இவளை உபேக்ஷித்து உமக்கு படுக்கையிலே பொருந்துவதே சேஷ படுக்கையில் கிடக்கிறீரே இவள் சிதைந்து போனாளே -உமது அநாதரவு ஹேதுவா சர்வ சக்தரான நீரே ரஷியா விடில் இவள் என் செய்வாள் இவள் உபய விபூதியிலும் அடங்காதவள் என்ற எண்ணமோ
அறியோம் என்றபடி
4-8-ஏறு ஆளும் இறையோனும்,-ப்ரவேஸம்-
கீழில் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி கூப்பிட்டார்;
இப்படிக் கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது
நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலே யாக அடுக்கும்,’ என்று பார்த்து,
ப்ராப்தனாய் -சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன்
இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோ தான் இது வேண்டுவது?’ என்று விடப் பார்த்து,
அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும்
நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்.
(ஆத்மாத்மீயங்களில் வைராக்யம் இதில் -)
வரி வளையால் குறைவிலமே -என்பதால் நாயகி பாவம் தோற்றும் –
அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்ம வஸ்துவை விரும்பச் சம்பந்தம் உள்ளது;
நாம் நமக்காக இல்லையே -அவனுக்காகத் தானே –
இங்ஙனம் விரும்பாத போது – தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும்
பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?
இத் திருவாய்மொழியிலே வருகின்ற
அடியேனைப் பணி கொண்ட’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்-ப்ராப்தனாய் -என்றும்,
கூறாளும் தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் .
உயிரினால் குறையிலம்-உடம்பினால் குறையிலம் இத்யாதிகளால் -அவனுக்கு வேண்டாத
நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு-என்றும் அருளிச்செய்கிறார்
‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே; காதலர் வேண்டின யாம் வேண்டினமே;
காதலர் எம்மை வேண்டார் எனிலே யாமும் வேண்டலம் இனியே’– என்றார் பிறரும்.
ந தேகம் –
இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற-அத்ருஷ்டம்- பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில்
பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா.
ந பிராணாந் –
சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா.
ந சுகம் –
பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா.
இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா.
இவை யெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்மாவுக்கே அன்றோ? அந்த ஆத்மா தானும் வேண்டா.
இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்?
உன் சேஷத்வ- திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில,
அவை ஒன்றும் எனக்கு வேண்டா.
நாத –
உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில்,
கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ஒரு ஷணமும் பொறுக்க மாட்டேன்;
இவை தம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது;
நசித்துப் போம்படி செய்ய வேண்டும். இது-கண்டாதூர்த்தமான- கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன,
தத் சத்யம் –
அது மெய். மது மதந – ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’
என்றார் ஸ்ரீ ஆளவந்தார்–இது,ஸ்தோத்திர ரத்நம், 57.
மகா ரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை;
பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி.
பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில்,
இருக்கிறது அரக்கியர்கள்-ஸ்ரீராமா. சுந். 26 : 5.-
நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.
பிராணன் -வைத்து தரிக்கலாம் பக்தர்கள் நடுவில் இருந்தால் அவர் வருவார் என்று-
எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்ட படியில் வந்து முகம் காட்டக் காணாமையாலே -அவன் அநாதரித்தானாக நினைத்து
ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அபீஹம்யத்வ அப்ரதிருஷ்யத் வத்தாலுண்டான உபாய பாவத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்தால் வந்த உபேயத்வ பூர்த்தியையும்
உபாய கார்யமான அனுகூல சத்ரு நிரசனத்தையும்
அபிமத விரோதி நிரசனத்தையும்
அஸஹ்ய விரோதி நிரசனத்தையும்
அர்த்த உபதேசத்தால் அநந்யார்ஹம் ஆக்கும் அறிவுடைமையையும்
ஊத்துங்க விரோதி விதாரணத்தையும்
விரோதி சதா விநாஸகத்வத்தையும்
விரோதி சரீர விஹஸ்த தாகரணத்தையும்
அசேஷ விரோதி கண்டநத்தையும்
அனுசந்தித்து -இப்படி ஆஸ்ரித உபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒரு கார்யம் இல்லை என்று
தமக்குப் பிறந்த அநாதர விசேஷத்தை நாயகனான ஈஸ்வரன் ஆதரியாத ஆத்மாத்மீயங்களை
அநாதரிக்கிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1-
இதனால், ‘நான், நான்,’ என்பார்க்கும் அணையலாம் படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்,-‘கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்.-காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;சிவன்.-அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு நாபீ கமலத்தில் பிறந்தவன்-என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.
சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய் இருக்குமாகில், தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தை யுடையேன்’ என்று செருக்குற்று இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார்.-கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார்.-தனி உடம்பன்- திவ்யாத்ம சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ?
எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான் இருப்பது?-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.
படை தொட்ட –உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன்,-அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையை யுடையவனாய் மேல் விழுவான்.-படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான்,-அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான்.-மாறாளன் –‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல்.கவராத மணி மாமை குறை இலமே –பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால் ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது? அல்லது, நிறக் கேடாமித்தனை அன்றோ? -நிறம் -ஸ்வரூபம் என்றுமாம்-மணி -ஓளி-
———-
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-
தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள்-அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன்.-குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில்,
என் உடைமையால் எனக்குதான் பிரயோஜனம் என்?
மலரில் மணத்தையே வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள்.
நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத் தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள்.
மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன்.
1–மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்திய வாசம் செய்வது மார்பிலேயாதலின்,
உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள்.
2– தான் பிறந்த மலர் நெருஞ்சிக் காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்;
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்-(தூவி சிறகு ) மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானே யன்றோ?-அனிச்சப்பூ -நோக்கவே கன்னிச் சிவக்கும் -அன்னத்தின் சிறகு -மென்மையாக இருக்கும் –இவை இரண்டுமே மாதர் அடிக்கு நெரிஞ்சிப் பழம்–என்றவாறு
3–முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன்.-பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று,-இவள் தான் பிறந்த மலரை நினைப்பது.
4-அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!
அணி மானம் தடவரைத் தோள் –எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே,-சர்வ பூஷண பூஷணாய -ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.–அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி.-அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.-அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.
அடல் ஆழித் தடக்கையன் –பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலே யுடையவன்.-இவனுடைய விருத்தம் கை மேலே காணலாய் இருக்கிறபடி.
பணி மானம் பிழையாமே –-நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே,-கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி – கைங்கரியம். மானம் – அளவு.
அடியேனைப் பணி கொண்ட –-இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே,
இருவருங்கூட இருந்து காணும் அடிமை கொண்டது. ‘குமரிருந்து போகாமே’ என்பார்,
அடியேனைப் பணி கொண்ட’ என்கிறார்.-இச் சரீரம் இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி.
இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க,-ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு,-ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோ வுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன,-பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.
பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’-கவராத மடநெஞ்சால் குறை இலமே –வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு?
நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது.
நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு-சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ் வாக்கியம், ரசோக்தி.
பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ?
தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ?
கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ?
வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ உடையவன் தன் உடைமையை போனான் ஆகில் நானோ இத்தை நோக்குவேன் என்கிறாள்
————-
மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.–4-8-3-
விடம் நஞ்சம் – விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம் என்று சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல். அன்றிக்கே, பேய்ச்சிவிட – பேயானவள் உயிரை விடும்படி,-படம் நாகத்து அணைக் கிடந்த –உணவுக்குத் தகுதியாகக் காணும் கிடந்த படியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது?
நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி.-திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டு விட்டு-அடியார்களுடைய கூக்குரல் கேட்டால் போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ?
பரு வரைத் தோள் – திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது.
கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில் வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே?-பரம் புருடன் – தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று அறப்பெரியன்’ என்று தோன்றிற்று-நெடு மாயன் –என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன்.-மிக்க வியாமோகத்தையுடையவன்-மடி – வயிறு. சுவடு – இனிமை. –
கண்ணன் என் ஒக்கலையானே’ –திருவாய். 1. 9 : 4
கவராத நிறையினால் குறை இலமே –அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், நான் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கவோ-எனக்கு என்னுடைய பெண்மையால் என்ன காரியம் உண்டு?-நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி இருக்கும் பெண் தன்மை.’-
——–
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-
கீழ் ஆத்ம குணம் –நெடும் பணை -ரூப குணம்-நீண்ட வேய் போன்ற தோள்கள் –
அரியன செய்தும் பெற வேண்டிய வடிவு அழகு-ஏழு அடர்த்த உகந்த-ஓன்று இரண்டு அல்ல
ஒரு காலே ஊட்டியாக -இவளை லபித்தோம் என்று உகந்தான்
நப்பின்னை பிராட்டியை விடை கொண்டு வந்து காணும் கைப் பிடித்தது-
சறையினார் -சறைகை மணி என்று ஒரு மணி -இடையர் அரையிலே சேர்த்துக் கட்டி பசுக்கள் த்வனி வழியே வருகைக்காக முன்னே ஓடுவார்கள் –அத்தை உடையவர் என்னுதல் –சறை என்று தாழ்வாய்-தாழ்ந்த இடை ஜென்மத்தில் பிறந்தவர் என்னுதல்
சறாம்பி இருக்கையாய் உடம்பை பேணாது இருக்கை என்னுதல்
பசுக்களின் பின்னே திரிகையாலே தன்னைப் பேண அவசரம் இன்றிக்கே இருக்கை –
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரக்ஷணத்துக்காக தன்னைப் பேணாத வடிவை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது-தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி நதரம் சுசிம் குரங்க ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் –
கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே--அவன் விரும்பாத தளிர் நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
கீழ் மணிமாமை என்ற இடம் -அழகிய நிறம் என்றது
இங்கு தளிர் நிறம் என்றது -ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது–
—————
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-
தனிச்சிறையில் –ஒளியையும் ஒளியை உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ-அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி?
விளப்புற்ற –
கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்;
அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.
கிளி மொழியாள் காரணமா –
திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி.-மதுரா மதுரா லாபா -தனிச் சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள்-சேர்ந்தே சொல்லப்படும் ஸ்ரீ ஸூக்திகள்
களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் – தேனை யுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை.-அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும்
அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையே யன்றோ?
ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத் துழாயை இட்டேயாம்.-தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது?-துரும்பால் கிளறிய சக்கரக் கையன்-பாண்டியன் ஏதேனும் ஒன்றைச் சூடிலும் வேப்பம்பூ என்ன கடவது இறே
கடல் ஞாலத்து அளி மிக்கான் – சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்க வேண்டும்’ என்று திருவுள்ளம் இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய்,
பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படி யன்றோ இங்கே வேரூன்றினபடி?’ என்றவாறு.
கவராத அறிவினால் குறை இலம் – அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம்.-பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு?-பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது?-
—————-
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-
அறிவினால் குறை இல்லா –அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட அறியாதது. என்றது,-நாட்டார் அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ? அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி.
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –கர்மயோகம் முதலாகப் பிரபத்தி யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி.-ஆத்துமாக்களினுடைய பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்?
ஆதலின், ‘நெறி எல்லாம்’ என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை,-ஆத்துமாவினுடைய உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி,-பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.
கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லு முகத்தாலே அவதார ரஹஸ்யத்தை உபதேசித்து,
பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு
பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று,
பின்னர், ‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், ‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே
எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து,
என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, ‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி,-அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி,
இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி,-அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும் தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.
குறிய –கோடியைக் காணி யாக்கிக் கொண்டாற் போலே, வளர்ந்த போதையிற் காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி.-மாண் உருவாகி –பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று,-உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற-முக மலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி.
ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை வடுக விடு நகம் இட்டு வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன்’-என்பதனைத் தெரிவித்தபடி.
கொடுங்கோளால் –வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி.-அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு,-கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு,
செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது;
ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது,
தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே,-அவன் செவ்வைக் கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி.
கிறி அம்மான்-பெரு விரகனான சர்வேஸ்வரன் -அவன் தரும் வழியை அறிந்து வாங்கின விரகு-கவராத கிளர் ஒளியால் குறை இலமே –-செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன்,-முன்னரே இசைந்து தன்னைப் பெற வேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித்-தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ?-கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.–
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த -திறந்த -முகத்தையும், நா மடிக் கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின கையையும்,அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப் பொன்னன். ஆகையாலே,பின்னர் வருத்த மின்றியே கிழித்துப் போகட்டான். நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க் கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ் செய்யுமே அன்றோ?-உகந்த –சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்த படி.-இவன்தான் காற்கட்டி ஆணை யிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல். ஒருவன் கை பார்த்திருப்பார் (ஒருவனுக்குப் பரதந்திரராயிருப்பார்’-கையிலே இருப்பார்’) பலர் உளர் ஆனால், அவர்களிலே சிலவர் இவனோடே கை செய்து, (துணை செய்து’ -கையிலே இருந்து’)அவனுக்குள்ள உடலையும் -உடல் (-தனம் -சரீரம்)-தாங்கள் கண்டபடி அழித்து நீங்கி யுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் கத கத எனச்-(கோபிக்க-ஜ்வலிக்க -)- சொல்ல வேண்டா அன்றோ?-இவர்கள் தாம் நுனி யாடிகள் அலரோ? -ஹஸ்தாக்ரம் -சேநாக்ரம் –இப்படி இவர்கள் தாமே யாவது என், நாம் இருக்க?’ என்று திவ்ய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று.
நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.-கை மேலே இலக்கைப் பெறாதார்க்கு (மாத ஜீவனமான பணமும், இலட்சியமும்)நாடோறும் படி (அரிசிப் படியும், திருமேனியும்,)விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை க்ஷணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ
கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?
மணி நீல வளர் ஒளியான் –மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,-சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.-கவராத வரி வளையால் குறை இலமே –
அவ் வடிவை யுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக் கொள்ளாத
இவ் வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.-
—————-
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-
அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது இவளை யிட்டே அன்றோ?
இவளை-1-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இட்டும் –-இவளை-2-பராங்குச நாயகிக்காக -கனை கழல் காண்பது என்று கொலோ – இவள் காதல் வளர்க்க -என்றுமாம்-
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப் பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும்-உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒரு காலே பெற வேண்டும்,’ என்கிறாள் என்றபடி.
இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.
சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப் பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன்
வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே
புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது;
இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;
அவ்விருவர் விடாயும் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே,
இரண்டும் ஒருகாலே பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.
ஒரு கொசுகுத் திரள் இருந்தது என்னா, திருப்பாற் கடலில் ஒரு மூலை சுவறாதே அன்றோ?
அப்படியே, இவர்கள் ஏத்தா நின்றால் ஏத்தின இடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சும்படியான புகழையுடையவனாதலின், ‘விரி புகழான்’ என்கிறது-
கவராத மேகலையால் குறை இலமே –அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என் செய்ய?
அன்றிக்கே, ‘உடை மாறாத பரிவட்டங்கொண்டு காரியம் என்?’ என்னுதல்.-உடை மாறாத-மாறாடி உடாத –-அவன் பரியட்டம் இவளுக்கு -போகத்தில் தட்டு மாறும் சீலத்தை ஆசைப்படுகிறாள்
அன்றிக்கே, ‘பாதுகாப்பவனாய்த் தான் வந்து புகழ் படைத்துப் போருகிறவன்,
இத் தலையைப் பாதுகாப்பதனால் வரும் புகழ் வேண்டா;
அது தவிர்ந்தால் வரும் பழி வர அமையும்,’ என்று இருந்தானாகில்,
நான் எனக்குப் பழியாம்படி பரிவட்டம் பேணி இருக்கவோ?’ என்னுதல்.
இனி, வரி வளையால் குறையிலமே –வாயாடி–பெரு முழக்கும் -வாயில் ஆடுகிறவர் -வாய்க்கரைப் பற்றை அடுத் தூணாக வுடையவன்.-எதிரிகள் முடுகினால் இவன் தான் வாய்க் கரையிலே இருந்து செய்யும் ஆர்ப் பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன்.
அந்தப் புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய் புகு சோற்றைப் பறித்து ஜீவியா நின்றான்!’ என்று முறைப்பட்டால்,அவன் வாய் விடாச் சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது?
அல்லாத ஆழ்வார்கள் கூரியரே யாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷி யுடையார் இலரே அன்றோ?
மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் –சூஷ்ம புத்தி – கூரிய அறிவினர்;-தீக்ஷணர்கள். தடியர் – கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
சப்பரை. சுஷி – ஞானம், துவாரம்.லஜ்ஜையுமாம்-ஓங்கார வடிவம் பவ்யம் வளைந்து சங்கத்தாழ்வான் மட்டும் –
மரங்கள் போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரி அழலம் புக ஊதிக் கொளுத்தினபடி.
‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ -அவன் மாறாடாத பரிவட்டத்தால் என்ன கார்யம் உண்டு –
ரக்ஷணத்தில் குறைந்த அம்சம் அவனுக்கு அவத்யம்- தன் உடைமை தனக்காய் இருக்கிறது இவளுக்கு அவத்யம் – –
———-
மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-
மேகலையால் குறை இல்லா மகள் –-உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும் போலே காண்’ என்று அருளிச் செய்வராம் வங்கி புரத்து நம்பி.
புயம் துணித்து –இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்து விட்டான்.
தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும்,
உஷை தந்தை அற்றவள் ஆக வொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையை மாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது-
வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் போகத்தில் பொருந்திற்று.-துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் – இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து, உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக் கொண்டு யோக நித்திரை செய்யா நிற்பான்
கவராத உடம்பினால் குறை இலம் –இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க,-நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது.-அவனுக்கு உறுப்பாகவே அன்றோ இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?-அவன் பக்தாநாம் என்று இருக்குமா போலே இவளும் அவனது என்று இறே இருப்பது –
ஆக,-மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’ என்ற அடை மொழிகளால்,-‘ஒப்பனை யழகாலும், ஆத்ம குணத்தாலும், பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.
————
உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-
முதற்பாசுரத்தில் சொன்ன சீல குணத்தையும் விரோதிகளை அழித்தலையும் சொல்லி,
அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற் பாசுரத்தில் தொடங்கியதற்குச் சேர முடிக்கிறாள்.-உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல்-துணி பலவாத் துணித்து’ என்றதனால்,
நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச் சொல்லுகிறது.
தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால்,-கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.
இதற்கு முன்னர் எல்லாம் சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது?-அவை தாம் அழியக் கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ?
அதற்காக நித்யமான ஆத்ம வஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப் பாசுரத்தால்.
இதனை வேண்டா என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப் பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய் இருக்கும்
பக்தி வளர்ந்து -ஸ்வாபதேசம் – ஆதலால், அதனைப் பற்ற’ என்க.
இனித்தான், அவனுடைய நித்ய இச்சையாலே அன்றோ இவ் வாத்மாவினுடைய
நித்யமாய் இருக்குந் தன்மையும் உளது?-அவனுக்கு இச்சை இல்லாத-விரும்பாத போது- பின்னை இவ் வாத்தமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.-
—————-
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப் போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றை யெல்லாம் தன் நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட் கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.
வைகுந்தம் நண்ணுவரே –ஓர் உடம்பாய், ‘இது தானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, அந்த முத்தன் பல சரீரங்களை மேற் கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற் கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது,-பல படிகளாலும் அடிமை செய்யப் பெறுவர்.-இங்கே இருந்து அவன் விரும்பாதவை வேண்டா வென்று க்லேசப்படாதே அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி அனுபவிக்கலாம் தேசத்தை பெறுவர்கள்- என்றபடி.
அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?
இவர் திருமேனியை நித்ய முக்தர் திருமேனி போலே விரும்ப –
அவன் விரும்பின படி- சரீரம்- என்று அறியாமல் வேண்டாம் என்கிறார் –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply