ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
செங்கயல் பாய் வயல் திருவரங்கா-நாரங்கள் வாழ -அது தாயார் பாசுரம்–இங்கும் பொரு நீர் திருவரங்கா –-சங்குகளை ரஷிக்கும் காவேரி இருக்க -நீர் ரஷியாது இருக்கலாமோ-இது போல் முன்பு யாருக்குமே துன்பம் கொடுக்காமல்-கஜேந்திரன் திரௌபதி ப்ரஹ்லாதனன் போல்வார் அளவிலே விரைந்து வந்து ரஷித்தாய்-திருத்துழாய் நலிய நாம் இழப்போம்-நடுவு பிராப்தியே இல்லாத வாடையும் வந்து நலிய வேண்டுமோ-7-1-இந்திரியங்கள் நலிய -பெண் துன்பப்பட பட -தாயார் கேட்டது 7-2-இங்கு 27 -மகிழ்ந்து -இப்பொழுது 28-வியசனம்-நடுவிலே நடந்ததை-ஆச்சார்யர் வியாக்யானம் கொண்டு அறிய வேண்டும்–
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து , நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலைக் கட்டிற்று.–சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று-தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால் ,அவன் பரிகரமும் அப்படியே நிற்கும்-திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடை காற்று குளிர்ந்து-அது தான் இப் பொழுது சுடத் தொடங்கிற்று-சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே-திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அநந்தரத்திலே உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-
இப்படி பாவநா ஸித்தமான பகவத் அங்கீ காரமும் பதார்த்தாந்தர அநு கூல்யமும் அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –-அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது-தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது-இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே-அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்-அவ்வளவு அல்ல இறே இது ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய் -ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது-ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை-ஆக ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே-அழுவது தொழுவது விழுவது எழுவது அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்-ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை-இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி – துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
(இப்பாசுரம்-வேடு பறி உத்சவம் – திருவாலியில் சொல்லி பின்பே வாடினேன் வாடி தொடக்கம் ஆகும் )
ஐக்யமாக அருளிச் செய்தது-சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே-பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் —இதில் சேதம் (விரோதம்)இல்லை-இது செய்யலாம்–திருத் துழாய்க்கும் தனக்கும் பாத்ய பாதக-சம்பந்தம் உண்டாகையாலே ,-திருத் துழாய் அங்கு உற்ற அசாதாரண பரிகரம் ஆகையாலும்–தனக்கு திருவடி களிலே சம்பந்தம் உண்டு ஆகையாலும்-பாத்ய பாதக பாவ சம்பந்தம் தனக்கு பாதகமே ஆகிலும்-திருத் துழாயோடு ஒரு சம்பந்தம் உண்டாக அமையும் போலே காணும்–ராஜாக்கள் முனிந்தால் அவன் பரிகரமும் எதிரி யாம் போலே
சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே- அவன் உடைய அசாதாரண திருத் துழாயும் நலிகிறது
(அந்தப்புரத்தில் உள்ளாரைத் தண்டிக்க அசாதாரண பரிகரம் வேண்டுமே )
நடுவே-பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றியிலே இருக்க நலிகிறது என்-விபூதி சாமான்யத்தாலே நலிகிறது அத்தனை நாங்கள் குடி மக்கள் அல்லோம் (அந்தப்புரம் சேர்ந்தவர்கள் அன்றோ )நடுவே-
ஸ்வரூப பிரயுக்தம் அன்று —ஔபாதிகம் என்றுமாம் (ஆகந்துகம் -வந்தேறி என்றபடி )
வாடையைச் சொல்லுகையாலே–பூதங்களில் பிரதானத்தை எடுத்து , பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று-பிரகிருதி பிரவாஹத்தாலே நித்தியமாய் இருக்க ,-இத்தை உபாதி என்னும் படி எங்கனே என்னில்-அந்தவத்தாகையாலே-ஆதி மத்தென்று கொள்ளுகிறோம்-முகத்தில் அழுக்கை கழுவினால் அவ் வழுக்கு போனதை கண்டு வந்தேறி என்று கொள்ளலாகா நின்றது அழுக்கு இந்த நாள் தொடங்கி பற்றிற்று என்று அறிய வேண்டுவதில்லை என்று-பிரகிருதி என்பது ஒரு நாள் முடியுமே–அந்தவத்து என்றாலே ஆதிமத்தாக இருக்க வேண்டுமே –
வண்ணம் துழாவி –வருகிற போதே கண்ணால் கண்டாரை விழ விட்டு கொண்டு வாரா நின்றது-
கலந்து பெற்ற-நிறத்தை அழித்து கொண்டு வாரா நின்றது–ஓர் வாடை-அத்வதீயன் –தனி வீரன் என்றுமாம்–உலாவும் –தனக்கு எதிரி இல்லாமையால் மத முதிதமான கஜம் பாகனை விழ விட்டு உலாவுமா போலே-வாரா நிற்கும் நிராஸ்ரய்மாய் நில்லாது என்று இந்நிறம் நிற்கும் ஆஸ்ரயத்தை கணிசித்து உலாவா நின்றது- அசம்பாதமாக உலாவா நின்றது-ஒளியைத் தான் கவர வந்தது
ஒளிக்கு ஆஸ்ரயமான இவள் திருமேனியையும் அழிக்கவே உலவா நின்றது )
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார் பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும் இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –தலைவி ஏங்குகிற பாசுரம் தான் இது -தாயார் பாசுரம் இல்லை இங்கு –
வள்வாய் இத்யாதி —
ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து இவளை ஹிம்சிக்க வேணும் என்ன- புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு , இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தைச் சொல்லி நாம் நசிவது என்று அருளிச் செய்தார்–வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,
அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால் சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-வளைத்த வாய் அலகை உடைத்தான புள்ளானது , சங்கை ஹிம்சியாத படி தன்னுடைய நீர் திரை ஆகிய கையாலே எதிரியோடு பொருது சங்கை ரஷிக்கும் படியான ஊரிலே இருக்கிறவனே-பொரு நீர்-புள்ளானது ஆமிஷித்தை கணிசித்து நீர் கரையிலே இருக்க சங்கானது நம்மை ஹிம்சிக்க போகிறது என்று அறியாது என்னை நீர் நோக்க வேணும் என்று சொல்லாது இருக்க தன் பக்கலிலே வர்த்திக்கும் இவற்றுக்காக அவற்றின் எதிரியான புள்ளின் முகத்திலே தன் திரை ஆகிய கையாலே யுத்தம் பண்ணி உள்ளே போராய் என்று கையை பிடித்து கொண்டு போகா நின்றது –
இத்தால் செய்கிறது –
அசேதனமான நீரானது தன் பக்கலிலே வர்திக்கிறவற்றை இப்படியே நோக்கா நின்றால் பரம சேதனரான தேவரீருக்கு இவள் திறத்து என் செய்ய வேண்டா என்கிறது-பவத் விஷய வாஸிந என்பதையே கொண்டு சராசரங்களை நல்பாலுக்கு உய்த்தினாயே -சுத்த சத்வ மயமான ஆத்மாவை
ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது-திரு அரங்கா அருளாய் —அருளாய் என்ற பொழுது அருளக் கண்டிலர்–இப்படி அருளாது ஒழிவது என் என்னில் ,-
ஈஸ்வரன்-1-கரண களேபராதிகள் நமக்குத் தந்தோம் ஆகில்-2-பக்த்யாதி உபாயங்களை காட்டினோமாகில்-3-இதுக்கு அடியான பிரமாணங்களை காட்டினோம் ஆகில் அவற்றை அனுஷ்டித்து நம்மை வந்து கிட்டுகிறீர் என்று ஆறி இருக்க —சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியான நீ இவற்றை எல்லாம் இங்கனே பண்ணினாய் அத்தனை அல்லது வேறு பட பண்ணிற்று இல்லையே நான் உண்டாய் இருக்க கிட்டும் படி என் என்கிறார்-கூடவே பாரதந்தர்யத்தையும் காட்டி அருளினாய் அன்றோ-அருளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்று அறிவிக்க வேணுமே-நான் உண்டாய் இருக்கும் படி கிட்டும் படி -அடைய காட்டும்படி -உபாயாந்தரங்கள் பல நீ காட்டிப் படுப்பாயோ -பகவத் விஷயத்தில் இதனை அவகாஹரான இவர் இத்தனை அஞ்சுவான் என் என்னில் பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானம் ஆகையாலே த்யாஜ்ய பூர்வமாக பிராப்யத்தை காட்டிக் கொடு நின்றது பிராப்யத்தில் ருசியும் மிகா நின்றது ருசி அனுகுணமாக பிராப்தி அளவும் செல்லாமையாலே அதுக்கு அடியான விரோதி தர்சனத்தை பண்ணி அஞ்சுகிறார்–சம்சாரத்தை பார்த்தால் பயப்பட வேணும்.. சர்வேஸ்வரனை பார்த்தால் பயம் கெட வேணும் -அவனைப் பார்த்துப் பயம் கெட்டிலன் ஆகில் பகவத் பிரபாவம் அறிந்திலனாம்–சம்சாரம் பார்த்துப் பயப்படிலன் ஆகில் சம்ஸார ஸ்வாபம் அறிந்திலனாம் —ஞான கார்யம் ஆவது ஆகார த்ரயம் உண்டாகை–அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யாத்வம் அநந்ய போக்யத்வம் -சம்சாரம்-மித்யை காண் என்னுதல்– ஔபாதிகம் காண் என்னுதல் ஜீவன் முக்தி காண் என்று சொல்லும் சூத்ரவாதிகளுக்கு அன்றோ இத்தை- நினைத்தால் அஞ்சாது இருக்கல் ஆவது
(புத்த பாஸ்கர சங்கர )பகவத் பிரபாவமும் அறிந்து , சம்ஸார ஸ்வபாவத்தையும் அறிந்து ,
சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனைப் பெற்றால் அன்றோ சர்வேஸ்வரனுக்கு மாஸூச என்னல் ஆவது — இப்படி மாஸூச என்றால் அன்றோ இவனுக்கு ஸ்திதோஸ்மி என்னாலாவது–சித்த வேண்டா சிந்திப்பே அமையும் உபாயாந்தரங்களில் போகாமல் நிலை பெற்று நில்லுங்கோள் பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் ஸ்திதோஸ்மி நிலை பெற்று இருங்கோள்
திரு அரங்கா –நீ இங்கு வந்து கிடக்கிறது
1-உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ —
2-போக பூமி தேடியோ —
3-ஒரு குறைவாளர் இல்லையாமையோ —
4-ருசி உடையார் இல்லாமையோ —நீ அருளாது ஒழிகிறது என்
அருளாய்–மதி நலம் அருளினன் என்றால் அதன் பயனான-துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ-அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அநாதியோ —இப்போது உண்டானது அத்தனையோ —அருளாத நீர் திரு நாமம் இப்போது அன்றோ பெறுகிறீர் –உளவோ பண்டும் இன்னன்ன – ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ —1-திரௌபதிக்கு –2-கஜேந்த்ரனுக்கு–3-பிரகலாதனுக்கு-4-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு–5-காகத்துக்கு –
கூர்மையான வாயின் நுனியால் தன்னிடம் உள்ள சங்குகளை பறவைகள் கொத்தாத படி அலை மோதும் காவேரி –நாரமே தன்னை அண்டினாரை ரஷிக்க நாராயணன் நீ கை விடலாமா-கீழே தோற்றின சம்ஸ்லேஷம் -விஸ்லேஷத்துடன் -முடிய திருத் துழாயும் வாடையும் சேர்ந்து நலிய-ஓர் வாடை –துணை இல்லாமல் தானே நலிய வல்ல அத்விதீயமான வாடை –அவனைச் சேராத நிலையிலும் அவன் சம்பந்தம் கொண்டவை உடைய இனிமையும் பிராகிருத பதார்த்தங்களின் தண்மையையும்-சொல்லுவது உள்ளுறை பொருள்–தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-அநந்யார்ஹ சேஷத்வத்தை கவர்ந்து கொள்ளட்டும் அதனை இந்த போக்யதைக்கு நாம் இழப்போமாக -அது வன்றி –நடுவே-வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும்-உன் கட்டளையை அனுசரித்து நடக்கக் கடவதான லௌகிக பதார்த்தம் எம் உருவத்தை மாற்றலுற்றது-வாள்வாய அலகால்-புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா —வஞ்சனை உள்ள பிரகிருதி ஆத்மாவை
ஊழ் வினை மூலம் வருத்தாத படி தடுத்து ரஷிக்கும் ஸ்ரீ ரெங்கா–அருளாய் –அது போலே என்னிடத்துக்கும் அருள் புரியாய்—எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன —
மனத்தால் ஆராயும் இடத்து -துன்புற்ற நிலையில் இப்படி இரங்காத இடங்கள் முன்பு இல்லையே –
பாவியேனுக்கே இங்கனம் ஆயிற்றே –
தண் அம் துழாய் வளை கொள்வது-அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும் அழகும் யுடைத்தான திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்-நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் – இதில் ஒரு துவக்கற்று-பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம் உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது–வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா-வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே–அருளாய்-நீ அருளக் காண்கிறிலேன்–எண்ணம் துழாவும் இடத்து–
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்-உளவோ பண்டும் இன்னன்னவே –இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று இரங்கி உரைத்தார் யாயிற்று
இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய் தர்ச நீயரான பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்-ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்-வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா-கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே என்கையை ஸூ சிப்பிக்கிறது–அருளாய்-என்று-ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற நீ இரங்கக் காண்கிறிலோம் –எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும் இரங்காது இருந்த விஷயங்கள் முற் காலத்திலும் யுளவோ-இல்லை என்றபடி–ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-திரௌபதி-ஸ்ரீ கஜேந்திரன் தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே-இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு-ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்–இதுவான பின்பு-பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய் அண்ணியனுமாய் இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்-ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று இருக்குமது இல்லை இறே நீருக்கு–திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ-இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ-எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்-மயர்வற மதிநலம் அருளின பின்பு தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே-அப்படியேயோ அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது–அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது என் வளையைக் கொள்வது பிராப்தம்-நாம் இழப்போம் உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்-நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் – உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு எடுப்பதாகா உலவா நின்றது –வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா– வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே-அருளாய்-அருளக் காண்கிறிலேன்–எண்ணம் துழாவும் இடத்து-நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்-உளவோ பண்டும் இன்னன்னவே – இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –
தாத்பர்யம்
கீழ் பிரசாதம்-மானஸ மாத்திரம் பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல் -அவசன்னராய்
விபூதி நலிய திருத்துழாய் நலியட்டும் வழிப் போக்கான வாயுவும் கூட நிறத்தையும் கொண்டு என்னையும் கொள்ள வேண்டுமோ-மத்ஸ்யாதிகளை கொக்கின் வாயில் அகப்படாமல் காக்கும் திருக் காவேரி பாயும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்து அருளும் நீர் அருளாமல் உபேக்ஷிப்பது எதனால்
உன்னைச் சேர்ந்த நீர் ரக்ஷிப்பதிலேயே தீஷிதனாய் இருக்க ஆபத் ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வபாவமாக இருக்கும் தேவரீர் இப்போது எனக்காக கொண்ட நவநீத விரதம் எதுக்கு
மித்ர பாவேன விரதம் கொண்ட நீர் -இப்பொழுது நவீன விரதமாய் கொண்டுள்ளீரே –
7-2-கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-ப்ரவேஸம்-
‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்,
‘நம:’ என்ற சொல்லின் பொருள் பல வகையாலும்,
‘தொண்டர் தொண்டர் தொண்டன் தொண்டர் சடகோபன்’ என்று
ததீய சேஷத்துவ பரியந்தமாக உள்ளபடி அநுசந்தித்தாராயற்றது.
‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழியில்,
பெரியபிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கமுடையான்
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்;
இரண்டு சங்கதி
என் திருமகள் சேர் மார்பன் -ஸ்ரீ மத் பதார்த்தர்த்தம் ஸூசகம்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -6-10 -பிரணவம் அர்த்தம்
7-1- விரோதி நிவர்த்தகம் -நமஸ்
7-2- நாராயண அர்த்தம்
அன்றிக்கே
6-10- பூர்வ வாக்கியம் அர்த்தம்
7-1- உத்தர வாக்கியம் -நமஸ்
7-2- ஸ்ரீ மத்நாராயண
அக்னி ஹோத்ரம் பண்ண கோதுமை சமைக்க -பின்பு சொல்லினாலும் அர்த்த க்ரமம் வலியது
ஆகவே முன்பு சமைத்து அக்னி ஹோத்ரம் செய்ய வேண்டுமே -அதே போல்
அர்த்தம் பலம் -விரோதி நிவர்த்தகம் பூர்வகமாக கைங்கர்யம் சித்திக்க வேண்டுகையால் –
நமஸ் -ததீய சேஷத்வம் -தொண்டர் தொண்டர் -சடகோபன் சாதித்தார் -என்பதால்
உத்தர வாக்கியம் நமஸ் சொல்லாதே
அதனால் திரு மந்த்ர நமஸ் மத்திய பதார்த்தம்
சதுர்த்யர்த்தம் கைங்கர்யம் -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
பிராவண்யம்-இதிலே சொல்லுகையாலே திருத் தாயார் பாசுரம் –
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே தன் பக்கலினின்றும்
நம்மை அகற்றப் பார்த்தானே அன்றோ?’ என்று கூப்பிட்டார் ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்.
பலத்தோடே கூடியுள்ளதாயும், கால தாமதம் இன்றிப் பலிக்கக் கூடியதாயும் இருக்கிற சாதனத்தைப் பற்றின பின்பும்
அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க் கொண்டு கூப்பிடுமத்தனை அன்றோ?
‘இப்படிக் கண்ணழிவற்றது பின்னையும் பலியாது ஒழிவான் என்?’ என்னில், அது பலியா நிற்க,
கிரமப் பிராப்தி பொறுக்கா மாட்டாமல் படுகிறார்;
ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ் வருகான இவருடைய மிருதுத் தன்மையின் ஸ்வரூபம் இருக்கிறபடி.
பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்க மாட்டார்,
ருசி அளவு இல்லாமையாலே‘தத் தஸ்ய ஸத்ரு ஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.. 4–
சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து,
எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ?
பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்;
பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்திய ஸூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்;
பிரிவில் நோவு படுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.
பட்டர், இத்திருவாய்மொழி அருளிச் செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே
அவருடைய பாவ விருத்தியும் -உள்ளக் கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று
திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பார்.
அவனும்,இவர் நமக்கே பரம் என்று அறிவித்தாராகில்,
நாமும் இவர் காரியம் செய்வதாக அற்ற பின்பு செய்து முடித்ததேயாமன்றோ?
இவர் அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் இங்கே இருந்தே குறை அற அனுபவியா நின்றாரகில்,
‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் கொள்ளுகின்ற ஐயமும் -அதிசங்கையும் -போக்குகிறோம்;
நான்கு நாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் காரியம் என்?’ என்று இருந்தான்.
‘பிற்பாடு பொறுக்க மாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில்,
குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும்
வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர் தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்;
இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’என்றிருந்தான்.
இவர் ஒரு முகூர்த்த காலம் இருப்பதானது,
தன்னாலும் திருத்த ஒண்ணாத சம்சாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதற்காக வைத்தான் அவன்;
இவர், ‘நம்படி அறிந்தானாகில், தனக்குச் சத்தியில் குறை இல்லையாகில்,
இது பொருந்தாத நம்மை இட்டுக் காரியம் கொள்ள வேணுமோ?
இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டு என்?’ என்றிருந்தார்.
‘இவ்விருப்பில் பொருந்துவார்’என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
அவனும், ‘அது பொருந்தாதாவரைக் கொண்டே காரியம் கொள்ள வேணும்’ என்றே அன்றே இருக்கிறது?
தேசிகரைக் கொண்டு காரியம் கொள்ள வேணுமே.
சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யம் அறிந்தவர்கள் தேசிகர் –
பொருந்தி வாழ்வார் உபதேசம் செய்தால் தனக்கு என்று ஒன்றும் பிறர்க்கு ஒன்றும் சொல்வதால் விச்வாஸம் பிறக்காதே –
செய்த சரணாகதி சடக்கெனப் பலியாதொழிந்தது, பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்த மாத்திரம் அன்றோ?
இனித்தான் அவனும்,-பெருமாளும் — ஸ்ரீ பரதாழ்வான் மாதுல குலத்தினின்றும் வந்து தாயாரை வணங்க,
அவள், ‘ராஜந்’ என்ற வெம்மை பொறுக்க மாட்டாமல் பெருமாள் திருவடிகளிலே
தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு,‘தேவரீர் மீண்டருள வேணும்’ என்ன,
பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி,
‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவை யல்லை:
உன்னை ஸ்வதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே,-கைகேயி வஸிஷ்டர் போல்வார் முன்னே –
உன் ஸ்வரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே,
இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் பொகட்டுப் போக வல்லான் ஒரு ஸ்வதந்திரன் அல்லனோ?
இவர் அபேக்ஷித்தது மோக்ஷம் -அவன் கொடுத்தது திருவேங்கடத்தான் திருவடிகளில் கைங்கர்யம் –
ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ?
முற்றறிவினனான சர்வேஸ்வரன் இவர்க்கு ஒடுகிற தசையை அறிந்து, தன்னுடைய வரம்பில் ஆற்றலைக் கொண்டு
இவர்க்கு ஒரு பரிகாரம் செய்ய ஒண்ணாதபடி இவருடைய நிலை விசேடம் இருக்கிறபடி.
இவர் தாமும்
‘விண்ணுளார் பெருமானேயோ’ என்றும்
‘முன் பரவை கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியோ!’(அஜிதன் அவதாரம்) என்றும்,
‘பல முதல் படைத்தாய்!’ என்றும் சொல்லுகிறபடியே,
பரத்துவம், அவதாரம், உலகத்திற்குக் காரணமாய் இருக்குந் தன்மை
இவற்றைச் சொல்லியன்றோ கூப்பிட்டது?
அவற்றுள், பரத்துவம் லோகாந்தரம்-வேறு உலகம் ஆகையாலே, ‘கிட்டப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
அவதாரம் காலாந்தரம் -வேறு காலமாகையாலே, ‘அக்காலத்தில் உதவப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை, தான் அறிந்து செய்யுமது ஆகையாலே,
அசித் அவிசேஷதான் போல் இருந்தோம் -‘நம்மால் செய்யாலாவது இல்லை’ என்று கொண்டு ஆறியிருக்கலாம்;
அந்த இழவுகள் எல்லாம் தீரும்படி எப்பொழுதும் அண்மையிலிருந்து கொண்டு கோயிலிலே –
மாத்ருஸ -ரக்ஷணம் -ஜனனி –பரம பதம் ஷீராப்தி மறந்து ஆசைப்பட்டு –
நமக்கு என்று ரதிங்க -ஹரி இரண்டு திருமணத் தூண்கள் -நடுவில்
திருக்கண் வளர்ந்தருளகிற பெரிய பெருமாள் திருவடிகளிலே விழுந்து தாம் விரும்பியவை பெறாவிட்டால் தரிக்க ஒண்ணாதே அன்றோ?
விஷயம் அண்மையில் இல்லாமலிருத்தல்,
ஞானத்திலே கொத்தை உண்டாதல் செய்யிலன்றோ? தரித்திருக்கலாவது?
நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல்,
மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கின்றார் அன்றோ?
இப்படி இருக்கச் செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய்
ஒரு பிராட்டி நிலையை அடைந்தாராய் அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற நிலையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாமல்,
திருத் தாயார் கூப்பிடும் படியாய் விழுந்தது.
கலவியிலும் பிரிவிலும் பிறக்கும் லாப அலாபங்களாலே தாம் பிராட்டிமார் நிலையை யுடையராகிறார்;
‘திருத் தாயாரான நிலை விளைந்தபடி எங்ஙனே?
விளைந்ததாகில் இவருடைய காதலுக்குக் குறைவு வாரோதோ?’ என்ன,
கிண்ணகம் (வெள்ளம் )பெருகி ஓடா நின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகா நிற்கச் செய்தேயும்
கடலிற்புகும் பாகம், குறையாமல் போய்ப் புகுமாறு போலே ஆயிற்று,
இவருடைய ‘அதனிற்பெரிய என் அவா’ என்கிற பேரவாக் குறையாது இருக்கிறபடி.
ஆகையாலே, இவரக்கு எல்லார் பேச்சும் பேசக் குறை இல்லை.
‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு,’ தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.’
‘பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல் கடல் இடங்கொண்ட
கடலை பஹூமுகமாக அவகாஹிக்கும்’ என்றும் ஸ்ரீ ஸூக்திகள் இங்கு அநுசந்தேயம். (ஆசார்ய ஹ்ருதயம், துவிதிய பிரகரணம்,சூ.32,33,45.)
இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க;
பெருமாளைக் காட்டிலும் இளைய பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே,
பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே,
திருத் தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து,
எந்த நிலையிலும் அவனையே பரிகாரம் கேட்டு தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே,
பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக் கொண்டிருந்து,
‘இவள் அழுவது, தொழுவது. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது,
அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது;
இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது,
எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?
ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாதிருக்கிறது என்?’ என்ன,
‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள,அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திருவுள்ளமாக,
‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள்’ என்று விண்ணப்பம் செய்ய,
‘எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அகளங்க பிரஹ்ம ராயர் அடைய வளைந்தான் செய்யா நிற்கச் செய்தே மதிள் போக்குகைக்காக
இளையாழ்வான் அகத்தை வாங்கப் புக,
பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்;
இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்;
ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது;
இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்;
உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச் செய்தார்.
இத் திருத் தாயாரும் எல்லாப் பாரங்களையும் அவன் தலையிலே பொகட்டுப் பெண் பிள்ளையைத் திருமணத் தூணுக்குள்ளே
பொகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு,
ஒரு கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே
எல்லாரும் சென்று பற்றலாம்படி இருக்கிறபடியை நினைத்து,
தன் பெண் பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.
வேர் பற்று -திருவரங்கம் -அடியார்கள் வாழ -அனைத்து உலகும் வாழ –மணவாள மா முனி நூறாண்டு வாழ வேண்டும் –
பத்துப் பத்து கல்யாண குணங்களும் -பரத்வம் காரணத்வம் –ஆர்த்தி ஹரத்வம் -இவை பத்தையும்
கங்குலும் பகலில் வைத்து அருளுகிறார்
ஸ்ரீ ராம ராம ராமேதி -போலே –
32 அர்ச்சைகளுக்கு-திவ்ய தேசங்களுக்கு பல்லாண்டு -அற்ற பற்றர் சுற்றி வாழும் அரங்கனூர்
தென் அரங்கம் –இருப்பாக பெற்றோம் -சடகோபர் திருவாய் மொழி உணவாக கொண்டு மதுரகவி நிலையைப் பெறுவோம்
தெற்கு திக்கு நோக்கி கை கூப்புவோம் நம்மாழ்வார் நினைத்து -நிகம பாசுரங்கள் தோறும் –
6-10-ஆணாக ஆனந்தம் – தொடங்கி –அடுத்து -7-1-ஆணாக துக்கம் –7-2–பெண்ணாக துக்கம்–7-3- பெண்ணாக ஆனந்தம் –
திருமங்கை ஆழ்வார் 2-7- இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -இவரும் 7-2- இங்கு
இரக்கம் உபாயம் / முக விலாசம் பிராப்தம்
இரண்டாம் திருவாய்மொழியில்-கீழே -விஷய இந்திரியாதிகளுடைய அதி பிரவ்ருத்தியை அனுசந்தித்து -ஆர்த்தராய்க் கூப்பிட்டவர் –
கன்னலே யமுதே -என்று கீழே அனுசந்தித்த போக்யத்தையாலே இந்த ஆர்த்தியோடே கூட அதி ப்ராவண்யமும் நடந்து –
ப்ராவண்ய அனுரூபமான அனுகூலம் பலியாமையாலே அது பிரதிபந்தக கார்யம் இ றே என்று அனுசந்தித்து
பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பிக்க வேண்டும் யோக்யதைக்கு ஈடான ப்ராப்ய பூதனுடைய
அநு பாவ்ய சிஹன யோகத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்தி விசேஷத்தையும்
ரக்ஷண பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
ஆஸ்ரித அபேக்ஷித கரத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுத பூர்த்தியையும்
சம் ரக்ஷண உபயுக்தமான சமுத்திர ஸாயித்வத்தையும்
திரு அவதார தசையில் அதி மானுஷ சேஷ்டிதத்தையும்
பிரணயித்வ அதிசயத்தையும்
ஈஸ்வர அபிமானிகளுக்கும் அந்தராத்மாவான ஈச்வரத்வ அதிசயத்தையும்
அனுசந்தித்து இப்படி ரக்ஷகனுமாய் போக்யனுமான அவன் பிரதிபந்தகத்தைப் போக்கி அனுபவிக்கிறீலன்-என்கிற ஆர்த்தி அதிசயத்தாலே
அரதிக்ருதமான அநேக வியாபாரங்களை பண்ணி அவசன்னராய் அர்ச்சாவதார ஸூலபமான பெரிய பெருமாளை நோக்கிப் பிறந்த
அபி நிவேச அதிசயத்தாலே அப்ரக்ரு திங்கரான பிரகாரத்தை அனுசந்தித்துப் பரிவரானவர்கள்
இவருடைய தசையை அவர்க்கு விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
நாயகரான பெரிய பெருமாளோடு விஸ்லிஷ்டையான நாயகியினுடைய ஆர்த்தி அதிசயத்தை அனுசந்தித்து ஆற்றாளாய்
நல் தாயானவள் தன் ஆற்றாமையின் மிகுதியால் அவரை புத்தியால் அபரோக்ஷித்து இரங்கி
யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது;
ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.-என்றும் சிறைக் கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவே காணும் இவள் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது.-முதல் நடை தொடங்கிக் காண வேணும்’ என்று கண்ண நீரை மாற்றப் பாரா நின்றாள்.-‘இது என்ன சாகஸந்தான்! இது, தன்னால் இயலும் என்று தொடங்கினாளோ.-கடல் கொண்ட கண்ணீர் அன்றோ?திருவிருத்தம், 18.–விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே -கண்ண நீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையா நின்றாள்.-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.- வலி இல்லாமையாலே தலைக் கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே, குறையும் அஞ்சலியாலே தலைக் கட்டா நின்றாள்
செங்கயல் –அவ்வூரில் வசிக்கிற திரியக்குகளின் தன்மை இவளுக்கு அரிதாவதே!
அவை தம் நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள்.-நாரத்தைப் பற்றினது களித்து வாழா நின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே?இவள் திறம் செய்யப் பார்த்தது என்?உம்முடைய ஊரில் இருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ, உம்மை ஆசைப்பட்ட இவள்?-விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’
—————-
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
என் செய்கின்றாய் –ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?-தாமரைக் கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.-நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமா போலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ? கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ?
இது பத்தியின் காரியமே யாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது. விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?
சரணம் அடைந்த பின்பு சம்பத்தும் ஆபத்தும் அவன் தலையில் -ரஷா பரம் அவன் ஏற்றுக் கொள்வான் –என் கொலோ முடிகின்றது இவட்கே – ‘இவள் அளவில் தர்மி லோபமேயோ பலிக்கப் புகுகிறது? நீர் பாதுகாக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ! இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது? இவள் இடை யாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்.
‘இவளுடைய நிலை என்னாய் விளையக் கடவது?’ என்னுதல்.
————
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-
வட்கு இலள் இறையும் –இதற்குச் சீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று.
நாணத்தைக் கொண்டே அன்றோ பெண்மையை அறிவது?
ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே!
மெய்யே நினைத்து,-மெய்யே சொல்லி,-மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய் -ப்ரக்ருதியாய் -விட்டதே!–மெய் -சாடு- திருமேனி -உண்மை –
‘உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று அவன் பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே அன்றோ?
வானமே நோக்கும் –மணி வண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன்,-ஸப்த ஸஹ-சஹஸ்ரநாமம் -(ஆர்த்த த்வனி கேட்டு வந்து தோன்றுவான் )
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.-அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,
அங்கே சரீர நாசம்-இவளுக்கு ஸ்வரூப நாசம்
உன்னைக் காணுமாறு அருளாய் –-‘உன்னைக் காண அரிது தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ? –-அருளாய் -உபாயம் –-காணுமாறு -பிராப்யம்
இவள் திறத்து என் செய்திட்டாயே--இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’ –முகத்தாலே-அம்மான் பொடி –
————
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா;-இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.-கை கூப்பும்- உணர்த்தியில் தொழுமவள் அல்லள்;-மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;-சாதன புத்தியில் தொழுமது இல்லை;-ஆற்றாமையாலே வருமது தவிர மாட்டாள்.-
இவள் திறத்து என் சிந்தித்தாயே -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து–முற்றறிவினனுக்கும், இவளுக்கு ஓடுகிற நிலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;-திருத் தாயார் தெளிவு இருக்கிறபடி.-அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?-இங்ஙனே மநோ ரதமாயே -சிந்தித்தலாயே போமித்தனையோ,-அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?
————–
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-
தேறும் –ஒரு காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இதுதானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிறதாயிற்று; மோஹம் செல்லா நிற்க, விரும்பினதைப் பெற்றாரைப் போலே தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்ச வேணுமே?
உய்ந்த பிள்ளை பாடும் போது,
‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச் செய்வராம்.
கை கூப்பும்--இது இவளுக்கு இயல்பு. மேலே ‘மயங்கும் கை கூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கை கூப்பும்’ என்றது:-அல்லாதவை சஞ்சாரியாய் -திரிதலாய்ச் செல்லா நிற்க, இது-கை கூப்பும்- ஒன்றும் நிலையாய்ச் செல்லா நிற்கும்; ஸ்வரூபத்தோடு சேர்ந்தது ஆகையாலே.-நித்ய அஞ்சலி புடா ‘எப்பொழுதும் கை கூப்பிக் கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவதன்றோ?
திருவரங்கத்துள்ளாய் என்னும்--‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.
திருவரங்கத்துள்ளாய் என்னும்-‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.-வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு, ‘ ஒரு முகமே, ஒரு முறுவலே, ஒரு வளையமே’ என்று துதிக்கின்றாள்-அன்றிக்கே, அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’–மயங்கின இவளுக்கு உதவலாகாதோ -ஆணுமாய் மிடுக்கனுமாய் ஆனவனுக்கோ உதவலாவது -அப்பருவத்தில் அபலைக்கு உதவலாகாதோ -பிறரால் வரும் நலிவோ பரிஹரிக்கல் ஆவது -உன்னால் வந்தது பரிஹரிக்கல் ஆகாதோ -இவளுக்கு உதவும் இடத்தில் கால நியதி வேண்டா -உன்னை அழிய மாற வேண்டா —ஆர் அமுதே ‑-இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து–இவளுக்கு கடல் கடைய வேணுமோ -கடல் கடைந்த வடிவைக் காட்ட அமையாதோ-ஒரு பிரணயிநியை லபிக்கைக்கு பண்டு கடல் கடைந்தவன் அல்லையோ.-தையலை மையல் செய்தானே ––இவள் திறத்து அருளாய் என்ற அடுத்த பாசுரத்துடன் அந்வயம்-
—————-
மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-
அத்வேஷம் -தொடங்கி -உபகார பரம்பரைகள் -பலவும் செய்து – வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை பொகட்டு போவது போலே கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின்,-‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.- சாராம்சம் மனசை அபகரித்து -பிராந்தி விளைவித்து இரண்டுக்கும் இரண்டு த்ருஷ்டாந்தங்கள்-மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’-செய்ய வாய்–இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று. தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்--புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும். அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.–வாய் இடம் வாசல்-திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
புன்சிரிப்போடு. திவ்ய ஆயுதங்களோடு, நித்திய விபூதியை யுடையனாயிருக்கிற இருப்போடு, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாக இருக்கிறபடி.-பகவானுடைய திருமேனியின் ஸ்பரிசத்தால் உண்டான உவகையாலே மலரந்த படங்களை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவரே! தனிப் படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக் கிடை கிடக்க?-இவள் திறத்து அருளாய் – படுக்கையில் சேர்த்தி பெறா விட்டால், உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழிய வேணுமோ?-இவள் திறத்து –பாடோடிக் -துக்கப்பட்டு -கிடக்கிற இவள் திறத்து.-அருளாய் –-அருள் கொள்வார் தேட்டமான நீர்,-அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக் கிடை கிடக்க விட்டு வைப்பதே!
நீர் அருளாதவர் அல்லீர்;-இவள் அது பெறா விடில் ஜீவிப்பாள் அல்லள்;-இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ?-இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை; இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்குக் காரணம்-‘மத்பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்’-
————-
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-
அறடியார்களை வாழ்விக்கையும் அடியார் அல்லாதாரை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீதமாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும்.பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ?-பால -முறை என்றும் இடம் என்றும் இரண்டு நிர்வாகங்கள் –இக் கோமளக் கொழுந்துக்குக் கைம் முதல் ஒன்றுமில்லாதார் பற்றினால் பாதுகாக்கக் கடவ நீர்மையை யுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் பட வேண்டுகிறது, என்னுடைய சம்பந்தம் என்று எண்ணுகிறாள்’ -உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ?
என் தீர்த்தனே என்னும் – –பாவனத்வமும்-ஸுலப்யமும் –-நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல்,
அன்றிக்கே,-நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.
கண்ணும் கண்ண நீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக் கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!
என்னுடையக் கோமளக் கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையை யுடைவள் பிரியப் பொறுக்குமோ?-தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து-பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச் செய்வர் சீயர்.-கொழுந்து –-கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.-இப் பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து,-பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்
———-
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
அழும் –மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,-‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ –அழும் –‘பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.-ஸ்னேகத்தை யுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.-தொழும் –‘புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.-வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.-உபாசகர் -அஞ்சலி பரமாம் முத்ரா வேதாந்தி அபராதர் –-தொழும்--பிரபன்னர்-யோக நிஷ்டன் –-ஆவி அனல வெவ்வுயிர்க்கும் – தொழுதவுடனே வரக் காணாமையாலே, ‘பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று, எரிக்க முடியாத ஆத்துமாவானது நெருப்பு மயமாம்படி ‘நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’
எங்ஙனே நோக்குகேன் என்னும் – தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளும்’ என்று புரிந்து பாரா நிற்கும்.
அன்றிக்கே,-வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினாற்போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து ‘முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே-பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் – அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே! இப்படிச் சிரமத்தைப் போக்கக்கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? -கோரமாதவம் செய்தனன் கொல் –-என் செய்கேன் –செய்ய வேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே,-வேறு உபாயங்களால் சாதித்துக் கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.
என் திருமகட்கே –இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றோ அவளது?-உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?-சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!என் திருமகட்கே-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –
—————–
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
என் திருமகள் சேர் மார்பனே என்னும் –-‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.-‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.-அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.-பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;-நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே-அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ –
மாதர் லஷ்மி -என்று வேண்டிக் கொண்டார்-
புராண ஸ்லோக அர்த்த உபன்யாச யுக்தமாக -புராணிகர்-புரோகிதர் -கட்டியம் -சேவிக்க -அருளிச் செயல் சந்தை -சேர்த்து-மூலம் கேட்க்கைக்காக இயல் -சப்தம் -தாம் அமுது செய்யா நிற்க -அவர் சொல்ல கேட்டு –-பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே-என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,-இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.-இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் –-ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி. அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே – தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே!
‘எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்திய வாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?தெளிகிலேன் – தென் திருவரங்கம் கோயில் கொண்டானே-அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பரியந்தமாக்கிக் கொண்டு நீ கிடந்தால்,
‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?-ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.-அது மாட்டுகின்றிலேன்.-இவள் தனக்கு முடிவு தெளிகிலேன் –-இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப் போமோ?-அவர்கள் எல்லார் படியையும் உடைய இவள் உம்மைப் பெற்றாளாம் விரகு அறிகிறி லேன் –
—————
முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-
மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –-இதனை
‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று,
திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.-
வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள்.-(வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )
இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:
‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்-‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்;
‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று. வடிவுடை வானோர் தலைவனே என்னும்- பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு
வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:- புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல் மயர்வற மதிநலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.
மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே –
இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே –
என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே –
திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்
வண் திரு வரங்கனே!’ என்னும்;-ஏஷ சர்நிஸ்வ பூ தஸ்து -என்று என்னை தன் பேறாக அணைக்கைக்கு கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே என்னும் –
அடி யடையா தாள் போல் இவள் அணுகி-அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–ஜீவிப்பாரை போலே இருந்து முடிந்து கொடு நின்றாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்-
அங்கனம் ஆகில் மேல் பிரபந்தம் நடவாது என்று -சம்ச்லேஷிக்க பெறாளோ என்று தோற்றும் படி அவசன்னையான இவள் கிட்டி சம்ச்லேஷிக்கப் பெற்றாள் -காள மேக நிமாஸ்யமான பெரிய பெருமாள் திருவடிகளை என்று எம்பெருமானார் நிர்வஹித்து அருளினார்-
—————
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-
பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று;
‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக் கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’ என்று பிள்ளை அருளிச் செய்வர்.
இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே- இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர, நித்திய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தை யுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.
—-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply