ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
தூது போகா விட்டாலும்-கடகர் இல்லை என்றாலும் ப்ராப்யர் தானே-திருவடியாவது தலை மேல் வைக்கக் கூடாதோ-வேங்கடத்துப் பதியாக வாழும் மேகங்களே-திருமலைக்குப் போக ஒருப்பட்டு -போவான் போகின்ற போல் -இருந்தும் எனது கார்யம் செய்யாமல் இருப்பதே -என்று வெறுத்து அருளிச் செய்கிறார்-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1
நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று பரம பதத்தே தூது விட்டாள்-அது பர பக்தி பர ஞானம் பரம பக்தி யுக்தர் ஆனார்க்கு அல்லது புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-அவதாரங்களிலே தூது விடப் பார்த்தாள்– கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே- பிற்பாடர்க்கும் அனுபவிக்கலாம் படி ஸூலபமான திரு மலையிலே திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள்-தீர்த்தம் பிரசாதியாதே-பின்னானார் வணங்கும் சோதி அன்றோ அர்ச்சாவதாரம் -அதிலே தேங்கின மடுக்கள் போல் – திருமூழிக் களம் -தூது -எம் கானல் அகம் கழிவாய் -9-7–பறவைகளைத் தூது அங்கு ஆகாசம் -பறவைகள் இரண்டு சிறகுகள் ஞானம் அனுஷ்டானம் -பக்ஷிகளுக்கு இங்கு மேகம் -உதார ஸ்வபாவம் என்று இங்கு தூது –
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில் ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க நம்மாலே செய்யலாமோ என்று அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார் சில உதார ஸ்வ பாவரைக் கண்டு இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம் இசைவலம் -என்ற ஒரு பாடம்–இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே-இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் -இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்-அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது -திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி-இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-இசைகிறவன வில்லை-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்-அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே-குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்–ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் – துடர் அறு சுடர் அடி -போலே –
நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும் மறப்ப்பித்த ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும் வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்–திரு மலை நோக்கிப் போகும் மேகங்காள் !-என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்- சொல்லுகிறிலிகோள்–திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே
போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டிகோள் ஆகில் உங்கள் திரு அடிகளை என் தலையில் வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ? திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே எனது கார்யம் செய்யா விட்டாலும் தாஸ்யம் மாறாதே-புணர்த்த கையினாராய் எனக்கும் வணங்குமின்-மேகங்களை-அப்ரோக்ஷித்து – முன்னிலையாகவும் -சம்போதமாகவும் கொள்ளலாம்-படர்க்கையாகவும் கொள்ளலாம்
இசையிலம்-இசைவலம் -இசைவு அலம்-பூர்த்தி-இரண்டு பாட பேதங்கள் –திரு அடியை பிராட்டி –இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் – ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று அருளிச் செய்ய ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல போகா நின்றன
அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசை-அழகிய பொன்னாலும் பெரு விலையாலும் மாணிக்கங்களால்(பொன்னில் அழுத்தப்பட்ட மா மணிகள் என்றுமாம் )திக்குகள் உண்டான இருளை சுரமேற்று நிற்பதும் செய்து-(சுரமேற்று நிற்பதும் செய்து-குகைக்குள் போகச் சொல்லி விரட்டி விடுவது ) வலிதான தாளை உடைத்தாய் இருக்கும் திரு மலையிலே —சிமயம்-சிகரங்கள் என்றுமாம் —மலைச்சிகரங்கள் என்றும்-சிகரங்களின் நடுவில் என்றுமாம்-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ –மின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே –ராஜாக்களுக்கு எடுத்து விளக்கு பிடிக்குமா போலே-போவான் வழிக் கொண்ட
போக்கிலே உத்யோகித்த வழி கொண்ட மேகங்காள் இசைமின்கள் தூது என்றால் இசையுமோ?
என் தலை மேல்-அசைமின்கள் என்றால் அசையுமோ ?–(அந்த மேகங்கள் -படர்க்கை பரோக்ஷம் )
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே –
என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1- இவர்க்கும் பகவத் விஷயத்தில் யாரேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர் திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-
வானத்தில் பறந்து செல்லும் அன்னம் முதலியவற்றைப் பரமபத நாதனுக்குத் தூதாகவும்
மேகங்களை திருவேங்கடமுடையான் இடம் தூது விடுகிறாள்-கைம்மாறு கருதாமல் உதவும் மேகங்களை -தூது –அவையும் உடன் படாமையாலே – திருமலைக்குச் செல்லும் பாக்யம் உள்ள நீங்கள்
உங்கள் பாதத்தை என் தலை மேல் வைத்தாவது போகுமுன் –திரு மலை நோக்கி போகும் மேகங்காள் !-
என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-சொல்லுகிறிலி கோள்-
திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டி கோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ ?
திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?சிரசில் அவை கால் படும்படி பிரார்த்தித்து சரணம் செய்தால் பலிக்கும் என்று -விஸ்வஸித்து- யாரேனும் வழி நடந்து செல்வாராம் திவ்ய தேச யாத்திரை செல்கிறார் என்று இருப்பாரே ஆழ்வார்-வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் –
என் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் –
திரு மூழிக் களத்து-உறையும் கொங்கார் பூந்துழாய் முடி எம் குடகு கூத்தற்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ னுமாரோடு -போலே
தூது போவாரைத் திருவடி தன் தலை மேல் சொல்வது உண்டே–
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால் அனுமதி பண்ணக் காணகிறிலோம்–என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்-நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால் அது தான் செய்யக்கூடுமோ-அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து–ஸ்லாக்யமான பொன்னும் மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்–வன் தாட்சி மயம் மிசை-வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி–மின் மிளிரிய மின்னைப் ப்ரகாசிப்பவனாய் போவான் வழிக் கொண்ட போகைக்கு வழிப்பட்ட-மேகங்களே-உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை-போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று அன்வயம்–
இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்-இசையைக் கண்டிலோம்–என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்–
நம்முடைய அபேக்ஷை தோன்ற சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால் அனுமதி பண்ணக் கூடுமோ-அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் -திரு வேம்கடத்து ஸ்லாக்யமான ஸ்வரூபமும் மஹார்க்கமான குண ரத்னங்களும் ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்–வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே-அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய-வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10- அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய் உஜ்வலமான தீப்தியை யுடையரான(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் ) உதார ஸ்வா பாவமானவர்கள் (எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் ) என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்-திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று நான் கால் கட்டினால் அத்தைச் செய்கிறவன வில்லை-என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்-அது தவிர்ந்தால் திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள் அப்படி என் தலையிலே உங்கள் காலை நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும் பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே-என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்-
ஸ்வா பதேசம் –
சர்வ சக்தன் இடம் சென்ற நெஞ்சை மீட்க்கப் போமோ என்று கை விட திவ்ய தேச யாத்திரை செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்களை அவன் இடம் தம் குறை விண்ணப்பம் செய்ய – புருஷகாரமாக அவர்களை வரிக்க- அவர்கள் உடன்படாமல் இருக்க எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –என்கிறபடி அவர்கள் திருவடிகளை தம் தலை மேல் வைப்பதும் புருஷார்த்தம் ஆகும் -என்கிறார் –
தாத்பர்யம்–கீழ் அனுப்பின்ன அன்னங்களும் குருகுகளும் தனக்காக தூது செல்லாமல் உலாவி இருக்க
மேகங்களைக் கண்டு தூது விட்டு பிரார்திக்கிறாள்
ஓ மேகங்களே-நா நா விதமான பொன்னாலும் மாணிக்கங்களாலும் பரவும் ஒளியை சர்வ திக்குகளிலும் தீப்தி யுடைய திருமலைக்கு யாத்திரை செல்வதற்காகவே போகும் மேகங்களே
அக்ரூர யாத்திரை -திருவேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி மூன்றுமே நித்தியமாக அபி நிவேசம் கொள்ள வேண்டுமே-மின்னி முழங்கிப் புறப்படும் உங்களைத் தொழுதேன்-ஆண்டாளும் அசேதனம் காலில் விழுந்தால் போல் இவளும் விழுகிறாள்-கீழே சொன்னவை செய்யாமல் போனாலும்
இனி உங்கள் திருவடிகளை எனது சிரசில் அமர்த்தி அடியேனை கிருதார்த்தராக ஆக்க வேண்டும்
ஆறு கால்கள் -கமன சாதனம் சிறகுகள் தானே-ஆச்சார்யர் -பத்னி -புத்திரர் மூவர் -திருவடிகள் ஸ்பர்சமும் பூர்ணமாக கிடைக்க வேண்டுமே இதற்க்காகப் பிரார்த்திக்கிறாள்-இத்தையாவது பிரயோஜனம் ஆக்க வேண்டும் – என்கிறாள் –
9-7-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-ப்ரவேஸம்-
மேல் திருவாய் மொழியிலே அப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே-மிகவும் ப்ரீதியை அடைந்தவர்-
நல்வினைக் குறையாலே-அப்ரீதி இன்மையே தலையெடுத்து-அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதல்
ஆம்படி தனக்கு உண்டான தம்முடைய நிலையினை-அன்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி-அவன் வடிவு அழகில் ஈடுபட்டு-துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று-அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி-திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் நிலை அறியாது இருந்தான் அத்தனை –
அருள் உடையவன் ஆகையாலே-நம் நிலையை அறிவிக்க வரும்-என்று அவற்றை வினயத்தோடு
இரக்கிறாள்-ஒரு பிராட்டி பேச்சாலே தம் நிலையை-அருளிச் செய்கிறார் –
தம் பிழையும் -சிறந்த செல்வமும் -படைத்த பரப்பும் – தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா – தீஷா – சாரஸ்ய – ஸுந்தர்யங்களை
உணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை -156-
அஞ்சிறைய மட நாராய் -என்ற திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –என் பிழையே நினைந்து அருளி –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய பொறை உடைமையை அறிவிக்க வருவான் –என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-
வைகல் பூம் கழிவாய் -என்ற திரு வாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே-திரு வண் வண்டூரில் நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை-
தம் துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –என்று அது பற்றாசாக தூது விட்டாள் –
பொன்னுலகு ஆளீரோ-என்ற திரு வாய் மொழியிலே
திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு வலி இல்லாமையாலே போக மாட்டாதே
இருக்கிற பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -அடியார்களோடு-ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே-பற்றாசாக தூது விட்டாள் –
இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே-வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று-அவன் வடிவு அழகையும் குணங்களையும்
பற்றாசாக தூது விடுகிறாள் –
அங்க மாலி அருகில் -திரு மூழிக் களம் –எர்ணா குளம் -திருக் காட்கரைக்கு -கிழக்கே உள்ள திவ்ய தேசம் –
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -சூர்ணிகை -179
திரு மூழிக் களத்து விளக்கு -பின்னானார் வணங்கும் சோதி –
கல்லும் கனை கடலும் -திரு வேங்கடம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு பிரதி நிதி போலே
திரு மூழிக்களம் -அர்ச்சைக்கு தூது இதில் -பிரதி நிதி தானே இந்த திவ்ய தேசம்
அப்பன் -ஸ்ரீ ஸூக்தி நாதன்-ஸ்ரீ மதுரை வேணி நாச்சியார்– பாரத புழா நதி அருகில்
ஹரிதா மகா ரிஷி தவம் -பக்தி ஸூ த்ரங்களை பிரார்த்தித்து -ஸ்ரீ ஸூக்தி -திரு மொழி –
களத்து மேடு -பயிர் செழிக்கும் -மொழி மருவி மூழிக் களம்
லஷ்மணன் தபம் -பரத அபசாரம் போக்கிக் கொள்ள -இங்கே வந்து –லஷ்மண ஸ்வாமி என்றே இந்த பெருமாள் இன்றும் –
ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் -குண ஸ்மரணத்தாலே சிதிலரானவர் அந்த ஸைதில்யம்
பாஹ்ய அனுபவ பர்யந்தமான அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அனுபவ யோக்யமாம் படி திரு மூழிக் காலத்திலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய
அதிசயித போக்யதாகாரத்தையும்
அசாதாரண ஜன அனுபாவ்யத்தையும்
சேஷித்வ பிரகாச ரூப வைலக்ஷண்யத்தையும்
நித்ய அனுபாவ்ய சேஷித்வத்தையும்
நிரதிசய விபூதிமத்வத்தையும்
நித்ய அநபாயினீ சம்பந்தத்தையும்
அத்யுஜ்ஜ்வல திவ்ய அவயவத்தையும்
ஆபி ரூப்ய அதிசயத்தையும்
அசாதாரண சேஷித்வ சிஹ்னத்தையும்
அநுபஹித கிருபா யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலே
கடக முகத்தால் லபிக்கப் பாரித்த பிரகாரத்தை
நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் வ்யதிரேகத்தில் தரிக்க அரிதான அவனுடைய அழகை
அனுபவிக்கைக்காகச் சில பஷிகளை இரந்து தூது போக விடுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாரையிலே அபராத சஹத்வம் பற்றாசாகவும்
வைகல் பூம் கழிவாயில் சேஷித்வ சம்பந்தம் பற்றாசாகவும்
பொன்னுலுகு ஆளீரிலே ஏக ரஸத்வம் பற்றாசாகவும்
இத்திருவாய் மொழியிலே ஸுந்தர்யம் பற்றாசாகவும் தூது விடுகிறாள் –
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-
சில நாரைகளைக் குறித்து-கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு-ஒப்பனையும் மனத்தை கவர்கின்ற செயல்களும்
ஆகிற இந்த இரண்டினையும்-எனக்கு ஆக்கி வைத்தவர்க்கு–அவன் தன் அழகாலும் குணங்களாலும்-தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து-உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்-என்கிறாள் —
எம் கானல்-பிறருக்கு கொடுப்பதாக வரும் மமகாரம் -எனது என்னும் செருக்கு- உத்தேச்யமாய் இருக்கும் அன்றோ –
நும் கால்கள் என் தலை மேல் – உதவி செய்கின்றவர்களான உங்கள் கால்களை-நீங்கள் உதவி செய்ய -அதனால் உய்வான் இருக்கிற -என் தலை மேலே
மயிர் கழுவிப் பூ சூட இருப்பாரைப் போலே-அவற்றின் காலாகில் -இவள் தலையிலே இருக்கப் படைக்கப் பட்டன –
இவள் தலையாகில் அவற்றின் கால்கள் வைக்கப் படைக்கப் பட்டு இருந்தது-இரண்டும் பிறர் பொருட்டு இருந்தபடி –
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர் பத்னி புத்திரர்கள் திருவடிகள் தலையில் தரிக்க –ஆறுகால சிறு வண்டே-
குருவைப் போலே நுமர்கள் -தாரை பிள்ளைகள் -இவர்களையும் நடத்த வேண்டும் –
எனக்காக தூது சென்ற -உத்தம அங்கத்தில் சேர்த்து கிருபை பண்ணி -பாத்ர பூதன்-என்று உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி அளவும் செல்ல வேண்டுமே
——
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-
சில குருகு இனங்களைக் குறித்து-தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ –என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –அடியார்களுக்கு -உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பிரார்த்தனை –
அசாதாரண பரிஜனங்கள் உடன் -கூட சேர அர்ஹதை இல்லோமோ-தக்கிலமே கேளீரே
எமராலும் பழிப்புண்டு -அணி மூழிக் களத்து உறையும் -இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு – ஒரு காலத்தில் உண்டான கலவியின் காரணமாக-உறவினர்கள் கை விட்டார்கள் –
ஒரு காலத்திலேயே உண்டான கலவி அளவிலே தாமும் விரும்ப வில்லை -என்றது – உறவினர்கள் கை விட்டதே காரணமாக தாம் கைக் கொள்ள வேண்டும்-
அணி மூழிக் களத்து உறையும்-பிற்பாடர்க்கு காட்சி கொடுக்க வந்து நிற்கிற நிலையில் ஆகிலும் தாம் கைக் கொள்ள வேண்டும் –
இவ் விரண்டும் என் அளவில் விரும்பாமைக்கு காரணம் ஆவதே -என்கிறார் -என்றபடி –இங்கு என்-தம்மைப் பெற்று இருக்கிறேனோ-பந்துக்களைப் பெற்று இருக்கிறேனோ -என்றபடி –
இங்கு உள்ளார் கை விட்டால் பின்பு தம் எல்லைக்குள்-ஆக்கிக் கொள்ள வேண்டாவோ –சர்வேஸ்வரன் இடத்தில் உட்புக உட்புக -அன்று தொடங்கி-கை விடுவார்கள் அன்றோ இவ் உலகத்தார் –
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய் ஸர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவாராய ஸ்ரீ மத் ராமாநுஜாய நம –அவனுக்கும் –நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் -ஆச்சார்யருக்கும்
———
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-
அழகன் -அவயவ சமுதாய அதிசயித போக்யதை-வடிவு கொண்டவனுக்கு நாங்கள் அயோக்கியரோ –தக்கிலமே கேளீர்கள்
கொக்கினங்காள் குருகினங்காள்-கண்ணால் கண்டவற்றை அடைய ஏவுகிறாள் – சிலவற்றைப் போக விட்டோம்-அவை நம் கார்யம் தலைக் கட்டும்-என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்–முதல் உறவு செய்யும் கண் –அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை –
ஊற்று இன்பத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் –திருவடிகளில் விழுந்தாரை நல் வார்த்தை சொல்லித் தரிப்பிக்கும் முறுவல்
———-
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
அழகால் அடிமை கொண்ட ஸூந்தர மூர்த்திக்கு -தூதாக சென்று -வார்த்தை சொன்னால் -உங்கள் ஸாரூப்யம் தேச வாசம் தவிர்க்குமோ-சாமீப்யம் சாம்யாபத்தி சாலோக்யம் சாயுஜ்யம் தவிரான்-
மேக வண்ணம் -வெளுப்பு ஆக்குவானோ என்றுமாம் -வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ -1-4- அங்கு அப்படி அனுபவம் -இங்கு இப்படி அனுபவம் –
பூண்ட நாள் -சீர்க் கடலை உட்க் கொண்டு திரு மேனி நன் நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஞான ஹ்ரதரத்தைப் பூரித்துத் தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து
ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூறும் அடியவர் உறையில் இடாதவர் புயல் கை
அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும் –சூர்ணிகை -155-
————-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று-இருந்தனவாக-பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை-என் பக்கலிலே செய்தவன்-அங்கீ காரியாது ஒழியான் –
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்-செய்ய வேண்டும் –என்கிறாள் –அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ-
கொம்பது பருத்தியாக அங்காடி பாரித்து -பாரித்தால் போலே –தனக்கு பரம பதம் கலவிருக்கையாக இருக்க
அதனைக் காற் கடைக் கொண்டு-அண்மையில் இருப்பாரைப் போல் இருக்க-என் நெஞ்சில் பிரகாசியா நின்றான் -என்று-சிற்றான் கொண்டான் பணிப்பர் –
இது தான் -பருத்து கொம்பிலே இருக்கச் செய்தெ -கடை விரித்து புடவைக்கு விலை பேசுமா போலே
தூத பிரகரணத்தில் வெறுப்பாக சொல்லுவது பொருத்தமோ -கண்ணால் பார்க்க ஆசை கொண்டே சொல்கிறார் என்றபடி –
இத் திரு வாய் மொழிக்குச் சொன்ன வாக்ய அர்த்தத்தோடு சேராது-ஒவ்வொரு சமயங்களில் சொல்லிப் போம் வார்த்தை அன்றோ-எம்பெருமானார் -நிர்வாஹம்
அங்கு உள்ள ஈடுபாடு என் நெஞ்சில் உண்டு-நெஞ்சில் வசிக்கிறான் -சிற்றாற்று கொண்டான் -சொன்னதில் கொஞ்சம் மாற்றி-இதுக்கு சேர-உடனே பெற பாரித்து தூது விடுகிறார் –
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-மயிர் முடி அழகை பிரகாசிப்பித்து -கேசவ பெருமாள் –
கிலேச நாசன் ஆக வேண்டாமோ -வாசக சப்தத்துக்கு தக்க நடக்க வேண்டாமோ -தூத வாக்கியத்தை செப்புமின்
—————-
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-
மாதரைத் தம் மார்பகத்தே-அகலகில்லேன் இறையும் என்று வைத்தார்க்கு-சில வண்டுகளைக் குறித்து –உங்கள் வார்த்தை விலை செல்லும்படி- பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள்-என் தூது வார்த்தையை -என்கிறாள் –
நித்ய அநபாயினி -பிராட்டியை திரு மார்பில் உடையவருக்கு உங்கள் வார்த்தை -கேட்ப்பிக்கவும் அவள் உண்டே-கேட்கவும் அவன் இருக்க சொன்னால் போதுமே -சேர்த்தியிலே சொல்லுமின் –
என் வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே- என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்-அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –
——–
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-
சில குருகு இனங்களைக் குறித்து-சிலரோடு கலந்து-அவர்களைத் துறந்து-அதுவே புகழாக இருக்கப் போருமோ-என்று அறிவியுங்கோள் –என்கிறாள்
ஸ்ரீ ஸூ க்தி நாதன் பெயர் கொண்டவன் ஆழ்வாரை இப்படி பண்ணினான் என்ற பெயரே நிலை நிற்கும் படி பெற்றான்-பிரதம தம விபூஷணம் -வலி த்ரயம் தாமோதரன் -போலே –
எனக்கு ஓன்று பணியீரே–ஒரே நாள் -ஒரே வார்த்தை ஒரு சொல் -ஒன்றே மருந்து ஒரே தடவை பிரபத்தி-பரப்பு அற்று ஒன்றான வார்த்தை -பணியீரே -கௌரவத்துடன் சொல்கிறாள்-இரண்டாம் நாள் சொல்லுமது பழி என்று இருக்குமவள் அன்றோ –ஒப்பற்றதான நல்ல வார்த்தை-முடிகிறாள் ஒரு பெண் பிழைக்கச் சொல்லுகிற வார்த்தை அன்றோ –
தோள் துறந்த -என்றதனால்-அவன் தான் அந்தக் காதல் எல்லாம் கொண்டும்-தோளுக்கு அவ்வருகு போக மாட்டிலன் போலே காணும் -என்பதனை தெரிவித்த படி –
————-
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும் –அத்தலையில் அழகினை நினைத்தால்-பாதுகாவல் தேட்டமாய் அன்றோ இருப்பது –
அவனோடு கிட்டிக் கலக்க பெறாமையால் வருவதும்-ஓர் ஆற்றாமை உண்டு-அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்றும் ஒரு ஆற்றாமை உண்டு
அவற்றிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம் –ஸ்ரீ பரத ஆழ்வான் சந்தோஷமாக ஸ்ரீ பாதுகை பெற்று மகிழ்ந்து திரும்பினால் போலே
———
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-
தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-சேஷித்வம் போக்யத்வம் சீலத்தவம் -மூன்றும் உள்ள தாம்—தாம் -ஸ்வரூபம் தம்மை ரூபம்--தம்மைக் கண்ணாடி புறத்தில் கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த நிலைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ- தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-
பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்- பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தகவு -தயா கிருபா -தயைக்கு போராது என்று உரையீர்
தகவன்று என்று உரையீரே—காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே-இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-
உண்ணும் சோறு -கள்வன் கொல்-பதிகங்களில் இதே போலே -தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் கொண்டு போக வேண்டுமோ -பரம பாகவதர் முகம் பார்த்து -அழுத முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ
ஏந்து பூண் முலை பயந்து –பூண் ஏந்து முலை பயந்து –-ஆபரணங்களைத் தரிக்கக் கூடிய முலைகள் பசலை நிறத்தை தரித்து –ஆபரணங்கள் கலவியின் பொருட்டு கழற்றுமவை- பசலை நிறம் கல்வியால் அல்லாது கழலாதே அன்றோ
இணை மலர்க் கண் நீர் ததும்ப–கண்களுக்கு இலக்கு நீராக இருக்க வேண்டி இருக்க நீருக்கு -சோக அஸ்ருக்கு இலக்காவதே
—————-
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-
தகவன்று என்று உரையீர்கள்-ஆஸக்தியால் நிரவதிக தயாவான் -தகவு இல்லை என்று அருளிச் செய்த உடனே -இப்படி -சந்நிஹிதன் ஆனபின்பு -பிரயோஜனம் இல்லாமல் போகுமே -அவனுக்கு நிரூபகம் அருள் ஆகையாலும்-ஸ்வரூப நிரூபக தர்மமே தயை தானே-அவனுடைய மர்மத்தை அறிந்தவள் ஆகையாலும்-ஆன்ரு சம்சயம் கிருபை தான் தர்மம் சீதை பெருமாள் இடம் -சொல்லி-அதனால் இவள் அறிந்த மர்மம் -–முன்பு -தகவுடையவனே பரிந்து பேசி -அதனை இல்லை -என்கிறாள் -என் தவள வண்ணர் தகவுகளே -2-4-5-என்று திருத் தாயார் சொல்லிற்று பொறாமல்-தகவுடையவனே -என்று-முன்பு அப்படி பேணினாளே-
அருளாத நீர் அருளி–அவர் ஆவி துவரா முன் –அருளாழி புட் கடவீர்-1-4-போலே இதிலும் -சில அன்னம் களைக் குறித்து நான் முடிவதற்கு முன்னே-அவனுக்கு என் நிலையை-அறிவியுங்கோள்
———
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-
நோய் அறுக்குமே-சம்சாரம் நிவர்த்திக்கும் -விஸ்லேஷ ரூபம் வியாதி வராது-பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –
கிளி மொழியாள் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை-அலற்றிய சொல்-தன் ஆற்றாமையாலே-முறை பிறழச் சொல்லிய சொல் –
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply