Archive for May, 2024

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-10-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

நம்முடைய பாக்யத்தினாலே இங்கே புகுந்தார் என்று அஸ்கலித ஜ்ஞானரான அயர்வரும் அமரர்கள்
தங்கள் திரு மாளிகைகளில் யதோசிதமாக இவர்களுடைய திருவடிகளை விளக்கினார்கள் –
சிரகால விரஹித புத்ர சந்தர்சனத்தினாலே ஜநநி ப்ரீதையாமாப் போலே-இவர்களைக் கண்டு ப்ரீதைகளாய்
அந்த ப்ரீதி அதிசயத்தினாலே சரத்காலத்தில் பரிபூர்ண சந்த்ர மண்டல சத்ருசமான திரு முக மண்டலங்களை யுடையரான
பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப பிராட்டியாரும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியாரும்
தங்களுடைய நித்ய பரிசாரிகைகளோடே கூட தங்களுக்குப் பரம தனமான
ஸ்ரீ சடகோபனும் நல் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மற்றும் மங்களமான சத்கார உபகரணங்களை எல்லாம்
ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொண்டார்கள் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-10-

சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

விதி  வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

தங்கள் பாக்யத்தால் அன்றிக்கே நம்முடைய பாக்யத்தாலே சம்சாரிகள் ஆனவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றோம் என்று -வேதத்தில் உபநிஷத் பாகங்களாலே ப்ரதிபாத்யரான நித்ய ஸூ ரிகள் தங்கள் கோயில்களிலே-தங்கள் தாழ்ச்சி தோன்றும் படி இருந்து அவர்களுடைய ஸ்ரீ பாதங்களை விளக்கினார்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நீதியான திருவடி நிலைகளையும் நற் சுண்ணத்தையும் நிறை குடங்களையும்   மங்கள தீபங்களையும் ஏந்தி நெடுங்காலம் பிரஜைகளை பிரிந்து கண்ட தாய்மாரைப் போலே ஹ்ருஷ்டமாய் பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களையும் யுடைய பகவத் பரிசாரி கைகள் வந்து எதிர் கொண்டார்கள்  –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-10-

அநந்தரம் -ஸ்ரீ வைகுண்ட நாதன் நியோகத்தாலே ஸூரி களும் திவ்ய அப்சரஸ் ஸூக்களும்
ஆதரித்த படியை அருளிச் செய்கிறார்

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-நம்முடைய பாக்ய ரூபமான ஈஸ்வர நியோக பிரகாரத்தில் வந்து புகுந்தார்கள் –
என்று ப்ரீதராய் விலக்ஷண ஸ்வ பாவராய் வேதாந்த வேத்யரான ஸூரிகள்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தம் தம்முடைய திவ்ய ஸ்த்தானங்களில் சோபசாரமாக அவர் திருவடிகளை விளக்கினார்கள்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்–ஆஸ்ரிதற்கு நிதியான திருவடி நிலைகளையும் திரு மேனியோட்டை ஸ்பர்சத்தாலே
விலக்ஷணமான திருச் சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்கள தீபங்களையும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–இவர்கள் தர்சனத்தாலே பூர்ண சந்திரனைப் போலே விளங்குகிற முகத்தை யுடையராய்
தங்கள் பாரதந்தர்ய ஸூசகமான மடப்பத்தையுடைய திவ்ய அப்சரஸ்ஸூக்கள் எதிரே வந்து ஏந்தினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-10-

சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

விதி  வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்–வைகுந்தம் புகுவது -மண்ணவர் விதியே என்று இவர்கள் சொல்லுகிற இது வார்த்தை என்று என்று வேறே சிலர் -இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்ய பலம் அன்றோ -என்பார்கள் -விஷயங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் இருந்து வைத்து -அநந்ய பிரயோஜனராய் பகவத் குண அனுபவம் பண்ணப் பெற்ற மஹா புருஷர்களாய் -விண்ணுளாரிலும் சீரியர் -என்கிறவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்யம் அன்றோ என்பார்கள் –-வைகுந்தம் புகுவது -என்றது அங்கு -இங்கு புகுந்தனர் என்கையாலே தங்கள் பாக்யத்தை காட்டுகிறது -/ நல் வேதியர்--உபநிஷத் பாகத்தில் பிரதிபாத்யரானவர்கள் -யத்ரர்க்ஷய–யத்ர பூர்வே -என்று ஓதப்படுபவர்கள் –
பதியினில்-எதிரே புறப்பட்டு ஆதரித்து தங்கள் கோயில்களிலே கொண்டு புக்கு
பாங்கினில் பாதங்கள் கழுவினர்–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆணையால் சூரிகளும் திவ்ய அப்சரஸ் களும் ஆதரித்த படி
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-ஈஸ்வரன் நியோகப்படி ஆனைப் படி -இதில் தான் புகுந்தனர் –
விலக்ஷண வேதாந்தம் பிரசித்த ஸூ ரிகள் -பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தங்கள் திவ்ய ஸ்தானங்களில்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-தானம் மதியம் -ஆஸ்ரிதர்களுக்கு திருவடி -திருச் சூரணம் பூர்ண கும்பம் மங்கள தீபம்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-இவர்கள் தரிசனத்தால் ஒளி பெற்ற முகம் -எதிரே வந்து ஏந்தினார்கள் -பாரதந்தர்யம் ஸூ சகம் -மடப்பம் –

நித்ய சூரிகள் இவர்களை-கொண்டாடும் படியை-அருளிச் செய்கிறார் -.

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –
இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-
இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே -வைகுந்தம் புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –

நல் வேதியர் –
ஸ்ரீ புருஷ ஸூ க்தாதிகளில் பிரதிபாத்யம் -சொல்லப் பட்டவர்கள் -என்றபடி –
யத்ர ரிஷய பிரதம ஜாயே புராணா-
எவ்விடத்தில் காண்கின்றவர்களும் முன் தோன்றியவர்களும்-பழமையானவர்களும் –
புராணர்-புரா நவ -பகவத் அனுபவத்தால் இளகிப் பதித்தவர்கள் -ஸ்துதி பண்ணி அனுபவத்தில் ஏக சிந்தையராய்
யத்ர பூர்வே சாத்யா சந்திதேவ –
எங்கும் உள்ளவர்களும் பற்றத் தக்கவர்க்களுமான தேவர்கள்-
தத் விப்ராச விபத்யவ ஜாகுயாம்ச சமிந்ததே விஷ்ணோ யத் பரமம் பதம்-
எங்கும் பரந்து இருக்கின்ற திரு மாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ

அந்த பரம பதத்தை -ஞானம் நிறைந்தவர்களும்-துதிப்பதையே தன்மையாய் உடையவர்களும்
எப்பொழுதும் ஜாக்ரதையோடு கூடினவர்களுமான
நித்ய சூரிகள் அடைகிறார்கள் -என்று-வேதங்களால் சொல்லப் பட்டவர்கள் –

பதியினில் –
ஆதி சேடன் -பெரிய திருவடி முதலானவர்கள்
தங்கள் திரு மாளிகைகளிலே கொடு புக்கு –

பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-
நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-
அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்-
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத்த தாயார் ஆண்டாள் சுவீகரித்துக் கொண்டாளே

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ணப் பிரசாதத்தையும்
நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –

மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே
இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-9-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுந்தம் புகும் அளவில் வாசலில் வானவர் -ஸ்ரீ வைகுந்தன் தமர் ஆகையால் எங்களுக்கு ஸ்வாமிகளான நீங்கள்
எங்களுடைய பகவத் கைங்கர்ய ரூபமான ஸம்ருத்திகளைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்து
பகவத் குண அனுபவ ஜெனித நிரதிசய ப்ரீதி காரித சர்வ பரிசர்ய ஏக போகரான அமரரும்
பகவத் குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கதராய் ஒரு பிரவ்ருத்தி பண்ணுகைக்கு
ஷமர் இன்றியே இருக்கும் முனிவரும்
பூமியுள்ளே யுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு நாட்டிலே வருகைக்கு நாம் என்ன பாக்யம் பண்ணினோம்
என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் புகும் காட்டில் திருவாசலில் முதலிகள்  வைகுந்தனுடையார் எங்களுடைய ஸ்வாமிகள் எங்கள் பதத்தைக் கைக் கொள்ள வேணும் என்று -/ அமரரும் முனிவரும்-கைங்கர்ய தாரகரான அமரரும்  அதுக்கும் ஷமர் அன்றிக்கே பகவத் குணங்களில் ஈடு பட்டு இருக்கும் ஸ்வபாவரான முனிவரும் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-9-

அநந்தரம்-ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய சேஷ பூதரானவர்கள் நமக்கு உத்தேசியர் என்று
திரு வாசல் காக்கும் முதலிகளானார் ஆதரித்த படியை அருளிச் செய்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்–ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று புக்க அளவிலே திரு வாசல் காக்கும் முதலிகளானவர்கள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-வியந்தனர் – ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆதரணீயரானவர்கள் நமக்கு உத்தேச்யர்-
எங்கள் அதிகாரத்தில் புகுர வேணும் என்று உகந்தார்கள்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் –அத்தேசத்தில் கைங்கர்ய பரராயும் குண அனுபவ பரராயும் இருக்கிற அமரரும் முனிவரும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–என்று வியந்தனர் -பூமியிலே சப்தாதி விஷய ப்ரவணராய் இருந்தவர்கள் பரமபதத்தே
புகுவது ஒரு பாக்யமே என்று உகந்தார்கள்
வியந்தனர் என்கிற இடம் -எமது இடம் புகுது என்று வியந்தனர் என்றும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் -என்றும் இரண்டு இடத்திலும் அந்வயிக்கிறது –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று–பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-இவர்களால் ஸதக்ருதரான அளவிலே நித்ய ஸூ ரிகள் விஸ்மயப்படுவார்கள் —அமரரும் முனிவரும்–கைங்கர்ய தாரகரானவர்கள் –அமரர் -அதுக்கு ஷமர் அன்றிக்கே ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபடும் ஸ்வ பாவரானவர்கள் –முனிவர்கள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அடிமையில் ஒன்றும் குறைய நிற்க மாட்டாதாரும் -குண அனுபவத்துக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாத படியாய் இருப்பாரும் யாய்த்து -வியந்தனர் -விஸ்மயப் பட்டார்கள் –வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–சம்சாரத்தில் சப் தாதி விஷயங்களில் பழகிப் போந்தவர்கள் பரம பதத்திலே வந்து புகுந்து கைங்கர்யமே யாத்திரை யாவது –இது ஒரு பாக்ய பலம் இருந்த படியே -என்றாய்த்து அவர்கள் கொண்டாடுவது –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

திருவாசல் காக்கும் முதலிகள் ஸத்காரம் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்-புக்க அளவில் கோயில் வாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-எங்களுக்கு சேஷி -பொன்னடி சாத்தி அருள வேணும் -புகுத்துக என்று -அகத்தில் அதிகாரத்தில்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-கைங்கர்ய நிஷ்டர்கள் குணானுபவ நிஷ்டர்கள் -அனுபவித்து உருகி –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-பாக்யம் -என்றவாறு -கிருபையால் -பூமியிலே சப்தாதி பிரவணராய்
-இங்கே வருவதே என்று உகந்து -ஆச்சரியமாக எமது இடம் புகுந்து வியந்தனர் என்றவும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் என்றும் -கொள்ளவுமாம்

பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்-திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-
–புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்-
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-8-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று இவரை சேஷத்வ சாம்ராஜ்யத்தில் அபிஷிக்தராய்
அதுக்கு முடி சூடி இருந்த அயர்வறும் அமரர்கள் முறை முறை எதிர் கொள்ள-
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகுகைக்காக
இவர்கள் முன்னமே த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமான பெரிய திருக் கோபுரத்தைச் சென்று
குறுகினர்கள்-என்கிறார்

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

கோவிந்தன் தனக்குத் தரும் சந்தான பிரயுக்தமான அடியார் என்று சேஷத்வத்துக்கு சூடின முடியை யுடைய அயர்வறும் அமரர்கள் பர்யாயமாக எதிர் கொள்ள –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்–இவர்கள் வருகிறாள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் படுவதும் செய்து -திரு நாட்டுக்கு எல்லையான மதிலை யுடைய திருக் கோபுரத்தைக் குறுகினார்கள் -தங்கள் வரவால் உண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த திருமேனியை யுடைய ஸ்ரீ ய பதியதான ஸ்ரீ வைகுண்டத்தில் புக்கு இருக்கைக்காக –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-8-

அநந்தரம் -ஆஸ்ரித ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய அடியார் என்கிற ஆதரத்தாலே பரமபத வாசிகள்
நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ளப் பரமபதத்தைக் கிட்டின படியை அருளிச் செய்கிறார்

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-இவர் ஆஸ்ரித அர்த்தமாக அவதீர்ணனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அநந்யார்ஹமான குலத்தையுடைய அடியார் என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-ஈஸ்வரனோ பாதி அபிஷேகாதி ஸாரூப்யத்தை யுடையரான நித்ய ஸூரிகள்
தம் தாம் தரங்கள் தப்பாமல் இவர்கள் வருகிறார்கள் என்று
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–அலங்க்ருதமான திவ்ய வடிவை யுடையனாய் ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாரோடே
கூட எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்ரீ வைகுண்டத்தில் பிரவேசிக்கைக்கு உறுப்பாக
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-தங்கள் வரவுக்கு அலங்காரமாக எடுத்துக் கட்டின கொடியால் அலங்க்ருதமாய்
உயர்ந்த மதிளை யுடைத்தான தலை வாசலிலே புக்கார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று--அவனுடைய ஸுலப்யத்திலே தோற்று சபரிகரமாக எழுதிக் கொடுத்தவர்கள் என்றாய்த்து -நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பது –குடந்தை எம் கோவலன் -குடி குடியார் -என்றது கீழ் —குடி குடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே -இவர்கள் விபவங்களிலே ஆஸ்ரயித்தவர்கள் -இவர்கள் உகந்து அருளின நிலங்களில் ஆஸ்ரயித்தவர்கள் -என்றாய்த்து அங்கு உள்ளார் ஸ்லாகிப்பது –
முடி யுடை வானவர் -அவனோபாதியும் மதிப்பில் குறைவற்றவர்கள் யாய்த்து இவர்களை ஆதரிப்பார் -அபிஷேகம் அவனுக்கும் நித்ய ஸூ ரி களுக்கும் ஒத்து இருக்குமாகில் வாசி என் என்னில் -அவன் ரக்ஷணத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமைக்கு முடி சூடி இருப்பார்கள் –
முறை முறை எதிர் கொள்ள-பர்யாயமாக எதிர் கொள்ள -யத்ர பூர்வே ஸாத்யா என்றும் -அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தங்களுக்கு உத்தேசியரானவர்களுக்கு உத்தேச்யர்கள் ஆகிறார்கள் இ றே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்க்ருதமாய் –ஒக்கத்தை யுடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான திரு மதிலில் திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–-தங்கள் வரவால் யுண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த வடிவை யுடைய ஸ்ரீ யபதியதான பரம பதத்தில் புகுகைக்காக -வந்து கிட்டினார் என்றவாறே தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்கை –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

சுத்த சத்வமயம் -கீழே மிஸ்ர சத்வம் -பிரகிருதி வரைக்கும் –
தமஸ் தாண்டி –
ஆஸ்ரித சுலப கிருஷ்ண அடியார்கள் -நித்ய ஸூ ரிகள் நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ள
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-கோவலன் -அவனுக்கே ஆட் பட்டு
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-நித்ய ஸூ ரிகள்-ஸாரூப்யம் கொண்ட நித்ய ஸூ ரிகள்
-தம் தாம் தரங்கள் தப்பாமல் -நீதி வானவர்கள் அன்றோ -முறை மாறாமல்
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
கொடிகளால் அலங்க்ருதம் -கோபுரம் நோக்கி -முக்தர்களும் நித்யர்களும் தலை வாசலுக்கு வந்து எதிர் கொள்ளுகிறபடி
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-அலங்க்ருதமான வடிவு -புதுசாக -கொண்ட அலங்காரம் -ந கால இருந்தாலும்
-எல்லாம் உண்டே -விஸ்வரூபம் – புது பரிவட்டம் -காலம் இல்லை என்றாலும் –
முக்த ஜீவன் வர -விஷ்வக் சேனர்-பட்டியல் கொடுத்து -அவனும் அவளும் -சேர்ந்து -கூட எழுந்து அருளி
-மாதவன் -மிதுனத்தில் தானே ப்ராப்யம் -ஒரே ஆசனம் -கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -புதுசாக உருவாக்க முடியாதே
-அது தான் அவளது சாமர்த்தியம் -காந்தஸ்ய புருஷோத்தம -தாஸ தாஸீ கணம் -சர்வேஸ்வரன் உடைய ஸ்ரீ வைகுந்தம் –

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக-
நித்ய சூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று –
கோவிந்தன் தனக்கு -இவர் -குடி அடியார் -என்று –அவனுடைய எளிமையில் தோற்று-
உற்றார் உறவினர்களோடு எழுதிக் கொடுத்தவர்கள் என்றாயிற்று-நித்ய சூரிகள் ஆதரிப்பது –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே –
இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்-
இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

முடி யுடை வானவர் –
அவனைப் போன்ற பெருமையில் குறைவு அற்றவர்கள் ஆயிற்று இவர்களை ஆதரிப்பார்கள்-
திருமுடி அவனுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்குமாகில் வாசி என் என்னில்-
அவன் சேஷித்வத்துக்கு முடி சூடி இருப்பான்-
இவர்கள் சேஷத்வத்துக்கு முடி சூடி இருப்பவர்கள் –

முறை முறை எதிர் கொள்ள –
வகை வகையாக தாம் தப்பாமல் எதிர் கொள்ள –
யத்ர பூர்வே சாத்யா -புருஷ சூக்தம்-
எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே-
தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் –
இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாய்-
ஒக்கத்தை உடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான-திரு மதிளிலே திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –

வடிவுடை மாதவன்-
மகோத்சவம் இவ ஆசாத்யா புத்ரானன விலோகனம்-
யுவவே வாசுதேவ அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-52-
கிழத்தன்மை விட்டு வாசுதேவன் காளைப் பருவத்தை அடைந்தான் -என்கிறபடியே-
கம்சனைக் கொன்ற பின்பு பிள்ளையைக் கண்ட-ஸ்ரீ வசுதேவரும் தேவகி பிராட்டியாரும் போலவும் –
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-என்று சொல்லப் பட்டால் போலவும் –
வா போகு-இத்யாதி -சுப்ரமண்யன் போன்ற அழகன் -ரிஷி கரி பூசுகிறான் –
அன்றிக்கே –
வடிவுடை மாதவன் –
தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன் -என்னுதல் –

வைகுந்தம் புகவே –
பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-7-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாகத் திருப் பாற்கடல் திருக் குடந்தை தொடக்கமாகயுள்ள தேசங்களில் வந்து திருவவதாரம் பண்ணி
அருளின எம்பெருமானுக்கு குடியடியாரான இவர்களை இப்படி மடந்தையர் வாழ்த்தும் அளவிலே
மருத்துக்களும் வஸூ க்களும் தம் தாமுடைய லோகங்கள் அன்றியே
லோகாந்தரங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து ஸ்துதித்தார்கள் என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-7-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித அர்த்தமாக நிரதிசய ஸுந்தரிய உக்தனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி அங்குச் செல்ல மாட்டாதவர்களுக்காக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின கோபாலனுடைய க்ரமாகதமான அடியார்க்கு –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-7-

அநந்தரம் ஷீரார்ண சாயியாய் சர்வாதிகனாய் அர்ச்சாவதார ஸூ லபனானவனுடைய சேஷ பூதருக்கு
மருத் கணங்களும் வஸூ கணங்களும் பின் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–-அகாதமான கடலிலே –
தொடுதல் -தூண்டுதலால் ஆழத்தைக் காட்டுகிறது -கண் வளர்ந்து அருளி
என் போல்வாரோடு ப்ரஹ்மாதிகளோடே நித்ய ஸூரி களோடு வாசியற எல்லார்க்கும் உத்பாதகனான கேசவனாய் –
எங்களை அனுபவிக்கிற அந்த சேஷித்வ ஸூ சகமாய் கிளர்ந்து ஒளியை யுடைத்தாய் மணிமயமான
திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சந்தானமாக அடிமையானவர்களை பற்ற
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் –தாமதாமுடைய ஸ்த்ரீகள் வாழ்த்தினை
அளவிலே மருத்துக்களும் அஷ்ட வஸூக்களும் -பகவத் அனுபவ த்வரையால்
அவர்கள் சீக்ரகாமிகளாகையாலே எங்கும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரங்களைப் பண்ணினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-7-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் -அந்த தேவ ஸ்த்ரீகள் புகழ்ந்த அளவில்
மருதரும் வசுக்களும்-மருத் கணங்களும் வஸூ கணங்களும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் -காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –
தொடு கடல்-கிடந்த எம் கேசவன்- பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -அத்தை விட்டு -ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படி –தொடு கடல் -தோண்டப்பட்ட கடல் -ஆழ்ந்த கடல் –
எம் கேசவன்- கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன்–ஆஸ்ரித அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ரஷித்தவன் -அவதாரத்துக்கு பிற்பாடார் இழவாத படி திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவன் —எம் கோவலன்—கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளினான் என்கிறது -அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள் -/ கிளர் ஒளி மணி முடி-மிக்க ஒளியை யுடைத்தாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் –பர வ்யூஹ வித்துவான்கள் அளவன்றிக்கே திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையிலே தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஷீரார்ணவ சாயி -சர்வாதிகன் -அர்ச்சாவதார சுலபம் -கோவலன் -வைபவம் -அனைத்தையும் சேர்த்து சொல்லி –
பர வாசுதேவன் விஷயமாக -என் கேசவன் -அந்தர்யாமி -சொல்லி –
சேஷ பூதர்களுக்கு மருத் கணங்கள் -திதி தேவி கர்ப்பம் -இந்திரனை வெல்ல -ஆசாரம் குறைந்தால் வீணாகும்
-காலை மடித்து மாலை படுக்க தலை கூந்தல் காலில் பட்டு ஆசார குறைவு -இந்திரன் வஜ்ராயுதம் ஏழாக வெட்டி மீண்டும் ஏழாக
வாயு கணங்கள் -அஷ்ட வசுக்கள் –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்-தம் தாம் ஸ்த்ரீகள் வாழ்த்த -அனுபவ த்வரையால்-
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்-
வேகமாக தொடர்ந்து சென்று -முக்தன் -பகவத் அனுபவ த்வரையால் போலே இவர்களும் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ண –
தொடு -தொண்டப் பட்டதால் சாகரம் -சகரன் பிள்ளை தோண்டிய தொடு கடல்
ஆழம் காண முடியாத கடல் -ப்ரஹ்மாதிகள் உத்பாதகன் என் போல்வாருக்கும் உத்பாதகன் –
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-அனுபாவ்யமான திரு அபிஷேகம் சேஷிக்கு அடையாளம் -சர்வாதிகன் ஆதிராஜ்ய -ரத்னகசிதமான திரு அபிஷேகம் –
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-திருக் குடந்தை -குடந்தை கிடைத்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே
தொடக்கமும் -சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே
திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா -திராவிட ஸ்ருதி தர்சனகாயா நம -அர்ச்சனை உண்டே –
குடைத்தையன் -கோவலன் -கண் வளர்ந்து அருளி -கிருஷ்ணன் -சந்தானமாக அடிமை -குடி குடி வந்து ஆட் செய்த –

மருத்துக் கணங்களும்-வசுக் கணங்களும்-தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்-என்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே-

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று-

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்-ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு-பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக-
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ -இத்யாதி –
தொடு கடல்-
தோண்டப்பட்ட கடல்-ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்-
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி-திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது-

கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-
பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –
ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி
குடந்தையன் கோவலன் -குடந்தை எம் கோவலன் பாட பேதங்கள்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-6-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

இவர் சிலர் ஸ்வ க்ருதமான யாக பலத்தைக் கொடுக்கும் அளவில் வேறே சிலர் தூப தீபாதிகளால் அப்யர்ச்சனம் பண்ணினார்கள் –
சிலர் காளாங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
வாள் ஒண் கண் மடந்தையர் இவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தினாலே இவர்கள் தங்கள் வரப் புகுகிற மங்களத்தில் காட்டில்
மேற் பட்டதொரு மங்களம் இல்லாமையால் ஆழியான் தமரான நீங்கள்
ஆண்மின்கள் வானகம் என்று இது தன்னையே மங்களமாக ஆசாசித்தார்கள் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-6-

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

சிலர் தாங்கள் பண்ணின யாக பலங்களை சமர்ப்பிக்கும் அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–கலந்து எங்கும் த்வனித்தன –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-6-

அநந்தரம் சேஷித்வ சிஹ்னமான திருவாழியை யுடையவனுக்கு சேஷ பூதரான நீங்கள் இந்த ஊர்த்வ லோகத்தை
நிர்வஹியுங்கோள் என்று ஆதி வாஹிக மஹிஷிகள் வாழ்த்தின படியை அருளிச் செய்கிறார்

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை–வைதிகர் சகல கர்மங்களை சமர்ப்பித்த அளவிலே
பரிமளத்தைப் ப்ரவஹிக்கிற ஸூ கந்தமான தூபங்களானவை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்–எங்கும் கலந்து காளங்களையும் வலம் புரிகளையும் த்வநிப்பித்தார்கள்-
இவர்களைக் கண்ட ப்ரீதியாலே
வாள் ஒண் கண் மடந்தையர்-ஒளியை யுடைத்தாய் தர்ச நீயமான கண்களையுடைய தேவ ஸ்த்ரீகளானவர்கள்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாழியை யுடைய சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள்
இந்த ஸ்வர்க்காதி பதங்களை ஆளுவுதி கோளாக வேணும் என்று ப்ரீதியை யுடையராய்க் கொண்டு வாழ்த்தினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-6-

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும்– விரை கமழ் நறும் புகை–அவர்கள் தங்கள் யாக பலங்களை சமர்ப்பித்த அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் -/ விரை கமழ் நறும் புகை–பரிமள பிரசுரம் ஆகையால் ஸ்ப்ருஹணீயமான புகை –
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்--அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் -/ கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது / மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இ றே இவன் பேறு –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

ஆதி வாஹிக பத்நிகள்-சேஷித்வ சிஹ்னம்-அடியார் -மஹிஷிகள் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை-வைதிகர் தங்கள் யாக பலன்களை சமர்ப்பித்த வாறே -ஸூ கந்தமான தூபம் கலந்து
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்-வாத்தியங்கள் சங்குகள் த்வநித்து
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று-ஸ்வர்க்காதி லோகங்களை இதுவும் லீலா விபூதி தானே -ப்ரீதி
முன்பே செங்கோலைக் கொடுத்து புருஷர்கள் -இங்கு இவர்களும் கை ஓலை போட்டு கொடுத்தபடி –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-ஒளி தர்ச நீயமான தேவ ஸ்த்ரீகள் –

உபசரித்தல் முன்னாக-தெய்வப் பெண்கள் உகந்து-இவர்களை வாழ்த்தினார்கள் –என்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே-வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான-
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு-நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்-
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்-
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது-
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –
பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்-
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே-
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று-கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-5-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

இவர்கள் போகிற வழியில் வர்த்திக்கும் தேவர்கள் இவர்கள் மாதவன் தமர் என்று உகந்து
தம் தம்முடைய ஸ்த்தானங்களையும் ஐஸ்வர்யங்களையும் இவர்களுக்கு இவற்றைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்தார்கள்-
கீதங்கள் பாடினார் கின்னரர் கருடர் –
வேத நல் வாயவர் ஜ்யோதிஷ்டோமாதி யாக ஸித்தமான தங்கள் ஸம்ருத்தியைக் கொடுத்தார்கள் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-5-

ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன்  தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வாசலில் வானவர்–வழியில் தேவர்கள் -வந்து எங்கள் அதிகாரங்களைக் கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிற அளவிலே கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களை பாடினார்கள் -மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் தங்களுடைய சமாராதான பலங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-5-

அநந்தரம் வழியில் வருண இந்திர ப்ரஜாபதிகளானவர்கள் ஸ்ரீயபதியானவனுக்கு
சேஷ பூதர் என்று ஆதரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–வருண இந்த்ர ப்ரஜாபதிகள் ஆகிற ஆதி வாஹிக தேவர்களானவர்கள்
தம் தாம் பதங்களில் தலை வாசலிலே வந்து நின்று ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதர்கள் இவர் என்று ஆதரித்து
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கனே எழுந்து அருளுங்கோள் -எங்கள் அதிகாரமான ஸ்த்தலங்களில்
பிரவேசியுங்கோள்-என்று பஹுமானமாக சத்கரித்த அளவிலே –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–அவ்விடங்களில் கர்மஜ தேவராய்-வேத உச்ச்சாரணத்தாலே விலக்ஷண முனிவரானவர்கள்
தங்கள் யாகாதி கர்மங்களை சபலமாகப் பெற்றதே என்று
சாதரமாய்க் கொண்டு இவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்- கின்னர்களும் கருடர்களும் கீதங்களை பாடினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-5-

ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன்  தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த அந்தப்புர பரிகரம் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் சொல்லுவது –வழியில் தேவர்கள் -அவர்கள் ஆகிறார் வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் சமாராதானங்களை இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள்-நிறபேஷாராய்ப் போகிற இவர்களுக்கு -தம் தாம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார் -யாக பலங்களைக் கொடுப்பார்கள் ஆகிறார்கள் இ றே தம் தாம் ஆதரத்தாலே –ப்ரீதி கச்சின் முனிஸ் தாப்யாம் ஸம்ஸ்த்தித கலசம் ததவ்-என்று தம் தாமுக்கு உள்ளவற்றை கொடுக்கும் அத்தனை இ றே –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

கைவல்யார்த்தி -முக்தி அடைந்தாலும் அர்ச்சிராதி கதியில் போக வில்லை -அங்கே உபாசனமோ பிரபத்தியோ பண்ண முடியாதே –
அத்துடன் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் -ஏடு நிலைத்து இடுவதன் முன்னம் —சரீரம் முடிந்தால் திரும்ப முடியாதே –
குருகா நீளா- பற்று அற்றது எனில் வீடு பெறும்-உற்றது வீடு உயிர் -பெற்றது அது மண் உரில்–
விரஜைக்கு இப்பால் தான் கைவல்யார்த்தி திரும்பலாம் என்பர் தேசிக சம்ப்ரதாயம் –
ப்ரஹ்ம நிஷ்டன் -பஞ்சாக்கினி நிஷ்டன் -உபாசனம் படியே பலன் -பிரதீக உபாலம்பம் -அவயவங்கள் உடன் சேர்ந்து –
ஜைமினி வேத வியாசர் -ஸுமந்து பைலர் வைசம்பாயனர் ஜைமினி -நான்கு சிஷ்யர்
ஜைமினி -பஞ்சாக்கினி நிஷ்டர்
வியாசர் ப்ரஹ்ம நிஷ்டர் -ப்ரதீக உபாலம்பம் பண்ண மாட்டான் -ஆறு வித உபாசகர் -அசேதனம் -ப்ரஹ்மம் உடைய அவயவம்
கைவைளயார்த்தி ஆத்மா
ஆத்மா அசேதனம்
கூடிய ப்ரஹ்மம் உபாசனம்
ஆறு பேருக்கும் பரம பத பிராப்தி இல்லை
அவயவம் இல்லாத நிஷ்டர்க்கு உண்டு -பரமாத்மாவை விசேஷமாக -கொண்டு தன்னை பிரதானமாகக் கொண்டு
இருவரும் பேறு பெறுவார்கள் -நேராக கொண்டால் ப்ரஹ்ம நிஷ்டர்
பிராப்தியில் தாரதம்யம் உண்டு பிள்ளை லோகாச்சார்யார்
தேசிகன் -இல்லை என்பர்
ஜீவனை முக்கியமாக கொண்ட பஞ்சாக்கினி நிஷ்டனுக்கு ப்ரஹ்மம் அடைந்தாலும் வாசி உண்டு
பாதராயனார் இருவரும் அர்ச்சிராதி மார்க்கம் –
ஜைமினி பஞ்சாக்கினி நிஷ்டர்க்கு இல்லை என்பர் –
குரு சிஷ்ய கிரந்த விரோதம் –
இவை எல்லாம் உபாசகனைப் பற்றியே -நமக்கு சம்பந்தம் இல்லையே -பிரபன்னர் ஆண்மின்கள் வானகம் என்று ப்ரீதனாய் அளிக்கிறான்
கௌஷீதகி உபநிஷத் –
ப்ருஹதாரணீயம்
சாந்தோக்யம் –
கொஞ்சம் வாசி சம்வத்சரம் அப்புறம்
வருஷம் -அப்புறம் வாயு -ஆறாவது வியாசர் -தேவ லோகம் தேவர்கள் உடைய வாயு பகவான் –
அவிசேஷ சொல்லாலும் வாயு விசேஷ சொல்லாலும் சொன்னதால்
மின்னல் லோகம் மேலே வருணன் சம்பந்தத்தால் –
மின்னல் தான் அமானவன் –சத்ய லோகம் அடைந்தால் குருக்கே வருணன் -இந்திரன் –
கூடி வருவார்களாம் -சத்ய லோகம் வரை -பரஞ்சோதி ஸ்வரூபம் அடைகிறான் -ஜோதி சப்தம் ப்ரஹ்மாவை குறிக்காதே –
சத்ய லோகம் போனால் திரும்பி வருவானே-
வித்யுத் இந்திரன் வருணன் -கூட வந்து -விராஜா தாண்ட முடியாதே -போக ஆசை கொள்ளலாம் –
ஆதிவாஹிஹா தத் லிங்காத்-
அடையாளங்கள் -என்பர்
போக பூமி என்பர்
இவை இல்லை ஆதி வாஹ்யகர்கள் -தான் குறிக்கும் –

பிரகிருதி மண்டலம் -வருண இந்திர பிரஜாபதிகள் -சுக்ல பக்ஷ சம்வத்சர வாயு சொல்லாமல் இங்கு -ஸ்ரீ யபதி சேஷ பூதர் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்-தலை வாசலில் வந்து நின்று ஸ்ரீ யாபதிக்கு சேஷ பூதர் என்று பொன்னடி சாத்தி தங்கு வேட்டையாக –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கு புகுந்து பஹு மானம் சதிகரித்து-
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வேதங்களை ஓத கூடியவர்கள் -திருவடியில் யாக பலம் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–குதிரை வடிவம் கின்னர்கள் -ஆனந்த வல்லி-பெருக்கி பெருக்கி -கர்மஜ தேவர்

ஆதி வாஹிகத் தலைவர்களான-வருணன் இந்த்ரன் முதலானவர்களும்-மற்றும் உள்ளாறும்-
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை-அருளிச் செய்கிறார் –

மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது-
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –

வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்-
வாசல் -வழி-அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –

போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்-
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்-என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –

வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –மடுக்க -எச்சத திரிபு
மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-
தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு-
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்-
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு-
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ-பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்-
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே-
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-4-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-4-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கு இவர்கள் ஒருகால் இங்கே பர்யவசிக்கப் பெறுவது காண் என்னும் ஆசையால்
இமையவர்-எதிர் எதிர்- இருப்பிடம் வகுத்தனர்-அர்ச்சிராத்யாதி வாஹிக கணங்கள் பார்த்து அருளீர் பார்த்து அருளீர்
என்று என்று கைந்நிரை காட்டினர்-
கடல் இரைத்தால் போலே முரவ பணவாதி வாத்யங்கள் சர்வ லோகங்களுக்கும் அபி பூரிதமாம் படி முழக்கப்பட்டன
என்கிறார்

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-4-

மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப்  பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

எதிர்  எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

அர்ச்சிராதிகளான அவ்வவ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் என்று கைகளை நீரையே காட்டினார்கள் -ஸ்ரீ யபதியினுடைய அழகிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -இவர்களை எதிர் கொள்ளுகைக்குப் பெரிய பிராட்டியாரோடு ஒப்பித்து அருளுகிறபடி என்றுமாம் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-4-

அநந்தரம் போக்யதா பூர்ணனான ஸ்ரீ யபதியினுடைய சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தில்
உள்ளார் சத்கரித்த படியை அருளிச் செய்கிறார் –

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–மதுவை விகசிக்கிற திருத் துழாயைத் திரு முடியிலேயுடைய
ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதரானவர்களுக்கு
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷராய்க் கொண்டு தேவர்கள் இவர்கள் போகிற வழிக்கு முன்னே
வாஸஸ் ஸ்தானமான உபகார்யைகளை சமைத்தார்கள்-
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்–துவாதச ஆதித்யர்களும் தம் தாம் அடைவிலே கிரணங்கள் ஆகிற
கைகளை நிரையாகக் கொடுத்தார்கள்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த -அவர்கள் ப்ரவர்த்திப்பித்த முரசங்கள் அதிருகிற
குரலானவை அலைகிற கடலில் முழக்கு ஒத்தன –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-4-

மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப்  பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

எதிர்  எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்--பார்த்த பார்த்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -என்னும் நசையாலே தேவர்கள் தோப்புக்கள் சமைத்தார்கள் -இமையவர் என்று ஸ்வபாவ கதனம் அன்று -தோப்புக்கள் சமைக்கையில் உள்ள தவறையாலே கண் விழித்து இருக்கிற படி -பிரபுத்தராய் இருக்கிறபடி என்கை –
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்--அர்ச்சிராதிகளாய் உள்ள அவ்வோ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் -என்று கைகளை நிரையே காட்டினார்கள் –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-அதிரா நின்றுள்ள குரலையுடைய முரசங்கள்-கடல் கிளர்ந்து முழங்கினால் போலே முழங்கா நின்றன -அங்குத் தங்குகையில் யுண்டான ஆதார அதிசயம் தோற்ற வாத்ய கோஷங்களைப் பண்ணினார்கள் –
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–ஸ்ரீ யபதியுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு அடிமை புக்கவர்களுக்கு என்னுதல் -இவர்களை எதிர் கொள்ளுகைக்கு பிராட்டியோடே ஒப்பித்து அருளுகிற படியைச் சொல்லுதல்-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-4-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

போக்யதா பூர்ணர் ஸ்ரீ யப்பத்தி உடைய -சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தார் ஸத்கரிக்க –
தமர்கள் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -ஆசை உடையார்க்கு எல்லாம் -ஆசையே தகுதி -இந்த பேற்றைப் பெற –
கருணை உடன் சேர்ந்த காதல் -பிரி கதிர் பட்டு அன்றோ பிரிந்து உள்ளோம் -கிருஷிகன் மகிழ்ந்து அன்றோ திரட்டி எடுத்துக் கொண்டு போவான் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷர் -வாசல் ஸ்தானம் -நீர்ப்பந்தல் கூடாரங்கள் -இருப்பிடம் சமைத்து
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-பிரவர்த்திப்பித்த முரசங்கள்-கடல் ஓசைக்கு சமமாக இருக்க
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-மதுவை பிரவஹிக்கும் -திரு அபிஷேகம் -ஸ்ரீ யபதி

மேலே உள்ள உலகங்களில் தேவர்கள்-இவர்கள் போகிற வழிகளிலே-
தங்குகைக்காக தோப்புக்கள் அமைத்தும்-
வாத்தியம் முதலானவற்றால் ஒலியை உண்டாக்கியும்-கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –
பரந்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ-இங்குத் தங்கிப் போவார்களோ என்னும்-
நசையால் தேவர்கள் தோப்பு சமைத்தார்கள்-
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று-
தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது-
இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –
இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று –
தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது-
அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-
மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே –

கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் –
சூர்யர்கள் நிலை விளக்கு போலே-இங்கனே எழுந்தருள இங்கனே எழுந்தருள-தேஜோ விசிஷ்டர் -நிலை விளக்கு –
பார்த்தருள- பார்த்தருள என்று – கைகளை நிறையே காட்டினார்கள்-
அன்றிக்கே அர்ச்சிராதிகளான ஆதி வாஹிக கூட்டங்கள் ஆகவுமாம்-

அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த –
அங்கே கால் தாழ்வார்கள் என்று-அது கேளாதபடி-அதிரா நின்றுள்ள ஒலியை உடைய முரசங்கள்-
அலையை உடைய கடல் போலே முழங்கின-
அன்றிக்கே
இங்கு தங்குகையில் உண்டான ஆசையின் மிகுதி தோற்ற வாத்தியங்களை ஒலிக்கச் செய்தார்கள் என்றுமாம் –

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –
கொட்டு ஓசையாலும்-
ஆள்கள் எதிரே சென்று சொல்லுகையாலும்-
சென்ற இவர்களுக்கு ஒப்பித்த படியே கொடுக்கைக்காக-பிராட்டியோடு கூட அழித்து அழித்து ஒப்பிக்கிறபடி-
விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-
மாதவன் தமர்க்கே
பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –
திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
இங்கு-பூமியிலே – ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றதே காரணமாக பங்கு பெறாதே-
திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்களை கொடுக்கிறபடி-

மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சார்யும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன-
நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ –
என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-3-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-3-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே தூப நன் மலர் மழை பொழிவனர் –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இங்கனே எழுந்து அருள ஒண்ணாதோ என்று
இரு மருங்கும் முனிவர்கள் நின்று இசைத்தனர் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-3-

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

தொழுதனர்  உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர்  முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர்–திரு உலகு அளந்து அருளினவன் குணத்திலே அகப்பட்டு அடிமை புக்கு திரு நாட்டுக்குப் போகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–ஸ்ரீ வைகுண்டத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இரண்டு அருகும் நின்று -எழுந்து அருளலாகாதோ -என்றார்கள் –முனிவர்கள்– முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-3-

அநந்தரம் -அநந்யார்ஹத ஆபாதகனான த்ரிவிக்ரமனுக்கு சேஷ பூதரானவர்கள் சந்நிதியில்
ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று –அன்று மஹா பலி என்னது என்று அபிமானித்த அன்று
பூமியை அநந்யார்ஹமாம் படி அளந்தவனுடைய சேஷ பூதருடைய சந்நிதியில்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தூப பூர்வகமாக நன்றான புஷ்ப வர்ஷத்தை பொழிவராய்க் கொண்டு
அவ்வோ லோகங்களில் உள்ளார் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அஞ்சலி வந்தனம் பண்ணினார்கள் –
முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-இருமருங்கு இசைத்தனர் –அந்த லோகங்களில் வாக் நியதி யுடையரான
முனிவரானவர்கள் -அந்த நியதியைத் தவிர்ந்து
ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போமவர்களுக்கு வழி இது என்று சொல்லி
எழுந்து அருள லாகாதோ என்று இரண்டு பக்கத்திலும் நின்று சாதாரமாகச் சொன்னார்கள் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-3-

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

தொழுதனர்  உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர்  முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

தொழுதனர் உலகர்கள்--ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று தொழுதார்கள் –
தூப நல் மலர் மழை-பொழிவனர்–தூபத்தையும் -நல்ல மலர் மழையையும் பிரயோகித்து தொழா நின்றார்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே–திரு உலகு அளந்து அருளின ஸ்ரீ வாமனன் செயலுக்குத் தோற்று அடிமை புக்கவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிக்கிறது –
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் -முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இ றே என்று இருந்தார்கள் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–பரம பதத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து –தம் தம்முடைய எல்லையில் வந்தால் ஆதரிக்கிறோம் என்று இருக்கை அன்றிக்கே எதிரே வந்து ஆதரித்தவர்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே– தூப நல் மலர் மழை-பொழிவனராய்க்கொண்டு -முனிவர்களான உலகர்கள் தொழுதனர் -வைகுந்தத்துக்கு வழி இது என்று எதிரே வந்து -எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் -என்று அந்வயம் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-3-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

அநந்யார்ஹதா ஆபாதகன் த்ரிவிக்ரமன் -எல்லை நடந்து –சேஷ பூதர் -ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் ஸத்காரம்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை-அகில் புகை தூபம் -புஷ்ப்ப வர்ஷம் -மென்மை பரிமளம் -புகை இல்லை மணம் மட்டும்
-சுற்றும் விளக்கு -விளக்கு தெரியாது வெளிச்சம் மட்டும் -புகை இல்லை பரிமளம்க மழும் –
அஞ்சலி -சேஷத்வ அனுரூபம் -அவர்கள் எல்லாம் பக்தாத்மா-தானே முக்தரை பார்த்து தொழுதனர்
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே-மகாபலி என்னது என்று அபிமானித்த அன்று -ஓங்கி உலகு அளந்த உத்தமன் உடைய சேஷ பூதர்கள்
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-
மௌன விரதம் கலைத்து -வாக் நியதி உடையவர் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-போவார்க்கு வழிஇது என்று சொல்லி -எழுந்து அருளல் ஆகாதோ என்று
இரு பக்கமும் சாதாரமாக கனிவுடன் இசைத்து -பகர்ந்தார் -ஆதரவு உடன் –

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்-
உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே –
ஸ்ரீ வாமனனாய் திரு உலகு அளந்து அருளின செயலுக்கு தோற்று அடிமை புக்கவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திரு மொழி -3-4-2-என்னுமவர் போல்வர் உண்டே –
அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –

எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் –
இங்கே எழுந்து அருள வேண்டும் -என்று இரண்டு அருகும்-நின்று சொன்னார்கள்
முனிவர்கள் -என்றது -பேசலாகாது -என்று இருந்தமை தவிர்ந்தமைக்கு அறிகுறி –மௌனத்துக்கு விஷயம் புறம்பே என்று இருந்தார்கள் –
சம்பாஷணாதி பூஜாந்த்தம் – -ஜெப மத்யே -வைஷ்ணவோ சமாகதா –

வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே –
பரமபதம் செல்வார்க்கு வழி இது -என்று எதிரே வந்து சொன்னார்கள்-
சுக்ல கிருஷ்ண கதீஹ்யதே ஜகத சாஸ்வதே மத-ஏகயா யாதி அநாவ்ருத்திம் அத்யயாவர்த்ததே புன -ஸ்ரீ கீதை -8-26-
உலகத்திற்கு பழைமையானவை -என்கிறபடியே-குறித்தவர் எல்லாரும் போகக் கூடியதாய் கிடக்கிற வழி-
இன்று இது உண்டாகிறது அன்றோ-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –
பாகவதர் விஷயத்திலே தொண்டு செய்து நாம் நிலை பெற வேண்டும் என்று-
எதிரே தம் தாமுடைய நிலைகளைக் கடந்து வந்து ஆதரித்தார்கள் –
முதலிகள் தங்கள் சத்தை இழக்க கூடாது என்று அன்றோ பெருமாள் இடம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வரவை சொன்னால் போலே —
வைகுந்தர்க்கு-
வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-
அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –
ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே -அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்
எதிர் எதிர் -எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
பூமி அன்று அளந்தவர் தமர் முன்னே-தூப நல் மலர் மழை பொழிவனராய்க் கொண்டு-
முனிவரான உலகர் தொழுதனர் –
வைகுந்தர்க்கு வழி இது என்று எதிரே வந்து-எழுமின் என்று இரு மருங்கும் இருந்தனர் -என்க-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-2-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தமரைக் கண்டு மேகங்கள் உகந்தன –
ஆகாச சரரான தேவாதிகள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்களை பூரித்தார்கள் –
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன –
நெடுவரை போலே இருந்த தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகர்கள் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-2-

மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச்  செய்கிறார் –

நாரணன்  தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

அழகிய நீர் முகில்கள்  நாரணன் தாமரைக்கு கண்டு உகந்தன–அவை தான் பூர்ண கும்பங்கள் ஆயின -ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்  பட்டது என்றுமாம் -நீராலே அணியப் பட்ட கடல்கள் ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன -லோகங்களில் உள்ளார் எங்கும்  நெடுவரை போலே இருக்கும்  தோரணங்களை நிரைத்து தொழுதார்கள் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-2-

அநந்தரம் -நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
லோகத்தார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
உகப்பை யுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூரணமான மேகமானது
முகில் என்கிற ஒருமை ஜாதிபரம்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–த்வார வேதிகளில் போலே உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொற்குடங்களாக நிறைத்தது
நீரணி கடல்கள் நின்றார்த்தன -நீரை வஹிக்கிற கடல்களானவை ஒரு படிப் பட்டு நின்று கோஷித்தன
நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–நெடு வரைகளாகிற தோரணங்களை நிரைத்து உலகில் உள்ளார் எங்கும் தொழுதனர்
உலகம் என்று லோக பிரதானரை லஷிக்கிறது
இவ்விரண்டு பட்டாலும் அந்தரிக்ஷ பர்யந்தமான பூ லோகமானது உகந்து ஆதரித்த படியை ப்ரதர்ஸிப்பித்தாராய்த்து –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-2-

மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச்  செய்கிறார் –

நாரணன்  தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்–பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–நிருபாதிக சேஷியானவனுடைய அடியாரைக் கண்டு நல்ல நீரை யுடைத்தான மேகங்களானவை உகப்பாலே -உயர்ந்த ஆகாசத்தில் பூர்ண கும்பங்களாக சமைக்கப் பட்டன –முற்படக் கண்டு உகந்தன -பின்பு அவை தானே பூர்ண கும்பங்களாகாய்த்தின -ஒரு கால் தூர்ய கோஷத்தைப் பண்ணினோம் என்று இருக்கிறனவில்லை –ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எங்கும் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன –நீராலே அணியப் பட்ட கடல்கள் ஒருகால் ஆடினோம் என்று இராதே -ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன –
நெடுவரைத்-தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–அவ்வோ லோகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள் -உலகு என்று லோகத்தில் உள்ளாரைச் சொல்லுகிறது -மஞ்சா க்ரோஸந்தி இத்வத் — -சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

முதல் பாசுர சேஷம் -7 பாசுரம் வரை பிரகிருதி மண்டல ஸத்காரம்
நிருபாதிக சேஷி நாராயணன் சேஷ பூதர்களைக் கண்டு லோகத்தார் சதிகரிக்க
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷி உடைய சேஷ பூதர்கள் -சுத்தமான நீர்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்-உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொன் குடம் போலே பூரிக்க
-நீல வர்ணம் -ஆழ்வாரை கண்ட பள பளப்பு –
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்-நீரை வகிக்கும் கடல்கள் ஒருபடிப் படி நின்று கோஷிக்க
நெடு வரையில் மலைகள்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே-தோரணம் கட்டி -உலகில் உள்ளார் எல்லா பக்கமும் தொழ
முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்
அந்தரிக்ஷ பர்யந்தம் பூ லோகம் உகந்து சதிகரிப்பதை சொல்லிற்றே -உலகு -உயர்ந்தோர் மாட்டே –

மேல் உள்ள உலகங்கள்-செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-
நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை-
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன-
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –

நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –

உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு-

தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே-அங்கு உள்ளாரைச் சொன்னபடியுமாம்-
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்-
தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-1-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-1-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திருநாடு ஏறப் போகையில் பிரவ்ருத்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகந்து
மேகங்களும் கூட இவர்கள் போக்க தடவிய ஆகாசத்தை எல்லாம் பூஷித்துக் கொண்டு நின்று தூர்ய கோஷத்தைப் பண்ணின –
கடல்கள் ஆகிறவை திரைகள் ஆகிற கை எடுத்து ஆடின –
இப்படி சர்வ லோகங்களும் மங்களமான செயல்களை செய்தன -என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-1-

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இடமுடைத்தான ஆகாசத்தில் அழகிய மேகங்கள் தூர்ய கோஷத்தை பண்ணிற்றன-ஆழ் கடல் அலையா நின்று இருந்துள்ள திரையாகிற கையை எடுத்துக் கொண்டு ஆடிற்றன-
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தார் என்றுமாம் –
எனக்கு பரம பந்துவாய் ஆஸ்ரிதர் எல்லாம் உஜ்ஜீவிக்கும் புகழை யுடைய நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-1-

முதல் பாட்டில் அர்ச்சிராதி மார்க்க கமனத்தில் ஒருப் பட்டவர்களாய் போக்ய குண பூர்ணனான சர்வேஸ்வரனுடைய
சேஷ பூதரான பாகவதரைக் கண்டு சராசராத்மகமான ஜகத்துக்கு உண்டான ப்ரீதி விகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –எனக்கு அசாதாரண பந்துவாய் குண பிரதையையுடைய
நாராயணனுக்கு அசாதாரண பந்துக்களான சேஷ பூதரைக் கண்டு பிரியப்பட்டு
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின–சர்வ பிரதேசத்திலும் சூழ்ந்த ஆகாசத்தில் திரண்டு தோன்றின
மேகங்களானவை தூர்ய கோஷத்தைப் பண்ணிட்டன
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாயமான கடல்களானவை அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடிற்றான
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய -சப்த த்வீபங்களும் உபகார ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்திற்றின
வளம் என்று புதுக்கணிப்பு ஆகவுமாம்-

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-1-

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

சூழ் விசும்பு –-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –
அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -/ ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் /அழகிய முகில் என்னுதல் –
தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன –
அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இ றே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –
ஆழ்கடல்-அலைதிரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள  திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –
-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தன என்றுமாம் -இது எல்லாம் ஆரைக் கண்டால் என்னில் –
என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இ றே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –
வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –
தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-1-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

அர்ச்சிராதி மார்க்கம் கமனத்தில் ஒருப்பட்டவராய் -சர அசர ஸ்தாவரங்கள் ஜங்கங்கள் ப்ரீதியால் விகாரம் அடைந்து –
தமர்கள் -அந்யாபதேசம்-போக்கிய குண பூர்ணன் சர்வேஸ்வரன் குணங்களை அனுபவிக்க –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-எல்லா இடமும் சூழ்ந்து -சர்வ பிரகாரத்தாலும் –
ஆகாசத்துக்கு அலங்காரமாக மேகங்கள் தூரிய வாத்யம் போலே முழங்க
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாத பகவத் பக்தி சிந்த -ஆழ்ந்த -அலைகள் ஆர்ப்பரிக்க
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்-சப்த தீபங்களை உபகார வஸ்துக்கள் சமர்ப்பித்து -புதுக் கணிப்பு என்றுமாம் –
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
கல்யாண குணங்கள் பாட வாழ்க்கை கிட்டும் இதுவே திருவாய் மொழி உடைய சாரம் –
அசாதாரண பந்து -ஆனந்தாவாஹமான குணங்கள் சீர்மை -அசாதாரண பந்துக்கள் சேஷ பூதர் –

ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-
பூமியை சூழ்ந்த ஆகாசத்தில்
ஆபரணமாக -விசும்புக்கு -முகில்
ஆகாசப் பரப்பு அளவிலிலும் அணியப்பட்ட முகில் -ஒப்பனை செய்தால் போலே வியாபிக்கப் பட்ட
தூரியம்-முழங்க -கந்தர்வர்கள் -அப்சரஸ் கணவர்கள் —
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
மத்திய ராத்ரீ புஷப வ்ருஷடீ-ஜாய மானே ஜனார்த்தனே -விஷ்ணு தர்மம் –தூ வானம் போலே மழை பொழிய –
இயற்க்கை மேகம் -விகாரம் –
இவன் போக்குக்கு அடியான அவன் வரவிலே பிறந்த விக்ருத்தி – இ றே- இவன் போகும் போகும் பொழுது சொல்ல வேண்டுமோ
அவற்றுக்கு அபிமானிகள் இந்திரன் வருணன் -பர்ஜன்யங்கள் -சொன்னதாகவுமாம்
எல்லா வற்றையும் தன்னுள்ளே அடக்க வல்ல கடல்கள் -தைர்ய பங்கம் பிறந்து –
அஷோபியாம் -கலக்க முடியாத கடல் -சமுத்திர இவை காம்பீர்யம்
-அலையா நிற்கும் அலைகள் கைகள் கொண்டு ஆர்ப்பரிக்க
அவன் அவதாரம் நம்மை அங்கே கூட்டிச் செல்லவே –
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
புதுக் கணித்தன -உபகாரங்களை தரித்தன
அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-
என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக்க சம்பந்த -சம்பந்திகளையும் -ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்
யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –
தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு
ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –
சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே
அடியார்கள் வாழும் படியான கல்யாண குணங்கள்
கேட்க்கும் என்னும் பீதியாலேயோ
உகந்தே –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –