ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-1-
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலனாய் –
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனத்தி அபரிமித உதார குண சாகரனாய் இருந்த
உன்னுடைய ஸுந்தர்யாதி குணங்களைக் காட்டி என்னைத் தோற்பித்து அடிமை யாக்கி
எனக்கு ஒருவனுக்கும் உன்னுடைய உன்னுடைய குணங்களையே தாரகமாக்கி
என் நெஞ்சம் நிறையப்புகுந்து இருந்த உன்னை இனி நான் போகல் ஓட்டேன்
இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து
என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –
இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு
தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-1-
நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
முனியே –பஹுஸ்யாம் என்று தொடங்கி சொல்லப்படுகிற மஹத் அஹங்காராதி பஞ்ச பூத பர்யந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியை பண்ணுவதாய் யுள்ள திவ்ய சங்கல்பத்தை யுடையனாய் பகவத் சப்த வாச்யனாய் பர ப்ரஹ்ம பரமாத்ம சப் தங்களினாலே வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட ஸ்வரூபேண அவஸ்த்திதனாய் இருந்துள்ள பரம புருஷனே என்றவாறு –
நான்முகனே -சதுர்முக ஸ்வரூபனாய் -அவனுக்கு அந்தராத்மாவாய்க் கொண்டு திசைமுகன் கருவுள் வீற்று இருந்து சேதனரான புருஷர்கள் அசேதனமான ஸ்வ சரீரத்தை கொண்டு தம் நினைவுக்கு தக்கபடி கமன ஆகமனாதி சேஷ்டைகளைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர் முகனைக் கொண்டு -ஸ்வ சங்கல்ப அனுகுணமான -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித பூத ஸ்ருஷ்ட்டியையும் பண்ணி அருளுதலால் சேதனரானவர்கள் தேவர்கள் என்றும் மனுஷ்யர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் க்ஷத்ரியர் என்றும் கோ வென்றும் ஸ் வ சரீரங்களைக்காட்டுகிற சப் தங்களால் வேறாய் இருந்த தாங்களும் சொல்லப் பட்டால் போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் காட்டக் கடவ சதுர்முக சப்தத்தாலே-அவனில் வேறாய் அவனுக்கு அந்தராத்மாவாய் இருந்த எம்பெருமானும் சொல்லப்படுகையாலே –நான் முகனே -என்னும் சொல்லாலே எம்பெருமானை சம்போதிக்கிறது –
முக்கண் அப்பா–இப்படி ஜகத் சம்ஹாரம் பண்ணுகிற எம்பெருமானுக்கு சரீர பூதனான த்ரி நேத்ரனுடைய பேரான சப்தத்தினாலே அவனுக்கு அந்தராத்மாவான எம்பெருமானை சம்போதிக்கிறது –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய் ஆதி தேவர்களாய் யுள்ள ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே -தான் அடியவர்க்கு எளியன் ஆதலால் தான் அவர்களோடே ஒத்த தரத்தனாய் இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திருவவதாரம் பண்ணினால் போலே ஆஸ்ரித ஸூலபத்வர்த்தமாக ஆதி தேவனாய் விஷ்ணு நாமாவாய் ஸ்வ ஸ்வரூபத்தாலே திருவவதாரம் பண்ணின படியால் சம்போதிக்கிறது –த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாகவாதல் -அவனுடைய அழகால் விசஜாதீயத்தையாலே –பொல்லா -என்கிறது –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி என்னை வஞ்சித்து என்னை அடிமை கொண்ட பிரானே
தனியேன் ஆர் உயிரே -தன்னைக் காணப் பெறாதே வியசனத்தில் ஒரு துணை இன்றியே இருந்த எனக்கு பிராண ஹேதுவாய் இருந்துள்ள பிராணனாய் யுள்ளாயே -என் தலை மிசையாய் வந்திட்டு–இப்படி ஸ்வரூபத்தினாலும் -ஸமஸ்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டியாதி சேஷ்டிதைகளும் உன்னால் அன்றி ஒருத்தராலும் தம்மால் செயல் இல்லை -என் பக்கலிலும் சுவீகார ப்ரப்ருதி இவ்வளவும் வர உன்னால் அல்லது என்னால் செய்யப் பட்டது ஒன்றும் இல்லை -மேலும் என்னால் செயல் இல்லை –இப்படி ஸமஸ்த வியாபாரமும் செய்கிற உனக்கு இனி மேல் பரிஹரிக்கை ஒரு பரமும் அன்று – ஆதலால் இப்படி என் தலை மிசையாய் வந்திட்டு –இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–
இப்பாட்டில் பத யோஜனை ஆழ்வான் படி –என் தலை மிசையாய் வந்திட்டு -என்கிறது எனக்கு பூர்ணமாக வந்து தோற்றி —நிர்ஹேதுகமாக வந்து வைத்து என்றுமாம் –
இனி நான் போகல் ஒட்டேன்-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றிக்கே -முக்த ப்ராப்த தேசத்தையும் காட்டிலும் இனி விஸ்லேஷிக்க ஓட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–பண்டு போலே குண ஆவிஷ் காரங்களை பண்ணி -பெற்றேனாகப் பண்ணி -என்னை வஞ்சியாது ஒழிய வேணும் –
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-1-
முதல் பாட்டில் ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய்ப் போந்து
வடிவு அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து உன்னை ஒழியச் செல்லாதபடி யாக்கி
என்னை அனுபவிப்பிப்பதாக த்வரித்து வந்து ஸந்நிஹிதனான நீ
இனி குண ஆவிஷ்காரத்தாலே வஞ்சித்து அகலப் போக இசையேன் என்கிறார் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
முனியே -நாம ரூப விபாக அநர்ஹமாய்-சித் அசித் விசேஷிதமாய்க் கொண்டு ஸம்ஹ்ருதமாய் –
ஏகீபவித்துக் கிடக்கிற தசையில் ஆஸ்ரயண அர்ஹமாகக் கொண்டு ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தை மனனம் பண்ணுமவனாய்
நான்முகனே–மஹதாதி ரூப சமஷ்டியை ஸ்வயமேவ ஸ்ருஷ்டித்து -அண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியைப்
பண்ணுகைக்காக சதுர்முகனை சரீரமாக யுடையையாய்
முக்கண் அப்பா -ஸம்ஹ்ருதி சமயத்தில் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய உபஸம்ஹார அர்த்தமாக சக்தி ஸூசகமான
த்ரி நேத்ரத்தை யுடையனாய் -அதி ப்ரவ்ருத்த கரணருடைய உப சம்ஹாரத்தாலே
உபகாரகனான ருத்ரனை சரீரமாக வுடையையாய்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா–அவர்கள் இருவருக்கும் நடுவே
ரக்ஷகனான தசையில் எனக்கு உன் பக்கலில் ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலம் போலே போக்யமான
திரு அதரத்தையும்-தாமரைப் பூப் போலே தர்ச நியாமான திருக் கண்ணையும் யுடைத்தாய் இருபத்தொரு
துளையாத கரு மாணிக்கம் போலே இருக்கிற திவ்ய வடிவை யுடையையாய் –
அநாதியாக ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த சோரனான என்னையும்
அவ்வழகாலே அறியாதபடி வஞ்சித்து அபஹரித்துக் கொண்டவனாய்
தனியேன் ஆர் உயிரே -அப்ராப்த பலனாகையாலே-தனிமைப்பட்டு எனக்கு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணித்
தன்னை ஒழியச் செல்லாத படி எனக்குப் பரிபூர்ண பிராணனானவனே
என் தலை மிசையாய் வந்திட்டு–செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்னும்படி
என் தலைக்கு மேலாயக் கொண்டு வந்து சமைந்து
இனி நான் போகல் ஒட்டேன் –சம்சார தோஷத்தோடே புருஷார்த்தத்தையும் ஆவிஷ்கரித்து
ஆர்த்தியையும் அபி நிவேசத்தையும் ஜெநிப்பித்த பின்பு
உன்னாலே லப்த ஞான ப்ரேமனாய்க் கொண்டு அதி த்வரிதனாய் –
உன் த்வரையையும் அறிந்து இருக்கிற நான் -முன்பு போலே நீ அகன்று போக இசையேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னைப் பெறா விடில் முடியும்படியான என்னை
சம்சார தசையில் விஷயாந்தரங்களைக் காட்டி அந்நிய பரனாக்கினவோ பாதி யாதல் –
ருசி பிறந்த பின்பு குண ஆவிஷ்காராதிகளைப் பண்ணி ஆஸ்வசிப்பித்தவோ யாதல் –
சிறிதும் வஞ்சியாது ஒழிய வேணும் –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-1-
நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
முனியே— பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூ ஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று -ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது -என்றுமாம் -எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கைவிடப் பார்த்தாயா -என்கை –
நான்முகனே-ஆண்ட ஸ்ருஷ்ட்டி யளவும் தானே பண்ணி -இவ்வருகு யுண்டான தேவாதி ஸ்ருஷ்டிகளை பண்ணுகைக்காக ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக நின்று ஸ்ருஷ்டித்தவனே –நான்முகன் என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது -மனுஷ்ய சப்தம் தத் சரீரி அளவும் செல்லுகிறாப் போலே –சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே–ஸ்ருஷ்டிந்தன கரிஷ்யாமி -த்வாமாவிசய–தநாதரிசின பந்த்தாநவ் –திசைமுகன் கருவுள் வீற்று இருந்து –
முக்கண் அப்பா-இப்படி ருத்ர சரீரியாய்க் கொண்டு ஜகத் உப சம்ஹாரம் பண்ணுமவனே -அதி பிரவ்ருத்தனான பிரஜையை விலங்கிட்டு வைப்பாரைப் போலே ஸ்ருஷ்ட்டி யோபாதி சம்ஹாரமும் உபகாரம் ஆகையால் –அப்பா -என்கிறார் -சம்சார சிரம கின்னா நாம் -இத்யாதி –ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்தர கரணீம்–இத்யாதி –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் சஜாதீயனாய்க் கொண்டு அவதரித்தால் போலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் நடுவே -விஷ்ணு நாமாவாய் அவதரித்து ரக்ஷணத்தைப் பண்ணுகையாலே சம்போதிக்கிறது -அவ்வடிவிலே துவக்கு உண்டவர் ஆகையால் –என் -என்கிறார் –
பொல்லா -அழகு இது என்னில் நாட்டார் அழகோ பாதியாம் என்று விஜாதீயம் என்று தோற்றுகைக்காக -என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாக என்னுதல் –
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –
தனியேன் -சம்சாரிகளோடு பொருந்தாதே உத்தேச்யமான திரளில் புகப் பெறாமையாலே தானியேல் -என்கிறார் –
ஆர் உயிரே -எனக்கு குணங்களை ஆவிஷ் கரித்து குண அனுபவமே யாத்ரையாம் படி பண்ணி எனக்கு பிராண ஹேதுவானவனே –
என் தலை மிசையாய் வந்திட்டு-என் தலையிலே திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து -செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இ றே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை -இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு -ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இ றே –
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் -/ என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன -ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-1-
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய் போந்து -வடிவு அழகைக் காட்டி -ருசியைப் பிறப்பித்து -உன்னை ஒழிய தரியாதபடி ஆக்கி –
இனி குண அனுபவம் கொடுத்து பிரிக்காதே –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்-நாம ரூப விபாக அநர்ஹமாய் -சித்த அசித்- அவிசேஷமாய் -ஒன்றும் தேவும் இத்யாதி
-இதம் அக்ரே –சதேவ ஏக மேவ அத்விதீயம் ஆஸீத் -ஏகி பவித்து -அபின்ன நிமித்த -விசித்ரா தேக சம்பந்தி ஆச்ரயண அர்த்தமாகக் கொண்டு
-சேதன வர்க்கத்துக்கு -கரண களேபரங்கள் கொடுப்பவனாக தயாமானாவானாகக் கொண்டு -தாய் தன பேராக குழந்தையை அணைத்து
-சிருஷ்ட்டி பிரகாரம் மனனம் பண்ணி
மஹத்தாதி சமஷ்டி ஸ்வயம் ஏவ ஸ்ருஷ்டித்து -பஞ்ச பூதம் –அண்ட கடாகங்கள் -அண்டாந்தர வர்த்தி – ஸ்ருஷ்ட்டி பண்ண
-பிரஜாபதி உன்னை சரீரமாகக் கொண்டு பண்ணுவேன்
ஸம்ஹ்ருதி -சரஷ்ஷடமான ஜகத்தின் உப சம்ஹார அர்த்தமாக த்ரி நேத்ரம் -சம்ஹார சக்திக்கு அடையாளம்
அப்பா -உபகாரகன் -அழித்து-மேல் பாபங்கள் சேர்க்க முடியாதே -அதிபிரிவர்த்த கரணங்கள் முடித்து
இருவர் நடுவில் ரக்ஷகனான தசையில்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா-ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலமான -போக்யமாய் -ஆதாரம்
-தாமரைப் பூ போலே தர்ச நீயமானதுளையாத கரிய மாணிக்கம் -முழுவதாக -அநாதி ஆத்ம அபகாரம் பண்ணி சோரனான
என்னையும் வஞ்சித்து அபகரித்து -நின்றார் அறியா வண்ணம்
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு-அபிராப்த பலம் என்பதால் தனிமைப் பட்ட எனக்கு குணங்களைக் காட்டி தரிக்காமல்
-பரி பூர்ணனான -தான் ஏறி தலை மிசையாய் பிராணன் போலே
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-சம்சார தோஷம் -அறிந்து -புருஷார்த்தமும் காட்டி அருளி
-ஆர்த்தியையும் அபி நிவேசமும் ஜெநிப்பித்த பின்பு -நான்கையும் அருளிய பின்பு
முன்பு போலே நீ அகன்று போக ல் ஓட்டேன் -இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு
உன் த்வரையும் அறிந்த பின்பு -உன்னைப் பெறாவிடில் முடியும் நிலையில் உள்ள என்னை -சம்சார தசையில் விஷயாந்தரங்கள் காட்டி
பல நீ காட்டி படுத்த மாயம் ருசி பிறந்த பின்பு குணங்களைக் காட்டி பராக்கு பார்க்க வைத்தாய் -ஆசுவாசிப்பித்தாய் முன்பு
-அது போலே இனி மேல் மாயம் இனி செய்யேல் -என்னை -வஞ்சியாதே கொள்ள வேண்டும் –
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து – நீ சென்று -பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-விட ஒண்ணாது-என்கிறார்-
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-
முனியே –
பஹுஸ்யாம் -சங்கல்ப -முனி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் –
பஹு பாவன சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த கார்யம் சித்திக்க
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் –
விகாரத்வம் வருமோ -அவிகாராயா சுத்தாயா –
சரீராத்மா பாவம் -சொல்லி -ஆத்மாவுக்கு நிர்விகாரத்வம் சித்திக்கும் –
ப்ரஹ்மத்துக்கு அம்சம் -அறிந்து நிர்பரராய் -பொறுப்பாய் -இருப்போமே-
விசிஷ்ட ப்ரஹ்மம் சொல்லி -பல பிரமாணம் சொல்லி –
முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்-
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்-
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்-
இதம் சர்வம் -கார்ய தசை –
காரண தசை சேதனம் அசேதனம் –
ப்ரஹ்மம் ஒன்றே இரண்டு தசைகள் – ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் –
விசேஷணம் மாறி விசேஷயம் ஒன்றாக இதம் சர்வம் -காரியம் -ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு
இதம் சர்வம் ப்ரஹ்ம-ஒன்றாக ஹிந்து தஜ்ஜலான் -என்கிறது –
சதேவ -சத்தாகவே ஸ்ருஷ்டிக்கு முன்னால் இருந்தது -ஏக மேவ ஒன்றாகவே இருந்தது
ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –
உயிர் பரம் பொருளின் கூறே யாகும்-அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்-
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே-
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்–
ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே-ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே-வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ-இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே-பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே-அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே-தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தண்ணீரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே-தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட-ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி-
ஆகாசத்துக்கு இந்திரியங்கள் காரணம் இல்லாமையால் -இதர பூத சதுஷ்டயம் -இந்திரியங்களுக்கு ஆப்யாயகமாகக் கொண்டு
ஆகாசம் -சப்தம் -காதுக்கு /வாய் -ஸ்பர்சம் -தொக்கு /பிருதிவி -கந்தம் –
இந்திரியங்களுக்கு தன்மாத்திரைகள் பூத சூஷ்மம் காரணம் இல்லாமையால் -ஆப்யாயகம் -அனுபவிப்பதால் –
சப்தம் தன்மாத்திரை -ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்திரை பிறக்கும் -இதனால் பூதங்களுக்கு தன்மாத்திரை காரணம்
அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் மூன்று நிலைகள் /விதை -பருத்து -வெடிக்கும் முளை விடும் -மூன்று தசைகள் –
அவ்யக்தம் தெளிவு இல்லாமல் மஹான் தெளிவு பிறக்கும் -மேலே அஹங்காரம் -பூத தன் மாத்திரைகள் -பூதங்கள் –
அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்-
அப்பரம புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே-முனிதல் கோபித்தல் –
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து-
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே-
ஜலத்தின் நாமரூபமேயாய் லயித்தால் போலே -காரணதசையில் லயித்தால் போலே குடம் மண்ணேயாய் என்றவாறு –
எப்பொழுது பரதன் சத்ருக்கனன் இளைய பெருமாள் உடன் கூடுவேனோ -கூடவே இருந்தாலும் அசத்சமம் என்றவாறு –
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-
தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன-இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-
ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்-
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு-
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
சிறை புகுந்தவள் ஏற்றம் -வலிய அன்றோ சிறை புகுந்தாள்-கண்டு பிடிக்க திருவடி திரு உள்ளம் கொண்டால் போலே
சர்வேஸ்வரன் நம்மை – கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே-
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ-
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ-
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்-
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது-
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி-
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-
நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக-சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து-
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து-
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்-முதலிய செயல்களை செய்யுமாறு போலே-
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்-அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது-
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு-
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்-
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே-
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –என்றும் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-
சரீரத்தை காட்டுகிற சொல் ஆத்மா வரையிலும் தன் பொருளைக் குறிக்கும் என்கிற-நியாயத்தாலே
தனக்கு சரீரமாய் இருக்கும் பிரமனைக் காட்டக் கூடிய நான் முகன் என்ற சொல்லாலே-
அவனில் வேறாய் அவனுக்கு ஆத்மாவாய் இருக்கிற எம்பெருமான் சொல்லப் படுகையாலே-
நான்முகனே -என்ற சொல்லால் -எம்பெருமானை விளிக்கிறது —
முக்கண் அப்பா –
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் –
ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது
எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ
அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர் -என்கிறபடியே
அழிக்கப் படுகின்ற பொருள்களோடு
அழிக்கின்ற வனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –
அப்பா –
என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-
படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ –
நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்-
சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
எங்கனே என்னில்
தம் தாம் கைகளைக் கொண்டு கண்களை கலக்கிக் கொள்வாரைப் போலே
படைத்த படைப்பு பேற்றுக்கு உடல் அன்றியே தீம்புக்கு உடல் ஆனவாறே-
சிறு குழந்தைகளை கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு காப்பாற்றும் தாய் தந்தையரைப் போலே-
உறுப்புகளையும் உறுப்பக்களோடு கூடிய சரீரத்தையும் நீக்கி அழித்திட்டு விக்கியும் உபகாரமாம் படி இருக்கிறபடி-
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-
கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை
சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
தன்னுடைய த்யானத்திலே இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்த்ரியங்கள் -என்று தொடங்கி
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்ப்பிக்க நினைந்து த்யானம் செய்தான் –
த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அது தான் தண்ணீர்-
அது பொன் மயமான அண்டம் ஆயிற்று-
அந்த அண்டத்தின் நின்று நான்கு முகங்களை உடைய பிரமன் உண்டானான்-
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தான்-
அங்கனம் த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அவ் வேர்வையின் நின்றும் குமுழி உண்டாயிற்று-
அந்த குமுழியின் நின்றும் முக்கண்களை உடையனாய்-
சூலத்தை கையிலே தரித்தவனாய் ஒரு புருஷன் உண்டானான்-
என்று சொல்லுகிற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
படைத்தல் அழித்தல்களுக்கு இடையில்
பருந்து இறாஞ்சினால் போலே இறாஞ்சிக் கொண்டு போவார்களே அன்றோ காப்பார் இல்லா விட்டால்
அதற்காக படைத்தல் அழித்தல் செய்யும் தலைவர்களாய்
ஆதி தேவர்களாய் உள்ள
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-
ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-
தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய்
உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன் வேதம் வேதாங்களில் பேசப்படுகிறான்-
கர்மம்களுக்கு தகுதியாக உயர்வு தாழ்வு இன்றி-கண் அழிவு இன்றி செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே
படைத்தல் அழித்தல் களுக்கு ஆள் இடும் –கார்மீதீனம் -தானே இவை தயைக்கு வேலை இல்லையே அங்கு எல்லாம் –
காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்-
எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு
ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை -என்றும் சொல்லுகிறபடியே-
நான் முகனே முக்கண் அப்பா –
என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்-
இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே -என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்-
இந்த திரு மேனியை பற்றுக் கோடாக சொல்லா நிற்கச் செய்தே-இதனை விட்டு திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போ என்கிறது-
இதனை விடச் சொல்லுகிறது அன்று-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்து அளவும் போவான் என் -என்கையிலே தான் கருத்து-
பொல்லா என்பதனை -கரு மாணிக்கம் -என்பதனோடு சேர்ப்பது-பொல்லாக் கரு மாணிக்கம் என்று கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்-
அன்றிக்கே
அழகிலே வேறுபட்ட சிறப்பினை உடைமையாலே கூறுகிறது -என்னுதல்
கனிவாய் –
அவாக்ய அநாதர -பேசாதவன் -விருப்பமில்லாதவன் என்று சொல்லப் படுகிறவன் –
அனுகூலரைக் கண்டு -அங்கனம் சொல்லப் படுகின்ற நிலை நீங்கி புன் முறுவல் செய்து நிற்கும்படியைச் சொல்கிறது –
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி –
தாமரைக் கண் –
வினவப் புக்கு விக்கித் தடுமாறினால் குறையும் தலைக் கட்டும் கண்களைச் சொல்லுகிறது-
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே-
திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் -என்கிறபடியே
கரு மாணிக்கமே –
குளிர்ந்து -இவ் உலகத்தில் விடாய் தீர அணைக்கும் உடம்பைச் சொல்லுகிறது
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால்
விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது -என்கிறபடியே
கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது-
என் கள்வா –
என் இசைவு இன்றிக்கே என்னைக் கவர்ந்தவனே –
கருமத்தாலே இறைவன் உடையதான ஆத்மாவை முன் தோற்றாதே நின்று கவர்வான் இவன்-வடிவினைக் காட்டி இவனைக் கவர்வான் அவன் –
சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய -என்னின் -உரம் இருப்பது-
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி
ஸ்ரீ ஜனக ராஜன் பெண் பிள்ளையை நீர் வார்ப்பித்து தனக்கு ஆக்கினாப் போலே அன்றோ –ஆத்மாவை தனக்கு ஆக்கிக் கொள்ளுகையாவது –
தனியேன் ஆர் உயிரே –
என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே
இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –
பிராட்டி அசோக வனத்தில் அரக்கிகள் நடுவே இருந்தால் போல் காணும் இவருக்கு-இவ் உலக மக்கள் நடுவே இருப்பு
உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே —
என் தலை மிசையாய் வந்திட்டு –
செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே -10-8-5-
தலை மேலே தாள் இணைகள் -என்று சொல்லுகிறபடியே குறைவு இல்லாமல் வந்து தோற்றி –நிர்ஹேதுகமாக வந்து தோற்றி -என்னுமாம் –
இனி-
உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-
நான் –
வழிச் சுவடு அறிந்த நான்
போகல் ஒட்டேன் –
தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-
போகல் ஒட்டேன் –
வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ –
இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்-
விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு-
மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று-
நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –
ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –
அங்கன் வேண்டுவான் என் -என்ன
என்னையே –
ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே
விரகம் தின்று-குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் –
அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –
முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –
நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –
தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –
பிரதம ஜீவன் நான்முகன் –
முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –
கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –