ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெரிய பிராட்டியார் பக்கலிலும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலும் பண்ணும் வ்யாமோஹத்தை
என் பக்கலிலே பண்ணிக் கொண்டு என்னை புஜித்து அருளின உன்னைப் பெற்று
இனி விடுவேனோ என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-பெரிய பிராட்டியாருக்கு ஸ்நேஹியாகையாலே அவள் பரிஹாரமான என் பக்கலில் ஸ்நே ஹத்தைப் பண்ணினவனே –நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே / நீலக் கடல் -என்று கடைந்து அருளுகிற எம்பெருமானுடைய திரு நிறம் நிழல் இட்ட படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-7-

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷகனாக உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–வடிவு அழகையும் போக்யத்தையும் யுடையளான பிராட்டிக்கு
உகப்பான வத்தாலே என் பக்கலிலும் அதி ப்ராவண்யத்தை யுடையையாய்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்–நீல ரத்ன கிரியானது இரண்டு பிறையை கவ்வி எழுந்து இருந்தால் போலே
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்–விலக்ஷணமான வடிவு அழகை யுடைத்தாய் அத்விதீயமாய்
இருபத்தொரு ஸ்ரீ மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திரு எயிற்றிலே வைத்த அபதானத்தாலே
என்னை சம்சாரத்தில் நின்றும் எடுக்கும் ஆகாரத்தை பிரகாசிப்பிக்கும் ஸ்வாமியாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –உன் திரு வடிவின் நிழலீட்டாலே நீலமான கடலைக் கடைந்து
யரும் தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே –
இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து
கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
நீலக்கடல் -என்று நீல ரத்னத்தை யுடைய கடல் என்றுமாம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி  கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இ றே-க்ருபயா  பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இ றே பிராட்டி நீர்மை –
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்--ததஸ்தம் உத்க்ஷிப்ய நீல இவா சலோ மஹான் –ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே –பிறையில் மறுவோபாதி யாய்த்து திரு எயிற்றில் கிடந்த பூமி –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்-மாசுடம்பில் நீர் வாரா நின்ற நிலை இ றே இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயமாய்த்து -பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு-என்கிறபடியே பிரணயிநி அழுக்கோடு இருக்க தாமான படியே வருவாராகில் பிரணயித்தவத்துக்கு நமஸ்காரமாம் அத்தனை இ றே -அவன் அழிவுக்கு இட்ட வடிவைப் பற்றி இ றே இவர் ஆலத்தி வழிக்கிறது / ஒன்றாய் -வராஹ சஜாதீய மாத்ரம் என்னுதல் –த்ரைலோக்யத்தையும் கண் செறியிட்டால் போலே விம்ம வளர்ந்தபடியாலே அத்விதீயம் என்னுதல் –
நீலக் கடல் கடைந்தாய் -பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே -/ நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் -/ நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் –
உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால்

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள்
-அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார்
-புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார்
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார்
பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட
சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் –
உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம்
மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய்
-உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்-
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி-
என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே-
ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே-
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே-
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-
அன்றிக்கே-
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே-
காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –
பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்-
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்-
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-
அன்றிக்கே-
நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்-
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading