ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-8-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

புண்ய பாப ரூப கர்ம தத் பல போக்த்ரு சேதன கர்ம பல போக உபகரண ப்ரப்ருதி
சர்வ ஜன அந்தராத்மா பூதனாய் சர்வ ஜகத் காரணமாய் சர்வைரத்ருஸ்யனாய் இருந்த
உன்னைப் பெற்று இனி விடுவேனோ -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ -ஆத்மாவைப் பற்றி விடாதே இருக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் -ஆத்மா தன்னையும் -கர்ம பலமானவற்றையும் -இவை எல்லாம் ஆகிற துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான த்ரை லோக்யம் ஆகிற தூற்றை யுண்டாக்கி -அந்த துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான ஜகத்தினுள்ளே புக்கு -எங்கும் வியாபித்து தெரியாதபடி நின்றாய் –என் முதல் தனி வித்தேயோ-எனக்கு முதலிலே இச்சையும் இன்றிக்கே இருக்க உன் பக்கலிலே ஆபி முக்யத்தைப் பிறப்பித்தவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-8-

அநந்தரம் சர்வ தாரகனாம் படி அந்தராத்மாவாய் எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்துக் கை விடுவேனோ என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்–இரண்டு வைக்கப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நிர்வாஹகனாய் —
கர்ம வஸ்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் -அந்தக் கர்மங்களால் யுண்டான ஸூக துக்கங்களை பிரதாவாய்க் கொண்டு
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-இந்த ஜகத் த்ரயம் எல்லாம் ஆகிற பெரிய தூற்றை பிரகாரமாக யுடையையாய் —
கர்ம நிபந்தனமாக பிரவேசித்தார்க்குப் புறப்பட வழி இல்லாத ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ தந்திரனாய் பிரவேசித்து
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-ஒரு பிரகாரத்தாலும் அறிய ஒண்ணாத படி ஸூஷ்ம பூதனாய்க் கொண்டு
மறைந்து நிற்குமவனாய் எனக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு பிரதம ஸூக்ருதமான அத்விதீய காரணம் ஆனவனே –
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை- எனக்கு நிரூபமாய் அபரிச்சின்னமான பிராண பூதனாய் இருக்கிற
உன்னை கை புகுரப் பெற்று வைத்து உன்னை விடில் முடியும்படியான அவஸ்தை பிறந்த பின்பு விட விரகு உண்டோ –
ஓ என்கிற அசை விடில் செய்வது என் என்கிற விதாதத்தைக் காட்டுகிறது –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று  இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை-ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
உற்ற இரு வினையாய் -இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –
உயிராயப் -அவற்றிலே சிறைப்பட்டுக் கிடக்கிற ஆத்மாவுக்கு நியாமகனாய்
பயன் ஆயவையாய்-அந்த புண்ய பாபங்களுடைய பலன்களுக்கு நிர்வாஹகனாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-முற்றக் கரந்து ஒளித்தாய்--இவை எல்லாம் ஆகிற த்ரை லோக்யம் என்கிற தூற்றை யுண்டாக்கி —பெரும் தூறு -என்கிறது -துர்ஜ்ஜேய ஸ்வ பாவம் யுண்டாகையாலே -இந்த லோகத்தின் உள்ளே புக்கு -எங்கும் வியாபித்து துர்ஜ்ஜேய ஸ்வ பாவனாய் இருந்தாய்
என் முதல் தனி வித்தேயோ-இப்படி இருந்து வைத்து உன்னை எனக்கு பெறுகைக்கு அடியான அத்விதீயமான மூல ஸூ க்ருதத்துக்கு உத்பாதகனாய் -உன் பக்கலிலே ஆபிமுக்யத்தை -ஒளன் முக்கியத்தை -பிறப்பித்தவனே -இப்படிப் பட்டு இருக்கிற உன்னை பிரதம ஸூக்ருதத்துக்கும் உத்பாதகனாய்க் கொண்டு வந்த தரப் பெற்ற நான் உன்னைப் போக்குவேனோ –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா
-கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால்
ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக
எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் –
எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் –
-அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ –
ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் –

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ-
அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ-
இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் –
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே-
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே-
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்-
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்-
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய-
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது-

முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-
இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி
த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –
பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு –
புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு –
தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் –
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading