ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-5-
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
உம்முடைய பரத்தை நான் நிர்வஹிக்கத் தவிர்த்தால் அந்த பரத்தை நீரே நிர்வஹித்துக் கொள்ளலாகாதோ என்னில்-
நீ என்னைக் கை விட்டு உபேக்ஷித்தால் பின்னை யாரைக் கொண்டு எத்தைச் செய்வது –
நான் என்று ஓன்று உண்டோ -என்னுடையது என்று ஓன்று உண்டோ -அடைய முடிந்தது இ றே-ஆனபின்பு
அக்னி சந்தப்த்தமான இரும்பு தாபம் தீரும்படி நீரைப் பருகினால் போலே
உன்னைப் பிரிந்த என்னுடைய ஸந்தாபம் எல்லாம் தீரும்படி யுன்னைப் பருக எனக்கு ஆராவமுதானாய் –
இனிக் குறையும் நீயே செய்து அருளாய் என்கிறார் –
——————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-5-
நான் என்னுடைய யத்தனத்தாலே உன்னைப் பெறுகிறேனாக நீ என்னைக் கை விட்டு இருக்கில் -நான் என்றும் என்னது என்றும் சில உளவோ -முடிந்தேன் அத்தனை இ றே என்கிறார் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
ரக்ஷகனான நீ -அநந்ய கதியான என்னை உன் பக்கல் நின்றும் போர தூக்கிப் பொகட்டால் பின்னை நான் ஆரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -என்ன சாதனத்தாலே என்னாதே ஆரைக் கொண்டு என்கிறது என் என்னில் -என்றும் புருஷார்த்தம் பெறுவது பரம சேதனனாய் இருப்பான் ஒருவனாலே என்று இருக்கையாலே –அக்னி சந்தப்த்தமான இரும்பு நீரை நிஸ் சேஷமாக புஜிக்குமா போலே / என் ஆர் உயிரை-சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய நிரதிசய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய் –காய்ந்த இரும்பு -அக் காய்ச்சல் தீர நீரைப் பருகுமா போலே என்னுடைய சந்தானம் எல்லாம் தீரும் படி எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -என்றுமாம் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-5-
அநந்தரம் எனக்கு நிரதிசய போக்ய பூதனாய் இருந்து வைத்து நீ என்னை உபேக்ஷிக்கப் பார்த்தால்
எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ -என்கிறார் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –தன் காய்ச்சல் தீரும்படி இரும்பானது
உண்ட நீர் போலே என் ஆத்மாவின் விடாய் எல்லாம் தீரப் பரிபூர்ணமாக பருகைக்கு
எனக்கு திருஷ்ணை தொடாத அம்ருதமானாயே -இப்படி இருக்க –
இரும்புண்ட நீர் போலே என் ஆத்மாவை முற்றாய் பருகினான் என்கிறபடியே நீ பூர்ணமாகப் பானம் பண்ணுகைக்கு உறுப்பாக
உன் போக்யதையை எனக்குப் பிரகாசிப்பித்தாய் என்னவுமாம் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் -உன் வாசி அறிந்து புஜிக்கும் படி பண்ணி பிராப்தி பர்யந்தமாக பிரகாசிப்பித்த நீ
அத்தைக் குலைத்துப் போரவிட்டு அசேதனவத் அநாதரித்து
அநந்ய கதியான என்னை உனக்குப் புறம்பான விஷயாந்தரத்திலே போக்க நினைத்தால் –
பின்னை யான்ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்- – சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு
அசக்தனான நான் புருஷார்த்த சாதகராய் இருப்பார் மாற்று யாரைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஐயோ சாதிப்பேன்
என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை
நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை
இது வேறு உண்டோ என்று கருத்து –
ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-5-
சர்வ ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ -பிறர் செய்யவோ -நான் முடிந்தேன் -என்கிறார் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
போர விட்டிட்டு-உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் –
புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –
பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
அந்தோ-மா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே
எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ -ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –
தீர இரும்பு உண்ட நீரது போலே–அக்னி சந்தப்த்தமான இரும்பு உண்ட நீரானது காற்ற ஒண்ணாதாப் போலே
என் ஆர் உயிரை-ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே -என் ஆத்மாவைச் சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய நிரதிசய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய் -முன்பு நீ போக்யதையைக் காட்டிற்றும் உன்னை நான் பெறுகைக்கு அன்றி -என்னை அகப்படுத்தி உன் கார்யம் செய்தாயாய் யத்தனை இ றே என்னுதல் –
காய்ந்த இரும்பு அக்காய்ச்சல் தீரும்படி நீரைப் பருகுமா போலே என்னுடைய விடாய் தீரும்படி உன்னைப் புஜிக்க எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே என்னுதல்
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-5-
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-
நிரவாதிக பாக்ய பூதனாக வைத்து உபேக்ஷித்தால் எனக்கு உஜ்ஜீவனம் உண்டோ
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்-வாசி அறிந்து பிராப்தி பர்யந்தம் பிரகாசிப்பித்த நீ
அத்தை குலைத்து அநாதரித்து அனன்யா கைதியான என்னை விஷயாந்தரங்களில் போக விட்டால்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்-அசக்தன் நான் புருஷார்த்த சாதகனாய் இருப்பார்
யாரைக் கொண்டு என்ன சாதிப்பெண் வேறே உபாயமும் பிறப்பியமும் இல்லையே எனது என்பது என் யான் என்பது என்
காரணங்கள் இல்லை உபாயம் இல்லை -யான் தனியாக ஸ்வ தந்த்ரன் இல்லை -இனி வேறு உண்டோ
யாரை கொண்டு எத்தை -விருத்த யுக்தி -சேதனனைக் கொண்டு அசேதனத்தை -சொல்லி எத்தை கொண்டு யாரை சொல்ல வில்லை
புருஷார்த்தம் ஆழ்வாருக்கு அவனே -ஐஸ்வர்யார்த்திகளை கண்டிக்கிறார் -யாரை -உபாயாந்தரங்கள் -செத்தான் தானே கொடுப்பான்
ஜகத் யுக்தி மாற்றி அருளிச் செய்கிறார் –
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை-காய்ச்சல் தீரும் படி -எனது ஆத்மாவின்
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே-விடாய் தீரும் படி திருப்தி அடைய முடியாத அமுது ஆனாய் –
பூர்ணமாக பானம் பண்ண பரம போக்யன் என்று பிரகாசிப்பித்தாய்
எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்-என் கார்யம் -நான் செய்யவோ-
பிறர் செய்யவோ-முடிந்தேனே அன்றோ –என்கிறார்-
போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து-உபேஷித்து-
என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்-எல்லையான -என்னை -என்னுதல்-
நீ –
படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கரை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்-
என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்-கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்-
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை-
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –
புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது-
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து-என்னைக் கை விட்டால் -என்றபடி –
பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு-ஆற்றல் இல்லாதவனான நான்-
என்ன உபாயத்தைக் கொண்டு-என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –
ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –
அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –
எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –
நானும் இல்லை கரணங்களும் இல்லை என்றவாறு –
பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ-
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ-ப்ருதக் ஸ்திதியே இல்லையே –
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –என்கிறார்-
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக-
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே-
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி-
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்-கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply