Archive for May, 2024

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஆரண்ய காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ரூப ஸம்ஹநநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வந வாஸிந —
1-12-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே–திரு விருத்தம் -43-

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ஈடு -8-1-2-ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்
அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்
வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை
சருகு இல்லை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –

——

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -1-19-

ஈடு -3-5-2-தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.-

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை-

———

ரஷிதவ்யாஸ் த்வயா சஸ்வத் கர்ப்ப பூதாஸ் தபோதநா –1-20-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–1-

காடுறைந்தான் –
ரிஷிகள் உடைய ரஷணத்துக்காக காட்டிலே வர்த்தித்தான் காண் –
ரஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்ப பூதாஸ் தபோ தநா-
எங்களுடைய ரஷணம்-உமக்குத் தவிர ஒண்ணாது –
உமக்குத் தலையோட்டில் பொறி –
( தலையோட்டில் பொறி –தலை எழுத்து -திருவடி எழுத்து அன்றோ -)
உங்கள் தபஸ்ஸும் ப்ரபாபவமும் கிடக்க நான் ரஷிக்க வேண்டுகிறது என் –  என்ன

கர்ப்ப பூதா
எங்களுக்கு கைம் முதல் உண்டானாலும் ரஷணத்தில் பிராப்தி இல்லை காணும் –
(சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே )
ராஜ மகிஷியானவள் சக்தி உண்டு என்னா அவகாதம் பன்னாள் இறே
ஜனனி தானே கைச்சதும் புளித்ததும்   தவிர்ந்து நோக்கும் இத்தனை அன்றோ –
இவ் வாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்ந்தாலும் உம்மைக் குறித்து நித்ய ஸ்தநந்தமாய் காணும் இருப்பது –
இப்படிச் சொன்ன மாற்றத்துக்கு
ஒரு மாற்றம் இல்லாமை இறே
பிரசீதந்து -என்றது –
(ஆமோதித்தார் -பெண் வெட்கப்பட்டால் போல் பட்டார்
அதுக்கு ரிஷிகள் வார்த்தை மேல் )

————

ப்ரஸீ தந்து பவந்தோ மே ஹ்ரீ ரேஷா ஹி மம துலா
யதீத்ருசைரஹம் விப்ரை ருபஸ்த்தேயை ருபஸ்த்தித
-10-9-

காடுறைந்தான்-ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–பூர்ணரராய் இருக்கிற நீங்கள் குறைவாளர் அளவில் இரங்கும் அத்தனை அன்றோ –
நாங்களும் பிறர் கையில் நோவு பட்டு நிற்கையாலே குறைவாளர் அன்றோ என்ன-

உங்களுக்கு நோவு வந்தது உங்களால் அன்றே
நோவு பட்ட உங்கள் அளவு அல்ல
நோவுக்கு ஹேது பூதரான நம்முடைய லஜ்ஜை –
யதீத்ருசைர் அஹம்  விப்ரை  –
ஈத்ருசமான விலஷண புத்தியை உடையவர்களாலே

(ஈத்ருசமான- இப்படிப்பட்ட சிறப்பான புத்தி உடையவர்கள் -அப்படிப்பட்ட சொல்லாமல் –
சீதாப்பிராட்டியைப் பார்த்து சொன்ன வார்த்தை
ஸீதா விஷயம் சொல்லி -இத்தை விளக்குகிறார் மேல் )

நெருப்பை குளிருக -என்ற வாயைக் கொண்டு
ராவணனை -நஷ்டாவாய் -என்று சொல்ல மாட்டாமை யன்று இறே இருந்தது –
நம்முடைய ரஷணத்தில் நமக்குப் பிராப்தி இல்லை
தத் தஸ்ய -என்று இருந்தவளைப் போலே இறே இவர்களும் சிலர் –

நோவு பட்டால் அங்கே வந்து அவர்கள் குறை தீர்க்க ரஷணத்துக்கு ஸ்வரூபமாய் இருக்க
நோவு படுவுதிகளும் நீங்களே யாய்
பட்ட குறை அறிவிப்பிகோளும் நீங்களே யாம் படி
நாம் பிற்பாடார் ஆனோம் எனபது யாதொன்று –

————

ஏவ முக்தஸ்து ராமேண லஷ்மண ஸம்யத் அஞ்சலி
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் இதம் வசனம் அப்ரவீத் –15-6-
பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்த்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத –15-7-

‘ஈடு -2-9–நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல-

———-

இஹ வத்ஸ்யாமி ஸுமித்ரே சார்த்த மேதேந பக்ஷிணா –15-18-

ஈடு -9-4-6-

இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-

ஈடு -10-8-6–இன்று வந்து- இருப்பேன் என்று -ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

———

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம் வ்ருத்தஸ் பிதா மம –15-28-

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று-ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-6-

நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)

பாவஞ்ஞேந  -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-

பாவஞ்ஞேந  –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –

பாவஞ்ஞேந  –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி 
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-

தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-

லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்

புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )

தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே

மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )

ஈடு -5-4-8-கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

——————–

அத்யந்த ஸூக ஸம் வ்ருத்தஸ் ஸூ குமார ஸூ கோஸிதஸ்
கதம் ந்வ பர ராத்ரேஷு ஸரயூம் அவகாஹதே —
16-30-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்-ஸ்ரீ திரு விருத்தம் -24-ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷
৷3.16.29৷৷

வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷

அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே

கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்

(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )

அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி

சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )

தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷

நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்

———-

நதேம்பா மத்யமா தாத கர்ஹி தவ்யா கதஞ்சன
தாமேவேஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு –
-16-37-

ஈடு -9-1-4–வருணித்து என்னே
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –
வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ
அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே
அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன
தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை
தாமேவ –
வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –
ஐயரோ போகட்டு முடிந்து போனார்
நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு
கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

———-

கதான் வஹம் ஸமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயாஸ ரகு நந்தன –16-40-

ஈடு -2-4-1-ஸ்ரீ பரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையால் கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று இல்லை இறே

————–

விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித–17-24-

ஈடு -5-3-4-விபீஷணஸ் து தர்மாத்மா -இவன் இக் குடியில் உள்ளார் படி அல்லன் -இவனுக்கு வாசியுண்டு
அந்த வாசி தன்னைச் சொல்லுகிறது -தர்மாத்மா-என்று
மறக்குடி அறம் செய்யக் கெடும் என்னக் கடவது இறே
ந து ராக்ஷஸ சேஷ்டித–ஜாதி மாத்ரமே இவன் பக்கலில் ஜீவிக்கலாவது –

————

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிக்ஷஸ்வஜே –30-31-

திரு நெடும் தாண்டகம்–21–-தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
 -என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –

ஈடு -3-5-4–வம்புஅவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழும் அடர்த்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் -பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.-தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.

————

தவ் வநாநி கிரீம் சைவ ஸரி தச்ச ஸராம்ஸி ச
நிகிலேந விசின்வாநவ் ஸீதாம் தசரதாத் மஜவ் —
61-21-

ஈடு -2-1-4-ஸீதாம் –தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜவ் –தேடப்பிறந்தவர்கள் அல்லர்

—————

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா சிலா தலே பூர்வம் உபோவிஷ்டா
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாஸா த்வாமாஹ ஸீதா பஹு வாக்ய ஜாதம் –
63-12-

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்

————

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம்

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம் —


உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

———–

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸஸ் ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் –
-67-25-

பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

திரு அபிஷேகம் பண்ண நாளிட்ட வாறே -ராஜ்ஜியம் எனக்கு வேணும் என்றார்கள் சிலர் -அத்தை இழந்தால் படைவீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் இறே
என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா -பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க அமையும் என்றார் இறே கௌஸல்யை யார்
ஸீதா நஷ்டா –பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாக புஜிக்கலாம் என்று போர இருவரும் இரண்டு இடத்திலேயாம் படி விழுந்தது –
ஹதோ த்விஜ–பிராட்டிக்குத் தனி இடத்திலே உதவப்புக்க பெரிய யுடையாரையும் இழந்தது
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம்

ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே –ராஜ்யோ நாஸோ பகர்ஷயதி வந வாஸோ மஹோதய -என்றும் சொல்லிப் போந்தவற்றை- இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட -இருக்க அன்றோ புகுந்தது–
புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார்- அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

நிர்தஹேதபி பாவகம்–பிரியாத இளைய பெருமாளையும் பிரிக்கவும் வற்றாய் இறே இந்தத் துக்கங்கள் இருப்பது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ அயோத்யா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 20, 2024

கச்சதா மாதுல குலம் பரதேந தத அநக
சத்ருக்நோ நித்ய அயோத்யாநீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–21-1-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

திருவாய் மொழி-3-9- ஈடு பிரவேசம்–கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –

அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.

எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.

———-

ஸஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
அர்த்திதோ மாநுஷ லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந –
-1-7-

பாரின் மேலாய் –திரு நெடும் தாண்டகம் -9-
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே-பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

நாட்டிற் பிறந்து படாதன பட்டு –திருவாய் மொழி -7-5-2-

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

5ஸ:-ஜஞே ஹி – ‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,

‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’  திருவிருத். 92.என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய – 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:-5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்செய்தானைத்தனை. அர்த்தித:- 1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.அர்த்தித:– 2உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்; அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார். மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.- ஜஜ்ஞே– 4தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.  ‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.

5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

————

குணைர் தசரத உபம –1-9-குணங்களில் தசரதருக்கு ஒப்பாவான்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர்–நாச்சியார்-9-3-நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம
 -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி

சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்

பெரிய திருமொழி -10-4-1—பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
(ஸுசீல்யம் சொல்ல வந்ததை அறியாமல் இருந்தானே
ஆத்மாநாம் மானுஷ்ய மன்யம் என்னுமவன் அன்றோ )
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை  சில சொன்ன அத்தனை –
சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே  –
(பகவத் விஷயத்தில் அதி வாதம் பண்ணுபவனே சிறப்பானவன் )

அபியாதா ப்ரஹர்த்தாச ஸேநாநய விசாரத –1-29

யுத்தத்தில் தானாக எதிர்த்துச் செல்பவன் -எதிரிகளைக் கொல்லுபவன் -ஸேனையை நடத்துவதில் ஸமர்த்தன்

காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.-5-4-3-
தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.

——–

த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந் நாதவ்த் தரம் –2-13-

மூன்று உலகும் எந்த ராமன் நாதனாக இருந்தால் மிகவும் நாதனை யுடையதாக இருக்குமோ

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை–8-4-10-

அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –—————

பஹவோ நிருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –2-26-

அரசனே உங்கள் பிள்ளை ராமனுக்கு அநேக கல்யாண குணங்கள் உள்ளன-

திருவாய் -7-6- ஈடு பிரவேசம்–பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான்  இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

1‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு

போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். 

திருவாய் -9-6- ஈடு பிரவேசம்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின
இராச்சியத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ
என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –
இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்
அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –

ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் கான் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

———-

ப்ரிய வாதீ ச பூதா நாம் ஸத்ய வாதீ ச ராகவா -2-33-

ராமன் பிராணிகளுக்கு பிரியமானதை பேசுவான் -உண்மையானதை பேசுவான்

திருவாய் -7-1-ப்ரியவாதீ ச –பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை -செவிப்பதில் இனியதாய் அன்றி இராது
யாருக்குத் தான் என்னில்
பூதா நாம் -சத்தா யோகி ஸகல பதார்த்தங்களுக்கும் -அஸத் வ்யாவ்ருத்தி மாத்ரமே வேண்டுவது –
அப்போது பிரியமாய் விபாகத்தில் வேறு ஒன்றைப் பலிக்குமோ என்னில்
ஸத்ய வாதீ ச -அருளிச் செய்யுமது தான் பூத ஹிதமாய் அன்றி இராது என்கிறது
ஒரு யுக்தியே இரண்டுமாகா நின்றாள் அல்லாததுக்குச் சொல்ல வேண்டா விறே

————

வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவம் துக்கித –2-41-

மனிதர்களின் வ்யாசனங்களால் மிகவும் துக்கித்தவனாக ராமன் ஆகிறான்

வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந் நாள்சிந்தித்து ஆர்வனோ?-7-9-7-வண் தீம் கவி செய் குந்தன் – வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,

‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.

இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?

‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

————–

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந –3-4-

திருப்பாவை -1-சைத்த்ரச் ச்ரீமா நயம் மாஹ -என்று-
ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-சைதர–

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்
பாவனமாயும்
போக்யமுமாயும் இருக்கை-

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

———-

ரூப ஒவ்தார்ய குணைர் பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் –3-28-

முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
-5-3-6-

“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ –

———–

ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -6-1-என்றபடி. 

ஆராஅமுதே – 5-8-1-1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

———

ஜ்ஞாதி தாஸீ யதோ ஜாதா –7-1

இதனால், ‘நிலமிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

நற்பால் அயோத்தியில் – 7-5-1-நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

    ‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ? 

——

அஹம் புநர் தேவ குமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யன் அபி தர்சநேந பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ
-12-106-

இவருக்கும் அவ்வல்லவியோ என்று சிறியாத்தான் கேட்க -தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ரிஷி கரி பூசுகிறான் என்றார் –
அலங்க்ருதம் -அத்தாலும் வெறும் புறம் கிடீர் ஒரு போலி சொல்லலாவது -ஒப்பித்தால் ஒக்கச் சொல்வார் இல்லை
தம் ஸூதம் -இவனுக்கு இரண்டு படியும் உத்தேச்யமாய் இருக்கிற படி
ஆவ்ரஜந்தம்–புஷ்பம் அலரும் போது எங்கும் ஓக்க பிறக்கும் விகாஸம் போலே -அதுவும் வண்டை நோக்கி இறே–ஐவரும் போக்தாக்களைக் குறித்து இறே
நந்தாமி பஸ்யன் அபி –கண்டபடியே இருக்கச் செய்தே காணாது கண்டது போலே யாயிற்று நாள் தோறும் நாள் தோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும் படி –
தர்சநேந –அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா -காட்சியே அமையும் -கரை புரண்டு அனுபவம் உள்ள இடத்திலே போலே காணும் பிரயோஜனம்-ஸதா பஸ்யந்தி இறே
பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ –அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் வயசைப் புக்கு வ்ருத்தனான சக்ரவர்த்தி பெருமாளைக் கண்ட பின்பு பெருமாளுக்கும் தனக்கும் வாஸி தெரியாதபடி யானான்
காளையைப் பயந்த காளை என்னுமா போலே -தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலவே ஆக்கி உஜ்ஜீவிப்புக்கும் விஷயம் போலே காணும்
யுவேவ வஸூதேவ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் -என்னும்படி யானாரே இறே வஸூ தேவரும்

தத்ர காஷாயிணோ வ்ருத்தான் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதான்
ததர்ச விஷ்டிதான் த்வாரி ஸ்த்ரயத்யஷான் ஸூ ஸமாஹிதான்
–16-3-

சூடுமலர் குழலீர்” -5-9-3-அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:– அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.

ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார்
‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.

தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந்
ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.

இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

————–

பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷிணா
ஆத் வாரம் அநுவவ்ராஜ மங்கலான் யபிதத்யுஷீ —
16-2-

புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே -திரு விருத்தம் –24–

பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..

(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )

அஸி  தேஷணா –
இவர் தோளில் மாலை  இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )

—-

தீஷிதம் விரத ஸம் பந்நம் வராஜி நதரம் சுஸிம்
குரங்கச் ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீ த்வா பஜாம் யஹம்
–16-28-

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே-14-2-

முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –

தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி

வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்

வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்

ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்

தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பஸ்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )

இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே–திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –

பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள் காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?-நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

———

யச்ச ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே —
17-14-

வாடினேன் வாடி வருந்தினேன்-1-1-1-

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்

யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-

ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்

எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்

எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –

திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே

வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )

————–

ந நூநம் மயி கைகேயி கிஞ்சிதாசம்ஸஸே குணம்
யத் ராஜாநம் அவோசஸ் த்வம் மமேஸ்வரதரா ஸதீ
-19-24-

சிற்றவை பணியால் முடி துறந்தானை-2-3-1-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

——

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜாநாமி தே வீர மா பூவம் வீர லோக பாக்
—-23-28-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்-அவதாரிகை 

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

————-

ஈர்ஷ்யா ரோஷவ் பஹீஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம்
நய மாம் வீர விஸ் ரப்த பாபம் மயி நவித்யதே
-27-8-

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-பெரிய திருவந்தாதி–9-
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

ஈடு பிரவேசம் -6-2-

வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்

தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

———————

கிந்த் வாமந்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜா மாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –3
0-3-

அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2–பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே

நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை  சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே   –

திருவாய் ஈடு ப்ரவேஸம்-

இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
– பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்-

————

யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ
–30-18-

நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்
–2-10-7-காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

———

ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே நத்வ யாவிநா
-31-5-

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-பெரிய திருவந்தாதி -79-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

ஈடு மஹா ப்ரவேஸம் -வானவர் நாடு என்கிற பரமபதம் -ஆத்ம லாபம் -லோகா நாம் ஐஸ்வர்யம் இவை அனைத்தும் மக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்-

குருஷ்வ மாம் அநு சரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே –31-24-

திருவாய் -2-9-ப்ரவேஸம்-ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று-

————

ஸ்ருஷ்டஸ்த்வம் வந வாஸாய ஸ்வநுரக்தஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10—ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –3-9-9- 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.

 ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.

————

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –
40-9-

நான்முகன் -47–ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –

———

யேது ராமஸ்ய ஸூஹ்ருத ஸர்வே தே மூட சேதஸ
சோக பாரேண சாக்ராந்தா சயனம் நஜ ஹுஸ் ததா

நாச்சியார் திருமொழி -3-1-யேது -சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் -ஸ்ரீ கௌசல்யார் மங்களா ஸாஸனம் பண்ணி விட்டார் -அவ்வளவு அன்றிக்கே பத்தன்பதாம் பாஷையாயத்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூஹ்ருத -தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உடப்புக்கவர்கள் இறே தோழன்மார் ஆகிறார் -தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மை எண்ணிப் போந்தவர்கள் படு குலைப்பட்டார்கள் என்கிறது
ஸர்வே தே -ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதஸ–ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்திருந்து காலைக்கட்டி மீளாது ஒழிவான் என் எனில் -அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா -மலை அமுக்கினால் போல் சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என்
சயனம் நஜ ஹுஸ் ததா -படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்களாகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ -தந்தாமே படுக்கையில் கிடந்து போந்தவர்கள் இறே

———-

புத்ர த்வய விஹீ நம் தத் ஸ்நுக்ஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ர மிவாம்பரம்
–42-30-

ஈடு -6-7- ப்ரவேஸம்-க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.-

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி

புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

———

ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ
–42-34-

என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17-
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-

முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –

இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –

ராமம் மே அநுகதா த்ருஷ்டி –

கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்--நாச்சியார்-10-7-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே

ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச
—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —
என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

பவள வண்ணா எங்குற்றாய் –திருநெடும் தாண்டகம்–17
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

என்று தடவும் என் கைகள்–திருவாய் மொழி-3-8-3-கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டுமலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.

‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’

‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது கண்களை.

————–

கதம் தாசரதவ் பூமவ் சயாநே ஸஹ ஸீதயா
சக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸூகாநி வா
-51-9-

திருவிருத்தம் -30–நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —

கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?

சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே

சக்யா நித்ரா மயா லப்தும்  —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –

ஈடு -5-9-4—

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’

இளையபெருமாள் காத்த பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.

“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”

என்பது, ஸ்ரீராமா. அயோத். 9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.

வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்  அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்-

————

ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ்
–53-31-

நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்—பெரிய திருமொழி-4-9-1-

ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண  காலம்
ஜலான்   மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே

அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-

அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து  ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )

ஈடு ப்ரவேஸம்
உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால் -ஜலாத் உத்த்ருதமான மத்ஸ்யம் நீர் நசை அறும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திரு உள்ளத்தில் உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது என்றார் இறே -அத்தலையால் நினைவால் இறே இத்தலை ஜீவிப்பது
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -என்கிறபடி அவன் நினைவு இல்லாத வென்று இவையும் இல்லை இறே

தாந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத் ஸூ ச
ந த்ரஷ்யாம புநர் ஜாது தார்மிகம் ராம மந்தரா –
5-13-

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –6-1-2- இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;

“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”-  என்பது, ஸ்ரீராமா. அயோத்.

தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச – 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச – 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள்.

——

மம த்வச் வா நிவ்ருத்தஸ்ய ந பிராவர்த்தந்த வர்த்தமநி
உஷ்ண மஸ்ரு விமுஞ்சந்தோ ராமே ஸம் ப்ரஸ்திதே வநம்
-59-7-

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

—————-

குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸாந் பஹுந்
ஆசயா யதி மாம் ராம புநஸ் ஸப்தாபயேதிதி
-59-7-

ஈடு ப்ரவேஸம் -3-8–ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம். ‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

—————

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ஸ புஷ்ப அங்குர கோரகா –59-8-
உபதப்தோ தகா நத்ய பல்வலாநி ஸராம்ஸிச
பரி சுஷ்க பலாசாநி வநாந் யுபவநாநி ச
-59-9-

ஈடு 2-1-1-ஆறுகளோடு சிறு குழி களோடு பெரும் குழி களோடு வாசியற கரை யருகும் சென்று கிட்ட ஒண்ணாத படி விரஹ அக்னியால் கொதித்தது இறே
சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசியற விரஹ அக்னி கொளுத்திற்று

ஈடு 6-1-10-“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் -இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம்.

ஈடு -7-5-1—ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றனஉப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

———–

அதோ து கிம் துக்க தரம் ஸோஹமிஷ்வாகு நந்தனம்
இமாம் அவஸ்தாம் ஆபந்நோ நேஹ பஸ்யாமி ராகவம்
–59-30-

ஈடு -6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற – 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம்  இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.

என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது – சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி

ஈடு -9-7-9-இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை
இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி
ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –

———-

கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வநம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம் ஸ்ரிதா
–60-20-

ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். “ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி” என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. “சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி “சிரஸா சாபிவாதய” (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி “தலையில் வணங்கவுமாங் கொலோ”(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

பலர் கண்ண நீர் கண்டால் மீளாரோ என்னுமதைப் பற்ற வினை செய்யப் போவாரைப் போலே ஆனை குதிரைகளைத் திரட்டிக் கொடு போனான் ஆயிற்று –
பிரிவாற்றாமைக்குத் தன்னில் குறைந்தார் ஒருவரும் இல்லையாயிற்று பரிகரத்தில்
நான் தலையால் இரந்த காரியத்தையும் மறுப்பாரோ
சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்றார் இறே அவனும் –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் -நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் என்றார் இறே
அவன் தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்று இறே அவர் திரு உள்ளம் புண் பட்டது
ப்ராதா ஸ்வ மூர்த்திராத்மந -என்கிறபடியே அவர் தம் திரு மேனியாக யன்றோ என்னை நினைத்து இருப்பது

—–

நந்தந்யுத ஆதித்யே நந்தந்த்யஸ்த மிதே ரவவ்
ஆத்மநோ நாவபுத்த்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்
-105-24-

பெரிய திருமொழி -6-2-5–நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-

————

பதி ஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தா மப்ய பகமத் தீநோ வித்த நாசா திவாதந
–118-34-

ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பேசும் அரங்கன் -ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள்-

May 19, 2024

மன்னிய சீர் மணவாள மாமுணிகள் ஈடு உகந்து

இன்னொரு ஸ்ரீசைலேசாயெனப் பேசும் அரங்காயெச்சரீகை!”

இது நம்பெருமாள் புறப்பாட்டின் போது நம் திருக்கோவில் சாத்தானி ஸ்ரீவைஷ்ணவர்களின் கட்டியமாகும். அரங்கனின் வருகை குறித்து நம்மை எச்சரிக்கின்றனர். தோன்றினது முதல் தற்காலம் வரை நம்மை அரவணைத்துப் பேசுக்கொண்டிருக்கும் அரங்கன் வருகின்றார் – தாங்கள் கவனம் சிதையாமல் இம்முதல்வனை தியானியுங்கள் – இவனிடம் மனம் விடடு பேசுங்கள் என்று குறிப்பால் உணர்த்துகின்றனர். அன்றும் சரி, இன்றும் சரி அரங்கன் பலருடனும் பேசிய வண்ணம்தான். பல்வேறு லீலைகள் புரிந்த வண்ணம்தான். ஏனைய தெய்வங்கள் போல் அவனால் வாளாதிருக்க முடியாது. இவன் இல்லாவிடின் ஏனைய தெய்வங்களேது? இவன்தானே அனைத்திற்குமே ஆதாரமானவன்!. இதனால்தான் தொண்டரடிப்பொடியாழ்வார் தனது திருமாலையில்

“மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்!

உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்,

அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை,

கற்றினம் மேய்த்த எந்தை கழலினைப் பணிமின்நீரே!”

“மற்ற தெய்வங்களைப் போல இவன் ஆராதிப்பதற்கு அரியவன் அல்லன். பசு கன்றுகளுக்கும் கூட தோழனாயிருந்து எளியவனாயிருப்பவன்” என்று அறுதியிட்டுரைத்தார்.

இவன் வந்தாரை வாழ வைப்பவன் –

தன்னோடு உறறாரோடு உரையாடுபவன்.

——-

திருத்துழாய் இலையுண்டாகும் போதே பரிமளத்தோட அங்குரிக்கும். அது போன்று ஸ்வாமி நம்மாழ்வாரும் மற்றைய ஆழ்வார்கள் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவஞானத்தோடு இயற்கையான ஞான பக்தியையுடையவராய், சதா தியானபரராய், இந்நிலை என்றும் மாறதிருந்த மாறன் ஆவார். இவர் அவயவி. மற்றைய ஆழ்வார்களெல்லாரும் இவருக்கு அவயம்..

இவருக்கு
– பூதத்தாழ்வார் : சிரம்
– பொய்கை மற்றும் பேயாழ்வார்கள் : இரண்டு கண்கள்
– பெரியாழ்வார்: முகம்
– திருமழிசை: கழுத்து
– குலசேகராழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார்: இரண்டு கைகள்.
– தொண்டரடிப்பொடியாழ்வார்: திருமார்பு
– திருமங்கையாழ்வார்: கொப்பூழ்
– மதுரகவியாழ்வார் : திருப்பாதங்கள்.

இந்த பூமியில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளி, எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் தாமிருக்கும் இடத்திலே தரிசித்து களித்த ஸ்வாமி நம்மாழ்வார் பரமபதம் செல்லத் திருவுள்ளம் கொண்டார். மிக மிக துக்கித்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை வேண்டினார். ஆழ்வார் தாமிரபரணியின் ஆற்று நீரை கொணர்ந்து சுண்ட காய்ச்சினால் தமதுருவம் கிடைக்கும் எனத் தேற்றினார். மதுரகவிகள் ஒரு பொற்குடத்தில் தாமிரபரணியாற்றின் நீரை இடைவிடாமல் வேத விற்பன்னர்களின் வேதகோஷத்தோடு காய்ச்சினார்.

ஏழாம் நாள் கூப்பிய கையுடனும், திரிதண்டத்துடனும், ஒரு திவ்வய மங்கள விக்ரஹம் யாரும் எதிர்பாராவண்ணம் தோன்றிற்று. அதனைக் கண்ட நம்மாழ்வார் ‘பொலிக பொலிக பொலிக” எனத் திருவாய் மலர்ந்தருளி அது வருங்காலத்தில் வைணவத்தை ஸ்திரமாக நிலைநாட்டப் போகும் ஸ்வாமி இராமானுஜரின் ‘பவிக்ஷதாச் சார்ய’ திருமேனி என்று அருளி, தனது வலது திருவடியை அங்கு காண்பித்தார். அதில் இராமானுஜருடைய உருவத்தினை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தினை அங்கேயே ஆராதித்து வரும்படி பணித்தார்.

மீண்டும் ஒருமுறை காய்ச்சச் சொன்னார். மீண்டும் முன்பு செய்தது போல செய்யும்போது, இன்று நாமனைவரும்
ஆழ்வார் திருநகரியில் தரிசித்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு அப்போது உண்டாயிற்று. அப்போது நம்மாழ்வாரின் திருமேனியிலிருந்து ஒரு அருள்ஒளி விக்ரஹ திருமேனியில் பாய்ந்தது. இதன் பின்பு நம்மாழ்வார் ”சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின’ என்கின்றபடியே பரமபதம் எழுந்தருளினார். மதுரகவியாழ்வார் அவரது சரமத்திருமேனியை திருப்புளியாழ்வாரினடியில் திருப்பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி வழிப்பட்டு வரலானார்.

முடிவு இவன் தனக்கு ஒன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் –
கடிகமழ்கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும் –
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!.

இந்த பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன்னுடைய சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூன்று லோகங்களையும் ஆண்டு வரும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே என்கிறாள். மிகுந்த மணம் உடைய கொன்றை மாலையை தனது சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். நான்முகனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். உன்னுடைய வடிவினை உடைய வானோர்களின் தலைவனே என்கிறாள். அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படியிருந்தபோது, நீர் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய அவன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.

மூவுலகாளியே என்பதை மூ + உலகு + ஆளியே என்று பிரிக்க வேண்டும். திருமலையாண்டன் உரைக்கையில் ”மூன்று உலகையாளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே’ என்று கூறுகின்றார். எம்பெருமானார் கூறுகையில் அவர்களது தலைவன் என்பதோடு அந்தர்யாமி என்று சேர்க்கின்றார்.

இந்த மூவலகின் தலைவன் என்று கூறும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.

திருவரங்கம் கோவிலில், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் கர்ப்பகிரஹத்தில் பச்சரிசி மாவை நீர் கொண்டு குழைத்து பூர்ணம் போன்று செய்து நடுவில் நெய் திரி ஏற்றி ஆறு மங்களஹாரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூரஹாரத்தியும் பெரியபெருமாளுக்கு காண்பித்தருளுவர். சுமார் இரண்டு வருடங்களிருக்கும். அன்று ஒரு ஏகாதசி. நம்பெருமாள் புறப்படுவதற்கு முன் மங்களஹாரத்தி செய்தேன். வெளியில் ஆந்திரா ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் ஸ்வாமிகள் ஸேவித்துக் கொண்டிருந்தார். அவர் கூட உபன்யாஸகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீகண்ணன் ஸ்வாமிகளும் உடனிருந்தார். ஏளப்பண்ணுவதற்கு என்னுடன் கூட இரண்டு மூத்த அர்ச்சகர்களும் உடனிருந்தனர். நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து ஒவ்வொருவராக துவாரபாலகர்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். ஜீயர் ஸ்வாமிகளுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஹாரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஹாரத்தி? என்று. இரண்டு மூத்த அர்ச்சகளிடமும் கேட்டார். அவர்களால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை. ஸ்ரீ கண்ணன் ஸ்வாமிகள், ‘ முரளீ! உனக்குத் தெரியுமா?’ என்றார். நான் பட்டென்று நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களையும் முழுமையாக பெற்றவன்) அதனால் ஆறு மங்களஹாரத்தி என்றேன். ‘மூன்று கற்பூரஹாரத்தி?’ வினவினார்
ஜீயர் ஸ்வாமிகள். த்ரைலோக்ய பூஜிதர்! (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) 

——————-

நாயனாராச்சான்பிள்ளைக்குப் பிறகு ஈயுண்ணி மாதவப்பெருமாள் குமாரரான பத்மநாபப்பெருமாள் தம் தந்தையிடமிருந்து திருவாய்மொழி ஈடு முப்பதாறாயிரமும் (வடக்குத்திருவீதிபிள்ளை அருளியது) தெளிவாகக் கற்று ரஹஸ்யார்த்தங்களையும் கற்று தர்ஸன ப்ரவர்த்தகராயிருந்தார்.

இவருக்குப்பின் இவரது அந்தரங்க சிஷ்யரான கோலவராஹநாயனார் என்னும் நாலூர் பிள்ளை இவரிடமிருந்து அனைத்ததும் கற்றித் தெளிந்து தர்ஸனத்தினை நடத்தி பின்னர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு அனைத்தும் போதித்து தர்ஸனத்தினை வழிநடத்திடச் செய்தார்.  இவர் தாம் கற்ற ஈட்டின் பொருளை, மணவாளமாமுனிகளின் நேர் ஆச்சார்யனான திருவாய்மொழிப் பிள்ளைக்கும், திருநாராயணபுரத்தாயி (திருவாய்மொழியாச்சான்) ஆகியோருக்கு திருவாய்மொழியின் ஈட்டினைப் பரஸாதித்து அருளினார்.

————–

அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின் திருமேனியை அவருக்கு அருளுகின்றார்.  இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.  ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது, இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.

அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!.  எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும், எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.

உத்தமனே!  உலகாரியனே!  மற்றொப்பாரையில்லா
வித்தகனே!  நல்ல வேதியனே!  தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே!  சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?

என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார். 

அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார். ”காலம் கலிகாலமாகையாலே
ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு இத்தை வளர்த்துப்போவார் யார்?”
 என்று மிகவும்
க்லேசமுடையவராய் கேட்கின்றார். 

அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது.  தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று. 

திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம். 

பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார். 

குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார். 

குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!  அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.

-” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.

ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும். 

பூர்வர்களைப் போல  மங்களாசாஸனபரராய் ஸ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”

என்று நியமிக்கின்றார். 

அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி, ”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள்.  இவர் ஒரு அவதார விசேஷம்.  ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.

வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததையெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி, ‘மாகவைகுந்தம்
காண்பதற்கு என் மனமேகமென்னும்
” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின் திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.


ஆச்சார்யனின் திருவடி ஸம்பந்தத்தினால் விஷ்ணுதூதர்களுடன் விமானத்தில் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு பயணிக்கின்றது அவரது சூக்கும சரீரம்!

ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.

“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”

ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார். நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார். அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.

யார் இவர்கள் ?

வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள், தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள், தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து, அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.

இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது. திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார். அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.

பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார். அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக்கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று. அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.

இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.

ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார். மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?

ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.

அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்). ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார். அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர். பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது. இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.

இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும், அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில் இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும். ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம், அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல், அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து, ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது. இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட, அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.

———

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ பால காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

May 18, 2024

முநே வஹ்யாம் அஹம் புத்த்வா –7- வால்மீகி முனிவரே நான் அறிந்து சொல்லுவேன்

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –சிறிய திருமடல் -21-

பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இறே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் என்றான் இறே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரஸ்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இறே –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே-

வாக்மீ ஸ்ரீ மான் –9-

பெருமாள் திருவடியைப் பற்றி –
நன்றாகக் பேசும் திறமை யுள்ளவன் –
பேசும் பொழுது விலக்ஷணமான ஸோபை யுள்ளவன் –

நாவுடையாய்–திருப்பாவை -14-
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –திருப்பாவை -16-
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
பூ அலர்ந்தால் போல் வார்த்தை சொல்லுகிற போதை ஓஷ்டஸ்ப்புரணம் -என்னவுமாம்

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்–சேஷ பூதரான எங்களுக்கு
நிரவதிக கிருபை பண்ணி
உஜ்ஜவலமான திருப்பவளத்தை சாந்த்வ வாதம் பண்ணி
உனக்கு அசாதாரணமான தாமரை போலே இருக்கிற திருக் கண்களாலே பூர்ணமாகப் பார்த்து அருள வேணும் –

சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே- என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –

————-

ஸர்வதா அபி கதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி —15-

ஸ்ரீ ராமன் -கடல் நதிகளால் அடையப்படுவது போல் -சாதுக்களால் எப்போதும் தாமாக வந்து அடையப்படுபவன்

நல்லார் நவில் –திரு விருத்தம் -100-
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –

ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

குஹேந ஸஹிதோ ராமோ லஷ்மணேந ச ஸீதயா –28-

ஸ்ரீ ராமன் கானோடும் லஷ்மணனோடும் சீதையோடும் கூடினான்

ஈட்டில்-ஆடியாடி -பிரவேசம் –கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

———-

ரம்ய மாவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய –30-

பெருமாள் பிராட்டி இலக்குவன் மூவரும் -அழகிய க்ருஹத்தை -பர்ணசாலையைக் கட்டி -காட்டில் -களிக்கின்றவராய் இருந்தனர்-

ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது –2-8-1–அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –-நாச்சியார் திருமொழி-14-1-
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

———

நந்தி க்ராமே கரோத் ராஜ்யம் ராமா கமந காங்க்ஷயா –37-

பரதன் -ராமனது வரவில் விருப்பத்தால் நந்திக்ராமம் என்னும் இடத்தில் ராஜ்யத்தை நடத்தினான்-

ஆடியாடி யகம் கரைந்து –2-4-1-முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –

ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை
பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்

—-

பம்பா தீரே ஹநுமதா சங்கதோ வாநரேண ஹ –56-

ராமன் பம்பை என்னும் தாமரைப் பொய்கையின் கரையில் ஹநுமானுடன் கூடினான்

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!–6-1-1–வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

———-

ததோ வாநர ராஜேந –59-

ஸ்நேஹமான பிறகு குரங்குகளுக்கு அரசனால் -ஸூக்ரீவனால் -வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட விரோதம் முதலியன ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டன

சங்கரையா –நாச்சியார்-7-7-
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
 -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்
 –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

—————-

தேந நாதேந மஹதா நிர் ஜகாம ஹரீஸ்வர
அநு மான்ய ததா தாராம் ஸூக்ரீவேண ஸமா கதா
–66-

பெரிய அந்த ஸப்தம் நிமித்தமாக வானர ராஜனான வாலி அந்தப்புரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான் -அப்போது தாரை என்னும் தனது பத்நியை -நல்ல வார்த்தை சொல்லி சம்மதிக்கச் செய்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்வதற்காக வந்து சேர்ந்தான்
ததா தாராம் அநு மான்ய நிர் ஜகாம -என்று அந்வயம்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்-10-1–எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் –பெரிய திருமொழி-9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-திருவிருத்தம் -51 –

வேரித் துழாய் துணையா
நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு –
அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா
மஹதா –
மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –

நிர்ஜகாம –
புறப்பட்டான் –

ஹரீஸ்வர
பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –

அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –

ததா-
சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )
பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்

(சுக்ரீவேந ஸமாஹிதா
சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி )

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

————

அபி ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
–83-

க்ருதார்த்தனாக பெருமாள் தாபம் நீங்கி ஸந்தோஷித்தான்

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!-
6-2-10-

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.-அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-

———

ராமஸ் ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக –87-

பெருமாள் பிராட்டியுடன் மீண்டும் ஸிம்ஹாசனத்தில் இருந்து அருள -ஜனங்கள் ஹேஹத்தில் மயிர்க்கூச்சலும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்தனர்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
-7-10-1-

‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக,
அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

—————–

ந ச அக்நி ஜம் பயம் கிஞ்சித் ந அப்ஸூ ஜந்தவ–90-

நெருப்பினால் ஏற்படும் பீதி கொஞ்சம் கூட இல்லை -பிராணிகள் ஜலத்தில் மூழ்கிப் போகிறதும் இல்லை

வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:– கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

——-

ஸ சாபி ராம பரிஷத் கத சநை புபூக்ஷயா சக்த மந பபூவஹ –4-36-

அந்த ராமனும் மெதுவாக சபையை அடைந்து கொடவிருந்து அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் குசலவர்கள் காநத்தைக் கேட்பதில் மனப்பற்றுள்ளவனாய் இருந்தான்-

வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”
-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். -அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.-

———

த்ரஷ்டும் சக்யம் அயோத்யாயாம் ந வித்வான் ந ச நாஸ்திக
ஸர்வே நராச்ச நார்யச்ச தர்ம ஸீலாஸ் ஸூ ஸம்யதா
–6-8-

அயோத்யையில் படிப்பில்லாதவன் காணப்பட முடியாது -நாஸ்திகனும் காணப்பட முடியாது -அனைவரும் தர்ம ஸ்வ பாவமுடையவர்கள் -இந்த்ரிய ஜெயமுடையவர்கள் –

கலை இலங்கு மொழியாளர்–பெரிய திருமொழி-8-1-1-

நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-
பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின
-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

——-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –பால காண்டம் -18-31-

சம்பத்தோடு கூடிய லஷ்மணன் வெளியில் உள்ள ராமனின் உயிர் போன்றவன் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை
 –4-4-8-

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான்
-என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

——-

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
-73-33-

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே –

————-

ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹுந் ருதூந்
மநஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித
-77-32-

திருவாய் மொழி -23- ஈடு பிரவேசம்-ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன் –நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்–6-1-9-விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

‘ராம: –
ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.

து –
தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.

‘அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமா த்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.

(வசந்த ருது – சித்திரை, வைகாசி – இளவேனிற்கலம்
கிரீஸ்ம ருது – ஆனி, ஆடி – முதுவேனிற்காலம்
வருஷ ருது – ஆவணி, புரட்டாசி – கார்காலம்
சரத் ருது – ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்
ஹேமந்த ருது – மார்கழி, தை – முன்பனி
சசி ருது – மாசி, பங்குனி – பின்பனி)

மநஸ்வீ –
பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத் கத:
திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-இருவர் வார்த்தைகளும்?

தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: –
இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.

தத் கத – என்கையாலே,
இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று

‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே.
அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.

இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்ய அர்த்தங்கள்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 16, 2024

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே
வேத ப்ராசேதஸாத் ஆஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா

ஸ்ரீ வைகுண்ட நாதனே பரம் பொருள்
வேதங்களால் ப்ரதிபாதிக்கப் படுகிறவன்
அவனே ஸ்ரீ ராமனாக திரு அவதரிக்கும் பொழுது வேதமே ஸ்ரீ ராமாயணமாக திருவவதரித்தது

வேதங்கள் சொல்லுகின்ற பரம புருஷன் ஸ்ரீராமனே ஆவான் -அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன . அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.
அவன் திரு நாமத்தை சொல்வதும், கேட்பதும், நமது பிறவியின் தோஷத்தை போக்க வல்லது

இந்தப் பெருமையால் தான் ஸ்ரீ ராமாயணத்துக்கு வ்யங்க்ய காவ்யம் என்று புகழ் பெற்று பல வேதாந்த ரஹஸ்யமான உட்ப் பொருள்களைக் கொண்டது என்று போற்றப்படுகிறது –

த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமா நம் வ்ருஷம் பரி க்ஷஸ்வஜாதே
தயோரந்யஸ் பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நன் அந்யஸ் அபிசாகவீதி
-முண்டக

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் -ஒரு பறவை மரத்தில் பழுத்த பழங்களை உண்டு ஒளி குன்றியது
மற்றொரு பறவை பலத்தை உண்ணாமல் ஒளி விஞ்சியது
நம் உடல் என்னும் மரத்தில் ஜீவாத்மா -பரமாத்மா என்னும் இரண்டு பறவைகள் வாழ்கின்றன
உடலால் செய்த புண்யம் பாபம் ஆகிய கர்மங்களால் ஏற்படும் ஸூ கமும் துக்கமும் மரத்தில் ப்ளுத்ஹ பழங்கள்
ஜீவாத்மா கர்ம பலனை அனுபவித்து ஒளி குன்றுகிறார் –
பரமாத்மா கர்மத்தின் தொடர்பே இல்லாமல் ஒளி விஞ்சுகிறார்
இப்பொருள் மனத்தை ஈர்க்கிறது அன்றோ

இதே போல்
யாவத் ஸ்தாஸ் யந்தி கிரயஸ் ஸரிதஸ் ச மஹீ தலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி —

எதுவரை மலைகள் நிற்குமோ -நதிகள் ஓடுமோ -அதுவரை ஸ்ரீ ராமாயணம் உலகில் புகழோடு விளங்கும் என்று பிரமன் வால்மீகியிடம் அருளினார்

மநந சீல முநி –மனனம் செய்பவர் முனி -அறிந்தத்தை விடாமல் சிந்தித்து உறுதிப் படுத்துபவரே முனி
ஸநா தனமான தர்மத்தை உண்மையாக உணர்ந்து -இக்காவியத்தை இயற்றியபடியால் இது காலம் கடந்து நிற்குமே –

இதில் குறிப்பிட்ட அனைத்து இடங்களும் -அயோத்யா தொடங்கி ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கை வரை இன்றும் சாக்ஷியாக உள்ளனவே-

——

நால்வரின் திருவவதாரப் பலன்கள்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ் க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸ்ரீ பெருமாளும்
குகன் ஜடாயு விபீஷணன் போன்ற சாதுக்களை ரஷித்து அருளினார் –
ராவணன் கும்பகர்ணன் போன்ற துஷ்டர்களை அழித்தார்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் -தாய் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிதல் -உண்மை பேசுதல் -நேர்மை தவறாது நடத்தல் போன்ற ஸாமான்ய தர்மங்களை நிலை நாட்டினார்
அத்துடன் நிற்காமல் தானும் தம்பிகளுமாகச் சேர்ந்து சிறப்பான விசேஷ தர்மங்களையும் நிலை நாட்டினார்

பெருமாள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை -நேர்மை ஆகியவற்றுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்
வீரம் நீதி தவறாமை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களைக் காத்தல் போன்ற அரச தர்மங்களைக் காத்தார்
இறுதியாக அனைத்து ஜீவா ராசிகளிடமும் கருணை -பறவைக்கும் முக்தி அளித்தல் போன்ற திருமாளுக்கே உரிய சிறப்பான தர்மங்களையும் கடைப்பிடித்தார்

ஆந்ரு ஸம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத -என்று பிராட்டி ராவணனுக்கு உபதேசிக்கும் பொழுது இரக்கமே பெருமாளுடைய சிறப்பான தர்மம் -என்று அருளிச் செய்து
இதுவே பெருமாளின் அவதாரப்பலன் என்று காட்டி அருளினாள்

ஆசார ப்ரபவோ தர்மஸ் தர்மஸ்ய ப்ரபுரச்யுத -என்று சொல்லும்படி நன்னடத்தை ஒழுக்கம் ஆகியவற்றால் தர்மம் காக்கப்படும்
உலகில் தர்மத்தை நிலை நாட்டி அதைக் கடைப் பிடிப்பவர்களுக்குப் பலன் அளிப்பவன் அச்யுதனான பெருமாள்

இரண்டாவதாக லஷ்மணன் –
தம்பிகள் வரிசையில் பரதன் இரண்டாவதாக இருப்பினும் -பெருமாளை க்ஷண நேரமும் விட்டுப்பிரியாமல் தொண்டு செய்த படியால் லஷ்மணனே பெருமாளுக்குப் பின் எண்ணப்படுகிறார்
ஒரு ஜீவாத்மாவுக்கு இன்றியமையாத அடையாளமான சேஷத்வமாகிய தர்மத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இலக்குவன்

சேஷத்வம் என்றால்
பர கத அதிசய ஆதாநேச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷீ —ஸ்வாமி ராமானுஜருடைய விளக்க ஸ்ரீ ஸூக்திகள்

அதாவது -பெருமானுக்கு அடிமையாய் -இடைவிடாமல் தொண்டு பட்டிருத்தல் -பகவானுக்கு எது பெருமை சேர்க்குமோ அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்தல்
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம் -என்றும் சொல்வர்
பெருமாள் தனது இஷ்டப்படி நம்மைப் பயன்படுத்திக்கொள்வது தகுதி யுடையவனாய் இருத்தல்
ஜீவன் பரமனுக்கு அடிமை என்று காட்டியதே இவரது அவதாரப் பலன் –

பரதன் -சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் என்ற சிறப்பான பண்பின் படி வாழ்ந்து காட்டினார்
தொண்டு செய்யும் நம் விருப்பத்தை விட பெருமானின் திரு உள்ளபடியே நடக்க வேண்டும்
தந்த்ரம் -என்றால் ப்ரதானம் -முக்யம் -என்று பொருள்-பேரனின் விருப்பமே முக்கியம் -சித்ரா கூடத்தில் பெருமாள் ஆணையை மறுக்காமல் திரும்பினார் அன்றோ
மீண்டும் இளவரசு பட்டம் பெருமாள் சூட ஏற்றுக் கொண்டார் அன்றோ
இஷ்ட விநியுஜ்வ மாநத்வம் பாரதந்தர்யம்
பெருமானின் இஷ்டப்படி பயன்படும் தகுதி இருத்தல் சேஷத்வம் -பயன்படுத்தல் பாரதந்தர்யம் -இதை வெளிப்படுத்தியதே பரதனின் அவதாரப் பலன் –

சத்ருக்னன் சேஷத்வம் பாரதந்தர்யம் ஆகிய இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து
அதிலும் பெருமாளுக்கு இருப்பதை விட பாரதனுக்கே என்று வாழ்ந்து காட்டியவர் –
அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
மூவரைக் காட்டிலும் இவருக்கே ஏற்றம் –

புத்ர காமேஷ்டி யாகம் செய்து பெற்று பாயாசம் மிகச்சிறந்த பகுதி சுமத்தரை தேவி உண்டு லஷ்மணன் சத்ருக்கனன் இருவரையும் பெற்றாள்
த்ருஷ்டத்வ வன வாஸம் -என்று தொண்டு செய்யவே இலக்குவனைப் பெற்றாள்
பெருமாளைத் தவிர மற்ற ஒருவரை அறியாத பரதனைத் தவிர மற்று ஒருவரையும் அறியாமல் வாழ்ந்து காட்டினார்-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –ஸ்ரீ ராம கைங்கர்யமே இங்கு நிலை நிற்கும் செல்வம் –
தொட்டிலில் இருக்கும் பொழுதே -ஸஹஜ பக்தி -காட்டி அருளியவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த –கூடவே பிறந்து கூடவே விருத்தி –
திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்துடன் கூடியே அங்குரிக்குமா போலே –
பெருமாளுக்கு ஜடாயுவுக்கு மோக்ஷம் அருளி ஸ்வா பாவிகமான சேஷித்வம் ஸ்புடமானால் போல்
இலக்குவனும் குடில் கட்டுவது மரக்கட்டைகளால் மிதவை செய்து பிராட்டியும் பெருமாளும் நதிகளைக் கடிக்கச் செய்வது போன்றவற்றை
குருகுலத்தில் கற்காமலேயே அறிந்து வைத்தவர்
சுற்றம் எல்லாம் பின் தொடர என்று கொண்டாடும்படி பின் தொடர்ந்தார் அன்றோ

அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழி-

———-

விஸ்வாமித்திரர் 12 திரு நக்ஷத்திரத்தில் பெருமாளையும் இலக்குவனையும் கால் நடையாகக் கூட்டிச் சென்று கங்கை சோணா நதியைக் கடந்து ஸித்தாஸ்ரமம் என்னும் புண்ய பூமியை அடைந்தார்
இவ்விடம் இன்றும் பீஹாரில் கங்கைக் கரையில் பக்ஸர் என்னும் இடத்தில் உள்ளது
விஸ்வாமித்ரர் ஆறு நாட்கள் யாகம் செய்தார் -இறுதி நாள் யாகத்தை அளிக்க மாரீசன் ஸூபாஹு என்ற இரண்டு அரக்கர்கள் வர -அம்பு எய்து ஸூபாஹு வை அழித்தார் -மாரீசனைக் கொள்ளாமல் அவ்விடத்தில் நின்றும் ஓட்டினார்
பூர்வ ஆகம் -முன் செய்த குற்றங்களைத் தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து விடுவதையும்
உத்தர ஆகத்தை தாமரை இலைத்தண்ணீர் போல் ஓட்டே இல்லாமல் சுவடு தெரியாமல் விலக்கி விடுகிறார்

தத் யதா இஷீக தூலம் அஃனவ் பிரேதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -என்றும்
தத் யதா புஷ்கர பலாஸே ஆப ந ஸ்லிஷ் யந்தே ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே -என்றும் உபநிஷத்தில்
தததிகமே உத்தர பூர்வாகயோ -அஸ்லேக்ஷ விநாசவ்–என்று ப்ரஹ்ம ஸூத்ரம்

ப்ராக்ருதங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய -முக்குண மயம் -ரஜோ குணத்தில் இருந்து பிறப்பது காமமும் க்ரோதமும்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ
தாடகை -ரஜோ குணத்தின் அடையாளம்
காமத்தை ஒழித்தால் தானே கோபம் விலகி விடும்
ரஜோ குணமாகிய தாடகையை அழித்து
காமம் என்னும் ஸூ பாஹுவையும் அழிக்கவே
க்ரோதம் என்னும் மாரீசன் தானே ஓடிப்போனதே
பின்பு அந்த மாரீசனையும் அழித்தார்
ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லவே ரஜோ குணம் தமோ குணம் காமம் க்ரோதம் அனைத்து தீமைகளும் விலகும்-

———

ஸேவா ஸ்வ வ்ருத்தி ராக்யாதா தஸ்மாத் தாம் பரி வர்ஜயேத் -மனு
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிறபடியே அனைத்து ஆத்மாக்களும் இயற்கையிலேயே பரமாத்வாவுக்கு தாஸர்கள்
ஸ்வரூப க்ருத தாஸ்யம் என்றும்
குண க்ருத தாஸ்யம் என்றும் இருவகை
இவற்றில் ஸ்வரூப க்ருத தாஸ்யமே உயர்ந்தது
அநஸூயை -ஸீதாப்பிராட்டி ஸம்வாதம் இத்தை உணர்த்தும் –
யத் யப்யேக்ஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித -என்று ஒரு நிமிடம் கூட குணங்கள் பெருமாளை விட்டுப் பிரிவதில்லையே என்று நொந்து கொண்டாள்

அதே போல் லஷ்மணனும் –அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-

ஆகவே அவன் ஸ்வாமி என்று கொண்டே தாஸ்யம் புரிவோம்
நம் பாக்யத்தால் அவன் ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாகவும் உள்ளான்

————

ப்ரணவம் -முன்பும் -பின்பு நான்காம் வேற்றுமை உருபுடன் நாமமும் -பின்பு நம-சேர்ந்து மந்த்ரமாகும்
ணு -என்னும் தாது -ஸ்தோத்ரம் செய்தல் என்னும் பொருளில் வரும்
ப்ரகர்ஷேண ஸ்தூயதே பகவான் அநேந இதி ப்ரணவ –இந்தச்சொல்லால் பகவான் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் என்ற பொருளில் வரும்
ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அநுஸ்மரன்
ஆத்மாநம் யுஞ்ஜீத
-ஓம் சொல்லி ஆத்மாவை ஸமர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது
அகாரார்த்தோ விஷ்ணு
மந ஞாநே
உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீ –உகாரேண உச்யதே ஸதா
அக்ரத பிரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்து தனுஷ் பாணி லஷ்மண அநு ஜகாம
நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ
பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்

அகார வாஸ்யனான பெருமாள் முன்பு போக
உக்கார வாஸ்யளான ஸீதாப்பிராட்டி நடுவில் நடுக்க
மகார வாஸ்யனான இலக்குவன் அவர்களுக்குத் தொண்டு செய்யவே பின் தொடர்ந்து
மூவரும் சென்றதை பார்த்தால்
அகார உகார மகார எழுத்துக்கள் கால் கொண்டு நடந்தால் போலே இருந்ததே
பிராட்டியாரும் கூடிப்பிடிக்கும் மெல்லடிகள் கொண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று உருகும் படி அன்றோ நடந்தார்
நல்ல நடத்தையுடன் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார் அன்றோ

அற வழி நடந்து காட்டிய பெருமாள் திருவடிகள் வாழி

——–

ராம-அயனம்-சேர்ந்து ராமாயணம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா சரிதம் மஹத்
முதலில் இருந்து முடிவு வரை ஸீதா பிராட்டி சரிதமே
ராமாயணம் என்று சொல்லும் பொழுது அடைமொழி ஒன்றுமே இடாமல் ஸீதா சரித்ரத்துக்கு முழுமையாக சொல்லப்பட்டது என்ற அடைமொழியுடன் அருளிச் செய்கிறார்
வேதம் -கர்ம காண்டம் -ப்ரஹ்ம காண்டம் –
உப ப்ரும்ஹணங்கள் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றமே சொல்லிற்று
லங்கையில் சிறைப்பட்ட தேவப்பெண்களை விடுவிக்கவே தானே வலிய சிறை புகுந்தாள்

வ்யாஸர் ஒன்றேகால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட மஹா பாரதம் எழுதியும் திருப்தி பெறாமல் நாரதரின் உபதேசம் கேட்டு ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்தார்
வால்மீகியோ நாரதருக்கும் தந்தையான நான்முகனின் அருளால் நேரே ஸ்ரீ ராமாயணம் அருளிச் செய்து திருப்தி அடைந்தார்
ந தே வாக ந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று உன் காவ்யத்தில் ஒரு சொல்லும் பொய்யாக இருக்காது என்றும் நான்முகன் அருளிச் செய்தார்

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.


மேலும் –யாவத் ஸ்தாஸ் யந்தி கிரய ஸரிதஸ் மஹீ தலே தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரஸரிஷ்யதி –என்று
உலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை ஸ்ரீ ராமாயணம் எல்லா உலகங்களிலும் பெருமையோடு விளங்கும் -என்றும் அருளினார்
பெருமாள் தானே அமர்ந்து லவ குசர்கள் பாட தன் சரிதை கேட்டு அருளினார்

ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

ஸூந்தரி ரகு நாதஸ்ய ஸூர ஸ்த்ரீ துக்க ஸாந்தயே தசாநதஸ்ய பவநே தசமாஸாந் உவாஸ ஹ -என்றபடி தேவ ஸ்திரீகளை விடுவிக்கவே வலிய சிறை புகுந்தாள்
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -நம்மாழ்வார்

ராமஸ்ய அயனம் எனப் பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நன் கொள்ளுமீதே
பிரபல தர விரோதி -களை அற்ற கைங்கர்யம்
ரமதே யத்ர பைதேஹீ த்வம் அஹம் சைவ லஷ்மண
–என்று பெருமாள் அருளிச் செய்ய
நான் எங்கு ஆனந்தம் அடைவேனோ என்று தனித்துச் சொல்லி -என்னை அஹங்காரத்தில் சிக்க வைப்பீரோ
நான் என்று அஹங்காரப்பட்டால் தானே எனக்கு என்று ஒரு ஆனந்தம் உண்டு
அடியேன் என்று தொண்டனான தன்மை புரிந்தால் எனக்கு என்று தனியாக ஒரு ஆனந்தம் இல்லையே
அறிவும் ஆனந்தமும்-ஞாத்ருத்வமும் சேஷத்வமும் ஆத்மாவுக்கு அடையாளமாக இருந்தாலும் சேஷமாக இருப்பதே இன்றியமையாத முதல் அடையாளம் –
நான் போக்தா -அனுபவிப்பவன் என்ற எண்ணம் தவறு
அடியேன் போக்யம் -பகவானால் அனுபவிக்கப்படும் வஸ்து என்பதே -சரி
சேஷி உகந்த கைங்கர்யமே புருஷார்த்தம்
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
மற்றை நம் காமங்கள் மாற்று
அவன் நம்மை அனுபவித்து ஆனந்தப்பட அது கண்டு நாமும் ஆனந்தப்படுவதே கர்தவ்யம்

———

ஸ்வாமி தானே சொத்துக்களைக் காத்து அருள வேண்டும்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் பரயந்தி ப்ரபி ஸம் விசந்தி
அனைத்துப் பொருள்களும் யாரிடமிருந்து உருவாகுமோ -படைக்கப்பட்டவை எல்லாம் யாரால் காக்கப்படுமோ -அனைத்தும் யாரிடத்தில் லயிக்குமோ அவரே ப்ரஹ்மம் -என்றதாயிற்று

கௌஸல்யா லோக பர்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபிவாதய –-ஸீதாப்பிராட்டி திருவடியிடம்

உலகத்தைக் காக்கும் பிள்ளை பெர்ஸ் வேண்டும் என்று கௌஸல்யா தேவி விருப்பப்பட்டுப் பெருமாளைப் பெற்றார் -காக்கும் பொறுத்து ராமனதே என்பதை வலியுறுத்தி பேசினாள்

நல்கித்தான் காதலிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
–என்று இதே கருத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா பர பலார்தந
மாம் நயத்வேதி காகுத்ஸ்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றுக்கு மாசு என்று அஞ்சி வீசினேன்

ஆகவே நம்மை ஸ்வாமியிடம் ஒப்படைத்து நிர்ப்பரோ நிர்பயோ மாக இருப்போம் –

———–

கொள் கொம்பு மூலம் கொடி படர்தல் -படித்துறையில் இறங்கி நீராடுதல் -போல் அடியார்கள் மூலமாகவே நாமும் அவனைப் பற்ற வேண்டும் -அவனும் பாகவர் மூலமாகவே தான் ஏற்றுக் கொண்டு அருளுவான்

வாலி ஸூக்ரீவன் யுத்தம் -கஜ புஷ்பிகா மாலையை இலக்குவன் சூட வாலி வாதம் -ஸூக்ரீவ மஹாராஜருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் இலக்குவன் மூலமே முடி சூட்டி அருளினார்
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
-என்று வானர முதலிகள் மூலமே பற்றி
ஆநய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா -என்று சுக்ரீவ மஹாராஜர் மூலமாகவே ஏற்றார்

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிட்டும் –இருவர் முன்னிடுகிறதும் தம் தாம் குற்றங்களை சாமிப்பிக்கைக்காக -ஸ்ரீ வசன பூஷணம்

இங்கு பக்தனுக்கு குற்றம் -வெகு காலமாக பெருமாளிடம் பாராமுகமாய் உலக இன்பங்களில் ஈடுபட்டு -பகவானது ஆணைகளை மீறு -பாபங்களையே சேர்த்து வைத்தது
இக்குற்றம் பகவானுடைய திரு உள்ளத்தில் பட்டு சீற்றம் வராதபடி குளிர்விக்கிறார்கள் கடகர்

பகவானுக்குக் குற்றமாவது -விட்டுப் பிரிக்க முடியாத உறவு இருந்த போதிலும் -அவனைக் காத்து ஆட்க்கொள்ளாமல் கர்மவசப்படி மாறி மாறி பல பிறவிகளில் பிறந்து உழலும் படி உதாசீனனாய் இருக்கை-

——————

ஸ ச பூஜ்ய யதாஹ் யஹம் -ஸ்ரீ கருட புராணத்தில் -என்னை விட உயர்வாக எனது அடியார்களை பூஜிக்க வேண்டும் என்கிறான்
பூஜிக்காததுக்கு மேல் பாகவத அபசாரப்படுவது பெரும் குற்றம்

ஹிரண்யன் -பிரகலாதன் இடம் அபசாரப்பட்டதால் நரசிம்ஹன் கொண்ட சீற்றம் ப்ரஸித்தம்
அர்ஜுனன் பேரில் அம்பு பட்டதும் தானே திருமுகத்தில் ஏற்று பார்த்தசாரதியாக இன்றும் நாம் ஸேவிக்கும் படி அருள்கிறான்
ராவணன் -திருவடியிடம் அஸ்திரம் விட பெருமாள் கொண்ட சீற்றம் பிரசித்தம்

க்யாத -பிராஜ்ஞா -க்ருதஜ்ஞஸ் ச -ஸ அநு க்ரோஸஸ் ச ராகவ
ஸத் வ்ருத்த நிர் அநு க்ரோஸ சங்கே மத் பாக்ய சங்க்ஷ யாத்
–ஸூ ந்தர -26-11-என்று
புத்திமானும் -செய் நன்றி மறவாதவரும் –நன்னடத்தை உள்ளவரும் -கருணையும் உள்ளவருமான பெருமாள்
எனது விஷயத்தில் இரக்கமற்று மீட்க வராமல் இருப்பது எனது துர்பாக்யமே -என்று அவர் இடம் குற்றம் இல்லை -தன்னிடத்திலேயே குற்றங்கள் உள்ளன என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய –ஸூந்தர -38-6-என்று
அம்மான் அருகில் இருக்க அம் மானை வேண்டியது சிறிய குற்றம்
மஹாத்மாவான இலக்குமன் இடம் அபசாரப்பட்டது மஹத் குற்றம் –
ஆகவே பாகவத அபசாரம் இல்லாமல் வாழ்வோம்

—————

நாரீணாம் உத்தம வதா
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர்ஷிபி
-ரிஷிகள் கொண்டாடுகிறார்கள்
அவனது கல்யாண குணங்கள் நீறு பூத்த நெருப்புப் போலே நிரங்குச ஸ்வா தந்தயத்தாலே மூடி இருக்க புருஷனை புருஷனாக நடக்க வைப்பதே புருஷகாரம்
நம்மையும் அருளால் திருத்தி தைரியமாக முன் வரும்படி ஆக்கி அருள்கிறாள்

அவோசத் யதி தம் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று கொடுமைகளையே செய்து கொண்டு இருக்கும் சரண் அடையாத ராக்ஷஸிகளைத் தானே காப்பாற்றுவேன் முன் வந்து வாக்களித்து
லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்று ஆக்கி அருளினாள்

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் தருணம் ஆர்யேண ந கஸ்சித் ந அபராத்யதி
–பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

———–

கை கூப்பி வணங்கி ஆகிஞ்சன்யம் காட்டி
கால்களை சேர வைத்து அநந்ய கதித்வம் காட்டி
உத்ப பாத கதா பாணி சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷசை -என்று வந்ததும்
ஏஷ ஸர்வ ஆயுதோ பேதஸ் சதுர்பிஸ் ஸஹ ராக்ஷஸை ராக்ஷஸோப் யேதி பஸ்யத்வம் அஸ்மாந்

ஹந்தும் ந ஸம்சய
கைகளைக் கூப்பிய அஞ்சலியைப் பார்த்தே இவ்வாறு சொன்னான்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ
விபீஷணனுக்கு கிட்டிய பேறு கூட வந்த தொண்டர்களுக்கும் கிட்டியதே
அடியார்களின் நிழல் போல் இருந்தால் பெருமானுடைய அருள் தன்னடையே நமக்கும் கிட்டும் –
ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் பேறு கிட்டும் அன்றோ –

———————-

முதலும் முடிவும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் வஸிஷ்டோபி மஹா தேஜா –யே சேமே தபஸிஸ்திதா —

புலஸ்த்ய வம்சத்தில் பிறந்து கடுமையான தவம் புரிந்து நான்முகனிடம் வரங்களைப் பெற்றான்
விபீஷணன் -ஸத்வ குணம் உடையவன்
சூர்ப்பணகை -ரஜோ குணம் நிரம்பியவள்
கும்பகர்ணன் தமோ குணம் நிரம்பியவன்
ராவணன் ஸத்வ குணத்தை வெளிய தள்ளி ரஜோ குண தமோ குணங்களை அருகே வைத்துக் கொண்டான்

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக ஸர ஜாலேந சமம் நயதி யோகிராட்

ஜீவனுக்குக் கட்டுக்கு அடங்காத மனமே ராவணன்
பத்து இந்திரியங்கள் அவன் தலைகள்
விவேகம் என்னும் அம்பால் மனம் என்னும் அரக்கனை அழிக்கிறான்
மனதில் இருக்கும் தீங்குகளை போக்கி பெருமானிடம் சேர்க்க வேண்டும்

யாந்தி நியாய ப்ரவ்ருத்தஸ்யதிர்யஞ்சோபி சஹா யதாம் அபந்தாநம் து கச்சந்தம் ஸோதரோபி விமுஞ்சதி-என்று

ஸாஸ்த்ரம் படி நடந்தால் விலங்குகளும் துணை புரியும்
தவறான வழியில் நடப்பவனுக்கு உடன் பிறந்தவனும் விட்டு விலகுவான்

இவ்வாறு ஸ்லோகங்கள் தோறும் வேதாந்த உள்ளுறைப்பொருள்கள் நிறைந்தே இருக்கும் ஸ்ரீ ராமாயணம்

————-

வித்யா சர்வாபீ
வாக்ய விரோதம்
அகில ஸத் தர்மங்கள்
ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
அர்த்தானாம் பஞ்சகம்
ஸ்ரீ ரகுபதி பரத்வம்

——–

வித்யா சர்வாபீ
வேதவடிவே ஸ்ரீ ராமாயணம் –சக்ரவர்த்தி திருமகன் -வால்மீகி குழந்தை -ஆறு அங்கங்களின் பெருமை சொல்லும்

சிஷா -உச்சரிப்பு -வியாகரணம்- சந்தஸ் -நிருக்தம் அகர முதலி -ஜ்யோதிஷம் –கல்பம் செயல்முறைகள்
அயோத்யா 91-22-சிஷா பெருமை -பரத்வாஜர் பாரத ஸேனைக்கு உணவு –

ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தஂ தபஸா சாப்ரவீந்முநிஃ৷৷2.91.22৷৷

ஸமாதிநா in profound meditation, அப்ரதிமேந incomparable, தேஜஸா ச with radiance, தபஸா ச with the power of penance, யுக்தஂ filled with, முநிஃ ascetic, ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தம் with accent in conformity with Vedic instruction, ஏவம் in this way, அப்ரவீத் said.

The valiant ascetic of incomparable lustre and power of penance in profound meditation said this in an accent in conformity with Vedic instruction.
மநஸா த்யாயதஸ்தஸ்ய ப்ராங்முகஸ்ய கரிதாஞ்ஜலேஃ.

ஆஜக்முஸ்தாநி ஸர்வாணி தைவதாநி பரிதக்பரிதக்৷৷2.91.23৷৷

தஸ்ய his, ப்ராங்முகஸ்ய facing east, கரிதாஞ்ஜலேஃ with folded palms, மநஸா in mind, த்யாயதஃ while meditating, ஸர்வாணி all, தாநி தைவதாநி those deities, பரிதக்பரிதக் one by one, ஆஜக்முஃ arrived.

ஆயாதாஷா –ஸர்வ பூஷண -நான்கு தோள்கள் கண்டு வியாகரணம் படி திருவடி -புகழ்ந்து பெருமாள் -கிஷ்கிந்தா 3-15-dual சொல்லாமல் pulural -சொல்லின் செல்வன் வாக்ய விரோதம்

மண்டோதரிக்கும் சங்கசக்ர கதாதரனாக காட்சி

அனுஷ்டுப் பெரும்பாலும் -பாதம் தோறும் எட்டு எழுத்துக்கள் –
வில்லைத் தள்ள 500 பேர்-வால்மீகி தூக்கி போக 60000 பேர் கம்பர்
உடைத்து பிரித்து -வத்ஸ ராம தனுஸ் பஸ்ய -ஸ்லோகம் –
நாண் ஏற்றினால் மட்டும் போதாதே -வார்த்தையை உடைத்தது போல் நீ உடைத்து வா -என்றாராம்

நிருக்தம்–dictionary-ரம்யதே ராம -மனதுக்கு இணையான -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -நற் செல்வன் -பரதன் -பழி என்னும்-பரிக்கும் சக்தன் -சத்ருக்கனன் -நித்ய சத்ரு –

காய்கறி திருத்துவது -பரிடம் திருத்துவது -வேறே வேறே
மஹா வ்ருக்ஷம் கள்ளிச்ச்செடி -விபரீத லக்ஷனை
அஸ்ய ராமஸ்ய -பஸ்யதி -ராமனுக்கும் இருக்கும் ராமனை ராவணா நீ பார்ப்பாய் -மனதுக்கு இனியானின் கோபத்தைப் பார்ப்பான்

ஜ்யோதிஷம்
ஜடாயு -ஆயுஷ்மன் -பெரிய உடையார் -சீதையுடன் சேர்த்து உய்ரிரையும் கொண்டுபோனான் -13 ஸ்லோகம் -விந்தோ முஹூர்த்தம் -காணாமல் போன பொருள் போனபடியே மாறுதல் இல்லாமல் திரும்பிக் கிடைக்கும்

கல்பம்
சந்த்யா காலத்தில் ஆரண்ய காண்டம் 7-24 -உண்ணக் கூடாது -சுஷீஷ்ணர் -ஸாஸ்த்ரம் படி நடந்து விருந்து பரிமாறினார் –

———–

வாக்ய விரோதம்
பாஹ்ய த்யஜனம்
விலகி நிற்க வேண்டும்
தசரதனை நிந்திக்காமல் -பெருமாள் –
ஒரே இடத்தில் -ஜாபாலி -அயோத்யா 109-சர்க்கம்-39-define பண்ணவே தெரியாத நாஸ்திகன் பகவான் இல்லை என்பது போல்

——–

அகில ஸத் தர்மங்கள்
சாதாரண தர்மங்கள் நிறைந்தவை
பாலகாண்டம் 77-33-பிரியா சீதை ராமஸ்ய -தாரா பித்ருகிருத -அப்பா ஐயர் பார்த்து திருமணம்
அத்ரி அநஸூயா -சீதா வார்த்தை –

அயோத்யா 72-48-பரதன் கைகேயி சம்வாதம் -ராமன் செய்த தப்புக்கள் என்ன –

ராமோ த்விர் ந பாஷயே
சத்யம் மீது சத்யம் செய்து சுக்ரீவன் இடம்

பொய் சொன்னால் அத்தை நாம் காப்பாற்ற வேண்டும்
மெய் சொன்னால் அது நம்மைக் காக்கும்-ஜடாயு மோக்ஷம் -சத்யான் லோகான் ஜயதி

ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
திருவடியே ஆச்சார்யர் -கடக க்ருத்யம் -ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -இலங்கை -ஸம்ஸாரம்-முக்குணங்கள் விபீஷணன் கும்பகர்ணன் சூர்ப்பணகை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவவில்லையே

அர்த்தானாம் பஞ்சகம்
மிக்க இறை நிலையும் இத்யாதிகளை நன்கு காட்டும்-காண்டம் தோறும் அர்த்தபஞ்சகம்
வில் வில்லனாக -பராக்ரமத்தால் -உடைத்து -சேர்த்துக் கொள்கிறான்-அயோத்யாகாண்டம் -பரதனின் கைங்கர்யத்துக்கு விரோதி கைகேயி வரன்கள் -சரணாகதி -பாதுகையே பெற்று -ஆரண்யகாண்டம் -ரிஷிகளை ரக்ஷித்து -கரதூஷணாதிகளை அழித்து -கிஷ்கிந்தா ஸுக்ரீவன் தனக்கு ராஜ்ஜியம் வாலி தடை -போக்கி -ஸூந்தர -அஞ்சிலே ஓன்று பெற்றான் -யுத்த காண்டம் -ராவணனை அழித்து -ஆச்சார்யர் பரிந்துரை –

ஸ்ரீ ரகுபதி பரத்வம்
ஸூந்தர 38-33-காகாஸுரன் -வ்ருத்தாந்தம் ஓடினால் பாணமுமோடி நின்றால் நின்று திரு உள்ளபடி –

51-45 ஸ்லோகம் திருவடி உபதேசம் ராவணனுக்கு -சர பலம் வர பலத்தை விட -நான்முகன் முக்கண்ணன் இந்த்ர மஹேந்த்ரனை விட உயர்ந்தவன்
தோலாத தனிவீரன் –
பிறக்க பிறக்க தேஜஸ்ஸூ விஞ்சி –

வேத பெருமை -பாஹ்ய விலகி -ஸத் தர்மம்-செய்து -ஆத்யாத்மீக ஞானம் பெற்று -அர்த்த பஞ்சகம் உணர்ந்து பரத்வம் இவனே என்று -புரிந்து செய்வதை மேல் பார்ப்போம்

சரணாகதிக்கு முன்பு வேண்டிய யாரையும் கீழே சொல்லி
மேல் பிரபத்தி -ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்திரம் தானே
காண்டம் தோறும் உண்டே
லஷ்மண சரணாகதியை விட ராமானுஜ சரணாகதிக்கு ஏற்றம் அனைத்து உலகும் வாழப்பிறந்த யாத்திராசர் அன்றோ
பரத சரணாகதி மும்மடங்கு பலித்ததே -பாதுகா பட்டாபிஷேகம் -பின்பு ராம ஆலிங்கனம் -மடியில் வைக்கப்பெற்றான் -அயோத்யா புல் எறும்பு முதலாக வைகுந்தம் ஏற்றியதும் பரதன் அனைவரையும் கூட்டிச் சென்று சரணாகதி செய்த பலன்

7 ரஹஸ்யம் சரணாகதி
8- வாழ்வின் லக்ஷணம் -கைங்கர்ய பிரார்த்தனை -புமர்த்த-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -ஆரண்யம் 15-29- பிதா மம -பெருமாளே கொண்டாடும் படி-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே-

9-சேஷத்வம்–அவனது உகப்புக்காகவே -களை அற்ற கைங்கர்யம்
10-பாரதந்தர்யம்–ஸ்ரீ பாதுகா தேவி பூர்ண த்ருஷ்டாந்தம்
11-தத் அவதி-ததீய பர்யந்தம் சேஷத்வம்-ததீய பர்யந்தம் பாரதந்தர்யம்-12- அகதித்வம்

13-விரக்தி–உறங்கா வில்லி -கைங்கர்ய பிரதிபந்தகங்கள் போக வேண்டுமே
14-ஆச்சார்ய கடாக்ஷம் அறிதல் -குரோர் க்ருத்யம்–சபரி மோக்ஷ சாக்ஷி பூதராகப் பெருமாள்
15-ஸ்ரீ பார்ஸ்யம்
16-நிர்பரத்வம் நிர்பயோஸ்மு
17- ஸூ வஸதி -இருப்பிடம்
18-எதிர்பார்த்து வாழ வேண்டியது

வாழ்க்கை நடைமுறை விளக்குவதே ஸ்ரீ ராமாயணம் -முதல் அடியில் இழியவே மேல் மேலே கூட்டிப்போகுமே

———-

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே –
37-

ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே-ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –

சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது

ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்

படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –

இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்

குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –

இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது

குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –

ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க

ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்

ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –

பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கத்ய த்ரயம் —ஸ்ரீ கத்ய பாவ பிரகாசிகை-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரையுடன் கூடியது-

May 12, 2024

ஸ்ரீ கத்ய த்ரயம் —

॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶரணாக³தி க³த்³யம்

யோநித்ய மச்யுத பதா³ம்பு³ஜ யுக்³ம ருக்ம-
வ்யாமோஹதஸ் ததி³தராணி த்ருʼணாய மேநே ।
அஸ்மத்³கு³ரோர் ப⁴க³வதோঽஸ்ய த³யைகஸிந்தோ:⁴
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥–
ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

வந்தே³ வேதா³ந்த கர்பூர சாமீகர கரண்ட³கம் ।
ராமாநுஜார்யமார்யாணாம் சூடா³மணி மஹர்நிஶம்
॥–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் அருளிச் செய்த தனியன்

சாமீ கரம் -ஸ்வர்ணம்
கரண்டகம் -பாத்ர விசேஷம்

வேதாந்த ஸாஸ்த்ரமாகிற பச்சைக் கற்பூரம் ஸூ ரஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கு ஸ்வர்ண பரணி என்னலாம் படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டபந ஆச்சார்யராய் ஆரியர்களுக்கு எல்லாம் ஸிரோ ரதனமாக தாங்குபவராயும் இருக்கும் எம்பெருமானாரை நமஸ்காரம் செய்கிறேன்

வேதாந்தங்கள் அவனையே வஹித்துக் கொண்டு இருப்பதால் பச்சைக் கற்பூரம் என்றதாயிற்று
எம்பெருமானார் வேதாந்த தயா நிதி என்கிறார்

———

ப்ரவேஸம்-அவதாரிகை

உபயாந்தரங்கள் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் -என்று பலவகைப்பட்டு இருக்கும்
ஸ்ரீ பாஷ்யம் குத்ருஷ்டிகளை நிரசிக்கக்காக அருளிச் செய்கிறாராகையாலே
ஆச்சார்யர் ருசி பரிஹிரீத பிரபத்தியை மறைத்து அருளிச் செய்தார் அங்கு
தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷம் என்றும்
கர்ம ஞான ஸமுச்சயமே மோக்ஷ சாதனம் என்றும்
சொல்லும் குத்ருஷ்டிகளை நிரசிக்கவே
கர்ம அங்கமாய்
வேதந-த்யாந -உபாஸநாதி ஸப்த வாஸ்யமான பக்தி ரூபா பன்ன ஞான விசேஷமே மோக்ஷ ஸாதனம் என்று சாதித்தார் அங்கு

ப்ராஹ்மணன் சண்டாளனுக்கு வேதத்தை அத்யயனம் பண்ண ஒண்ணாதது போல்
தூரஸ்தரானவர்களுக்கு பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை வெளியிட ஒண்ணாது என்று பார்த்து
அவர்கள் முகம் அறிந்த ஸாஸ்த்ர முகத்தாலே அவர்களை நிரஸித்து
ஸாஸ்த்ர தாத் பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை ஸ்தாபித்து அருளினார் அங்கு

ஆயினும் தன்னுடைய ருசி பரி க்ருஹீதமான அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்களுக்கு
தன்னுடைய திரு உள்ளக்கருத்தியை விசத தமமாக வெளியிட வேண்டி
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாய்
தாம் அறுதியிட்டு இருக்கும் அத்ஹம் பிரபத்தயே என்பதை
இக்கத்ய த்ரயத்தால் வெளியிட்டு அருளுகிறார்

பக்தி
அதிக்ருத அதிகாரம்
துஷ்கரம்
விளம்பித்து பயன் தரும்
ப்ரமாத -கவனக்குறைவு -ஸம்பாவனை உள்ளது
ஸாத்யம்
ஸ்வரூப விரோதம்
ப்ராப்ய வி ஸத்ருசம்

தபஸ்ஸுக்களில் ந்யாஸமே தலை விரைந்தது என்று வேதாந்தங்களை பறை சாற்றுமே

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தாலும் பிரபத்தியே மேலையார் செய்வனகளாய் இருக்கும்
ஆகவே வேதாந்த ஸித்தமுமாய்
ஸ்வரூப ப்ராப்தமுமாய்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாயும்
சரண்யா ஹ்ருதய அநு சாரியுமாய்
இருக்கும் இத்தை ஸ்வ கீயர்கள் இழக்க ஒண்ணாது என்று
தாமும் அனுசந்தித்து
தம்முடைய பரம கிருபையால் இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டு அருளிச் செய்கிறார்

இதில் பெரிய பிராட்டியாரும் பெரிய பெருமாளும் அர்ச்சா சமாதியைக் கடந்து இவற்றில் திருச்சோதி வாய் திறந்து அருளிச் செய்தவையும் உண்டு

இவற்றில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்துமே உண்டு -இவையுள்
ஸம்போதந பதங்கள் -தத்வ பரம்
சரண வரண ப்ரதிபாதக வாக்கியங்கள் ஹித பரம்
ப்ரார்த்தநா ப்ரகாஸ வாக்கியங்கள் புருஷார்த்த பரம்

————————-

ஸ்ரீபெரிய பிராட்டியாரைச் சரணமாகப் பற்றுவது:

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

ப⁴க³வந் நாராயண-ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணனான நாராயணனுக்கு
அபி⁴மத அநுரூப -உகப்பாயும் -தகுந்தும் இருக்கிற
ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ -ஸ்வரூபம் என்ன -விக்ரஹம் என்ன -ஸ்வரூப விக்ரஹ குணங்கள் என்ன -விபூதிகள் என்ன -இவைகளையும்
ஐஶ்வர்ய ஶீலாத்³–ஐஸ்வர்யம் ஸுசீல்யம் முதலிய
யநவதி⁴க அதிஶய –எல்லையில்லாத சிறப்புடைய
அஸங்க்²யேய -எண்ண முடியாத
கல்யாண கு³ண க³ணாம் -கல்யாண குண ஸமூஹங்களையும் உடையவளாய்
பத்³மவநாலயாம் –கமல வனத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவளாய்
ப⁴க³வதீம் –பரம பூஜ்யையாய்
ஶ்ரியம் –ஸ்ரீ என்று திரு நாமம் யுடையவளாய்
தே³வீம்-வடிவில் புகர் நிறைந்தவளாய்
நித்யாநபாயிநீம் -எம்பெருமானை ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய்
நிரவத்³யாம் -பரி ஸூத்தியை யுடையவளாய்
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -தேவாதி தேவண்டைய எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய்
அகி²ல ஜக³ந் மாதரம் -ஸமஸ்த ஜகத்துக்கும் மாதாவாய்
அஸ்மந் மாதரம்–விசேஷித்து அடியோமுக்குத் தாயாய்
அஶரண்ய ஶரண்யாம் -புகல் அற்றவர்களுக்கு புகலாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை
அநந்ய ஶரண: அஹம் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்
ஶரணம் ப்ரபத்³யே –சரணம் புகுகின்றேன் –

முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை சரணம் புகுகிறார்
மேலே தாம் பெரிய பெருமாள் திருவடி வாரத்திலே சரணாகதி நிஷ்டைக்கு வெளியிடப் போகிற
உபேய ருசியும்
உபாயத்வ அத்யாவசாயமும்
பரி பக்குவமாய் இருக்க வேண்டுகையாலே -அவை குறைவற ஸித்திக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியார் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
உலகில் எது ஸித்திக்க வேண்டுமானாலும் பெரிய பிராட்டியார் சீர் அருளாலேயே ஸித்திக்க வேண்டும் என்ற அத்யவசாயம் இருப்பார்க்கு இது ப்ராப்தமே யாகும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தமது முடியில் பொருந்த பிரார்த்தனை போல்-

ப⁴க³வந் நாராயண-அபி⁴மத அநுரூப –ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ-இவை அனைத்தும் எம்பெருமானுக்கு உகப்பாயும் -ஏற்றவையாயும் இருக்கிற
லௌகீகருக்கு அனுபவமிக்க க்ரம பிராப்தி இருந்தாலும் மனதுக்கு இனியவளாய் இல்லாமலும்
வேறே ஸ்த்ரீகள் மனதுக்கு இனியவர்களாய் இருந்தாலும் பிராப்தி இல்லகாவர்களாகவும் காண்கிறோம் அன்றோ
ருசி -சுசி -அபிமத அனுரூபம் க்வசித் பொருந்தினாலும் முழுவதுமாக பொருந்தியவையாய் இருக்காதே
தேஹ குணம் பொருந்தினாலும் ஆத்ம குணம் பொருந்தாமல் இருப்பதும் உண்டே
திவ்ய தம்பதிகளுக்கு ஸகல அம்சங்களும் முழுவதுமாக அபிமதமாயும் அனுரூபமாயுமே இருக்கின்றன என்றதாயிற்று

இந்த விசேஷணங்களில் குண ஸப்தம் இரண்டு முறை –
முதலில் உள்ளது தேஹ குணம் –ஸுந்தர்ய லாவண்யாதிகள் –
பின்புள்ளது ஆத்ம குணம் -வாத்சல்ய ஸுலப்ய ஸுசீல்யாதிகள்

விபவம் -போகத்துக்கு உபகரணங்களாய் இருக்கும் வஸ்து ஸமூஹங்கள் –
அவளுக்கு என்று தனியே விபூதிகள் உண்டோ என்னில் -தம்பதிகளுக்கு பொதுவாய் தானே இருக்கும்
மேலும் அவளுக்கு அசாதாரணமான மால்யை பூஷண வஸ்த்ராதிகளும் உண்டே
விபவ அர்ச்சா அவதாரங்களில் காண்கிறோம் அன்றோ –

ஐஸ்வர்யம்
நியமன ஸாமர்த்யம் -எம்பெருமானுடைய இச்சையினால் பெற்ற நியமான சாமர்த்தியம்
சேதனர்களை கர்ம அனுகுணமாக நியமித்தும் அருளாலே திருத்தியும் நியமிப்பாள்
ஈஸ்வரனை ரக்ஷண அனுகுணமாக நியமிப்பாள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

சீல ஆதி -சீலம் புரையறக் கலக்கை -குகன் பக்கலிலும் த்ரிஜடை பக்கலிலும் காணலாம்
ஆதி -வாத்சல்ய ஸுசீல்யாதிகள்

அநவதிக அதிசய -இது குணங்களுக்கு விசேஷணம் -ஒவ்வொரு குணத்தின் எல்லையும் -உத்கர்ஷமும் -காண முடியாமல் இருக்குமே

அஸங்க்யேய கல்யாண குண கணாம் —அவனுக்குப் போலவே குணங்கள் தனித் தனியே எண்ண முடியாதவை மட்டும் அன்றி குண ஸமூஹங்களும் எண்ண முடியாதவை அன்றோ

பத்³மவநாலயாம் -பத்மத்தை உப லக்ஷணமாகக் கொண்டு ஸர்வ மங்கள வாஸிநீ -என்றபடி-பரிமள பிரசுரமான பத்ம வன வாஸிநீ என்பதால் -ஸர்வ கந்த -என்று புகழப்படும் அவனுக்கும் பரிமளமூட்ட வல்லவள்-

ஶ்ரியம்
1-ஸ்ரீயதே –ஸகல சேதனர்களாலும் புருஷகார தயா ஆஸ்ரயிக்கப்படுபவள்
2-ஸ்ரயதே -சேதனர்களுக்காக அவனை ஆஸ்ரயிக்கிறாள்
3-ஸ்ருணோதி -சேதனர்களின் விண்ணப்பங்களை செவி கொடுத்துக் கேட்க்கிறாள்
4-ஸ்ராவயதி -அவற்றை அவனையும் கேட்ப்பிக்கிறாள்
5-ஸ்ர்ணாதி –ஆஸ்ரிதர் குற்றங்களை ஷமித்து இல்லை செய்பவள்
6-ஸ்ரீணாதி -தனது திருக்கல்யாண குணங்களால் உலகோரை உகப்பிக்கிறாள் –
ஸ்ரீரித் ஏவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஆளவந்தார்
ஸ்ரீ ரஸி யத -பட்டர்

தே³வீம்-கிரீடா -இன்புறும் இவ் விளையாட்டுடையவனுடைய சேர்த்தியால் ஒளி வீசி விளங்குபவள்-

நித்யாநபாயிநீம் –பூவும் மணமும் போலவும் ரத்னமும் ஒளியும் போலவும்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா

நிரவத்³யாம் -கீழ்ச் சொன்ன உத்கர்ஷங்கள் எல்லாம் தனது யத்னத்தால் அன்றி -நிலா தென்றல் இத்யாதிகள் போல் -எம்பெருமானுடைய அதிசய தானத்திற்கே உறுப்பு என்று இருப்பவள் –

குற்றம் துர்லபத்வம் அற்ற -குற்றம் —ஆஸ்ரயிக்க மிக எளியவன்
தடுக்க ஆள் இல்லாதவள் – ஸ்ருத ப்ரகாஸர்

தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -அப்ரதிஹத சிகீர்ஷிதாம்-தான் எது செய்தாலும் இடையூறின்றி நிறைவேற்றுபவள் -என்பர் ஸ்ருதப்ரகாசிகா பட்டர்
அவ்வளவு கண் அழிவற்ற புருஷகாரம் செய்யும்படி வால்லப்யம் யுடையவன்
ப்ரஹ்மாதிகளை விட உத்துங்கனான தேவ தேவன் போல் அல்லாதவர் மஹிஷிகளில் காட்டில் உத்துங்கம் யுடையவள் –

அகி²லஜக³ந் மாதரம் –தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம்-என்று அஞ்சி பின் வாங்க வேண்டாத படி வாத்சல்யமே விஞ்சி இருப்பவள்அஸ்மந் மாத்ரம்–அகில உலகமும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாக வாத்சல்யம் விஞ்சி இருக்குமே
தேசிகர் பாடத்தில் இப் பதங்கள் இல்லை

அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே-சர்வ லோக சரண்யனாலும் கைவிடப்பட்ட அவர்களுக்கும் புகலிடம் இவளே –
திருவடியைப் பொறுப்பிக்கும் அவள் தன் சொல்லி வருமவளைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாம் அன்றோ
பிரபத்யே -சரணமடைகிறேன் என்று இருக்கச் செய்தே -அஹம் -பத ப்ரயோகம் -விஸிஷ்ய -தம்மைத் காட்டிக் கொள்ளுகிற படி
அசக்தியாலும்
ஸ்வரூப விருத்தமாகையாலும்
உபாயாந்தரங்களில் கை வைக்காதவர் என்று காட்டியபடி

வேதம் செல்வம் அம்ருதம் -எல்லை அற்ற செல்வம் -வித்யா -வேதம் கொண்டு பெரும் ஞானமே மோக்ஷத்துக்கு வழி காட்டும் -வைதிக ஞானமே பிராட்டி -தேசிகன் இதற்காக சரணம் புகுகிறார் -என்கிறார் –

——–

பிராட்டியாரிடம் பிரார்த்திப்பது:
பாரமார்தி²க ப⁴க³வச் சரணாரவிந்த³ யுக³ளைகாந்திகாத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி க்ருʼத
பரிபூர்ணாநவரத நித்ய விஶத³தம அநந்யப்ரயோஜந அநவதி⁴காதிஶய ப்ரிய ப⁴க³வத³நுப⁴வ ஜநித
அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகைங்கர்ய
ப்ராப்த்யபேக்ஷயா பாரமார்தி²கீ ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே
॥ 2 ॥

பாரமார்தி²க–பரம புருஷார்த்தமான -இது பக்திக்கு விசேஷணம்
ப⁴க³வச் சரணாரவிந்த³ யுக³ளைகாந்திக-எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளையே பற்றினதாய்
ஆத்யந்திக -எப்போதும் நிலை நின்றதாய்
பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி –பர பக்தி பர ஞான பரம பக்தி ஆகிய இவற்றாலே
க்ருʼத-செய்யப்பட -இது பகவத் அநுபவத்திலே அந்வயிக்கக் கடவது
பரிபூர்ண-நிரம்பியதாய்
அநவரத -இடைவீடு இல்லாததாய்
நித்ய -நித்யமாய்
விஶத³தம -அதி மிக விசதமாய்
அநந்ய ப்ரயோஜந -ஸ்வயம் ப்ரயோஜனமாய்
அநவதி⁴காதிஶய ப்ரிய -இதற்கும் மேலே வேறே ஒன்றும் பிரியம் இல்லாததாய்
ப⁴க³வத³நுப⁴வ –பகவத் அநுபவத்தினால்
ஜநித–உண்டு பண்ணப்பட்ட
அநவதி⁴காதிஶய ப்ரீதி-மிகச் சிறந்த ப்ரீதியினாலே -உகப்பினாலே
காரித -செய்விக்கப் பட்ட -இது நித்ய கைங்கர்யத்தில் அந்வயிக்கும்
அஶேஷாவஸ்தோ²சித –எம்பெருமானுடைய திரு வோலக்கத்திலும் -அந்தப்புரத்திலும் போன்ற ஸகல அவஸ்தைகளும் ஏற்றவையான
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப –ஸகல வித கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருப்பதே வடிவான
நித்யகைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா –நித்ய கைங்கர்யத்திப் பெறுவதற்கு உறுப்பாக
பாரமார்தி²கீ -உண்மையான
ப⁴க³வச்சரணாரவிந்த³ ஶரணாக³தி: –எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஆகின்ற சரணாகதியானது
யதா²வஸ்தி²தா அவிரதாঽஸ்து மே -அது அமைய வேண்டிய ரீதியிலே அமைந்ததாய் -இடையறாததாய் எனக்கு ஸித்திக்க வேண்டும் –

கீழே பிராட்டியிடம் சரணாகதி என்றது இத்தால் விஸதீ கரிக்கப்படுகிறது
இடையறாத ஆச்சர்ய பகவத் அனுபவம் விளைந்து -அதனால் கைங்கர்ய ருசி உண்டாகும் என்று உரைத்தாராயிற்று

உத்தர உத்தர சாஷாத்கார அபிநிவேசம் –மேலும் மேலும் காண வேண்டும் என்னும் ஆசை வளரும் நிலை பர பக்தி
சாஷாத்காரம் பர ஞானம்
உத்தர உத்தர அனுபவ அபிலேஷை பரம பக்தி

உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய—ஐ காந்திய ஆத்யந்திக பக்தி யோக ஏக லப்ய –ஆத்மசித்தி ஆளவந்தார்-ஜ்ஞான கர்மங்களாலே சம்ஸ்க்ருத அந்த கரணனாய் -பக்தி பிறந்து
அதனுடைய விபாக தசை பரம பக்தியாக கடவது உபாசகனுக்கு-ஆழ்வாருக்கு மதி நலம் அருளி ஆர்த்தியை வளர்த்து பரபக்தி பர ஞானம் பரம பக்தி தசைகள்-மத் ப்ரஸாத லப்த -மேலே பெரியபெருமாள் அருளிச் செய்கிறார் அன்றோ
ஆர்த்தர்களுக்கு உண்மையை உரைக்க -பரிச்சந்த உபசந்தனம்
பாஷ்யம் பர ரஞ்சனம் பக்தி யோகம் உயர்த்தி பேசி

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: |
|–ஶ்லோகம் 46 –

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

வா மாதரம் சாயா வா சத்வம் அனுகச்சேத் … ஸ்வாரத்தணி ஜந்தோ வா அசேஷ அவஸ்த உசித சர்வ .

பாரமார்த்திகீ
ஆர்த்த ரூபமாய் இருக்கை-ஆர்த்த ப்ரபன்னன் -திருப்த ப்ரபன்னனில் வ்யாவ்ருத்தி

அநந்ய சாத்யே -ஸ்வ அபீஷ்டே –மஹா விசுவாஸ பூர்வகம் ததேக உபாய ப்ரார்தனையே -ஸரணாகதி -ஆக மீண்டும் மூன்றாம் முறையாக பகவத் சரணாரவிந்தம் இங்கு-ஜ்ஞான சக்த்யாதிகளால் பூரணமான விஷயம் ஆகையாலே
சஹாயாந்தர நிரபேஷமான உபாய பௌஷ்கல்யம் சொல்லுகிறது-குறை ஒன்றும் இல்லாத –சஹாயாந்தரம் வேண்டாத –நித்தியமாய்- தடுக்க முடியாத மோக்ஷ பிரதன் கோவிந்தன்

யதா அவஸ்திதா
உபாயாந்தரங்கள் உடைய அனுபாயத்வ புத்தி பூர்வகமாக அத்தைப் பற்றுகை போலே காணும்
அதாகிறது -பற்றி விடுகையும் அன்றிக்கே
பற்றிப் பற்றுகையும் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்சித-என்னுமா போலே விட்டுப் பற்றுகை

———

பிராட்டியாரின் பிரதி வசநம்:
அஸ்து தே ॥ 3 ॥
தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥ 4 ॥

அஸ்து தே –அப்படியே இது உமக்கு ஆகக் கடவது
தயைவ -அந்த ஸரணாகதியினாலேயே
இதுவே போதுமானதாக இருக்க
அதுக்கும் மேலும்
ஸர்வம் ஸம்பத்ஸ்யதே –உமது அபிமதம் எல்லாம் அழகாக ஸித்திக்கப் போகிறது -என்று பெரிய பிராட்டியார் அனுக்ரஹத்துக்கு திரு உள்ளதாக ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் –ஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி ஸர்வா ஸப்தா பிப்ரேதம் -என்று
இது உம்மளவில் சுவறிப்போமது அன்று -பரம்பரயா உம்முடைய குடல் துவக்குடைய உம்முடைய குடல் துடக்கு உடைய எல்லார் இடத்திலும் இது பலித்ததாகக் கடவது -என்று பிராட்டியார் அனுக்ரஹித்த படி
இப்படிப்பட்ட வரம் எம்பெருமான் திருமுகத்தில் நீண்டும் மேலே வெளிவரும் என்பதே நம் சம்ப்ரதாயம்-

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லஷ்யயா தே ப்ரத்யாய்ய லஷ்மண முநே பவத விதீர்ணம்
ஸ்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத
-நியாஸ திலகம்–22-ஸ்ருத்வா வரம்-என்று எம்பெருமானாரது ஸம்பந்தமே ஹேதுவாக தமக்கும் பலித்ததாக தேசிகரும் அருளிச் செய்துள்ளார் அன்றோ-

இந்த வர ப்ரதானத்துக்குப் பூர்வகமாக பிராட்டியார் சோதி வாய் திறந்து அருளுகிறார்

தயைவ -ஸர்வம் -ஏவ காரத்தால் -மீண்டும் பக்தி யோகம் பண்ண வேண்டாம்
அங்க பிரபத்தி அல்ல
நீர் பிரார்த்தித்த அனைத்தையும் பெறுவீர்
விபீஷணன் உடன் வந்த நால்வரும் பேறு பெற்றார்கள் -மீண்டும் பிரார்த்திக்காமலும் ஆலோசனை செய்யாமலும் பெற்றார்கள் -அன்றோ
ஆகவே ராமானுஜ தாசர்களான அஸ்மத்தாதிகளும் பேறு என்று பிராட்டி அனுக்ரஹம் செய்து அருளுகிறாள்-உபாய தானம் -பதி சம்மதம் பேரில் -அவனால் ஏற்பட்ட முறையில் அருள்கிறாள்
திருவடிக்கு முத்து மாலை அருளியது போலவே –

————-

எம்பெருமானுடைய ஸ்வரூபம்:
அகி²லஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந! * ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *
அநந்த ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! *

அகி²லஹேய ப்ரத்யநீக -அனைத்து ஹேய குணங்களுக்கும் எதிர் தட்டாய்
கல்யாணைகதாந! * -நல்ல குணங்களுக்கு முக்கிய ஸ்தானமாய்
ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷண *–தன்னை ஒழிந்த ஸமஸ்த வஸ்துக்களைக் காட்டிலும் விலக்ஷணமாய்
அநந்த –ஸர்வ வ்யாபியாகையாலே தேச பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ கால வர்த்தியாகையாலே கால பரிச்சேத ரஹிதமாய்
ஸர்வ வஸ்துக்களும் தானேயாய் இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய்
ஆக இப்படி மூன்று வித பரிச்சேதங்களும் இல்லாமையே அனந்தத்வம் ஆவது
ஜ்ஞாநாநந்தை³க ஸ்வரூப! -இப்படி அநந்தமாய்
ஸ்வயம் ப்ரகாசமாகையாலே ஞானமே வடிவாய்
ஸூக ரூபமாகையாலே ஆனந்தமே வடிவாய் இருப்பவனே
என்று இவ்வளவும் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைப் பேசியபடி
ஸ்வரூப ரூப குண விபூதிகள் –என்கிற கோவையில்
இதுவரை ஸ்வரூபத்தைப் பேசி
மேலே ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹ விவரணம் –

————-

ரூபம்:
ஸ்வாபி⁴மதாநுரூப ஏகரூப * அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய நிரவத்³ய* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!

ஸ்வாபி⁴மத-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய்
அநுரூப –ஏற்றதாய்
ஏகரூப * –ஷட் பாவ விகாரங்கள் ஒன்றும் இன்றிக்கே இருப்பதாய்
அசிந்த்ய –ப்ராக்ருத வஸ்து சஜாதீயமாக நினைக்கக் கூடாததாய்
தி³வ்ய-அப்ராக்ருதமாய்
அ த்³பு⁴த -க்ஷணம் தோறும் அபூர்வமாய் இருப்பதாய்
நித்ய -ஸ்வரூப குணங்கள் போலே அநாதி நிதநமாய்
நிரவத்³ய* –துர் பலத்வம் முதலான அவத்யங்கள் இன்றிக்கே இருப்பதாய்
அன்றிக்கே
நித்ய நிரவத்ய -என்று ஒரே சொல்லாக்கி எப்போதும் நிரவத்யமாய் இருப்பதாய்
அதாவது என்றும் ஓக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் -என்றபடி எஞ்ஞான்றும் அடியார்களுக்காகவே இருக்கை
நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய-இதற்கு மேற்பட்டது இல்லை என்னும்படியாய் புகரை யுடைத்தாய்
ஸௌந்த³ர்ய ஸௌக³ந்த்⁴ய * ஸௌகுமார்ய லாவண்ய * யௌவநாத்³யநந்தகு³ணநிதி⁴ * தி³வ்யரூப!–அவயவ சோபை யாகிற ஸுந்தர்யம் என்ன
திவ்ய பரிமள ப்ரசுரமாய் இருக்கை என்ன
பிராட்டிமாரும் உறைக்க பார்க்க ஒண்ணாத படியான ஸூ குமாரத் தன்மை என்ன
ஸமுதாய சோபை யாகிற லாவண்யம் என்ன
எப்போதும் இளமை மாறாமல் இருக்கும் யவ்வனம் என்ன
இவை முதலான அபரிமித குணங்களுக்கு கொள்கலமாய் இருப்பதான
திவ்ய ரூப -திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்
கீழேயும் -அசிந்த்ய திவ்ய அத்புத –திவ்ய பத பிரயோகம் புநர் யுக்தி தோஷம் அன்று
எத்தனை தடவை சொன்னாலும் பர்யாப்தி பிறவாது அன்றோ
இவ்வளவும் திவ்ய மங்கள விக்ரஹம் விவரித்து
மேல் திவ்ய ஆத்ம குணங்களை விவரித்தது அருள்கிறார்

————-

திவ்யாத்ம கு₃ணங்கள்:
ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்ஸௌஶீல்ய
வாத்ஸல்ய* மார்த³வ ஆர்ஜவ * ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய * மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய *
சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம * ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *
க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !

ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய * -இந்த இரண்டு விசேஷணங்களும் மேல் உள்ள அனைத்து குணங்களிலும் அந்வயிக்கும்
ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கும்
ஷாட் குண்யம் முதலிய ஸமஸ்த கல்யாண குண ஸமூஹங்களுக்கு கடல் போன்றவை
நீருக்கு குளிர்ச்சி போலவும் நெருப்புக்கு உஷ்ணம் போலவும் தர்மி உள்ள போதே இருக்கும் தர்மம் போல் இருப்பதையே ஸ்வா பாவிகமாய் இருப்பவை –
ஒரு நாளில் உண்டாகி மற்ற நாளில் இல்லாதவை போல் அன்றியே யவாதாத்ம பாவியாய் இருக்கை
இத்தால் நித்யர் முக்தர்களின் குணங்களில் நின்றும் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
அவர்களுக்கு எம்பெருமான் இச்சையால் உண்டானதாய் இருக்கும் அன்றோ
அந வதிக அதிசயமானது -ஒவ்வொரு குணமும் எல்லை காண ஒண்ணாத படி இருக்கை –
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்ஸுக்கள் -மற்ற குணங்களுக்கும் ஊற்றுவாயாக இருக்கும்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஜ்ஞாநப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ்
ஞானமாவது -எல்லாவற்றையும் ஒரு காலே உள்ளபடி எப்போதும் அறிகை
பலமாவது -ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸமஸ்த பதார்த்தங்களையும் -ஸ்ரமம் இன்றி தரிக்கை யாகும் ஆற்றல்
ஐஸ்வர்யமாவது -ஸகல வஸ்துக்களையும் ஸமஸ்த சேதனர்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்
வீர்யமாவது -உபாதான காரியமாக ஸமஸ்த ஜகத்துக்கும் இருந்தாலும் தான் ஸ்வரூப விகாரம் அடையாமல் இருக்கை
சக்தியானது -அகடி கடநா ஸாமர்த்யம்
தேஜஸ்ஸாவது -எதற்கும் ஸஹ காரி அபேக்ஷை இல்லாமல் இருக்கை
மேல் இவற்றில் இருந்தும் தோன்றும் குணங்களை விவரித்து அருள்கிறார்
ஸௌஶீல்யம் ஆவது புரை யறக் கலக்கும் சீல குணம்
வாத்ஸல்யம் * ஆவது -ஆண்டு ஈன்ற கன்றின் அழுக்கை உய்க்கும் பசு போல் அடியார்களின் தோஷங்களையே போக்யமாகக் கொள்ளுகை
மார்த³வம் ஆவது -ஆஸ்ரிதர் விரஹம் பொறுக்க மாட்டாத மென்மை
ஆர்ஜவ *மாவது – கர்ணத்திரயத்தாலும் செவ்வியனாக -ருஜு வாக இருக்கை -இதற்கு எதிர்தன்மை கௌடில்யம்
ஸௌஹார்த³ மாவது -எப்போதும் பிறரது நன்மைகளையே சிந்தித்து இருக்கை
ஸாம்ய மாவது ஜாதி குண வ்ருத்தாதிகளில் தார தம்யம் பாராமல் ஆஸ்ரயிக்கத் தக்க படி இருக்கை-

காருண்ய * மாவது -துக்கித்தவர்களை நோக்கி ஐயோ என்று இரங்குகை
மாது⁴ர்ய மாவது -கொல்ல நினைக்கும் கொடிய நெஞ்சுடையாருக்கும் இனியனாய் இருக்கை
கா³ம்பீ⁴ர்ய மாவது -ஆஸ்ரிதர்களுக்கு செய்ய நினைக்குமவற்றை யாராலும் கணிசிக்க முடியாத ஆழ்ந்த திரு உள்ளம் உடையனாய் இருக்கை
ஔதா³ர்ய *மாவது -கைம்மாறு கருதாதே கொள்ளக் கொள்ளக் குறையாதே வேண்டிற்று எல்லாம் அருளும் கோதிலா மணி வண்ணனாய் இருக்கை
சாதுர்ய மாவது -ப்ரதிகூலரையும் அநுகூலரராக்கும் சதிர்
ஸ்தை²ர்ய மாவது -அடியார்களை ஒருக்காலும் கைவிட மாட்டாத உறுதி
தை⁴ர்ய மாவது -பிரதிபக்ஷம் பிரபலமாய் இருந்தாலும் த்ருணீ கரித்து இருக்கை
ஶௌர்ய மாவது -பிரபல எதிரிகளின் திரள்களிலும் துணையின்றி துணிந்து புகும் ஆற்றல்
பராக்ரம * -அவ்வாறு புகுந்த இடத்தில் அவலீலையாக எதிரிகளைப் பங்கப்படுத்தும் ஆற்றல்
ஸத்யகாம ஸத்யஸங்கல்ப *-இவ்விடத்தில் இவை இரண்டும் பாவ ப்ரதான நிர்தேசமாகையாலே ஸத்ய காமத்வமும் ஸத்ய ஸங்கல்பத்துவமும் என்று கொண்டு
ஸத்ய காமத்வமாவது -விரும்பப்படுவை எல்லாம் குறைவற்று ஸித்தித்து இருக்கை
ஸத்ய ஸங்கல்பத்துவமாவது -எது செய்ய நினைத்தாலும் தடையின்று செய்த் தலைக்கட்டும் ஆற்றல்
க்ருʼதித்வ மாவது -அடியார்களுக்கு செய்து கொண்டே இருக்கை
க்ருʼதஜ்ஞதாத்³மாவது -அடியார்கள் சிறிது நன்மை செய்தாலும் அத்தை ஒருகாலும் மறவாது இருக்கை

ஆக இவை முதலான
யஸங்க்²யேயகல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவ !–எண்ணித் தலைக்கட்ட முடியாத கல்யாண குண ராசிகளாகிற ப்ரவாஹங்களுக்கு கடல் போன்றவனே

இது வரை திருக் கல்யாண குணங்களை பேசி
மேல் திவ்ய பூஷணங்களை விவரித்து அருள்கிறார் –

————–

ஸ்வரூப
ரூப விவரணங்களுக்கு
அநந்தரம்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அலங்காரமான திவ்ய கல்யாண குணங்களை பேசிய
அநந்தரம்
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய பூஷணங்களைப் பேசுகிறார்

தி₃வ்ய பூ₄ஷணங்கள்:
ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ
* நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

ஸ்வோசித-தனக்குத் தகுந்தவையாய்
விவித⁴விசித்ர-பலவகைப்பட்ட வைச்சித்திரியை யுடையனவையாய்
அநந்த * –அபரிமிதங்களாய்
ஆஶ்சர்ய –விஸ்மய நீயங்களாய்
நித்ய –சாஸ்வதங்களாய்
நிரவத்³ய * –ஒரு வகையான தோஷ சம்பந்தமும் இல்லாதவையாய்
நித்ய நிரவத்ய -ஒரே முழுச் சொல்லாக்கி எப்போதும் நிரவத்யங்களாய் என்றுமாம் –
நிரதிஶய ஸுக³ந்த⁴ -ஒப்புயர்வற்ற பரிமாணத்தை யுடையவையாய்
நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ–ஒருக்காலும் கழற்ற வேண்டாதபடி ஒப்பற்ற ஸுகுமார்யம் யுடையனயவையாய் இருக்கை

  • நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * –ஒப்புயர்வற்ற புகரை யுடையவையாய் –
    கிரீட மகுட சூடா³வதம்ஸ * –கிரீடம் மகுடம் சூடாவதம்சம் இவை மூன்றும் பர்யாயமாகத் தோன்றினாலும் -அவாந்தர பேதங்களை இட்டுத் தனித்தனியாக வ்யவஹரித்த படி
    கொண்டை -தொப்பாரம் -துராய் -என்னுமா போல்
    பாரளந்த பேரரசே –எம் விசும்பரசே-எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
    ஸுலப்ய பரத்வ பிரணயித்வங்களுக்கு –மூன்று முடிக்கு உரிய இளவரசனுக்கு மூன்று ஸாம்ராஜ்ய பட்டங்கள்
    மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனும் இங்கு மூன்றும் தனித்தனியே வ்யவஹரித்து அருளிச் செய்கிறார்
    சூடாவதம்ஸ -முழுச் சொல்லாகவும்
    சூட -அவதம்ஸ -என்று கொண்டு க்ரமேண சுட்டியையும் கர்ண ஆபரணத்தையும் சொன்னவாறு என்றுமாம்
    மகரகுண்ட³ல –மகர வடிவமான தோடுகள்
    க்³ரைவேயக * –திருக்கழுத்துக்கு பூஷணம்
    ஹார -திரு மார்பில் அணியும் முத்து வடங்கள்
    கேயூர –தோள் வளைகள்
    கடக-முன் திருக்கையில் சாத்தும் வளையல்கள்
  • ஶ்ரீவத்ஸ -இது கீழ்ச் சொன்ன ஆபரணங்கள் போல் அல்லாமல் மயிர்ச்சுழியே யானாலும் பூஷணம் போல் இருக்கும் திரு மறு
  • கௌஸ்துப⁴ -திரு மார்பிலே குலாவித் திகழும் குரு மா மணிப்பூண்
  • முக்தாதா³ம * -ஏகா வளி த்ரி சரம் பஞ்ச சரம் -என்னப்படுகிற முக்தாஹாரங்கள்
  • உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
  • பீதாம்ப³ர -புருஷோத்த லக்ஷணமான பீதக வாடை
  • உத³ரப³ந்த⁴ந * -திரு வயிற்றுப பட்டம்
  • காஞ்சீகு³ண -அந்தப் பீதக வாடையின் மேல் அணியும் அரை நூல் பட்டிகை
  • நூபுர-திருவடிச் சிலம்பு
  • ஆதி -ஸப்தத்தாலே யஜ்ஜோ பவீதம் கணை யாழி மோதிரம் போல்வன
  • யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *–இப்படிப்பட்ட அபரிமித தீய பாஷாணங்களை யுடையவனே
  • செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
    தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
    மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
    எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-

————–

தி₃வ்யாயுதங்கள்:
ஸ்வாநுரூப * அசிந்த்ய ஶக்தி ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³த்³யஸங்க்²யேய
* நித்ய நிரவத்³ய * நிரதிஶய கல்யாண * தி³வ்யாயுத⁴!

ஸ்வாநுரூப * –தனக்குத் தகுந்தவையாய்
அசிந்த்ய ஶக்தி –நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாத சக்தியை யுடைய
ஶங்க² சக்ர க³தா³[ऽஸி] ஶார்ங்கா³தி -சங்கு சக்கரம் கதை வில் முதலிய
அஸி -என்பதையும் கூட்டி பாட பேதம் -அது இல்லாத பாடமே நம்பிள்ளை திரு உள்ளம்
யஸங்க்²யேய-எண்ண முடியாதவையாய்

  • நித்ய நிரவத்³ய * -நாள் செல்லச்செல்ல மழுங்குகை அன்றிக்கே -என்றும் ஒருபடிப் பட்டவையாய்
    நிரதிஶய கல்யாண * -ஒப்பற்ற ஸோபா வஹங்களாயும் இருக்கிற
    தி³வ்யாயுத⁴!–திவ்ய ஆயுதங்களை யுடையவனே

————–

தி₃வ்யமஹிஷிகள்:
ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!

ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண
ஸ்ரீ பெரிய பிராய்யியாரைப் பற்றிய முதல் சூர்ணிகையில் அருளிச் செய்த விசேஷணங்களே இங்கும் உள்ளன
இவர் தாம் பிறருக்கு உபதேசிக்கிறார் அன்றியிலே அனுபவிக்கிறாராகையாலே ஆதார அதிசயத்தால் என்பதால் புநர் யுக்தி தோக்ஷம் இல்லை
அதவா
அங்கு சரண்யத்தைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லபயத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார்
ஸ்வ அபிமதங்களாயும்
நித்ய நிரவத்யங்களாயும்
அநு ரூபங்களாயும் இருக்கிற
ஸ்வரூப
ரூப
கு³ண
விப⁴வ
ஐஶ்வர்ய *
ஶீலாத்³யநவதி⁴காதிஶய
அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண -ஸமூஹங்களை யுடைய
ஶ்ரீவல்லப⁴! * பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனே
ஶ்ரீவல்லப⁴! * -ஸ்ரீ க்கு வல்லபன் என்றும் ஸ்ரீ யை வல்லபையாய் யுடையவன் என்றுமாம்
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்றும்
அவள் சொல்லை மறுக்க மாட்டாதே அவளுக்கு விதேயனாய் இருப்பவன் என்றுமாம்
ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!–கீழ்ச் சொன்ன விசேஷணங்களை எல்லாம் ஏவம் பூத என்று சொல்லி -பெரிய பிராட்டியாருக்குச் சொன்ன பெருமைகள் எல்லாம்
பூமா தேவிக்கும் நீளா தேவிக்கும் சமானம் என்றவாறு
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவின் நிழல் போல்வனர் -திரு விருத்தம்

———–

நித்ய போ₄க்தாக்கள்:
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண
* ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!

கீழ்ச் சின்ன சேர்த்திகள் எல்லாம் காட்டில் எரிந்த நிலா வாகாமல் நித்ய போக்தாக்கள் இருக்கும்படி சொல்கிறது மேல்
அபரிமித நித்யா முக்த பரிசாரி கள் நித்ய கைங்கர்யம் பண்ணும்படி உள்ளவனே
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்னில்
ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³–தன்னுடைய திரு உள்ளத்தை அநுசரித்த
ஸ்வரூப
ஸ்திதி
ப்ரவ்ருத்திகளை –யுடையவர்களாயும்
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப–ஸகல வித கைங்கர்யங்களையும் செய்ய ஆசைப்பட்டு இருக்கையே வடிவாக யுடையவர்களாயும்

  • நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண–எக்காலும் வழுவற்று ஒப்புயர் வற்றவையான
    ஞானம்
    வியாபாரம்
    நியமனம் முதலான
    அநந்த கல்யாண குண ஸமூஹங்களை யுடையவர்களுமாய் இருப்பவர்கள்
    நித்ய நிரவத்ய -என்பதை * ஶேஷ ஶேஷாஶநாதி களுக்கு விசேஷணமாகக் கொண்டு
    நான்கு விசேஷணங்கள் சேஷ சேஷாஸ நாதிகளுக்கு ஆக்கி
    ஸ்வாதீன ஸ்வார்த்த கைங்கர்யம் செய்கையாகிற அவத்யம் இல்லாதவர்கள் என்றதாயிற்று
    நித்ய நிரவத்யத்தை ஞானாதிகளுக்கும் விசேஷணம் ஆகவுமாம்
    அடிமைக்கு உறுப்பான அசங்குசிதமான ஞானம் என்ன –
    கிரியா -அந்த ஞானத்துக்குத் தக்க செய்கை என்ன
    ஐஸ்வர்யம் -பிறரை நியமிக்கும் அதிகாரம் என்ன
    இவை முதலான கல்யாண குணங்களை யுடையவர்கள் என்கை
    சேஷா ஸநர் -சேனை முதலியாருக்குத் திருநாமம்
    த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா –ப்ரியேண ஸேநாபதிநா –ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி
    பரிசாரிகா -அநுக்ரஹா -விமலா -காந்தி -வாருணீ -ஸூ கீர்த்தி -ருத்ரா –ஸூத்ரவதி முதலானரை பரிசாரிகர் என்பர்
    லீலா லதா க்ருபாணீ -என்றும் முகிளித நளிநா –ரெங்கராஜ ஸ்தவம்
    மதி முக மடந்தையர் போல்வார்

————

இருப்பிடம்:
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண
* நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !

இவற்றை ஒரே வாக்யமாகக் கொள்வதே ஸர்வ ஆச்சார்ய ஸம்மதம்
பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வ -என்று தனி வாக்யமாக-ஸம்வாத ரூபமாகக் கொண்டு
மேல்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த
போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ * அநந்தாஶ்சர்யாநந்த * மஹாவிப⁴வாநந்த பரிமாண நித்ய நிரவத்³ய நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !
என்று சொல்வாரும் உண்டு என்பாரும் உளர் என்று தேசிகர் பாஷ்யத்தில் உண்டு என்று ஸ்ருத ப்ரகாசாச்சார்யார் வியாக்யானத்தில் உண்டு
அவரே மேல் ஏக வாக்யமாகக் கொள்வதே சிறக்கும் என்கிறார்

பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்
ஸ்வாபி⁴மத * விவித⁴ விசித்ராநந்த போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ ராயும்
அநந்தாஶ்சர்யமாயும்
அநந்த * மஹாவிப⁴வமாயும்
அநந்த பரிமாணமாயும்

  • நித்யமாயும்
    நிரவத்³ய மாயும்
    அல்லது
    நித்ய நிரவத்³ய மாயும்
    நிரதிஶய மாயுமாய் இருக்கிற
    ஶ்ரீவைகுண்ட²நாத² !னானவனே –
  • பரமயோகி³ வாங்மநஸாঽபரிச்சே²த்³ய ஸ்வரூப ஸ்வபா⁴வமாயும்-திவ்ய புருஷைர் மஹாத்மாபிர் அபூரிதே தேஷாம் அபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈத்ருஸ ஸ்வபாவம் இதி பரிச்சேதும் அயோக்ய -ஸ்ரீ வைகுண்ட கத்ய ஸ்ரீ ஸூக்திகள் கொண்டு முதல் விசேஷணம் இங்கு
  • பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாஷாத்காரித்தவர்களாய் -ஸ்வேத தீப வாசிகளான பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்ரீ வைகுண்டம்
  • ஸூத்த ஸத்வ மய மாய் இருப்பது ஸ்வரூபம்
  • போக்ய தமமாய் இருப்பது ஸ்வ பாவம்
  • இவை இரண்டும் பரம யோகிகளுக்கும் சொல்லவும் ஒண்ணாதே நெஞ்சினால் நினைக்கவும் ஒண்ணாதே இருக்கும்
  • ஸ்வாபி⁴மத * –தனக்கு அபிமதங்களாயும்
  • விவித⁴ -விசித்ராநந்த–பலவகைப் பட்டவையாயும் -அத்புதங்களாயும் -அபரிமிதங்களாயும் இருக்கிற
  • போ⁴க்³ய போ⁴கோ³பகரண போ⁴க³ஸ்தா²ந ஸம்ருʼத்³த⁴ -போக்ய வஸ்துக்கள் என்ன
  • போக உபகரணங்கள் என்ன
  • போக ஸ்தானங்கள் என்ன
  • இவை நிரம்பப் பெற்றது ஸ்ரீ வைகுண்டம் –
  • அப்ராக்ருதங்களான ஸப்தாதி விஷயங்கள் -போக்ய
  • வஸ்துக்கள்
  • சூட்டு நன் மாலைகள் போல்வனவும் -பரிஜன பரிச்சதங்களும் போக உபகரணங்கள்
  • அப்ராக்ருத ரத்ன மண்டபங்கள் -கிரீடா பர்வதங்கள் போல்வன போக ஸ்தானங்கள்
  • இவை அனைத்தும் ஸம்ருத்தமாக பெற்று இருக்கும் என்றதாயிற்று
  • *அநந்தாஶ்சர்ய-நித்யமும் அபூர்வ வஸ்து போலே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கையாலே அளவிறந்த ஆச்சர்யமாய் இருக்கும்
  • அநந்த * மஹாவிப⁴வ-ரத்ன பூஷண ஸிம்ஹாஸ நாதிகளும் -உத்யான நதீ தடா காதிகளும் அளவிறந்து இருக்கையாலே அநந்தமான மஹா விபவங்களை யுடையதாய் இருக்கும்
  • அநந்த பரிமாண-ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கும்
  • நித்ய நிரவத்³ய -அநித்யமாயும் அவத்யங்களுடன் கூடி இருக்கும் ஸ்தானங்களைக் காட்டில் வாசி பெற்று இருக்கும்
    நிரதிஶய ஶ்ரீவைகுண்ட²நாத² !-ஆக கீழ்ச் சொன்ன படியால் தனக்கு மேம்பட்ட ஸ்தானம் வேறே ஒன்றும் இல்லை என்னும்படி இருக்கும்
    இப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்ட லோகத்துக்கு நாதனானவனே -என்றபடி

—————-

ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை லீலையாக வுடையவன்:
ஸ்வஸங்கல்பாநுவிதா⁴யி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி * ஸ்வஶேஷதைக ஸ்வபா⁴வ ப்ரக்ருʼதி புருஷ
காலாத்மக விவித⁴ விசித்ராநந்த * போ⁴க்³ய போ⁴க்த்ருʼவர்க³ போ⁴கோ³பகரண * போ⁴க³ஸ்தா²ந ரூப
* நிகி²ல ஜக³து³த³ய விப⁴வ லய லீல !

ஜகத்தாக இருக்கும் மூன்றும்
ப்ரக்ருதி
புருஷ
காலங்களுக்கு
விசேஷணங்களாக
ஸ்வ ஸங்கல்ப அநு விதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள்

தனக்கு சேஷப்பட்டதே இயல்பாக யுடையவை
இவற்றில் புருஷன் -சேதனன் -போக்தா
ப்ரக்ருதியைச் சொன்னது -ப்ராக்ருத வஸ்துக்களும் உப லக்ஷணம் -இவை
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் இருக்கும்
இந்த ஜகத்து கால கல்யம் என்று காட்டகாலத்தையம் சேர்த்த அருளிச் செய்கிறார்
இவை விவிதமாயும் -பலவகைப்படும்
விசித்ரமாகவும்
அநந்த -அபரிமிதமாகவும் -இருக்குமே
சகல லோகங்களுடைய
ஸ்ருஷ்டி
ஸ்திதி
சம்ஹாரங்களை –விளையாட்டாக யுடையவன்

————
ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! பரப்³ரஹ்மபூ⁴த! புருஷோத்தம! மஹாவிபூ⁴தே! ஶ்ரீமந்! நாராயண! வைகுண்ட²நாத²!

ஸத்யகாம! –நினைக்குமது எல்லாம் நிறைவேற்று இருக்கப் பெற்று இருப்பவனே
ஸத்யஸங்கல்ப! -ஸங்கல்பத்த படி எல்லாம் செய்து தலைக் கட்ட வல்லவனே
பரப்³ரஹ்மபூ⁴த!
புருஷோத்தம!
மஹாவிபூ⁴தே! -அளவு கடந்த நியாம்ய வஸ்துக்களை யுடையவனே
ஶ்ரீமந்!
நாராயண!
வைகுண்ட²நாத²!
இந்த எட்டு விசேஷணங்களும் கீழேயும் இருந்தாலும் இவருடைய அலமாப்பு அதிசயத்தால் புநர் யுக்தி தோஷம் அல்ல –

————
அபாரகாருண்ய ஸௌஶீல்ய வாத்ஸல்ய ஔதா³ர்ய * ஐஶ்வர்ய ஸௌந்த³ர்ய மஹோத³தே⁴!

அபாரகாருண்ய
ஸௌஶீல்ய
வாத்ஸல்ய
ஔதா³ர்ய *
ஐஶ்வர்ய
ஸௌந்த³ர்ய
மஹோத³தே⁴!
இந்த கல்யாண திருக் குணங்களுக்குப் பெரும் கடலாக இருப்பவனே
இங்கு ஐஸ்வர்யத்தைச் சேர்த்து அருளிச் செய்தது-இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்று ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டியே

———-
* அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்திஹர! * ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!
* நிகி²ல ஜக³தா³தா⁴ர! * அகி²லஜக³த்ஸ்வாமிந்! * அஸ்மத்ஸ்வாமிந்! * ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! * ஸகலேதரவிலக்ஷண!
* அர்தி²கல்பக! * ஆபத்ஸக²! * ஶ்ரீமந்! * நாராயண! * அஶரண்யஶரண்ய! * அநந்யஶரண:
* த்வத்பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥

அநாலோசிதவிஶேஷ அஶேஷலோகஶரண்ய! * -ஜன்ம விருத்த ஞானங்களில் வாசி பாராதே -எப்படிப்பட்டவர்களும் வந்து அடி பணியும்படி அவர்களுக்கு எல்லாம் தஞ்சமாய் இருக்குமவனே
ப்ரணதார்திஹர! * –அடி பணிந்தவர்களின் ஆர்த்தகளைத் தீர்க்குமவனே
ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே⁴!-ஆஸ்ரிதர்களின் குற்றங்களை எல்லாம் நற்றமாகக் கொள்ளுகிற குணத்துக்குக் கடலாய் இருப்பவனே
அநவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத * யாதா²த்ம்ய! சகல பதார்த்தங்களின் உண்மை நிலையை எப்போதும் அறிபவனே -இத்தால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லுகிறது -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் போன்ற அடியேனுடைய நிலைமைகளை விண்ணப்பம் செய்ய வேண்டாத படி நீயே ஸ்வயமாகவே அறிந்து கொள்ள வல்லவனே -என்றபடி
அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமந நிரத! * –ஜங்கம
ஸ்தாவரங்களான ஸகல பதார்த்தங்களையும் நியமிக்க வல்லவனே -இப்படி உனது திருவடித் தாமரைகளில் அடியேனை வந்து நிற்கப் பண்ணி அருளியதும் நீயே அன்றோ என்றபடி
அஶேஷசித³சித்³வஸ்து ஶேஷிபூ⁴த!–ஸகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே –
அடியேன் பக்கல் கைங்கர்யம் கொண்டு அருளுவதும் உனது கடமை -பொறுப்பு -பரம் -அன்றோ

  • நிகி²ல ஜக³தா³தா⁴ர! * –ஸகல ஜகத்துக்கும் ஆதரமாய் இருப்பவனே
    அகி²லஜக³த்ஸ்வாமிந்! *
    அஸ்மத்ஸ்வாமிந்! *
    ஸத்யகாம!
    ஸத்யஸங்கல்ப! *
    ஸகலேதரவிலக்ஷண!
  • அர்தி²கல்பக! * -இதற்கு மூன்றுபடியாகச் சொல்லுவர்
    யாசகர்களுக்குக் கல்ப வ்ருக்ஷம் போன்றவனே என்றும்
    ‘யாசகர்களை கல்ப வ்ருக்ஷமாகக் கொள்பவன் என்றும்
    யாசகனாயும் கல்ப வ்ருஷமாயும் இருப்பவனே என்றும்
    மேலும்
    அர்த்திகளை யுண்டாக்குபவன் என்றும் நாலாவது பொருளும் சொல்வர்
    ஆபத்ஸக²! *
    ஶ்ரீமந்! *
    நாராயண! *
    அஶரண்ய ஶரண்ய! *
    அநந்ய ஶரண:
  • த்வத் பாதா³ரவிந்த³யுக³ளம் * ஶரணமஹம் ப்ரபத்³யே ॥–புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் என்கிறார்

————

அத்ர த்³வய(மநுஸந்தே³ய)ம் ।

ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நம -அனுசந்தேயம்
எம்பெருமானார் துவரம் அனுசந்தித்து அருளியதை அஸ்மதாதிகளுக்கும் சிக்ஷிக்கிற படி
இங்கு உபாம்சுவாக அனுசந்தேயம்

—————

பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥

இவை இரண்டும் புராண ஸ்லோகங்கள்
முன்னோர் மொழிந்த பொருளே அன்றி மொழியும் பொன் போல் போற்றத்தக்கது வாதலாலும்
இவை எம்பெருமான் திரு உள்ளத்தில் அக்ரஹ அதிசயத்தை விளைவிக்குமதலாலும்
இங்கே விண்ணப்பம் செய்து அருளுகிறார்
இவற்றால் மீண்டும் சரணாகதி செய்கிறார் என்று கொள்ளத்தக்கது அல்ல
ஸக்ருத் ஏவ ஹி ஸாஸ்த்ரார்த்த -யாகையால் புநர் யுக்திக்கு ப்ரஸக்தி இல்லை-

விபோ -எம்பெருமானே
பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।-பிதாவையும் மாதாவையும் மனைவியையும் மக்களையும் சுற்றத்தாரையும் தோழன்மாரையும் ஆச்சார்யர்களையும்
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥–ரத்னங்களையும் தந தானியங்கள் முதலானவையையும் கிராம பூமியையும் வீடுகளையும்

ஸர்வத⁴ர்மாம்ஶ்ச –ஸர்வ தர்மங்களையும்
ஸாக்ஷராந் ।ஸர்வ காமம் ச –கைவல்யம் உள்ளிட்ட ஸகல காம்ய புருஷார்த்தங்களையும்
ஸ்வர்க்க லோக அதிபத்யம் -ப்ரஹ்மலோக அதிபதியம் போன்றவற்றிலும் ஆசை அற்ற படி
ஸந்த்யஜ்ய * -வாஸனையோடே முழுவதுமாக விட்டு ஒழித்து
தே லோக விக்ராந்த சரணௌ * ஶரணம் அவ்ரஜம் –உனது உலகு அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றபடி –

இங்கு தாய் தந்தையரையும் ஆச்சார்யரையும் விட்டு ஒழிந்ததாகச் சொல்வது ஸாஸ்த்ர விரோதமாகாதோ என்னில்
இவர்களை விட்டு ஒழிவது விரோதப்பட்டுத் தள்ளுகை அன்று
காம்ய தர்ம உபயோகியாகவோ
அர்த்த காம உபயோகியாகவோ
இவர்களைக் கொள்ளாததுவே த்யாஜ்யம் எனப்படுகிறது இங்கு
வீடு தானம் தான்யம் போன்றவை சன்யாசிகளுக்கும் தேஹ யாத்திரைக்கு வேண்டுமே என்னில்
இங்கு சொல்வது ஸர்வாத்மநா தியாகம் அன்று
கொண்ட பெண்டிர் தாம் முதலாகக் கூறுமுற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டுத் -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான்
ஆர்க்கும் ஹிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு -திருவாய் மொழி நூற்றந்தாதி -81-
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே
என்று அருளிச் செய்வதால்
த்யாஜ்யமாகைக்கு நிபந்தநம் வேறு
உபா தேயமாகைக்கு நிபந்தநம் வேறு என்றதாயிற்று

ஆச்சார்ய சம்பந்தமே முக்திக்கு முதல் தனி வித்தாய் இருக்க -அந்த சம்பந்தத்தையும் குலைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் என்பதற்கு ப்ரஸக்தியே இல்லை
மாதாபிதாக்களையும் ஆச்சார்யரையும் பகவத் விபூதி பரமாகவே கருதுகிறேன் என்பதே பரம தாத்பர்யம் –
இவர்கள் தாமே பகவத் பாகவத விரோதிகளாகில் இவர்களைத் த்யஜித்து பிராப்தமே –

————–

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ * த்வமேவ ப³ந்து⁴ஶ்ச கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ * த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ” ॥
–7-

ஹே தே³வதே³வ” ॥
த்வமேவ மாதா
ச பிதா த்வமேவ *
த்வமேவ ப³ந்து⁴ஶ்ச
கு³ருஸ்த்வமேவ ।
த்வமேவ வித்³யா
த்³ரவிணம் த்வமேவ *
த்வமேவ ஸர்வம் மம —
பல சொல்லி என் –எனக்கு எல்லாமும் நீயே

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவரும் நீ பேசில்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே
பிரிய வர்த்தனாகையாலே தாயாகவும்
ஹித வர்த்தனாகையாலே தந்தையாகவும்
மற்றும் ஸகல வித உபகாரங்களையும் செய்பவனாகையாலே மற்றை எல்லாருமாகவும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை நிலைகளை எல்லாம் நீர்மையினாலே அருள் செய்தவனாகையாலே ஆச்சார்யரானாகவும்
இப்படிச் சொல்லக் குறையில்லை
பேயிருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதூடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் அன்றோ

த்வமேவ வித்யா -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் என்று இருக்கும் அகிஞ்சனர்கள் உபாஸந ரூப வித்யா ஸ்தானத்தில் எம்பெருமானையே நிறுத்துவார்கள் அன்றோ

த்ரவிணம் த்வமே –உபாய உபேயங்கள் இரண்டுமே நீயே என்று காட்டின படி -உலகில் த்ரவ்யங்களைக் காரியாந்தரங்களுக்கு சாதனமாகவும் ஸ்வயம் போக்யமாகவும் கொள்வது ப்ரத்யக்ஷமே –
அது எம்பெருமானுக்கு ஒக்குமே

————

“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர்க³ரீயாந் ।
ந த்வத்ஸமோঽஸ்த்யப்⁴யதி⁴க: குதோঽந்யோ * லோகத்ரயேঽப்ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–8-

கீழ் தாம் ஒருவருக்கே மாதா பிதாவாக அருளிச் செய்தார்
அந்த உறவு ஸர்வ லோக அசாதாரணமாகையாலே -முத் தெரிவிக்கும் ஸ்ரீ கீதா -11-43 ஸ்லோகமும்
அடுத்த ஸ்லோகமும் இங்கு அனுசந்திக்கிறார்

ய ப்ரதிமப்ரபா⁴வ!” ॥’–ஒப்பில்லா பெருமை பெற்ற மாயோனே
“பிதாঽஸி லோகஸ்ய சராசரஸ்ய * த்வம் –ஸ்தாவர ஜங்கமாத்மகமான இவ் உலகுக்கு எல்லாம் தந்தையாய் இரா நின்றாய்
அஸ்ய லோகஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர் க³ரீயாந் ।
ச அஸி — இவ் வுலகுக்கு பூஜிக்கத் தகுந்த ஆச்சார்யனாகவும் இரா நின்றாய்
ஆகையால் இவ் வுலகுக்கு எல்லாம் பூஜ்ய தமனாய் இரா நின்றாய்
லோகத்ரயேঽப் ந த்வத் ஸம அந்ய நாஸ்தி –காருண்யாதி கல்யாண குணங்களினால் உன்னை ஒத்தவன் மூவுலகிலும் இல்லை
யப்⁴யதி⁴க: குத அபி -சமானன் இல்லை என்னும் போது மேற்பட்டவன் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
தன் ஒப்பார் இல்லா -ஒப்பில்லா அப்பன் அன்றோ

த்வத் ஸம நாஸ்தி என்னாமல்
த்வத் ஸந அந்ய நாஸ்தி என்கையாலே
உனக்கு ஒப்பவன் நீயே என்றதாகும்
தன் ஓப்பான் தானாய் உளன் காண் -திருமழிசைப்பிரான்
ககநம் ககநாகாரம் ஸாகரஸ் சாகர உபம ராம ராவண் யோர் யுத்தம் ராம ராவணயோர் இவ –இத்யாதிகளும் உண்டே –

—————-

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * ப்ரஸாத³யே த்வாமஹமீஶமீட்³யம் ।
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு: * ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ! ஸோடு⁴ம்” ॥
–9-

தஸ்மாத் -கீழ் ஸ்லோகத்தில் சொல்லியபடி ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கையாலே
அஹம் -குற்றங்களையே ஸ்வரூபமாக வடிவாக உள்ள அடியேன்
த்வாம் ஈஶம் ஈட்³யம் ।–ஸர்வ நியந்தவாயும் -ஸ்தோத்ர அர்ஹனாயும் இருக்கிற உன்னை
ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் * -வேர் அற்ற மரம் போலே உடலைக் கீழே இட்டுத் தொழுது
ப்ரஸாத³யே –க்ஷமை வேண்டுகின்றேன்
தே³வ!-பெருமானே
பிதேவ புத்ரஸ்ய (தோஷம் )–மகனுடைய குற்றங்களை பிதா பொறுப்பது போலவும்
ஸகே²வ ஸக்²யு: * (தோஷம் )-மித்ரனுடைய பாராதத்தை மித்ரன் பொறுப்பது போலவும்
ப்ரியாயா மஹ்யம் -நண்பனான அடியேன் பொருட்டு
ப்ரிய: (தவம் )அர்ஹஸி ஸோடு⁴ம்”–அன்பனான அடியேனுடைய அபராதங்களைப் பொறுக்க வல்லை
ப்ரிய ப்ரியாய அர்ஹஸி -என்று கொண்டு -காதலியினுடைய குற்றங்களைக் காதலன் பொறுப்பது போலவும் என்றும் கொள்ளலாம்

————-

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-

மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை

இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்

இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்

  • க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
    இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
    ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
    இவற்றை இங்கு அருளிச் செய்தது
    எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
    அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
    அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
    அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
    இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
    ஸம்ஸாரம் ஆனாது தானே
    பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
    அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே

மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்

க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்

எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை

இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்

ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –

————–

அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥-11

இனி மோக்ஷ விரோதியான புண்ய பாப ரூபமான விலக்கடியை க்ஷமித்து அருள் வேண்டுகிறார்

அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * –அடி தெரியாத காலம் முதல் கொண்டு விளைந்ததாய்
விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச* –ஆத்மாவைப் பற்றினதாயும் ஸமஸ்த ஜகத்தைப் பற்றினதாயும் இருக்கிற விபரீத ஞானத்தை ஷமித்து அருள வேண்டும்
அஶேஷ விஷயம் -எல்லாவற்றையும் பற்றினதாய்
அத்³யாபி வர்த்தமாநம்-இன்னமும் தொடர்ந்து வாரா நின்றதாய்
வர்திஷ்யமாணம் ச-இன்னமும் வாஸநா பலத்தாலே வரப்போகின்றதாயும் இருக்கிற
விபரீத -வ்ருʼத்தம் ச * * * ஸர்வம் க்ஷமஸ்வ –எல்லாவிதமான நிஷித்த அனுஷ்டானங்களை பொறுத்து அருள வேண்டும்

ஆத்ம விக்ஷயமான விபரீத ஞானமாவது
தேஹாத்ம அபிமானம்
ஸ்வ ஸ்வா தந்தர்ய பிரமம்
அந்ய சேஷத்வ பிரமம் முதலானவை

க்ருத்ஸன ஜகத் விஷயமான விபரீத ஞானமாவது
ஸர்வ பூதாத்மகே தாத-ஜகந்நாத ஜகன்மயே பரமாத்மந கோவிந்தே மித் அமித்ர கதா குத-என்கிற ப்ரஹ்லாதன் படியே
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமங்களை அவை யவைகளாக மாத்ரமே காண்கை

ஆத்ம விஷயம் க்ருத்ஸன விஷயம் விசேஷணங்கள் விபரீத விருத்தத்திலும் அந்வயிக்கும்
ஆத்மவிஷயமான விபரீத விருத்தமாவது -ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம் முதலானவை
ஜகத் விஷயமான விபரீத விருத்தமாவது–தனக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால் அதை ஸ்வ கர்ம பலம் என்றோ கிருபா பலம் என்றோ நினையாதே
நிமித்த மாத்ரமேயான சேதனனை ஸ்வ தந்த்ரனாக எண்ணி அவன் நமக்குத் தீங்கு விளைத்தான் என்று கொண்டு அவன் விஷயத்தில் ஒன்றுக்குப் பத்தாக தீங்குகள் செய்கை
விசேஷ விஷயம் -ஐஸ்வர்யம் முதலான அல்ப விஷயங்களை விரும்புகை முதலான காம்யங்களை விலஷிக்கிறது
முன்பு செய்தவை இப்பொழுது செய்கின்றவை மேலும் செய்யப்போகின்றவற்றை அர்விழியான அடியேன் அறிந்திலேன் யாகிலும்
ஸர்வஞ்ஞரான தேவரீரே அறிந்து பொறுத்து அருள வேண்ம் என்கிறாராயிற்று –

———————–

மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய
।–12-

இங்கு தாஸ பூதம் என்று த்வதீய அந்தமாகச் சொல்வதே சரியான பாடம் –
தாஸபூதப்ரதம அந்தமாக சொல்வது மருள்
தாஸ பூதனும்
ஸரணாகத அஸ்மி -தவாஸ்மி தாஸ -என்று சொல்லும் அடியேனை என்று பொருள்
கீழ்ச் சொன்ன அஞ்ஞானத்துக்கு அடியான தேஹ ஸம்பந்தத்தைத் அறுத்து அருள பிரார்த்தனை இதில்-

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

மம -என்னுடையதான
ஏஷா -இந்த
குண மயீ -முக்குண மயமான
மாயா -ப்ரகிருதி
தைவீ -தேவனான என்னாலேயே படைக்கப் பட்டதாகையாலே
துரத்யயா.–எவராலும் தம் முயற்சியால் மாத்ரம் கடக்க அரிதாய் உள்ளது
யே -எவர்கள்
மாம் ஏவ -என்னையே
ப்ரபத்யந்தே -சரணம் அடைகிறார்களோ
தே-அவர்கள்
மாயாம் ஏதாம் -இந்த மாயையை
தரந்தி -தாண்டுகிறார்கள் –

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்-

இந்த கீதா ஸ்லோகத்தின் படியே மாம் தாரய -என்கிறார் இங்கு -மாயை -ப்ரக்ருதி -அத்தை அடியேன் கடந்தேனாம் படி செய்து அருள வேணும்

மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * –நெடுநாளாக நான் பண்ணிப்போந்த கர்ம பரம்பரையால் உண்டானதான
ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * -எம்பெருமானான உன்னுடைய உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டாமல் மறைப்பதுமாகிய
விபரீத ஜ்ஞாந ஜநநீம்–தேஹாத்ம அபிமான ப்ரம்மம் முதலிய விபரீத ஞானத்தை விளைப்பதாய்

  • ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * –ஸ்வ கார்ய பூதமான ஸப்தாதிகளிலே போக்யதா புத்தியைப் பிறப்பிப்பதாய்
    தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * –போக ஆயாதன ரூபமான தேஹ ரூபத்தாலும்
    போக்ய உபகரணமான இந்த்ரிய ரூபத்தாலும்
    போக்யமான ஸப்தாதி ரூபத்தாலும்
    இத்தனைக்கும் முதல் கிழங்கான ஸூஷ்ம ப்ரக்ருதி ரூபத்தாலும்
    இவ்வாறு நான்கு வகைப்பட்ட பரிணாமத்தை யுடைத்தாய் இரா நின்ற
    தை³வீம் -இன்புறும் இவ் விளையாட்டுடையான் யாகையாலே தேவன் என்ற பேர் பெற்ற உன்னாலே கிரீடா பரிகரமாகச் சொல்லப்பட்டதாய்
    கு³ணமயீம் –ஸத்வ தமோ ரஜஸ் குண மூர்த்தியாய்
    மாயாம் *–விசித்திர கார்யகரமாகையாலே மாயை என்று பேர் பெற்றதான ப்ரக்ருதியை
    இதற்கு மாம் தாரய -என்றத்தோடே அந்வயம்
    மாம் என்கிற விசேஷ வியக்திக்கு இரண்டு விசேஷணங்கள்
    தா³ஸபூ⁴தம் “-என்றும்
    ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * -என்றும்
    தா³ஸபூ⁴தம்-அடியேனாகவும்
    ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * –த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே சரணாகதன் ஆனேன்
    உத்தர கண்டத்தின் படியே கைங்கர்ய நிரதனானேன் -என்று வாய் விட்டுச் சொல்பவனுமாய் இருக்கிற
    தவாஸ்மி தாஸ -என்கிற இடத்தில் -அஸ்மி -என்றது பிரார்த்தந அபிப்ராயத்தாலே பிரயோகிக்கப்பட்டது
    தாஸ விருத்தி பரனாய் இருக்கக் கடவேன் என்றபடி
    இவ்வாறு கொள்ளாத போது கீழ் தாஸ பூதம் என்பதையே சொல்லி புநர் யுக்தி தோஷம் வரும் (என்று தேசிகர் திரு உள்ளம் பற்றுகிறார் -)
    மாம் -அடியேனை
    தாரய -ப்ரக்ருதியைக் கடந்தவனாகச் செய்து அருள வேண்டும்

————

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥

“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥

“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்³யதே ।
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥

இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–13

கீழே நமஸ் சபிதார்த்தமான விரோதி நிவர்த்தகத்தி அருளிச் செய்து -இதில் இனி சதுர்த்தியின் அர்த்தமான இஷ்ட பிராப்தியை அருளிச் செய்கிறார்
பரம புருஷார்த்தமான கைங்கர்யம் சித்திக்க வேணுமே
அதற்கு இன்றியமையாததாய்
கைங்கர்யம் போலவே பிரிய விஷயமுமாய்
திருநாட்டில் அனுவர்த்திக்கும் பர பக்தி பர ஞானம் பரம பக்திகளை அபேக்ஷிக்கத் திரு உள்ளம் கொண்டு அவை ஸித்திக்க
பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டுமே -அத்தை உண்டாக்கி அருள் வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
ஸ்ரீ கீதா 7 அத்தியாயத்தில் 17-18-19- ஸ்லோகங்களை அடைவே அனுசந்தித்து பிரார்திக்கிறார் –

“தேஷாம் ஜ்ஞாநீ -கீழே சதுர்விதா பஜந்தே மாம் -என்று அருளிச் செய்து
அவர்களுக்குள் ஞானியானவன் சிறந்தவன் என்கிறது
நித்யயுக்த: * ஏகப⁴க்திர்விஶிஷ்யதே ।–நித்ய யுக்தனாய் -ஏக பக்தியாய் இருக்கையாலே ஞானியானவன் சிறந்தவன் என்கிறது –
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோঽத்யர்த²ம் * –ஞானிக்கு என்னிடத்தில் உள்ள ப்ரீதி வாஸோ மகோசரம்
அஹம் ஸ ச மம ப்ரிய:” ॥-அப்படியே ஞானிகளின் பக்கல் என்னுடைய ப்ரீத்தியும் வாஸோ மகோசரம்

“உதா³ராஸ்ஸர்வ ஏவைதே * –கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த சதுர் வித அதிகாரிகளையும் உதாரர்கள் என்கிறான் கீதாச்சார்யன்
என்னிடத்தில் உபாஸித்து சிறிது அளவு பிரார்த்தித்துப் பெற்றாலும் அவர்கள் எனக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணினவர்களாகவே என்னுடைய திரு உள்ளம் என்கிறான்
ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।-ஆனாலும் அவர்களுக்குள் ஞானிகளை எனக்கு உயிராகவே கருதுகிறேன்
ஏன் எனில்
ஆஸ்தி²தஸ ஹி யுக்தாத்மா * மாமேவாநுத்தமாம் க³திம்” ॥–என்னுடன் சேர்ந்தே வாழ நினைத்து இருக்கிற அந்த அதிகாரி என்னையே பரம ப்ராப்யமாகக் கொண்டு இருப்பதால் என்றபடி
மேல் ஸ்லோகத்தாலும் ஞானியின் சிறப்பை அருளிச் செய்கிறான்

“ப³ஹூநாம் ஜந்மநாமந்தே * –பல பிறப்புக்கள் கடந்த பின்பு
ஜ்ஞாநவாந் ஸந் –எனக்கு சேஷப்பட்டு இருப்பதே ஆத்ம ஸ்வரூபம் என்று உணர்ந்தவர்களாய்
மாம் ப்ரபத்³யதே ।-ஞானிகள் என்னை சரண் அடைகிறார்கள்
எவ்வாறு என்றால்
வாஸுதே³வஸ்ஸர்வமிதி * -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிற பிரதிபத்தியுடன் சரண் அடைகிறான்
ஸ மஹாத்மா ஸுது³ர்லப:⁴” ॥-அப்படிப்பட்ட மஹாத்மா எனக்கு கிடைப்பது அரிது

இதி ஶ்லோக த்ரயோதி³த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ ॥–இம்மூன்று ஸ்லோகங்களாலும் புகழ்ந்து கூறப்பட்ட ஞானியாக அடியேனைச் செய்து அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்

——————

புருஷஸ்ஸ பர: பார்த²! * ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” * “மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-14-

புருஷஸ்ஸ பர: பார்த²! * –ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா” *–8-22–
“ப⁴க்த்யா த்வநந்யயா ஶக்ய:” *11-54-
“மத்³ப⁴க்திம் லப⁴தே பராம்”–18-54
இதி ஸ்தா²நத்ரயோதி³த பரப⁴க்தியுக்தம் மாம் குருஷ்வ ॥-இம்மூன்று இடங்களிலும் சொல்லப்பட்ட பரபக்தி அடியேனுக்கு விளைந்ததாகச் செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் –

————-

பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்த்யேக ஸ்வபா⁴வம் * மாம் குருஷ்வ ॥-15-

பரபக்தி விளைந்த அளவிலே பர்யாப்தி பிறவாது இறே
பரபக்தி பர ஞானம் பரம பக்தி –இவையே வடிவெடுத்தவனாக அடியேனைச் செய்து அருள வேணும் என்கிறார் –

——————

பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத * பரிபூர்ணாநவரத * நித்யவிஶத³தம அநந்ய ப்ரயோஜந
அநவதி⁴காதிஶயப்ரிய ப⁴க³வத³நுப⁴வோঽஹம் * ததா²வித⁴ ப⁴க³வத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப⁴வாநி
॥-16-

இதில் நித்ய அனுபவத்தையும்
நித்ய கைங்கர்யத்தையும்
பெற்று வாழ பிரார்திக்கிறார்
கீழே 2 சூர்ணிகையில் உள்ள வாக்ய சந்நிவேசம் சற்றே மாறி இங்கு உள்ளன

———–

எம்பெருமானுடைய ப்ரதிவசநம்:
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
* அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * அநந்த மத³பசாரயுக்தோঽபி * அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி
* அநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி
* ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி
* ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
* விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந
* பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா
* நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:
* மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:
* மத்ப்ரஸாதா³தே³வ * ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:
* அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ * ஆத்மஸ்வரூப: * மதே³காநுப⁴வ:
* மத்³தா³ஸ்யைக ப்ரிய: * பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்
* ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।
–17—-

இனி இதற்கு மேல் இந்தக் கத்யம் முடியும் அளவும் எம்பெருமானுடைய பிரதிவசன பிரகாரத்தை அநு வதிக்கிற படி –
ஏவம்பூ⁴த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயா அவக்லுʼப்த* ஸமஸ்த வஸ்து விஹீநோঽபி
இந்த சூர்ணிகையின் நடுவில் உள்ள -த்வம் * கேவலம் மதீ³யயைவ த³யயா-என்பதில் இருந்து தவம் -என்பதை முதலில் யோஜித்துக் கொள்ள வேனும்
கீழே நித்ய கிங்கரோ பவான் -என்ற பிரார்த்தித்த படிக்கே அப்படியே நித்ய கைங்கர்ய பரராவீர் என்று அங்கீ கரித்து அருளிய சூர்ணிகை இது
ஏவம் பூத -என்றது கைங்கர்யத்துக்கு விசேஷணம் -கீழ் சூர்ணிகையில் எப்படிப்பட்ட கைங்கர்யம் பிரார்த்தித்தாரோ
அத்தை அநு வதித்து -நீர் விரும்பியபடியே -ஸாஸ்த்ரீய உபயாந்தரங்கள் இல்லையே யாகிலும் என்கை –

அநந்த தத்³விரோதி⁴ பாபாக்ராந்தோঽபி * -அப்படிப்பட்ட உபாய அநுஷ்டானங்களை இனி ஸம்பாதித்திக் கொள்ள ஒண்ணாத படி -அவற்றுக்கு விரோதிகளான பாபங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் யாகிலும்

அநந்த மத³பசாரயுக்தோঽபி * -என்னளவில் பண்ணின அபசாரங்கள் அபரிமிதமாக இருக்கப் பெற்றீர் ஆகிலும்

அநந்த மதீ³யாபசாரயுக்தோঽபி-அபரிமித பாகவத அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலுமஅநந்த அஸஹ்யாபசாரயுக்தோঽபி * –அபரிமித அஸஹ்ய அபசாரங்கள் மலிந்து இருக்கப் பெற்றீர் ஆகிலும்

ஏதத்கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீதாஹங்கார விமூடா⁴த்ம ஸ்வபா⁴வோঽபி–இப்படிப்பட்ட அபசாரங்களினால் உண்டாகுமதும் -இவற்றை மென்மேலும் உண்டாக்குமதுவுமான அநாதி விபரீத அஹங்காரங்களினால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வபாவத்தை யுடையீராகிலும் –

ஏதது³ப⁴ய கார்யகாரணபூ⁴த * அநாதி³ விபரீத வாஸநா ஸம்ப³த்³தோ⁴ঽபி * -கீழ்ச் சொன்ன அபராதங்களும் அஹங்காரமுமாகிற இரண்டுக்குக்கும் கார்ய காரணமுமாகிய அநாதி விபரீத வாஸனை சூழப் பெற்று இருந்தீர் யாகிலும்

ஏதத³நுகு³ண ப்ரக்ருʼதி விஶேஷ ஸம்ப³த்³தோ⁴ঽபி–கீழ்ச் சொன்ன
அபசார
அஹங்கார
வாசனைகள் ஆகிய மூன்றுக்கும் ஏற்ற
ராஜஸ தாமஸ ப்ரக்ருதியினால் நன்கு கட்டுப்பட்டு இருந்தீர் யாகிலும்

ஏதந்மூல * ஆத்⁴யாத்மிக * ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக * ஸுக²து:³க² தத்³தே⁴து * ததி³தரோபேக்ஷணீய
விஷயாநுப⁴வ ஜ்ஞாந ஸங்கோசரூப * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந ப்ரதிஹதோঽபி * –கீழ்ச் சொன்ன பிரக்ருதிக்கு அடியாக வருகிற தாபத்ரயம் என்னப்படுகிற ஸூக துக்கங்கள் என்ன
அவற்றுக்கு ஹேதுவானவை என்ன
அந்த ஸூக துக்கங்களில் காட்டிலும் வேறான உபேக்ஷிக்கக் கூடிய விஷயங்கள் என்ன
இவற்றின் அனுபவமும் ஞான சங்கோசமுமாகிய
என் திருவடி இணைகளைப் பற்றின பரிபூர்ண பரபக்தி பரஞான பரமபக்திகள் இவற்றுக்கு இடையூறு களினால் கெடுதல்கள் அடைந்தீராகிலும் –

யேந கேநாபி ப்ரகாரேண * த்³வயவக்தா த்வம் -ஏதேனும் ஒரு படி த்வய மந்த்ரத்தைச் சொன்ன நீர்

கேவலம் மதீ³யயைவ த³யயா–என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே

நிஶ்ஶேஷ விநஷ்ட ஸஹேதுக * மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி விக்⁴ந:–என்னுடைய திருவடி இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகளின் இடையூறுகள் எல்லாம் நிர்மூலமாக -அவற்றுடன் காரணங்களோடும் கூட -நன்கு கழியப் பெற்றவராகி

மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக * ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்தி:–எனது திருவடித் தாமரை இணைகளைப் பற்றிய பரப⁴க்தி பரஜ்ஞாந பரமப⁴க்திகள் என்னுடைய அனுக்ரஹம் அடியாக உண்டாகப் பெற்றவராய்

மத்ப்ரஸாதா³தே³வ –என்னுடைய அனுக்ரஹம் அடியாகவே

ஸாக்ஷாத்க்ருʼத * யதா²வஸ்தி²த மத்ஸ்வரூபரூப கு³ண விபூ⁴தி * லீலோபகரண விஸ்தார:–என் ஸ்வரூபம் ரூபம் திருக் குணங்கள் நித்ய விபூதி லீலா விபூதி ஆகிய இவற்றை விஸ்தாரங்களை உள்ளபடி சாஷாத்கரிக்கப் பெற்றவராய்
அபரோக்ஷஸித்³த⁴ மந்நியாம்யதா * மத்³தா³ஸ்யைக * ஸ்வபா⁴வ ஆத்மஸ்வரூப: -எனக்கே நியாம்யமாயும் -எனக்கே அடிமைப்பட்டு இருக்கையுமாகிற இயற்கையான ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணரப் பெற்றவராய்

மதே³காநுப⁴வ:-என் ஒருவனையே அனுபவிக்க விரும்பியவராய்

மத்³தா³ஸ்யைக ப்ரிய: -எனக்குக் கைங்கர்யம் பண்ணுவது ஒன்றிலேயே ஊற்றமுடையவராய்

பரிபூர்ணாந வரத * நித்யவிஶத³தம அநந்யப்ரயோஜந * அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம்-பரிபூர்ணமாயும் -இடையூறு அற்றதாயும் -எப்போதும் மிகவும் விசதமாயும் -ப்ரயோஜனாந்தரப் பற்று அற்றதாயும் -பரம பிரியமுமாய் இருக்கிற என்னுடைய அனுபவத்தை யுடையீராய்

ததா²வித⁴ மத³நுப⁴வ ஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித

அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வ ।-அப்படிப்பட்ட என் அனுபவத்தினால் உண்டு பண்ணப்பட்ட மிகச் சிறந்த யுகப்பினாலாகிய
ஸர்வ அவஸ்த உசித ஸகல கைங்கர்யங்களிலும் ஆசை கொண்டு இருக்கும் அடியவராக ஆகக் கடவீர்
என்று அனுக்ரஹித்த படி

—————

ஏவம்பூ⁴தோঽஸி ।-18-

இதுவும் நம்பெருமாளுடைய திரு முகப் பாசுரம்
கீழே அனுக்ரஹித்த படியாகத் தொடங்கி விட்டீர் -என்றபடி

—————

ஆத்⁴யாத்மிக ஆதி⁴பௌ⁴திக * ஆதி⁴தை³விக து:³க² விக்⁴ந க³ந்த⁴ ரஹிதஸ்த்வம் * த்³வயமர்தா²நுஸந்தா⁴நேந ஸஹ
* ஸதை³வம் வக்தா * யாவச்ச²ரீரபாதம் * அத்ரைவ ஶ்ரீரங்கே³ ஸுக²மாஸ்வ ॥-19-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
இரு பாடு எரி கொள்ளியினுள்ளே எறும்பே போல் உருகா நிற்கும் என்னுள்ளம்
வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல் உள்ளம் துளங்கா நிற்பன் –என்று அஞ்சும்படியான இருள் தரும் மா ஞாலத்தில் நிரபாயமாகக் கால ஷேபம் செய்ய வழி ஏது என்னும் சங்கைக்கு பரிஹாரமாக இந்த சூரணை நம்பெருமாள் திருமுகப் பாசுரமாக அவதரிக்கிற படி

தாபத்த்ரய ஜெனித துக்கமாகிற இடையூறு சிறிதும் இல்லாதவராய் -த்வய மந்த்ர அர்த்த அனுசந்தானத்தோடே கூட எப்போதும் இப்படியே சொல்லிக் கொண்டு இருப்பவராய்
இவ்வுடல் தொலையும் வரை திருவரங்கம் ஆகிய பெரிய கோயிலிலேயே இனிது வாழக் கடவீர் என்று எம்பெருமான் சோதிவாய் திறந்து அருளிச் செய்தபடி
இங்கு ஸ்ரீ ரெங்கத்தைச் சொன்னது உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் என்று தேசிகன் திரு உள்ளம் –

————-

ப்ரபன்னனுக்கு பூர்வ க்ருத்யம் என்றும் உத்தர க்ருத்யம் என்றும் இரண்டு உண்டு
பூர்வ க்ருத்யம் கீழே பரக்கச் சொல்லிற்று
உத்தர க்ருத்யம் சொல்லுகிறது இப்போது
இவ்வுடல் சரியும் நிலை எப்படிப்பட்டது
பரமபலன் கை புகுவது எப்போது -என்ற கேள்விகளுக்கு விடை இறுக்கிறது இங்கு
இதுவும் பெரியபெருமாளுடைய திருவாக்கு அநு வாதம்

ஶரீரபாதஸமயே து கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:⁴ * மாமேவ அவலோகயந்
* அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:² * ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம்
* ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய * ததா³நீமேவ மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக
* ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜந
* அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥–20-

ஶரீரபாதஸமயே து -உடல் சரிந்து போம் போது

கேவலம் * மதீ³யயைவ த³யயா அதிப்ரபு³த்³த:-என்னுடைய இயற்கையான அருளாலேயே மிகவும் சிறந்த ஞானம் உடையீராய்

மாமேவ அவலோகயந்–இதற்கு முன் சிந்திக்கப்பட்ட என்னையே சிந்திப்பவராகி

அப்ரச்யுத பூர்வ ஸம்ஸ்கார மநோரத:–எம்பெருமானே எனக்கு பரம ப்ராப்ய பூதன் -என்கிற ஸம்ஸ்காரமும்
ப்ராப்தியில் உண்டான பாரிப்பும் குன்றாதவராகி

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே²ந இமாம் ப்ரக்ருʼதிம் ஸ்தூ²லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருʼஜ்ய -ஸ்தூலமும் ஸூஷ்மமுமான இந்தப்பிரக்ருதியை பழைய வஸ்திரத்தை விடுமா போலே எளிதாக விட்டு

ததா³நீமேவ -அப்போதே –தாமதம் இன்றி

மத்ப்ரஸாத³லப்³த⁴ மச்சரணாரவிந்த³யுக³ள ஐகாந்திக-ஆத்யந்திக பரப⁴க்தி பரஜ்ஞாந * பரமப⁴க்தி க்ருʼத பரிபூர்ணாநவரத * நித்ய விஶத³தம அநந்ய ப்ரயோஜ அநவதி⁴காதிஶயப்ரிய மத³நுப⁴வஸ்த்வம் * ததா²வித⁴ மத³நுப⁴வஜநித * அநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித அஶேஷாவஸ்தோ²சித * அஶேஷஶேஷதைகரதிரூப * நித்யகிங்கரோ ப⁴விஷ்யஸி ॥-என்னுடைய அனுக்ரஹத்தாலேயே —–நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பெற்றவராகப் போகிறீர்-
கீழே சூர்ணிகை -2- ல் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளே இங்கும் உள்ளன –

————-

மா தேঽபூ⁴த³த்ர ஸம்ஶய: ।–21-

நித்ய கிங்கரோ பவிஷ்யதி -என்று அனுக்ரஹித்த இவ்விஷயத்தில் உமக்கு சம்ஸயம் வர்த்திக்க வேண்டாம் என்கிறது –
ப்ரஸக்தஸ் யைவ ஹி ப்ரதிஷேதா -என்று இறே நியாயம் இருப்பது
இங்கு சந்தேஹ ப்ரஸக்தி யுண்டோ என்னில்
உலகில் ஷூத்ர பலன்களைப் பெறுவதற்கும் மிகவும் கனத்த உபாய அனுஷ்டானங்கள் காணா நின்றோம்
மிக மிகக் கனத்த பேறாகிய மோக்ஷ புருஷார்த்தம் பெறுவதற்கு -துஷ்கரத்வத்தில் இனி இதுக்கு அவ்வருகு இல்லை எண்ணலாம் படி பரம துஷ்கரமான உபாயம் இருக்க வேண்டாவோ
மிகவும் ஸூகரமான இந்த ந்யாஸ மாத்ரத்தினாலேயே பேறு தப்பாது என்னில் -இது கண் துடைக்கிற வார்த்தையாய் இருக்குமோ என்று சிலருக்கு சங்கை உண்டாகக் கூடுமாகையாலே
அவர்களுக்கும் தெளிவு பிறக்க வேண்டி எம்பெருமானாரை அபதேசித்து
மா தே பூத் அத்ர ஸம்சய -என்று சோதி வாய் திறந்து அருளிச் செய்கிறபடி –

——–

மா தே பூத் அத்ர ஸம்சய

அந்ருʼதம் நோக்தபூர்வம் மே * ந ச வக்ஷ்யே கதா³சந * ராமோ த்³விர்நாபி⁴பா⁴ஷதே।
ஸக்ருʼதே³வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே ।
அப⁴யம் ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³வ்ரதம் மம ॥
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” ॥
இதி மயைவ ஹ்யுக்தம் ।-
-22-

என்று கீழே அருளிச் செய்ததையே நன்கு நிலை நாட்டுவதற்காகவே மேல் இரண்டு சூர்ணிகைகள்
என்னுடைய நித்ய கைங்கர்ய ப்ராப்தியில் உமக்கு ஸந்தேஹம் வர்த்திக்குமாகில் நான் ஏற்கனவே பேசி வைத்து இருக்கின்ற வார்த்தைகள் பொய்யாகுமே –
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்று உமது திருத்தமக்கையார் சொல்லி வைத்தாளே
ஆகவே என்னுடைய வார்த்தையை நீர் உபச்சந்தந மாத்ரமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்று நம்பெருமாள் அருளிச் செய்தபடி –
இது வரையில் ஒருகாலும் நான் பொய் சொல்லிற்று இல்லை -இனி மேல் சொல்லப்போவதும் இல்லை -என்று கிருஷ்ண அவதாரத்தில் சொன்னேன்
ராமன் வாயாலே இரண்டாவது வார்த்தை வராது என்று ராம அவதாரத்தில் சொன்னேன்
அன்றியும் ராம அவதாரத்தில் கடற்கரையில் விபீஷண ஆழ்வானை வ்யாஜீ கரித்து -ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
கிருஷ்ண அவதாரத்தில் திருத்தேர் தட்டிலே அருஜுனனை வ்யாஜீ கரித்து -ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று சரம ஸ்லோகத்தில் சொன்னேன்
ஸக்ருத் ஏவ -வில் -ஏதத் விரதம் மம -உயிரான வார்த்தை

ஆக இப்படிச் சொல்லி இருக்கிற நான் இன்றாகப் பொய்யனாக மாட்டேன் காணும் என்று திண்மை பெறுத்தின படி –

————-

கீழ்ச் சொன்னதையே திடப்படுத்தி அருளிச் செய்கிற இது ஸந்தோஷ அதிசயத்துக்காக வாயிற்று -இதுவும் பகவத் வாக்யம்

அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு * நிஸ்ஸம்ஶய: ஸுக²மாஸ்வ ॥–23-

அதஸ்–ஸத்யவாதியும் ஸத்ய வ்ரதனுமான நான் சொன்ன வார்த்தை மிகவும் விஸ்வஸிக்கத் தகுந்தது யாகையாலே

த்வம் -பிராமாணிகரான நீர்

தவ -என்னால் ஸ்வீ கரிக்கப் பட்ட ஸகல குணங்களையும் யுடையவரான உம்முடைய

தத்த்வதோ மத்³ஜ்ஞாநத³ர்ஶந ப்ராப்திஷு -உள்ளபடி என்னை அறிவது காண்பது நித்ய கைங்கர்யம் பண்ணுவது ஆகிய இவற்றில்

நிஸ்ஸம்ஶய: -சங்கா களங்க லேசமும் இல்லாதவராய்

ஸுக²மாஸ்வ –இனிது வாழ்ந்து இருக்கக் கடவீர் -என்று
எம்பெருமானாரை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்

—————

அந்த்யகாலே ஸ்ம்ருʼதிர்யாது தவ கைங்கர்யகாரிதா ।
தாமேநாம் ப⁴க³வந்நத்³ய க்ரியாமாணாம் குருஷ்வ மே ॥–24-

அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று

இந்த வாக்யத்துக்கு
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசாச்சார்யாரோ
ஸ்ரீ தேசிகனோ
வியாக்யானம் செய்து அருள வில்லை

———-

இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶரணாக³தி க³த்³யம் ஸமாப்தம்॥

—————

ஸரணாகதி கத்ய தாத்பர்ய சாரம்
1-முதல் சூர்ணிகையில் மேல் 5 வது சூர்ணிகையில் தான் அனுசந்திக்கப் போகும் சரணாகதி நன்கு நிறைவேற புருஷகார பிரபத்தி செய்யப்படுகிறது
2-புருஷகார பிரபத்தி இன்னதற்காக என்று வியக்தமாகச் சொல்லப்படுகிறது
3-4- அங்கனமே ஆயிடுக என்று பெரிய பிராட்டியார் அநுக்ரஹித்து அருளிச் செய்தமை சொல்லப்படுகிறது

5- எம்பெருமானுடைய –
திவ்ய ஆத்ம ஸ்வரூப திவ்ய மங்கள விக்ரஹங்களின் வை லக்ஷண்யத்தையும்
கல்யாண குண யோகத்தையும் –
திவ்ய பூஷண மஹிஷீ ஸாஹித்யத்தையும்
நித்ய ஸூரிகளோட்டை சேர்த்தியையும் –
நித்ய விபூதி நாயகத்வத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
மற்றும் ஸத்ய காமத்வ ஸத்ய சங்கல்பத் வாதி கல்யாண குண விசேஷங்கள் யுடைமையையும்
பரக்கச் சொல்லி ஏத்தி எம்பெருமான் திருவடி
இணைகளிலே சரணாகதி செய்தமையைச் சொல்லிற்று
6-7-8-9- த்வய மந்த்ர அனுசந்தானமும் செய்து அருளி
புராண ஸ்லோகங்கள் இரண்டையும் –
கீதையில் உள்ள மூன்று ஸ்லோகங்களையும் அனுசந்தித்தார் ஆயிற்று
10-11- கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் விளையும் ஸமஸ்த அபசாரங்களையும் பொறுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்தது
10-ல் நிஷித்த ஆசரண ஷமா பிரார்த்தனை
11-ல் காம்ய ஆசரண க்ஷமா பிரார்த்தனை
12- கீதையில் மம மாயா துரத்யயா -என்றும் மாம் ஏவயே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -என்றும் சொல்லி உள்ளதை அனுசரித்து மாயையை மடித்து அருள பிரார்த்தனை

13- கீதை ஸ்லோகங்கள் மூன்றையும் எடுத்துக் காட்டி அவற்றில் சொல்லப்பட்ட ஞானம் தமக்கு அளிக்க பிரார்த்தனை
14- கீதையில் மூன்று இடங்களில் சொல்லப்பட்ட பரபக்தி தமக்கு விளைய வேண்டும் என்று பிரார்த்தனை
15-பரபக்தி பரஞான பரம பக்திகளே வடிவெடுத்தவனாக ஆக்கி அருளப் பிரார்த்தனை
16- அவற்றால் விலக்ஷண பகவத் அனுபவம் விளைந்து -அவ் வனுபவ பரிவாஹ ரூபமாக நித்ய கைங்கர்ய ருசி விளைய வேணும் என்கிறது

இதற்கு மேல் எல்லாம் பகவத் ப்ரதி வசனங்கள்
17- வாரீர் ராமானுஜர் நித்ய கைங்கர்யம் செய்து களிக்க விரும்பிய நீர் அதற்கு உரிய ஒரு உபாயத்திலும் அந்வயம் அற்று இருந்தீர் ஆகிலும்
அந்த உபாயம் இனிமேலும் நிஷ்பன்னமாகக் கூடாதபடி விரோதிகளான பாபங்கள் நிரம்பி இருந்தீராகிலும்
ஸகல விதமான அபசாரங்களும் மலிந்து இருந்தீராகிலும்
பரபக்தி பரஞான பரமபக்திகள் விளையாமைக்கு உறுப்பான இடையூறுகள் பல மலிந்து இருந்தீராகிலும்
நீர் ஆர்த்த ப்ரபன்னராகியோ திருப்த ப்ரபன்னராகியோ த்வய மந்த்ரத்தை அனுசந்தித்தீராதலால்
என்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலேயே இடையூறுகள் எல்லாம் நீங்கப்பெற்று
பரபக்தி பரஞான பரமபக்திகள் புஷ்கலமாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத்கரிக்கப் பெற்று
உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப்பெற்று
என்னையே அனுபவிப்பவராய்
எனக்கே தொண்டு செய்பவராய்
வாழக் கடவீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளின படி –

18- இங்கனே யாகப்புகுந்தீர் என்று எம்பெருமான் அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
19-தாபத்ரய லேசமும் அற்று அர்த்த அநுஸந்தானத்தோடே த்வய உச்சாரணம் செய்து கொண்டு இவ்வுடல் விழும் தனையும் இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனி வாழக்கடவீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
20-இவ்வுடல் சரிந்து போம் காலத்தில் சிறந்த நன்மைகளைப் பெற்று நித்ய கைங்கர்ய நிரதராகப் போகிறீர் என்று அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
21- இதில் எந்தவித ஸந்தேஹலேசமும் வேண்டா என்று தெளிவித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
22-தன்னுடைய திருவாக்கு பழுது படாது என்று எம்பெருமான் மூதலித்து அனுக்ரஹித்து அருளியதைச் சொல்லிற்று
23- கீழ்ப் பண்ணிய அபய ப்ரதானத்தைத் திடப்படுத்தி நிகமித்தது

ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய பிரதிவசனம் நிகமித்தது

24-அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று

———————

॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥

இந்த இரண்டாவது கத்யத்துக்கு
ஸ்ரீ ரெங்க கத்யம் என்றும்
மித கத்யம் என்றும் வ்யவஹாரம்
ஸ்ரீ ரெங்க ஸாயிநம் –முதலில்– ஸ்ரீ ரெங்க நாத மம நாத நமோஸ்து தே -முடிவில் -என்பதால் ஸ்ரீ ரெங்க கத்யம்
முந்திய சரணாகதி கத்யம் ப்ருது கத்யம் -இது சிறியதாய் இருப்பதால் மித கத்யம்
முந்தியது போல் த்வய விவரணம் இதுவும்
இதில் முதல் சூர்ணிகை கைங்கர்ய ப்ராத்தநா பரமான உத்தர கண்ட விவரணமாகவும்
இரண்டாவது சரண வர்ண ப்ரதர்சன பரமான பூர்வ கண்ட விவரணமாக அவதரிக்கின்றது

சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।
ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥

சித³சித்பரதத்த்வாநாம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் ஆகிய தத்வ த்ரயங்களினுடைய
தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।-உண்மையை உள்ளபடி அறிந்தவரான
மம க³ரீயஸே ॥-எனக்கு உத்தம ஆச்சார்யரான
ராமாநுஜாய முநயே நமோ -எம்பெருமானாருக்கு நமஸ்காரம் ஆகுக

த்₃வயத்தில் உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்:

——————
ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ
* ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம
* ஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்
* பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் * ஶ்ரீரங்க³ஶாயிநம் * அஸ்மத்ஸ்வாமிநம் * ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய
தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் * ததே³காநுப⁴வ: * ததே³கப்ரிய: * பரிபூர்ணம் ப⁴க³வந்தம்
* விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய * தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித
* அஶேஷாவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிரூப * நித்யகிங்கரோ ப⁴வாநி ॥–1-

உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் -மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன்னதீனமாக இருக்கப் பெற்ற
இது முதலான த்விதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் மேலே
பகவந்தம் என்ற விசேஷ்யத்திலே அந்வயத்து
விசத தம அநு பவேந நிரந்தரம் அநு பூய -என்று இணங்கக் கடவது
உயர்வற உயர்நலம் முதல் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் உவன்
அவரவர் தம்தமது
நின்றனர் இருந்தனர் -என்று அடைவே யுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி முதல் விசேஷணம்

பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித் சேதனர்
த்ரி குணம் -காலம் -ஸூத்த ஸத்வம் -த்ரிவித அசேதனம்
த்ரி வித -விசேஷணம் சேதனர் மட்டிலும் அன்வயித்து அசேதனங்களில் அந்வயியாதும் இருக்கலாம் -என்பது தேசிகர் திரு உள்ளம்

சூர்ணிகையில் முடிவில் உள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அன்வயித்து
ஸ்வரூப பேதம்
ஸ்திதி பேதம்
ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்ளப் பங்காக உள்ளது
ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் உண்டே

க்லேஶ கர்மாத்³யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை -அஸ்மிதா-அபி நிவேசம் –ராகம் -த்வேஷம் முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
அவற்றின் கார்யமான புண்ய பாப ரூபமான கர்மம் என்ன
ஆதி சப்தத்தால் இவற்றின் விபாகம் என்ன -இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத
சேதன அசேதனங்கள் ஸரீரமாய் எம்பெருமான் ஸரீரியாய் இருந்தாலும் வியாப்பிய கத தோஷம் தட்டாது-

ஸ்வாபா⁴விகாநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜஸ் ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ

ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய * சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரமஸத்யகாம ஸத்யஸங்கல்ப * க்ருʼதித்வ க்ருʼதஜ்ஞதாத்³ யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம்–ஸ்வாபாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்ற –

பரப்³ரஹ்ம பூ⁴தம் * புருஷோத்தமம் –பர ப்ரஹ்ம ஸப்தத்தாலும் -புருஷோத்தம ஸப்தத்தாலும் வேதாந்தங்களிலே ப்ரஸித்தனான

ஶ்ரீரங்க³ஶாயிநம் –திருவரங்கம் பெரிய கோயிலிலே அஸ்மதாதிகளும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிற

அஸ்மத்ஸ்வாமிநம் –பரிபூர்ணம் ப⁴க³வந்தம்–எமக்கு ஸ்வாமியாய் -ஒன்றிலும் குறைவில்லாத எம்பெருமானை
இதற்கு அநு பூய -என்ற ல்யப்போடே அந்வயம்

ப்ரபு³த்³த⁴ நித்ய நியாம்ய நித்ய தா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோঽஹம் –நித்ய நியாம்யமாய்
நித்ய தாஸ்ய ஏக ரஸமான ஆத்ம ஸ்வ பாவத்தை நன்கு அறிந்து கொண்டவனான அடியேன்
ப்ரபு³த்³த என்றது நன்றாக அறியப்பட்ட -என்றபடி –
ஸ்வாதீன -ஸ்வார்த்த -கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமம் இல்லாத படி அறிவதே நன்றாக அறிவதாகும்
இவ்வாத்மா எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே ந்யாம்யனும் தாஸ்யனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றபடி –

ததே³காநுப⁴வ: -ததே³கப்ரிய: –பகவத் விஷயம் ஒன்றே ஞானத்துக்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனும்

விஶத³தமாநுப⁴வேந நிரந்தரமநுபூ⁴ய –மிகவும் விசதமாக இடைவீடு இன்றி அநு பவித்து

தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித-அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப
நித்யகிங்கரோ ப⁴வாநி –அவ்வனுபவத்தினால் விளைவிக்கப் பெற்ற மிகச் சிறந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ஊற்றத்தோடு கூடி இருக்கையாகிற நித்ய கைங்கர்யத்தில் நிரதனாகக் கடவேன்

ஶேஷதைக ரதி-என்பது பஹு வ்ரீஹி யாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணம் ஆகிறது –
அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக் கடவேன் என்றபடி

ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தர கண்டம் விவரிக்கப்பட்ட தாகிறது –

—————-

ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக * ப⁴க³வத³நவதி⁴காதிஶய
* ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித * அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித * அஶேஷாவஸ்தோ²சித
* அஶேஷஶேஷதைகரதிரூப * நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி * தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந
* தது³பாய ஸமீசீந க்ரியா * தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ * ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:
–* து³ருத்த ராநந்த * தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண * அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:
* திலதைலவத் * தா³ருவஹ்நிவத் * து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ * அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
* து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: * அநாத்³யவித்³யா ஸஞ்சித
* அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: * அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
* அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: * நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய
* ஶ்ரீமந் * நாராயண * தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே
॥2-

ஸ்வாத்ம நித்ய நியாம்ய –அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தக்கவனாய் இருக்கை என்ன

நித்யதா³ஸ்ய-எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே இருக்கை என்ன

ஏகரஸ–ஆகிய இவற்றை சாரமாக வுடைய

ஆத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக ப⁴க³வத³நவதி⁴காதிஶய
ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித -எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனாய் இருக்கை என்ன –
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றி இருக்கை என்ன
இப்படிப்பட்ட ஸ்வ ஸ்வ பாவத்தை அனுசந்தித்திக் கொண்டு
எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய சகல கல்யாண குணங்களையும் அனுபவிப்பதனால் யுண்டான

அநவதி⁴கா திஶய ப்ரீதிகாரித -மிகுந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட

அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷஶேஷதைகரதிரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி –ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யம் கொண்டு இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்துக்கு உபாயமான பக்தி என்ன

தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந–அதுக்கும் உபாயமான பரிபக்குவ ஞானம் என்ன

தது³பாய ஸமீசீந க்ரியா -அதுக்கும் உபாயமான நல்ல கர்ம யோகம் என்ன –

தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தாத்மகு³ணவிஹீந:–அதற்கும் உறுப்பான -ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங்கள் என்ன
ஆகிய இவை சிறிதும் இல்லாதவனாய்

து³ருத்த ராநந்த
தத்³விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு³ண
அநாதி³ பாபவாஸநா மஹார்ணவ அந்தர்நிமக்³ந:–கீழ்ச் சொன்ன ஸம்யக் ஞான -ஸமீசீந கிரியைகளுக்கு மாறான
விபரீத ஞான
விபரீத கிரியைகளுக்கு
உறுப்பான அநாதி பாப வாஸனை யாகிற கடக்க முடியாத பெரும் கடலினுள்ளே மூழ்கிக் கிடப்பவனாய்

திலதைலவத்
தா³ருவஹ்நிவத்
து³ர்விவேச த்ரிகு³ண க்ஷண க்ஷரணஸ்வபா⁴வ
அசேதந ப்ரக்ருʼதி வ்யாப்திரூப
து³ரத்யய ப⁴க³வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ: –எள்ளில் எண்ணெய் போலவும்
கட்டையில் நெருப்பு போலவும் சாதாரணமாகப் பிரிக்க முடியாததாய்
ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களையும்
சதத பரிணாமித்வத்தையும் இயல்பாக யுடைத்தாய்
ஜடரூபமான ப்ரக்ருதியிலே அவர்ஜனீயமாய் இருந்துள்ள சம்பந்தத்தை யுடைத்தாய்
கடக்க அரிதான பகவத் மாயையினால் மறைக்கப் பட்ட ஸ்வ ப்ரகாஸத்தை யுடையனாய் –

அநாத்³யவித்³யா ஸஞ்சித
அநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்³ரதி²த: –அநாதியான அஞ்ஞானத்தினாலே திரட்டப்பட்டதாய்
எண்ணிறந்ததாய்
ஒருவராலும் அவிழ்க்க முடியாததாய் இருந்துள்ள
புண்ய பாப ரூப கர்மமாகிய கயிற்றினால் கட்டுண்டவனாய்

அநாக³த அநந்தகால ஸமீக்ஷயாঽபி
அத்³ருʼஷ்ட ஸந்தாரோபாய: — எத்தனை காலம் பார்த்தாலும் ஸம்ஸார நிஸ்தரண உபாயம் இன்னது என்று அறியப் பெறாது இருந்துள்ளவனான அடியேன்

நிகி²ல ஜந்துஜாத ஶரண்ய–ஸமஸ்த பிராண சமூகங்களுக்கும் சரண்யன் ஆனவனே
ஶ்ரீமந் நாராயண –பெரிய பிராட்டியாருடன் கூடி இருந்துள்ள நாராயணனே

தவ சரணாரவிந்த³ யுக³ளம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥-உனது திருவடித் தாமரைகளை உபாயமாகப் பற்றுகிறேன்

—————-

கைங்கர்யத்தைப் பிரார்த்திப்பது:
ஏவமவஸ்தி²தஸ்யாபி * அர்தி²த்வமாத்ரேண பரமகாருணிகோ ப⁴க³வாந் * ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
* ஐகாந்திக ஆத்யந்திக * நித்யகைங்கர்யைகரதிரூப * நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி * விஶ்வாஸபூர்வகம்
* ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே
॥–3-

ஏவமவஸ்தி²தஸ்யாபி –கீழ்ச் சூர்ணிகையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சன்யாதி களே வடிவெடுத்து இருக்கின்ற எனக்கும்

பரமகாருணிகோ ப⁴க³வாந் –பேர் அருளானனான எம்பெருமான்

அர்தி²த்வமாத்ரேண -என் பக்கலில் உள்ள இரப்பையே கொண்டு

ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத
ஐகாந்திக ஆத்யந்திக
நித்யகைங்கர்யைகரதிரூப
நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி
விஶ்வாஸபூர்வகம்-தன்னை அனுபவிக்கும் உகப்பால் யுண்டாவதாய்
ஒருபடிப்பட்டதாய்
முடிவின்றிக்கே இருந்துள்ள
அடிமையிலேயே ஊற்றம் உற்று இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தை அருளப் போகிறான் என்கிற நம்பிக்கையுடன்

ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே –எம்பெருமான் இடத்தில் நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன் –

————–

தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திமந்யதா² ॥
–4-

ஸர்வாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிஸ்தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமேவைவம் குருஷ்வ மாம் ॥
–5-

கீழே தம்முடைய பாசுரத்தால் பேற்றைப் பிரார்த்தித்தார்
இதிஹாஸஸ்லோகங்கள் இரண்டும் கொண்டு பிரார்திக்கிறார்
இவற்றுக்கு ஆகரம் கண்டு கொள்வது

எம்பெருமானே
உன்னை அனுபவித்த -அதனால் உண்டான உகப்பினால் விளையும் கைங்கர்யத்தை
பரம கிருபையினால் அடியேனுக்குத் தந்து அருள வேண்டும்
வேறு புகல் அறிகின்றிலேன்
செந்தாமரைக் கண்ணனே -ஸர்வ அவஸ்தைகளிலும் உனக்குச் செய்யக் கூடிய ஸகல வித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசி உடையேனாம் படி
நீ தானே செய்து அருள வேணும் என்கிறார் இந்த ஸ்லோகங்களாலே –

———

ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴* ததி³ச்சா²ரஹிதஸ்யாபி * ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந
* உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் * மே மந: * த்வமேவாத்³யைவ காரய ॥
-6—

ஸ்ரீ ரெங்க நாதனே
உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்து இருக்கிறேன்
ஒருகால் அப்படிப்பட்ட அதிகார பூர்த்தி இல்லையே யானாலும்
அடியேனிடத்தில் கிடைக்கின்ற யுக்தி வியாஜ்யத்தைக் கொண்டு நீயே சேஷ பூர்ணம் செய்து கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இந்த சூர்ணிகையில்

ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி –இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதும் -அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாதவனாய் இருந்தாலும் –

ஏதது³ச்சாரண மாத்ராவலம்ப³நேந-என் வாய் மொழி தன்னையே கொண்டு

மே மந: -என்னுடைய உள்ளத்தை

உச்யமாநார்த² பரமார்த² நிஷ்ட²ம் -உபாய உபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக

த்வமேவாத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –

———–

இந்த வாத்மா உனக்கே போ₄க்யமாய்த் தலைக் கட்ட வேணுமென்பது:
அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர
* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!
* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர
* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண
* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

அபாரகருணாம்பு³தே⁴! –கரை கடந்த கருணைக் கடலே

அநாலோசித விஶேஷ அஶேஷலோகஶரண்ய! –குண தோஷ நிரூபணம் பண்ண மாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே

ப்ரணதார்த்திஹர-அடி பணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே

ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! –அடியார் பக்கலில் உண்டான வாத்சல்யத்துக்கு முக்யமான மஹா ஸமுத்ரமே

அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!–ஸகல பூத ஸமூஹங்களுடைய உண்மையை எப்போதும் அறிந்து உள்ளவனே

அஶேஷசராசரபூ⁴த -நிகி²லநியமநிரத -அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த- நிகி²லஜக³தா³தா⁴ர
அகி²லஜக³த்ஸ்வாமிந் அஸ்மத்ஸ்வாமிந்

ஸத்யகாம -அவாப்த ஸமஸ்த காமனே

ஸத்யஸங்கல்ப -நினைத்தது செய்து தலைக்கட்டு வல்லவனே

ஸகலேதரவிலக்ஷண
அர்தி²கல்பக

ஆபத்ஸக² –ஆபத் பந்துவானவனே

காகுத்ஸ்த² –காகுத்ஸ வம்ஸ ப்ரஸூதனானவனே

ஶ்ரீமந்நாராயண –திரு மாலே

புருஷோத்தம -பரம புருஷனே

ஶ்ரீரங்க³நாத² –ஸ்ரீ ரெங்கநாதன்

மம நாத², –எம்பெருமானே

நமோঽஸ்துதே-தே நமஸ் அஸ்து -தேவரீருக்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீருக்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணும் என்கை-

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதம் ஶ்ரீரங்க³க³த்³யம் ஸமாப்தம் ॥

————–

॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥

எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனை நிழல் போல் தம் ஒருவர் அளவிலே நின்று இராமே கற்பகக் காவின் நிழல் போல் உலகெல்லாம் பயன் பெற வேண்டும் என்று கருதி அருளினவராகையாலே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலவே யாம்படி உபாய உபேயங்களை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து பர உபதேசத்தில் இழிகிறார் ஸ்ரீ வைகுண்ட கத்ய முகத்தாலே

பெரிய கத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வ ப்ரார்த்தனையாக அருளிச் செய்தார்

சிறிய கத்யமான ஸ்ரீ ரெங்க கத்யத்திலே அந்தப் பிரார்தனையை ஸுலபயத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்தார்

இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக பிறரை நோக்கி கர்தவ்ய உபதேசமாக அருளிச் செய்கிறார்
இதில் உபாய அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து
உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச் செய்கிறார்

இந்தக் கத்யம் ஆறு சூர்ணிகைகள் கொண்டதாய் இருக்கும் -அவற்றின் தாத்பர்ய ஸாரம் வருமாறு

சூர்ணிகை -1- எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வை லக்ஷண்யத்தையும் -தன்னுடைய நிலைமையையும் அநுஸந்தித்து
அப்பெருமானுடைய ஸுலப்யம் முதலிய திருக் குணங்களே பற்றாஸாக அவன் திருவடிகளிலே சரணம் புக வேணும் என்கிறது

சூர்ணிகை -2-பேற்றுக்கு ஒருகால் அனுசந்திக்கையே போதுமாய் இருக்கச் செய்தேயும்
நெஞ்சு வேறே ஒன்றில் செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்குமாக
நித்ய அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

சூர்ணிகை -3-இவ்வதிகாரி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும்
அந்த தேச விசேஷத்தினுடைய பண்பையும்
அங்குள்ள அலங்காரங்களையும்
அப்படிப்பட்ட இடத்தில் நாச்சியாரும் ஸர்வேஸ்வரனுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அந்த நாச்சிமாருக்கு அநுபாவ்யமான வடிவு அழகையும் -திவ்ய ஆபரணச் சேர்த்தியையும் -திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
வழுவிலா அடிமை செய்யும் நித்ய ஸூரி பரிஷத்தையும்
அவர்களுடைய நித்ய கைங்கர்யத்துக்கு இலக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அனுசந்தித்து
நாம் இப்பேற்றை எப்போது பெறக் கடவோம் என்று பாரித்து
அப் பாரிப்பின் படியே சென்று கிட்டி
எம்பெருமானே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் என்கிறது

சூர்ணிகை -4- ஸ்வ அபேக்ஷித்தத்தின் படியே எம்பெருமானாலே ஸ்வீ கரிக்கப் பட்டவனாய்க் கொண்டு அநுகூல விருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் என்கிறது

சூர்ணிகை -5-இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்து இருந்த இழவு தீர அந்நிய பரதை அற்று இமையாத கண்ணினனாய்க் கொண்டு ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் படியைச் சொல்கிறது

சூர்ணிகை -6- இப்படி வந்து சேர்ந்த இவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலை மேல் வைக்க அடி சூடும் அரசு பெற்று நித்ய ஆனந்த ஸாலியாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது

————-

யாமுநார்ய ஸுதா⁴ம்போ⁴தி⁴மவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தியோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம்யஹம் ॥

ஆளவந்தார் ஆகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி
பக்தி யோகமாகிற ரத்னத்தை
யதா மதி எடுத்து அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கிறேன் என்கை
இங்கு பக்தி யோகம் என்றது ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம் –
இதன் மேலே -தத் பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யத் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதனமஸ் தீதி -என்று
அருளிச் செய்தது பொருந்துவதற்காக –

ஆளவந்தாருடைய திருவருள் அடியாக கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்ய அனுசந்தேயமாக வெளியிடுகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் தேர்ந்த கருத்து –

——–

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப கு₃ண வைலக்ஷண்யங்கள்:

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் * க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய * வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத்
யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் * பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்
* ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ
த்³வய பரிசர்யைக மநோரத:² * தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
* அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: * தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய
* அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய * அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:
* ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய
* ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ * ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய
* நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய * மஹாவிபூ⁴தே:
* ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந * ஶரணம் அநுவ்ரஜேத் ॥
1 ॥

ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் –மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன் அதீனமாக இருக்கப் பெற்ற

க்லேஶ கர்மாத்³ யஶேஷ தோ³ஷாஸம்ஸ்ப்ருʼஷ்டம்–அவித்யை முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
புண்ய பாப ரூபா கர்மம் என்ன
இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத

ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய ஜ்ஞாந ப³லைஶ்வர்ய
வீர்ய ஶக்தி தேஜ: ப்ரப்⁴ருʼத் யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴ மஹார்ணவம் –ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக்கல்யாண குண திரள் களுக்கு கடல் போன்று

பரமபுருஷம் * ப⁴க³வந்தம் * நாராயணம்–புருஷோத்தமனாய் -ஷாட் குண்ய பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணனை

ஸ்வாமித்வேந ஸுஹ்ருʼத்த்வேந கு³ருத்வேந ச பரிக்³ருʼஹ்ய –சேஷியாகவும்
நேசனாகவும்
ஆச்சார்யனாயும் ஏற்றுக் கொண்டு

ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப்பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்

தத்ப்ராப்தயே ச தத்பாதா³ம்பு³ஜத்³வய ப்ரபத்தேঃ
அந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: –அந்தக் கைங்கர்யத்தைப் பெறுவதற்கு கல்ப கோடி ஸஹஸ்ரமானாலும்
அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளையே நம்பி இருப்பதில் காட்டிலும் வேறே ஓன்று எனக்கு உபாயமாக இல்லை என்று எண்ணினவனாய்

அகி²லஸத்த்வ த³யைக ஸாக³ரஸ்ய –எல்லாப் பிராணிகள் இடத்திலும் கருணைக் கடலாய்

அநாலோசித கு³ணக³ண அக²ண்ட³ஜநாநுகூல மர்யாதா³ஶீலவத:–குண தோஷங்களில் ஆராய்ச்சி இன்றிக்கே ஸகல ஜனங்களுக்கும் அநுகூலமாய் இருக்கிற எல்லை கடந்த சீல குணத்தை யுடையனாய்

ஸ்வாபா⁴விக அநவதி⁴காதிஶய கு³ணவத்தயா தே³வதிர்யங்மநுஷ்யாத்³யகி²லஜந ஹ்ருʼத³ய ஆநந்த³நஸ்ய–இயற்கையாகவே உயர்வற உயர்நலம் யுடையவனாகையாலே
தேவர்கள் மநுஷ்யர்கள் தியக்குகள் முதலிய சகல பிராணிகளுடைய உள்ளத்தை உகப்பிக்குவனாயும்

ஆஶ்ரித வாத்ஸல்யைக ஜலதே:⁴ –அடியார்கள் திறத்து வாத்சல்யக் கடலாயும்

ப⁴க்தஜந ஸம்ஶ்லேஷைக போ⁴க³ஸ்ய–பக்த ஜனங்களுடன் கலந்து பரிமாறுமது ஒன்றையே தனக்குப் பேர் இன்பமாகக் கொண்டவனாயும்

நித்ய ஜ்ஞாந க்ரியைஶ்வர்யாதி³ போ⁴க³ஸாமக்³ரீ ஸம்ருʼத்³த⁴ஸ்ய –நித்யமும் -ஸகல விஷயகமாயும் உள்ள ஞானம் என்ன -தனக்கு லீலையாய் இருக்கிற கிரியைகள் என்ன ஐஸ்வர்யம் என்ன
இவை போல்வனவான போக ஸாமக்ரியைகள் நிரம்பி இருக்கப் பெற்றவனாய்

மஹாவிபூ⁴தே:–மிகச்சிறந்த விபூதியையும் யுடையனாய் இருக்கிற

தஸ்யைவ ப⁴க³வதோ நாராயணஸ்ய -அந்த எம்பெருமானுடையவே

ஶ்ரீமச் சரணாரவிந்த³யுக³ளம் -திருவடித்தாமரை இணையை

அநந்யாத்மஸஞ்ஜீவநேந * தத்³க³தஸர்வபா⁴வேந –ஆத்ம உஜ்ஜீவனம் இஃது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற ஐகாந்திகமான நினைவோடு

ஶரணம் அநுவ்ரஜேத் ॥ -புருஷார்த்தத்துக்கு இவனே சாதனம் என்று அத்யவசாயம் கொள்ளக் கடவேன் என்றபடி

இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடும் இத்தனையோ என்னில் பேற்றுக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
கால ஷேபத்துக்கும்
இனிமையால் விட ஒண்ணாமைக்குமாக
இவ்வத்யவசாயம் நாள்தோறும் இடையறாது செல்ல வேணும் என்கிறது மேல்

————–

ததஶ்ச ப்ரத்யஹம் * ஆத்மோஜ்ஜீவநாயைவமநுஸ்மரேத் ॥ 2 ॥

பிற்பாடும் நாடொறும் தன்னை உஜ்ஜீவனம் செய்து கொள்வதற்காக இங்கனம் அநுஸ்யூதமாக ஸ்மரிக்க வேண்டும்
அது மேலே சொல்லுகிறது

————-

நித்யவிபூ₄தி வைப₄வம் –
தி₃வ்யலோகம்:
சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே

பதினான்கு லோகங்கள் மலிந்த அண்டத்தையும்
மேன் மேலும் பதின் மடங்கு அதிகமாய் இருக்கின்ற ஸப்த ஆவரணங்களையும்
மற்றுமுள்ள ஸமஸ்த கார்ய காரண வர்க்கங்களையும்
கடந்து அப்பால் விளங்கா நின்ற

பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே

ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே –பரம ஆகாஸம் என்னும் சொல்லால் சொல்லப்படுகிற

ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே –பிரமன் முதலூக்கு வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாத

ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே -ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில்

ஐஶ்வர்யம்:
ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:
* அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே
* தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யே

ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி
அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை:
நித்யஸித்³தை⁴:
அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே—ப்ரஹ்ம பாவனையில் தலை நின்ற ஸநகாதிகளுக்கும்
கர்ம பாவனையில் தலை நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நினைக்க ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
எப்போதும் பகவத் அனுபவ நிரதராய்
எண்ணிறந்தவர்களாய்
எம்பெருமான் பக்கல் பரிவே வடிவெடுத்தவர் களாய்
பூமியில் கால் பாவாதவர்களான மஹாத்மாக்களினால் மிடைந்ததாய்

தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி பரிச்சே²த்து மயோக்³யே–அந்த மஹாத்மாக்களுக்கும் அளவிட ஒண்ணாத
பரிணாமம் என்ன
ஐஸ்வர்யம் என்ன
ஸ்வ பாவம் என்ன –இவற்றை யுடையதாய்

திருக் கோயில்:
தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந
ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *

தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே –லோக விலக்ஷணமான ஆயிரம் திரு மதிள்களை யுடைத்தாய்

தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே -அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே போக்யமாய்

தி³வ்யோத்³யாந ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே -அநேகமாயிரம் திருத் தோப்புக்களால் சூழப்பட்டதாய்

அதிப்ரமாணே தி³வ்யாயதநே –அகலமும் நீளமும் அளவிட ஒண்ணாததான திருக்கோவிலிலே

திரு வோலக்க மண்டபம்:
கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே * தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத
ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே * தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே * தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே
* பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:
* தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே * ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:
* அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் * அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ

கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே –பலவகைப்பட்ட திவ்ய ரத்னங்களாலே பிரகாரமாய் இருப்பதான தொரு திரு ஓலக்க மண்டபத்திலே

தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே –அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களால் விளக்கமுற்றதாய்

தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே -அப்ராக்ருதமான பலவகைப்பட்ட மாணிக்கங்கள் செறிந்த தரையை யுடைத்தாய்

தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே-மேல்கட்டி திருத்திரை முதலான திவ்ய அலங்காரங்களினால் அழகு பெற்றதாய்

பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:

  • தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே –சுற்றிலும் உதிர்ந்தவைகளும் -உதிர்ந்து கொண்டே இருப்பவைகளும்
    மரங்களிலே நிற்பவைகளும்
    பலவகைப்பட்ட பரிமளத்தையும் நிறத்தையும் உடையவைகளுமான திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே ஸோபிதமாய்

ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:–ஒன்றோடு ஓன்று கலசி இருக்கிற பாரிஜாதம் முதலான கல்ப விருக்ஷங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய உத்யான சத ஸஹஸ்ரை )

அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் -ஒன்றோடு ஓன்று சேர்ந்து இராத சில

அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ–உள்ளே இருக்கின்ற புஷ்பம் ரத்னம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட அநேகம் ஆயிரம் திவ்ய லீலா மண்டபங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்

————–

க்ரீடா₃ஶைலங்கள்:
ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி * அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ * க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:

ஸர்வதா³ அநுபூ⁴யமாநைரபி
அபூர்வவத் ஆஶ்சர்யமாவஹத்³பி:⁴ –எப்போதும் அனுபவிக்கப் படா நிற்கவும் அபூர்வ வஸ்து போலே ஆச்சர்யத்தை விளைவிப்பவைகளும்

க்ரீடா³ஶைல ஶதஸஹஸ்ரை: அலங்க்ருʼதை:–அநேகம் ஆயிரம் விளையாட்டுக் குன்றுகளாலும் அலங்கரிக்கப் பட்டவர்களும்

————–

லீலோத்₃யாநங்கள்:
கைஶ்சிந் நாராயண தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை: * கைஶ்சித் பத்³மவநாலயா தி³வ்ய லீலாঽஸாதா⁴ரணை:
* ஸாதா⁴ரணைஶ்ச கைஶ்சிச் சு²கஶாரிகா மயூரகோகிலாதி³பி:⁴ * கோமலகூஜிதைராகுலை:
* தி³வ்யோத்³யாநஶத ஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே,

எம்பெருமானுடைய லீலைக்கே உரியவர்கள் சிலவும்
பிராட்டியுடைய லீலைக்கே உரியவைகள் சிலவும்
இருவருடையம் லீலைக்கே உரியவைகள் சிலவுமாய்
அழகிய குரலை யுடைய
கிளிகள்
பூவைகள்
மயில்கள்
குயில்கள் -முதலான பறவைகளின் கோலாஹலம் பொருந்தின திவ்யமான நூறாயிரம் பொழல்களாலே சூழப்பட்டதாய்

————–

நீரோடைகள்:
மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: * தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: * தி³வ்யாண்ட³ ஜவரை:
* அதிரமணீய த³ர்ஶநை: * அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: * அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:
* தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: * தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,

மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: –ரத்னம் முத்து பவளம் முதலியவற்றால் செய்யப்பட்ட படிகளை யுடையவனவாய்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய ஸுகாந்திக வாபீ சத ஸஹஸ்ரை -என்பது )

தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: -அப்ராக்ருதமும் நிர் மலமும் அம்ருதம் போலே ரஸ வத்துவமான நீர்ப்பரப்பை யுடையவனாய்

தி³வ்யாண்ட³ ஜவரை:
அதிரமணீய த³ர்ஶநை:
அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: –கண்ணுக்கு அழகியவைகளும்
பேச்சில் இனிமை யுடையவைகளுமான
அப்ராக்ருத பஷிகளாலே வ்யாப்தங்களாய்

அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:-உள்ளே உண்டான முத்துக்களாலான லீலா ஸ்தானங்களாலே ஸோபிதங்களாய்

தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: –அப்ராக்ருதமான செங்கழு நீரோடையால் பல ஆயிரம் நிறைந்துள்ளாய்

தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,–ஸூத்த ஸத்வ மயமான ராஜ ஹம்ஸங்கள் விளங்கிக் கொண்டு இருப்பவைகளான

———–

லீலா ஸ்தானங்கள்:
நிரஸ்தாதிஶய ஆநந்தை³கரஸதயா ச * ஆநந்த்யாச்ச ப்ரவிஷ்டாநுந்மாத³யத்³பி:⁴ * க்ரீடோ³த்³தே³ஶைர்விராஜிதே,

உயர்வற உயர்ந்த ஆனந்தமே வடிவெடுத்து இருக்கையாலும்
அபரிச்சின்னமாய் இருக்கையாலும்
உள் புக்கவர்களை மயக்க வல்ல லீலா ஸ்தானங்களாலே விளங்கா நிற்பதாய்

———–

பூம் பள்ளிகள்:
தத்ர தத்ர க்ருʼத தி³வ்ய புஷ்ப பர்யங்க உபஶோபி⁴தே,

அவ்வவ்விடங்களிலே பண்ணப்பட்ட பூம் பள்ளிகள் விளங்கா நிற்பதாய்

——-

வண்டுகளின் கானம்:
நாநாபுஷ்ப ஆஸவாஸ்வாத³ மத்த ப்⁴ருʼங்கா³வலீபி⁴: * உத்³கீ³யமாந தி³வ்ய கா³ந்த⁴ர்வேண ஆபூரிதே,

பலவகைப்பட்ட புஷ்பங்களில் யுண்டான மதுவைப் பருகிக் களித்த வண்டுத் திரள்கள் பாடும் திவ்ய ஸங்கீதம் நிறைந்ததாய்

———

மந்த மாருதம்:
சந்த³நாக³ரு கர்பூர தி³வ்ய புஷ்ப அவகா³ஹி மந்தா³நிலாஸேவ்யமாநே,

சந்தனம் -அகில் -பச்சைக் கற்பூரம் -திவ்ய புஷ்பங்கள் ஆகிய இவற்றின் உள் புகுந்து
அங்குள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற மந்த மாருதம் வீசப் பெற்றதாய்

——-

திருப் பள்ளிக் கட்டில்:
மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே * மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே அநந்த போ⁴கி³நி,

மத்⁴யே திவ்ய புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே –இடையிலே விடு பூக்களினால் சித்தரிக்கப் பட்டதான

மஹதி தி³வ்ய யோக³பர்யங்கே –பெரிய திருப்பள்ளிக்கு கட்டிலிலே

அநந்த போ⁴கி³நி -திருவனந்தாழ்வான் மீது

————-

பிராட்டியோடு சேர்த்தி:
ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா
* ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா
* ஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா ஶ்ரியா ஸஹாஸீநம்,

ஶ்ரீமத்³வைகுண்டை² ஐஶ்வர்யாதி³ தி³வ்யலோகம் * ஆத்ம காந்த்யா விஶ்வமாப்யாய யந்த்யா–ஸ்ரீ வைகுண்டச் செல்வம் முதலிய திவ்ய லோகம் முழுவதையும் தனது ஒளியினால் விளங்கச் செய்து மகிழ்விப்பவளும்

ஶேஷ ஶேஷாஶநாதி³ ஸர்வம் பரிஜநம் * ப⁴க³வத: தத்தத³வஸ்தோ²சித * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யாஶீலரூப கு³ண விலாஸாதி³பி⁴: * ஆத்மாநுரூபயா –திரு அநந்தாழ்வான் -சேனாபதி ஆழ்வான் முதலிய சகல பரிஜனத்தையும்
எம்பெருமான் அந்த அந்த அவஸ்தைகளுக்கு உரிய கைங்கர்யங்களில் நியமிப்பவளும்
சீலம் வடிவு குணம் ஸ்ருங்கார ரஸம் முதலியவற்றால் தனக்கு ஏற்றவளுமான

ஶ்ரியா ஸஹாஸீநம்,-பிராட்டியாரோடே கூடி வீற்று இருந்து அருள்பவனும்

——-

திருக்கண்கள், திருமேனி முதலியன:
ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் * அத்யுஜ்வலபீத வாஸஸம்
* ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்
* அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்
* அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்
* ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் * ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் * உஜ்வலாத⁴ரம் * ஶுசிஸ்மிதம்
* கோமலக³ண்ட³ம் * உந்நஸம் * உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்
* ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் * தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்
* அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்
* தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்

ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * –அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ போன்ற திருக் கண்களை யுடையவனும்

ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் –விமலமான கார் முகில் போன்றவனும்

அத்யுஜ்வலபீத வாஸஸம்-மிகவும் புகர் பெற்று விளங்குகின்ற பீதக வாடையை யுடையவனும்

ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்–மிக நிர்மலமாய் –மிகக் குளிர்ந்ததாய் -மிகவும் ஸூ குமாரமுமாய் -ஸ்வச்சமாய் –
மாணிக்கம் போன்றதான தனது திவ்ய காந்தியினால் உலகம் முழுவதையும் விளங்காச் செய்யா நின்றவனும் –

அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்–சிந்தைக்கு எட்டாததாய் –திவ்யமாய் –ஆச்சர்யமாய் -நித்தியமாய் இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக் கடலாய் –

அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்–மிகவும் ஸூ குமாரமாதலால் -சிறிது குறு வியர்ப்பு அரும்பினால் போல் காண்கின்ற திரு நெற்றியிலே படிந்த திருக் குழல்களாலே விளங்கா நிற்பவனாய்

ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் –அப்போது அலர்ந்த தாமாரைப் பூப் போன்ற அழகிய திருக்கண்களை யுடையவனாய்

ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் –விலாசத்தோடு கூடிக் கொடி போன்றதான திருப்புருவங்களை யுடையவனாய்

உஜ்வலாத⁴ரம் -பிரகாசிக்கின்ற திரு அதரத்தை யுடையவனாய்

ஶுசிஸ்மிதம்–கபடமற்ற புன் சிரிப்பை யுடையவனாய்

கோமலக³ண்ட³ம் –அழகிய கபோலங்களை யுடையவனாய்

உந்நஸம் –உயர்ந்த திரு மூக்கை யுடையவனாய்

உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்–உயர்ந்தும் பருத்தும் இருக்கிற திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்று சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை யுடையவனாய்

ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்–பிராட்டிமார்களுக்கு கர்ண அலங்காரமான கரு நெய்தல் மலர் என்ன -கர்ண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன ஆகிய இவை அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவையாகித் திரு முழந்தாள் வரை தொங்குகின்ற நான்கு புஜங்களோடே பிரகாசிக்கின்றவனாய்

அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் –மிகவும் அழகிய -தாமரை சங்கு சக்கரம் முதலான ரேகைகளினால் அலங்கரிக்கப் பட்டுச் சிறிது சிவந்து இருக்கிற திருக் கைத் தலத்தை யுடையவனாய்

தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்–அப்ராக்ருதமான மோதிரங்களினால் விளங்குபவனாய்

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்-மிகவும் ஸூ குமாரமான திரு நகங்களினால் விளங்குகின்ற மிகச் சிவந்த திருவிரல்களால் அலங்கரிக்கப் பட்டவனாய் –

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம்-என்று இடையிலே பிரித்து எம்பெருமானுக்கு தனி விசேஷணம் ஆக்கவுமாம்
அநு ரக்த -அதி ரக்த -பாட பேதங்கள்

தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்–அப்போது அலர்ந்த புண்டரீகத்தோடு ஒத்த திருவடி இணையை யுடையவனாய்

—–

தி₃வ்யாபரணங்கள்:
அதிமநோஹர கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக
* ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராதி³பி⁴:
* அத்யந்த ஸுக² ஸ்பர்ஶை: தி³வ்யக³ந்தை⁴: * பூ⁴ஷணைர்பூ⁴ஷிதம்,

மிகவும் ஸூகமான ஸ்பர்சத்தை யுடையவைகளும்
திவ்யமான பரிமளத்தை யுடையவைகளுமான
மிக அழகிய கிரீடம் –நூபுரம் முதலான திவ்ய பூஷணங்களினால் பூஷிதனாய்

—————-

திருமாலை:
ஶ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம்,

அழகிய வைஜயந்தி என்னும் வனமாலையினால் விளங்குபவனாய்

———-

தி₃வ்ய ஆயுதங்கள்:
ஶங்க² சக்ர க³தா³ஸி ஶார்ங்கா³தி³ தி³வ்யாயுதை:⁴ ஸேவ்யமாநம்,

பஞ்சாயுத ஆழ்வார்கள் முதலான திவ்ய ஆயுதங்களினாலே சேவிக்கப் படுபவனாய்

——-

ஸேனாபதியாழ்வான் முதலானோருடைய கைங்கர்யம்:
ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் * வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:
* ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்
* ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் * தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்
* ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் * த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா * [ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய

ஸ்வஸங்கல்பமாத்ர அவக்லுʼப்த * ஜக³ஜ்ஜந்ம ஸ்தி²தி த்⁴வம்ஸாதி³கே * ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த*
ஸமஸ்த ஆத்மைஶ்வர்யம் –நினைத்த மாத்ரத்தாலேயே ஸகல ஜகத்தினுடையவும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளை நிர்வஹிக்க வல்ல ஸேனாபதி ஆழ்வான் பக்கலிலே தன்னுடைய நியமனச் செல்வம் எல்லாம் ஒப்படைத்து இருப்பவனாய்-

வைநதேயாதி³பி:⁴ * ஸ்வபா⁴வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வை:

  • ப⁴க³வத் பரிசர்யாகரண யோக்³யை: * ப⁴க³வத் பரிசர்யைக போ⁴கை:³ * நித்யஸித்³தை⁴: அநந்தை: யதா²யோக³ம் ஸேவ்யமாநம்-இயற்கையாகவே ஸாம்ஸாரிக ஸ்வ பாவம் ஒன்றும் இல்லாதவர்களும்
    எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டவர்களும்
    அந்தக் கைங்கர்யத்தையே நித்ய போகமாக யுடையவர்களுமான
    பெரிய திருவடி முதலான எண்ணிறந்த ஸூரிகளாலே முறைமைப்படி ஸேவிக்கப் படுபவனாய்

ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் –ஸ்வ ஆத்ம அநுபவத்தினால் அளவிறந்த காலம் கடந்தமையும் அறிய கில்லாதவனாய்

ஆத்மபோ⁴கே³ந-என்பதற்கு
ஆச்சான் பிள்ளை -இகடாக்ஷம் பரார்த்தமாக அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் ஸ்வ ப்ரயோஜனமாகவே அனுசந்திக்கப்பட்டு
விலக்ஷணமாய் அபராதங்களை நினைத்த்துக் கலங்குகை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன ஸூ ந்தரமான கடாக்ஷத்தாலே -என்கிற வியாக்கியான ஸ்ரீ ஸூ க்தி இருப்பதால்
அநநு ஸம்ஹித -என்கிற ஸ்தானத்தில் அநு ஸம்ஹித-பாடமும்
பராதிகாலம் -என்று தனிப்படை அன்றிக்கே -பகவத் விசேஷணமாக அல்லாமல் -ஸமஸ்த பதமாய் -அவ லோகந விசேஷணமாகக் கொள்ளுகிற பாடமும் தோன்றுகிறது
பல ஸ்ரீ கோஸங்களிலும் பெரியோர்களின் அனுசந்தான பரம்பரைகளிலும் உள்ள பாடமே இங்கே நிவேசிக்கப் பட்டது
ஆத்ம போகமாவது -ரசாந்தாநந்தாத்ம அநுபவ ஜ -இத்யாதி வரதராஜ ஸ்தவ ஸ்ரீ ஸூக்தியில் பிரஸ்தாபிக்கப் பட்ட பரமபத நாதனுக்கு உண்டான ஸ்வ ஆத்ம அனுபவம் –
பிரமனுடைய ஆயுஸ் காலத்துக்கு பரம் என்று பெயர் -அப்படிப்பட்ட பெரிய கால பரிணாமம் தெரியாமல் செல்லுகிறதாம் ஸ்வ ஆத்ம அனுபவத்தில்
க்ஷண அணு வத் ஷிப்த பராதிகாலயா -என்று ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூ க்தியும் உண்டே )

தி³வ்யாமல கோமல அவலோகநேந * விஶ்வமாஹ்லாத³யந்தம்–திவ்யமாய் நிர்மலமாய் ஸூந்தரமான கடாக்ஷ வீக்ஷணங்களினால்
ஸமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய்

ஈஷது³ந்மீலித முகா²ம்பு³ஜ உத³ர விநிர்க³தேந * தி³வ்யாநநாரவிந்த³ ஶோபா⁴ஜநநேந *
தி³வ்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய ஸௌந்த³ர்ய மாது⁴ர்யாத்³யநவதி⁴க கு³ணக³ண விபூ⁴ஷிதேந *
அதிமநோஹர தி³வ்ய பா⁴வக³ர்பே⁴ண * தி³வ்ய லீலாலாப அம்ருʼதேந * அகி²லஜந ஹ்ருʼத³யாந்தராணி ஆபூரயந்தம் *
ப⁴க³வந்தம் நாராயணம் –சிறிது அலர்ந்த திருமுகத்தாமரையின் இடையில் நின்றும் உண்டானதாய்த்
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினால் போலே அழகை யுண்டாக்கக் கடவதாய்
திவ்யமான காம்பீர்யம் ஒவ்தார்யம் மாதுர்யம் முதலான எண்ணிறந்த குணத் திரள்களாலே அலங்ருதமாய் அதி மநோ ஹரமான அபிப்ராய விசேஷத்தை உள்ளே யுடைத்தான திவ்யமான ரஸோக்தியாகிய அமுதத்தினால் எல்லாருடைய ஹ்ருதய அவகாஸங்களையும் நிரப்புபவனான பகவன் நாராயணனை

த்⁴யாநயோகே³ந த்³ருʼஷ்ட்வா -உட்கண்ணால் ஸாஷாத் கரித்து

[ததோ] ப⁴க³வதோ நித்யஸ்வாம்யம் *
ஆத்மநோ நித்யதா³ஸ்யம் ச * யதா²வஸ்தி²தம் அநுஸந்தா⁴ய-பிறகு -அப்பெருமானுக்கு இயற்கையாயுள்ள சேஷித்வத்தையும்
தனக்கு இயற்க்கையாயுள்ள சேஷத்வத்தையும் உள்ளபடி அனுசந்தித்து

—————

ஸர்வேஶ்வரனைக் கிட்டி அநுப₄விப்பது – ஆத்ம நிவேதநம்:
“கதா³ஹம் ப⁴க³வந்தம் நாராயணம் * மம குலநாத²ம் * மம குலதை³வதம் * மம குலத⁴நம் * மம போ⁴க்³யம் *
மம மாதரம் * மம பிதரம் * மம ஸர்வம் * ஸாக்ஷாத் கரவாணி சக்ஷூஷா

என் குல நாதனாய்
என் குல தைவமாய்
என் குலச் செல்வமாய்
எனக்குப் பரம போக்யனாய்
எனக்குத் தாயாய் தந்தையாய் எல்லாமுமான
பகவன் நாராயணனை நான் எப்போது கண்ணாரக் காண்பன் -என்றும்

கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜ த்³வயம் *
ஶிரஸா தா⁴ரயிஷ்யாமி

எம்பெருமானது திருவடித் தாமரை இணையை எப்போது நான் தலையால் தங்கப் போகிறேன் -என்றும்

கதா³ஹம் ப⁴க³வத் பாதா³ம்பு³ஜத்³வய * பரிசர்யாகரண யோக்³ய: * தத்பாதௌ³ பரிசரிஷ்யாமி *
கதா³ஹம் ப⁴க³வத்பாதா³ம்பு³ஜத்³வயம் பரிசர்யாஶயா * நிரஸ்த ஸமஸ்தேதர போ⁴கா³ஶ: * அபக³த ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா⁴வ: *
தத்பாதா³ம்பு³ஜ த்³வயம் ப்ரவேக்ஷ்யாமி

எம்பெருமான் திருவடித் தாமரை இணையில் கைங்கர்ய ருசியாலே விஷயாந்தரங்கள் எல்லாவற்றிலும் காதல் கழிந்தவனாய்
ராக த்வேஷங்களாகிற ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வ பாவங்களும் அகன்றவனாய் அடியேன் எப்போது அடியிணையைகிட்டுவேன் -என்றும்
இந்த வாக்யத்துக்குப் பின்பும் முன் வாக்கியத்தை மீண்டும் அநுஸந்திக்கும் பாடமும் உண்டு
என்றைக்கு அடியேன் அத்திருவடி இணை களில் அடிமை செய்ய உரியவனாய்
அவ் வடிமையில் உறுதி கண்டவனாய்
அத்திருவடி இலைகளில் அடிமை பூண்பேன்

கதா³மாம் ப⁴க³வாந் ஸ்வகீயயா * அதிஶீதலயா த்³ருʼஶா அவலோக்ய *
ஸ்நிக்³த⁴ க³ம்பீ⁴ர மது⁴ரயா கி³ரா * பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயிஷ்யதி”

அப் பெருமான் தனது மிகக் குளிர்ந்த திருக் கண்களாலே கடாக்ஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்திலே என்னை ஏவப் புகுகிறது எப்போதோ என்றும்

ஆக இப்படி எல்லாம் மநோ ரதித்து

இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா *
தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா * ப⁴க³வந்தம் உபேத்ய * தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *

இதி * ப⁴க³வத்பரிசர்யாயாம் ஆஶாம் வர்த⁴யித்வா–எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஆசையைப் பெருக்கி

தயைவாஶயா * தத்ப்ரஸாத³ உபப்³ருʼம்ஹிதயா *–அப்பெருமானுடைய அனுக்ரஹத்தினால் பெருகிச் செல்லும் ஆசையோடு

ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி

தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு

ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥

ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று

ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று

ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்

ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்

ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு

பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு

ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்

————–

ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥

ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்

ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே

ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி

ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி

அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி

அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் –

—————

ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥

பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –

———–

ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்

——–

லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥

ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்த்தியையே தஞ்சமாகக் கொண்டு
பிராகிருத மண்டலத்தை விட்டு நீங்கி
அப்ராக்ருதமான தேச விசேஷத்திலே சென்று
ஸர்வாங்க ஸூ ந்தரனாய்
ஸர்வ ஆபரண பூஷிதனாய்
திவ்யாயுத ஸோபிதனாய்
நித்ய ஸூரி பரிஷன் நிஷேவிதனாய்
இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டி
கைங்கர்ய பிரார்த்தனையை முன்னிட்டுக் கொண்டு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவில்லாதபடி செய்யும் கைங்கர்யங்களைப் பெற்று
ஆனந்த அமுதக் கடலில் மூழ்கி இருக்குமாற்றை இங்கு இருக்கும் நாள் வரையில் பரம ஏகாந்தியானவன் நாள் தோறும் சிந்தனை செய்து கொண்டு இருக்கக் கடவன் என்று
அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆயிற்று –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ குணரத்ன கோஸம்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம்-

May 9, 2024

ஸ்ரீயப்பதியை -மிதுனத்தை ஸ்தோத்ரம் செய்வது -முக்திக்கு சிறந்த உபாயம் –
நமது இளைய புன் கவிதைகளைத் தொடுத்து ஸ்துதி செய்வதில் காட்டிலும் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அத்தைச் செய்வதால்
எம்பெருமான் திரு உள்ளம் விரைவில் கனியுமாதலால்
இப்படிப்பட்ட நன்மையை நாம் பெறுவதற்காகவே ஆளவந்தார் முதலிய நம் பூர்வாச்சார்யார்கள் பரம கருணையுடன்
அமுதினிலும் ஆற்ற இனிய பல ஸ்தோத்திரங்களை அனுக்ரஹித்து அருளி யுள்ளார்கள்
கூரத்தாழ்வான் அருளிச் செய்த பஞ்ச ஸ்தவங்கள் இருந்தாலும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த இந்த ஸ்லோகமும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவமும் போன்றவற்றுக்கு இணையானாய் எதுவும் இல்லை
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியானஸ்ரீரங்கநாச்சியார் வியமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
இதன் காம்பீர்யம் வாஸா மகோசரம் -சொல் தொடையும் பொருள் தொடையும் அமைந்து இருக்கும் அழகு அற்புதம் என்னலாம் அத்தனை-

பெரிய பிராட்டியாருடைய குணங்களாகிற ரத்னங்களுக்கு இந்தக்கரந்தம் பொக்கிஸம் போன்றதால் ஸ்ரீ குணரத்ன கோஸம் -என்று திரு நாமம் இட்டு அருளுகிறார்
இங்கு அனுபவிக்கப்படாத பிராட்டியின் திருக்கணங்கள் வேறே எங்கும் கிடைக்க மாட்டாது என்பதே தாத்பர்யம்
இதில் –தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
வைதக்த்ய வர்ண குண கும்பத கௌரவைம் யார் கண்டூல கர்ண ருஹா கவயேர தயந்தி -என்று
இது தன்னிலே தாமே அருளிச் செய்யும்படியான ஏற்றம் இது தனக்கே உரியதாகும்
பிராட்டியை முற்படத்தொழுது பிறகு பெருமாளைத் தொழ வேணும் என்கிற ஸாஸ்த்ரார்த்தம் ஆஸ்ரயண காலத்தைப் பற்றியது அன்றி ஸ்தோத்ர ரஸனையைப் பற்றியதன்று யாதலால் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வங்களுக்குப் பின்பு இத்தை அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னத்துக்குப்பின்பு சதுஸ் லோகி போலவும்
வைகுண்ட ஸ்த்வங்களுக்குப் பிறகு ஸ்ரீ ஸ்தவம் போலவும்
இங்கும் –

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே
–தனியன்

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை-
கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தம் என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய
அந்தப் பராசர பட்டரின் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் -திருவடிகளை அடைந்து
மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

————-

இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால் ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ச்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:-எம்பெருமானுக்கு உண்டான ஸகல சேதன அசேதன வஸ்து ஸ்ருஷ்டி ஸ்ரமத்தை
அங்கீகாரிபி: ஆலோகை: -அங்கீ கார ஸூசகங்களான கதாஸா வீக்ஷணங்களினால்
ஸார்த்த யந்த்யை ஸ்ரீரியை-ஸபலமாக்குகின்ற பெரிய பிராட்டியாருக்கு
க்ருத: அஞ்ஜலி:–ஓர் அஞ்சலி செய்யப்பட்டது என்கை

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

இத்தால் ஸ்தோத்ரம் தொடங்கும் பொழுதே ஸாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
ஜகத் வியாபாரத்தில் எம்பெருமானுக்கே அந்வயம் உள்ளது என்பது ஸத் ஸம்ப்ரதாயார்த்தம் அன்றோ
ஜகத் வியாபார ஸ்ரமம் எல்லாம் அவனுக்கே என்று பூர்வார்த்தத்தில் விளக்கப்பட்டு
பிராட்டியார் உடன் இருந்து அனுக்ரஹிக்குமவள் என்பது உத்தரார்த்தத்தில் விளக்கப்படுகிறது-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்
–-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம்-44-விரித்து அருளிச் செய்தவற்றையே இங்கு சுருக்கமாக அருளிச் செய்கிறார்

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–-ஸ்ரீ ஸ்தவம்1-(சார்தூல விக்ரீத மீட்டர் )

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ ஸ்துதியில் –யத் சங்கல்பாத் பவதி கமலே -என்ற ஸ்லோகத்தில் இந்த ஸித்தாந்தத்தையே அருளிச் செய்கிறார்

இது ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கியே அவதரித்த ஸ்லோகமாகையாலும்
இங்கு சார்த்யந்த்யை –என்ற வர்த்தமாந பிரயோகம் செய்து இருக்கையாலும்
எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்ட்டியைச் செய்து அருளும் போது பிராட்டி ஸாக்ஷிணி யாய் இருக்கிறாள் என்பது இனக்குச் சொல்லப்படுகிறது அன்று
இவ்வர்த்தம் மேலே யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -என்ற ஸ்லோகத்தின் முதல் பாதத்தில் சொல்லப்படுகிறது
இங்குச் சொல்லுகிறதாவது -ஸ்ரீ ரெங்கநாச்சியாரது திருக் கோலத்தின் அதிசயமே சொல்லப்படுகிறது
இவளுடைய ஸந்நிதியில் வந்து புகுமவர்களை இவள் காருண்ய திருஷ்ட்டியோடே கடைக்கணித்து அங்கீ கரித்து அருளுவதனால் எம்பெருமான் தன்னுடைய ஜகத் ஸ்ருஷ்டி ஸ்ரமம் சபலமானதாக்காத திரு உள்ளம் பற்றுகிறார்
இப் பொருளே சார்த்யந்த்யை என்கிற வர்த்தமான நிர்தேசத்துக்கு மிகவும் இணங்கும்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய அங்கீ கார ஸூசக கடாக்ஷ அம்ருத தாரைகளுக்கு இலக்காவதே சேதன ஜன்ம ஸாபல்யம் என்று சொல்லிற்றாயிற்று

————-

கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

உல்லாஸ பல்லவித -ஸப்த லோகங்களின் ப்ராதுர்ப் பாவத்தினால் தளிர் பெற்றதும்
பாலித சப்த லோகீ- நிர்வாஹ கோரகித–ஸம்ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகின் நிர்வாகத்தால் சஞ்சாத கோரகமுமான
நேம கடாஷ லீலாம்-அரை குறையான கடாக்ஷ வீக்ஷண லீலையை யுடையவளாய்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்-ஸ்ரீ ரெங்க திவ்ய விமான பிரதேசத்துக்கு மங்கள தீப ஜ்வாலை போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம -பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் –

ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவத்தில் -யஸ்யா கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந ஸத்யஸ் ஸமுல்லஸித பல்லவம் உல்லாஸ -என்ற ஸ்லோக சாயையிலே இதுவும் அருளிச் செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது
ஆனால் ஆழ்வான் -அருளிச் செய்யும் ஸமுல்லஸித பல்லவம்-என்பது உலகில் அந்வயம்
இங்கு உல்லாஸ பல்லவித -என்று -கடாஷ லீலையில் அந்வயம்
பிராட்டி நேம கடாக்ஷ லீலையாலே உத்பத்தியும் ரக்ஷணமும் -உத்பத்தியின் பொழுது பல்லவமாயும் –
ரக்ஷணத்தில் கோரகத்தின் முகுளத்தின் அவஸ்தை –
பெண்மைக்குத் தக்கபடி புஷப அவஸ்தைக்கு செல்லாமல்–தளிர்ப்பதும் -அரும்புவதும் – முகுள அவஸ்தை –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் -நிர்வாஹம் அதன் அரும்பு-

ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு திரு விளக்கு ஏற்றி வைக்க பிரசக்தி இல்லாமையால் மங்கள தீபம் என்கிறது
ஸ்ரீ ரெங்க நாதனோடு கூட சாம்ராஜ்ய அபிஷிக்தையாய்க் கொண்டு மிதுனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்றவாறு
இப்படிப்பட்ட ஸ்ரீயை ஆஸ்ரயிக்கிறோம் என்றவாறு

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரிய பிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரிய பெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்க நாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
3–

அநுகல தநு காண்ட –அநு க்ஷணம் -அவன் திருத் தோள்கள்
ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோக ஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி-
மரம் போன்ற திருமாலினுடைய-கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள்- செழிப்பை உடையவளும்-
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-

உலகில் கொடியிலே பூங்கொத்தும் பூவில் படிந்த வண்டுகளுமாய் இருக்குமே
பிராட்டியாருடைய ஸ்தனங்கள் பூங்கொத்துக்கள் –திருக்கண்கள் புஷ்பங்கள் கரு விழிகள் வண்டுகள்
குளிச்சம் என்று பூங்கொத்து
ஸ்பார புஷ்பங்கள்- விகஸித்த புஷ்பங்கள்
த்வி ரேபம் -வண்டு -வண்டுக்கு வாசகமான ப்ரமா -என்னும் சொல்லில் இரண்டு ரேபங்கள் -ரகரங்கள் -இருப்பதால் த்வி ரேபம்

ரசயது மயி லஷ்மீ கல்பவல்லி கடாஷான்–நம்மை கடாக்ஷித்து அருளட்டும்-கடாக்ஷ வீக்ஷணம் செய்கிற சாமர்த்தியம் கல்பகக்கொடிக்கு இல்லையே -பெரிய பிராட்டியாருக்கே அசாதாரணம் -இங்கு பரிணாம அலங்கார பிரயோகம்

லோகத்தில் கொடி வ்ருக்ஷத்தின் மேல் படருவதால் வ்ருஷத்துக்கு அபிவிருத்தி இல்லை -கொடிக்குத் தான்
இங்கேயோ தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அபிமத ஜன சம்ச்லேஷ நிபந்தநம்

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக் கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்து விடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-

அமுதப் பெருக்கான கடாக்ஷ வீக்ஷணங்களாலே நம்மை அபிஷேகம் செய்து அருளப் பிரார்திக்கிறார் இதில்
மூன்று விசேஷங்களை முற்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:–4–

முராரே-ஸ்திர சர ரசநா தாரதம்யே-யத் ப்ரூ பங்கா பிரமாணம்-ஜங்கம ஸ்தாவராதி-ஸ்ருஷ்ட்டிகளுக்கு –
சந்தன பாரிஜாத மகிழ -கள்ளிச்செடி வேப்பமரம் -இத்யாதி—ஜங்கம பதார்த்தங்களில் தாரதமயமாவது தேவ மனுஷ்ய திர்யகாதி ரூபேண பேதங்களும்
ப்ரஹ்மாதி பிபீலிக அந்தமாகக் காணும் பலவகைப்பட்ட நீச உச்ச பாவங்கள்-உச்ச நீச பாவ பேதங்களுக்கு பிரமாணம் இவளது புருவ நெருப்பே –

ஆழ்வானும் -யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்-ஸ்ரீ ஸ்தவம் -முதல் ஸ்லோகம்
இவரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் – நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூவிப்ரம பேதத ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோந்நதமிதம் ஜகத் -என்று அருளிச் செய்தவர்களும் இங்கு அனுசந்தேயம்


வேதாந்தாஸ் –முரபிதுரசி–யத் பாத சிஹ்நைஸ்-தத்வ சிந்தாம் தரந்தி-பரத்வ நிர்ணயம் வேதாந்தங்கள் செய்வதும்-ஸ்ரீயபதியான நாராயணனுக்கே பாராம்யத்தை நிஷ்கர்ஷித்தன
பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் திருவந்தாதி
இவளுடைய சம்பந்தத்தாலேயே எம்பெருமானுக்கும் பாராம்யத்தை விளைக்கும்படியான பெருமை வாய்ந்தவள் பிராட்டி -என்றதாயிற்று


முரபித் உரஸி -இறைவனது மார்பகத்தில்-இவளது–யத் சம்பந்தேந தத்வ சிந்தாம் தரந்தி என்னாமல்-யத் பாத சிஹ்னை-ப்ரணய கேலி பரிமாற்றம் –
லஷ்மீ சரணா லாஷங்க சாக்ஷி ஸ்ரீ வத்ஸ வக்ஷஸே –என்று அன்றோ நம் பூர்வாச்சார்யர்கள் பணிக்கும் பரிசு-

போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா–விஸ்வரூபம்
எடுத்து அனுபவிக்க இழிந்தாலும் அசத் கல்பமாகவே -ஆகும்படி அன்றோ

ஸ்தோத்ர ரத்னத்திலும் –ஸ்வ வைஸ்வ ரூப்யேண ஸதா அநு பூதயாபி அபூர்வவத் விஸ்மய மாத தாநயா -என்று அருளிச் செய்ததையே இங்கு சமத்காரமாக விவரித்து அருளிச் செய்கிறார்-

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-
ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இங்கு ஸ்தோத்ர முடிவிலும் –தச சத பாணி பாத -தொடங்கி யுள்ள ஸ்லோகம் முழுவதாலும் இவ்விஷயமே விவரிக்கப்படுகிறது-

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–—அப்படிப்பட்ட பெரிய பிராட்டியின் அம்ருத ப்ரவாஹமாகிய
கடாக்ஷ வீக்ஷணங்கள் நம்மை ஆச்சா தானம் செய்ய வேணும் -பரிபூர்ண கடாக்ஷ பூதர் ஆவோம்

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்து கொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்து விடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும் போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும் போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.
–5-

தேவி யத் யாவத் தவ வைபவம் –ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா–வைபவத்தைப் பன்னி யுரைப்பதே ஸ்தோத்ரம் -வைபவம் இத்தகையது என்பதையே அறியப்பெறாதவன் அன்றோ அடியேன்-வைபவம் பற்றி ஸ்துதிக்க ஆசை கொள்ளவும் அதிகாரி அல்லேன்
ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய -ப்ரஹ்மாதிகளும் –பிரையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் -என்னப்பட்ட மேலாத் தேவர்களுக்கும்
ஸ்தோதும் கே வயமிதி யத ஜக்ருஹூ –ஸ்துதிக்க நாங்கள் எவ்வளவிலோம் -என்று தங்கள் அதிகாரம் இல்லாமையையே வாய் வெருவி இருக்க–
ஜக்ருஹு—இத்தையே பரிக்ரஹித்தார்கள் –
அப்யேவம் – காவாச வயம் -இத்தை அறிந்து குத்ஸித வாக்கை யுடைய அடியேன்
தவ தேவி வாங் மனஸ் பாஷா நபிஹ்ஞம் பதம் கவயிதம் ப்ரயதா மஹே -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத
தேவரீர் உடைய அபரிச்சேதமான ஸ்வரூப வைபவத்தை கவி பாட புகுகிறேன் அந்தோ –
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்—-நல்ல வாக்குகள் நீசனான என் வாயில் புகுந்து கெடாமல் அவற்றின் பெருமை பொலிக –
விலக்ஷணமான நைச்ய அனுசந்தானம்

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூற வேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கி யிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால் தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறி விட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும் போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டு விடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ஸ்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

நைச்ய அனுசந்தானம் கீழ்
இதில் ஸ்துதிக்க தாம் ஒருவரே அதிகாரி -சமத்கார அதிசயம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.
–6–

தேவி–தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-நானே ஸ்துதிக்க அதிகாரி -மற்று எவரும் இல்லை
ய -ஸ்தோதவ்யஸ்ய குணான் விஸ்த்ருணீதே தம் கவையோ ஸ்தோதார முசந்தி–ஸ்தோத்ரத்தில் இழியும் -ஸ்தோதா –
கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்பவன் அன்றோ
ததச்ச—இப்படி ஸ்தோதா உடைய லக்ஷணம் இருப்பதால் -தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி- அடியேனே அதிகாரி -என்றவாறு-
ஹே பகவதி அஸ்மத மர்ஷணீய பணிதி ஸ்வீகாரத தே ஷாந்த்யௌதார்ய தயாதயோ –
வாய் விட்டு சொல்லாத தகாதவற்றை அடியேன் சொல்ல – குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் –இளைய புன் கவிதைகளை மழலைச் சொல்லாக கேட்டு –
பரம ப்ரீதி அடைந்து -குற்றங்களை தண்டிக்காமல் -ஷமா உதாரம் தயா வாத்சல்யாதி-குணங்கள் விஸ்தரிக்கப்படும் அன்றோ
குண கண யஸ்மாத் ஸ்வாம் ப்ரதாம் ப்ரஸ்நுவீரத்–குணங்கள் விளங்கப் பெரும் என்றவாறு
இதில் அந்யத்ர அதி வியாப்தி வராதே -ஆகவே அடியேனே அதிகாரி

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்று விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந் நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்து விட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

நீர் நா வீறு பெற்று ஆச்சர்ய ஸ்துதி பண்ணுவராய் இருக்க இப்படி அருளிச் செய்யலாமோ என்ன
அடியேனுக்கு இயல்பான நா வீறு உண்டி
ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸேஸ்மிந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உபக்ரமத்திலே விண்ணப்பம் செய்துள்ளேனே
தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண பலத்தாலே எனக்கு நா வீறு ஸித்திக்க வேணும் என்கிறார் ஆயிற்று –

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ–லஷ்மீ-ஸ்வயமேவ-மதுரை கடாஷை -ந ஸூக்திம் சமக்ரயது –நிர் ஹேதுக கடாக்ஷ வீக்ஷணம் —
ஸ்ரீ ரெங்கராஜா கமலா பதலாலி தத்வம் பத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹ ஹேஸ்மின்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
இதனாலே திரு நா வீறு -ஸூ க்திகள் அதிசயம் உண்டாகுமே
யாம் ஸூக்திம் வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் கண்டூல கர்ண குஹராஸ் -கவயோ சத்த தயந்தி —
கவிகள் ஆசைப்படும் படி அன்றோ வைதக்யம் -பொருள் பொலிவு -வர்ண குணம் -சொல் பொலிவு –
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு- -இவை அனைத்தும் சேர்ந்தவை
கண்டூல கர்ண குஹராஸ்–தினவு கொண்ட செவிகள் உடையராய்க் கொண்டு –
ஸ்ருண்வந்தி என்னாமல் தயந்தி -என்றது பாநார்த்தகமான தாது –
பண்டிதர்களுக்கு ஸூக்தி ஸ்ரவணமே -ஸூதா பான சமம் -அன்றோ –

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போது தான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரி சமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழிய வல்லது.

————————-

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:-என்றாரே -கீழ் ஸ்லோகத்துக்கு விவரணமாய் இருக்கிறது இது
கீழ் பிராட்டியிடம் நேராக விண்ணப்பம் செய்யாமல் படர்க்கையாக அருளிச் செய்து -இதில் முன்னிலையாக வைத்து தேவரீர் இப்படிப்பட்ட வாக் விலாசத்தைப் பெருக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்
.–8–

ஹே ஸ்ரீ த்வமேவ மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம்–இதில் நேராக பிராட்டியுடன் சம்போதனம்-இதில் உள்ள ஸ்ரீ ஸம்போதனம் – -கீழே படர்க்கை -இங்கே முன்னிலையாக-
இப்படிப்பட்ட வாக் விலாசத்தை பஹு முகமாக அனுக்ரஹித்து அருள பிரார்த்தனை –
த்வமேவ –நீரே -அடியேனுடைய அநந்யத்வ அத்யாவஸ்யம் குலையாமல் –-ஏவ காரத்தாலலே தேவரீர் அருள மாட்டாது ஒன்றுமே இல்லையே –
எங்கள் குடியில் தேவதாந்தர பஜநம் பண்ணுவார் இல்லையே
இராமானுசன் அடிப் பூ என் தலை மிசையே மன்னவும் –தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைத் தானே போற்றும் குலம்
எந்தப்பிரார்த்தனைக்கும் பிராட்டியையே ஸ்துதிக்கத் தாக்கும் அன்றோ –
அநாக்ராதாவத்யம் -அக்ஷரம் பதம் வாக்ய தோஷ-ஸம்பந்த லேசமும் இல்லாமல்-
காதுக்குக் கடுவாய் இருத்தல் -அச் ஸீலமாய் இருத்தல் – ப்ரக்ருதி பங்காதி துஷ்டமாய் இருத்தல் -கூடாது என்கை
பஹூ குண பரீணாஹி -தோஷங்கள் இல்லாமை மட்டும் போதாதே -சப்த அர்த்த அலங்கார புஷ்டிகள் நிறைந்தவையாக இருக்க வேண்டுமே
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்று ஒருவன் பாடினானாம் -ஹாஸ்யாஸம் ஒன்றுக்கே இலக்கண இதில் குண பரிபோஷம் ஒன்றுமே இல்லையே
சப்த பொருள் அலங்காரங்கள் நிறைந்து இருக்க வேணும் என்கிறார்
மனசோ– சௌஹார்த்தம் -துஹா நம்-பிறர் நெஞ்சு நோவு படுமானால் இவற்றால் பயன் இல்லையே –கேட்பவர் நெஞ்சு கனிய வேண்டும் –
பரிசிதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும் அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் —
தாத்பர்யம் குரு முகமாகவே அறிய வேண்டுமே
இந்த விசேஷணம் பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கே தகும் -அது தன்னிலும் இந்தத் திவ்ய கிரந்தத்துக்கு விசேஷித்துத் தகும்
பதா நாம் சௌப்ராத்ராத் ஸ்ரவணயோ அநிமிஷ நிஷேவ்யம் –பத சேர்த்தி விலக்ஷணம் பொருந்து இருக்க வேணும் –கீழ்ச் சொன்ன அனைத்திலும் இது மிகச் சிறந்த அதிசயம்
ஹடாதாக்ருஷ்டாநாம் கதி பய பதாநாம் ரஸயிதா -என்னும்படி கவி சொல்ல வல்லார் பல உளரே
அப்படிப்பட்ட வர்களின் ரஸனைகளில் இந்த விசேஷம் காண வரிது
யா பதாநாம் பரா அந்யோந்ய மைத்ரீ சய்யேதி கத்த்யதே -என்னப்பட்ட சய்யா விசேஷம் ஸஹ்ருதய ஹ்ருதய ஏக வேத்யமாய் இருக்கும்
அது தான் -பதா நாம் சௌப்ராத்ரம் என்கிறது
அது உண்டாகில் ரசிகர்கள் விஸ்ராந்தி இன்றிக்கே அனுபவிப்பர்கள் ஆயிற்று
ஆக இப்படிப்பட்ட வாக் விலஸிதயத்தை அருள் புரிய வேணும் என்கிறார் ஆயிட்டு
விலஸிதம் -விலாஸம் -பர்யாயம்

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

அபேஷா நிர பேஷமாக அளிக்க வல்ல பெரிய பிராட்டியார் அபேக்ஷித்த பின்பும் அளிக்க மாட்டாமை இல்லையே
அங்கனமே ஆகுக என்று குளிர நோக்கித் தலை துலுக்கவே –
உள்ளமும் உடலும் பூரித்து ஸ்தோத்ரே ப்ரவ்ருத்தராகிறார்
முன்பே 230 ஸ்லோகன்களால் பூர்வ உத்தர ஸ்தகங்களால் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பெருமையை அருளிச் செய்தார்
இங்கு 61 ஸ்லோகங்களேயாய் சங்குசிதமாக இருந்ததே யாகிலும் -பெரிய பிராட்டியாருடைய ஒப்புயர்வற்ற பெருமையை சமத்காரமாக இங்கு அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்கநாதன் ஸந்நிதி வாசலிலே சடக்கென்ச் சென்று நின்று திருப்பள்ளி யுணர்த்தி ஒன்று கேட்டருளாய் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா –
பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்
பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்
அங்கெ சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்
தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ
ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் –
அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள்
திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்
வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெட்ரா நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்
பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு
ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –
ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்
இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி
த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்
தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-
தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –
த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர
தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரிய பெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரிய பெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக் கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகிய மணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப் போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ஸ்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக் கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ள போது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூற வில்லை, பெரியபெருமாள் கேட்டதனால் தான் கூறினார்.

—————–

ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருமேனியும் பூரிக்கும் படியாக ஸ்துதிக்கப் போவதாக பிரதி ஞாதமாயிற்று கீழ்
அதன்படியே ஸ்துதிக்க இழிந்தவராய் -மாநாதீநா மேய ஸித்தி -என்கிறபடியே ப்ரமேயம் ஸித்திப்பது பிரமாண அதீனமாகையாலே பிராட்டியும் வைபவமாகிய ப்ரமேயத்திற்கு சாதகமான பிரமாணத்தை மூதலிக்க வேண்டி
இதிஹாஸ புராணாதி உப ப்ரும்ஹணங்களினால் உப ப்ரும்ஹிதமான ஸ்ருதி தான் இவ் விஷயத்திற்கு பிரமாணம் என்று அருளிச் செய்கிறார் இதில்
குணரத்ன கோஸம் என்ற பிரபந்த திருநாமமும் அர்த்தாத் ஸூசிப்பித்து அருளுகிறார் முத்ர அலங்கார வகையில் இதில் –

தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–10-

ஹே தேவி பிரதமே புமாம்ச பகவதீம் ஸ்ருதிம் -த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-வாரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியாரே – வியாச பராசர வாலமீகி பிரபுருதிகளும் -பராங்குச பரகால யதிவராதிகளுமான பூர்வ புருஷர்கள் –சுடர் மிகு சுருதியை தேவரீர் உடைய
கல்யாண குண ரத்னங்களை இட்டு வைக்கும் பண்டாரமாக அன்றோ -அருளிச் செய்கிறார்கள் –
இவை அவன் பெருமையையும் அதிகமாக சொன்னாலும்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுதே-தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவரீருடைய பெருமையுள்ளீடு தானே
திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -என்கிறபடியே
பிராட்டியுடைய சம்பந்தம் இல்லாமல் தேவன் தேவத்வத்தை பெற முடியாதே
ஆக தேவனுடைய பெருமைகளை சொல்லும் இடம் எல்லாம் தேவியின் பெருமையைச் சொல்லிற்றாகவே கொள்ளலாம் இறே
வான் திகழும் சோலை மதிள் அரங்கன் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றது
ஸகல திவ்ய தேசத்து எம்பெருமான்களுடையவும் மஹிமை ஸ்ரீ ரெங்கநாதனுடைய மகிமையின் உள்ளீடு போலே
தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவ தேவ திவ்ய மஹிஷியினுடைய பெருமையின் உள்ளீடு என்கிற பரமார்த்தமும் கண் அழிவற்றதாகையாலே இங்கனே அருளிச் செய்யக் குறையில்லை யாயிற்று

பகவதீம் -ஸ்ருதிக்கு இந்த விசேஷணம்-அபவ்ருமஷே யத்வ -நித்யத்வ -நிர்தோஷத்வாதி ப்ரயுக்தமான பூஜ்யதை இட்டு
பிரதமே புமாம்ச –முன் சொல்லிய மஹரிஷிகள் -ஆழ்வார்கள் -பூர்வர்கள்
இவர்கள் பிராட்டியுடைய திருக்கல்யாண குணங்களாகிற ரத்னங்களுக்குத் கோச க்ருஹமாக அருளிச் செய்கின்றார்கள் என்றது -பிராட்டியாருடைய குணங்கள் வேதத்தில் ஸூ ரஷிதமாகக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் என்றபடி
மானதீனா மேய சித்தி -பிரமாணங்கள் கொண்டே பிரமேய சித்தி அன்றோ –
ஸ்ரீ குண ரத்னகோசம் -இந்த ஸ்துதி என்று அர்த்தாத் ஸூசிப்பிக்கிறார் இதில்
தத் த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி-ரத்னங்களை வெளி வாசலில் இறைத்து வைக்க மாட்டார்கள் அன்றோ -உள்ளே ஆழ்ந்து பார்த்தாலே இருப்பதை அறிய முடியும்
அதே போல் வேதமாகிய பெட்டியையும் இதிஹாச புராணாதிகளாகிற திறவு கோலை இட்டுத் திறந்து பார்க்கும் அளவில் பிராட்டியுடைய பிரபாவம் வேதங்களில் எளிதாக்க காணக்கிடைக்கும் என்கை
அவை பிராட்டியாலே அவனுக்கு பெருமை என்பதை நிரூபணம் செய்வதாலும்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -இத்யாதி வாக்யங்களிலே ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டு இருக்கிறபடியால்
எம்பெருமானுக்குப் பெருமை சொல்லும் இடம் எல்லாம் பிராட்டியின் பெருமையையே சொல்லிற்று ஆயிற்று
சம் தர்க்கணம் ஆவது -சமீசிந தர்க்கம் -வேதார்த்த விசார ரூப மீமாம்சை
ஸூத்ரகாரர் தர்க்கத்தை வெறுத்தது பிரமாண அநு குணம் அல்லாத சுஷ்க தர்க்கத்தையே யாகும் -அது தோன்றவே இங்கு சாம் தர்க்கண -என்றது
புரஸ் ஸராணி–ஸ்ரீ லஷ்மி தந்த்ராதிகள் -அருளிச் செயல்கள் இத்யாதி களைச் சொன்னவாறு

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

கீழ் வேத பிரமாண விளக்கை அருளிச் செய்து
இதில் அந்த விளக்கில் வீட்டில் படும் பாட்டை அடைந்து அநர்த்தப்படுமவர்களை எடுத்து உரைத்து
இவர்கள் பிராட்டியாருடைய திவ்ய கடாக்ஷதிற்கு இறைப்பொழுதும் இலக்காகப் பெறாமையினால் தான் இப்படி அவப்பொருள்களைச் சொல்லி அநர்த்தப்படுகிறார்கள் என்கிறார்

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–11-

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன -வேத பாஹ்யர்களைச் சொன்னார் ஆயிற்று
வேதம் அப்ரமாணம் என்னும் ஸூகத சார்வாகாதிகள் இங்கே விவஷிதர்கள்
இவர்களும் மேல் சொல்லப்படுபவர்களும் அவ்யபதேஸ்யர்கள் என்பதால் சிலர் சிலர் என்றே குறிப்பிடுகிற படி
கதிச அராஜகம் விச்வமேதத்-காபிலர் வாதம் -ஜகத்தை
அநாதம் என்கிறவர்கள் -அனுவதிக்கிறபடி -ஈஸ்வர ஸத்பாவம் இல்லை என்பர் -பிரதானம் காரணம் என்பர்
தத்வத்ரயத்தில் ஈஸ்வர ப்ரகரணத்தில் -காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள் –பிரதானம் அசேதனமாகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும் -ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது – என்று அருளிச் செய்ததும் அவ்விடத்து வியாக்யானமும் இங்கே அனுசந்தேயம்

ராஜன்வத் கேசிதீசம் -(விஸ்வம் ஆ ஹூ-என்றபதமும் இங்கே அநு ஷங்கம் செய்து கொள்ள வேண்டும் )-இது காணாதர் மதம் –சாஸ்த்ரத்தால் அன்றிக்கே அனுமானத்தால் ஈஸ்வரன் -ஆனுமானிக ஈஸ்வரனுக்கு நிமித்த காரணத்வ மாத்திரம் இசைகிறார்கள்-
எனவே இவர்களும் யதார்த்த வித்துக்கள் அல்லர் –

அந்யே ஈசம் தம் குணி நமபி குணைஸ் தரித்ராணம் (ஆஹு)-குண தரித்ரன் என்னும் மாயா வாதிகள்
நிர்க்குணத்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகள் ஹேய குண அபாவத்தைச் சொல்லுகின்றன என்று நிஷ்கர்ஷிக்க மாட்டாமையாலே –

அந்யே பிஷவ் ஸூராஜம் பவம் (ஆஹு )-வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு
உலகு எழும் திரியும் பிச்சாண்டியை ஈஸ்வரன் என்பர்

இதிச ஜடாஸ் தே -இப்படி பலவும் -என்பதால் இதி ச -ஜடாஸ்-கருவிலே திரு இல்லா – மூர்க்கர்கள்

தலாதலி அகார்ஷூ–கையால் தரையை அடித்து வாத யுத்தம் செய்பவர்கள்
கேசாகேசி -தண்டாதண்டி இத்யாதிகள் போலே தலாதலியும் கொள்ளக் கடவது
குடிமையைப் பிடித்துக் கொண்டும் தடியை வீசிக் கொண்டும் யுத்தம் புரிவது போல்
கையைத் தரையிலே அறைந்து வாதம் செய்வது இயல்பு

இவை எல்லாம் ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷ அபாவ நிபந்தம் என்கிறது
ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே யே தே ஷணம் லஷ்யம் நா சந்தே ஏவம் அகார்ஷு-ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழ் படர்ந்த கனகக் கொடி அன்றோ தேவரீர் –
உமது கடாக்ஷத்துக்கு க்ஷணம் காலமும் இலக்காகாத ஜடங்கள் அன்றோ
இப்படி ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் -என்றபடி –

மூன்றாம் பாதத்தில் உள்ள தே என்பது தச் சப்தத்தின் பிரதமாபஹு வசனம்
நான்காம் பாதத்தில் உள்ள தே என்பது யுஷ்மச் சப்தத்தின் ஷஷ்டி ஏக வசன அர்த்தம் –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம் பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம் பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம் பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம் பொருளான பெரிய பெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவதி-ந நு-லஷ்மி-சகல குண சம்பத்துள்ள பெரிய பிராட்டியாரே
யேபி தன்யா -யாரோ சில பாக்யவான்கள்
பக்தி சித்தாஞ்ஜநேந-பக்தியாகிய சித்த அஞ்சனத்தை உடைத்தாய் கொண்டு -சித்தாஞ்சனம் போன்ற பக்தி -என்றுமாம்
பஹு வ்ரீஹி -பக்தி சித்தாஞ்சனம் இவ யஸ்ய தத் -சித்தாஞ்சனம்போன்ற பக்தி
பக்தியாகிய சித்தாஞ்சனதாலே என்று கொடு -ஸ்வயம் விசேஷய்மாய்க் கொண்டு -அதை வில ஸதா என்பதிலே அந்வயிப்பாரும் உண்டு
அகத்தின் உள்ளே பக்தி ஸித்தாஞ்சநத்தினாலே விளங்கும் ஞானக்கண்ணாலே வீக்ஷமாணா -என்க-
மனஸி விலசத அஷ்ணா-மனசாகிற ஞானக் கண்ணாலே
ஸ்ருதி சிரஸி நிகூடம் தே மஹிமாநம்-வேதாந்தங்களிலே மறைந்து கிடைக்கும் உமது மஹிமைகளை
நிதிம் வீஷமாணா இவ-நிதியைக் காண்பாரைப் போலே காணா நின்றவர்களாகி
நிதி யாவர்க்கும் எளிதன்றே –
உபரி உபரி சஞ்சாதாம் -அத்ருஸ்யம் -ஸ்ரீ வராத ராஜ பஞ்சாத் -ஸ்ரீ மஹா லஷ்மீ வைபவமாகிற நிதி –
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்களோ
தே தைவீம் சம்பதந்தே அபிஜாதா –அன்னவர்கள் மோக்ஷ ஹேதுவான தைவ சம்பத்துக்கு இட்டுப் பிறந்தவர்கள்
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆஸூரீ மதா என்றும்
மாஸூசஸ் சம்பதம் தைவீம் அபி ஜாதோசி -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

பிராட்டியாருடைய வைபவ ப்ரதிபாதனத்திலே ஸ்ரீ ஸூக்தமானது இதம் பாரமாக ப்ரவ்ருத்தமானது என்றும்
புருஷ ஸூக்தாதிகளும் தத் வைபவ ப்ரதிபாதனத்திலே விஸ்ராந்தமாகிறது என்றும் அருளிச் செய்கிறார் இதில்
அஸ்யேசா நா ஜகத இதிதே-இத்யாதியால் ஸ்ருதியின் அநுவாதம்

அஸ்ய ஈஸாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக
:–13-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்-ஸ்ருதி அனுவாதம் – அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்னீ -மூலம்
அநுஸந்திக்கும் வைபவ அதிசயத்தை –
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே -சாகைகள் தோறும் பஹு முகமாக ஸ்ரீ ஸூக்தம் விஸதீகரியா நின்றதே
தாஞ்ச சாகா நுசாகம் ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-சர்வ ஜகத்துக்கும் ஸர்வேஸ்வரேஸ்வரன்
இவனே என்று புருஷ ஸூக்தம் ஓதா நிற்குமே
தம் உத்தர அநு வாக த்வத்கம் பதிம் அதி ஜகத் -அந்த ஸ்ரீ மன் நாராயணனை
நாராயண அநு வாகமானது உமது பர்த்தாவாக அன்றோ சொல்லிற்று
இதம் ஹி புருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-
சர்வ ஸ்ருதிஷ்வனுகதம் -ஸூ க்தம் து பவ்ருஷம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸூ க்தமும் தைத்ரிய சாகை -மாத்யந்தி நாதி சகல சாகைகளிலும் உண்டே –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக் கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக் கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-

ஹே அஸ்மத் ஜநநி உத்பாஹூஸ் த்வாம் உபநிஷத ஸா வாஹநைகா நியந்தரீம்-உபநிஷத்துக்கள் மட்டும் அல்ல –
உத்பாஹு என்றது -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்ச்யதே –பிராமண வசனத்தை ஒட்டி –
அசவ் உபநிஷத் என்றது கீழ் ஸ்லோஹத்தில் சொன்ன உத்தரச்ச அநு வாகத்தை –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே–சிறை இருந்த உன்னுடைய ஏற்றம் சொல்லியே –
உயிர் தரிக்கின்றது ஸ்ரீ ராமாயணமும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச் சரிதம் மஹத் –
கருணா காகுஸ்தன் பெருமை பிராட்டி சந்நிதியாலேயே தானே நிலை பெற்றது
பிராணிநி -ஸ்ரீ சீதா சரித்திர ப்ரதிபாதமே ஜீவ நாடி –
ஸ்மர்த்தாரோஸ் யதமே -ஸ்ம்ருதி கர்த்தாக்கள் பராசாராதி மகரிஷிகளும்
சேதிஹாசை புராணை-இதிஹாச புராணங்களாலும்
வேதாந் த்வன் மஹிம்நி பிரமாணம் நிந்யூர்-வேதங்களை உம்முடைய வைபவத்துக்கு பிரமாணம் ஆக்கினார்கள்

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

மாநாதீநா மேய ஸித்தி -யாகையாலே பிராட்டியாரின் வைபவமாகிற ப்ரமேயத்திற்கு இன்னின்னவை பிரமாணம் என்று காட்டி அருளினார் கீழே
இனி பிரமாண பிரதிபன்னமான பிராட்டியாரின் ஐஸ்வர்யத்தை அருளிச் செய்து போருகிறார்

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத்-சிறிய கிராம நிர்வாகன் -சர்வ லோக நிர்வாகன் –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் அஸ்தி -உத்தர உத்தர ஐஸ்வர்யம்
துங்கம் -மேரு போன்ற உன்னதமான வஸ்து சமூகம்
மங்கள -சந்தன குஸூம ஹரித்ரா குங்குமாதிகளாய்க் கொண்டுள்ள மங்கள வஸ்து சமூகம்
முஜ்ஜ்வலம் -மணி த்யுமணி தீபாதிகளாய்க் கொண்டுள்ள பிரசுர பிரகாச யுக்தமான வஸ்து சமூகமும்
கரிமவத் -ஹிமவான் மந்தரம் மைநாகம் -மலைகளாய்க் கொண்டு குருத்வ யுக்தமானவை
புண்யம் -யாகாதிகளான பரலோக சாதன பூத ஸூஹ்ருத்துக்கள்
புன பாவனம்-பின்னையும் கங்கா சரஸ்வதி காவேரி -பிறப்புறுதிகளான பரிசுத்தி கரங்கள் சமூகம்
தன்யம்-நவ நிதி ரூபமாய்க் கொண்டு பாக்ய பலரூப வஸ்து சமூகம்
யத் அஸ்தி தததச்ச -யாது ஓன்று உள்ளதோ இப்படிப்பட்ட மேம்பட்ட வஸ்துக்கள் எல்லாம்
விஷண  புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ -தேவரீருடைய கடாக்ஷ கந்தளி தங்களான
ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஆழ்வானும் ஸ்ரீ ஸ்தவத்தில் –
ஐஸ்வர்யம் மஹதேவ வா அல்பமதவா –
ஐஸ்வர்யம் யத் சேஷ பும்ஸி –

என்ற இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்தவற்றையே இங்கு இவர் ஸங்க்ரஹித்ததாயிற்று

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி
ஏகோ மநுஷ்ய த்ருப்யத் தந்தாவளஸ்தோ–மத்த வாரணத்தில் வீற்று இருந்து
முக்தாத பத்ர ப்ரசலமணி கணாத்காரி மௌளிர் -முத்துக் கொற்றக் குடைக் கீழே -ரத்ன சரங்கள் கண கண ஒலிக்க திரு முடியை உடையவனாய்
ந தான் ஷோணி பாலான்-அச்சமயத்தில் தன்னை வணங்கின அரசர்களை
ஷணம் ந கணயதி ந தான் யத்-நொடிப்பொழுதும் லஷ்யம் செய்யாது இருக்கும் ஐஸ்வர்ய காஷ்டை யாது ஓன்று உண்டோ இதுவும்
அந்யோ மனுஷ்ய -வேறு ஒரு மனிதன்
க்ருபணம் யதா ததா -தந்த பங்க்தீ-தர்சயன் -பல் வரிசைகளைக் காட்டி தஸ்மை திஷ்டதே யதி யத் -தாரித்ய காஷ் டையை சொன்னவாறு
தத் தே நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண விஸ்தாரத்தாலும் சங்கோசத்தாலுமே -யாகும்
கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஓர் காவலராய் விண் தோய் வெண் குடை நிழலின் கீழ் விரி நீர் உலகாண்டு -பல ஸ்ருதி-
இவள் கடாக்ஷ உதஞ்சி தன்யஞ்சிதங்களும் தத் தத் கர்மானுகுணமாகவே யாகுமே –

யானை மீதே இருந்தாலும் யாசகத்வத்தைக் காட்டிக்கொண்டு இருப்பதை -தஸ்மை திஷ்டதே -என்ற பிரயோகம் காட்டும்
தந்த பங்க்தீ -ஏக வசனமாகக் கொள்ளும் பாடத்தை விட த்வி வசநாந்தமான பாடமே சிறக்கும்
கர்ம நிபந்தனமாகவே என்று ஸ்ருதி பல இடங்களிலும் பறையா நிற்க இங்கு பிராட்டி கடாக்ஷ நிபந்தம் என்றது -இதுவும் தத் தத் கர்ம அநு குணமாகவே யகுமாதலால் -பொருத்தமே

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:
–17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
-பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப்புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப்புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்
–18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கேட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–2
0-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேச்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்சய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விச்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குணத்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:
–21–

ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீ ரங்கேச்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பச்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷபூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதிசம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ச்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ச்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி எண்ணில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி  முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக்குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.
–26-

வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்

தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ்  -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ சவயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை -மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே
யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவிலஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே
–29-

கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே பு ஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –

மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
–30–

ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம்ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–
31–

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

சாம்யாபத்தி சாம்யா ஸ்ருதி
ஸஹ ஸ்ருதி -கூடவே இருந்து அனுபவம்
சாதாரம்ய ஸ்ருதி -மூன்றுமே உண்டே –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–
36-

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணம தநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
–38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
–39-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–
40-

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–
42-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
–43–

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்
–45–

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–4
6–

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–
47-

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-11-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

ப்ரஹ்ம ருத்ராதி சர்வ ஆத்மாக்களுக்கு அந்தராத்மா பூதனாய் ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண நீதியாய்
அப்ராக்ருத ஸ்வ அதாசாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை அலற்றி
அவா அற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய் அவனைப் பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதி களால் இவை ஆயிரமும் அவற்றிலே தம்முடைய அபேக்ஷிதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து
இவற்றை அறிந்தார் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-11-

நிகமத்தில் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் உயர்வற உயர்நலம் உடையனாய் -அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் சர்வ ஆயுத உபேதனாய் லஷ்மீ பூமி நீளா நாயகனாய்  -அஸ்தானே பய சங்கிகைகளான அநந்த வைனதேயாதிகளாலே  -அனவரத பரீசர்யமான சரண நளினனாய் ஸ்ரீ வைகுண்ட  நிலயனான சர்வேஸ்வரனாய் -ஸ்வ விபூதி பூதரான -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்து ஆஸ்ரயிக்குமவர்களுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபன்னகரான ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாக பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு -கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க முடியாத படியான  பரமபக்தியாலே பிறந்த அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் சரம்சாரத்திலே பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார் – அயனை அரனை அவா அறச் சூழ் அரியை-என்றுமாம் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அயனை அரனை –அவா அறச் சூழ் அரியை- அலற்றி–என்றுமாம் –1–முதலிலே மயர்வற மதி நலம் அருளினன் -என்றார் -நடுவு பல இடங்களிலும் அவனே அபாஸ்ரயம் என்றார் -முடிவிலும் -இன்று என்னைப் பொருளாக்கி -என்றும் -என் தலை மிசையாய் வந்திட்டு -என்றும் -எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தையே தமக்கு உபாயமாகப் பேசித் தலைக் காட்டினார் –
-2–இங்கனே இருக்கிற நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு அடியான ஸ்ரீயபதித்தவத்தை-மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்று முதலிலே தொடங்கி நடுவு பல இடங்களிலும் பிரஸ்தாவித்துக் கொடு போந்து –முடிவிலே திருவாணை நின் ஆணை என்றும் -கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டினார் –
-3–ததீயருடைய பிராப்தையையும் முதலிலே அயர்வறும் அமரர்கள் என்று தொடங்கி –நடுவு பல இடங்களிலும் -அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும் பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை அகப்பட பரக்கத் பேசிக் கொடு போந்து முடிவிலும் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும் தலைக் கட்டினார்-
-4-எம்பெருமானுக்கு ஸுசீல்யம் என்று கொண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு–எத்திறம் என்று தொடங்கி பல இடங்களிலும் பேசினார் –
-5-இவனுக்கு அசாதாரண திரு நாமம் நாராயணன் என்னும் இடம் -வண் புகழ் நாரணன் -என்று தொடங்கி பல இடங்களிலும் பேசிக் கொடு போந்து -வாழ் புகழ் நாரணன் -என்று தலைக் கட்டினார் –
ஆழ்வார் இப்படி ஆறி —- யால் இவ்வைந்து அர்த்தமே இப்பிரபந்தத்துக்கு பிரதான அர்த்தங்கள் என்று கருத்து –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-11-

அநந்தரம் பல அவாப்தி பிரகாரத்தை ப்ரதிபாதித்துக் கொண்டு இத்திருவாய் மொழிக்குப் பலமாக
இதில் ஞானம் யுடையவர்களுடைய ஜென்ம உதகர்ஷத்தை அருளிச் செய்கிறார்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆஸ்ரிதருடைய அபி நிவேசம் தீரும்படி நிரவதிக சம்ச்லேஷம் பண்ணுகையாலே
விஸ்லேஷ துக்க நிர்ஹரண ஸ்வ பாவனாய் –
வஸ்ய ஸூ த்தி பண்ணும் படியான அவா அறும் படியாகத் தன் குணாதிகளாலே சூழ்ந்து ஹரித்துக் கொள்ளுமவன் என்றுமாம்
முக்த ப்ராப்யதயா பூர்வ பக்ஷதயா சங்கிதனான ஹிரண்ய கர்ப்பனுக்கும் அந்தராத்மாவாய்-
அப்படி பசுபதி மத ப்ராப்யனான ருத்ரனுக்கும் அந்தராத்மாவான
பரம ப்ராப்ய பூதனை பிராபிக்கையில் யுண்டான த்வரையாலே கூப்பிட்டு –
ப்ராப்ய ஸித்தியாலே-அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் அதி பர பக்தி ரூபமாக முடிந்த
அவா இல் அந்தாதி களான இப்பத்தையும் அனுசந்தித்து பிறந்தார் உயர்ந்தே–
`இது கலி விருத்தம் –

————————————————

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணனுக்குப் பிரகார பூதனான சேதனனுக்கு உபாயத்வேன ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்கிற மஹா வாக்யார்த்தத்தினுடைய
அவாந்தரார்த்த ரூபமான ப்ராப்ய ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளாயுள்ள அர்த்த பஞ்சகத்தையும்
தத் பிரகார விசிஷ்டானாம்படி சமர்மமாக அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆய்த்து-

இதில் முதல் பத்திலும் இரண்டாம் பத்திலும் -ரக்ஷகத்வ போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
மூன்றாம் பத்திலும் நாலாம் பத்திலும் தத் ஏக அனுபவத்வ தத் ஏக பிரியத்வ ரூபமான சேஷத்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
இந்நாலும் அநுவ்ருத்தமாக இந்த சேஷித்வ சேஷத்வங்களினுடைய அசாதாரண்யத்தைச் சொல்லுகையாலும்
பிரதம அக்ஷரத்திலே சேஷித்வத்தைச் சொல்லி
த்ருதீய அக்ஷரத்தில் சேஷத்வ ஆஸ்ரயத்தைச் சொல்லி
அவதாரணார்த்தமான உகாரத்தில் உபயோஸ் சம்பந்த தாஸ்யத்தைச் சொல்லுகிற ப்ரணவார்த்தத்தை பிரதிபாதித்ததாய்

அநந்தரம்
அஞ்சாம் பத்திலே உபாய ஸ்வரூபத்தையும்
ஆறாம் பத்திலே உபாய வரணத்தையும்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபத்தையும்
எட்டாம் பத்தில் தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகையாலே
சாப்தமாகவும் அர்த்தமாகவும் ஸித்தமான நமந நாமந வானான ஈசுவரனுடைய உபாய பாவத்தையும் –
நமந ரூபமான சரணாகதி ஸ்வரூபத்தையும் -ஆத்மாத்மீய ஸித்தமான அஹங்கார மமகார ரூப
விரோதி ஸ்வரூபத்தையும் தத் நிஷேதத்தையும் சொல்லுகிற நமஸ் சப்தார்த்தத்தை ப்ரதிபாதித்தாய்

ஒன்பதாம் பத்திலும் பத்தாம் பத்திலும் சர்வ வித பந்துத்வ கைங்கர்ய பிரதி சம்பந்தித்வ அபிவிஷ்டமான
பல அவாப்தியைச் சொல்லுகிற சரம பதார்த்தத்தை பிரதிபாதித்தாய்
பிரபந்த சங்க்ரஹமான் முதல் பாட்டில் அருளிச் செய்த க்ரமத்திலே சர்வ ஸாஸ்த்ர சங்க்ரஹமான
மூல மந்த்ரார்த்தை இப்பிரபந்தத்தில் விஸ்தரேண ப்ரதிபாதித்தார் ஆய்த்து

இன்னமும் பிரதமத்திலே ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்களை பிரதிபாதித்து
நாராயணனுடைய சீல ஸுலப்யாதிகளாயும் ஞானாதிகளாயும் உள்ள குணங்களை ஸஹரசமாக ப்ரதிபாதித்து
உத்தமமான க்ரியா பாதத்தால் விரோதி பூத ரஹிதமான புருஷார்த்த ரூப பகவத் கைங்கர்ய அவாப்தியை ப்ரதிபாதிக்கையாலும்
வாக்ய த்வயாத்மகமான சரணாகதி ஸ்வரூபத்தையும் வீசதீகரித்து அருளினார் ஆய்த்து

இவ்வுபாய வரணம் தத் இதர சகல நிவ்ருத்தி யுக்தமாய் இருக்கும் என்றும்
உபாய பூத குண விசிஷ்டானாய் அத்விதீயனாய் இருக்கும் என்றும் ப்ரதிபாதித்து
உபாய கார்யமான ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியையும்
பல சித்தி நிபந்தன தாதர்யத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகார்த்தத்தையும் விசதீகரித்து அருளினார் ஆய்த்து

ஆக சர்வ பிரகார பகவச் சேஷ பூதனாய் -அநந்ய பிரயோஜனனாய் -அநந்ய சரண்யனான இவ்வதிகாரிக்கு
ஞாதவ்யமான ரஹஸ்ய த்ரயத்தையும் சப்பிரகாரமாக பிரகாசிப்பிக்கையாலே –
இப்பிரபந்தமானது விலக்ஷணரான சாத்விக அக்ரேசர்க்கு நித்ய அனுசந்தேயமாகக் கடவது –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் -ஆழ்வாருடைய கிலேசம்  இன்றியே பலத்திலே அந்வயிப்பர் என்கிறார் –

அவா  அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை–நித்தியமான ஸ்வரூபத்தையும் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களையும் ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹத்தையும் -அபரிமித திவ்ய பூஷணங்களையும் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும் -லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கத்தையும் உடையனாய் அஸ்த்தானே பய சங்கிகைகளான நித்ய ஸூ ரிகளாலே பரிச்சர்யமாணமான திருவடித் தாமரைகளை யுடையனாய் இருந்துள்ளவனை
அயனை அரனை--ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவானவனை –
அவா அறச் சூழ் கை யாவது -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதர் யுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கை–இஸ் சாமா நாதி கரண்யத்தாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலில் ஈச்வரத்வ சங்கை அறுக்கிறார்-அவர்களுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம் ஆகையால் அவர்களுக்கு பாரதந்தர்யமே ஸ்வரூபம் -நிர்வாஹகத்வம் கர்மத்தால் வந்தது -இஸ் சாமா நாதி கரண்யத்தாலே நிர்வகிக்குமது அன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் யுண்டு –அயனை அரனை–அவா அற்று-அரியை -அலற்றி -வீடு பெற்ற–என்னுதல் -/
அலற்றி-அவா அற்று- -வீடு பெற்ற–என்னுதல் -/ கூப்பிட்டு- அவா  அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்— அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் –பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –
முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –
1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் -வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து -அமைவுடை நாரணன் -என்றும் -செல்வ நாரணன் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -திரு நாரணன் -என்றும் -நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திண்ணம் நாரணமே என்றும் -வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே -அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது-
2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் -கமல மலர் மேலே செய்யாள் -என்றும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திருவாணை நின்னாணை கண்டாய் -என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே -ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி -ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –
3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி -நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே -அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று-
4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று தொடங்கி -அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –
இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –
பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இ றே —

————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார்
உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம்
விஸ்லேஷ துக்கம் தீரும் படி –
கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந –
இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் –
சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம்
த்வரையாலே கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா –
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்
அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து
வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு –

அர்த்த பஞ்சகம் –
ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் –
முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம்
அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம்
இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி-
அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி –
உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால்
உபாய வரணம் ஆறாம் பத்தால்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம்
எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி
சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம்
-கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம்
முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான –
உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து –
மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி
பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி
கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம்
–சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார்
தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் –
உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து
ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து
சர்வ பிரகார சேஷ பூதன்
அநந்ய பிரயோஜனம்
அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும்
நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான
எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு-
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்-
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே-
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –
பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே –
மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு
அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் –
ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் –
சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி –
விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி
அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் –
அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம்
ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –
பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்
பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-10-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

இப்படி எம்பெருமானுக்கும் மறுத்து அருள ஒண்ணாத தொருபடி பிராட்டி திருவாணை யையும் தன் திருவாணை யையும் இட்டு
நிர்ப்பந்தித்துக் கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடும் அளவில்-
தாம் மநோ ரதித்த படியே எம்பெருமானும் எழுந்து அருள -அவனைக் கண்டு –
மஹான் அஹந்காராதிகள் எல்லா வற்றையும் வியாபித்து அவற்றில் காட்டிலும் பெரிதான மூல பிரக்ருதிக்கும் –
அத்தையும் வியாபித்து அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும் –
அதிலும் பெரிதான உன்னுடைய சங்கல்ப ஞானத்துக்கும் ஆத்மாவாய் இருந்த நீ
அந்த சங்கல்ப ஞானத்தில் காட்டிலும் பெரிதாய் இருந்த என்னுடைய விடாய் எல்லாம் தீரும்படி
அந்த ஜெகதாகாரனான படி அன்றியே நீயான படியே வந்து சூழ்ந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒரு படியே முடிந்தது என்கிறார்

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-10-

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

பத்துத் திக்குகளிலும் வியாப்தமாய் அபரிச்சேதயமாய் இருக்கிற பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் நிற்கிறவனே -அத்தையும் கூட வியாபித்து அதுக்கு நியாமகனான ஆத்ம தத்துவத்துக்கு ஆத்மாவானவனே -பிரகிருதி புருஷ தத்துவங்களில் இரண்டையும் வியாபித்து அவற்றுக்கும் நிர்வாஹகமுமாய் சங்கல்ப ரூபமாய் ஸூ க ரூபமான ஞானத்தை யுடையவன் –சுடர் ஞான இன்பம் -என்று எம்பெருமானைச் சொல்லிற்று ஆகவுமாம் -அதினிலும் பெரிதான என்னுடைய விடாய் கெடும்படி வந்து சம்ச்லேஷித்தாயே –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-10-

அநந்தரம் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகாம்படியான என் அபி நிவேசமானது கெடும்படியாக
சர்வ பிரகார பரிபூர்ணனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தாய் -என்று தமக்கு சாயுஜ்ய ஸித்தமான
பரிபூர்ண போக பிரதானம் பண்ணின படியை அருளிச் செய்கிறார்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ–கார்ய வர்க்கத்தை அடங்கச் சூழ்ந்து -வியாபித்து விஸ்தீர்ணமாய்
கீழும் மேலும் உண்டாகையாலே பத்துத் திக்கிலும் ஸந்நிஹிதமாய்-
உத்பத்தி விநாச ரஹிதமாகையாலே நித்தியமாய் –
ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு ஆகையால் அபரிச்சின்னமாய் –
போக மோக்ஷங்களை விளைக்க நல் தரையான ப்ரக்ருதியை பிரகாரமாக யுடையையாய் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-அந்தப் பிரகிருதி தத்துவத்தை ஸ்வ ஞானத்தால் வ்யாபித்துக் கொண்டு
காட்டில் பெருத்து ஏக ரூபத்வாதிகளாலே மேலாய்
ஸ்வயம் ப்ரகாஸத்வாதி வை லக்ஷண்யத்தை யுடையையாய்
விகாச ஸ்வ பாவமான ஞான பிரபையையுடைய ஆத்மாவை பிரகாரமாக யுடையையாய்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-இந்த பிரகிருதி புருஷர்கள் இருவரையும் வியாபித்து அதுக்கு அவ்வருகாய்
கல்யாண குணங்களால் உஜ்ஜவலமான ஞானானந்த லக்ஷண ஸ்வரூபத்தை யுடைய நியந்தா வானவனே
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–அந்தத் தவ்ய த்ரயத்தையும் வளைத்துக் கொண்டு
அதுக்கு அவ்வருகாம் படியாய் இருக்கிற என் அபி நிவேசமானது
சமிக்கும் படியாக ஸ்வரூப ரூப குண விக்ரஹ பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய்க் கொண்டு
பரிபூர்ணனான உனக்கு உள்ளே யாம்படி சாயுஜ்ய மோக்ஷத்தைத் தந்தாய் இ றே
ஓ ஓ ஓர் அதிசயமே என்று அடி தோறும் ஹ்ருஷ்டராகிறார்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-10-

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ—சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ–-இப்போது பிரகிருதி புருஷாதிகளைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றில் பெரியது என்று சொல்லுகைக்காக -அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவையும் சொல்லுகிறது –ஸ் வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே –சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ—அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் அதுக்கு நியாந்தா வாகையாலே மேலாய் -விகாராதிகள் இல்லாமையால் விலக்ஷணமாய் விகஸ்வர தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மாவானவனே –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார
பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து
-விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம்
-தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் –
அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் –
அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய
மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் –
ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும்
-சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் –
ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி
அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து –
பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து –
சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் –

எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே-
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு-
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்-
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்-
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் –
இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து-
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-
க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக —

துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –
ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் –

தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து-
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்-
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –

சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்-
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்-
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –

அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –

என் அவா –
என்னுடைய காதலை

அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து-
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று-
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –
-அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –
மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-9-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில்
எனக்கு அதுவே அமையாது –
நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே
திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-9-

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

மூவுலகு தொடக்கமானவற்றுக்கு ஓன்று ஒழியாமே எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவனே -பிரதானனாய் ஒப்பு இன்றிக்கே குண விபூதி யாதிகளால் பரிபூர்ணனான உன்னை நான் என்று வந்து கூடுவேன் -மஹதாதி விகாரங்களுக்கு ஒப்பில்லாக் காரணமாய் -கார்யங்கள் எங்கும் முற்றும் வியாபித்து -சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் -தனக்கு ஒப்பு இன்றிக்கே நியாமகமாய்-ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை அடைய பத்துத் திக்கும் வியாபித்து அபரிச்சேதயமாய் யுள்ள ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-9-

அநந்தரம் காரண கார்ய உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களுக்கும் பிரகாரித்வாதிகளாலே பிரதானனாய்
தத் வ்யாவ்ருத்தமான விலக்ஷண ஸ்வரூப குணாதிகளை யுடைய உன்னை என்று வந்து கிட்டக் கடவேன் என்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–அவி கல்ப பூர்ணமான ஜகத் த்ரயம் முதலான ஸமஸ்த வஸ்துக்களும்
பிரதானமான நிமித்த காரணமாய் -சஹகாரி நிரபேஷமாய் அத்விதீய உபாதான காரனுமாய்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்- -கார்ய பூதமான ஜகத்தில் அண்டாத் பஹிர் பூதமாயும்
அந்தரகதமுமாய் இருக்கிற பூர்ணமான ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து
அத்விதீய காரணமாய்
போக மோக்ஷங்கள் ஆகிற வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல பிரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–ப்ரக்ருதி பிராகிருத நியந்த்ருதவத்தாலே பிரதானமாய் –
அசித் ஸ்வ பாவ வ்யாவ்ருத்தியாலே நிரூபமாய் –
தர்ம பூத ஞான முகத்தால் வ்யாப்தமாய்க் கொண்டு -பத்துத் திக்கிலும் உண்டாய் நிதயமான ஆத்மவர்க்கத்துக்கு நியாந்தாவானவனே
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–இப்படி சர்வ பிரதானனாயக் கொண்டு நிரூபமான உன்னை
அந்த ஜெகதாகாரத்தில் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமான விலக்ஷண
ஸ்வரூப ரூப குண விசிஷ்டானாய்க் கொண்டு இருக்கிற உன்னை பிராபித்து அனுபவிக்கப் பெறாமையாலே
பெரு விடாய்ப் பட்டு இருக்கிற நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-9-

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-ஓன்று ஒழியாத படி த்ரை லோக்யம் தொடக்கமானவற்றுக்கு எல்லாம் த்ரி வித காரணமும் ஆனவனே /–முதல் -நிமித்த காரணம் / தனி -சஹகாரி காரணம் / வித்து -உபாதான காரணம் –
முதல் தனி யுன்னை-இதுக்கு எல்லாம் பிரதானனாய் -உபமான ரஹிதனாய் இருந்துள்ள உன்னை –
யுன்னை–ஜகத் காரணமாய் -உபமான ரஹிதனாய் இருக்கும் அளவன்றிக்கே -நித்ய விபூதியில் அசாதாரண விக்ரஹ யுக்தனாய் -ஸமஸ்த கல்யாண குண யுக்தனாய் -நித்ய ஸூ ரிகள் அனுபவிக்க இருக்கிற உன்னை –
எனை நாள் வந்து கூடுவன் நான்-என்று வந்து கூடக் கடவன் -அத் திரளிலே  நின்றும் பிறி கதிர் பட்டு போந்தாரைப் போலே இருக்கிறதாய்த்து இவருக்கு யோக்யதையாலே –
முதல் தனி எங்கும் இங்கும் -பிரதானமாய் -உபமான ரஹிதமாய் அங்கும் இங்குமாக மஹாதாதிகள் முழுவதிலும்
முழு முற்று உறு வாழ் பாழாய்-எங்கும் -உற்று -விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து -/ வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–பிரகிருதி பிராக்ருதங்களுக்கு நியாமகமாய் -பிரதானமாய் -ஒப்பின்றிக்கே இவற்றை அடைய பத்துத் திக்கிலும் ஞானத்தால் வியாபித்து நித்தியமாய் இருந்துள்ள ஆத்மவஸ்துவுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்–முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–முதல் தனி வித்தாய் –முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயாய் -இருக்கிற -முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–கார்ய காரண உபய அவஸ்தமான சித் அசித்துக்குகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவு போராது -அசாதாரண விக்ரஹ யுக்தனாய் ஒரு தேச விசேஷத்திலே இருக்கும் இருப்பை அனுபவிக்க வேணும் என்றதாய்த்து –

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

ருசி வளர்ந்ததை யம் – -பிரகார பிரகாரி பாவம் /சரீர சரீரி பாவம் /காரண கார்ய பாவம் நினைவு படுத்தி யும் –
ஆர்த்தி துடிப்பையும் – அறிவிக்கிறார் –
காரண கார்ய அவஸ்தை -சூஷ்ம ஸ்தூல -உபய அவஸ்தையிலும் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம்
-ஒரே இடத்தில் பர்யவசாயம் ப்ரஹ்மம் -ஒன்றே -உன்னை -விசேஷயம்-
பிரகாரி பிரதானம் -தத் தத் வியா வ்ருத்தமான-விலக்ஷண ஸ்வரூபம் குணாதிகளை -தனிச் சிறப்பு -உன்னை என்று வந்து கிட்டுவின்
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-உபாதானம் நிமித்த காரணம் -முதல் நிமித்த -தனி -உபாதான -அபின்ன நிமித்த காரணம் –
வியஷ்ட்டி சிருஷ்டியை சொல்லி
ஸமஸ்த வஸ்துக்களுக்கு எல்லாம் -பிரதான நிமித்த காரணம் -சஹகாரி நிரபேஷமான உபாதான காரணம்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு-கரந்து வியாபித்து -மஹான் அஹங்காரம் விகாரம் அடைந்து –
அண்டத்துக்கு உள்ளும் வெளியிலும் அத்விதீய காரணம்
அண்டத்துக்கு அந்தர்கதமாயும் -பூர்ண ஸமஸ்த பதார்த்தங்களில் வியாபித்து -நியாந்தா தாராகம் -அத்விதீய காரணம்
வாழ் பாழாய்-பிரகிருதி -/போக மோக்ஷம் இரண்டுக்கும் /வாழ்வதற்கு இடம் கொடுக்கும் பாழ் /விளை நிலம் -மூலப் பிரகிருதி மண்டலம்
பிராகிருத பூமிக்கு நியாமகன்
முதல் தனி -நியந்த்ருத்வம் -பிரதானம் –போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் -அபேஷா நிரபேஷமாக தன் பேறாக கொடுப்பவன் –
அசித் ஸ்வ பாவ வியாவருத்தியால் -ஸ்வரூப விகாரம் இல்லை -உவமானம் இல்லாமல்
சித்தை போலே ஸ்வ பாவக விகாரம் இல்லை –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ-அவி நாசி ஆத்ம சமஷடிக்கு நிர்வாஹன் -ஆத்மதத்வம்
-ஒவ் ஒன்றாய் ஒன்றுக்குள் வியாபிக்கும் அணு தானே ஆத்மா -கோடானு கோடி ஆத்மா -தர்ம பூத ஞானத்தால் பரவி –
ஆத்ம வர்க்கத்துக்கு நியாந்தா -பத்து திக்கிலும் ஞானம் -இப்படிப்பட்ட தேவரீரை
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்-ஜெகதாகாரம் அன்றியே -அத்யந்த விலக்ஷணன்
-உன்னை உன்னை -நீ யாகிய உன்னை -சேதன அசேதன விசிஷ்டம் நீ குற்றம் தட்டாத உன்னை –
ஸ்வரூப ரூப குணங்கள் -பெரும் விடாய் பட்ட நான் என்று வந்து கூடக் கட வேன் –

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி-
உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன-
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது-
வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது-
பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான-எல்லாவற்றுக்கும்-மூன்று விதக் காரணங்களும் ஆனவனே-
இதனால் -காப்பாற்ற என்று புக்கால்-காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முதல் தனி உன்னை –
முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை-
தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –

எனை நாள் வந்து கூடுவன் நான் –
என்று வந்து கூடுவேன்-
அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்-
நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது-
உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து-
ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே-
உன்னை உன்னை -சேதன அசேதன விசிஷ்டனான உன்னை –
உபய விபூதி நாதத்வம் -உபய லிங்க வைசிஷ்ட்யம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக நாதன் –

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –
மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –
மூ உலகு என்கையாலே-
கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட-
எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே-
இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது-
ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்-மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி-
முதல் தனி உன்னை –
மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை–இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள-முதல்வனாய்-
ஒப்பு இன்றிக்கே-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்-உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை-

ஜெகதாகாரமாக இருப்பைச் சொல்லி மேலே அசாதாரண விக்ரக விசிஷ்டனை அருளிச் செய்கிறார் –

ஆக- இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா –
கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் -திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் –
நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்-
என்று வந்து கிட்டக் கடவேன்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி-

நான்-
அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-
அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-
ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

முதல்-
மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்-

தனி-
உபமானம் இல்லாததாய்-

சூழ்ந்து-
மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –

அகன்று ஆழ்ந்து உயர்ந்த –
பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-

முடுவிலீயோ –
அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-
முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு-
சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-
முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்-
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-
இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-
உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –