ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-6-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

ஸுந்தர்யாதி சர்வ குணங்களினாலும் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு போக்யமானால் போலே
எனக்கு போக்யமாய் இருந்து வைத்த அத்தனையே அன்றியே
என்னுடைய ப்ரக்ருதியையும் என்னுடைய ஆத்மாவையும் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே புஜித்து அருளினை நீ
பிரானே என்னைப் பொகடாதே கொள்ளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய பிரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும் ஓக்க ஹிருதயத்துக்கு அமையாமை நிரந்தரமாக புஜித்தாய்-இனி இத்தை விடாதே விஷயீ கரியாய்-எம்பெருமான் கருத்தால் இன்னுயிர் -என்றதாகவுமாம் -தன்னிலத்திலே நின்ற காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை யுடையையாய் புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடையையான உனக்கு சத்ருசமான அழகை யுடைய பெரிய பிராட்டியாருக்கு ஸ்நே ஹியாய் வைத்து என் பக்கலிலே அபி நிவிஷ்டன் ஆனவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-6-

அநந்தரம் -பிராட்டி பக்கல் பிரணயியானால் போலே என் பக்கலிலும் நிரதிசய ப்ரணயத்தை யுடைய நீ
உன் போக்யதையை பிரகாசிப்பித்து புஜிப்பித்தாய் -இனி முழுக்க நிர்வஹித்து விட வேணும் என்கிறார்

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்–தன் நிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடைய
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–உனக்கு அனுரூபமான திரு வடிவை யுடையளாய்
பூவில் பிறப்பால் நிரதிசய போக்ய பூதையாய் ஸ்த்ரீத்வ அனுரூபமான ஆத்மகுணத்தை யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு அன்பை யுடையையாய் –
என் அன்பு தானே ஒரு வடிவாய் இருக்கிறவனே
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை-எனக்கு நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய
ப்ரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-ஹ்ருதயத்துக்கு திருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-
இனித் தொடங்கி நீ குறையும் புஜிப்பித்தே விட வேணும்
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இ றே ஸ்வாபாவிகம் –
அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்
ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈசுவரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் சுருதி சொல்லி முடித்தது
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூ ரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –
எனது ஆவியை-என்னது என்னும் அதுவே ஹேதுவாக காமுகர் அபிமத விஷயத்தில் அழுக்கை விரும்புமா போலே என்னுடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை-அது தன்னை நன்று என்று விரும்புகையாலே அதிலும் தண்ணிதான ஆத்மாவை விரும்பினாய் –இன்னுயிர் என்று செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்னுமா போலே -என்னுதல் -அவன் தலையால் சுமக்கிற படியால் என்னுதல் –
மனக்கு ஆராமை -மனஸ் ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ் ஸூ க்கு —
மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்
இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இ றே இவை –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா –இப்படிப் பட்ட உனக்கு சத்ருசமாக அழகை யுடையளாய் புஷபத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருக்கிற ஸுகுமார்யத்தை யுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே -பிராட்டி அழகு நாவால் துகைக்க ஒண்ணாமையாலே –உனக்கு ஏற்கும் கோலம் -என்கிறார் –
என் அன்பேயோ-அவளுக்கு அன்பை யுடையவன் -என்கிறார் -இங்கு இரண்டாக பிரிக்க ஒண்ணாத படி இருந்தான் என்கிறார் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-முன்பு இப்படி தலையால் சுமந்து வைத்து உபேக்ஷித்தால் பொறுக்கப் போமோ —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை
மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட
அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
-நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு
நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு
ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க –
அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி –

பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-
எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக-
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்-

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –

இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –

புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன –

செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று-
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-

உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்-
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்-
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்-

மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –
காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ-
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது-
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று-
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading