ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-3-
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஐஸ்வர்யாதிகளும் த்வத் பிரசாத அதீனம் ஆதலால்
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமும் நீ யல்லது மற்று ஒன்றும் காண்கிறிலேன்-
நீயே உன் திருவடிகளில் என்னை வாங்கி அருளி பிரானே உன் திரு அழகைக் காட்டி அருளாய் என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-3-
பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
அதி லோகமான அழகைக் காட்டி என்னை மிகவும் ஈடுபடுத்தினவனை -என் ஆத்மாவுக்கு -உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று அறிகிறிலேன் -அபிமான ரஹிதமாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்கு கிழங்கு ஆனவனே – உம்பரந்ததுவே-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-3-
அநந்தரம்-ப்ரஹ்மாதி சகல சேதனர்க்கும் உத்பாதகமான திரு நாபீ கமலத்துக்கு மூல கந்தமான
நீ வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
என் பொல்லாக் கருமாணிக்கமே-எனக்கு நிரதிசய போக்யமாய் துளையாத மாணிக்கம் போலே விலக்ஷணமான வடிவை யுடையையாய்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–தம்தாமுடைய பத
சித்த்யர்த்தமாகக் கிட்டி ஆஸ்ரயிக்கக் கடவரான பிரம்மா ருத்ர இந்த்ரர்கள் முதலானார்க்கும் முதலான
திரு நாபி கமலத்துக்கு கந்த பூதனாய் –
இப்படி ஸ்ருஜ்யர் அன்றியே மேலாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும்
அப்படியே சத்தா ஸ்த்தித் யாதிகளுக்கு நிர்வாஹகானானவனே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் ஆத்மாவுக்கு அபாஸ்ரயமாய்
இருப்பதொரு உபக்நம் உன்னை ஒழிய நான் அறிகின்றிலேன் –
ஆனபின்பு நீ தானே வந்து அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ உன் கார்யம் நான் சொல்ல வேண்டுவதே –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-3-
பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –கீழே கூவிக் கொள்ளாய் என்றவர் -இங்கு வந்து கூவிக் கொள்ளாய் -என்கிறார் -தாஹித்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே -ஆற்றாமை மிக்குச் செல்லா நின்றாலும் பாசுரம் இது அல்லது இன்றிக்கே இருக்கிற படி -கூவிக் கொள்ளும் அளவு போராது –வந்து கூவிக் கொள்ள வேணும் -ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறை என்று -உனக்கு அவத்யமும் காண் என்கிறார் -சரைஸ்த்து சங்குலாம் க்ருத்வா -/ அந்தோ -உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –
என் பொல்லாக் கருமாணிக்கமே-அதி லோகமான வடிவு அழகைக் காட்டி -என்னை ஈடுபடுத்தினவனே -துளையாத மாணிக்கம் -அநுபபுக்தமான மாணிக்கம் என்னுதல் -நாட்டு ஒப்பான அழகு இன்றியே விசஜாதீயமாய் இருக்கையாலே -பொல்லா -என்கிறது என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ பரிஹாரமாக -என்னுதல் -வி லக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-நாவிக் கமல முதல் கிழங்கே –ஈஸ்வரோஹம் என்று இருப்பார்க்கும் நிர்வாஹகன் அல்லையோ நீ என்கிறார் -ஆபத்து வந்தவாறே நிரபிமாநிகளாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்குக் கிழங்கு ஆனவனே —முதலான நாபீக் கிழங்கே —
உம்பரந்ததுவே–அவர்களுக்கும் மேலான நித்ய ஸூ ரிகளுக்கும் அப்படிப் பட்ட ப்ராப்ய வஸ்து ஆனவனே –அதுவே -என்று பிராமண பிரசித்தியைச் சொல்லுகிறது -மேலான மஹதாதி களுக்கும் காரண புதன் என்று சொல்லிற்று ஆகவுமாம் –நித்ய ஸூ ரிகளோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற சர்வ நிர்வாஹகனாய் இருக்கிற நீ என்னை வந்து கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-3-
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
ப்ரஹ்மாதி காரணன் -நாபி கமலம் -மூலமாக -நீ வந்து விஷயீ
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே-நிரதிசய போக்யன் -விலக்ஷண மேனி
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்-தஞ்சமாக பிடிக்க உபகனம்
உன் கார்யம் நான் சொல்ல வேண்டி இருக்கிறதே அந்தோ
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-ப்ரஹ்மாதிகள் எல்லாம் தம் தாம் பிரயோஜனங்கள் பெற
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே-வித்து ஜகத் காரணன் -கந்த பூதன்-
ஸ்ருஷ்யர் அல்லாத நித்ய ஸூ ரிகளுக்கும் அந்த அதுவே -லோகத்தில் பிரசித்தம் -அத்தனை பெருமை படைத்த
-உம்பருக்கும் பிராப்யம்-சத்தா ஸ்திதி யாதிகளுக்கு நிர்வாகன்
பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள்-உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்-நிர்வாஹகனான நீ
உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை-ஐயோ -வந்து அங்கீ கருத்து அருள வேண்டும்-என்கிறார் –
கூவிக் கொள்ளாய் –
மேலே கூவிக் கொள்ளாய் -என்றவர்
இங்கேயும் -கூவிக் கொள்ளாய் -என்கிறார் காணும் –விடாய் கொண்டவன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமாறு போலே
ஆற்றாமை மிக்கு செல்லா நின்றாலும் பாசுரம் இது அன்று இன்றிக்கே இருக்கிறபடி –
கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –
ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ
–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-
அந்தோ –
உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –
என் பொல்லாக் கருமாணிக்கமே-
தொளையாத மாணிக்கம் –அனுபவிக்கப் படாத ரத்னம் -என்றபடி –
அன்றிக்கே
உலகத்துக்கு ஒப்பான அழகு அன்றிக்கே வேறு பட்டு இருக்கையாலே-பொல்லா -என்கிறார் -என்னுதல்-வைஜாயத்யம்–
அன்றிக்கே
கண் எச்சில் வாராமைக்காக -பொல்லா -என்கிறார் -என்னுதல்
நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –என்பார் -பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார் –
க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என் –என்பார் -என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார்
நன்று -உலகங்கட்கு எல்லாம் வேறு பட்டவனாய் இருப்பினும்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்
அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே -என்கிறார் -மேல்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –
பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –
என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-
ஆயின் பேற்றுக்கு உடலாக நீரும் சில செய்தாலோ என்ன-
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே-
செருக்கு அற்றவர்கள் ஆகித் தொழும் பிரமன் சிவன் முதலாயினோர்கட்கு எல்லாம்-காரணமான திரு நாபிக் கமலத்துக்கும் கிழங்கு ஆனவனே –
கார்யம் இல்லாத போது ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களாய்-
இருப்பார்கள் ஆதலாலும் -தங்களுக்கு ஒரு கார்யம் வந்த வாறே எல்லாரும் கூடி தொழுவார்கள் ஆதலானும்-
மேவித் தொழும் -என்கிறார்
அன்றிக்கே
யான் எனது -என்ற செருக்கு அற்றவர்களாய் தொழுகிறார்கள் என்பார் -மேவித் தொழும் -என்கிறார் என்னுதல் –
இதனால் மற்றை பிரமன் முதலாயினோர் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கின்றார்கள் இலர் என்பதனையும்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –என்பதனையும் தெரிவித்த படி –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –
நித்ய சூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்-
புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-
-உம்பர் அந்த அதுவே –
அவர்களுக்கும் மேலான நித்ய சூரிகட்கும்-
அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –
சதா பஸ்யந்தி சூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-
அது -என்று-
நித்ய சூரிகளோடு-
பிரமன் முதலாயினர்களோடு-
வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற-சாமாநாதி கரண்யத்துக்கு காரணம்-
கார்ய காரண பாவம் என்னும் அத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -சுருதி -இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply