ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-4-
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
பிரகிருதி புருஷ மஹான் அகங்கார பிருதிவ்யாதி பூத சதுர்முக ருத்ர தேவாதி ஸ்தாவராந்த சேதன அசேதனாத்மக
ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகளுக்கும் நீயே நிர்வாஹகானாய் இருந்து வைத்து
என்னுடைய பரமத்தனையும் நானே நிர்வஹிக்கக் கடவேனாகப் பார்த்து அருளினாயாகில்
என்னைக் கை விட்டாய் என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-4-
சர்வ நிர்வாஹகனான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே யல்லையோ என்கிறார் –
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
மஹதாதி விகாரங்களுக்கும் காரணம் ஆகையால் -ஸ்வ காரியங்களுக்கு எல்லாம் மேலாய் -ஸ்வ கார்யங்களை பிறப்பிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் யுடைத்தாய் -சேதனர்க்கு போக மோஷாதி புருஷார்த்தங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே -அதிலே பத்தமாய் நிற்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகனாய் -ஆகாசாதி பூத பஞ்சகத்துக்கும் பாஞ்ச பவ்திகமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ -தேவர்களையும் மற்று உள்ளாரையும் படைத்த முனியாக பிரசித்தனானவன் நீ -என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கல் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாயே —
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-4-
அநந்தரம் -சர்வ பிரகார விசிஷ்டனான நீ பிரகார பூதனான என்னுடைய கார்யம் நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
வைத்து என்னை இந்த விபூதியில் போர விட்டாய் இத்தனை அன்றோ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார் –
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
உம்பர் அம் தண் பாழேயோ -அதனுள்- மிசை நீயேயோ–பூதமான மஹாதாதி களுக்கு எல்லாம் பிரதான காரணமாகையாலே
மேலாய் -உனக்கு லீலா உபகரணம் ஆகையாலே விலக்ஷணமாய் –
குண த்ரய ஸாம்ய அவஸ்தமாகையாலே-குளிர்ந்து இருப்பதாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்டகாரணமான ஆகாசம் விலக்ஷணமான தேஜஸ்ஸூ முதலான பூதங்களை
ஸ்ருஷ்டித்து தத் பிரகாரியாய் –
பூத ஆரப்தமான அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்ம ருத்ராதிகளை உத்பாதித்து தத் தத் பிரகார விசிஷ்டனானவன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–பிராணி ஜாதங்களுக்கு மேலான தேவர்களையும் மனுஷ்யாதி சகல சேதனரையும்
தத் தத் கர்ம விபாக மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ இப்படியாய் இருக்க
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–பிரகார பூதனான என்னுடைய தேகத்தை நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
பிராப்தி பர்யந்தமாக அபரோஷிப்பித்து உன்னை ஒழியச் செல்லாத என்னை பின்னையும் இங்கே போர விட்டிட்டு வைத்தாய்
ஓ என்கிற அசை-நீ என்னும் இடம் தோறும் கூட்டி -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேது போந்து இருக்க
அநாதரித்தாய் என்று கூப்பிடுகிற ஆர்த்தியை ஸூசிப்பிக்கிறது –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-4-
சர்வ நிர்வாஹகானான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே யல்லையோ என்கிறார் –
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
உம்பர் அம் தண் பாழேயோ-மஹதாதி காரியங்களுக்கு எல்லாம் காரணம் ஆகையால் மேலாயத் தன்னுடைய ஏக தேசத்தாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான சக்தியை யுடைத்தாய் விசித்ர பரிணாமினியாய்ச்-சேதனர்க்கு போக மோக்ஷத்தை இசைத்துக் கொள்ளலாம் நிலமாய் இருந்துள்ள மூலப் பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனே – / உம்பர் –மேல் / அம் தண் -அழகியதுமாய் அனுகூலமுமாய் இருக்கை / பாழேயோ-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை
அதனுள் மிசை நீயேயோ–அதிலே பத்தமாய் இருக்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத-தமேவார்த்த ஸ்வரூபேண பிராந்தி தர்சநத ஸ்த்திதம் –ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரி காரணம் ஆகையால் -காரண அவஸ்தையைச் சொல்லிற்று –இத்தால் விசேஷண ப்ராதான்யம் சொல்லும் நியாய வைசேஷிக பக்ஷமும்–விசேஷத்துக்கு அபாரமர்த்த்யம் சொல்லும் மாயாவதி பக்ஷமும் ஆழ்வாருக்கு பக்ஷம் அல்ல என்றதாய்த்து –
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அம்பரம் -ஆகாசம் / நற் சோதி-தேஜோ பதார்த்தம் / இவை இரண்டும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம் –/ அதனுள் பிரமன் அரன் நீ-அந்த பஞ்ச பூதங்களால் ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ –
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–மேலான தேவர்களையும் மனுஷ்யாதி ஸ்தாவாராந்தமான சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்த முனியாக பிரசித்தனானவன் நீ –சகல பதார்த்தங்களையும் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டிக்கைக்காக பூர்வ கர்மங்களை அநுஸந்திக்குமவன் இ றே முனியாகிறான் -ததச தேவ சன்மனோஸ் குருத ஸ் யாமிதி –இத்தால் ஸ்தூல சித் அசித் சரீரத்வத்தாலே கார்யம் சொல்லிற்று யாய்த்து –கஸ்யப ப்ரஜாபதியைச் சொல்லிற்று ஆகவுமாம் –எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் -/ என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-4-
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-
சர்வ பிரகார விசிஷ்டன் -பிரகார பூதனான என் கார்யம் செய்வதாக உபக்ரமித்து போர விட்டது எதனால்
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ-பூதமான மஹதாதிகளுக்கு எல்லாம் மேலான
-உனக்கு லீலை உபகரணம் அழகிய குளிர்ந்த -சத்வம் ரஜஸ் தாமஸ் சாம்யம் -போக மோக்ஷங்கள்விலைக்கும் ஸ்தானம்
அதனுள் அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்ட காரணம் -தேஜஸ் -பஞ்ச பூதங்கள் -ப்ரஹ்மாதிகளை உத்பாத்தித்து பிரகாரமாகக் கொண்டு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ-தத் தத் கர்மா விபாகம் பண்ணி ஸ்ருஷ்டித்த பின்பு
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-என்னுடைய தேகம் -பிராப்தி பர்யந்தமாக -கண் முன்னால் காட்டிய பின்பு விட்டாயே
ஓ ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து -உம்பர் அம் தண் பாழேயோ-நீ ஓ / அதனுள் மிசை நீயேயோ-நீ ஓ
அம்பரம் நற் சோதி -ஓ /அதனுள் பிரமன் அரன் நீ-ஓ /உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ ஓ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயேஓ /
பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரசிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது -ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்
எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ-என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ-என்கிறார்
உம்பர் அம் தண் பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்-
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண் -அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை-
காரண நிலையில் கார்யத்துக்கு தகுதியாய் நின்று-தன் கார்யத்தாலே-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே-தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே-
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை-ஆதலின் பாழேயோ -என்கிறார்-
உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை-அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி-
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –
அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான-ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று-
இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்-
விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்-
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –
பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி -அதனுள் மீசை நீயே யோ
ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே –
பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதே
பகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் -நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –
பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் -சர்வ சப்த வாச்யத்வம் –
பிரகார பிரகாரி சரீர ஆத்மா சம்பந்தம் இவனைப் போலே இல்லையே -நமக்கும் சரீர சம்பந்தம் இந்த பிறவியில்
-பிரகிருதி சம்பந்தம் மோக்ஷம் அடைந்ததும் போகுமே
என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்
ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை -நிஷ்கர்ஷகம்
வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்
வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு
நியதி -நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்
தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே
ஈஸ்வரன் இடத்தில் -அப்ஸு ரஸோஹம் தண்ணீரில் ரசம் நான் -கௌந்தேய -சொல்கிறான் –
அனைத்தும் நீயேயாக இருக்க நீ போர விட்டால் எங்கே போவேன் என்கிறார் –
சேதனம் உடன் கூடி இருந்தாலும் கூடாமல் இருந்தாலும் அவனுக்கு சரீரம் -அவனே நிர்வாககன்
அசித் மிஸ்ரான் -விசுத்த ஜீவன் -பக்த முக்த —அசித்தை பிரிந்த ஜீவனும் உண்டே –
அழுக்கு குறைகள் தட்டும் என்பதால் வேறே என்பர் மீமாம்ஸய்கர் -அப்படி அல்ல -ஆத்மாவுக்கு தட்டாது போலே அவனுக்கு –
அத்வைதி மாயாவாதிகள் -சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் ஒன்றாக -ஸ்வரூபத்தால் ஓன்று -அதுவே இது இதுவே அது என்பர் –
தத் ப்ரஹ்மத்தை சொல்லி த்வம் ஸ்வகேதுவைச் சொல்லுமே -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்கியம் சொல்வார் அத்வைதிகள்
-பிரக்ருதிக்கும் ப்ரஹ்மத்துக்கும் சொல்லார் ஆழ்வார் அத்தையும் சொல்லி சரீர ஆத்ம பாவத்தால் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –
அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்-
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –
அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன-
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே-
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம சேதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே-
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது-
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –
சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-
என்னை-
உன்னால் அல்லது செல்லாத என்னை-
போர விட்டாய்-
அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி-பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது-
நளன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply