ஈராயிரப்படி -அவதாரிகை –
இப்பிரபந்தத்தை கற்றார்க்கு இவ்வர்த்தம் அனுஷ்ட்டித்தாரோபாதி பலம் சித்திக்கும் –
கன்று இழந்த தலை நாகு தோல் கன்றை எடுக்க( மடுக்க )
அதுக்கு இரங்குமா போலே
இப்பாசுரம் கொண்டு புக நமக்குப் பலிக்கும் -என்று
பட்டர் அருளிச் செய்வர்
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-
பதவுரை
வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த மாதவனை –(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திரு முகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ் விடத்தும்
திரு அருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.
வங்கக் கடல் கடைந்த -பாற் கடலிலும் கப்பல்கள் உண்டு போலும் -தேவ கார்யம் என்ற பேராய்
கடைந்து அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டு –
மாதவனை கேசவனை-ஸ்ரீயபதியான கண்ணபிரானை
திங்கள் திருமுகத்து சேயிழையார் -சந்திரன் போல் திரு முகம் -செவ்விய ஆபரணம் –
செல்வச் சிறுமீர்காள் அன்றோ -ஆத்ம குணங்கள் மிக்கு -அவனும் அவளும் செட்டப் பெற்றவர்கள்
சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட வாற்றை -பிரசித்தமான விருத்தாந்தம்
யணி புதுவை-அழகான ஸ்ரீ வில்லிபுத்தூர்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் -பெரியாழ்வார் வயிற்றில் பிறந்தமையும் பொய்யன்றே –
வல்ல பரிசு
கோதை சொன்ன-இடைச்சி பாவனை கீழ் எல்லாம்
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே-கூட்டமாகவே அனுபவம் எங்கும் –
இங்கு இப்பரிசு உரைப்பார் -இங்கிதமாக அனுசந்திப்பார்
ஈரிரண்டு மால் வரைத் தோள்-பாட்டுத் தோறும் இரட்டிக்குமே
தோளில் ஆரம்பம் முடிவு பெரியாழ்வார் போலவே
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்-திகழ் திருமுகம் ஆரம்பம் -செங்கண் திருமுகம் நிகமனம்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-அனுஷ்டானம்-அநுகாரம் -அநுஸந்திக்கும் அப்யசிக்கும் நமக்கும் ஒரே பலன்
வங்கக் கடல் கடைந்த –
கீழில் அமுது மேலே எழக் கடையா நிற்க –
கடலிலே மரக்கலம் அசையாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது –
கடைந்த போது சுழன்று வருகையால் கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யுமவன் -என்கை
மாதவனை
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை குற்றம் பொறுக்க வேணும் இறே
(பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் அன்றோ
பஸ்யதாம் சர்வ தேவானாம் )
கேசவனை
விரோதி நிரசன ஸ்வபாவனை
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவன் -(பெரிய திருமொழி -6-1-)இறே
(கேசி ஹந்தா -ஸமஸ்த கிலேச நாசன
க ப்ரம்மனோ நாம ஈஸ நியமன
நாராயண மூர்த்தி கேசவன் -அங்கு விரோதி நிராசன சீலன்
இங்கு கேச அழகு -இத்தைப் பார்த்து பல்லாண்டு பாடாமல் உப்புச்சாறு
மாதவன் -சொல்லி அவள் ஈடுபட்ட துறை கேசவன் )
திங்கள் திருமுகத்து
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம்
அங்கு கதிர் மதியம் போல் முகம்
(பிரதிபந்தங்களைப் போக்கி கூடி இருந்து குளிர
இங்கு அனுபவம் மட்டுமே )
ஜகத் வியாபார வர்ஜம் என்று இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர்-( 10-9-) இறே
(ஜகத் வியாபாரம் செய்ய சக்தராய் இருந்தாலும் பிராப்தி இல்லை –
ஆகவே கதிரை நீக்கி மதியம் மட்டுமே
அஷ்ட குண ஸாம்யம் உண்டே
இங்கு ஸ்ரீ வைகுண்ட பிராப்தி பர்யந்தம் ஆகவே மதி முகம் உடையவர் )
சேயிழையார்
தானும் அவனும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள்
சென்று
இவ் ஓப்பனையோடே
வரப் பார்த்திருக்கும் அளவில்லாத த்வரையைச் சொல்லுகிறது
இறைஞ்சி
மங்களா சாசனம் பண்ணி
அங்கு
திருவாய்ப்பாடியிலே
அப்பறை கொண்ட வாற்றை
நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை
யணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்
(ரெங்கமன்னார் ஆண்டாள் திருவடி -ஓங்காரமே ஏக ஸிம்ஹாஸனம் )
பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணருக்குத் தாமரைத் தாராகையாலே சொல்லுகிறது
பட்டர்பிரான் கோதை சொன்ன
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே அநுபவித்துச் சொன்ன
ச ஹோவாச வ்யாஸ பராசர்ய -என்றால் போலே
பெரியாழ்வார் திரு மகள் சொன்னதில் அர்த்தவாதம் இல்லை
(சக்ரவர்த்தி திரு மகன் -நந்தகோபன் குமரன் -பாராசார்யர் புத்திரர் வியாசர் போல் இங்கும் )
சங்கத் தமிழ் மாலை
குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ (2-3-11)-என்னுமா போலே
திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம்
(மாலைக் கட்டிய மாலை
மாலை கட்டிய மாலை
மாலாகாரர் மாலை காட்டுவார் -இங்கே மாலையே மாலை கட்டி மாலைக் கட்டி அருளுகிறார் )
முப்பதும் தப்பாமே
இதில் ஒரு பாட்டும் குறையுமே
அல்லாத போது ரத்னம் குறைந்த ஏகாவளி போலே
பேர் இழவாய் இருக்கும் என்கை
இங்கு
பிற்பட்ட காலத்திலே
இப்பரிசு உரைப்பார்
இப்பாசுர மாத்ரத்தைச் சொல்லுவார்
ஆண்டாள் அநு காரத்தாலே பலம் பெற்றாள் ஆகையாலே
இது சொன்னார்க்கும் இங்கே பலம் கிடைக்கும்
(கோபிகள் போல் அனுஷ்ட்டிக்க வேண்டாம்
ஆண்டாள் போல் அனுகரிக்க வேண்டாம்
அடியார்கள் போல் அப்யஸிக்க வேண்டாம்
இப்படிச் செய்வதை அனுசந்திக்கவே அமையும்)
ஈரிரண்டு மால் வரைத் தோள்
பண்டு பாடினவர்கள் சொல் வழியால் அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்
ஆண்களுக்கு இரண்டாய்த் தோற்றும் –
இவர்களுக்கு நாலாய் இருக்கும் –
(நால் தோள் அமுதாகவே சேவை இவர்களுக்கு)
செங்கண் திரு முகத்து –
அலப்ய லாபத்தாலே சிவந்த கண்கள்
(பஞ்ச லக்ஷம் பெண்களைக் கிடைக்கப் பெற்ற ஹர்ஷம் )
செல்வத் திருமாலால்
உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே
இப்பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து
(மாதவன் தொடங்கி உபக்ரமம் திருமாலால் -திருவிலே உப சம்ஹாரம்
மா சதிர்
இளிம்பு-அவனைப் பெறாமல்
அவன் மூலம் பெறுவது சதிர்
பிராட்டி மூலம் பெறுவது மா சதிர் )
எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் –
பிராட்டியும் தானும் ஸந்நிஹிதமாம்படி பிரசாதம் பெற்று
இன்புறுவர் எம்பாவாய்-
பகவத் சம்ஸ்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர்
(இயம் கோதா மம ஸூதா சக தர்ம சரீதவ –பத்ரம் -தே )
——————————
(ஆயனுக்காக ஆய்ச்சி அருளிய சங்கத்தமிழ் மாலை -கீதா உபநிஷத் -கோதா கீதா உபநிஷத் -தானான தன்மையில் நிகமன பாசுரம் –
நால் தோள் அமுது -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்)
நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்காள் நீங்களும் நானும் அனுபவித்தோ -பிற்பாடார் இழக்கும் எத்தனையோ என்ன
அவர்கள் பெறும்படி சொல்லுகிறார்கள் –
இப் பிரபந்தத்தை கற்றார்க்கு இவ் வர்த்தம் அனுஷ்ட்டித்தாரோபாதி பலம் சித்திக்கும் –
கன்று இழந்த தலை நாகு தோல் கன்றை மடுக்க (எடுக்க) அதுக்கு இரங்குமா போலே
இப் பாசுரம் கொண்டு புக நமக்குப் பலிக்கும் -என்று பட்டர் அருளிச் செய்வர் –
விடிவோறே எழுந்த இருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில்
சிற்றம் சிறு காலை -29-என்கிற ஒரு பாட்டையும் அனுசந்தித்தல்
அதுவும் மாட்டானாகில் –
இன்று நாம் இருந்த இருப்பை நினைப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்-
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-
வங்கக் கடல் கடைந்த
கீழில் உள்ள பதார்த்தங்கள் மேல் எழக் கடையா நிற்க –
கடலிலே மரக்கலம் அசையாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது
கடைந்த போது சுழன்று வருகையால் கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்
கேசவனை
விரோதி நிரசன ஸ்வபாவனை(கேஸா பாச அழகன் -ப்ரஹ்மாதிகளுக்கு ஈசன் -கேசி ஹந்தா )
மாதவனைக் கேசவனை
கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே-
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -என்று சொல்லுகிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் -என்று பட்டர்
மாதவனை என்று தன் வாயைக் காட்டி கேசவனை என்று கோதைப் பொகட்டார் –
(அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-)
கேசவனை
ஸ்த்த்ரீத்வ ப்ரயுக்தமான ஸ்வாதந்த்ரத்தையும் அந்நிய சேஷத்வத்தையும் போக்கி அருளிய –
விரோதி நிரசன ஸ்வபாவனை
திங்கள் திருமுகத்து
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம் -செவ்வி
அங்கு கதிர் மதியம் போல் முகம் (1) என்றது
ஜகத் வியாபார வர்ஜம் (ப்ரஹ்ம ஸூத்ரம் )என்று கொடுப்பார்க்கு இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர் இறே
(விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-10-9-10)
சேயிழையார்
தானும் அவனும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள்
சென்று
இவ் ஓப்பனையோடே வரப் பார்த்திருக்கும் அளவில்லாத த்வரையைச் சொல்லுகிறது
இறைஞ்சி
மங்களா சாசனம் பண்ணி
அங்கு
திருவாய்ப்பாடியிலே
அப்பறை கொண்ட வாற்றை
மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை
யணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்(ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )
பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணருக்குத் தாமரைத் தாராகையாலே சொல்லுகிறது
பட்டர் பிரான் கோதை சொன்ன
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே அநுபவித்துச் சொன்ன
ச ஹோவாச வ்யாஸ பராசர்ய -என்றால் போலே பெரியாழ்வார் திரு மகள் சொன்னதில் அர்த்தவாதம் இல்லை
நாம் சொன்ன அர்த்தத்துக்கு பிரமாணம் கேட்டுக் கொள்ளுங்கோள்-என்கிறார்கள்
சங்கத் தமிழ் மாலை
குழாங்களாய் (2-3)-என்னுமா போலே பஞ்ச லக்ஷம் குடியில்
பெண்கள் திரளாக அனுபவித்த ப்ரபந்தமாகையாலே பகவத் ப்ரேமம் உடையார்க்கு எல்லாம்
சிரஸா வகிக்க வேண்டும்படி இருக்கை
(குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-)
தமிழ் மாலை
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே உபநிஷத்தும் தமிழான படி
முப்பதும் தப்பாமே
இதில் ஒரு பாட்டும் குறையுமே
அல்லாத போது ரத்னம் குறைந்த ஏகாவளி போலே பேர் இழவாய் இருக்கும் என்கை
அப்படியே ஒரு பாட்டுக் குறைந்தாலும் பேர் இழவாய் இருக்கும் -என்கை
இங்கு
பிற்பட்ட காலத்திலே
இப் பரிசு உரைப்பார்
இப் பாசுர மாத்ரத்தைச் சொல்லுவார்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் தாங்களே கிருஷ்ணனோடு கூடி அனுஷ்ட்டிக்கப் போனார்கள்
ஆண்டாள் அநு காரத்தாலே பலம் பெற்றாள் ஆகையாலே இது சொன்னார்க்கும் இங்கே பலம் கிடைக்கும்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
இவர்கள் அளவு பாராதே
பண்டு பாடினவர்கள் சொல் வழியால் அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
அனுபவிக்கத் தோள்கள் பணைத்தால் போலே
ஆண்களுக்கு இரண்டாய்த் தோற்றும் –
இவர்களுக்கு நாலாய் இருக்கும் –
செங்கண் திரு முகத்து –
அலப்ய லாபத்தாலே சிவந்த கண்கள்
செல்வத் திருமாலால்
உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே
இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து
எங்கும் திருவருள் பெற்று –
இத் திருப் பாவை சொன்னார்கள் இடத்தே எங்கும் தானும் பிராட்டியுமாக ஆதரிக்கும் என்கை
கிடக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் -பிராட்டியும் தானும் ஸந்நிஹிதமாம்படி பிரசாதம் பெற்று
இன்புறுவர் எம்பாவாய்-
பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம் படி பிரசாதத்தைப் பெற்று –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் –
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் –
திரு மா மகளால் அருள் மாரி-(8-6)
நிரூபக தர்மம் –
இசலி இசலி இருவரும் பரியக் கடவர் –
(பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்கடிகால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே –9-2-1-)
(தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11)
(கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10-)
கேசவ நம்பியைக் கால் பிடித்து -ஆண்டாள் திருக்கல்யாணம்
ஒரு மகள் தன்னை யுடையேன்
இயம் கோதா மம ஸூதா
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் கண் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் -அன்னதே ஆம் -அந்த அந்த அவயவங்கள் காண அவனுக்கும் அவ்வளவு வேணுமே
தவம் படைத்தது தரணி
மூன்று சேர்த்தி உத்சவங்கள் -இருந்தாலும் மாலை மாற்றி -ஆண்டாளுக்கு மட்டுமே நம்பெருமாள் அருளிச் செய்கிறான்-
———————–
ஸ்ரீ திருப்பாவை – – நாலாயிரப்படி ஸ்வாபதேசம் – -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள்-வியாக்யானங்கள்-
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் சகலா யேந தர்ஷிதா
ஸ்ரீ சாநு தாச மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே-
————–
முதல் பாட்டில்
பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது-வேதார்த்தம் –
அதாவது
சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகம் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது-அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-
ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-
——————-
இரண்டாம் பாட்டில் –
இவ் விஷயத்தில் இழிவார்களுடைய
விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
————————–
மூன்றாம் பாட்டில் –
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே-
ஆயுர் ஆசாஸ்தே ((யஜுர் அஷ்ட -3-5-நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன் )–என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –
————————-
நாலாம் பாட்டில் –
அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு
இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று
இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
————————-
அஞ்சாம் பாட்டில் –
இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வ ஆகயோர் அஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –
————————–
மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்
நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்
ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்-(கிருத யுகம்)
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்-(த்ரேதா யுகம் )
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்(த்வாபர யுகம் )
அடி பாடு சொல்கிறது
(ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி–ஆகதோ மதுராம் புரம் )
—————-
இனி மேல் பத்துப் பாட்டிலும்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் தனியாக அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும்
பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடியே
துணைத் தேட்டமாய் இருக்கும் என்னுமத்தைச் சொல்லுகிறது –
(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.–5-2-2)
(பெரியாழ்வாரும் -ஐஸ்வர்யார்த்திகளையும் -கைவல்யார்த்திகளையும் -பகவல் லாபார்த்திகளையும் கூப்பிட்டு
அவர்களையும் மங்களா ஸாஸன பரர்களாக்கி
அவர்கள் உடன் சேந்து மங்களா ஸாஸனம் பண்ணி அருளினார் அன்றோ)
——
அதில் முதல் பாட்டில் -புள் -6-
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை(பிள்ளாய்)
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
————————
இரண்டாம் பாட்டில் –கீசு -7-
பகவத் விஷயமான (எல்லையான பாகவத விஷயம் )அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
(பேய்ப்பெண்ணே )போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே
அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
————————
மூன்றாம் பாட்டில் –கீழ் வானம் -8-
பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் (கோது கல முடைய பாவாய் )திறத்தில்
சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
————————–
நாலாம் பாட்டில் –தூ மணி -9-
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –
————————-
அஞ்சாம் பாட்டில் –நோற்று -10-
ஞானீ த்வாத்மைவ மே மதம்
அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பஷ பாதத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
——————————————-
ஆறாம் பாட்டில் -கற்று -11-
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் (குற்றம் ஒன்றும் இல்லாத கோவலர் தம் பொற்கொடி )நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –
—————————–
ஏழாம் பாட்டில் –கனைத்து -12-
பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே
தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் (நற் செல்வன் தங்காய் )என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
———————————-
எட்டாம் பாட்டில் –புள்ளு–13-
பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் (போதரிக் கண்ணினாய் )இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
—————————-
ஒன்பதாம் பாட்டில் –உங்கள் -14-
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் (நங்காய் நாவுடையாய் )முன்பாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –
——————————–
பத்தாம் பாட்டில் –எல்லே -15-
ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது -(எல்லாரும் போந்தாரோ–போந்தார் போந்து எண்ணிக் கொள் )
—————————————
(கீழ் வேதம் வல்லார்கள் -மேல் விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய வேண்டுமே -ஐந்து பாசுரங்கள் விண்ணோர் ஸ்தானம் )
நாயகனில் -16-
அம்பரமே –17 –
இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –
———-
உந்து மத களிற்றன் —18-
பகவத் விஷயீகாரம் பிராட்டி சாபேஷமாய் இருக்கிறது
(புருஷ சாபேஷமாயும் புருஷகார சாபேஷமாயும் அன்றோ இருக்கும் புருஷார்த்தம் தர)
————————–
குத்து விளக்கு -19-
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-
அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –
———
முப்பத்து -20-
அடிமை செய்யும் இடத்திலும்
இருவர்க்கும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறையாகிறது –
———
ஏற்ற கலம் -21-
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –
ஏத்த வேழுலகும் கொண்ட (2-2)-என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர்கள் நிர்மமராய்க் கொண்டு
அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறது –
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-(தேவதாந்தர பஜனமாகிய ஊனம் இல்லை என்றவாறு )
——————————-
அங்கண் -22-
கீழில் பாட்டில்
தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்றாய் –
இப் பாட்டில் –
அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்குத் தங்களுடைய அநந்யார்ஹ சேஷத்வம் அநுசந்தேயம் -என்கிறது –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய்
சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார்
குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு
சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது –
—————————-
மாரி -23-
அர்த்திகள் ஆஸ்தானத்தில் இருக்கிற ஸ்ரீயபதிக்கு
ஸ்வரூப அனுரூப குண விருத்தியை விண்ணப்பம் செய்ய வேணும் என்கிறது –
————————
அன்று இவ்வுலகம் -24-
அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
————————–
ஒருத்தி -25-
ஸ்வரூப லாபத்தோ பாதி
துக்க நிவ்ருத்தியும் (வருத்தமும் தீர்ந்து மகிழ )தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –
————————
மாலே -26-
போக உபகரண சித்தியும் அவனாலே (ஆலினிலையாய் அருள் )என்கிறது
——————-
கூடாரை -27-
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும்
அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –
———————-
கறவைகள் -28-
கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி
ஆகிஞ்சன்யத்தையும்
ப்ராப்தியையும் முன்னிட்டு
அவனே உபாயமாக வேணும் (இறைவா நீ தாராய் பறை )என்று அபேக்ஷித்து
ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –
————————————-
சிற்றம் சிறு காலே -29-
ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும்- தத் விரோதி நிவ்ருத்தியும்(மற்றை நம் காமங்கள் மாற்று )
யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –
———————————-
வங்கக் கடல் -30-
உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு
அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –
———————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.